Saturday, August 23, 2025

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம்* "திருவாடுதுறை"



நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான்,    இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை ..!
இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!

*இழந்த செல்வம் மீட்டு தரும்* " தென்குரங்காடுதுறை "

சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.

*செல்வம் பெற வணங்க வேண்டிய தலம்* "திருவாடுதுறை"

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

செல்வ வளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே..!

*கடன், சங்கடங்கள் போக்கும்* " திருபுவனம் சரபேஸ்வரர் "

தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள "திருபுவனம் " சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் "சரபேஸ்வரரை" வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.

*வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம்* "திருச்சேறை"

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு..!

*பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர* "வாஞ்ஸ்ரீசியய்ம்"

மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வார்கள்.

*பிதுர் தோஷம் நீக்கும்* " ஆவூர் பஞ்ச பைரவர்கள் "கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர்.

இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. ( ஆ என்றால் பசு ).
இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்".
சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் "பிதுர் தோஷமே ". பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.

*மரண கண்டம் நீக்கும்* " திருநீலக்குடி "
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக் கோயில், கும்பகோணம் - காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்". மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும். ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத் தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

*மாங்கல்ய தோஷம் நீக்கும்* " பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி"
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.

இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.

*கிரக தோஷங்கள் விலக்கும்* " சக்கரபாணி "

ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் " சக்ககரபாணி " வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள் இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே.

*பெண் பாவம் தீர்க்கும்* " திருவிசநல்லூர் "
திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும். பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் " மரண பயம் " நீக்கும் திருத் தலமாகும்.

*தேவாரம் பெற்ற தலங்கள்*

1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44
2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள் --- 52
3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள் --- 13
4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள் ---- 02
5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் ---- 111
6. அப்பர் மட்டும் பாடிய தலங்கள் ---- 28
7. சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள் ----- 25

மொத்தம் 275
இவற்றுள்
மாணிக்கவாசகர் பாடிய தலங்கள் 25

சிவஸ்தலத் தொகுதிகள்

வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்

1. *அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்*

1. திருக்கண்டியூர் ---- பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர் ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை ---- திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர் --- தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி ---- சலந்தராசுரனைச் சங்கரிதத்து
6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது
7. திருக்குறுக்கை --- காமனை எரித்தது
8. திருக்கடவூர் ---- யமனை உதைத்தது

2. *பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்*

1. கேதாரம் (இமயம்) ---- கேதாரேஸ்வர்ர்
2. சோமநாதம் (குஜராத்) ---- சோமநாதேஸ்வரர்
3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்
4. விசுவநாதமே (காசி) ---- விஸ்வநாதேசுவரர்
5. வைத்தியநாதம் (மகாராஷ்டிரம்) ---- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்) ---- பீமநாதேசுவரர்
7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்) ---- நாகநாதேசுவர்ர்
8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்) --- த்ரயம்பகேசுவரர்
10. குசமேசம் (மகாராஷ்டிரம்) ---- குஸ்ருணேச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராமேஸ்வரம்) ---- இராமநாதேஸ்வரர்

*முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் ---- பிறக்க முக்தி தருவது
2. சிதம்பரம் ----- தரிசிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமலை ---- நினைக்க முக்தி தருவது
4. காசி ---- இறக்க முக்தி தருவது

*பஞ்சபூத ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம் ---- பிருதிவி (நிலம்)
2. திரு ஆனைக்கா ----- அப்பு (நீர்)
3. திருவண்ணாமலை ----- தேயு (தீ)
4. திருக்காளத்தி ----- வாயு (வளி)
5. சிதம்பரம் ---- ஆகாயம் (விசும்பு)

*நடராஜருக்கான பஞ்ச சபைகள்*

1. திருவாலங்காடு --- இரத்தின சபை
2. சிதம்பரம் --- கனகசபை (பொன்னம்பலம்)
3. மதுரை --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி --- தாமிர சபை
5, திருக்குற்றாலம் --- சித்திர சபை

*(வியாக்ரபாதர் வழிபட்டவை) புலியூர்கள்*

1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. பெரும்புலியூர்

*சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்*

முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.

இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.

1. திருஆரூர் -- வீதிலிடங்கள் --- அசபா நடனம்
2. திருநள்ளாறு -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்
3. திருநாகைக்ரோணம் --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்
4. திருக்காறாயில் --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
5. திருக்கோளிலி -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
6. திருவாய்மூர் ---- நீலவிடங்கர் --- கமல நடனம்
7. திருமறைக்காடு --- புவனிலிடங்கர் --- கம்சபாத

*சிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள்*

1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர் ---- ஆனந்த தாண்டவம்
2. திரு ஆரூர் ---- அசபா தாண்டவம்
3. மதுரை ---- ஞானசுந்தர தாண்டவம்
4. புக்கொளியூர் ----. ஊர்த்துவ தாண்டவம்
5. திருமுருகன் பூண்டி ---- பிரம தாண்டவம்

*சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்*

1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்

*காசிக்கு ஈடான ஸ்தலங்கள்*

1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்

*நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்*

1. நந்தி சங்கம தலம் --- கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்)
2. நந்தி விலகியிருந்த தலங்கள் ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).
3. நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் --- திருவெண்

பாக்கம்
4. நந்திதேவர் நின்ற திருக்கோலம் --- திருமாற்பேறு
5. நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் --- திருமழபாடி
6. திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு
7. திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக

*சப்த ஸ்தான (ஏழூர் விழா) தலங்கள்*

1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.

*திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்*

1. திருவோத்தூர் --- ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம் ---- நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் --- ஆதிகேசப் பெருமாள்
4. சிதம்பரம் --- கோவிந்தராஜப் பெருமாள்
5. திருநணா --- ஆதிகேசவப் பெருமாள்
6. சிக்கல் --- கோலவாமனப் பெருமாள்
7. திருநாவலூர் --- வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி --- நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம் --- கோவிந்தர்
10.பாண்டிக் கொடுமுடி --- அரங்கநாதர்
11. திருப்பத்தூர் --- அரங்கநாதர்
12. திருவக்கரை --- அரங்கநாதர்

*ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்*

*உட்கோயில் கோயில்*

1. திருவாரூர் அரநெறி ---- திருவாரூர்
2. திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் --- திருப்புகலூர்
3. மீயச்சூர் இளங்கோயில் ---- மீயச்சூர்

*காயாரோகணத் தலங்கள்*

1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்

*மயானத் தலங்கள்*

1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்

*கைலாயத் தலங்கள் தெட்சண கைலாசம்*

1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)

*பூலோக கைலாசம்*

1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்

*அழகிற் சிறந்த கோயில்கள்*

1. தேரழகு --- திருவாரூர்
2. வீதி அழகு --- திருஇடை மருதூர்
3. மதிலழகு --- திருவிரிஞ்சை
4. விளக்கழகு --- வேதாரண்யம்
5. கோபுரமழகு -- திருக்குடந்தை
6. கோயிலழகு – காஞ்சி

*பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு*

1. திருக்குற்றாலம் -- திருவனந்தல் சிறப்பு
2. இராமேச்சுரம் --- காலை பூசை சிறப்பு
3. திருஆனைக்கா --- மத்தியான பூசை சிறப்பு
4. திரு ஆரூர் --- சாயுங்கால பூசை சிறப்பு
5. மதுரை --- இராக்கால பூசை சிறப்பு
6. சிதம்பரம் --- அர்த்தசாம பூசை சிறப்பு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்

குங்கிலியக்கலயர், முருகர், குலச்சிறை, அப்பூதி, நீலநக்கர், சிறுத்தொண்டர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசி, திருநீலகண்டயாழ்பாணர்.

நடராசர் அபிஷேக நாட்கள் 6

மார்கழி = ஆதிரை , சித்திரை = ஓணம், ஆனி = உத்திரம் மாசி = ஆவணி
புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை. ஏனைய மூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.

*ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்*

மதுரை, சிதம்பரம், இராமேஸ்வரம்.

ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் அமைந்து காணப்பெறும் ஒரே தேவாரத் திருத்தலம்

திருநல்லூர்த் திருத்தலம்.

அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்

“திருகண்டியூர் வீரட்டம்” என்னும் திருத்தலத்தில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.

*திருஞான சம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் இரண்டு.*

திருப்பட்டீச்சரம், திருப்பூந்துருத்தி.

*சிவன் சிறப்புத் தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள் ஆறு*

1. மயூர தாண்டவம் - மயிலாடுதுரை
2. அஞ்சிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி
3. கடிசம தாண்டவம்- திருவக்கரை
4. சதுர தாண்டவம்- திருநல்நூர்
5. சுந்தரத் தாண்டவம்- கீழ்வேளூர்
6. லதா விருச்சிக தாண்டவம்- திருமழபாடி

அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.

சம்பந்தர், நாவுக்கரசர், திருமூலர், நின்றசீர் நெடுமாறன், அப்பூதி, சோமாசிமாறர், மங்கையர்கரசி, நீலகண்டயாழ்பாணர், மிழலைக்குறும்பர், கணநாதர், குலச்சிறை என 11 பேர் ஆவார்.

*பெரிய கோபுரத் தலங்கள்*

திருவண்ணாமலை
மதுரை
தில்லை
திருமுதுகுன்றம்
திருச்செந்தூர்
இராமேஸ்வரம்
குடந்தை
காளையார் கோவில்
தென்காசி

*மண்டபங்கள் சிறப்பு*

வேலூர் - கல்யாண மண்டபம்
கிருஷ்ணாபுரம் - சபா மண்டபம்
பேரூர் - கனக சபை
தாரமங்கலம் – குதிரை மண்டபம்
புகழ் பெற்றவை மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.

*யானை ஏறாத மாடக் கோயில்கள் சில*

1. திருவானைக்காவல்
2. ஆக்கூர்
3. திருத்தேவூர்
4. திருக்கீழ்வேளூர்
5. சிக்கல்
6. வலிவலம்
7. அம்பர்மகாளம்
8. தண்டலை நீள் நெறி
9. திருநறையூர்
10. பழையாரை
11. திருமருகல்
12. வைகல்மாடக் கோயில்
13. நன்னிலம்(மதுவனம்)
14. குடவாசல்
15. புள்ளமங்கை
16. திருத்தலைச்சங்காடு
17. நல்லூர்
18. திருநாலூர்
19. திருச்சாய்க்காடு
20. திருவக்கரை
21. திருநாங்கூர்
22. திருப்ராய்த்துறை
23. ஆவுர்
24. திருவெள்ளாறை
25. திருவழுந்தூர்
26. நாகப்பட்டினம்
27. பெருவேளூர்
28. கைச்சின்னம்
29. சேங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….

*பெரிய லிங்கம்*

கங்கை கொண்ட சோழபுரம் – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்கு இலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும் பரிவட்டம் வேண்டும்.

திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம் பரிவட்டமும் தேவை “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று ”என்பது பழமொழி.

*பெரிய நந்தி*

தஞ்சை நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது லேபாட்சி வீரபத்திரர் சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.

*புகழ்பெற்ற கோயில்கள்*

கோயில் – சிதம்பரம்
பெரியகோயில்- தஞ்சை
பூங்கோயில் – திருவாரூர்
திருவெள்ளடை- திருக்குருகாவூர்
ஏழிருக்கை-சாட்டியக்குடி
ஆலக்கோயில்-திருக்கச்சூர்
கரக்கோயில்- திருக்கடம்பூர்
கொகுடிக் கோயில்- திருப்பறியலூர்
மணிமாடம்- திருநறையூர்
தூங்கானைமாடம்- திருப்பெண்ணாடகம்
அயவந்தீச்சரம்-திருச்சாத்தமங்கை
சித்தீச் சுரம்- திருநறையூர்.

*நால்வர் இறையருளில் கலந்த தலங்கள்*

1. திருஞானசம்பந்தர் - ஆச்சாள் புரம்
2. திருநாவுக்கரசர் - திருப்புகலூர்
3. சுந்தரர் - திருவஞ்சைக்களம்
4. மாணிக்கவாசகர் – தில்லை

*சந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்*

1. மெய்கண்டார்- திருப்பெண்ணாடகம்
2. அருள் நந்திதேவ நாயனார் – திருத்துறையூர்
3. மறைஞானசம்பந்தர்- பெண்ணாடகம்
4. உமாபதி சிவம்- சிதம்பரம்.

*சந்தானக்குரவர் முக்தி அடைந்த தலங்கள்*

1. மெய்கண்டார்- திருவண்ணாமலை
2. அருள் நந்திதேவ நாயனார் – சிர்காழி
3. மறைஞானசம்பந்தர்- சிதம்பரம்
4. உமாபதி சிவம்- சிதம்பரம்

*பக்தர்கள் பொருட்டு*

திருவிரிஞ்சியுரம்- பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.

திருப்பனந்தாள் – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்து பூமாலையை ஏற்றிக் கொண்டருளினார்.

    நற்றுணையாவது அண்ணாமலையாரே 

 எங்கும்   நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Thursday, August 21, 2025

மயூரநாதசுவாமி அபயாம்பிகை மயிலாடுதுறை..


