Sunday, July 31, 2022
ஆடிப்பூரமும்.. நாக சதுர்த்தியும் இணைந்த நன்னாளில்.. என்ன செய்தால் சிறப்பு?
Saturday, July 30, 2022
ஆடிப்பூரம் : அம்மனுக்கு வளைகாப்பு .பிள்ளை வரம் கிடைக்க வளையல் வாங்கி கொடுங்க..
Friday, July 29, 2022
Tiruvarur Sadhuranga Vallabanathar Temple :
Wednesday, July 27, 2022
🌺🌺🌺🌺கயிலைக் காட்சி கண்ட அப்பர்
கருடன் பிறந்த ஆடிச் சுவாதி
Monday, July 25, 2022
பெண்களின் வளையல் திருவிழா ஆடி பூரம்
சிவனின் பிருங்க நடனம் ஆடிய இடம்
Sunday, July 24, 2022
🙏🏻கோபுர தரிசனம் , கோடி புண்ணியம் இன்றைய கோபுர தரிசனம்🙏🏻
🙏🏻 *ஓம் கம் கணபதயே நமோ நமஹா* 🙏🏻
*அருள்மிகு ஶ்ரீ வெள்ளடைநாதர் உடனுறை காவியங்கண்ணி அம்மையார் திருக்கோயில்*
திருக்குருகாவூர் ,
நாகபட்டினம்.
🙏🏻தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🏻
தமிழர்கள் கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம் 1700 ஆண்டுகள் முதல் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .
# *மூலவர் - வெள்ளடைநாதர், ஸ்வேத ரிஷப ஈஸ்வரர்* .
# *உற்சவர் - சோமாஸ்கந்தர்*
# அம்மன்/தாயார் -
காவியங்கண்ணி , நீலோத்பல விசாலாட்சி
# தலவிருட்சம் - வில்வம்
# தீர்த்தம்- பால்கிணறு
# ஆகமம் /பூஜை -
சிவாகமம்
# புராண பெயர் - திருக்குருகாவூர், வெள்ளடை
# ஊர்- திருக்குருகாவூர்
# மாவட்டம்-
நாகப்பட்டினம்
# மாநிலம்- தமிழ்நாடு
# திருக்கோவிலின் மீது திருஞானசம்பந்த பெருமானும் , சுந்தர பெருமாள் பாடல்கள் பாடியுள்ளனர் .
# தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 13வது தலம்.
# திருவிழா
சித்ராபவுர்ணமியில் கட்டமுது படைப்பு விழா, தை அமாவாசை ஆகிய தினங்கள் வெகு விமர்சையாக சிறப்பிக்கப்படுகிறது.
# தல சிறப்பு
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சிதருகிறார் .
# திரு ஞானசம்பந்தருக்காக இங்கு தை மாத அமாவாசையன்று கங்கை நதி கிணற்றில் பொங்கியது. இதன் அடிப்படையில் தற்போதும் தை அமாவாசையன்று ஒருநாள் மட்டும் இந்த தீர்த்தம் திறக்கப்படுகிறது.
# அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள்.
# மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது.
# சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 13 வது தேவாரத்தலம் ஆகும்.
# *கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருக்கருகாவூர் வேறு*.
# *சீர்காழி தாண்டி உள்ள திருக்கடையூர் வேறு*.
# இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
# சிவன் சன்னதி கோஷ்டத்தில் உள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர்.
# தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு மேலே குடையும், இரண்டு சாமரங்களும் இருக்கிறது.
# பொதுவாக முருகன் கிழக்கு திசை நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்குள்ள முருகன், தெற்கு திசை நோக்கி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
