Monday, May 25, 2026

குரு பெயர்ச்சி குருபகவானின் விசேஷப் பார்வைகள்.

12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடையக் கூடிய குருபகவான், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தனது உச்ச ராசியான கடகத்துக்கு வருவார். அந்த சமயத்தில் பொதுவாக எல்லா ராசியினருக்குமே நன்மைகள் அதிகமாகவே நடக்கும். அதேசமயம், மற்ற கிரஹங்களின் சேர்க்கை, குருபகவானின் விசேஷப் பார்வைகள் பதியும் இடம் போன்றவற்றின் அடிப்படையில் பலாபலன்களின் அளவு கூடும் அல்லது குறையும். இந்தப் பராபவ வருடத்தில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26.5.2026 அன்று பகல் 11 மணிக்கு குருபகவான், மிதுனம் ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடகத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
திருக் கணிதப்படி 2.6.2026 அன்று பெயர்ச்சி ஆகிறார்.  அவரது விசேஷ பார்வைகளான 5,7,9 ஆம் பார்வைகள் முறையே விருச்சிகம்,மகரம், மீனம் ராசிகளில் பதிகின்றன. இந்த அமைப்பின் காரணமாக எந்தெந்த ராசியினருக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என ஜோதிடர் கணித்துள்ளார். அதை விரிவாக பார்க்கலாம்.
 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
மேஷம்: எண்ணங்கள் ஈடேறக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். எதிர்பாரா பயணங்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடி மகிழ்வு தரும். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். சுபகாரியத் தடைகள் நீங்கும். பணவரவை சேமிக்கப் பழகுவது நல்லது. வரவுக்கு ஏற்ப செலவும் வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழில் எதுவானாலும் அதில் நேரடி கவனம் முக்கியம். 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
முதலீட்டில் அவசரம் வேண்டாம். அரசுப்பணியில் இருப்போர் அடக்கத்தைக் கையாளவது நல்லது. அரசியல் துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவால் பெருமை சேரும். கலைஞர்கள், படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் சோம்பலை விரட்டுவது நல்லது. வாகனப் பழுதினை உடனுக்குடன் சீர் செய்வது நல்லது. தூக்கமின்மை, அஜீரணம், அல்சர் உபாதைகள் வரலாம். ராகவேந்திரர் வழிபாடு, வாழ்வை ரம்யமாக்கும்.12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
ரிஷபம்:திட்டமிட்டு செயல்பட்டால், ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். உடனிருப்போர் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் தடைபடலாம். அது நன்மைக்கே என்பதை உணருங்கள். பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் கைகூடும். வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். புதிய உறவுகளிடம் வீண் கடுமை வேண்டாம். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்து லாபம் தரும். செய்யும் தொழிலில் நிதானமே ஏற்றம் தரும்.

பங்குவர்த்தகத்தில் பெரும் முதலீடு வேண்டாம். அரசுத்துறையினருக்கு ஏற்றமும் மாற்றமும் உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் வரும். அரசியலில் இருப்போர்க்கு ஆதரவு நிலைக்கும். அனுபவம் மிக்கவர்களிடம் சர்ச்சைகள் வேண்டாம். கலைஞர்கள், படைப்புது துறையினருக்கு திறமை பளிச்சிடும். மாணவர்கள் மறதிக்கு இடம்தர வேண்டாம். வாகனத்தில் வேகம் கூடவே கூடாது. அடிவயிறு, கழிவு உறுப்பு, ரத்த நாள உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு, நன்மைகள் சேர்க்கும்.

மிதுனம்: உழைப்பினால் உயர்வுகள் பெறவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் தளராத உழைப்பினால் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உடனிருக்கும் யாருடனும் வீண் உரசல் வேண்டாம். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடவே கூடாது. இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். கடினமான வார்த்தைகளால் அதை விரட்டிவிட வேண்டாம். ஆடை, ஆபரணம், பொருள் சேரும். வீடு, மனை சார்ந்த பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்காள். பழைய கடன்களை நேரடியாகச் சென்று பைசல் செய்யுங்கள். செய்யும் வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் நிதானம் தேவை. அரசுத்துறையில் இருப்போர்க்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கிட்டும் அறிகுறிகள் தெரியத்தொடங்கும்.

