Monday, September 30, 2024

செவ்வாய்க்கிழமை முருகப் பெருமான் வழிபாடு சிறப்பு....

_செவ்வாய்க்கிழமை  முருகப் பெருமானை வழிபடலாம்._

 *ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்* 

ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

 *ஸ்ரீ வேல் காயத்ரி மந்திரம்*

 ஒம் ஜ்வால ஜ்வாலாய வித்மஹே கோடி சூர்ய பிர்காசாய தீமஹி தன்னோ சக்தி ப்ரசோதயாத்

தீமைகள் அனைத்தையும் ஒரு சேர அழிக்கும் கந்தனாகிய முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேல் எனும் வேலாயுதத்திற்கான காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் முருகப்பெருமானை மனதில் நினைத்து துதித்து வர நன்மைகள் உண்டாகும். முருகப்பெருமானுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் முருகன் சந்நிதிக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 108 முதல் 1008 முறை துதிப்பவர்களுக்கு வீண் கவலைகள், அச்சங்கள், தயக்கங்கள் அனைத்தும் நீங்கும். துஷ்ட சக்திகள், மாந்திரீக ஏவல்கள் உங்களை அணுகாது. காரிய தடை, தாமதங்கள் நீங்கும். எதிர்பாரா விபத்துகளை தடுக்கும்.

நெருப்பின் நெருப்பான கோடி சூர்ய ஒளியுடன் பிரகாசிக்கும் வேலே. கந்தனின் கையிலிருந்து எல்லா வேளையும் காத்திடுவாய் கதிர்வேலே சரணம் என்பதே இந்த காயத்ரி மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம் .. 

பனையபுரம் திருப்புறவார்பனங்காட்டூர் பனங்காட்டீஸ்வரர்.....

 சுமார் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான

தேவாரப் பாடல் பெற்ற திருமுறை தலங்களில் நடு நாட்டுத் தலமான, சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட,

தக்கன் பேறுபெற்ற,

சிபி சக்கரவர்த்தி முக்தி பெற்ற , சூரிய பகவான் வழிபட்ட தலங்களில் ஒன்றான 

#விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 

#பனையபுரம் என்ற 

#திருப்புறவார்பனங்காட்டூர் 

#பனங்காட்டீஸ்வரர்

(நேத்ரோதாரகேஸ்வர சுவாமி)

#சத்யாம்பிகை

(மெய்யாம்பிகை, புறவம்மை) திருக்கோயில் வரலாறு:


பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடின் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.


1) கட்டிடக்கலையில் உலக அதிசயத்திற்கு இணையான கோயில்.

2)புராணகால வரலாறு கொண்ட கோயில்.

3) தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் பெற்ற ஆலயம்.

4)தக்கன் பேறு பெற்ற ஆலயம்.

5) சிபிச்சக்கரவர்த்தி முக்தி பெற்ற தலம்.

6)இறைவனையும், இறைவியையும் சூரியன் ஏழு நாட்கள் ஒரு சேர வழிபடும் அரிய தலம்.

7) சோழ மன்னனின் குறு நாட்டு தலைநகரம்.

8)முதலாம் இராஜேந்திர சோழ மன்னனின் காதலி பரவை நங்கை வாழ்ந்த ஊர்.

9) கண் கோளாறுகள் போக்கும் பரிகார தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக திகழ்வது, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள  பனையபுரம் அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில்.


உலக அதிசயங்கள் ஏழு என்பது நாம் அறிந்ததே. இதற்கு இணையான ஓர் அதிசயம் நிகழும் ஓர் இடம் நம் தமிழகத்தில் இருக்கிறது என்பது வியப்புக்குரிய செய்தி தானே? அதுவும் கண் கோளாறுகளை நீக்கும் தொன்மை வாய்ந்த தேவாரத்தலம்  இது என்பது மற்றொரு சிறப்பு.

இந்த அரிய ஆலயம் சென்னைக்கு தெற்கே 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, பனையபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.நீண்ட நெடிய வரலாற்று பின்னணி கொண்ட விளங்கும் இது ஒரு நடுநாட்டுத்  சூரியத்தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் முதல் நாளில் தொடங்கி, தொடர்ந்து ஏழு நாட்கள், சிவனுக்கும், அம்பிகைக்கும் சூரியனால் நிகழ்த்தப்படும் சூரியபூஜை தான் இந்த உலக அதிசயம்.

இதை முழுமையாக அறியும் முன் இத்தலத்தின் பெருமைகளை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.


*மூலவர்: பனங்காட்டீஸ்வரர் என்ற நேத்ரோதாரகேஸ்வர சுவாமி

*அம்மன்: சத்யாம்பிகை

(மெய்யாம்பிகை, புறவம்மை)

தீர்த்தம்: பத்ம தீர்த்தம் 

தல விருட்சம்: பனை மரம் 

*புராண பெயர்: திருப்புறவார் பனங்காட்டூர் (பரவைபுரம்)

ஊர்: பனையபுரம் 

மாவட்டம்: விழுப்புரம் 


பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்,

இராமலிங்க அடிகள் 


*திருஞானசம்பந்தர் பாடிய பனையபுரம் தேவாரப் பதிகம்:


"திரையார் புனல்சூடீ தெரிவை பிரியாதாய்

வரதா அருளென்று வானோர் தொழவன்று

புரமூன் றெரிசெய்தாய் புறவார் பனங்காட்டூர்ப்

பரமா பவனேநின் பாதம் பணிவேனே.


*பனையபுரம்:


கல்வெட்டுகள் மூலம் இரண்டாம் ராஜேந்திர சோழ மன்னனின் (கி.பி 1052-1064) தேவியான பரவை நங்கை இத்தல இறைவனார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்ததால் ஏராளம் கொடையளித்தது தெரியவருகின்றது. இவரது பெயராலேயே ’பரவைபுரம்’ என்றழைக்கப்பட்டு பின்னர் பனையபுரம் என்றானது.


*சூரிய கிரணங்கள்:


சூரியன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சித்திரை மாதம் முதல் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு கருவறையிலிருக்கும் சிவலிங்கத்திருமேனியின் மீதும், சத்யாம்பிகை அம்பாள் மீதும் சூரியக் கதிர்கள் படுமாறு அமைக்கப்பட்ட சிறப்பான கட்டடக்கலைக் கொண்ட திருத்தலம்.


*தொன்மை சிறப்பு:


இராஜேந்திர சோழ வள நாட்டின் துணை கூட்டங்களில் ஒன்றான பனையூர் நாட்டின் உட்பகுதி நாடான புரையூர் நாட்டின் பறவை புரமாக விளங்கியதே, இன்றைய பனையபுரம்.பிற்கால சோழர் காலத்தில் தனியூராக விளங்கியது. பல ஊர்களின் தலைமை ஊருக்கு தனியூர் என்ற பெயர் உண்டு. இங்குள்ள சிவன் கோயில் நடு நாட்டின் பாடல் பெற்ற இருபதாவது தலமாகும்.

சோழனின் காதலி

பரவை நங்கைஇவ்வூரில் வாழ்ந்த நாட்டியப் பேரொளி பரவை நங்கையின்  மீது அளவு கடந்த காதல் கொண்ட முதலாம் ராஜேந்திர சோழன், இவள் பெயரால் பல்வேறு கொடைகளையும், தான தர்மங்களையும் வழங்கினான். ஓர் அரசிக்கு இணையாக அவளை மதித்து வந்தான். இதற்கு ஆதாரமாக கோயிலின் பின்புறச் சுவரில் இரண்டாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1052− 1065) ஆறாவது ஆட்சியாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு விளங்குகின்றது. இக்கல்வெட்டின் மூலம் இராஜேந்திர சோழன் மற்றும் பரவை நங்கை ஆகிய இருவரின் சிலைகள் இருந்ததாகவும், அவற்றிற்கு விளக்கேற்றவும், நைவேத்தியம் செய்யவும் வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும் அறிய முடிகின்றது.ஆனால் கலைநயம் கொண்ட இக் சிலைகளின் இருப்பிடம் அறியப்படவில்லை. இதில் இவ்வூர் பரவைபுரம் என காணப்படுகிறது. இவளைப் பற்றிய குறிப்பு திருவாரூர் தியாகராஜர் கோயில் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இவள் பெயரால் பரவைபுரம் என்ற ஊரை உருவாக்கி, ஆலயம் எழுப்பப் பட்ட செய்தி காணப்படுகிறது.திருவாரூர் ஆலய மேற்கு கோபுர வாயில் அருகேயுள்ள ஒரு சன்னதியில்,முதலாம் இராஜேந்திர சோழன் ,பரவை நஙககை சிலைகள்,புடைப்புச் சிற்பமாக வணங்கிய நிலையில்,அமைந்துள்ளதை இன்றும் காணலாம்.பரவைபுரம் என்ற பெயர், பனையபுரமாக மருவி  இருக்க வாய்ப்பு உண்டு. பரவை நங்கையின் பிறந்தநாளை கவுரவிக்கும் வகையில், சித்திரை மாதத்தில் ஜோதி திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டது.


*சிபி மன்னன்:


சிபி மன்னன் என்ற சொல்லை புறவு +ஆர்  எனப் பிரித்துப் பொருள் கொண்டால் புறா நிறைவுற்ற இடம் என அறியமுடிகின்றது. வேடனால் வேட்டையாடப்பட்ட புறாவின் உயிர் காக்க, தன் தசையை அறுத்து தன் உயிரையும் விடத் துணிந்த சிபி மன்னனை தடுத்தாட்கொண்டு இடம் இது என புராணக்கதை கூறுகிறது. இத்தலத்தில் இது நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இராஜ கோபுரத்தின் எதிரே உள்ள வாகன மண்டபத்திற்கு இருக்கும், நடுவரிசை தூணில் இக்காட்சி புடைப்பு சிற்பமாக அமைந்துள்ளதை இன்றும் காணலாம்.

சூரியன் பேறு பெற்றது

தக்கனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரியன், வீரபத்திரனால் தாக்கப்பட்டு பற்களையும்,பலத்தையும்இழந்தாது.  தன் சாபம் நீங்கி பழைய நிலையை அடைய, இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றதாக, என தல புராணம் கூறுகிறது இதனை உறுதிப்படுத்தும் வகையில் இத்தலத்தில் ஆண்டு தோறும் சித்திரை ஏழு நாட்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது.


*தக்கன் பேறு பெற்றது:


சிவபெருமானை மதிக்காமல் யாகம் வளர்த்து தோல்வி கண்ட தக்கன், தன் பழி பாவம் தீர வழிபட்ட தலங்களுள் ஒன்றாக, பனையபுரம் விளங்குகின்றது. இதற்கு சான்றாக,இராஜகோபுரம் உள்வாசலில் வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தக்கன் வழிபடும் சிலை, புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.

கண் பார்வை தந்த சிவன்

பனங்காட்டீசனின் மற்றொரு பெயர் கண்ணமர்ந்த நாயனார், நேத்தோதாரகேஸ்வரர் சுவாமி என்பது. இதன் பொருள் கண் கொடுத்த கடவுள் என்பதாகும். எத்தகைய பார்வைக்கோளாறு உள்ளவரும் இங்குள்ள இறைவனிடம் தஞ்சம் புகுந்தால் அவர்களது குறை நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின்நம்பிக்கையாக அமைந்துள்ளது.

கல்வெட்டுகள்

இங்கு பல்வேறு கல்வெட்டுகள் காணப்பட்டாலும், இவற்றில் பதினாறு கல்வெட்டுகள் மட்டும் அரசு மரபினரால் பிரிக்கப்பட்டதாகும். இவற்றில் முதலாம் இராஜேந்திரன் (கி.பி.1012),இரண்டாம்  இராஜேந்திரன்( கி.பி.1058),உடையார் ஆதிராஜேந்திர தேவன்( கிபி 1070), முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1118), முதலாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியன் (கிபி 1265) மூன்றாம் விக்கிரம பாண்டியன் (கி.பி.1288) ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். இவற்றின் நகல்கள் மைசூர் தலைமைக் கல்வெட்டாளர்  அலுவலகத்தில் இன்றும் உள்ளது. மூலக் கல்வெட்டுகள் கோயில் புனரமைப்பின் போது இடம் மாறிவிட்டன.