உமையம்மை மயில் வடிவில் ஈசனை வழிபட்டு சுயவடிவம் பெற்ற தலமானதும்,
உலகப் புகழ்பெற்ற தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும்,
18 சித்தர்களில் ஒருவரான 
குதம்பை சித்தரின்  ஜீவசமாதி அமைந்துள்ள இடமான , காசிக்கு நிகரான ஆறு தலங்களில் ஒன்றான 
மயிலாடுதுறை மாவட்டத்தின் மையத்தில் உள்ள 
#திருமயிலாடுதுறை (சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை) 
என்ற மாயவரம் (#கெளரிமாயூரம்)
#மயூரநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 
#அபயாம்பிகை என்ற #அஞ்சொல்நாயகிஅம்மன் திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 

மயிலாடுதுறை எனும் மாயவரம் மிகவும் தொன்மையானது. -ஆயிரம் ஆனாலும் மாயூரம் போலாகாது- என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. பிரம்மாவால் உருவாக்கப்பட்டது மாயவரம். 
ஈசனை அன்னை மயில் உருவத்தில் வழிபடும் இரண்டு தளங்களில் ஒன்று மயிலாப்பூர், மற்றொன்று மயிலாடுதுறை.
"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது " என்று மயிலாடுதுறைக்காரர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இதைப் பொருள் அறிந்து எத்தனை பேர் சொல்கிறார்களோ  தெரியவில்லை. மயூரம் என்ற வடசொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதலால் மயூரம் அல்லது மாயூரம் எனப்பட்டது. மயிலைக் காட்டிலும் அழகிய பறவையைக் காண்பது அரிது என்பதால் ஆயிரம் பறவைகள் இருந்தாலும் மயிலுக்கு ஒப்பாகுமா என்று இதற்கு வெளிப்படையாகப் பொருள் காண்பார்கள். ஆனாலும் இதற்கு உட்பொருள் ஒன்றும் உண்டு. மாயூரம் என்பதை மயிலுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தாமல்,  அவ்வுருவெடுத்து வந்து சிவபூஜை செய்த உமை அன்னைக்கு இணைத்துப் பார்ப்பதே சிறந்த பொருளைத் தரும். அவ்வாறு மயிலம்மனாக வந்து பூஜை செய்து சுய வடிவம் பெற்றுப்  பரமேச்வரனை மணந்து  கொண்ட கௌரிக்கு நிகர் யாரும் இல்லை என்பதால்  " ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது " எனப்பட்டது. சுவாமிக்கே கௌரிமாயூர நாதர் என்று பெயர் வரும்படி அரும்தவம் செய்தபடியால் ஊரின் பெயரும் மயிலாடுதுறை ஆயிற்று.

காசிக்கு நிகரான தலங்களாக, ஸ்ரீவாஞ்சியம், திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சாயாவனம் ஆகிய சிவஸ்தலங்களைக் குறிப்பார்கள்.

அம்பிகை மயில் வடிவில் ஈசனை வழிபட்ட இரண்டு தலங்கள் திருமயிலாப்பூர், திருமயிலாடுதுறை ஆகும். திருமயிலாடுதுறை  மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவிலில் அம்பிகை மயில் வடிவிலும், இறைவன் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார்.

*#கௌரி தாண்டவம்:

அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும், மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும். இதனால் இத்தலம் 'கௌரி மாயூரம்' என்றும் பெயர் பெற்றது.

*#அபயாம்பிகை என்று பெயர் வரக் காரணம்:

பார்வதியை மகளாகப் பெற்ற (தாட்சாயினி) தட்சன் வேள்விக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.  வேள்விக்கு சிவபெருமானை  அழைக்கவில்லை, இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை வேள்விக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தார்.  பார்வதி  மனம் கேளாமல் சிவபெருமான் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக தட்சனின் வேள்வியில் கலந்து கொண்டு  அவமானப்பட்டாள்.

இதனால் சினமுற்ற சிவன் வீரபத்திர வடிவம் கொண்டு வேள்வியைச் சிதைத்தார்.  அப்போது வேள்வியில் பயன்படுத்தப்பட்ட  மயில் ஒன்று அம்பாளைச் சரணடைந்தது.  நாடி வந்த மயிலுக்கு அடைக்கலம் அளித்து காத்ததால் அபயாம்பிகை, அபயப்பிரதாம்பிகை, அஞ்சல் நாயகி, அஞ்சலை என பலவாறு அழைக்கப்படுகின்றாள்.  சிவபெருமானை பார்வதியை மயிலாக மாறும்படி  சபித்து விடுகிறார்.  

அம்பிகை மயில் உருவம் கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கித் தவம் செய்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், 'மாயூரநாதர்' என்றும் பெயர் பெற்றார்.

இங்கு ஆதி மயூரநாதர் சந்நிதிக்கு அருகில் அம்பிகைக்கு தனி சந்நிதி இருக்கிறது. இங்கு லிங்க வடிவ ஈசன் அருகில் மயில் வடிவில் அம்பிகை வழிபட்ட நிலையில் காட்சி அளிக்கிறாள்.
 தன்னை நாடிவந்த மயிலைக் காத்த அன்னை வீரசக்தி வடிவமாக இருக்கிறாள். ஆடிப்பூரம், வெள்ளிக்கிழமைகளில் காவிரிக் கரையில் எழுந்தருளி காட்சி அளிக்கிறாள் அபயாம்பிகை.

இங்கு காவிரி துலா ஸ்நானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள், மாந்தர்கள் தங்கள் பாவங்களைத் தங்களிடம் கரைப்பதால் சேர்ந்துள்ள பாவத்தை நாங்கள் எங்கு கழிப்பது என்று கேட்டபோது, கண்ணுவ முனிவர் மாயவரத்தில் உள்ள காவிரியில் துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் நீராடச் சொல்கிறார். நரகாசுரனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க ஸ்ரீ கிருஷ்ணரை இங்குதான் நீராடச் சொல்கிறார் ஈசன்.
 துலா மாதத்தில் சப்த மாதர்கள், தேவர்கள், முனிவர்கள் இங்கு நீராட வருகிறார்கள். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகச் சிறப்பு. அன்று காவிரியில் நீராடி அம்பிகையை வணங்கினால் அவள் நம்மை அனைத்து துன்பங்களிலிருந்தும் அபயம் அளித்துக் காப்பாள் என்பது ஐதீகம்.
 நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும் காணப்படுகிறது. வீதி உட்பட மொத்தம் ஐந்து பிராகாரங்கள் உள்ளன. இக்கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன் அழகிய சிற்பங்களுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. உட்கோபுரம் மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது.,

இங்குள்ள துர்க்கையம்மனின் காலுக்குக் கீழ் மகிஷனும், அருகில் அசுரர்களும் இருப்பது அரிதான ஒன்று. மயூர நாதர் சந்நிதியின் பின்புறம் சுப்பிரமணிய சுவாமி சந்நிதி உள்ளது. இவர் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். ஆதி மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் அபயாம்பிகை தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.
 "அழைத்ததும் வருவாள் அபயாம்பிகை' என்பதற்கேற்ப அன்னை அருள் வழியும் கண்களுடன் எழில் ததும்ப நிற்கிறாள்.
 வைகாசியில் பிரம்மோற்சவம், துலா ஸ்நானம், ஆடி கடைசி வெள்ளியன்று லட்சதீபம் ஏற்றுவதும் இங்கு மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னை மயிலாக தவம் செய்ததால் நடனம் பயில்பவர்கள் இங்கு வந்து அன்னையை வழிபடுவது மிகச் சிறப்பு. தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஈசனுக்கும், அம்பிகைக்கும் வஸ்திரம் சாற்றி வழிபடுகிறார்கள்.

சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள்  யாவரும் தண்டிக்கப்பட்டனர்.  அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு அருள்  பெற்றனர். கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி அமைந்துள்ளது.  மயில் வடிவில்  சிவபெருமானும் அம்பிகையும் காட்சி தருகின்றனர்.  பெண் மயிலான அம்பிகையின் இருபுறமும் இரண்டு சிறிய மயில்கள்  சரஸ்வதி, திருமகளாக விளங்குகின்றன.  

இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதி தனிச் சன்னதியாக காணப்படுகிறது. அம்பாள் 5 அடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் நின்ற திருக்கோலத்தில்  எழுந்தருளி உள்ளார். அன்னை அபயாம்பிகை   மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும்  காட்சி தருகிறாள். தேவாரத்தில் இந்த அம்பிகையை  அம்சலாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதற்கு  அழகிய சொற்களைப் பேசுபவள் என்பது பொருளாகும்.

இத்திருக்கோயில் 3 பிரகாரங்களைக் கொண்ட அழகிய திருக்கோயில். இரண்டாவது பிரகாரம், மூன்றாவது பிரகாரம் ஆகியவற்றின் வெளிப் புறத்தில் 16 அடி உயரத்தில் செங்கல்லால் ஆன சுற்றுச் சுவர் உள்ளது. இக்கோயிலின் ஆதி மயூரநாதர் முன் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தேவாரப் பாடல்களை, பெருமான் நேரடியாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதிமயூரநாதர் ஆலயத்தை திருக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக வந்தால் காணலாம்.

இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் 164 அடி உயரம் கொண்டது. ஒன்பது நிலைகளைகளுடனும் ஒன்பது கலசங்களுடனும் மிக அழகாக காட்சி தருகிறது ராஜகோபுரம்.  இக்கோபுரம் கட்டப்பட்ட காலம் கிபி. 1513, 1514, 1515-ம் ஆண்டுகளில் என்பது போன்ற விவரங்கள் இக்கோயில் கல்வெட்டுக்கள் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. 

தற்காலத்தில் இக்கோயில் சுவாமி கோயில், அம்பாள் கோயில் என்ற இரண்டு பகுதியாக காணப்படுகிறது. இத்தகைய பழக்கம் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அழகிய ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்ட குளம்.

குளத்தின் நடுவே நீராழி மண்டபம்உள்ளது. மார்கழி மாத திருவாதிரை நாளிலும், சித்திராப் பௌர்ணமியிலும், வைகாசி விசாக தினத்திலும், அருள்மிகு மயூரநாதர், அபயாம்பிகை முன்னிலையில் இத்திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இத்தீர்த்த குளத்தில் வைகாசி வசந்த உற்சவம் 10 நாட்கள் நடந்தபின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

கோபுரத்தை அடுத்து கோயிலின் உள்ளே அழகிய 16 கால் மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சுவாமியின் திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை இங்கேதான் நடைபெறும். கோயிலின் உள்ளே முதல் தரிசனம் முக்குறுணி விநாயகர் என்றழைக்கப்படும் பெரிய விநாயகர் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளார். வடகிழக்கு மூலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் தரிசனம்.

கோயிலின் உள் பிரகாரத்தில் உற்சவர்களின் சன்னதி, நடராஜர் சன்னதி, விநாயகர், வித்யாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், சேக்கிழார், நால்வர், சப்த மாதாக்கள், அறுபத்து மூவர் போன்றோரது சன்னதிகளும் உள்ளன. இவற்றோடு அல்லாமல் சகஸ்ரலிங்கம், சட்டைநாதர் பலிபீடம், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இதை அடுத்து மகா விஷ்ணு , வாயுலிங்கம், வருணலிங்கம், மகாலெட்சுமி, பிரம்மலிங்கம் நந்தியுடன் காட்சி தருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி அன்று இங்கே எழுந்தருளியுள்ள 21 விநாயகர் திருவுருவங்களுக்கு மோதக நிவேதனம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். 

இத்திருத்தல மயூரநாதரை திலீபன், திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், கண்ணுவர், கவுண்டில்யன், சுசன்மன், நாதசர்மா, தருமன், லெட்சுமி, விசாலன், காமன், ஆகியோரும், அஃறிணை உயிர்களான, கழுகு, கிளி, காகம், குதிரை, நரி, யானை, வானரம், பூனை, கழுதை, போன்றவைகளும் வழிபடும் பேறு பெற்றனர். 

தெற்குப் பகுதியில் அகத்திய விநாயகர், நடராஜர், ஜுரதேவர், ஆலிங்கனசந்திர சேகரர் எழுந்தருளியுள்ளனர். இங்கே தனிச் சன்னதியில் சின்முத்திரையுடன் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு மேற்புறமாக குதம்பைச் சித்தர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி உள்ளது. இக்கோயிலில் நடக்கும் அர்த்தஜாமபூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது. திருமணமாகாதவர்கள் திருமணம் வேண்டி நேர்ந்துகொண்டு, இந்த அர்த்த ஜாம பூஜையில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
அம்பாள் 5 அடி உயரத்தில் 4 திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் எழுந்தருளி உள்ளார். 

அம்பாளுக்கு வலப்புறம் நாத சர்மாவின் மனைவி அநவித்யாம்பிகை இறைவன் காட்டிய இடத்தில் ஐக்கியமாகி லிங்க வடிவத்தில் காட்சி தருகிறார். இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிறத்திலேயே புடவை சாத்தப்படுகிறது. இந்தத் தலத்தில் மட்டுமே லிங்க உருவமாக உள்ள அம்மைக்கு புடவை சாத்தி வழிபடப் படுகிறது.

அம்பாள் கோயிலின் முன் மண்டப வாசலில் இத்தலத்தின் பதிகப் பாடல்களும், உள்ப்ரகாரத்தில் அவயாம்பிகை சதகப் பாடல்களும், அகவல் பாடல்களும் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளன.

'அபயாம்பிகை சதகம்' எனும் நூறு பாடல்களைக் கொண்ட துதிப்பாடலை இயற்றிய அபயாம்பிகை பட்டர் கிருஷ்ணசாமியின் தலமாகவும் உள்ளது. 

"அன்னையே உன் அருளுக்கு இணை எதுவும் இல்லை. நீ எங்களைக் காக்கவே பல்வேறு வடிவம் எடுத்து வருகிறாய். ஒவ்வொரு வடிவமும், மற்றதை விட அதிக அருட்சக்தியும், கருணையும் நிரம்பியதாய் இருக்கிறது.' என்கிறார் ஆதிசங்கரர்.

