Monday, March 3, 2025

மரண பயத்தை நீக்கும் பாதாள லிங்கம் திருவண்ணாமலை..

மரண பயத்தை நீக்கும் ரமண மகரிஷி தவமிருந்த பாதாள லிங்கம்...!
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருப்பது திருவண்ணாமலை. சிவமும், சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். 

சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. காசியில் நீராடினால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை இருந்த இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும். 

ஒரு முறை இந்த தலத்திற்கு சென்றால் மீண்டும் மீண்டும் செல்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு அருட்சக்தி இந்த தலத்திற்கு உள்ளதால் இந்த தலம் உள்ள மலையை காந்தமலை என்றும் அழைக்கிறார்கள். சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற திருத்தலமாகும்.

ஜோதி வடிவமாக சிவபெருமான் திருவண்ணாமலையில் எழுந்தருளியதால் ஆண்டுதோறும் ஜோதி 'உரு’ மலையாக எழுந்தருளிய திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

 திருவண்ணாமலையில் பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி, தீபத்திருவிழா போன்ற முக்கிய நாட்களில் மட்டுமல்ல, எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஞானிகளும் துறவிகளும்:

இத்தலம் சித்தர்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டு சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார். அருணகிரிநாதர், விருபாஷதேவர், குகைநமச்சிவாயர், குருநமச்சிவாயர், தெய்வசிகாமணி, அருணாசல தேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார் முதலானோரை தனது ஜோதியில் இணைத்துக்கொண்ட மகத்துவம் உடையது திருவண்ணாமலை.

இப்புகழ்மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்திருக்கிறது பாதாள லிங்கம். இந்த சன்னதியில் பாதாள லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். சிறிய அளவிலான படியிறங்கி சென்று பாதாள லிங்கேஸ்வரரை நாம் தரிசிக்கலாம்.

ஞானதேடலுடன் திருவண்ணாமலை வந்தார் ரமணர் மகரிஷி. மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது  கோயிலில் உள்ள பாதாள லிங்கம் சன்னதிக்கு சென்றார். 

அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்துவிட்டார். பின்னர் சிவன் அருளால் முக்தி பெற்றார். 

கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. திருநேர் அண்ணாமலையாரையும், பாதாள லிங்கேஸ்வரரையும் மனமுருகி வழிபட்டால் மரண பயத்தை நீக்கி, மன நிறைவை அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பதினொரு பெருமாள்களையும் ஒருங்கே தரிசிக்கும் இடம்.

பதினொரு பெருமாள்களையும் ஒருங்கே தரிசிக்கும் பெரும் பாக்கியம்……..!!!
திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள் நடந்து இவ் வேழுலகத் தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம்

என்று ஆழ்வார்களால் போற்றப்படும் திருநாங்கூர் திவ்ய தேசத்தில்
பெருமாளை பெரிய திருவடியான கருட வாகனத்தில் சேவித்தால்
மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்…..!

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் 108 வைணவ தலங்களில்
11 கோயில்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் ஆண்டுதோறும் கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெறும்.

தை அமாவாசைக்கு மறுநாள்- கருடசேவையின்போது, 11 பெருமாள்களும் கருடவாகனத்தில் எழுந்தருள… 
திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, மாலை- மரியாதையுடன் வலம் வந்து மங்களாசாசனம் செய்வது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்

ஆண்டு தோறும் திருநாங்கூர் மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் சந்நிதியில் தை அமாவாசைக்கு மறுநாள் 11 பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கும் உற்ஸவம் நடைபெறும்.

அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்படும்..!

தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார், மணவாளமாமுனிகள் சகிதம் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்து சிறப்பு தீபாராதனை காண்பித்து கருட சேவை நடைபெறும்..!

பெருமாள்கள் வீதியுலா காட்சியுடன் 11 கருட சேவையை தரிசித்தால் புண்ணியங்களின் பலன்கள் ஏராளம் கிடைக்கும்,

திருநாங்கூர் மணிமாடக் கோயில்
சீர்காழிக்கு அருகே விளங்கும் திருத்தலம், திருநாங்கூர்.

இந்த ஊரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன.

இந்த ஊரைச் சுற்றிலும் சுமார் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் மேலும் 5 திவ்ய தேசங்கள்.
ஆக மொத்தம், பதினொன்று!

ஒரே பகுதியில் உள்ள திவ்யதேசங்கள்தானென்றாலும், ஒன்றுக்கொன்று நெடிய தொலைவில்தான் அமைந்திருக்கின்றன.

இதுதான் அந்த திவ்ய தேசங்களின் பட்டியல்:
1. திருக்காவளம்பாடி,  ஸ்ரீகோபால க்ருஷ்ணன்

2. திரு அரிமேய விண்ணகரம், ஸ்ரீகுடமாடுகூத்தர் (ஸ்ரீசதுர்புஜ கோபாலன்)

3. திருவண்புருடோத்தமம், ஸ்ரீபுருஷோத்தம பெருமாள்

4. திருச்செம்பொன்செய் கோயில், ஸ்ரீசெம்பொன்னரங்கர்.

5. திருமணிமாடக் கோயில், ஸ்ரீநாராயண பெருமாள்.

6. திருவைகுந்த விண்ணகரம், ஸ்ரீவைகுந்தநாதன்.

7. திருத்தேவனார்த் தொகை, ஸ்ரீமாதவ பெருமாள்.

8. திருத்தெற்றியம்பலம், ஸ்ரீரங்கநாதர்.

9. திருமணிக்கூடம், ஸ்ரீவரதராஜன்.

10. திருவெள்ளக்குளம், ஸ்ரீநிவாஸ பெருமாள்.

11. திருப்பார்த்தன்பள்ளி,  ஸ்ரீபார்த்தசாரதி

ஆகிய பெருமாள்கள் தங்கள் கோயில்களில் இருந்து மேள தாளங்களுடன் புறப்பட்டு நாங்கூர் மணிமாட கோயில் முன்பு எழுந்தருள்வர்.

அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்படும்..! தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார், மணவாளமாமுனிகள் சகிதம் ஹம்ச வாகனத்தில்  எழுந்தருளி சேவை சாதித்து  சிறப்பு தீபாராதனை காண்பித்து கருட சேவை நடைபெறும்..!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

திருவாரூர் பகுதியில் கிராம சிவாலயங்கள் பட்டியல் இதோ!