பழங்காலத்தில் கோயில் நிர்வாகம்

சோழப் பேரரசின் போது இக்கோயில் சிறப்பாக இருந்து வந்தது. இதேபோல, மூன்றாம் விக்கிரம பாண்டியன் காலத்திலும் (கி.பி.1288) மேலும் புத்துயிர் பெற்றது. இவ்வாலய நிர்வாகத்தை “திருவொண்ணாழி சபையோம்”,என்ற குழு கண்காணித்து வந்ததை, இரண்டாம் இராஜேந்திர சோழன் கால கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவ்வாலயத்தின் நிர்வாகத்தை, நகரத்தார்கள் கண்கானித்ததாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கோயில் காப்பாளர்களாக, சிவ பிராமணர்கள் நிர்வாகம் செய்ததையும் அறிய முடிகிறது. முகலாயர் ஆட்சி காலத்திலும்,கி.பி. பதினேழாம் நூற்றாண்டிலும், பொருளாதார நெருக்கடியினால் இக்கோயிலின் செல்வச் சிறப்பு குறைந்தது.அதன்பின் இந்து சமய அறநிலையத்துறை இக்கோயிலை தன் பொறுப்பில் எடுத்த போது, நிலைமை சற்று மேம்பட்டது. ஆண்டுதோறும் சூரிய பூஜையும், அதன் பின் வரும் பிரம்மோற்சவமும், ஊர் பெரியவர்கள் மற்றும் பக்கத்து ஊர் மக்களின் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இலக்கியங்கள்

இத்தலத்தினை திருஞானசம்பந்தர் தமது “புறவார்ப் பனங்காட்டூர் பதிகம்” வாயிலாக புகழ்ந்துள்ளார்.

விண்ணமர்ந்தன மும் மதில்களை வீழவெங்கணையாலெய் தாய்விரி,

பண்ணமர்ந்தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்,

பெண்ணமர்ந்தொரு பாகமாகிய பிஞ்ஞகா பிறைசேர்நுதலிடைக்,

கண்ணமர்ந்தவனே  கலந்தார்க்கு அருளாயே− (இரண்டாம் திருமுறை)ஏர் பனங்காட்டூர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற,

சீர் பனங்காட்டூர் மகிழ்நிஷேமமே, என வடலூர் இராமலிங்க சுவாமிகள் தமது திருஅருட்பாவில் புகழ்துரைத்துள்ளார்.இதுதவிர, பனையபுரம் சிவபெருமான் பதிகம் மற்றும் சத்தியாம்பிகை பதிகம் ஆகியவற்றை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்  இயற்றியுள்ளார்.

பேராசிரியர் சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி, இத்தலத்தின் பெருமைகளை பட்டியலிடுகிறது.தமிழ்த்தாத்தாஉ.வே.சாமிநாதய்யர் அவர்களும் தமது நூலில் பனையபுரம் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.

பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் “தமிழகம் ஊரும் பேரும்” என்ற நூலில் பனையபுரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.இவ்வூரில் வாழ்ந்தவரும் இவ்வாலயத்தில் புனரமைப்பு மற்றும் குடமுழுக்கு செய்தவருமான சிவனடியார் தென்னாற்காடு புலவர்

இராம பழனிசாமிஅவர்கள், இத்தலத்து”அன்னை மீது, புறவம்மை துதி வெண்பாவும், முருகப்பெருமான் மீது

“தமிழ் தலைவனே வேண்டுதல்” என்ற நூலையும் இயற்றியுள்ளார்.

வாசமலர்ச் சோலை வண்டமிழும்,

ஈசன் புகழ்பாடும் என்றுலகு பேசும்,

அறம் வளர்த்த ஆட்சி அருட்சியின் மான்பேர்,

புறவம்மை வாழும்புறம்.இது தவிர, பேராசிரியர் முனைவர் புத்தூர் இராஜாராமன் திருக்கண்ணமர்ந்த நாயனார் ஆலயம்  என்ற ஆய்வுக்கட்டுரையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

புலவர் தாமரைக்கண்ணன் அவர்கள் எழுதிய, வரலாறு கூறும் திருத்தலங்கள் என்ற நூலும் இத்தலம் பற்றி குறிப்பிடுகின்றது. பனையபுரம் அரங்கராசன் சுவாமிகள் இயற்றிய “பூதர் பதிகம்” இத்தலத்து இறைவனை புகழ்ந்நதுரைகக்கின்றது.

கலை பண்பாட்டு மையம்

சோழர்கள் காலத்தில் இக்கோயில் மிகப் பெரிய பண்பாட்டு மையமாக திகழ்ந்தது. அதேபோல் பசிப்பிணி போக்கும் வகையில் சிவனடியார்கள் மற்றும் சில பிராமணர்களுக்கு நாள்தோறும் உணவு அளித்து வந்தது. கல்வி போதிக்கும் சிறுவர் பள்ளியும் இயங்கி வந்தது. இக்கோயிலில் மூன்று தண்ணீர் பந்தல்கள் இருந்ததையும் அறிய முடிகின்றது.வைணவத் தலம்இக்கோயிலின் முன் மண்டபத்தின் தென்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு இராஜேந்திர சோழ விண்ணகர ஆழ்வார்  என்னும் வைணவ ஆலயம் இருந்ததை குறிப்பிடுகின்றது. இவ்வாலய திருவிழா நடத்த நிலக்கொடை வழங்கப்பட்ட செய்தியும் கல்வெட்டின் வாயிலாக தெரிகின்றது. ஆனால் ஆலயத்தின் இருப்பிடம் இதுநாள் வரை கண்டறியப்படவில்லை.தொல்லியல் ஆய்வினால் இவ்வைணவ திருக்கோயில் வெளிவரலாம்.என்றாலும்,

அம்மன் சந்நிதியின் வலதுபுறம் இரண்டு வைணவ ஆலயங்கள் தூண்கள் மட்டுமே இதற்கு சாட்சிகளாக நிற்கின்றன.


*கோயில் அமைப்பு:


இக்கோயில் 73 சென்ட் நிலப்பரப்பு அளவில் எழிலுடன்  கிழக்கு முகமாக  அமைக்கப்பட்டுள்ளது.சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் கருவறை சிற்பங்கள் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தவையாகும். இதற்கு சான்றாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை இன்றும் காட்சி தருகின்றனர். இராஜகோபுரம் 60 அடி உயரத்தில், நான்கு நிலைகளைக் கொண்டு, நிமிர்ந்து நிற்கின்றது. இதுவும் இதன் அருகே உள்ள சிங்கமுக தூண்களும், விஜயநகர காலத்தை சேர்ந்தவை ஆகும்.இறைவன் இறைவிகருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாராக,கிழக்கு முகமாக காட்சி தருகின்றார். இவரின் வடிவம் எளிமையாக அதேநேரத்தில் ஒளி பொருந்தியதாக அமைந்துள்ளது நம்மை ஈர்க்கின்றது. திருஞானசம்பந்தர் புறவார் பனங்காட்டூர் என அழைத்தாலும், கல்வெட்டுகளில் கண்ணப்ப நாயனார் என்றும்,பரவை ஈஸ்வரம் உடைய மகாதேவர் என்றும், திருப்பனங்காடு உடைய மகாதேவர் என்றும் பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


சிவனின் இடதுபுறத்தில் சற்று தொலைவில் அம்பிகைக்கு தனியாக ஆலயம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் மெய்யாம்பிகை,புறவம்மை. சத்யாம்பிகை என்ற பெயரும் வழக்கில் உண்டு. அன்னை கிழக்கு முகமாக, நின்ற கோலத்தில்,மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகள் கொண்டு, நான்கு கரங்களுடன் எழிலான கோலத்தில் அன்னை அருள்காட்சி தருகின்றாள். அலங்காரத்தில் அன்னையின் வடிவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

அன்னையின் அழகை காண கண் கோடி வேண்டும் என்றால் அது மிகையல்ல.இது தவிர கொடிமரம் அருகே பல்லவர் கால கற்பலகை விநாயகர்,பிறகுவிநாயகர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர் சன்னதிகள், அறுபத்து மூன்று நாயன்மார் சிலைகள் மற்றும் திருநீலகண்டர் தன் துணைவியுடன் கோல் தாங்கி நிற்கும் அரியகோலம் அமைந்துள்ளன.


இராஜகோபுரம் உள்புறம் விநாயகர்மற்றும்தக்கனின் வடிவங்களும் அமைந்துள்ளன.மேலும் இவற்றிற்கெல்லாம் மகுடம் ஆக இது சூரியத் தலமாக விளங்குவதால், சிவனின் சன்னிதி வளாகத்திற்குள் சூரியன் தனித்து நின்று காட்சி தருகின்றார்.

ஊர் பஞ்சாயத்து

இவ்வூரில் தீராத பஞ்சாயத்து வழக்குகளில் முடிவாக, அன்னை மெய்யாம்பிகை மீது சத்தியம் செய்யச் சொல்வது வழக்கம். தவறாக பொய் சத்தியம் செய்பவர்கள், அடுத்த எட்டு நாட்களுக்குள் தண்டனை பெறுவது உறுதி என்று இன்றும் இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள் அவ்வளவு சக்தி வாய்ந்த அன்னையாக இவள் திகழ்கின்றாள்.இனி அந்த உலக அதிசயம் என்ன என்பதே காண்போமா ?


*உலக அதிசயம்:

ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரிய உதயத்தின் போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக்கதிர்களால் நீண்டு வளர்ந்த இராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி,மண்டபங்கள் இவற்றையெல்லாம் கடந்து, கருவறையில் வீற்றிருக்கும் ஈசனின் சிரசில் பட்டு வணங்குகிறது.

இதன் பின் அது மெல்ல கீழிறங்கி சிவனின் பாதத்தை அடைகின்றது.

பாதத்தைத் தொடும் அதேவேளையில் சற்று தொலைவில் உள்ள அருள்மிகு மெய்யாம்பிகை அம்மன் சிரசின் மீதும் ஒளிக்கதிர்கள் விழுகின்றன. பின்பு அந்த ஒளி மெல்ல கீழிறங்கி அன்னையின் பாதத்தில் அடைவதுடன் அன்றைய சூரிய பூஜை நிறைவு பெறுகின்றது.

இப்படி தொடர்ந்து ஏழு நாட்கள் ஆண்டுதோறும் நிகழ்கின்றது. சிவனுக்கு, சக்தி அடக்கம் என்ற தத்துவத்தை இது உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது.சூரியன் தன் ஒளிக்கதிர்களால் நிகழ்த்திவரும் இந்த இத்தகு அரிய நிகழ்ச்சியே, இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். இறைவனையும்,இறைவியையும், சூரியன் வழிபட்டு வணங்குவதாக ஐதீகம்.சூரியனின் இயக்கத்திற்கு ஏற்றபடி இக் கோயிலின் கட்டட அமைப்பு வடிவமைத்துள்ளது, நம்  முன்னோர்கள் என்பது நமக்குத் பெருமையான ஒன்றாகும்.

பல நூற்றாண்டுகள் கடந்தும் சூரிய பூஜை மட்டும் இங்கு இன்றும் தொடர்ந்தபடியே உள்ளது, வானவியல் சாஸ்திரத்திற்கு ஏற்றபடி அமைக்கப்பட்ட கட்டிட கலையை தான் உலக அதிசயம் என்று அழைக்கின்றோம்.

இந்த அதிசயத்தை காண விரும்புவோர் சூரிய உதயத்திற்கு முன்பே ஆலயத்திற்குள் இருக்க வேண்டும்.

இவ்வூர் பழங்காலத்தில் ஒரு நாட்டின் தலைநகராக விளங்கியதற்கு சான்றாக, இவ்வூரைச் சுற்றி இராஜாங்குளம், இராணி குளம்,வண்ணான் குட்டை, துறவி, பனப்பாக்கம், பார்ப்பனபட்டு, மண்டபம் ஆகிய ஊர்கள் இன்றும் அமைந்துள்ளன.

தலம், தீர்த்தம்

தலத்தின் தல மரமாக பனை மரமும், தல தீர்த்தமாக பத்ம தீர்த்தமும் அமைந்துள்ளன.