 "தாயே நான் உன்னிடம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நீயே அனைத்தும் அறிவாய். உன்னை நோக்கிக் கரம் குவிப்பது ஒன்றே என் வேலை' என்கிறார் நீலகண்ட தீட்சிதர்.
 உச்சிக் கிளியே அருட்கிளியே உணர்வு உணர்வாய்
 உயிருக்குயிராய் உதித்த கிளியே - - - -அருள் அமையும்
 மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத்தாயே.
 என்று போற்றித் துதிக்கிறது அபயாம்பிகை சதகம்.

*திருஞானசம்பந்தர் பெருமானால் இத்தலத்தில் பாடப்பட்ட தேவாரப் பாடல்:

கரவுஇன் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம்ஒன் றியசெஞ் சடையான் வாழ்
வரவா மயிலாடு துறையே !!

உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதிஎன்பர்
குரவம் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலாடு துறையே !!

ஊனத்து இருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண்டு அடிபேணும்
தேன்ஒத்து இனியான் அமரும்சேர்
வானம் மயிலாடு துறையே !!

அஞ்சுஒண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சுஒன் றிநினைத்து எழுவார்மேல்
துஞ்சும் பிணிஆ யினதானே !!

தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணிஆர்ந் தவருக்கு அருள்என்றும்
பிணியா யினதீர்த்து அருள்செய்யும்
மணியான் மயிலாடு துறையே !!

தொண்டர் இசைபா டியும்கூடிக்
கண்டு துதிசெய் பவன்ஊராம்
பண்டும் பலவே தியர்ஓத
வந்தார் மயிலாடு துறையே !!

அணங்கோடு ஒருபா கம்அமர்ந்து
இணங்கி அருள்செய் தவன்ஊராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலாடு துறையே !!

சிரம்கை யினில் ஏந் திஇரந்த
பரம்கொள் பரமேட் டிவரையால்
அரங்கஅவ் அரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலாடு துறையே !!

ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்
கோலத்து அயனும் மறியாத
சீலத்தவனூர் சிலர் கூடி
மாலைத் தீர்மயி லாடுதுறையே !

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

திரிகோணமலை (திருகோணேஸ்வரம்) #கோணேஸ்வரர் (கோணை நாதர்) #மாதுமையாள் திருக்கோயில் வரலாறு:

#தென்_தட்சிண_கைலாயம் என்ற
இலங்கை நாட்டில் உள்ள
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றானதும் , 51 சக்தி பீடங்களில் ஒன்றான  #திரிகோணமலை (திருகோணேஸ்வரம்) 
#கோணேஸ்வரர் 
(கோணை நாதர்) 
#மாதுமையாள் திருக்கோயில் வரலாறு:

திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்த்துகீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

மூலவர்:கோணேஸ்வரர்
அம்மன்:மாதுமையாள்
தல விருட்சம்:கல்லால மரம்
தீர்த்தம்:பாவநாசம்
ஊர்:திருகோணமலை
மாவட்டம்:இலங்கை
மாநிலம்:மற்றவை
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப் பதிகம்:

குற்றமிலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக் கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன் உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் சுற்றமும் ஆகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.

_திருஞான சம்பந்தர்

தல வரலாறு:

இராவணன் தென் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே தட்சிண கைலாயம் எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேச்சரத்தைப் பூசித்து வந்தான் என்று மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல் கூறுகின்றது. இராவணன் தன் தாயாருக்குச் சிவலிங்கம் ஒன்று பெற விரும்பிப் பெயர்த்த மலை தட்சிண கைலாயமாகிய கோணமாமலை என்று தட்சிண கலாய புராணங் கூறுகின்றது. இதற்குச் சான்று பகர்வது போன்று இம்மலைப் பாறையில் இராவணன் வெட்டு என்ற பெயருடன் மலைப் பிளவு ஒன்று இன்னமும் இருக்கின்றது. இராவணன் கிறிஸ்து யுகத்துக்கு மிகவும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவன் என்றும் அவனுடைய காலத்துக்குப் பின் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது என்றும் ராஜாவளிய என்னும் புத்த சமய வரலாற்று நூல் கூறுகின்றது. 

ராவணன் தனது தாயாரின் சிவபூஜைக்காக தட்சிண கயிலாயமான திருகோணமலையைப் பெயர்த்ததாகவும் ஒரு செய்தி தட்சிண கயிலாயமான திருகோணமலையைப் பெயர்த்ததாகவும் ஒரு செய்தி தட்சிண கயிலாய புராணத்தில் உள்ளது. இதற்குச் சான்றாக ராவணன் வெட்டு என்ற மலைப்பிளவு இன்னும் இப்பகுதியில் காணப்படுகிறது. கடல் சீற்றத்திற்குப் பிறகு கோயில் அருகிலுள்ள சுவாமிலை எனப்படும் குன்றின் உச்சியில் கோயில் மீண்டும் அமைக்கப்பட்டது. கி.பீ 7 ஆம் நூற்றாண்டில் சீரும் சிறப்புமாக விளங்கிய இக்கோயிலின் அழகினைக் கேள்விப்பட்ட திருஞான சம்பத்தர் ராமேஸ்வரத்தில் இருந்தபடியே ஞானக்கண் கொண்டு குற்றமில்லாதார் குறைகடல் சூழ்ந்த கோண மாலையமர்ந் தாரை…. என தேவாரப் பதிகத்தில் பாடியுள்ளார். அப்படி பெருமானும் போற்றிப் பாடியுள்ளார்.

டெம்பிள்ஸ் அஃப் தவுசண்ட் பிள்ளர்ஸ் என்றழைக்கப்பட்ட இக்கோயிலின் தூண்களையும் கற்களையும் பெயர்த்து எடுத்த பின்பே, கோயிலைத் தரைமட்டமாக்கினான். அத்தூண்களையும் கற்களையும் கொண்டு புகழ்பெற்ற பிரட்ரிக் கோட்டையை பலப்படுத்திக் கட்டியதாகவும் வரலாறு.

சோழர் பாண்டியர் ஆரியச் சக்கரவர்த்திகள் முதலானோர் இக்கோயிலை ஆதரித்தனர். குளக்கோட்டு மன்னன் குளந்தொட்டு வளம் பெருக்கித் திருப்பணிகள் பலவுஞ் செய்வித்தவன் என்பது வரலாறு. இவன் திருக்கோணேச்சர ஆலயத்துக்குத் திருப்பணி மட்டுமன்றிச் சோதிட முற்கூறலுடன் அமைந்த கல்வெட்டு ஒன்றினையுஞ் செய்வித்தான். அது கோட்டை வாயிலிலுள்ள கற் தூண்களிற் பதிக்கப்பட்டு இன்னமும் இருக்கின்றது. அதனை ஈண்டு நோக்குதல் சாலப் பொருத்தமானது.

"முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே மன்னவபின் பொண்ணா ததனை யியற்றவழித் தேவைத்து எண்ணாரே பின்னரசர்கள்"

என்பது அக்கல்வெட்டு. குளக்கோட்டனின் திருப்பணியால் அமைந்த இவ்வாலயத்தைப் பறங்கியர் உடைப்பார்கள். பின்னர் அரசர்கள் இதனைப் பேணமாட்டார்கள் என்று இதன் எதிர்காலம் பற்றி இங்கு குறிப்பிட்டிருத்தல் வியப்புக்குரியது.

இக்காலத்திற் சிவராத்திரி தினத்திற் கோணேச்சரப் பெருமானுக்கு நகர்வலம் வருதல் என்னும் திருவிழா ஒன்று சிறப்பாக நடைபெறுகின்றது. அக்காலத்திலும் இத்தகைய திருவிழாக்கள் நடைபெற்றன. இவ்வாறாக 1624ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு நாளில் நகர்வலம் வருந் திருவிழா ஒன்று நடைபெற்றது. இதற்காக மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேச்சரப் பெருமான் திருவுலாவாக அடியார்களுடன் கோயிலிலிருந்து நகருக்கு எழுந்தருளினார். அவ்வேளையிற் போர்த்துக்கேயப் படைவீரர் பிராமணர்கள் போல வேடந் தாங்கிக் கும்பிடப்போவது போன்று கோயிலினுட் புகுந்தனர். அந்நேரத்திற் கோயிலின் உள்ளே பூசகர்கள் சிலரும் வேலையாளரும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

கொன்ஸ்ரன்ரயின்டீசா என்பவனுடுடைய தலைமையிற் சென்ற இப்போர்வீரர்கள் எதிர்த்தவர்களை வெட்டிக்கொன்றுவிட்டு கோயிலிலிருந்த தங்க வெள்ளி நகைகளையும் விலைமதிப்புமிக்க பிறபொருள்களையும் சூறையாடிக்கொண்டு சென்றனர். அதன் பின்னர் அடியார்கள் சில விக்கிரகங்களை அகற்றி மறைத்து வைத்தனர். போர்த்துக்கேயர் பீரங்கிகளுடன் மீண்டும் வந்து கோயிலை முற்றாக அழித்தனர். போர்த்துக்கேயர் அழித்த கோயிலில் ஆயிரங்கால் மண்டபமும் பெரியதொரு தீர்த்தக்கேணியும் பிற மண்டபங்களும் இருந்தன என்பது அவர்கள் வரலாற்றுச் சான்றாக வரைந்து வைத்த படம் ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது. கொன்ஸ்ரன்ரயின்டீசா செய்த சிவத்துரோகத்துக்காக அவன் 1630ம் ஆண்டு வேறு சிலர் செய்த சூழ்ச்சியில் அகப்பட்டுக் கொல்லப்பட்டான்.

புதிய கோயிலின் வரலாறு 1944ம் ஆண்டு திருகோணமலைக் கோட்டையினுள்ளே நீர்த்தேக்கம் ஒன்று அமைப்பதற்கு அகழ்வு வேலை செய்தபொழுது விஷ்ணு மகாலட்ஷ்மி விக்கிரகங்கள் கிடைத்தன. 1956ம் ஆண்டு ஆடி மாதத்திற் சுவாமிமலைக்கு அண்மையிற் கடற்கரை வீதியருகே கிணறு ஒன்று வெட்டப்பட்டபொழுது மூன்று விக்கிரகங்கள் கிடைத்தன. வேறோர் இடத்தில் அகழ்ந்தபொழுது மேலும் இரண்டு விக்கிரகங்கள் கிடைத்தன. இந்த விக்கிரகங்கள் எல்லாம் 1952ம் ஆண்டிற் பிரதிட்டை செய்யப்பட்டன.

1950.07.03 அன்று கலாநிதி பாலேந்திரா அவர்களின் தலைமையிலே திருக்கோணேச்சர ஆலயத் திருப்பணிச் சபை ஆரம்பமானது. இச்சபையின் பெருமுயர்சியாற் பழைய கோயில் இருந்த இடத்தில் மீண்டுந் திருக்கோணேச்சரர் ஆலயம் அமைக்கப்பட்டு 1963.03.03 அன்று மகா கும்பாபிடேகம் நிறைவெய்தியது. பழைய கோயிலுடன் ஒப்பிடும்போது இது சிறிய கோயிலாகவே இருக்கின்றது.

மூர்த்திச் சிறப்பு இக்கோயிலின் இறைவன் பெயர் திருக்கோணேச்சரர் இறைவி பெயர் மாதுமை அம்பாள். தலவிருட்சம் கல் ஆலமரம். இப்பொழுதுள்ள கோயிலை அடுத்து இம்மலையின் வட முனையிற் பாறையினுள் வேர்வைத்து இந்த ஆலமரம் செழிப்பாக வளர்ந்து நிற்கின்றது. சோழ நாட்டிலே பழையாறை என்பது கி பி 831 இல் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு குமராங்குசன் என்னும் அரசன் அப்பொழுது ஆட்சி செலுத்தினான். இவனுடைய மகள் சீர்பாததேவி. நகுலேச்சரத் தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மாருதப்பூரவீகவல்லி என்பவளுக்கு நரசிங்கன் என்னும் மகன் ஒருவன் இருந்தான். அவன் சீர்பாததேவியைத் திருமணஞ் செய்தான். இவர்கள் இருவரும் தம் சுற்றத்தாருடன் இலங்கைக்கு வருவதற்குச் சோழநாட்டிலிருந்து கப்பலிற் புறப்பட்டனர். அப்பொழுது சீர்பாததேவி இலங்கையின் நாட்டு வளத்தைப் பார்க்க விரும்பினாள். எனவே கப்பல் இலங்கையின் கிழக்குக் கரையோரமாகப் பயணஞ் செய்தது.

கப்பல் திருகோணமலையை அண்மித்தபொழுது திருக்கோணேச்சரந் தென்பட்டது. அரசி அவ்விறைவரை வணங்கினாள். அதே நேரம் கப்பலும் நங்கூரம் இட்டது போன்று நிலையாய் நின்றது. அரசி மிகவுந் துயரைடைந்து விக்கினங்களை அகற்றுபவரான விநாயகரைத் தொழுதாள். பின்னர் படகோட்டியைக் கப்பலின் கீழே சென்று பார்க்குமாறு பணித்தாள். கப்பல் தரையிற் பட்டுவிட்டதென்றே அவள் கருதினாள். எனினும் அங்கு தரை இருக்கவில்லை. ஆயின் கடலில் மிகுந்த ஆழத்தில் விநாயகர் விக்கிரகம் ஒன்று இருந்தது. அதனை அவள் கப்பலுக்குள் எடுத்தபின்னர் கப்பல் மீண்டும் ஓடத்தொடங்கியது. இவ்வாறாகக் கடற்கோளால் கீழே சென்ற புராதன ஆலயத்தின் விநாயகர் விக்கிரகம் இவ்வளவு மகிமை உடையதென்றாற் கோணேச்சரப் பெருமானின் மகிமையைக் கூறவும் வேண்டுமா?

