Monday, February 23, 2026

ஒத்தாண்டேஸ்வரர் திருமழிசை, திருவள்ளூர்

ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம்
கரிகாலப்பெருவளத்தான், இத்தலத்திற்கு அருகிலுள்ள மற்றொரு தலத்தில் சிவனை வழிபடுவதற்காக தனது யானையில் சென்றான். அப்போது யானையின் கால் ஒரு கொடியில் சிக்கிக்கொண்டது. கையால் அதனை களைய முயன்று முடியவில்லை. எனவே, தனது உடைவாளைக்கொண்டு அக்கொடிகளை வெட்டினான்.
 அடியிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த மன்னன், கொடிகளை விலக்கி பார்த்தபோது உள்ளே ஒரு லிங்கம் இருந்தது. பதறிப் போன மன்னன், லிங்கத்தை வெட்டிய அதே வாளைக்கொண்டு, சிவபாவம் செய்த தனது வலக்கையை வெட்டி வீசினான். 

 அவனது பக்தியில் மெச்சிய சிவன், அம்பாளுடன் ரிஷபவாகனத்தில் காட்சி தந்து, இழந்த கையை மீண்டும் உடலுடன் பொருத்தினார். எனவே இவரை "கைதந்தபிரான்' என்று அழைக்கிறார்கள்.

 மன்னனுக்கு ஆறுதல் மொழி சொல்லியும், சிவனுக்கு அவரது அடியார்களின் கதையைச்சொல்லியும் அவர்களின் மனதை அம்பிகை குளிர்வித்தாள். எனவே இவள் "குளிர்வித்த நாயகி' என்றழைக்கப்படுகிறாள்.

இங்குள்ள நடராஜர் அம்பாளைப் பார்த்த படியும், அம்பாள் அவரைப் பார்த்தபடியும் உள்ளனர். நடுவில் நந்தி: மன்னன் தனது கையை வெட்டியபோது அவனைக்காத்து, தர்மத்தை நிலைநாட்ட சிவன் வேகமாக வந்து மன்னனுக்கு காட்சி தந்தார். அப்போது, சிவனின் வாகனமான நந்தி அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாம். எனவே, இங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் நடுவில் நந்தி இருக்கிறது. சுவாமிக்கு முன்புறம் அதிகாரநந்தி, பிரதோஷ நந்தி இருப்பதுடன் அவருக்கு பின்புறத்தில் கோஷ்டத்தையடுத்து கிழக்கு நோக்கியபடி தர்மநந்தியும் உள்ளது.
   இங்குள்ள லிங்கம் தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் உள்ளது. கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். கிழக்கு நோக்கியிருக்கும் இவ்விருவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒத்தாண்டேஸ்வரரை வணங்கினால், மனோபலம் ஏற்படும் என்பதால் இவருக்கு "மன அனுகூலேஸ்வரர்' என்றொரு பெயரும் உள்ளது.

இங்குள்ள விநாயகர் பிரசன்ன விநாயகர்.
குடும்பத்தில் பிரச்னை உள்ள தம்பதியர்கள் இங்கு ஒருவரை ஒருவர் பார்த்த நிலையில் உள்ள நடராஜர் - அம்பாளை வணங்கினால், மனசஞ்சலம் நீங்கி ஒற்றுமை பிறக்கும், இல்வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்து விமானம் கஜபிருஷ்ட அமைப்பில் உள்ளது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

மின்னல் தாக்கி வெடிக்கும் அதிசய லிங்கம்

அமானுஷ்யம்- 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னல் தாக்கி துண்டுகளாக வெடிக்கும் லிங்கம்* 
இந்தியாவில் அதிசயம் நடக்கும் பல கோவில்கள் உண்டு. கோவில்களுக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னல் தாக்கி துண்டுகளாக வெடிக்கும் லிங்கம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

இப்படிப்பட்ட அதிசய நிகழ்வு நடக்கும் கோவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிஜிலி என்ற மலைமீது மகாதேவ் ஆலயம் ஒன்றில் நடக்கிறது. இது மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும்.  இக்கோவில் கருவறையில் உள்ள லிங்கத்திற்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்னல் தாக்கும். இந்த நவீன யுகத்தில் இது மிகவும் ஆச்சர்யமான விஷயம் தான்.
இக்கோவிலைப் பற்றி ஒரு புராணக் கதையும் சொல்லப் படுகிறது. குலந்த் எனும் அரக்கன் மலைப் பாம்பு வடிவம் எடுத்து பூமியில் உள்ள அனைவரையும் துன்புறுத்தி வந்தான். இவன் மத்தனா என்ற கிராமத்திற்கு வந்து அங்கு பாயும் வ்யாஸ் நதியைத் தடுத்து நிறுத்தி விட்டான். இதனால் பல உயிர்கள் நீரில் மூழ்கி மாண்டன.  இதனால் கோபமடைந்த சிவபெருமான் அரக்கனை வதம் செய்கிறார். உடனே அரக்கன் பிஜிலி மலையாக மாறியதாகவும், அதன் மீது மகாதேவ் கோவில் கட்டப்பட்டது என்றும் தெரிகிறது.

பிறகு சிவபெருமான்  இந்திரனை அழைத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கோவில் லிங்கத்தை மின்னல் காக்குமாறு கட்டளையிட்டார். மின்னலின் தாக்குதலால் லிங்கம் மட்டும் தான் உடையும் கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படாது!


இக்கோவில் புரோகிதர்கள் உடைந்த லிங்கத் துண்டுகளை சேகரித்து அதோடு கடலைமாவு, பருப்பு மற்றும் உப்பு சேர்க்காத வெண்ணை  இவற்றை  பசை மாதிரி ஆக்கி உடைந்த லிங்கத்தை ஒன்று சேர்த்து பூசுகின்றார்கள். இது காய்ந்ததும் பழைய லிங்கமாக மாறிவிடும். மின்னல் தாக்கியதும் கோவிலை கொஞ்ச நாட்கள் திறக்க மாட்டார்கள். 

லிங்கம் நன்றாகக் காய்ந்ததும் பழையபடி அபிஷேகம், ஆராதனை செய்கிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் லிங்கம் உடைந்த சுவடே தெரியாது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, February 20, 2026

மீனாட்சி சொக்கநாதசுவாமி திருக்கோயில் , மன்னார்குடி

அருள்மிகு மீனாட்சி  சொக்கநாதசுவாமி திருக்கோயில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, மன்னார்குடி - 614001  
*மூலவர்: அருள்மிகு சொக்கநாத சுவாமி

*அம்பாள்:  அருள்மிகு மீனாட்சி அம்மன்

*ஸ்தல விருட்சம்: பலாமரம். 

*கருவறையில்  அருள்மிகு சொக்கநாத சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

*கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18ஆம் நூற்றாண்டை சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும். ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தி௫வாரூர் மற்றும் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. 
*இந்த மீனாட்சி சொக்கநாதர் கோயில் திருமண பிரார்த்தனைத் தலமாக திகழ்கிறது. அன்னை மீனாட்சி தெற்கு நோக்கிய சந்நிதியில் அருள்புரிகிறார்.

*மேலும் இக்கோயில், கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை மற்றும் வைகாசி விசாகப் பெருவிழாக்களுக்குப் பெயர் பெற்றது.  

*திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஜயங்கொண்டநாதர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், நீலகண்டேசுவரர் கோயில், கைலாசநாதர் கோயில், இந்த
"மீனாட்சி சொக்கநாதர் கோயில்", காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேசுவரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், அண்ணாமலை நாதர் கோயில் ஆகிய எட்டு கோயில்களின் நடராஜ மூர்த்திகளுக்கு ஆருத்ரா அன்று காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
இதையடுத்து, வண்ண மின் விளக்குகள், பூ வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட தனித்தனி ரதத்தில் எட்டு நடராஜ மூர்த்திகளும் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று ராஜகோபாலசுவாமி கோயில் முன்பு உள்ள கருடக்கம்பம் அருகே ஒரே வரிசையில் காட்சி அளிப்பார்கள்.
பின்னர், இந்த மூர்த்திகளுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை,  சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

*இக்கோயில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

*கிழக்கு நோக்கிய இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கிறது. விநாயகர், நால்வர், தன்வந்திரி, தலவிநாயகர், சித்திவிநாயகர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, ஏகாம்பரேஸ்வரர், முருகன், விஷ்ணு, மகாலட்சுமி, சரஸ்வதி, ஐயப்பன், நவகிரகங்கள், பைரவர் மற்றும் சனீஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.  

 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, February 19, 2026

ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்


நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.
தோஷங்களை நீக்கும் ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்

அடிமுடி தேடிய தோஷம் நீங்க பிரம்மன் வழிபட்ட தலங்களில் ஒன்று, வழக்கத்திற்கு மாறாக அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்த ஆலயம், நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.

அடிமுடி தேடிய தோஷம் நீங்க, பிரம்ம தேவன் வழிபட்ட ஏழு தலங்களில், ஆறாவது தலமாக விளங்குகின்றது இந்த ஆலயம்.

மன்னன் காலத்தில் ஆம்பூர் வனப்பகுதியில் இறைவன் புற்றினால் மூடி மறைந்த நிலையில் வாழ்ந்து வந்தார்.

இப்பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனை மந்தையைச் சேர்ந்த பசு ஒன்று, நாள்தோறும் இந்தப் புற்றின் மீது நின்று கொண்டு, பால் பொழிவதை வழக்கமாக கொண்டிருந்தது.

இதைக் கண்காணித்த இடையன், மன்னனிடம் நடந்த விவரத்தைச் சொன்னான். உடனே மன்னன் அந்தப் புற்றை இடிக்க ஆணையிட்டான்.

மன்னனின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் புற்றை இடித்தபோது, நாகம் காத்து வந்த சிவலிங்கத்தின் மீது அடிபட்டு ரத்தம் பீறிட்டது. இதனால் அனைவரும் பயத்தில் கலைந்து ஓடினர்.

அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், புற்றில் இருந்தது தானே என்றும், தனக்கு தனி ஆலயம் எழுப்பி, நாகம் காத்த என்னை ‘நாகநாதன்’ என்று அழைக்கும்படியும் கூறி மறைந்தார்.

மன்னனும் அதன்படியே அதே இடத்தில் ஒரு ஆலயம் எழுப்பி, குடமுழுக்கு விழாவை நடத்தி முடித்தான். இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வடுவை, இன்றும் இறைவன் திருமேனியில் காணலாம்.

ஆம்பூர் நகரின் மையப்பகுதியில், சுமார் 1½ ஏக்கர் நிலப்பரப்பில், சற்று பள்ளமாக 9 படிகள் கீழிறங்கி செல்லும் விதமாக ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் அமைப்பு பிற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

தென்கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் ஐந்து கலசங்களைத் தாங்கி கம்பீரமாக நிற்கின்றது.

ராஜகோபுரம் முழுவதுமே கலை நயமிக்க சுதைச் சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகின்றன. பிட்டுக்கு மண் சுமத்தல், அனுமன் சிவலிங்கத்தை ராமருக்குக் கொண்டு வருதல், அஷ்டதிக்குப் பாலகர்கள், கால சம்ஹாரம், திருஞான சம்பந்தரின் அற்புதங்கள் முதலான புராண வரலாறுகள் சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

ராஜகோபுர நுழைவுவாசலில் வல்லப கணபதியின் புடைப்புச் சிற்பமும், அவரின் வாகனமும் காட்சி தருகின்றன. கோபுர வாசலைக் கடந்ததும், அக்னி மூலையில் உள்ள குருவின் பார்வை நம் மீது படுகிறது.

எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி, காட்சி தர, மேல் மண்டப விளம்பில் எம்பெருமானின் திருமணக் கோலமும், தெய்வ வடிவங்களும் சுதைச் சிற்பங்களாக அழகுற காட்சி தருகின்றன. நந்திதேவர் நவ துவாரக் கல் ஜன்னல் வழியே நாகநாதசுவாமியை தரிசிக்கின்றார்.

தெற்குப் பிரகாரத்தில் மார்க்கபந்தீசுவரர் சன்னிதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அன்னை மரகதாம்பிகை, விநாயகர், நந்திதேவர் காட்சிதர, அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது.

சப்த மாதர் சன்னிதி வடக்கு நோக்கி உள்ளது. தென்மேற்கில் அறுபத்துமூவர் சன்னிதியும், அடுத்ததாக வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதியும் அமைந்துள்ளன. அருகே தலமரமான வில்வம் பசுமையாகக் காட்சி தருகிறது.

நாகநாத சுவாமி 

ஆலயத்தில் நடுநாயகமாக நாகநாதசுவாமி வீற்றிருக் கிறார். துவாரபாலகர்கள் காவல் நிற்க, கருவறைச் சுற்றில் விநாயகர், பச்சைக் கல்லினால் ஆன தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, எழிலான துர்க்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சிலா வடிவங்கள் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.

தட்சிணாமூர்த்தியின் பின்புறம் ஆஞ்சநேயர் சிவலிங்கத் திருமேனியை வழி படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

ஈசான்ய பகுதியில் காளத்தீசுவரர், ஞான பிரசன்னாம்பிகை, பலிபீடம், நந்தி ஆகியவை சிவப்பு கருங்கல் மேனியராக அமர்ந்து திருமண வரம் தருவது குறிப்பிடத்தக்கது. 

இறைவன் நாகநாதசுவாமி சதுர வடிவ ஆவுடையாரில் சுயம்பு மூர்த்தியாக எளிய வடிவில், ஒளி வீசும் தோற்றத்துடன் அருள்காட்சி வழங்குகின்றார்.

இவரைக் கண்டறிய புற்றை அகற்றியபோது ஏற்பட்ட வடுவை, இன்றும் இவரின் திருமேனியின் பின்பகுதியில் கண்டு மெய் சிலிர்க்கலாம்.

வடமேற்குப் பிரகாரத்தில் அன்னை சமயவல்லி சன்னிதி அமைந்துள்ளது. இதற்குள் சுக்ர வார அம்மன், பள்ளியறை அமைந்திருக்க, அன்னையை தரிசித்தபடி சிம்ம வாகனம் காணப்படுகிறது.

அன்னை சமயவல்லி எளியவளாக கலைநயம் கொண்டு, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடு, மேல் இரு கரங்களில் பாச அங்குசம் தாங்கி, கிழக்கு முகமாய்க் காட்சி தருகிறாள்.

அன்னை, சுவாமியின் உயரத்தை விட, ஒரு படி மேலாக காட்சியளிப்பது, வழக்கத்திற்கு மாறான அமைப்பாக உள்ளது.

கன்னி மூலையில் நவக்கிரகங்கள் 

பொதுவாக, நவக்கிரக சன்னிதி வடகிழக்குப் பகுதியான ஈசான்ய மூலையில் அமைந்திருப்பது இயல்பான ஒன்று.

ஆனால் இங்கு தென்கிழக்குப் பகுதியான கன்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. இதன் மூலம் ராஜகோபுரத்தை கடந்து ஆலயத்திற்குள் நுழையும் போதே குருவின் பார்வை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, சனி பகவானின் இடதுபுறம் காக வாகனம் இருப்பது தனிச் சிறப்பாகும்.

இவ்வாலயத்தில், இரண்டு பைரவர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.

இவ்வாலயம் நாக தோஷங்கள் அனைத்திற்கும், ஏற்ற தலமாக அமைந்துள்ளது. இது தவிர திருமணப்பேறு, குழந்தைப்பேறு இவற்றிற்கு உகந்த தலமாகவும் இது அமைந்துள்ளது.
திங்கட்கிழமைகளில் உண்ணா நோன்பிருந்து வழிபடுவது குழந்தைப்பேறு தரும். குடும்ப பிரச்சினைகள், நோய்கள் தீரவும், சிறந்த வேண்டுதல் தலமாக இது திகழ்கின்றது.