தல மரமான பனை மரத்தில்,ஆண் பனை உயரமாகவும், பெண் பனை சற்று குள்ளமாக காலங்காலமாக காட்சி தருவது வியப்பான ஒன்றாகும். பெண் பனையில் இருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.பனை மரங்கள் நிறைந்த பூமியாக இத்தலம் திகழ்ந்ததால் பனையபுரம் என்று அழைக்கப்பட்டது எனக் கூறுவோரும் உண்டு.

பிற ஆலயங்கள்

இவ்வூரில் பழமையான சக்தி வாய்ந்த செம்பட விநாயகர் ஆலயம், கங்கை அம்மன் ஆலயம், ஒலை கொண்ட மாரியம்மன் ஆலயம், தெரளபதி அம்மன் ஆலயம் ,பொறையாத்தாள்  ஆலயம், வீரபத்திரர் ஆலயம், ஆஞ்சநேரர் ஆலயம்,ஐயனார் கோயில்,

வீரன் கோயில் மற்றும் ஆல மர விநாயகர் ஆலயம் போன்ற ஆலயங்களும் நிறைந்துள்ளன.

அமைவிடம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் பனையபுரம் அமைந்துள்ளது.  விழுப்புரத்தில் இருந்து வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில், விக்கிரவாண்டி− தஞ்சாவூர், விழுப்புரம் −வழுதாவூர் சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது.

விழுப்புரத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் இவ்வூர் வழியாக செல்கின்றன. விக்கிரவாண்டி சுங்கச் சாவடி அடுத்து இடது புறம் செல்லும் விக்கிரவாண்டி −தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் முதல் ஊராக பனையபுரம் அமைந்துள்ளது.


இவ்வூரின் கிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் புகழ்பெற்ற சந்திரமெளலீசுவரர் திருக்கோயிலும் அதனுள் இருக்கும் ஶ்ரீவக்கிரக் காளியம்மன் ஆலயமும் அருகே, தொல்லியல் சிறப்பு வாய்ந்த அரிய கல் மரங்களும் உள்ளன.

மேற்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தேவாரத்தலமான, திருவாமாத்தூர் திருக்கோயிலும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கௌமார மடமும் அமைந்துள்ளன.

பெட்டிச் செய்தி

இந்த உலக அதிசய சூரிய பூஜை ஆண்டுதோறும் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை ஒரு வார காலம் நிகழ்கின்றது. இந்த அதிசயத்தைக் காண விரும்புவோர், சூரிய உதயத்திற்கு முன்பே ஆலயத்துக்குள் இருக்க வேண்டும் .


*கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம்:


புறாவுக்கு அடைக்கலம் தந்து தன் கண்களை அளித்த சிபி சக்ரவர்த்திக்கு காட்சி தந்து மீண்டும் இறைவன் கண்ணொளி தந்த தலம் இது. பனங்காட்டீசனின் மற்றொரு பெயர் கண்ணமர்ந்த நாயனார், நேத்தோதாரகேஸ்வரர் சுவாமி என்பது. இதன் பொருள் கண் கொடுத்த கடவுள் என்பதாகும். எத்தகைய பார்வைக்கோளாறு உள்ளவரும் இங்குள்ள இறைவனிடம் தஞ்சம் புகுந்தால் அவர்களது குறை நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின்நம்பிக்கையாக அமைந்துள்ளது.


*குழந்தை வரம் அருளும் பனம் பழம்:


இக்கோவிலில், தலமரமான பனை மரங்களில் ஆண் பனை உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காலம் காலமாக காட்சி தருவது வியப்பான ஒன்றாகும். பெண் பனையிலிருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.


சென்னையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வரும்போது தே.நெ 45 (சென்னை-திருச்சி நெடுஞ்சாலை) சாலையில் இருந்து விழுப்புரம் செல்ல பிரியும் சாலையில்(தே.நெ 45 சி ) 1.1 கி.மீ தொலைவில் பனையபுரம்... 


 ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது

 இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம... 


Sunday, September 29, 2024

நட்சத்திரப் பிரதோஷம் என்றால் என்ன❓

1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில்  ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். 
 
2. பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாகஅன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய  மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.
  
 3. மாதப் பிரதோஷம் : பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம்  ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.
   
4. நட்சத்திரப் பிரதோஷம் : பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி''யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
   
5. பூரண பிரதோஷம் : திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை''த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள். 
  
6. திவ்யப்பிரதோஷம் : பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆரா தனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.  
 
7.தீபப் பிரதோஷம் : பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட  சொந்த வீடு அமையும்.
   
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் : வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி,  கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன்  தரம் பார்க்காது அருள் புரிவான்.
   
9. மகா பிரதோஷம் : ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து  வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். 
  
10. உத்தம மகா பிரதோஷம் : சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும்.  சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம்  ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
   
11. ஏகாட்சர பிரதோஷம் : வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற  பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம்  வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
   
12. அர்த்தநாரி பிரதோஷம் : வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று  வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்
.   
13. திரிகரண பிரதோஷம் : வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட  லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.  
 
14. பிரம்மப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம்  நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம்  பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
   
15. அட்சரப் பிரதோஷம் : வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில்  ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார்.தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை  அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
   
16. கந்தப் பிரதோஷம் : சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இதுமுருகப் பெருமான்  சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.  
 
17. சட்ஜ பிரபா பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வாசுதேவரும் கம்சனால்  சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில்  கடக்கலாம். 

  18. அஷ்ட திக் பிரதோஷம் : ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்துநீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

   
19. நவக்கிரகப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில்  முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.   
 
20. துத்தப் பிரதோஷம் : அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை  பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

திங்கட்கிழமையில் சிவன் அருளை பெறக் கூடிய பிரதோஷம்.....

சோமவார தேய்பிறை பிரதோஷத்தன்று இந்த வழிபாடு செய்பவர்கள் இல்லத்தில் சகல தோஷங்களும் நீங்கி செல்வ வளம் பெருகும்.**
சிவ வழிபாடு என்றாலே நம் நினைவிற்கு வருவது பிரதோஷம் தான் ஒவ்வொரு தெய்வங்களுக்கு ஒவ்வொரு நாட்கள் உகந்ததாக இருக்கும் பட்சத்தில், சிவபெருமானை வழிபட உகந்த நாளாக கருதப்படுவது இந்த பிரதோஷ தினம். அது மட்டுமின்றி நாட்களிலே சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுவது திங்கட்கிழமை. ஆகையால் தான் சிவபெருமானுக்கு திங்கட்கிழமை சோமவார விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.

அத்தகைய அற்புதமான திங்கட்கிழமையில் சிவன் அருளை பெறக் கூடிய பிரதோஷமும் இணைந்து வந்திருப்பது நமக்கு சகல செல்வங்களையும் தேடித் தருவதாக அமைந்துள்ளது. அப்படியான நல்ல நாளில் நாம் சிவபெருமானை எந்த முறையில் வழிபாடு செய்தால் நம்முடைய குடும்பத்தில் உள்ள தோஷங்களும் துன்பங்களும் நீங்கி இன்பமாக வாழ முடியும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

**துன்பம் நீங்க பிரதோஷ வழிபாடு**

மனிதனுடைய வாழ்க்கையில் துன்பங்களுக்கு எப்போதும் குறையவே இல்லை என சொல்லலாம். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான இன்னல்களும், துயரங்களும் இருந்த வண்ணம் தான் இருக்கிறது. இதிலிருந்து மீள தெரியாமல் மனிதன் தினம் போராடக் கூடிய நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படி போராடக் கூடிய மனிதனை கை தூக்கி விடக் கூடிய அற்புதமான தெய்வம் தான் நம் சிவபெருமான்.

நமசிவாயா என்ற நாமத்தை சொன்னாலே நம்முடைய சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கி விடும் என்பது அனைவரும் அறிந்ததே. அப்பேற்பட்ட சிவபெருமானை வழிபட அவருக்கு உகந்த நாளனின் அது பிரதோஷம் தான். அந்த நாளில் நாம் அவரை வழிபடும் பொழுது அவை அருளை பரிபூரணமாக பெற முடியும் என்பது நம்பிக்கை. அன்றைய தினத்தில் நாம் அவரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். 

அன்றைய தினம் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. அப்படி செய்ய முடியாதவர்கள் காலை ஏழு மணிக்குள்ளாகவாது எழுந்து இந்த வழிபாடு செய்ய வேண்டும் இதற்கு நாம் காலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் சுத்தம் செய்த பிறகு, சிவபெருமான் படம் லிங்கம் இருந்தால் அதற்கு நல்ல வாசனை மிக்க மலர்களை சூடி விடுங்கள். அதன் பிறகு ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் ஏற்றி வழிபடும் நேரத்தில் சிவபுராணத்தை கேட்பது மிகவும் நல்லது. சிவ மந்திரங்கள் தெரிந்தவர்கள் அதையும் இந்த நேரத்தில் சொல்லலாம். இந்த வழிபாடு செய்யும் பொழுது சிவபெருமானின் மனதார நினைத்து மனமுருகி உங்களுடைய பாவங்களும் தோஷங்களும் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதே போல் இந்த வழிபாட்டை மாலை நேரத்தில் செய்ய வேண்டும் குறிப்பாக பிரதோஷ காலமான நான்கு முப்பதிலிருந்து ஆறு மணிக்குள்ளாக செய்யுங்கள் முடியாதவர்கள் ஏழு முப்பது மணிக்குள்ளாக செய்து முடித்து விடுங்கள்.

இந்த நேரத்தில் உங்களால் முடிந்தால் வெள்ளை நிறத்தில் ஆன நெய்வேத்தியத்தை சிவபெருமானுக்கு படைத்து வழிபடலாம் எங்களால் வீட்டில் இப்படி வழிபட முடியாது என நினைப்பவர்கள் சிவன் ஆலயம் சென்று வழிபடலாம். ஆனால் வீட்டில் வழிபட்டாலும், ஆலயம் சென்று வழிபட்டாலும் இன்றைய சிவாலயத்திற்கு நல்லெண்ணெய் வாங்கி கொடுக்க வேண்டும்.

தீபமானது இருளை நீக்கி ஒளியை தரக்கூடியதாக உள்ளது. நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பம் துயரம் தோஷம் போன்ற இருள் நீங்கி இன்பம் மகிழ்ச்சி செல்வம் போன்ற வெளிச்சம் பெற இந்த தீப தானமானது உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாகவே பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுப்பது மிகவும் நல்லது ஏனெனில் சிவபெருமானானவர் அபிஷேக பிரியர்.
அன்றைய தினம் தேய்பிறை சோமவார பிரதோஷம் இந்த தினத்தில் நல்லெண்ணையை வாங்கி தருவது தான் மிகவும் சிறந்தது என்று சொல்லப்படுகிறது வாய்ப்பு உள்ளவர்கள் அற்புதமான இந்த நாளை தவற விடாமல் நல்லெண்ணெய் தானத்தில் செய்து நம் குடும்பத்தில் உள்ள துன்பங்களை எல்லாம் நீக்கி இன்பமாக வாழ வழி தேடி கொள்ளலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, September 28, 2024

மஹா அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்..

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்
⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

⚫ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.

⚫ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

⚫சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?

⚫அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

⚫எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.

⚫இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.

⚫முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

⚫அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

⚫அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

⚫அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

⚫அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

⚫ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

⚫சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.

⚫அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.

⚫சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.

⚫அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

⚫வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.

⚫அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

⚫அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

⚫உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

⚫ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

⚫நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.

⚫அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

⚫எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

⚫முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்...


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

சூரிய கிரகணம் அக்டோபர் 2, 2024 பாதிப்பு இல்லை....

