Friday, June 30, 2023

சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது

அறிந்து கொள்வோம் அற்புதமான அதிசயமான ஆன்மீக தகவல்கள்...!
திரு நாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

ஆந்திராவில் மங்களகிரியில் பானகம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில் நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை உள்வாங்கி கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும் போது கருடன் தரிசனம் தருகிறது.

கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருடசேவையின்போது கல்கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.

திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.

சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட சனிதோஷங்கள் முற்றிலும் நீங்கும்.

சனி பிரதோஷம்...🙏🙏🙏

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.

இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும்.

சனிப்பிரதோஷம் தினம் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

சனிப்பிரதோசம் அன்று அருகில் இருக்கும் சிவ ஆலயம் சென்று சனிபகவானை வணங்க சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.

நமக்கு வரும் நோய்களும், துன்பங்களும் முன்ஜென்ம பாவத்தின் சம்பளமாக கிடைக்கிறது. அந்த பாவங்கள் தீர இப்பிறவியில் நிறைய நன்மைகளை செய்ய வேண்டும்.

ஆலய தரிசனம் செய்வதும், இறைவனுக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் நமது முன்ஜென்ம பாவங்களை போக்கும். இதன் மூலம் நோய்கள் நீங்கும்.

முன்ஜென்ம பாவங்கள் நீங்கவும், நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமாக வாழவும் சனி மகா பிரதோஷ நாளில் சிவன், நந்திக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

வீட்டில் விளக்கேற்றி இறைவனை வழிபடலாம். அருகில் இருக்கும் ஆலயங்களில் சிவ தரிசனம் செய்யலாம். சனிபகவானால் ஏற்படுத் தோஷம் நீங்கும்.

சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு உகந்தது. சனியின் பார்வையால் நிகழும் கெடுபலன் கள் நீங்க பிரதோஷ வழிபாடு மிகவும் உகந்தது.

சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட சனிதோஷங்கள் முற்றிலும் நீங்கும். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட சனிபகவான் தன் அருள்பார்வையைக் காட்டியருள்வார்.

பிரதோஷ காலத்தில் முறைப்படி சிவபெருமானையும் நந்திதேவரையும் ஒருங்கே தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். அமைதி, ஆனந்தம் வாய்க்கும் முக்தி கிடைக்கும்.

பிரதோஷ காலத்தில் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம், பன்னிரு திருமுறைகள், தேவாரம் திருவாசகப் பாடல் கள் பாடி வழிநட ஈசனருள் பூரணமாக கிட்டும். அவனருளாலே ஆனந்தம் பெருகும்.

ஓம் நமசிவாய 🙏🙏🙏

Thursday, June 29, 2023

சனி பிரதோஷம்

சனி பிரதோஷம்
பிரதோஷம் என்றதும் நம் நினைவுக்கு வருவது பிரதோஷ வேளையில் சிவாலயத்தில் நந்திக்கும் சிவபெருமானுக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள்தான். பிரதோஷ காலத்தில் நடைபெறும் இந்த வழிபாடுகளைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் ஆலயங்களில் குவிவார்கள்.  அதிலும் மகாபிரதோஷம் என்றால் அதன் மகிமைகள் சொல்லிலடங்காதவை. மகாபிரதோஷ வழிபாடு நம் துன்பங்கள் அனைத்தையும் நீக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, சனி தோஷத்தினால் ஏற்படும் துன்பங்களுக்கு மகாபிரதோஷம் மாமருந்தாகும் என்பதால் அந்த நாளில் வழிபாடு செய்வதன் முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பிரதோஷம்
மகாபிரதோஷ மகிமைகள்
சனிக்கிழமையுடன் திரயோதசி திதி இணைந்து வரும் நாளையே சனி மகா பிரதோஷம் என்கிறோம். தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளியான ஆலகால விஷத்தை அருந்திய இறைவன், அந்த விஷத்தின் நச்சுத் தன்மை தீர்ந்ததும் ஆனந்தத் தாண்டவம் ஆடி தேவர்களுக்கு அருள்புரிந்த வேளை ஒரு சனிக்கிழமை திரயோதசி திதி என்பதால் சனிக்கிழமை அன்று வரும் மகாபிரதோஷம் சிறப்புடையது.  
சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6 வரையுள்ள காலம் சூரியன் மற்றும் சுக்கிர ஓரையில் அமையும். இந்த நேரம் வெற்றி தரும் முகூர்த்தத்தைக் குறிக்கின்ற ஒரு நேரமாக உள்ளது. சிவபெருமானைக் குறிப்பிடுகின்ற சூரிய ஓரையில் தொடங்கி, அம்பாளைக் குறிக்கின்ற சுக்கிரவேளையில் நிறைவுபெறும் பிரதோஷ பூஜையில் மகாலட்சுமியின் ஆசிகள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதால், சனி மகா பிரதோஷம் மிகவும் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

ஒரு சில ஜாதகங்கள் சூரியன் மற்றும் சுக்கிரனின் பலன்களைப் பரிபூரணமாகப் பெறமுடியாதபடி கிரக அமைப்புகளைக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஜாதகக் காரர்கள் தவறாமல் வழிபட வேண்டிய பிரதோஷம் சனி மகாபிரதோஷம்.

ஆலய தரிசனம் மிகவும் விசேஷமானது. ஆலயத்தில் அமையும் பாசிட்டிவ் அதிர்வுகள் உடலுக்கும் உள்ளத்துக்கும் வலிமை சேர்ப்பவை. இறைவனை வழிபட அந்தச் சூழ்நிலை மிகவும் உகந்ததாக அமையும். பிரதோஷ வேளையில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சந்நிதியில் தேவர்கள் அனைவரும் எழுந்தருளி வழிபடுவர் என்பது ஐதிகம். எனவே, அந்த நேரத்தில் நாமும் வழிபாடுகள் செய்தால் வேண்டும் வரம் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆனால், தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையால் ஆலயம் சென்று தொழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப் பட்ட தருணங்களில் மகாபிரதோஷம் போன்ற மகிமை நிறைந்த நாள்களில் வீட்டிலிருந்தே சிவபெருமானை வழிபட்டு வேண்டும் வரம் பெற முடியும்.

சிவபுராண மகிமைகள்
பிரதோஷ விரதம்
பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி சிவனை நினைத்துத் திருநீறணிந்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும். அதன் பின் சிவபெருமானைத் துதிக்க முன்னோர்கள் அருளிச்செய்திருக்கும் ஸ்தோத்திர மாலைகளைப் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மாணிக்க வாசகர் அருளியிருக்கும் சிவபுராணம் மிகவும் முக்கியமானது.

சிவபுராணம் வேதத்தின் சாரம். வேதத்தின் பாகமான ஶ்ரீருத்ரம் சொல்லும் அரும்பெரும் தத்துவங்களைத் தொகுத்து எளிய தமிழில் நமக்கு மாணிக்க வாசகர் அருளிய பதிகம். மாணிக்க வாசகர் குதிரை வாங்குவதற்காகப் பெரும்பொருளோடு செல்லும் வழியில் அவரை ஆட்கொள்ள இறைவன் திருவுளம் கொண்டார். திருப்பெருந்துறை யில் ஒரு துறவியின் தோற்றத்தில் இறைவன் அமர்ந்திருக்கிறார். அவரைக் கண்டதும் மனம் அவர்பால் ஈர்க்கப்படுவதைக் கண்ட வாதவூரார் அவர் திருவடிகளைச் சரணடைந்தார்.

திருவடிகளைப் பற்றிய கணத்தில் ஞானத்தின் உச்சத்தை அடைந்தார் மாணிக்கவாசகர். 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

என்று பாடுகிறார்.

பிரதோஷம்!
தன் முற்பிறவியின் தன்மைகளை அறிந்தும் அவற்றிலிருந்து தப்புவிக்கும் உபாயமாகக் குருவின் திருவடிகளைக் குறிப்பிட்டு சிவபெருமானைப் போற்றுகிறார்.

சிவபுராணத்தை தினமுமே பாராயணம் செய்ய வேண்டும். சிவபுராணம் பாராயணம் செய்தால் நான்கு வேதங்களையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். நித்திய பாராயணம் செய்ய வேண்டிய சிவபுராணத்தை குறைந்தபட்சம் பிரதோஷ நாள்களிலாவது செய்ய வேண்டும். 'சிவபுராணத்தைப் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து' என்கிறார் திருவாதவூரார்.

இத்தகைய சிறப்புகளை உடைய சிவபுராணத்தை மகாபிரதோஷ தினத்தில் மகா பிரதோஷ வேளையில் பாராயணம் செய்ய மனக்குறைகள் நீங்கி நல்லருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிரதோஷம்
பிரதோஷ பூஜை
மகாபிரதோஷ தினத்தன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் சிவபூஜை செய்ய வேண்டும். பிரதோஷ வேளையில் சிவபூஜை செய்வதற்கு முன்பாக நீராடி பூஜையைத் தொடங்க வேண்டும்.

சிவபெருமானின் திருவுருவப் படம் அல்லது லிங்கத்துக்கு போற்றித் திருத்தாண்டகம் வாசித்து அர்ச்சனை செய்யலாம். மேலும் லிங்காஷ்டகம், கோளறு பதிகங்கள் பாடி சிவனைத் துதிக்க வேண்டும். சுவாமிக்கு  வீட்டிலேயே செய்த ஏதேனும் ஒரு பிரசாதத்தை நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு எளிமையாக சிவபூஜை செய்து பிரதோஷ விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

நன்றி
இனியகாலைவணக்கம் வாழ்கவளமுடன்

உலகில் வேறு எங்கும் இத்தகைய ஆலய அமைப்பு இருப்பதாக தெரிய வில்லை. எனவே இது ஏழாவது அதிசயம் என்றால் மிகையாகாது.

ஒரேகோயிலில் 
ஒன்பதுஅதிசயங்கள்...!
அதிசயம் ஒன்று:

அது ஒரு மகாப்பிரளய காலம். பிரளயத்தின் முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும். பூமியெங்கும் மழைவெள்ளமென
கொட்டியது.

உயிரினங்கள் அழிந்தன. ஆனால், அவ்வளவு வெள்ளப்பெருக்கிலும், பூ லோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது.

காரணம் அங்கு இறையருள் இருந் தது. அந்தத் தலமே தென்குடித்திட்டை எனும் திட்டை. பேரூழிக்காலத்திலும், பெரு வெள்ளத்திலும் மூழ்காத திட்டை தலம் ஒரு அதிசயமே.