இந்தக் கோவிலில் பங்குனி கிருத்திகையில் தொடங்கி பங்குனி உத்திரம் வரை பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இது தவிர, தமிழ்ப்புத்தாண்டு லட்ச தீபம், சித்திராப் பவுர்ணமி, சித்திரை விஷு, கிருத்திகை, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், கார்த்திகை கடைசி சோமவாரம் சங்காபிஷேகம், மார்கழி ஆருத்ரா, தைப் பொங்கல், கிருத்திகை, மகா சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து சிவாலய வழிபாடுகளும், கிருஷ்ணன், ஐயப்பனுக்கும் விழாக்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.

இவ்வூர் பல்லவர், சோழர், விஜயநகர மன்னர், ஒய்சாலர் என பல்வேறு மன்னர்கள் காலங்களிலும், முக்கியத்துவம் பெற்ற ஊராக விளங்கியதை, இவ்வூரில் கிடைத்த நான்கு கல்வெட்டுகள் சான்றாக அமைந்துள்ளன.

கி.பி. 1896-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையின்படி, இவ்வூரில் மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இரண்டு கல்வெட்டுகள் ஆம்பூரின் கங்கா ரெட்டிக்காரத் தெருவில் கண்டறியப்பட்டன. அவை இரண்டுமே கி.பி. 895-ம் ஆண்டைச் சார்ந்தவையாகும்.

இவை நிருபதுங்க வர்ம பல்லவன் கால, வீரக்கல் எனும் நடுகற்களாகும். இன்றைய ஆம்பூர், பழங்காலத்தில் ‘ஆமையூர்’ என அழைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இவ்வூரில் ஆண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் இது ‘ஆண்மை ஊர்’ என்பதே பிற்காலத்தில் ‘ஆமையூராக’ மாறி, தற்போது ஆம்பூர் என்று சொல்வழக்கில் உள்ளது.

மூன்றாவது கல்வெட்டு, நாகநாத சுவாமி திருக்கோவில் சுவற்றில் உள்ள கி.பி. 1193-ம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 15-ம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும்.

இதில் இக்கோவில் நிர்வாகம் செய்த சித்திரமேழி பெரியநாட்டார் என்ற குழுவினர் இக்கோவிலின் ஸ்ரீபலி எனும் வழிபாடு மேற்கொள்ள அரங்கம் அமைத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. இதில் இறைவன் திருப்பெயர் நாகேசுவரர் என்றும், ஊரின் பெயர் ஆமையூர் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரின் மையப்பகுதியில் இத் திருக்கோவில் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

கரூர் வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன்.

*கரூர் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமண்யர்: இங்கே வேல் செலுத்தினால் வேண்டுதல் நிறைவேறும்* ....


கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் ஊரில் இயற்கை எழில் கொஞ்சும் சிறு குன்றின் மீது அமைந்திருக்கும் அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள். 

முருகப்பெருமான் அருளும் தலங்கள் ஒவ்வொன்றாகத் தேடித் தேடிச் சென்று திருப்புகழ்பாடி நமக்கெல்லாம் அந்த முருகனின் அருட்கடாட்சம் கிடைக்கும்படி வழி செய்தார் அருணகிரிப் பெருமான். அப்படி அவர் பாடிய தலங்களில் ஒன்று வேலாயுதம்பாளையம்.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதியில் அமைந்திருக்கும் தலம். இங்கு மலைமீது அருளும் பாலசுப்பிரமண்யர் திருக்கோயிலைக் கட்டி, இந்தப் பகுதிக்கு வேலாயுதம்பாளையம் என்று பெயரிட்டவரும் அவர்தான் என்கிறார்கள்.

அருணகிரிநாதர் இத்தலத்தைப் பாடியபோது, 'புகழிமலை மேவு பெருமாளே' எனப் பாடிப் பரவினார். சமணப் படுகைகள் கொண்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மலைத் தலத்தின் சிறப்புகளைக் காண்போம்.

பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னனும், அதியன் என்ற மன்னனும் போர்க் காலங்களில் இம்மலையில் உள்ள குகைகளை, போர்த் தந்திர வேலைகளுக்குப் பயன்படுத்தியதாக திருக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

புகழூர் என்று அழைக்கப்படும் இக்குன்று அமைந்துள்ள இடத்தில் சமண முனிவர்கள் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வந்ததாகவும், சங்க காலத்தில் இப்படி அடைக்கலம் புகும் இடங்களை புகழூர் என்று அழைக்கும் வழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், 8 - ம் நூற்றாண்டில் அரியணையில் அமர்ந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னனின் மெய்க்கீர்த்தியில் இவ்வூர் `புகழியூர்' என அழைக்கப்பட்டதாகவும் இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் உரைக்கின்றன.

சுமாா் 400 அடி உயரமுள்ள இந்த மலையின் அடிவாரத்தில் விநாயகா் சந்நிதி உள்ளது. நுழைவாயில் மண்டபத்தில் மலையை நோக்கி மேற்குத் திசையில் மயில்வாகன சந்நிதியும் அமைந்துள்ளது.

மேலும் அந்த மலையைக் காவல் காக்கும் அய்யனாருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. இதிலிருந்து 48 படிகள் ஏறியவுடன் தென் திசையில் உள்ள சிறிய குகையில் சிவன்-பாா்வதி, ஒளவையாா் சுதை சிற்பங்கள் அமா்ந்த நிலையில் உள்ளன.

இவற்றின் அருகில் கிழக்குத் திசை நோக்கி ஏழு கன்னிமாா்கள் சந்நிதி உள்ளது. கடும் தவத்தில் இருக்கும் சுதையாலான அகத்தியரின் சிலையைத் தரிசிக்கலாம். மேலும் 14 படிகள் ஏறினால் வட திசை பாா்த்த இடும்பன் சந்நிதி உள்ளது.

தொடா்ந்து ஏறினால் கிழக்குத் திசையில் அமைந்துள்ள மூலஸ்தானத்திற்குள் நுழையலாம். முருகப்பெருமான் கருவறையில் பாலசுப்பிரமண்யராக கையில் வேலேந்திக் காட்சி அருள்கிறார். ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் வஜ்ஜிரம், சக்தி ஆகியவற்றோடு அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடனும் பாலசுப்பிரமணியராக கடவுள் காட்சி அருள்கிறாா்.

இந்தக் கோயிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பு சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தைக் குறிக்குமாம். இதிலிருந்து இந்தக் கோயிலின் புராதனத்தை அறியமுடிகிறது.

இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தம். செய்த பாவங்கள் யாவும் தீர்ந்து நல்வாழ்வு அமையவேண்டி, பக்தர்கள் தங்கள் கையில் வேலோடு இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், திருமணத் தடை விலகி, இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும்.

சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். ஐப்பசி சஷ்டி தினத்தில் தினை மாவு வைத்து வழிபடுவது கூடுதல் விசேஷம்.

மழை பெய்ய வேண்டியும், ஊர் ஒற்றுமைக் காகவும் இக்கோயிலின் 315 படிகளுக்கும் நெய் தீபம் அல்லது சூடமேற்றி படி பூஜை செய்வது வழக்கம்.

தைப்பூச தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் இளநீர்க் காவடி எடுத்து வந்து, முருகப்பெருமானைத் தரிசித்துச் செல்கின்றனர். சூரசம்ஹாரமும் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கிருத்திகை தினத்தில் மூன்று வேளையும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இக்கோயிலில் அன்னதானம் செய்து வழிபட்டால், குடும்பம் செழித்தோங்கும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை வேலாயுதம்பாளையம் சென்று பாலசுப்பிரமண்யரை தரிசனம் செய்து வாருங்கள். வாழ்க்கையில் வளமும் நலமும் கூடும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Tuesday, February 17, 2026

மகிமை மிகுந்த மாசி மாதம்‌

மகிமை மிகுந்த மாசி மாதம்‌ 
பற்றி தெரியுமா?
சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் பதினோராவது மாதம் மாசி ஆகும். 

சூரியன் கும்ப இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலா ன 29 நாள், 48 நாடி, 24 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

மாசி மாத சிறப்புகள்

அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித் ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.

மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது போற்றப் படுகிறது.

சிவபெருமான் குழந்தை வடிவில் வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள்புரிந்தது மாசி மாதத்தில் தான் என்பதும் புராண கூற்று. 

பிரகலாதனைக் கொல்வதற்காக நயவஞ்சக மாக வந்த அரக்கி, தீயில் வெந்து சாம்பலான நிகழ்ச்சி மாசி மாதத்தில்தான் நடந்தது.

மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக் குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம். 

மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப் பிக்கப்படுகிறது. அன்று விரதம் கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர்.

மாசி மகத்தன்றுதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்த அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார்.

மாசி மாதத்திற்கு அதிதேவதை மகாவிஷ்ணு அதனால் மகா விஷ்ணுவை இம்மாதம் முழுவ தும் துளசி தளத்தால் அர்ச்சித்து வழி பட்டால், இல்லத்தில் சுபகரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

மாசி மகத்தன்று சிவபெருமான், பள்ளி கொண்டாப்பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, வல்லாள மகாராஜனுக்கு மகனாகக் காட்சி கொடுத்து, நீத்தார் கடனுக்குரிய வழி பாட்டினை நடத்தினார். 

வல்லாள மகராஜனுக்கு வாரிசு இல்லாததால் சிவபக்தனான மகாராஜனுக்கு சிவன் நீத்தார் கடன் அளித்ததாக புராணங்கள் சொல்கிறது.

மாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் நடை பெறும் முழுக்கு, தேவர்கள் செய்யும் பூஜை என்பது ஐதீகம்.

மாசிமகத் திருநாள் அன்றுதான் அன்னை பார்வதியானவள் தாட்சாயிணி என்ற பெயரில் வலம்புரிச் சங்கில் குழந்தையாக அவதரித்தாள்.

மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பெளர்ணமியில்தான்.

இத்தகைய சிறப்புகளைக் கொண்டது தான் மாசி மாதம்.

காரைக்கால் அம்மையார் 

வைணவத்துக்கு ஆண்டாள்போல, சைவ சமயத்துக்கு காரைக்கால் அம்மையார் திகழ்கிறார். 

கணவனால் புறக்கணிக்கப்பட்ட  புனிதவதி என்ற காரைக்கால் அம்மையார், "இறை வா! இனி எனக்கிந்த மேனியழகு வேண்டாம்; பேய் உருவம் கொடு!' என்று வேண்டிப் பெற்றவர்.

அம்மையாருக்காக சிவபெருமான் நடனம் ஆடி யருளினார். அது ஊர்த்துவ நடனம் எனப்படும். 

அப்போது இசைக்கப்பட்ட சச்சரி, கொக்கரை, தககை, தகுணச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை எனப்படும் 12 இசைக்கருவிகளைப் பற்றி தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

திருவாலங்காட்டில்- நடராஜர் சந்நிதியின் பின் பிறம் ஒரு சுவர் தடுக்கப்பட்டிருக்கும். அதனுள் காரைக்கால் அம்மையார் இருப்பதாக ஐதீகம். 

இதைத்தான் ஆலங்காட்டு இரகசியம் என்பார்க ள். அம்மையார் இறைவனுடன் ஒன்றியது இம்மாசி மாதத்தில்தான்.

குபேரன் பேறு பெற்ற தலம்!

திருநள்ளாறிலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில், 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தண்டிகை என்னும் தலம். இங்கு சௌந்தரநாயகி உடனுறை சனத்குமாரேஸ்வர் அருள்புரிகிறார்.

ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான். 

சப்தரிஷிகளின் ஆலோசனைப்படி திருத் தண்டிகை வந்து வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான். 

தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிப டும் பக்தர்களுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்; 

இறைவனும் அவ்வாறே அருளினார். குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பௌர்ணமி.

மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி  கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங் கள் செய்வது மிகுந்த புண்ணியமாகக் கருதப் படுகிறது.

மாசி மாதம் பௌர்ணமி அன்றுதான் பன்னிரெண்டு வருஷத்துக்கொரு முறை நிகழும் 

மகாமகம் கும்பகோணத்திலும், ப்ரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் பிரஸித்தமானது. அன்று நீராடுதல், தானம் விசேஷமானது.

மாசி மாதம் வரும் சிவராத்திரி விரதம் சிவனு க்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

மாசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாள் வருவது சிவராத்திரி. 

அன்றைய தினம் விரதமிருந்து இரவு முழுவதும் கண்விழித்து சிவபுராணம் பாராயணம் செய்வது நல்லது. 

மாசிமாதம் வரும் மாசிமக விரதம் சிறப்பானது.  அது மாசி மாதத்தில் பவுர்ணமியும் மக நட்சத்திரமும் கூடிய நாள். 

இந்நாளில் கடற்கரைக்கும் நதிகளுக்கும் ஆலயங்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு சென்மக ஸ்தானம் ஆகும். 

இச்சமயத்தில் நாமும் புனித நீராடினால் புண்ணியம் எனக்கூறுவர்.

மாசி சரடு பாசி படரும் 

பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ மாசி மாதம் நல்ல யோகம், திதி கூடிய ஒரு வெள்ளி க்கிழமை அன்று காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து மாங்கல்ய சரடை சுமங்கலி பெண்க ள் அணிந்து கொண்டால் தீர்க்க சுமங்கலியா கவே அவர்கள் வாழ்வார்கள். இதற்கு மாசி சரடு பாசி படரும் என்ற பழமொழியும் உண்டு. 

மாசி வெள்ளிக்கிழமையில் கட்டப்படும் மஞ்சள் சரடு பாசி படரும் வரை நிலைத்திருக்கும். அதாவது நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்பதே இந்த பழமொழியின் பொருள்
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

முள் இல்லாத வில்வமரம் உள்ள ஸ்ரீ அப்பிரதட்சிணேஸ்வரர் சிவாலயம்,


திருச்சி லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅப்பிரதட்சிணேஸ்வரர் சிவாலயம், உலகில் முள் இல்லாத வில்வமரம் முதன்முதலில் தோன்றிய அற்புதத் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதப் பிறப்புகளில் முள் இல்லாத வில்வ மரத்திற்கு மஞ்சள் பூசி வழிபாடு செய்வது சிறப்பு. இது பில்லி, சூனியம் போன்ற தோஷங்களைப் போக்கும் தலமாகவும் கருதப்படுகிறது. 
முக்கிய சிறப்புகள்:
தல பெயர்: ஸ்ரீஅப்பிரதட்சிணேஸ்வரர் கோயில், நகர்.
அமைவிடம்: லால்குடி, திருச்சி.
முள் இல்லாத வில்வம்: இங்குள்ள வில்வ மரத்தில் முட்கள் இருப்பதில்லை, இதுவே இக்கோயிலின் தனிச்சிறப்பு.
வழிபாடு: மாதப் பிறப்பு தினங்களில் (குறிப்பாக வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி) வில்வ மரத்திற்கு அரைத்த மஞ்சள் பூசி, வலம் வந்து வணங்கினால் பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. 
இத்தலம் சிவபெருமானுக்கு 'அப்பிரதட்சிணேஸ்வரர்' (வலஞ்சுழி வராதவர் - முள் இல்லாத வில்வம் காரணமாக) என்ற பெயருடன் வணங்கப்படும் முக்கிய இடமாகும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, February 16, 2026

மாசி மாத அமாவாசை விரதம்

மாசி_மாத_அமாவாசை எப்படி_விரதம்_இருந்தால்_முழுப்பலன்_கிடைக்கும்.*
அமாவாசை முன்னோர் தர்ப்பணம், வழிபாட்டிற்கு ஏற்ற நாள்.
யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யவேண்டும்.
இந்து சாஸ்திரங்களின்படி, மாதம்தோறும் வருகிற அமாவாசை சிறப்பானது என்றாலும், மாசி மாத அமாவாசைக்கு தனி சிறப்பு உள்ளது. மாசி மாதமே சிறப்பானது தான். இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகளும், தானங்களும் இரண்டு மடங்கு நன்மைகளை கொடுக்கக் கூடியது என புராணங்கள் கூறுகின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் பிற மாதங்களில் அமாவாசை அன்று மட்டும்தான் முன்னோர் தர்ப்பணம் செய்வார்கள். ஆனால் மாசியில் பெளர்ணமி அன்று கூட முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குவது புண்ணியம் தரும்.
🌑
மாசி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து தூய்மையான நீரில் நீராடி, விரதத்தை தொடங்கவேண்டும். வீட்டில் இல்லாமல் கோயில் ஆறு, குளங்களில் புனித நீராடினால் நற்பலன்கள் கிடைக்கும். முன்னோருக்கு கோயில் குளம், ஆற்றங்கரை, கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபடவேண்டும். அனைத்து சடங்குகளையும் நிறைவு செய்த பின்னர் அந்தணர்களுக்கு அரிசி, காய்கறி, வஸ்திரம் தானமாக கொடுக்க வேண்டும்.
🌑
பித்ருகளாக கருதப்படும் காகத்திற்கு உணவு கொடுத்த பின் தான் நாம் உணவு சாப்பிட வேண்டும். யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யவேண்டும். வீட்டில் மாலை வேளையில் விளக்கேற்றி முன்னோரை நினைந்து வழிபடவேண்டும். தொழில் செய்யும் நபர்கள் மாசி அமாவாசை நாளில் கண் திருஷ்டி பூசணிக்காய் வாங்கி, உரிய நேரத்தில் பொல்லாத கண் திருஷ்டி கழித்து உடைத்தால் நல்லது.
🌑
*#விரத_பலன்கள்*
🌑
பித்ரு வழிபாட்டிற்கு ஏற்ற மாசி அமாவாசையில், விரதம் இருந்து முன்னோரை வழிபட்டால், அவர்களுடைய ஆன்மா நற்கதி அடையும். நமக்கு ஆசி வழங்கி வாழ்த்தும். குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ள கிரக தோஷங்கள், திருமண தடை, உடல் நலக்கோளாறு விலகிவிடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில், வியாபாரம் விருத்தி அடையும்.
🌑
மாசி அமாவாசை அன்னம் தானமாக கொடுப்பதால் ஆயிரமாயிராம் ஆண்டுகள் பித்ருக்களை திருப்தி செய்த பலன்களை பெறலாம் என்பது விஷ்ணு புராணத்தில் உள்ளது.

