Thursday, August 31, 2023

500 டன் கோயில் தங்கமும் இந்திய பொருளாதாரமும்!*

*500 டன் கோயில் தங்கமும் இந்திய பொருளாதாரமும்!*
கோயில் நகைகளை உருக்கி அதை வங்கியில் வைக்கப்போவதாக தமிழக அரசு கூறியது, அதை எதிர்த்து நீதி மன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்தபோது, இது புதிய வழக்கமல்ல 1977 ல் இருந்தே  திராவிட அரசுகள் இதைத்தான் செய்கிறது, அதன் மூலம் இதுவரை 500 டன் தங்கம் ஏற்கனவே உருக்கப்பட்டு அது வங்கியில் வைக்கப்பட்டுள்ளது என்றும், அதன்மூலம் அரசுக்கு 11 கோடி ரூபாய் வட்டியாக வந்துள்ளது என்றும் அரசு நீதி மன்றத்தில் சொல்லியது.  அதாவது ஒரு கிலோ தங்கத்தின் இன்றைய மதிப்பு  ₹37,50,000 என்றால 500 டன் நகையின் மதிப்பு என்ன? கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி. 

இந்த தங்கத்தை மத்திய ரிசர்வ் வங்கியில் அடகுவைத்தால் அதற்கு இணையான 2 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்களை அரசு அச்சடிக்கலாம். அப்படி வைக்கும்போது குறைந்த பட்ச வட்டியாக 4% வட்டியை  ரிசர்வ் வங்கி கொடுத்தால் வருடத்திற்கு ₹7500 கோடி வட்டியாக நம் கோயில்களுக்கு வரும். அப்படி வந்தால் அதை தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கோயில்களையும் சில ஆண்டுகளில் முழுதும் பழுதுபார்த்து புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிட முடியும். அதாவது ஒரு ஆண்டுக்கு ₹7500 கோடி வட்டி வரும்போது 50 வருஷமாக ₹11 கோடி மட்டும் வட்டியாக வந்துள்ளது என்று வாய் கூசாமல் பொய் சொல்லும் இந்த அரசு, இந்துக்களுக்கு அவர்கள் திருவிழாவின் போது வாழ்த்துக்கூட சொல்வதில்லை. 

சரி, இதே பணத்தை மேற்சொன்னதுபோல ரிசர்வ் வங்கியில் வைத்தால், இந்திய பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டு 8% வளர்ச்சி என்றால், 6 வருடத்தில் இது இரட்டிப்பாகிவிடும். அதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்?

சரி, தமிழக அரசு ஏன் இவ்வளவு அவசரப்பட்டு இதை தங்கமாக மாற்ற முயற்சிக்கிறது?

மத்திய அரசு கோயில் விவகாரங்களில் அரசு நுழையக்கூடாது என்றதொரு புதிய சட்டத்தை முன்னெடுத்து தாக்கல் செய்து வருகிறது. அப்படி அது வரும்போது கோயில்   சொத்துக்களில் அரசாங்கம் கைவைக்க முடியாமல் போய்விடும். அப்படியெனில் அந்த நகைகளை எதுவும் செய்ய முடியாது என்றாகிவிடும்.

இருந்தாலும் அரசு தங்கமாக மாற்றி அதை வங்கியில்தானே வைக்கிறது? அப்போது அதில் என்ன பிரச்சினை? 

தேனெடுத்தவன் புறங்கையை ருசிக்கத்தன் செய்வான் என்று 1970 களிலேயே சொன்ன அரசனின் வாரிசுகள்  மீதி தங்கம் என்ன வரும் என்பதை நம்மில் பலர் யோசனை செய்வதே இல்லை? அவர்கள் சொல்லும் 500 டன் நகை என்றால் குறைந்த பட்சம் 100 டன் நகையாவது அவர்கள் கைநழுவி சேதாரம், செய்கூலி ஆகியிருக்கும் என்பது தெரியாதா?

இந்த திராவிட அரசு மாற்றியது போக மீதமிருக்கும் கோயில்களாவது இருக்குமா?  சந்தேகமே, ஏனெனில் இந்த கோயில்களில் நமக்கு இருக்கும் உரிமையை இன்றுவரை நம்மில் பலர் உணரவில்லை, அப்படியெனில் இந்த  திராவிட அரசுகள் வைக்கப்போகும் மீதியென்பது வெறும் சுவர்களும் கோபுரங்களுமே, அதுவும் பாழடைந்த நிலையில்..

அதற்கு காரணம் தவறான அரசல்ல, புரிந்துகொள்ளாத  இந்துக்கள்!???

மொகலாயர்கள், பிரிட்டிஷ் அரசு திருடியதைவிட   திராவிட அரசுகள் சுவைத்தது அதிகமே..

எனக்கெதற்கு ஊர் வம்பு என்று தூங்குவதுபோல நடிக்கும் இந்துக்களே..  நடித்ததுபோதும் விழித்துப்பாருங்கள்..

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (HR & CE) யின் கீழ் உள்ள கோவில்களில்*
பணிபுரியும் அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
சத்தியப்பிரமாணம் செய்யாத ஆணையாளர் உட்பட அனைத்து அலுவலர்களையும்  இந்து சமய அறநிலையத் துறைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி
*வழக்கறிஞர் எஸ். ஸ்ரீதரன்* மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செயதார்.
இவ்வழக்கில் ஆணையர்., உதவி ஆணையர்கள் வரையுள்ள அதிகாரிகளுக்கு சத்தியப்பிரமாணம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு வாதிட்டது.
அரசாங்கத்தின் வேண்டுகோளை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
தமிழகம் முழுவதும் *44,121 கோயில்களை* இந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கிறது.
1961 ஆம் ஆண்டின் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகள் 2-ல் கூறியுள்ள
இந்து மதத்தை பின்பற்றுவதை சத்தியபிரமாணத்தின் பேரில் உறுதி கூறும்
நிரூபண படிவத்தில் விதி 3ன் படி கோயில்களில் பணிபுரிவர் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பதை சத்தியபிரமாணம் செய்து
சாட்சிகள் முன்னிலையில் உறுதி செய்யவும்
HR & CE சட்டத்தின் பிரிவு 10 ஐ மேற்கோள் காட்டியும்,
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச்.,
மாண்புமிகு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர்
*மார்ச் 3 ம் தேதி 2020* தீர்ப்பளித்திருந்தனர். அதன்படி, இதுவரை சத்தியபிரமாணம் செய்யாத ஆணையர், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் உட்பட துறையில் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும்
*தாங்கள் பிறப்பால் இந்துக்கள் என்றும், தாங்கள் தொடர்ந்து இந்து மதத்தையே பின்பற்றுவதாகவும்*
சத்தியப் பிரமாணம் செய்து உறுதிமொழி படிவத்தில் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்து போட வேண்டும்,
தவறும் பட்சத்தில் அவர்கள் பதவி இழப்பர்.
உத்தரவு கிடைக்கப்பெற்ற எட்டு வார காலத்திற்குள் நடைமுறைபடுத்த வேண்டும்.
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க,
இந்து சமய அறநிலையத் துறையின் அனைத்து ஊழியர்களும்
அவர்கள் பிறப்பால் இந்துக்கள் என்றும், அவர்கள் இப்போதும் இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்  என்றும்
சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்.
இதில் இந்து மதத்தை பின்பற்றாத
மாற்று மத அலுவலர்கள் சத்தியபிரமாணம் செய்ய முடியாது என்பதை இந்து சொந்தங்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். இந்த செய்தியை நம் இந்து சொந்தங்கள் இருக்கும் எல்லா வாட்ஸ் அப்., ஃபேஸ்புக்., மற்றும் அனைத்து சோஷியல் மீடியா குழுக்களிலும் பகிரவும்.
வந்ததை பகிரவும்
ஒரு இந்துவாய் நம்மால் இது கூட செய்ய முடியாதா??
தயவு செய்து அனைவரும் தங்கள் நட்பில் உள்ள அனைவருக்கும் பகிருங்கள்...

*கல் கருடசேவை *கருட சேவையின் போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும்

பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒருவர் 400 km உயரத்தில் வானவெளியில்  63 கிலோ எடையுடன் இருப்பார். 

ஒரு பொருள் பூமியை விட்டு பறந்தால் அது தனது எடையை இழக்கிறது. 
கையில் உள்ள பொருளை எப்படி வீசினாலும் அது நிலத்தை அடையும் வரை எடையற்ற நிலையில் தான் இருக்கும். 

அது போல பூமியில் இருந்து அனுப்பப்படும் செயற்கை கோள்கள் 
நானூறு கிமீ. உயரத்திற்கு மேல் கொண்டு செல்லப் பட்டு, கிடை மட்டமாக [Horizontal direction ] மணிக்கு 27,700 கிமீ வேகத்தில் வீசி 
எரியப்படுகிறது. 

அது பூமியை அடையும் வரை எடையற்ற நிலையில் இருக்கும், அதில் உள்ளவர்களும் எடையற்றே இருப்பார்கள்.  செயற்கை கோளை அப்படியே விட்டு விட்டால், அது பூமியை நோக்கி விழும், புவியீர்ப்பு சக்தியால் அதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு குறைந்து கொண்டே வரும், 

எனவே, அது பூமியை நோக்கி விழுந்தாலும் அதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

விழனும் ஆனா விழக்கூடாது!! 

பூமி கோள வடிவில் இருப்பதால் அதன் மேற்பரப்பு சமதளமாக இருக்காது, 

ஒவ்வொரு எட்டு கி.மீ தொலைவு செல்லும் போதும் பூமி உருண்டை ஆதலால் நேர்கோட்டில் இருந்து 5 மீட்டர் விலகி இருக்கும்.  

உயரத்தில் இருந்து எந்த ஒரு பொருளை விட்டாலும் முதல் வினாடியில் 5 மீ கீழே இறங்கியிருக்கும்.  

இவை இரண்டையும் சேர்த்துப்  பார்த்தால்  ஒரு விஷயம் புலனாகிறது!!  

அது, ஒரு பொருளை பக்க வாட்டில் வினாடிக்கு எட்டு கிமீ வேகத்தில் எறிந்தால் அது ஒரு போதும் தரையைத் தொடாது!!    

பூமியை சுற்றிக்கொண்டே இன்னொறு நிலவாக செயல் படும். 

புவியீர்ப்பு கோளை பூமி நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கும்.

நாம் நிற்பது, நடப்பது அனைத்து பொருட்களும் பூமியில் இருப்பது அனைத்திற்கும் காரணம் புவியீர்ப்பு சக்தியே. 

அந்த புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து நிறுவப்பட்டதே கல் கருட பகவான். 

கோச்செங்கட்சோழன் முயற்சியால் உருவான  கோவில்
ஸ்ரீனிவாசப் பெருமாள் நாச்சியார் கோயில் . 

மன்னர் கோச்செங்கட்சோழன்
தேவசேனாபதியாரிடம் 
தனது கோவிலில்  சிலை செய்ய நல்ல சிற்பி வேண்டி வந்தார். 

மயூரசன்மன்
தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன். 

முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் அழகாக பாடமாக அறிந்தவன்.  
‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் நல்ல முறையில் கற்றவர். 

மன்னருக்கு மயூரசன்மனை அறிமுகம் செய்து வைத்து 
எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம்  என்றார். 

தேவசேனாபதி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறீர்கள்?" என்று கேட்டார். 

திருநறையூருக்கு" என்றார் மன்னர். 

‘ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. 

பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.  

மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செதுக்க வேண்டிய சிற்பம் எது?" என கேட்டார். 

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன். 

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சிலவற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதை கிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.  

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப் போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும் போது அவை உயிர்பெற்று விடும்." 

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். 

மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். 

மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக் கொண்டு வெளிப் பிராகாரம் வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன். 

சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன். 

மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறைவாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.  

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப் பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்று விடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்து கொண்டே செல்லும். மீண்டும் மண்டபத்துக்குத் திரும்பி வரும் போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்து கொண்டே வரும்" என்றான் மயூரசன்மன். 

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்து விடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன். 

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் இருந்து அருள் பாலிக்கிறார்.

மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடை பெறுகிறது. 

கருட சேவையின் போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், 

மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், 

பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும் வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. 

அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!.. 

சுமார் மூன்று டன் எடைக்கு மேலே உள்ள கருட பகவானின் எடையை
பூமியிலேயே குறைத்தது எப்படி
படிப்படியாக அதிகரித்து வெளிவருவதில் 
வீதியுலா முடிந்து திரும்ப உள் செல்கையில் படிப்படியாக குறைவதும் 
புரியாத புதிரான விந்தைகள்தானே!

குறுமாணக்குடி திருத் தலம் மயிலாடு துறைக்கு அருகே உள்ளது. கொன்றை மரத்தடியில் லிங்கப் பரம்பொருளை வாமனன் (குறளன்) வழிபட்டு நலம் பெற்றதால் குறுமாணக் குடி என்று பெயர்.

⚜️  *குறுமாணக்குடி (கண்ணார் கோயில்) கண்ணாயிர நாதர் திருக்கோயில்*                                                                                                                                
🙏 *வழிபட்டவர்கள்* .  வாமனன், இந்திரனுக்காக தேவர்கள், இந்திரன்  மற்றும் பலர்.                                                                                                                                

💥 குறுமாணக்குடி திருத் தலம் மயிலாடு துறைக்கு அருகே உள்ளது.

 கொன்றை மரத்தடியில் லிங்கப் பரம்பொருளை வாமனன் (குறளன்) வழிபட்டு நலம் பெற்றதால் குறுமாணக் குடி என்று பெயர். 