சூரிய கிரகணம் 2024: சூதக் காலத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 2, 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது, இது சர்வ பித்ரு அமாவாசை (மூதாதையர்களின் அமாவாசை நாள்), சந்திர கிரகணத்திற்கு 15 நாட்களுக்குப் பிறகு. இது வளைய சூரிய கிரகணமாக இருக்கும்
விளம்பரம்

வளைய சூரிய கிரகணம்
வளைய சூரிய கிரகண

இந்து மதத்தில், சூரிய கிரகணத்தின் முக்கியத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. அமாவாசை அன்று எப்போதும் சூரிய கிரகணம் நிகழும் என்று ஜோதிடம் கூறுகிறது. சூரிய கிரகணத்திற்கு பன்னிரண்டு மணி நேரத்திற்கு முன், சூதக் காலம் தொடங்குகிறது.  
இந்த ஆண்டு சந்திர கிரகணத்திற்குப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 2, 2024 அன்று, சர்வ பித்ரு அமாவாசை அன்று (முன்னோரின் அமாவாசை நாள்) வரும், இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தைக் காணும். 

சூரியனுக்கும் பூமிக்கும் முன்னால் சந்திரன் நகரும்போது வளைய சூரிய கிரகணம் நிகழும். சூரிய கிரகணங்கள் அல்லது சூதக் காலங்கள் மதக் கண்ணோட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக கருதப்படுகிறது. 
 

இரண்டாவது சூரிய கிரகணம் 2024 எப்போது?
இந்த ஆண்டு சந்திர கிரகணத்திற்கு 15 நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 2, 2024 அன்று, சர்வ பித்ரு அமாவாசை அன்று (மூதாதையர்களின் அமாவாசை நாள்) வரும், இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் தெரியும். சூரியனுக்கும் பூமிக்கும் முன்னால் சந்திரன் நகரும்போது வளைய சூரிய கிரகணம் நிகழும். சூரிய கிரகணங்கள் (அல்லது சுதக்) மத நிலைப்பாட்டில் இருந்து துரதிர்ஷ்டவசமாக கருதப்படுகிறது.
சூரிய கிரகணம் 2024 இந்தியாவில் காணப்படுமா? 
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 2 ஆம் தேதி இரவு 9:13 மணிக்கு தொடங்கி, இந்திய நேரப்படி (IST) அதிகாலை 3:17 மணி வரை நீடிக்கும். இந்தியாவில் கிரகணம் இரவில் நிகழும் என்பதால் அது தெரியவில்லை, மேலும் கிரகணத்திற்கு முந்தைய துரதிர்ஷ்ட காலமான சூதக் காலமும் அங்கு காணப்படாது.

ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் 2024 எங்கு தெரியும்?
இந்தியாவிற்கு வெளியே, அர்ஜென்டினா, பசிபிக் பெருங்கடல், ஆர்க்டிக், தென் அமெரிக்கா, பெரு மற்றும் பிஜி போன்ற பகு


வருடாந்திர சூரிய கிரகணம் என்றால் என்ன?
ஒரு வளைய சூரிய கிரகணம் சந்திரன் மையத்தில் சூரியனின் வட்டை முழுவதுமாக மறைத்து, சூரியனின் விளிம்புகளைச் சுற்றி ஒரு புத்திசாலித்தனமான வளையத்தை விட்டுச்செல்லும் போது ஏற்படுகிறது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை பற்றிய பதிவுகள் :*
உலகம் முழுவதும் ஏராளமான பெருமாள் கோயில்கள் உள்ளன. ஆனாலும் மிகவும் போற்றப்படுவது சில கோயில்கள் மட்டுமே. அதிலும் திவ்ய தேச தரிசனம் மோட்சத்தை தரும் என வைணவர்கள் சொல்கிறார்கள்.

ஒருமுறை வைகுண்டத்திற்கு பெருமாளை தரிசிக்க சென்ற பிரம்ம தேவர், "வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீங்கள் வாசம் செய்கிறீர்?" என கேட்டார். அதற்கு பெருமாள், " ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச" என பதிலளித்தார்.

ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. பெருமாள் நித்ய வாசம் செய்யும் இடங்கள் பூலோகத்தில் 107, வைகுண்டத்துடன் சேர்த்து 108. பெருமாள் நித்ய வாசம் செய்வதாக அவரே திருவாய் மலர்ந்தருளிய இடங்களுக்கு தான் திவ்யதேசங்கள் என்று பெயர். 

இதில் பூலோக வைகுண்டம் என்றும், திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கொண்டாடப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில்.

108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, வைகுண்டம் 1 என உள்ளன. திவ்ய தேசங்களில் 27 ல் கிடந்த திருக்கோலத்திலும், 21ல் இருந்த திருக்கோலத்திலும், 60 ல் நின்ற திருக்கோலத்திலும் திருமால் அருள்பாலிக்கிறார். 79 திவ்ய தேசங்கள் கிழக்கு நோக்கியும், 19 திவ்ய தேசங்கள் மேற்கு நோக்கியும், 3 திவ்ய தேசங்கள் வடக்கு நோக்கியும், 7 திவ்ய தேசங்கள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக புரட்டாசி மாதம் சனிக்கிழமை வந்தால் சொல்லவே வேண்டாம். எல்லோரது வீட்டிலும் தளிகையும், கோவிந்தா கோவிந்தா என்ற நாமமும் நிச்சயமாக உச்சரிக்கும். 

வருடத்தில் 12 மாதங்கள் இருக்க, புரட்டாசி மாதத்தில் மட்டும் பெருமாளுக்கு எதற்காக இத்தனை சிறப்பு பூஜை புனஸ்காரங்கள். என்றைக்காவது நீங்கள் யோசித்து உள்ளீர்களா. இதற்கான வரலாற்று ரீதியான ஒரு கதையை இந்த நன்னாளில் நாம் தெரிந்து கொள்வோம் ... 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Thursday, September 26, 2024

இருதய கமலநாதேஸ்வரர் கோவில் திருவலிவலம் ....

இருதய கமலநாதேஸ்வரர் கோவில் திருவலிவலம் !
வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

இறைவர் திருப்பெயர் : இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்.
இறைவியார் திருப்பெயர் : வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி.
தல மரம் : புன்னை.
 தீர்த்தம் : சங்கர தீர்த்தம்.
வழிபட்டோர் : சூரியன், கரிக்குருவி(வலியன்), காரணமாமுனிவர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. ஒல்லையாறி உள்ளமொன்றிக், 2. பூவியல் புரிகுழல் வரிசிலை.
2. அப்பர் - நல்லான்காண் நான்மறைக.
3. சுந்தரர் - ஊனங் கைத்துயிர்ப் பாயுல.

தல வரலாறு:

கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்.வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முகப்பு வாயில் நம்மை வரவேற்கிறது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையினாலான ரிஷப வாகனத்தில்மேல் அமர்ந்துள்ள சிவன் பார்வதி, வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த முருகர், மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் ஆகியோரைக் காணலாம். உள்ளே நுழைந்தால் தூண்களுடன் கூடிய முன் மண்டபம் உள்ளது.

மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. அதன் பின் உள்ள 3 நிலை கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் மனத்துனைநாதர் சந்நிதியுள்ள கட்டுமலை அமைந்துள்ளது. படிகளேறி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம தெற்கு நோக்கிய அம்பாள் மாழையொண்கண்ணி சந்நிதி அமைந்துள்ளது.மூலவர் இருதய கமலநாதர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எருந்தருளியுள்ளார். பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், இலக்குமி, காசிவிசுவநாதர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

ஆலயத்தைச் சுற்றி 4 புறமும் அக்காலத்தில் அகழி இருந்தது என்பது இத்தலத்து தேவாரப் பதிகங்களில் "பொழில் சூழ்ந்த வலிவலம்" என்று குறிப்பிட்டிருப்பதின் மூலம் அறியலாம். இத்தலத்திற்கு ஏகசக்கரபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. இவ்வாலயத்தில் உள்ள திருமால் ஏகசக்கர நாராயணப்பெருமாள் என்ற பெயருடன் காட்சி தருகிறார். சூரியனும், காரணரிஷியும் இத்தல இறைவனை பூசித்துப் பேறுபெற்றுள்ளனர். இத்தல தீர்த்தம் காரண ரிஷியின் பேரால் காரண கங்கை என்றுரயைக்கப்படுகிறது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. சிவன் சந்நிதிக்கு இடப்பக்கம் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

தேவாரப்பாடல் பாடும் ஓதுவார்கள், தேவாரப்பாடல் பாடும் முன் இத்திருப்பாடலுடன் தான் தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். தேவாரம் ஓதுவோர் யாவரும் முதன்முதலாக ஓதும் என்ற திருப்பாட்டு திருஞானசம்பந்தரால் முதல் திருமுறையில் இத்தலத்து இறைவன் மேல் பாடப்பெற்ற பூ இயல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல் என்ற பதிகத்தின் 5-வது பாடலாகும். எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கும் முனபு விநாயகருக்கு வந்தனம் சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பது நமது மரபு. அதன்படி கணபதிவர அருளினான் என்று இப்பாடலில் வரும் கணபதியை தொழுதுவிட்டு தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். சுந்தரர் தனது பதிகத்தில் 5-வது திருப்பாட்டில், சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த பாடலகளைப் பெற்ற இறைவன் வலிவலத்தில் உள்ளான் என்று அவர்கள் இருவரையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

போன்: +91- 4366 - 205 636

அமைவிடம் :

திருவாரூருக்கு தென்கிழக்கே 9 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து கீவளூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

திருவானைக்காவல் சிவபெருமான் வெண் நாவல் மரத்தின் கீழ் உள்ளார்.....

‘யானை ஏறாதத் திருப்பணி’
நடைபெற்ற ஈசன் கோவில்!!!   
காரணம் தெரிந்து கொள்வோம்...!
திருச்சிக்கு அருகே உள்ள தலம் திருவானைக்காவல். இங்கு சிவபெருமான் வெண் நாவல் மரத்தடியில் அமர்ந்திருந்தார். 

அப்போது நாவல் மரத்தின் இலைகள் காய்ந்து சருகுகளாய் அவர் மேல் விழுந்தன.

இதைக் கண்ட சிலந்தி ஒன்று பதறியது. ‘சிவபெருமான் மேல் சருகுகள் விழுவதா?’ என்று எண்ணிய சிலந்தி, அதை தடுக்க முயற்சி செய்தது.

சிவபெருமானின் தலைக்கு மேல் தன் எச்சிலால் பந்தல் போல் வலை பின்னி, காய்ந்த இலைகள் அவர் மேல் விழாமல் தடுத்தது.

அங்கு யானை ஒன்று தினந்தோறும் காவிரி நீரை தன் துதிக்கையில் சுமந்து வந்து இறைவனை நீராட்டி வந்தது. சிலந்தி வலையைக் கண்ட யானைக்கு கோபம் வந்தது. வெகுண்ட அந்த யானை அந்த வலையை அறுத்து எறிந்தது. 

மீண்டும் மீண்டும் சிலந்தி வலை அமைக்க, யானை கோபங்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வலையை அறுத்து எறிந்தது.
கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் நீரால் யானை வழிபடும் போது அதன் துதிக்கையினுள் புகுந்து கடித்தது. வலி தாங்காத யானை, துதிக்கையை தரையில் வேகமாக அடிக்க சிலந்தி இறந்தது; யானையும் இறந்தது. இருவரையும் ஆட்கொண்டார் இறைவன்.

இறைவன் அருளால் அந்த சிலந்தி மறுபிறவியில் சோழ மன்னராகிய சுபதேவருக்கும் கமலாவதிக்கும் மகனாகத் தோன்றியது. 

அந்த மகனே கோச்செங்கட் சோழன். இந்த மன்னன் தன் முற்பிறவியின் நினைவால் யானைகள் புக முடியாத யானைகள் தீங்கு செய்ய முடியாத மாடக் கோவில்களை கட்ட முடிவு செய்தான். 

யானை ஏற முடியாத கட்டுமலை போன்ற அமைப்புடைய உயரமான மாடக் கோவில்களை அமைத்தான். 

இத்திருப்பணி ‘யானை ஏறாதத் திருப்பணி’ என்று பெயர் பெற்றது. இந்தச் சோழன் 70-க்கும் மேற்பட்ட மாடக் கோவில்களைக் கட்டினான். தான் முற்பிறவியில் வழிபட்ட திருவானைக் கோவில் ஆலயத்தை முதலில் கட்டினான்.