Saturday, February 14, 2026

சித்தர்கள்‌ போற்றும் சிவராத்திரி.

*சித்தர்கள்‌ போற்றும் சிவராத்திரி...*
சிவராத்திரி என்பது ஒரு நாள் அல்ல. அது சிவத்தை உணரும் இரவு,

அகந்தை கரையும் தருணம், உள்ளே இருக்கும் பரம்பொருள் வெளிப்படும் நேரம்.

அகத்தியர், போகர், கருவூரர், திருமூலர் போன்ற சித்தர்கள் சிவராத்திரியை ஒரு ஆன்மீக மாற்றத்தின் இரவு என்று விளக்குகின்றனர்.

அகத்தியர் சிவராத்திரியை ஒரு தத்துவமாக விளக்குகிறார்:

• சிவம் = சுத்த சித்தம்
• ராத்திரி = அகந்தை மறையும் இருள்
• சிவராத்திரி = அகந்தை கரையும் இரவு

சித்தர்கள் சிவராத்திரியை ஐந்து வகைகளாக வகைப்படுத்துகின்றனர்:

1. நித்திய சிவராத்திரி – தினசரி தியானம்

2. மாச சிவராத்திரி – மாதந்தோறும் தேய்பிறை சதுர்த்தசி

3. மகா சிவராத்திரி – மாசி மாத சதுர்த்தசி

4. பிரதோஷ சிவராத்திரி – திரயோதசி + சதுர்த்தசி

5. குபேர யோக சிவராத்திரி – ஞாயிறு திரயோதசி + அடுத்த நாள் மகா சிவராத்திரி

6. குபேர யோக சிவராத்திரி

ஞாயிற்றுக்கிழமை திரயோதசி (பிரதோஷம்) +அடுத்த நாள் சதுர்த்தசி (மகா சிவராத்திரி)

இவை இணைந்து வந்தால் அது குபேர யோக சிவராத்திரி.

இந்த நாளில் பூஜை செய்தால்:

செல்வ யோகம்

தொழில் உயர்வு, சூரிய பதவி, குபேர அனுகிரகம் என பல அரிய பலன்கள் கிடைக்கும்.

சிவராத்திரி இரவின் நான்கு ஜாமங்கள்

ஒரு ஜாமம் = 3 மணி நேரம்
ஜாமம்–படி பூஜை முறை

முதல் ஜாமம் (6–9 PM)

அபிஷேகம் – பஞ்சகவ்யம்
பசும்பால்
தயிர்
நெய்
பசு சாணம்
கோஜலம்

செய்யவேண்டியது

ரிக் வேத பாராயணம்
வில்வ அர்ச்சனை

இரண்டாம் ஜாமம் (9–12 PM)

அபிஷேகம் – பஞ்சாமிர்தம்
பால்
தயிர்
நெய்
தேன்
சர்க்கரை

செய்யவேண்டியது

யஜூர் வேதம்
வில்வ அர்ச்சனை

மூன்றாம் ஜாமம் (12–3 AM)

அபிஷேகம்

கொம்புத் தேன்
பச்சைக் கற்பூரம் பூசுதல்

நைவேத்தியம்

• எள் சாதம்

செய்யவேண்டியது

சாம வேதம்
ஆழ்ந்த தியானம்

நான்காம் ஜாமம் (3–6 AM)

அபிஷேகம்

கரும்புச் சாறு
குங்குமப்பூ பூசுதல்

நைவேத்தியம்

• சுத்த அன்னம் + பசுநெய்

செய்யவேண்டியது

அதர்வண வேதம்

வில்வம் + நீலோற்பவ மலர்

சிவராத்திரி ஏன் சக்திவாய்ந்தது?

போகர் கூறுகிறார்:

“சிவராத்திரி என்பது உடல்–மனம்–ஆத்மா ஒன்றாகும் தருணம்”

சிவராத்திரியில் செய்யவேண்டியவை / தவிர்க்கவேண்டியவை

செய்யவேண்டியவை

மௌனம்
தியானம்
தீபம்
வில்வ அர்ச்சனை
மந்திர ஜபம்
தானம்

தவிர்க்கவேண்டியவை

கோபம்
பொய்
மது / மாமிசம்
தூக்கம்
அதிக பேச்சு

சிவராத்திரி மறுநாள்

பகல் முழுவதும் விழித்திருப்பது விரதத்தின் முழுப் பலனைத் தரும்

எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏

நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

 எங்கும்   நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி .   உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹

சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.

Friday, February 13, 2026

சிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள்

சிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் 
சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது. சிவராத்திரியின் சிறப்பு பற்றிய 40 அரிய தகவல்களை பார்க்கலாம்.
1. சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். எனவே சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது.

2. சிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண் விழித்து சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு சிவனை தியானம் செய்ய வேண்டும் சிவனுக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும்.

3. சிவராத்திரி விரதம் இருந்து, நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.

4. வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.

5. சிவாலயத்தில் பலி பீடத்துக்கு அருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும்.

6. 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் நமஸ்காரம் மேற்கொள்ளலாம்.

7. கோவிலில் வடதுபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக் கூடாது.

8. ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.

9.கிழக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.

10. தெற்கு, மேற்கு நோக்கிய சந்நிதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.

11. வடக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.

12. சூரிய கிரகணத்தின் போதும், பொங்கல் தினத்தன்றும் மேற்கே கால் நீட்டி வணங்கக் கூடாது.

13. சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும்.

14. பிராகாரத்தில் பிரதட்சணம் செய்யும் பொழுது மிகவும் நிதானமாகச் செய்ய வேண்டும்.

15. உட்பிராகார பிரதட்சணத்தைவிட வெளிப்பிராகார பிரதட்சணமே மிகவும் சிறந்தது.

16. ஆலயத்தில் குறைந்தது மும்முறை கொடிமரத்துக்கு அருகே வணங்க வேண்டும். மும்முறை வலம் வரவேண்டும்.

17. அபிஷேக காலத்தில் பிரதட்சணம் செய்யக்கூடாது. கொடிமரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்ய வேண்டும்.

18. ஆலயத்தை விட்டு வெளிவரும்போது கொடிமரத்துக்கு அருகில் வணங்க வேண்டும். ஆலயத்துக்குள் எந்த சந்நிதியிலும் வணங்கக்கூடாது.

19. பிரதட்சணத்தின் போது தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும். நிலம் அதிர நடக்கக் கூடாது. பிறருடன் பேசிக் கொண்டு பிரதட்சணம் செய்யகூடாது.

20. இறைவன், இறைவிக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது பிரதட்சண நமஸ்காரங்களைத் தவிர்க்க வேண்டும். ஆலயத்தில் ஆண்டவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக்கூடாது.

21. ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும். நல்லெண்ணைய் ஆரோக்கியத்தை அளிக்கும்.

22. தேங்காய் எண்ணை வசீகரத்தை அளிக்கும். இலுப்ப எண்ணை சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும். மறு ஜென்மத்திலும் நன்மை அளிக்கும்.

23. திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் ஸ்ரீதட்சணாமூர்த்தி அஷ்டகத்தை வியாழக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒன்பது தடவை பாராயணம் செய் தால் பலன் கிடைக்கும்.

24. பூவும், நீரும் சிறந்த சிவபுண்ணியம். செல்வமும், அமைதியும் பெற மகேசனை பூவும், நீரும் கொண்டு வழிபட வேண்டும்.

25. சிவனின் திருமேனியில் சந்தனக்காப்புப் பொருத்திக் குளிர்வித்தால் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் குளிர்விப்பது போல் ஆகும்.

26. கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலான நறுமணப் பொருள்கள் கலந்து இறைவனுக்கு ஒரு முறை சந்தனக் காப்பு செய்தவர்கள் தேவ வருடத்தில் கோடி வருடம் சிவலோகத்தில் இன் புற்றிருப்பார்கள்.

27. உமா தேவியுடன் இணைந்த சிவபிரானை பூஜிக்கின்றவர்கள் பிறவிப்பயனை அடைந்தவர்கள். அவர்கள் பேரின்பத்தை அடைகிறார்கள் என்று சிவானந்தலஹரி கூறுகிறது.

28. சிவாலய வழிபாடு செய்யும் போது லிங்கத்திற்கு வலப்புறம் இருந்து பணிய வேண்டும். 

29. பங்குனி உத்திரம் சிவனுக்கு மிகவும் சிறந்த தினமாகும்.

30. சிவபெருமானுக்குரிய திருப்பணிகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் குற்றமற்ற நல்ல அறமே ஆகும்.

31. சிவன் விரும்பி அணிபவை வெள்ளை எருக்கம் பூ, அருகம்புல், ஊமத்தை, வெண்ணீறு ஆகியவையாகும்.

32. சிவன் கையில் ஏந்தி இருப்பவை சூலம், மான், மழு, துடி, அக்னி.

33. சிவனுக்கு ஆடை தோல்.

34. சிவனுக்கு வாகனம் காளை. ஆபரணம் பாம்பும், எலும்பும். மாலை மண்டை ஓடுகள், பன்றிக் கொம்பு, பிட்சை பாத்திரம்.

35. சிவனுக்குப் புஷ்பாஞ்சலி செய்யும்பொழுது எல்லாப் புஷ்பமும் கலந்து செய்யலாம்.

36. முதல்நாள் சாத்திய வில்வத்தை எடுத்து நீரில் கழுவி மீண்டும் சிவ பூஜை செய்யலாம். ஒரு மாத காலத்திற்கு இவ்வாறு செய்யலாம்.

37. தாமரை, வில்வம், சதபத்ரம் ஆகியவற்றால் சிவனை அர்ச்சிப்பவன் பெரும் செல்வத்தை அடைவான். நீலோத் பலம், ஜாதி மல்லிகை, பாடலம், அரளி, ஆத்தி, கோங்கு, முல்லை, பலாசம் ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

38. புஷ்பபலன் என்னும் நூல் ஒரு கொன்றை மலரை சிவனுக்கு சாத்துபவர் சாலோக பதவியையும், இருமலர்கள் சாத்துபவர் சாமீப பதவியையும், மூன்று மலர்கள் சாத்துபவர் சாரூப பதவியையும், நான்கு மலர் களைச் சாத்துபவர் சாயுஜ்ய பதவியையும் அடைவர் என்று கூறுகிறது.

39. வில்வமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், ஒரு வில்வம் லட்சம் சொர்ண புஷ்பங்களுக்குச் சமம். இதில் ஒன்றினை ஈசனுக்கு அர்ப்பணித்தால் மகாதோஷங்களும் நீங்கி, சகல நன்மைகளும் உண்டாகும்.

40. சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யும்போது, அதன் பின்பக்க நரம்பு மூர்த்தியின் மேல் படும்படி போட வேண்டும். அந்தப் பக்கம் தான் லட்சுமி வாசம் செய்கிறார். ஒற்றைப்படை இதழ்களைக் கொண்ட வில்வம் அர்ச்சனைக்கு மிகவும் நல்லது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, February 11, 2026

மூன்று துண்டுகளாக காணப்படும் அதிசய பாம்பு கோயில்கள்!

 பாம்பின் தலை, உடல், வால்… மூன்று துண்டுகளாக வெவ்வேறு இடங்களில் காணப்படும் அதிசய பாம்பு கோயில்கள்!
இந்திய ஆன்மீக மரபில் நாக வழிபாடு மிகப் பழமையானது.
பாம்பை தெய்வமாக போற்றும் வழக்கம், தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது.
நாகதோஷம், ராகு–கேது தோஷம், குடும்பத் தடைகள், திருமணத் தடைகள் போன்றவற்றை நீக்கும் தெய்வீக சக்தி நாகங்களுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள சில அபூர்வமான நாக வழிபாட்டு தலங்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

 1. மண்ணே முக்கிய பிரசாதம் – நாகர்கோவில் நாகராஜா கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயப்பகுதியில்,
நாகர்கோவில் நகரின் நடுவில் அமைந்துள்ளது நாகராஜா திருக்கோயில்.

இந்த ஆலயத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் –
👉 இங்கு பாம்பே மூலவராக விளங்குகிறார்.

மற்ற கோயில்களைப் போல சிலை வடிவம் அல்ல;
நாகத்தின் புற்று வடிவமே மூலவராக வழிபடப்படுகிறது.
🌿 தனிச்சிறப்புகள்:

கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டுள்ளது

நாகராஜர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருக்கும்

அங்கிருந்து எடுக்கப்படும் மண்ணே முக்கிய பிரசாதம்

இந்த மண்,

6 மாதங்கள் கருப்பு நிறமாகவும்

அடுத்த 6 மாதங்கள் வெள்ளை நிறமாகவும்

மாறுவது இத்தலத்தின் பெரிய அதிசயமாகக் கருதப்படுகிறது.

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு நடைபெறும் வழிபாடு மிகவும் விசேஷமானது.

🟢 2. பாம்பின் தலை – உடல் – வால்… மூன்று இடங்களில் இருக்கும் அதிசயம்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள
தும்பூர் தாங்கல் நாகம்மன் கோயில் உலகிலேயே மிக அபூர்வமான நாக ஆலயமாக கருதப்படுகிறது.

ஏனெனில் இங்கு பாம்பு ஒரே வடிவமாக இல்லாமல்,

👉 தலை – உடல் – வால்
என மூன்று பகுதிகளாக வெவ்வேறு இடங்களில் காணப்படுகிறது!

🐍 தலைப்பகுதி – தும்பூர் தாங்கல்

இந்த ஆலயத்தில் காணப்படும் நாகம்மனின் தலைப்பகுதி மட்டும்,

5½ அடி அகலம்

3½ அடி நீளம்

கொண்ட மிகப்பெரிய வடிவில் உள்ளது.

இதுவே மூலவராக வழிபடப்படுகிறது.

🐍 உடல் பகுதி

கோயிலின் பின்புறம் சுமார் 300 அடி தூரத்தில்
பூமிக்குள் இருந்து வெளிப்பட்ட நிலையில்,
நாகத்தின் நடுப்பகுதி காணப்படுகிறது.

இது மண்வெட்டியால் தோண்டப்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

🐍 வால் பகுதி – 10 கி.மீ தொலைவில்!