 பெருங்கோயில்களையும், பாடல்பெற்ற தலங்களையும்  மட்டுமே பார்த்தால் போதுமா? இவற்றுக்கு ஒப்பான திருக்கோயில்கள் கிராமங்களிலும் பரவி கிடக்கின்றன.  திருவாரூர்  மாவட்டம் பகுதியில் வசிப்போருக்கான கிராம சிவாலயங்கள் பட்டியல் இதோ.  

திருவாரூர் வட்டம் 
1திருவாரூர் தியாகராஜர்  2திருவாரூர்-நீலகண்டேசர்  3திருநெல்லிக்கா 4திருவாரூர் பரவயுன் 5சூரனூர் 6தலையாலங்காடு 7கரவீரம் 8விளமல் 9பள்ளிமுக்கூடல் 10வடகண்டம் 11மணக்கால்-அபிமுக் 12மணக்கால்-புலவனல்லூர் -கங்காதீ  13அரசவனங்காடு 14திருக்கண்ணங்குடி 15காட்டூர்  16பாலாவாய்  17.எட்டியலூர் 18.எட்டியலூர்-உமா 19நீலக்குடி 20சூரனூர் 
21.சூரனுர்-சூரியநெ 22சோழங்கநல்லூர் 23வைப்பூர் 24வரிஞ்சையூர் 25தப்பளாம்புலியூர்-1  26ஈஸ்வரவாசல் 27காரையூர் 28…….. 29ராம்கி-கேக்கரை 30பழையவலம் 31வடகுடி 32ஆமூர் 33கேக்கரை 34ஓடாச்சேரி 35குரும்பேரி 36தண்ணீர்குன்னம் 37நடப்பூர்   38திருவாதிரைமங்கலம் 39.பள்ளியமூலை 40மேலநெடுங்காட்டங்குடி 
41.வடபாதி 42கடாரம்கொண்டான் 43.அத்திபுலியூர் 44கல்லிகுடி 45.அடிபுதுச்சேரி 46.தென்ஓடாச்சேரி 47.அடியக்கமங்கலம்-காசி 48.அலிவலம் , 49.அலிவலம்-காசிவிஸ் 50.புலிவலம்  51.அடியக்கமங்கலம்2 52.புதுபத்தூர்-புன்னைவனநாதர் 53.புதுபத்தூர் – திருமேனி 54.கன்றாப்பூர்  55.கல்யாணமகாதேவி 56.கட்டளைஅன்னவாசல் 57.கீழகன்றாப்பூர்  58.வடகரை 59.திருவாரூர்-கருணா 60. கொட்டாரக்குடி 

61.திருக்கரவாசல் 62.திருநெய்பேர் 63.வலிவலம் 64.குன்னியூர் 65.வைப்பூர்- ஆடகேஸ்வரர்  66.ஆத்தூர் 67.கீழகாவதுகுடி 68.திருவாரூர் - காகிதக்கார தெரு, 69.திருவாரூர் நகரம், 70.வடக்குமடவிளாகதெரு  71.ராதாநல்லூர் 72.ஆண்டியூர் 73.நெய்பேர்- நமிநந்திவீடு 74வேப்பந்தாங்குடி 75.உமாமகேஸ்வரபுரம் 76.பின்னவாசல் 77. கோமல் 78. சித்தாநல்லூர் 79. திருவாரூர்- விருப்பாட்சிஸ்வரர் 80. மருதம்பட்டினம்-அபிமுக் 
81.மருதம்பட்டினம்-தான்தோன்றி 82.அடியக்கமங்கலம் –அசுவ 83.தப்பளாம்புலியூர்- கங்கைகொண்ட 84.கருப்பூர் 85.நெடுங்குடி  86. தென்னங்குடி 87. பள்ளிவாரமங்கலம் 88.பொற்கலகுடி 89.திருவாரூர் = ருத்ர 90.திருவாரூர் கமலாலயம் காசிவிஸ்வநாதர் 91.திருவாரூர் கபிலேஸ்வரர்   92.திருவாரூர் மடப்புரம் சோமநாதர் 93.கழனிவாசல்    94.மருவத்தூர் விநாயகர் 

குடவாசல் வட்டம் 
1. 11.ஆலத்தூர் 2. நரசிங்கன்பேட்டை 3காங்கேயநகரம் 4பெரமர்கோயில் 5செல்லூர்   6அகரஓகை   7மனப்பரவை   8திருக்குடி 9மேலப்பாலையூர் 10பெருமாளகரம் 11பெருமாளகரம்-சுக்ரேஸ்வரர் 12பத்தூர் 13அபிவிருதீச்வரம் 14களத்தூர்  15நாலில்ஒண்ணு   16முசிரியம்  17விடயபுரம் 18திட்டாணிமுட்டம்  19காவாலகுடி   20திருப்பணிபேட்டை   

21கண்கொடுத்தவணிதம் 22கண்கொடுத்தவணிதம்-ஈசான்ய     24மேலதிருமதிகுன்னம் 25மேல்கரைகளத்தூர்   26வாழச்சேரி   27அதங்குடி 28செட்டிசிமிழி  29மழையூர்    30-69ஆய்குடி  31-37ஊர்குடி   32முகுந்தனூர்   33எண்கண்     34எண்கண்-2 35காப்பனாமங்கலம் 36ஒட்டகுடி 37குளிக்கரை 38செம்மங்குடி 39ஏரூர்ந்தவாடி 40கீழப்பாலையூர் 

41நெய்குப்பை  42பூங்காவூர்  43காவனூர்  44கமலாபுரம் 45பெரும்பண்ணையூர்  46கீழப்புலியூர்  47சேங்காலிபுரம்-துந்துபி 48சீதக்கமங்கலம்  49பருத்திசேரி  50சித்தாடி  51செருகளத்தூர் 52அருவிழிமங்கலம்  53வடசேரி-ஞானசுந்த  54தீபங்குடி  55தோட்டகுடி 56ஆவணம்பருத்தியூர்-1 57சேங்காலிபுரம்-காசிவிஸ்  58சேங்காலிபுரம்-சோழேஸ் 59அன்னவாசல்  60பெருமங்கலம்  