அதிசயம் இரண்டு:

பரம்பொருள் ஒன்றே. பலவல்ல! சத்தியம் ஒன்றே இரண்டல்ல!! என்பது வேதவாக்கு அப்பரம்பொருள் தன்னிலிருந்து ஒரு பகுதியை சக்தியைப் பிரித்து உமாதேவியைப் படைத்தார்.  

திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளிஅருள்பாலிக்கிறார்.

அம்மன் சந்நிதிக்கு மேலே மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கட்டங்கள் விதான த்தில் செதுக்கப்பட்டுள்ளன.  

அந்தந்த ராசிக்காரர்கள் தங்கள் ராசியின் கீழ் நின்று அம்மனைப்பிரார்த்திக்கும்போது அம்மன் அவர்கள்தோஷம் நீங்க அருளுகின்றார்.  

பெண்களுக்கு ஏற்படும் திருமணத்தடை, மாங்கல்யதோஷம் நீங்க இந்த அம்மன் அருளுவதால் மங்களாம்பிகைஎனப்புகழப்படும் உலகநாயகி இரண்டாவது அதிசயம்.

அதிசயம் மூன்று:

பிரளயத்தின் முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்க உமையுடன் சேர்ந்து உமையொருபாகன் அண்டத்தைப் படைத்து, அதனைப்பரிபாலன ம் செய்ய மும்மூர்த்திகளையும் படைத்தனர்.  

ஆனால்மாயைவயப்பட்டி
ருந்த மும் மூர்த்திகளும் பெரு வெள்ளத்தால் மூடி பேரிருள் சூழ் ந்திருந்த இந்தப் பிரபஞ்சத்தைக் கண்டு பயந்தனர்.

அலைந்து திரிந்து பெருவெள்ளத்தின் நடுவில் பெருந்திரளாக இருந்த திட்டையை அடைந்தனர். மாயை நீங்க வேண்டி இறைவனைத்தொழுதனர். இறைவன் அவர்கள் அச்சத் தைப்போக்க உடுக்கையை முழக்கினார்.

அதிலிருந்துதோன்றிய மந்திரஒலிகள்மும்மூர்த்திகளையும் அமைதியடைச் செய்தது.
பேரொளியாக ஒரு ஓடத்தில் ஏறி வந்த இறை வன் அவர்களுக்கு காட்சி தந்தார்.  

மும்மூர்த்திகளின்மாயையை நீக்கி அவர்களுக்கு வேத வேதாந்த சாஸ்திர அறிவையும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய 3 தொழில்களையு ம் செய்ய உரிய சக்தியையும், ஞானத் தையும் அருளினார். மும்மூர்த்திக ளும் வழிபட்டு வரம்பெற்றது மூன்றாவது அதிசயம்.

அதிசயம் நான்கு:

மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில்சந்திரக்காந்தக்கல், சூரியக்காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான்.  

தினமும்தேய்ந்துகொண்டேவந்த சந்திரபகவான், திங்களூர் வந்து கைலாசநாதரை, வணங்கி தவம் இருந்தார். கைலாசநாதரும், சந்திரனின் சாபம்நீக்கி மூன்றாம் பிறையாக தன் சிரசில் சந்திரனை அணிந்து கொண்டார்.  

திங்க ளூரில் தன் சாபம் தீர்த்த சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடனை செலுத்துகிறார். எப்படி என்றால் இறைவனுக்கு மேலே சந்திர காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பத்தை ஈர்த்து ஒரு நாழி கைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யா பிஷேகம் செய்கிறார்.  

24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன்மீது ஒருசொட்டுநீர் விழுவதைஇன்றும் காணலாம். உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது. இந்த ஆலயத்தில் அமைந்துள்ள நான்காவது அதிசயம் இது.

அதிசயம் ஐந்து:

நம சிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலய த்தின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஐந்தாவது லிங்கமாக மூலவராக ராமனின் குலகுரு வான வசிஷ்டர் பூஜித்த வசிஷ்டேஸ்வரர் உள்ளார்.

எனவே, இது பஞ்சலிங்க ஸ்தலமாக உள்ளது. பஞ்ச பூதங்களுக்கும் தனித் தனியே பாரதத்தில் தலங்கள் உண்டு. ஆனால் ஒரே ஆலயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் ஐந்து லிங்கங்கள் அமைந் திருப்பது ஐந்தாவது அதிசயம்.

அதிசயம் ஆறு:

எல்லா ஆலயங்களிலும் மூலவராக உள்ள மூர் த்தியே பெரிதும் வழிப்படப்பட்டு வரம்தந்து தல நாயகராக விளங்குவது வழக்கம். ஆனால் திட்டைத்தலத்தில் சிவன், உமை, விநாயகர், முருகன், குரு, பைரவர் ஆகிய ஆறுபேரும் தனித்தனியே அற்புதங்கள் நிகழ்த்தி தனித்தனியாக வழி படப்பட்டு தனித்தனி சந்நிதிகளில்அருள்பாலிக்கிறார்கள்.  

எனவே,பரிவாரதேவதைகளைப்போல அல்லாமல் மூலவர்களைப்போலவே, அருள்பாலிப்பதுஆறாவது அதிசயம்.

அதிசயம் ஏழு:

பெரும்பாலான ஆலயங்கள் கருங்கல்லினால் உருவாக்கப் பட்டிருக்கும். பழமையான ஆலயங்கள் சில செங்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் கொடிமரம், விமானங்கள், கலசங்கள் ஆகிய அனைத்தும் கருங்கற்களினால் உருவாக்கப் பட்டுள்ளது இங்கு மட்டுமே. 

உலகில் வேறு எங்கும் இத்தகைய ஆலய அமைப்பு இருப்பதாக தெரிய வில்லை. எனவே  இது ஏழாவது அதிசயம் என்றால் மிகையாகாது.

அதிசயம் எட்டு:

பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கு சென்றும் தோஷம் நீங்கப் பெறவில்லை. இதனால் திட்டைக்கு வந்து வசி ஷ்டேஸ்வரரை ஒரு மாதம் வரை வழிபட்டு வந்தார்.  

வசிஷ்டேஸ்வரர் அவர் முன்தோன்றி என் அம்சமான உன் தோஷம் இன்றுடன் முடிந்துவிட்டது.நீ திட்டைத் திருத்தலத்தின் காலபைரவனாக எழுந்தருளி அருள்புரியலாம் என்றார்.  

அன்று முதல் இத்தலம் கால பைரவரின் ஷேத்திரமாக விளங்கி வருகிறது. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் இந்த பைரவரை அபிஷேக ம் அர்ச்சனை செய்து வழிபட்டால், சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும். இங்கு எழுந்தருளி உள்ள பைரவர் எட்டாவது அதிசயம்.

அதிசயம் ஒன்பது:

நவக்கிரகங்களில் மகத்தான சுபபலம் கொண்டவர். குருபகவான் ஒருவரே. உலகம் முழுவதும் உள்ள தன தான்ய, பணபொன் விஷயங்களுக்கு குருவேஅதிபதி. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இட ங்களை தன்பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர்.  

மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களி னால் வரும் தோஷங்களை தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர் குருபகவான். எனவே, குருபார்க்க கோடி நன்மை என்ற பழ மொழி ஏற்பட்டது.

இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக் கும், அம்பாளுக்கும் இடையில் எங்கும் இல்லாச் சிறப்போடு நின்ற நிலையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

இவருக்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழாவு ம், அதனையொட்டி லட்ச்சார்ச்சனையும் குருபரி கார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வரு கின்றன. இங்கு எழுந்தருளி உள்ள ராஜ குரு பகவான் ஒன்பதாவது அதிசயம்.

தஞ்சாவூர் பெரிய கோயில் வாராஹி அம்மன். (அலங்காரம் இல்லாமல்)

தஞ்சாவூர் பெரிய கோயில் வாராஹி அம்மன். (அலங்காரம் இல்லாமல்)
#வராகி_அம்மன்_தோற்றம்

வராகி அம்மன் என்பவர் வராகமூர்த்தியின் சக்தி. பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். கறுப்பு நிறமானவர். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் என வராகியினைப்பற்றி ஸ்ரீ தத்துவநிதி விவரிக்கின்றது. தண்டநாத வராகி, சுவப்ன வராகி, சுத்த வராகி என்னும் மேலும் மூன்று வகையான வராகியின் உருவ அமைப்பு பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றது.

#தண்டநாத_வராகி -பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த
முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

#சுவப்ன_வராகி- மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

#சுத்த_வராகி -நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை
அந்தக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன். அவன் பெயர் அரதன குப்தன். மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்.
காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த அவன் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் இரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை.
எதிர்பாராமல் ஒரு நாள், அரதன குப்தனின் தங்கையும், அவள் கணவரும் இறந்து விட்டதாக காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து தகவல் வர, உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிப்பூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும்போது, தாய் தகப்பனை இழந்து நின்ற இரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான்.
வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே, ஒரு புன்னைவனம் – அதில் ஒரு வன்னிமரம். அருகில் ஒரு சிவலிங்கம். சற்றுத் தள்ளி ஒரு கிணறு.
கட்டுச்சோறை பிரித்து சாப்பிட்டு விட்டு, அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும். காலையில் கண் விழித்த இரத்னாவளி பதறிப்போனாள். கதறி அழுதாள் காரணம். அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன். நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது. தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர். நடந்ததை அறிந்து அவர் ஈசனிடம் முறையிட, உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்.
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் இரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர். அப்புறம் சொன்னாராம்: “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி, இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ.”
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன். இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள், அங்கே இருந்த ஒரு வன்னி மரமும், கிணறும், சிவலிங்கமும்தான்.
இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள். கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி, கொதித்துப் போனாளாம். இரத்னாவளி நடந்த விஷயங்களை, உள்ளது உள்ளபடியே சொல்ல, அதைக் கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி.
வழக்கு சபைக்கு வந்தது. திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள். “மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி” என்று கூறினாள் இரத்னாவளி.
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி:
“ஓகோ! அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். கூனிக்குறுகிப் போன இரத்னாவளி, கைகூப்பி அழுதாள், தொழுதாள். கண்களில் கண்ணீர் வடியக் கதறினாளாம் இரத்னாவளி.
“ஈசனே!இது என்ன சோதனை? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்? சொல் இறைவா சொல்.”
இரத்னாவளி பெரும் குரல் எடுத்துக் கதறி அழ, அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல்:
“நாங்கள் சாட்சி.”
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க. ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்!
“ஆம். இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான். இரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக, கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த கிணறும், வன்னிமரமும், இலிங்கமும், இன்று முதல், இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்”
என்று சொல்லி மறைந்தாராம் ஈசன். பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்.
இப்போதும், மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளிப்பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில், வன்னி மரம், கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறது.
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் உள்ளது திரும்புறம்பயம். கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “சாட்சிநாதசுவாமி” என்றும் பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு.
திருஞானசம்பந்தப் பெருமான் விஷம் தீண்டிய வணிகனை மீட்க பாடிய பதிகம்
(இழந்ததை திரும்பப் பெற, நாக தோஷம் நீங்க, தடைபட்ட திருமணம் இனிதே நடைபெற ஓத வேண்டிய பதிகம்!)
சடையாய்! எனுமால்; “சரண் நீ!” எனுமால்;
“விடையாய்!” எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?
சிந்தாய்! எனுமால்; “சிவனே!” எனுமால்;
“முந்தாய்!” எனுமால்; “முதல்வா!” எனுமால்;
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?
அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,
பிறை ஆர் சடையும், உடையாய்! பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை
இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்
பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!
மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!
கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?
பலரும் பரவப்படுவாய்! சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!
புலரும்தனையும் துயிலாள், புடை போந்து
அலரும் படுமோ, அடியாள் இவளே
வழுவாள்; “பெருமான்கழல் வாழ்க!” எனா
எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்;
மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்!
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப,
துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்;
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்!
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?
எரி ஆர் சடையும், அடியும், இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே!
மரியார் பிரியா மருகல் பெருமான்!
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்!
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே!