இந்த நாகத்தின் வால் பகுதி மட்டும்,

👉 தும்பூர் தாங்கல் ஆலயத்திலிருந்து
சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் – முத்தாம்பிகை அம்மன் கோயிலில் காணப்படுகிறது.

அபிஷேக காலங்களில் மட்டுமே
முத்தாம்பிகையின் திருமேனியில் இந்த வால் பகுதியை காண முடியும் என்பது மிகப்பெரிய அதிசயம்!

🟢 3. நாகர்களே கட்டிய கோயில் – சங்கரன்கோவில்

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள
சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோயில் ஒரு அபூர்வ வரலாறு கொண்ட தலம்.

இக்கோயிலை நாகர்களே கட்டி,
தெய்வத்தை பூஜித்ததாக ஐதீகம் கூறப்படுகிறது.

அதனால்தான் இங்கு –

👉 புற்றுமண் முக்கிய பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்த மண்ணை உடலில் பூசினால்,

கை, கால் ஊனம்

உடல் பலவீனம்

நரம்பு தொடர்பான பிரச்சனைகள்

நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆடித்தபசு திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

🟢 4. சிவலிங்கத்தை சுற்றி நாகங்கள் – நாகலாபுரம்

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் அமைந்துள்ளது
நாகநாதர் திருக்கோயில்.

இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால் –

👉 மூல சிவலிங்கத்தைச் சுற்றி
நாகங்கள் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த தலம்,

நாகதோஷம்

ராகு–கேது தோஷம்

நீக்கும் முக்கிய பரிகார தலமாக விளங்குகிறது.

தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

🟢 5. அடுப்புக்கரி காணிக்கை – நயினார்கோவில்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே
19 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நயினார்கோவில்.

இத்தலம் மிகவும் பழமை வாய்ந்த நாக பரிகார தலம்.

இங்கு சிவபெருமான்,
புற்றின் முன் நாக வடிவில் காட்சி தந்ததால் –

👉 “நாகநாத சுவாமி” என அழைக்கப்படுகிறார்.

விசேஷ வழிபாடுகள்:

கொடிமரம் அருகே ஐந்து தலை நாக சிலை உள்ளது

பக்தர்கள் உப்பை நாகத்தின் மீது கொட்டி வழிபடுகிறார்கள்

அமாவாசை நாளில் விரதம் இருந்து வழிபாடு நடக்கிறது

முகத்தில் கரும்புள்ளி உள்ளவர்கள்,

👉 நாகநாத சுவாமிக்கு அடுப்புக்கரியை காணிக்கையாக வழங்கினால்
நிரந்தரமாக அந்தப் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.

🟢 6. கயிலாசநாதர் நெஞ்சில் பாம்பு – குன்னத்தூர் கோயில்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள
குன்னத்தூர் கோத பரமேஸ்வரர் ஆலயம் ஒரு அரிய அதிசயத்தலம்.

இங்கு மூலவர் கயிலாசநாதரின் நெஞ்சில்,

👉 உண்மையான பாம்பு வடிவம் காணப்படுகிறது!

ஆனால் இதை எப்போதும் பார்க்க முடியாது.

அபிஷேக நேரத்தில் மட்டுமே

தெளிவாக தரிசிக்க முடியும்

என்பது இத்தலத்தின் மிகப்பெரிய அதிசயம்.

மேலும் சிறப்புகள்:

வெளியில் உள்ள நந்தி எழுந்து நிற்க முயல்வது போன்ற தோற்றம்

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 12 கரங்களுடன் ஆறுமுகநயினார்

பைரவர் சிலையின் இடுப்பிலும், மார்பிலும் பாம்பு வடிவம்

இவை அனைத்தும் வேறு எந்த கோயிலிலும் காண முடியாத அபூர்வங்கள்.

ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால்
தோஷம் நிச்சயம் நீங்கும் என்பது நம்பிக்கை.

🕉️ நாக வழிபாட்டின் மகத்துவம்

இந்த ஆறு ஆலயங்களும் நமக்கு சொல்லும் முக்கியமான உண்மை ஒன்று உண்டு.

நாகம் என்பது வெறும் உயிரினம் அல்ல.

👉 அது நம் ஆன்மீக வாழ்வின் காவல் தெய்வம்!

நாக வழிபாடு மூலம்,

குடும்ப சாபங்கள் நீங்கும்

திருமண தடைகள் அகலும்

புத்திர பாக்கியம் கிடைக்கும்

மனஅமைதி உருவாகும்
 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, February 10, 2026

திருத்தலம் திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் ஆலயம் திருவள்ளூர்.

பிரிந்த தம்பதியரை இணைக்கும் சக்தி தட்சிணாமூர்த்தி! 
சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்திய அற்புதமான திருத்தலம் - திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் ஆலயம் (திருவள்ளூர் மாவட்டம்).

இந்தக் கோவிலின் மிக உயரிய சிறப்பு என்ன தெரியுமா? இங்கே தட்சிணாமூர்த்தி தனிச் சன்னதியில் "சக்தி தட்சிணாமூர்த்தி"யாக அருள்பாலிக்கிறார்.

✨ தனிச்சிறப்புகள்: பொதுவாக யோக நிலையிலோ அல்லது சீடர்களுக்கு உபதேசிக்கும் நிலையிலோ தான் தட்சிணாமூர்த்தியைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கே தட்சிணாமூர்த்தி தனது இடது மடியில் அம்பிகையை அமர வைத்து, அணைத்தபடி கருணை பொங்கக் காட்சி தருகிறார். இவருக்கு அருகில் பிருகு முனிவர் வணங்கிய நிலையில் உள்ளார்.
🙏 யார் வழிபடலாம்?

கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியினர் மீண்டும் இணைய...

கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்பட...

திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமைய...

💡 விசேஷ வழிபாடு: வியாழக்கிழமைகளில் இந்தச் சக்தி தட்சிணாமூர்த்திக்கு கள்ளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால், குடும்பத்தில் உள்ள மனக்கசப்புகள் நீங்கி, தம்பதியரிடையே அன்யோன்யம் பிறக்கும் என்பது ஐதீகம்.

சிவமும் சக்தியும் இணைந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தை தரிசிப்பது பெரும் பாக்கியம்!
 இடம்: அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோவில், திருக்கண்டலம் (திருக்கள்ளில்), ஊத்துக்கோட்டை வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.



தட்சிணாமூர்த்தி  குருவாக வெளிப்படுத்துகிறார்

சிவன், தனது உருவமற்ற நிலையில் (அரூபம்), உருவமற்ற வடிவ நிலையில் (ரூபரூப-சிவலிங்கம், இது ஒரு வடிவம் மற்றும் இன்னும் சரியான வடிவம் இல்லாமல்) மற்றும் அவரது வடிவ நிலையில் (ரூபம்) ஒருவரின் சொந்த ஆன்மீக சாதனை நிலைக்கு ஏற்ப, வழிபாட்டிற்காக ஏங்கும் ஆன்மாக்களுக்கு தன்னைக் காட்டுகிறார். அர்த்தநாரீஸ்வர, லிங்கோத்பவ, சோமாஸ்கந்தா, சோமேஸ்வரா, தக்ஷிணாமூர்த்தி, நடராஜர் போன்ற பல வெளிப்பாடுகளைக் கொண்டது ரூப நிலை.

தக்ஷிணாமூர்த்தி வடிவத்தில், அவர் தன்னை இறுதி குருவாக வெளிப்படுத்துகிறார். குரு பரம்பரை அவரிடமிருந்து "சதாசிவ சமாரம்பம்" என்று தொடங்குகிறது. நான்கு சனத் சகோதரர்களும் வேத தத்துவத்தின் நுணுக்கங்களில் தங்கள் சந்தேகங்களைத் தீர்க்க யாரும் இல்லாததால், தங்கள் சந்தேகங்களைத் தீர்க்க சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தனர். இளமை தக்ஷிணாமூர்த்தி வடிவத்தில், இறைவன் ஒரு ஆலமரத்தின் அடியில், சின்முத்ராவுடன், தியான வடிவத்தில் அமர்ந்தார். ஆதி சங்கராச்சாரியார் தனது தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தில் இதை அழகாக விவரிக்கிறார்:

சித்ரம் வத தாரோர் மூலே குருர் யுவா சிஷ்யாஹ விருத்தாஹ

গுரோஸ்து மௌநம் வ்யாখ்யாநாம் ஶிஷ்யாஸ்து ছிந்ந ஸம்ஶயாঃ ।

ஆலமரத்தின் அடியில் இளம் குரு அமர்ந்திருந்தார், அவருக்கு முன்பாகப் பழுத்த மற்றும் பழைய சீடர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்: குரு தனது மௌனத்தின் மூலம் அவர்களுக்கு சொற்பொழிவாற்றினார், இதோ சீடர்களின் அனைத்து சந்தேகங்களும் முற்றிலும் நீங்கின.

பின்னிப் பிணைந்த உறவின் மூன்று முக்கிய கொள்கைகளான பதி, பசு மற்றும் பாஷாவின் இந்த உயர்ந்த தத்துவ விளக்கத்தை, மனிதர்களின் சாதாரண வாழ்க்கைக் கதைகளின் நிலைக்குக் குறைக்க முடியாது.

இந்தக் கதை சிவன் மற்றும் சதியின் திருமணத்திற்குச் செல்கிறது. திருமணத்திற்குப் பிறகு, ரிஷி ததீச்சி சிவனையும் சதியையும தனது ஆசிரமத்திற்கு அழைத்திருந்தார். அங்கு பல ரிஷிகள் மத்தியில், இருவரும் அமர்ந்திருந்தபோது, சிவன் ரிஷி அதர்வனைப் பார்த்து, சிவனுடன் பேசுவதற்கு ஏன் சங்கடமாக/தயக்கமாக இருக்கிறது என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த ரிஷி அதர்வ, தான் ஒரு அற்புதமான ஞானக் கோட்பாட்டை இயற்றியதாகவும், அது ஒரு ஞானியால் சாட்சியமளிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினார். மேலும், சிவனை விட ஞானி வேறு யாரும் இருக்க முடியாது. சிவன் ரிஷி அதர்வனை ஆசீர்வதித்து, அவரது ஆய்வறிக்கைக்கு சாட்சியமளிக்கத் தொடங்கினார்.

அந்தக் கோட்பாடு அன்றாட விஷயங்கள், பொருள் தேவைகள், ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. அதைப் படித்த பிறகு, சிவன், இந்தப் புத்தகம் மிகவும் அவசியமானது என்றும், மிகவும் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதால், அதற்கு நான்காவது வேதம் என்று பெயரிட வேண்டும் என்றும் அறிவித்தார். (முன்பு, மூன்று வேதங்கள் மட்டுமே இருந்தன: ரிக், யஜுர் மற்றும் சாமம்)

அனைவரும் அதர்வ வேதத்தைப் புகழ்ந்தாலும், பிரம்மாவின் நான்கு மானச புத்திரர்கள் (மனதில் பிறந்த மகன்கள்) அதாவது சனத் குமாரர்கள் (சனக், சனதன், சனந்தன் மற்றும் சனத் குமார்) தங்கள் தந்தையால் படைக்கப்பட்ட வேதங்களில் நான்காவது வேதத்தை ஸ்தாபிக்கும் அதிகாரம் சிவபெருமானுக்கு இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளவில்லை.

அவர்கள் பிரஜாபதி தக்ஷனிடம் (சதியின் தந்தை) சென்றனர், அவர் சிவனுடன் ஒரு சாஸ்திரத்தை (சாஸ்திரங்களைப் பற்றிய விவாதம்) நடத்தும்படி கேட்டார். அந்த நால்வரும் ததீச்சியின் ஆசிரமத்தை அணுகி சிவனை சவால் செய்தனர். சிவன் மகிழ்ச்சியுடன் அதற்கு ஒப்புக்கொண்டார்.

சிவனின் இருக்கை வடக்கு நோக்கியும், சனத் குமாரர்கள் தெற்கு நோக்கியும் இருக்கும் வகையில் ததீச்சி இருக்கை அமைப்பை அமைத்தார். இது நால்வரின் அகங்காரத்தை காயப்படுத்தியது, அவர்கள் தங்கள் அபரிமிதமான அறிவின் காரணமாக வடக்கு நோக்கி மரியாதை செலுத்த வேண்டும் என்று வாதிட்டனர். சிவன் அதற்கு ஒப்புக்கொண்டு தெற்கு நோக்கி அமர்ந்தார் .

விவாதத்தின் முடிவைத் தீர்மானிக்க வேதங்களின் தாயான தேவி சரஸ்வதியை அனைவரும் நடுவராக நியமித்தனர். இறுதியாக பெரிய விவாதம் தொடங்கியது. சனத் குமார்கள் ஏராளமான வேத வசனங்களைச் சுட்டபோது, மகா யோகியான சிவன், முதல் மூன்று வேதங்களின் ஆதரவுடன் பகுத்தறிவு வாதங்களை முன்வைத்து அவற்றை எதிர்த்தார்.

சனத் குமார்கள் பணிவுடன் நடந்து கொண்டதால், சரஸ்வதி சிவனை வெற்றியாளராக அறிவித்தார். பிரம்மா ஏற்கனவே மூன்று வேதங்களைப் படைத்திருக்கும்போது நான்காவது வேதம் எப்படி இருக்க முடியும், ரிஷி அதர்வனுக்கு எப்படி இவ்வளவு மகத்தான அறிவு இருக்க முடியும் என்பதில் சனத் குமார்கள் இன்னும் குழப்பத்தில் இருந்தனர்.

அதற்கு சிவன், மத்ஸ்ய அவதாரமான மத்ஸ்ய, பிரம்மாவிடமிருந்து திருடிய வேதங்களை மீட்டெடுக்க ஹயக்ரீவர் என்ற அரக்கனை ஒன்றன் பின் ஒன்றாக அடி கொடுத்துக் கொண்டிருந்தபோது, மூன்று வேதங்களை உமிழ்ந்த ஹயக்ரீவர், பாதுகாப்புக்காக சிவனிடம் ஓடினார் என்று பதிலளித்தார். இந்த உலகில் யாராலும் விஷ்ணுவிடமிருந்து ஹயக்ரீவரைக் காப்பாற்ற முடியாது என்று சிவன் பதிலளித்தார், ஆனால் விஷ்ணுவின் கைகளில் அவர் இறந்தவுடன், நான்காவது வேதத்தின் அறிவை அடுத்த பிறப்பு வரை அவர் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவர் அவருக்கு ஆசீர்வதித்தார். அதர்வன் வேறு யாருமல்ல, ஹயக்ரீவர் என்ற அரக்கன், மறுபிறவி எடுத்தவர். பிரம்மாவிற்கு நான்கு தலைகள் உள்ளன, எனவே நிச்சயமாக நான்கு வேதங்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் நான்காவது வேதம் இதுவரை மனிதர்களை சென்றடையவில்லை.

சனத் குமாரர்கள் சிவபெருமானின் மகிமைக்காகப் புகழ்ந்து, தெற்கு திசையை நோக்கி அமர வைத்ததற்காக மன்னிப்பு கேட்டார்கள். இதனால், அவர்கள் அவரை தட்சிணாமூர்த்தி (தெற்கு நோக்கிய இறைவன்) என்று நினைவு கூர்ந்தனர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Monday, February 9, 2026

வேடனுக்கும், மான்களுக்கும் காட்சி கொடுத்த சிவராத்திரி சிவன்...

 மான் மிருகசீரிஷம் நட்சத்திரமான அதிசய சிவராத்திரி கதை
பழங்காலத்தில் அடர்ந்த காடொன்றில் அனுபவம் மிக்க வேடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் குருத்குகன். வேட்டையாடி கிடைக்கும் உணவினால் தான் அவன் குடும்பம் வாழ்ந்து வந்தது. தினமும் காட்டில் அலைந்து வேட்டையாடுவது அவனுடைய வாழ்க்கை.

ஒருநாள் வழக்கம்போல வேட்டைக்குச் சென்ற அவனுக்கு அன்று முழுவதும் எதுவும் கிடைக்கவில்லை. நேரம் செல்ல செல்ல மாலை வந்தது. இருள் சூழ ஆரம்பித்தது. வீட்டில் காத்திருக்கும் மனைவி, குழந்தைகள் பசியால் தவிப்பார்களே என்று அவன் மனம் கலங்கியது.