61தடுத்தாட்கொண்டபுரம்  62கொரடாச்சேரி 63கொரடாச்சேரி-காசிவிஸ்  64வடவேர்-மீனாட்சிசுந்த 65நாரணமங்கலம் 66விழுதியூர் 67விசலூர் 68கொள்ளம்புதூர் 69பரவாக்கரை 70பரவாக்கரை-லிங்கத்தடி  71தேதியூர்-பிரத்ய  72தேதியூர்-மீனாட்சி 73தேதியூர்-சுந்தரேஸ் 74மனவாளநல்லூர்  75கூந்தலூர்  76புளியஞ்சேரி  77கண்டிராமாணிக்கம் 78விஷ்ணுபுரம்/கைலாச  79நாலாங்கட்டளை  80துளார்  

 81செம்மங்குடி 82அன்னியூர்   83கூந்தலூர்-ஜம்பு   84சிமிழி   85குடவாசல்   86விக்கிரபாண்டியம் 87சேதனிபுரம் 88திருவிடசேரி 89மஞ்சகுடி 90செருமங்கலம்   91புதுக்குடி              92-18-கடலங்குடி  93மருத்துவக்குடி  94விஷ்ணுபுரம்-தர்ம 95மருத்துவக்குடி 96இலந்தவனசேரி   97திரியம்பகபுரம்   98அரவனங்காடு   99இராப்பட்டீஸ்வரம் 100மணக்கால்ஐயம்பேட்டை–அகத்தீ 

101.கீரத்தங்குடி 102.பத்தூர் 103. 100.பருத்தியூர்  104.கீழஓகை 105.32.ஆவணம் 106.ஆவணம்பருத்தியூர்-2 107.மேலஆதிச்சமங்கலம் 108.சிட்டிலிங்கம் 109.ஆர்பார்  கொடிமங்கலம் 

கூத்தாநல்லூர் வட்டம் 

1.லட்சுமாங்குடி 2. கூத்தாநல்லூர் 3.கோம்பூர் 4.பூதமங்கலம் 5.பூந்தாழங்குடி 6.கார்நாதன்கோயில். 7.குதம்பைநாயனார்கோயில் 8.மேலராதாநல்லூர் 9.நரிக்குடி 10.வடபாதிமங்கலம் 11.வேளுக்குடி 12.பண்டுதகுடி 13.காக்கையாடி 15.பழையனூர் 16.சாத்தனூர் – ஏகாம் 17.வாக்கோட்டை 18.சாத்தனூர்-காலஹச்தீஸ்வரர் 19.ஊட்டியாணி-1 20.ஊட்டியாணி -2 

21.புள்ளமங்கலம்  22.இளமங்கலம் 23.அரிச்சந்திரபுரம் 24.இலுப்பூர்  25.சேந்தங்குடி 23.பொய்கைநல்லூர் 24.புத்தகரம் 25.செருவாமணி 26.சிவனாண்டார்கோயில் 27.கிளியனூர்  28.பாண்டுக்குடி

திருத்துறைப்பூண்டி வட்டம்

1தலைக்காடு 2திருத்துறைப்பூண்டி 3விளக்குடி 4விளக்குடி –வீரட் 5கற்பகநாதர்குளம் 6இடும்பாவனம் 7தண்டலைநீள்நெறி 8சிற்றேமம் 9கீராளத்தூர்-மடப்புரம் 11கொள்ளிக்காடு 12திருதெங்கூர் 13சேகல் 14சிங்களாந்தி 15திருவிடைமருதூர் 16தகட்டூர் 17காடந்தேத்தி 18சேகல் 19மேட்டுபாளையம் 20.பொன்னிறை
 
22. மருதவனம் 23.கடுவெளி  24.சேகல் 25.திருத்துறைபூண்டி 26.பன்னதெரு 27.கச்சனம் 28.பூசலாங்குடி  29.பழையங்குடி 30.நெல்லிக்கா 31.நமசிவயபுரம் 32.புதூர் 33.திருத்தெங்கூர் திருமேனியழகர் 34.வெண்ணாற்றங்கரை சர்வேஸ்வரன் 35.வடுகக்குடி  36. பாமந்தூர் 37.காகம் 38. அம்மனூர் 39.விளத்தூர் 40.விளத்தூர்-சனவெளி 

41.ஆண்டாங்கரை புஞ்சையூர்  42.ஆலிவலம் 43.பொன்னிறை 44.ஆலத்தம்பாடி 45.கீழ கொருக்கை 46.கீழப்பனையூர் 47.கீழபெருமழை 48.தகரமருதூர் 49.கோவில்சிங்களாந்தி.  50.கொக்காலடி 51.கொருக்கை 52.கொருக்கை-சோமநாதர் 

நன்னிலம் வட்டம்
 
1.காளியாகுடி 2.அம்பல் –சட்டைநாதர் 3.சேஷமூலை 4.பேரளம் 5.பாவாட்டகுடி 6.திருத்தலையூர் 7.திருக்கொட்டாரம் 8.சிறுபுலியூர் 9.சுரைக்காயூர் 10.கொத்தவாசல் 11.கலப்பாகரம் 12.ஆண்டார்பந்தி 13.அனுமந்தகுடி 14.அய்யம்பேட்டை 15.வாழ்க்கை  16.இடையாத்தங்குடி 17.குருங்குளம் 18.மேனாங்குடி 19.கோயில்கந்தங்குடி 20.இஞ்சிக்குடி 

21.ரெட்டகுடி 22.அண்டகுடி 23.T.மாங்குடி 24.கடுவங்குடி 25.கொல்லுமாங்குடி-கடுவங்குடி 26.வதண்டூர் 27.அகிலாம்பேட்டை 28.சன்னாநல்லூர் 29.கம்மங்குடி 30-11.ஆலத்தூர் 31.நாககுடி old       32.நாககுடி 33.மேலவடுகக்குடி  34.மேலவடுகக்குடி-வசிஸ் 35.செம்மங்குடி 36.காக்கா கோட்டூர் 37.பெரும்புகளூர் 38.வண்டாம்பாளை 

