Wednesday, July 31, 2024

27 நட்சத்திரங்களும் சிவ வடிவங்களும்....

_27 நட்சத்திரங்களுக்கான சிவ வடிவங்கள் :_

 நட்சத்திரங்களுக்கான சிவ வடிவங்கள் :

நட்சத்திரங்கள் என்பது மிகவும் முக்கியமானது. 27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம். 

மனித வாழ்வில் ராசிகளும், நட்சத்திரங்களும் பல மாறுதல்களையும், வளங்களையும், இன்ப- துன்பங்களையும் வழங்குவதாக, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. 

அந்த வகையில் 27 நட்சத்திரங்கள் என்பது மிகவும் முக்கியமானது. இந்த பூமியில் பிறந்தவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் ஒரு நட்சத்திரத்திலேயே பிறந்திருக்க வாய்ப்புண்டு. அந்த வகையில் 27 நட்சத்திரக்காரர்களும், தங்களின் நட்சத்திரங்களுக்கான தெய்வங்களை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். 27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம். அந்த வகையில் இங்கே 27 நட்சத்திரங்களுக்காக சிவ வடிவங்கள் தரப்பட்டுள்ளது.  

* அஸ்வினி - கோமாதாவுடன் கூடிய சிவன்
*  
* பரணி - சக்தியுடன் இருக்கும் சிவன் * கார்த்திகை - சிவபெருமான் 

* ரோகிணி - பிறை சூடிய பெருமான் 
* மிருகசீரிஷம் - முருகனுடன் இருக்கும் சிவன்
 * திருவாதிரை - நாகம் குடைபிடிக்கும் சிவன்

 * புனர்பூசம் - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன் 

* பூசம் - நஞ்சுண்ணும் சிவன்
 * ஆயில்யம் - விஷ்ணுவுடன் உள்ள சிவன்

 * மகம் - விநாயகரை மடியில் வைத்த சிவன்

 * பூரம் - அர்த்தநாரீஸ்வரர்

 * உத்ரம் - நடராஜ பெருமான்

 * ஹஸ்தம் - தியான கோல சிவன் 

* சித்திரை - பார்வதிதேவி, நந்தியுடன் சிவன்
 * சுவாதி - சகஸ்ரலிங்கம்

 * விசாகம் - காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்  

 * அனுஷம் - ராமர் வழிபட்ட சிவன்

 * கேட்டை - நந்தியுடன் உள்ள சிவன்

 * மூலம் - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன் 

* பூராடம் - சிவ-சக்தி-கணபதி
 * உத்திராடம் - ரிஷபத்தின் மேல் அமர்ந்து பார்வதியுடன் இருக்கும் சிவன்

 * திருவோணம் - விநாயகருடன், பிறைசூடிய சிவன்

 * அவிட்டம் - மணக்கோலத்தில் உள்ள சிவன்

 * சதயம் - ரிஷபம் மீது சக்தியுடன் வீற்றிருக்கும் சிவன்

 * பூராட்டாதி - விநாயகரை மடியின் முன்புறமும், சக்தியை அருகிலும் வைத்திருக்கும் சிவன்

 * உத்திரட்டாதி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

 * ரேவதி - குடும்பத்துடன் உள்ள சிவன்  
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாடு...

 நந்தி பகவானை பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றிய பதிவுகள் :*
சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக, நந்திதேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.

நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பதாகும். அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள்.
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பாகும். யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனையும், நந்தியையும் வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

அதுமட்டுமின்றி எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.

*நந்தி பகவானை பிரதோஷ நாள் அன்று விரதமிருந்து பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :*

நந்தி பகவானை மூன்று முறை பிரதட்சணம் செய்தால் எண்ணிய காரியம் நிறைவேறும்.

நந்தி பகவானை ஐந்து முறை பிரதட்சணம் செய்தால் ஜெயம் உண்டாகும்.

நந்தி பகவானை ஏழு முறை பிரதட்சணம் செய்தால் துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் உண்டாகும்.

நந்தி பகவானை ஒன்பது முறை பிரதட்சணம் செய்தால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும்.

நந்தி பகவானை 11 முறை பிரதட்சணம் செய்தால் ஆயுள் விருத்தி உண்டாகும்.

நந்தி பகவானை 13 முறை பிரதட்சணம் செய்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

நந்தி பகவானை பதினைந்து முறை பிரதட்சணம் செய்தால் செல்வம் பெருகும்.

