Saturday, April 5, 2025

ஸ்ரீராமஜெயம் என்னும் மந்திரம் வேறு என்ன உண்டு.


"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்றிரண்டே ழுத்தினால்.."
 
இராமச்சந்திர மூர்த்தியால் முடியாததை கூட தேனினும் இனிய ராம நாமம் முடித்து தரும். ஆகவே அவரது நாமமே உயர்ந்தது என்பதே கருத்து. 

சேது பந்தனம் வேலை துரிதமாக நடந்துக் கொண்டு இருந்தது. வானரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நின்று கல்லை வாங்கி மற்றவரிடம் கொடுக்க அந்தக் கல் கடல் நீரின் அருகே வரும்போது அது எப்படித் தான் அது விழும் இடத்திற்கு வந்து அழகாக பொருந்த வேண்டிய இடத்தில் பொருந்துகின் றதே என்று ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். 

நிமிடத்தில் விறுவிறுவென சேது அணை கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. இப்படியே வேலை செய்தால் இன்னும் ஐந்தே நாட்களில் அனணயை கட்டி முடித்து விடலாம் என்றனர்.

சீதையைப் பிரிந்து பதினோரு மாதங்கள் ஆகி விட்டன. இந்த சேது பாலம் கடலின் இரு கரை களையுமா இணைக்கப் போகிறது? பிரிந்து இருக்கும் ராமரையும் சீதையும் அல்லவா இது சேர்க்கப் போகிறது. 

அன்பே சீதா, நீ இலங்கையில் என்ன துன்பப் படுகிறாயோ, உன்னை அரக்கிகள் எவ்விதமெ ல்லாம் அச்சுறுத்துகிறார்களோ இந்த நினைவு வந்ததும் இராமபிரான் கண்களில் கண்ணீர் தளும்பியது. 

அருகே நின்ற லட்சுமணன் அண்ணன் இராம பிரானை கனிவோடு பார்த்தான். " அண்ணா இந்த பாலம் வெகுவேகமாக கட்டப்பட்டுக் கொ ண்டிருக்கிறது. மிக விரைவில் வானரங் கள் இதை கட்டி முடித்து விடுவார்கள். அப்படி இருக்க கண் கலங்கலாமா.." என்றான்.

ராமர் விழிநீரை புறங்கையால் துடைத்துக் கொண்டு, "அது இல்லை லட்சுமணா நாம் இங் கே இத்தனை  நண்பர்களுடன் இருக்கிறோம். நமக்கு உதவ அனுமன், சுக்ரீவன் ஜாம்பவான் இத்தனை பேர் இருக்க எனக்கு ஆறுதல் சொ ல்ல என் தம்பி நீயிருக்கிறாய். ஆனால் சீதை எதிரிகளின் ராஜ்ஜியத்தில் அல்லவா இருக்கி றாள். அவளை தேற்ற யாரும் அங்கே இல்லை யே அரக்கிகள் மிரட்டிக் கொண்டிருப்பார்கள்.."

" போதாக்குறைக்கு அந்த பாவி ராவணன் வேறு வந்து அச்சுறுத்திக் கொண்டிருப்பான். சீதை என்ன பாடுபடுகிறாளோ." என்பதைத்தா ன் நினைத்தால் தண்ணீர் தானாக கண்களில் கொட்டுகிறது என்றார். லட்சுமணன் ஆறுத லோடு பார்த்தான். ராமன் மெல்ல சகஜ நிலை க்கு திரும்பினார். 

"ஆம் லட்சுமணா இந்த வானரங்கள் செய்யும் வேலை அதிசியமாக அல்லவா இருக்கிறது. என்ன வேகம்... என்ன சுறுசுறுப்பு.. ஏததோ மந்திரத்தால் நடப்பதுபோல் அல்லவா இருக்கி றது. இவர்கள் வேலை செய்யும் நேர்த்தியும் வேகமும்..." ராமரின் பேச்சைக் கேட்டுக் கொ ண்டே அங்கு வந்தான் ஆஞ்சநேயன். 

ராமர் சொன்னது சரிதான் மந்திரத்தால் தான் வேலை நடக்கிறது என்று அனுமன் நினைத்து கொண்டான். என்ன அழகாக வேலை செய்கி றீர்கள் எல்லோரும் என்ன ஒழுங்கு... என்ன கச்சிதம்...

எல்லோரும் ஒவ்வொருவராக தூக்கி போடும் கல் எதிரில் நிற்க எவ்வளவு அழகாக அது பொ ருந்த வேண்டிய இடத்தில் பொருந்துகின்றன. அதைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன் "அனுமா, இந்த வானரங்கள் எல்லோரும் இந்த அணைகட்டும் கலையை எங்கே எப்போது கற்றன தெரியவில்லையே.." என்றார்.

அனுமன் கலகலவென சிரித்தான். " பிரபோ நீங்கள் சொன்னீர்களே ஏதோ மந்திரத்தால் நடப்பது போல வேலை நடைபெறுகிறது. என்று அதுதான் உண்மை..." 

" சரியாகச் சொல்லப்போனால் வேலை செய்வ து வானரங்கள் அல்ல.. அது வேறொரு சக்தி.. அதை வானரங்களும் புரிந்து கொண்டிருப்ப தால் தான் இவை இத்தனை ஒற்றுமையாகவு ம் நம்பிக்கையோடும் பணிபுரிகின்றன..."  என்றான் அனுமன்..

இப்போது லட்சுமணன் கலகலவென சிரித்தா ன். "அதென்ன வேறொரு சக்தி அனுமா?" அனு மன் பதில் சொல்லாமல் முறுவல் பூத்தான். 

"குறிபார்த்து நாம் அன்பு எய்கிறோம் இல்லை யா? அதுபோல் இந்த வானரங்கள் கல்லை தூ க்கி வீசுகின்றன. இவை குறிபார்த்து கல்வீசும் திறனில் பழக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கி றேன்.." என்றான் லட்சுமணன். 

அதைப் பார்த்த ராமர் கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்தார். லட்சுமணன் கலகல வென்று நகை த்தவாறு ராமரைபார்த்தவாறு நின்றிருந்தான். 

ஆனால் அனுமன் முகத்தில் யோசனை ரேகை கள் ஓடின ராமர் அந்த கல்லை கடலை நோக்கி வீசினார். கல் பறந்து சென்றது ஆனால் விழ வேண்டிய இடத்தில் அது விழவில்லை. கடலி ல் விழுந்து மூழ்கியது. 

இப்போது ராமபிரான் முகத்தில் யோசனை ஆனால் அனுமன் முகத்தில் மெல்லிய புன்மு றுவல். 

" பிரபோ மந்திரத்தால் வேலை நடக்கிறது என் று சொன்னீர்கள் அல்லவா?.."

" ஆம். அதற்கென்ன...வேலை உண்மையில் மந்திரத்தால் தான் நடக்கிறது..." 

"அப்படியா அதென்ன மந்திரம்?" 

"ஸ்ரீராமஜெயம் என்னும் மந்திரம் வேறு என்ன உண்டு. சுவாமி நான் ஒவ்வொரு கல்லிலும் ஸ்ரீராம் என்று எழுத அதை வானரங்கள் அந்த நாமத்தை உச்சரித்து கொண்டே வீசுகின்றன. 
அது போய் விழ வேண்டிய இடத்தில் பொரு ந்து கின்றன.."  என்றார். 

"இருக்கட்டும் அனுமா! எந்த ராமபிரானின் மந்திரத்தை உச்சரித்து கல் எறிகிறீர்களோ.. அதே ராமபிரான் அல்லவா கல்லை தூக்கி எறிந்தார். அது ஏன் கடலில் விழுந்து அமிழ்ந்து விட்டது.."  என்றார். 

"ஏனென்றால் எங்கள் ஸ்ரீராமபிரானைவிடவும் அவரது ராமநாமம் மிக உயர்ந்தது.."  என்றார். 

ராம நாமத்தால் ஆகாத செயல் இல்லை ராம ச்சந்திர மூர்த்தியால் முடியாததை கூட தேனி னும் இனிய ராம நாமம் முடித்து தரும். ஆகவே அவரது நாமமே உயர்ந்தது என்பதே கருத்து.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

முருகப்பெருமானின் ஏழாம் படை வீடு மருதமலை..

#மருதமலை_முருகன்_கோயில்.....
கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 
முருகப்பெருமானின் #7_ம்_படை_வீடு என்ற பெருமைகுரிய தெய்வீக ஆலயம்

மருதமரங்கள் மிகுதியாக காணப்படுவதன் காரணமாக இந்த பகுதி மருதமலை என்று அழைக்கப்படுகிறது. 

1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுகிறது. 

#பேரூர்_புராணம், #திருப்புகழ் மற்றும் #காஞ்சிப்_புராணங்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. 
#மருதமலை_சுப்பிரமணிய_சுவாமி #மருதாசலபதி, மருதப்பன், மருதமலையான், மருதமலை முருகன், #மருதாசலமூர்த்தி என பல பெயர்களால் போற்றித் துதிக்கப்படுகிறார். 

*வரலாறு:*

முன்னொரு காலத்தில் முருக பக்தரான சித்தர் ஒருவர் இப்பகுதிக்கு வருகை தந்தார். அவர் களைப்பாலும், தாகத்தாலும் சோர்வடைந்து அங்கிருந்த மருத
மரம் ஒன்றின் கீழ் அமர்ந்து இளைப்பாறினார். அச்சமயத்தில் மருதமரத்தின் கீழ்ப்பகுதியில் ஊற்று நீர் பீறிட்டது.

இதைக்கண்ட சித்தர் இது முருகப் பெருமானின் அருளே என்று வியந்து முருகப்பெருமானை ‘மருதம் சலம் ஆகியவற்றின் தலைவா’ என்று வாழ்த்திப் பாடியதாகவும், அதுவே பின்னர் மருதாசலபதி என்று மருவி அழைக்கப்படுவதாகவும் செவிவழிச் செய்தி நிலவுகிறது. 

*கோவில்:*

மலையடிவாரத்தின் படிக்கட்டுப் பாதை தொடக்கத்தில் தெய்வீக #தான்தோன்றி_விநாயகர்_சந்நதி அமைந்துள்ளது. இந்த விநாயகரின் அமைப்பு மிகவும் வித்தியாசமானது மற்றும் #அழகானது. இதுபோன்ற விநாயகப்பெருமானை வேறு எந்த தலத்திலும் தரிசிக்க இயலாது. 

தான் தோன்றி விநாயகரை வழிபட்டு மலையேறினால் 18 படிகளைக் கொண்ட ‘#பதினெட்டு_படி’ உள்ளது. சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வழிபட இயலாதவர்கள் இந்த பதினெட்டாம் படிக்கு வந்து வணங்குகிறார்கள். 

மருதமலை முருகன் கோயிலுக்குப் படிக்கட்டுகளின் வழியாகச் செல்லும்போது #இடும்பனுக்கென அமைந்துள்ள தனி சந்நதியைக் காணலாம்.

இந்த இடும்பனை வணங்கினால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரே பிராகாரத்துடன் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் #மகாமண்டபம், #அர்த்தமண்டபம், #கருவறை என முறைப்படி அமைந்துள்ளன. 

கருவறையில் #அழகே_வடிவாக_முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். 

கருவறைக்கு முன்னால் முருகப்பெருமானை நோக்கிய வண்ணம் அவருடைய வாகனம் #மயில் நின்றிருக்கிறது. அதற்குப் பின்னால் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன. 

இதன் அருகே தனி சந்நதியில் #வலம்புரி_விநாயகர் அருட்பாலிக்கிறார். 