இந்த மன்னன் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்று தான் பனமங்கலத்தில் உள்ள வாரணபுரீஸ்வரர் ஆலயம். இங்குள்ள இறைவன் வாரணபுரீஸ்வரர். இறைவி வடிவாம்பிகை. அன்னையின் இன்னொரு பெயர் வடிவுடையம்மன்.

கீழ்திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் இறைவனை தரிசிக்க, 12 படிகள் ஏறி வலது புறம் திரும்ப வேண்டும். 

அங்கு மகா மண்டபம் அடுத்த கருவறையில் கிழக்கு நோக்கி, வாரணபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

சுயம்புவான இந்த மூலவர் திருமேனி 3½ அடி அளவு ஆவுடையாரின் மேல் பகுதியில் பக்தர்கள் வழிபடும் வகையிலும், பூமிக்கு அடியில் 13 அடியும் உள்ளதாக சொல்லப்படுகிறது. 

சுமார் 19½ அடி உயர இறைவனின் இந்த திருமேனி, உளிபடாதது ஆகும். ருத்திராட்சத்தின் மேற்பரப்பு மேடும் பள்ளமாய் இருப்பது போல் இறைவனின் முழு மேனி அமைப்பு காணப்படுகிறது.

சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பு இறைவனுக்கு இங்கு மிகவும் விசேஷமான நாளாகும். அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை இறைவனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.

அரிசி மாவு, திரவியப் பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி மற்றும் பழங்கள் என 21 வகை அபிஷேகங்கள் செய்யப்படும். இந்த அபிஷேக நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, கடன் நிவர்த்தி ஆகும் என்பதும், தொழிலில் அபிவிருத்தி உண்டாகும் என்பதும் நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் கற்பூரம் ஏற்றுவது கிடையாது. தீபாரதனை மட்டுமே. இங்கு சிவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும். மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, மாத சிவராத்திரிகளில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு ஆராதனை செய்யப்படுகிறது

இறைவனின் தேவக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் மேற்கில் கணபதி, வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர், வடக்கில் சண்டிகேஸ்வரர், வட கிழக்கில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் காலபைரவர் சன்னிதி காணப்படுகின்றன.

இறைவனின் சன்னிதிக்கு இடது புறம் அன்னை வடிவுடையம்மன் தனி சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கி நிற்க, கீழ் இருகரங்கள் அபய வரத முத்திரை காட்டுகின்றன. நவராத்திரியின் போது தினமும் அன்னையை வித விதமாக அலங்கரிப்பார்கள். 

ஆடி மற்றும் தை மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆடிப் பூரம் அன்று அன்னையை வளையல்களால் அலங்கரிப்பார்கள். பின் அந்த வளையல்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அன்றைய தினம் முளை கட்டிய பாசிப்பயிறை அம்மன் மடியில் கட்டி, பின் அதை பிள்ளைப் பேறு வேண்டுபவர்களுக்கும், திருமணம் கைகூட வரம் கேட்கும் பெண்களுக்கும் பிரசாதமாகத் தருகின்றனர்.

பங்குனி உத்திரம் அன்று பால் காவடி, அலகு காவடி சுமந்து வரும் பக்தர்கள், அக்னி பிரவேசம் செய்து முருகனை வேண்டுகின்றனர். 

மறுநாள் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் வீதியுலா வருவார். இங்குள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஹோமம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு எதிரிகள் பயம் விலகும்.

ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். இங்கு மணிவிழா, சதாபிஷேகம் போன்றவை செய்யப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயத்தில், தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. 

ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

பித்ரு தோஷ பூஜை :

இந்த ஆலயத்தில் அனைத்து திங்கட் கிழமைகளிலும் இறைவனுக்கு பித்ரு தோஷ நிவர்த்தி ஆராதனை நடைபெறுகிறது.

ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், நீராடி ஈர உடையுடன் இந்த பூஜையில் கொள்வதுடன், இறைவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின் ஈர உடையை தானம் செய்து விட்டு, புது உடை அணிந்து கொள்ள அவர்கள் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

இந்த பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்பவர்கள், தட்டில் பூ, பழம், தேங்காய், திரிநூல், எண்ணெய், பச்சரிசி, வெல்லம், கருப்பு எள் ஆகியவற்றை வைக்க வேண்டியது அவசியம். 

பித்ரு தோஷ பூஜை செய்தவர்கள், வீடு திரும்பியதும், வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும்.

அமைவிடம் :

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் பனமங்கலம் உள்ளது

Wednesday, September 25, 2024

நந்தsனாருக்காக நந்தி விலகிய சிவன் தலம்....



சிவனடியார்களின் தூயபக்திக்காக 
#சிவபெருமானின் #ஆணைக்கிணங்க,
சைவத் திருமுறைகள் பாடல் பெற்ற 
#தமிழகத்தில் உள்ள 
#நந்தி_விலகிய_தலங்களை காணலாம் வாருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 
1.#நந்தனாருக்காக நந்தி விலகிய தலம் #திருப்புன்கூர் (திருப்புங்கூர்)
#சிவலோகநாதசுவாமி திருக்கோயில் 

2.#திருஞானசம்பந்தருக்காக நந்தி விலகிய தலம் 
#திருப்பட்டீஸ்வரம்
#தேனுபுரீஸ்வரர் என்ற #பட்டீஸ்வரர் திருக்கோயில் 

3.#அப்பர் சுவாமிகள் நீண்ட காலம் தங்கி உழவாரம் செய்த தலமானதால்,
#திருஞானசம்பந்தர் அக்கோயில் மண்ணை மிதிக்க அஞ்சி நிற்க,
இறைவனின் ஆணைக்கிணங்க நந்தி விலகிய 
#திருப்பூந்துருத்தி (மேலை)
#புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் 

 
*1. #நந்தனார் என்ற திருநாளைப்போவார் நாயனாருக்காக திருப்புன்கூரில் 
விலகிய நந்தி:

மேல ஆதனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் நந்தனார். மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை. அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைத்த பாடில்லை. ‘நாளை போகலாம்.., நாளை போகலாம்’ என்றே இருந்தார். அதனால் அவருக்கு ‘திருநாளைப்போவார்’ என்று கூட பெயர் உண்டு.
ஒரு நாள் நந்தனார் சிதம்பரம் செல்வதற்கு, முதலாளியின் அனுமதி கிடைத்தது. இதையடுத்து அவர் சிதம்பரம் புறப்பட்டார். வழியில் திருப்புன்கூர் திருத்தலத்திற்கு வந்தார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், அவரை சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வில்லை. ஆகையால் கோவில் வாசலில் இருந்தபடியே, எட்டி எட்டி உள்ளே பார்த்தார். இறைவனின் உருவம் தெரியவில்லை. கருவறைக்கு முன்பாக இருந்த பெரிய நந்தி, மூலவரை மறைத்துக் கொண்டிருந்தது.

நந்தனாருக்கு ‘இறைவனை தரிசிக்க முடியவில்லையே’ என்ற மனவருத்தம் ஏற்பட்டது. ‘என்ன செய்வேன் இறைவா?’ என்றபடி மனமுருக வேண்டினார். தன் மனவலியைச் சொல்லி இறைவனைப் பாடினார். நந்தனாருக்காக கருவறை முன்பிருந்த துவார பாலகர்களும் இறைவனிடம் ‘சுவாமி! நந்தனார் வந்திருக்கிறார்’ என்றனர்.
இன்னொருவர் சொல்லித்தான், இறைவனுக்கு தன் பக்தனின் பக்தியைப் பற்றித் தெரிய வேண்டுமா? நந்தனாரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், தனக்கு முன்பாக இருந்த நந்தியை, சற்றே விலகி இருக்கும்படி பணித்தார். நந்தியும் அதன்படியே விலகிக்கொண்டது. இப்போது இறைவனின் திருக்காட்சி நந்தனாருக்கு நன்றாகத் தெரிந்தது. இப்படி பக்தனுக்காக நந்தியை விலகி இருக்கச் சென்ற இறைவன் வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம் இதுவாகும்.

இப்போதும் இந்த ஆலயம் சென்றால், இறைவனின் கருவறைக்கு நேராக இல்லாமல், சற்று ஒதுங்கி இருக்கும் நந்தியை நாமும் தரிசிக்கலாம். எல்லாக் கோவில்களிலும் நந்திக்கு நாக்கு வெளியே தெரிந்தபடி இருக்கும். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு உள்ளமைந்தபடி இருக்கும். துவார பாலகர்கள் எல்லாக் கோவில்களிலும் நேராக இருப்பார்கள். ஆனால் இங்கு தலை சாய்த்து காணப்படுவார்கள். இறைவனிடம், நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று கூறுவது போல் அமைந்த தோற்றம் இது என்று சொல்லப்படுகிறது.
புங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்ததால், இந்த கோவிலுக்கு புங்கூர் கோவில் என்று பெயர் வந்தது. புங்க மரக்காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக உள்ளார். இத்தலத்தில் முதலில் தோன்றியது புற்று வடிவமான லிங்கமே. அதன்பிறகே வந்தது நந்தி. இவை இரண்டும்தான் இந்த ஆலயத்திற்கு பெருமையும் புகழும் சேர்த்தன. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புற்று வடிவமாக மூலவர் வீற்றிருக்கிறார். இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பதாகும்.
புற்று வடிவாய் அமைந்துள்ள சிவலோகநாதருக்கு, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணியளவில் புணுகு சட்டம் சாத்துகிறார்கள். சுவாமி மீது திருக்குவளை சாத்தி பக்தர்கள் பூஜைகள் நடத்துகிறார்கள். நாக தோஷத்தினால் நீண்ட நாள் கல்யாணம் ஆகாமல் இருப்ப வர்கள் தங்கத்தில் நாகத் தகடு செய்து உண்டியலில் போடுகி றார்கள். இவ்வாறு செய்தால் திருமணத்தடை நீங்கி உடனே கல்யாணம் நடக்கிறது. திருமண வரம் வேண்டுவோர் அர்ச்சனை மாலை சாத்துவது என்பது இத்தலத்தில் விசேஷம். மேலும் பரிகார அர்ச்சனை என்பதும் இத்தலத்தில் விசேஷமானது.
இத்தலத்தில் உள்ள மூர்த்திகளான சுவாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், அகத்தியர் ஆகியோருக்கு செய்யப்படும் பஞ்ச அர்ச்சனைகள், பூர்வ ஜென்ம பாவங்களை விலக்கி அருள்புரியும் என்று கூறுகிறார்கள்.
இங்குள்ள அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி என்பதாகும். இந்த அன்னைக்கு புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்து தலும் பக்தர் களின் முக்கிய நேர்த்திகடன் களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய லாம். தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோவில் திருப் பணிக்கு பொருளுதவி செய்ய லாம்.
நாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ தோஷம் உள்ளவர்கள் இத்தலத் தில் வழிபட்டால், அவர்களின் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் சுவாமியை வணங்குவோரு க்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக் காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். இத்தல இறைவன், தன்னுடைய பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களுக்கும் நிச்சயம் செவிசாய்ப்பார்.
இந்த ஆலயத்தில் ‘குளம் வெட்டிய பிள்ளையார்’ மிகவும் பிரசித்தம் பெற்றவர். நந்தனார் இத்தல இறைவனை தரிசிக்கும் முன்பாக நீராடுவதற்காக, ஒரே இரவில் பூதங்களை கொண்டு இங்கு திருக்குளம் அமைந்தார் விநாயகர். இதனால் இத்தல விநாயகர் ‘குளம் வெட்டிய பிள்ளை யார்’ என்று அழைக்கப்படுகிறார்.
இந்த ஆலயத்தின் தல விருட்சம் புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு ‘திருப்புன்கூர்’ என்ற பெயர் வந்தது. மிகவும் பழமையான கோவில் இது. ராஜேந்திர சோழன் காலத்தில் கோவில் திருப்பணிகள் நடந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலய ங்களில், இது 20-வது தேவாரத் தலம் ஆகும்.
வைகாசி விசாகம், 10 நாள் பிரம்மோற்சவம் இங்கு விமரிசையாக நடைபெறும் விழாக்களாகும். திருவிழாவில் பத்து நாட்களும் சுவாமி வீதியுலா வரும். மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோவிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைதீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்.

