Sunday, August 28, 2022

தேவார பாடல்பெற்ற திருத்தல தரிசனம்

🌺🌺🌺🌺🌺தேவார பாடல்பெற்ற திருத்தல தரிசனம் 

🌺🌺🌺🌺திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்

🌺🌺🌺மூலவர்:விருத்தகிரீசுவரர் (பழமலைநாதர், முதுகுந்தர்)

🌺🌺🌺அம்மன்/தாயார்:விருத்தாம்பிகை (பாலாம்பிகை – இளைய நாயகி)

🌺🌺தல விருட்சம்:வன்னிமரம்

🌺🌺🌺தீர்த்தம்:மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம்

🌺🌺ஆகமம்/பூஜை :காமிகம்

🌺🌺புராண பெயர்:திருமுதுகுன்றம்

🌺🌺ஊர்:விருத்தாச்சலம்

மாவட்டம்:கடலூர்

மாநிலம்:தமிழ்நாடு

🙏🏻🙏🏻🙏🏻பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர்

🌺🌺🌺தேவாரப்பதிகம்

ஆடிஅசைந்து அடியாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்த பொருளெலாம் உமையாளுக்கோ மாட மதிலணி கோபுரம் மணி மண்டபம் மூடி முகில்தவழ் சோலை சூழ் முதுகுன்றரே.

-சுந்தரர்.

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 9 வது தலம்.

திருவிழா:

பிரம்மோற்சவம் – மாசி மாதம் – 10நாட்கள் 9 வது நாள் தேர் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாக இது இருக்கும். ஆடிப்பூரம் – 10நாட்கள் திருவிழா – அம்பாள் விசேசம் – திருக்கல்யாணம் – கொடி ஏற்றி அம்பாள் வீதி உலா – ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர் வசந்த உற்சவம் – வைகாசி மாதம் -10 நாட்கள் திருவிழா ஆனித்திருமஞ்சனம்,ஆருத்ரா தரிசனம் , கந்தர் சஷ்டி, சூரசம்காரம் ஆகியவையும் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் பெரியநாயகருக்கும்(உற்சவர்) சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது. பௌர்ணமி அம்மாவாசை மற்றும் பிரதோச நாட்களில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. தல விருட்சம் வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட முக்தி நிச்சயம். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படை வீடாகும். காளஹஸ்தியில் உள்ளது போல, இவர் 18 படியிறங்கி சென்று தரிசிக்கும்படி அமர்ந்துள்ளார். இந்த ஆழத்து விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர். ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 220 வது தேவாரத்தலம் ஆகும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

👉👉👉முகவரி:

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாசலம் – 606 001, கடலூர் மாவட்டம்.

பொது தகவல்:

28 லிங்கங்கள்: சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார்.

இந்த லிங்கங்கள் கோயிலின் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

28 ஆகமங்களுக்குரிய பெயர்களான காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

விருத்தாச்சலம் பெயர்காரணம் : “விருத்த’ என்றால் “முதுமை’ என்றும் “அசலம்’ என்றால் “மலை’ என்றும் பொருள்படும். எனவே “விருத்தாசலம்’ என்றால் “பழமலை’ என்பது கருத்தாகிறது.தேவாரத்திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று போற்றப்படுகின்றது.

பிரார்த்தனை

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.

இத்தலத்து துர்க்கையம்மனை வழிபடுவோர்க்கு கல்யாண வரம் கைகூடப் பெறுகிறது.மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

ஞாயிறு அன்று ராகு கால வேளையில் வடைமாலை சாத்தி இத்தலத்து பைரவரை வணங்கினால் அடுத்தடுத்து வரும் இடர்கள் துன்பங்கள் தூளாய்ப் போய்விடும்.

இத்தலத்து பெருமானை வழிபட்டால் இம்மைபயன்களும், மறுமையபயன்களும் கிடைக்கும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். முத்தாநதியில் நீராடினால் சித்தி பெறுவதுடன் முக்தியும் கிட்டும் என்று புராண நூல்கள் கூறுகின்றன.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.

தலபெருமை:

சக்கரங்கள் அமைந்த முருகப்பெருமான் : ஈசன் சன்னதிக்கும் விருத்தாம்பிகை சன்னதிக்கும் இடையில் அமைந்து உள்ளது 28 சிவலிங்கங்களுடன் உடனுறையும் முருகன் வள்ளி தெய்வானை காட்சியாகும். முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலக்காட்சியும் 28 சிவலிங்கங்கள் ஆகம விதிப்படி அமையப்பெற்று அனைவராலும் வணங்கப்பட்டு வருவது மிகவும் சிறப்பிற்குரியதாகும். நின்ற திருக்கோலத்தில் உள்ள முருகப்பெருமானின் உடனுறைக்கு மேலே சக்கரங்கள் அமைந்தது எல்லா வளமும் கிட்டும் என்பதை நினைவுறுத்துகின்றன. இது போல சக்கரங்கள் அமைந்திருப்பது சில திருத்தலங்களில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாமே ஐந்து: இக்கோயிலில் எல்லாமே ஐந்துதான்.

ஐந்து மூர்த்தங்கள்: விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்.

இறைவனின் ஐந்து திருநாமம்: விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி.

ஐந்து விநாயகர்: ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி.

இறைவனை தரிசனம் கண்ட ஐவர்: உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.

ஐந்து கோபுரம்: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.

ஐந்து பிரகாரம் (திருச்சுற்று): தேரோடும் திருச்சுற்று, கைலாய திருச்சுற்று, வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று.

ஐந்து கொடிமரம்: இந்த கொடி மரங்களின் முன்புள்ள நந்திகளுக்கு இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று பெயர்.

ஐந்து உள் மண்டபம்: அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம்.

ஐந்து வெளி மண்டபம்: இருபது கால் மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம்.

ஐந்து வழிபாடு: திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்.

ஐந்து தேர்: விநாயகர் தேர், முருகன் தேர், பழமலை நாதர் தேர், பெரியநாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர்.

தலத்தின் ஐந்து பெயர்: திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி.

முத்தா நதியில் பொன் : ஒருமுறை, சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர விழவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாகச் சென்றார். இத்தலம் வரும் போது இறைவன் சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னைத் தந்தார். திருவாரூர் செல்லும் வழியில் கள்வருக்கு பயந்து, இந்த பொன் அனைத்தையும் இங்குள்ள மணிமுத்தா நதியில் போட்டு விட்டு இறைவனின் அருளால் திருவாரூர் குளத்தில் மூழ்கி எடுத்தார். இதை அடிப்படை யாகக் கொண்டே, “ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது போல்’ என்ற பழமொழி தோன்றியது.இறைவன் தந்த பொன் மாற்றுக்குறையாத தங்கம்தானா என்று சுந்தரர் மனம் அலைபாய்ந்ததை உணர்ந்த இறைவன் நம்பிக்கைக்காக தும்பிக்கை நாயகனை சாட்சியாக அமைத்து பொன்னை மாற்றுறைத்து காட்டினார். திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்ளவும் செய்தார். எனவேதான் இத்தலத்தில் உள் சுற்று பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயக பெருமான் மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயரோடு விளங்குகிறார்.

முருகன் சிவனை பூஜித்த தலம் இது. இறைவனது அருளால் சுந்தரர் பெற்ற பன்னீராயிரம் பொற்காசுகளை கள்வருக்கு பயந்து இந்நதி(மணிமுத்தா)யில் போடப் பெற்று பின்னர் திருவாரூர் குளத்தில் கிடைக்கப் பெற்றாராம். விபசித்து முனிவரால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில் முதுகுன்றத் திருக்கோயில் ஆகும். மணி முத்தா நதிக்கரையில் அமைந்த முதுகுன்றம் என்பதுதான் பழமலை ஆகும். மற்ற சிவ தலங்களில் துர்க்கை அம்மன் சிவன் கோயிலில் ஆட்சி செய்வதாக அமைந்தி ருக்கும். ஆனால் இந்த முதுகுன்றத்தில் துர்க்கை உமையவளான விருத்தாம் பிகையின் வடக்கு பக்கத்தில் நின்ற கோலத்தில் இருந்து அருளாட்சி செய்வது சிறப்பு வாய்ந்தது ஆகும்.

ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக் காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர். இங்குள்ள அர்த்த மண்டபத்தில் 4 வேதங்களே 4 தூண்களாக அமைந்துள்ளன. தல விருட்சம் வன்னிமரம் 3ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் திருப்பணி செய்த விபசித்த முனிவர், தன் வேலையாட்களுக்கு சம்பளமாக இம்மரத்தின் இலைகளை பறித்து தருவார். அது அவரவர் உழைப்புக்கு ஏற்ப பொற்காசுகளாக மாறிவிடுமாம்.

இத்தல தீர்த்தமான மணிமுத்தாறு நதியில், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கிவிடுவதாக தல புராணம் சொல்கிறது. பெரியநாயகி யம்மை பதிகம், க்ஷேத்திரக் கோவை வெண்பா, பழமலை நாதர் அந்தாதி, பெரியநாயகி விருத்தம், கலித்தொகை, பிட்சாடன நவமணி மாலை, குருதரிசனப்பதிகம், பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்களும் இத்தலத்திற்குரியது. கர்நாடக மன்னன் இத்தலம் வந்த போது பசியால் வாடினான். அப்போது பெரியநாயகி இளமை வடிவெடுத்து பாலூட்டி அவனுக்கு குமார தேவர் என்று பெயர் சூட்டினாள்.

முக்திதலம் : காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இத்தலம் “விருத்தகாசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் “காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி’ என்ற பழமொழி கூட உண்டு. இத்தலத்தில் இறக்கும் உயிர்களை அன்னை விருத்தாம்பிகை தன் மடியில் வைத்து, தன் புடவைத் தலைப்பால் விசிறி அவைகளின் பாவங்களை விலக்குகிறாள். சிவபெருமான் அருகே அமர்ந்து கொண்டு, உயிர்கள் மோட்சம டைவதற்காக “நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கிறார் என தலபுராணம் கூறுகிறது.

பாலாம்பிகை : யுகம் கண்ட தலமான இங்குள்ள அம்மனின் திருநாமம் விருத்தாம் பிகை. ஒருமுறை திருவண்ணா மலையிலிருந்து சிதம்பரம் செல்ல வந்த குரு நமச்சிவாயர், இத்தலத்தில் இரவு தங்கினார். அப்போது அவருக்கு பசி ஏற்பட்டது. பசியை போக்க, இத்தல பெரியநாயகியிடம் சோறு வேண்டி, “கிழத்தி’ என்ற சொல் வரும்படி ஒரு பாடல் பாடினார். இதைக்கேட்ட பெரியநாயகி கிழவி வேடத்தில் அங்கு வந்து, “”கிழவி எவ்வாறு சோறு கொண்டு வர முடியும்? இளமையுடன் இருந்தால் தான் நீ கேட்டது கிடைக்கும்,”என கூறி மறைந்தாள். இதைக்கேட்ட குரு நமச்சிவாயர்,”அத்தன் இடத்தாளே, முற்றா இளமுலை மேலார வடத்தாளே சோறு கொண்டு வா”என பாடினார். இந்த பாட்டில் மயங்கிய அம்மன் இளமைக்கோலத்துடன் அவருக்கு காட்சி கொடுத்து சோறு போட்டாள். அன்று முதல் “பாலாம்பிகா’ என்ற பெயர் இவளுக்கு ஏற்பட்டது.

இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். குமார தேவர், குருநமச்சிவாயர், சிவப்பிரகாசர், ராமலிங்க அடிகளார் ஆகியோரும் பாடியுள்ளனர்.

முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படை வீடாகும்.

தல வரலாறு:

அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இத்தலம் பழமலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் “விருத்தாசலம்’ என வடமொழி சொல்லால் அழைக்கப்பட்டது. “விருத்தம்’ என்றால் “பழமை’. “அசலம்’ என்றால் “மலை’. காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலை வடிவில் தான் தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.

இத்தலம் முன்பொரு காலத்தில் குன்றாக இருந்ததாம்.விபசித்து முனிவர் முத்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோயிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று திருப்பணி செய்யும் பேறு பெற்றார்.இத்திருக்கோயிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோயிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்க அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்றும் மரபுவழியாகப்பேசப்பட்டு வருவதாகும்.இந்த வன்னிமரம் 1700 ஆண்டுகளுக்கு முன்பானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இத்தலத்து ஈசனான முதுகுன்றப்பெருமானை பாட மறுத்துச் சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாட வைத்து பன்னீராயிரம் பொன் கொடுத்ததோடு அல்லாமல் “மணி முத்தா நதியில் அவற்றை போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள்’ என்று சொல்ல சுந்தரர் பொன்னை பெற்றுக் கொண்டார் என்பது தலவரலாற்றுச் செய்தி.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

சிவபெருமானுக்கு நாம் படைக்கும் நைவேத்திய பொருட்களால் கிடைக்கும் நன்மைகள்

சிவபெருமானுக்கு நாம் படைக்கும் நைவேத்திய பொருட்களால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-*

1. தயிர் சாதம், நீர் மோர் - மூல பவுத்திரம், எலும்புருக்கி நோய் தீரும்.
2. பால், சர்க்கரைப் பொங்கல் - வயிற்று கோளாறு தீரும்.
3. தேன், திணை மாவு - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
4. தயிர் சாதம் - காரியத் தடை நீங்கும்.
5. எலுமிச்சை, தேங்காய் சாதம் - அடிவயிற்றில் இருந்து தொடை வரை உள்ள நோய்கள் தீரும்.
6. வெண்பொங்கல், கடலை, சுண்டல்-ஆஸ்துமா, மூச்சு சம்மந்தமான நோய் தீரும்.
7. பங்குனி மாத பிரதோஷத்தன்று தேங்காய் சாதம், தக்காளி சாதம்- மணக்கிலேசம், பித்தம், பைத்தியம் தீரும்.

சிவலிங்க வழிபாடும், பலன்களும்

தர்ப்பைப் புல் லிங்கம் - லட்சுமி கடாட்சம்
ஆற்றுமணல் லிங்கம் - மோட்சம்
வெண்ணெய் லிங்கம் - நல்வாழ்வு
அரிசிமாவு லிங்கம் - சிறப்புகள் சேரும்
அன்ன லிங்கம் - தீர்க்காயுள்
களிமண் லிங்கம் - மனச்சாந்தி
பசுஞ்சாண லிங்கம் - ஆரோக்கியம்

சிவபூஜைக்குரிய மலர்கள்- பலன்கள்

செந்தாமரை- தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி
* மனோரஞ்சிதம், பாரிஜாதம்-பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி
* வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி-மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.
* மாசிப்பச்சை, மரிக்கொழுந்து-நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.
* மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி-கடன் நீங்கும் கன்னியருக்கு திருமண பாக்கியம் ஏற்படும்.
* செம்பருத்தி, அடுக்கு அரளி- புகழ், தொழில் விருத்தி.
* நீலச்சங்கு-அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.
* வில்வம் கருந்துளசி, மகிழம்பூ- சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைக்கூடும்.
தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம்.
ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.
குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்க கூடாது.

சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும்

சித்திரை-பலாசம்,
வைகாசி-புன்னை,
ஆனி- வெள்ளெருக்கு,
ஆடி-அரளி,
ஆவணி-செண்பகம்,
புரட்டாசி- கொன்றை,
ஐப்பசி-தும்பை,
கார்த்திகை-கத்திரி,
மார்கழி-பட்டி,
தை- தாமரை,
மாசி- நீலோத்பலம்,
பங்குனி-மல்லிகை.

மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.

சித்திரை-மரிக்கொழுந்து.
வைகாசி-சந்தனம்,
ஆனி-முக்கனிகள்,
ஆடி-பால்,
ஆவணி-நாட்டுச்சர்க்கரை,
புரட்டாசி- அப்பம்,
ஐப்பசி-அன்னம்,
கார்த்திகை-தீபவரிசை,
மார்கழி-நெய்,
தை-கருப்பஞ்சாறு,
மாசி-நெய்யில் நனைந்த கம்பளம்,
பங்குனி- கெட்டித்தயிர்...

Saturday, August 27, 2022

*************************************ஏன் விநாயகப்பெருமானுக்கு வழிபாட்டில் முதன்மையும் முக்கியத்துவம் தருகிறோம்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்:  5
***************************************
ஏன் விநாயகப்பெருமானுக்கு வழிபாட்டில் முதன்மையும் முக்கியத்துவம் தருகிறோம் 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
🌹தத்துவங்கள் தோன்றும் முறையில் முதற்கண் சுத்தமாயையில் இருந்து `ஓம்` என்ற பிரணவ நாதமே தோன்றியது. 

பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால் `பிரணவன்' என்றும் `மூத்த பிள்ளையார்' என்றும் அறியப்படுகின்றது. 

'ஓங்கார நாத தத்துவம்` சிவனையும் சுட்டி நிற்பதால் சிவனும், பிள்ளையாரும் ஒன்றேயென்றும் கொள்ளமுடிகின்றது.

🌹பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன், பிரணவநாதன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். 

ஓம் என்ற பிரணவ மந்திர ரூபியான அவர் ஞானமே வடிவானவர். அவரது திருமேனி யை ஒரு தத்துவ வித்தென ஆன்றோர் விஸ்தரித்துள்ளனர். 

அவருடைய இரு திருவடிகளிலே வலது திருவடியை "முற்றறிவு'' அதாவது `ஞான சக்தி' என்றும், இடது திருவடியை "முற்றுத் தொழில்'' அதாவது `கிரியாசக்தி' என்றும் உணர்த்தப்படுகின்றது.

🌹அவ்விரு திருவடிகளின் துணையின்றி உயிர்கள் ஒன்றினை அறிந்து கொள்ள வோ, செயலாற்றவோ முடியாது. 

எல்லா பொருட்களையும் ஆகாயம் தன்னு ள் அடக்கவும், உண்டாக்கவும், விரிக்கவும், ஒடுக்கவும் கூடிய தன்மையைக்கொண்ட பரந்து விரிந்ததொரு பூதம். 

ஆகாயம் போ லவே சகலவற்றையும் உள்ளடக்கியதாக வே அவரது பேருந்தி காட்சி கொடுக்கின்றது.

🌹படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களை யும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற் றுகின்றார் எனப்படுகின்றது. 

ஐந்து கரு மங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு `ஐங்கரன்' என்ற நாமம் விளங் குகின்றது. அவரை `பஞ்ச கிருத்திகள்' என்றும் கூறுவர்.

🌹அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன. 

வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு "பாச ஞானத்தையும்` இடது பக்கமுள்ள கொம்பு "பதிஞானத்தையும்` உணர்த்துவதாக உள்ளன. 

விநாயகரின் அடிக்கீழ் மூஷிகம் அழுந்தி அமைதியாகக் காணப்படுவதை, பிரணவ மூர்த்தியின் அடிக்கீழ் ஆணவ மலம் வலிகெட்டு அமைதி காக்கும் என்பதை விளக்குகின்றது.

🌹அவரது உந்தியைச் சுற்றியுள்ள சர்ப்பம் `குண்டலினி சக்தியின்' வடிவம் என்பர். அதன் விரிவுகளும், சுருக்கங்களுமே பிரப ஞ்சத்தின் தோற்றம், சுருக்கம் எனப்படுகி ன்றது. 

அதை அவர் உந்தியில் அணிந்திருப்பதா னது, உலகிற்கு நிமித்த காரணர் அவர் தாம் என்பதையும் உணர்த்துகின்றது. 

மேலும் விநாயகர் முக்கண் உடையவரெ னவும் விளக்கப்பட்டுள்ளது. முக்கண்ணு டைய பெருமை சிவனுக்கே உரியது.

🌹ஆயினும் கிரியா வழி, ரூப வழி நோக்கு மிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். 

மேலும், விநாயகருக்கு `சித்தி', `புத்தி' என இரு சக்திகள் உள்ளதாகவும் புராணங்க ளில் பேசப்படுகின்றது.

🌹விநாயகரின் வலது முன்கை அபய முத்திரையக் காட்டும், வலது பின்கையில் மழுவாயுதமும், இடது முன்கையில் மோத கம் அல்லது மாதுளம்பழம் வைத்திருப்பது போலவும், இடது பின்கையில் பாசக் கயிறோ அல்லது செந்தாமரை மலரோ கொண்டிருப்பது போலவும் சித்தரிக்கப்ப டுகின்றது. துதிக்கையில் நீர்க் கலசம் ஜகமண்டலம் ஒன்றை ஏந்தியிருப்பார்.

🌹செம்பட்டு வஸ்திரத்தையே அணிந்திரு ப்பார். விநாயகருக்கு உகந்த முக்கிய நிவேதனப் பொருட்கள் மோதகம், கொழுக் கட்டை பஞ்சாமிர்தம், தேங்காய், அப்பம், அவல், பொரி, கரும்பு, சர்க்கரை முதலிய னவாகும். செம்மலர்கள், அறுகம் புல் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரை அர்ச்சிப்பது மிகச் சிறந்தது.

🌹உலகிலுள்ள சைவ மக்கள் எதையாவது எழுதத் தொடங்கும் பொழுதும், எழுதும் தாளின் தலைப்பில்முதலாவதாக பிள்ளை யார் சுழி எழுதிய பின்னரே விடயத்தை எழுதத் தொடங்குவர்.

பிள்ளையார் சுழி `ள' என்ற ஒரு வட்டமும் ஒரு கோடும் இணந்து இருக்கும். இதற்கு ஒரு தத்துவம் உண்டு, புஜ்ஜியமன வட்டத் தை `0' பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டை நாதம் என்றும் கொள்கின்றனர்.

🌹எனவே பிள்ளையார் சுழியை `நாத பிந்து' என்பர். பிள்ளையாருடன் சிவசக்தி யின் இணைப்பை இது உணர்த்துவதாக உள்ளதெனக் கூறப்படுகின்றது. 

எந்த ஒரு கருமத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்ன ரே ஆரம்பிக்கும் வழக்கம் சைவ மக்களி டையை காலாதிகாலமாக நிலவிவருகின் றது. 

அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய் கருமம் இடையே எதுவித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்க ளின் நம்பிக்கை .

விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி...

Friday, August 26, 2022

#விநாயகர்_சதுர்த்தி_விரதம் #இருப்பது_எப்படி?

*#விநாயகர்_சதுர்த்தி_விரதம் #இருப்பது_எப்படி?*
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வருகிற வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி நாளைத் தான் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். பார்வதி தேவியே கடைப்பிடித்த மகிமை மிக்க விரதம் இந்த விநாயகர் சதுர்த்தி விரதம்.

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, பூஜையறையில் கோலமிட்டு தலைவாழை இலை ஒன்றைப் விரித்து வையுங்கள். இலையின் நுனி, வடக்கு பக்கம் பார்த்து இருக்கட்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி, பச்சரிசியின் மீது களிமண்ணால் செய்த பிள்ளையாரை வையுங்கள். களிமண்ணாஅல் செய்த பிள்ளையார் தான் விசேஷம். அருகம்புல், எருக்கம்பூ போன்றவற்றை பிள்ளையாருக்கு சாத்துங்கள். பின், சந்தனம், குங்குமம் வைத்து, விளக்கேற்றி, ஊதுபத்தியைக் கமழச் செய்யுங்கள்.

உங்களுக்குத் தெரிந்த விநாயகர் துதிகளைச் சொன்னபடியே வசதிக்கு ஏற்ற நிவேதனப் பலகாரங்களைச் செய்யுங்கள். பலகாரங்கள் தவிர, அவல், பொரி, கடலை, தேங்காய், விளாம்பழம், நாவற்பழம் போன்றவையும் விநாயகருக்கு விருப்பமானவை தான். நல்ல நேரத்தில் பிள்ளையாருக்கு தூப, தீபம் காட்டி, தெரிந்த துதிகளைச் சொல்லி பூஜித்து நிவேதனம் செய்யுங்கள்.

*அன்று இரவு அவசியம் மறக்காமல் வானத்தில் சந்திரனைப் பாருங்கள். சதுர்த்தி நாட்களில் நிலவைப் பார்ப்பது கூடாது என்பார்கள். ஆனால் பிள்ளையார் சதுர்த்தியன்று மட்டும் அதில் விதிவிலக்கு உண்டு. அன்றைய தினம் சந்திரனைப் பார்த்தால் தான் விநாயகர் வழிபாட்டின் பூரண பலன்கள் கிட்டும் என்கிறது பார்க்கவ புராணம்.* தும்பிக்கையுடையவனை நம்பிக்கையுடன் துதித்தால், அவன், நீங்கள் வேண்டுவன யாவும் கிட்டச் செய்வான்.

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

இதைவிடச் சுருக்கமாக மகாபாரதம் சொல்ல முடியுமா?  இது, என் மனதை தொட்ட ஒரு பதிவு
 
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? 
 
பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாகக் கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான். 
 
‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட இரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா? 
 
கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்குப் பார்த்தசாரதியாகத் தேர் ஒட்டினாரா?’  
 
பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன. 
 
அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், 
 
“உன்னால் ஒரு போதும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான். 
 
புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே 
காவி உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது. 
 
“குருக்ஷேத்திரப்  போரைப்  பற்றித் தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்தப்  போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்து கொள்ளாமல் நீ அந்தப்  போரை அறிந்து கொள்ளமுடியாது.” 
 
“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” – சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண். 
 
“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம்.  
 
அதைத் தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்

அந்தக் காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார். 
 
“அது என்ன தத்துவம் ஐயா?  
 
எனக்குக் கொஞ்சம் விளக்குங்களேன்…” 
 
“நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்” 
 
“பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்!!!!  
 
கௌரவர்கள் யார் தெரியுமா?” 
 
“இந்த ஐந்துபுலன்களைத் தினந்தோறும் தாக்கித் தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்!!!” 
 
“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா? 
 
“முடியும்…! எப்போது தெரியுமா?” 
 
வருண் மலங்க மலங்க விழித்தான். 
 
“கிருஷ்ண பரமாத்மா உன் தேரைச் செலுத்துவதன் மூலம்.” 
 
வருண் சற்றுப் பெருமூச்சு விட்டான். 
 
பெரியவர் தொடர்ந்தார். 
 
“கிருஷ்ணர் தான் உன் மனச்சாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.” 
 
வருண் பெரியவர் சொல்வதைக் கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்குத் தோன்றியது. 
 
“கௌரவர்கள் தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காகப் போரிடுகிறார்கள்?” 
 
“வேறொன்றுமில்லை…. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது.  
 
நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படிக் கிடையாது. 
 
அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய். 
 
எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்குத் தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும்.” 
 
“மேலும் அவர்கள் உன் நன்மைக்காகப் போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.  
 
இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.  
 
கீதையின் பாடமும் இது தான்.” 
 
வருண் உடனே மண்டியிட்டுத் தரையில் அமர்ந்தான்.  
 
களைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட பிரமிப்பினால். 
 
“அப்போது கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது. 
 
“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே. 
 
உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன். 
 
ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்குப் போக்குச் சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.” 
 
“நான் சொல்வது உண்மை தானே? தீயவற்றுக்குத் துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…?” 
 
வருண் “ஆம்…” என்பது போலத் தலையசைத்தான். 
 
இப்போது தரையைப் பார்த்தான். 
 
அவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கித் தலைநிமிர்ந்து மேலே பார்த்தான்.  
 
அந்த காவிப்பெரியவரைக் காணவில்லை. 
அவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார். 
 
மிகப் பெரிய உண்மை.

💐💐🙏🙏 
படித்ததில் பிடித்தது மட்டுமல்ல
யோசிக்க வைத்ததும் கூட 🙏

Wednesday, August 24, 2022

தாலியைக் காணிக்கையாகப் பெற்று மாங்கல்ய பலம் அருளும் திருவேற்காடு கருமாரியம்மன்

திருவேற்காடு கருமாரியம்மன் மூலவர் !

தாலியைக் காணிக்கையாகப் பெற்று மாங்கல்ய பலம் அருளும் திருவேற்காடு கருமாரியம்மன்!

'பாம்பே தலையணியாம், வேப்பிலையோ பஞ்சு மெத்தை' என அம்மன் தாலாட்டில் விவரிக்கும் திருவேற்காடு கருமாரியம்மன்  திருக்கோலம் அப்படியே காண வேண்டுமா? அப்படியானால் நீங்கள் திருவேற்காடுக்குத்தான் வரவேண்டும். ஆம், மிகப்பெரிய புற்றில் கருநாகமாக அன்னை குடி கொண்டு இருந்ததும், வேம்பு வடிவமாகவே சக்தி உருமாறி நின்றதும் இங்குதான். அருள் பொழிய நாகமும், மருந்தாக வேம்பும் இங்கே காட்சி தருவது அற்புதமான காட்சி. வாருங்கள் வேற்காட்டு மாரியை விழி விரிய தரிசிப்போம்.

1. மாரி என்றால் மழை போன்றவள். கருமாரி என்றால் கரியநிறத்து மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள். க - கலைமகள்; ரு - ருத்ரி; மா - திருமகள்; ரி - ரீங்காரி (நாத வடிவானவள்) என இந்த அம்மனின் நான்கு அட்சரங்களுக்கும் பொருள் கூறுகிறது தலவரலாறு.

2. சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில் கருமாரியம்மனின் ஆலயம் அமைந்துள்ளது. வேலமரக்காட்டில் அன்னை இருந்ததால் வேற்காடு எனப் பெயர் உருவானது.

3. மூலவரான அன்னை சுயம்புவாக சாந்தசொரூபியாக காட்சி அளிக்கிறாள். இவளுக்குப் பின்பு இருக்கும் அம்மன் கத்தி, சூலம், டமருகம், கபாலம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும்படி காட்சி தருகிறாள்.

4. பிராகாரத்தில் இருக்கும் உற்ஸவ அம்மன் ஊஞ்சலில் அழகுடன் காட்சி தருகிறாள். மேலும் இங்குள்ள மரச்சிலை அம்மன் சிறப்பானவள். இவளுக்கு ரூபாய் நோட்டு மாலையாக அணிவிக்கப்படுகிறது. இவளை வேண்டினால் செல்வவளம் பெருகும்.

5. அரச மர விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத முருகர், பிரத்யங்கரா தேவி, நவகிரகம், சீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, காயத்ரி, மஹாலக்ஷ்மி, அங்காளம்மன், சாவித்ரி, துர்கை, ராஜராஜேஸ்வரி எனப் பல தெய்வங்களின் சந்நிதிகள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன.

6. கருமாரியம்மனின் அருளை நாடி வரும் பக்தர்களுக்குத் திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் போன்ற பல பலன்களை அள்ளித் தருகிறாள்.

7. சகல நோய்களையும் தீர்க்கும் அம்மனின் பிரசாதமான வேப்பிலையை மக்கள் பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். தீர்த்தமும் வேப்பிலையும் தீராத நோய்களைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. வேப்பிலையும் பிரம்பும் கொண்டு இங்கு மந்திரிக்கப்பட்ட மக்கள், எந்த பயமும் இன்றி மகிழ்ச்சி கொள்கிறார்கள். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள புற்றில் பால் ஊற்றினால் தோஷங்கள் விலகுகின்றன.

8. திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிஷேகம், உப்பு காணிக்கை, மாலை அணிவித்தல், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், கல்யாண உற்ஸவம், பொங்கல் வைத்தல், அக்கினி சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கண்ணடக்கம், வெள்ளிக்காணிக்கை என இந்தக் கோயிலில்தான் எத்தனை எத்தனை வேண்டுதல் முறைகள்! வந்து பார்த்தால் பரவச அனுபவத்தை நீங்கள் கட்டாயம் பெறுவீர்கள்.

9. ஒருமுறை சூரிய பகவான் சக்தியை அவமதித்ததால், கோபம் கொண்ட சக்தி அவனை சபித்து இருளாக்கினாள். பின்னர் கோபம் தணிந்த அன்னை சூரியனின் வேண்டுகோளுக்காக இந்த தலத்தில் அமர்ந்து சூரியனின் பூஜையைப் பெறுகிறாள் என்று தலவரலாறு கூறுகிறது. புற்றில் வாழ்ந்த நாகம் ஒன்று அம்மனின் அருட்காட்சியைக் காட்டியதால் இங்கு கோயில் உருவானதாகக் கூறுகிறார்கள்.

10. புற்றில் இருந்த அம்மன் சுயம்புவாக வெளியானதால் கருவில் இல்லாத கருமாரி அன்னை என்று போற்றப்படுகிறாள்.

11. ஆடி மாதம் தொடங்கி புரட்டாசி வரையிலான 12 வரங்களும் இங்கு அம்மனுக்கு சிறப்பான பண்டிகை நாள்கள். மேலும் தை மாத பிரம்மோற்ஸவம், அமாவாசை, சித்ரா பௌர்ணமி, நவராத்திரி என எல்லா மாதங்களுமே அம்மனுக்கு இங்கு விழா நாள்கள்தான்.

12. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருக்கோயிலான வேதபுரீஸ்வரர் - பாலாம்பிகை ஆலயமும் அருகிலேயே உள்ளது. அகத்தியருக்குத் திருமணக் காட்சி அருளிய தலம் இது.

13. அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த தலம் திருவேற்காடு.

14. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் பக்தர்களுக்கு ஒரு ஆன்மிக மருத்துவமனையாகவே விளங்கி வருகிறது,

15. இந்த ஆலயத்தில் இருக்கும் 'பதி விளக்கு' அணையாத விளக்கு. அம்மனையும், இந்த விளக்கையும் தரிசித்தால் மாங்கல்ய பலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

16. தன்னை நம்பி வரும் பெண்களுக்கு மாங்கல்ய வரமளித்து, அவர்களை சுமங்கலியாக வாழ வைக்கும் இந்த அம்மனுக்கு தாலிகளே அதிகம் காணிக்கையாக அளிக்கப்படுகிறது. செவ்வாய் தோறும் இங்கு காலை 10 மணியளவில் செய்யப்படும் மாங்கல்ய தோஷ பரிகார பூஜை சிறப்பானது.

எல்லா ஞாயிற்றுக்கிழமையும் இங்கு சிறப்பான நாளாக இருந்து வருகிறது. அருள் சுரக்கும் அம்மனின் அற்புதத்தைக் காண வேண்டும் என்றால் நீங்கள் இங்கு வந்தால்தான் இயலும். அம்மாவைத் தேடி வரும் பிள்ளைகளாக இங்கு நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் பெருகி வருகிறது. அதில் நீங்களும் ஒருவராக இருந்து அருளாசியைப் பெற்று வாருங்களேன்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Monday, August 22, 2022

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில் தான் கோயில்கள் இருக்கும்.

🔱 அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே  சிவத்துடன் வாழ்வோம் 🌹🙏🌹

 🔱🌹இனிய ஈசன் அருளுடன் படித்து விட்டு கோவில்களுக்கு நாம் ஏன்  செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்*

 
🌿1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில் தான் கோயில்கள் இருக்கும்.

🌿2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

🌿3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலை தான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.

🌿4. இந்த இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.

🌿5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

🌿6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..

🌿7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்று பாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.

🌿8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

🌿9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும். அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.

🌿10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜🦚🦚🦚

🌿11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யப்படும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..

🌿12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.

🌿13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

🌿14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

🌿15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.

🌿16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.

🌿17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.

🌿18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானத்திற்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

🌿19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும்.

🌿20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வரப்பழகுவோம் ..

குழந்தைகளையும் பழக்குவோம் …

அது அறிவியல் ஆகட்டும், இல்லை எதுவாகினும் ஆகட்டும்.

*இறை சக்தி நம்மை காக்கட்டும் … நன்றி ….*

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள்

உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தைக்கு ஆத்ம நமஸ்காரங்கள்🙏

அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜🦜🙏

பட்டிணத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய 10 பாடல்கள்

பட்டிணத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய 10 பாடல்கள்

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.

அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி ?

2.முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும் அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன் ?

3. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டு வேன் ?

4. நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்தி பகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ மெய்யிலே தீமூட்டுவேன் ?

5. அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே என அழைத்த வாய்க்கு ?

6.அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன் மகனே என அழைத்த வாய்க்கு ?

7. முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில் அன்னை இட்ட தீ அடிவ யிற்றிலே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

8. வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக் குருவிபறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை

9. வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும் உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்துஎன் தன்னையே ஈன்றெடுத்த தாய் ?

10. வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள் நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் - பால்தெளிக்க எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்.

ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.

🌹 🌿 தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் 
🌹 🌿 திருவாரூரில் தியாகராஜர் 
🌹 🌿 திருநெல்வேலியில் நெல்லையப்பர் 
கோமதி அம்மன் சங்கரநாராயணன் சங்கரன்கோவில்
🌹 🌿 திருவையாறில்
ஐயாறப்பர் 
🌹 🌿 திருவண்ணாமலையில் அண்ணாமலையார் 
🌹 🌿 திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர் 
🌹 🌿 திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் 
🌹 🌿 திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்
🌹 🌿 திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் 
🌹 🌿 திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர் 
🌹 🌿 திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் 
🌹 🌿 திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர் 
🌹 🌿 திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர் 
🌹 🌿 திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர் 
🌹 🌿 திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்
🌹 🌿 திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர் 
🌹 🌿 திருச்சியில் தாயுமானவர் 
🌹 🌿 திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர் 
🌹 🌿 திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் 
🌹 🌿 திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர் 
🌹 🌿 திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர்
🌹 🌿 திருக்கண்ணபுரத்தில் ராமநாதர்
🌹 🌿 திருமழபாடியில் வைத்தியநாதர் 
🌹 🌿 திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர்
🌹 🌿 திருப்புனவாசலில் விருத்தபுரீஸ்வரர் 
🌹 🌿 திருவண்டுதுறையில் வண்டுறைநாதர்
🌹 🌿 திருமாணிக்குழியில் வாமனபுரீஸ்வரர் 
🌹 🌿 திருவாளப்புத்தூரில் மாணிக்கவண்ணர் 
🌹 🌿 இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில் , ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.
🌹 🌿 'த' வரிசையில் ஒரு பாதி ஊர்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். இதற்கே மூச்சு வாங்குது.
🌹 🌿 இன்னும் மயிலாப்பூரில் காபாலீஸ்வரர் , சிதம்பரத்தில் நடராஜர் , வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதன், மேலகோட்டையுரில்  கோமதிஸ்வர் என ஆரம்பித்தால் பதிவு நீண்டு கொண்டே இருக்கும்.
🌹 🌿 தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63. 
🌹 🌿 ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.
🌹 🌿 தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.
🌹 🌿 எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு , இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.
🌹 🌿 இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர். வாழ்க தமிழர்களின் புகழ்.
🌹🌿நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் அரன் நாமம் சூழ்க
====

Sunday, August 21, 2022

சொக்கனை சுமக்கும் ரிஷபம்

🙏**சிவமே தவம்
தவமே சிவம்**🙏

சிவ
நம்பிக்கையும்

அறியாமையும்

சிவபெருமானை பற்றி
ஏதுமறியாமல் இருப்பது 

"அறியாமை"
அல்ல.

நம் தேவைக்காக

நான் கேட்டவுடன் சிவபெருமான் 
ஒன்றுமே செய்யவில்லை
என்று

கண்டதெற்கெல்லாம் கவலைப்பட்டு 
சிவபெருமான் மேல் வெறுப்புணர்சியோடு
காலத்தையும், வாழ்வையும்
வீணாக்குவதுதான் 

"அறியாமை"

சிவபெருமானுக்கு ஓர் வில்வம் வைத்து வழிபட்டாலே போதும் 

🙏இது சிவநம்பிக்கை🙏

சிவனார் திருமேனிக்கு பல பூக்களுடன்
மாலையிட்டால் தான் அது உண்மையானது என நினைத்தால் 

**அது அறியாமை**

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவபெருமானுக்கு 
 நீரை அபிடேகம் செய்தால் 

🙏இது சிவநம்பிக்கை🙏

சிவனார் திருமேனிக்கு பாலாபிஷேகம் செய்தால் தான் அது சிறந்தது என நினைத்தால் 

**அது அறியாமை**

சிவபெருமானுக்கு ஓர் வாழைப்பழம் வைத்து வழிபட்டால் 

🙏இது சிவநம்பிக்கை🙏

சிவபெருமானுக்கு பல வகையான பழங்கள் 
வைத்து வழிபட்டால்தான்  
சிறந்தது என நினைத்தால் 

**அது அறியாமை** 

சிவபெருமானுக்கு வில்வம் கலந்த நீரை அபிடேகம் செய்தால் 

🙏இது சிவநம்பிக்கை🙏

சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் தான்  சிறந்தது என நினைத்தால்
 
**அது அறியாமை**

சிவபெருமானை நினைத்து மனமுருகி விண்ணப்பம் வைத்து நான் நன்கு படிக்க வேண்டும் என தொடர்ந்து படித்தால்  

 🙏இது சிவநம்பிக்கை🙏

சிவபெருமான் முன்பு பூசை செய்து
 நோட்டு புத்தகம், பேனா வைத்து வேண்டிக் கொண்டால்தான் அது உடனே அதிகமாக மதிப்பெண்கள் கிடைக்கும்  என நினைத்தால் 

**அதுதான் அறியாமை**

சிவனை நினை 
சிவன் வழி செல் 

இறைவனுக்கு பயப்படு
மனிதனுக்கு பயன்படு

சொக்கநாதா
சொக்கநாதா

கருடபுராணம் கூறும் உண்மைகள்

|| கருடபுராணம் கூறும் உண்மைகள் ||

1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் பருக்கைகளின் படி சுகித்திருப்பார்கள்.

2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழ்வர்.

3 பசு கன்றீனும் சமயம் ஸத் ப்ராம்மணருக்கு அல்லது கோவிலுக்கு தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்

5 தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்

6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
வஸ்திர தானம் கடவுளுக்கு சாற்றினால் எந்த கடவுளுக்கு சாற்றுகிறீர்களோ அவர்கள் உலகத்தில் 10000 ஆண்டுகள் வாழ்வார்கள்.

7 இரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவருக்கு அக்னிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்கள்.

8 விஷ்ணு சிவ ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்கள் 

9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்கள் 

10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்கள் 

11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வார்கள் 

12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.

13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.

14 தீர்த்த யாத்திரை புரிகின்றவர்கள் ஸத்யலோக வாசம் கிட்டுகிறது

15 ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்

16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்

17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்

18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும்,; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்

19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்கள் 

20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபதத்திலிருப்பான்.

21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.

22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.

23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்

24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்

25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்

26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்

27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்

28 சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்

29 ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.

30 இதைப் படிப்பவரும், கேட்பவரும்,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் பரமபதத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் பிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.

31.அஸ்வமேத யாகம் செய்தால் இந்திய பதவி அடைவார்கள்.

32.லோக ஷேமத்திற்காக யாகங்கள் ஹோமங்கள் செய்தவர்கள் ரிஷிகள் மற்றும் முனிவர்களின் ஆசிர்வாதத்தை பெற்று வைகுண்டம் அடைவார்கள்.

33.கல்வி தானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள் ப்ரம்மலோகத்தில் வாழ்வார்கள்.

34.பறவைகளை காப்பாற்றியவர்கள் கருடனின் ஆசிர்வாதம் பெற்று வைகுண்டம் அடைவார்கள்.

35.விலங்குகளை காப்பாற்றியவர்கள் நந்தி தேவரின் ஆசிர்வாதம் பெற்று சிவலோகம் அடைவார்கள். 

36.தெய்வங்களின் பாடல்களை மனதார சதா சர்வ காலமும் பாடுபவர்கள் உபன்யாசம் செய்பவர்கள் பகவானுடன் ஐய்க்கியமாகி விடுவார்கள்.

எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ள வேதம் அறிந்த ஸத் ப்ராம்மணர்களுக்கு தானம் செய்தால் அந்தந்த சுகத்தை கண்டிப்பாக அடைவார்கள்.