வாமனனுக்கு அருளிய பரமேஸ்வரனுக்கு வாமனேஸ்வரர் என்று திரு நாமம். 

இந்திரனுக்கு ஈசன் *ஆயிரம் கண் வழங்கி அருளியதால் கண்ணார் கோயில்*  என்று தலப் பெயர் அமைந்தது. 

 ஆயிரம் கண் பெற்ற இந்திரன் தீர்த்தம் உண்டாக்கி  வாமனேஸ்வரரைப்  பூஜித்து வழிபட்டதால் ஈசனுக்குக் கண்ணாயிர நாதர் என்று அருள் நாமம்.
       
🌳 *மூவடி மண் தருக என்று வாய் திறப்ப* ---- *மாவலியை வஞ்சித்து*   (திருமங்கை ஆழ்வார்), 
      
🌹 *மறு மாண் உருவாய்* மற்றிணை இன்றி வானோரைச் 
         *செறு மாவலி பால் சென்று உலகு எல்லாம்  அளவிட்ட* 
           *குறுமாண் உருவன் தற்குறியாகக் கொண்டாடும்* 
             *கறுமா கண்டன் மேயது கண்ணார் கோயிலே*
     
  🔯 *நித்த நியமத் தொழிலனாகி நெடுமால் குறளனாகி மிகவும்* 
          *சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன்*  (சம்பந்தர்)  
    
 என மகா பலியிடம்  *மூன்று அடி மண் வேண்டும்*   என்று கேட்டு  *வானத்தையும் மண் என்று அளந்த குற்றத்தினாலும்  தானம் கொடுத்த மகா பலிக்கு துரோகம் செய்த பாவத்தினாலும்  உண்டான துன்பம்  தீர்வதற்காகக்*  குறு உருவம் உடைய வாமனன் தினமும் நியமத்துடன் சித்தம் சிவ மயமாய் சிவ பூஜை செய்து வாழ்ந்தான். குறு மாணி தங்கி சிவபூஜை செய்ததால் குறுமாணக் குடி என்று பெயர்.         

இந்த ஊழியில் திரேதா யுகத்தில்  வாழ்ந்த ஒரு இந்திரன்  கௌதம முனிவரை வஞ்சகமாக வெளியேற்றிய பின் அவரது மனைவி அகல்யையுடன் உறவு கொண்டான். 

நடந்ததை அறிந்த கௌதமர் இந்திரனது உடல் முழுவதும் ஆயிரம் பெண் குறியாகுமாறு சாபம் இட்டார். 

தெரிந்தே துரோகம்  செய்த அகல்யையிடம் யார் கண்ணிலும் படாமல் *அஞ்ஞாத வாசம் செய்து வாழுமாறும் விஸ்வா மித்திரர் வரும் காலத்தில் அவரை வரவேற்று உபசரிக்கும் போது மீண்டும் வந்து சேர்ந்து கொள்வதாகவும்*  கூறிய கௌதம முனிவர் இமய மலைக்குச் சென்று தவம் புரிந்தார். *வால்மீகி இராமாயணம் கூறுவதற்கு மாறுபட்டு அகல்யை கல்லானாள் என்பது பிற்காலக் கற்பனை* . 

பல வருஷம்  கூடி வாழ்ந்த, தவறு செய்யாத *மனைவி தூய சீதையே களங்கம் உள்ளவள் என்று இராமனால் அரண்மனை யிலிருந்து வெளியேற்றப்பட்ட போது*  தெரிந்தே *குற்றம் புரிந்த அகல்யை இராமனது கால் தூசு பட்டே சுத்தமானாள்*  என்பது வடி கட்டிய பொருந்தாப் பொய். 
        
வெளியில் வர முடியாமல் மறைந்து வாழ்ந்த இந்திரனைத் தேடித் திரிந்த தேவர்கள் நடந்ததை அறிந்தபோது அதிர்ச்சி அடைந்து நிலை குலைந்தனர். 

*படைக்கும் தெய்வம் பிரம்மனால் இந்திரனுக்குப் புதிய உடலைப் படைத்துக் கொடுக்க முடியாது, காக்கும் தெய்வம் நாராயணனால் கௌதமரின் சாபத்திலிருந்து இந்திரனைக் காக்க முடியாது, அழிக்கும் தெய்வம் ருத்திரனால் இந்திரனின் தோற்றத்தை அழிக்க முடியாது*  என்பதால் மும்மூர்த்திகளும் பிற தெய்வங்களும் தேவர்களும்  *படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐந்து தொழில் புரியும் எல்லாம் வல்ல  ஒரே  கடவுளான சிவபெருமானைக்* குறுமாணக் குடியில் பூஜித்தனர்.  

இந்திரனது தோற்றத்தை மாற்றி யருளுமாறு தொழுது வழிபட்டு வேண்டினர்.  கும்பிடுவோர் குறை தீர்க்கும்  *எல்லை யில்லாத மாபெரும் ஒரே  தூய சக்தியான கருணா சாகரன் இந்திரன் உடலில் இருந்த ஆயிரம் குறிகளையும் ஆயிரம் கண்களாக்கி அருள் புரிந்தார்* .       குறியொன்றும் இல்லாத முக்கண் கூத்தன் தேவேந்திரனுக்கு ஆயிரம் கண் வழங்கியதால் குறுமாணக் குடிக்குக் கண்ணார் கோயில் என்று பெயர். 
       
🔯 *முன்னொரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம்* 
       *பின்னொரு நாள் அவ் விண்ணவர் ஏத்தப் பெயர்வு எய்தித்*  
         *தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்* 
            *கன்னியர் நாளும் துன்னமர் கண்ணார் கோயிலே*  (சம்பந்தர்) 
     
 என விண்ணவர் செய்த சிவ பூஜையினால்  ஈசன் அருளால் ஆயிரம் கண் பெற்றுக் *கண்ணாயிரம் ஆன இந்திரன் பெரு மகிழ்ச்சியுடன் கண்ணாயிர நாதரைப் பூஜித்து வழிபட்டு* ஆனந்தம் அடைந்தான். 

சிவப்பிரியா

Wednesday, August 30, 2023

நாரைக்கு முக்தி கொடுத்த படலம்நாரைக்கு வரம் அளித்த நாள் முதல் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் மட்டும் இன்றி நீரில் வாழும் உயிரினங்கள் ஏதும் இல்லாமல் போயின.

நாரைக்கு முக்தி கொடுத்த படலம்
பாண்டிய நாட்டில் வைகை ஆற்றிற்கு தெற்கே அழகிய தாமரை மலர்களைக் கொண்ட தடாகம் (குளம்) ஒன்று இருந்தது. அக்குளத்தில் இருந்த மீன்களை பிடித்து உண்டு நாரை ஒன்று வாழ்ந்து வந்தது.

ஒரு சமயம் மழை இல்லாமல் போனதால் தடாகத்தில் இருந்த தண்ணீர் வற்றி விட்டது. எனவே அத்தடாகத்தில் மீன்கள் இல்லாமல் போனது. இதனால் நாரை உணவில்லாமல் தவித்தது. எனவே அது காட்டினை நோக்கிப் பறந்தது.

அக்காட்டில் சிவனடியார்களான முனிவர்கள் வாழ்ந்து வந்தனர். முனிவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் தடாகம் ஒன்று இருப்பதை நாரை கண்டது. அத்தடாகத்தைச் சுற்றிலும் படித்துறை அமைந்திருந்தது.

அத்தடாகத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்திருந்தன. அத்தடாகத்தினை அச்சோதீர்த்தம் என்று அழைப்பர். இதுவே தான் தங்குவதற்கு சிறந்த இடம் என்று எண்ணிய நாரை அங்கேயே தங்கியது.

முனிவர்கள் அத்தீர்த்தத்தில் நீராடும்போது மீன்கள் அவர்களின் மீதும், அவர்களின் சடையின் மீதும் புரண்டன. அதனைக் கண்ட நாரை ‘இம்முனிவர்களின் மேனியில் தவழும் இம்மீன்களை உணவாகக் கொள்ளுதல் கூடாது’ என்று எண்ணியது.

தீர்த்தத்தில் நீராடிய முனிவர்களிடம் சத்தியன் என்ற முனிவர் மதுரையம்பதியின் பெருமைகளையும், சொக்கநாதரின் திருவிளையாடல்களையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

முனிவரின் விளக்கத்தினைக் கேட்ட நாரைக்கு மனமாற்றம் ஏற்பட்டது. சொக்கநாதரை வழிபடும் எண்ணம் அதிகரித்தது. எனவே அது மதுரையம்பதியை நோக்கி பறந்தது

மதுரையம்பதியை அடைந்த நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கநாதரையும், அங்கையற்கண்ணி அம்மையையும் வழிபட்டது. இவ்வாறு பதினைந்து நாட்கள் வழிபாடு நடத்தியது.

பதினாறாம் நாள் நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராட செல்லும்போது அங்கு மீன்கள் துள்ளுவதைக் கண்டது. உடனே அதற்கு மீனினை உண்ணும் ஆவல் உண்டானது.

சொக்கநாதரிடம் கொண்ட அன்பினால் நாரை மீனினை உண்ணும் எண்ணம் நாரைக்கு மறந்தது. பொற்றாமரைக் குளத்தில் நீராடிவிட்டு சொக்கநாதரை வழிபட்டது.

நாரையின் செயலினால் இறைவனுக்கு அதன்மீது கருணை ஏற்பட்டது. இதனால் நாரையின் முன்னால் சொக்கநாதர் தோன்றி “என் இனிய நாரையே நீ வேண்டுவது யாது?” என்று வினவினார்.

அதற்கு நாரை “ஐயனே, இப்பிறவியை நீக்கி உன்னுடைய அடியவர்கள் வசிக்கும் சிவலோகத்தில் என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னைப் போல பறவைகள் இத்தீர்த்தத்தில் உள்ள மீனினை உண்டால் அவர்களுக்கு பாவம் வந்து சேரும். ஆதலால் இப்பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் எக்காலத்தும் இல்லாமல் இருக்க அருள் புரிய வேண்டும்.” என்று கேட்டது.இறைவனாரும் “அவ்வாறே ஆகுக.” என்று அருள் புரிந்தார்.

பின்னர் நாரை நான்கு தோள்களும், மூன்று கண்களும் கொண்ட சிவகணமாக மாறி சிவலோகத்தை அடைந்து நந்தி கணங்களுள் ஒன்றானது.

நாரைக்கு வரம் அளித்த நாள் முதல் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் மட்டும் இன்றி நீரில் வாழும் உயிரினங்கள் ஏதும் இல்லாமல் போயின.

பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது இறைவனை அடைய சிறந்த வழி என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்..

ஓம் நமசிவாய வாழ்க

திருச்சிற்றம்பலம்.

கன்னியாகுமரியும் மிளிரும் மூக்குத்தியும் ...


ஒரு சமயம் பராந்தக பாண்டியன் என்னும் அரசன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அவனுடைய பட்டத்துத் தேவியாகிய உலக முழுதுடையாள் மூக்கில் அந்த மூக்குத்தி ஒளிவிட்டது. அவள் மதுரை மாநகரில் எழுந்தருளியிருக்கும் மீனட்சியம்மையை நாள்தோறும் தரிசிக்காமல் இருப்பதில்லை. மாதம் ஒரு முறை வெள்ளிக் கிழமையன்று இங்கே வந்து கன்னியாகுமரி யம்பிகையைத் தரிசித்துச் செல்வாள். அதுவரையில் இந்த மூக்குத்தி தாயிடமிருந்து பெண்ணுக்குத் தடையின்றி வந்து கொண்டே இருந்தது. இப்போது உலக முழுதுடையாளுக்கு மைந்தன் பிறந்தான். மறுபடி இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அதற்குப் பெண்ணே பிறக்காமல் இருக்கவே அந்த மூக்குத்தி பல பேருடைய ஆசையைத் தூண்டியது. அவளுடைய மூத்த மகனாகிய அறிமர்த்தனனுடைய மனைவி அது தனக்குத்தான் கிடைக்கப் போகிறதென்று எண்ணியிருந்தாள். பட்ட மகிஷிக்குப் பெண் குழந்தை இல்லையாதலால், அந்த மூக்குத்தியைப் பெரும் உரிமை, அடுத்தபடி பட்டமகிஷி ஸ்தானம் வகிக்கப்போகும் தனக்குத்தான் என்று அவள் எண்ணியதில் நியாயம் இருக்கத்தான் இருந்தது. இந்த ஆசையை அவள் பேச்சுவாக்கில் ஒருநாள் அந்தப் புறத்தில் வெளியிட்டு விட்டாள். அதிலிருந்து தீப் பற்றிக் கொண்டது. பாண்டிய அரசர் காது வரைக்கும் அது சென்றது. உண்மையாகவே இது புதிய கலகத்துக்கு விதை என்று எண்ணி அவன் கவலைப்பட்டான்.

பட்டமகிஷிக்கு அடுத்த ராணிக்கு ஒரு மகள் இருந்தாள். “தாயிடமிருந்து மகளுக்குச் செல்வதுதான் சம்பிரதாயமே ஒழிய மருமகளுக்குப் போவது தவறு. மகாராணிக்குச் சொந்தப்பெண் இல்லாவிட்டாலும் பெண் முறையில் இருப்பவள் நான். என்னுடைய பெரியம்மாவுக்கு நான் பெண்தானே? ஆதலால், மூக்குத்தியைப் பெரும் உரிமை எனக்குத்தான்” என்றால் அவள்.