# தென் திசையை பார்த்திருப்பதால் இவரை, குரு அம்சமாக கருதி வழிபடுகிறார்கள்.
# இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
# கோஷ்டத்தில் உள்ள சட்டைநாதர் , துர்க்கையம்மன் உள்ளனர் .
# இந்த துர்க்கை , எட்டு கைகளுடன் காட்சி தருவது விசேஷம். நவக்கிரக சன்னதி கிடையாது .
# பிரார்த்தனை
தெரியாமல் செய்த பாவத்தால் வருந்துபவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
# இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
# நேர்த்திக்கடன்
பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
# தலபெருமை:
ஒருநாள் மட்டும் நீராடும் தீர்த்தம்: மூலஸ்தானத்தில் வெள்ளடைநாதர் சதுர பீடத்தில், சிறிய பாணலிங்கமாக காட்சி தருகிறார். அன்று காலையில் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து திருஞானசம்பந்தரின் உற்சவ மூர்த்தி இந்த தீர்த்தத்திற்கு வருகிறார். அப்போது இக்கோயிலிலுள்ள சிவனும், அம்பாளும் அவருக்கு காட்சி தந்து தீர்த்தம் கொடுக்கின்றனர்.
# அதன்பின்பு மாலையில் சம்பந்தர் மீண்டும் சீர்காழி திரும்புகிறார். இந்த வைபவம் வெகு விமரிசையாக இங்கு நடக்கிறது.
# அன்னமிட்ட “கை’: சிவத்தல யாத்திரை சென்ற சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார்.
# இப்பகுதி அப்போது அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. எனவே, அவரால் இக்கோயிலை கண்டுபிடிக்க முடியவில்லை.
# இத்தலத்து சிவனை தரிசிக்காமல் சென்றுவிட்டார். வழியில் அவருக்கு பசியெடுத்தது. அப்போது ஒரு முதியவர் அவர் முன்பு சென்றார்.
# சுந்தரரிடம் அவர் அருகில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி, தான் அவ்விடத்தில் சிவனடியார்களுக்கு அன்னம் பரிமாறுவதாகவும் , அங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்படியும் கூறினார். அதன்படி சுந்தரரும், அவருடன் சென்ற அடியார்களும் சாப்பிடச் சென்றனர். அவர்களை முதியவர் உபசரித்தார். அதன்பின்பு சாப்பிட்ட களைப்பில் அன்னப்பந்தலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் சுந்தரர். சற்றுநேரம் கழித்து அவர் விழித்தபோது, அங்கு அன்னதான பந்தலோ, சாப்பாடு பரிமாறியதற்கான தடமோ தெரியவில்லை .
# வியந்த சுந்தரர், தனக்கு அன்னம் பரிமாற வந்தது சிவன்தான் என அறிந்து கொண்டார். பின்பு சிவனை வேண்டவே, அவர் இத்தலத்தை அடையாளம் காட்டினார். அதன்பின்பு இங்கு வந்த சுந்தரர், சிவனை வேண்டி பதிகம் பாடினார்.
# சுந்தரருக்கு, சிவன் அன்னம் பறிமாறிய விழா சித்ராபவுர்ணமியன்று நடக்கிறது.
# சிவனிடம் இங்கு வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
# சாந்த துர்வாசர் இங்குள்ள காவியங்கண்ணி அம்பிகைக்கு, “சுகப்பிரசவ நாயகி’ என்ற பெயரும் உண்டு.
# அன்னைக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அதையே பிரசாதமாக எடுத்துச்செல்கிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
# பிரகாரத்தில் துர்வாசர், சாந்த கோலத்தில் சிரித்தபடி காட்சி தருகிறார். இவர் இடது கையில் ஏடு வைத்து, வலக்கையில் அருள் செய்தபடி காட்சி தருவது விசேஷம்.
# சிவலோக நாதர், பூலோகநாதர், பைரவர், சூரியன், சந்திரன், மாவடி விநாயகர் ஆகியோரும் உள்ளனர்.
# தல வரலாறு
சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க சம்பந்தர், காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார்.
# தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார்.
# சம்பந்தருக்கு காட்சி தந்த சிவன், அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்றும் இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார்.
# அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப்பெற்றார் .
# பிற்காலத்தில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
# அதிசயத்தின் அடிப்படையில் இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக காட்சிதருகிறார்.
# திருக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டுள்ளது.
# காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள 13 வது சிவஸ்தலம் இதுவாகும் .
# திருக்கோவில் பத்தாம் நூற்றாண்டில் உத்தம சோழனால் புனரமைக்கப்பட்டது.
# திருஞானசம்பந்தர் மகேந்திரப்பள்ளி சிவனை வழிபட்ட பிறகு இக்கோயிலுக்குச் சென்றார். இதுவே அவரது இரண்டாவது புனித யாத்திரையின் கடைசி ஆலயமாகும்.