Thursday, August 18, 2022

தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்

இனிய பிறந்தநாள்  வாழ்த்துக்கள் கண்ணா.....

எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்… என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். விஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரம் தான் கிருஷ்ணா அவதாரம், அவர் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலஷ்டமியாக கொண்டாடுகிறார்கள். வட இந்தியாவில் ஜென்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்டு 19-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 

 
அதற்கு முன்பு பகவான் கிருஷ்ணர் அவதாரத்தை தெரிந்து கொள்வோம்… … …
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் கம்சனின் சிறைச்சாலையில் இருந்த வசுதேவர் – தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணர் அவதரித்தார்.

3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது நாட்கள் கழிந்தன.

தன்னை வதம் செய்யவே கண்ணன் பிறந்திருக்கிறான் என்று எண்ணினான் கம்சன். அதனால் அவனை அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். முதலில் வந்தவள் பூதனை என்ற அரக்கி. அவள் பால் தருவது போல் நடித்தாள். ஆனால் கண்ணனோ அவளிடம் பாலைக் குடிப்பது போல் குடித்து அவளைக் கொன்று விட்டார்.

 
அரக்கியை தொடர்ந்து அரக்கர்கள் பல்வேறு உருவங்களில் வந்தார்கள். பராசுரன் கொக்காகவும், தேனுகாசுரன் கழுதையாகவும், பிரலம்பன் சிறுவனாகவும், அரிஷ்டன் காளையாகவும், கேசி குதிரையாகவும் உருவம் எடுத்து கண்ணனைக்கொல்ல முயன்றனர். ஆனால் 5 வயதில் இருந்த கண்ணன் அவர்களை எல்லாம் துவம்சம் செய்து கொன்றார்.
இதுபோன்று கண்ணனுக்கு தொடர்ந்து இடையூறுகள் வந்தாலும், அவரது வளர்ப்பு பெற்றோரான நந்தகோபனும், யசோதையும் மற்றும் கோகுலவாசிகளும் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர். அங்கும் காளிங்கமடுவில் காளிங்கன் என்ற அசுரன் இருந்துகொண்டு அட்டகாசம் செய்து வந்தான். கண்ணன் அவன் மீது ஏறி நின்று நர்த்தனம் ஆடி அவனை அடக்கினார். இந்திரனது சூழ்ச்சியினால் பெய்த அடை மழையில் இருந்து கோவர்த்தன மலையைக் குடையாக பிடித்து பசுக்களையும், அங்கு இருந்த மக்களையும் காப்பாற்றினார்.

கண்ணன் பிறந்தது விரஜபூமி என்ற வட மதுரா. வளர்ந்தது கோகுலம். வடமதுரா முக்தியளிக்கும் 7 நகரங்களுள் ஒன்று.கண்ணன் என்றால் ராதை, ருக்மணி, பாமா-இவர்கள்தான் நினைவுக்கு வருவர். ஆனால் கண்ணனுக்கு 8 மனைவிகள் உண்டு. ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரவிந்தை, சத்யவதி, பத்திரை, லட்சுமணை இப்படி 8 பேர் பட்ட மகரிஷிகள். ஒவ்வொரு மனைவிக்கும் தலா 10 குழந்தைகள் பிறந்தன.

கிருஷ்ணரின் பிள்ளைகளில் மிகவும் புகழ் பெற்றவர்கள் 18 பேர். அவர்கள் பிரத்யும்னன், அனுருத்தன், தீப்திமான், பானு சாம்பன், மது, பருஹத்பானு, சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன், வேதபாசு, ஸ்ருததேவன், சுருந்தனன், சித்திரபாஹூ, விருபன், கவிநியோக்தன்.

தீராத விளையாட்டுப் பிள்ளையான கிருஷ்ணரின் இளமைப் பருவம் பற்றி கேட்பதற்கே இனிமையாக இருக்கும். ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை அவிழ்த்து விடுவது… நீர் ஏந்திவரும் பெண்களின் குடங்களை கல்விட்டு உடைப்பது… வெண்ணையை திருடி உண்பது… போன்ற பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டார்.

கம்சன், கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்பினான். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் கண்ணன் கொன்று குவித்தார். அதனால் கோபம் கொண்ட கம்சன், “நான் தனுர்யாகம் செய்யப்போகிறேன் அதற்கு வேண்டிய பொருட்களுடன் நந்தகோபரை குடும்பத்துடன் இங்கு வரச் சொல்லுங்கள்” என்று அமைச்சர் அக்ரூரரிடம் கூறினான். அமைச்சரும் அங்கு வந்தார். பலராமனும், கண்ணனும் கம்சனின் யாகசாலைக் குச்சென்றனர்.

வழியில் குவலயபீடம் என்னும் யானைக்கு மதம் பிடித்தது. அது துதிக்கையால் இரும்பு உலக்கையை தூக்கி, கண்ணனனையும், பலராமனையும் தாக்க முயன்றது. அப்போது யானையின் தந்தத்தை ஒடித்து யானையையும், பாகனையும் கொன்றார் கண்ணன்.

பின்னர் மல்யுத்த அரங்கிற்கு சென்றனர். அங்கு கண்ணனை அழிக்க சானூரன், முஷ்டிகன், கூடன், சலன் போன்ற மல்யுத்த வீரர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் மல்யுத்தம் செய்து அவர்களை அழித்தார். இதைக்கண்ட அனைவரும் கண்ணனைப் பாராட்டினர். ஆனால் கம்சனுக்கு மட்டும் கண்ணணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

 
ஊரில் உள்ள சிறுவர்களை எல்லாம் வெட்டி சாய்ந்து விட்டு, வசுதேவர், தேவகியைக் கொல்லுங்கள் என்று அவன் கூறினான். உடனே கண்ணன் தனது 7-வது வயதில் அவன் மீது ஏறிக் குதித்து, அவனது தலையை பிடித்து தரையில் வேகமாக அடித்துக்கொன்றார். இத்துடன் கம்ச வதம் முடிந்தது.

கம்சனின் சிறையில் இருந்த தாய், தந்தை, பாட்டனார், உக்கிரசேனர் என்று அனைவரையும் விடுவித்து, கோகுலத்திற்கு அழைத்துச் சென்றார் கண்ணன்.
கம்ச வதத்திற்குப்பின்பு மக்கள் பயமின்றி வாழ்த்தனர். பலராமனுக்கும், கிருஷ்ணருக்கும் சாந்தி பீவி என்ற முனிவர் ஆயக்கலைகள் அறுபத்துநான்கையும் கற்றுக்கொடுத்தார். அதற்கு குருதட்சணையாக, வெகுநாட்களுக்கு முன்பு கடலில் தவறி விழுந்த எனது மகனை உயிருடன் கொண்டு வந்து கொடுங்கள் என்றார். நீண்ட போராட்டங் களுக்குப் பின்னர் எமனிடம் இருந்து குருவி னுடைய மகனை மீட்டுக் கொடுத்தனர். துவாபரயுக முடிவில் கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்றது.

கிருஷ்ணர் இரவு 12 மணிக்கு பிறந்ததை நினைவு கூறும் வகையில் வட இந்தியாவில் இரவு 12 மணி வரையிலும் உபவாசம் இருந்து, பஜனை செய்கிறார்கள்.
ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன் இளமையில் வெண்ணை திருடி உண்டவர் என்பதால் கோகுலாஷ்டமி அன்று கண்ணனுக்கு பால், தயிர், வெண்ணை ஆகியவற்றை நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பாகும்.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று காலையில் வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்தி மாவை கொண்டு கோலம் இட்டுக் கொள்வார்கள். வீட்டு வாசலில் இருந்து பூஜை செய்யும் இடம் வரையில், சிறு குழந்தை ஒன்று நடந்து வந்த காலடித் தடங்கள் போன்று பாதச் சுவடுகளை பதிய வைப்பார்கள்.
பூஜை அறையில் கிருஷ்ணரின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து, அதற்கு சந்தனம், குங்குமப் பொட்டு இட வேண்டும். மலர் மாலைகள் சூட்டி அலங்காரம் செய்ய வேண்டும். பூஜை ஆரம்பித்தவுடன் கண்ணன் பற்றிய பக்திப் பாடல்களை பாட வேண்டும்.

குழந்தைகளின் உடல் நலனுக்கு நோய் ஏற்படுத்தாத சீடைகள், முறுக்கு வகைகள் போன்றவற்றை யசோதை கண்ணனுக்கு வழங்கி வந்தாள். அதனை நினைவுகூறும் வகையில் வெல்லச்சீடை, உப்புச்சீடை, முறுக்கு மற்றும் லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்ற தின்பண்டங்களை செய்து பூஜையில் வைக்க வேண்டும்.

பூஜை முடிந்தவுடன் கண்ணனுக்கு ஆரத்தி கரைத்து வைக்க வேண்டும். தொடர்ந்து, வீட்டிற்கு வந்துள்ள அனைவருக்கும் நைவேத்தியம் செய்த பதார்த்தங்களை வழங்க வேண்டும்.

அன்றையதினம் மாலையில் சிலர், சிறு குழந்தைகளை கண்ணனை போன்று அலங்கரித்து மகிழ்வார்கள். கண்ணன் வேடத்தில் அந்த குழந்தைகள் வீட்டில் அங்கும், இங்கும் ஓடியாடி விளையாடும் போது அந்த கண்ணனே நம் முன் விளையாடுவது போன்ற உணர்வு ஏற்படும்.

Wednesday, August 17, 2022

போகரின் அதிசயம் ஏழாயிரம் ஆண்டுகளில்

🌹போகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் வெள்ளூர் 🌹
சிவபோக சக்கரம்:

>> போகர் ஏழாயிரம் என்ற நூலில் திருக்காமேஸ்வரர் சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். பிறகு,அதில் சரியான திதியும்,நட்சத்திரமும்,ஓரையும் கூடிய சுப நேரத்தில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினார்;அதன்விளைவாக போகர் சித்தர்பிரானுக்கு வெகுவிரைவிலேயே அஷ்டமாசித்துக்கள் கைகூடின;இதை அறிந்த பாம்பாட்டி சித்தர்,புலிப்பாணி சித்தர் இன்னும் பல சித்தர்கள் இங்கே வருகை தந்து திருக்காமேஸ்வரரை முறைப்படி வழிபாடு செய்து அஷ்டமாசித்துக்களில் சித்தி பெற்றனர்; ஏராளமான தெய்வீக சாதகங்கள் நிகழ்ந்த இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் செல்ல முடியாது என்பதுதான் ஆச்சரியமான உண்மை!
போகர் சித்தர்க்கு அஷ்டமாசித்திகள் கைகூடிய ஆலயம் என்பது மட்டுமல்லாமல் மன்மதனுக்கு அருளல் - மற்றும் ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி, அதற்கு அதிபதியான தலம் என்ற ஏராளமான தெய்வீகச் சிறப்பை தன்னகத்தே கொண்ட அற்புதமான ஆலயம்தான் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் உடனுறை ஸ்ரீசிவகாமசுந்தரி -
ஸ்ரீ ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி திருக்கோவில் ஆகும்.
சிவபோக சக்கரம்
போகர் ஏழாயிரம் என்ற நூலில் திருக்காமேஸ்வரர் சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். பிறகு,அதில் சரியானதிதியும்,நட்சத்திரமும்,
ஓரையும் கூடிய சுப நேரத்தில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினார்.

