Sunday, December 14, 2025

திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கத்தின் மர்மம்.



*🌹மார்கழி மாதத்தில் வழிபட வேண்டிய திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கத்தின் மர்மம்...!!*
*🌹அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில்,* *நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீதுள்ளது.

🌹 இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரரும்,* *தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.,,*
*திருச்செங்கோடு சுயம்புலிங்கத்தின் மர்மம்:,*
*🌹இங்கு மார்கழி மாதம் மட்டும் குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும்.*
*அப்பொழுது பிருங்கி முனிவர் வழிபட்ட மரகதலிங்கம் வைத்து வழிபடப்படுகிறது. மற்ற மாதங்களில் அதற்கு பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள்.*

*🌹பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தின் வரலாறு சுருக்கம்.. முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் செய்து கொண்டனர்.* 

*🌹அந்த போரினால் உலகில் பேரழிவு -கள் ஏற்பட்டன. இந்த துன்பங் களை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர்.* 

*🌹அதன்படி ஆதிஷேசன் தன்படங்களால் மேருமலை சிகரத்தின் முடியை அழுத்தி கொள்ள வேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியை தளர்த்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் வாயுதேவனால் பிடியை தளர்த்த முடியவில்லை.*

*🌹இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார்.* 
*இதனால் உயிரினங்கள் அனைத்தும் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்த பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிஷேசனிடம் பிடியை தளர்த்த வேண்டினன் தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார்.*

*🌹இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிஷேசனின் சிரத்தையும் சேர்த்து புமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறி விழுந்தது.*
*அவற்றிலொன்று திருவண்ணாமலையாகவும்,*

 *🌹மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடு) காட்சியளிக்கிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன.*

*🌹சுயம்பு மரகத* 
*லிங்கத்தின்* *வரலாறு பிருங்கி* *முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை* *மட்டும் வழிபட்டு விட்டு, அவரது அருகில் இருக்கும் உமாதேவியை வழிபடாமல் விட்டு விடுவார். 

🌹இருவரும் ஒன்றாக அமர்ந்தி -ருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபம டைந்த பார்வதி, முனிவரே!*

 *🌹சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர், என சாபமிட்டார்.* 
*இதையறிந்த சிவன், நானும் சக்தியும் ஒன்றுதான்.* *சக்தியில்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார்.* 

*🌹பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கவுரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார்.* 

*🌹(இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது).* 
*அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவ பெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தாயார் பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார்.*

*🌹இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார்.,*

*🌹பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்து கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார். மீதி நேரத்தில் சாதாரணமான லிங்கத்தை வைத்து விடுங்கள் என்றார்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, December 11, 2025

தேய்பிறை அஷ்டமி (பைரவர்) வழிபாடு ஏன்?

தேய்பிறை அஷ்டமி (பைரவர்) வழிபாடு
நட்சத்திரம், திதிகள், கிழமைகள் போன்றவற்றில் பல்வேறு வழிபாடுகள் செய்கிறோம். சாதாரணமாக சுபகாரியங்கள் செய்வதற்கு தவிர்க்கும் திதிகளில், இறைவனுக்குரிய வழிபாடுகளை மேற்கொள்கிறோம். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) கிருஷ்ணருக்கு அஷ்டமி திதியிலும், ராமருக்கு நவமி திதியிலும் ஜெயந்தி கொண்டாடுகிறோம்.
-
அந்த வகையில் இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம், காலமாக நடைபெற்று வருகிறது. (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.
-
நட்சத்திரம், திதிகள் இணைந்து வருவதும், தனியாக வருவதும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்ததாகும். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதி சிறப்பானதாகும். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர்.
-
01 சித்திரை #ஸ்நாதனாஷ்டமி
.
02 வைகாசி #சதாசிவாஷ்டமி
.
03 ஆனி #பகவதாஷ்டமி
.
04 ஆடி #நீலகண்டாஷ்டமி
.
05 ஆவணி #ஸ்தாணு_அஷ்டமி
.
06 புரட்டாசி #சம்புகாஅஷ்டமி
.
07 ஐப்பசி #ஈசான_சிவாஷ்டமி
.
08 கார்த்திகை #கால_பைரவாஷ்டமி
.
09 மார்கழி #சங்கராஷ்டமி
.
10 தை #தேவதாஷ்டமி
.
11 மாசி #மகேஸ்வராஷ்டமி
.
12 பங்குனி #திரியம்பகாஷ்டமி - இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு. (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், ஐந்து தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும். ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.

பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.

எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது. பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.

சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.

‘‘அட்ட பைரவருமோருருவாகி கிருட்ண பட்ச யட்டமியந்தியில்
அருள் பரிபாலிக்க தொழுதிருப் பாருக்காததேது’’ 

சீர்காழியில் உள்ள சட்டை நாதர் என்னும் பைரவரை வழிபடுவதன் சிறப்பை இப்படி விளக்குகிறது அகஸ்திய நாடி.

திருஞானசம்பந்தராகப் போற்றப்படும் ஆளுடைப் பிள்ளை என்ற ஞானக் குழந்தை ஞானம் பெற்ற கோயில் இது. பிரம்ம தீர்த்தக் கரையில் அம்பாள் பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தருக்கு பால் ஊட்டிய தலம். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) நாம் ஒவ்வொரு வரும் தொழ வேண்டிய அற்புதக் கோயில். ஆதி சங்கரர் தமது "சௌந்தர்ய லஹரி" என்ற நூலில், ‘‘ஞானப்பால் பார்வதி தேவியிடம் இந்த திராவிட சிசு உண்டது சத்தியம்’’ என கொண்டாடுகிறார்.

திருநாவுக்கரசரை "அப்பர்" என ஞானசம்பந்த பிரான் அழைத்துப் போற்றிய புண்ணிய கோயில் இந்த சட்டநாதர் கோயில். சீர்காழி என்ற ஊருக்கே புகழைச் சேர்த்த இந்த சட்டநாதர், பைரவ சுவாமியின் மறு பதிப்பு வேற்றுருதான். அஷ்டமி திதி தேய்பிறையில் இங்கு எட்டு வித பைரவ மூர்த்திகளும் கூடி நின்று பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனராம். எனவே, "தேய்பிறை அஷ்டமி திதி மாலை வேளையில் சட்ட நாதனை தொழுபவர் பெரும் பாக்யவான்களே" என்கிறார் அகஸ்தியர்.

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீ பைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கிய வரும் பைரவரே.

தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப் பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.  அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப் பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார். அதனால் தான் ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.

தேய்பிறை அஷ்டமி, குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது. 

சாதாரணமாக நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.

மிக அரிதாக சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான் மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) ஏவல், பில்லி, சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) ராகு காலத்தில் பைரவர் சன்னதியில் அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை ஜெபித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும்.
-
பைரவ காயத்ரி
*****************

"ஷ்வானத் விஜாய வித்மஹே 
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரச்சோதயாத்!"
-
இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்டமி வழிபாட்டினை பின் பற்றி எல்லா நலமும் அடைவோமாக!. "ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, December 10, 2025

இழந்ததை திரும்பப் தரும் இறைவன் அரிகேசநல்லூர் அரியநாத சுவாமி.

_இழந்ததை எல்லாம் திரும்பப் பெற்று அருளும் அதிசய இறைவன் – ‘அரிகேசநல்லூர்’ அரியநாத சுவாமி!_
திருநெல்வேலியிலிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில்,
ஒரு அமைதியான கிராமத்தில்…
பல ஆயிரம் ஆண்டுகளாக இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்கும் சக்தியாக
அருள்பாலிக்கிறார் ஸ்ரீ அரியநாத சுவாமி

அந்த புனித தலம் தான் —
அரிகேசநல்லூர் அரியநாத சுவாமி திருக்கோவில் 
(பெரியநாயகி சமேத ஸ்ரீ அரியநாதர்)

குபேரன் இழந்த செல்வத்தை மீட்ட அதிசய வரலாறு

ஒரு காலத்தில்,
செல்வங்களின் அதிபதியான குபேரன்,
ராவணனின் அகந்தைச் சினத்தால்,
தன் செல்வம், செல்வாக்கு, பெருமை, அனைத்தையும் இழந்து நின்றான்!
உலகமே ஒளிந்த பின்,
தனியோராகி, அவமானத்துடன் அலைந்த குபேரன்
இறுதியில் வந்து சேர்ந்த இடம் தான் —
அரிகேசநல்லூர்!

அங்கே அவன் தன் கைகளாலேயே
ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து,
கண்ணீர் மல்க,
உயிரைக் கரைய வைத்து வழிபட்டான்…

அந்த சிவபெருமான் தான் — அரியநாத சுவாமி!