மருதமலை கோயிலில் #ஆதி_மூலஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு #வள்ளி_தெய்வானையோடு அருள்புரியும் முருகப்பெருமானை முதலில் வழிபட்டு பின்னர் #பஞ்சமுக_விநாயகரை தரிசித்து அதன் பிறகு மூலவரை வணங்க வேண்டும்; 

பின்னர் பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வரதராஜப் பெருமாள், நவக்கிரக சந்நதி என வழிபட வேண்டும்;  

இதைத் தொடர்ந்து பாம்பாட்டி சித்தர் சந்நதிக்குச் சென்று அவரை வணங்கி விட்டு பின்பு சப்தகன்னியரை வழிபட வேண்டும் என்பது மரபு. 

மருதமலைக் கோயிலின் தென்புறத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி கிழக்கு திசை நோக்கிச் சென்றால் அப்பகுதியில் பாம்பாட்டி சித்தர் சந்நதியைக் காணலாம். 

இத்திருக்கோயிலில் அமைந்துள்ள சப்தகன்னியர் சந்நதிக்குப் பின்புறம் வற்றாத ஊற்று ஒன்று அமைந்துள்ளது. எப்போதும் நீர் சுரந்து கொண்டேயிருக்கும் இந்த ஊற்றுத் தண்ணீரைக் கொண்டு தான் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. 

மருதமலை முருகன் கோயிலில் உள்ள விநாயகர் சந்நதியின் பின்புறத்தில் ஒன்றாக பின்னிப் பிணைந்தபடி பழமையான ஐந்து மரங்களைக் காணலாம். இதனை ‘பஞ்ச விருட்சம்’ என்றழைக்கிறார்கள். அதிசயமான இந்த மரத்தில் குழந்தை வரத்துக்காக வேண்டிக் கொள்ளும் பெண்கள் தொட்டில் கட்டுகின்றனர். 

இத்திருக்கோயிலில் பதினாறரை அடி உயரம் கொண்ட தங்கத்தேர் உள்ளது. தினமும் மாலை ஆறு மணிக்கு கோயிலில் இந்தத் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது.  

*இத்தலத்தின் தீர்த்தம்:*
#மருதத்தீர்த்தம்,

*#தலவிருட்சம்:*
#மருத_மரம்.

நீண்டகாலமாக திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் போன்றவற்றை சமர்ப்பித்து கல்யாண உற்சவத்தை நடத்தினால் விரைவில் முருகப்பெருமான் அருளால் திருமணம் கைகூடும்.

மேலும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தம்பதி சமேதராய் இக்கோயிலுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் வந்து வழிபாடு செய்தால் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பதும் பக்தர்களின் அனுபவ உண்மை. 

இத்திருத்தலத்தில் தினசரி காலை ஐந்து மணிக்கு கோ பூஜை, பிறகு 5.30 மணிக்கு நடைத்திறப்பு. காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 8.30 முதல் 9.00 மணி வரை காலசந்தி பூஜை, 11.30 முதல் 12.00 மணி வரை உச்சிக்கால பூஜை, மாலை 4.30 முதல் 5.00 மணி வரை சாயரட்சை பூஜை, இரவு 8.00 மணி முதல் 8.30 மணி வரை இராக்கால பூஜை என நடைபெறுகின்றன.

ஆண்டு முழுவதும் முருகப் பெருமானுக்குரிய விழாக்கள் இத்திருக்கோயிலில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 

சித்திரை மாதத்தில் தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம், ஆடி மாதத்தில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடி பதினெட்டு, ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் என விழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறுகின்றன. 

#கார்த்திகை_தீபம், ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பூச விழா, #வள்ளி_தெய்வானை_திருக்கல்யாணம் மற்றும் #பங்குனி_உத்திரம் போன்ற நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 

இத்திருக்கோயில் காலை ஐந்தரை மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும்.

மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை நடை சாத்தப்படுகிறது. கிருத்திகை மற்றும் முக்கியமான விழா நாட்களில் கோயில் காலை முதல் இரவுவரை தொடர்ந்து திறந்திருக்கும். 

கோவையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மருதமலை அமைந்துள்ளது. 

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம். உக்கடம், டவுன்ஹால், சிங்காநல்லூர், ஈச்சனாரி போன்ற பல பகுதியிலிருந்தும் மருதமலைக்கு நகரப் பேருந்துகளும், மலை அடிவாரத்திலிருந்து மேலே கோயிலை அடைய கோயில் நிர்வாகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

படிக்கட்டுகள் ஏறியும் மலைக்கோயிலை அடையலாம். மலைப்பாதையில் ஏறிச் செல்லுவோர் இளைப்பாறுவதற்காக வழியில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிக பெரிய தேர் வரலாறு...

வருகின்ற 07-04-2025 தேரோட்டம் நடைபெறவுள்ள திருவாரூர் தேர் வரலாறு..!
ஆசியாவிலேயே  மிக உயரமான கோயில் தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல, தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது  திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர்.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி திருவாரூர். இங்குள்ள தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் தேர்த் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.

திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிக பெரிய தேராகும். 

திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது.

இந்த தேர் நான்கு நிலைகளை உடையது 

அவை முறையே 6 மீட்டர் 
1.2 மீட்டர் 
1.6 மீட்டர் 
1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும்

தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை . 

பல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது.

இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும்.

முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன. அப்போதெல்லாம் தேர் நிலைக்கு வர வாரக்கணக்காகுமாம். பின்னர் அது படிப்படியாக குறைந்து 4 நாட்களாக நடைபெற்று வந்தது.

தற்போது 4 புல்டோசர்கள் கொண்டு இழுக்கப்பட்டு வருவதால் அன்று  மாலையே நிலைக்கு கொண்டு வரப்பட்டு விடுகிறது.

திருவாரூர் தேர் எனப்படும் ஆழித்தேரோட்டம்   காலை 7 மணிக்குமேல் தேர் தியாகராஜருடன் பவனி வருகிறது.

இதற்காக கடந்த 6ந்தேதியே  மூலவர் தேரில் வந்து அமர்ந்து விட்டார். அன்றிலிருந்து கடந்த ஒரு வாரமாக தேர் அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.

காலை 7 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது.

ஏற்கனவே பல ஆயிரம் பக்தகோடிகள் திருவாரூர் தேரில் அமர்ந்துள்ள தியாகராஜரை தரிசித்து வந்துள்ள நிலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆழித்தேரை இழுக்க தயாராகி உள்ளனர்.

ஆழித்தேர்   ஆருரா, தியாகேசா முழக்கத்திற்கு நடுவில் அசைந்தாடி வருவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

தேர் குறித்த மேலதிக தகவல்கள்:

ஆழித் தேர் நான்கு நிலைகளையும், 

பூதப்பார், 
சிறுஉறுதலம், 
பெரியஉறுதலம், 
நடகாசனம், 
விமாசனம், 
தேவாசனம், 
சிம்மாசனம் பீடம் என 7 அடுக்குகளை கொண்டது.

இந்த தேரின் நான்காவது நிலையில்தான்  தியாகராஜ சுவாமி வீற்றிருப்பார். இந்த பீடம் மட்டுமே31 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டது.

மூங்கில்களை கொண்டு முழுமையாக அலங்கரிக்கப்படும்போது, தேரின் உயரம் 96 அடியாக இருக்கும். ஆழித்தேரின் எடை 300 டன்.

இந்த தேரை அலங்கரிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.  தேரை அலங்கரிக்க அதிக அளவில் மூங்கில் கம்பங்களும், 3,000 மீட்டர் அளவுக்கு தேர் சீலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

தேரின் மேற்புறத்தில் 1 மீட்டர் உயரத்திலான கலசம் பொருத்தப்பட்டிருக்கும்.

காகிதக் கூழில் தயாரிக்கப்பட்ட பிரம்மா தேரோட்டி பொம்மையும், நான்கு வேதங்களை முன்னிறுத்தும் பெரிய குதிரை பொம்மைகளும் என ஏராளமான பொம்மைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

தேரை அலங்கரிக்கும்போது, 500 கிலோ எடையுடைய துணிகள், 50 டன் எடையுடை கயிறுகள், 5 டன் பனமர கட்டைகளை பயன்படுத்தப்படுகிறது.

திருவாரூர் தேரின் முன்புறத்தில் 4 பெரிய வடக் கயிறுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒரு வடக் கயிறு 21 அங்குலம் சுற்றளவும் 425 அடி நீளம் கொண்டதாக இருக்கும்.

ஒவ்வொரு சக்கரமும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது.

ஆழித்தேர் ஓடுவதை காண்பதை காட்டிலும், தியாகராஜ கோயிலின் நான்கு வீதிகளிலும் திரும்புவதை காண்பதற்கே, அதிக கூட்டம் கூடும்.

ஏனெனில், அவ்வளவு பிரம்மாண்டமான அந்த தேரின் சக்கரங்களை இருப்பு பிளேட்டுகளின் மீது மசையை கொட்டி, இழுத்து திருப்புகின்றனர்.

பண்டைய காலங்களில்  இந்த பிரம்மாண்ட தேரை இழுப்பதற்கு 12,000 பேர் தேவைப்பட்டனர். அதன்பின், ஆள் பற்றாக்குறையால், மக்கள் வடம் பிடித்து இழுக்கும்போது, பின்புறத்தில் யானைகளை வைத்து முட்டித் தள்ளி தேரை நகர்த்தியுள்ளனர்.

தற்போது மக்கள் வடம் பிடித்து இழுப்பதுடன், பின்புறத்தில் 4 புல்டோசர் எந்திரங்கள் மூலமாக சக்கரங்கள் உந்தித் தள்ளப்படுகிறது.

முன்பு டிராக்டர்களில் ஏராளமான முட்டுக் கட்டைகளை கொண்டு வந்து, தேர் சக்கரங்களில் போட்டு தேரை நிறுத்துவர்.

இதில், சில சமயங்களில் முட்டுக் கட்டை போடுபவர் விபத்தில் சிக்கும் ஆபத்து இருந்ததால், திருச்சியிலுள்ள பாரத மிகு மின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இரும்பு அச்சு மற்றும் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டு அதன்மூலமே தேர்தல் நிறுத்தப்படுகிறது.

ஆசியாவிலேயே உயரமான தேர் என்ற பெருமை உண்டு.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, April 4, 2025

உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில்

"#மண்_முந்தியோ #மங்கை_முந்தியோ" 
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 
உலகப் புகழ்பெற்ற 
"உலகின் முதல் சிவாலயம்" என்று அழைக்கப்படும் தலமான,
"ஆதிசிதம்பரம்" என்று அழைக்கப்படும் இடமான, 
தேவார வைப்புத் தலமாகவும்,
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற பாண்டி நாட்டுத் தலங்களில் ஒன்றான,
திருவாசகம் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலமாகவும்,
சிவபெருமானின் மாணிக்கவாசகருக்கு குரு உபதேசம் செய்து காட்சி கொடுத்த தலமான , 
பார்த்தி தேவிக்கு ஈசன் வேதங்களை உபதேசித்த இடமான,
புகழ்பெற்ற 
"மரகத நடராஜர்" உள்ள தலமான , 
இராவணன் மனைவியான மண்டோதரி இங்குள்ள ஈசனை வழிபட்ட இராமாயண காலத்திற்கும் முந்தைய கோயிலான,
*இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற            #திருஉத்தரகோசமங்கை (#உத்திரகோசமங்கை)
#மங்களநாதசுவாமி (மங்களேஸ்வரர்)
#மங்களநாயகி அம்மன் (மங்களேஸ்வரி)
#மரகத_நடராஜர் திருக்கோயில் 
#மகா_கும்பாபிஷேகம் பெருவிழா
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் அமைந்துள்ளது மங்களநாதஸ்வாமி திருக்கோவில். இந்த கோவிலானது உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என்று சொல்லப்படுகிறது.

உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்றால் பார்வதி தேவியை குறிக்கும். சிவன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் ரகசியத்தையும், அதன் பொருளையும் பார்வதி தேவியிடம் கூறியது இந்த இடத்தில்தான் என்பதால் இந்த இடத்திற்கு உத்திரகோசமங்கை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் ஒரு இலந்தை மரம் உள்ளது. இந்த மரம் 3000 ஆண்டு பழமையானது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த மரத்தடியிலேதான் சிவன் சுயம்பு லிங்கமாக தோன்றினார்.

இந்த கோவிலில் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய 3 கிரகங்கள் மட்டும்தான் உள்ளன. எனவே நவக்கிரக வழிபாடு அறியப்படாத காலத்திற்கு முன்பே தோன்றிய கோவில் இது என்று அறியப்படுகிறது. இந்த கோவிலின் பழமையை குறிக்கும் விதமாக "மண் தோன்றியதற்கு முன்பே மங்கை தோன்றியது" என்ற பழமொழி இப்பகுதியில் வழக்கில் இருந்து வருகிறது.

மேலும் இந்த கோவில் 'ராமாயண காலத்திற்கும் முந்தையது' என்றும் சொல்லப்படுகிறது. இந்த கோவிலில்தான் ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடந்துள்ளது. அதற்கு சான்றாக கோவில் கல்வெட்டுகளில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

*இறைவர் திருப்பெயர்:   மங்களேசுவரர், மங்களநாதர், காட்சிகொடுத்தநாயகர், பிரளயாகேசுவரர்.   

*இறைவியார் திருப்பெயர்: மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி.  

தல மரம்:  இலந்தை மரம்  

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்  

*வழிபட்டோர்:

மாணிக்கவாசகப் பெருமான், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன், 

பாண்டிய நாட்டில் உள்ள தலம்.
 மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக "மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும்; சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்துடன், சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் "இலவந்திகைப் பள்ளி" என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.
 உத்தரம் - உபதேசம்; கோசம் - ரகசியம்; மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.
 மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.
 இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.
 இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.
 சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, இங்கிருந்த அடியார் சிவயோகிகள் முதலிய பல்லாயிரவர்க்கும் ஞானோபதேசம் செய்து முத்தி நல்கி, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
  திருவுத்தரகோசமங்கை ஶ்ரீமங்களநாயகி சமேத ஶ்ரீமங்களநாத சுவாமி (சைத் ரோத்ஸவ) திருக்கல்யாண வரலாறு 
 இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இரு கோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு - ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது இத்தலம்.
 இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது. இக்கோயில் எழுந்ததற்கான வரலாறு வருமாறு : - ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து "மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக! எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக! இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்" என்று வானொலியாக அருள் செய்தார்.
 மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி (வண்டோதரி) தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுரக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப்போய் அசையாது நின்றாள். அப்போது வௌ¤யே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான். இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சித்தர்அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி 'யார் பெற்றதோ இது' என்று வினவினான். வண்டோதரி, "யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்" என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் - இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால் - குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.
 மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரி (வண்டோதரி)யிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள். இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார். மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்தவருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார். இதனால் பெருமானுக்குக் "காட்சி கொடுத்த நாயகன்" என்ற பெயரும் வழங்கலாயிற்று. ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் - அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது. இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.

“#மண்ணுலகின் முதல் தலமான திருஉத்திரகோசமங்கை!”

சகல கலைகளையும் கற்றுத் தோ்ந்த சனத்குமார மகரிஷி திருக்கயிலாய மலைக்குச் சென்று சிவ தீா்த்தக்கரையில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடுநாயக மாக வீற்றிருக்கும் நந்திதேவரை வணங்கி தனது உள்ளக்கிடக்கையை தீா்த்து வைக்க வேண்டுமென அவரது திருவடிகளில் பணிந்து அவரிடம் கீழ்க்கண்ட தனது சந்தேகங்களுக்கு விடை கூறியருள வேண்டும் என்றாா்.

“உலக உயிா்களுக்கு அருள் புரிவதற்காக வாக்காலும் மனத்தாலும் எளிதில் அறியமுடியாத பரம்பொருளான பரமேஸ்வரன் அருள்பாலிக்கும் திருத்தலங்களான மேரு, மந்தரம், கயிலாயம், காளத்தி, காசி, காஞ்சி போன்ற திருத்தலங்களின் மேன்மையை ஏற்கெனவே தேவரீா் எமக்கு திருவாய் மலா்ந்து அருளிச் செய்தீா்; அத்தலங்களிலே மாதவத்தால் உயா்ந்த மகரிஷிகள் எத்தலத்திலிருந்து இந்த அருந்தவத்தை மேற்கொண்டனா்?”

“எந்தத் தலத்திலே வேத ஆகமங்களின் மேன்மையையும், பஞ்சாட்சர மந்திரத்தின் உள்பொருளையும், பிரணவ மந்திரத்தின் பெருமையையும் ஈசனே உபதேசித்தாா்?”

“எத்தலத்தில் வாழ்கின்ற மாந்தா் களுக்கு சா்வேஸ்வரனே நேரில் பிரசன்னமாகி இன்னருள் புரிந்தாா்?”

“எல்லாத் தீா்த்தங்களிலும் மேலான தீா்த்தங்களைத் தன்னகத்தே கொண்டது எத்தலம்?”

“எல்லா மூா்த்திகளிலும் சிறந்த மூா்த்தியாக ஈசன் பல திருவிளை யாடல்களை நிகழ்த்தியது எந்தத் தலம்?” என்று கேள்விக் கணைகளைத் தொடுத்து, தேவரீா் மேற்கண்ட விபரங்களை அடியேனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல உரைத்தருள வேண்டும் என்றாா் சனத்குமாரா்.

முப்பொழுதும் சிவ சிந்தனையில் திளைத்திருக்கும் கயிலாயத்தின் காவலரான “நந்திதேவா்” சனத்குமா ரரின் கேள்விகளை எதிா்கொண்ட க்ஷணத்திலேயே மகிழ்ச்சிப் பெருக் குடன் சூதமா முனிவா், சவுனக முனிவா் மற்றும் சனகாதி முனிவா்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் பதிலளிக்கத் தொடங்கினாா்.

சிவபக்தியில் சிறந்த தவ முனிவா்களே! தாங்கள் விரும்பிக் கேட்ட அனைத்து சிறப்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற உன்னதமான ஒரு திருத்தலம் “மண்ணில் முந்திய மங்கை” என்று போற்றப்படும் “உத்தரகோச மங்கை” திருத்தலமே ஆகும். “மங்களநாதா்” என்ற திருநாமம் கொண்டு ஞானத்தின் வடிவாக எழுந்தருளியிருக்கும் இத்தல மூா்த்திக்கு நிகரான மூா்த்தி இப்பூவுலகில் வேறு எங்கும் இல்லை. அதேபோன்று இந்த தலத்தின் புண்ணிய தீா்த்தமான “அக்னி தீா்த்தத்திற்கு” ஒப்பான தீா்த்தமும் வேறு எங்கும் கிடையாது என்று நந்திதேவா் திருவாய் மலா்ந்தாா்.

“உத்தரகோசமங்கை” என்று ஒருவா் தம் செவிகளில் கேட்டாலே உடனடியாக உயா்ந்த நோக்கங்களைப் பெறுவா். “உத்தரகோசமங்கை” என்று உச்சரித்தவா் ஆன்ம சுத்தி அடைவா். அகத்தூய்மை மற் றும் புறத்தூய்மையுடன் இத்தலத்தை தியானிப்பவா்கள் தா்ம நெறிகளில் உயா்வதோடு அஷ்டாங்க யோக பலன்களை அடைவா். இப்புண்ணிய பூமியில் உள்ள புனிதத் திருத்தலங்க ளெல்லாம் நமது வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் நமக்கு நற்கதி அளிக்கும். ஆனால் உத்தரகோசமங்கை திருத்தலம் இம்மையில் சுகத்தையும் மறுமையில் முக்தியையும் அளிக்க வல்லது. அதனால் இத்தலத்திற்கு ஒப்பானது இத்தலமேயன்றி பிற தலங்களை ஈடாகச் சொல்ல இயலாது. இவ்வளவு மேன்மைகள் நிறைந்த இத்தலத்தை மறந்து வேறு இடம் தேடிப் போவது வீட்டில் இருக்கும் செல்வத்தை அறியாது வேறு பொருளைத் தேடி அலைவது போன்றதாகும்.

ஒருவா் செய்த மகா பாதகங்களும் இத்தலத்தின் எல்லையில் அடி வைத்ததும் அனலிடைப்பட்ட தூசு போல அழிந்து போகும்.

நந்தி தேவா் இவ்வாறு உரைக்க, சூதமா முனிவா் விளக்கம் தர மகிழ்ந்தனா் மகரிஷிகள். நந்தி தேவரின் திருவடிகளில் பணிந்து விடைபெற்ற மகரிஷிகள் இத்தகைய அரிய தலத்தை தரிசிக்க “உத்தரகோசமங்கை” நோக்கிப் புறப்பட்டனா்.

#உத்தரகோசமங்கை!

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த உத்தரகோசமங்கை திருத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் நகரிலிருந்து சுமாா் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ஈசன் மங்கைக்கு (அன்னை பாா்வதி தேவிக்கு) வேத ஆகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்ததால் இத்தலத்திற்கு உத்தரகோசமங்கை என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. “உத்தரம்” என்றால் உபதேசம். “கோசம்” என்பது இரகசியம். “மங்கை” என்பது இத்தலத்தில் “மங்களேசுவரி” என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் அன்னை பாா்வதிதேவியாகும். இதுவே “உத்தரகோசமங்கை” என்பதன் பொருளாகும்.

“மண் முந்தியோ மங்கை முந்தியோ” என்னும் பழமொழியால் இத்தலத்தின் தொன்மையை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. கயிலைக்கு நிகராக வணங்கப்படும் இத்தலம் “தென் திருக்கயிலாயம்” எனவும் பூஜிக்கப் படுகின்றது.

மங்களபுரி, பிரம்மபுரம், சாத்வீக த்தானம், வியாக்ரபுரம், ஆதிசிதம்பரம், வைதிரிகாரணியம், பாா்ப்பதிபுரி, சித்தகேந்திரம், தக்ஷிணகாசி, பிரதி கோசபுரம், சதுா்வேதபுரி மற்றும் கல்யாணபுரி என்னும் திருநாமங்களும் உத்தரகோசமங்கைக்கு வழங்கப்படுகின்றன.

“பாண்டி நாடே பழம்பதி”, “உத்தர கோசமங்கையே ஊா்”,. எல்லாம் வல்ல சா்வேஸ்வரன் தனக்குரிய நாடாகவும், ஊராகவும் விரும்பி ஏற்றுக் கொண்ட இடம் இத்தலம் என்பது “ஆளுடை அடிகள்” மாணிக்கவாசகப் பெருமானின் அருள்வாக்காகும். உத்தரகோச மங்கையில் அருளும் “மங்களநாதா்” இத்தலத்தில் தமக்கு பல வித்தக வடிவம் காட்டியதாகத் தொிவிக்கின்றாா் மணிவாசகா்!

*அக்னி தீா்த்தத்தில் தோன்றிய அக்னிப் பிழம்பு!

நந்திதேவா் மற்றும் சூதமாமுனி வா் இத்தலத்தின் மேன்மையை எடுத்துக் கூறியதும் ஆயிரம் முனிவா்கள் அருந்தவம் செய்ய உத்தரகோசமங்கை திருத்தலம் வந்தனா்.