நந்தி பகவானை பதினேழு முறை பிரதட்சணம் செய்தால் தன விருத்தி உண்டாகும்.

நந்தி பகவானை 108 முறை பிரதட்சணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.

1008 முறை நந்தி பகவானை பிரதட்சணம் செய்தால் ஒரு வருட தீட்சை பெற்ற பலன் கிடைக்கும்.. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

Tuesday, July 30, 2024

கோவிலுக்குப் போனால் பிரசாதம் தானே நமக்கு ரொம்ப முக்கியம்!!

_ஆலயங்களில் வழங்கப்படும் பிரசாதங
கோவில் என்றாலே நம்முடைய நினைவுக்கு முதலில் வருவது அந்த கோவிலின் அமைப்பு, அங்கு கொடுக்கப்படும் பிரசாதமும் தான்.

கோவிலுக்குப் போனால் பிரசாதம் தானே நமக்கு ரொம்ப முக்கியம்!!

சில கோவில்களில் திருநீறு, பூக்கள், கொடுப்பார்கள். 

அம்மன் கோவிலாக இருந்தால் மஞ்சள், குங்குமம் ஆகியவையும் கொடுப்பார்கள்.
பெருமாள் கோவிலில் துளசியை பிரசாதமாகக் கொடுப்பார்கள்.

அதைத்தாண்டி, சாப்பிடுவதற்கான கொடுக்கப்படும் பிரசாதங்களும் உண்டு. அவை அவ்வப்போது மாறும். அதாவது லட்டு,புளியோதரை,எலுமிச்சை சாதம், பொங்கல், பருப்பு கூழ், சுண்டல் இப்படி என்னவெல்லாமோ கொடுப்பார்கள்.

ஒவ்வொரு ஆலயங்களிலும் வழங்கப்படும் பிரசாதம் சிறப்பு வாய்ந்தவை.

ஆலயங்களில் நிவேதிக்கப்படும் உணவு வகைகள் அந்தந்த ஆலயங்களுக்கு என்றே உரித்தான ஒழுங்கு முறைப்படி தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் எந்தெந்த ஆலயங்களில் என்னென்ன பிரசாதங்கள் என்று பார்ப்போம்.

ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும், துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.

திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு,  மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லி தான் முதல் நைவேதியம்.

திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர் சாதம் மட்டுமே.

கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

முஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.

கேரளம், மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது.

நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.

தங்கக் காசுகள்

என்னென்னவோ பிரசாதங்கள் வாங்கியிருப்போம்.ஆனால் எந்த கோவிலிலாவது தங்கக் காசுகளை பிரசாதமாகக் கொடுப்பதைப் பார்த்திருக்க மாட்டோம்.

நாம் தான் நேர்த்திக் கடன் என்ற பெயரில் தங்கத்தை கடவுளுக்குப் படைப்போம்.

ஆனால், அப்படி ஒரு கோவிலும் நம்முடைய இந்தியாவில் தான் இருக்கிறது.

இந்த அற்புதக் கோவிலானது,மத்திய பிரதேச மாநிலம் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.

அதாவது ரத்லம் என்னும் ரத்னபுரி பகுதியில் தான் இக்கோவில் இருக்கிறது.

இந்த ரத்னபுரி கோவிலுக்குள் உறைந்திருக்கும் கடவுள், நமக்கு வளங்களை அள்ளித் தருகின்ற லட்சுமிதேவி தான் அது.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள், குறிப்பாக வசதி படைத்தவர்கள் தாங்கள் செலுத்துகின்ற காணிக்கையைப் பணமாகச் செலுத்துவதில்லை. காணிக்கை செலுத்த நினைப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

பொதுவாக நாம் கோவிலுக்கு செலுத்துகின்ற பணம், தங்கம், வெள்ளி ஆகிய அத்தனையும் கோவில் நிர்வாகத்துக்கும், அரசுக்கும்,கோவில் திருப்பணிகளுக்கும் பயன் படுத்தப்படுவது தான் வழக்கம்.
 
ஆனால், இந்த கோவிலைப் பொறுத்தவரையில், பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகின்ற அத்தனை தங்கமும் வெள்ளியும் பெரிய மலை போல குவித்து வைக்கப்பட்டிருக்கும்.இந்த மலை போல குவிக்கப்படும் பொருள்களை, வருடத்தின் முக்கியப் பண்டிகையாக இந்தியாவில் கொண்டாடப்படுகிற தீபாவளியன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அந்த தங்கம் மற்றும் வெள்ளி கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று மட்டும் தான் தங்கம் பிரசாதமாக வழங்கப்படும். தினமும் வழங்கப்படும் வழக்கம் இங்கு கிடையாது.