தன் பக்தன் பாண்டிய மன்னன் கால் மாறி ஆடிய ஆருத்ர நாயகனின் மதுரை வெள்ளியம்பல தரிசனம்.

உலகிலேயே வலது பாதம் தூக்கி ஆடும் நடராஜர்
தன் பக்தன் பாண்டிய மன்னன்  கால் மாறி ஆடிய ஆருத்ர நாயகனின் மதுரை வெள்ளியம்பல தரிசனம்.

பக்தருக்காகப் பாதம் மாற்றி ஆடிய பரமனின் ஆனி அபிசேகம் .

தில்லை அம்பல நடராஜர்  இடதுகாலைத் தூக்கி ஆனந்த நடனமிடும் திருகாட்சியை சிதம்பரம் திருக்கோயிலில் கண்டு மெய்சிலிர்த்து மகிழ்ந்திருப்போம். பொதுவாகவே நடராஜர் எல்லாத் திருத் தலங்களிலும் இதேபோன்றுதான் காட்சியளிக்கிறார். இந்த நினைப்போடு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் செல்பவர்களை நடராஜர் சற்று வித்தியாசமாக வரவேற்கிறார். 

ஆமாம், இந்தத் தலத்தில் அவர் வலதுகாலைத் தூக்கி களிநடனம் புரிகிறார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வெள்ளியம்பலத்தில் இவ்வாறு அவர் வித்தியாச கோலம் காட்டுவதன் அடிப்படை என்ன? நடராஜர் ஐந்து நடன சபைகளில் திருநடனம் புரிகிறார். சிதம்பரத்தில்  பொன்னம்பல சபையில் இவர் ஆனந்தத்தாண்டவம் ஆடி பக்தர்களை மகிழ்விக்கிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் இருப்பது வெள்ளியம்பலம். இங்கு அவர் ஆடுவது சந்தியா தாண்டவம். திருநெல்வேலியில் இருப்பது தாமிரசபை. 

இங்கு ஆடுவது முனி தாண்டவம். குற்றாலத்தில் இருப்பது சித்திரசபை. இங்கு அவர் ஆடுவது திரிபுரதாண்டவம். திருவாலங்காட்டில் இருப்பது ரத்தினசபை. இங்கு ஆடுவது காளிதாண்டவம். இந்த ஐந்து நடனசபைகளில் மதுரையில் மட்டும் நடராஜர் இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி சந்தியா தாண்டவம் ஆடுகிறார். இந்த நிகழ்ச்சியை பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணத்தில் 24வது படலமாக இடம் பெற்றிருக்கிறது.

இப்படி புராணத்திலேயே விவரிக்கப்படும் வகையில் நடராஜர் கால் மாறி ஆடியதன் காரணம்தான் என்ன? மதுரையில் மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த தெய்வீகத் திருவிழாவில் தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் பங்கேற்றனர். தெய்வீகத் தம்பதியின் அருள் வேண்டி காத்திருந்தனர். திருமண வைபவம் முடிந்து அனைவரையும் உணவருந்த வருமாறு சுந்தரேஸ்வரரும், அன்னை மீனாட்சியும் அனைவரையும் அழைத்தனர். 

அப்போது பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் ஈசனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தனர்: ‘ஐயனே, நாங்கள், தினமும் தங்களது பொன்னம்பல நடனத்தை தரிசித்த பிறகுதான் உணவு அருந்துவது வழக்கம்; அதனை இன்றும் கடைபிடிக்க விரும்புகிறோம், தாங்கள்தான் அருள்புரிய வேண்டும்’ இதை கேட்ட இறைவன், அவர்களின் நியமத்தைக் காக்க விரும்பினார். அதேசமயம் அவர்களை சிதம்பரத்திற்குச் சென்றுவரப் பணிக்கவும் அவர் விரும்பவில்லை. அவர்களிடமே சிதம்பரத்தை வரவழைக்க பெருங்கருணை கொண்டார். 

ஆமாம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே தான் திருநடனம் புரிந்து அருள்பாலிக்க, இந்தத் தலத்திலேயே வெள்ளியம்பலத்தை ஏற்படுத்தினார்!  அந்த அம்பலத்தில் திருநடனமும் புரிந்தார். இறைவனின் திருநடனத்தை கண்ட பதஞ்சலியும் வியாக்ரபாதரும் பெருமகிழ்வடைந்து உணவு அருந்தினர். இந்த மதுரைப் பெருநகரை விக்ரம பாண்டியன் ஆட்சி புரிந்துவந்தான். அவனுடைய மகன் ராஜசேகர பாண்டியனுக்கு ஒரு குறை. 

ஆமாம், ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் 63 கலை களில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் மீதமுள்ள ஒரே கலையான நடனத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதிருந்தான். அதற்குக் காரணம், நடராஜப் பெருமான் ஆடும் கலையாயிற்றே அது. அதை எப்படி தான் கற்பது என்ற பக்தி மேலீடுதான். ஆனால், அவனுடைய சமகாலத்தவனான கரிகாற்சோழன், அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ந்தவன் என்ற தகவல் ராஜசேகர பாண்டியனுக்குக் கிடைக்கிறது. 

உடனே இறைவனுக்கு உரியதான நாட்டியக் கலை, அவனது பக்தர்களும் கற்று மேன்மையுற வேண்டிய ஒன்றுதான் என்பதை உணர்ந்துகொண்டு, தானும் நடனம் கற்று அதில் முழுமையாக தேர்ச்சியும் பெற்றான். அப்படி தேர்ச்சி பெற்ற அவன், அந்தக் கலை எத்தகைய உடல் நலிவை, சோர்வைத் தருகிறது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்தான். நிறைவாக, தான் கற்ற இந்த நாட்டியக் கலைக்கு இறைவனுடைய அருள் வேண்டும் என்பதால் மதுரை வெள்ளியம்பல நடராஜரிடம் ஆசீர்வாதம் பெற வந்தான். 

நடராஜரைப் பார்த்த அவன் அப்படியே திகைத்து நின்றான். நடனத்தை உடல் சோர்வளிக்கும் கலையாகத் தன் அனுபவத்தில் அறிந்திருந்த அவன், காலம் காலமாக வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி நடனமாடி கொண்டிருக்கும் நடராஜருக்கு எவ்வளவு துன்பமாக  இருக்கும் என நினைத்து மிகவும் வேதனையடைந்தான். ‘அடடா, அவரது வலதுகால்தான் எவ்வளவு வலிக்கும்’ என்று வருந்திய அவன், இதை யாரிடம் எப்படி கேட்பது என்று யோசித்தான்: ‘ஈசனிடமே நேரடியாக முறையிட்டுவிடலாமா?  

ஆனால் தேவர்கள், முனிவர்கள் என்று மேன்மக்கள் பலரும் இதைப் பற்றி சிந்திக்காதபோது நாம் சிவனிடம் கேட்பது அதிகப்பிரசங்கித்தனமாகாதா?’ இந்த சூழலில் சிவராத்திரி திருவிழா வந்தது. மன்னன் நான்கு கால பூஜை முடித்து விட்டு நடராஜரின் எதிரில் நின்றான்  ராஜசேகர பாண்டியன். இடது பாதம் தூக்கி வலது பாதத்தில் நின்றுகொண்டிருந்த ஈசனைப் பார்த்து கண்களில் நீர் பெருக்கினான். ‘இறைவா, உனக்குக் கால் வலிக்கிறதோ இல்லையோ, எனக்குப் பெரிதும் வலிக்கிறது. எனக்காக கால் மாறி ஆடக்கூடாதா?’ என்று மனம் உருக வேண்டினான். 

இறைவன், மன்னனை மேலும் சோதிக்கும் விதமாக சலனமின்றி நின்றிருந்தான். ‘அப்படி நீ கால் மாறி ஆடாவிட்டால், என் முன்னால் ஒரு கத்தியை நட்டுவைத்து அதன்மீது விழுந்து உயிர் துறப்பேன்,’ என்று மிரட்டலாய் மன்றாடினான் மன்னன். சற்றே கண்மூடி மீண்டும் திறந்தபோது அப்படியே மெய்சிலிர்த்துப் போனான். ஆமாம், பக்தனுக்காக இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி ஆடிக்கொண்டிருந்தார் நடராஜப்பெருமான்! ‘எனக்காகக் கால் மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தந்தருள வேண்டும்,’  என்று நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டான் மன்னன். 

அன்றிலிருந்துதான் மதுரை வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடியபடி திவ்ய தரிசனம் அருள்கிறார். நடராஜரின் கால் மாறி ஆடிய இந்த சந்தியா தாண்டவம் பற்றி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வல்லாளசேன மன்னரின் ‘நைக்தி செப்பு பட்டய’த்தில் குறிப்பு காணப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீசைலம் கோயிலில், ஆனந்த தாண்டவத்தை போன்ற சந்தியாதாண்டவ சிற்பம் உள்ளது என்றும் தகவல்
உள்ளது. 