அரசியலில் இருப்போர் நாவடக்கத்தால் நல்ல பெயர் வாங்கலாம். பொது இடத்தில் நிதானம் முக்கியம். கலைஞர்கள், படைப்பாளிகள் படைப்பு சார்ந்த ரகசியங்களைப் பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது. மாணவர்கள் அதிகாலைப் படிப்பை வழக்கமாக்குவது நல்லது. இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். கண்கள், முதுகு, அலர்ஜி உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு, மகிழ்ச்சி சேர்க்கும்.

கடகம்: உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக் கூடிய காலகட்டம்.. அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். பொறுப்புகளை திட்டமிட்டு நேரடி கவனத்துடன் செய்வது நல்லது. மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். புதிய பணி தேடுவோர்க்கு வாய்ப்புகள் தேடி வரும்.  குடும்பத்தில் குழப்ப சூழல் மறையும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். வாரிசுகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அதில் நேரான கவனமும் நேர்மையும் இருந்தால் நன்மைகள் தொடர்ச்சியாகும்.
அரசுத் துறையில் இருப்பவர்கள் கையெழுத்து இடும் சமயங்களில் கவனமாக இருப்பது முக்கியம். கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அரசியல் சார்ந்தவர்கள் யாருக்கும் வாக்குறுதிகள் தரவேண்டாம். மேலிடத்திடம் வீண் ரோஷமும் கூடாது. கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் சகவாச தோஷத்தை உடனே உதறுங்கள். இரவில் அதிக நேரம் விழித்திருக்க வேண்டாம்.கழுத்து, மூட்டு, பல் உபாதைகள் வரலாம். அனுமன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.

சிம்மம்:பொறுமையுடன் செயல்பட்டால், பெருமைகள் கூடும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும். பலகாலக் கனவுகள் கைகூடி வரும் அறிகுறிகள் தெரியும். தேவையற்ற படபடப்பு தவிர்ப்பது நல்லது. வீட்டில் சுபகாரியங்கள் கைகூடிவரும். பெற்றோர் பெரியோர் உடல்நலம் சீராகும். உறவுகள் வருகையும் அதனால் ஆதாயமும் ஏற்படும். யாரிடமும் வீண் கடுமை வேண்டாம். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சிப்பாதை தெரியத்தொடங்கும்.
கூட்டுத் தொழிலில் வீண் சந்தேகம் தவிருங்கள். அரசுத்துறையில் இருப்பவர்கள்  அவசரம் அலட்சியம் தவிர்ப்பது அவசியம். அரசியலில் இருப்பவர்கள் யாருக்கும் ஜவாப், ஜாமீன் தரவேண்டாம். அனுபவம் மிக்கவர்களிடம் சர்ச்சை தவிருங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். மாணவர்கள்  பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள். வாகனத்தில் வேகம் வேண்டவே வேண்டாம். இடுப்பு, காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். சிவன் வழிபாடு சிறப்பான நன்மை தரும்.
கன்னி: சிந்தித்து செயல்பட்டால், சீரான நன்மைகள் ஏற்படக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் வந்துசேரும். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விட்டுக்கொடுத்துப் போனால் நிம்மதி நிரந்தரமாகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். பெற்றோர், பெரியோர் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. செய்யும் தொழிலில் நேரடி கவனமும் முயற்சிகளும் முக்கியம். பிறரை நம்பி பெரும் முதலீடுகள் செய்ய வேண்டாம். அரசுத்துறையில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சியைப் பெறுவீர்கள்.
எதிர்பாலரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். புறம்பேசும் நபர்களைப் புறம் தள்ளுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் அரசு வழிப் பாராட்டு பரிசுகள் பெற வாய்ப்பு உண்டு. செல்லும் இடத்தின் சட்டதிட்டங்களை கவனமாகக் கடைபிடியுங்கள். மாணவர்கள் இரவில் நெடுநேரம் விழித்திருக்க வேண்டாம். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். மன அழுத்தம், நரம்பு, தலைவலி உபாதைகள் வரலாம். விநாயகர் வழிபாடு, விசேஷ நன்மை தரும்.

