Thursday, October 19, 2023

முருகன் அருளால்எல்லா பிரச்சனைகளிலும் அனைத்து சிறப்பையும் வெற்றியையும் பெற முடியும்.

♥ மாத சஷ்டி விரதம். ♥
              ♥ கோயிலுக்கு வெளியே இருக்கும் யாசகர்களுக்கும், வசதியற்ற ஏழை மக்களுக்கும், நீங்கள் கோவிலுக்குள் நுழையும் முன்பு கீரை சாதம், பாசிப்பருப்பு சாம்பார் சாதம் போன்ற அன்னதானம் மற்றும் பணம் தானம் செய்வது நன்று.
              ♥ எந்த தானம் செய்வதாக இருந்தாலும், அதை கோவிலுக்குள் நுழையும்முன்பு செய்துவிடுங்கள் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு வெளியே வந்தவுடன் தானம் ஏதும் செய்யாமலும், வேறு எங்கும் செல்லாமலும் வீட்டுக்கு செல்வது நன்று
              ♥ எப்போது எந்த கோவிலுக்கு சென்றாலும் இந்த முறையில் தான் எந்த தானமும் செய்யவேண்டும்.
              ♥ எப்போது எந்த கோவிலுக்கு சென்றாலும்   அங்கு  நீங்கள்     உள்ளம்  உருகி வணங்கும்போது,  அந்த  தெய்வம்  உங்களுக்கு  அருள்  புரியும்.  
              ♥ அந்த  தெய்வம்  தந்த  அருளை  சிந்தாமல்  சிதறாமல்  உங்கள்  வீட்டுக்கு  கொண்டுவந்து  சேர்க்கவேண்டும்.  அப்படி  செய்வது  அந்த  தெய்வம்  தந்த அருளை  மதித்து  மரியாதை  செய்வதாகும்.  அந்த   அருள்  உங்கள்  வீட்டில்  பல்கி  பெருகும்.  அதில்  முடிந்த வரையில்  பெரும்பகுதியை  உபயோகித்து   வசதியற்ற  ஏழை மக்களுக்கு  நிரந்தர  வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொடுங்கள்.
              ♥ கோவிலில் வழிபாடு செய்துவிட்டு வெளியே வந்து,  வீட்டுக்கு  செல்லும்முன்பு    நீங்கள்   தானம்  செய்தால்   அவன்  தந்த  அருள்  உங்களுக்கு  தேவை  இல்லை  என  கோயிலுக்கு வெளியே இருக்கும் யாசகர்களுக்கு  தந்துவிடுவதாகும்.  
              ♥ 2023 அக்டோபர்  20, ஐப்பசி  3, சனிக்கிழமை மாத சஷ்டி விரதம் வருகிறது.. முருகனுக்கு பொதுவாக சஷ்டி தினத்தில் மட்டும் விரதம் இருப்பது போதிய பலனை தரும். பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்தால் அந்த சஷ்டி விரதத்துக்கு மிகப்பெரிய வலிமை உண்டு.
              ♥ அதிகாலை எழுந்து, குளித்து நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி, மாலையில் விரதம் முடிக்கும் வரை தொடர்ந்து எரிய வேண்டும். காலை முதல் மாலை வரை தண்ணீரைத் தவிர உணவு எதுவும் அருந்தாமல் விரதம் இருந்து படையலிட்டு (படையலில் குறைந்தபட்சம் அவல், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு கட்டாயம் வைக்கவேண்டும்.) தேங்காய் உடைத்து தீப, தூப, ஆராதனை காண்பித்து கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். முருகனை மனம் உருக வணங்க வேண்டும். காலை மாலை இரண்டு வேலையும் பூஜை செய்ய வேண்டும். சஷ்டி விரத நாட்களில் பகலில் தூங்குதல் கூடாது.
              ♥ சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை வளரும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் முருகன் அருளால்எல்லா பிரச்சனைகளிலும் அனைத்து சிறப்பையும் வெற்றியையும் பெற முடியும்.

No comments:

Post a Comment

Followers

எந்த அலங்காரத்தில் பழநி முருகனை தரிசனம் செய்யலாம்

*பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்களும்* எந்த அலங்காரத்தில் பழநி மலை முருகனை தரிசனம் செய்யலாம் என்பதற்கான விபரங்களும்.... ...