அதன்விளைவாக போகர் சித்தர்பிரானுக்கு வெகு விரைவிலேயே அஷ்டமாசித்துக்கள் கைகூடின;இதை அறிந்த பாம்பாட்டி சித்தர்,புலிப்பாணி சித்தர் இன்னும் பல சித்தர்கள் இங்கே வருகை தந்து திருக்காமேஸ்வரரை முறைப்படி வழிபாடு செய்து அஷ்டமா சித்துக்களில் சித்தி பெற்றனர். ஏராளமான தெய்வீக சாதகங்கள் நிகழ்ந்த இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் செல்ல முடியாது என்பதுதான் ஆச்சரியமான உண்மை!
வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இன்றும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மஹாமண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச் சக்கரத்தை தரிசனம் செய்யலாம்; ஆலயத்தின் ஈசான பாகத்தில் சிவலிங்க வடிவில் போகர் சித்தர் அரூபமாக இன்னும் தவம் செய்து வருவதாக ஐதீகம் மேலும்,அகத்தியர் நாடியிலும்,வசிஷ்டர் நாடியிலும்,காகபுஜண்டர் நாடியிலும் இந்த ஆலயத்தின் சிறப்புக்களை விவரித்துள்ளனர்.
தல பெருமை
பாற்கடல் கடைந்தபோது வெளிவந்த அமுதம் அசுரர் களுக்கு கிடைக்காமல் இருக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு மட்டும் அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியை பார்த்து, சிவபெருமான் மோகித்தார் இதையறிந்த மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்தை விட்டு வெளியேறினாள். மேலும் இதுபற்றி சிவனிடம் கேட்டறிய அவரை அழைத்தாள். ஆனால் சிவபெருமான் வரவில்லை
இதனால் பூலோகத்துக்கு சென்று வெள்ளூரில் ஈசனை நோக்கி தவம் செய்தாள். அப்போதும் சிவன் வரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள். அதன்பின் ஈசன், மகாலட்சுமி முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்த மாக்கினார்.
மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமி தேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். ஈசனை பூஜிக்க மகாலட்சுமி பயன்படுத்திய தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது.
வில்வாரண்யேஸ்வரர், ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் ஈசனுக்கு வேறு திருநாமங்கள் உண்டு. சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம். முசுகுந்த சக்கரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெள்ளூர்எனப்பெயர்பெற்றது.
வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது.
ஐஸ்வர்ய மகாலட்சுமி
தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற தலம் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இங்கு வந்து வழிபடுவது சிறப்பு தரும். வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோவிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி வீற்றிருக்கிறாள்.
இக்கோவில் குறித்த புராணச் செய்தி

தட்சன் யாகம்
‘ஈசனை விட, தானே உயர்ந்தவன்’ என்கிற செருக்கு கொண்டு, பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மகளான தாட்சாயினி யின் கணவர் சிவபெருமானுக்கு, இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. வேண்டுமென்றே ஈசனை, தட்சன் தவிர்த்தான். ஆனால் தந்தை நடத்தும் யாகத்தில் மகள் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்பதால், யாகசாலைக்கு சென்ற பராசக்திக்கு அவமானமே மிஞ்சியது.
கணவனின் சொல் கேட்காமல் வந்ததற்கு இது தேவைதான் என்று எண்ணிக்கொண்ட தாட்சாயினி தந்தையின் யாகம் அழிந்துபோக சாபம் கொடுத்து விட்டு வந்தார். ஆனாலும், தனது சொல் கேட்காமல் சென்ற காரணத்தால், ஈசனின் கோபத்திற்கு ஆளானார். தான் பெரும் தவறு செய்துவிட்டதை உணர்ந்த தாட்சாயினி பூலோகத்தில் மீண்டும் பிறப்பெடுத்து சிவபெருமானை அடையும் நோக்கில் தவம் இருந்தார்.
திருக்காமேஸ்வரர்
இறைவனும் இறைவியும் பிரிந்த காரணத்தால், உலக சிருஷ்டி தடைபட்டது. சிவனையும் சக்தியையும் சேர்த்து வைக்கும் எண்ணத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் கூடி விவாதித்தனர். சின்முத்திரையுடன் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சிவபெருமானை விழிக்கச் செய்து, பார்வதியின் மீது ஈர்ப்புவர மன்மதனை அம்பு எய்தும்படி தேவர்கள் கூறினர். அதற்கு மன்மதன் மறுப்பு தெரிவித்தான். ஈசன் மேல் அம்பை தொடுப்பது எனக்கு நானே அழிவை தேடிக்கொள்வதற்கு சமம் என்று தேவர்களிடம் வாதாடினான். இதனால் தேவலோகமே ஒன்று திரண்டு மன்மதனுக்கு சாபமிட முயன்றதால், வேறு வழியின்றி ஈசன் மீது காம பாணம் தொடுக்க மன்மதன் ஒப்புக்கொண்டான்.
உலகம் இவ்வாறுதான் இயங்க வேண்டும் என்று அனுமானித்த ஈசனால், நடக்கப்போவதை கணிக்க முடியாதா என்ன? பல மைல் தூரத்தில் இருந்து காம பாணம் எய்திய, மன்மதனை தனது நெற்றிக் கண்ணை லேசாக திறந்து பார்த்தார் ஈசன். அதன் வெப்பம் தாங்காமல் மன்மதன் சாம்பலாகி போனான். அப்போது ஈசனுக்கு தன்னை நோக்கி தவம் செய்யும் பார்வதி தேவியின் எண்ணம் வந்து அவருடன் கூடி திருக்காமேஸ்வரராகவும், அன்னை பார்வதி தேவி சிவகாம சுந்தரியாகவும் காட்சியளித்தனர்.

மன்மதனுக்கு அருளல்
இந்த நிகழ்வை சித்திரிக்கும் புடைப்புச் சிற்பம் கோவிலில் காணப்படுகிறது.
சிவபெருமானை நோக்கி காமக் கணை விடும் மன்மதனின் சிற்பம் கண்களைக் கவர்கிறது. மன்மதனின் இழப்பை அவன் மனைவி ரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இழந்த கணவனை திருப்பி தர வேண்டி ஈசனிடம் மண்டியிட்டாள். அதே நேரம் மன்மதன் இல்லாததால், ஜீவ ராசிகளிடம் காதல் உணர்வு அற்றுப்போய், உயிர்ப் பெருக்கம் நிகழவில்லை.
எனவே, மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார் சிவபெருமான்.

தல புராணத்தைச் சொல்லும் முசுகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் போன்றவை சிற்பமாகக் காணப்படுகின்றன.
திருச்சிராப்பள்ளி மாவட்டம்,முசிறி வட்டம், திருச்சியில் இருந்து குணசீலம் செல்லும் சாலையில் மேற்கே 32 கி.மீ.தொலைவிலும், முசிறியிலிருந்து கிழக்கே 6 கி.மீ.தொலைவிலும் அமைந்திருக்கும் கிராமம் வெள்ளூர் ஆகும்.இந்த ஆலயத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பிகா உடனுறை திருக்காமேஸ்வரர், ஸ்ரீஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி திருக்கோவில் அமைந்திருக்கிறது🌹

Monday, August 15, 2022

குடும்பத்தில் ஒற்றுமையை நிலைக்க செய்யும் ஆடி செவ்வாய்.

🌺 ஆடி செவ்வாய்..!!

குடும்பத்தில் ஒற்றுமையை நிலைக்க செய்யும் ஆடி செவ்வாய்..!!

🌟செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் 'செவ்வாய்" கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற கிழமையாகும்.

🌟செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

🌟அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நன்னாளாகும்.

🌟திருமண தடை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம் நீங்க ஆடி கடைசி செவ்வாய் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது சிறப்பு. பெண்கள் மங்கல கௌரி விரதம் இருந்தால் விஷேச பலன்கள் கைகூடும்.

ஆடி மாத கடைசி செவ்வாய் :

🌟ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில், மறக்காமல் அம்மனை கண்ணார தரிசித்து மனதார வேண்டி கொள்ளுங்கள்.

🌟ராகு கால வேளையில், அம்மனை தரிசித்து செவ்வரளி மாலை சாற்றுங்கள். மேலும், துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி, வழிபடுங்கள்.

🌟ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையில், அம்மனை தரிசனம் செய்வதால் தடைபட்ட மங்கள காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும்.

ஆடி செவ்வாயின் விசேஷம் :

🌟பெண்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று நம்புகின்றனர். 

🌟செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கள கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

🌟ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

🌟ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

🌟பத்ரகாளி ராகுவாக அவதாரம் செய்தாள் என்பர். செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைபட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.

🌟ஆடி செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் கடைபிடிப்பதும் நல்லது.

Saturday, August 13, 2022

*சதுரகிரி மலை ரகசியங்கள்*

🌹அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவனடியை சிந்திப்போம் 🌹

சதுரகிரி மலையில் இருக்கும் கோவில் அதிசயங்களை பற்றி பார்ப்போமா.

சதுரகிரி – இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங் களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்களும் வாழ்கின்றன.

சுந்தரமூர்த்தி: 

கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும்.

சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை கும்ப மலை என்கின்றனர். அகத் தியர் பூஜித்த லிங்கத்தை சுத்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது. 

அருளை வழங்குவது சுந்தரமகாலிங்கம், பொருளை வழங்குவது சுந்தரமூர்த்தி லிங்கம் எனக் கூறுவர். சதுரகிரி கோயிலி ன் நுழைவுப் பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம்: 

சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய் விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். 

மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய் ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். 

பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகா சிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகா லிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்ற னர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 

18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண் பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள். இங்கிருந்து 1 கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

லிங்க வடிவ அம்பிகை:

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண் டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ஆனந்த வல்லி என்ற திருநாமத்தில் லிங்கவடிவி ல் எழுந்தருளினாள். 

சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

நோய் தீர்க்கும் மலை: 

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்க ளும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கி னால் உடலில் உள்ள வியர்வை வெளியே றி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோ ய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். 

சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில்உள்ள குளிராட்டி பொய் கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

பிலாவடி கருப்பர்: 

 வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், சதுர கிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும், என்றார். 

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாத ரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலி கைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். 

இந்த கிணற்றில் காவலாக கருப்பசுவாமி யை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள் ளது. இதனால், இவரை பிலாவடி கருப்பர் என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

இரட்டை லிங்கம்: 

ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்த து. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். 

இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். சிவபெருமானே தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியி டம் தெரிவிக்க வேண்டும், என வேண்டி னார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். 

அவளோ, நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன், என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயண ராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்ப டையில் மலைஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்ப வர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பெரிய மகாலிங்கம்: 

நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை பெரிய மகாலிங்கம் என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை:

மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்த வல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. 

கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் மஞ்சள் ஊத்து தீர்த்தம் உள்ளது. தீர்த்தமும், இப் பகுதியிலுள்ள மண்ணும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. 