நன்னிலம் வட்டம்-2

1கோவிந்தசேரி 2கொட்டுர் 3பூங்காவூர் 4உபயவேதாந்தபுரம் 5அம்பாள் மாகாளம் 6-10-கிள்ளியூர்7அகரகொத்தங்குடி 8அகரகடுவங்குடி 9போழக்குடி 10முகுந்தனூர் 11கமுககுடி 12அகரமுகுந்தனுர் 13பழையார் 14சிக்கல் 15அன்னதானபுரம்-பன்னூர் 16நெடுங்குளம் 17வஸ்தராஜபுரம் 18திலதர்பணபுரி  19செருவலூர் 20முடிகொண்டான்-காசி 

21முடிகொண்டான்-சுந்தரே 22ஆலங்குடி 23குளக்குடி 24மணவாளம்பேட்டை 25ருத்ரகங்கை 26பூந்தோட்டம் 27அம்பல் –பிரம்ம 28கொங்கராயநல்லூர் 29அகரதிருமாளம் 30அச்சுதன்பேட்டை 31தூத்துக்குடி 32நல்லமாங்குடி 33-39-நெம்மேலி 34வடகுடி 35கீலகரம் 36வீராக்கன் 37அச்சுதமங்கலம்-சோமநாதர் 38அச்சுதமங்கலம்-தர்மே 39சேங்கனூர் 40வயலூர் 

41பில்லூர் 42ஆண்டியூர் 43செருவலூர் 44பாக்கம்பருத்தியூர் 45புளிச்சகாடி 46நாடாகுடி 47-60.பணங்குடி 48மகிழஞ்சேரி 49மூலமங்கலம் 50மாப்பிள்ளைகுப்பம் 51தளத்தாங்குடி 52தட்டாத்திமூலை 53ஆணைகுப்பம் 54பத்தினியாள்புரம் 55சலிப்பேரி 56பூங்குளம் 57அச்சுதமங்கலம்-மகிழபுரீ 58அதம்பார் 59.புத்தகலூர் 60மூலமங்கலம் 

61திருவீழிமிழலை 62கருவிலி  63திருமெய்ஞானம் 64திருவீழி-பத்திரவல்லி 65கொடியலூர் 66கூத்தனூர் 67திருமீயச்சூர் 68திருப்பாம்புரம் 69திருப்புகலூர் 70திருகொண்டீச்வரம் 71ராமநந்தீச்வரம் 72திருபயற்றூர் 73திருசாத்தமங்கை 74நன்னிலம் 75திருவாஞ்சியம் 76கடகம்பாடி 77திருசிறுகுடி 78திருவீழி-பத்திர 79மூங்கில்குடி 80குவளைக்கால் 

81மருதவஞ்சேரி 82சன்னாநல்லூர்  83.சைதன்யபுரம் 84.செதனிபுரம் 85.வடகரைமாத்தூர் 86.நெடுஞ்சேரி 87.அகரமேடு 88.வடமட்டம் 

நீடாமங்கலம் வட்டம் 

1அரையூர் 2வையகளத்தூர் 3ஒளிமதி 4நீடா-கோகமு 5நரிக்குடி 6முன்னாவல் கோட்டை 7கொட்டையூர் 8கடம்பூர் 9கோயில்வெண்ணி 10திருமணமங்கலம் 11பூவனூர் 12புதுதேவன்குடி 13நீடா-காசி 14ரிஷியூர் 15முல்லைவாசல் 16பெரம்பூர் 17ராயபுரம் 18 69ஆய்குடி 19திருவிடைவாய் 20ஆண்டாங்கோயில் 

21களத்தூர் 22மேல்கரைகளத்தூர் 23பழையநீடாமங்கலம். 24.ரிஷியூர் ஏகாம்பரேஸ்வரர் 25மேலாளவந்தசேரி 26.தேவங்குடி 27.பெரம்பூர் –ஜோதிர்லிங்கம்  28. கண்ணம்பாடி-பெரம்பூர்  29.பெருந்தரக்குடி 
30.ராஜாங்கட்டளை 31.புள்ளமங்கலம்  32.பழவனக்குடி 

மன்னார்குடி வட்டம் 

1கோட்டூர் 2மன்னா-பட்டக்கார தெரு 3உள்ளிகோட்டை 4மேலப்பேட்டை  5மேலதிருப்பாலகுடி 6மகாதேவபட்டினம் 7பரவாகோட்டை 8வெங்காரம்பேரையூர் 9திருப்பாதாளீச்சரம் 10திருக்களர் 11ஒகைபேரையூர் 12திருவெண்டுறை 13மன்னா-அண்ணாமலைஈஸ்வரர் 14மன்ன-காசிவிஸ் 15மன்னா-கைலாச 16மன்னா- ஜெயம்கொண்ட 17மன்னா- நீலகண்டேஸ்வரர் 18ஆதிச்சபுரம் 19சோழபாண்டி 20ஏத்தங்குடி 

21சேரங்குளம்  22மன்னா- தெப்பகுளம்காசி 23திருராமேஸ்வரம் 24திருபாலக்குடி 25இருள்நீக்கி 26வேளுக்குடி  27.சித்தமல்லி 28.வடுவூர்வடபாதி 29.எடமேலையூர்-சித்தர்கோயில் 30.பூதமங்கலம் 31.வெட்டிக்காடு 32.பெரியகுருவாடி 33.புனவாசல் 34.கீரக்களூர் 35.தண்ணீர்குன்னம் 36.மூர்த்தியம்மாள்புறம் 37.புள்ளமங்கலம்  38.வடபாதி 39.திருநாட்டியத்தான்குடி 40.உச்சுவாடி 

41.பெரியகொத்தூர் 42.சித்திரையூர் 43.மாவட்டகுடி 44.அன்னுகுடி 45.ராமநாதபுரம்  46.சேந்தங்குடி 47.காரியமங்கலம் 48.பெரியகுடி49. விக்கிரபாண்டியம் – அகஸ  50.ஆலத்தூர் 51.சேந்தமங்கலம்  52.குன்னியூர் 53.சக்திமுற்றம்  54.தென்கோவனூர் 55.வடகோவனுர்  56.கருவேலங்குளம் 57.மேலச்சேரி 58. 49.நெம்மேலி 59.கீழ்கோட்டூர் 60.ரங்கநாதபுரம் 