 2.*திருஞானசம்பந்தருக்காக #திருப்பட்டீஸ்வரத்தில்
விலகிய நந்தி:

காவிரியின் தென்கரையில் உள்ள 53 ஆவது தலம், ஞானசம்பந்த பெருமானால் பாடப்பெற்ற தலம் என்ற பெருமைகளை கொண்டது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டீஸ்வரம்! காமதேனுவின் புதல்வியான பட்டி பூசித்ததால் பட்டீஸ்வரம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

இத்தலத்தில் ஆளுடையப்பிள்ளையார் வருகின்ற அழகான காட்சியைக் கண்டு ரசிப்பதற்காக இறைவன் நந்தியை சற்று விலகக் கூறியதால் இங்குள்ள நந்திகள் சந்நிதியிலிருந்து சற்றே விலகியிருப்பதைக் காணமுடியும். மேலும், இறைவன் வேண்ட ஞானசம்பந்தருக்காக நந்தி விலகிய மற்றொரு தலம் திருப்பூந்துருத்தியாகும்.

மாறன்பாடிக்கருகே பிள்ளையார் நடந்து சென்றருளியபோது பாதத்தாமரை நொந்ததனைக் கண்ட இறைவன் முத்துச்சிவிகையருளினார். ஆனால் பட்டீஸ்வரத்திலோ அடியாருடன் நடந்துவந்ததைக் கண்ட இறைவன் வெயிலின் வெப்பம் தணிக்க பந்தல் இட்டு அருளினார். இறைவனின் பெருங்கருணைக்கும் அவன் ஞானசம்பந்தப்பெருமான்மீது காட்டிய அன்பு அளப்பரியது.

இத்தகு பெருமையுடைய பட்டீஸ்வரர் கோயில் எனப்படும் தேனுபுரீஸ்வரர் கோயிலில்

இரு கிழக்கு கோபுரங்கள், தெற்கு கோபுரம், வடக்கு கோபுரம் அமைந்துள்ளன. வடக்கு கோபுரம் வழியாக வந்தால் துர்க்கையம்மன் சந்நிதியை காணமுடியும். கிழக்கு கோபுரம் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் விலகிய நிலையில் நந்தியைக் காணமுடியும். இடப்புறம் கோயிலின் குளமான "ஞானவாவி' தீர்த்தம் உள்ளது.

தேனுபுரீஸ்வரர் சந்நிதிக்குச் செல்ல, இரண்டாவது கிழக்கு கோபுரத்தினைக் கடக்கவேண்டும். இக்கோபுரத்தின் வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.

இக்கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது அழகான மண்டபம் காணப்படுகிறது. இம்மண்டபத்திற்கு அருகில் உள்ள திருச்சுற்றில் பைரவருக்கு தனி சந்நிதி உள்ளது. மண்டபத்தில் உள்ள நந்தியும் விலகிய நிலையில் உள்ளது.

சந்நிதியில் மதவாரணப்பிள்ளையார் காணப்படுகிறார். தேனுபுரீஸ்வரராக விளங்கும் மூலவர் கருவறையில் லிங்கத்திருமேனியாகக் காட்சியளிக்கிறார். நடராஜர் சந்நிதி, பள்ளியறை இம்மண்டபத்தில் அமைந்துள்ளன. பராசக்தி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் காட்சியுடன் கூடிய தபசு அம்மனையும் இங்கு காணலாம். மண்டபத்தில் உள்ள தூண்களில் அழகான சிற்பங்கள் உள்ளன.

இறைவனின் கருவறைக்கு இடப்புறம் அம்மனின் சந்நிதி காணப்படுகிறது. அம்மன் ஞானாம்பிகை என்றும் பல்வளைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார். அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள மண்டபம் அழகான தூண்களைக் கொண்டுள்ளது. அத்தூண்களில் அழகான சிற்ப வேலைப்பாடுகள் அமைந்திருப்பதை காணலாம்.

தனி சந்நிதியில் துர்க்கையம்மன் நின்ற கோலத்தில் புன்னகை சிந்தும் முகத்தோடு அருள் தருகிறார். இவரை, விஷ்ணு துர்க்கை என்றும் துர்க்காலட்சுமி என்றும் அழைக்கின்றனர்.

*3.அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்று எண்ணி காலால் மிதிக்க அஞ்சி வெளியில் நின்ற திருஞானசம்பந்தருக்கு
#திருப்பூந்துருத்தியில் 
விலகிய நந்தி :

 அமாவாசை நாளில், திருப்பூந்துருத்தி தலத்துக்கு வந்து சிவனாரையும் உமையவளையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், பித்ருக்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது கண்டியூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. பயணித்தால் திருப்பூந்துருத்தி எனும் அற்புதமான தலத்தை அடையலாம். மிக அழகான ஆலயத்தில் அற்புதாமாக சந்நிதி கொண்டிருக்கிறார் சிவபெருமான்.

இந்தத் தலத்து இறைவனின் திருநாமம் புஷ்பவனேஸ்வரர். அம்பாளின் திருநாமம் அழகார்ந்த நாயகி. அதாவது செளந்தர்ய நாயகி. பேருக்கேற்றாற் போல், அழகுடனும் கனிவுடனும் கருணைப்பார்வையுமாக ஜொலிக்கிறாள் அம்பிகை. பிரம்மாண்டமான ஆலயத்தில், ஏகப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன.

நாவுக்கரசர் தேவாரம் பாடிய திருத்தலம் இது. இரண்டு ஆறுகளுக்கு நடுவே துருத்திக் கொண்டிருக்கிற ஊர் என்பதால் ‘துருத்தி’ எனப் பெயர் அமைந்ததாகவும் இறைவனின் திருநாமம் புஷ்பவனேஸ்வரர் என்பதால் திருப்பூந்துருத்தி என்றானதாகவும் ஸ்தல புராணம் சொல்கிறது.

திருவையாறு தலத்தை சப்த ஸ்தான தலங்களின் மூலக்கோயில் என்பார்கள். திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருநெய்த்தானம், திருப்பூந்துருத்தி என சப்த ஸ்தான ஸ்தலங்களில் இந்தத் தலமும் ஒன்று. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில், சித்ரா பெளர்ணமியின் போது, சப்த ஸ்தானத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதை ஏழூர்த்திருவிழா என்றும் சொல்லுவார்கள்.

திருநாவுக்கரசர் பெருமான் இந்தத் தலத்தில் தங்கி இறைவனை வழிபட்டு வந்தார். இதையறிந்த ஞானசம்பந்தர், மதுரையில் இருந்து நேரடியாக சோழ தேசத்துக்கு வந்தார். பல்லக்கில் திருப்பூந்துருத்தி கோயிலுக்கு வந்தவர், “நான் நாவுக்கரசப் பெருமானை தரிசிக்க வந்தேன். அவர் எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். “இதோ... நான் இங்குதான் இருக்கிறேன்” என்றார் நாவுக்கரசர். பார்த்தால், ஞானசம்பந்தரின் பல்லக்கைத் தூக்கியபடி நின்றவர்களில் ஒருவராக நின்றிருந்தாராம். அதிர்ந்து போய் பல்லக்கில் இருந்து இறங்கினார் ஞானசம்பந்தர். அப்பர் பெருமான் மடமொன்று தொடங்கி, இங்கே தொண்டுகள் பலவும் செய்தார். அந்த மடம் இன்றைக்கும் இருக்கிறது.

அதேபோல், சம்பந்தர் பெருமான் கோயிலுக்குள் வரும்போது உள்ளே நுழையும்போதே சிவ தரிசனம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, நந்திதேவர் சற்றே விலகி நின்றுகொண்டாராம். இன்றைக்கும் சந்நிதிக்கு எதிரே சற்று தள்ளியே இருக்கின்ற நந்தியைத் தரிசிக்கலாம்.

இந்தத் தலத்து முருகப்பெருமானும் விசேஷமானவர். அருணகிரிநாதர், இந்தத் தலத்துக்கு வந்து, முருகப்பெருமானின் பேரழகையும் பேரருளையும் திருப்புகழில் பாடியுள்ளார்.

அதேபோல், இந்தத் தலத்தில் திருக்கரத்தில் வீணையுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார் வீணாதர தட்சிணாமூர்த்தி. கலைத்துறையில் சிறந்து விளங்கவேண்டும் எனும் ஆர்வமும் லட்சியமும் கொண்டிருப்பவர்கள், திருவையாறு தலத்துக்கு வரும் போது அப்படியே திருப்பூந்துருத்தி தலத்துக்கும் வந்து தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேவேந்திரனும் காசிப முனிவரும் இந்தத் தலத்துக்கு வந்து தவமிருந்து வரம் பெற்றனர் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

திருப்பூந்துருத்தி திருத்தலத்துக்கு, மாத சிவராத்திரியில் அல்லது மகா சிவராத்திரியில், பிரதோஷ நன்னாளில், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வந்து தரிசிக்க வேண்டும் என்கிறார்கள் சிவனடியார்கள். வாழ்வில் ஒருமுறையேனும் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரரை கண்ணாரத் தரிசித்துவிட்டால், இந்த ஜென்மத்தின் எல்லாப் பாவங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். அதேபோல், அமாவாசை நாளில், திருப்பூந்துருத்தி தலத்துக்கு வந்து சிவனாரையும் உமையவளையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், பித்ருக்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

*அப்பர் சுவாமிகள் பாடிய திருப்பூந்துருத்தி தேவாரப் பதிகம்:

"மாலினை மாலுற நின்றான் 
  மலைமகள் தன்னுடைய
பாலனைப் பான்மதி சூடியைப் 
  பண்புண ரார்மதின்மேற்
போலனைப் போர்விடை யேறியைப் 
  பூந்துருத் திமகிழும்
ஆலனை ஆதிபு ராணனை 
  நானடி போற்றுவதே.  

மறியுடை யான்மழு வாளினன் 
  மாமலை மங்கையோர்பால்
குறியுடை யான்குண மொன்றறிந் 
  தாரில்லை கூறிலவன்
பொறியுடை வாளர வத்தவன் 
  பூந்துருத் தியுறையும்
அறிவுடை ஆதி புராணனை 
  நானடி போற்றுவதே.  
      __அப்பர் சுவாமிகள் 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள சிவன் கோவில்....

தமிழ்நாட்டில் சிவனுக்குரிய 
பெருமை மிக்க ஸ்தலங்கள்...
ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள்

1,தஞ்சை – பிரகதீஸ்வரர்
2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
4,திருபுவனம் – கம்பேஸ்வரர்

சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள்.

1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்

சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள்.

1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை

காசிக்கு சமமான ஸ்தலங்கள்

1, திருவெண்காடு. 2, திருவையாறு. 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம். 7, விருத்தாசலம். 8, மதுரை.
9, திருப்புவனம்

தருமநூல்கள் 18.

கடவுளால் வகுத்தது தருமத்தை 
பற்றி மட்டும் உபதேசித்தது.

1.மனு, 2.அத்தி, 3.விண்டு, 4.வாசிட்டம், 5.யமம், 6.ஆபத்தமம், 7.யாஞ்ஞ வற்கியம், 8.பராசரம், 9.அங்கீரசம், 10.உசனம், 11.காத்தியாயனம், 12.சம்பவர்த்தம், 13.வியாசம், 14.பிரகற்பதி, 15.சங்க்லிதம், 16.சாதாதபம். 17.கௌதம், 18.தக்கம்.

பாரதத்தின் முக்தி ஸ்தலங்கள்

1,காசி 2,காஞ்சி 3,மதுராபுரி 4,அரித்துவார் 5,உஜ்ஜையினி 6,அயோத்தி 7,துவாரகை.

பாரதமே பரமசிவம்.

1,திருப்பரும்பதம் – தலை உச்சி
2,திருக்கேதாரம் – நெற்றி.
3,காசி – புருவநடு
4,பிரயாகை – நெஞ்சு
5,தில்லை – இதயம்
6,திருவாரூர் – மூலம்.