துலாம்: திட்டமிட்டு செயல்பட்டால் தித்திக்கும் காலகட்டம். பணியிடத்தில் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வரும்.  அதேசமயம், யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். இப்போதைய உழைப்பே எதிர்கால ஏற்றமாகும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். பெரியோர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். வாரிசுகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும்.அநாவசிய செலவுகளைத் தவிருங்கள். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். புதிய அறிமுகங்களை நம்பி பெரிய முதலீடுகள் வேண்டாம்.

அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றங்கள் தொடர்ச்சியாகும். தேவையற்ற சகவாசத்தை உடனடியாக உதறுவது நல்லது. அரசியலில் உள்ளவர்கள் மேலிடத்திடம் வீண் ரோஷப்பட வேண்டாம். வாக்குறுதி எதுவும் தரும் முன் ஒரு முறைக்கு இருமுறை யோசியுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு அமோகமான காலகட்டம். சிறிய வாய்ப்பானாலும் சின்சியராகச் செய்யுங்கள். மாணவர்கள் சோம்பலுக்கு இடம்தரவேண்டாம். இரவு நேரப் பயணத்தில் இடைவழியில் இறங்குவதைத் தவிருங்கள். ஒற்றைத் தலைவலி, நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு வாழ்வைத் துளிர்க்கச் செய்யும்.

விருச்சிகம்: ஏற்றமும் மாற்றமும் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகள் பாராட்டு கிட்டும். உடனிருப்போருடன் உரசல் தவிருங்கள். சிலருக்கு எதிர்பாரா இடமாற்றம் வரலாம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். உங்கள் வாக்கில் இனிமை இருந்தால், அது நிலைக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகளில் முன் நின்று நடத்துவீர்கள். அசையும் அசையா சொத்து சேரும். செய்யும் தொழிலில் சேதாரம் குறைந்து ஆதாயம் அதிகரிக்கும். அயல்நாட்டு வர்த்தகத்தில் நேரடி கவனம் முக்கியம். அரசுத்துறையில் இருப்போர்க்கு ஆதாயங்கள் அதிகரிக்கும்.

மேலிடத்தின் ஆதரவால் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும். அரசியலில் இருப்போர் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. சிலருக்கு பதவி, பொறுப்பு மாற்றங்கள் வரலாம். கலைஞர்கள், படைப்பாளிகள் உழைப்புக்கு ஏற்ற உயர்வினைப் பெறுவீர்கள். புதிய நட்புகளிடம் அதிக நெருக்கம் வேண்டாம். மாணவர்களுக்கு மதிப்பு மதிப்பெண் உயரும். பயணத்தில் உடைமைகள் பத்திரம். வயிறு, பல், சளித்தொந்தரவு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடு வாழ்வை பிரகாசிக்கச் செய்யும்.

தனுசு: தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அதைத் தலைகனம் ஆக்காதவரை உயர்வுகள் தொடரும். அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். வீண்  தர்க்கமும் வேண்டாத வாக்குறுதியும் யாரிடமும் வேண்டாம். மேலதிகாரிகள் தரும் பொறுப்பை நேரடி கவனத்துடன் செய்யுங்கள். எதிர்பாராத மாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் வசந்தம் வீசும். சிலருக்கு புதிய வாழ்க்கை அமைவதற்கான அறிகுறிகள் தெரியும். குடும்பத்துப் பெரியவர்கள் உடல்நலனில் முன்னேற்றம் உருவாகும். குழந்தைகளால் பெருமை உண்டு. வரவு அதிகரித்தாலும் செலவுகளும் சேர்ந்து வரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்ட நடைமுறைகளில் கவனம் தேவை.