பார்வதி இத்தலத்துக்கு தவம் செய்ய வந்த போது, உடன் வந்த புஷ்பகை, கெந்தகை, அமிர்தகை, கருணிகை, மிருதுபாஷிகை, சுச்லிகை, சுமுகை என்ற பணிப் பெண்கள் இந்த தீர்த்தத்தில் மஞ்சள் தேய்த்து குளித்ததால் இப்படி இருப்பதாக கூறப்படுகிறது. 

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும் படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. 

இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்க ளும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. 

குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை நவக்கிரக கல் என்கி றார்கள். இதற்கு அடுத்துள்ள ஏசி பாறை யின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிற ங்கும் வழியில் வெள்ளைப்பிள்ளையார் பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும்.

இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரை அடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது. கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால், அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

வாழ்க்கையில் அனைவரும் ஒரு முறையாவது சென்று வழிபட வேண்டிய கோவில் – சதுரகிரி மலை கோவில்.

🌹நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் 🌹

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் ஈசனே

உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்.

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தைக்கு ஆத்ம நமஸ்காரங்கள்

அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜🦜🦜

உழவாரப்பணியின் உயர்ந்த நோக்கம்

🌺அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவனே சித்தாந்தம் 🌺

சிவனே சரணாகதி 🧘🧘

*உழவாரப்பணி என்றால் என்ன?*

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தையை பணிந்து 🙏

*இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை. உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர்* *திருநாவுக்கரசர்*.

*பழங்காலத்தில் கோயிலில் கிடைத்த நைவேத்யம், சிறுவருமானத்தை பெற்றுக் கொண்ட சிலர் தெய்வத் தொண்டாக கோயிலை துாய்மைப்படுத்தினர். இதற்காக சில கோயில்களில் மானிய நிலம் கூட இருந்தன* *நம்மை வாழவைக்கும் தெய்வத்தின் இருப்பிடத்தை உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் நம் சந்ததிகள் நலமுடன் வாழ்வர்*

*கோயிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணி. இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவிக்கு ’உழவாரப் படை’ என்று பெயர். இதைக் கையில் ஏந்தியபடி இருப்பவர் திருநாவுக்கரசர்* *எப்போதும் உழவாரப்பணி மூலம் கோயிலை தூய்மை செய்தபடி பாடுவது இவரின் பணி. சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்*

*உழவார பணி என்றால் என்ன?*

*சிவ ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி எனப்படும்*

*அவையாவன:*

*1. பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை எடுத்து குப்பை கூடங்களில் போடுவது*

*2. பக்தர்கள் இறைவன் அருள் வேண்டாம் என சொல்லி தூண்களில் கொட்டும்  திருநீறு குங்குமம் போன்றவற்றை சுத்தம் செய்வது*

*3. இறைவனுக்கு சாற்றப்படும் நிர்மால்ய பூக்களை எடுத்து நந்தவனத்தில் போடும் பணி.*

*4. திருக்கோயில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் அழுக்குகள் ஆகியவைகள் நீக்குவது..*

*5. சுவாமியின் ஆடைகளை துவைப்பது.*

*6. அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது.*

*7. நந்தவனத்தை தூய்மைபடுத்துவது.*

*8. தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்தப்படுத்துவது*

*9. கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றுவது.*

*10. சிவாச்சாரியார்களின் அனுமதி பெற்று திருக்கோயிலின் கொடிமரம் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு தூய்மைபடுத்துவது.*

*11. அறுபத்து மூவர் மற்றும் கல் திருமேனிகளுக்கு மாவு , தயிர் சாற்றி அதன்மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது.*

*12. திருக்கோயில்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்வது.*

*13. வாரம் ஒரு முறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மெழுகிடுவது.*

*14. திருக்கோயிலை சுற்றி கோலமிடுவது.*

*15. கோயிலில் படிந்திருக்கும் எண்ணை பிசுபிசுப்பை எடுப்பது.*

*16. கற்பூர புகையால் படிந்திருக்கும் கரும்புகைகளை துடைப்பது..*

*17.கோவில் சுற்றுச்சுவர் அல்லது மதில் சுவரை, சுத்தம் செய்து வெள்ளை அடிப்பது.போன்ற பணிகளே உழவாரப் பணி ஆகும்.*

*இப்பணிகளை குறைந்தது மாதம் ஒரு நாள் செய்வோமானால் உடலும் , மனதும் வலிமை பெறும்.*

*உழவாரம் செய்வீர் இறைவன் அருள் பெறுவீர்.*

*உழவாரப்பணி செய்யும் அன்பர்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்கு செல்வதில்லை* என்பது அடியார்களின் அனுபவம்.

*அடுத்த முறை உங்கள் அருகில் ஏதாவது உழவாரப்பணி நடைப்பெற்றால், தவறாமல் கலந்து கொண்டு ஈசன் அருள் பெறுங்கள்*!

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம் ‌ எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள்

உலகின் முதல்வன் எம் பெருமான் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் ‌

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தையே ஆத்ம நமஸ்காரங்கள்

அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி 🦜🦜🦜

Friday, August 12, 2022

கஷ்டங்கள் நம்மை விட்டு விலக மஹா சங்கடஹரசதுர்த்தி பூஜை

#மஹாசங்கடஹரசதுர்த்தி
நாள் 15-08-2022
திங்கட்கிழமை

தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும்.

கோயில்” என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார். தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில்,

நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.அவரைப் “பிள்ளையார்” என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம்

 சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை” என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே “பிள்ளை” என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்” என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.

“குமாரன்” என்றால் “பிள்ளை” என்றே அர்த்தம்.

பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் “குமரக் கடவுள்” என்கிறோம். ஆனால், அவரைக் “குமரனார்” என்பதில்லை; “குமரன்” என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.

முதல் பிள்ளை இவர்; குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரபஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின.

அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்

பிரணவ ஸ்வரூபமான, பிள்ளையாரை சங்கட சதுர்த்தி தோறும் வழிபட நம் சங்கடங்கள் விலகும்.
ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி வந்தாலும், பிள்ளையார் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்தி ‘மகாசங்கடஹர சதுர்த்தி’ எனப்படும். அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

கஷ்டங்கள் நம்மை
விட்டு விலகி போகவேண்டும்.. எல்லாரும், கோவில்களிலும்,
அவரவர் வீடுகளிலும், முடிந்த வரைக்கும் மஹா கணபதி ஹோமம் குறைந்தது, பத்தாயிரம்
நடைபெற முயற்சி எடுக்க வேண்டும்

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தை ஒட்டி. விநாயகருக்கு 
#மஹாசங்கடஹரசதுர்த்தி
வருகின்றது.
எல்லா கோவில்களிலும், பிள்ளையாரை பக்தி 
பண்ணிபிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்.

#பகிர்வு

Thursday, August 11, 2022

ஞானம் தரும் ஸ்ரீஹயக்ரீவரின் வழிபாடுகள் பற்றி அறிவோம்

_ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி 11.08.2022_



கல்வியும் ஞானமும் நல்கும் ஹயக்ரீவர்: தேர்வின் வெற்றிக்கு வழிபாடு!

ஞானம் தரும் ஸ்ரீஹயக்ரீவரின்  வழிபாடுகள் பற்றி அறிவோம்

ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. இந்த 33 துதிகளையும் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால், அவர்கள் கலைகளில் தேர்ச்சி பெற முடியும்.ஹயக்ரீவர் எழுப்பும் “ஹலஹல” என்ற கனைப்பு சத்தம் எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை உணர்த்துவதாக சொல்கிறார்கள்.

ஹயக்ரீவர் மூல மந்திரத்தை நாம் வாய்விட்டு சத்தமாக சொன்னால், அதை ஹயக்ரீவர் நம் அருகில் நேரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவார்.

ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள் எந்த கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை கைவரப் பெறுவார்கள்.

பக்தர்கள் நல்வழிப் பெறுவதையே கடமையாகக் கொண்டுள்ள ஸ்ரீ ஹயக்ரீவர் ஞான வடிவமாகவும், கருணைக் கடலாகவும் உள்ளார்.

7 உலகம் புகழும்படியான நூல்களை இயற்றிய வியாச முனிவருக்கு, ஸ்ரீ ஹயக்ரீவர் வழங்கிய அருளே காரணமாக கூறப்படுகிறதுதேவர்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர் பிரகஸ்பதி. அந்த பிரகஸ்பதி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஹயக்ரீவரிடம் கேட்டு தெளிவு பெற்றார்.

ஸ்ரீ ஹயக்ரீவர் ஓம் எனும் பிரணவ சொரூபமாகவும், அதன் அட்சரங்களாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.

பிரபஞ்சத்தின் முதலும் முடிவுமாக ஸ்ரீ ஹயக்ரீவர் இருப்பதாக வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன.

ஸ்ரீ ஹயக்ரீவரை பற்றி லேசாக சிந்தித்தாலே போதும், அது நம் மனதின் தாபத்தை போக்கி குளிர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள்.

புண்ணியம் செய்தவர் களால் மட்டுமே ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானை தினமும் பூஜிக்க முடியும்.

ஹயக்ரீவப் பெருமானே கதி என்று கிடக்கும் பக்தர்களுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும் என்கிறார்கள்.ஹயக்ரீவரின் பாத கமலங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், அது பிரம்மன் நமக்கு எழுதிய தலை யெழுத்தையே மாற்றி அமைத்து விடும்.

ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் மலர் போட்டு வணங்கினால் நம்மிடம் உள்ள அஞ்ஞான இருள் விலகும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ ஹயக்ரீவர் தன் கையில் காட்டும் ஞானமுத் திரையின் மகிமை அளவிடற்கரியது.

ஸ்ரீ ஹயக்ரீவரை மனம் உருக வழிபாடு செய்தால் அது பல புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசனம் செய்த பலனைத் தரும்.

ஸ்ரீ ஹயக்ரீவ வழிபாடு மெய்ப் பொருளை உணரச் செய்து நம் மனதில் உள்ள மாசுவை விரட்டி விடும் ஆற்றல் கொண்டது.ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத் திரத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் கவி பாடும் வல்லமை உண்டாகும்.

ஹயக்ரீவர் கவசம் அதிக ஆற்றல் கொண்டது. இந்த கவசத்தை நம் உடம்பு பகுதிகளை தொட்டுக் கொண்டு படித்தால், அவர்களுக்கு எந்த துன்பமும் வராது.

ஸ்ரீ ஹயக்ரீவர் கவசத்தை தினமும் 3 தடவை படிப்பவர்கள், பிரகஸ்பதிக்கு நிகரான அறிவைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஸ்ரீ ஹயக்ரீவர் துதிகளில் ஸ்ரீமத்வாதிராஜ சுவாமிகள் இயற்றிய துதியே புகழ் பெற்றது.

ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு கல்வி, ஞானம் மட்டுமின்றி செல்வமும் தரக்கூடியது.ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபட்டால் பெரும் சபைகளில் சாதூர்யமாக பேசக்கூடிய தன்மை கிடைக்கும்.

ஹயக்ரீவர் பக்தர்களை எதிரிகளால் வெல்ல இயலாது.

ஆன்மீக பேச்சாளர்கள், ஜோதிடர்கள், கவிஞர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு ஸ்ரீ ஹயக்ரீவரின் அருள் அவசியம் தேவை.