குபேரனின் தவம் கனிந்தது…
இழந்த செல்வம், பெருமை, செல்வாக்கு, புகழ்
அனைத்தையும் மீண்டும் அவனுக்குத் திருப்பி வழங்கினார்
அரியநாதர்!

அதன்பிறகே இந்த தலம்
“இழந்ததை மீட்டுத் தரும் தலம்”
என்று புகழ் பெற்றது!

1500 ஆண்டுகள் பழமையான புராதன தலம்

இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில்,
ஜடாவர்மன் அரிகேச பாண்டியன் காலத்து கல்வெட்டே பிந்தையதாகும்.

அதாவது,
இந்த கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது!

அந்த மன்னனின் பெயராலேயே
இந்த ஊரும் “அரிகேசநல்லூர்” என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீருத்திரத்தில் வரும் ஒரே சிவநாமம் – ‘அரிகேசா’

சிவபெருமானின்
மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான
ஸ்ரீருத்திரத்தின் ‘சமகம்’ பகுதியில்,
மூன்று முறை திரும்பத் திரும்ப வரும்
ஒரே சிவநாமம் — “அரிகேசா”!

அந்த மந்திர மூர்த்தியே இங்கு அரியநாத சுவாமியாக அருள்பாலிக்கிறார்!

இழந்த செல்வம்
இழந்த ஆரோக்கியம்
இழந்த புகழ்
இழந்த செல்வாக்கு
இழந்த மன அமைதி

அனைத்தையும் மீட்டுத் தரும் மூர்த்தியாக
இங்கு அரியநாதர் வீற்றிருக்கிறார்!

சுரதேவர் – அடிக்கடி ஜுரம் குணமாக

இந்த கோவிலில் மூலவரைத் தரிசித்து
பிரகாரம் சுத்தும்போது,

முதலில் காட்சி தரும் தெய்வம் — சுரதேவர்!

குழந்தைகளுக்கு அடிக்கடி ஜுரம் வருகிறதா?
இங்கு வந்து சுரதேவரை வணங்கினால்
அந்தத் தொல்லை தீரும் என்பது தீர்க்கமான நம்பிக்கை!

சப்த மாதர்கள் – தமிழக சிறு தெய்வ வழிபாட்டு சாட்சி

இக்கோவிலில்
பிராமி
மகேந்திரி
கௌமாரி
சாமுண்டி
வாராகி
இந்திராணி
வைஷ்ணவி

இந்த சப்த மாதர்கள் ஒரே வரிசையில் கொலு வீற்றிருக்கிறார்கள்!

பஞ்ச குரு தலங்களில் ஒன்று – தட்சிணாமூர்த்தி

இங்கு தெற்குத் திசை நோக்கி அமர்ந்திருக்கும்
தட்சிணாமூர்த்தி
பஞ்ச குரு தலங்களில் ஒருவராவார்!

வியாழக்கிழமைகளில் வணங்குதல் சிறப்பு!

காசி விஸ்வநாதர் – காசியே காஞ்சியாக மாறும் தருணம்

அரியநாதரின் நேர் பின்புறம்
விஸ்வநாதர் – விசாலாட்சி
காசித் தெய்வங்களே இங்கு எழுந்தருளியுள்ளனர்!

மாந்தன் – மாந்தியுடன் மூத்தவள் ஜேஷ்டா தேவி

இந்தக் கோவிலின் மிக அரிய அமைப்பு —

சனியின் மனைவியான ஜேஷ்டா தேவி
அவளது மடியில் சனியின் பிள்ளைகளான
மாந்தன் & மாந்தி

இது தமிழ்நாட்டில் மிகவும் அரிதான சன்னதி!

இங்கே விளக்கேற்றி வேண்டினால்
வறுமை தடைகள்
துன்பங்கள்
மெல்ல மெல்ல அகலும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை!

முக்ருணி விநாயகர் & நந்தவனம்

மதுரை மீனாட்சியைப் போல் இங்கேயும் பிரமாண்ட முக்ருணி விநாயகர்!

வெளிப்பிரகாரம் முழுவதும்
பூங்காவாக அமைக்கப்பட்ட
அழகிய நந்தவனம்!

ஜன்னல் வழி பேசிக் கொள்ளும் நண்பர்கள் – குபேரன் & அரியநாதர்

வெளிப்பிரகார முடிவில் குபேரன் சந்நதி!