“இன்று எதுவும் கிடைக்கவில்லையே… என் குடும்பத்துக்கு என்ன செய்வேன்?” என்று கவலையுடன் காட்டில் அலைந்தபோது, ஒரு நீர்நிலை அவன் கண்ணில் பட்டது.

“இங்கே கண்டிப்பாக விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும். அப்பொழுது வேட்டையாடலாம்” என்று நினைத்தான்.

அருகிலிருந்த ஒரு குடுக்கையில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு, நீர்நிலையின் அருகில் இருந்த பெரிய வில்வ மரத்தில் ஏறி மறைந்து அமர்ந்தான். மரத்தின் கீழே ஒரு பழமையான சிவலிங்கம் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.

🌿 முதல் யாமம் – பெண் மான் வருகை

முதல் யாமத்தில் ஒரு பெண் மான் தண்ணீர் குடிக்க அங்கு வந்தது. அதை கண்டதும் வேடன் மகிழ்ச்சியுடன் அம்பை எய்தான்.

ஆனால் – குறி தவறியது!

அம்பு வில்வ இலைகளைத் துளைத்து குளத்தில் விழுந்தது. அப்போது மரத்திலிருந்து உதிர்ந்த வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. வேடன் கையில் வைத்திருந்த குடுக்கையிலிருந்த நீரும் தவறி சிந்தி சிவலிங்கத்தின் மீது அபிஷேகமாக விழுந்தது.

இது அனைத்தும் தெய்வச் செயலாக நடந்துகொண்டிருந்தது.

மீண்டும் வேடன் அம்பு எய்தபோது, அந்த பெண் மான் வேடனிடம் மனிதரைப் போல பேச ஆரம்பித்தது:

“ஐயா, என் வீட்டில் என் கணவர், என் தங்கை, என் குட்டி இருக்கின்றனர். என் தங்கையை என் கணவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டு, நான் நிச்சயம் உன்னிடம் திரும்பி வந்து உனக்கு உணவாகிறேன். இது சத்தியம்.”

மானின் வார்த்தைகளைக் கேட்டு மனம் இளகிய வேடன் அதை நம்பி விடுதலை செய்தான்.

🌿 இரண்டாம் யாமம் – தங்கை மான் வருகை

நீண்ட நேரமாக அக்கா மான் திரும்ப வராததால், அதன் தங்கை மான் தேடி வந்தது. அதையும் வேடன் வேட்டையாட முயன்றான்.

மீண்டும் குறி தவறியது.

முன்பு போலவே வில்வ இலைகளும், நீரும் சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. தங்கை மானும் வேடனிடம் வேண்டிக் கொண்டு, “நானும் திரும்பி வருகிறேன்” என்று வாக்கு கொடுத்து தப்பியது.

🌿 மூன்றாம் யாமம் – ஆண் மான் வருகை

இரு மான்களையும் தேடிக்கொண்டு ஆண் மான் அங்கு வந்தது. வேடன் அதையும் வேட்டையாட முயன்றான்.

இந்த முறையும் – குறி தவறு!

மீண்டும் வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மேல் விழுந்து, நீர் அபிஷேகமாகியது. ஆண் மானும்,

“நான் என் குடும்பத்தை பார்த்து விட்டு உடனே திரும்பி வருகிறேன்” என்று கூறிச் சென்றது.

🌿 நான்காம் யாமம் – மூன்று மான்களின் தியாகம்

மூன்று மான்களும் ஒன்றாக சேர்ந்தன. குட்டி மானை மட்டும் காப்பாற்றிவிட்டு, தாங்கள் மூவரும் வேடனுக்கு உணவாக செல்வதாக முடிவு செய்தன.

அவர்கள் வாக்குப்படி மீண்டும் அந்த நீர்நிலைக்கு வந்தனர்.

வேடன் மீண்டும் வில்லில் நாண் ஏற்றி எய்ய முயன்றான். இம்முறையும் குறி தவறியது. வில்வ இலைகள், நீர் – அனைத்தும் மீண்டும் சிவலிங்கத்தின் மீது விழுந்தன.

நான்கு யாமங்களிலும் நடந்த இந்த நிகழ்வு, அவனே அறியாமல் சிவராத்திரி பூஜை செய்ததற்குச் சமமானதாக அமைந்துவிட்டது!

🌟 வேடனின் மனமாற்றம்

இரவு முழுவதும் நடந்த இந்த அதிசயங்களால் வேடனின் உள்ளம் மாறியது.

மரத்திலிருந்து இறங்கி சிவலிங்கத்தை வணங்கினான். அப்போது மூன்று மான்களும்,

“எங்களை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்” என்று தங்களை ஒப்படைத்தன.

அதைப் பார்த்த வேடன் உணர்ச்சிவசப்பட்டு சொன்னான்:

“ஐந்தறிவு கொண்ட நீங்கள் தர்மத்தைக் காப்பாற்றுகிறீர்கள். ஆறறிவு பெற்ற நான் மட்டும் அறிவில்லாதவனாக இருக்கலாமா? இனி நான் உங்களை கொல்லமாட்டேன். நீங்கள் அமைதியாக வாழுங்கள்!”

✨ சிவபெருமானின் அருள்

அந்த நேரத்தில் சிவபெருமான் அங்கு தோன்றி,

வேடனுக்கும், மான்களுக்கும் அருள்புரிந்தார்.

சிவ தரிசனம் பெற்ற அந்த மானினமே வானத்தில் உயர்ந்து மிருகசீரிஷம் என்ற நட்சத்திரமாக மாறியது.

சிவராத்திரியின் மகிமையை அறியாமலேயே பூஜை செய்த வேடனுக்கே இவ்வளவு பலன் கிடைத்தால், உணர்ந்து வழிபடும் பக்தர்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்!

🕉️ கதையின் ஆன்மீக கருத்து

தெரியாமல் செய்த சிறு நன்மையும் இறைவன் கணக்கில் பெரிது.

தர்மமும் உண்மையும் இறைவனிடம் உயர்ந்த இடம் பெறும்.

சிவராத்திரி வழிபாடு மனிதனைப் பாவங்களில் இருந்து விடுவிக்கும்.

“கடவுளை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார்.”

நற்றுணையாவது அண்ணாமலையாரே

Sunday, February 8, 2026

அதிசய லிங்கம் - தலையில் குடுமியுடன் காட்சி தரும் ஈசன்!

அதிசய லிங்கம் - தலையில் குடுமியுடன் காட்சி தரும் ஈசன்! 
காஞ்சிபுரம் மாவட்டம் பொன்விளைந்த களத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு முன்குடுமீஸ்வரர் திருக்கோயிலின் அதிசயம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? சாதாரண சிவலிங்கங்களைப் போலன்றி, இங்குள்ள லிங்கத் திருமேனியின் உச்சியில் ஒரு 'குடுமி' போன்ற அமைப்பு உள்ளது. இதன் பின்னணியில் உள்ள நெகிழ்ச்சியான வரலாற்றைப் பகிர்கிறோம்.
📍 தல வரலாறு: ஏமாற்றமும் இறைவனின் அருளும்! ஒரு காலத்தில் இங்கு சிவபெருமானுக்குத் தொண்டு செய்த பக்தர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நிலக்கிழாரிடம் (அந்தணர்) வேலை செய்து வந்தார். ஒரு குறிப்பிட்ட நிலத்தில் விளையும் நெல் 'பொன்னாக' மாறும் ரகசியம் அந்த நிலக்கிழாருக்குத் தெரியும். அந்தப் பக்தரை ஏமாற்ற எண்ணி, "இந்த விளைச்சலை நீ எடுத்துக்கொள், உன்னுடைய நிலத்தில் உள்ளதை நான் எடுத்துக் கொள்கிறேன்" என்று மாற்றிப் பேசினார்.

ஆனால், இறைவனின் திருவிளையாடலால் அந்தப் பக்தரின் வயலில் விளைந்த நெல் அனைத்தும் 'தங்கமாக' மாறியது! 🌾💰 இதனால் இவ்வூர் 'பொன்விளைந்த களத்தூர்' என்று பெயர் பெற்றது.

💇‍♂️ ஏன் 'முன்குடுமீஸ்வரர்' என்று பெயர்? இந்தக் கோயிலின் லிங்க பாணத்தின் உச்சியில் ஒரு குடுமி போன்ற தோற்றம் இருப்பது தனிச்சிறப்பு. இதனாலேயே இறைவன் 'முன்குடுமீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார், தமக்கு மணிமகுடம் சூட்டும்படி தில்லை வாழ் அந்தணர்களிடம் கேட்டபோது அவர்கள் மறுக்க, அவர் இந்தத் தலத்திற்கு வந்து வேண்டினார். அப்போது இறைவன் தன் திருமுடியையே (குடுமி) அவருக்குக் காட்டி அருளியதாகக் கூறப்படுகிறது.
✨ கோயிலின் பிற சிறப்புகள்: ✅ கட்டடக்கலை: சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில், தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டது. ✅ கஜபிருஷ்ட விமானம்: கருவறையின் மேல் உள்ள விமானம் யானையின் பின்புறம் போன்ற வடிவில் (கஜபிருஷ்டம்) அமைந்துள்ளது. ✅ கூற்றுவ நாயனார் வழிபாடு: பொதுவாகச் சிவன் கோயில்களில் சண்டிகேஸ்வரர் தான் முக்கியத்துவம் பெறுவார். ஆனால் இங்கு பங்குனி உத்திரத் திருவிழாவின் போது கூற்றுவ நாயனார் வீதி உலா வருவது சிறப்பானது.

🙏 பிரார்த்தனை: வாழ்வில் பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள், நியாயமான செல்வம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றும் மன அமைதி தேடுபவர்கள் இத்தலத்து ஈசனை வணங்கினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோயில் அமைவிடம்: அருள்மிகு முன்குடுமீஸ்வரர் திருக்கோயில், பி.வி.களத்தூர் (பொன்விளைந்த களத்தூர்), காஞ்சிபுரம் மாவட்டம்.

ஆன்மீகத் தகவல் பிடிச்சிருந்தா உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்! 

ஓம் நமச்சிவாய
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

 

அபிஷேகம் கிடையாது: சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் அதிசய சிவன்.

தமிழகத்தில் எத்தனையோ பழமையான கோவில்கள் இருந்தாலும், சென்னைக்கு மிக அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  கோயில் பல அரிய பொக்கிஷங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இந்தப் பதிவில் அங்குள்ள அதிசயங்களை விரிவாகக் காண்போம்.
1. கிரீடம் இல்லாத 'பல்லவ விநாயகர்' - ஒரு மருத்துவ அதிசயம்! 🐘
பொதுவாக விநாயகர் சிலைகளில் அலங்காரமான கிரீடம் இருக்கும். ஆனால் இங்குள்ள விநாயகர் கிரீடம் இல்லாமல், மண்டை ஓடு போன்ற அமைப்பில் இயற்கையான யானை முகத்துடன் காட்சியளிக்கிறார்.

பல் வலி தீர்க்கும் தலம்: பல் தொடர்பான நோய்களால் அவதிப்படுபவர்கள், இங்குள்ள விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வியக்கத்தக்க பலன் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

மன நிம்மதி: பதவி மற்றும் பொருளின் மீதுள்ள அதீத மோகம் நீங்கி, மனத் தெளிவு பெற இந்த 'பல்லவ விநாயகரை' வழிபடுவது சிறப்பு.

2. சூரியன் வழிபட்ட 'ஞாயிறு' தலம் ☀️
இவ்வூரின் பெயரே 'ஞாயிறு' (சூரியன்). ஒருமுறை பிரம்மதேவர் யாகம் செய்தபோது, அதில் ஏற்பட்ட தவறால் சூரியனின் ஒளி மங்கியது. தன் ஒளியை மீண்டும் பெற சூரியன் இத்தலத்து ஈசனை வழிபட்டார்.

சூரிய பூஜை: ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் முதல் 7 நாட்களில், சூரிய ஒளி நேரடியாக கருவறை சிவலிங்கத்தின் மீதும், சொர்ணாம்பிகை அம்மன் மீதும் விழுகிறது.

அபிஷேகம் கிடையாது: சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் அந்த 7 நாட்களில், சூரியனே பூஜை செய்வதாக ஐதீகம் என்பதால், உச்சிக்காலத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

3. கண் நோய்களைத் தீர்க்கும் மருந்தீஸ்வரர் 👀
சூரியன் பார்வைக்கு அதிபதி. எனவே, பார்வை குறைபாடு உள்ளவர்கள், கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் இங்குள்ள ஈசனுக்கும், சூரிய பகவானுக்கும் நெய் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் பார்வைத் திறன் மேம்படும் என்பது நம்பிக்கை.

4. சங்கிலி நாச்சியார் பிறந்த மண் 🌸
சுந்தரமூர்த்தி நாயனாரின் பெரும் அன்பிற்குப் பாத்திரமான சங்கிலி நாச்சியார் அவதரித்த ஊர் இதுவே. இவர் இக்கோயிலில் உள்ள புஷ்பரதேஸ்வரரைத் தொழுது சிவப்பணியில் ஈடுபட்டு வந்தவர். இவருக்கு இக்கோயிலில் தனிச் சன்னதி உள்ளது.

5. தனித்துவமான நவக்கிரக அமைப்பு 🌌
இக்கோயிலில் நவக்கிரக சன்னதி கிடையாது. சூரிய பகவானே இங்கு பிரதானமாக இருப்பதால், அவரை வழிபட்டாலே ஒன்பது கிரகங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் இணைய இங்கு கோதுமைப் பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

கோயில் விபரங்கள்:  ஊர்: ஞாயிறு கிராமம் (சோழாவரம் வழி), திருவள்ளூர் மாவட்டம். நேரம்: காலை 7.30 - 11.00; மாலை 4.30 - 7.30. (ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை).

நமது பாரம்பரியத்தையும், அறிவியலும் ஆன்மீகமும் கலந்த இத்தலத்தின் பெருமைகளையும் உலகறியச் செய்வோம்!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வருடத்தில் நான்கு முறை சூரிய பூஜை நடைபெறும் கோயில் எங்குள்ளது

வருடத்தில் நான்கு முறை சூரிய பூஜை நடைபெறும் கோயில் எங்குள்ளது தெரியுமா?
திருச்சியில் இருந்து தென்மேற்கே 4 கி.மீ. தொலைவில் சிறிய மலையின் மீது அமைந்துள்ளது அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில்.

 மிருகண்டு முனிவர் புத்திரப் பேறு வேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தார்.

 அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், “உனக்கு ஞானமற்ற அங்கஹீனமான நூறு வயது வாழும் மகன் வேண்டுமா? அல்லது அழகும் அறிவும் மிக்க பதினாறு வயது வரை மட்டுமே ஜீவித்திருக்கும் மகன் வேண்டுமா?” எனக் கேட்டார்.

குழம்பிப்போன மிருகண்டு முனிவர், ‘தனக்கு ஞான புத்திரனே வேண்டும்’ என வேண்டினார். 
அதன்படியே மகனும் பிறந்தான்.

 அவனுக்கு மார்கண்டேயன் என பெயரிட்டனர்.

 16 வயது வந்தது. 

எமன் மார்கண்டேயனை துரத்தினான்.

 மார்கண்டேயன் பல க்ஷேத்ரங்களுக்கும் சென்று ஓடி ஒளிந்தான். 

இறுதியாக, உய்யங்கொண்டான் திருமலைக்கு வந்து, தன்னை எமன் துரத்துவதை ஈசனிடம் முறையிட்டு வேண்டினார்.

 இறைவன் அந்தச் சிறுவனை பாதுகாத்தார்.

மார்கண்டேயருக்கு ஜீவன் அளித்ததால் இத்தல ஈசன் உஜ்ஜீவநாதர் எனப்படுகிறார்.

 எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் இவருக்கு ‘கற்பகநாதன்’ என்றும் பெயர் உண்டு.