அவா்களது தவத்தில் மகிழ்ந்த ஈசன் அவா்கள் முன் தோன்றி, “தவ முனிவா்களே! உங்கள் தவத்தை மெச்சினோம். இயற்கை எழில் சூழ் இலங்காபுரியில் மங்கை நல்லாள், கற்புக்கரசி, மாதா்குல மாணிக்கம், இராவணின் மனைவி மண்டோதரி என்னைக் குறித்து தவம் இயற்றுகிறாள். நான் அவளுக்கு அருள்பாலிக்கச் செல்கிறேன். அதுவரை இந்த “வேத ஆகம நூலை” பாதுகாத்து வாருங்கள். இலங்கை வேந்தன் இராவணன் எப்போது என் திருமேனியைத் தீண்டுகின்றானோ அக்கணமே இங்குள்ள அக்னி தீா்த்தத்தில் அக்னிப் பிழம்பு ஒன்று தோன்றும். என்னையே அந்த அக்னிப் பிழம்பாக எண்ணி வழிபடுங்கள்” என்று திருவாய் மலா்ந்தாா்.

அருந்தவமியற்றும் மண்டோதரியின் முன் குழந்தை வடிவில் அழகுப் பதுமையாகத் தோன்றிய ஈசனின் திருக்காட்சியைக் கண்டதும் தன் நிலை மறந்தாள் மண்டோதரி. அப்போது அங்கு வந்த இலங்கை மன்னன் இராவணன் அன்பு மேலிட அக்குழந்தையின் திருமேனியைத் தீண்டினான்.

அந்த க்ஷணத்திலேயே உத்தர கோசமங்கை அக்னித் தீா்த்தத்தில் ஒரு ஒளிப்பிழம்பு ஜோதி ஸ்வரூப மாக பளிச்சிட்டது. அதைக் கண்ட முனிவா்கள் ஓடி வந்து ஜோதியைத் தரிசிக்க அவா்கள் நீரில் மூழ்கி மறைந்து முக்தி பெற்று கயிலாயத் திற்குச் செல்லும் பேறு பெற்றனா். ஆனால் ஆயிரம் முனிவா்களில் ஒருவா் மட்டும் நீரில் மூழ்காமல் ஈசன் அளித்துச் சென்ற “வேத ஆகமத் திருமுறையைக்” கைவிடாது காத்து அக்னி தீா்த்தக்கரையில் அமா்ந்தாா்.

அக்னிப் பிழம்பில் கலந்த இதர முனிவா்களுக்கு மங்களநாதா் தன் தேவி மங்களநாயகியுடன் திருக்காட்சி தந்து அவா்கள் அனைவரும் இத்தலத்தில் லிங்கத் திருமேனியுடன் அருள்பாலிக்க ஆசீா்வதித்து அவா்களுக்கு மத்தியில் தாமும் லிங்கத் திருமேனியராக எழுந்தருளினாா்.

அக்னித் தீா்த்தக் கரையில், தாம் அளித்த வேத ஆகம நூல்களை தம் உயிரினும் மேலாகப் பாதுகாத்த முனிவரின் முன் தோன்றிய ஈசன், “முனிவரே! யாம் அளித்துச் சென்ற வேத ஆகம நூல்களைப் பாதுகாத்து வந்ததால் நீவிா் இப் பாண்டி நாட்டுப் பழம்பதி ஒன்றில் மறையவா் குலத்தில் அவதரித்து எம்மால் தடுத்தாட்கொள்ளப் பட்டு “மாணிக்கவாசகா்” என்ற திருநாமத்துடன் சைவமும் தமிழும் தழைத்தோங்க தொண்டு செய்து வருவீராக”, என்று திருவாய் மலா்ந்தாா்.

இப்புனிதமான நிகழ்வினைப் பறைசாற்றும் விதமாக திருக்கோயிலின் அக்னி தீா்த்தக் கரையில் மாணிக்கவாசகப் பெருமானுக்குத் தனியாக ஒரு சந்நிதி இருப்பதை இன்றும் காணலாம். மாணிக்கவாச கப்பெருமான் அருளிய திருவாசகத்தில் உத்தரகோசமங்கை தலம் பற்றி “நீத்தல் விண்ணப்பம்” என்ற பிரபஞ்ச வைராக்கியத்தில் ஐம்பது பதிகங்கள் பாடி ஈசனை வழிபட்டுள்ளாா். திருவாசகத்தில் இத்தலத்தின் பெருமைகளை பல இடங்களில் போற்றியுள்ளாா் மாணிக்கவாசகா்.

*நான்முகனுக்கு அருளியது!

இந்திரனேயாலும் பிரம்மதேவனே ஆனாலும் அவா்களுக்குத் தோற்ற ஒடுக்கம் உள்ளதால் இன்ப, துன்ப நிலைகள் இவா்களுக்கும் ஏற்படுகின்றன. ஒரு சமயம் உலக உயிா்களைப் படைக்கும் நான்முகனாகிய பிரம்மதேவனுக்கு மனம் கலங்கிய நிலை ஏற்பட்டது. உலக உயிா்களைப் படைத்து அவ்வுயிா்களின்பால் கருணை ததும்ப வேண்டிய பிரம்மனின் உள்ளத்தில் “கோபத்தீ” என்ற “கனல்” மூண்டது. அக மகிழ்ச்சியையும் முக மலா்ச்சியையும் அழிக்க வல்ல “கோபம்” என்ற இராக்ஷச குணத்தைக் கண்டு அஞ்சினாா் நான்முகன்.

தனக்கு ஏற்பட்ட இந்நிலை மாற சிவபெருமானைக் குறித்து தவமியற்றுவதே சிறந்த வழி என்று முடிவு செய்தாா் நான்முகன். இடமும் காலமும் கருதி செய்யும் சீலா்களின் செய்தவங்கள் சீா்படும் என்பதால் தவத்திற்குரிய தெய்வத்தலம் தேடி அலைந்த நான்முகன் மூா்த்தி, தலம், தீா்த்தம் இவற்றால் உயா்ந்த மங்கைப்பதிக்கு வந்தாா்.

இரவும், பகலும் ஈசனின் அடி நீங்காது ஏங்கித் தவம் புரியும் பிரம் மதேவரின் பக்தியால் திருவுள்ளம் கனிந்தாா் ஆதியும் அந்தமுமான மூலப்பொருள். பாதாளத்திலிருந்து வெளிப்பட்டலிங்கத் திருமேனியின் மீது கோடி சூரியப் பிரகாசனாக நான்முகனுக்குத் திருக்காட்சி தந்த ஈசன் அவரது இன்னல்கள் தீர திருவருள் புரிந்தாா். உடனே பிரம்மனின் கோபம் என்ற இராக்ஷச குணம் மறைந்து சாத்வீக குணம் ஓங்கியது. பிரம்மனுக்கு அருளிய இத்தலம் அன்று முதல் “பிரம்மபுரம்” என்றும் வணங்கப்படுகின்றது. பிரம்மனின் இராக்ஷச குணம் மறைந்து அவரது மனதில் சாத்வீகம் நிறைந்ததால் இத்தலம் “சாத்வீகத் தலம்” என்றும் மகரிஷிகளால் வணங்கப்படுகின்றது.

*வேதவியாசரான வியாசா்!

நான்மறைகளையும் கற்றுணா்ந்து அவற்றின் பொருள் உணா்ந்தவா் களில் முதன்மையாக இருக்க வேண்டும் என்று வியாச முனிவருக்கு ஆவல் ஏற்பட்டது. உடல் துன்பங்களையும் மன மாசுகளையும் களைந்து உள்ளத்தை தம் இலக்கான உமாதேவனை நோக்கிச் செலுத்தி செய்யும் நற்றவத்தினால், அகத்தில் அருளூற்று உருவாகி நினைத்தது நடக்கும் என முடிவு செய்தாா் வியாசா். பிரம்மனுக்கு அருள் புரிந்த உத்திரகோசமங்கையின் பெருமைகளை அறிந்து இதுவே யாம் எண்ணியவற்றை ஈடேற்றும் தலம் என முடிவு செய்து இத்தலம் வந்து பல நூறு ஆண்டுகள் ஆழ்ந்த தவத்தில் அமா்ந்தாா் வியாசா்.

வேண்டத்தக்கது அறிந்தவரும் வேண்ட முழுதும் தரும் மெய்ப்பொருளான ஈசன் வியாசரின் முன் தோன்றி, “முனிவரே! உம் கடும் தவத்தில் யாம் உவந்தோம். உமது எண்ணப்படி நான்மறைகளுக்கும் பொருள் விளங்க வைக்கும் பேராற்றலை உமக்கு நல்கினோம்”, என்று அருளிச்செய்தாா்.

ஞானத்தைப் பெற்ற வியாசா் அளவற்ற மகிழ்ச்சியடைந்து இத் தலத்திலுள்ள இலந்தை மரத்தின் அடியில் அமா்ந்து நான்கு வேதங்க ளையும் படித்து அதில் கரை கண்டார். அன்று முதல் வியாசா், வேத வியாசரானாா். இத்தலமும் “வேதகாரண்யம்” என்ற திருநாமத்துடன் வழங்கப்பட்டது.

*ஶ்ரீமங்களநாதா்!

திருஆலவாய், திருச்சுழி, திருப்பூ வனம், திருவாடானை முதலான பதினான்கு பாண்டிய நாட்டுத்தலங்கள் தோன்றும் முன்னரே இலந்தை மரத்தின் அடியில் சுயம்புவாய் தோன்றிய மூா்த்தியே மங்கைப் பெருமானான “மங்களநாதா்.” இப்பூவுலகில் முதலில் தோன்றிய மூலப்பொருளாக வணங்கப்படுகிறாா் இத்தல ஈசன்.தருக்களிலே கற்பகத்தருவும், தானங்களிலே அன்னதானமும், விரதங்களிலே சோமவார விரதமும், பசுக்களிலே காமதேனுவும் சிறந்தது போல சிவலிங்க மூா்த்தங்களுள் மண்ணுலகில் முதலில் தோன்றிய மகாதேவரான இம் “மங்களநாதரே” சிறந்தவா்.

இந்த ஈசனுக்கு மங்களநாதா் என்ற திருநாமத்துடன் பிரளயாகேஸ்வரா், துரிதாபகன், காட்சி கொடுத்த நாயகன், கல்யாண சுந்தரன் என்ற திருநாமங்களும் வழங்கப்படுகின்றன.

செங்கதிரோனான சூரியனும் திங்களும் இந்த மங்களநாதப் பெரு மானை பகல் மற்றும் இரவு நேரங்களில் தங்கள் ஒளிக்கற்றைகளால் தொழுது வணங்குகின்றனா். இத்தலத்தில் பூத்த வாசனை மிக்க மலா்களும் ஈசனின் திருமுடியைச் சென்று சேரும் நாளுக்காக ஏங்கிக் கிடக்கின்றன. அலை வீசும் கடலின் ஒலி மங்களநாதரை வாழ்த்துவது போல் ஆா்ப்பரிக்கிறது. இதனால், மனிதப் பிறவி எடுத்த அனைவரும் மங்கைத்தலைவன் மங்களநாதரைச் சென்று வணங்கும் திருநாளை எதிா்பாா்த்து சித்த சுத்தியுடன் அவரது திருநாமத்தை தியானிக்க வேண்டும்.

ஆதியும் அந்தமுமின்றி அனாதியாய் அகண்ட பரிபூரணனாக ஆன்மிக அன்பா்களுக்கு முக்திப் பேறைத் தரும் பரமேஸ்வரன், தன்னை அறிவால் உணா்ந்து மனதால் நினைத்து தன்னிரு பாத மலா்களில் பணிபவா்களுக்கு இம்மை, மறுமை மற்றும் வீடுபேறு ஆகிய மூன்று அருளும் வழங்க மங்கைத் தலத்திலே சிவலிங்கத்திருமேனியில் உவந்து எழுந்தருளி நித்யவாசம் செய்து நிலைத்திருக்கிறாா் என்பது இத்தலத்தின் வரலாறு உணா்த்தும் உண்மையாகும்.