முக்தி தரும் ஸ்தலங்கள்.

திருவாரூர் – பிறக்க முக்தி
காசி – இறக்க முக்தி
திருவண்ணாமலை – நினைக்க முக்தி
சிதம்பரம் – தரிசிக்க முக்தி
வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி
மதுரை – கூற முக்தி
அவினாசி – கேட்க முக்தி.

ஐந்து அற்புதங்கள்.

1, ஆவுடையார் கோவில் கொடுங்கை. 2, கடாரங்கொண்டான் மதில்
3, திருவீழிமிழலை வௌவ்வால் ஒட்டிமண்டபம் 4, தஞ்சாவூர் கோபுரம் 5, திருவலஞ்சுழி பலகணி

திவசம் சிறப்பு இடம் (பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்).

காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்}
திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்}
பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, திலதர்ப்பணபுரி, செதிலப்பதி, {தசரதன்,ஜடாயுக்கு இராமன் லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.}
இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார், இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர்.

12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்.
1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. – பிரம்மா, சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு {விஷாவகன் – பிரம்மா}
2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி – விஷ்ணு. பிறக்கும்நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம்.
3, ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி – சிவம். பிறக்கும் நேரம் “ஷடசீதி” {ஷடாங்கன் – சிவன்}
ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன – புண்ணியகாலம் – சூரியன் தெற்கு பயனிப்பது.
தை மாதப் பிறப்பு உத்தராயண – புண்ணியகாலம் – சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பது.

பெரிய தேர்கள் உள்ள ஸ்தலங்கள்.

திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி, மதுரை.

பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.
1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்}
2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,சோமநாதேஸ்வரர்}
3, மகாகாளேசம் – உஜ்ஜையினி {மகா காளேஸ்வரர்}
4, விஸ்வநாதம் – காசி {விஸ்வநாதேஸ்வரர்}
5, வைத்தியநாதம் – {மகாராஷ்டிரம், வைத்தியனாதர்}
6, பீமநாதம் – {மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.}
7, நாகேஸ்வரம் – {மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்}
8, ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் {அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்}
9, த்ரயம்பகம் – {மகாராஷ்டிரம், கௌதம்} திரயம்பகேஸ்வரர்.
10, குசுமேசம் – மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர்.
11, மல்லிகார்ஜுனம் – {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர்.
12, இராமநாதம் – இராமேஸ்வரம் {தமிழ்நாடு}

சப்த விடங்கத் ஸ்தலங்கள்.
1, திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம்.
2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6, திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம்.
7, திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்ஸபாத நடனம்.

பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.

1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய

ஓம் சிவாய நம.......

நாகப்பட்டினம் எட்டுக்குடி முருகன் திருக்கோயில்.....

நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்திருக்கிறது எட்டுக்குடி முருகன் திருக்கோயில்.
 ஆதிப் படை வீடு என்று அழைக்கப்படும் அற்புதத் தலம் இது. பதினெண் சித்தர்களுள் ஒருவரான வான்மீகி சித்தர் ஜீவசமாதி அடைந்த 'பள்ளிப்படை ஸ்தலம்' என்ற மற்றுமொரு சிறப்பும் உண்டு. இங்கு தல விருட்சமாக வன்னி மரமும், தீர்த்தமாக சரவணப் பொய்கையும் திகழ்கிறது.
நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். "சரவணபவ' என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்த இவன், அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவன் சிலையை செய்தான். அப்போது ஆட்சியில் இருந்த பரந்த சோழ மன்னன், அச்சிலையின் அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான். இது போல இன்னொரு சிலையை செய்யக்கூடாது என்பதற்காக, அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான். அவன் வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தான். கைவிரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தான். அதை அவ்வூரை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான். அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அந்நேரத்தில் வர அதை "எட்டிப்பிடி' என உத்தரவிட்டான். காவலர்கள் மயிலை பிடித்தனர். அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் "எட்டிக்குடி' என மாறி தற்போது "எட்டுக்குடி' ஆனது. அதுவே ஊரின் பெயராகவும் நிலைத்து விட்டது. இதே சிற்பி மற்றொரு சிலையையும் வடித்தான். அதை எண்கண் என்ற தலத்தில் வைத்தான். சிற்பி முதலில் வடித்த சிலை சிக்கலிலும், அடுத்த சிலை எட்டுக்குடியிலும் வைக்கப்பட்டது. இந்த மூன்றுமே உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவை.
இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிராகாரத்தில் முருகனுடன் சூரபத்ம வதத்திற்குத் துணையாகச் சென்ற 9 வீரர்களுக்கும் சிலைகள் உள்ளன. சூர சம்ஹாரம் செய்வதற்கு முருகப்பெருமான் இங்கிருந்து புறப்பட்டதாகக் கூறுகிறது தல புராணம்.
பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி. குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார். சித்ராபவுர்ணமியை ஒட்டி இங்கு விழா நடக்கிறது. கோயில் முன்புள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கைபட்டாலே பாவ நிவர்த்தியாகி விடும் சிறப்புடையது. சவுந்தரநாயகர், ஆனந்தவல்லித்தாயார் ஆகியோர் முருகனின் தாய் தந்தையாக அருள்பாலிக்கின்றனர். பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவனாக திகழ்கிறான். சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கி சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
இந்தத் தலத்தில் வேண்டுவார்கள் வேண்டும் வரத்தை அளிப்பவராக அருள்புரிகிறார் முருகப் பெருமான். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும் அருள்புரிகிறார் முருகன். குழந்தை வரம் நிறைவேறும்போது மணி கட்டி நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Tuesday, September 24, 2024

கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ள கனகசபாபதி சுந்தரேசுவரர்....

*கனகசபாபதி*
கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ளது கனகசபாபதி
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகிலுள்ள கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ளது கனகசபாபதி திருக்கோவில்.
*விரும்பிய வேலை வழங்கும் கனகசபாபதி திருக்கோவில்*

சிதம்பரம், செப்பறை, கட்டாரிமங்கலம், கருவேலங்குளம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலம் ஆகிய ஐந்து ஊர்களில் உள்ள நடராஜர் சிலைகளை, ‘பஞ்ச விக்கிரகங்கள்’ என்கிறார்கள். 
இந்த ஐந்து நடராஜர் சிலைகளும் ஒரே ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்டது. திருவாதிரையன்று மேலே கூறப்பட்ட ஐந்து ஊர்களில் உள்ள நடராஜ பெருமானையும் தரிசிப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்தது என்று நம்பப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகிலுள்ள கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ளது கனகசபாபதி திருக்கோவில். 

இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் சுந்தரேசுவரர். அம்பாளின் பெயர் சுந்தராம்பிகை. தல விருட்சம் வில்வ மரம்.

அம்மையும், அப்பனுமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தாலும், ஆலயத்தில் முக்கியத்துவம் பெற்றவர் நடராஜ பெருமான் தான். 

சிதம்பரம் நடராஜர் சிலையை உருவாக்கிய ஸ்தபதியால், அதே போல் கொஞ்சமும் மாறுதல் இல்லாத ஐந்து நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டது. 

அதில் ஒரு நடராஜர் சிலைதான் இந்த ஆலயத்தில் இருக்கிறது.

இங்கு அனுக்ஞை விநாயகர் முன் மண்டபத்தில் அமர்ந்து இருக்கிறார். விழா நாட்களில் இவர் முன்னிலையில்தான் சங்கல்பம் தொடங்குவார்கள். 

சுந்தரேஸ்வரருக்கும், சுந்தராம்பிகைக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இரண்டு சன்னிதிகளுமே கிழக்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பு.

ஆலய முன் மண்டபத்தில் ஒரு மணி தொங்குகிறது. அதன் சத்தம் சுற்று வட்டாரத்தில் உள்ள 5 கிலோமீட்டர் தொலைவிற்கு கேட்குமாம். 

இந்த கோவிலில் பூஜை நடைபெறும்போது ஒலிக்கும் மணியோசையின் சத்தம் கேட்ட பின்னர்தான் மற்ற கோவில்களில் மணி அடித்து பூஜை செய்வார்களாம்.

முன் மண்டப தூணில் பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோரின் சிற்பங்களும் உள்ளன. அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கி கனகசபாபதி சன்னிதி இருக்கிறது. 

அங்குதான் நடராஜர், நடனமாடிக் கொண்டு இருக்கிறார். அடுத்து கருவறை எண்கோண வடிவத்தில் அமைந்துள்ளது. 

சிவலிங்க வடிவில் கருவறையில் எம்பெருமான் உள்ளார். வலதுபுறம் அம்பாள் சன்னிதி. சர்வ அலங்காரத்துடன் அம்மையும், அப்பனையும் காண்பதற்கு கோடி கண்கள் வேண்டும்.

தெற்கு பிரகாரத்தில் ஜூரதேவரும், தட்சிணாமூர்த்தியும் காட்சி தருகிறார்கள். மேல பிரகாரத்தில் கன்னி விநாயகரும், வள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமானும் வீற்றிருக்கின்றனர்.

வடக்கு பிரகாரத்தில் சனீஸ்வரர், சண்டிகேஸ்வர மூர்த்திகளின் சன்னிதி உள்ளது. சுவாமி மண்டபத்தில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. 

ஈசான்ய பாகத்தில் பைரவர் அருள்கிறார். சுவாமிக்கு எதிரில் நந்தியெம்பெருமான் கம்பீரமாக அமர்ந்துள்ளார். 

முன் முகப்பில் கொடி மரம், பலி பீடமும், தென்பாகத்தில் பூரண புஷ்கலா சமேத சாஸ்தாவின் திருவுருவமும், நடராஜர் அபிஷேக மண்டபமும் உள்ளது.

அக்காலத்தில் கட்டாரிமங்கலம் பகுதியை வீரபாண்டியன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். 

இவன், மணற்படை வீட்டை ஆண்ட முழுதுங்கண்ட ராமபாண்டிய மன்னனின் உறவினர் ஆவான். செப்பறையில் உள்ள நடராஜர் விக்கிரகத்தை பார்த்த வீரபாண்டியன், தனக்கும் அதேபோல் நடராஜர் விக்கிரகம் செய்து தருமாறு ராமபாண்டியனிடம் வேண்டினான்.

அதைக்கேட்ட ராமபாண்டிய மன்னன், நமச்சிவாய ஸ்தபதியை அழைத்து விக்கிரகங்கள் செய்வதற்கான தாமிரத்தை கொடுத்து ஒரு சிலையை கட்டாரிமங்கலத்துக்கும், மற்றொன்றை நெல்லையப்பர் கோவிலுக்கும் செய்து தருமாறு உத்தரவிட்டான். 

மன்னனின் உத்தரவுப்படி குறிப்பிட்ட நாளில் 2 சிலைகளும் செய்து முடிக்கப்பட்டன.

நடராஜர் சிலையை எடுத்துச்செல்ல வந்த வீரபாண்டிய மன்னன், சிலையின் அழகில் மயங்கி இதைப்போன்ற சிலை வேறு யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்று முடிவு செய்து அந்த சிலையை வடித்த சிற்பியின் இரண்டு கைகளையும் வெட்டி விட்டு இரண்டு சிலைகளையும் தூக்கிச் சென்றான்.

மன்னனின் படைகளில் இடம்பெற்று இருந்த ஒரு பிரிவினர், ஒரு சிலையை எடுத்துக்கொண்டு கட்டாரிமங்கலத்துக்கு சென்றனர். மற்றொரு சிலையை தூக்கிச்சென்ற ஒரு பிரிவினர், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சிலையை போட்டு விட்டு ஓடி விட்டனர். 

வெள்ளம் வடிந்ததும் ஊர்மக்கள், நடராஜரின் சிலையை கண்டுபிடித்து எடுத்துச்சென்று ஆற்றின் தென்கரையில் வைத்து வழிபட்டு வந்தனர்.

இதற்கிடையில் தனது ஸ்தபதிக்கு நேர்ந்த நிலையை அறிந்த ராமபாண்டியன், அதற்கு காரணமான வீரபாண்டியன் மீது படையெடுத்துச்சென்று தனது ஸ்தபதியின் கைகளை வெட்டிய வீரபாண்டியனின் இரண்டு கைகளையும் வெட்டினான். 