 இத்தலத்தில் ஈசன் சுயம்பு லிங்கமாகக் காட்சி அளிக்கிறார்.

இக்கோயிலில் ஜேஷ்டா தேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது.

 இவரை மூதேவி என்றும் அழைப்பர்.

 மகாலக்ஷ்மியின் சகோதரியான இவளை பார்த்தாலே எந்த காரியமும் நடக்காது என்பர். 

இது தவறான கருத்தாகும்.

இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளில் இருந்து நம்மை காப்பாற்றுவாள்.

எப்போதும் நம்மை விழிப்புடன் இருக்கவும் செய்வாள்.

இந்த தேவி ஒரு குழந்தையை வலது கையில் ஏந்தி காட்சி தருகிறாள்.

அந்தக் குழந்தைக்கு மாட்டின் முகம் இருப்பதால் இவரை, ‘மாடன்’ என்று சொல்கிறார்கள்.

மறுபுறத்தில் அழகிய பெண்ணை ஏந்தி இருக்கிறாள் இவளை வாக்தேவதை என்கிறார்கள்.

இந்த மலைக்கோயில் ஓம் வடிவில் அமைந்துள்ளது.

 உஜ்ஜீவநாதர் மற்றும் அஞ்சனாட்சி அம்பிகை இருவரும் மேற்கு நோக்கி காட்சி தருகின்றனர்.

 குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க இக்கோயிலில் வேண்டிக்கொள்கிறார்கள்.

தை மாதத்தில் ஒரு நாள் மாலை வேளையில் சிவலிங்கம் மற்றும் அஞ்சனாட்சி அம்பிகையின் மீது சூரிய ஒளி விழும். 

அந்நாளில் இருந்து 90 நாட்களுக்கு ஒரு முறை என வருடத்தில் நான்கு முறை இங்கு சூரிய பூஜை நடைபெறுகிறது.

இந்த மலைக்கோயிலில் தீராத பிரச்னை உள்ளவர்கள் மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் அமர்ந்து சிந்தித்தால் தீராத பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.

. ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, February 6, 2026

பஞ்சவர்ணேஸ்வரர் உறையூர் திருச்சிராப்பள்ளி.

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர்திருக்கோயில், உறையூர்- 620003.  திருச்சிராப்பள்ளி. 
*மூலவர்        :     பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள்,

*அம்மன்            :     காந்திமதியம்மை.

தல விருட்சம்   :     வில்வம்.

தீர்த்தம்         :     சிவதீர்த்தம், நாக தீர்த்தம்.

புராண பெயர்    :     முக்கீச்சுரம்

பாடல்பெற்ற தலம்: ஞானசம்பந்தர் பாடியுள்ளார்

*இறைவன் பஞ்சவர்னேஸ்வரர்  இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்".      

*சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்தது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. கோழியும் அங்கே வந்தமர்ந்தது. கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலமும் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது.

*உதங்க முனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார். உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவியை இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் அவருக்கு காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

*உதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பாகும்.     

*பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள்புரியும் சிவபெருமான் ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம். எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும் என்பது  உண்மை.

*உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது.        

*சோழ மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டது.     

*இறைவி காந்திமதி அம்மை தெற்கு நோக்கி தனி சந்நிதியில் கைகளில் அங்குசமும், தாமரை மலரும் வைத்துக் கொண்டு அருள் புரிகிறாள்.  இந்த அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 

*யானை ஏற முடியாதபடி  மாடக்கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன், 
மற்றும் 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழன் ஆகியோர் பிறந்த தலம் இதுவே.              

*புகழ்ச் சோழன் என்ற சோழ மன்னன் உறையூரில் ஆட்சி புரிந்து வந்தான். சிற்றரசன் ஒருவனுடன் போரிட்டு வெற்றி கண்ட புகழ்ச் சோழன் மடிந்து கிடந்த படை வீரர்களுள் ஜடாமுடியுடன் திருநீறு பூசிய ஒரு தலையைக் கண்டு மிகவும் மனம் நொந்தான். சிவனடியார்க்கு அநீதி இழைத்தோமே என்று கலங்கினான். தன்னுடைய மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு தீமூட்டி அதனுள் அந்த சிவனடியார் தலையுடன் தானும் வீழ்ந்து முக்தி பெற்றான். அவர் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் ஆனார்.      

*உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறை வழிபாடு தடைபட்டுவிட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். 

*ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோவிலில் கொடுத்த திருநீறை அணியாமல் அலட்சியம் செய்ததால் மறுபிறவியில் அவன் பன்றியாகப் பிறந்து சேற்றில் உழன்றானாம். தன் முந்தைய பிறவித் தவறை நினைத்து வருந்தி சிவனை வணங்கி, இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடிப் பாவ விமோசனம் பெற்றான் என்கிறது புராணம்.

*இது தமிழ்நாட்டு மூவேந்தரும் சேர்ந்து வழிபட்ட கோயில்.

*இக்கோயிலில் சிற்பங்களுக்குக் குறைவில்லை. உள் மண்டபத்தில் இடப்பக்கம் “யானைமீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது, அவானையைக் கோழி குத்தித் தாக்கும் சிற்பம்” உள்ளது.
*திருமாலுக்கு எதிரில் உள்ள தூணில் பிட்சாடனர் உருவம் உள்ளது. இதற்கு எதிர்க் கம்பத்தில் தாருகாவனத்து ரிஷிபத்தினிகளின் உருவங்கள் உள்ளன.   கருவறை வெளிச் சுவரில் மேற்புறத்தில் நான்கு பக்கங்களிலும், வரிசையாக இறைவனின் பல்வகையான தாண்டவங்களின் சிற்பங்கள் மிக்க கலையழகுடன் காணப்படுகின்றன.  

*திருச்சி ஜங்ஷன் மற்றும் சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து உறையூர் செல்ல பஸ்கள் உள்ளன. கடைவீதி பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.            

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

முருகன் கையில் வேலும் சேவற்கொடியும் இருக்கக் காரணம்.

முருகன் கையில் வேலும் சேவற்கொடியும் இருக்கக் காரணம் என்ன?
கையில் வேலைத் தாங்கியிருப்பதாலேயே வேலன்.மிருகங்களை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தும் வேலினையே வேலன் தாங்கியுள்ளான். அதே போன்று தடி (தண்டு) போன்ற ஆயுதத்தைத் தாங்கியிருப்பதால் தண்டாயுதபாணி எனவும் அழைக்கப்படுவான்.

சரி, முருகனின் ஊர்தி எது தெரியுமா? முருகனின் ஊர்தி (வாகனம் என்பது வடமொழிச் சொல்) எது என்றால் மயில் என்றே பலரும் கூறுவார்கள்; ஆனால் தமிழிலக்கியங்களின் படி அது உண்மையன்று. பெருமளவான சைவர்கள் கூறுவது முருகன் வாலிபனாக சூரனுடன் போரிட்டு, அவனைக்கொன்று மயில் வாகனமும் (தமிழில் ஊர்தி) சேவலைக் கொடியும் ஆக்கினான் என்ற கந்தபுராண விளக்கமே. இவர்களிடம் அவ்வாறாயின் எவ்வாறு முருகன் குழந்தையாகவிருக்கும்போதே பிள்ளையாருடன் மாம்பழத்திற்குச் சண்டையிடும்போது மயிலேறி உலகம் சுற்றினார்? எனக் கேட்டால் பதிலில்லை { புராணத்தில் முருகன் சூரனுடன் சண்டைக்கு முன்னர் இடம்பெற்றதாக மாம்பழச் சண்டைக்கதை உள்ளது]. இந்துமதத்தை ஒரே மதமாகப் பார்த்தால் மயில் ஊர்தி கதை இரு வேறு வகையாக மகாபாரதத்தில் சொல்லப்படுகின்றது.👇
👉1. மகாபாரதத்தின் சல்ய பருவத்தின்படி அக்கினி கோழியையும், இந்திரன் மயிலையும் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது.
👉2. மகாபாரதத்தின் இன்னொரு இடத்தில் கருடன் மயிலைக் கொடுத்தாகவும் உள்ளது.

👉இந்து மதத்தின் விட்டுணு புராணத்தில் (Vishnu Purana) விட்டுணுவே முருகனிற்கு மயிலையும் சேவலையும் கொடுத்ததாகவும் உள்ளது.
பார்த்தீர்களா! 🧐ஒரு மயிலிற்கு ஒரே மதத்தில் எத்தனை கதைகள் என்று! இதைத்தான் `ஒரு உண்மையினை மறைக்கப் பொய் சொல்ல வெளிக்கிட்டால் பல பொய்கள் சொல்ல வேண்டிவரும்` என்பார்கள்.
👉👇சரி, புராணங்களை விடுவோம். தமிழிற்கு வருவோம். அதற்கு தமிழில் முருகன் ஒரு எல்லா ஆற்றலுமுடைய கடவுள் (supreme god )அல்ல, மாறாக குறிஞ்சி நிலத் தலைவன் என்பதனையும், சமற்கிரத சுப்பிரமணியன்- தமிழ் முருகன் வேறுபாட்டையும் அறிந்திருக்கவேண்டும்.


இப்போது சங்க இலக்கியங்கள் சிலவற்றினைப் பார்ப்போம்.
👇👇👇
`சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை,
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு`
(பதிற்றுப்பத்து 11-5-6)
👆👆👆
மேலுள்ள பாடலில் நெடுஞ்சேரலாதன் அரசனை குறிஞ்சி நிலத் தலைவன் முருகனுடன் (வேள்) ஒப்பிடப்படும் பாடலில் முருகனின் ஊர்தியாக யானை (களிறு) குறிப்பிடப்படுகின்றது.

அடுத்து ஒரு புறநானூற்றுப் பாடல் ஒன்றினைப் பார்ப்போம்.
👇👇👇
`பனைக் கொடியோனும், மண்ணுறு திருமணி
புரையும் மேனி விண் உயர் புட்கொடி
விறல்வெய்யோனும், மணிமயில் உயரிய மாறா
வென்றிப் பிணி முக உணர்தி ஒண் செய்யோனும்.’
-புறம் : 56 : 1.8
👆👆👆
இப் பாடலில் மயிலைக் கொடியாகவும், யானை (பிணி முக) ஊர்தியாகவும் முருகன் கொண்டுள்ளார். இப் பாடலிற்கு சிலர் பிணிமுகம் என்பதற்கு மயில் எனச் சிலர் பொருள் கூறியுள்ளபோதும், பிணிமுகம் என்பது யானையினையும் குறிக்கும்.


மேற்கூறிய பாடலில் மயிலே கொடியாகவும், மயிலே ஊர்தியாகவும் வருவது பொருத்தமில்லை என்பதாலும், பிற சங்கப் பாடல்களில் யானையே ஊர்தியாகக் கொள்ளப்படுவதாலும் நான் இப் பாடலில் வரும் `பிணிமுகம்` என்பதனை யானை என்றே துணி கின்ற

👉👆எனவே தமிழிலக்கியங்களில் யானை தான் குறிஞ்சி நிலத் தலைவனின் ஊர்தியாகக் குறிப்பிடப்படுவதனைத் தெளிவாக காணலாம். யானைப் படை என்று ஒன்றே சில நூற்றூண்டுகளிற்கு முன்னர்வரைக் காணப்பட்டமையால் இது அறிவிற்கும் பொருத்தமானது. மறுபுறத்தே மயிலிற்கு மேல் ஏறியிருந்தால் மயிலே சுமையினைத் தாங்குமா?
அவ்வாறாயின் எவ்வாறு மயில் பிற்காலத்தில் ஊர்தியாகியது? என்ற கேள்வி எழலாம். எல்லாம் பார்ப்பனியத் திணிப்பே. இது குப்தர் காலத்தில் தமிழ் இயற்கைசார் முருகனையும் வடமொழி புராண ஸ்கந்தனையும் இணைத்தபோது நடாத்திய திருவிளையாடல்.

#சேவல்_கொடி
சேவல்தானே கொடி என்கின்றீர்களா? கோழியினை கொடியாக திருமுருகாற்றுப்படை கூறுகின்றது.
👇👇👇
கோழியோங்கிய வென்றடு விறற் கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்
சூரரமகளிர் ஆடும் சோலை”
- திருமுருகாற்றுப்படை 38
👆👆👆

பொருள்-{வில்லும் வேலும் ஏந்தி இரவுக் குறியிடத்தில் காதலியைக் காணச் சென்று கொண்டிருந்த வீரனை, மலைச் சாரல்களில் உலவித் திரிந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த அணங்கும் சூரும் ஆன பெண் தெய்வங்கள், தற்போது திருப்பரங்குன்றத்து மலைச்சாரலில் உள்ள சோலைகளில் தம் அச்சுறுத்தும் ஆற்றலை இழந்து எளிய மானிட மகளிரைப் போல முருகனது சேவற்கொடியை வாழ்த்தியவாறு விளையாடிக் கொண்டிருந் தார்கள்.}

இப் பாடலிலேயே கோழி முருகனின் கொடியாக முதலில் காணக்கிடைக்கின்றது. அத்துடன் முருக வழிபாட்டிற்கு முந்திய பெண் தெய்வ வழிபாட்டினையும், அதனை வெற்றி கொண்டே முருக வழிபாடு தோன்றியது என்பதும் குறிப்பிடப்படுகின்றது. தமிழர்களினதும் முதல் தெய்வங்கள், ஏனைய பழங்குடிகளைப் போன்று பெண் தெய்வங்களே. அது தொல்காப்பிய - சங்க இலக்கியங்களிற்கு முற்பட்டது. {இது பற்றி யாருமே எழுதாமல், மாயன்-சேயோன் என்பதிலிருந்தே தொடங்குவது பெரும்பாலும் ஆண்கள் எழுதுவதாலும், பிற மானிட வரலாற்றாசிரியர்களான கார்ல் மார்க்சு- ஏஙகல்சு போன்றோரின் எழுத்துக்களை உள்வாங்கமையுமே காரணங்கள் என நினைக்கின்றேன்}.

திருமுருகாற்றுப்படைக்கு முன்னரான காலத்தைய புறநானூறு (56), அகநானூறு (149) என்பன மயிலே முருகனின் கொடியாகக் காணப்பட்டது.

👉👆சரி, இந்த மயில் , கோழி எல்லாம் எவ்வாறு முருகனின் கொடியாயிற்று எனப் பார்ப்போம். அறிஞர் வானமலையின் கருத்துப்படி மயில், கோழி என்பன வெவ்வேறு பழங்குடி இனங்களின் குலக்குறிகள். அத்தகைய குடிகளை குறிஞ்சித் தலைவன் வெற்றிகொண்டதன் குறியீடுகளே அந்த மயிலும் கோழியும் என்கின்றார்.
இறுதியாக #வள்ளி கதையினையும் சுருக்கமாகப் பார்த்தால், வள்ளிக்கிழங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட வேளாண்மைச் சமூகத்திற்கும், வேட்டுவ குடிகளும் (வேலன்) ஒன்றிணையும் ஒரு நிகழ்வே அதுவாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Thursday, February 5, 2026

சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகள்

#சென்னையில்_இருக்கும் #ஜீவசமாதிகளின்_பட்டியல்
திருவொற்றியூர்: பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார் கோவில் வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்

ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.

அருள்மிகு யோகீஸ்வரர் சாமி=வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.

பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் 4,தங்கம் மாளிகை அருகில்.

ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.

மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதி கோவில்.

முத்துக்கிருஷ்ண பிரம்மம்=ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை;

ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில் ஞான சுந்தர பிரம்மம் சமாதி.சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

ராயபுரம்:குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.

ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .

வியாசர் பாடி:சிவப்பிரகாச சாமி=இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.

கரபாத்திர சிவப்பிரகாச சாமி=1 வது தெரு சாமியார் தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில்.பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

பெரம்பூர்:அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில்-பஞ்சமுக வடிவமும் உள்ளது.

மதனகோபாலசாமி=மேல்பட்டி பொன்னப்பமுதலி தெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதி கோவில்;

சந்திர யோகி சுவாமி=மங்களபுரம் ஐந்துலைட் அருகில்.