திருகோணேச்சரப் பெருமான் திருவுலாவுக்கு எழுந்தருளிய பின்னரே போர்த்துக்கேயர் கோயிலினுட் புகுந்தனர் என்று முன்னர் கூறப்பட்டது. எனவே அந்த விக்கிரகங்கள் காப்பாற்றப்பட்டிருத்தல் வேண்டும். அவை இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட விநாயகரும் சோமாஸ்கந்தருமாக இருக்கலாம். இந்த விநாயகர் விக்கிரகம் மிகவும் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. பழைய கோயிலின் பல விக்கிரகங்கள் தற்செயலாகக் கிடைத்தன என்பது இறைவனின் செயல். இதுவும் திருக்கோணேச்சரப் பெருமானின் மூர்த்திச் சிறப்பினையே புலப்படுத்துகின்றது. 

தலச்சிறப்பு இந்தத் தலத்தின் சிறப்புக் காரணமாகவே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருக்கோணேச்சரப் பெருமான் மீது தேவாரத் திருப்பதிகம் பாடினார். இத்தலத்தின் மகிமையை அடியார்கள் சொல்லக்கேட்டு அவர் இப்பதிகத்தை பாடினார். அருணகிரிநாதர் தாம் பாடிய திருப்புகழ் ஒன்றில் "நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக் முஓனாமலை தலத்தாறு கோபுர" என்று இத்தலத்தை வருணித்துள்ளார்.

குறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் ஒன்று சேர்கின்ற ஓர் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்குணமலை திருக்குணாமலை திருமலை தென் கைலாயம் கோகர்ணம் திருகூடம் மச்சேஸ்வரம் என்பன இத்தலத்தின் பிறபெயர்கள் ஆகும்.

தீர்த்தச் சிறப்பு இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் எனப்படும். இந்தச் சொல்லின் பொருளை நோக்கும்பொழுது இக்கோயிலின் தீர்த்தச் சிறப்பு புலப்படும். இங்கு தீர்த்தமாடுபவர்களின் பாவம் தொலைந்து விடும் என்பது இதன் கருத்து.

சுவாமி மலையின் தென் பக்கத்தில் ஆழமான ஒரு கிணறாகப் பாவநாசத் தீர்த்தம் இப்பொழுது இருக்கின்றது. இதனைச் சுனை என்று கூற முடியாத அளவுக்கு போர்த்துக்கேயர் பழைய கோயிலை இடித்து அங்கிருந்த தீர்த்தக்கேணியையும் சுனையையுந் துர்த்துவிட்டனர். இப்பொழுதுள்ள கேணியுந் தீர்த்தக் கிணறுஞ் சேர்ந்த பெரிய கேணி ஒன்று முன்பு இருந்ததென ஊகிக்கப்படுகின்றது. அற்புதமான இந்தத் தீர்த்தத்தின் ஒரு சிறு பகுதியையாயினும் பாவநாசத் தீர்த்தக் கிணற்றின் மூலம் திருக்கோணேச்சரர் தம் அடியார்களாகிய நமக்குத் தந்தருளினாரே என்பது இந்தத் தீர்த்தத்தின் சிறப்பு.

தல சிறப்பு:

இக்கோயிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம் என்றும் பெயருண்டு.

சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து திரிசெய்தார்கள்; அந்த ஊர் இன்றும் “திரிதாய்” என்று வழங்குகின்றது.

33 அடி உயர சிவபெருமான் சிலை உள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 270 வது தேவாரத்தலம் ஆகும்.

திருகோணேஸ்வரம் தோற்றம்:

திருக்கோணேஸ்வரத்தை வட. தென் தொழித் தொல் இலக்கியங்களும், புராணங்களும் போற்றிப் பாடியுள்ளன. திருக்கோணேஸ்வரம் குறித்து பல ஐதீகக் கதைகளும் உள்ளன. தட்சணகைலாயம், மச்சகேஸ்வரம் என்பன திருக்கோணேஸ்வரத்துக்கான மறுபெயர்களாகும். இந்தப் பெயர்கள்  ஏற்பட புராணங்கள் கூறும் நிகழ்வுகள் இந்து மதச் சார்பானவை. 

ஆதிசேடனும் வாயுபகவானும் தங்கள் வலிமையைக் காட்ட முயன்று, ஆதிசேடன் மகாமேருவின் சிகரத்தை மூடிக் கொள்ள வாயுபகவான் மகாமேருவின் சிகரங்களில் ஒன்றை பெயர்த்து கடலில் வீச, அது இலங்கையின் கிழக்குக் கரையோரமாக விழுந்து திருகோணமலையாக உருவாகியது என்பது புராணத்தில் இருந்து கிடைக்கும் செய்தியாகும்.

 இமயமலையின் ஒரு பகுதியே கோணப் பர்வதம் என்ற நம்பிககை காரணமாகக் கோணேஸ்வரத்திற்கு தட்சணகைலாயம் என்ற பெயர் உருவாகியது. திருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம் என்ற பெயரும் உருவாகியதாக தட்சணகைலாய புராணம் கூறுகின்றது. 

புராண இதிகாசங்களில் இருந்து பல மறுபெயர்கள் அறிந்து கொண்ட போதிலும் திருக்கோணேஸ்வரம் என்ற பெயரே நீண்ட கால வழக்கில் உள்ள தலப் பெயராகும்.

நிலாவெளிப் பிள்ளையார் கல்வெட்டில் திருக்கோணேஸ்வரத்தை மச்சகேஸ்வரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோகர்ணத்து சிவாலயமானது 10ஆம், 11ஆம் நூற்றாண்டுகளில் மச்சகேஸ்வரம் என அழைக்கப்பட்டிருக்கின்றது.

வட இந்தியாவில் கி.பி 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வாயு புராணத்தில் திருக்கோணேஸ்வரம் குறித்து சொல்லப்படுவதன் மூலம் இலங்கைத் தீவுக்கு வெளியையும் அதன் புகழ்  பரவியிருந்ததை அறிய முடிகின்றது.

காலக்கோடு:

வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கோயில் ஒன்று சமுத்திர ஓரத்தில், மலையின் அடிவாரத்தில் இருந்ததென நம்பப்படுகின்றது. அது கி.மு.306 இல் நிகழ்ந்த கடல் ‌கொந்தளிப்பில் அக்கோயில் கடலுக்குள் மூழ்கிவிட்டதாக இலங்கைச் சரித்திரம் என்னும் நூலில் இவ்வாறு நிகழ்ந்ததெனக் கூறப்பட்டுள்ளது. ஆழ்கடலில் அமர்ந்திருக்கும் கோணேஸ்வர பெருமானுக்கு இன்றும் மலைப் பூஜை செய்யப்படுவதை நாம் காணலாம். மலையின் அடியில் ஆழ்கடலுக்கு எதிரே மலைக்குகை போன்று பண்டைக்கோயிலின் மூல ஸ்தானத்தின் ஒரு பகுதி இன்னமும் எஞ்சியிருக்கின்றது. அது பல்லவர் காலக் குகைக் கோயில் போன்றது. அக்கோயிலின் எஞ்சிய பகுதி கடலுக்கு அடியில் உள்ளதென 1961ல் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்த மெக்வில்சன் என்பர் கூறியுள்ளார். 

கோணேஸ்வரம் கோவில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.ஆனால் வரலாற்றின் ஓர் பக்கத்தை திருப்பிப் பார்த்தால் கி.மு.150 ஆண்டுகளுக்கு முன்னரே எல்லாளன் என்னும் ஈழத்(இலங்கை) தமிழ் மன்னன் கோணேஸ்வரத்துக்கு சென்று வழிபட்டதாக சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அப்படி என்றால் அதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கோணேஸ்வரம் கட்டப் பட்டிருக்க வேண்டும்.

கோவில்’என்னும் தமிழ்ச் சொல்லானது பெரும்பாலும் இந்தியாவில் கட்டப்பட்டிருக்கும் வைஷ்ணவக் கோவில்களில் காணப் படாத ஒன்று..!ஆனால் இந்தக் கோவிலில் “கோவில்” என்னும் தூய தமிழ்ச் சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பாவிக்கப்பட்டதிலிருந்து இது சைவர்களுக்கும் தமிழர்களுக்கும் உரிய கோவில் மட்டுமல்ல தமிழர் ஒருவரால் கட்டப் பட்ட கோவில் என்றும் தெரியவருகிறது.

கோணேஸ்வரம் கோவிலுக்கு “கோகர்ணம்” என்றும் ஓர் பெயர் வரலாற்றில் புராண காலத்தில் வழங்கப்பட்டதாக பழைய நூல்களின் மூலம் அறிய முடிகிறது!சைவர்களின் பிரதானக் கடவுளாக ஈழத்திலும் சிவனையே தமிழர்கள் அன்றிலிருந்து இன்றுவரை முன் நிறுத்தி வணங்கி வருகிறார்கள்.

பழங்கால மன்னனாகிய இராவணன் கூட ஓர் மாபெரும் சிவ பக்தன்தான். பல்லவர்,பாண்டியர்,சோழர்களின் வணக்கத்துக்கு உரிய பிரதான கடவுள் சிவன் ஆகும்.

சிவனின் காலடியில் கங்கை நதி ஊற்றெடுத்து வந்து கலப்பதாக புராணங்கள் கூறுவது போல் தென் இலங்கையில் ஊற்றெடுத்த மகாவலி கங்கையானது இறுதியில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்குள் நுழைந்து கடலில் கலக்கும் இடம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூருக்கு அருகே கங்கை என்னும் சிற்றூரில்தான் உண்டு. இந்தக் கட்டுரையாளரின் பிறந்த மண்ணும் அதன் அருகேதான் உண்டு! ..அங்கிருந்து ஓர் உயரமான இடத்தில் இருந்து பார்த்தால், கோணேசர் கோவிலை..தொலை நோக்கி மூலம் காணலாம்!

கோணேசர் கோவில் தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிசம் என்று சொன்னேன்..அதற்கு ஏதுவாக ..பல அரிய சான்றுகள் உண்டு..!..அதில் ஒன்றுதான் இராவணன் கல்வெட்டு என்று அழைக்கப்படும் ஓர் பகுதியாகும். கோவிலின் மிக அருகில், வலது புறத்தில் உள்ள பெரும் மலையொன்றை இரண்டாகப் பிளந்ததுபோல் செங்குத்தாக சுமார் முன்னூறு அடி ஆழத்துக்குமேல் கடலுக்குள் பிளந்து – புதைந்து கிடக்கும் அந்த இடத்தைத்தான் இராவணன் கல்வெட்டு என்று அழைக்கிறார்கள்..!..அந்தப் பகுதி மிக..மிக ஆழம் கூடிய பகுதி ஆகும்..தோணிகளில் அதனருகே போகும்போது..

காந்தம் போல் அந்த மலை தம் தோணிகளை இழுப்பதாக நமது மீனவர்கள் கூறுவதுண்டு..இது புவியியல் ரீதியாக ஆராயப் படவேண்டிய ஒன்று..! அதற்கு அண்மையில் இராவணனின் வெண்கலச் சிலை ஒன்றும் உள்ளது!..என்பது மட்டுமல்ல..இந்த கோவிலில் இராமருக்கு என ஓர் குடிசையைக்கூட தமிழர்கள் கட்டி வைக்கவில்லை..ஆனால்.. இந்த கோணேஸ்வரம் கோவிலில் இராவணனுக்கும் ஓர் சிறிய கோவில் உண்டு என்பதுதான் கவனிக்கப் படவேண்டிய ஒன்று..!..சிவனை வழிபடும் பக்தர்கள் இராவணனையும் வழி பட்டுச் செல்வார்கள்!

கோவிலுக்கு அண்மையில் உள்ள ஆழக் கடலுக்குள் தான் நன்னீர் நதி ஊற்று இருக்கிறது..இது கதை அல்ல!..பூகோள ரீதியாக உள்ள வரலாறு..இந்த சிறு நதியில் இருந்தே பாபநாச தீர்த்தம் ‘ என்னும் ஊற்று கோணேசர் மலையை சுற்றி சுரக்கிறதாம்!..இந்த கல்வெட்டுக்கும் பாபநாச தீர்த்ததுக்கும் அன்றில் இருந்து இன்று வரை கடலைப்பார்த்தவாரு பூசை நடப்பதுண்டு!
அன்றைய வரலாற்றின்படி, கி.மு.205இல் உள்ள திராவிடக் கட்டிடக் கலை அமைப்பின்படியே சுவாமி மலையில் அமைந்துள்ள கோணேஸ்வரம் கோவில் கட்டப் பட்டுள்ளதாக சொல்வார்கள்..!

ஆனால்… அதற்கும் சில நூற்றாண்டுக்கு முன்னர் வடிக்கப் பட்ட கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கும் கி.மு..இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட வரலாற்று- புராண நூல்களில் கோணேஸ்வரத்தின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

.மு. 400 க்கும் கி.மு.100க் குமிடையில் எழுதப்பட்ட மகா பாரதத்தில் ‘கோணேஸ்வரம்’ கோவிலை கோகர்ணம்’ என்று குறிப்பிடுகிறார்கள் !… பாரதம்..இராமாயணம் இரண்டிலுமே இடம் பெற்ற கோவில்தான் எங்கள் கோணேஸ்வரம் ஆகும்..ஆனால்..இராவணன் கல்வெட்டு..கி.மு.1580 இல் கட்டப் பட்டதாக கட்டிடக் கலை நிபுணர்கள் கூறுகிறார்கள்!..எனவே..அதற்கும் பல் ஆண்டுகளுக்கு முன்னர்தான் கோணேசர் கோவில் கட்டப் பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறதல்லவா..?
ஆனால்.. ‘வாயு புராணம்’ என்னும் வரலாற்று நூலில்Paul E .Peiris ..என்ற வரலாற்று ஆசிரியர்..கோணேசர் கோவில் கி.மு.543-505 கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார்..இதையே..மற்றும் ஓர் வரலாற்று ஆசிரியரான..எஸ்.பத்மநாதனும் உறுதிப் படுத்துகிறார்..!

நகுலேஸ்வரம் ..(கீரிமலை)..திருக்கேதீஸ்வரம் ..(மன்னார்)..முனீஸ்வரம் ..(சிலாபம்)..தேனாவரம் (தேவன்துறை) கோணேஸ்வரம் ஆகிய ஐந்து கோவில்களுமே பழங் காலத்தில் சிவனுக்காக தமிழர்களால்.. கட்டப் பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க கோவில்களாகும்!..இந்த கோவில்கள் அனைத்துமே புராணங்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளன. அருணகிரிநாதர், திருஞான சம்பந்தர், சுந்தரர்
போன்றவர்கள் கோணேஸ்வரத்துக்கு வந்து தரிசித்துச் சென்றுள்ளனர். திருஞானசம்பந்தரால் பாடப் பட்ட தேவாரப் பதிகமும் கோணேஸ்வரம் பற்றி குறிப்பிடுகிறது..ஆனால் ..சம்பந்தரின் காலம்..கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஆகும்!

இராவணன் சிவனையே முழு முதற் கடவுளாக வழி பட்டவன் என்பது குறிப்பிடத் தக்கது..அதுமட்டுமன்றி..அவன் ஓர் சிறந்த இசை வல்லுனரும் ஆவான்.இராவணன் யாழ் வாசித்துப் பாடினால் சிவன் கூட இமய மலையில் இருந்து இறங்கி வருவார் என்று நான் கூறவில்லை..எந்த இராமாயணம் இராவணனை பெண் பித்தன்..அசுரன்..நரகாசுரன் என்று கூறியதோ ..அந்த இராமாயணம் தான் இதையும் கூட குறிப்பிட்டுள்ளது..!

பொது தகவல்:

காலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்த போது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன. மூன்று முறை கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும் மூன்றாவது கடல்கோளின்பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கியது ஈழம். ஈழத்தின் பழம்பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் திருக்கோணேஸ்வரம் சிறப்புப்பெற்றது. ஈழத்தின் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. கிழக்கே திருக்கோணேஸ்வரம், வடமேற்கே திருக்கேதீஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே முனீஸ்வரம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக ஈழம் விளங்கியது.

மாதுமையாள் சமேத கோணேஸ்வரர், சந்திரகேசர், பார்வதி, பிள்ளையார், அஸ்திரதேவர், வீரசக்தி, அன்னப்பறவை முதலான தெய்வத் திருவுருவங்கள் அமைந்துள்ளது.

தலபெருமை:

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உலகப் புகழ்பெற்ற திருகோணமலை சிவன் கோயில் உள்ளது. கச்சியப்ப சிவாச்சாரியார் சிவபெருமானின் ஆதி இருப்பிடங்களில் திபெத்திலுள்ள திருக்கயிலாய மலையினையும், சிதம்பரம் கோயிலையும், திருகோண மலையையும் கந்த புராணத்தில் மிக முக்கிய மூன்றினுள் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு சுமார் 1700 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் இருந்தன. இங்கு மகாவலி கங்கை அருகிலுள்ள கடலுடன் கலப்பதால் இப்பகுதி முழுவதும் நீர்வளம், நிலவளம் பெற்று செழிப்பாக இருந்தது. மேலும் குறிஞ்சியும், நெய்தலும், முல்லையும் ஒன்று சேருமிடத்தில் இத்தலம் அமைந்திருந்தது. சமுத்திரக்கரை ஓரமாக மலை அடிவாரத்தின் உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. பிறகு கி.மு 306 ல் ஏற்பட்ட கடல்சீற்றத்தினால் கடலில் மூழ்கி விட்டதாகவும் இன்னும் மலையின் அடியில் கடலுக்கு மிக அருகில் மலைக்குகை போன்ற பண்டைய கால கோயிலை நினைவுபடுத்தும் பகுதிகள் காணப்படுகின்றன என்கிறார்கள்.

இத்தலத்திற்கு திருக்குணமலை, திருமலை, தட்சிண கயிலாயம், கோகர்ணம், திரிகூடம், மச்சேஸ்வரம் எனப் பல பெயர்கள் உண்டு. அக்காலத்தில் தாமரைத்தண்டு நூலினால் திரி செய்து விளக்கேற்றி இக்கோயிலில் வழிபட்டு வந்தனர். இதன் காரணமாக திரிதாய் என்ற பெயரும் உண்டு. இறைவன் திருக்கோணேஸ்வரர், இறைவி மாதுமையாள், தலவிருட்சம் கல்லால மரம், முதலில் கல்லால மரத்துக்கு பூஜை செய்துவிட்டு, பின்னரே மூலவர் மற்றும் கோயில் சன்னதிகளில் பூஜை நடைபெறுகிறது. இங்குள்ள மிக முக்கிய தீர்த்தம் பாவநாசம் இதில் தீர்த்தமாடினால் பாவங்கள் தொலைந்துவிடும் என்பது நம்பிக்கை. 1624 ல் ஏற்பட்ட போர்த்துக்கீசிய படையெடுப்பில் இத்தீர்த்தக் கேணியையும் சுனையையும் தூர்த்துவிட்டனர். தற்போதுள்ள கேணிதீர்த்தம் ஒரு சிறு பகுதி மட்டும் கிடைத்துள்ளது. இக்கோயிலை பல்லவர்கள், சோழர்கள் பாண்டியர்கள் மற்றும் பல அரசர்கள் திருப்பணிகள் செய்து மிக நல்ல நிலையில் வைத்திருந்தனர். ஏராளமான தங்க நகைகளும் நவரத்தினங்களும் இக்கோயிலுக்குச் சொந்தமாக இருந்தன.

1624 வருடம் சித்திரை புத்தாண்டு தினத்தில் சுவாமி மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேச்சரப் பெருமான் நகர்வலம் வந்த வேளையில் போர்ச்சுகீசியத் தளபதி வீரர்களுடன் பக்தர்கள் போல வேடமிட்டு கோயிலினுள் சாமி நுழைந்த ஆங்கிருந்தவர்களை வெட்டிக் கொன்றுவிட்டு கோயிலிலிருந்த தங்க நகைகள், நவரத்தினங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர். ஆசியாவிலேயே மிகச் செழிப்பான செல்வவளம் கொண்ட இக்கோயில் முற்றிலும் சூறையாடப்பட்டது. பின்னர் கேள்வியுற்ற பக்தர்களும், அர்ச்சகர்களும் சில முக்கிய விக்கிரகங்களை உடனடியாக அகற்றி, குளங்களிலும் கிணறுகளிலும் மறைத்து வைத்தனர். சில விக்கிரகங்களை அருகிலுள்ள தம்பலகாமம் என்ற இடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்து ரகசியமாக பூஜை செய்து வந்தனர். தற்போது அங்கே ஆதிகோணநாதர் என்ற பெயரில் இறைவன் திருவருள் பாலிக்கிறார். பின்னாளில் திருக்கோணமலை கோயிலுக்குச் சொந்தமான மானியங்களில் பெரும்பகுதி இக்கோயிலுக்கும் சொந்தமாயிற்று. பராந்தக சோழனுக்குப் பயந்து பாண்டிய மன்னன் இலங்கையில் பாதுகாப்பாக மறைந்திருந்த காலத்தல் தாம்பலகாமம் ஆதிகோணேச்சுவரருக்கு பல திருப்பணிகள் செய்து வழிபட்டதாக தலபுராணம் தெரிவிக்கிறது. நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருகோணமலை தலத்தாறு கோபுர என்று திருப்புகழ் பாடியுள்ளார்.

ஆயிரங்கால் மண்டபமும், பெரிய தீர்த்தக் கேணியும் மற்றும் பிற மண்டபங்களும் இருந்தன என்பதை விஸ்பன் நகரில் உள்ள வரலாற்றுச் சான்றான படத்தின் மூலமே அறிய முடிகிறது. 16-ம் நூற்றாண்டில் வந்த குளக்கோட்டன் என்ற மன்னன் இக்கோயிலை மீண்டும் புதுப்பித்தான்

முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை

பின்னே பறங்கி பிரிக்கவே

பூனைக்கண் புகைக்கண் செங்கண் ஆண்டபின்

தானே வடுகாய் விடும் -கல்வெட்டு

என்ற பாடல் மூலம் குளக்கோட்ட மன்னனின் திருப்பணி மட்டுமின்றி, சோதிட முற்கூறலும் கல்வெட்டு மூலம் உண்மையை உணர்த்துகிறது. குளக்கோட்டனின் திருப்பணியால் அமைந்த இவ்வாலயத்தை போர்த்துகீசியர் உடைப்பார்கள். பின்னர் அரசர்கள் இதனைப் பேணமாட்டார்கள் என்று கோயிலின் எதிர்காலம் பற்றிய கல்வெட்டுக் கருத்து நம்மை வியக்க வைக்கிறது. போர்ச்சுக்கீசிய படையினால் சிதைவிடைந்த இக்கோயிலின் ஒரே ஒரு தூண் மட்டும் பின்னர் 1870 ல் சுவாமி பாறைக்கு அருகில் நினைவுச்சின்னமாக பக்தர்களின் துணையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மனதை ரணமாக்குகிறது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போதும் எவ்வித பூஜைகளும் இங்கு நடைபெற அனுமதிக்கப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மாலுமிகள், பக்தர்கள், சுவாமி பாதைக்குச் சென்று பூ, பழம், தேங்காய் உடைத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.

பின்னர் 1944 ஆம் ஆண்டில் திருகோணமலை கோட்டையினுள் நீர்த்தேக்கம் அமைக்க அகழாய்வு செய்தபோது சில விக்கிரகங்கள் கிடைத்தன. பின்னர் 1950 ஆண்டில் கடற்கரை அருகில் பொதுக்கிணறு தோண்டியபோது மேலும் சில விக்கிரகங்கள் கிடைத்தன. இறையருளால் அனைவரும் வியக்க மாதுமையாள் சமேத கோணேஸ்வரர், சந்திரகேசர், பார்வதி, பிள்ளையார், அஸ்திரதேவர், வீரசக்தி, அன்னப்பறவை முதலான தெய்வத் திருவுருவங்கள் வெளிப்பட்டன. அவை அனைத்தும் 1952 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மீண்டும் இக்கோயில் புத்துயிர் பெற்றது. பழைய கோயிலுடன் ஒப்பிடுகையில் இது சிறிய கோயில். இருப்பினும் எம்பெருமான் திருவருளினால் மீண்டும் அனைத்து விக்கிரகங்களும் வெளிப்பட இறையருள் போற்றத்தக்கது.

இங்கு ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. ஐம்பொன் மூர்த்தங்கள் மிக வடிவுடன் தேவ மண்டபத்தில் காட்சி தருகின்றன. சிவராத்திரி விழாவும், ஆடி அமாவாசை பெருவிழாவில் எம்பெருமான் கடலில் தீர்த்தமாடுவதும். பங்குனி தெப்பத் திருவிழாவும் மிகச் சிறப்பானவை. பாண்டியனின் கயல்சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது. இக்கோயிலின் தொன்மையை உணர்த்துகிறது. கோயில்முன் 33 அடி உயரமான சிவபெருமான் சிலை ஒன்று அமைந்துள்ளது.

#பூசைகள் மற்றும் #திருவிழா:

இங்கு ஆறுகாலப் பூசைகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றன. சிவராத்திரிக் காலத்திலே திருக்கோணேச்சரப் பெருமான் நகரத்தினுள்ளே திருவுலாவாக எழுந்தருளுதல் கண்கொள்ளாக் காட்சியாகும். இக்கோயிலின் மகோற்சவம் பங்குனி உத்தரத்திலே தொடங்கிப் 18 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

திருக்கோணேசப் பெருமானின் விழாக்களில் வெளிவாரியாக நடைபெறுவது ஆடி அமாவாசை விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்கு பெருமான் எழுந்தருளும்போது, நகரிலுள்ள ஆலயங்களின் மூர்த்திகளும் தீர்த்தமாட அங்கே எழுந்தருளுவார்கள்.

ஆடி மாதம் போலவே, மகாமகத் தீர்த்த விழா, பங்குனி மாதத்தில் பூங்காவன மற்றும் தெப்பத் திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோணேசர் கல்வெட்டு இக்கோயிலின் சரித்திரத்தை உரைநடையிலும் கூறுகின்றது. சீர்பாதகுலவரலாறு மட்டக்களப்பு மான்மியம் ராஜாவளிய மச்சபுராணம் திருக்கோணாசலப்புராணம் இலங்கைச் சரித்திரம் (தெனன்று) தட்சின கைலாய புராணம் திருக்கோணமலைத் திருவுருவங்கள் குடுமியா மலைச் சாசனம் திருக்கோணமலைக் கோட்டை வாயிற் கல்வெட்டு முதலியன இக்கோயில் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தருகின்றன. திருக்கோணேச்சரத் தேவாரத் திருப்பதிகம் கோணேஸ்வரர் குறவஞ்சி திருக்கோணேஸ்வரர் அகவல் திருக்கோணமலை அந்தாதி முதலியன இக்கோயில் மேல் எழுந்த இலக்கியங்களாகும்.