பின்னர் ஆற்றின் தென்கரையில் உள்ள சிலையை நெல்லையப்பர் கோவிலுக்கு எடுத்துச்செல்ல முயன்றான். ஆனால் அந்த சிலையை அங்கிருந்து யாராலும் நகர்த்தக்கூட முடியவில்லை.

அன்றைய இரவில் மன்னனின் கனவில் இறைவன் தோன்றி, “கரிய மேகங்கள் சூழ்ந்த வனம் நிறைந்த இந்த இடத்திலேயே நான் வீற்றிருக்க விரும்புகிறேன். இங்கேயே எனக்கு கோவில் எழுப்புவாயாக'' என்று கூறி மறைந்தார். 

இறைவனது விருப்பப்படி ராமபாண்டிய மன்னன், கரிசூழ்ந்தமங்கலத்தில் திருக்கோவில் கட்டியதாக வரலாறு தெரிவிக்கிறது.

(இரண்டு கைகளையும் இழந்த ஸ்தபதி, தனது இரு கைகளிலும் அகப்பையை கட்டிக்கொண்டு வார்ப்பு செய்து மேலும் மூன்று நடராஜர் சிலைகளை வடித்தார். 

அவ்வாறு வடித்த சிலைகளில் ஒன்று சிதம்பரத்திலும், மற்ற இரண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை, கருவேலங்குளம் ஆகிய தலங்களிலும் உள்ளன).

இக்கோவிலில் நாள்தோறும் காலை, மாலை, இரவு என மூன்று கால பூஜைகள் நடக்கிறது. காலை 8 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

இங்கு தினமும் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை வழிபாடு மிகவும் விசேஷமானதாகும். 

இந்த பள்ளியறை வழிபாட்டில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு தடைபட்ட திருமணம், குழந்தைப்பேறு, விரும்பிய வேலை கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து மேலப்பாளையம் வழியாக சேரன்மாதேவி செல்லும் வழியில் பத்தமடையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

பசுபதீசுவரர் திருத் துறையூர் சிட்ட குருநாதர் கோவில்...

*⚜️     திருத் துறையூர் சிட்ட குருநாதர் திருக்கோயில்* .                               
          *ஞான சிவம் தட்சிணா மூர்த்திக்குத் தனிச் சந்நிதி உள்ள  கோயில்களில் ஒன்று*.
  🙏   *வழிபட்டவர்கள்* .   பசுக்கள், நாரதர் , பிரம்ம விஷ்ணுக்கள் , முருகன்,   சூரியன்,   அகத்தியர், ராமன்,  பீமன் மற்றும் பலர்.              
           
திருத் துறையூர் திருத்தலம் பண்ணுருட்டிக்கு அருகே பெண்ணை யாற்றங் கரையில் உள்ளது.  

நீர்த் துறையில் மேய வந்த பசுக்கள் *கொன்றை மரத் தடியில் வெளிப்பட்டிருந்த லிங்கப் பரம்பொருளைப் பூசித்து முக்தி பெற்றதால்* திருத் துறையூர் என்று பெயர். 

ஈசனுக்குப் *பசுபதீசுவரர்* என்று திருநாமம்.   

சிட்டர் என்றால் உத்தமர், 
முனிவர் என்று பொருள். 

தேவ முனிவராகிய நாரதர் பசுபதீசுவரரைப் பூசித்துத் தவம் செய்து ஞானோபதேசம் பெற்ற ஊர் ஆதலால் சிட்டருக்கு அருளிய ஈசனுக்கு சிட்ட குருநாதர் என்று அருள் நாமம். 

சுந்தரருக்குத் தவ நெறி அருளியதாலும் சிட்ட குரு நாதர் என்று திருநாமம்.
        
🔥  *துறையூர்ச் சிட்டா* 
*உனை வேண்டிக்* *கொள்வேன் தவ நெறியே*     (சுந்தரர்) 

🔯        *சிட்டனே சிவலோகனே*                         (திருவாசகம்)

என்று திருமுறைகள்  திருத் துறையூர்ச் சிட்டனைப் போற்றுகின்றன. 

*தவ நெறி உடையார், தவநெறி ஆளுடையார்* என்ற திருநாமங்களைக் 
கல்வெட்டு கூறுகின்றது. 
             
    ருத்திராட்சப் பந்தலின் கீழ் உள்ள லிங்கப் பரம்பொருளுக்கு முன் சிறியதும் பெரியதுமாக இரண்டு நந்திகள் உள்ளன. 

சிட்ட குரு நாதரைத் தொழுது பூசித்துத் தவ நெறியின் மகிமை உணர்ந்த  அரி அயன் ஆகிய இருவரில் பிரம்மன் உருவம்  கருவறைச் சுவற்றிலும்   மகாவிசுணு  உருவம் ஆதி கேசவப் பக்த வச்சலப் பெருமாள் என்று தனிச் சந்நிதியிலும் உள்ளன. 

 சூரிய பகவான் பசுபதீசுவரரைப்  பூசித்துத் தொழுத பின் தீர்த்தம் உண்டாக்கி லிங்க மெய்ப் பொருளைப் பிரதிட்டை செய்து வழிபட்டு நலம் பெற்றான்.  
சூரியன் பிரதிட்டை செய்த லிங்கமும் சூரியனும் தனிச் சந்நிதிகளில் உள்ளனர்.   

  நாரதர்,   அரி அயன் சூரியன் ஆகியோருக்கு ஞானம் அருளிய   மேதா தட்சிணா மூர்த்தி தனிச் சந்நிதியில் உள்ளார். 
       
   இரண்டு புறமும் சுவற்றில் இரண்டு சித்தர் உருவங்கள் உள்ளன. 

கீழே விநாயகர் அமர்ந்துள்ளார். 

அகத்தியர் இராமன் பீமன் பசுபதீசுவரரைப் பூசித்து நலம் அடைந்தனர்.  

சிட்ட குருநாதரைப் பூசித்து வணங்கிய பின் அகத்தியரும் இராமனும் பீமனும் பிரதிட்டை செய்து வழிபட்ட அகத்திய லிங்கம் இராம  லிங்கம் பீம லிங்கம் தனிச் சந்நிதிகளில் உள்ளன. 

அகத்திய லிங்க சந்நிதியில் லிங்கப் பரம்பொருளுக்கு முன்பு அகத்தியர் உள்ளார். 

சிட்ட குருநாதரை வழிபட்ட முருகன் பால முருகனாகத் தனிச் சந்நிதியில் உள்ளான். இது அல்லாமல் தேவியருடன் இருக்கும் ஆறுமுகன் சந்நிதியும் உள்ளது. 

விநாயகர் சந்நிதியில் பிள்ளையார் நர்தன கணபதியாக உள்ளார். 

யானை லட்சுமி தனிச் சந்நிதியில் அமர்ந்துள்ளாள்.  



         *அவ யோகம் சாராது அவன் பதி போக* 
      *நவ யோக நந்தி நமக்கு  அளித்தானே*
(திருமூலர்)

என முக்தி பெற்று *சிவ லோகம் சேர ஒட்டாமல் தடுப்பவை  அவதாரம் பிறவி  ஆகிய  அவ யோகம்*. 

இவை உள்ள யாரும் எந்த அம்மனும்  சிவ  யோக நாயகி அல்ல. 

வந்து வழிபடும் பக்தர் யாரும் எந்த தெய்வமும்  
 கோயிலில் இருக்க முடியாது. 

அவ யோகம் சார்பவர்களுக்கு பக்தர்களுக்கு சந்நிதி அமைத்து வழிபடும் 
 இவை யெல்லாம் நாய்க்கர் செய்த சிவ அபச்சாரங்கள்.    

சுந்தரருக்கு அருளிய  சிட்ட குரு நாதர் சுதைச் சிற்பம் நுழை வாசல் முகப்பில் உள்ளது. 

அமர்ந்த கோலத்தில் உள்ள ஈசன் திருமுன் தவக்கோலம் கொண்ட சுந்தரர் உருவம்  சுவற்றில் கல் சிற்பமாகக் காணப்படுகிறது. 
         
  பிரம்மன் சிரம் கொய்த    சிவ மைந்தர் பைரவருக்குத்  தனிச் சந்நிதி  உள்ளது.   

தெய்வீக நால்வர் தனிச் சந்நிதியில் உள்ளனர். 

சிவஞான போதத்தின் விரி நூலான சிவஞான சித்தியார் என்னும் மெய் கண்ட சாத்திர நூலை அருளிய அருள் நந்தி சிவாச்சாரியார் அவதாரம் செய்த தலம் திருத்துறையூர். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்... 

சிவ தாண்டவம்.சிவபெருமான் ஆடிய நடனம்.....

சிவ தாண்டவம்.
1.சிவபெருமானின் காளிகா
தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது?
காளிகா தாண்டவம் –
படைத்தல் செய்யும் போது.
தலம் – நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி.
ஆடிய இடம் – தாமிர சபை

2. சிவபெருமானின் சந்தியா
தாண்டவம் ஆடுவது எப்போது? எங்கு?
சந்தியா தாண்டவம் –
காத்தல் செய்யும் போது.
தலம்- மீனாட்சி அம்மன் கோவில்,மதுரை.
ஆடிய இடம் – வெள்ளி அம்பலம்

3. சிவபெருமானின் சங்கார
தாண்டவம் ஆடுவது எப்போது?
சங்கார தாண்டவம் –
அழித்தல் செய்யும் போது.

4. சிவபெருமானின் திரிபுர
தாண்டவம் ஆடுவது எப்போது? எங்கு?
திரிபுர தாண்டவம் –
மறைத்தல் செய்யும் போது.
தலம்- குற்றாலநாதர் கோவில், குற்றாலம்.
ஆடிய இடம் – சித்திர சபை.

5. சிவபெருமானின் ஊர்த்துவ
தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
ஊர்த்தவ தாண்டவம் –
அருளல் செய்யும் போது.
தலம்- ஊர்த்தவதாண்டவர் கோவில், திருவாலங்காடு, ஆடிய இடம் – இரத்தின சபை.

6. சிவபெருமானின் ஆனந்த
தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
ஆனந்த தாண்டவம் – இவ்வைந்து செயல்களையும் செய்யும் இடம்.
தலம்- நடராஜர் கோவில், சிதம்பரம்.
ஆடிய இடம் – கனக சபை.

7. சிவபெருமானின் கௌரி
தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
கௌரி தாண்டவம் –
பார்வதிக்காக ஆடிய போது.
தலம்- திருப்பத்தூர்.

8. அஜபா நடனம் என்பது என்ன?
இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
அஜபா நடனம்- சிவபெருமான் மேல்மூச்சில், கீழ்மூச்சில் (தவளை போல்) அசைந்தாடிய நடனம். ஆடிய தலம்- திருவாரூர்

9. உன்மத்த நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
சிவபெருமான் பித்தனைப் போல் தலை சுற்றி ஆடிய நடனம் உன்மத்த நடனம் ஆகும். ஆடிய தலம்- திருநள்ளாறு.

10. தரங்க நடனம் என்பது என்ன?
இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
தரங்க நடனம் என்பது கடல் அலை போல் அசைந்து ஆடுவது. இதை சிவபெருமான் நாகப்பட்டினத்தில் ஆடினார்.

11. குக்குட நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
குக்குட நடனம் என்பது கோழி போல் ஆடுவது. ஆடிய தலம் – திருக்காறாயில்.

12. பிருங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
பிருங்க நடனம் என்பது வண்டு மலரைக் குடைவது போல் ஆடுவது. இதை சிவபெருமான் ஆடியது இடம் திருக்கோளிலி ஆகும்.

13. கமல நடனம் என்பது என்ன?
இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
கமல நடனம் என்பது தாமரை காற்றில் அசைவது போல் ஆடுவது. ஆடிய தலம்-திருவாய்மூர்.

14. ஹம்சபாத நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
ஹம்சபாத நடனம் என்பது அன்னம் போல் அடியெடுத்து ஆடுவது. ஆடிய தலம் – திருமறைக்காடு (வேதாரண்யம்)
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...