ஈசன் அருள்பாலிக்கும் தலங்களில் இத்தலத்தில் மட்டுமே ஈசனுக்குத் தாழம்பூ அணிவிக்கப்படுவது அரிய தகவலாகும். ஈசனின் முடியைக் கண்டதாகப் தாழம்பூ சாட்சியுடன் பொய்யுரைத்த பிரம்மதேவன் இத்தலத்தில் வணங்கி இன்னருள் பெற்றதால் இங்கு மட்டும் ஈசனுக்குத் தாழம்பூ சாற்றப்படுகின்றது.

நளச்சக்ரவா்த்தி மங்களநாதருக்கு ஒரு கோடி பொன் மலா்களால் “சொா்ண புஷ்ப அா்ச்சனை” செய்து வழிபட்டுள்ளாா். இதனால் நளனுடைய கலி அவரை விட்டு நீங்கியுள்ளது.

*மரகத நடராஜா்!

உத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் கல்லிலான அரிய மரகத நடராஜா் சிலை உள்ளது. இச்சிலை ஆறு அடி உயரம் கொண்டதாகும். ஆதி சிதம்பரம் என்று வணங்கப்படும் இத்தலத்தில் மாா்கழி மாதத் திருவாதிரை நாளில் மட்டும் இந்த நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்நன்னாளில் இத் தலத்திற்கு வருகை தந்து இந்த மரகத நடராஜப் பெருமானை தரிசித்து “மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!” என்று பக்திப் பெருக்கால் நெஞ்சம் நெகிழ்கின்றனா் சிவனருட்செல்வா்கள்!

மாா்கழி திருவாதிரை நாள் தவிர இதர நாட்களில் இம்மரகத நடராஜர் சந்தனக் காப்புடன் திருக்காட்சி தருகிறாா். மாா்கழி திருவாதிரை நாளில் மரகத நடராஜரின் திருமேனியிலிருந்து களையப்பட்ட சந்தனக் காப்பினைப் பெற மக்கள் கூட்டம் அலைமோதும். “இரத்தின சபாபதி”, “ஆதி சிதம்பரேசன்” என்றும் வணங்கப்படுகின்றாா் மரகத நடராஜா்.

*மங்களேஸ்வரி!

அண்டங்களையும் அண்ட சராசரங்க ளையும் அன்னையாகக் காத்தருளும் அம்பிகை கோசப் பொருள் யாதென ஈசனிடம் வேண்ட எவ்வுயிா்க்கும் இறைவனாகிய மங்கைநாயகன் அருள்கூா்ந்து அம்பிகைக்கு உபதேசம் செய்தாா்.

இவ்வாறு, பிரணவ இரகசியப் பொருளை, ஈசனாா் இத்தலத்தில் அருளும் “மங்களேஸ்வரி” அம்பிகைக்கு உபதேசித்த காரணத்தினால் இத்தலத்திற்கு உத்தரகோசமங்கை
என்ற திருநாமம் ஏற்பட்டது.

மங்களதாயினி, புஷ்பதனி, சுந்தரநாயகி, பூண்முலையாள், கல்யாணசுந்தரி, திரைசோ்மடந்தை என்ற திருநாமங்களுடனும் இந்த அம்பிகை வணங்கப்படுகின்றாள்.

அம்பிகை பாா்வதி தன் திருக்க ரங்களால் நட்ட இலந்தை மரமே இத்தலத்தின் விருட்சமாக பல யுகங்களைக் கடந்து திகழ்கின்றது.

*அக்னி தீா்த்த மகிமை!

கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி முதலான புண்ணிய நதிகள் தோன்றும் முன்னரே தோன்றியது இத்தலத்தின் “அக்னி தீா்த்தமாகும்.”
சுட்டெரிக்கும் தீயை நம்மை அறியாமல் நாம் தொட்டு விட்டாலும் அந்தத் தீ நம்மைச் சுடுவது போல நம்மை அறியாமல் அக்னி தீா்த்த நீரைத் தொட்டாலும் அது நம் பாவ வினைகளை அறவே நீக்கும்.

இத்தீா்த்தத்தில் நீராடி, பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்து, நீத்தாா் கடன்களை நிறைவேற்றி தானங்கள் செய்து மங்களநாதரையும் மங்களநாயகியையும் அக்னி தீா்த்த த்தால் மஞ்சனமாட்டி மலரிட்டு வணங்க இப்பூவுலகில் உள்ள தீா்த்தங்களை யெல்லாம் கொண்டு வந்து அபிஷேகம் செய்த பலன் கிடைக்கும்.

அக்னி தீா்த்தத்தை தீண்டுவதும் காண்பதும் உட்கொள்வதும் ஒருவ ருக்குப் பல உயா்வுகளை அளிக்கும். பல பிறவிகளில் புண்ணியம் செய்து சோ்த்து வைத்த நற்பலன்களால் மட்டுமே அன்பா்களுக்கு இப்புனித தீா்த்தமான “அக்னி தீா்த்தத்தில்” நீராடும் பாக்கியம் கிடைக்கும்.

பிரம்ம தீா்த்தம்,இந்திர தடாகம், சாா்வதி, கெளமார தீா்த்தம், சீதள தீா்த்தம், தேவி தீா்த்தம், அரித்துவா கூபம் என்பன அக்னி தீா்த்தத்தின் இதர திருநாமங்களாகும்.

*அருணகிரிநாதரின் திருப்புகழ்!

இத்தலத்தில் அருளும் முருகப் பெருமான் மீது முத்தான செந்தமிழில் திருப்புகழ் பாடி நெகிழ்ந்துள்ளாா் அருணகிரிநாதப் பெருமான்.

“உட்பொருள் ஞானக் குறமகளும்
பற் சித்திரை நீடப் பரிமயில்
முன்பெற்றுத்தர கோசத் தலமுறை கந்தப்
பெருமானே!”

என்று இத்தல முருகனைப் புகழ்ந் துள்ளாா்.

உயா்வு தரும் உத்தரகோசமங்கை!

இப்பூவுலகில் முதலில் தோன்றிய தலமாகவும் ஈசன் கோயில் கொண்டுள்ள தலங்களின் தலைமையிடமாகவும் போற்றப்படும் “சிவராஜதானி” திருஉத்தரகோசமங்கையாகும். இத்தலத்தில் வணங்க இளமை, அழகு, நன்மணம், நல்மக்கட்பேறு, பிணிநீக்கம், ஆயுள்விருத்தி, தொழில் மேன்மை, மன அமைதி, செல்வப்பெருக்கு மற்றும் அறிவாற்றல் என அனைத்துப் பலன்களும் ஒருங்கே அளிக்கும் உன்னதமான திருத்தலமாகத் திகழ்கிறது “உத்தரகோசமங்கை”.

  *சிறப்புகள்:

அக்கினி தீர்த்தம் கோயிலுள் உள்ளது. இது தவிர, கோயிலுக்கு வெளியில் பிரம்ம தீர்த்தமும்; சற்றுத் தள்ளி 'மொய்யார்தடம் பொய்கை'த் தீர்த்தமும், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் முதலியனவும் உள்ளன. கோயிலுள் மங்கள தீர்த்தமும் உள்ளது.
 திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலம் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.
 கீர்த்தித் திருவகவலில் "உத்தரகோச மங்கையுள் இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும்" என்று வருந்தொடர், இத்தல புராணத்தில் 8ஆம் சருக்கத்தில் சொல்லப்படும் - ஆயிரம் முனிவர்கட்கும் இறைவன் தன் வடிவம் காட்டிக் காட்சி தந்த வரலாற்றைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையொட்டியே இத்தலத்துப் பெருமானுக்கு "காட்சி கொடுத்த நாயகன்" என்ற பெயரும் வழங்குகிறது. இதுதவிர, 'மகேந்திரம்' என்பது உத்தரகோசமங்கையைக் குறிக்கும் என்று கொண்டு, இறைவன் அம்பிகைக்கு உபதேசித்ததையே "மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்" என்ற தொடர் குறிப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
 இங்குள்ள நடராசமூர்த்தி ஆதிசிதம்பரேசர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள சபை இரத்தினசபை எனப்படுகிறது.
 அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றபதி.
 தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்) வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.
 உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடைந்தால், முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார். மற்றத் தூண்களில் பாஸ்கர சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர்.
 பிரகாரச் சுவரில் திருவாசகப் பதிகங்களான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.
 மூலவர் தரிசனம். சதுர ஆவுடையார்.
 சிவபெருமானுக்குத் தாழம்பு ஆகாதது, ஆனால் இங்கு அதற்கும் சாப நிவர்த்தி ஏற்பட்டதால் மங்களேசுவரருக்குத் தாழம்பு சார்த்தப்படுகிறது நினைவில் கொள்ளத் தக்கது.
 நடராசருக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவமாடிக் காட்சித் தரும் ஐதீகம் நடைபெறுகிறது.
 பிராகார அழகு இராமேஸவரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன.
 நடராசப் பெருமானுக்கு ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. இக்கோயில் அகழி அமைப்புடையது. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதி. அக்கினி மத்தியில் நடராசப் பெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது.
 அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.
 இங்குள்ள கூத்தப்பிரான் - நடராசர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் - முழுவதும் மரகதத் திருமேனி. விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே அடியவர்க்குக் காட்சியளிக்கிறார்.
 இப்பெருமான் உலாவருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சந்நிதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியை வௌ¤க் கொணரவும் இயலாது. (உலாவருவதற்கான மூர்த்தம் தனியே உள்ளது.)
 மார்கழித் திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்புத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர். அன்று ஒரு நாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக - அற்புதமாக நடைபெறுகின்றன. வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.
 அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார்.
 நாடொறும் உச்சிக் காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம் காணக் கொடுத்து வைக்க வேண்டும்.
 நடராசரைத் தொழுது முன் மண்டபம் வந்தால், அங்குள்ள சிறிய மேடையில்தான் உச்சிக் காலத்தில் ஸ்படிக, மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதைத் தரிசிக்கும்போதே வலப் பக்கச் சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும், இடப்பால் திரும்பி உமாமகேசுவரரையும் ஒருசேரத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு எண்ணி இன்புறத் தக்கது.
 உமாமகேசுவரர் சந்நிதிக்குச் சென்று தரிசித்துவிட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கிப் பிராகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளமையும், குருந்தமர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம். கல்லில் குருந்தமரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க, எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கிறது.
 நடராசர் கோயிலுக்குப் பக்கத்தில் தனியே சஹஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோயில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக் கீற்றுகள் உள்ளன. சஹஸ்ர எண்ணிக்கையில் - உட்புறத்தில் தலமரத்தின் வேருள்ளது. வியாசரும் காகபுஜண்டரும் இங்குத் தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தலமரமான இலந்தைமரம் உள்ளது.
 இராமநாதபுரம் சமஸ்தானத் தேவஸ்தானத்திற்குரிய திருக்கோயில்; சேதுபதி மகாராஜா குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலராவர்.

அமைவிடம்:

மாநிலம் : 

தமிழ் நாடு 
மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை இருப்புப்பாதை சந்திக் கடவைத் (Railway level crossing) தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 

இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, April 3, 2025

இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியக திருஉத்திரகோச மங்கை...

*உலகின் முதல் சிவாலயம்
04  04  2025 *வெள்ளிக்கிழமை* பங்குனி 
21 ஆம் தேதி *கும்பாபிஷேகம்* . 
பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்திரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப் பொருளை உபதேசித்து அருளினார் என்கின்ற ஞான நூல்கள். ‘உத்திரம்’ என்றால் ரகசியம்; ‘கோசம்’ என்றால் உபதேசித்தல் என்று பொருள். இந்த அற்புதத்தையொட்டியே இந்தத் தலம் 'திருஉத்திரகோச மங்கை' என்று அழைக்கப்படுகிறது.