வேர்க்கடலை சுவாமி=அய்யாவு தெரு,திரு.வி.க.நகர்.

மதுரை சாமி=செம்பியம் வீனஸ் தியேட்டர் 2 வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.

மயிலை நடராஜ சுவாமி=கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.

ஓட்டேரி:ஆறுமுகச்சாமி=173/77 டிமலஸ் சாலை,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு-ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்-உருவப்பட பூஜை.

புரசைவாக்கம்: வீரசுப்பையா சுவாமி= புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்-52,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மடத்தில் சமாதி கோவில்.

ஈசூர் சச்சிதானந்த சாமி=கொசப்பேட்டை சச்சிதானந்தா தெரு(வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.

எழும்பூர்:மோதி பாபா=422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.

அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதி சுவாமி=பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்-ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

நுங்கம்பாக்கம்:கங்காத சுவாமி=ஹாரிங்டன் ரோடு 5 வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.

நாதமுனி சாமி=ஹாரிங்டன் ரோடு,பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.

பன்றிமலை சாமி=5,வில்லேஜ் ரோட்டில் ‘ஓம்நமச்சிவாய’என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.

ஆதிசேஷானந்தா=நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.

வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.

கோடம்பாக்கம்: ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி=அசோக் நகர்-சாமியார் மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்-ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.

வடபழனி:அண்ணாசாமி,ரத்தினசாமி,பாக்கியலிங்கசாமிகள்=வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும் காரண கர்த்தாக்கள்.இவர்களது சமாதி கோவில் முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.

மைலாப்பூர்:திருவள்ளுவர்-வாசுகி அம்மையார்=லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.

அப்பர் சாமிகள்=171,ராயப்பேட்டை ஹைரோடு-சமஸ்க்ருத கல்லூரி எதிரில்,மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.

குழந்தைவேல் சுவாமி=சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டு பில்டிங்கில் இருக்கிறது.

முத்தையா சாமிகள்=குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.

ஆலந்தூர்:தாடிக்கார சுவாமி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையே சந்து.உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதி கோவில்.சிவலிங்க பிரதிஷ்டை.

குழந்தைவேல பரதேசி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு,எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதி கோவில்.

கிண்டி:சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்=எம்.கே.என்.ரோடு 36 ஆம் எண்-சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதி கோவில்-சிவலிங்க பிரதிஷ்டை.இத்துடன் இவரது சீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி,ஸ்ரீஏழுமலை சாமிகளின் சமாதி,ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.
சத்யானந்தா கோழீபீ சித்தர்=பஸ் ஸ்டாப் அருகில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.

திருவான்மியூர்:பாம்பன் சுவாமிகள்-கலா சேத்ரா அருகில் திருமட வளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயம்.ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.

வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறிய கோவில்.
சர்க்கரை அம்மாள்=75,கலா சேத்ரா ரோடு,

வேளச்சேரி:சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி=காந்தி சாலை திருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்க பிரதிஷ்டை.

ராஜகீழ்ப்பாக்கம்:சச்சிதானந்த சற்குரு சாமிகள்=அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி:நாகமணி அடிகளார்=கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் – நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.

நங்கநல்லூர்:மோனாம்பிகை-ஞானாம்பிகை- சாதுராம்
இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம்(மாடர்ன் உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி

சிட்லப்பாக்கம்:சாயி விபூதி பாவா= 83,முதல் மெயின் ரோடு,ஹெச்.சி.நகர்-சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில் சமாதி கோவில்-அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.

தாம்பரம்: எதிராஜ ராஜயோகி-ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.

படப்பை:துர்கை சித்தர்-ஜெயதுர்கா பீடம் கோவில்.
பெருங்களத்தூர்: ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.ஓம்சிவசக்திஓம்
தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவமாதிகளின் பட்டியல் பகுதி-2
பூமியில்  சித்தர்களின் ஆட்சி துவங்கப் போகிறது;சித்தர்கள் பூமியை 72,000 ஆண்டுகளுக்கு ஆளப்போகிறார்.முதலில் கொங்கணவர் 150 ஆண்டுகளுக்கு பூமியை ஆளப்போகிறார்;இவரது ஆட்சி துவங்கியதும்,தமிழ்நாடு ஆன்மீக ரீதியாக சுத்தமாகும் என்று தெரிகிறது;சித்தர்களின் ஆட்சி துவங்கியதற்கு அடையாளமாக தமிழ்நாட்டின் பழமையான கோவில்களில் இருக்கும் குளங்களில் நறுமணம் எப்போதும் பரவிக்கொண்டே இருக்கும்;இதுதான் அடையாளம்.கடந்த 30,40,50 ஆண்டுகளாக நீதி,நேர்மை,தர்மம் மற்றும் நியாயத்துக்காகப் போராடுபவர்கள்,நேர்மையாக வாழ்வதாலேயே அனைத்தையும் இழந்தவர்கள் அனைவரும் சித்தர்களின் ஆட்சிக்காலத்தில் சகல சவுபாக்கியமும் பெற்று வளமோடு வாழப் போகிறார்கள்.அதற்குள் சித்த சக்திகளின் அருளாசியைப் பெற்று,நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு வாழத்துவங்குவோம்;

விருதுநகரில் இருக்கும் ஜீவ சமாதிகள்

திருப்புகழ் முத்தையா சாமிகள்:விருதுநகர் நகராட்சி பின்புறம் நாராயண மடம் தெரு பிரியும் இடத்தில் திருப்புகழ்சாமி சமாதி கோவில் அமைந்திருக்கிறது.

சாத்தூர்

மாவிலிப்பட்டி சங்குசாமி
சாத்தூரிலிருந்து 25 கி.மீ.தூரத்திலுள்ள மாவிலிப்பட்டியில் சமாதி கோவில் இருக்கிறது.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை டூ விருதுநகர் சாலை பாவடித் தோப்பு அருகில் சமாதி கற்கோவிலாக விமானத்துடன் உள்ளது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா மாசி மாதத்து மகம் நட்சத்திரம் நிற்கும் நாளில்( மாசி பவுர்ணமி) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தட்சிணாமூர்த்தி சுவாமி

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் நேரு மைதானத்திற்கு வடக்கே சமாதி கோவில் இருக்கிறது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திர நாளன்று நடைபெற்றுவருகிறது.

சுப்பன் ஞானியார்
சொக்கலிங்கபுரம் வடக்குரதவீதி காமாட்சியம்மன் கோவில் பின்புறம் சமாதி கோவில்  இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாத புனர்பூசம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.
ஆத்மானந்த ராமசாமி
சொக்கலிங்கபுரம் சிவன் கோவில் தெப்பக்குளத்தின் மேற்குக் கரைப்பக்கம் சமாதி கோவில் இருக்கிறது.ஐப்பசி மாதம் வரும் மூலம் நட்சத்திரநாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

பொன்னம்பல சுவாமி

அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு அருகில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலுக்கு மேற்கே சமாதி கோவில் இருக்கிறது.தை மாதம் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

புலியூரான்
புலியூரான் சித்தர்
அருப்புக்கோட்டையில் இருந்து 10 கி.மீ.தூரத்தில் உள்ளது புலியூரான் சமாதி.

கட்டங்குடி
ரெட்டிச்சாமி குமரவேல் மவுனகுருசாமி
அருப்புக்கோட்டையிலிருந்து 15 கி.மீ/தூரத்தில் உள்ள கட்டங்குடியில் சமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஆனிமாத சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

சிவானந்த ஜோதி

மேற்கிலிருந்து ஊருக்குள் நுழையும்போது சாலைக்கு வடபுறம் முதலில் தென்படும் கோவில் வளாகமே சிவானந்த ஜோதி சித்தர் அதிஷ்டானக் கோவில்.வருடாந்திர குருபூஜை விழா புரட்டாசி மாத பவுர்ணமியன்று நடைபெற்றுவருகிறது.

கோட்டூர்

கோட்டூர் குருசாமி
அருப்புக்கோட்டையிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ள கோட்டூரில் குருசாமி சுவாமிகளின் சமாதி கோயில் இருக்கிறது.ஆடி மாத மகம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.இவரது ஜீவசமாதி ராஜபாளையம் அம்பலபுளிபஜாரின் தெற்கு எல்லையில்,சாலியர் சமுதாயத் தெருவை ஒட்டி அமைந்திருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த ஜீவசமாதி கோயில் இந்த ராஜபாளையம் குருசாமி கோவில் ஆகும்.சுமார் 3000 குடும்பங்களுக்கு இவரே குல தெய்வமாகத் திகழ்ந்துவருகிறார்.

வடக்கு நத்தம்

ஆறுமுகச்சாமி

அருப்புக்கோட்டையிலிருந்து  பஸ் வசதியுள்ள வடக்கு நத்தம் கிராமத்தில் சமாதி கோவில் இருக்கிறது.சமாதி மீது முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.மாதம் தோறும் வரும் கார்த்திகை  நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

துத்தி நத்தம்

சிவத்தையா சுவாமி
அருப்புக்கோட்டை சாயல்குடி சாலையில் பரளச்சியை அடுத்து துத்திநத்தம் விலக்கு;இங்கே சிவத்தையா சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.

பெருமாள்கோவில்பட்டி
மாசிலானந்த சாமி
அருப்புக்கோட்டை டூ எட்டயபுரம் சாலையில் 18 கி.மீ தூரத்தில் கோடாங்கிபட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் உள்ளது பெருமாள்பட்டி கிராமம்.இந்த கிராமத்தில் மாசிலாந்த சாமியின் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் உத்திரம் நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.

அழகாபுரி

அருப்புக்கோட்டை டூ எட்டயபுரம் சாலையில் அழகாபுரி கிராமத்தில்(வெம்பூர் அருகில்) சமாதிகோவில் இருக்கிறது.மாசி மாதம் வரும் பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
 ரெட்டியபட்டி

ரெட்டியப்பட்டி சுவாமிகள்
அருப்புக்கோட்டை டூ விளாத்திகுளம் சாலையில் 31 கி.மீ.தூரத்தில் நாகலாபுரம் இருக்கிறது.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் கிழக்கே ரெட்டியபட்டி சுவாமிகளின் சமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
ரெட்டியப்பட்டி லிங்குசாமி திருக்கோவிலும் இங்கே இருக்கிறது.

ராஜபாளையம்

குருசாமி கோவில்
கோட்டூர் குருசாமிகளே இங்கே வந்து குருசாமியாக அருள்பாலித்து வருகிறார்.இந்த கோவிலுக்கு 3000 பூசாரிகள் இருக்கிறார்கள்.குருசாமியை வழிபடுபவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வரிசைக்கிரமப்படி பூஜை வைக்க வேண்டும்.ஒருவர் ஒரு முறை பூஜாரியாக  சில நாட்கள் பணிபுரிந்தால்,அவரது பூஜாரி முறை மீண்டும் வர 3 ஆண்டுகள் ஆகும்.இந்த குருசாமி கோவில் சாலியர் சமுதாயத்துக்குச் சொந்தமான  ஜீவசமாதி கோவில் ஆகும்.ஒவ்வொரு கார்த்திகை தினத்தன்றும் சிறப்பு பூஜைகளும்,அன்னதானமும் நடைபெற்றுவருகிறது.தொடர்ந்து 3 நாட்கள் இங்குவந்து வழிபட்டாலே,நமது கடுமையான பண நெருக்கடி தீர்ந்துவிடுகிறது என்பது அனுபவபூர்வமான உண்மை.பல பக்தர்களிடம் குருசாமி இன்றும் நேரில் காட்சி தந்து பேசி வருகிறார்.
பொன்னப்பஞானியார் மற்றும் கருப்பஞானியார்
குருசாமி கோவிலுக்கு நேராகச் செல்லும் தெருவில் ஒரு பர்லாங்கு தூரத்தில் இந்த ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.கருப்பஞானியார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில்,ஒரே நேரத்தில் ராஜபாளையத்திலும்,வத்ராப் அருகில் இருக்கும் W.புதுப்பட்டியிலும் நேரடியாகப் பேசியிருப்பதைக் கண்டு பலரும் அதிசயப்பட்டிருக்கின்றனர்.

குமராண்டி சுவாமி

ராஜபாளையம் டூ தென்காசி சாலையில் பி.எஸ்.கே.பூங்காவிற்கு வடக்கில் விவேகானந்தர் தெரு முனையில் குமராண்டி சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.

திருச்சிற்றம்பல குருநாத சுவாமி
ராஜபாளையம் வடபுறம் திரவுபதி அம்மன் கோவில் தென்புறம் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

கொம்புச்சாமி

ராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி செல்லும் சாலையில்,சங்கரன்கோவில் திருப்பத்திலிருந்து ஆலங்குளம் மற்றும் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் கிழக்கே சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது கொம்புச்சாமி கோவில்.தோப்புப்பட்டி சாலியர் தெருவின் தென்புறத்தில்  அமைந்திருக்கிறது.சித்ராபவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

பாலத்தடி சுவாமி

ராஜபாளையம் மலையடிப்பட்டி ரோடு அருகில் பாலமரத்தடி சுவாமிகளின் ஜீவசமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.மாசி மாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
சேஷம குருநாத சுவாமி
ராஜபாளையம் வடமேற்குப் பகுதியில் கீழ ஆவரம்பட்டி பாரதியார் தெருவின் கடைசியில் ஸ்ரீ சேஷம குருநாத சுவாமி சமாதி கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை கார்த்திகை மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

அருணாச்சலேஸ்வரர்

ராஜபாளையம் அரசுமருத்துவமனை நேர் எதிரில் சாலையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு,அமைந்திருக்கிறது.
ஸ்ரீசத்தியமூர்த்தி சாமிகள்
ராஜபாளையம் அருள் டெக்ஸ்டைல்ஸ் மில்லுக்கு முன்னால் அருள்ஜோதி இல்லம் என்னும் பெயரில்  சுவாமிகளின் ஆசிரமம்.ஆசிரம வளாகத்திற்குள் சமாதி மேடை! வருடாந்திர குருபூஜை வைகாசி மாதம் வரும் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

கரிவலம் வந்த நல்லூர்
சித்தகல்ப சிரோன்மணி பொன்னையா சுவாமிகள் ஜீவசமாதி இருக்கிறது.

பொதிச்சாமி: கரிவலவந்த நல்லூரில் பஞ்சமூர்த்தி கோவிலாக இருக்கிறது.

சென்னிகுளம்

அண்ணாமலை ரெட்டியார்:கரிவலம் வந்த நல்லூரிலிருந்து 3 கி.மீ.தூரத்திலுள்ள சென்னிகுளத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

ராஜபாளையம் சத்திரப்பட்டி

சுப்ரமணிய சாமி
ராஜபாளையம் ஆலங்குளம் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் உள்ளது சத்திரப்பட்டி.மருந்து துணிகள் எனப்படும் பேண்டேஜ் உற்பத்தியில் உலகச் சந்தையைக் கைப்பற்றிவரும் தொழில் கிராமம் இது.இங்கிருக்கும் விநாயகர் ஆரம்பப் பள்ளி அருகில் வேதாந்த மடம் இருக்கிறது.இந்த மடத்தின் வளாகத்திற்குள் சுப்ரமணிய சாமி ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா புரட்டாசி மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திர நாளன்று நடைபெற்றுவருகிறது.

அருணாச்சல செம்பட்டை ஞானி
சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்புறம் இருக்கிறது.
அயனாவரம்

ஒரு சொல் வாசகன்
ராஜபாளையம் ஆலங்குளம் சாலையில் இருக்கும் சத்திரப்பட்டியை அடுத்து இருக்கும் கிராமம் இது.இங்கு இருக்கும் கண்மாயின் தென்கரையில் ஒரு சொல் வாசகன் சித்தர் பீடம் கிழக்கு பார்த்த சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

கைலாசசுந்தர சுவாமி
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் கனரா வங்கியைக் கடந்ததும் பிரதான சாலையில் இருக்கிறது.சாலியர் சமுதாயத்தின் ஊர் நிர்வாகம் செய்துவருகிறது.

