Wednesday, January 28, 2026

முருகப்பெருமானின் புகழ் பாடும்மருதமலை முருகன் கோவில்.


முருகப்பெருமானின்புகழ் பாடும்
திருக்கோவில்கள்.....
6. மருதமலை முருகன் கோவில்.
★ தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மருதமலையின் மீதுஇக்கோயில் அமைந்துள்ளது. இந்தமலைமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச்சேர்ந்தது. முருகனின் ஏழாவதுபடைவீடாகக்கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்குவேட்டுவ கவுண்டர் மன்னர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலைமுருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலமான திருமுருகன் பூண்டிகோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.
★ மருதமலையில் அமைந்துள்ள, இந்த திருக்கோவில் சங்க காலத்தில் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது என புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் இந்த கோவில் "மருதாசல மூர்த்தி திருக்கோவில்" எனறு  குறிப் பிட்டுள்ளதைக் காணலாம். முற்கால த்தில் கொங்கு நாட்டில் வாழ்ந்த ஒரு வர் இளம் வயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடி க்கு மருந்து தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரைப் பாம்பாட்டி என்றுஅழைத்தனர். ஒருசமயம்இவர், மிக நீண்ட காலம் வாழ்ந்து தனது கொடிய விஷத்தை நாகரத்தினமாக மாற்றும் தன்மையுடையது என நம்பப்படும் பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார்.
★ அங்கு பதினென்சித்தர்களுள்ஒருவரான சட்டைமுனிவர் அவருக்குகாட்சிதந்து, விஷப்பாம்புகளை பிடிப்பது பெரியவிஷயமல்ல. “உடலுக்குள்இருக்கும்குண்டலினிஎன்னும்  பாம்பை கண்டறிவதுதான்பிறப்பின்பயனாகும். அதைவிடுத்து காட்டில்திரியும்பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையே!” எனக் கூறினார். அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச்சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார். முருகப்பெருமான் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். பக்தர்கள் இவரை, பாம்பாட்டி சித்தர் என்று அழைக்கின்றனர்.
★ இவருக்கு முருகன் காட்சியளித்த திருவுருவம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியராக ஆதிமூல ஸ்தானத்தில் அருள்பாலிக்கிறார். பாம்பாட்டி சித்தர்பிரதிஷ்டைசெய்து வழிபட்ட முருகன் தண்டாயுதபாணியாக கருவறையில் அருள்பாலிக்கிறார்.சிவபெருமானே அண்ணாமலையாக இருப்பது போல் முருகப்பெருமானே மருதமலையாக இருப்பதால்   இம்மலைகுறையோடுவரும் பக்தர்களின் உடல் மற்றும் மனஉளைச்சல்கள்,பாசவினைகள் இரண்டையும் நீக்குவதாக நம்பப்படுகிறது.
★ புனிதமான இந்த மருதமலையில் மருத்துவ மூலிகைகள் நிறைந்திருப்பதால் இதன்இதமான காற்றும், அமைதியான சூழலும் பக்தர்களின் மனதில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் தருகிறது. சித்தர்களும்முனிவர்களும் இந்தமலையை நாடிவந்து தவம் புரிந்ததோடு தெய்வீக அருமருந்தான ‘காயகல்பம்’ தேடி இங்கு வந்தனர். மேலும் கச்சியப்ப முனிவர் எழுதிய பேரூர் புராணத்தின்படி, ‘காமதேனு’ என்ற விண்ணுலகப் பசு இம்மலையின் மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து வந்ததாகவும், மருதம் மரத்தடியில் உள்ள ஊற்றுகளில் நீர் அருந்தியதா கவும் கருதப்படுகிறது.
★ பேரூர் புராணம் கொங்கு நாட்டில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி மலை நீலிமலை மற்றும் மருதமலை ஆகியவற்றை முறையே சிவன், பார்வதி மற்றும் சுப்ரமணியரின் வெளிப்பாடுகளாகவும், மூன்று மலைகளும் சோமாஸ்கந்தத்தின் வடிவில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. முருகப்பெருமானே மலை ரூபத்தில் காட்சியளிக்கிறார் என்பது ஐதீகம். இங்குதான் அசுரன் சூரபத்மனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சுப்பிரமணியரை அணுகி அசுரனை அழிக்கும்படி வேண்டினர். தேவரைக்காக்கும் பொருட்டே முருகப் பெருமான சுயம்பாக தோனறினார் என்பது ஐதீகம்.
★ மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோவில் பெயர்க் காரணமாக பின்வரும் கதையைக் கூறுகின்றார் கள். இது உண்மையாகக்கூட இருக் கலாம். ஒருமுறை மருத மலையில் உலவிய சித்தர் ஒருவர் கோடையின் தாக்கத்தால் அதிக களைப்பாலும் தாகத்தாலும் தவித்து அங்கிருந்த மருதமரம் ஒன்றின் நிழலிலமர்ந்து, முருகப்பெருமானிடம் தண்ணீர் வேண்டினார். முருகனின் அருளால் அதிசயம் போல, அவர் அமர்ந்திருந்த மருதமரத்தின் வேர்களில் இருந்து நீர் வெளியேறியது. சித்தர் மனமகிழ்ந்து முருகனை, மருதம் மற்றும் ஜலத்தின் (நீர்) இறைவன் என்று போற்றினார்.  காலப்போக்கில் மருதஜலபதி மருதாசலபதி ஆனது. மருதமரங்கள் நிறைந்திருப்பதால் இநத மலையை மருதமலை எனறும் சொல்வதுண்டு.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள்.

ஆரண்யேச்வரம் (கீழைத் திருக்காட்டுப் பள்ளி)  ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள்! - கீழைத்திருக்காட்டுப்பள்ளி அதிசயமும் வரலாறும்  தமி...