அதன் பக்கத்தில்
கல்லில் செய்யப்பட்ட
ஒரு சிறிய சாளரம் (ஜன்னல்)

அந்த ஜன்னல் வழியாக தான்
குபேரனும் – அரியநாதரும்
நண்பர்களைப் போல பேசிக்கொள்வார்களாம்!

பெரியநாயகி – 7 அடி உயர அழகி அம்மன்

வெளியே வந்தால்,
இடப்புறத்தில் தனிக் கோவிலில்
7 அடி உயரத்தில் நின்ற கோலத்தில்
பேரழகோடு அருள்பாலிக்கிறாள்
பெரியநாயகி அம்பாள்!

மனதார வேண்டிக்கொண்டால்
வாழ்க்கையே மாறும் என்று நம்புகின்றனர். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 


அபிஷேகம் செய்தால் நண்டு வரும் கற்கடேஸ்வரர் கோவில்.

அபிஷேகம் செய்தால் நண்டு வெளியில் வரும் அதிசய கோவில் !
 
நண்டு வெளியில் வருமா? 

அனைவருக்கும் தெரியாத மிகவும் சிறப்பு வாய்ந்த அரிய ஆன்மிக தகவல்கள் நிறைய உள்ளது. அவை அனைத்தும் கடவுளின் சக்தியில் நடைபெறுபவை. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆச்சரியமான விஷயங்கள் இருக்கும். அவை நம்மில் பலருக்கும் தெரிந்தவையும் இருக்கும், சில தெரியாத விஷயங்களும் இருக்கும்.

👉 ஆனால் அவை அனைத்துமே நம்மை வியக்கவும், பிரமிக்கவைக்கவும் கூடியவை. அவ்வாறு இயற்கை எழில் கொண்ட தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்தூர் அருகில் உள்ளது திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும் கற்கடேஸ்வரர் கோவிலில் ஒரு ஆச்சரியமான தகவல் உள்ளது....! 

👉 தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 42வது சிவாலயமாக உள்ள அருள்மிகு கற்கடேஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், வேப்பத்தூர் அருகில் உள்ளது திருந்துதேவன்குடியில் உள்ளது.

👉 இரண்டு அம்பிகை சன்னிதிகள் இக்கோவிலில் இருக்கின்றன. இந்தக் கோவிலின் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தில், இந்திரன் வாளால் வெட்டிய வெட்டுத் தழும்புகளும், சிவலிங்கத்தில் நண்டு நுழைந்து வெளியேறிய துவாரமும் இருக்கின்றன.

👉 ஆடி அமாவாசையும், பூரம் நட்சத்திரமும் கூடிய நேரத்தில், 21 குடம் காராம் பசுப்பாலைக் கொண்டு இங்கிருக்கும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து நீராட்டினால், சிவலிங்கத்திலிருந்து நண்டு வெளியில் வந்து காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.

👉 இந்திரனின் கர்வத்தின் காரணமான நண்டை வெட்ட முயன்ற போது, அந்த வாள் தவறுதலாக சிவலிங்கத்தின் மீது பட்டதும் பதறினான். சிவபெருமான் தோன்றி அவனுக்கு அறிவுரை கூறியதும் வருந்தி திருந்தினான். தேவர்களின் தலைவர் திருந்திய இடம் என்பதால், இந்த தலம் 'திருத்துதேவன்குடி" என்று வரலாறு கூறகிறது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

முருகன் கதை கேட்டால் லாபம்


பார்வதி மட்டுமில்லாமல் முருகனுக்கு சஷ்டி கார்த்திகை பெண்கள் என்றும் அழைக்கப்பட்ட ஆறு தாய் மார்கள் இருந்தனர். 
அவர்கள் ஆறுபேரும் அவரது தாய்மார்க ளே. நட்சத்திர வரிசையில் கார்த்திகை ஆறாவது. அதேபோல, திதிகளில் சஷ்டி ஆறாவதாகும். 

சிவனுக்குரிய ஐந்து முகங்களும், ஞானி யர் மட்டுமே தரிசிக்கும் அதோமுகத்தோடு சேர்ந்து ஆறுமுகங்கள் உண்டானது. 

இவருக்குரிய மந்திரம் சரவணபவ என்னு ம் ஆறு எழுத்து கொண்டது. காமம் (பொ ருள் ஆசை), குரோதம் (கோபம்), லோபம் (கருமித் தனம்), மோகம் (பெண்ணாசை), மதம் (ஆணவம்), மாச்சரியம்(பொறாமை) என்னும் ஆறு பகைவர்களையும் அழிக்கும் படைவீரரா கத் திகழ்கிறார். 

