*💥 மற்ற பண்டிகைக்கு இல்லாமல் கங்கா ஸ்நானத்திற்கு மட்டும் ஏன் வெடி வெடிக்க வேண்டும்* ? .
எந்த வடநாட்டு முட்டாள் அசுரனும் அவனோடு சம்பந்தமே இல்லாதவர்களை யெல்லாம் என் சாவை வெடி வெடித்து சந்தோஷமாகக் கொண்டாடுங்கள் என்று கேட்டிருக்க மாட்டான்.
*தண்ணீராகத் தண்ணீர் லிங்கமாக இருப்பவர் தண்ணீரில் இருப்பவர்* சிவன் மட்டுமே.
வரம் கொடுக்கும்
அதிகாரமும் சக்தியும் படைக்கும் தெய்வம் பிரம்மனுக்கும் படைத்தல் முதலாக ஐந்து தொழில் புரியும் பரம சிவனுக்கும் மட்டுமே உண்டு.
செத்துப் பிறக்கும் மண்ணுலக வாசி கண்ணன் சத்திய பாமா ராமன் சீதை ஆஞ்சனேயன் பார்வதி முருகன் கணபதி உள்ளிட்ட யாருக்கும் இல்லை.
*வட நாட்டவர் யாரும் விடியற்காலையில் எழுந்திருப்பதும் இல்லை. நீராட்டுப் பொருட்களை வைத்துப் பூஜிப்பதும் இல்லை*.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் இல்லை.
நாள் முழுவதும் தெரு சுற்றிவிட்டு மாலை இருட்டிய பிறகு விளக்கு ஏற்றுவதே பண்டிகை .
அதுவும் *தீபம் ஏற்ற வேண்டும் அந்தச் சுடர் லிங்கத்தை ஜோதி லிங்கத்தைப் பூஜிக்க வேண்டும் என்ற எண்ணமும் கட்டாயமும் இல்லை*.
மெழுகு வர்த்தி மின் தொடர் விளக்கு என்று ஏதோ ஒரு வெளிச்சம் இருந்தால் போதும்.
இரவில் யாரும் பயணம் செய்தது இல்லை. ஆதலால் அயோத்தி வரும் ராமனை வரவேற்க தீபாவளி என்பதுவும் பொய்யே.
ஆயிரம் ஆண்டு அந்நிய ஆட்சியில் மரபு மொழி பண்பாடு கலாச்சாரம் தெய்வீகம் எல்லாவற்றையும் இழந்த பின் விட்ட குறை தொட்ட குறை என்று பக்தி சிரத்தை இல்லாத ஏதோ ஒரு சடங்கு மட்டுமே உள்ளது.
*கங்கை ஆகாய நதி வான் நதி* (வானதி).
எல்லா உலகங்களுக்கும் *அப்பாற்பட்ட சிவலோக நாயகனின் திருமுடியிலிருந்து கங்கை வருவதால்* வானத்தில் செல்லக் கூடிய ஒலியும் ஒளியும் தரக் கூடிய பொருளுக்கு அவசியம். அதனால் கோயில் திருவிழா போன்று வானத்தில் செல்லும் வான வெடி சொப்பு பட்டாசு வெடிக்கப் படுகின்றன.
🙏 *சத்தியும் சோமியும் _பார்மகளும்_ நாமகளோடு பல்லாண்டு இசைமின்* (திருவாசகம்)
என *பூமி தேவி* பிற *சக்தி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் ஈசனுக்குப் பல்லாண்டு பாடித் துதித்து* கங்கை வெள்ளத்தால் *பூமி அழியாமல் பாதுகாத்த கங்காதரனை கங்காதீஸ்வரனை வழிபட்ட அற்புதத் திருநாளே* தென்னாட்டில் தீபாவளி என்று பொய்ப் பிரச்சாரம் செய்யப்படும் *கங்கா ஸ்நான நீர்ப் பண்டிகை*.
கங்கா ஸ்நானம் முன் இரவில் *பாத்திரங்களுக்கு விபூதி குங்குமம் இட்டு நீர் நிரப்புப் பண்டிகை*, பட்டாசு வெடி.
ஆதலால் செய்யப்படும் பட்சணம் முதல் ஓடு எடுத்த உடனேயே நைவேத்தியம் செய்யப்பட்டு உண்பதற்குக் கிடைக்கும்.
*பிரும்ம முகூர்த்த கங்கா ஸ்நானத்திற்காக இரவு 3 மணிக்கே தட்டி எழுப்பினாலும் வெடி வெடிக்கும் ஆசையால் புத்தாடை ஆசையால் சீக்கிரம் எழுந்து ஸ்நானம்*.
மற்ற நாட்களில் எண்ணெய் சிகைக்காய் கண்ணில் எரிச்சல் முடியில் சிக்கல் உண்டாக்கும் என்று ஓடுபவர்களும் முணுமுணுக்காமல் சந்தோஷமாக ஸ்நானம் செய்வார்கள்.
*செத்துப் பிறக்கும்* *உயிரினங்களான* *ஆண் பெண் தெய்வங்கள் பிறப்பதற்கு முன்னரே படைக்கப் படுபவை பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரும் நதிகளும்*.
எண்ணெய்ப் *பிசுக்கு போவதற்கு மனிதரால் சூடாக்கப்படும் தண்ணீரே வெந்நீர்*. ஆதலால் தண்ணீரில் வெந்நீரில் எந்த தெய்வமும் இல்லை.
⚜️. *செழு நீர்த் திரளை* ( அப்பர்)
*நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி*
*பூதங்கள் தோறும் நின்றாய்* (திருவாசகம்)
என *தண்ணீராக* தண்ணீர் லிங்கமாக இருப்பவர் ,*தண்ணீரில்* இருப்பவர் பரம சிவன் மட்டுமே.
*தண்ணீர் லிங்கக் கோயில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரம்* .
சாத்திரம் உண்மை கூறினவே தவிரப் *போலி இந்து போல் பொய் பேசவில்லை*.*கட்டுக் கதை அளக்கவில்லை* .
சிவப்பிரியா
No comments:
Post a Comment