நடராஜப் பெருமான் இவ்வாறு ஆடிக்கொண்டே இருப்பதால் தான் உலகத்தின் இயக்கம் இயற்கையை ஒட்டி இயல்பாக இருக்கிறது. இந்த நடராஜருக்கு  நிகழ்த்தப்படும் ஆனி மாத திருமஞ்சனம் மிகச் சிறப்பான ஒன்று. தேவர்களின் பகல்பொழுதாகக் கருதப்படும் காலகட்டத்தில் கடைசி பகுதிதான் ஆனி மாதம். இந்த மாத உத்திர நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக ஐதீகம். அப்போது சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 
 வெம்மை மிகுந்த சுடலையின் சூடான சாம்பலை திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியையும் ஏந்தியிருப்பதால் நடராஜர்  கடுமையான வெப்பத்தால் சூழப்பட்டிருக்கிறார். இந்த வெப்பத்தை தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஆனி திருமஞ்சனம் தனிச் சிறப்புடையது.

கும்பத்தின் மீது தேங்காய் வைப்பது ஏன்

🛕 கும்பத்தின் மீது தேங்காய் வைப்பது ஏன்
பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் அடிக்கடி தோன்றும். அந்த வகையில கும்பம் வைக்கும்போது ஏன் தேங்காயை கும்பத்தின் மீது வைக்கிறோம்?

வேறு காய்களோ ,பழங்களோ ஏன் வைப்பதில்லை என்பதன் விளக்கத்தை தருமாறு அன்பர் ஒருவர் கேட்டுள்ளார். ஆன்மீகப் பெரியவர்கள் இதுக்கு சொன்ன விளக்கத்தை பார்ப்போம்!!!

முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்துகொள்வோம்.

மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர். நீர் இன்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை செய்கிறோம். கலசம் மூலமாக இறைவனை உருவகப்படுத்துகிறோம்.

ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில் ஏலக்காய், லவங்கம், பச்சைக்கற்பூரம் முதலிய வாசனைத் திரவியங்களைப்போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய்வைத்து பூஜிக்கிறோம்.

கலசம் வைக்க பித்தளை அல்லது தாமிரச் சொம்பினை பயன்படுத்துகிறோம். காரணம் இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி கொண்டவை. இயற்பியலில் கடத்திகள் என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் Conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்படுகின்ற மந்திரங்களை உள்ளே ஈர்த்துக் கொடுக்கும் திறன் படைத்தவை. இறைவனின் உடல் ஆக இந்தப் பாத்திரங்களையும், அதன் மேல் சுற்றப்படும் நூலினை நாடி, நரம்புகளாகவும் பொருள் காணலாம்.

ஏலக்காய்த்தூள் முதலான வாசனைப் பொடிகள் ஆதார சக்தியாகக் கருதப்படுகிறது. அறிவியல் ரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால் குரோமோசோம், ஜீன்கள், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., என்று சொல்கிறோமே அது போல. கலசச் சொம்பு அல்லது குடத்தின் மேலே மாவிலையைச் சொருகி அதன் மேல் தலைப்பகுதியாக தேங்காயை வைக்கிறோம். மற்ற இலைகள் எல்லாம் மரத்தில் இருந்து பறித்தவுடன் காய்ந்துவிடும், ஆனால் மாவிலை குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்காவது அப்படியே இருக்கும் என்பதால் மட்டும் மாவிலையை கலசத்திற்கு பயன்படுத்தவில்லை. மாமரம் என்பது அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தைத் தரவல்லது.

மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் என்ன என்று எண்ணுகிறீர்கள். தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள் அமைந்துள்ளன.

இறைவனுக்கு உள்ள திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும்போது ‘சோம சூர்ய அக்னி லோசனாயை நம:’ என்று உச்சரிப்பார்கள்.

லோசனம் என்றால் கண்கள் என்று பொருள். அதாவது வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், மூன்றாவதாக அக்னி என்று அழைக்கப்படும் நெற்றிக்கண். இந்த மூன்றாவது கண்ணைத் திறக்கும் வல்லமை படைத்தவன் இறைவன் மட்டுமே. இந்த மூன்று கண்களும் இறைவனுக்கு அமைந்திருப்பதால் அத்தகைய மூன்று கண்களை உடைய தேங்காயைத் தலைப்பகுதியாக உருவகப்படுத்தி கலசத்திற்கு வைக்கிறோம். நார்ப்பகுதியை தலைமுடியாகக் கருதுகிறோம். தேங்காயை உடைத்தவுடன் குடுமியைப் பிச்சிப்போடு என்றுதானே சொல்கிறோம்.

தேங்காய்நாரை பிய்த்துப்போடு என்று யாரும் சொல்வதில்லை. குடுமி என்ற வார்த்தை தலையில் உள்ள முடிகளின் இணைப்புதானே.

நம்மையும் அறியாமல் தேங்காயை மனிதனின் தலையாகவே பார்ப்பது என்பது நமக்குள் ஊறிவிட்டது என்பதற்கு இதை விட வேறு சாட்சி தேவையில்லை. கலசம் வைக்க சொம்பு கிடைக்கவில்லை என்றால் கூட வெறும் தேங்காயை மட்டும் வைத்தே இறைவனை ஆவாஹனம் செய்ய இயலும். ஏனெனில் இயற்கையாகவே தேங்காய்க்குள் ஆதார சக்தியான நீர் உள்ளிருக்கிறது. அதுவும் சுவை மிகுந்ததாக இருக்கிறது.

வேறு எந்த காய்க்கும் இல்லாத சிறப்பு தேங்காய்க்கு இருப்பது தற்போது புரிந்திருக்கும். கலசத்தில் இறைவனை உருவகப்படுத்தும்போது இறைவனின் தலைப்பகுதியாக இருப்பதற்கு தேங்காய்தான் பொருத்தமானது என்பதை நம் முன்னோர்கள் வைத்திருப்பதற்கான காரணமும் இதுவே..

Wednesday, June 28, 2023

கர்ப்பவதி கோலத்தில் சீதை.பக்தவச்சலர்.அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில்.

*தினம் ஒரு திருத்தலம்*:

கர்ப்பவதி கோலத்தில் சீதை.
பக்தவச்சலர்.
அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில்.
இந்த கோயில் எங்கு உள்ளது?

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு என்னும் ஊரில் அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

சென்னையில் இருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் கோயம்பேடு உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இங்குள்ள பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பொதுவாக ராமபிரான் வீற்றிருக்கும் தலங்களில் அவருடன் ஆஞ்சநேயரும், லட்சுமணரும் இருப்பர். ஆனால், இக்கோயிலில் ராமர், சீதை இருவர் மட்டுமே இருக்கின்றனர்.

இத்தலத்தில் ராமபிரான் அரச கோலத்தில் இல்லாமல் "மரவுரி தரித்த" கோலத்தில் இருக்கிறார். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம்.

இக்கோயிலில் சீதை கர்ப்பவதி கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

இத்தல உற்சவர் பக்தவச்சலர் ஆவார். இவர் இடது கரத்தால் பக்தர்களை அழைத்து, வலது கரத்தால் ஆசிர்வதிக்கும் கோலத்தில் இருக்கிறார். பக்தனுக்கு அருள் செய்பவர் என்பதால் இவருக்கு "பக்தவச்சலர்" என்ற பெயர் வந்தது.

வேறென்ன சிறப்பு?

லவகுசர்கள் "கோ" எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, "அயம்" என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் "கோயம்பேடு" என பெயர் பெற்றது. 

ஆஞ்சநேயருக்கு இங்கு தனிச்சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தில் சீதையின் மனக்கண்ணில் ராமர் எழுந்தருளியதால் இத்தலத்திற்கு, "ராகவபுரம்" என்ற பெயரும் உண்டு. 

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

ஆனியில் பிரம்மோற்சவம், ஆடியில் விகனஸர் உற்சவம், பங்குனி உத்திரத்தில் சுவாமி திருக்கல்யாணம். திருவோண நட்சத்திரத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

திருமணமான பெண்கள் அறிவான ஆண் குழந்தைகள் பிறக்க பிரார்த்தனை செய்கின்றனர்.

திருமணதோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் இங்குள்ள பார்வதி சுயம்வர விருட்சத்திற்கு தாலி கட்டி பிரார்த்தனை செய்கின்றனர். 

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி, தாயார் மற்றும் சீதைக்கு வஸ்திரம் சாற்றியும், விசேஷ திருமஞ்சனம் செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

ஶ்ரீசக்கரத்தாழ்வார் ஜெயந்தி சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதம்.

ஶ்ரீசக்கரத்தாழ்வார்  ஜெயந்தி சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதம். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.
       
ஆனிமாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், 
ஸ்ரீசக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்,
ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகிறது. திருமாலின்  திருக்கரத்தில் இருக்கும் 

சக்ரத்தாழ்வார் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

*சுதர்சன சக்கரம்*

சுதர்சன சக்கரத்தைத் தன் கரத்தில்  வைத்திருப்பார் ஶ்ரீகிருஷ்ணர்.  சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது என்று பொருள்.  சக்ரா    என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். 

எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது.
சாதாரணமாக ‘சுதர்சன சக்கரம்’ கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும் ஆனால்   மகாவிஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.
      
எதிரிகளை அழித்த பின் சுதர்சனசக்கரம் மீண்டும் இறைவனின் கரத்திற்கே திரும்பி விடுகிறது.
 
சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது. எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது.  ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்திரன் வேகம் அதிகரிக்கிறது. இதை ‘ரன்ஸகதி’ என்பர்.  
         