பொன்னாயிரம் சுவாமி
ஊரணிப்பட்டித் தெருவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரத்தில் நடைபெற்றுவருகிறது.

ஆறுமுகச்சாமி கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் கோவிந்தன் நகர் காலனியில் பிரதான சாலையில் வளைவில் அமைந்திருக்கிறது.இங்கு ஆறுமுகச்சாமியும்,பாம்பு தின்னி சாமியும் இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.இதற்கு எதிரே ஒரு சுடுகாட்டுப்பாதை செல்கிறது.அந்த சுடுகாட்டில் ஒரு ஜீவசமாதி வளாகம் இருக்கிறது.

மூவர் சமாதி என்ற அருள்ஞானிகளின் வளாகம்
மிகவும் சக்திவாய்ந்த இங்கு மதுரை சாமிகள் முதலான 23 மகான்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக சூட்சுமமாக இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.

எஸ்.ராமச்சந்திராபுரம்
மதுரை ராஜபாளையம் சாலையில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு அடுத்த 3 வது பஸ் ஸ்டாப் எஸ்.ராமச்சந்திராபுரம் ஆகும்.இங்கே பஸ் நிறுத்தத்திற்கு தெற்கே சதுரகிரியில் 30 ஆண்டுகளாக அன்னதானம் செய்துவரும் காளிமுத்து சுவாமிகளின் ஆசிரமமும்,ஜீவசமாதியும் இருக்கிறது.
இந்த எஸ்.ராமச்சந்திராபுரத்தின் வடக்குத் தெருவுக்கும் ,செங்குளம் கண்மாய்க்கும் நடுவே சடையாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இவருக்கும்,சதுரகிரிக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.சுமார் 200 குடும்பங்களுக்கு இவரே குல தெய்வம் ஆவார்.மிகவும் சக்திவாய்ந்த ஜீவசமாதி ஆகும்.

ஓம்சிவசக்திஓம்

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவசமாதிகளின் இருப்பிடங்கள் பகுதி 3

அனுபவ ரீதியாகப்பார்த்தால், கோவிலுக்குச் சென்று நாம் ஒரு குறிப்பிட்ட பரிகாரம் செய்தால்,அதற்கான பலன்கள் நமக்குக் கிடைக்க கொஞ்சம் காலம் ஆகும்;ஆனால்,ஜீவசமாதிகள்,சித்தர்களின் பீடங்களுக்குச் சென்று முறையாக வழிபட்டால்(முந்தைய பதிவில் வழிகாட்டியபடி) விரைவாக அதற்குரிய பலன்கள நம்மை வந்து சேருகின்றன;
காரைக்கால் பகுதியில் இருக்கும் ஜீவசமாதிகள்:

ஆலத்தூர்

சித்தர்மலை பெருமாள் சுவாமி
காரைக்காலில் இருந்து 7 கி.மீ.தூரத்திலுள்ள ஆலத்தூரில் ஜீவசமாதியாக இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இங்கு ஆவணி மாதம் வரும் மகம் நட்சத்திரத்திலிருந்து 10 நாட்களுக்கு விழா நடைபெறும்.ஆவணி மாதம் வரும் மூலம் நட்சத்திர நாளில் குருபூஜை விழா வருடந்தோறும் நடைபெற்றுவருகிறது.

காரைக்கால்

சற்குரு சீமான் சாமியார்
காரைக்கால் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மடத்தில் சமாதிபீடம் இருக்கிறது.இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

நாகூர்

நாகூர் ஆண்டவர் தர்கா

நாகப்பட்டிணம்

அழுகண்ணி சித்தர்
நாகப்பட்டிணம் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நீலாய தாட்சியம்மன் கோவிலுக்குள் அழுகண்ணி சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

வடக்குப் பொய்கை நல்லூர்=கோரக்கர்
நாகப்பட்டிணத்தில் இருக்கும் சுனாமிப்பாலம் கடந்து 6 கி.மீ.தூரத்தில் இருப்பது கோரக்கரின் ஜீவசமாதி ஆகும்.தினமும் மதியம் அன்னதானமும்,முறையான,திட்டமிட்ட பராமரிப்பும் உள்ள சித்தரின் ஜீவசமாதி ஆகும்.பலவிதமான தெய்வீக சிறப்புகள் இங்கு உண்டு.ஒருமுறை போய் வந்தால்,கோரக்கரின் அற்புதத்தை உணருவீர்கள்.

மேலவாஞ்சூர்

ஸ்ரீரெங்கைய சுவாமிகள்
நாகூருக்கு வடக்கே 2 கி.மீ.தூரத்தில் மேலவாஞ்சூர் சுவாமிகளின் ஜீவசமாதி மடத்துக்குள் சமாதிக்கருவறையாக அமைந்திருக்கிறது.

திருமலை ராயன்பட்டினம்

புண்ணாக்கு சாமிகள்

காரைக்காலில் இருந்து 6 கி.மீ.தூரத்தில் உள்ள திருமலைராயன்பட்டிணம் ஹைஸ்கூல் சாலையில் சிவன் கோவில் உள்முகப்பில் புண்ணாக்கு சாமிகள் மடம் இருக்கிறது.இங்கு கருவறையே ஜீவசமாதியாக இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம் வரும் உத்திரட்டாதி நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது
நவகண்டயோகி

திருமலைராயன்பட்டினத்தில் வெங்கடேசப்பெருமாள் கோவில் அருகே எல்லையம்மன் கோவில் மேற்கு கோடியில் குளம் அருகே சவுரியார் மடம் இருக்கிறது.அந்த மடத்தினுள் சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஆனி மாதம் வரும் அவிட்டம் நட்சத்திரநாளன்று நடைபெற்றுவருகிறது.(தூங்கும் போது மனிதனின் உடல் ஒன்பது துண்டுகளாகப் பிரிந்து தூங்கும் யோகநிலைக்கு நவகண்டம் என்று பெயர்;ஏராளமான தமிழ் ஆன்மீக வாதிகளுக்கு இந்த நவகண்டம் சர்வசாதாரணமாக கைகூடியிருக்கிறது.நிச்சயமாக உங்கள் ஊரில் நவகண்டம் திறனைக் கொண்ட ஆன்மீக முயற்சியாளர்கள் இருப்பார்கள்.)

அக்கரை வட்டம்

சித்தானந்த சாமிகள்

காரைக்கால் டூ நாகூர் சாலையில் அக்கரை வட்டம் பிடாரிக்குளத்தில் சாலையைக் கடந்தால் சமாதிக் கோவில் இருக்கிறது.ஆவணி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

புதுக்கோட்டை

ஜட்ஜ் சாமிகள்
புதுக்கோட்டையின் கீழ7 ஆம் வீதியில் உள்ள புவனேஸ்வரி கோவில் வளாகத்திற்குள் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.பிரதி வைகாசி மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

சாந்தானந்தா சுவாமி
புவனேஸ்வரி அம்மன் கோவிலில் அதிஷ்டானம்

உலகநாத சுவாமி
புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி வடபுறம் சுவாமிகள் மடாலயம் பெயர் பொறித்த நுழைவு வாயில் இருக்கிறது.உள்ளே மடமும் சமாதிகோவிலும் உள்ளன.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரநாளின் போது நடைபெற்றுவருகிறது.

தபசுமலை

தபசுமலை துறவிகள்
புதுக்கோட்டை டூ மதுரை சாலையில் 14 கி.மீ.தூரத்தில் லேனா விலக்கு இருக்கிறது.அங்கிருந்து தெற்கே 4 கி.மீ.தூரத்தில் தபசுமலை அமைந்திருக்கிறது.தபசுமலையில் வடமேற்கே சப்தமுனிவர்கள் அடங்கிய குகைப்பாதை இருக்கிறது.இங்கே சிலாவடிவங்கள் தனித்தனியே உள்ளன.

வடுகபட்டி
சுருளிச்சாமிகள்
புதுக்கோட்டை டூ திருச்சி சாலையில் கீரனூருக்கு அருகே வடுகப்பட்டியில் சுருளிச்சாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

செம்பூதி
சிவந்திலிங்கசாமி & ஏகம்மை
புதுக்கோட்டை டூ குழிபிறை டூ பொன்னமராவதி வழித்தடத்தில் செம்பூதியில் சமாதி குருபீடம் இருக்கிறது.தம்பதியர் இருவரும் ஒரே நேரத்தில் ஜீவசமாதி ஆனார்கள்.வருடாந்திர குருபூஜை விழா மாசி மாதம் வரும் பவுர்ணமியன்று நடைபெற்றுவருகிறது.

பனையபட்டி
சாதுபுல்லானி சுவாமி
குழிபிறை அருகே பனையப்பட்டியில் ஆயிரம் பிள்ளையார் கோவில் வளாகத்திற்குத் தெற்கே அதிஷ்டானக் கோவில் அமைந்திருக்கிறது.சுவாமி திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.வைகாசி மாதம் வரும் சதய நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

தேனிமலை
ஸ்ரீபெருமானந்த சுவாமிகள்
பொன்னமராவதிக்கு வடக்கே 10 கி.மீ.தூரத்தில் தேனிமலை இருக்கிறது.இங்கே முருகன் குன்றுக்குக் கீழே அடிவாரத்தில் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.

உலகம்பட்டி
சித்தர்பெருமான்
பொன்னமராவதியிலிருந்து 9 கி.மீ.தூரத்தில் உலகம்பட்டி ஞானியார் திருமடம் இருக்கிறது.இங்கே இருக்கும் சேவுகான்ந்த சுவாமி ஜீவசமாதி பீடம் அமைந்திருக்கிறது.

அரிமழம்
கோடகநல்லூர் சுந்தரசாமி
புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ.தூரத்திலுள்ள அரிமழம் பேருந்து செல்லும் சாலையை ஒட்டி அதிஷ்டானக்கோவில் அமைந்திருக்கிறது.
 சிவகெங்கை மற்றும் காரைக்குடி
கோட்டையூர்
எச்சில் பொறுக்கி ஆறுமுகசாமி
காரைக்குடியிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் கோட்டையூர் இருக்கிறது.இங்கு நகரத்தார் சிவன் கோவிலின் கிழக்கே 2 கி.மீ.தொலைவு நகர விரிவாக்கப் பகுதியில் சமாதி கோவில் அமைந்திருக்கிறது.

காரைக்குடி
சிவன்செயல் சித்தர்
காரைக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் சமாதிகோவில் இருக்கிறது.

கோவிலூர்
கோவிலூர் ஆண்டவர்(எ) முத்துராமலிங்க ஞான தேசிகர்
காரைக்குடி அருகே மேற்கில் கோவிலூர் டூ கொற்றவாளிசூவரர் கோவிலருகே திரு மடத்தில் மகாலிங்கப்பிரதிஷ்டையுடன் கோவிலூர் ஆண்டவரின் அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.

ஸ்ரீதுறவு அருணாச்சல தேசிக சுவாமிகள்
மேற்படி மடத்தில் கோவிலூர் ஆண்டவர் லிங்க மூர்த்தியாகவும்,துறவு அருணாச்சல சுவாமி நந்தியாகவும் சன்னதி பலி பீடமாக கருணாந்திசாமி  அதிஷ்டானம் உள்ளது.

சிங்கம்புணரி

வாத்தியார் சாமி (எ) முத்துவடுகேச சுவாமி
திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ.தூரத்தில் சிங்கம்புணரி டூ பிரான்மலை செல்லும் பாதையில் ஆற்றின் தென்கரையில் சித்தர் முத்துவடுகேசர் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.பவுர்ணமி தோறும் அன்னதானமும்,சிறப்பு வழிபாடும் நடைபெற்றுவருகிறது.கருவறையில் சமாதி மீது சித்தர் யோகநிலையில் இருக்கும்போது அதே நிலையில் சிலை செய்து தம் அருளை ஏற்றிய சிலை பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

நாட்டரசன்கோட்டை
கம்பர்
சிவகெங்கையிலிருந்து 7 கி.மீ.தூரத்தில் நாட்டரசன் கோட்டை இருக்கிறது.இங்கிருக்கும் கருப்பசாமி கோவில் அருகே கம்பர் பெருமான் சமாதி இருக்கிறது.

இடையமேலூர்
மாயாண்டி சாமிகள்
சிவகெங்கை மேலூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் இடையமேலூர் பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாக சமாதிக்கோவில் அமைந்திருக்கிறாது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம்  வரும் பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரநாட்களில் நடைபெற்றுவருகிறது.

திருப்பத்தூர்
வாலைச்சித்தர்(எ)வேலாயுத சாமிகள்
திருப்பத்தூர் டூ சிவகெங்கை சாலையில் 4 கி.மீ.தூரத்தில் காட்டாம்பூர் தண்ணீர்ப்பந்தல் என்னும் சாமியார் மடம் கிழக்கே உள்ள தோப்பினுள் வாலைச் சித்தர்பீடம் அமைந்திருக்கிறது.

கீழப்பூங்குடி
மிளகாய்சாமி
திருப்பத்தூர் டூ சிவகெங்கை வழியில் 25 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.ஒக்கூர் மேற்கே 4 கி.மீ.கீழப்பூங்குடியில் மிளகாய் சாமிகளின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
மதுரையாண்டவர்(எ)பரஞ்சோதி சாமிகள்
கீழப்பூங்குடி மிளகாய் சாமிகள் சமாதிக்கோவிலுக்குப் பின்புறம் உள்ள தெருவில் மதுரையாண்டவர் என்னும் பரஞ்சோதி சுவாமிகளின் மடமும்,சமாதிக்கோவிலும் அமைந்திருக்கிறது.

சிவகெங்கை
மவுனகுரு சாமி
மதுரைமுக்கு ரோடு அருகில் சமாதி இருக்கிறது.

ஒழுகமங்கலம்
ஆரிய சித்தர்
சிங்கம்புணரியிலிருந்து 16 கி.மீ.தூரத்தில் ஒழுகமங்கலம் இருக்கிறது.அங்கிருக்கும் திருமேனிநாதம் திருக்கோவிலில் கன்னி மூலையில் ஆரிய சித்தர் ஜீவசமாதி நிலவறையில் இருக்கிறது.அந்த நிலவறையின் மேல் சிவலிங்கத் திருமேனி நிறுவப்பட்டுள்ளது.

சொக்கலிங்கபுரம்
சிவகுருநாத சித்தர்
சிங்கம்புணரியிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சோளீஸ்வரர் கோவில் குளக்கரையில் சிவகுருநாத சித்தர் மற்றும் சீடர்கள் இருவரின் ஜீவசமாதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மானாமதுரை
சதாசிவ பிரமேந்திரர்
நெரூரில் சமாதி ஆன அதே நேரத்தில் மானாமதுரை சோமநாதர் ஜோதியாக காட்சி தந்த இடத்தில் பிரகாரத்தில் சந்நிதி உள்ளது.ஆண்டு குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் சுத்த தசமியில் !!!

சிவப்பிரகாசம் சித்தர்சாமி மற்றும் வேலாயுதசாமி
மானாமதுரையில் இருவரது சமாதிகளும் இருக்கின்றன.

முனீஸ்வரர் சித்தர்
வேதியனேந்தல் விலக்கு அருகில் பேரில்லா மரம் உள்ள இடத்தில் ஜீவசமாதி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவசமாதிகள் இருக்கும் இடங்கள் பகுதி 4
புழல்
கண்ணப்ப சாமி
புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்;ஜீவசமாதி மேடை மீது சாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார்.இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.

காரனோடை
மல்லையா சாமிகள்

காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ் வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது.இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்
காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அலமாதி
மார்க்கண்டேய மகரிஷி
அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதி அமைந்திருக்கிறது.

கோவணச்சாமி
அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.

பூதூர்
ஷா இன்ஷா பாபா
செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடு ரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.

பஞ்சேஷ்டி
புலேந்திரர்(சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)
ரெட் ஹில்ஸ்  டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

ஒத்தாண்டேஸ்வரர் திருமழிசை, திருவள்ளூர்

ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம் கரிகாலப்பெருவளத்தான், இத்தலத்திற்கு அருகிலுள்ள மற்றொரு தலத்தில் சி...