மற்றவர்கள் பார்த்தார்கள். தங்களுக்குக் கிடைக்காமல தங்களோடு இருக்கும் வேறு ஒருத்திக்குப் போவதாவது என்ற பொறாமை அவர்களுக்கு. அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள்.

“இந்த மூக்குத்தி ஒரே இடத்தில் இருக்கிறது. மூன்று சோழர் அரண்மனையிலும் பாண்டியர் அரண்மனையிலும் மாறி மாறி இருந்து வருகிறது. இங்கிருக்கும் பெண் அங்கே போனால் உடன் போயிற்று; அங்கிருக்கும் பெண் இங்கே வந்தால் உடன் வந்தது. இப்போது இங்கிருக்கும் பெண் அங்கே போக வழி இல்லை. பெண் இல்லையே ஒழிய மூக்குத்தி இருக்கிறது. அதனால், சோழ நாட்டு இளவரசனுக்கு யாரை மணம் புரிவிக்கிறார்களோ, அந்தப் பெண்ணுக்கே போக வேண்டியது இது” என்றார்கள்.

“கையில் இருப்பதை வேண்டாம் என்று கொடுத்து விடுவதா?” என்று உரிமை கொண்டாடியவர்களில் ஒருத்தி கேட்டாள்.

“அப்படி அன்று; அப்படிப் போனது மறுபடியும் அங்கிருந்து இங்கே பெண் வரும்போது இங்கேதானே வரப்போகிறது?” என்றால் மற்ற ராணிகளில் ஒருத்தி.

“அப்படியானால் என்னையே சோழகுலத்தில் வாழ்க் காயப்படுத்தி மூக்குத்தியையும் கொடுத்துவிடுவது” என்று இரண்டாம் ராணியின் பெண் சொன்னாள்.

“உன்னைச் சோழ இளவரசன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமே!” என்று மற்றவர்கள் சிரித்தார்கள்.

“ஏன், நான் முறையுடையவள் அல்லவா?”

“நன்றாகச் சொன்னாய்! பட்டமகிஷியின் வயிற்றில் பிறந்தாலொழிய உனக்கு முறை எப்படி உண்டாகும்?” என்று கேட்டாள் ஒருத்தி.

இப்படியாக மறுபடியும் அந்த மூக்குத்தி பாண்டியனுடைய அந்தப்புரத்தில் குழப்பத்தை விளைவித்தது. அரசி உலகமுழுதுடையாள் யோசனையில் ஆழ்ந்தாள். பராந்தக பாண்டியனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “இப்போதே அதைப்பற்றிய கவலை எதற்கு?” என்று மேலுக்கு அவன் சொல்லிவிட்டான். ஆனாலும் நாளைக்கு இந்தச் சிக்கல் வந்தால் எப்படியாவது முடிவு காணத்தானே வேண்டும் என்ற கவலை மாத்திரம் அவன் உள்ளத்துள் இருந்தது.

மகாராணி இந்தச் சிக்களைப்பற்றி யோசித்தாள். ஒரு முடிவும் அவளுக்குத் தோன்றவில்லை. ஒரு நாள், வெள்ளிக் கிழமை, இங்கே தேவி கண்ணியாகுமரியைத் தரிசிக்க வந்திருந்தாள். “தாயே, இதற்கு நீதான் ஒரு வழி காட்ட வேண்டும்” என்று அவள் பிரார்த்தித்தாள். அப்போது தேவியின் மூக்கில் இருந்த மூக்குத்தி பழையதாகப் போனபடியால் கீழே விழுந்துவிட்டது. தான் பிரார்த்தனை செய்யும்போது அது விழவே, மகாராணி அதையே தேவியின் குறிப்பாக ஏற்றுக்கொண்டாள். அவள் உடம்பு புளகம் போர்த்தது. கண்ணீர் தாரை தாரையாக வந்தது. கீழே விழுந்து வணங்கி எழுந்தாள். சரசர வென்று தன மூக்குத்தியைக் கழற்றினாள். கங்கை நீர் அங்கே அபிஷேகத்துக்கு வைத்திருந்தார்கள். அதைக் கொண்டு வரச் செய்து இதைக் கழுவினாள். “தாயே, இதை நீ ஏற்றுக் கொள். பாண்டிய குலத்தால் காப்பாற்றப் பெரும் குமரியென்று ஒரு வியாஜத்தை வைத்துக்கொண்டாலும் உண்மையில் நீ எங்களைக் காப்பாற்றுகிறாய். உலகத்துக் கெல்லாம் தாயாகிய நீ பாண்டியனுக்குக் குமரியாக அவதாரம் செய்தாய். இன்னும் குமரியாகவே இருக்கிறாய். நீ தான் இதை எற்றுக்கொள்ளுவதற்கு உரிய குமரி. என்னைப் போன்றவர்கள் நாசியில் இது இருந்தால் உலக மணத்தோடு இனைந்து காமக் குரோத லோப மோக மத மாச்சரியங்களை உண்டாக்கும். உன் நாசியில் இருந்தால் ஞான மணம் வீசும். அரண்மனையும் குலமும் நாடும் மாறி மாறிச் சென்று நிலையின்றி வாழும் இதற்கு இனிமேல் நிலையுள்ள வாழ்வு கிடைக்கட்டும். எவள் எப்போதும் குமரியோ அவளை அடைந்தால் இதற்கு ஊர் சுற்றுகிற வேலை இல்லாமற் போய்விடும். தாயே! எங்கள் கவலை ஓய்ந்தது; சிக்கல் தீர்ந்தது. உடம்பிலுள்ள ஆதாரங்களில் உள்ள கிரந்திகளாகிய முடிச்சைப் பேதிக்கும் லலிதாம்பிகை அல்லவா நீ? இந்த முடிச்சையும் பேதித்து விட்டாய். தாயே! எங்கள் குலத்துக்குக் குமாரியே! எனக்கும் நீதான் குமாரி. இந்தா! நீ கன்னியாக இருந்தபடியே இந்தச் சீதனத்தை ஏற்றுக் கொள்” என்று கங்கையால் கழுவிய அதைத் தன் கண்ணீராலும் கழுவி அர்ச்சகர் கையில் அளித்தாள்.

அவர் பிரமித்துப் போனார். என்றும் இல்லாதபடி அம்பிகையின் பழைய மூக்குத்தி இன்று விழுந்தபோது உண்டான ஏக்கம் இப்போது நீங்கிவிட்டது. அது அம்பிகையின் திருநாசியில் நட்சத்திரத்தைபோல் ஒளிவிடத் தொடங்கியது.

பாண்டியன் இந்த முடிவை ஏற்றுக்கொண்டான். உலகமே ஏற்றுக்கொண்டது. அத்தகைய மூக்குத்தியை நீ உன் கண்ணாலும் கருத்தாலும் அழுக்கு ஆக்கலாமா? சொல். அது பாவம் அல்லவா?

5

பராக்கிரம பாண்டியன் கண்ணைத் திறந்து பார்த்தான். பதுமை விளக்கு ஒளிர்ந்துகொண்டே யிருந்தது. லலிதா சஹஸ்ரநாமம் முடியும் தருவாயில் இருந்தது. 993-ஆம் நாமமாகிய “ஓம் அஞ்ஞான த்வாந்த தீபிகாயை நம:” (அஞ்ஞானமாகிய இருட்டைப் போக்கும் தீபம் போல் உள்ளவள்) என்பதைச் சொல்லிக் குங்குமத்தை அம்மையின் திருவடியில் இட்டார் அர்ச்சகர்.

பாண்டியன் கண்ணில் நீர் அரும்பியது. “ஆம், தாயே! நீ என்ன அஞ்ஞானத்தை இப்போது போக்கிவிட்டாய். இந்த விளக்குப் போக்கியதா? நீதான் போக்கினாயா? அல்ளது உன் திருநாசியிலுள்ள அணி மாயையை உண்டாக்கிப் பின்பு துடைத்துவிட்டதா?- எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. நான் மனசால் பாவியாகிவிட்டேன். இதற்குப் பிராயச்சித்தம் செய்யத்தான் வேண்டும்” என்று சொல்லிக் கன்னத்தில் அறைந்துகொண்டான்.

“ஓம் லலிதாம்பிகாயை நம:” என்று அர்ச்சகர் அர்ச்சனையை நிறைவேற்றினார்.

பிறகு பாண்டியன் தான் செய்த அபசாரத்துக்குப் பிராயச்சித்தம் செய்தான். பல அரிய வைரங்களைத் தொகுத்து ஆபரணங்கள் செய்து அம்பிகைக்குப் பூட்டினான். அவன் தான் நினைத்த பிழைக்கு இரங்கித் தன் கண்ணிலிருந்து முத்தை உதிர்த்து ஆரமாக்கின அப்பொழுதே அவனை அம்பிகைதான் மன்னித்துவிட்டாளே!

காளஹஸ்தீஸ்வரரையும், அம்பாள் ஞானப் பூங்கோதை

இன்று காளஹஸ்தீஸ்வரரையும், அம்பாள் ஞானப் பூங்கோதையையும் வணங்குங்கள். பிறவா நிலை வேண்டுங்கள். காளஹஸ்தி தல வரலாறு சொல்வது அதுதான் !
====================
திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தியில், காளத்திநாதர் கோவில் பிரபலமானது. பஞ்சபூத தலங்களில், வாயுவுக்குரிய தலம் இது. இங்கே, சிவராத்திரி உற்சவம் பிரமாண்டமாக நடக்கும். பூச்சிகளும், விலங்குகளும் கூட, இறைவன் மீது அன்பு வைத்து, அவரை அடைந்துள்ளபோது, ஆறறிவு படைத்த மனிதன், அவரைப் பற்றிச் சிந்திக்காமல் கூட இருக்கிறானே என்பதை, இத்தல வரலாறு எடுத்துச் சொல்கிறது. சிலந்தி ஒன்று, சிவனை வழிபட நினைத்தது. தன்னிடம் சுரக்கும் நூல் போன்ற திரவத்தால், மதில், கோபுரம், மண்டபம், மாளிகை, கருவறை, கலசம் என, கோவில் அமைத்தது. யாராவது அதை அறுத்து விட்டால், விடாமல் புதுப்பித்தது.

சிலந்தியின் அன்பை சோதிக்க விரும்பிய சிவன், தன் சன்னிதியில் இருந்த விளக்கை, சுடர்விட்டு எரியும்படி செய்தார். ஒரு நொடியில் சிலந்தி அமைத்த கோவில் எரிந்தது. மனம் வருந்திய சிலந்தி, உயிர்விடத் துணிந்து, விளக்கில் விழ முயன்ற போது, தடுத்தார் சிவன். சிலந்திக்கு காட்சி தந்து, "வேண்டும் வரம் கேள்!' என்றார்.

உலகப்பொருட்கள் மீது ஆசையில்லாத சிலந்தி, "பெருமானே... உன் திருவடியின் கீழ் அமரும் பாக்கியத்தை தர வேண்டும்...' என்றது. சிவனும் அவ்வாறே அருள்புரிந்தார். காளன் என்னும் பாம்பு, அரிய வகை ரத்தினக்கற்களை சிவனின் திருமுடியில் வைத்து பூஜித்து வந்தது. அத்தி எனும் யானை, அந்த ரத்தினங்களை தள்ளிவிட்டு, ஆற்றிலிருந்து நீர் எடுத்துவந்து, சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளை வைத்துச் சென்றது. மறுநாள் வந்த பாம்பு, "ரத்தினக் கற்களை சிதறடித்து, ஏதோ இலையை குப்பை போல் போட்டிருக்கின்றனரே...' என்று புலம்பியவாறே, அதைச் சுத்தப்படுத்தி, மீண்டும் ரத்தினக் கற்களை இறைவன் திருமுடியில் சூட்டி, பூஜித்து சென்றது.

யானை வழக்கம் போல் வந்து மணிகளைத் தட்டிவிட்டு, வில்வத்தைச் சூட்டிச் சென்றது. பல நாட்கள் இதே நிலை தொடர்ந்தது. ஒருநாள், யார் இப்படி செய்கின்றனர் என அறிய, சன்னிதிக்குள் மறைந்திருந்தது பாம்பு. அப்போது யானை, அங்கு வந்து மணிகளைத் தட்டி விடவே, ஒளிந்திருந்த பாம்பு சீறியெழுந்து, யானையின் துதிக்கையில் உள்ள துளைக்குள் புகுந்து, மத்தகத்தை அடைந்து குடையத் தொடங்கியது.

யானை அதைத் தாங்க முடியாமல், நிலத்தில் தும்பிக்கையை அடித்தும், ரத்தம் வரும் அளவு மத்தகத்தை தரையில் தேய்த்தும் பார்த்தது; குடைச்சல் தீரவில்லை. இதனால், "உடலில் புகுந்த பாம்பைக் கொன்று, நாமும் இறப்போம்...' என்று கருதி, கோபத்துடன் அங்குள்ள மலைமேல் மோதியது.

இந்த முழக்கத்தைக் கேட்ட தேவர்கள் நடுங்கினர். குகைகளில் தங்கியிருந்த முனிவர்கள் பயந்தனர். யானை தலை பிளந்து மயங்கி விழுந்தது. பாம்பு வெளியே வர முடியாமல் தவித்தது. அப்போது சிவபெருமான் உமையம்மையோடு காளை வாகனத்தில் தோன்றி, யானையை எழுப்பினார். உள்ளிருந்த பாம்பு வெளியே வந்தது. இரண்டிற்கும் தரிசனம் தந்த சிவன், அவற்றிற்கு முக்தியளித்தார்.