# பிற்காலத்தில் மராட்டிய மன்னர்களும், குலோத்துங்க சோழனும், ராஜேந்திர சோழனும் ,விக்கிரம சோழனும் திருக்கோவிலை புனரமைப்பதற்க்கு உண்டான கல்வெட்டு ஆதாரங்கள் திருக்கோவிலில் உள்ளது .
# கல்வெட்டுகளின்படி சிவபெருமான் *திருக்குருகாவூர் திருவெள்ளடை ஆண்டர்* ,
*திருக்குருகாவூர் வெள்ளடையப்பர்*,
*குருகாவூர் வெள்ளடையப்பன்* ,
*வெள்ளடை மகாதேவர் என்று அழைக்கப்பட்டார்*.
# அந்த இடம் ராஜாதிராஜா வளநாட்டு திருவாலி நாட்டு குருகாவூரின் கீழ் இருந்தது.
# மதுரையும் ஈழமும் கொண்டருளிய ராஜகேசரிவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி காலத்தில் *திருவாலி நாடு, எதிர்லிச் சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது*
# சிலையின் கீழ், அடிவாரத்தில் *"வெண்ணைலுடையான் ஈழத்தங்கிள்ளை ஆரூரன்*"என்று பொறிக்கப்பட்டுள்ளது.
# திருக்கோவில் குடமுழக்கு விழா 1986 ஜூன் 18 அன்று நடைபெற்றது .
# *சமஸ்கிருதத்தில் வெள்ளடை என்றால் "பரமகயம்" - இதை "தெய்வத்தின் உறைவிடம்" என்று அழைக்கலாம்* .
# திருக்கோவில் முகவரி
அருள்மிகு வெள்ளடைநாத சுவாமி திருக்கோயில், திருக்குருகாவூர்-609115, வடகால் போஸ்ட், சீர்காழி தாலுகா,நாகப்பட்டினம் மாவட்டம்
🙏🏻 நற்றுணையாவது நமசிவாயமே 🙏🏻
சித்தமெல்லாம் சிவமயத்துடன் ஞான சிவம் என்கின்ற ஞானசேகரன் .
🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻
Saturday, July 23, 2022
*இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்*
இனிய ஈசன் சிவனை பற்றி நாம் அறியாத உண்மைகள்
*இனிய ஈசன் சிவனை பற்றி நாம் அறியாத உண்மைகள்*
🌹அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவமே என் வரமே 🌹
ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தையை பணிந்து 🙏
சிவனின்றி ஓர் அணுவும் அசையாது
*10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.
அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.
சிவபூமிதான் நாம் வாழும் பூமி .
இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.
தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்
இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.
தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.
பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.
நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)
திருக்கேதீஸ்வரம்,
திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)
ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.
உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்
புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,
ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,
வாழ்க்கையையும்,
பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).
வட அமெரிக்காவில்கொலராடா என்றஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிவலிங்கத்தின் வடிவத்தில் வத்திக்கான் சிட்டி டாப் வியூ சிவலிங்கம் வடிவத்தில் வத்திக்கான் நகரம் கட்டப்படுவதை ஒருவர் கவனிக்க முடியும் (மேல் பார்வையில் இருந்து பார்க்கப்படுகிறது)
அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.
பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.
சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.
சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.
எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.
எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்
சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.
சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.
நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம் எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்
அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் ஈசனே 🙏
உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்
ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தைக்கு ஆத்ம நமஸ்காரங்கள்
அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி 🦜🦜🦜
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நடுபழனி மரகத_தண்டாயுதபாணி திருக்கோயில் வரலாறு:
*🙏🌹*
45 அடி உயர முருகன் சிலை கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில்.
