அருள்மிகு மீனாட்சி சொக்கநாதசுவாமி திருக்கோயில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, மன்னார்குடி - 614001
*மூலவர்: அருள்மிகு சொக்கநாத சுவாமி
*அம்பாள்: அருள்மிகு மீனாட்சி அம்மன்
*ஸ்தல விருட்சம்: பலாமரம்.
*கருவறையில் அருள்மிகு சொக்கநாத சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
*கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18ஆம் நூற்றாண்டை சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும். ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தி௫வாரூர் மற்றும் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
*இந்த மீனாட்சி சொக்கநாதர் கோயில் திருமண பிரார்த்தனைத் தலமாக திகழ்கிறது. அன்னை மீனாட்சி தெற்கு நோக்கிய சந்நிதியில் அருள்புரிகிறார்.
*மேலும் இக்கோயில், கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை மற்றும் வைகாசி விசாகப் பெருவிழாக்களுக்குப் பெயர் பெற்றது.
*திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஜயங்கொண்டநாதர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், நீலகண்டேசுவரர் கோயில், கைலாசநாதர் கோயில், இந்த
"மீனாட்சி சொக்கநாதர் கோயில்", காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேசுவரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், அண்ணாமலை நாதர் கோயில் ஆகிய எட்டு கோயில்களின் நடராஜ மூர்த்திகளுக்கு ஆருத்ரா அன்று காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
இதையடுத்து, வண்ண மின் விளக்குகள், பூ வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட தனித்தனி ரதத்தில் எட்டு நடராஜ மூர்த்திகளும் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று ராஜகோபாலசுவாமி கோயில் முன்பு உள்ள கருடக்கம்பம் அருகே ஒரே வரிசையில் காட்சி அளிப்பார்கள்.
பின்னர், இந்த மூர்த்திகளுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
*இக்கோயில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
*கிழக்கு நோக்கிய இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கிறது. விநாயகர், நால்வர், தன்வந்திரி, தலவிநாயகர், சித்திவிநாயகர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, ஏகாம்பரேஸ்வரர், முருகன், விஷ்ணு, மகாலட்சுமி, சரஸ்வதி, ஐயப்பன், நவகிரகங்கள், பைரவர் மற்றும் சனீஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment