Thursday, May 21, 2026

ஈரோடு பள்ளிபாளையம் - நவபிருந்தாவனம் :

ஈரோடு பள்ளிபாளையம் - நவபிருந்தாவனம் :
ஸ்ரீ பாதராஜர் மடத்தின் நவ பிருந்தாவனம் தமிழகத்தின் ஈரோடு அருகாமையில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஒன்பது பேர் ஒரே இடத்தில் சமாதி கொண்டருளும் அற்புத திருத்தலம். உண்மையில் மிகவும் அமைதியான இடம்.

எத்தனையோ சித்தர்களும் மகான்களும், யோகிகள் வாழ்ந்த புண்ணிய பூமி நம்பாரத பூமி. அந்தவகையில் அண்மை கண்ட அழகிய அமையான ஜீவசமாதியை உங்களுடன்பகிர்வதில் பெருமகிழ்வுருகிறேன்.

அமைவிடம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து சேசாயி பேப்பர் மில் செல்லும் சாலையில் வசந்தநகர் என்ற இடத்தில் இருந்து காவிரிக்கரையின் கிழக்கு புறத்தில்கரைகாண முடியாத பல அற்புதங்கள் கொண்ட நவ பிருந்தாவனம் ஸ்ரீ பாதராஜ மடம் அமைந்துள்ளது. இப்பகுதிமக்களால் சந்தியாசி மடம் என்றும் முளபாகல் மடம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ நவவிருந்தாவனம்

காலம்:

கி.பி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது அல்லது 300 வருடங்களுக்கு முற்பட்டது என்பது ஆய்விற்குரியது.

ஸ்ரீபாதராஜர்:

ஸ்ரீ பாதராஜ மடத்தின் நிறுவனர் ஸ்ரீ பாதராஜர் ஆவார், இவர்கர்நாடக மாநிலம் அப்பூரை சேர்ந்தவர், லட்சுமி நாராயணன் என்பது இவர் இயற்பெயராகும். சேஷகிரியாச்சார் கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்த இளம்வயதிலேயே தெய்வ அருட் குழந்தையாக வளர்ந்தார்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முளுபாகல் என்ற இடத்தில் இவரின் மூல பிருந்தாவனம்அமைந்துள்ளது கி.பி 1486 ல் பிருந்தாவனஸ்தரானார். இவ்விடம் நரசிம்மதீர்தம் என அழைக்கப்படுகிறது. இந்த முளபாகல்மடம் தான் நாம் பார்க்க உள்ள நவபிருந்தாவனத்தின் தலைமை இடமாக கருதப்படுகிறது.

ஈரோடு நவ பிருந்தாவனத்தில் உள்ள ஒன்பது மகான்கள் பின்வருமாறு:

1.ஸ்ரீ லக்ஷ்மி மனோகர தீர்த்தரு (1670-1708)

2.ஸ்ரீ லக்ஷ்மிபதி தீர்த்தரு (1700-1715)

3.ஸ்ரீ ஸ்ரீநிதி தீர்த்த (1781-1787)

4.ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தரு (1772-1795)

5.ஸ்ரீ சுதிநிதி தீர்த்தரு (1888-1908)

6.ஸ்ரீ ஸ்ரீ மேதாநிதி தீர்த்தரு (1908-1926)

7.ஸ்ரீ தேஜநிதி தீர்த்தரு (1770-1806)

8.ஸ்ரீ தபோநிதி Increment (1806-1838)

9.ஸ்ரீ யசோநிதி தீர்த்தரு 

பாதராஜமடத்தின் 36 வது மடாதிபதியாக 1987 முதல் 23 ஆண்டுகாலம் நிர்வாகம் செய்தவர் ஸ்ரீவிக்ஞான நிதி தீர்த்தர் ஆவார். இவர் பொறுப்பேற்ற பின்னரே நவபிருந்தாவனத்தில் அன்றாட பூஜைகள் துவங்கப்பட்டு சிறப்புற நடைபெறுகிறது.ஸ்ரீ விக்ஞான தீர்த்த சுவாமிகள் 95வது வயதில் கர்நாடக மாநிலம்முளுபாகலில் உள்ள நரசிம்ம தீர்த்ததில் பிருந்தாவனஸ்தராகி (ஜீவசமாதி)விட்டார்.

பள்ளிபாளையத்தில் நவபிருந்தாவனத்தில் அருள்பாலிக்கிற நவநாயகர்கள் :

1. ஸ்ரீ லட்சுமி மனோகர தீர்த்தர்:

கர்நாடகாவில் பிறந்த இவர் கி.பி 1670முதல் 1708 வரை வாழ்ந்தவர். ஸ்ரீ பாதராஜர் மடத்தின் 8வது பீடாதிபதியாவார். பாரதம் முழுவதும் சஞ்சாரம் செய்து வேததர்மம், ஒழுக்கம் பக்தி ஆகியவற்றை மக்களுக்கு போதித்தவர். இவர் ஒசூர் பகுதி யாத்திரையின் போது கடும் பஞ்சம் நிலவுதை கண்டு மக்கள் குறையால் மனமுருகி ஸ்ரீ ஆஞ்சநேயவிக்கிரகத்துடன் ஓர் ஆலயத்தை ' அமைத்து ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து பூஜிக்க கடும் மழை பெய்து அப்பகுதி மக்களின் பஞ்சம் தீர்ததாக வரலாறு. சர்வதாரி வருடம் தைமாதம் பெளர்ணமி தினத்தில் முதல் ஜீவசமாதியாக நவ பிருந்தாவனத்தில் முதல் பிருவனஸ்தராகிவிட்டார்..