சுதர்சன சக்கரம் சுழலும் போது  சத்தம் எழுப்புவதில்லை.   சுதர்சன சக்கரத்தின்  உருவம் வடிவம் எத்தகையது என்றால்  சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது. அதே சமயம் இப்பிரபஞ்சம் அளவு பரந்து விரிந்தது.  
       மந்திரம், தந்திரம், யந்திரம், அஸ்திரம், சஸ்திரம் ஆகிய அனைத்தையும் அழித்து, துயர்களிலிருந்து  மக்களைக் காக்கவல்லது மகா சுதர்சனச் சக்கரம். இந்தச் சக்கரம், சிவபெருமானின்  ருத்ர சக்தியையும்  தன்னுள் கொண்டுள்ளது.
     கிருஷ்ணரின் கையிலிருந்த சுதர்சன சக்கரம், , அர்ஜுனனை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காத்தருளியது. அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவனுடைய செயல்கள் அனைத்திலும் துணை நின்றது. மகா சுதர்சனத்தை வழிபடுகிறவர்கள், சிவனாரையும்,  ஸ்ரீமந் நாராயணனையும் சேர்த்து வழிபட்ட பலனைப் பெறுகின்றனர்.  திருமாலின் ஆக்ரோஷமான  ஸ்ரீசுதர்சன மூர்த்தியே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர். சுதர்சன சக்கரம் வீரம் அளிக்கும்,  தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான  எதிரிகளையும் நீக்கி மங்கலம் அருளும் . 
         சக்கரத்தாழ்வாரை  #திருவாழியாழ்வான்  என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள். இவருக்கு”ஹேதிராஜன்” என்ற திருநாமமும் உண்டு. 
"வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என்று பல்லாண்டு பாடி  வாழ்த்துகிறார்!  பெரியாழ்வார். மேலும் “என்னையும் என் உடமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு ” என்று குறிப்பிடுகிறார் . ஆண்டாள் நாச்சியார்  தன்னுடைய திருப்பாவையில் ,”சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் “என்றே பெருமாளைப் போற்றுகிறார்.
சக்கரத்தாழ்வாரின்  அம்சமாக அவதரித்தவர் திருமழிசை ஆழ்வார்”. நம்மாழ்வாரோ "சுடராழி வெண்சங்கேந்தி வாராய்” என்று பாமாலை சூட்டுகிறார்.
       ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.
ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் – இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் "நித்யசூரிகள்" ஆவார்கள். திருமால்,  தனது  எல்லா அவதாரங்களிலும் துஷ்ட நிக்ரஹத்தை   ஶ்ரீசுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார்;  உலக இயக்கத்திற்கே ஆதாரம்  ஶ்ரீசுதர்ஸனமே.
        சுதர்சன சக்கரம் பக்தர்களுக்கு சந்தோஷம் தரும்.  பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் அபிசார தோஷங்கள் எனப்படும் பில்லி, சூன்யம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகளை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி கல்வி யோகத்தைத் தருபவர்
          சுதர்சன யந்திரம் உள்ள இடத்தில் தீய எண்ணங்களோ, சக்திகளோ புக முடியாது நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள். ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபடுவது,  சுதர்சன உபாசனை செய்வது சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய் உடையவர்கள் 
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும் பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் ஶ்ரீசக்கரத்தாழ்வார்.
            ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு நோய், எதிரி, பணவிரயம், மரணம் ஆகிய பயம் நீங்குவதோடு தரித்ரியத்தை போக்கி சகல செல்வங்களும் அளிக்கும் என்பது நிதர்சனம்.நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும்.
       மகாவிஷ்ணுவின் கையிலிருக்கும் சுதர்சன சக்கரத்தை வணங்கி வர அவரது கருணை நமக்குக் கிடைக்கும். 
சுகாரத்தாழ்வாரை வணங்கி வர நமது  சகல பாபங்களும், மனக் கவலைகளும்,  வியாதிகளும் இல்லாமல் போய்விடும்; பயிரை நாசம் செய்யும் பிராணிகளின் தொல்லைகளும்    இல்லாமல் போய்விடும்;  எதிரிகள் இருக்க மாட்டார்கள்;  நண்பர்கள் நட்புடன் இருப்பார்கள்; நெருங்கியவர்கள் நன்மை செய்வார்கள்; உறவினர்கள்  கனிவுடன் இருப்பார்கள்;  நல்லவர்கள் எப்பொழுதும் நன்மையையே  செய்வார்கள்;  ஐஸ்வரியம் என்றென்றும் பெருகும்! என்பதும் உறுதி. 

ஶ்ரீசக்ரதாழ்வாரே போற்றி
 
ஓம் நமோநாராயணா, ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.....

Tuesday, June 27, 2023

நரசிம்மரை வழிபட்டால் சிவன் – பார்வதியை வழிபட்ட பலனும் கிடைக்கும்.

நரசிம்மரை வழிபட்டால் சிவன் – பார்வதியை வழிபட்ட பலனும் கிடைக்கும்.
நரசிம்மர் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு எட்டு திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.
.
திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.

சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரி கட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.

கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத்தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.

சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.

நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.
நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.
.
நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.

ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.
நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.
நரசிம்மரை வழிபடும் போது ‘‘ஸ்ரீநரசிம்ஹாய நம’’ என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட் டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.
‘‘
அடித்த கை பிடித்த பெருமாள்’’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர் கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.

சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் எனும் திருப்பெயருடன் நரசிம்மரை தரிசிக்கலாம். இவருக்கு சிம்மமுகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.
சென்னை, திருவல்லிக் கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் முதல் பூஜை அழகியசிங்கர் என போற்றப்படும் யோக நரசிம்மருக்கே. அவர் எப் போதும் யோகத்திலேயே இருப்பதால் ஓசையால் அவர் யோகம் கலையக் கூடாது என்பதற்காக அவர் கருவறை கதவுகளில் உள்ள மணிகளுக்கு நாக்கு கள் இல்லை.

நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளான் என்பதை உணர்த்துகிறது.

நரசிம்மருக்கு எத்த னையோ வடிவங்கள் இருந்தாலும் லட்சுமி நரசிம்மர் வடிவமே அதிக பக்தர்களால் விரும்பப்படுகிறது.

வைணவத்தில் அதிகம் வழிபடக் கூடிய தெய்வம் நரசிம்மர்தான்.
வட இந்தியாவை விட தென் இந்தியாவில்தான் அதிக நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன.

நரசிம்ம அவதாரம் நிகழ்ந் தது ஆந்திரா என்றாலும் நரசிம்மர் சாந்தமானது தமிழகத்தில்தான்.

தமிழ்நாட்டில் உக்கிர நரசிம்மரை மூலவராக கொண்ட ஒரே இடம் புதுச்சேரி அருகே உள்ள சிங்கிரி என்ற ஊரில் உள்ள ஆலயமாகும்.
சோளிங்கரில் உள்ள நரசிம்மர் கார்த்திகை மாதம் கண் திறந்து பார்ப்பதாக ஐதீகம்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்களகிரியில் பானக நரசிம்மர் உள்ளார். இவர் பானகம் அருந்துவதை கண்கூடாக பார்க்கலாம்.

நரசிம்மர் மூர்த்தங்களில் மொத்தம் 32 வகையான அமைப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லை அருகே கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்கள் தனித்துவம் கொண்டவை. ஒரு காலத்தில் இந்த இரு ஆலயங்களில் இருந்தும் சிங்கம் கர்ஜிப்பது போல நரசிம்மர் ஆவேசமாக குரல் எழுப்பியதாக புராணங்களில் பதிவுகள் உள்ளன.

ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜெய ந்ருஸிம்ஹ ஜெய ஜெய ந்ருஸிம்ஹ நமோ நமஹ

அபிஷேகத்தின் ஆற்றல் மற்றும் பயன்கள் அறிவோம்... !

அபிஷேகத்தின் ஆற்றல் மற்றும் பயன்கள் அறிவோம்... !
ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.  

தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம்முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள்.

பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது.

பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள் கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

12 வகை திரவியங்களை எள்எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

சிலைகளுக்கு ஏன் இப்படி வித விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்?
ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும்.
இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர்.  

எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.

அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது.  

ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.
அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
எள் எண்ணெய் 
பஞ்ச கவ்வியம் 
மாவு வகைகள் 
மஞ்சள் பொடி 
பசும்பால் 
தயிர் 
தேன் 
நெய் 
நெல்லி முள்ளிப்பொடி 
கரும்புச்சாறு 
பன்னீர் 
அன்னம் 
வாசனை திரவிய தீர்த்தம்
அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டி வேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்.
சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.  

சில ஆலயங்களில் ஆகமப்படி இன்றும் எந்த ஒரு அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால் பல ஆலயங்களில் இப்போதெல்லாம் பாலாபிஷேகம் உள்பட எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம். அபிஷேகம் செய்யப்படும்போது அந்த விக்கிரகம் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால்தான் அபிஷேகத்தை பார்க்க வேண்டாம் என்றார்கள்.

ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள்.  

அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம்.  

நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.

நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும்.

அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.

தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர்.

அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.

அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது.  

அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர்.

இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.

குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

Monday, June 26, 2023

இராசசேகர பாண்டியமன்னனுக்காக #நடராஜப்_பெருமான் #கால்மாறி_ஆடிய_திருவிளையாடல்:

தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றான, 
உலகப் புகழ்பெற்ற #மதுரை 
#மீனாட்சி_சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 
சிவபெருமானின் 
64 திருவிளையாடல்களில் ஒன்றான, மதுரையம்பதியில்

இராசசேகர பாண்டிய
மன்னனுக்காக #நடராஜப்_பெருமான் #கால்மாறி_ஆடிய_திருவிளையாடல்:

இறைவனான வெள்ளியம்பலவாணன், பாண்டிய மன்னன் இராசசேகரப் பாண்டியனின் வேண்டுகோளுக்கு இணங்க ஊன்றிய திருவடியை தூக்கியும், தூக்கிய திருவடியை ஊன்றியும் கால் மாறி ஆடியதை விளக்குகிறது.
இராசசேகர பாண்டியன் பரதக்கலையைக் கற்றது, பரதக்கலை கற்கும்போது இராசசேகரப் பாண்டியனுக்கு ஏற்பட்ட உடல்வலி, திருக்கூத்தினை நிகழ்த்தும் இறைவனுக்கும் தன்னைப் போலவே உடல்வலி ஏற்படும் என்ற இராசசேகரனின் வருத்தம் ஆகியவை இப்படலத்தில் கூறப்பட்டுள்ளன.
கால் மாறிய ஆடிய படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடற்காண்டத்தில் 24 படலமாக அமைந்துள்ளது.

#இராசசேகர பாண்டியனின் சிறப்பு:

விக்கிரம பாண்டியன் தனது மகனான இராசசேகர பாண்டியனுக்கு ஆட்சி உரிமையை அளித்து சிவப்பேறு பெற்றான். இராசசேகர பாண்டியன் சொக்கேசரிடம் பேரன்பு கொண்டு நல்வழியில் மதுரையை ஆட்சி செய்து வந்தான்.
அவன் ஆயகலைகள் 64-கில் பரதக்கலையைத் தவிர்த்து ஏனையவற்றில் தேர்ச்சி பெற்று சிறப்புற விளங்கினான்.
வெள்ளியம்பலத்தில் நடனம் புரியும் வெள்ளியம்பலவாணனிடம் அன்பு கொண்டு ‘இறைவன் திருநடனத்தினால் இவ்வுயிர்களின் இயக்கம் உள்ளது. அந்த உன்னதமான பரதக்கலையைக் கற்று இறைவனுக்கு இணையாக ஆடவிரும்பவில்லை’ என்று எண்ணி பரதக்கலையை இராசசேகரபாண்டியன் கற்கவில்லை.

#இராசசேகர பாண்டியன் பரதக்கலையை கற்க விரும்புதல்:

இராசசேகர பாண்டியன் காலத்தில் சோழநாட்டை கரிகால் பெருவளத்தான் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஆயகலைகள் 64-கிலும் சிறந்து விளங்கிய அவன் திருவானைக்காவில் உள்ள ஜம்புகேசரிடம் பேரன்பு கொண்டவன்.
ஒருசமயம் சோழ நாட்டைச் சார்ந்த புலவன் ஒருவன் இராசசேகர பாண்டியனின் அவைக்கு வந்தான். அப்புலவனை வரவேற்று தனக்கு இணையான ஆசனம் அளித்து அவனை கௌரவித்தான் இராசசேகரபாண்டியன்.
அப்புலவன் இராசசேகர பாண்டியனிடம் “எங்கள் அரசர் ஆயகலைகள் 64-கினையும் நன்கு பயின்றவர். தங்களுக்கோ 63 கலைகள் மட்டும் தெரியும். பரதக்கலை வராது” என்று கூறினான்.
இதனைக் கேட்ட இராசசேகர பாண்டியன் மிகுந்த வருத்தம் கொண்டான். தன் குறையைச் சுட்டிக் காட்டிய புலவனிடம் கோபம் கொள்ளாது அவனுக்கு பரிசுகள் பல கொடுத்து அனுப்பி வைத்தான்.
பின் ‘தான் பரதக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் போலும்’ என்று எண்ணி பரதக் கலையை கற்க விரும்பினான்.

#இராசசேகர பாண்டியனின் வேண்டுகோள்:

இராசசேகர பாண்டியன் பரதக்கலையை கற்றுணர்ந்தவர்களிடம் பரதக்கலையைக் கற்றத் தொடங்கினான். இராசசேகரபாண்டியன் பரதக் கலையைக் கற்கும்போது உடல்வலி ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்தான்.
வெள்ளியம்பலத்தில் தினமும் திருக்கூத்தினை நிகழ்த்தும் வெள்ளியம்பலவாணனுக்கும் உடல்வலியும், கால்வலியும், சோர்வும் ஏற்படுமே என்று எண்ணி மிக்க வருத்தம் கொண்டான். இறைவன் கால் மாறி ஆடினால் வலி நீங்குமே என்று கருதினான்.
வெள்ளியம்பலவாணர் கால் மாறி திருநடனம் புரிதல்
அப்பொழுது சிவராத்திரி வந்தது. இராசசேகர பாண்டியன் சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து சிறப்பு வழிபாடு நடத்தினான்.
பின் வெள்ளியம்பலவாணனிடம் “இறைவா, தாங்கள் தூக்கிய திருவடியை ஊன்றியும், ஊன்றிய திருவடியைத் தூக்கியும் மாறி நடனமாட வேண்டும்.
அப்பொழுதுதான் என்னுடைய வருத்தம் நீங்கும். அவ்வாறு செய்யாவிடில் நான் என்னை மாய்த்துக் கொள்வேன்” என்று மனமுருக வேண்டி தன் வாளினை நட்டு வைத்து அதில் பாய்ந்து உயிரை மாய்த்து கொள்ள திட்டமிட்டான்.
இராசசேகர பாண்டியன் வாளில் பாயும் சமயம் வெள்ளியம்பலவாணர் இடது காலை தூக்கியும், வலது காலை ஊன்றியும் நடனமாடி இராசசேகரபாண்டியனின் மும்மலங்களையும் நீக்கி அவனைப் பேரின்பக் கடலில் ஆழ்த்தினார்.

#இராசசேகர பாண்டியனின் வேண்டுகோள்:

வெள்ளியம்பலவாணன் கால் மாறி நடனம் ஆடியதைக் கண்டதும் இராசசேகர பாண்டியன் இறைவனை பலவாறு போற்றித் துதித்தான்.
பின் வெள்ளியம்பலவாணனிடம் “வெள்ளியம்பலத்துள் கூத்தாடும் எம் தந்தையே, எக்காலத்துக்கும் இவ்வாறே நின்று தேவரீர் அருள் செய்ய வேண்டும். இதுவே அடியேன் வேண்டும் வரமாகும்” என்று மனமுருக பிராத்தித்தான்.
அன்று முதல் இன்றைக்கும் வெள்ளியம்பலத்தில் கூத்தர் பெருமான் கால் மாறிய திருக்கோலத்தில் அருள்புரிகின்றார்.

கால் மாறி ஆடிய படலம் கூறும் கருத்து
இறைவன் தன்மேல் மாறாத அன்பு பூண்டவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பதே கால் மாறி ஆடிய படலம் கூறும் கருத்தாகும்

திருச்சிற்றம்பலம் 🙏

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

🛞புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!
உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.
சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.

மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது.

திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

 இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.

உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.

ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.
“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!

உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறினான் அரசன்.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.

இது ஆறாவது சிலை.
ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.
உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.

 இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.
“அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.
சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.
“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.
அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றான்.

“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?

கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று பதட்டத்தோடு சொல்ல.

“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்” என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.

ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.
கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.

உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!

வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.
ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.

ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான்.

”உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை என்று தலையாட்டினார், “என்ன சொல்ல வருகிறாய்?” மன்னன் மறுபடியும் சீறினான்.

”இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சொல்ல….
“இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான்.

”இல்லை அரசே .இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.

உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது! தரையை நனைத்தது.

மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.
இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.

வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.
கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர்  திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.

உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!

 கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.

அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!

 தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.

தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.

இறைவி பெயர் தேகசௌந்தரி,
ஸ்தலமரம் அரசு,
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.

கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும்.

குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்.
 எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள்!

கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்களேன்!

திருநல்லம் ஒரு முறையேனும் சென்று வாருங்கள். சிவ அழகில் சொக்கிப் போய் வருவது கண்கூடான உண்மை.

🔱🪔 #சிவனும் பார்வதி தேவியும் இருக்கும் கையிலையை காண விரும்பினாள். அக்கணமே அசரீரியாக " அம்மா! சடைச்சி! சிவமலையிலேயே உமக்கு காட்சி

🪔🌸 #பதினெட்டாம்படி சடைச்சி:-
     🔥#சிவன்மலை சென்று வரும் நம்மில் எத்தனை பேரூக்கு இந்த சடைச்சியை தெரியும்??

    🔥#சிவபக்தியால் பேயாய் சிவபிரான் காலடியில் இருக்கும் வரம் பெற்ற காரைக்கால் அம்மையாரை போல முருக பக்தியால் சிவமலை ஆண்டவர் பாதத்தில் இருக்கும் வரம் பெற்ற சடைச்சியை யாருக்கு தெரியும்??
 
🔥🔱#சிவன்மலை:-

          பெயரை கேட்டதும் நினைக்க செய்வது சிவபெருமான் இருக்கும் மலை என்று. ஆனால் இருப்பதோ குமார கடவுள். சிவகிரி, சிவமலை , சக்தி சிவமலை, சிவாத்ரிநயினம், சிவசைலம், சேமலை என்று எத்தனை பெயர்கள் இம்மலைக்கு!!

    #பதினான்கு பழமையான ஊர்களை கொண்ட காங்கேய நாட்டின் பொதுத்தலம் சிவமலை. இந்த பதினான்கு ஊர்காரர்களும் சிவமலை தேர் திருவிழாவை நடத்துவதும், அவர்கள் பரிவட்டம் கட்டி சிறப்பிக்க படுவதும் இன்றும் உண்டு.

  #சிவமலையின் செல்வாக்கினை மடவளாகம் இலட்சுமணபாரதி இயற்றிய சிவமலை குறவஞ்சி இலக்கியம் புகழ்கிறது. அருணகிரிநாதர் சிவமலை ஆண்டவரை வணங்கி சந்தப்பாடல் பாடினார். சிவ வாக்கியர் என்னும் சித்தர் இங்கு வாழ்ந்தவர்.

  🔱🔥 #சிவமலை அதனை சுற்றி எட்டு திசையிலும் சக்தியை காவலாக கொண்டது ( மடவளாகம் அங்காள பரமேஸ்வரி அதில் ஒன்று). சிவமலை அடிவாரத்தில் முன்பு ஊர் கிடையாது. சிவமலைக்கு உரிய ஊர் பாட்டாலி. சிலமலை நாதனை பாட்டாலி பால் வெண்ணீசுவரர் பாலன் என்று இலக்கியங்களில் கூறுவதை காணலாம்.

  🦚 #இத்தல_முருகனுக்கு காரணாமூர்த்தி என்றும் பெயர். தன் பக்தர் கனவில் தோன்றி தனக்கு இன்ன பொருள் வேண்டும் என சொல்வது சிறப்பு. அப்படி உத்தரவு ஆகும் பொருள் கண்ணாடி கதவு கொண்ட ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கபடும். அப்பொருளால் உலகில் மாற்றம் வரும் என்பது நியதி.

🔥#சடைச்சி:-

      பாட்டாலி நகரிலே கொங்கு வெள்ளாளர் குடியில் கன்னந்தை கோத்திரத்தில் அரசப்ப கவுண்டர் என்பாருக்கு வள்ளி என்னும் பெண் குழந்தை பிறந்தது. 

வள்ளி என்னும் பெயருக்கேற்ப சிவமலை முருகன் மீது அதீத பக்தி. 

#தினமும் சிவமலை நாதன் பாதத்தை தொழாமல் வேலைகள் செய்வதில்லை.

   #திருமண வயது வந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இறை பக்தியால் சடை விழுந்தது. சடாமுடியோடு இருந்தவளை சடைச்சி என்று அழைத்தனர். தன் தோட்டத்து எருதுகள் மீது கோணிப்பைகளை இருபுறமும் கட்டி பக்கத்து ஊர்களுக்கு சென்று தானியங்கள் மக்களிடம் வாங்கி வந்து இறைவனுக்கு படைத்தாள்.

  #மலைக்கு படிகளை அமைத்தாள். இளைப்பாற்று மண்டபம், தண்ணீர் பந்தல் என தொண்டுகள் ஏராளம். சடைச்சி மடமும், நந்தவனமும் அமைத்து தினமும் ஆண்டவனுக்கு பூமாலை அளிக்க செய்தாள்.