இதுவே உலகின் முதல் சிவாலயம் என்பார்கள் பெரியோர்கள். மூலவர் சுயம்புத் திருமேனியராக சதுர ஆவுடையாருடன் திகழ்கிறார். இறைவி மங்களாம்பிகை, திருக்கரத்தில் ருத்திராட்சம் ஏந்தியபடி காட்சி அருள்கிறாள்.
மண் தோன்றுவதற்கு முன்பு தோன்றிய மங்கை உத்திரகோசமங்கை என்பர் பெரியோர். ராவணனின் மனைவியான இத்தல இறைவனை வணங்கியதாகச் சொல்கிறது தலபுராணம். சிவபக்தனான ராவணன் - மண்டோதரி திருமணம் இங்குதான் நடைபெற்றது என்றும் சொல்கிறார்கள்.

ஈசனின் திருவிளையாடல்களில் ஒன்றான வலைவீசி மீன் பிடித்த விளையாடல் நடைபெற்ற தலம் இது. மீனவப் பெண்ணாகத் தோன்றிய அம்பிகையை சுவாமி கரம் பிடித்த தலமும் இதுதான்.

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் பிறப்பெடுக்கக் காரணமான தலமும் இதுவே. நவகிரகங்கள் ஆலய வழிபாட்டில் இல்லாத காலத்தில் தோன்றிய கோயில் இது என்பதால் இங்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய 3 கோள்கள் மட்டுமே உள்ளன. இதுவே இந்த ஆலயத்தின் பழைமைக்கு மற்றுமொரு சான்று.

நடராஜர் சந்நிதிக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்க சந்நிதி உள்ளது. ஈசனிடம் வேத ரகசியம் கேட்க வந்த 1,000 முனிவர்களில் 999 பேர் ஈசனிடம் ஐக்கியமாகிவிட, எஞ்சி நின்ற ஒரு முனிவரே மாணிக்கவாசகராக மறுபிறப்பு எடுத்தார் என்கின்றன புராணங்கள். எனவே திருவாசகம் என்னும் வேதம் நமக்குக் கிடைக்கக் காரணமான தலமும் இதுவே.

இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று மரகதலிங்கம் மற்றும் ஸ்படிக லிங்கம். தினமும் மதிய வேளையில் இவ்விரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் நடைபெறும் இதைக் கண்டாலே முக்தி நிச்சயம் என்பார்கள். இங்குள்ள தலவிருட்சமான இலந்தை 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்று சொல்கிரார்கள் விஞ்ஞானிகள்.

தினமும் அதிகாலையில் அம்பாள் சுவாமியை பூஜிப்பதாக ஐதிகம்.அதேபோல், மாணிக்கவாசகர் இறவா நிலை பெற்று ஈசனுக்கு அருகே அமர்ந்து அவருக்கு அன்னம் பாலிப்பதாக நம்பப்படுகிறது. திருப்பெருந்துறைக்கு அடுத்து மாணிக்கவாசகருக்கு ஈசன் தரிசனம் தந்த இடமும் இதுவே.

ஒரே நாளில் மூன்று வேளை மங்களநாதரை தரிசித்தால் வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதேபோன்று காசியிலும் தீராத பித்ரு சாபமும் இங்கு தீரும் என்கிறார்கள். இங்கு நடைபெறும் பள்ளியறை பூஜை மிகவும் விசேஷமானது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும்; பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.

பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஐந்து கோபுரங்களுடன் அமைந்திருக்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்தம், மங்கள தீர்த்தம் ஆகியவை ஏழு ஜன்ம பாவம் தீர்க்கும் சக்தி கொண்டவை என்கிறார்கள். அதேபோன்று கோயிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும் அதற்கு அருகே மொய்யார்தடம் பொய்கைத் தீர்த்தம், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் ஆகியவை உள்ளன.

இப்படிப்பட்ட அற்புதமான தலத்தில் வரும் *ஏப்ரல் 4 -ம் தேதி காலை 9 முதல் 10.20 மணிக்குள் கும்பாபிஷேகம்* நடக்க உள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டித் திருப்பணிகள் முடிவடைந்து கடந்த பிப்ரவரி 16 ம் தேதி யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. 101 குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது . வருகிற 4 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி உத்திரகோசமங்கையில் எங்கு பார்த்தாலும் சிவாசார்யப் பெருமக்களாகக் காணப்படுகிறார்கள். இன்று யாகசாலைக்குரிய புனித நீரை சிவாசார்யர்கள் எடுத்துவந்து சேர்த்தனர். இப்படி கும்பாபிஷேகப் பணிகள் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் சிவபக்தர்களின் மனம் மகிழச் செய்யும் செய்தியைக் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

யாகசாலை பூஜைகள் தொடங்கும் ஏப்ரல் 1 முதல் கும்பாபிஷேக நாள்வரை மரகத நடராஜரை சந்தனக் காப்பு இல்லாமல் தரிசிக்கலாம் என்பதுதான் அது.

மரகத நடராஜர் என்ன விசேஷம்.....?

இங்குள்ள நடராஜர் திருமேனி *பச்சை* *மரகதத்தால்* ஆனது. விலை மதிக்க முடியாத மாபெரும் பொக்கிஷமாகத் திகழும் ஐந்தரை அடி உயரம் கொண்ட இந்த நடராஜர் திருமேனி உலக அதிசயம் என்றே சொல்லலாம். இந்தத் திருமேனியில் எப்போதும் சந்தனக் காப்பு பூசியிருப்பார்கள். மார்கழித் திருவாதிரைக்கு முதல் நாள் மட்டுமே சந்தனம் இல்லாமல் இந்த நடராஜரை தரிசிக்க முடியும். இவரின் திருமேனியில் சாத்தப்படும் *சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது; அனைத்து நோய்களையும் தீர்க்க்க வல்லது* என்கிறார்கள்.

'மத்தளம் முழங்க மரகதம் பொடிபடும்' என்பார்கள். அவ்வளவு நுட்பமானது மரகதக் கல். அதில் நுட்பமாக நடராஜர் திருமேனி அமைந்திருப்பதால் கோயிலில் இசைக்கும் வாத்திய ஓசையால் திருமேனிக்கு பாதிப்பு ஏற்படாதபடி இருக்க சந்தனக் காப்பு பூசப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சந்தனக் காப்பு களையப்பட்டு பச்சைத் திருமேனி தரிசனம் வாய்க்கும்.

கும்பாபிஷேகத்தை ஒட்டி, ஏப்ரல் 1 மாலை 5:00 மணிக்கு சந்தனம் களைதல் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாளும் மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்கலாம். மரகத நடராஜரை தரிசித்தால் வினைகள் தீரும். நவகிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஏற்கெனவே ஜனவரி மாதம் திருவாதிரையில் மரகத நடராஜர் தரிசனம் கிடைத்த நிலையில் மீண்டும் மரகத நடராஜர் தரிசனம் கிடைக்க இருப்பதை எண்ணி சிவபக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் உத்திரகோசமங்கை சென்று கும்பாபிஷேகத்தைத் தரிசித்து மங்களநாதரின் அருளைப் பெறலாம். கூடவே மரகத நடராஜரையும் தரிசித்து சகல வரங்களையும் பெறலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஸ்ரீ ராம நவமி இந்த வருடம் எப்போது?

*ஸ்ரீராமஜயம்*
*நவமி திதிக்கு சிறப்பு சேர்த்த ராமபிரான்*
ஸ்ரீ ராமநவமி 06.04.25 அன்று கொண்டாடப்படுகிறது. 
ராமாயணம் என்பது மிகப்பெரிய காவியம்.
ராமர் பிறந்த திதியே ராம நவமி.
ஸ்ரீ ராம நவமி என்றாலே, ராமனைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. ராமாயணம் என்பது மிகப்பெரிய காவியம். விபண்டகர் என்ற முனிவருக்கு ரிஷ்ய சிங்கர் என்ற புதல்வன் பிறந்தார். தசரத மகாராஜா அவரை அழைத்து வந்து, நாடு செழிக்க யாகம் செய்ய நினைத்தார். ஒரு வசந்த காலத்தில் அஸ்வமேத யாகத்தை ஆரம்பித்தார். அதற்காக வசிஷ்டர் மூலமாக யாகசாலையை நன்றாக கட்டக் கூடிய திறமை வாய்ந்த சிற்பிகளையும், நன்கு வேதம் படித்த யாகம் செய்யக்கூடிய பிராமணர்களையும் அழைத்து வரச் சொன்னார். வசிஷ்டரும் தசரத மன்னன் சொன்ன படியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

இந்த யாகம் நடக்கும் பொழுது அயோத்தியில் இருக்கக்கூடிய நான்கு வர்ணத்தவருக்கும், எவ்விதமான உயர்வு தாழ்வும் இன்றி நல்ல மரியாதை, மதிப்புடனும் விருந்தளிக்குமாறும் தசரதர் கட்டளை இட்டிருந்தார். பல தேசத்து அரசர்களும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுடன் தசரத மகாராஜாவை காண வந்தனர். வசிஷ்டர் தலைமையில் யாகம் நடைபெற்றது. பல பண்டிதர்களும் அந்த நேரத்தில் தர்மங்களை பற்றி விவாதம் செய்தனர்.
பகிர்வுவேதசத்சங்கம்

ஒரு வருடம் பூர்த்தியான பிறகு அஸ்வமேத யாக குதிரை சரயு நதியின் வடக்கு கரையில் அமைந்த யாகசாலைக்கு அருகே வந்து சேர்ந்தது. முதல் நாள் அக்னிஷ்டோமம், இரண்டாம் நாள் உக்த்யம், மூன்றாம் நாள் அதிராத்ரம் என்ற யாகங்கள் கல்ப சூத்திரத்தில் சொல்லியபடி நடைபெற்றது.

அஸ்வமேத யாகம் நிறைவடைந்ததும் ரிஷ்ய சிங்கரை அணுகிய தசரத மன்னன், "நான் வெகு காலமாக புத்திர பாக்கியம் இன்றி தவிக்கிறேன். எங்கள் குலம் தழைக்க, அதற்குரிய யாகத்தை செய்து கொடுங்கள்" என்றார்.

ரிஷ்ய சிங்கர் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட ரகசியமான `இஷ்டி' என்ற யாகத்தை செய்து, பின் முறைப்படி புத்திர காமேஷ்டி யாகத்தை செய்தார். அந்த வேளையில் முப்பத்து முக்கோடி தேவர்களும், மகாவிஷ்ணுவை துதி செய்து `பூலோகத்தில் தர்மம் தழைக்க வேண்டும்' என வேண்டிக்கொண்டனர்.

பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

மகாவிஷ்ணு அவர்களிடம் "நான் பதினோறாயிரம் வருஷம் இந்த பூமியில் பிறந்து நாட்டை ஆளப்போகிறேன்" எனக்கூறி, தன்னை நான்கு பாகமாக மாற்றி புத்திர காமேஷ்டி யாகம் செய்யும் யாகசாலை வந்து சேர்ந்தார். புத்திர காமேஷ்டி யாகம் செய்யும் அக்னியில் இருந்து தேஜஸ்வியான ஒரு பெருத்த உருவம் தோன்றியது. அதன் கையில் தங்க பாத்திரம் ஜொலித்தது. அதில் பால் பாயசம் இருந்தது. அந்த பால் பாயசத்தில் நான்கு பாகமாக மாறிய மகாவிஷ்ணு கலந்தார்.

தேஜஸ்வியான அந்த உருவம் தசரதரை நோக்கி "இந்த பால் பாயசத்தை உனது பிரியமான மனைவிகளுக்கு பிரித்துக் கொடு. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள்" எனக் கூறி மறைந்தது.

தசரத மகாராஜா, அந்த பாயசத்தில் பாதியை கவுசல்யாவிற்கு கொடுத்தார். மீதமுள்ள பாதியில் அரை பங்கை சுமித்திராவுக்கு கொடுத்தார். மேலும் மீதம் இருந்த அரை பங்கில் பாதியை கைகேயிக்கு அளித்தார். அதன்பிறகும் எஞ்சிய பாயசத்தை மீண்டும் சுமித்திராவுக்கு கொடுத்தார்.