2. ஸ்ரீ லஷ்மிபதி தீர்த்தர்:

இவர் ஸ்ரீ லஷ்மி மனோகர தீர்த்தரின் சீடர் ஆவார். திரிகால ஞானி ஸ்ரீ ஹரி கீர்த்தனைகள் பாடி பக்தர்கள் வியாதிகளில் இருந்து காத்து அருளியவர் இவர்

3.ஸ்ரீ நிதி தீர்த்தர்:

ஸ்ரீ பாதராஜ அஷ்டாகம் என்ற ஹ்தோத்திரத்தை உலகிற்கு உணர்த்திய கொண்டவர் மகான்மகாவிஷ்ணுவிடம் அதீத பக்தி கொண்டவர்.

4. ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர்:

ஜபதவ அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தவர் இவர் தியானத்தை மெச்சி இறைவனேஸ்ரீ பாண்டுரங்க விட்டல சுவாமி தம்பதி சமேதாராக காட்சி அளித்தவர், 14வது பீடாதிபதியானவர் வித்வான், எழுத்தாளர், இலக்கியவாதியாவார், மைசூர் மகாராஜவிற்கு தர்மநெறிப்படி மன்னர் ஆட்சி செய்யும் நெறிமுறைகளை உபதேசித்த மகான் இவரை வணங்குபவர் கல்வியில் சிறப்பர்

5. ஸ்ரீ சுதிநிதிதீர்த்தர்:

23வது மடாதிபதியாவார். மத்வ சிந்தாந்தத்தின்

உயர்ந்த கிரதமான ஸ்ரீ மந்நியாயசுதா என்ற கடினமான கிரந்தத்தை மிக எளிய முறையில்அநேகர்க்கு கற்பித்த மகான். தன் வாழ்நாழ் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன் நீராடி ஸ்ரீ கிருஷ்ண பகவானை பூஜித்து வந்த சிவ்ய புருஷர்.

6. ஸ்ரீ மேதாநிதி தீர்த்தர்:

இவர்ஸ்ரீ சதிநிதி தீர்த்தரிடம் சந்நியாசம் பெற்றவராவார். மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் அருளிய சந்திரிகா என்ற கிரந்தத்தின் மூலப்பிரதியை கைப்பட எழுதியவர், விலைமதிக்க முடியாத இவரின் கையெழுத்துப்பிரதி மைசூர் ஓரியண்டல் நூலகத்தில் அமைந்துள்ளது. ஆந்திராவில் யாத்திரையின் போது புலி வர பயப்படாமல் அபிஷேக தீர்த்தம் கொடுத்து மந்திர அட்சத்தையால்புலியை ஆசிர்வதித்தாக வரலாறு

7.ஸ்ரீ தேஜோ நிதி தீர்த்தர்:

இராமநாதபுரம் மாவட்டம் இளையான் குடி வட்டத்தை சேர்ந்தவராவார். துவைத சிந்தாந்த கொள்கையை கடைபிடிப்பதே உண்மையான முக்கிநிலை என்று உணர்ந்தவர். இவர் ஸ்ரீ லட்சுபதி தீர்த்தர் காலத்தில் சேவை புரிந்தவராவார்

8.ஸ்ரீ தபோநிதி தீர்த்தர்:

ஸ்ரீதோஜோநிதி தீர்த்தரின் சீடர் தம் 37 வது வயதில் துறவறம் பூண்டு கி.பி 1806 முதல் 1838 வரை ஓடப்பள்ளி ஸ்ரீ பாதராஜ மடத்தை நிர்வாகம் ப்தவராவார்

9.நீயசோநிதி தீர்த்தர்:

கி.பி1840ஆம் ஆண்டு தை நம் வளர்பிறை தசமியன்று தம் குரு ஸ்ரீ பாநிதி தீர்த்த மகான் அருகில் பிருந்தாவனம்.

தொடர்பு முகவரி: 

நவ பிருந்தாவன்
பள்ளிபாளையம்
வசந்த நகர்
ஈரோடு


காலை 11 மணிக்குள்ளாக வந்தால் மட்டுமே தரிசிக்க இயலும். ஒருமுறை தரிசிக்கவும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் திருமுருகன்பூண்டி

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர்! பக்திக்கும் இறைவனுக்கும் உள்ள அழகான பிணைப்பை விளக்கும் ஒரு தலம்...