அமைவிடம் :

இலங்கையின் கிழக்கு திசையில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க நகரம் திருகோணமலை. இலங்கையின் மிகப் பெரிய நதியாகிய மகாவலிகங்கை அவ்விடத்தில் கடலுடன் கலப்பதால் அப்பிரதேசம் இயற்கை வளத்துடன் சிறந்து விளங்குகின்றது. அங்கு சுவாமிமலை என்று வழங்குகின்ற உயர்ந்த குன்றம் ஒன்றின் உச்சியிலே திருக்கோணேஸ்வரர் கோயில் உள்ளது. இது அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட புதிய கோயிலாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Wednesday, August 20, 2025

சிதம்பர ஈஸ்வரர் தில்லைவிளாகம் சிவன்கோயில்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் தில்லைவிளாகம் சிவன்கோயில் 

திருத்துறைபூண்டியில்  இருந்து முத்துப்பேட்டை சாலையில் வந்து உதயமார்த்தாண்டபுரத்தினை தாண்டியதும் தெற்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு கிமி தூரம் கடந்தால் தில்லை விளாகம் அடையலாம். வீசும் ஈரக்காற்றில் தென்னையின் வாசமும் உப்புச்சாரலின் வாடையும் சேர்ந்து வருகிறது. 

தெற்கில் இருக்கும்  பாக்-ஜலசந்தியை நோக்கி வேகமாக வரும் கோரையாறு தில்லைவிளாகம் வந்தவுடன் ராமர் சிவபூஜை செய்வதை  பார்த்து மேற்கு நோக்கி திரும்பி சில கிமி தூரம் சென்று மீண்டும் தெற்கு நோக்கி சென்று கடலில் கலக்கிறது. இவ்வூரின் கிழக்கில் சிறிது தொலைவில் மரைக்கா-கோரையாறு பாக்-ஜலசந்தியில் கலக்கிறது. இந்த இரண்டு ஆறுகளின் இடைப்பட்ட பெரும் பிரதேசம் சுரபுன்னை எனப்படும் தில்லை மரங்களால் ஒரு காலத்தில் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதி தில்லை விளாகம் எனப்பட்டது. 

இப்படிப்பட்ட ஒரு அமைதியான பிரதேசம் தான் முன்னர் தண்டகாரண்யம் (பெரும் மரங்கள் அடர்ந்த காடு) என அழைக்கப்பட்டது. இங்கு பரத்வாஜ முனிவர் ஆசிரமம்  அமைத்து தவம் செய்து வந்தார். ஸ்ரீராமர் ராவணனை வென்றபின் சேதுக்கரை வழியே வந்தபோது, இவரது ஆசிரமத்தில்  சில நாட்கள் தங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் சிவ பூஜை செய்த இடமே தற்போது சிவாலயம் இருக்குமிடம். அயோத்தி நோக்கி புறப்பட்ட ராமனிடம்  தன்னை விட்டு செல்லக்கூடாது என முனிவர் வேண்டுகோள் வைக்க, அவருக்காக தன் சௌந்தர்யங்கள் ஒன்று சேர்ந்த சிலாரூபம் ஒன்றை விட்டு சென்றதாக வரலாறு. 

இங்கு ஹேமபுஷ்கரிணி, ராம தீர்த்தம், ஹனுமன் தீர்த்தம். என மூன்று புண்ணிய தீர்த்தங்கள் இருந்தன. 

கி.பி. 1862ம் ஆண்டு வேளூர்தேவர் எனும் பக்தர்,  கனவில் கண்டவாறு குளம் வெட்டியபோது புதைந்திருந்த பழமையான திருக்கோயில் தெரியவந்தது. கார்த்திகை மாதம் 12ம் தேதி பதினான்கு வைணவ சிவாலய தெய்வத்திருமேனிகள் வெளிப்பட்டன. இங்கே நடராஜமூர்த்தி சிவகாமசுந்தரி சிலைகளும் கிடைத்தன., 

சில நூறாண்டுகளின் முன்னம் நாட்டுகோட்டை நகரத்தார்களால் சிவாலயம் எடுப்பிக்கப்பட்டது.. ஆயினும் இக்கோயில் நடராஜர் கோயில் என்றே அறியப்படுகிறது. சிவன் மற்றும் ராமரின் இரண்டு கோயில்களும் ஒன்றோடொன்று அருகருகே ஒரே வளாகத்தில் காணப்படுகின்றன,

சிவாலயம் கிழக்கு நோக்கி கம்பீரமாக நிற்கும் ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்டது.  வாயிலின் இருபுறமும்  மாடங்களில்  விநாயகரும் முருகனும் உள்ளனர். நந்தி  தேவர் இறைவன் சன்னதியின் நேர் எதிரில் உள்ளார். ராஜகோபுரத்தின் முன்னர் அலங்காரவளைவு ஒன்றுள்ளது. 

 இறைவன் சிதம்பரேஸ்வரர்      இறைவி உமையாம்பிகை 

 ராஜகோபுரம் தாண்டி உள்ளே சென்றவுடன் தெற்கு வடக்கில் நீண்டுள்ள கருங்கல் மண்டபத்தின் நடுவில் அழகிய கருப்பு வண்ண சலவை கற்கள் கொண்டு செதுக்கப்பட்ட பெரிய சன்னதி ஒன்றில்  ஸ்ரீ நடராஜமூர்த்தி சிவகாமசுந்தரியும் உள்ளனர். ஆளுயர நடராஜமூர்த்தி, அழகிய வட்ட பிரபாவளியில் ஆனந்த தாண்டவம் ஆடும் காட்சி பார்க்க அற்புதமானது. இவ்விரண்டு சிலைகளும்  ‘அம்பல ஊருணி’ என்ற குளத்தருகில் கிடைத்தன. சோழர்களின் படைப்பாக இருக்கலாம். ஆகவே இந்த தலம் “ஆதி தில்லை” என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டை “ஆதி சிதம்பரம்” என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

 இக்கோயிலின் மேற்கு திருமாளிகை பத்தியில் விநாயகர் சிதம்பரேஸ்வரர் உமையாம்பிகை முருகன் மஹாலட்சுமி என வரிசையாக உள்ளனர். கோஷ்ட மூர்த்திகள் சண்டேசர் உள்ளனர். தென்மேற்கில் நால்வர்கள் உள்ளனர். வடகிழக்கில் பைரவர் நவகிரகங்கள் உள்ளனர்.  கோயில் வாயிலில் புதிய தேர் ஒன்றும் பெருமானை சுமந்து செல்ல தயாராக நிற்கிறது.
சிவாலயத்தின் தென்புறம் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ராமர்  கோயில் கொண்டுள்ளார்.  கிழக்கு நோக்கி காட்சி தரும் ராமனின் முன் மண்டபத்தில் நாம் வடக்கு நோக்கி நின்றோமானால் சிவாலயத்தில் இருக்கும் நடராஜரையும் கோதண்டராமனையும் ஒருசேர தரிசிக்கலாம். 

கோயிலின் பின் புறம் மிகப்பெரிய குளம் ஒன்றுள்ளது, அதுவே மூர்த்திகள் கிடைத்த குளம். கட்டிய கோவிலுக்குப் புஷ்கரிணியாக இப்போது ‘ராம தீர்த்தம்’ எனப்படுகிறது. அதற்க்கு  முன்  ரொம்ப காலமாக ‘நல்ல பிள்ளை பெற்றாள் குளம்’ என்ற பெயர் வழங்கி வந்திருக்கிறது. யார் அந்த ‘நல்ல பிள்ளை பெற்றாள்’ என்றால் கௌசல்யை தான். ‘கௌஸல்யா ஸுப்ரஜா’ என்ற சுப்ரபாத வரிகளில் வரும் ’சுப்ரஜா’வுக்கு நற்றமிழ் சொல் தான் ‘நல்ல பிள்ளை’ என்பது. 

ஐந்தடி உயரத்துக்கு சர்வாங்க சுந்தரனாய் நிற்கும் ராமசந்திர மூர்த்தியை எவ்வளவு  நேரம்  பார்த்தாலும் தெவிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படியொரு நளினமான  சிற்ப வேலைப்பாடு. அவரது வலது கையில் ‘ராம சரம்’ என பெயரிடப்பட்ட  அம்பு உள்ளது.  சீதா லட்சுமணன் அனுமன்  அனைத்துமே அழகு. வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்கவேண்டிய மூர்த்திகள். பஞ்ச ராம தலங்களில் ஒன்றல்லவா! 
பணிவின் திறலாக, பக்தியின் வடிவமாக ‘திறல் விளங்கு மாருதி’ என்று ஆழ்வார் சொன்னது போல வடித்தெடுக்கப்பட்டதாகும். பவ்யமாக பேசும்போது வலதுகையை வாயின் முன்புறத்தில் வைத்து பணிவாக நிற்கும் காட்சி. 

 ஆலயத்தின் வடபுறத்தில் செட்டியார்விடுதி எனப்படும் பெரிய வீடு, சுமார் தோராயமாக நூறு  ஆண்டுகளுக்கு மேல்  பழமையான உள்முற்ற வீட்டில் தங்கி இக்கோயிலை பெரி.நா.நாராயணன் செட்டியார் எனும் நகரத்தார் குடும்பத்தினர்  பெரும் திருப்பணி செய்தது 1922 என ஒரு கல்வெட்டு சொல்கிறது. அதன் பின்னர் நூறாண்டுகள் கடந்து சென்ற வருடம் தான் குடமுழுக்கு கண்டது.

Tuesday, August 19, 2025

சர்க்கரை நோய் தீர சித்தர்கள் காட்டிய கரும்பேஸ்வரர்

சர்க்கரை நோய் தீர சித்தர்கள் காட்டிய கரும்பேஸ்வரர் வழிபாடு 
சர்க்கரை நோய் தீர சித்தர்கள் காட்டிய கரும்பேஸ்வரர்
கரிகால் சோழருக்கும் பாண்டியருக்கும் நடைபெற்ற வெண்ணிப் போர் சரித்திரப் பிரசித்திபெற்றது. இந்தப் போர் நடைபெற்ற இடம்தான் கோயில்வெண்ணி. 

தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் முற்காலப் பெயர் திருவெண்ணியூர். புலவர் வெண்ணிக் குயத்தியார் பிறந்த ஊரும் இதுதான் என்பார்கள்.

இங்குள்ள மிகத் தொன்மையான அருள்மிகு கரும்பேஸ்வரர் ஆலயம்தான் சர்க்கரை நோய்க்கான பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. 

கரும்பு வடிவில் சிவலிங்கம்!

மூலவர் கருவறையில் கரும்பே உருவாய்க் காட்சி தருகிறது சிவலிங்கத் திருமேனி. கரும்புக் கட்டுகளைச் சேர்த்து வைத்தாற்போன்ற பாண அமைப்பைக் கொண்டவர்  இந்த மூலவர். அவருக்கு அபிஷேகம் செய்யும்போது, அந்த வடிவம் நமக்கு நன்றாகப் புலப்படுமாம்.

கரும்பேஸ்வரர் சிவலிங்கத்தின் பாணம் அமைந்திருக்கும் ஆவுடை, நான்கு மூலைகளை உடைய சதுர வடிவமுடையது (சதுர் அஸ்த்ர வடிவம்) இதுபோன்ற திருவடிவம் அபூர்வமானது. 

இங்கே மூலவரையும் அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம்.

சர்க்கரை நோய்க்கான பரிகாரம்

சர்க்கரை நோயால் பாதிப்புறும் அன்பர்கள் இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டால், அவர்களுடைய அதிகப்படியான சர்க்கரையை ஈசன் எடுத்துக்கொள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை! பாம்பாட்டி சித்தர் கோயில்வெண்ணி இறைவன் சர்க்கரை நோய் தீர்ப்பது குறித்துப் பாடியுள்ளார்.

‘ரசமணியோடு வெல்லம் கலந்து, கோயிலை வலம் வந்து, சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரார்த்தித்தால், குருதியில் சர்க்கரை குறையும்’ என்று காகபுஜண்டர் பாடியுள்ளார்.

ஆனால், இன்றைய சூழலில் ரசமணியை வாங்கிப் படைப்பது என்பது சாத்தியமல்ல. 

எனவே, மக்கள் தங்களால் இயன்றளவு ரவையை வாங்கி, வெல்லம் கலந்து, படைத்து வழிபடுகின்றனர். எறும்புகளுக்கு அது உணவாகிறது. இறைவன் அதை ஏற்று, சர்க்கரை நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக நம்பிக்கை. 

அதேபோல், அன்னதானத்துக்கு அரிசியும் வெல்லமும் வாங்கிக் கொடுத்தும், சுவாமியை வழிபடலாம் என்கிறார்கள்.

குழந்தைக்காகப் பிரார்த்திக்கும் பக்தர்கள், வளையல்களை வாங்கி வந்து அம்பாள் சந்நிதியில் கட்டிவிடுகின்றனர். பெண்கள் வளையல் சாத்தி வேண்டிக் கொண்டால் கண்டிப்பாகக் கருத்தரிப்பர் என்பது நம்பிக்கை.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வேளாங்கண்ணி இரஜதகிரீஸ்வரர் என்ற வெள்ளியங்கிரிநாதர்.

#நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பலரும் அறியாத சைவத் தலமான 
#வேளாங்கண்ணி #இரஜதகிரீஸ்வரர் என்ற 
#வெள்ளியங்கிரிநாதர் 
#வேல்நெடுங்கண்ணி
என்ற #வேலனகண்ணி 
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙇🙇

வேளாங்கண்ணி முதலிலிருந்தே ஒரு கிறித்தவத் தலம் என்றே நம்மில் பெரும்பாலானோர் நம்பவைக்கப்பட்டுள்ளனர். 
நாம் நினைப்பதுபோல் இது கிறித்தவத் தலமன்று, 
சைவத் திருத்தலம்.

வேளாங்கண்ணி இரஜதகிரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்தில் அமைந்த வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள சிவன் கோயிலாகும்.