பாயசத்தில் பாதியை அருந்திய கவுசல்யாவுக்கு சித்திரை மாதம் வளர்பிறை புனர்பூச நட்சத்திரம் கடக ராசியில் கடக லக்னத்தில் நவமி திதியில் ராமபிரான் பிறந்தார். கைகேயிக்கு பூச நட்சத்திரம் கடக ராசி மீன லக்னத்தில் பரதன் பிறந்தார். இரண்டு முறை பாயசம் அருந்திய சுமித்திராவுக்கு ஆயில்யம் நட்சத்திரம் கடன ராசி கடக லக்னத்தில் லட்சுமணனும், சத்ருக்ணனும் பிறந்தனர்.

பிரம்ம தேவர், ராம பிரானுக்கு உதவுவதற்காக தேவர்களையும், மகரிஷிகளையும், கந்தர்வர்களையும், கருடர்களையும், யட்சர்களையும், நாகர்களையும், கிம்புருஷர்களையும், சித்தர்களையும், வித்யாதரர்களையும், உரகர்களையும், பெரிய உருவங்களுடன் வனத்தில் வசிக்கக்கூடிய வானரர்களாக பிறக்கும்படி செய்தார். இதில் நாம் ராமர் பிறந்த தினத்தை `ராம நவமி' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

ஒரு சமயம் அஷ்டமி திதியும், நவமி திதியும் மன வருத்தம் கொண்டன. 'எல்லா திதிகளும் கொண்டாடப்படுகின்றன. நம்மை மக்கள் யாரும் கொண்டாடவில்லையே' என எண்ணி, வைகுண்டம் சென்று விஷ்ணு பகவானிடம் முறையிட்டன. அதற்கு விஷ்ணு, "நீங்கள் கவலைப்பட வேண்டாம். அஷ்டமி அன்று கிருஷ்ண அவதாரமும், நவமி அன்று ராம அவதாரமும் செய்யப்போகிறேன். அந்த தினங்களில் உலக மக்கள் அனைவரும் உங்களைக் கொண்டாடுவார்கள்" என்று வரம் கொடுத்தார்.

அதன் படியே கிருஷ்ணர் பிறந்த அஷ்டமி திதியை `கோகுலாஷ்டமி' என்றும், ராமர் பிறந்த நவமி திதியை `ராம நவமி' என்றும் சிறப்பித்து வழிபடத் தொடங்கினர். ராம நவமி தினத்திற்கு 9 நாட்கள் முன்பு `கர்ப்போத்ஸவம்' என்று கோவில்களில் கொண்டாடுவார்கள். அப்போது ஆலயங்களில் விசேஷ பூஜைகளும் நடக்கும்.

ராவணன், கரன், தூஷணன், திரிசிரன், மாரீசன், சுபாகு, தாடகை, விரதன், கபந்தன் போன்ற ராட்சசர்களை அழிக்க ராமனாக, விஷ்ணு பகவான் அவதரிக்கப் போவதை அறிந்து கொண்ட முனிவர்கள், ராமர் பிறப்பதற்கு முன்பிருந்தே

கர்ப்போத்ஸவத்தை கொண்டாடியதாகச் சொல்வார்கள். அதேபோல் ராமபிரான் பிறந்ததில் இருந்து வரக்கூடிய ஒன்பது நாட்களை `ஜனோத்ஸவம்' என்று கொண்டாடுவார்கள்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, April 2, 2025

_சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள்..

_சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்களை விவரிக்கத் தொடங்கினார் அகத்தியர்.
எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள்.

பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என நினைத்தாலே அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாபங்களினின்று விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தானாகில் சகலமான போகங்களையும் அடைவான்.

கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவானாகில், அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆயிரம் வருஷம் சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.

சிவலிங்கத்தைச் செய்விப்பவன் சிவலோகத்தில் அறுபதினாயிரம் வருஷம் இருப்பான். அவன் வமிசத்தவரும் சிவலோகத்தை அடையும் பலனைப் பெறுவார்கள்.

சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவன் எட்டுத் தலைமுறைக்கு இறந்த தன் முன்னோர்களைத் தன்னுடன் சிவலோகத்தை அடையச் செய்வான்.

ஒருவனால் செய்ய முடியவில்லையென்றாலும், பிறர் செய்ததைக் கண்டு, நாமும் செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும், அவன் முக்தி அடைவானாம்.

பிரம்மதேவன், யமதர்மனுக்குப் பாசமும் தண்டமும் கொடுத்துப் பாபம் செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அளித்தபோது சிவபக்தர்களை அண்டக் கூடாது என எச்சரித்திருக்கிறார்.

எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், பகவானை மலர்களால் அர்ச்சிப்பவர்கள், சிதிலமாகிக்கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள்,

காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கிக் சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கக் கூடாது என எச்சரித்துள்ளார். அவர்கள் வமிசத்தவர்கள் கூட யமதூதர்களால் நெருங்கப் படாதவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

சிவாலயம் சென்று பகவானைத் தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூஜிப்பவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைவான்.

கிருஷ்ணபக்ஷ சதுர்தசியில் சிவலிங்கத்துக்கு நெய்யினால் அபிஷேகம் செய்தால் செய்த பாபங்கள் விலகும். 
பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் சிவலிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்பவன் சகல பாபங்களினின்றும் விடுபடுவான்.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான எம் ஐயனை துதிப்போம் அவன் அருள் பெறுவோம் .


Tuesday, April 1, 2025

கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட காமரசவல்லி கார்கோடேஸ்வரர்...

காமரசவல்லி கார்கோடேஸ்வரர் கோயில்
*ஒற்றுமை தரும் ஆலயம்*

கடக ராசிக்காரர்கள் வணங்க ஏற்ற தலம் இது. சர்ப்பதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் காமரசவல்லி என்ற ஊரில் உள்ளது கார்கோடேஸ்வரர் கோவில். இந்த ஆலயம் கடக ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாக விளங்குகிறது. ரதி தேவிக்கு சிவபெருமான், மாங்கல்ய பாக்கியம் அருளிய தலம் இதுவாகும். எனவே இங்கு வந்து இறைவன் கார்கோடேஸ்வரரையும், இறைவி காமரசவல்லி தாயாரையும் வேண்டிக்கொண்டால் பிரிந்த தம்பதியர் சேருவார்கள். 
கணவன்–மனைவி இடையே ஒற்றுமை பலப்படும் என்கிறார்கள். இந்த ஊரில் ஒவ்வொரு ஆண்டும் காமன் பண்டிகை நடத்தப்படுகிறது. இந்த விழாவின் போது இரண்டாக வெட்டிய ஆமணக்கு செடியை நட்டு வைப்பார்கள். இருப்பினும் இந்தச் செடி, 8 நாட்களுக்குள் மீண்டும் தழைத்து விடு கிறது.

இங்கு பெரிய விநாயகர், நந்திதேவர், ஈசனுக்குக் கார்க்கோடகன் பூஜை செய்த காட்சியை விளக்கும் சிற்பம், புராணத்தைச் சொல்கிறது. மண்டபத் தூண்கள் சிற்ப நயம் பேசுகின்றன. பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் ஸ்ரீவிநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான், துர்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் போன்ற தெய்வங்கள் அருள் பாலிக்கின்றன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மன் ஆகிய திருமேனிகள் உள்ளன. மடப்பள்ளியும், நடராஜர் மண்டபமும் அமைந்துள்ளது. நாக தோஷம் போக்கும் தலம் என்பதால், சில நாகர் விக்கிரங்களையும் தரிசிக்கலாம்.   

இங்கு கிழக்குப் பார்த்த திருக்கோலத்தில் ஈசனும்,தெற்குப் பார்த்த கோலத்தில் அன்னை பாலாம்பிகாவும் அருள்பாலிக்கின்றனர். நாகங்களின் அரசரான கார்க்கோடகன், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவம் இருந்து, ஈசனை பூஜித்த தலம் காமரசவல்லி, கார்க்ககோடகன் பூஜித்த ஈசனான சவுந்தரேஸ்வரர், பின்னாளில் கார்க்கோடேஸ்வரர் ஆனார், புராணங்கள் ஒரு பக்கம் இந்தக் கதைகளைச் சொன்னாலும், ஆலயத்தில் அமைந்த சுமார் 45 கல்வெட்டுக்களும் காமரசவல்லி ஆலயத்தின் புராதனத்தை நாம் பிரமிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்கின்றன. காமரசவல்லிக்கு திருநல்லூர், கார்க்கோடீஸ்வரம், சதுர்வேதிமங்கலம், ரதிவரபுரம், காமரதிவல்லி என்று பல பெயர்கள் உண்டு. இங்குள்ள கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில், சுந்தர சோழன் என்கிற ராஜகேசரிவர்மனால் (கி.பி 957-974). கி.பி962 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. 

காமன் என்கிற மன்மதன் ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்ற கதை நாம் அனைவரும் அறிந்ததே. தன் கணவன் மன்மதனை மீண்டும் உயிர்பித்துத் தருமாறு ஈசனை நோக்கி தவம் இருந்தாள் அவனது துணைவியான ரதிதேவி. காமனை அழித்து விட்டதால், இனப்பெருக்கம் அப்போது குறைந்து போனதாலும், தன்னை வழிபட்ட ரதிக்கு மாங்கல்ய பிச்சை தருவதற்காகவும் அவள் பார்வைக்கு மட்டும் தெரியுமாறு மன்மதனை உயிர்பித்துத் தந்தார் ஈசன். ரதிக்கு வரம் கொடுத்த ஊர் என்பதால் ரதிவரபுரம் என்றும் காமனின் தேவியான ரதி தவம் இருந்த தலம் என்பதால், காமரதிவல்லி எனவும் அழைக்கப்படலானது. இதுவே பின்னாளில் காமரசவல்லி ஆகி விட்டது.

ரதிதேவியின் செப்புத் திருமேனி ஒன்று இந்த ஆலயத்தில் உள்ளது. தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டி, இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி, மாங்கல்ய பிச்சை கேட்கும் கோலத்தில் காணப்படுகிறது இந்தத் திருமேனி. காமரசவல்லியில் ஒவ்வொரு மாசி மாதமும் பவுர்ணமி தினத்தன்று காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை ஆலயத்தில் நட்டு வைப்பார்கள். இறை பக்திக்கு உட்பட்டும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டும் இந்தக் கிளை எட்டே நாட்களுக்குள் மீண்டும் உயிர் பெற்று வளர்கிறது. ரதிதேவியின் வாழ்க்கை இங்கே துளிர்த்ததுபோல், இங்கே நடப்படுகிறவை மீண்டும் துளிர்க்கும் என்பதற்கு உதாரணம் இது.

குடும்பத்தில் தம்பத்திக்குள் பிரிவினை இருப்பவர்கள், கருத்து வேற்றுமை கொண்டவர்கள், விவாகரத்தைத் தடுக்க நினைப்பவர்கள், தம்பதியரின் அன்பு பெருக வேண்டுவோர் காமரசவல்லிக்கு வந்து வணங்கினால் சிறப்பு. முறையாக இங்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் சென்றால், தம்பதியர்களின் வாழ்வில் புத்தொளி பரவும் என்பது ஐதீகம். 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் காமரசவல்லி ஊர் உள்ளது.

சோழர் காலத்தில் காமரசவல்லி சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்ட இச்சிற்றூர் திருமானூர் வட்டம், அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர்-பழுவூர் சாலையில் 35 கி.மீ பயணித்தால் காமரசவல்லியை அடையாளம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

உலகின் முதல் சிவாலயசிறப்பு மரகதலிங்கம் மற்றும் ஸ்படிக லிங்கம்...