அந்த ஆறுமுகப்பெருமானை தரிசித்தவ ருக்கு வாழ்வில் என்றென்றும் ஏறுமுகம் தான். 

🌹முருகன் கதை கேட்டால் லாபம்:
**************************************
காளிதாசர் எழுதிய காவியங்களில் குமார சம்பவம் புகழ்பெற்றது. வால்மீகி ராமாய ண த்தில் இருந்தே காளிதாசர் இந்த சொ ல்லை எடுத்தாண்டுள்ளார். 

விஸ்வாமித்திரர் பாலகாண்டத்தில் ராம லட்சு மணருக்கு முருகனின் வரலாற்றை எடுத்துச் சொல்லியதாக ராமாயணம் கூறுகிறது. குமா ரசம்பவம் என்னும் இப்புனிதமான கதையைக் கேட்டவருக்கு செல்வம் சேரும். 

கார்த்திகேயனிடம் பக்தி வைத்தவருக்கு இப்பிறவியில் தீர்க்காயுள், மழலைச் செல் வம் போன்ற பாக்கியம் உண்டாவதோடு ஸ்கந்த லோகத்தில் வாழும் பாக்கியமும் வாய்க்கும். 

🌹செவ்வேள் முருகன்: 
**************************
ஒருமுறை சிவன் தியானத்தில் இருந்த போது, அவர் மீது காதல் பாண த்தை தொடுத்தான் மன்மதன். கோபமடைந்த சிவன் நெற்றிக்க ண்ணைத் திறக்க நெருப்புக்கு இரையானான். 

அவனுடைய கரும்பு வில்லையும், மலர் அம்பையும் அம்பிகை எடுத்துக் கொண்டா ள். அவற்றை சிவனின் பாதத்தில், அர்ப்ப ணித்து வணங்கினாள். 

அப்போது, மன்மதனை எரித்த அதே கண் ணி லிருந்து ஆறுபொறிகள் புறப்பட்டன. அவை சரவண பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகள் உண்டாயின. பார்ப்ப தற்கு மன்மதனைப் போலவே அவர்கள் இருந்தனர். 

மன்மதன் கருநிறம். ஆனால், இந்த ஆறு மன் மதர்களோ சிவப்பு நிறம். அதனால், தமிழில் மன்மதனை கருவேள் என்றும், முருகனை செவ்வேள் என்றும் குறிப்பி டுவர். வேள் என்ற சொல்லுக்கு அழகுமி க்கவன் என்பது பொருள். 

🌹இறைவனுகே நீ இறைவனப்பா.
****************************************
பிரம்மா. மனதில் இருந்து பிறந்தவர் சனத் கு மாரர். பிரம்மஞானியான இவரைக் காண சிவபார்வதி வந்தனர். ஆனால், அவர்களை அவர் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தார். 

தெய்வத்தைக் கோயிலில் பார்த்தாலே, அது வேண்டும், இது வேண்டும் என கேட்ப து உலக வழக்கம். ஆனால், தெய்வம் நேரி ல் வந்தும் சனத்குமாரர் ஏதும் கேட்கவில் லை. இதனால் மகிழ்ந்த சிவன், உன் பற்ற ற்ற நிலையை பாராட்டி வரம் தருகிறேன், கேள், என்றார். 

சனத்குமாரர் தனக்குஎதுவுமே தேவையில் லை என்று சொல்லிவிட்டார்.  சில ஞானி கள் பிறவாவரம் கொடுங்கள், என்றாவது தன் ஆசையை வெளிப்படுத்துவார்கள். சனத்குமா ரர் அதைக்கூட கேட்க விரும்ப வில்லை. 

வியந்து போன சிவன் அவரிடம், நீ என்னி டம் வரம் கேட்காவிட்டால் பரவாயில்லை. நான் உன்னிடம் ஒரு வரம் கேட்கிறேன். நீயே எனக்கு மகனாகப் பிறக்கவேண்டும், என்றார். சனத்குமாரரும் ஒப்புக்கொண்டார். 

ஆண்டிச்சாமியாக இருந்த சனத்குமாரர், அடு த்த பிறவியில் சிவனுக்கு மகனாகப் பிறந்து, ஆண்டிக்கோலம் பூண்டு பழநி சென்றார்..
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, December 8, 2025

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மண் தலம் 3,500 ஆண்டுகள்

*காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்: பஞ்சபூதத்தலங்களில் மண் தலம்; 3,500 ஆண்டுகள் பழைமையான மாமரம் பற்றி தெரிந்து கொள்வோம்* ....!
ஐயடிகள் காடவர்கோன், திருகுறிப்புத் தொண்டர், கழற்சிங்க நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரோடு தொடர்பு கொண்ட ஆலயமிது.