61.வாட்டார் 62.மேலபுத்தூர்  63.சந்தனநல்லூர் 64.சித்தமல்லி  65.பாலையூர்

வலங்கைமான் வட்டம்

1பாடகச்சேரி 2மாளிகைத்திடல் 3விருப்பாட்சிபுரம் 4சித்தன்வாழுர்-விஸ்வ  5சித்தன்வாழுர்- கைலாச 6நல்லம்பூர் 7அரையூர் 8கடுவாய்கரைபுத்தூர் 9ஆலங்குடி 10மருவத்தூர் 11கீழாமராவதி 12பூந்தோட்டம் 13பூனாயிருப்பு 14பூனாயிருப்பு-அக்னீஸ் 15விடையல்கருப்பூர் 16முனியூர் 17அவளிவநல்லூர் 18திருமணமங்கலம் 19உத்தமதானபுரம் 20விளத்தூர் 

21நல்லூர் 22ஆவூர் 23அன்னுகுடி 24கோபுராஜபுரம் 25மாலாபுரம் 26தொழுவூர் 27வலங்கை -அருணாச்சலேஸ்வரர் 28வலங்கை-வைத்திய 29வலங்கை – கைலாச 30வடக்குபட்டம் 31நல்லம்பூர் 32களத்தூர் 33அரதைபெரும்பாழி 34வீரமங்கலம் 35மணக்கால் 36வலங்கை –காசிவிஸ் 37மேலபூண்டி  38சந்திரசேகரபுரம் –அகதீஸ் 39கிளாக்காடு 40மாத்தூர் 

41கீழவிடையல் 42அணியமங்கலம் 43மதகரம் 42.மணக்குண்டு  43.வேளாக்குடி  மற்றும் இன்னும் பல... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

நாகை காயாரோகணேஸ்வரர் கோவில்.

*நீலாயதாட்சி உடனாய காயாரோகணேஸ்வரர் கோவில்* 
அன்னையின் கண்கள் கடல்நிறத்தில் நீலமாக காட்சியளிக்கிறது. அன்னையின் கண்கள் கடல்நிறத்தில் நீலமாக காட்சியளிக்கிறது. 

மூலவர்: காயாரோகணேஸ்வரர் 

உற்சவர்: சந்திரசேகரர் 

அம்மன்: நீலாயதாட்சி 

தலவிருட்சம்: மாமரம் 

தீர்த்தம்: புண்டரீக தீர்த்தம் 

நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி உடனாய காயாரோகணேஸ்வரர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம். 

தமிழ்நாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 145-வது தேவாரத் தலம் ஆகும். இந்திரன் பூஜித்து வந்த 7 சிறிய சிவலிங்கங்களை, முசுகுந்த சக்கரவர்த்தி 7 தலங்களில் பிரதிஷ்டை செய்தார். 

இவை 'சப்த விடங்க தலங்கள்' எனப்படுகின்றன. அதில் இந்த ஆலயமும் ஒன்று. 'விடங்க' என்பதற்கு 'உளியால் செதுக்கப்படாதது' என்று பொருள். 

கோமேதகத்தால் செய்யப்பட்டதாக இந்த லிங்கம் இருக்கிறது. எனவே இவர் 'சுந்தர விடங்கர்' எனப்படுகிறார். 

இங்கு வீற்றிருக்கும் அம்மன், கடல்போல் அருள்பவர்.  அதை உணர்த்தும்விதமாக அன்னையின் கண்கள் கடல்நிறத்தில் நீலமாக காட்சியளிக்கிறது. எனவேதான் அம்மனுக்கும் 'நீலாயதாட்சி' என்று பெயர். தனிக் கொடிமரத்துடன் சன்னிதியில் வீற்றிருக்கும் இந்த அன்னை திருமணத்திற்கு முந்தைய கன்னியாக காட்சி தருகிறார். 

அம்மன் கன்னியாக இருப்பதால் அன்னைக்கு பாதுகாப்பாக நந்தியை அனுப்பினார், ஈசன். இதனால் அம்மன் சன்னிதி எதிரில் நந்தியே இருக்கிறது. ஆனால் எப்போதும் ஈசனை தரிசிக்க விரும்பிய நந்தி, 

அம்மன் சன்னிதியில் இருந்தாலும் தன்னுடைய கழுத்தை முழுமையாக திரும்பி சிவன் சன்னிதியை பார்த்தபடி இருக்கிறது. 

இத்தல தல விருட்சமான மாமரத்தில் காய்க்கும் மாம்பழம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளுடன் இருக்கும். ஆலயத்தின் தென்கிழக்கு பிரகாரத்தில் இருந்து இந்த மாமரத்தைப் பார்க்க நந்தி வடிவில் காட்சி தரும். 

பொதுவாக கோவில் அருகில் வசிப்பவர்கள் யாராவது இறந்தால், ஆலய நடை சாத்தப்படும். ஆனால் இங்கு சிவனால் முக்தி பெற்ற அதிபத்தர் என்ற மீனவ குலத்தைச் சேர்ந்தவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இங்கு மீனவா்கள் யாராவது இறந்தால், அவர்களின் உடல் ஆலயத்திற்கு முன்பாக வைக்கப்படும். 

பின்னர் சிவன் சன்னிதியில் இருந்து சிவனுக்கு அணிவித்த மாலை இறந்தவருக்கு அணிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. 

இந்த ஆலயத்தில் பிரதோஷ நிகழ்வின் போது ரிஷப வாகனத்தில் ஈசன் வீதி உலா புறப்படும்போது, மோகினி வடிவில் பெருமாளும் புறப்படுகிறார். 

பிரதோஷ நிகழ்வில் மட்டுமே இந்த பெருமாளை தரிசிக்க முடியும். மற்ற நேரங்களில் அவர், சிவனின் மூலஸ்தானத்திற்குள் இருப்பார். இத்தல நவக்கிரக மண்டபத்தில் உள்ள நவக்கிரகங்கள் அனைத்தும், சிவபெருமானை பார்க்கும் விதமாக மேற்கு நோக்கி இருக்கின்றன. 

இவ்வூரில் வசித்த அதிபத்தர் என்ற சிவ பக்தர், தன்னுடைய வலையில் கிடைக்கும் முதல் மீனை இறைவனுக்கு படைக்கும் விதமாக கடலிலேயே விட்டு விடுவார். 