  🔱🪔 #சிவனும் பார்வதி தேவியும் இருக்கும் கையிலையை காண விரும்பினாள். அக்கணமே அசரீரியாக " அம்மா! சடைச்சி! சிவமலையிலேயே உமக்கு காட்சி தருகிறோம்" என சொல்லி, காட்சியும் தந்தார் சிவபிரான்.

  பின்னர் உலக வாழ்க்கையை வெறுத்து எந்நேரமும் சிவமலையாண்டவரை சேருகிறேன் என்று சொல்லிகொண்டே இருந்தாள். 

   🔥🪔 #ஒருநாள் முழுநீறு பூசிய மேனியாக, மஞ்சள் உடையாய் மாலையுடன் சிவன்மலை ஆண்டவன் சந்நிதி நுழைந்த சடைச்சி திரும்பவில்லை!! எங்கே போனாள் என்று தேடியவர்க்கு அசரீரியாய் " நான் இங்கேயே சிவமலையாண்டவன் பாதத்தில் சேர்ந்தேன்" என்று வாக்கு கிடைத்தது.

   மக்களின் மனதில் நீங்காத சடைச்சி, சிலையாய் சிவன்மலை நாதன் பாதத்தருகில் நீண்டகாலமாய் இருந்தாள்.

    "பக்தி பிடித்த சடைச்சியம்மாளை-தன் 
     பாதங்களில் வைத்திருக்கும் சிவமலையாண்டவர்"

       #என்று சிவமலை குறவஞ்சி கூறுகிறது. இன்று சிவமலையில் சடைச்சி சிலை இல்லை. வெளியேறிவிட்டது. பின்னாளில் வந்தவர்களுக்கு சடைச்சியின் பக்தி புரியவில்லை. 

    மலைக்கோவில்களில் 18வது படி சிறப்புடையது. சிவமலையில் 18வது படியை புராண படி என்பர். அது சடைச்சி கட்டியது. அங்கே சடைச்சி இருப்பதாக நம்பிக்கை.

   " பத்தினி பெண் சடைச்சியம்மாள் பதினெட்டென்னும் புராணபடியில் குடியிருப்பாள்", சிவமலை குறவஞ்சியில்.

🦚 #சக்தி_சிவமலை நாதன் பாதமே துணை!!

பேரூர் பெரியநாயகி அம்மன் துணை!! 🙏🏼

Sunday, June 25, 2023

விநாயகரை 💫 முழுமுதற் கடவுளாக வழிபடுவது 🙏 ஏன்? இதற்கு காரணம் தெரியுமா?

🙏🙏🌷🌷விநாயகர்...!!
விநாயகரை 💫 முழுமுதற் கடவுளாக வழிபடுவது 🙏 ஏன்? இதற்கு காரணம் தெரியுமா?

💫 விநாயகர் என்றால், இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை என்பது பொருளாகும்.

💫 விநாயகரை முழுமுதற் கடவுளாக போற்றப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. 

💫 எந்த மங்களகரமான காரியத்தை தொடங்கும் போதும், முதலில் விநாயகரைத் தொழுது பின்னர் தொடங்குவதே நமது பாரம்பரிய மரபாகும். அவ்வாறு தொழுவதற்கு காரணம் என்ன? என்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம்.

💫 ஞானப்பழத்தை அடைய தாய், தந்தையை சுற்றி வந்து ஆன்மிக தத்துவத்தை முதன் முதலில் எடுத்துரைத்தவர் கணபதி. 

💫 பொருள் மற்றும் ஆன்மிக தத்துவங்களின் இணைப்பாக விளங்கும் நம் உடலின் மூலாதார சக்கரத்தை கணபதி ஆளுவதாக நம்பப்படுகிறது.

💫 பல யுகங்களுக்கு முன்பாக அன்னை பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது, தன் உடலில் இருந்த மஞ்சளில் இருந்து ஒரு அழகான சிறுவனை உருவாக்கினாள். தான் குளித்து முடித்து வரும் வரை ஆண்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று கூறிவிட்டு குகைக்குள் குளிக்கச் சென்று விட்டாள்.

💫 சிறுவனும் கையில் வேல், வில், வாள் போன்ற ஆயுதங்களோடு குகையின் வெளியே காவலுக்கு நின்றிருந்தான். உலகுக்குப் படியளக்கும் வேலையை முடித்துவிட்டு வந்த சிவபெருமான் அம்பிகையை காணும் ஆவலோடு குகைக்குள் நுழைய முயன்றார். அவர் தான் தன் தந்தை என்பதை அறியாத அந்தச் சிறுவன் சிவபெருமானை உள்ளே விட மறுத்தான். இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் மூண்டது. மிகவும் கோபம் கொண்ட சிவபெருமான், சிறுவனை போருக்கு அழைத்தார். தந்தைக்கும், மகனுக்கும் கடும் போர் மூண்டது. இந்த அதிர்வைத் தாங்க முடியாத பூமி தடுமாறியது. ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேற, தன் திரிசூலத்தால் சிறுவனின் தலையை துண்டித்து விட்டார் சிவபெருமான். 

💫 செய்தி அறிந்து ஓடி வந்த அன்னை பார்வதி தேவி, தான் படைத்த மூத்த மகன் தலை துண்டிக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு கோபத்திலும், வேதனையிலும் துடித்தாள். காளியாக மாற ஆரம்பித்த போது தேவர்களும், முனிவர்களும் அன்னையை வணங்கித் தொழுதனர். அன்னையே உங்கள் கோபத்தை இனியும் பூமியால் தாங்க முடியாது! மனித இனமே அழிந்து விடும்! கருணை காட்டுங்கள் என்று கெஞ்சினர். மகனை உயிர்ப்பித்து தருவதாக சிவபெருமானும் கூற மனம் கனிந்தாள் பார்வதி தேவி. 

💫 தேவர்கள் அனைவரையும் நான்கு திசையிலும் செல்லும்படி ஆணையிட்டார் சிவபெருமான். "நீங்கள் செல்லும் வழியில் எந்த உயிரின் சடலத்தை முதலில் பார்க்கிறீர்களோ? அதன் தலையை எடுத்து வாருங்கள்"என்று கட்டளையிட்டார். நாலாபுறமும் சென்றார்கள் தேவர்கள். வடக்கு நோக்கிச் சென்ற தேவர்கள், தாங்கள் சென்ற வழியில் யானை ஒன்று இறந்து கிடப்பதைப் பார்த்து அதன் தலையைக் கொண்டு வந்தனர். சிவபெருமானும் அந்தத் தலையை சிறுவனின் உடலோடு பொருத்த உயிர் பெற்றெழுந்த யானை முகன், அன்னையையும், தந்தையையும் வலம் வந்து வணங்கினார். மனம் மகிழ்ந்த தந்தை விநாயகருக்கு சிறப்பான வரம் ஒன்றை வழங்கினார். 

💫 "இன்று முதல் உலக மக்கள் எந்த சுபச் செயலையும் தொடங்கும் முன், உன்னைத் தொழுது தான் தொடங்குவார்கள். அப்படி செய்பவர்களுக்கு நீ செல்வத்தையும், வெற்றியையும் அருள வேண்டும். உன்னை வணங்கும் எல்லா பக்தர்களுக்கும் "நானும், உன் அன்னையும் வரங்களை வாரி வழங்குவோம்" என்று வரமளித்தார் அப்பனாகிய பரமசிவன். பார்வதி தேவியும் மிகவும் மனம் குளிர்ந்து மற்றொரு வரத்தை அளித்தார். உன்னை முதலில் வணங்கி எந்தச் செயலையும் தொடங்கும் பக்தர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் எல்லா விதமான தடைகளையும், நீ தகர்த்து அவர்கள் வாழ்க்கையில் மங்களமும், செல்வமும் நிலைக்கச் செய்வாய்! என்று வரம் கொடுத்தார். 

💫 அதனால் தான் விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுளாகப் போற்றப்படுகிறார். அவரைப் பணிந்து வணங்கினால் நம் தொழில், வியாபாரம், வேலை ஆகிய இடங்களில் ஏற்படும் தடைகளை நீக்கி நற்பலனைத் தருவார் என்பது நம்பிக்கை.

💫 விநாயகருக்கு உகந்த சதுர்த்தி தினமான இன்றைய நாளில் விநாயகரை வழிபட்டு வாழ்க்கையில் வளம் பெறுவோம்.

🙏  sv. 🙏

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்இளையனார்வேலூர், காவாந்தண்டலம் அஞ்சல்காஞ்சிபுரம்

🙏🙏🙏🛕🙏🙏🙏

*#ஆலயம்அறிவோம்*

☸️🔯✡️🔱🔱🔱☸️🔯✡️

*#ஆலயதரிசனம்*
*#தலவரலாறு*

✡️🌻🕉️🛕🛕🕉️🌻✡️

*#ஆலயதரிசனம்*
*#பாவவிமோசனம்"*
🚩

#பாலசுப்பிரமணியசுவாமி
#ஆலயம்
மூலவர் : பாலசுப்பிரமணிய சுவாமி

உற்சவர் : வளளி, தெய்வானையுடன் பாலசுப்பிரமணியர்

அம்மன்/தாயார் : கெஜவள்ளி

தல விருட்சம் : வில்வமரம்

தீர்த்தம் : சரவண தீரத்தம்

ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : -
ஊர் : இளையனார்வேலூர்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா: 
சித்திரை திருவவிழா,பிரமோற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம்,ஆவணியில் பவித்திர உற்சவம், புரட்டாசியில் கெஜவள்ளிககு நவராத்திரி உறசவம். 

தல சிறப்பு: 
சுவாமிநாத சித்தரால் இக் கோவில் உருவாக்க்ப்பட்டது. மலையன், மாகறன் இந்த அசுரர்களை அஸ்ர பிரயோகம் செய்தபோது அவரது வேல் நின்ற ஊர். 

திறக்கும் நேரம்: 
காலை 7மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 

முகவரி: 
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்இளையனார்வேலூர், காவாந்தண்டலம் அஞ்சல்காஞ்சிபுரம் மாவட்டம் - 631601. 
போன்: 
+91 9789635869 

பொது தகவல்: 
கோயில் அமைப்பு: சதுரம் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம். 

பிரார்த்தனை 
சத்ருகோமம், எதிரி தொல்லை,வியபார நஷ்டம்,குழந்தை வரம். திருமண தடை நீக்கத்திற்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. 