பனி சூழந்த நிலையில் சூரிய வெளிச்சத்தில் வெள்ளியைப் போலப் பிரகாசிப்பதால் கயிலாயத்தை வெள்ளியங்கிரி என்றழைப்பர். வெள்ளியங்கிரிநாதரான சிவபெருமான் இங்கு இரஜதகிரீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி வேல்நெடுங்கண்ணி ஆவார்.

சிக்கல் கோயிலில் முருகப்பெருமானுக்கு சக்தி வேலைத் தந்து அருளிய பெருமை வேல்நெடுங்கண்ணிக்குரியதாகும். இக்கோயிலில் ஆடி மாதம் தீமிதித் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
‘கண்ணி’ என்பது அழகிய விழிகள் பொருந்திய பெண்ணைக் குறிக்கும் சொல். ‘காமக்கண்ணியார்’ குறிஞ்சித் திணை சார்ந்த அகப்பாடல்கள் பாடிய சங்ககாலப் பெண்பாற் புலவரது பெயர்.

தமிழ்ச்சைவ வரலாற்றில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுண்டு. சமய குரவர் காலத்திற்குப்பின் எழுந்த சிவாலயங்களிலும் தேவார மூவர் அமைத்த முறையில் இறைவர் – இறைவியர்க்கு அருந்தமிழ்ப் பெயர்களே வழங்கின என்பதே அது. தேவாரப் பாக்களை ஊன்றிப்படிக்கும்போது அம்பிகையின் இத்தகைய பெயர்கள் பல தெரியவருகின்றன.

வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி”. அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது.

”மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
‘வேலனகண்ணி’யொடும் விரும் பும்மிடம்………” (திருஞானசம்பந்தர்)

சேல் [மீன்] போன்ற கண் அமைவதால் “சேலன கண்ணி”, வேல் போன்ற விழி இருப்பதால் “வேலன கண்ணி”. பிற்காலத்தில் வேளாங்கண்ணி எனத் திரிந்தது. வேலன கண்ணி, சேலன கண்ணி என்பன உவமையால் அமையும் பெண்பாற் பெயர்கள்.

”கருந்தடங் கண்ணி” என்னும் பெயரும் அம்மைக்கு உண்டு. ”வேலினேர்தரு கண்ணி” எனவும் தேவாரம் அம்மையைப் போற்றுகிறது. ”இருமலர்க் கண்ணி” இமவான் திருமகளாரின் மற்றோர் அழகிய பெயர். மதுரையம்பதியின் மங்காப்புகழுக்குக் காரணம் மலயத்துவசன் மகளார் அன்னை அங்கயற்கண்ணியின் ஆளுமை. திருக்கற்குடி எனும் தலத்தில் அம்மையின் பெயர் “மையார் கண்ணி” , ”மைமேவு கண்ணி” [அஞ்ஜனாக்ஷி]; கோடியக்கரை – குழகர் ஆலயத்தில் அம்மையின் நாமம் ’மையார் தடங்கண்ணி’. சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒருசேர வருகை புரிந்து வழிபட்ட மிக முக்கியமான திருத்தலம். அருணகிரிநாதரும் பாடியுள்ளார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் இந்த இடம் சுட்டப்படுகிறது. இதுவும் ஒரு கடற்கரைச் சிவத்தலம். “வாள்நுதற்கண்ணி” என்பது மற்றோர் பெயர். அன்னையின் கடைக்கண்பார்வை வீச்சு தவத்தில் ஆழ்ந்திருந்த ஐயனைச் சலனமடையச் செய்தது. விளைவு ? உலகம் உய்ய ஒரு திருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன். இதே ரீதியில் காவியங்கண்ணி, நீள் நெடுங்கண்ணி, வேல்நெடுங்கண்ணி,வரி நெடுங்கண்ணி, வாளார் கண்ணி என்று இன்னும் சில பெயர்களும் உண்டு.

“மானெடுங்கண்ணி” என்று ஒரு திருநாமம். ’மான்போன்ற மருண்ட பார்வையை உடையவள்’ என்பது பொருள்.

’மானெடுங்கண்ணி’ மணிக்கதவு அடைப்ப
இறையவன் இதற்குக் காரணம் ஏது என
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்…..

அம்பிகையின் கயல் போன்ற விழிகளைக் காழிப்பிள்ளையார் பாடுகிறார்:

’நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில்
”சேலன கண்ணி”வண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்…..’

இவ்வாறு, அழகியலில் தோய்ந்த அடியார்கள் இது போல அம்மையின் கண்ணழகையும், கண்களின் கருணையையும் வைத்தே பல இனிய நாமங்களைச் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

இதெல்லாம் தேவாரப் பாதிப்பன்றி வேறில்லை என உறுதிபடச் சொல்ல முடியும். சிவாலயங்கள்தோறும் ஓரிரு பதிகங்களையாவது பளிங்குப் பலகைகளில் பொறித்து வைப்பது அரசின் கடமை. அப்போது தான் தேவாரப் பதிகங்களுக்கும் ஊர்களுக்கும் உள்ள பிரிக்க முடியாத இணைவு மக்களுக்குத் தெரிய வரும்.

கடற்கரைச் சிவாலயங்கள்: 

தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை முழுவதும் எல்லாப் பகுதிகளிலும் சைவம் செழிப்புற்றிருந்தது.

”மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்……”

என்று சம்பந்தர் முன்பு கடலோரம் அமைந்திருந்த கபாலீஸ்வரர் கோயிலின் மாசிமகத் திருவிழாவை வர்ணிக்கிறார். கடற்கரைத் தலங்களில் எல்லாம் மாசி மகம் தீர்த்தவாரிக்கு இறைத் திருமேனிகளைக் கடற்கரைக்குக் கொண்டு சென்று தீர்த்தவாரி செய்விப்பது இன்றுவரை நடைபெற்று வருகிறது.

கீழைக் கடல் சார்ந்த பல ஆலயங்கள் :

திருவொற்றியூர், மயிலைக் கபாலீசுவரர் ஆலயம், திருவான்மியூர் மருந்தீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம், நாகபட்டினம் காயாரோஹணேசுவரர் ஆலயம், கோடியக்கரைக் குழகர் ஆலயம், வேதாரண்யம் -காரைக்கால் – புகார் ஆலயங்கள் போன்றவை முக்கியமானவை. வேளாங்கண்ணி ஆலயமும் இவற்றுள் ஒன்று.

மயிலையில் மட்டும் வாலீசுவரர், மல்லீசுவரர், வெள்ளீசுவரர், காரணீசுவரர், தீர்த்த பாலீசுவரர், விரூபாக்ஷீசுவரர் எனும் தலங்கள்; கபாலீசுவரர் ஆலயம் தவிர. தருமமிகு சென்னையில் பேட்டைகள் தோறும் இன்னும் பல சிவாலயங்கள். இங்கு அவற்றைப் பட்டியலிடவில்லை.

திருவதிகை வீரட்டானம் – அப்பரடிகள் வரலாற்றோடு தொடர்புடையது; சமய குரவர் பாடல் பெற்ற தலம்.
சுவாமி – வீரட்டானேசுவரர்
அம்மை – பெரியநாயகி

திருச்சோபுரம் – சம்பந்தர் பாடிய கடல் தலம். கடலூர் அருகில்.
சுவாமி – சோபுரநாதர்
அம்மை – வேல்நெடுங்கண்ணி

திருச்சாய்க்காடு – காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தே அமைந்துள்ள ஒரு கடல் தலம்.கோச்செங்கட் சோழர் செய்த மாடக்கோயில். இயற்பகை நாயனார் வழிபட்டு, முத்தி பெற்ற திருத்தலம். நாவுக்கரசரும், காழிப்பிள்ளையாரும், ஐயடிகள் காடவர்கோனும் பாடியுள்ளனர். போருக்குத் தயாராக வில்லேந்திய வேலவரை இவ்வாலயத்தில் காணலாம். எதிரிகள் தொல்லையால் பாதிப்புக்கு உள்ளானோர் முருகனை வழிபட்டுத் துயர் நீங்கப்பெறலாம்.

சுவாமி : சாயாவனேச்வரர்

நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே !

– திருஞானசம்பந்தர்

நாகூர் – நாகவல்லி அம்மை உடனுறை நாகநாத ஈசுவரர் கோயில் கொண்ட கடல் தலம்.நாகநாத சுவாமியால் நாகூர் எனும் பெயர். காமிகாகமத்தை ஒட்டியதாக அமைந்த மிகப் பழமையான ஆலயம் இது. நாகூர் தர்கா பின்னர் மராட்டிய மன்னர் ஆட்சிக்காலத்தில் தோன்றியது. நாகவல்லி அம்மை உடனுறை நாகநாதரே உண்மையான ‘நாகூர் ஆண்டவர்’.

நாகப்பட்டினம் பகுதியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மீனவர் குலத்துதித்த அதிபத்த நாயனார் வாழ்ந்த நுழைப்பாடி என்ற கிராமக் கடல் கோயில்.

முருகப்பெருமான் போருக்குப் புறப்படுமுன்பாக முக்கட்பிரானை வழிபட்ட கடல் தலம் திருச்செந்தூர்;

இராமேசுவரம் இராமபிரான் வழிபட்ட உலகப்புகழ் பெற்ற கடல் தலம்.

இது போன்ற ஒரு கடல் தலம் தான் வேளாங்கண்ணியும்.

 
இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அப்போது இப்பகுதி குறித்த சரித்திர உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.

அருள்மிகு ரஜதகிரீஸ்வரர் சிவன் கோயில், வேளாங்கண்ணி
அருள்மிகு ரஜதகிரீஸ்வரர் சிவன் கோயில், வேளாங்கண்ணி
சில நூற்றாண்டுகளுக்குமுன் கடற்கரைப் பகுதிகளில் குடியேறி அவற்றைக் கைப்பற்றிய போர்த்துகீசியர், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் அங்கிருந்த பல இந்து ஆலயங்களை அழித்தனர். அவ்விடங்களில் கிறிஸ்தவ சர்ச்சுகளையும் அமைத்தனர். சென்னை கபாலீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம் இவை இரண்டும் இந்த கிறித்தவ “சகிப்புத்தன்மைக்கு” மிகச் சிறந்த சான்றுகளாகும். ‘கோவா’ கடற்கரைப் பகுதியிலும் பல ஆலயங்களை போர்ச்சுகீசியர் அழித்தனர். 1567ல் போர்த்துகீசிய மிஷநரிகள் கோவாவில் தரைமட்டமாக்கிய ஆலயங்களின் எண்ணிக்கை 350. அக்காலகட்டத்தில் இந்துக்கள் துளசிச்செடி வளர்ப்பதற்குக்கூட அங்கு தடை இருந்தது.

கிறித்தவ மிஷநரிகளின் கலாசாரத் திருட்டு:

காவி உடை அணிதல், ஆலய விமானங்களின் பாணியில் சர்ச் எழுப்புதல், சர்ச்சுக்கு முன்பாகக் கொடிமரம் நிறுவுதல், ’வேதாகமம்’,‘சுவிசேஷம்’ ‘அக்னி அபிஷேகம்’ , ‘ஸர்வாங்க தகன பலி’ போன்ற சங்கதச் சொற்களை வலிந்து புகுத்துதல், கொடியேற்றுதல், தேரிழுத்தல் போன்ற சடங்குகளைத் தம் சமயத்துக்குள் புகுத்தி இந்துக்களைக் கவர்ந்து மதம் பரப்பும் முயற்சிகளைப் பல நூற்றாண்டுகளாகவே கிறித்தவ மிஷநரிகள் தமிழ்நாட்டில் செய்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாகவே மேரி மாதாவுக்குத் தமிழர் முறையில் சேலை அணிவித்து , ‘வேலன கண்ணி’ எனும் பெயர் வேளாங்கண்ணி என்று ஆக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

உமையன்னைக்கே உரியது ‘பெரிய நாயகி’ எனும் நாமம். புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில், இறைவன் பெயர் பிரகதீஸ்வரர் (பெருவுடையார்), இறைவி பெயர் பிரகன்னாயகி (பெரிய நாயகி) என்பது அனைவரும் அறிந்தது. இந்தப் பெயரை வெட்கமில்லாமல் களவாடி, ‘பெரியநாயகி மாதா’ எனக் கிறித்தவ மிஷநரிகள் மேரியினுடையதாக மாற்றிக்கொண்டு விட்டனர்.

உண்மை சுடும் . கிறித்தவர் கொதிப்படைவதில் நியாயம் இல்லை. இந்து தெய்வங்களைச் சாத்தான், பிசாசு என ஒருபுறம் இகழ்ந்துகொண்டு, மறுபுறம் இந்து தெய்வப் பெயர்களைக் கவர்ந்து ஏசுவுக்கும் மேரிக்கும் சூட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை குறைந்தபட்ச மனச்சாட்சியுள்ள தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

சில கேள்விகள்:

வேளாங்கண்ணி இப்போது மிகப் பிரபலமான கிறித்தவப் புனிதத் தலம் என்றே நிலைநிறுத்தப் பட்டுவிட்டது. ஆனால், இது எப்படி கிறித்தவத் தலமாகிறது என்பதற்கான அடிப்படையான சில கேள்விகள் அப்படியே தான் உள்ளன.

’வேளாங்கண்ணி’ கிறித்தவப் பெயரா ? விவிலிய ஆதாரம் உள்ளதா ?

இல்லையெனில், வேளாங்கண்ணி என்ற பெயரை சூட்டியது யார்? போர்த்துகீசிய மாலுமிகளா, வாத்திகனில் உள்ள போப்பரசரா அல்லது பின்னால் வந்த மிஷநரிகளா? ஐரோப்பிய மிஷநரிகள் இதே போன்று வேறு தூய தமிழ்ப் பெயர் எதையாவது சூட்டியுள்ளார்களா?