ஒரு முறை அவருக்கு தங்க மீன் கிடைத்தது. மீனவர்கள் பலர் அதைக் கடலில் விடவேண்டாம் என்று கூறியும், இறைவன் மேல் கொண்ட பக்தியால் அந்த தங்க மீனை கடலில் விட்டார், அதிபத்தர். அவரது பக்தியை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கி அருள்புரிந்தார். 

சனி பகவானால் ஏற்படும் பஞ்சம் தன் நாட்டிற்கு வராமல் இருக்க தசரத மன்னன், இத்தல ஈசனை வேண்டினான். ஈசனின் உத்தரவால் தசரதனுக்கு காட்சி கொடுத்த சனீஸ்வரர், நாட்டு நலனுக்காக வேண்டியதால் தசரதனின் நாட்டை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றினார். 

இங்கு சனி பகவானுக்கு சன்னிதி உள்ளது. இவ்வாலய முகப்பில் நாகாபரணம் சூடிய நிலையிலும், தலைக்கு மேலே ஒரு நாகம் குடைபிடித்த நிலையிலும் விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு 'நாகாபரண விநாயகர்' என்று பெயர். 

இவரை ராகுகாலத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும். புஷ்கரணி தீர்த்தக்கரையில் பைரவருக்கு சன்னிதி உள்ளது. இங்கு பைரவருக்கு நாய் வாகனத்திற்கு பதிலாக சிம்மம் வாகனமாக இருக்கிறது. இத்தலத்தில் முக்தி வேண்டி தவம் இருந்த புண்டரீகர் என்னும் முனிவரை, தன்னுடன் அணைத்து முக்தி கொடுத்தார், ஈசன். இதனால் இத்தல இறைவன் 'காயாரோகணேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, March 1, 2025

சிவாலயங்களில் பள்ளியறை பூஜையை தரிசிப்பதால் இத்தனை பலனா?



*சிவாலயங்களில் பள்ளியறை பூஜையை தரிசிப்பதால் இத்தனை பலனா?!*
*சிவாலயங்களில் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை பள்ளியறை பூஜை ஆகும்..

*நமது தமிழ்நாட்டில் இருக்கும் 44,000 மிகவும் பழமையான ஆலயங்களில் 36,000 சிவாலயங்கள் ஆகும்...*

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளியறை பூஜை அனைத்து ஊர்களிலும், அனைத்து ஆலயங்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது...
தற்பொழுது மிகவும் குறைந்துவிட்டதாக கூறுகின்றனர் ஆன்மீக மூத்த பெரியோர்கள்.

அதாவது சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறையில் ஊஞ்சலில் ஓரு சேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப்பாடி பூஜிப்பது ஆகும்.!
பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம் வரும் போது, சிவபுராணம், பதிகங்கள் பாடி வரவேண்டும்.
காண்பதற்கு  கோடி புண்ணியங்கள்

இதைத் தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அமைக்கின்றோம் என்று அர்த்தம்....

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி ஈசனைச் சுமந்து வரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகின்றதோ, அவர்கள் மறுபிறவியில் பொறியியல் வல்லுநர்களாகவும், பல மாடிக் கட்டிடங்களுக்குச் சொந்தக்காரர்களாகவும், 
பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகவும் மாறுவார்கள் என்பது நம்பிகை. பள்ளியறை பூஜையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்...
அது நாம் செய்த புண்ணிய பாக்கியம்.!

 *திங்கள்:* 

திங்கட்கிழமை அன்று பள்ளியறை பூஜைக்குரிய பொருட்களை தானம் செய்து,அதில் கலந்து கொள்பவர்கள் அதன் பிறகு தமது வாழ்க்கையில் மகத்தான திட்டங்களை தங்கு தடையின்றி செயல்படுத்தி வெற்றி காண்பார்கள் .

 *செவ்வாய்:* 

ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு மிகவும் சிரமப்பட்டே வாழ்க்கைத் துணை அமையும். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். 

ஆயில்யம் நட்சத்திரமும், செவ்வாய்க்கிழமையும் வரும் நாளன்று தமது வருமானத்தில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை அன்பளிப்பாக தந்து, அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

 *புதன்:* 

அரசு மற்றும் தனியார் துறையில் பதவி உயர்வுக்குக் காத்திருப்பவர்கள் புதன் கிழமையன்று பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு, கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

 *வியாழன்:* 

அனைத்து விதமான சித்திகளும் கிடைக்க பலர் பல பிறவிகளாக முயற்சி செய்து கொண்டே இருக்கின்றார்கள்.

 அவர்கள் ஒருவருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். 

மேலும் அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை தம்மால் முடிந்த அளவுக்கு வாங்கித் தரவேண்டும். கலந்து கொண்டு மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

 *வெள்ளி:* 

கணவனுடைய நோய் பல காலமாக இருந்தால் அது தீர, அவருடைய மனைவியானவர், வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையை சிறப்பிக்க தம்மால் ஆன முயற்சியில் ஈடுபடவேண்டும்.

 *சனி:* 

அற்புதமான வாரிசு மகனாகவோ அல்லது மகளாகவோ பெற விரும்பினால் சனிக்கிழமையன்று பள்ளியறை பூஜையில் கலந்து கொள்வதோடு, அதற்குத் தேவையான பொருட்களை வாங்கி அன்பளிப்பாகத் தரவேண்டும்.

 *ஞாயிற்றுக்கிழமை:* 

பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும், காணாமல் போய் பல ஆண்டுகள் என்ன ஆனார்கள் என்பதை அறியவும், அறிந்த பின்னர் திரும்பி வரவும் மூன்றாண்டுகள் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

அசுபதியும் ஞாயிற்றுக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பூக்கள், பால், நைவேத்தியம் போன்றவைகளை வாங்கித் தரவேண்டும். பள்ளியறை பூஜைக்கு எண்ணெய், நெய், மின் விளக்கு தானம் செய்பவர்களுக்கு பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு கல்வி தரும் பாக்கியத்தை அடுத்த பிறவியில் பெறுவார்கள்.

பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கட்டித் தருபவர்கள் மறுபிறவியில் அதிகமான சம்பளம் தரும் வேலையில் சேருவர். அவர்களது மகனும், மகளும் மற்றும் பேரன் பேத்திகள் அதிக சம்பளம் தரும் வேலையில் இருப்பார்கள். 

குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை இப்படிச் செய்தால் மட்டுமே இப்படிப்பட்ட பலன் கிட்டும்.

பள்ளியறை பூஜைக்கு பால், நைவேத்தியங்கள் செய்து கொடுப்பவர்களும், பள்ளியறை பூஜை நிறைவடைந்த பின்னர், ஏழைகளுக்கு தானமாக நைவேத்தியத்தைத் தருபவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தைகள் இப்பிறவியிலும், மறுபிறவியிலும் பிறப்பார்கள்.

பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு, அதன் முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டு வந்தால், சுகப்பிரசவம் ஏற்படும். நைவேத்தியப் பாலை பலருக்கும் தந்தால் அவர்களுக்கு வலியில்லாத பிரசவம் உண்டாகும். குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை உண்டாகும். 

இப்படிப்பட்ட சிந்தனை உண்டானால், அவர்களுக்கு பிரசவ வைராக்கியம் உருவாகுவற்குப் பதிலாக முக்தி வைராக்கியம் உண்டாகும். பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவுப் பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை அடைவார்கள். பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும். 

பள்ளியறை பூஜைக்கு எண்ணெய், நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக் காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் ஒருபோதும் வராது.

வெகு காலமாக திருமணம் நடக்காமல் இருக்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் இதில் கலந்து கொள்ளவேண்டும். 

ஒரு வருடத்திற்குக் குறையாமல் கலந்து கொள்வதன் மூலமாக அவர்களுக்கு இனிமையான மண வாழ்க்கை அமையும்.

வேலை அல்லது தொழில் செய்து வருபவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையை தரிசித்து வருவதன் மூலமாக மூன்றாவது நாளில் இருந்து அல்லது மூன்றாவது வாரத்தில் இருந்து வேலையில் மந்தம் விலகிவிடும். தொழிலில் படிப்படியான வளர்ச்சியைக் காணலாம். 

பள்ளியறை பூஜை நடைபெறாத ஆலயங்களில் பள்ளியறை கட்டுவதும், மீண்டும் பள்ளியறை பூஜையைத் துவங்குவதும் பெரும் கோடிக்கணக்கான கோடி புண்ணியத்தைத் தரும்...

அம்பாள், சிவனின் திருப்பாதங்களுக்கு பூஜை செய்து அழைத்து செய்வாள். பால், பழங்கள் நெய்வேத்யமாக வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தி, பாசுரங்கள் பாடி திருக்கதவுகள் மூடப்படும். இந்த பள்ளியறை பூஜையானது கிட்டதட்ட அரை மணி நேரம் வரை நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொள்வதை விபரம் அறிந்த சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். 
மேலும்.... பலருக்கும் இந்த பூஜை பற்றி முழுவதுமாக தெரியாது.

என்ன பலன் கிடைக்கும் :

பள்ளியறை பூஜை நடக்கும் இடத்தை தூய்மையான தண்ணீரால் சுத்தம் செய்து, கோலமிட்டு, அழகுபடுத்துதலை வழக்கமாக பல பெண்களும் செய்து வருகிறார்கள். இந்த பள்ளியறை பூஜைக்கு கோலமிட்டு வணங்கினால் மகாலட்சுமி அவர்களுடைய இல்லத்திலும், உள்ளத்திலும் நிரந்தரமாக வாசம் செய்வாள். 
அவர்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்கக் கூடிய எல்லா விதமான நலன்களும் கிடைக்கும்.

யார் இதைச் செய்கின்றார்களோ, அவர்கள் மற்றும் அவர்களுடைய அடுத்த பதினான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இனிமையான இல்லறத்தை தமது வாழ்நாள் முழுவதும் பெறுவார்கள் என்பதை சித்தர்களின் தலைவரும், தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்தியர் மாமுனிவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சிவன் லிங்கங்களிலேயே குபேரன் பூஜித்த லிங்கம் மிகவும் சிறப்பு

 இனிய சிவ லிங்கங்களிலேயே, குபேரன் பூஜித்த இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நவகிரகத்தில் புதன் இங்கு வந்து வழிபட்டதால் ஆரம்ப காலத்திலிருந்து இந்த தலம் புதன் ஷேத்திரமாக விளங்குகிறது.  

பணம். இதற்கு அதிபதி குபேரன். இந்த குபேரனே தன்னிடம் உள்ள செல்வம் மேன்மேலும் பெருக சொக்கநாதரை வழிபட்டு, பிரதிஷ்டை செய்த கோயில் ஆதிசொக்கநாதர் கோயில்.  
 
 சிவன் லிங்கங்களிலேயே, குபேரன் பூஜித்த இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.  

மதுரையை குசேல பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தார்.. மன்னன் கல்வியில் மிகச் சிறந்தவன் என்பதை கேள்விப்பட்டு, தமிழ்ச்சங்கத்தில் புலவராக இருந்த கபிலரின் நண்பரான இடைக்காடர், பாண்டியனின் அரண்மனைக்கு சென்று தான் கொண்டு வந்த பாடலால் மன்னனைப் புகழ்ந்து பாடினார். 

இவரது பாடலால் பொறாமைப்பட்ட பாண்டிய மன்னன் சரியாக உபசரிக்காமல் இருந்தான். இதனால் மனம் வருந்திய இடைக்காடர், அங்குள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி, ""இறைவா! பாண்டிய மன்னன் தமிழ்புலமை வாய்ந்தவன் என்று நினைத்து அவனைப் பாடினேன். 

ஆனால், அவனோ பொறாமையால் என்னை அவமதித்து விட்டான். அவன் என்னை அவமதித்தானா, அல்லது உன்னை அவமதித்தானோ என்பது எனக்கு தெரியாது,'' என்று சிவனிடம் விண்ணப்பம் செய்து தணியாத கோபத்துடன் வடதிசை நோக்கி சென்றார்.