"சீ' என்றால் சிலந்தி. காளம் என்றால் பாம்பு. ஹஸ்தி (அத்தி) என்றால் யானை. சிலந்தி, பாம்பு, யானை ஆகியவை இத்தலத்து இறைவனை வழிபட்டு முக்தி அடைந்ததால் இத்தலத்தை, "சீகாளத்தி' என்றும், காளஹஸ்தி என்றும் அழைத்தனர். விலங்குகள் கூட கடவுளை அடைய, தங்கள் பக்தியை அதிதீவிரமாக செலுத்தின. ஆனால், ஆறறிவுள்ள மனிதன், கடவுளை வணங்குவதற்கே தயக்கம் காட்டுகிறான். மனிதப்பிறவி எடுத்ததன் பலனே, கடவுளை வணங்கி, பிறவித்தளையில் இருந்து விடுபடுவதற்கு தான் என்பதை காளஹஸ்தியின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இங்கு சென்று காளஹஸ்தீஸ்வரரையும், அம்பாள் ஞானப் பூங்கோதையையும் வணங்குங்கள். பிறவா நிலை வேண்டுங்கள்.

மஹாசங்கடஹரசதுர்த்திநாள் 03. 09.2023 ஞாயிற்றுக்கிழமை

#மஹாசங்கடஹரசதுர்த்தி
நாள் 03. 09.2023 ஞாயிற்றுக்கிழமை
தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும்.

கோயில்” என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார். தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில்,

நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.அவரைப் “பிள்ளையார்” என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம்

 சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை” என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே “பிள்ளை” என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்” என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.

“குமாரன்” என்றால் “பிள்ளை” என்றே அர்த்தம்.

பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் “குமரக் கடவுள்” என்கிறோம். ஆனால், அவரைக் “குமரனார்” என்பதில்லை; “குமரன்” என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.

முதல் பிள்ளை இவர்; குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரபஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின.

அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்

பிரணவ ஸ்வரூபமான, பிள்ளையாரை சங்கட சதுர்த்தி தோறும் வழிபட நம் சங்கடங்கள் விலகும்.
ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி வந்தாலும், பிள்ளையார் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்தி ‘மகாசங்கடஹர சதுர்த்தி’ எனப்படும். அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

கஷ்டங்கள் நம்மை
விட்டு விலகி போகவேண்டும்.. எல்லாரும், கோவில்களிலும்,
அவரவர் வீடுகளிலும், முடிந்த வரைக்கும் மஹா கணபதி ஹோமம் செய்து பயன்பெருக.. 

Tuesday, August 29, 2023

தோஷங்கள் நீங்கும் சந்தோஷம் பெருகும்! மஹா சங்கடஹர சதுர்த்தி

தோஷங்கள் நீங்கும் சந்தோஷம் பெருகும்! மஹா சங்கடஹர சதுர்த்தி!
விநாயகர், முழுமுதற் கடவுள். அவருக்கு உகந்த விரதம், சங்கட ஹர சதுர்த்தி விரதம். அதிலும் மிக விசேஷமானது மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்.

சந்திரனுக்குக் கிடைத்த சாபம்!

ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது, அங்கு விநாயகர் விளையாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்தான். விநாயகர் குதித்துக் குதித்து விளையாடுவதற்கு ஏற்ப, அவருடைய தொந்தியும் குலுங்கிகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், சந்திரனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. விநாயகரைப் பார்த்து கேலியாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு விநாயகருக்குக் கோபத்தை வரவழைத்துவிட்டது. உடனே, ``நீ தேய்ந்து மறையக்கடவாய் என்று சந்திரனைச் சபித்துவிட்டார்.

சந்திரன் மறைந்ததால், உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் விநாயகரைச் சரண் புகுந்தார்கள். தன் தவற்றுக்கு வருந்திய சந்திரனும் தன்னை மன்னிக்குமாறு வேண்டித் தவம் புரிந்தான். மனம் இரங்கிய விநாயகர், சந்திரனைத் தன் தலையில் சூடிக்கொண்டார்.

`பாலசந்திரன் என்ற பெயருடன் அருள்பாலித்து, சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார். அதாவது, 15 நாட்கள் மெல்லத் தேய்ந்து (தேய் பிறை), பின்பு 15 நாட்கள் மெள்ள வளரும்படியான (வளர் பிறை) வரத்தை அருளினார். அப்படி, சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி.

`சங்கட ஹர' என்றால், `சங்கடத்தை (துன்பத்தை) நீக்குதல் என்று பொருள். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பலனாக வரும் எல்லாவித இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளைத் தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி மாதம்தோறும் வரும் என்றாலும், விநாயகர் அவதரித்த ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்குப் பிறகு வரும் (தேய்பிறை) சதுர்த்தி, மஹா சங்கடஹர சதுர்த்தி என்று கூடுதல் சிறப்பு பெறுகிறது. அன்றைய தினத்தில் விநாயகரை வணங்கி, வழிபடுவோருக்கு, சகலவிதமான சங்கடங்களும் விலகும்; சந்தோஷம் பெருகும்.

நான்காம் பிறையை பார்க்கக் கூடாது ஏன்?

பொதுவாக, `நாலாம் பிறையைப் பார்க்கக் கூடாது என்பார்கள் பெரியவர்கள். நான்காம் நாள் பிறையைப் பார்ப்பவர்களுக்கு `மித்ர தோஷம்' ஏற்படும் என்று வரலாறு கூறுகிறது. ஒருமுறை, பகவான் கிருஷ்ணரே நாலாம் பிறையைப் பார்த்துவிடுகிறார். அதன் விளைவாக அவருக்கும் மித்ர தோஷம் ஏற்படுகிறது.

சத்ராஜித் என்னும் மன்னன் சூரியனை வழிபட்டு, அதன் பலனாக சூரிய பகவானிடமிருந்து சியமந்தக மணியைப் பெற்றான். அவன் அந்த ரத்தினத்தை அணிந்திருந்தபோது, சூரிய பகவானைப்போல் பிரகாசத்துடன் காணப்பட்டான். அந்த நேரத்தில், அங்கு வந்த கிருஷ்ண பகவான், அந்த மணியைக் கையில் எடுத்துப் பார்க்க ஆவல்கொண்டார். ஆனால், சத்ராஜித் அதற்கு மறுத்துவிட்டான்.

பிறகு ஒருமுறை, சத்ராஜித்தின் சகோதரன் ப்ரசேனன், அந்த ரத்தினத்தை (சியமந்தக மணி) அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்றான். அப்போது சிங்கம் ஒன்று அவனைத் தாக்கிக் கொன்று, அந்த ரத்தினத்தையும் எடுத்துச் சென்றுவிட்டது. இதனால், சத்ராஜித் மன்னனும், மற்ற பொதுமக்களும் பகவான் கிருஷ்ணர் மீதே சந்தேகம் கொண்டனர். இதனால், கிருஷ்ணர் அவமானத்துக்குள்ளாக நேர்ந்தது.
இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீநாரதர் கிருஷ்ணரிடம் வந்தார். `நாலாம் பிறையைப் பார்த்ததால் வந்த விளைவே இது f என்றார். `சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை தரிசித்தால், இந்தப் பழியில் இருந்து நீங்கலாம்' என்று ஆலோசனையும் கூறினார். அதன்படியே, கிருஷ்ணரும் விநாயகரை வழிபட்டு, தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க, அந்த ரத்தினத்தைத் தேடி தானே புறப்பட்டார். இறுதியில் கரடிக் கூட்டத்தின் தலைவனான ஜாம்பவானிடம் அந்த ரத்தினம் இருப்பதை அறிந்து,  அவனுடைய குகையை நோக்கிச் சென்றார்.

இந்த ஜாம்பவான் வேறு யாருமல்ல; ராமாவதாரத்தின்போது சீதா பிராட்டியைக் கண்டடைய ஸ்ரீராமருக்கு உதவி செய்தவரேதான்! ஆஞ்சநேய சுவாமிக்கு அவரது பலம் குறித்து நினைவூட்டியவரும் இவரே. இவருக்கு ஸ்ரீராமபிரானைக் கட்டித் தழுவ வேண்டுமென்ற ஆசை நெடுநாளாக இருந்தது. ஆனால், தன் உடம்பில் இருக்கும் ரோமங்கள் அவரை புண்ணாக்கிவிடக்கூடும் என்று அஞ்சி, தமது ஆசையை  வெளிப்படுத்தாமல் அடக்கிக்கொண்டிருந்தார்.

ராமர் மீது இந்த அளவுக்கு பக்திகொண்டிருந்த ஜாம்பவான், ஸ்ரீகிருஷ்ணர்தான் ராமராகவும் அவதரித்தவர் என்பதை அறியாமல், அவருடன் போர்புரிய ஆயத்தமானார். துவந்த யுத்தமும் தொடங்கியது. இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிடும்போதுதான், தன்னுடன் சண்டை இடுபவர் ஸ்ரீராமர் என்று அறிந்தார் ஜாம்பவான்.

பின்னர், நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கோரி, தனது மகளான ஜாம்பவதியை கிருஷ்ணருக்கு மணமுடித்துவைத்தார். சமந்தகமணி என்கிற ரத்தினத்தையும் அவரிடமே ஒப்படைத்தார். அந்த சமந்தக மணியை சத்ராஜித்திடம் சேர்ப்பித்தார் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ணர் மீது வீண் பழி சுமத்தியதற்காக வருந்திய சத்ராஜித், அவரிடம் மன்னிப்புக் கோரி, தன் மகளான சத்யபாமாவையும் அவருக்கே மணமுடித்துத் தந்தான். இந்தப் புராணக் கதையைப் படிப்பவர்கள் அனைவரும், தங்களுக்கு ஏற்பட்ட வீண்பழியிலிருந்து நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம்.    

நாமும், சிராவண மாதத்தில் வரும் இந்தச் சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வழிபட்டால், அந்த வருடம் முழுக்க வரும் சங்கட ஹர சதுர்த்திகள் அத்தனைக்கும் சேர்த்து வழிபட்ட பலனை அடையலாம். நாளை மஹா சங்கடஹர சதுர்த்தி. விரதம் இருப்பது எப்படி என்பதை அறிவோமா?

விரதம் இருக்கும் முறை:

காலையில் நீராடி, தூய ஆடை அணிந்து, விநாயகர் சந்நிதிக்குச் சென்று, அவரை வழிபட்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்று முழுக்க உபவாசம் இருக்க வேண்டும். மாலையில், விநாயகர் கோயிலுக்குச் சென்று, சங்கட ஹர சதுர்த்தி பூஜையில் பங்கேற்க வேண்டும். வீடு திரும்பி, சந்திரன் உதயமானதும், அதைப் பார்த்து வணங்க வேண்டும். பிறகு, நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விநாயகரை வணங்கி விரதத்தை முடித்துக்கொள்ளலாம். அன்றைய தினம் முழுக்க விநாயகரைத் துதிப்பது நற்பலன்களைத் தரும்.

பட்டீஸ்வரம் துர்கைபட்டீஸ்வரம் துர்கை மாங்கல்யம் காப்பாள்; திருஷ்டியை நீக்குவாள் துர்காதேவி!

பட்டீஸ்வரம் துர்கைபட்டீஸ்வரம் துர்கை   மாங்கல்யம் காப்பாள்; திருஷ்டியை நீக்குவாள் துர்காதேவி! 
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபடுங்கள். மங்கல வாழ்வு தருவாள். மங்காத செல்வங்களைத் தந்திடுவாள். பெண்களின் கண்ணீரையும் ஆண்களின் துக்கத்தையும் துடைத்தெறிவாள். வீட்டைச் சுற்றியுள்ள திருஷ்டியையும் நீக்கிடுவாள். சகல செளபாக்கியங்களுடனும் மாங்கல்ய பலத்துடனும் வாழவைப்பாள் துர்காதேவி.

தேவியின் பல அவதாரங்களில் துர்கையும் ஒன்று. கடும் உக்கிரமும் அதேசமயம் கருணையும் கொண்டதாகத் திகழ்பவள் துர்கை என்கிறது புராணம். சிவாலயங்களிலும் பெருமாள் கோயில்களிலும் துர்கைக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டு, அங்கே சாந்நித்தியமும் சக்தியும் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சிவாலயத்தில் உள்ள துர்கைக்கு சிவ துர்கை என்றும் பெருமாள் கோயிலில் உள்ள துர்கைக்கு விஷ்ணு துர்கை என்றும் பெயர் அமைத்து வழிபடப்படுகிறது.

ஆலயத்தில், கோஷ்டத்தில் பிராகாரமாக வலம் வந்து துர்கையை வழிபடவேண்டும். துர்கை எப்போதுமே ஆக்ரோஷ நாயகிதான். அதேசமயம், தீயவர்களிடம் மட்டுமே தன் கோபத்தைக் காட்டுவாள். தன்னைச் சரணடைவோருக்கு எப்போதும் அரணனாகத் திகழ்வாள்.

தேவர்களையும் ரிஷிகள் பெருமக்களையும் அழிப்பதற்காக, ஆயிரம் அக்ரோணி சேனைகளுடன் பலம் பொருந்திய தளபதிகளுடன் படையெடுத்தான் துர்கமன் எனும் அரக்கன். இதைக் கண்டு கதறிக் கலங்கினார்கள் தேவர்கள். தவித்து மருகியவர்கள் அம்பிகையை, பராசக்தியை சரணடைந்தார்கள்.

தேவர்களையும் ரிஷிகளையும் ஓரிடத்தில் வைத்து, அவர்களைச் சுற்றி அக்னி மண்டலத்தை உருவாக்கினாள். அவர்களைப் பாதுகாத்தாள்.