புண்ணியம் தரும் ஏழு நகரங்களில் காஞ்சிபுரமும் உண்டு. கோயில் நகரம் என்று போற்றப்படும் காஞ்சி நகரத்தில் திரும்பிய திசை எங்கும் கோயில்களைக் காணலாம்.

தராசில் உலகத்தின் புண்ணிய க்ஷேத்ரங்களை எல்லாம் ஒரு தட்டில் வைத்து, காஞ்சியை மறு தட்டில் வைத்தால் காஞ்சியே சிறந்து விளங்கும் என்பதும் ஞானியர் வாக்கு.

அப்படிபப்ட்ட காஞ்சிபுரத்தில் மையமாகத் திகழ்கிறது அருள்மிகு ஏலவார்குழலி அம்மை சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில், கச்சபேஸ்வரர் கோயிலுக்கு எதிரே அமைந்திருக்கிறது ஸ்ரீஏகாம்பரநாதர் ஆலயம்.

பஞ்சபூதத் தலங்களுள் இது மண்ணுக்குரிய (ப்ருத்வி) தலம். 

😟😯😟😯😟

ஒரு சமயம்...
அன்னை பார்வதி மண்ணுலகுக்கு வந்து ஈசனை அடையும் வழியை பூமியில் உள்ள உயிர்களுக்கு உணர்த்தத் தவம் செய்தாள்.
அன்னையின் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன், அவரைப் பல்வேறு தலங்களுக்கு வரச்சொல்லிக் காட்சி கொடுத்து அருள்பாலித்தாள். அவ்வாறு அன்னை தவம் செய்த இடங்களில் ஒன்று காஞ்சிபுரம்.

கம்பா நதிக்கரையில் ஒற்றை மாமரத்தின் கீழ் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டாள். ஒருநாள் கம்பா நதி வெள்ளம் திரண்டு வந்து மணல் லிங்கத்தை அழிக்க வந்தது. இதனால் அஞ்சிய அன்னை மணல் லிங்கத்தைத் தழுவிக்கொண்டார். இதனால் மகிழ்ந்த ஈசன் அன்னையை ஏற்றுக்கொண்டார்.

இங்கு ஈசனுக்கு, 'கச்சி ஏகம்பன்' என்றே திருநாமம். ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர் ஆகிய திருப்பெயர்களும் சுவாமிக்கு உண்டு. இங்குதான் காமாட்சி அன்னை 32 அறங்கள் செய்தார்.

கச்சியன், ஏலவார்குழலி, காமாட்சி என்பது அன்னையின் திருநாமம். கம்பா நதி, சிவகங்கை மற்றும் சர்வ தீர்த்தம் போன்றவை இத்தலத்தின் தீர்த்தங்கள் ஆகும்.

சக்தி, பிரம்மா, திருமால், திருமகள், கலைமகள், ருத்திரர்கள், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், ஐயடிகள் காடவர்கோன், பரணதேவர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் போன்றவர்களால் வணங்கப்பட்டவர் கச்சி ஏகம்பன்.

'திருவொற்றியூரை விட்டு நீங்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து திருமணம் செய்த சுந்தரர், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் தனது கண்ணை இழந்தார். இதனால் தன் தவற்றுக்கு வருந்திய சுந்தரர், இங்கு வந்து ஏகாம்பரேஸ்வரரை வணங்கி, ‘ஆலம்தான் உகந்து அமுது செய்தானை’ என்ற பதிகத்தைப் பாடினார்.

அதன் பயனாக, ஒரு கண் பெற்றார். எனவே, இங்கு வந்து வணங்கினால் கண் சம்பந்தமான அனைத்துக் குறைபாடுகளும் நீங்கும் என்பதும் ஐதிகம்.

பிரம்மா, திருமால், ருத்திரர்களால் பூசிக்கப்பட்ட ஈசனுக்கு இங்கே தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அவர்கள், முறையே வெள்ளக் கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்று தனிச் சந்நிதிகளில் வணங்கப்படுகிறார்கள்.

இந்த ஆலய தலவிநாயகர், 'விகடசக்கர விநாயகர்.' இவர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழிலாக வீற்றிருக்கிறார். பெருமாளின் சக்கரத்தை விழுங்கி லீலை புரிந்து விகடக் கூத்தாடியவர்.