பனையபுரம் அதியமான் கோவில் முகப்புத் தோற்றம் 45 அடி உயர முருகன் சிலை மரகதத்தால் ஆன பாலதண்டாயுதபாணி சிலை முத்துசுவாமி சித்தரால் எழுப்பப்பட்ட மலைக்கோவில், நடுபழனி என காஞ்சிப் பெரியவரால் பெயர் சூட்டப்பட்டத் தலம், மரகத மூலவரைக் கொண்டு விளங்கும் திருக்கோவில், மணப்பேறு, மகப்பேறு அருளும் ஆலயம், 45 அடி உயர முருகன் சிலை கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில்
தல வரலாறு :
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, பொள்ளாச்சியைச் சார்ந்த முத்துசுவாமி என்ற மிராசுதாரர், முருகப்பெருமானின் திருவருளால் வடஇந்திய யாத்திரையை முடித்து, அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெரும்பேர் கண்டிகை என்ற திருப்புகழ் தலத்திற்கு வந்தார். மலை மீது சுமார் நான்கு ஆண்டுகள் தவமிருந்தார்.
அங்கு தங்கியிருந்த காலத்தில் அவரது கனவில் குழந்தை வடிவத்தில் தோன்றிய முருகப்பெருமான், ‘பெருங்கரணையில் உள்ள மலையில் எனக்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அதன்படி, அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெருங் கரணை ஊரில் உள்ள மலையைக் கண்டறிந்தார். அதன் உச்சியில் வேலாயுதத்தை நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். செடிகள், பாறைக் கற் களைச் சரிசெய்து, அதன்பிறகு அங்கேயே முருகன் சிலையை வைத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபாடு தொடங்கினார். இதற்கு ஊர் மக்கள் பெரும் ஒத்துழைப்பு தந்தனர். ஒருநாள் பெருத்த மழையால் கீற்றுக்கொட்டகை விழுந்துவிட, தனி ஆலயம் எழுப்ப தீர்மானித்து, சிறிய ஆலயம் எழுப்பினர். இந்த மலையைச் சீரமைக்க முத்துசுவாமி சித்தர் பெரும்பாடுபட்டுள்ளார். அருகில் உள்ள ஊர்களுக்கு காவடியெடுத்து ஆடி, அவர்கள் தரும் அரிசி உள்ளிட்ட காணிக்கைகளைப் பெற்றார். அதனைக் கொண்டு மலையைச் சீரமைக்கும் பணியாட்களுக்குச் சமைத்து தந்தார். பக்தர்கள் தரும் காணிக்கைகளைத் திருப்பணிக்கு பயன்படுத்தினார். எவரிடமும் கையேந்தி நன்கொடை கேட்டதில்லை. குறையோடு வருபவர்களுக்கு திருநீறு தந்து குணமாக்கும் வல்லமையும், முத்துசுவாமி சித்தருக்கு முருகன் திருவருளால் கிடைத்துள்ளது. இப்படி முத்துசுவாமி சித்தரின் ஐம்பது ஆண்டு கால உழைப்பில் உருவானதே நடுபழனி திருக்கோவில்.
இந்த சமயத்தில் காஞ்சிப் பெரியவர் ஒருமுறை வருகை தந்தார். அவருக்கு இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான், பழனி பாலதண்டாயுத பாணியாகவே காட்சி தர, இந்தத் தலத்தை ‘நடு பழனி’ என்று அழைத்தார் காஞ்சிப் பெரியவர். அதன்பிறகு, முருகப்பெரு மானின் மூலவர் சிலையை, மரகத சிலையாக வடித்து, புதிய தண்டாயுதபாணியாக பிரதிஷ்டை செய்து, 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமது பூவுலக நிறைவுக்காலம் வருவதை உணர்ந்த
முத்துசுவாமிகளின் கனவில், மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் உருவம் வந்தது. அதே போல் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் கனவில், முத்துசுவாமி சித்தரின் உருவம் தோன்றியிருக்கிறது. அதன்பிறகு ஒரு முறை நடுபழனிக்கு, மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகள் வருகை தந்தார். அவரைக் கண்ட முத்துசுவாமி சித்தருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இருவரும் தங்களுக்கு தோன்றிய கனவைப் பற்றி பேசிக்கொண்டனர். அப்போதுதான் இருவருக்குமே ஒரே நேரத்தில் இதுபோன்ற கனவு வந்திருப்பது தெரியவந்தது.