அடுத்து, துர்கமனை அழிக்கப் புறப்பட்டாள் தேவி. ஐந்து பாணங்கள் புறப்பட்டுத் துளைக்கும் அம்பை எய்தினாள். அவனுடைய உடலிலிருந்து பஞ்சப் பிராணனும் வெளியே வந்தது. செத்தொழிந்தான் துர்கமாசுரன்.

அவன் உடலிலிருந்து வந்த மந்திரங்கள் பேரொளியாக தகதகத்தன. அவை லோகநாயகியான பராசக்தியினுள்ளே பிரவேசித்தன. இதனால் அம்பாளுக்கு சர்வ மந்திரமயீ எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

துர்கம் என்றால் கோட்டை என்று அர்த்தம். துர்கை என்றால் கோட்டையின் நாயகி என்று அர்த்தம். துர்கமன் எனும் அசுரனை அழித்த்து, துக்கங்களையெல்லாம் போக்கியவள் என்பதால், அம்பிகைக்கு துர்கை எனும் திருநாமம் அமைந்ததாக விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

துர்கையை வழிபடுவதும் அவளின் ஸ்லோகத்தைச் சொல்லி அவளை ஆராதிப்பதும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. எதிர்ப்புகளையெல்லாம் அடக்கவல்லவை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஓம் ஜதா ஜூத் சம்யுக்தமருதேன்னு க்ரித் லக்ஷ்மன்
லோகாயந்த்ரா சந்யுக்தம் பட்மெண்டு சத்ய ஷான்நாம்

எனும் துர்காதேவியின் ஸ்லோகத்தைச் சொல்லி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபடுங்கள். மங்கல வாழ்வு தருவாள். மங்காத செல்வங்களைத் தந்திடுவாள். பெண்களின் கண்ணீரையும் ஆண்களின் துக்கத்தையும் துடைத்தெறிவாள். வீட்டைச் சுற்றியுள்ள திருஷ்டியையும் நீக்கிடுவாள். சகல செளபாக்கியங்களுடனும் மாங்கல்ய பலத்துடனும் வாழவைப்பாள் துர்காதேவி.

மூன்று வேளையும் நிறம் மாறும் 1000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம்... இன்றுவரை துலங்காத மர்மம்!...

மூன்று வேளையும் நிறம் மாறும் 1000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம்... இன்றுவரை துலங்காத மர்மம்!...
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது.

தோல்பூரில் உள்ள 1000 ஆண்டு பழமைவாய்ந்த இந்த சிவனின் பெயர் அக்ஷலேஷ்வர் மஹாதேவ் என்பதாகும். இந்த லிங்கமானது காலை, நண்பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளில் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது.இந்த அதிசயமானது வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகழ்கிறது.

காலை நேரங்களில் சிவந்த நிறத்தில் காட்சியளிக்கும் இந்த லிங்கம் , நண்பகலில் காவி நிறத்தில் காட்சியளிக்கிறது,இரவில் கருப்பாக காட்சியளிக்கிறது. மீண்டும் காலையில் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது.

இதுகுறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில் இரவெல்லாம் கருப்பு நிறத்தில் இருக்கும் இறைவன் பகலில் சிவப்பு நிறத்தில் மாறி பக்தர்களை ஆசிர்வதிப்பதாக நம்புகின்றனர்.

மேலும் இந்த ஆலயத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்திருக்கிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது , இந்த சிவலிங்கத்தின் உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதன் அடிப்பகுதி ஆயிரம் அடிகளையும் தாண்டி, தரைக்குக் கீழே புதைந்து கிடக்கிறது. சிவன் அடிமுடி காண முடியாதவர் என்பதை உணர்த்துகிற இது ஆலயமாக விளங்குகிறது.

பூமியில் சிவன் காலடி எடுத்து வைத்த ஒரே இடம் இது தான். இந்த இடம்தான் பூமியின் மையமாக இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். 

திருமணம் ஆகாதவர்கள் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத்துணை அமைந்துவிடும் என்கின்றனர்.

Monday, August 28, 2023

27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் இணைந்த கோயில்.

இன்று திருவோணம் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்திருக்கோயில்
27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரியதிருக்கோயில்
27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும்திருவாதிரையும்தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம், வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் அலர்மேல் மங்கா சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்.
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்
27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம், வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் அலர்மேல் மங்கா சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்.

தல வரலாறு : பிரம்மா தன் அகங்காரம் நீங்க, சத்தியவிரதம் எனப்படும் காஞ்சிபுரத்தில் அஸ்வமேத யாகம் செய்தார். அதில் புண்டரீக மகரிஷியும் கலந்து கொண்டார். யாகம் முடிந்ததும் நாராயண சதுர்வேதி மங்கலம் எனப்படும் இத்தலத்திற்கு வந்து, அங்கிருந்த கோயிலுக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஆவுடையையும், அதின் மேலிருந்து லிங்கத்தையும் பார்த்து விட்டு பெருமாள் கோயில் இல்லை என்ற ஏமாற்றத்துடன் வெளியே வந்தார். அப்போது சிவன் ஒரு வயோதிகர் வேடத்தில் அங்கு வந்து, மகரிஷியின் மனக்குறையை அறிந்து, ரிஷியே நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான் என்றார். ஆனால் ரிஷி மறுத்தார். வயோதிகர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு , விஷ்ணு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று தான் என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து,ரிஷியே ! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன்.உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும்,என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் தானே பிரசன்னமாகி காட்சி தந்ததால், இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆனார்.

திருவோண நட்சத்திர தலம்: சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால், அவனது கலைகள் தேயத்தொடங்கியது. இதனால் இவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள். உடனே அவள் இத்தலத்தில் பெருமை அறிந்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர தலமானது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, ரோகிணி, அஸ்தம் ஆகிய சந்திரனுக்குரிய நாளிலோ, மூன்றாம் பிறை நாளிலோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால், கல்வி அறிவு வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து நட்சத்திரக்காரர்களும், தங்களது வேண்டுதல் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

இருப்பிடம் : வேலூரிலிருந்து (20 கி.மீ) சென்னை செல்லும் வழியில் உள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ. தூரம் சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். இங்கு இரண்டு பெருமாள் கோயில் இருப்பதால் அலர்மேல் மங்கை சமேத பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்.

திறக்கும் நேரம் : காலை 7.30  மதியம் 12 மணி, மாலை 4.30  இரவு 7.30 மணி

போன் : 04177 254 929, 94868 77896

சென்னைக்கு அருகில் மகேந்திரா சிட்டி அருகே குடி கொண்டிருக்கிறார் ஹயக்ரீவர்.

கல்வியில் சிறக்க அவசியம் போக வேண்டிய கோயில்...!
கல்விக்கு கடவுளாம் சரஸ்வதி தேவி குருவாகவழிபடும் ஹயக்ரீவரை கல்வியும், ஞானமும் அறிவும், ஆற்றலும் சித்திக்க வழிபட வேண்டும்.

சென்னைக்கு  அருகில் மகேந்திரா சிட்டி அருகே குடி கொண்டிருக்கிறார் ஹயக்ரீவர்.

மிகச்சரியாக மகேந்திர சிட்டிக்கு எதிரே இருக்கும் சாலையில் சென்றால் 3 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே நகரத்திற்கான சாயல் இருக்கும். அதன் பின்னர் சிறு குன்றுகளும், வயலும், குளமுமான பாதை. கொஞ்சம் தொலைவு பயணப்பட்டதும் செட்டிப்புண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் ஆலயம் வந்துவிடும்.

வழக்கமாக கோயில்களுக்கு முன்பாக தேங்காய், பூ, பழங்கள் அதிகம் விற்கப்படும். இங்கோஅந்த கடைகளை விட அத்தனை விதமான நோட்டுப்புத்தகங்களும், பேனாக்களுமாக விற்கும் சிறு கடைகளை அதிகம் பார்க்கலாம். 

யோக நிலையில் அமர்ந்த கோலத்துடன் நான்கு கரங்களுடன் சங்கு சக்கர தாரியாக இருக்கும் இறைவனின் முகத்தை தரிசிக்கலாம். 

அவர் முன்பாக நோட்டு பேனாவையோ, புதிய வகுப்பு பாடப் புத்தகங்களையோ தேர்வு நேரத்தில் ஹால் டிக்கெட்டுகளோ வைத்து வணங்கி பெற்றோரும் பிள்ளைகளும் ஆசி பெற்று செல்கிறார்கள். 

வகுப்பின் தொடக்கத்தில் செட்டிப்புண்ணியம் கோயிலுக்கு செல்வது பலருக்கும் அந்தக் கடவுளே தங்கள் பிள்ளைகளுக்கு துணையாக இருப்பது போன்ற தைரியத்தை தந்துவிடும்.

தேர்வு நெருக்கத்தில் கோயிலுக்கு செல்பவர்கள் அங்கு திரண்டுள்ள கூட்டத்தை பார்த்தாலே மிரண்டு போய்விடுவார்கள். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசை நிற்கும்.

ஹயக்ரீவர் கல்விக் கடவுளாம் சரஸ்வதிக்கே மகா குருவானவர். அரக்கர்களால் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை மீட்டுக் கொடுத்தவர். மங்கிய அறிவையும், ஞானத்தையும் அவரே மீட்டுத் தருவார் என்று நம்பி இங்கு வந்து யோக ஹயக்ரீவரை தரிசித்து செல்கிறார்கள்.

1848ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கோயில் சிலைகள் கொள்ளை போவதை தடுக்க பல பிரயத்தனங்களை எடுக்க வேண்டி இருந்தது. அப்படி கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் இருந்து தேவநாதபெருமாளும், யோக ஹயக்ரீவரும், அப்போது அடர்ந்த காடாக இருந்த செட்டிபுண்ணியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அப்போதிருந்து இங்கேயே பிரத்யட்சமாக காட்சி அளிக்கிறார்.

கோயிலில் தென்படும் அழிஞ்சல்மரத்தில் படிக்கவும், திருமண தடைகள் நீங்கவும், வீடு கட்டவுமாக வேண்டுதல் வைத்து ஆடையின் ஈரிழைகளை கட்டி வைத்திருப்பதை காணலாம்.

ஹயக்ரீவருக்கு பிடித்தமான ஏலக்காய் மாலையை அணிவித்து வழிபடுவதும், அவருக்கு உகந்த புதன்கிழமை வணங்குவதுமாக அவரது அருளை பெறலாம்.
யோக ஹயக்ரீவரை வழிபட்டால், கல்வியும் ஞானமும் சித்திக்கும். கல்வித்தடைகள் அகலும், 

பேச்சில் சிரமம் உள்ளவர்கள் தேன்நிவேதனம் செய்து சாப்பிட்டுவர பேச்சுப் பிரச்னைகள் அகலும் என்பது நம்பிக்கை

“ஞானானந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ
வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே"

ஓம் நமோ நாராயணாய 🙏

ஆவணி அவிட்டம் பற்றிய தகவல்களும் !#ஹயக்ரீவர் ஜெயந்தி தகவல்களும் !!!

ஆவணி அவிட்டம் பற்றிய தகவல்களும் !#ஹயக்ரீவர் ஜெயந்தி தகவல்களும் !!!
ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும். இது ரிக்,யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும். இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கிய இருடிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர். தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.

சமசுகிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் எனபதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம்.

#ஹயக்ரீவர் #ஜெயந்தி இன்று 
#ஹயக்ரீவர்#மூலமந்திரம்&பலன்களும் !

உக்தீக ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய
ஸர்வம் போதய! போதய ... !!!

 ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் : --
ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே
நம: அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே:

வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே கர்மணே
ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே நம:!!
--------------------------------------

‘ஓம் வாகீஸ்வராய வித்ம ஹே
ஹயக்ரீவாய திமஹி 
தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்’ ... !!!

என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வந்தால், படிப்பில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிக மதிப்பெண் பெறலாம்.
-----------------------------------------------

ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும். செல்வாக்குடன் சொல்வாக்கும் நிறைந்த வக்கீல்கள், விற்பனை பிரதிநிதிகள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள், தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடக்கும்.

#இனியகாலைவணக்கம் !!!

Prasannam Astro Prasanna

சிவனுக்கு உகந்த திங்கட் கிழமை பிரதோஷம் தீராத வினையெல் லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன்.


🌹🌹சோமவார பிரதோஷம்
*********************************
சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட் கிழமை பிரதோஷம் தீராத வினையெல் லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். 

அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலக ண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங் களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

சிவ ஆலயத்திற்கு சென்றாலே நந்தியின் காதில் கஷ்டங்களை கூறி வணங்குவது பலரது வழக்கம் பிரதோஷ நாளில் நந்தி யிடம் அதிக வேண்டுகோள் வைப்பார்கள். பிரதோஷ வழிபாடு சிவனுக்கு உகந்தது. மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும்.

நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெ ழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிர தோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ் வர பூஜையிலும் கலந்துகொண்டு இறை வனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும்.

🌹தியானம் செய்ய சிறந்த நேரம்
****************************************
சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.

பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற் றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடு கின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராண ங்களில் கூறப்பட்டுள்ளது.

🌹பாவம் விலகி புண்ணியம் சேரும்
*******************************************
பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். 

இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக் கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனை கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

🌹நந்தியிடம் சொன்னால் நிறைவேறும்
************************************************
சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இரு ப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்ப வர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களை யும் சொன்னால் நந்திபெருமான் சிவனிட ம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. 

அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யு ம். நந்தியின் காதில் சொல்லும் நடைமு றை என்பது எல்லா கோவில்களிலும் இரு க்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவே றும் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு

🌹அபிஷேக பொருட்கள்
******************************
பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொ டுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். 
தயிர் - பல வளமும் உண்டாகும், 
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், 
நெய் - முக்தி பேறு கிட்டும்.
 இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் - சுகவாழ்வு, 
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

🌹சனி தோஷம் போக்கும் பிரதோஷ விரதம்
**************************************************
பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோ ஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. 

நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும். 

மாலை சிவன் கோவிலிற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒருபிடி வன்னி இலை ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தி யின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணி த்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனை யும் தொழுதால் சனி பகவானால் உண்டா கும் சகல துன்பங்களும் விலகிப் போகும். 

நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்பு டையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.

🌹ஈசனை வலம் வரும் முறை
************************************
பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்ச ணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈச னை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமா னை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். 

சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழு ம் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிற து. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ள ப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.

🌹சிவ தரிசனம்
*******************
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலய த்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். 

முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராய ணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப் படும் திருமுறை பாராயணத்தையும், மூன் றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையு ம் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும். 

பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதக ங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகி றது. 

பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருக ப்பெருமானோடும் இணைந்த சோமாஸ் கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம். சிவதரிசன ம் முடித்தபிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம்.

🌹நந்தி வழிபாடு
*********************
பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். 

பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவே தனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. நந்தியம்பெருமானு க்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்யலாம். 

அதே நேரத்தில் அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் , கொண்டக்கடலை ஆகியவற்றை நிவேத னமாக தரலாம். 

சிவ பெருமான் அபிஷேக பிரியன் என்பத னால் இன்று தூய பசும்பால் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யலா ம். எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர் க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக் தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும்.

🌹நாளை 21.11.2022 
சோமவார பிரதோஷம்
***************************
சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட் கிழமை பிரதோஷம் தீராத வினையெல் லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். 

அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலக ண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங் களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

சிவ ஆலயத்திற்கு சென்றாலே நந்தியின் காதில் கஷ்டங்களை கூறி வணங்குவது பலரது வழக்கம் பிரதோஷ நாளில் நந்தி யிடம் அதிக வேண்டுகோள் வைப்பார்கள். பிரதோஷ வழிபாடு சிவனுக்கு உகந்தது. மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும்.

நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெ ழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிர தோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ் வர பூஜையிலும் கலந்துகொண்டு இறை வனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும்.

🌹தியானம் செய்ய சிறந்த நேரம்
****************************************
சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.

பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற் றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடு கின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராண ங்களில் கூறப்பட்டுள்ளது.

🌹பாவம் விலகி புண்ணியம் சேரும்
*******************************************
பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். 

இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக் கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனை கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

🌹நந்தியிடம் சொன்னால் நிறைவேறும்
************************************************
சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இரு ப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்ப வர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களை யும் சொன்னால் நந்திபெருமான் சிவனிட ம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. 

அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யு ம். நந்தியின் காதில் சொல்லும் நடைமு றை என்பது எல்லா கோவில்களிலும் இரு க்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவே றும் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு

🌹அபிஷேக பொருட்கள்
******************************
பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொ டுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். 
தயிர் - பல வளமும் உண்டாகும், 
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், 
நெய் - முக்தி பேறு கிட்டும்.
 இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் - சுகவாழ்வு, 
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

🌹சனி தோஷம் போக்கும் பிரதோஷ விரதம்
**************************************************
பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோ ஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. 

நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும். 

மாலை சிவன் கோவிலிற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒருபிடி வன்னி இலை ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தி யின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணி த்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனை யும் தொழுதால் சனி பகவானால் உண்டா கும் சகல துன்பங்களும் விலகிப் போகும். 

நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்பு டையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.

🌹ஈசனை வலம் வரும் முறை
************************************
பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்ச ணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈச னை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமா னை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். 

சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழு ம் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிற து. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ள ப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.

🌹சிவ தரிசனம்
*******************
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலய த்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். 

முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராய ணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப் படும் திருமுறை பாராயணத்தையும், மூன் றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையு ம் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும். 

பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதக ங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகி றது. 

பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருக ப்பெருமானோடும் இணைந்த சோமாஸ் கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம். சிவதரிசன ம் முடித்தபிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம்.

🌹நந்தி வழிபாடு
*********************
பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். 

பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவே தனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. நந்தியம்பெருமானு க்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்யலாம். 

அதே நேரத்தில் அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் , கொண்டக்கடலை ஆகியவற்றை நிவேத னமாக தரலாம். 

சிவ பெருமான் அபிஷேக பிரியன் என்பத னால் இன்று தூய பசும்பால் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யலா ம். எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர் க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக் தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்க 🙏

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் – ரிஷிவந்தியம் நிறம் மாறும் லிங்கம் , நாகத்தை உடலில் தாங்கிய லிங்கம்

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் – ரிஷிவந்தியம் 
நிறம் மாறும் லிங்கம் , நாகத்தை உடலில் தாங்கிய லிங்கம் , சாய்ந்த நிலையில் உள்ள லிங்கம் , வடு உள்ள லிங்கம் என பல லிங்கங்களை நாம் பார்த்திருப்போம் , அதுமட்டும் அல்லாமல் அர்த்தநாரீஸ்வரர் கோயில் என மிக குறைந்த கோயில்களே உள்ளன அதிலும் உமையவளோடு பாதி சேர்ந்த நிலையில் இறைவன் இருப்பதையே பார்த்திருப்போம் . ஆனால் இந்த தலத்தில் இறைவன் லிங்க திருமேனியின் மீது தேனாபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் இடைநெளிந்த கையில் கிளியுடன் அம்மன் காட்சி தரும் அதிசிய லிங்கம் வேறு எங்கும் காண இயலாது . 

இருபுறமும் நகரத்தின் வளர்ச்சியில் சிக்காமல் இருபுறமும் அழகிய உயர்த்த நிழல் தரும் மரங்கள் , அவைகளுக்கு இடையே திரண்டு ஓடும் ஆற்றை போல் சாலைகள் , அதிகம் வளர்ச்சி அடையாத நடுத்தரமான எல்லா வசதிகளும் கொண்ட மிக அழகான ஊர். ஊரின் நடுவில் இக்கோயில் அமைந்துள்ளது . 

கோயில் அமைப்பு : 

ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது , கோபுரத்தின் முன் சிறிய மண்டபத்தில் ரிஷபம் உள்ளது , இடது புறத்தில் தலத்தின் தீர்த்த குளம் உள்ளது . கோயிலின் உள் சென்றால் பலிபீடம் , கொடிக்கம்பம் மற்றும் நந்தியை காணலாம் . வலது புறத்தில் ஒரு வசந்த  மண்டபம்  உள்ளது , அந்த மண்டபத்தில் மிக அழகான நேர்த்தியாக யாளிகளை செதுக்கியுளார்கள் . அதில் ஒரு யாளியின் வாயில் ஒரு உருண்டை கல் உள்ளது , அதை நாம் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளேயே உருளும் படி மிக நுணுக்கமாக செதுக்கியுளார்கள் , நீங்களும் அங்கு போகும் போது இதை மறக்காமல் பாருங்கள் . 

இடது புறத்தில் ஒரு வசந்த மண்டபம்  உள்ளது , அதில் சிறிய சிறிய சிற்பங்கள் மற்றும் யாளியை செதுக்கியுள்ளார்கள் . இவ்மண்டபத்தில் இசை தூண் ஒன்று உள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு கல்லும் ஒரு விதமான ஓசையை வெளிப்படுத்துவது நமக்கு கண்டிப்பாக ஆச்சரியத்தை தரும் . 

இப்போது நாம் கோயிலின் கருவறை மண்டபத்திற்கு செல்லலாம் , இக்கோயிலானது கருவறை, அந்தரலா, அர்த்த மண்டபம் , மகா மண்டபம் என அமைப்புடன் காணப்படுகிறது . கோயிலின் கருவறையானது இரண்டு அடுக்கு விமானத்துடன் காணப்படுகிறது . 

இப்போது இறைவனை காண செல்லலாம் , இவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆவார் , விஜயநகர மன்னர் காலத்தில் விவசாயம் செய்வதற்காக மண்ணை தோண்டும் போது மண்வெட்டியால் வெட்டப்பட்ட சுயம்பு லிங்கம் கிடைத்தது. அவர்தான் இப்பொது இங்கு அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில் இங்கு அருள்பாலிக்கிறார் . இன்றும் கூட வெட்ட பட்ட கீறலை நாம் லிங்கத்தின் மீது காணலாம் . இங்கு தினமும் காலை 11 மணிக்கு நடக்கும் தேனாபிஷேகத்தில் லிங்கத்தின் மீது இடைநெளிந்த கையில் கிளியுடன் தாயாருடன் காட்சி கொடுப்பதை காணலாம் . இதற்கு Rs 100 தரிசனம் சீட்டு வாங்க வேண்டும் .         

 இத்தலத்தில் வந்து வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும் , அகத்தியருக்கு திருமண கோலத்தையும் , பூஜை செய்த ரிஷிகளுக்கு நற்பண்புகளையும் , குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார் . அவர்கள் பெற்ற அருளை நாமும் பெற இறைவனை பிராத்தனை செய்வோம் . 

நாம் இப்பொது உள் பிரகாரத்தை வலம் வருவோம் , கருவறை கோஷ்டத்தில் விநாயகர் , தக்ஷிணாமூர்த்தி , லிங்கோத்பவர் மற்றும் துர்கை ஆகியோர்கள் உள்ளார்கள் . வளம் வருகையில் நாம் 63 நாயன்மார்கள் , அகத்தீஸ்வரர் தன் மனைவியுடன் , நாகர் ,சண்டீகேஸ்வரர் , விசாலாக்ஷி உடனுறை விஸ்வநாதர் , உண்ணாமலையார் உடனுறை அண்ணாமலையார் , வள்ளி தெய்வயானை சமேத முருகர், அர்த்தநாரீஸ்வரர் சுதை சிலை மற்றும் நவகிரக சன்னதி ஆகியோர்களை நாம் தரிசனம் செய்யலாம் . தாயார் முத்தாம்பிகை தனி சன்னதியில் உள்ளார் . 

கோயிலானது கி . பி 1262 ஆம் ஆண்டு ஜடாவர்மன் சுந்தரபாண்டியனால் கல் திருப்பணி செய்யப்பட்டுள்ளது .  கி . பி  1269 இல் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் புனரமைக்கப்பட்டுள்ளது .

கல்வெட்டுகள் : 

ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் மேற்குப்புற வராண்டாவில் உள்ள ஒரு பலகையில் உள்ள கல்வெட்டில் பொன் பரப்பின பெருமாள் ஜடாவர்மன் என்கின்ற முதலாம் சுந்தர பாண்டியனால் கி பி 1269 இல் வைக்கப்பட்டுள்ளது . இரண்டாம் கல்வெட்டு மகா மண்டபத்தின் மேற்கு சுவரில் உள்ளது அதில் கோனேரின் மை கொண்டான் மாறவர்மன் மூன்றாம் விக்கிரபாண்டியனால் கி பி  1283 இல் ஏற்படுத்தப்பட்டுள்ளது . அதில் இருவிசம் என்கின்ற ராஜநாராயண பட்டணத்தில் உறையும் என்று தொடங்கும் கல்வெட்டாகும் .  மூன்றாம் கல்வெட்டு மகா மண்டபத்தின் தென்புற சுவரில் உள்ளது , அதில் நிலவரி செலுத்திய விவரம் உள்ளது , நான்காம் கல்வெட்டு நாடு மண்டபத்தின் மேல்புற சுவரில் உள்ளது , இதில் நிலம் பற்றிய செய்தி உள்ளது . 

செல்லும் வழி : 

விழுப்புரம் அருகே உள்ள திருக்கோயிலூர் இருந்து சுமார் 23 km தொலைவில் இக்கோயில் உள்ளது .கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருவம் சென்று அங்கிருந்து சுமார் 22 km இக்கோயிலை அடையலாம் . 

#Arthanareeswarar #Rishivandiyam #tamilnadutemples #sivantemples #indiatempletour #ganesh_temple_review

Sunday, August 27, 2023

இன்று திங்கட்கிழமை- சோமாவார பிரதோஷம் கோவில் செல்ல மறவாதீர்கள்!

இன்று திங்கட்கிழமை- சோமாவார பிரதோஷம் கோவில் செல்ல மறவாதீர்கள்!

இன்று!
ஆகஸ்ட் 28-08-2023, சோபகிருது வருடம், ஆவணி 11, திங்கட்கிழமை

சிறப்பு : திங்கட்கிழமை பிரதோஷம் 

வழிபாடு : மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து  வில்வ மாலை சாத்தி வழிபடுதல்.

பிரதோஷமும் சிவபூஜைக்கு உரிய மிகவும் சக்தி வாய்ந்த பூஜை என்கின்றன ஆகமங்களும் தர்மசாஸ்திரங்களும்! பிரதோஷ நாளில், பிரதோஷ காலம் என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான வேளையில், சிவாலயங்களுக்குச் சென்று, சிவனாரைத் தரிசிப்பதும் பூஜிப்பதும் பிரார்த்திப்பதும் பாவங்களைப் போக்கவல்லது, புண்ணியங்களைப் பெருக்கக் கூடியது என்பது ஐதீகம்!

சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. சோம வாரம் திங்கட்கிழமை, தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞான நூல்கள்.

நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும். நன்மையெல்லாம் பெருகும்.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வ தாக ஐதீகம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையும் விசேஷம். பிரதோஷமும் மிகப்பெரிய புண்ணியம். இந்த இரண்டும் சேர்ந்து வருவது, இன்னும் இன்னுமான சந்தோஷங்களையும் சத்விஷயங்களையும் நமக்குத் தந்தருளும் என்பது சத்தியவாக்கு!

சோம வாரப் பிரதோஷத்தன்று மறக்காமல், மாலை வேளையில் சிவாலயம் செல்லுங்கள். அப்போது நந்திதேவருக்கும் சிவனாருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக் கண்ணாரத் தரிசியுங்கள்.

முடிந்தால், நந்திதேவருக்கு செவ்வரளியும் அருகம்புல் மாலையும் வழங்குங்கள். பன்னீர், சந்தனம், அரிசிமாவு, விபூதி, பால், தயிர் என உங்களுக்குப் பிடித்தமான அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். அதேபோல், சிவனாருக்கு ஒரு கைப்பிடி அளவேனும் வில்வம் சார்த்துங்கள். 

இன்னும் முடியுமெனில், எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகம் பண்ணுங்கள். முன்னேறுவதற்குத் தடையாக உள்ள சகலத்தையும் தகர்த்து அருள்வார் சிவனார். அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல வழிவகைகள் செய்வார் ஈசன்.

நம் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்து நம்மை ஆனந்தமாக வாழச் செய்வார் தென்னாடுடைய சிவனார்!

Friday, August 25, 2023

எல்லாம் சிவன். எதிலும் சிவன். எங்கும் சிவன். அப்படியிருக்கையில் அவனது பூர்வீகம் கேட்கப்பட்ட கதை.

எல்லாம் சிவன். எதிலும் சிவன். எங்கும் சிவன். அப்படியிருக்கையில் அவனது பூர்வீகம் கேட்கப்பட்ட கதை.
சிவனை அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர் இமயமலையில் பரவசத்தில் தீவிரமாய் ஆடிக்கொண்டு அல்லது சிலைவார்த்தார் போல் சற்றும் அசையாது அமர்ந்திருந்தபோது தான். 

அவர் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை, யாரும் இருப்பதை அறிந்ததாகக் கூடத் தெரியவில்லை. ஆனால் சிவனை எல்லோரும் அறிந்திருந்தனர். அவரையே மணக்க வேண்டும் என்று பார்வதி மிகத் தீவிரமாக தவமிருக்க, மனமுவந்து சிவன் அவளை மணக்க சம்மதித்தார். திருமணத்தன்று என்ன நடந்தது..? 

சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நிச்சயமாகி, மண நாளும் வந்தது. சிவ-பார்வதி திருமணம், வரலாறு காணாத பெரும் விழாவாக அறியப்பட்டது. அன்று, யாரும் கனவில் கூட எண்ணியிராத அளவிற்கு தீவிர மனிதரான சிவன், தன் அங்கமாக மற்றொருவரை ஏற்கவிருந்தார். சமுதாயத்தில் 'இன்னார்' என்று அறியப்பட்ட எல்லோரும், அடையாளம் ஏதும் இல்லா எளியோரும், பாகுபாடின்றி திருமணத்திற்கு வந்திருந்தனர். 

இது ராஜவம்சத்துத் திருமணம் - ஆம், இளவரசி பார்வதியின் திருமணமாயிற்றே! ராஜவம்ச வழக்கப்படி, திருமாங்கல்யம் கட்டும் முன், ஒரு முக்கியமான சடங்கு ஒன்று நடைபெறும். மாப்பிள்ளை யார், மணப்பெண் யார், அவர்கள் தாய் யார், தந்தை யார், பாட்டனார், முப்பாட்டனார் என்று மணமக்களின் பூர்வீகத்தை சபையில் அறிவிக்க வேண்டும். ஒரு அரசனுக்கு, அவனது பூர்வீகம் மிக மிக முக்கியம், அது அவனது குலப் பெருமையாயிற்றே. 

அதனால் மிகுந்த பகட்டோடும், பெருமையோடும் பார்வதியின் பூர்வீகம் அறிவிக்கப்படலாயிற்று. இது நடந்து முடிய சிறிது நேரம் ஆனது. ஒரு வழியாக, அனைத்துத் தகவலும் சொல்லி முடிக்கப்பட்டதும், கூடியிருந்தோர் மணமகன் அமர்ந்திருந்த திசை நோக்கி ஆவலுடன் திரும்பினர். 

சிவனின் சார்பாக யாரேனும் எழுந்து, அவரின் குலப்பெருமையைப் பேசுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அப்படி யாரும் எழவும் இல்லை, ஒரு வார்த்தை பேசவுமில்லை. "சிவனின் சுற்றத்தாரில் இருந்து யாரேனும் ஒருவர் சிவனின் குலப் பெருமையை விவரிக்க மாட்டார்களா?" என்று பார்வதியின் குடும்பத்தினர் சுற்றும்முற்றும் பார்த்தனர். 

ஆனால் அப்படி யாருமே வந்திருக்கவில்லை. ஏனெனில், பெற்றவர்கள், உறவினர்கள், குடும்பம் என்று சிவனுக்கு சொந்த-பந்தங்கள் யாருமில்லை. 

 பார்வதியின் தந்தை பர்வதராஜ், சிவனிடம், "உங்களுடைய முன்னோர்கள் பற்றி விவரியுங்கள்" என்று வேண்டினார். 

சிவன் ஒன்றுமே சொல்லவில்லை. தொலை தூரத்தில் ஏதோ ஒன்றை பார்த்திருப்பதுபோல், சும்மா உட்கார்ந்திருந்தார். அவர் மணப்பெண்ணையும் பார்க்கவில்லை, மணமுடிக்கும் சந்தோஷமும் அவரிடம் தென்படவில்லை. வெறுமையை வெறித்தவாறு, தனது பூதகணங்கள் சூழ்ந்திருக்க, அசைவேதுமின்றி அமர்ந்திருந்தார். அந்தக் கேள்வி அவரிடம் தொடர்ந்து கேட்கப்பட்டது. 

முன்னோர் யார் என்று தெரியாமல் யாருமே தங்கள் மகளை ஒருவருக்கு மணமுடிக்க சம்மதிக்க மாட்டார்களே! நல்ல நேரம் வேறு கடந்துபோய்க் கொண்டிருந்தது. அனைவரையும் பதட்டம் தொற்றிக் கொண்டது. படபடப்பில் கேள்வியின் தீவிரம் அதிகமானது. அதே கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. ஆனால் சிவன் வாய் திறக்கவில்லை, மௌனமாகவே அமர்ந்திருந்தார். 

உயர்குலத்தில் பிறந்த அரசர்களும், பண்டிதர்களும் சிவனை இளக்காரமாகப் பார்த்து, "அவரது குலம் என்னவாக இருக்கும்? ஏன் இப்படி ஏதும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்? ஒருவேளை சொல்வதற்கே கூசும் கீழ் ஜாதியில் பிறந்தவராய் இருப்பாரோ?" என்று அவரவருக்குத் தெரிந்ததுபோல், வாய்க்கு வந்தவற்றை பேசத் துவங்கினர். 

அங்கு சபையில் அமர்ந்திருந்த நாரதர், நிலைமை கைமீறி போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, தனது வீணையை எடுத்து, அதில் ஒரே ஒரு கம்பியில் சப்தம் எழுப்பத் துவங்கினார். மீண்டும் மீண்டும் அதே ஸ்வரத்தை 'டொயிங்... டொயிங்... டொயிங்' என வாசித்துக் கொண்டேயிருந்தார். இதனால் எரிச்சலுற்ற பார்வதியின் தந்தை பர்வதராஜ், பொறுமை இழந்து, "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மாப்பிள்ளையின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள நாங்களும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், மாப்பிள்ளையோ எங்களை சிறிதும் சட்டை செய்யாமல் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார். இவரைப் போன்றவருக்கா என் பெண்ணை நான் மணமுடித்துக் கொடுப்பது? இந்தப் பிரச்னை போதாதென்று நீங்களும் எரிச்சலூட்டும் வண்ணம் ஒரே சப்தத்தை ஏன் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்? இல்லை... இதுதான் உங்கள் பதிலா?" என்று இரைந்தார். 

நாரதர், "அவரைப் பெற்றவர்கள் யாருமில்லை," என்றார். ராஜன் வினவினான், "அவரது தாய்-தந்தை யார் என்று அவருக்குத் தெரியாது என்கிறீர்களா?" நாரதர், "இல்லை. அவரை யாரும் பெற்றெடுக்கவில்லை. அவருக்கென்று பூர்வீகம் இல்லை. கோத்திரம் இல்லை. அவரிடம் எதுவுமில்லை. அவரிடம் இருப்பது அவர் மட்டும்தான்," என்று சொன்னார். 

இதனைக் கேட்ட அத்தனை பேரும் குழம்பிப் போயினர். பர்வதராஜ், "தனது தாய்-தந்தை யாரென அறியாதவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால் மனிதன் என்று ஒருவன் இருந்தால் அவன் வேறு யாருக்கேனும் பிறந்திருக்க வேண்டும் அல்லவா? அது எப்படித் தாயோ தந்தையோ இல்லாமல் ஒருவர் பிறக்க முடியும்?" 

நாரதர் சொன்னார், "அவர் சுயம்பு, தானாகவே உருவானவர். அவருக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. அவருக்கு பூர்வீகமும் இல்லை, முன்னோர்களும் இல்லை. அவர் எந்த பாரம்பரியத்தையும் சேர்ந்தவர் இல்லை, அவருக்கு பக்கபலமாக எந்த ராஜாங்கமும் இல்லை. அவருக்கு கோத்திரமும் இல்லை, நட்சத்திரமும் இல்லை, எந்த அதிர்ஷ்ட தேவதையும் அவரைக் காத்து நிற்கவில்லை. அவர் அனைத்தையும் கடந்தவர். இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்ட யோகி அவர். அவருக்கு இருப்பது ஒரே ஒரு முன்னோடி மட்டுமே - அது சப்தம். இந்தப் பிரபஞ்சம் உருவாகும் முன், இந்தப் பிரஞ்சம் உருவாவதற்கு மூலமான வெறுமை படைத்தல் செயலை ஆரம்பித்தபோது, முதன்முதலில் உருவானது சப்தம். அதன் பிறகே படைப்பு நிகழ்ந்தது. அதேபோல் இவரும் ஒன்றுமற்ற வெறுமையில் இருந்து, ஒரு ஒலியின் மூலம் தோன்றினார். இதை வெளிப்படுத்தும் வகையில்தான், நான் மீண்டும் மீண்டும் ஒரே ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தேன்." என்றார். 
பிறகுதான் அனைவருக்கும் தெரிந்தது " ஈசன் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி" என்று. 

சிவாயன நம என சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. ஓம் நமசிவாய!!!!!

_பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்_

_பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்_ 
1 திருகுடந்தை ஊழ்வினை பாவம் விலக
2 திருச்சிராப்பள்ளி வினை அகல
3 திருநள்ளாறு கஷ்டங்கள் விலக
4 திருவிடைமருதூர் மனநோய் விலக
5 திருவாவடுதுறை ஞானம் பெற
6 திருவாஞ்சியம் தீரா துயர் நீங்க
7 திருமறைக்காடு கல்வி மேன்மை உண்டாக
8 திருத்தில்லை முக்தி வேண்ட
9 திருநாவலூர் மரண பயம் விலக
10 திருவாரூர் குல சாபம் விலக
11 திருநாகை (நாகப்பட்டினம் ) சர்ப்ப தோஷம் விலக
12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) முக்தி வேண்ட
13 திருவண்ணாமலை நினைத்த காரியம் நடக்க
14 திருநெல்லிக்கா முன்வினை விலக
15 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய
16 திருகருக்காவூர் கர்ப்ப சிதைவு தோஷம் விலக
17 திரு வைத்தீஸ்வரன் கோவில் நோய் விலக
18 திருகோடிக்கரை பிரம்ம தோஷம் விலக
19 திருக்களம்பூர் சுபிட்சம் ஏற்பட
20 திருக்குடவாயில் ( குடவாசல் ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய
21 திருசிக்கல் ( சிக்கல் ) துணிவு கிடைக்க
22 திருச்செங்காட்டங்குடி கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக
23 திருக்கண்டீச்சுரம் நோய் விலக , தீராத புண் ஆற
24 திருக்கருக்குடி ( மருதாநல்லூர் ) குடும்ப கவலை விலக
25 திருக்கருவேலி ( கருவேலி ) குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க
26 திருவழுந்தூர் ( தேரெழுத்தூர் ) முன் ஜென்ம பாவம் விலக
27 திருச்சத்திமுற்றம் மண வாழ்க்கை கிடைக்க
28 திருப்பராய்துறை ( திருச்சி ) கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற
29 திருநெடுங்களம் ( திருச்சி ) தீரா துயரம் தீர ( இடர் களைய )
30 திருவெறும்பூர் ( திருச்சி ) அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற
31 திருப்பைஞ்ஞீலி ( திருச்சி ) யம பயம் விலக
32 திருவையாறு அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
33 திருவைகாவூர் வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க
34 திருக்கஞ்சனூர் திருமண தோஷம் விலக
35 திருமங்கலக்குடி (சூரியனார் கோவில்) குழந்தை பாக்கியம் பெற
36 திருமணஞ்சேரி திருமண தோஷம் விலக
37 திருமுல்லைவாயில் சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக
38 திருவெண்காடு ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை
39 திருநெல்வேலி பிராமண குற்றம் விலக
40 திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில் முக்தி வேண்ட
41 திருவாலவாய் ( மதுரை ) தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட
42 திருப்பரங்குன்றம் ( மதுரை ) வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட
43 திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில் தீரா பாவம் விலக
44 திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
45 திருப்பாதிரிப்புலியூர் ( புட்லூர் ) தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக
46 திருவக்கரை செய்வினை தோஷம் விலக
47 திருவேற்காடு வாணிப பாவம் விலக
48 திருமயிலாப்பூர் மூன்று தலைமுறை தோஷம் விலக
49 திருஅரசிலி ( ஒழுந்தியாம்பட்டு ) காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
50 திருவாலங்காடு வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக
51 திருவேட்டிபுரம் ( செய்யாறு ) ஞானம் கிடைக்க
52 திருப்பனங்காடு பந்த பாசத்தில் இருந்து விலக
53 திருவூறால் ( தக்கோலம் ) உயிர்வதை செய்த பாவம் விலக
54 திருப்பாச்சூர் குடும்ப கவலைகள் நீங்க
55 திருவெண்ணைநல்லூர் பித்ரு தோஷம் விலக
56 திருவதிகை நல் மனைவி அமைய
57 திருவாண்டார் கோவில் முக்தி வேண்ட
58 திருமுது குன்றம் ( விருத்தாசலம் ) தீரா பாவம் விலக
59 திருக்கருவூர் ( கரூர் ) பசுவதை செய்வதன் வழிபட
60 திருப்பாண்டிக் ( கொடுமுடி ) பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக
61 திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட
62 திருகோகர்ணம் ( கர்நாடகம் ) தேவ தோஷம் விலக
63 திருப்புகழூர் பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க
64 திருத்தோணிபுரம் ( சீர்காழி ) குல சாபம் நீங்க
65 திருவைத்தீஸ்வரன் கோவில் பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக
66 திருக்கருப்பறியலூர் ( தலைஞாயிறு ) கர்வத்தால் குரு துரோகம்
67 திருப்பனந்தாள் பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக
68 திருப்புறம்பயம் மரண பயம் விலக
69 திருநெய்த்தானம் மோட்ஷம் வேண்ட
70 திருவானைக்காவல் கோவில் கர்மவினை அகல
71 திருவேதிக்குடி தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக
72 திருவலஞ்சுழி வறுமை அகல
73 திருநாகேஸ்வரம் ஸர்ப்ப ஸாபம் விலக
74 திருநாகேஸ்வர சுவாமி ( கும்பகோணம் ) நவகிரஹ தோஷம் விலக
75 திருநல்லம் (கோனேரிராஜபுரம்) வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக
76 திருத்தெளிச்சேரி ( காரைக்கால் ) சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர
77 திருசெம்பெரின்பள்ளி வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க
78 திருத்தலச்சங்காடு ( தலைச்செங்காடு ) அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக
79 திருவன்னியூர் ( அன்னூர் ) சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட
80 திருநன்னலம் ( நன்னிலம் ) ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட
81 திருராமனாதீச்சுரம் ( திருக்கண்ணாபுரம் ) கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக
82 திருமருகல் கணவன் மனைவி அன்புடன் வாழ
83 திருச்சிக்கல் பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட
84 திருச்சேறை இல்லறம் மேலும் சிறக்க
85 திருக்கோளிலி ( திருக்குவளை ) நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட
86 திருவாய்மூர் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
87 திருநெல்லிக்கா கல்வி மேன்மை அடைய
88 திருவெண்டுறை ( வண்டுறை ) வறுமையிலிருந்து விலக
89 திருக்கடிக்குளம் ( கற்பகநாதர்குலம் ) வினைகள் விலக
90 திருஆலங்குடி புத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற
91 கொட்டாரம் அமைதி பெற
92 திட்டை சந்திர தோஷம் விலக
93 பசுபதி கோவில் இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட
94 கொட்டையூர் செய்த பாவங்கள் வேயொரு வீழ
95 ஓமாம்புலியூர் சனி தோஷம் விலக
96 தருமபுரம் சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக
97 மயிலாடுதுறை அனைத்து பாவங்களும் விட்டோட
98 உத்தரகோச மங்கை கர்மவினைகள் அல்ல
99 இராமேஸ்வரம் பித்ரு தோஷம் விலக
100 காளையர்கோவில் பிறவி பயன் கிடைக்க
101 பெண்ணாடம் ஊழ்வினை தோஷம் அகல
102 இராஜேந்திரப்பட்டினம் கர்மவினை அகல
103 அவினாசியப்பர் ஏழு தலைமுறை பாவங்கள் விலக
104 குரங்கினில் முட்டம் நினைத்த காரியம் நடக்க
105 பவானி பித்ரு தோஷம் போக்க
106 ஆச்சான்புரம் மண வாழ்க்கை சிறக்க
107 ஆடுதுறை திருஷ்டி தோஷம் விலக
108 சங்கரன்கோவில் ஸர்ப்ப தோஷம் விலக.
💐🌹

Thursday, August 24, 2023

நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் அல்லது கண்ணுடையநாயகி அம்மன் கோயில் சிவகங்கை

இன்றைய கோபுர தரிசனம்🙏🏻🙏🏻
நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் அல்லது கண்ணுடையநாயகி அம்மன் கோயில் சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் நாட்டரசன்கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் கம்பன் தனது இறுதிக்காலத்தை கழித்தார். இங்கு கம்பனின் சமாதியும் உள்ளது..

*வேறு பெயர்(கள்)*:
கண்ணுடையநாயகி அம்மன்

*மாவட்டம்*:
சிவகங்கை

*அமைவு*:
நாட்டரசன்கோட்டை

*சிறப்பு திருவிழாக்கள்*:
வைகாசித் திருவிழா, களியாட்டத் திருவிழா

*அம்மனின் சிறப்பு:*
கண் தெரியாதவர்கள் நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து இக்கோயிலில் தங்கியிருந்து தினமும் அம்மனை வழிபட்டு, அம்பாளுக்கு செய்யப்படும் அபிசேக தீர்த்தத்தைக் கண்களில் விட்டால் கண்பார்வை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மக்கட்பேறு இல்லாதவர்கள் அம்மனிடம் கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைத்ததும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
கண்ணாத்தாளின் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்ணன், கண்ணப்பன், கண்ணகி, கண்ணாத்தாள் என்றும் பெயர் சூட்டுகிறார்கள்.

**வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடி க்கும் விரதமாகும்

ஸ்ரீ வரலட்சுமி விரதம் 
***********************************************
வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடி க்கும் விரதமாகும். இந்த விரதம் ஆடி மாதம் வளர் பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளி க்கிழமையில் 25.08 2023 கடைபிடிக்கப் படுகிறதl.

கேட்கும் வரம் அனைத்தையும் வாரி வழங்குப வள் ஸ்ரீலட்சுமி. அவளது அவதார நன்னாள், விரதம் அனுஷ்டித்து வணங்கும் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

லட்சுமி என்றால் செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், அழகு எனப் பல அர்த்தங்கள் உண்டு ஏனெனில், ஸ்ரீலட்சுமி தேவியை இந்த நாளில் விரதம் மேற்கொண்டு வழிபட்டால், இவை அனைத் தையுமே தந்து நம்மை மகிழச் செய்வாள், தேவி.

வரலட்சுமி விரதம் பற்றிய இரண்டு புராணக் கதைகளை காண்போம்:
**************************************************
முதல் கதை: 
*************
பத்ரச்ரவா என்னும் சவுராட்டிர மன்னனின் மனைவி கசந்திரிகா. மன்னன் எப்பொழுதும் மங்கல சொற்களை பேசுபவன், கேட்பவன். குணம், கல்வி, தர்மம், கற்பு ஆகிய நற்பண்பு கள் கொண்ட கசந்திரிகா நிலவைப் பழிக்கும் அழகு கொண்டவள்; சினத்தை ஒழித்து எப்பொழுதும் குளிர்ந்த சாந்தமான முகத்தை உடையவள். இவர்கட்கு ஏழு ஆண் மகவுகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. பெண் குழந்தையை சியாமா என பெயரிட்டு வளர்த்து வந்தனர். 
 
கசந்திரிகாவின் நற்குணங்களும், நல்ல செயல்களும் கண்டு மகாலட்சுமி அவளிடம் கருணை கொண்டாள். ஒரு வெள்ளிக்கிழமை துவாதசி திதியன்று மகாலட்சுமி ஒரு பழுத்த சுமங்கிலி உருவெடுத்து அந்தப்புறத்தில் நுழைந்தாள். வயிறார உண்டு வாய்நிறையத் தாம்பூலம் தரித்து அமர்ந்திருந்த அரசி, “தாயே! சுமங்கிலியே! தாங்கள் யார்? எதற்க்காக வந்தீர்கள்?” என் வினவினாள். 

அவளை நோக்கி மகாலட்சுமி,”கசந்திரிகா! நீ நல்லவள். உத்தமி. ஆனால், லட்சுமி தேவியின் அவதார தினமான இன்று வயிறார உண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டுள்ளாயே! இது நியாயமா?” எனக் கேட்டாள். செய்த தவறைச் சுட்டி காட்டிய உடன் கோபமே கொள்ளாத கசந்திரிகாவுக்கு சினம் கொப்பளித்து வந்தது. 

மகாலட்சுமியின் கன்னத்தில் அறைந்து, 'இங்கிருந்து போய்விடு' என்றாள். கண்கள் கலங்கி கண்ணீர் தளும்பிய முகத்துடன் வெளியேறிய மகாலட்சுமியைக் குழந்தை சியாமா கண்டு, ”அம்மா! ஏன் அழுகிறீர்கள்? என்ன வேண்டும்?” என்றாள். 
 
கண்களைத் துடைத்துக்கொண்டு மகாலட்சுமி, ”பெண்ணே! உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்க்காக என்னை அடித்து அவமானப்படுத்தி துரத்தி விட்டாள். அதனால் தான் திரும்பிப் போகிறேன்” என்றாள். 

உடனே சியாமா மகாலட்சுமியை உபசரித்து, அமர வைத்து, “அந்த நல்லதை எனக்குச் சொ ல்லிக் கொடுங்களேன்” என்றாள். மனம் குளிர் ந்த மகாலட்சுமி, சியாமாவுக்கு வரலட்சுமி விரதம் கொண்டாடவேண்டிய வழிமுறைகளை உபதேசித்தாள். அன்று முதல் சியாமா, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாது வரலட்சுமி விரதத்தைக் கடைப் பிடித்தாள். 

லட்சுமிதேவியை அவமதித்ததால் பத்ரச்ரவா மன்னனிடமிருந்த செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கின. மனம் நொந்த மன்னன் இராச்சியம் கையை விட்டுப் போவதற்குள் மகளுக்குத் திருமணம் செய்ய எண்ணி மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். 

புகுந்த வீடு சென்றபின்னும் சியாமா விரதத் தைத் தொடர்ந்தாள். மாலாதரனுக்கு செல்வம் குவிந்தது. பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகை வர்களால் விரட்டப்பட்டு காட்டுக்கு ஓடி உணவு க்கு வழியற்று ஊர் ஊராகத் திரிந்தனர். 
 
செய்தியறிந்த சியாமா வருந்தி, அவர்களைத் தன் நாட்டிலேயே தங்கவைத்துத் தன் சேவகன் மூலம் உணவளித்துக் காத்து வந்தாள். நாட்கள் கழிந்தன. ஒருநாள், நிறையத் தங்க நாணயங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிக் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு எங்காவதுபோய்ப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றாள். 

சியாமா அவ்விடத்தை விட்டு அகன்றதும், மூடிய பாத்திரத்தைத் திறந்து பார்த்த பத்ரச்ர வா, பொன்னுக்குப் பதில் கரித்துண்டுகளைக் கண்டு அதிர்ந்து போனான். இதை சியாமாவு க்குத் தெரியப் படுத்தினர். உடனே, சியாமாவு க்குத் தன் தாய் மகாலட்சுமியை அவமதித்தது நினைவுக்கு வந்தது. தன் அம்மாவை அழை த்து நடந்தவைகளை நினைவுபடுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, விரதமிருக்கும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தாள். 
 
அவ்வாறு கசந்திரிகா வரலட்சுமி விரதமிருந்து வர நாளுக்கு நாள் நல்லவைகள் நடந்தன. பத்ரச்ரவாவுக்கும் மனதில் தைரிய லட்சுமி குடியேரியதால், தன் ஆதரவாளர்களை திரட்டி படையெடுத்து வந்து தன் நாட்டை மீட்டான். பெற்றோர் நல்ல நிலையை அடைந்ததைக் கண்ட சியாமா மகிழ்ந்தாள்.
 
இரண்டாவது கதை:
*********************
சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதி யாக இருந்தாள். தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒரு முறை பாரபட்சமாக நடந்து கொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும் படி சாபம் கொடுத்தாள். 

சித்திரநேமி சாப விமோசனம் கேட்டு பார்வதி யில் காலில் விழுந்தாள் வரலட்சுமி விரதத்தை கடை பிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றாள். 

புண்ணிய நதிகளில் நீராடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு சமமாகும. குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். நாளை பெண்கள் புண்ணிய நதிகளில் தீர்த்த மாடியும் வரலாம். 

மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.
 
விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந்ததும் மங்கல பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும். அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோமாக.

" மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ!
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்
நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்
நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!
மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழிஇ ரண்டை
மாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று
கன்ணிறை வாழ்வு கொள்வேன் கண் வைப்பாய் கமலத்தாயே..."

24.08.2023... நேசமுடன் விஜயராகவன்....

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...