பெருமாள் வணங்கிக் கேட்டுக்கொள்ள அந்த சக்கரத்தை அருளியவர். ஒன்பது நிலைகள் கொண்ட ராஜகோபுரம் விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரால் கி.பி.1509-ம் ஆண்டு கட்டப்பட்டது.

கருவறையில் லிங்க வடிவில் காட்சி தரும் ஈசன் மணலால் ஆனவர். சுயம்புமூர்த்தி. எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. பதிலாகப் புனுகுச் சட்டமே சாத்தப்படுகிறது. இங்கு ஈசன் மீது ரதசப்தமி நாளில் சூரியனின் ஒளிக்கதிர்கள்பட்டு அவை வணங்கி வழிபடும் அதிசயம் நடைபெறும். எனவே இது சூரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது.

இத்தலத்தின் தலவிருட்சம் மாமரம். இந்த மாமரம் சுமார் 3500 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். இந்த மாமரம் நான்கு கிளைகளாகப் பிரிந்திருக்கின்றன. இந்த நான்கு கிளைகளும் நான்கு வேதங்கள் என்கிறார்கள்.

இந்த மாமரத்தில் நான்கு விதமான சுவைகளில் கனிகள் வளர்கின்றன. இதை உண்டால் பிள்ளைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. வருடம்தோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாவது நாள், `மாவடி சேவை’ வைபவம் இங்கு சிறப்பாக நடைபெறும். இதை தரிசனம் செய்தால் இல்லறம் செழிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பதும் நம்பிக்கை.

இங்கு பல்வேறு காலத்தைய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு அவை படியெடுக்கப்பட்டுள்ளன. உத்தமச் சோழன், ராஜராஜன் தொடங்கி முதலாம் குலோத்துங்கன், விஜயகண்ட கோபாலன், விஜயநகர சதாசிவன் ஆகியோர்களின் கல்வெட்டுகள் வரை இருக்கின்றன. அதில் சொல்லப்பட்டு இருக்கும் தகவல்களும் சுவாரஸ்யமானவை. பல்லவர்கள் காலத்துக் கோயில் இது எனப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Sunday, December 7, 2025

கண்நிறைந்த வாழ்வருளும் ‘ஸ்ரீகண் நிறைந்த பெருமாள்’

கண்நிறைந்த வாழ்வருளும் ‘ஸ்ரீகண் நிறைந்த பெருமாள்
தெய்வீகத்தையும் கலையையும் குழைத்துக் கட்டிய கோயில்களாக, மலையடிப்பட்டி கிராமத்தின் சிவ-விஷ்ணு ஆலயங்கள் விளங்குகின்றன. 


குடவரைக்  கோயில்களாகத்திகழும் இரண்டு ஆலயங்களும்.
முன்னரே,  ஜெயினரால்  வழிபடப்பட்டுள்ளன..

இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்பட்டு  வருகிறது.

இங்குள்ள சிவன் கோயில் முற்காலத்தில் ஆலத்தூர்தளி என்று வழங்கப்பட்டது. 
மலையின் கிழக்குப் பகுதியில் மலையை குடைந்து 
முன்  மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். 

சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகியிருக்கிறது. 

அந்த பாறையையே குடைந்து சிவலிங்கத்  திருமேனியை 
வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. 

மூலவர் வாக்கீஸ்வரமுடையார், மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரில் நந்தி  தேவர்.

உள் சுற்றில் வடக்கில் தட்சிணாமூர்த்தி, தெற்கில் கணபதி, வீரபத்திரர் 
சப்த மாதாக்கள்.

மேற்கே முருகனும் சிங்க வாகனத்தில்  சங்கரநாராயணரும் 
காட்சி தருகின்றனர். 

எல்லாமே மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டவையே! 

பிற்காலத்தில் மலையை ஒட்டி சுற்றுச் சுவரும் முன் மண்டபமும் கட்டப்பட்டு, விநாயகர்,  முருகன், அம்பாள் வடிவுடைய நாயகி ஆகியோரின் சந்நதிகள் அமைக்கப்பட்டன. 

கோயிலின் முன்பு, வில்வம், ஏரழிஞ்சி மரங்கள், 
தல  விருட்சங்களாகத் திகழ்கின்றன. 

ஏரழிஞ்சி மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்தில் சென்று ஒட்டிக்கொள்ளுமாம். இதனால் இந்த விதை  முளைப்பதில்லை ..