அரசுத்துறையில் உள்ளோர் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு வெளியூர், வெளிநாட்டுப் பயண வாய்ப்பு தடைபடலாம். அது நன்மைக்கே. அரசியலில் உள்ளோர் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். முகமூடி நட்புகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். மாணவர்கள் மறதியைத் தொலைப்பது முக்கியம்.  வாகனத்தில் வேகம் கூடாது. ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை நோய் உபாதைகள், ஒற்றைத் தலைவலி வரலாம்.  பழநி முருகன் வழிபாடு பலவிதத்திலும் நன்மை தரும்.
மகரம்: மேன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றமும் ஏற்றமும் கைகூடி வரும். அனுபவம் மிக்கவர்கள் ஆதரவு உயர்வுகளுக்கு உத்தரவாதமாகும். மேலதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரலாம். வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். உங்கள் வாக்கில் நிதானம் இருந்தால், அது நிலைக்கும். வாரிசுகளால் பெருமை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும்.தரல் பெறலை நேரடியாகச் செய்யுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி நிலையாகும்.
அயல்நாட்டு வர்த்தகம் லாபம் தரும். அரசியல் துறையில் உள்ளோர் திடீர் பதவி, பாராட்டுகளைப் பெற வாய்ப்பு உண்டு. மேலிடத்துக்கு எதிரான வார்த்தைகளை கனவிலும் பேச வேண்டாம். அரசியல் துறையினருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உடனிருப்போர் தனிப்பட்ட விஷயங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் எதிர்கால ஏற்றத்திற்கான அஸ்திவாரம் இட இப்போது வாய்ப்பு அமையலாம். வாகனத்தில் கவனச் சிதறல் கூடாது. அடிவயிறு, முதுகு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு, மங்களங்கள் 
கும்பம்:பொறுப்புடன் செயல்பட்டால் பெருமைகள் நிலைக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற உயர்வுகள் நிச்சயம் வரும். உயரதிகாரிகளிடம் வீண் உரசல் வேண்டாம். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். இடமாற்றம், பதவி மாற்றத்தில் பொறுமை முக்கியம். பொறுப்புகள் எதையும் தட்டிக்கழிக்க வேண்டாம். வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும். வாரிகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்துகளில் பிடிவாதம் வேண்டாம். செய்யும் தொழிலில் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும்.

பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட்டில் பெரும் முதலீடுகள் வேண்டாம். அரசியல் துறையில் இருப்போர் சிலருக்கு பதவி, பொறுப்புகள் மாறலாம். வீண் ரோஷத்தால் அதைத் தவிர்க்க வேண்டாம். எதிர்காலம் நிச்சயம் ஏற்றமாகும். அரசுத்துறையினர் கவனமாகச் செயல்படுவது நல்லது. கோப்புகளில் கையெழுத்திடும் முன் கவனமாகப் படியுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சிகளால் முன்னேறலாம். அயல்நாட்டு வாய்ப்பில் உடன் வருவோரிடம் கவனமாகப் பழகுங்கள். மாணவர்கள் மனம்போல உயர்வுகள் வரும். வாகனத்தை ஓட்டுவதில் வித்தைகாட்டல் கூடாது. கழுத்து, முதுகு, அடிவயிறு, தோல் உபாதைகள் வரலாம். ஏழுமலையான் வழிபாடு, ஏற்றம் தரும்.

மீனம்: முயற்சிகள் பலன் தரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில்  திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். எந்த சமயத்திலும் வீண் ரோஷம் வேண்டாம்.  மேலதிகாரிகளிடம்  தர்க்கம்  தவிருங்கள். யாருடைய குறையையும் விமர்சிப்பது கூடவே கூடாது. பொறுப்புகள் அதிகரித்தாலும் புலம்பாமல் ஏற்பது நல்லது. குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். பெற்றோர் பெரியோர் வார்த்தைகளைக் கேட்டால் சுபகாரியத் தடைகள் நீங்கும். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. பணவரவை சேமிக்கப் பழகுங்கள். யாருக்கும் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். தேவையற்ற வர்த்தகக் கடன்களைத் தவிருங்கள். அரசுத்துறையில் உள்ளோர் அடக்கமான செயல்களால் முன்னேறலாம்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

குரு பெயர்ச்சி குருபகவானின் விசேஷப் பார்வைகள்.

12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..! ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடையக் கூடிய குருபகவான், ...