'கல்வி கடவுள்’ என்ற சிறப்பை பெற்றவர் ஹயக்ரீவர்.

பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவரே ஹயக்ரீவர்தான் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றியே அதிகம் சொல்லப்பட்டுள்ளது.

சரஸ்வதிக்கே குரு என்ற சிறப்பு ஹயக்ரீவருக்கு உண்டு

31 வைணவ ஆச்சார்யார்களில் ஒருவரும், சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருமான வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் அருளால் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.

ஹயக்ரீவர், எப்போதும் பளீர் வெள்ளை நிறத்தில் இருப்பார்.மகாபாரதம், தேவிபாகவதம், ஹயக்ரீவ கல்பம் போன்ற இதிகாச புராண நூல்கள் ஹயக்ரீவரின் பெருமைகளை பேசுகின்றன.

அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வந்தபோது ஹயக்ரீவரை வணங்கினார் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சீபுரத்தில் தவம் இருந்த அகத்தியரை பாராட்ட அவர் முன் ஹயக்ரீவர் தோன்றினார் என்று பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாமி தேசிகருக்கு, ஹயக்ரீவர் எந்த கோலத்தில் காட்சி கொடுத்தாரோ, அதே கோலத்தில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவஹீந்திரபுரத்தில் காட்சி அளிக்கிறார்.

புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார்கள்.குதிரை போல கனைத்து இவர் அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டதாக புத்தமதத்தில் கூறப்பட்டுள்ளது.

அனுமன் தூக்கிக் கொண்டு போன சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த ஒரு சிறுபகுதி மலைதான் தற்போது ஹயக்ரீவர் வசிக்கும் திருவந்திபுரம் என்று கூறப்படுகிறது.

ஹயக்ரீவர்தான் லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்தவராவார்.

ஸ்வாமி தேசிகன், வாதிராஜ ஸ்வாமிகள் ஆகியோர் ஸ்ரீஹயக்ரீவரை ஆராதித்து நீடித்த புகழ் பெற்றனர்.

சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக லட்சுமி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்.

ஹயக்ரீவர் ஆனந்த மயமான வாழ்வு தருபவர் ஆவார்.ஹயக்ரீவரின் மந்திரத்தை சுவாமி தேசிகருக்கு ஸ்ரீகருடாழ்வாரே தோன்றி உபதேசித்தார் என்பது சரித்திரம்.

ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு. பரிமுகன் என்றால் பரிந்த முகம், பரியும் முகம், பரியப் போகும் முகம் என்று மூன்று காலத்தையும் காட்டுகிறது.

ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும் பெற்று இன்புறுவார்கள் என்பது ஐதீகம்.

ஹயக்ரீவர், அன்னையை பூஜித்து அம்பாள் வழிபாடுகள் செய்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

திருவந்திபுரம் மலை மேல் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டால் செல்வம் சேரும்.ஆடி பவுர்ணமியில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது என்பார்கள்.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், ரகசியங்களில் மிகவும் ரகசியமானது என்று ஹயக்ரீவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை நங்கநல்லூரில் ஒரு லட்சுமி ஹயக்ரீவர் ஆலயம் இருக்கிறது. இத்தலத்தில் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாத்துவது வழக்கம் திருநெல்வேலியிலிருந்து திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் 5 கி.மீ தூரத்தில் உள்ளது சங்காணி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் பெருமாளின் வலது கரத்தில் தன ஆகார்ஷன ரேகை இருப்பது சிறப்பு.

இங்கு மூவரின் பின்புறம் வெளிவிகாரத்தில் தென் கிழக்கு மூளையில் ஹயகிரிவருக்கு என தனி சன்னதி உண்டு இங்கு மாணவ மாணவியர்கள் தேர்வு காலங்களில் ஹயகிரிவருக்கு ஏலக்காய் மாலை சாத்தி அர்சனை செய்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்ஸ்ரீஹயக்ரீவ அவதாரம் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறது. திருமாலின் தசாவதாரங்களுக்கு முற்பட்ட காலத்திலே இவர் மனித உடலுடனும் குதிரை முகத்துடனும் தோன்றியவர். இவரை “பரிமுகக் கடவுள்’ என்றும் சொல்வார்கள்.

ஒரு சமயம் பிரம்மன் உறக்கத்தில் இருக்கும் வேளையில் மதுகைடபர்கள் என்ற அரக்கர்கள் பிரம்மா படைத்த வேதங்களை திருடிச் சென்று அதளபாதாளத்தில் ஒளித்து வைத்துவிட்டனர்.

தூக்கம் கலைந்த நான்முகனும் வேதங்களைக் காணாது மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவரும் அவற்றை மீட்டு வருவதற்காக “ஹயக்ரீவ’ராக உருவெடுத்துச் சென்றார்.
பாதாளம் வரை சென்று வேதத்தின் ஒரு பாடத்தில் உள்ள உத்கீதம் என்ற ஸ்வரத்தை உண்டு பண்ணி அதன்வழி வந்த அரக்கர்களிடம் போரிட்டு அவர்களை அழித்தார்.பின்னர், வேதங்களை மீட்டு வந்து கல்வியறிவு, ஞானத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தார்.

பின்னர், வேதத்தை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கே “சிராவணப் பௌர்ணமி’ எனும் ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் சுடர்விட்டுப் பிரகாசிக்க கற்றுக் கொடுத்தார் என புராணங்கள் கூறுகின்றன.

கல்வி, கலை ஞானத்தின் தெய்வங்களுக்கு எல்லாம் குரு ஸ்தானத்தில் இந்த ஹயக்ரீவப் பெருமான் உள்ளார். எனவே, இவரைப் போற்றி வழிபடுபவர்களுக்கெல்லாம் கல்வி சிறப்புற அமையும். அதாவது,

தூய மெய்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு மற்றும் அனைத்திற்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்ரீவரை வணங்குகிறேன்’ என்று போற்றித் துதிக்க வேண்டும்.

இதையே,…இதையே,…

*“ஞானாந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம்
முபாஸ் மஹே!’
-என்றொரு அற்புதமான சுலோகம் சுவாமியின் பெருமையை போற்றுகிறது."*

இந்த சுலோகத்தை தினமும் 108 முறையாவது சொல்ல வேண்டும். முக்கியமாக, வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது என்று கூறுகிறார்கள் பெரியோர்கள்.

நான்கு கைகளில் சங்கு, சக்கரம், பத்மமாலை, அபயகரம் என விளங்கும் அவர் லட்சுமி ஹயக்ரீவராக, வரத ஹஸ்த ஹயக்ரீவராக, அபய ஹஸ்த ஹயக்ரீவராக, யோக ஹயக்ரீவராக பலவிதமான வடிவங்களில் விளங்குகிறார்.சரஸ்வதி தேவியின் குரு ஹயக்ரீவர். இவர் வேதங்களை முறைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சுவாமி விருப்பத்துடன் குதிரை முகத்தோடு அவதாரம் எடுக்கிறார். அந்த முகத்தில்தான் லட்சுமி தேவி இருக்கிறாள்.

அவருடைய மூச்சுக் காற்றுப்பட்டு வேதங்கள் புனிதமடைந்து உயிரோட்டம் பெறுகின்றன. ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தை இயற்றியவர்கள் வாக்தேவதைகள். அதனை வெளிப்படுத்தியவரும் ஹயக்ரீவர்தான்.

இவருடைய முதல் சீடரான அகத்தியர் வெகுநாள்களாகத் தனக்கு ஏன் லலிதா சகஸ்ர நாமத்தை ஹயக்ரீவர் உபதேசிக்கவில்லை என்பதை உணர்ந்து ஒருநாள் கண்களில் கண்ணீர் வழிந்தோடக் கைகட்டி வாய்பொத்தி பவ்யத்துடன், ” எனக்கு தாங்கள் இதுவரை லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசம் செய்யவில்லையோ” என்று கேட்கிறார். சுவாமி புன்னகையுடன், ” இதை நீ கேட்க வேணும் என்பதே உன் மனைவி லோபாமுத்திரையின் விருப்பம். அவளது பக்தியினால்தான் இந்த எண்ணமே உனக்குத் தோன்றியுள்ளது.

லலிதா சகஸ்ர நாமத்தை யாரும் கேட்டால் மட்டும்தான் சொல்ல வேண்டுமே தவிர, கேட்காதவர்கள், உதாசீனப் படுத்துபவர்கள் காதில் கூட இந்த நாமா விழக்கூடாது!” என்று உபதேசம் செய்கிறார் ஹயக்ரீவர்.

நாடெங்கும் ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாளுக்கு சொற்ப இடங்களில் மட்டுமே கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் சில: ஸ்ரீரங்கம் ஆலயத்தில் பெரிய பிராட்டியின் சந்நிதிக்கு எதிரே தேசிகர் சந்நிதியிலும் உத்தர வீதியில் உள்ள தேசிகர் சந்நிதியிலும் ஹயக்ரீவர் மூர்த்தி உள்ளது. திண்டுக்கல்லில் உள்ள தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் கோயிலில் ஹயக்ரீவரும் சரஸ்வதியும் அடுத்தடுத்து அமைந்து அருள்பாலிக்கின்றனர்.

சென்னை காட்டாங்கொளத்தூரை அடுத்துள்ள செட்டிபுண்ணியம் என்ற கிராமத்தில் இருக்கும் தேவநாத சுவாமி கோயிலில் ஹயக்ரீவர் அமைந்துள்ளார்.

கடலூருக்குப் பக்கத்தில் உள்ள திருவஹீந்திரபுரத்தில் ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார்.

சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயில் கொண்டுள்ளார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் புகழ் பெற்ற லட்சுமி ஹயக்ரீவர் ஆலயம் உள்ளதுதிருநெல்வேலி திருவேங்கடநாதபுரம் வரதராஜா பெருமாள் கோவிலில் ஸ்ரீலெட்சுமி ஹயக்ரீவர் என்று தனி சன்னிதி அமைந்துள்ளது

தேர்வு காலங்களில் திருநெல்வேலி திருவேங்கடநாதபுரம் வரதராஜா பெருமாள் கோவிலில் ஸ்ரீலெட்சுமி ஹயக்ரீவர் ஆலத்தில் தேர்வுக்கு பயன்படுத்து எழுதுபொருள், ஏலக்காய், கற்கண்டு, துளசி இலை ஆகியவற்றை வைத்து ஆழ்மனதுடன் வணங்கி எடுத்து சென்று தேர்வு எழுதினால் எதிர்பாத்த வெற்றி நிச்சயம் கிட்டும் என்பது அனுபவபூர்வமான உண்மை

இங்கு வர இயலாதவர்கள் தங்கள் குழந்தைகளின் ஜாதகத்தை அனுப்பி வைத்து அர்சனை செய்து ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவர் முன் வைத்து பூஜை செய்த தேர்வுக்கு பயன்படுத்து எழுதுபொருள், ஏலக்காய், கற்கண்டு, துளசி இலை ஆகியவற்றை பிரசாதமாக பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு காலங்கள் மற்றும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படும் நாளில் இவற்றை செல்வது நல்ல பலனை தரும்.

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...