Monday, February 2, 2026

செந்துறை நாகல்குழி சிவன்கோயில்

அரியலூர் மாவட்டம் செந்துறை  வட்டம் நாகல்குழி சிவன்கோயில்
 

சோழர்கள் தமது தலைநகரை தஞ்சையில் இருந்து  அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினர். 

ராஜேந்திரன் சோழன் ஆட்சி காலம்  ( கி.பி 1012 முதல் 1044 ) ல் இருந்து  கி.பி 1279 இல் ஆட்சி செய்த சோழர் வம்சத்தின் இறுதி வரை, சோழ_சாம்ராஜ்யத்தின் தலைநகராக 256 ஆண்டுகள் இருந்தது. 
அதுமட்டுமல்ல பிற மாவட்டங்களை  விட அதிக வரலாறு கொண்டதும் இந்த அரியலூர்_ மாவட்டம் தான். பல கிராமங்களில் உள்ள கோயில்கள் வரலாறு சொல்கின்றன.  

நாகல்குழி; இது  ஜெயம்கொண்டத்தின் வடமேற்கில் இலையூர் வழி சென்றால் 11 கிமி தூரத்தில் உள்ளது. சுற்றிலும் முந்திரி மரங்கள் அடர்ந்த வனப்பகுதி,  இங்கு அக்கால பாளையக்காரர்களால் நானூறு ஆண்டுகளுக்குள் கட்டப்பட ஒரு பழமையான சிவத்தலம். போக்குவரத்து இரைச்சல் இன்றி இந்த கோயில் இறைவன்  அமைதியான சூழலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் .

 இப்பகுதியில் பெரும்பாலான ஊர்கள் மரங்களின் பெயர்களை தாங்கி நிற்பதால் நாவல் மரங்கள் அடர்ந்த ஊர் எனும் பெயரில் நாவல் குழி என் அழைக்கப்பட்டிருக்கவேண்டும். 

கிழக்கு நோக்கிய திருக்கோயில்,   முகப்பில் பார்த்தால் ஒரு திண்ணை  வைத்த  ஒட்டு வீடு போன்ற அழகுடன் காட்சியளிக்கிறது. அதன் வழி உள்ளே சென்று பார்த்தால் பெரிய வளாகமாக உள்ளது. இப்பகுதியில் பல சிவாலயங்கள் இந்த முறையில் கட்டப்பட்டு உள்ளன.  கிழக்கு நோக்கிய கருவறை முகப்பில் ஒரு மண்டபம் எதிரில் நந்தி பலிபீடமும் உள்ளது. தெற்கு நோக்கிய அம்பிகை கருவறை 

இறைவன் காசி விஸ்வநாதர். இறைவி காசி விசாலாட்சி. 

கருவறை கோட்டங்களில் தென்முகன் சிறிய அளவில் உள்ளார். வடக்கில் துர்கையம்மன் உள்ளார்.  உயர்ந்த மதில் சுவற்றினை ஒட்டி விநாயகர் முருகன் சிற்றாலயங்கள் உள்ளன. சண்டேசர் சன்னதி  உள்ளது.  வடகிழக்கில் நவக்கிரக சன்னதி உள்ளது. சூரியன் சனீஸ்வரன் உள்ளனர். 

எளிய அழகுடன் கோயில் நன்றாக உள்ளது. இப்பகுதியின் வழி செல்லும் போது அனைவரும் இறைவனை தவறாமல் தரிசனம் செய்து செல்ல வேண்டும். 

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என முன்னோர்கள் கட்டி வைத்த கோயிலை உள்ளூர் மக்கள் நல்ல முறையில் வைத்து பூஜைகள் செய்விக்கின்றனர், நாமும் பல ஆயிரம் மக்கள் கூட்டத்தில் ஒருவராக வந்து செல்லும் கோயிலில் நின்று சலிக்காமல்,  இது போன்ற கிராமங்களுக்கு வந்து தரிசனம் செய்தல் வேண்டும்.   அவர்களுக்கு ஊக்கம் தரும் வண்ணம் பூஜை பொருட்களை வாங்கி அளித்து இறைவன் அருள் பெற வேண்டும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள்.

ஆரண்யேச்வரம் (கீழைத் திருக்காட்டுப் பள்ளி)  ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள்! - கீழைத்திருக்காட்டுப்பள்ளி அதிசயமும் வரலாறும்  தமி...