ஆலய அமைப்பு :
நடுபழனி மலை, பசுமையான பெருங்கரணை கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 300 அடி உயரமுள்ள கனக மலையான நடுபழனி, வடக்கில் 128 படிகள் கொண்டு மலையேற வசதியாக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. மேற்குப்புறம் வாகனங்கள் மலையேறும் சாலை வசதியும் இருக்கிறது. அங்கே மலேசியாவில் பத்துமலைப் பகுதியில் உள்ள முருகப்பெருமான் சிலையைப் போலவே, 45 அடி உயர முருகப்பெருமான் கம்பீரமாய் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். மலை உச்சியில் இந்த கோவில் உருவாக மூலக்காரணமான முத்துசுவாமி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அவரது சமாதி முன்மண்டபத்தோடு எழிலாக ஆலய வடிவில் கட்டப்பட்டுள்ளது.
சற்று மேலே இடும்பன் சன்னிதியைக் கடந்து சில படிகள் ஏறினால், நடுபழனி முருகன் ஆலயம் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றது. கணபதி, தத்தாத்ரேயர் சன்னிதிகள் சுற்றி அமைந் திருக்க, நடுநாயகமாக மரகதக் கல்லால் ஆன தண்டாயுதபாணி கிழக்கு நோக்கியபடி அருள்காட்சி தருகிறார். இவரின் வடிவம் நமக்கு பழனி மலையில் இருக்கும் பாலதண்டாயுதபாணியின் உருவத்தை நினைவுபடுத்துகிறது. ஆலய மகாமண்டபத்தின் இடதுபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகப்பெருமான், வலது புறம் விநாயகர், பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் வடிவமான தத்தாத்ரேயர், நாக தத்தாத்ரேயர், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி வடிவமான அனகா லட்சுமி, உற்சவர் விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணியர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. மலை அடிவாரத்தில் விநாயகர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், ராஜேஸ்வரி அம்மன், நவக்கிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளன.
சுவாமிகளின் நெருங்கிய நண்பராக விளங்கிய முறப்பாக்கம் சுவாமிகளின் சமாதி மலையடிவாரத்தில், நவக்கிரக சன்னிதி அருகே அமைந்துள்ளது. இதனை சுவாமிகளே செய்து முடித்தார். இத்தலம் திருமண வரம், குழந்தை வரம் அருளும் தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பவருக்கும் பக்தர்களுக்கு, கைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.விழாக்கள்: இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சஷ்டி உற்சவம் மற்றும் திருக்கல்யாணம், கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருநாள், முத்துசுவாமி சித்தர் குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இது தவிர, முருகனுக்குரிய கிருத்திகை உள்ளிட்ட விழாக்கள் சிறப்புடன் நடத்தப்படுகிறது. பவுர்ணமி தோறும் கிரிவலம் நடக்கிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரி சனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
எல்லப்ப சித்தர்:
முத்துசுவாமி சித்தருக்கு முன்பாக, இம்மலை உச்சியில் எல்லப்ப சித்தர் என்பவர், வேல் ஒன்றை நிறுவி வழிபட்டு வந்ததாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இவரின் சமாதி, மலையடிவாரத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கே, விரிவாக்கம் செய்த குளம், ஆலயத்தின் தீர்த்தக்குளமாக அமைந்துள்ளது.
45 அடி உயர முருகன் :
இம்மலையின் மேற்கு அடிவாரத்தில் 45 அடி உயர முருகன் சிலை, மலேசிய பத்துமலை முருகன் சிலையைப் போல அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் அவதூத தத்த பீடத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்டு, சுவாமிகளின் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தச் சிலை கனகமலை எனும் நடுபழனியின் அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.
முத்துசுவாமி சித்தர் :
நடுபழனி தண்டாயுதபாணி மலைக்கோவிலை எழுப்பியவர் இவர்தான். இவர் முருகப்பெருமான் அருளால் பல சித்து விளையாட்டுகள் கை வரப்பெற்றிருந்தார். ஆனால் அந்த சக்திகளை எல்லாம் பக்தர்கள் நலம் பெறு வதற்காக மட்டுமே பயன்படுத்தினார். தன்னை நாடி வந்த அடியார்களுக்கு திருநீறு மட்டுமே தந்து அனைத்து வகை நோய் மற்றும் ஆபத்துக்களில் இருந்தும் காத்தருளியுள்ளதை பக்தர்கள் நினைவு கூருகின்றனர். இவர் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையில் வல்லவர் என்று இவரது சீடர்கள் பலரும் கூறுகின்றனர்.
அமைவிடம் : காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா பெருங் கரணை கிராமத்தில் உள்ள சிறிய மலையே நடுபழனியாகும். மேல்மருவத்தூருக்குத் தெற்கே 2 கி.மீ. தூரத்தில் இடதுபுறம் முருகன் கோவில் வளைவு வரும். அதில் நுழைந்ததும் ரெயில் கிராசிங் வரும். அதில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
🙏ஓம் முருகா 🙏
Tuesday, July 5, 2022
ஆனித் திருமஞ்சனம் ஸ்பெஷல் திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டை விரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது. அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன.இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில், திருச்சிற்றம்பலத்தில், இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது.அதாவது நாம் தான் அது,அதுவே நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்தத் திருநடனம்.அதாவது மனிதனின்அகம் ஒரு கோயில்.திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான்.பொதுவாகவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும்,சிவனே சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கைகூப்பி திருச்சிற்றம்பலம் என்று கூறுவர். அதற்கு எதிர்புறம் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் கூறுவர்.இதற்க்கு என்ன பொருள் என்றால் உன்னுள் இருக்கும் (பிண்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்)உன் ஆன்மா, சிற்றம்பலத்தில் இருக்கும் உன் ஆன்மா, நிறைவு பெறுவதாக பரிபூரணமாவதாக என்று பொருள்.அதற்கு எங்கே செல்ல வேண்டும் என்றால் தில்லையம்பலம் என்று எதிரில் உள்ளவர் பதில் வணக்கம் சொல்லுவர்.உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் ஆத்மா நிறைவுபெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறார்கள் என்று அர்த்தம் பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூறவேண்டும்.கூறுவதோடு நில்லாமல் தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை தரிசிக்க வேண்டும்.உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி.இதனை உணர்த்தவே திருசிற்றம்பலத்தில் நடராஜ பெருமான் மனித ரூபத்தில் ஆனந்தகூத்தாடுகிறான்.நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!சிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்.திருச்சிற்றம்பலம் என்று சொல்ல சொல்ல நாம் அறியாமல் பார்க்கும், பேசும், செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்கு புண்ணியம் சேர்க்கிறோம்..... நமது அறியாமையால் ஏற்படும் தவறுகள் எவ்வளவு என்பது நமக்கு தெரியாது. அதனால் நாம் திருச்சிற்றம்பலம் என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா? மேலும் திருச்சிற்றம்பலத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும், உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது.ஆனால் திருச்சிற்றம்பலம் என்று சொல்லிச் சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும் என்பதற்காக ஒரு ரஹசிய கோட் வேர்டாக இதை இறைவனே திருச்சிற்றம்பலமுடையான் என்று தன்பெயறை குறிப்பிட்டான்..... திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்.