திரித்துவத்துக்குப் [Trinity] புறம்பாக மேரியைத் தனியாக பெண் தெய்வமாக வழிபடுவது விவிலியத்திற்கும் கிறித்தவ இறையியலுக்கும் ஏற்புடையதா?

இது ஒரு பொதுவான கிறித்தவ வழிபாட்டுத் தலம் என்றால், கிறித்தவரில் எல்லாப் பிரிவினரும் ஏன் வேளாங்கண்ணிக்கு வந்து வழிபடுவதில்லை ?

ஆரோக்கியத்துக்கும் வேளாங்கண்ணி எனும் பெயருக்கும் என்ன தொடர்பு ?

வேளாங்கண்ணிக்கும் கிழக்குத் தேசத்து லூர்து (Lourdes of the East) என்ற கருத்தாக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? லூர்து மேரி (Lourdes) தலத்தில் கொடியேற்றமும், தேர் பவனியும் உண்டா ? ஐரோப்பியர் மொட்டையடித்துக் கொள்வார்களா ? வேளாங்கண்ணியில் உள்ள மேரி மாதாவின் திருத்தோற்றங்களுக்கு (apparitions) எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்பது கிறித்தவர்களாலேயே ஒப்புக் கொள்ளப் படுகிறது. இவ்வாறிருக்க, இந்த சர்ச் ‘கிழக்கின் லூர்து’ ஆனது எப்படி ?

லூர்து மேரியை ஆரோக்கிய மாதாவாக ஏன் வழிபடுவதில்லை ?

பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இவ்வழிபாட்டுத்தலத்துக்கு 1962 வரை பஸிலிகா என்ற அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ? அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?

இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில் ஒருவர் கூட ஆரோக்கிய மாதாவை வந்து வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. இந்த முரணுக்கு என்ன காரணம்?

மிகச் சமீபகாலத்தில் வாழ்ந்த கிருஷ்ண பிள்ளை (இரட்சணிய யாத்திரிகம் எழுதியவர்), மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற தொடக்க காலக் கிறித்தவத் தமிழ் அறிஞர்கள் கூட வேளாங்கண்ணி திருத்தோற்றம் குறித்து எழுதியுள்ளதாகவோ வேளாங்கண்ணியில் மொட்டைபோட்டு வழிபட்டதாகவோ குறிப்புகள் இல்லை. 1981ல் மறைந்த தேவநேயப்பாவாணர் கூட‘கிறித்தவக் கீர்த்தனைகள்’ நூலில் ஆரோக்கிய மாதாவைக் குறித்துப் பாடல்கள் இல்லை. இதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

ஏராளமான இந்தியக் கிறிஸ்தவர்கள் குழுமிக் கும்பிடும் வேளாங்கண்ணி சர்ச் ஆலயத்தில் இதுவரை எந்தப் போப்பும் ஆரோக்கிய மாதாவை மண்டியிட்டு வணங்கியுள்ளதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணம்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆதாரபூர்வமாக விடைகாண முற்பட்டால், வேளாங்கண்ணியின் உண்மையான சரித்திரம் தெரியவரக்கூடும். 

. ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்ட உகந்த கோயில்!

பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்ட உகந்த கோயில்!
சிதம்பரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிவபுரி அருள்மிகு உச்சநாதர் திருக்கோயில். சிதம்பரம் - கவரப்பட்டு நகரப் பேருந்தில் பயணித்தால் இத்தலத்தை அடையலாம்.

சிவபெருமான், அகத்தியருக்குக் காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவ - பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர். சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்ததாக வரலாறு.

சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி, ‘திருநெல்வாயில்' என அழைக்கப்பட்டது. தற்போது இத்தலம் ‘சிவபுரி’ எனப்படுகிறது. இங்குதான் இக்கோயில் அமைந்துள்ளது. உமையன்னை சக்தியிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த திருத்தலம் இது.
திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர் - பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாக அவதரித்தார். தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்கார வைத்து விட்டு, தான் மட்டும் கோயில் குளத்தில் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, ‘அம்மா! அப்பா!' என அழுதார்.

இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதி தேவியை நோக்கி, அக்குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவபெருமானுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழி அமர்ந்து விட்டார்.

திருக்குளத்தில் நீராடி விட்டு வந்த தந்தை, "உனக்குப் பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே'' எனச் சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சிவ - பார்வதி தரிசனம் தந்த திசையை நோக்கி கையை நீட்டிய சம்பந்தர், ‘தோடுடைய செவியன்' என்று பதிகம் பாடினார். தனது குழந்தைக்கு அம்பாளே பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார் சிவபாதர்.

சம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது. மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோயிலுக்கு அவர் சென்றார். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர்.

சம்பந்தரும், அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோயில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன், ‘உச்சிநாதர்' என்றும் ‘மத்யானேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் கனகாம்பிகை. இப்பகுதி மக்கள் இக்கோயிலை ‘கனகாம்பாள் கோயில்' என்றே அழைக்கின்றனர்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, August 18, 2025

உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கெளரிகுண்டம் அநேகதங்காவதநாதர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றானதும் 
பார்வதி தேவியார் தவமிருந்த 
வட மாநிலத்தில் உள்ள #திருஅநேகதங்காவதம் என்ற #கெளரிகுண்டம்
#அநேகதங்காவதநாதர்
#மனோன்மணி_அம்மன் திருக்கோயில் 

கௌரி குண்ட் என்பது இந்தியாவின் உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு மலையேற்றத்திற்கான ஒரு இந்து புனித யாத்திரை தளம் மற்றும் அடிப்படை முகாம் ஆகும் . இது கர்வால் இமயமலையில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 6502 அடி உயரத்தில் அமைந்துள்ளது . ஏழாம் நூற்றாண்டின் தமிழ் சைவ நியதிப் படைப்பான தேவாரத்தில் அனேகதங்கவாதேஸ்வரர் போற்றப்படுகிறார் .
மூலவர் :அநேகதங்காவதநாதர்
அம்மன் :மனோன்மணி
தல மரம்:
தீர்த்தம் :கௌரிதீர்த்தம்

#வழிபட்டோர்:

இறைவியார், சந்திரன், சூரியன், சம்பந்தர் - நீடல் மேவுநிமிர்.

கௌரிகுண்டத்திற்குத்  தென்புறம் கௌரி கோயில் உள்ளது. 
கெளரி தவம் செய்த இடம் இது என்று கூறப்படுகிறது. அநேகதங்காவதம் என்னும் பாடல் பெற்ற சிவத்தலம் இதுதான் என்று கருதப்படுகிறது.
(திருக்கயிலாயத்தின் கிழக்கு பரிக்கிரமத்தில் அமைந்துள்ள கெளரிகுண்டமே அநேகதங்காவதம் என்றும் சிலர் கூறுவார்கள்)

"சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்றன் அநேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே

என்று திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனைப் பாடுகிறார். 

இங்கு மூலஸ்தானத்தில் சிவபெருமான் இலிங்கவடிவில் அமைந்துளளார். 1 அடி உயரம்.  இங்கும் ஒரு சிறுகுளம் உள்ளது. அதில் கோமுகி உள்ளது.

#புராண_வரலாறு:

கௌரி குண்ட் என்பது பார்வதி தேவியுடன் தொடர்புடையது , அவர் கௌரி என்றும் அழைக்கப்படுகிறார். பார்வதி தேவி சிவனின் அன்பைப் பெறுவதற்காக பல சந்நியாசி மற்றும் யோகப் பயிற்சிகளை உள்ளடக்கிய தவம் செய்தார் . உள்ளூர் பாரம்பரியம் கௌரி குண்ட் என்று கூறுகிறது, இந்த நடைமுறைகளை மேற்கொள்ளும் போது கௌரி வாழ்ந்த இடமாகும், மேலும் இங்கு தான் சிவன் இறுதியாக அவள் மீதான தனது காதலை ஒப்புக்கொண்டார். அவர்கள் அருகில் உள்ள திரியுகி நாராயணில் திருமணம் செய்து கொண்டனர் . கௌரி குண்டில் வெந்நீர் ஊற்றுகள் உள்ளன, அவை குளிக்கும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. 

விநாயகர் தனது யானைத் தலையைப் பெற்றதற்கான புராணக்கதையுடன் இந்த இடமும் தொடர்புடையது . குண்டத்தில் நீராடும் போது , ​​பார்வதி தேவி விநாயகரை தனது உடலில் உள்ள சோப்புக் கவசத்தால் வடிவமைத்து, அவருக்கு உயிர் கொடுத்து, நுழைவாயிலில் தனது காவலராக அமர்த்தினார். சிவபெருமான் அந்த இடத்திற்கு வர, அவரை விநாயகர் தடுத்து நிறுத்தினார் . இந்த அவமானத்தில் கோபமடைந்த சிவன், விநாயகரின் தலையை வெட்டினார், பார்வதி சமாதானம் செய்யவில்லை. சிறுவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்று அவள் வலியுறுத்தினாள், சிவன் அலைந்து திரிந்த யானையின் தலையை எடுத்து விநாயகரின் உடலில் வைத்தார். பார்வதி தனது மகனைத் திரும்பப் பெற்றாள், விநாயகர் அதன் மூலம் அவர் உலகம் முழுவதும் அறியப்பட்டார். 

#தல_வரலாறு: 

இது வடநாட்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். 
பார்வதி தேவி தவமிருந்த இடமானதால் கெளரிகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. சூரியனும் சந்திரனும் வழிபட்ட இடம்.
கேதாரம் செல்லும் வழியில் கேதார்நாத் மலையடிவாரத்தில் உள்ளது. இமயத்தலங்களில் ஒன்றான இத்தலத்தை திருக்கேதார யாத்திரை செல்லும் போது தரிசிக்கலாம். 

#தல_சிறப்பு:

இக்குண்டத்தில் வெந்நீர் ஊற்று உள்ளது. கெளரிகுண்டம் போகும் வழியில் பல புண்ணிய தலங்களும் புண்ணிய தீர்த்தங்களும் உள்ளன. அவைகளை தரிசனம் செய்பவர்கள் புனிதம் அடைவார்கள். இங்கே பல அடி உயரத்தில் பனிபடர்ந்த மலையில் இரண்டு வெந்நீர் ஊற்றுகள் உள்ளது. பக்தர்களுக்காக உண்டாக்கியது போலவே இயற்கையாகவே அமையப் பெற்றது அதிசயம். 

இக்கோயிலில் வரலாற்று காலத்திலிருந்து பல கல்வெட்டுகள் உள்ளன. ஒரு தேவதாசியின் மகன் கோயிலை கட்டி முடிக்க முடியாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக சபதம் செய்ததாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது. 

இது கேதாரத்திற்குச் செல்லும் மலையேற்றப் பாதை துவங்கும் இடத்தில் உள்ளது.

இங்கு அம்மை திருக்கோயிலும் அதற்கு நேர் எதிரே சிவபெருமானின் சுயம்பு லிங்கத் திருமேனியின் கோயிலும் உள்ளது.

அம்மை ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் அற்புதமான திருவுருவம் அம்மை திருக்கோயிலில் உள்ளது.

#புனிதர்கள் மற்றும் #இலக்கிய_குறிப்பு:

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ச் சைவப் புலவரான திருஞான சம்பந்தர் , முதல் திருமுறையாகத் தொகுக்கப்பட்ட தேவாரத்தில் ஒரே பாடலில் தெய்வத்தைப் போற்றினார் . அவர் காளஹஸ்த் கோயிலுக்குச் சென்றபோது இந்த வசனத்தை வழங்கியதாக நம்பப்படுகிறது . இக்கோயில் தேவாரத்தில் போற்றப்படுவதால் , சைவ நியதியில் குறிப்பிடப்பட்டுள்ள 276 கோவில்களில் ஒன்றான பாடல் பெற்ற ஸ்தலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ஒரு கோவில் உள்ளது , அதே பெயரில் அனேகதங்காவதேஸ்வரர் கோவில் உள்ளது . 

#அமைவிடம்:

இந்தியாவில் உள்ள உத்தராஞ்சல் என்னும் மாநிலத்தில் ரிஷிகேஷ் ரயில் நிலையத்தில் இருந்து டேராடூனில் இருந்து ரிஷிகேஷ் ருத்ரபிரயாகை வழியாக  கெளரிகுண்டம் செல்லலாம். 
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம், ஹரித்துவாரத்திலிருந்து, கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்த கௌரி குண்டம் என்ற இடத்தில் அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் உள்ளது. இத்தலத்தில் சூரியனும் சந்திரனும் வழிபட்ட ஸ்தலம் என்பது தொன்நம்பிக்கை. அம்பிகை தவம் செய்த இடம். இங்குள்ள வெந்நீர் ஊற்றில் நீராடல் நலம். திருகாளஹஸ்தியை வணங்கிய பின்பு அங்கிருந்தே சம்பந்தர் பாடியது

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பழநி முருகனுக்கு நான்கு வித அபிஷேகம் மட்டும் தான்..

பழநி ஸ்ரீ பால தண்டபாணி: 
1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம். 

2.ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

3.இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

4.அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

5.இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

7.தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

8.அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

9.இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் - ஒன்பது வருடம்.

10.அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

11.இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

12. 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

13. இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

14.அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

15.போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

16.கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் ... சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

17.தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

18.பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.

திருவாவினன்குடி சிறக்கும் குருபரா குமரா குழந்தை வேலாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா 
ஏழைபங்காளா பரமேஸ்வரிக்குப் பாலா தயாபரா 
வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா.

ஸ்ரீ பழநி மலை முருகப் பெருமானுக்கு அரகரா.. அரகரா.. அரகரா.. அரோகரா..

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம்* "திருவாடுதுறை"

நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான்,    இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தக...