Saturday, January 31, 2026

வாழ்க்கை வளம் பெற வள்ளலார் கூறிய போதனைகள்.

வள்ளலார்_கூறிய_அற்புதமான வாழ்க்கை_போதனைகள்......
🪔வள்ளலாரின் மிக முக்கியமான இரண்டு அம்சங்களான 'பசிப்பிணி போக்கும் சேவை' மற்றும் 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' பற்றி விரிவாகக் காண்போம்:🪔🪔🪔

🔥1. பசிப்பிணி போக்கும் சேவை (சத்திய தருமச்சாலை)
வள்ளலார் "பசி" என்பதை ஒரு பெரும் நோயாகக் கருதினார். பசியோடு இருப்பவனுக்குத் தத்துவம் பேசுவது வீண் என்று அவர் நம்பினார்.
 
🔥அணையாத அடுப்பு: 1867-ஆம் ஆண்டு வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கினார். அன்று அவர் ஏற்றி வைத்த அடுப்பு,150 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தினமும் பசி போக்கி வருகிறது.
 
🔥* ஜீவகாருண்யம்: "பசியினால் இளைத்து வரும் ஏழைகளுக்கு ஆகாரங் கொடுப்பதே மேலான புண்ணியம்" என்பது அவர் வாக்கு.
 
🔥* மரணமிலாப் பெருவாழ்வு: ஒரு மனிதன் ஆன்மீகத்தில் உயர வேண்டுமென்றால், முதலில் அவன் உடல் பசியின்றி இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் அடிப்படை விதி.

🔥2. அருட்பெருஞ்ஜோதி அகவல்
வள்ளலார் பாடிய பாடல்களிலேயே மிகவும் புனிதமானதாகவும், உயர்ந்ததாகவும் கருதப்படுவது இந்த 'அகவல்' ஆகும்.
 
🔥* மிக நீண்ட பாடல்: இது 1596 வரிகளைக் கொண்ட ஒரே பாடலாகும்.

🪔🪔🪔அனுபவப் பதிவு🪔🪔🪔: 
அவர் இறைவனை (அருட்பெருஞ்ஜோதி) எப்படிக் கண்டார், அவருக்குள் ஏற்பட்ட ஆன்மீக மாற்றங்கள் என்ன என்பதை இதில் விவரித்துள்ளார்.🪔🪔

🔥* மந்திர வரி: > "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி"🪔

🪔என்னும் புகழ்பெற்ற வரிகள் இந்த அகவலில் இருந்தே கிடைத்தன.🪔
🔥3. வள்ளலாரின் முக்கியமான புரட்சிகரமான கருத்துக்கள்:
 
🔥சாதி மறுப்பு: "சாதியும் மதமும் சமயமும் பொய்" என்று துணிச்சலாகக் கூறினார்.
 
🔥உயிர்க்கொலை எதிர்ப்பு: இறைவனுக்கு உயிர்களைப் பலியிடுவதைக் கடுமையாக எதிர்த்தார். 

🔥புலால் (இறைச்சி) உண்பதைத் தவிர்க்கச் சொன்னார்.

🔥 ஒளி வழிபாடு: சிலைகளை வணங்குவதை விட, அறிவாகிய ஒளியை (ஜோதி) வணங்குவதே சிறந்தது என்றார்.

🔥"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" 🔥

என்ற அந்த ஒற்றை வரி, அனைத்து உயிர்கள் மீதும் அவர் கொண்டிருந்த எல்லையற்ற கருணையை உணர்த்துகிறது.🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
#வாழ்க்கை_நிகழ்வு
#வடலூர்_சத்திய_ஞானசபையில் #நேரடியாக_எடுத்த_பட #தொகுப்புக்கள்...

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!
*தேவைக்கு செலவிடு........
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......
*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...
*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......
*அவர்களிடம் அன்பாய் இரு.......
*அவ்வப்போது பரிசுகள் அளி......
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........
*அடிமையாகவும் ஆகாதே.........
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!
*அதைப்போல
*பெற்றோரை மதிக்காத குழந்தைகள்,உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......
உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென வேண்டிக் கொள்ளலாம்.. 
பொறுத்து கொள்.
அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,கடமை ,அன்பை அறியார்.

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு ஆனால்......நிலைமையை அறிந்து அளவோடு கொடு எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே 

*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி வைத்திராதே....நீ எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து காத்திருப்பர்.....எனவே கொடுப்பதை கொடுத்து விடு,தரவேண்டியதை பிறகு கொடு.

*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,

*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு....
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..நண்பர்களிடம் அளவளாவு.

*நல்ல உணவு உண்டு....நடை பயிற்சி செய்து.....உடல் நலம் பேணி......இறை பக்தி கொண்டு......குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!

*வாழ்வை கண்டு களி...ரசனையோடு வாழ்.....வாழ்க்கை வாழ்வதற்கே,

நான்கு நபர்களை புறக்கணி....
மடையன்
சுயநலக்காரன்
முட்டாள்
ஓய்வாக இருப்பவன்

நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே.....
பொய்யன்
துரோகி
பொறாமைக்கைரன்
மமதை பிடித்தவன்

நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே.... 
அனாதை
ஏழை
முதியவர்
நோயாளி

நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே.....
மனைவி
பிள்ளைகள்
குடும்பம்
 சேவகன்

நான்கு விசயங்களை ஆபரணமாக அணி....
பொறுமை
சாந்த குணம்
அறிவு
அன்பு

நான்கு நபர்களை வெறுக்காதே.....
தந்தை
தாய்
சகோதரன்
சகோதரி

நான்கு விசயங்களை குறை.....
உணவு
தூக்கம்
சோம்பல்
பேச்சு

நான்கு விசயங்களை தூக்கிப்போடு....
துக்கம்
கவலை
இயலாமை
கஞ்சத்தனம்

நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு......
மனத்தூய்மை உள்ளவன்
வாக்கை நிறைவேற்றுபவன்
கண்ணியமானவன்
உண்மையாளன்

நான்கு விசயங்கள் செய்.....
தியானம் , யோகா
நூல் வாசிப்பு
உடற்பயிற்சி
சேவை செய்தல்

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை நாமும் கடைபிடிப்போம்.....

-ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள்.

ஆரண்யேச்வரம் (கீழைத் திருக்காட்டுப் பள்ளி)  ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள்! - கீழைத்திருக்காட்டுப்பள்ளி அதிசயமும் வரலாறும்  தமி...