மலையின் மேற்குப் பகுதியில் உள்ள பெருமாள் குடைவரைக் கோயில், முன்காலத்தில் ஒளிபதி விஷ்ணு கிரஹம் என்று அழைக்கப்பட்டது. 

கோயிலுக்கு முன் மலைச் சுனையொன்று சக்கர தீர்த்தம் என்கிற 
சுதர்சன புஷ்கரணி தீர்த்தம் இறைவனின் அபிஷேகத்திற்கு  மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

நுழைவாயிலின் அருகில் விநாயகர் அருள்பாலிக்கிறார். 

வலது புறம் கமலவல்லித் தாயார் சந்நதி. 
இடதுபுற  மண்டபத்தில் திருமங்கையாழ்வார், ராமானுஜர், நாதமுனிகள், விஷ்வக்சேனர் சிலைகள் உள்ளன.

நடுவில் கருடாழ்வாரும், பலிபீடமும். இங்கும்  மலையைக் குடைந்து  முன் மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளன. 

முன்மண்டபத்தில், தரையிலுள்ள  பாறையில் 
ஐந்து குழிகளுடைய அமைப்பு காணப்படுகிறது.

அர்த்த மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத புண்டரீகாட்சப் பெருமாள், ஹயக்ரீவர், நரசிம்ம மூர்த்தி, அமர்ந்த கோலத்தில்  ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுண்டநாதன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.




கருவறையில் இரு தூண்கள்  ஹரி நேத்திர தூண்கள்  இதன் மூலம் சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளாக, மூலவரான அனந்த  பத்மநாபனை கண் நிறைய தரிசிக்கலாம். 

பெருமாளின் திருவடிகளை தாமரை மலர்கள் தாங்குகின்றன.

பெருமாளை சுற்றி இறக்கை விரித்த கருடன், இட்ச, கின்னர, கிம்புருடர்கள், தும்புரு,  நாரதர், வித்யாதரர், இந்திரன், வருணன், வாயு, குபேரன், பிரம்மா, அக்கினி, சூரியன், சந்திரன், யமன், காமதேனு, கற்பகவிருட்சம், அட்சயபாத்திரம்,  மது-கைடபர் ஆகியோர் பெருமாளை வழிபட்டபடி காட்சியளிக்கின்றனர்.


பெருமாள் தனது வலது கரத்தால் திவாகர மகரிஷிக்கு 
ஆசி வழங்குகிறார்.  

பூமாதேவி பெருமாளுக்கு பாத சேவை செய்கிறார்கள். 

லட்சுமி நாராயண பெருமாள், உற்சவ மூர்த்தியான ரங்கநாதர், 
சந்தான கோபாலரும்  அருள்பாலிக்கின்றனர். 

ஸ்ரீகண் நிறைந்த பெருமாள்’ என்றழைக்கப்படும் இந்த மூலவர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமிக்கு நிகரானவர் . 

கண் சம்பந்தப்பட்ட  நோய்கள், கண் திருஷ்டி எல்லாம், 
ஸ்ரீகண்நிறைந்தபெருமாளின் அருளால் நிவர்த்தியடைகின்றன. ஏராளமான பக்தர்கள் கண்ட பார்வை பெற்றுள்ளனர்.  

முன்மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரிநேத்திர தூண்கள்  இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட  தோஷங்கள் அனைத்தும் அறவே நீங்கும் என்பது நம்பிக்கை. 

பெருமாளின் பாதங்களை தாமரை மலர் தாங்கியுள்ளதால் 
அந்தப் பாத தரிசனம் மிகுந்த செல்வத்தை அளிக்கும் ... 

பெருமாளின் அழகிய  திருமேனி மீண்டும், மீண்டும் பார்க்க தோன்றும். இதனால் ஒரு முறை இங்கு தரிசனம் செய்த பக்தர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

துவாரபாலகருக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. மற்ற கோயில்களில் நான்கு திருக்கரங்களோடு துவார பாலகர்கள் காட்சியளிப்பார்கள்.
            
குடவரைக் கோயிலில் சிவா-விஷ்ணு ஆகிய இருவரும் ஒரே மலையில் இருப்பதால், பிரதோஷ நாட்களில் கிரிவலம் வருகிறார்கள்.

தஞ்சாவூர் - திருச்சி  நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டி அடுத்த கிள்ளுக்கோட்டை பிரிவு சாலையில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் பலன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள எட்டு திசை லிங்கங்களே (அஷ்ட லிங்கங்கள்) நவகிரக தோஷங்...