கூடா நட்பு
Sunday, July 3, 2022
💚💜♥💛❤💛💚💜♥💛❤💛♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪#திருவாதவூரா்திருவாசகம்|||====|||====|||====|||====||| 🔔#சிவபுராணம்🔔 🙏🙏🙏🙏🙏🙏🙏>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<♥#திருச்சிற்றம்பலம்♥************************************🔥#பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்🔥#நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த🔥#மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 🔥#மறைந்திட மூடிய மாய இருளை🔥#அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்🔥#புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி🔥#மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை🔥#மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥**********************************💥 #எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எம் பெருமானே!ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே! எம் பெருமானே! வலிய வினையையுடையவனாகிய என்னை, மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் கட்டப்பெற்று, வெளியே தோலால் மூடி, எங்கும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை குலையும்படி, ஐம்புலன்களும் வஞ்சனை பண்ணுதலால்,👣👣👣👣👣👣👣👣👣👣👣👣***********************************♦#தில்லையம்பலம்♦***********************************🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷
Friday, July 1, 2022
🌹அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவனடியை சிந்திப்போம் 🌹🌹காகபுஜண்டரின் திவ்விய சரித்திரம்🌹*63* *சீடர்களுடன் ஒரே இடத்தில்* *ஐக்கியமான ஒரு சித்தர் தலம்*.மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது.சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி சில ஆலயங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது. மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம் எனப்படும் இந்தத் திருக்கோவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்து கிறது.சோழவள நாட்டில் உள்ள சீர்காழியில், 14–ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை போற்றி வழிபட்டு தவம் செய்து வந்தார். அவரது தவத்தின் பயனாக திருச்செந்தூர் முருகப்பெருமான், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு, மெய்ஞானம் தந்து அருள் வழங்கினார்.முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற சீகாழி சிற்றம்பல நாடிகள், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடு துறைக்குச் சென்றார். அங்கு ஒரு மடாலயம் அமைத்து அங்கேயே தங்கியிருந்து தவமியற்றி வந்தார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக அறுபத்துமூன்று பேர் இருந்தனர். இந்த நிலையில், சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். சீடர்களிடம் தனக்கு உதித்த விருப்பத்தை எடுத்துக் கூறினார். சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழ மன்னனை அழைத்த சீகாழி சிற்றம்பல நாடிகள், ‘நான் என்னுடைய சீடர்களோடு சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் ஜீவ சமாதி என்னும் நிஷ்டையில் கூட விரும்புகின்றேன். அதற்கு தகுந்த இடம் ஒன்றை ஏற்பாடு செய்து தாருங்கள்’ என்று கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற மன்னன், அவரது விருப்பப்படியே மயிலாடு துறைக்கு மேற்கு பகுதியில் உள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில் இடம் ஒதுக்கிக் கொடுத்தான். பின்னர் அங்கு அறுபத்துமூன்று சமாதிக் கோவில்கள் அமைத்து, அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான். அதே போல இந்தச் செய்தி நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிசயத்தைக் காண பலரும் அங்கே கூடி நின்றனர். தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள், தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார். அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில், மூன்று திருவெண்பாக்கள் பாடினார். தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி, சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர். இந்த இடம் தற்போது சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது. இத்தலமே தற்போது சீகாழி சிற்றம்பலநாதர் திருக்கோவிலாக அருள் வழங்கி வருகின்றது. சித்தர் அங்கிருந்து அன்று போல் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். முறையாக தரிசித்து வணங்கும் எல்லாருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகிறார். கிழக்கு பார்த்த வண்ணம் எளிய நுழைவு வாசலைக் கொண்டு அமைந்துள்ளது இந்த ஆலயம். கருவறை முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறைக்குள் தல நாயகர் சீகாழி சிற்றம்பல நாடிகளின் ஜீவ சமாதியும், அதன் மீது சிவலிங்கத் திருமேனியும் ஒளி வீசும் பொலிவோடு காட்சி தருகிறது. இவரே முக்காலத்து வினைகளையும் போக்க உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்துமூன்று சிவலிங்கத் திருமேனிகள், நேர்த்தியாக ஒரே வரிசையில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. மேலும், கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.கருவறையின் பின்புறத்தில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சப்த பீடங்கள், தனி சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அம்பாள், சிவயோக நாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல, மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் செய்து வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம். *அமைவிடம்*:நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும், சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் சரணம்அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜🦜🦜
Followers
மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்
தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...
-
பிறப்பு முதல் இறப்பு வரை மர்மம் நிறைந்த முக்கோண சிவாலயங்கள் (3 sivan temples secrets) எங்கே இருக்கு தெரியுமா ? உலகுக்கெல்லாம் ஒப...
-
பெண்ணையாறு கர்நாடகத்தில் உருவாகி தென் திசையில் பயணித்து பின் தமிழ் நாட்டில் கிழக்கு நோக்கித் திரும்பி, சுமார் 331.2 கி.மீ. தூரம் பயணித்து வ...
-
திரௌபதி, பாஞ்சால மன்னன் துருபதனின் மகள், மேலும் இதிகாசமான மகாபாரதத்தில் முக்கிய பெண் கதாபாத்திரம், அவர் பஞ்ச பாண்டவர்களின் மனைவ...