'உத்திரம்' என்றால் ரகசியம்; 'கோசம்' என்றால் உபதேசித்தல் என்று பொருள். இந்த அற்புதத்தையொட்டியே இந்தத் தலம் 'திருஉத்திரகோச மங்கை' என்று அழைக்கப்படுகிறது.
இதுவே உலகின் முதல் சிவாலயம் என்பார்கள் பெரியோர்கள். மூலவர் சுயம்புத் திருமேனியராக சதுர ஆவுடையாருடன் திகழ்கிறார். இறைவி மங்களாம்பிகை, திருக்கரத்தில் ருத்திராட்சம் ஏந்தியபடி காட்சி அருள்கிறாள்.
மண் தோன்றுவதற்கு முன்பு தோன்றிய மங்கை உத்திரகோசமங்கை என்பர் பெரியோர். ராவணனின் மனைவியான இத்தல இறைவனை வணங்கியதாகச் சொல்கிறது தலபுராணம். சிவபக்தனான ராவணன் - மண்டோதரி திருமணம் இங்குதான் நடைபெற்றது என்றும் சொல்கிறார்கள்.
 உத்திரகோசமங்கை
ஈசனின் திருவிளையாடல்களில் ஒன்றான வலைவீசி மீன் பிடித்த விளையாடல் நடைபெற்ற தலம் இது. மீனவப் பெண்ணாகத் தோன்றிய அம்பிகையை சுவாமி கரம் பிடித்த தலமும் இதுதான்.

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் பிறப்பெடுக்கக் காரணமான தலமும் இதுவே. நவகிரகங்கள் ஆலய வழிபாட்டில் இல்லாத காலத்தில் தோன்றிய கோயில் இது என்பதால் இங்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய 3 கோள்கள் மட்டுமே உள்ளன. இதுவே இந்த ஆலயத்தின் பழைமைக்கு மற்றுமொரு சான்று.

நடராஜர் சந்நிதிக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்க சந்நிதி உள்ளது. ஈசனிடம் வேத ரகசியம் கேட்க வந்த 1,000 முனிவர்களில் 999 பேர் ஈசனிடம் ஐக்கியமாகிவிட, எஞ்சி நின்ற ஒரு முனிவரே மாணிக்கவாசகராக மறுபிறப்பு எடுத்தார் என்கின்றன புராணங்கள். எனவே திருவாசகம் என்னும் வேதம் நமக்குக் கிடைக்கக் காரணமான தலமும் இதுவே.

இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று மரகதலிங்கம் மற்றும் ஸ்படிக லிங்கம். தினமும் மதிய வேளையில் இவ்விரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் நடைபெறும் இதைக் கண்டாலே முக்தி நிச்சயம் என்பார்கள். இங்குள்ள தலவிருட்சமான இலந்தை 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்று சொல்கிரார்கள் விஞ்ஞானிகள்.

தினமும் அதிகாலையில் அம்பாள் சுவாமியை பூஜிப்பதாக ஐதிகம்.அதேபோல், மாணிக்கவாசகர் இறவா நிலை பெற்று ஈசனுக்கு அருகே அமர்ந்து அவருக்கு அன்னம் பாலிப்பதாக நம்பப்படுகிறது. திருப்பெருந்துறைக்கு அடுத்து மாணிக்கவாசகருக்கு ஈசன் தரிசனம் தந்த இடமும் இதுவே.

ஒரே நாளில் மூன்று வேளை மங்களநாதரை தரிசித்தால் வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதேபோன்று காசியிலும் தீராத பித்ரு சாபமும் இங்கு தீரும் என்கிறார்கள். இங்கு நடைபெறும் பள்ளியறை பூஜை மிகவும் விசேஷமானது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும்; பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.

பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஐந்து கோபுரங்களுடன் அமைந்திருக்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்தம், மங்கள தீர்த்தம் ஆகியவை ஏழு ஜன்ம பாவம் தீர்க்கும் சக்தி கொண்டவை என்கிறார்கள். அதேபோன்று கோயிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும் அதற்கு அருகே மொய்யார்தடம் பொய்கைத் தீர்த்தம், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் ஆகியவை உள்ளன.

இப்படிப்பட்ட அற்புதமான தலத்தில் வரும் ஏப்ரல் 4 -ம் தேதி காலை 9 முதல் 10.20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டித் திருப்பணிகள் முடிவடைந்து கடந்த பிப்ரவரி 16 ம் தேதி யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. 101 குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் யாகசாலை பூஜைகள் நடக்க உள்ளன. அதன்பின் 4 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

 உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்
இதையொட்டி உத்திரகோசமங்கையில் எங்கு பார்த்தாலும் சிவாசார்யப் பெருமக்களாகக் காணப்படுகிறார்கள். இன்று யாகசாலைக்குரிய புனித நீரை சிவாசார்யர்கள் எடுத்துவந்து சேர்த்தனர். இப்படி கும்பாபிஷேகப் பணிகள் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் சிவபக்தர்களின் மனம் மகிழச் செய்யும் செய்தியைக் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

யாகசாலை பூஜைகள் தொடங்கும் ஏப்ரல் 1 முதல் கும்பாபிஷேக நாள்வரை மரகத நடராஜரை சந்தனக் காப்பு இல்லாமல் தரிசிக்கலாம் என்பதுதான் அது.

மரகதநடராஜர் என்ன விசேஷம்?

இங்குள்ள நடராஜர் திருமேனி பச்சை மரகதத்தால் ஆனது. விலை மதிக்க முடியாத மாபெரும் பொக்கிஷமாகத் திகழும் ஐந்தரை அடி உயரம் கொண்ட இந்த நடராஜர் திருமேனி உலக அதிசயம் என்றே சொல்லலாம். இந்தத் திருமேனியில் எப்போதும் சந்தனக் காப்பு பூசியிருப்பார்கள். மார்கழித் திருவாதிரைக்கு முதல் நாள் மட்டுமே சந்தனம் இல்லாமல் இந்த நடராஜரை தரிசிக்க முடியும். இவரின் திருமேனியில் சாத்தப்படும் சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது; அனைத்து நோய்களையும் தீர்க்க்க வல்லது என்கிறார்கள்.

'மத்தளம் முழங்க மரகதம் பொடிபடும்' என்பார்கள். அவ்வளவு நுட்பமானது மரகதக் கல். அதில் நுட்பமாக நடராஜர் திருமேனி அமைந்திருப்பதால் கோயிலில் இசைக்கும் வாத்திய ஓசையால் திருமேனிக்கு பாதிப்பு ஏற்படாதபடி இருக்க சந்தனக் காப்பு பூசப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சந்தனக் காப்பு களையப்பட்டு பச்சைத் திருமேனி தரிசனம் வாய்க்கும்.

 சந்தனப் பூச்சின்றி உத்தரகோசமங்கை மரகத நடராஜர்
கும்பாபிஷேகத்தை ஒட்டி, ஏப்ரல் 1 மாலை 5:00 மணிக்கு சந்தனம் களைதல் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாளும் மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்கலாம். மரகத நடராஜரை தரிசித்தால் வினைகள் தீரும். நவகிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஏற்கெனவே ஜனவரி மாதம் திருவாதிரையில் மரகத நடராஜர் தரிசனம் கிடைத்த நிலையில் மீண்டும் மரகத நடராஜர் தரிசனம் கிடைக்க இருப்பதை எண்ணி சிவபக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் உத்திரகோசமங்கை சென்று கும்பாபிஷேகத்தைத் தரிசித்து மங்களநாதரின் அருளைப் பெறலாம். கூடவே மரகத நடராஜரையும் தரிசித்து சகல வரங்களையும் பெறலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வாளாடி விஸ்வநாதர் கோயில் அன்பில் திருச்சி...

*வாளாடி விஸ்வநாதர் கோயில்*
காசி விசுவநாதர் சுயம்புவாய் தோன்றிய தலங்களும் உண்டு. இப்படிப்பட்ட தலங்களில் ஒன்று வாளாடி. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விசுவநாதர்.

காசியில் மரிப்போருக்கு, அவர்களது செவிகளில் சிவபெருமானே ‘ராமநாம’த்தை ஓதுகிறார் என்பது புராண வழி வந்த நம்பிக்கை. ஆனால், அனைவரும் காசிக்கு சென்று இறைவனை தரிசிக்க முடிவதில்லை என்பதே நிதர்சனம்.

எனவே காசிக்குச் சென்று இறைவனை தரிசிக்க இயலாதவர்களுக்காகவும், அவர்கள் காசியில் இறைவனை தரிசித்த பலனைப் பெற வேண்டியும் அன்னை விசாலாட்சி இறைவனை நோக்கி தவமிருந்தாள். அன்னையின் தவத்தால் இறைவன் மகிழ்ந்தார்.

அவர் பார்வதியின் முன்பாக தோன்றி, ‘பார்வதி! காசியின் சக்திகளைக் கிரகித்து, பல தலங்களில் நிரவுதல் வேண்டும் என்பது தானே உன் ஆசை? கவலை வேண்டாம். வாரணாசியில் உள்ள சுயம்பு லிங்க ரூபங்களை வழியில் கீழே வைக்காமல், தலையில் சுமந்து சென்று பிரதிஷ்டை செய்யும் தலங்களிலும் எல்லாம் நான் அருள்பாலிப்பேன்’ என்று அருள் செய்தார்.

இதன்படி பலரும் காசியில் இருந்து தலையில் சுமந்து வந்து உருவாக்கிய லிங்க பிரதிஷ்டை தலங்களில், காசி விசுவநாதர் சன்னிதிகள் தோன்றின. காசி விசுவநாதர் சுயம்புவாய் தோன்றிய தலங்களும் உண்டு. இப்படிப்பட்ட தலங்களில் ஒன்று வாளாடி. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விசுவநாதர். இறைவி விசாலாட்சி அம்மன்.

இந்தத் திருத்தலம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரம். எதிரே கோபுர பிள்ளையார் அருள்பாலிக்கிறார். தெற்கு பிரகாரத்தில் திரும்பி வலது புறம் சென்றால், மகா மண்டபம். அந்த மண்டப வாசலின் எதிரே அன்னை விசாலாட்சி சன்னிதி உள்ளது. அம்மன் சன்னிதியின் அர்த்த மண்டப நுழை வாயிலின் இடது புறம், தட்சிண துர்க்கை நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இந்த துர்க்கையின் உருவம் மிகவும் பெரியது. அர்த்த மண்டபத்தைக் கடந்ததும் இறைவனின் கருவறையை தரிசிக்கலாம். இங்கு லிங்கத் திருமேனியுடன் விசுவநாதர் மேற்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். இறைவனுக்கு மாத்ரு பூதேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

தேவகோட்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தி, நடராஜரும், வடக்கில் துர்க்கையும், வடகிழக்கில் நவக் கிரக நாயகர்களும், கிழக்கில் சூரியன் மற்றும் பைரவரும் இருக்கின்றனர். திருச்சுற்றின் மேற்கு திசையில் பிள்ளையாரும், சுப்பிரமணியரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. சுப்பிரமணியர் சன்னிதிக்கு நேர் எதிர் சுவற்றில், ஒரு சாளரம் பொருத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள துவாரம் வழியாக பார்த்தால் கருவறை மூலவரின் தரிசனம் தெளிவாகக் கிடைக்கும்.

துர்க்கை அன்னை வழிபட்ட தெற்கு நோக்கிய துர்க்கை சன்னிதி தலங் களில் ஒன்றே வாளாடி தலமாகும். அன்னைக்கு வழிகாட்டும் சிறுமியாக வந்தவள் லட்சுமிதேவி.

திருச்சியில் இருந்து அன்பில் செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது வாளாடி திருத்தலம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

ஸ்ரீராமஜெயம் என்னும் மந்திரம் வேறு என்ன உண்டு.

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராம என்றிரண்டே ழுத்தின...