நேர்த்திக்கடன்: 
பக்தர்கள் காவடி, பால் காவடி, புஷ்ப பல்லக்கு எடுத்து வேணடுதல் செய்கின்றனர். 

தலபெருமை: 
மேனா உற்சவம், மாசி மகத்தை முன்னிட்டு சீயமங்களம்பேட்டை, தாங்கி, வில்லிவலம், ஏகவாம்பேட்டை, நத்தபேட்டை,கிதிரிபேட்டை, வெங்குடி ராஜம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு சுவாமி எழுந்தருள்வார். மலையன் ,மாகறன். என்ற அசுரர்களை சிவபெருமான்கட்டளைக்கிணங்க காசிப முனிவர் யாகத்தை தடுக்க முயன்ற அசுரர்களை வென்றார்.

தல வரலாறு: 

சுவாமிநாத சித்தரால் இந்த கோவில் உருவாக்கப்பட்டது. மலையன், மாகறன் என்ற அசுரர்களை முருகனின் தந்தை வசிக்கும் அருகில் உள்ள கடம்பரை பகுதியில் காசிப முனிவர் யாகத்தை தடுக்க நினைத்த அசுரர்களை இறைவன் சிவபெருமானை வேண்டினார். அவருக்கு காட்சி கொடுத்து என் மகன் முருகன், அவர்களை அழித்து யாகத்தை நடத்த உதவி புரிவான் என்று கூறினாராம். அதன்படி தந்தையின் கட்டளைக்கு இணங்க முருகப்பெருமான் கடம்பேரி பகுதியில் தொல்லை கொடுத்து வந்த அந்த இரண்டு அசுரர்களை அழித்து, அவர் விட்ட வேல் விழுந்த இடமாக இந்த தலம் விளங்குவதால், வேல் விழுந்த இடமாக இருப்பதாலும், இளையவர் என்பதாலும் இப்பகுதிக்கு இளைனார்வேலூர் என்ற பெயர் பெற்றது.
 
சிறப்பம்சம்: 

அதிசயத்தின் அடிப்படையில்:சுவாமிநாத சித்தரால் இக் கோவில் உருவாக்க்ப்பட்டது. மலையன், மாகறன் இந்த அசுரர்களை அஸ்ர பிரயோகம் செய்தபோது அவரது வேல் நின்ற ஊர்.

இருப்பிடம் :
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
வாலாஜாபாத்

அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை, மீனம்பாக்கம்

தங்கும் வசதி :
காஞ்சிபுரம்

Saturday, June 24, 2023

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்:

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்:
1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. 
பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. 

2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது. 3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும். 

4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. 

5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது. 

6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன. 

7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன. 

8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை. 

9. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம் தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது. 

10. இங்குள்ள 4 கோபுரங்களும் சிறப்பு களஞ்சியங்களாக உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோர் சிலைகள் உள்ளன. 

11. புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், தன் படை ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த விகாரமாக மாற்ற முயன்றான். அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார். 

12. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப் பார்க்க முடியும். 

13. தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தை பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு. 

14. அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில் பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்கு தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம் தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம். 

15. சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை 'மூத்த நாயனார்' என்கிறார்கள். 

16. சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்து பாடியுள்ளனர். எனவே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய திருவிழா போல இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது. 

17. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர், திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர். 

18. சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும் முக்கியமானது. அன்று ஒரு வாயாவது திருவாதிரைக்களி சாப்பிட வேண்டும் என்பார்கள். 

19. ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது கொடி ஏறாமல் தடைபட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி என்ற பாடலை பாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே ஏறிய அற்புதம் நடந்தது. 

20. தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த பாடலை பாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது. இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் ஏற்பட்டது. 

21. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது. 

22. சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல் பாடல் சிதம்பரம் நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம் தலம் புகழ் பெற்றிருந்தது உறுதியாகிறது. 

23. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள் உள்ளன. 

24. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக சொல்வார்கள். சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம், கோவில் புராணம், சிதம்பரப் புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன. 

25. சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம் இப்போது இல்லை. தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகும். 26. சங்க காலத்துக்கு முன்பு சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில் இருந்ததாக பாடல்கள் குறிப்பின் மூலம் தெரிகிறது. 

27. சிதம்பரம் தலம் உருவான போது பொன்னம்பலம் எனும் கருவறை தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள் புதிய கோவில் கட்டிய போது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக சொல்கிறார்கள். 

28. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது சிதம்பரம் தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும் எழுந்தது. 

29. இத்தலத்துக்கு 'தில்லை வனம்' என்றும் ஒரு பெயர் உண்டு. புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு. 

30. மாணிக்கவாசகர் இத்தலத்தில் தங்கி இருந்த போது, கண்டப்பத்து, குயில்பத்து, குலாபத்து, கோத்தும்பி, திருப்பூவல்லி, திருத்தோணோக்கம், திருத்தெற்றோணம், திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார், அண்ணப்பத்து, கோவில் பதிகம், கோவில் மூத்த திருப்பதிகம், எண்ணப்பதிகம், ஆனந்த மாலை, திருப்படையெழுச்சி, யாத்திரைப்பத்து நூல்களை பாடினார். 

31. சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் நல்ல படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லை. 

32. சிவகங்கை தீர்த்த குளம் அருகில் சிறு தூனை நட்டியுள்ளனர். அங்கியிருந்து பார்த்தால் 4 ராஜகோபுரங்களையும், ஒரு சேர தரிசனம் செய்ய முடியும். 

33. இத்தலத்து பெருமானுக்கு சபாநாயகர், கூத்த பெருமான், நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலம், திருச் சிற்றம்பலம் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு. 

34. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இதை சிற்சபை, சித்சபை என்றும் அழைப்பதுண்டு. 

35. திருவாதிரையன்று தாமரை, செண்பகம், அத்தி போன்ற மலர்களை பயன்படுத்தி பூஜை செய்தால் நடராஜரின் முழுமையான அருளைப் பெறலாம். 

36. நடராஜருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? பொன்+அம்பலம்= பொன்னம்பலம். அம்பலம் என்றால் சபை. பொன்னாலாகிய சபையில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவதால் அவருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் ஏற்பட்டது. 

37. உலகில் உள்ள எல்லா சிவகலைகளும் அர்த்த ஜாமத்தில் இத்தலத்துக்கு வந்து விடுவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் மட்டும் அர்த்தஜாம பூஜை தாமதமாக நடத்தப்படுகிறது. 

38. சிதம்பரம் நடராஜருக்கு தினமும் 6 கால பூஜை நடத்தப்படுகிறது. 

39. நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தில்தான் இப்பிரபஞ்சத்தின் இயக்கமே அமைந்துள்ளது. அண்ட சராசரங்களும் நடராஜரின் தாண்டவத்தால் இன்பம் அடைகிறதாம். 
 
40. மனித உடலில் இருதய பகுதி உடலின் இரு பக்க பகுதிகளை இணைப்பது போல இதயப் பகுதியாக சிதம்பரம் கோவில் உள்ளது. நடராஜ பெருமானுக்குரிய விமானம் கூட இதய வடிவில்தான் அமைந்துள்ளது. 

41. சிதம்பர நடராஜரின் வடிவம் சிவசக்தி ஐக்கியமான உருவமாகும். அதாவது அர்த்த நாரீஸ்வரத்தன்மை உடைபவர் வலப்பக்கத்தில் சிவனும், இடது பக்கத்தில் சக்தியும் உறைந்துள்ளனர். எனவே அன்னை சிவகாமி இல்லாமலும் நாம் நடராஜ பெருமானை தரிசனம் செய்யலாம். 

42. சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் வில்வத்தளம் தொங்கும் காட்சியைப் பார்த்தால் முக்தி கிடைக்கும். இதைத்தான் 'பார்க்க முக்தி தரும் தில்லை' என்கிறார்கள். 

43. சிவபெருமானுக்கும், காளிக்கும் நடந்த நடனப்போட்டி திருவாலங்காட்டில் நடந்ததாகவும், ஆனால் தில்லைக்கு சிறப்பு ஏற்படுத்த அந்த வரலாற்றை சிதம்பரத்துக்கு மாற்றி விட்டார்கள் என்றும் மூதறிஞர் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிட்டுள்ளார். 

44. சிதம்பரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் திருக்கோவில் கொண்டுள்ளனர். 

45. இத்தலத்தில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் தரிசனம் செய்ய முடியும். 

46. ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த ஆலயம் உள்ளது. 

47. இத்தலத்தில் பொன்னம்பலம் எனப்படும் சிற்றம்பலம் மற்றும் திருமூலட்டானர் கோவில் ஆகிய 2 இடங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி உள்ளனர். 

48. சிதம்பரத்தில் அதிகாலை தரிசனமே மிக, மிக சிறப்பு வாய்ந்தது. 

49. சிதம்பரம் ஆலயத்துக்குள் நுழைந்ததும் எந்த பிரகாரத்துக்கு எப்படி செல்வது! எந்த மூர்த்தியை வழிபடுவது? என்பன போன்ற குழப்பம் ஏற்பட்டு விடும். அந்த அளவுக்கு இது பெரிய ஆலயம். 

50. மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம்நடராசர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. 

51. நடராஜர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இங்கு இருப்பதால், இது ‘ கோவில் நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. 

52. நடனக்கலைகளின் தந்தையான சிவ பெருமானின் நடனமாடும் தோற்றம் நடராஜ ராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில்நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

53. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர். 

54. பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 

55. இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. 

56. சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா. 

58. இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. 

59. நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம். 

60. நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். 

61. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றை செய்யலாம். 

62. இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். 

63. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். 

64. பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். 

65. நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.

66. இத்தலத்து நடராஜரைக் காண ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள். 

67. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர். 

68. இந்த கோவில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப்பகுதி என்று கூறப்படுகின்றது. 

69. பஞ்சபூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோர்ட்டில் அதாவது சரியாக 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது.

 70. சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் 'காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. 

71. திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தபதி இதுதான். 

72. திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப் பட்ட தேரை ஓடச் செய்த மந்திரத்தலம். 

73. நடராச சந்நிதிக்கான கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும். 

74. சிதம்பரம் சிவகாமியம்மன் கோவில் முன் மண்டப விமானத்தில் சிதம்பரத் தல புராணக் காட்சிகளும் தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவபெருமான் அழித்த காட்சிகள் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன. 

75. சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்துக்கு சென்று வர மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ் வசதி உள்ளது....

 திருச்சிற்றம்பலம்

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...