இதைக் கேட்ட சிவன், தன்னுடைய லிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியுடன் கோயிலுக்கு நேர் வடக்கே, வைகை ஆற்றுக்கு தெற்கே உள்ள கோயிலில் எழுந்தருளியதுடன், இடைக்காடருக்கும் காட்சி கொடுத்து மன்னனுக்கு பாடம் புகட்டுவதாக கூறினார்.

திருப்பள்ளியெழுச்சி நேரத்தில் இறைவனை தரிசிக்க வந்த பக்தர்கள் அங்கு சிவலிங்கத்தை காணாமல் அதிர்ச்சியடைந்து, இந்த விஷயத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவிக்க வந்தார்கள்.  

அப்போது நகரமே பொலிவிழந்து இருப்பதையும் கண்டார்கள். பதட்டத்துடன் மன்னனிடம் சென்று, ""மன்னா! கோயிலில் இறைவனைக் காணோம், நகரமும் பொலிவிழுந்து கிடக்கிறது,'' என்று தெரிவித்தார்கள்.

நடந்ததைக் கேள்விப்பட்ட மன்னன், மிகவும் வருத்தத்துடன், ""இறைவா! நான் செய்த தவறு என்ன? தாங்கள் உமா தேவியுடன் இங்கிருந்து எங்கு சென்றீர்கள்?'' என்று இறைவனிடம் கெஞ்சி மன்றாடினான். 

அப்போது மன்னன் இடைக்காடரை அவமதித்ததால் தான் சிவன் அங்கிருந்து சென்றதாக அசரீரி கூறியது. சிலர் ஓடி வந்து, வைகை ஆற்றுக்கு தென்கரையில் உள்ள கோயிலில் உமாதேவியுடன் சொக்கநாதர் எழுந்தருளியிருக்கும் விஷயத்தை மன்னனிடம் தெரிவித்தனர்.

உடனே, மன்னன் அந்த இடத்திற்கு சென்று, ""சொக்கா!, தாங்கள் அங்கிருந்து இங்க வந்து எழுந்தருளியிருப்பதன் காரணம் என்ன? நான் தவறு ஏதும் செய்தேனா? அல்லது வேறு யாரேனும் தவறு செய்து விட்டார்களா?'' என கேட்டு மன்றாடி, இறைவனை போற்றி துதி பாடினான்.

மன்னனின் துதியால் மகிழ்ந்த சொக்கன், ""பாண்டியனே!, எல்லாத் தலங்களிலும் இந்த திருவாலவாயே உயர்ந்தது. மேலும் யாம் இருக்கும் லிங்கங்களிலேயே, எனது தோழன் குபேரன் பூஜித்த இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இன்று முதல் இந்த தலம் உத்தரவாலவாய் என்று அழைக்கப்படும் என்று கூறினார்.

மேலும் இந்த கோயிலுக்கு ஆதிசொக்கநாதர் கோயில் என்றும், பழைய சொக்க நாதர் கோயில் என்றும், வடதிருவாலவாய் என்றும் பெயருண்டு.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

முருகனுக்குரிய அபிஷேக பொருட்களும் அவற்றின் பலன்களும் .

 முருகனுக்குரிய அபிஷேக பொருட்களும், அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :
முருகனுக்குரிய அபிஷேக பொருட்களும், அவற்றின் பலன்களும் :*
தெய்வ வழிபாட்டில் மிக முக்கியமானது அபிஷேகம் செய்வது. அனைத்து தெய்வங்களுக்குமே பல விதமான அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். சிவனை அபிஷேக பிரியர் என்றே சொல்லுவதுண்டு. அதே போல் முருகன் என்றால் பால், பஞ்சாமிர்தம் தான் நினைவிற்கு வரும். 

கோவிலில் சுவாமிக்கு நடக்கும் மொத்த அபிஷேகத்தின் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு சிலர் செய்வார்கள். இதற்கு சர்வ அபிஷேகம் என்று பொருள். சர்வ அபிஷேகம், சகல விதமான பாவ நிவர்த்தியை தரும் என்பார்கள். 

இப்படி மொத்தமாக அபிஷேகத்திற்கு பணம் செலுத்த முடியாதவர்கள், தங்களுடைய பிரச்சனைகள், குறைகள் தீருவதற்கு உரிய பொருளை அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுத்தால், சிறப்பான பலன் கிடைக்கும். ஒவ்வொரு பொருளால் அபிஷேகம் செய்வதால் ஒவ்வொரு விதமான பலன்கள் நமக்கு கிடைக்கும்.

தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று அபிஷேகம். பல தெய்வங்களை வழிபட்ட பலனை தரும் அற்புத தெய்வமான முருகப் பெருமானை சில குறிப்பிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். 

அதுவும் முருகனுக்குரிய சஷ்டி திதி(வளர்பிறை, தேய்பிறை சஷ்டி இரண்டிலும்), கிருத்திகை நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம் வரும் நாட்களில் இந்த அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பாகும். முருகனுக்கு மட்டுமின்றி வேல், வள்ளி, தெய்வானைக்கும் அபிஷேகம் செய்வத இதே பலன் கிடைக்கும். 

எந்தெந்த பிரச்சனைகள் தீருவதற்கு முருகனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்ய வேண்டும். 

*முருகனுக்குரிய அபிஷேக பொருட்களும், அவற்றின் பலன்களும் :*


* திருமஞ்சனம் - தோல் நோய்கள் நீங்கும்.

* பஞ்சாமிர்தம் - நோய்கள் விலகி, ஆரோக்கியம் பெருகும். பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக படைத்தால் செல்வம் பெருகும்.

* பால் - குடும்ப விருத்தி, குல விருத்தி ஏற்படும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.

* தயிர் - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* எலுமிச்சை - எம பயம் நீங்கும்.

* இளநீர் - மனதில் அமைதி, குடும்பத்தில் நிம்மதியை தரும்.

* பழ வகைகள் - பிரபலமடைய செய்யும்.

* கரும்புச்சாறு - உடல் நோய்களை நீக்கும்.

* சந்தனம் - பெயர், புகழ், அந்தஸ்து கிடைக்கும்.

* பன்னீர் - தொழில், வாழ்க்கையில் வளர்ச்சியை தரும்.

* விபூதி - சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

* மஞ்சள் - தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.

* குங்குமம் - குல விருத்தி, குடும்பத்தில் சந்தோஷம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...