Sunday, May 12, 2024

ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி ஸ்ரீ பக்தவத்சல திருக்கோயில். திருக்கடிகை (சோளிங்கர்,



கார்த்திகை மாதத்தில் மட்டுமே
கண் திறக்கும் யோக நரசிம்ஹர் 
சோளிங்கர் கோவிலில் உள்ள நரசிம்ஹர் கார்த்திகை மாதம் கண் திறப்பதாக அவ்வூர் மக்களால் பேசப்படுகிறது. 

ஸ்ரீ  அமிர்தவள்ளி தாயார் ஸமேத 
ஸ்ரீ யோக நரசிம்ம (அக்காரக்கனி) ஸ்வாமி (உற்சவர் - ஸ்ரீ பக்தவத்சல பெருமாள்) திருக்கோயில். 
திருக்கடிகை (சோளிங்கர், சோளிங்கபுரம்),
(64-வது திவ்யதேசம்)

இவ்வூரில் ஒரு கடிகை (சுமார் 1/2 மணி நேரம்) தங்கி இருந்தாலே மோக்ஷம் கிடைக்குமாதலால் கடிகாசலம், திருக்கடிகை என்ற பெயர்கள் ஏற்பட்டனவாம். 

விஸ்வாமித்ரர் இங்கே கடிகையில் நரஸிம்ஹரை ஒரு கடிகை (நாழிகை) ஸ்துதி செய்து ப்ருஹ்மரிஷி பட்டத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

நரஸிம்ஹாவதாரத்தை தரிசிக்க விரும்பிய ஸப்த ரிஷிகள் இவ்விடத்தில் தவம் செய்ய ஆரம்பிக்க, ஒரு நாழிகைக்குள் அவர்கள் பயன் பெற்றமையால் கடிகாசலம் என்ற பெயர் பெற்றது. 

இங்கு இவர் நின்ற கோலமும் அல்ல அமர்ந்த கோலமும் அல்ல.
இத்தலத்தில் ஒரு நாள் தங்கினாலும் பீடைகள் தொலைந்து மோக்ஷம் சித்திக்கும் என்று நரசிம்மபுராணம் கூறுகிறது.

அதற்கான காரணம் 
மகிமை வாய்ந்த நரசிம்ஹர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர்.

ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய ஸ்தலம் இது. 

அதனால் தான் கடிகாசலம் என்று பெயர் பெற்றது. 

இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். 

தக்கான்குளம் என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, யோக நரசிம்ஹரையும் யோக ஹனுமனையும் வழிபட்டு நோய் நொடி நீங்கி நலம் பெறுகிறார்கள். 

கோவில் இருப்பது மலை உச்சியில்
அதனால் இளம் வயதிலேயே கோவிலைப் பார்ப்பது கோடி புண்ணியமாகும்.

ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஆசார்யர்கள் கூறுகின்றனர். 

ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. 

இவருடன் அமிர்தபலவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் ஹனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். 

அதிலும் கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் மட்டும் நரஸிம்ஹரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 

எனவே இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். 

கார்த்திகை ஞாயிற்றுகிழமைகளில் கோவில் நடை அதிகாலை 3:30 மணிக்கே திறக்கப்பட்டு 4:00 மணிக்கு அபிஷேகமும், பூஜைகளும் நடக்கும்.

வாழ்க்கையில் பயம் அகல முன்னேற்றம் காண ஒரு முறை சென்று பாருங்கள்.

பக்த ப்ரஹ்லாதருக்காக நேரம் காலம் பார்க்காமல் மற்றும் மற்ற அவதாரத்தை போல் கர்ப்பத்தில் அவதரிக்காமல் உடனே தோன்றியவர்.

நமக்காக உடனே வருபவர் நரஸிம்மர் மட்டுமே.

வழித்தடம்

சென்னைக்கு அருகே அரக்கோணத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலும் சோளிங்கர் அமைந்துள்ளது. 

சோளிங்கர் பேருந்து நிலையத்திலிருந்து கொண்டபாளையம், 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

|| லஷ்மி நரஸிம்மரின் பல அரிய தகவல்கள் ||

1. நரசிம்ஹரை தொடர்ந்து மனதார வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

2. நரசிம்ஹரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

3. நரசிம்ஹ அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.

4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

5. நரசிம்ஹ அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

6. நரசிம்ஹருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.

7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ஹ அவதாரம் உக்ரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

8. நரசிம்ஹ அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாகவும் அழகாகவும் சொன்னவர் கம்பர்தான்.

9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``ஹிரண்யன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

10. ஹிரண்யனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்ஹரின் கோபத்தை சாந்தப்படுத்திய பிறகே நரசிம்ஹரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்ஹரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.

12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.

13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத் தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

14. நங்கநல்லூர் நரசிம்ஹர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.

15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலஷ்மி நரசிம்ஹரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

16. நரசிம்ஹ அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

17. ``எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.

18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ஹ அவதாரமே ஷண நேரத்தில் தோன்றிய அவதாரமாகும்.

19. நரசிம்ஹரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

20. நரசிம்ஹன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.

21. நரசிம்ஹனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

22. நரசிம்ஹ அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon' என்று கூறி உள்ளார்.

23. ஹிரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்ஹரின் கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.

24. மகாலஷ்மிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. 
இதனால் நரசிம்ஹனை பத்ரன் என்றும் சொல்வார்கள். 
பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.

25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்ஹரிடத்திலேதான் போய் முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ஹ அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.

27. நரசிம்ஹ அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.

28. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்ஹருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

29. நரசிம்ஹ மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.

30. நரசிம்ஹர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர்  ஸ்ரீ ராகவேந்திரர் பிரகலாதன் நாரதர் ருத்ரன் பிரம்மா மற்றும் சகல தேவாதி தேவர்களுக்கும் நிச்சயம் இருப்பார்கள்.

31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்ஹர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்ஹரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்ஹரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்ஹரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

33. மட்டபல்லியில் உள்ள நரசிம்ஹரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.

34. நரசிம்ஹரை வழிபடும் போது 
"ஓம் ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.

35. ``அடித்த கை பிடித்த பெருமாள்'' என்றொரு பெயரும் நரசிம்ஹருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.

36. நரசிம்ஹனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.

37. எல்லா வற்றிலுமே நரசிம்ஹர் நிறைந்து இருக்கிறார். 
எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்ஹரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

38. ஆந்திராவில் நரசிம்ஹருக்கு நிறைய கோவில் இருக்கிறது. 
சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். 
வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.

39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.

40. யோகா சொல்லி கொடுக்கும் நரசிம்ஹர் கோவில்கள் பல உண்டு. ஆமை அவதாரத்தில் உள்ள ஸ்ரீகூர்மம் கோவில் எதிரிலும் ஒரு யோகானந்த நரசிம்ஹ சுவாமி கோவில் உண்டு. வேதாத்ரி என்ற ஊரில் பஞ்ச நரசிம்ம மூர்த்தி தான் மூலவர்.

ஜெய் ஸ்ரீராம்.

No comments:

Post a Comment

Followers

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பற்றிய பதிவுகள்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மதுரையில் இருந்து 74 கிலோமீட்டர் தொலைவில், ...