மேலும்,இங்கு பிரசாதமாக தங்கம் கிடைத்து விட்டால்,வாழ்க்கையில் பணக்கஷ்டம், வறுமை என அத்தனையும் தீர்ந்து மகாலட்சுமியே தங்களுடைய வீடுகளுக்குள் நுழைவதாகவே பக்தர்கள் கருதுகிறார்கள்.

இந்த தங்கக் காசை இறைவனின் அருளாக பாவிப்பதால்,அதை யாரிடமும் கொடுப்பதோ விற்பதோ கிடையாது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

ஐநூற்றீஸ்வரர் சிவன் கொங்கணசித்தர் தங்கமாக மாற்றுகிற சக்தி கொடுத்தவர்.....

_திருப்பதியில் ஏன் சொர்ண மழையும் பண மழையும் பொழிகின்றது_

இந்தியா தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகருக்கு 6 கி.மீ அருகே உள்ள மாத்தூர் மற்றும் இலுப்பைக்குடி கோயில்களில் கொங்கணசித்தர் தங்கமாக மாற்றுகிற வரலாறு ஒன்று உண்டு.
கொங்கணசித்தர் தமது கடும் முயற்சிக்கு பிறகு தமக்கு கிடைத்த மூலிகையை பயன்படுத்தி இரும்பை தங்கமாக மாற்றுகிறார். இலுப்பைக்குடி கோயிலுக்கு அருகில் உள்ள மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் கோவிலில் அவருக்கு அப்படி அவர் செய்த தங்கம் 500 (Touch) மாற்றுக்கள் தரம் உடைய தங்கம் தான் கிடைத்தது. அதனால் தான் மாத்தூர் கோவிலில் தங்கம் 500 (Touch) மாற்றுக்கள் தரம் கொண்ட தங்கமே கிடைத்ததால் மாத்தூர் கோவிலில் ஐநூற்றீஸ்வரர் என சுவாமி அழைக்கப்படுகிறார்.
இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது 91.6 (touch) ஆனால் கொங்கணரோ அன்றே 500 (Touch)க்கு சென்றுவிட்டார். 500 (Touch) மாற்றுக்கள் தரம் கொண்ட தங்கத்தில் திருப்தி அடையாத கொங்கணர் 

மேலும் இன்னும் தகதகவென மேலும் அதிக தூய்மையான மாற்றுக்கள் தரம் கொண்ட வேண்டுமென்று சிவபெருமானை நோக்கி தவம் இயற்றுகிறார். சித்தர் அல்லவா....
             சிவனும் மனமிறங்கி அதோ அங்கே இலுப்பைக்குடியில் இலுப்பை மரமும் வில்வ மரமும் நிறைந்த அந்த இடத்தில் பைரவரை நினைத்து 1000 (Touch) மாற்றுக்கள் உள்ள தங்கத்தை தயாரிக்க அருள்செய்கிறார்.
கொங்கணரும் மிக சரியாக இந்த வில்வமரம் மற்றும் இலுப்பைமரங்கள் நிறைந்த இடமான இலுப்பைக்குடியில் ஸ்வர்ணாகர்ஷன பைரவர் ஆசியுடன் 1000 (Touch) மாற்றுக்கள் உள்ள தங்கத்தை தயாரித்துவிட்டார். அந்த தங்கமோ தகதகவென ஜோதியாக மின்னுகிறதாம். அப்போதும் திருப்தி அடையாத அவர் இன்னும் பிரகாசமாய் தங்கம் மாற்று அதிகமாக வேண்டுமென்று முயற்சி செய்த போது,  அதுஅப்படியே பூமிக்குள் சென்று ஜோதியாக சிவலிங்கமாக சுயம்பிரகாசேஸ்வரராக காட்சியளித்து தான் உச்சகட்ட ஜோதி பிரகாசம் என்று கொங்கணருக்கு அறிவுறுத்தி அருள்பாலிக்கின்றார்.
இப்படி பிரகாசமாக ஜோதியிலிருந்து தோன்றியதால் இலுப்பைக்குடி கோவில் ஸ்வாமிக்கு சுயம்பிரகாசேஸ்வரர் என்றும், தான்தோன்றிஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். மிக பழமையான பைரவர் தலங்களுள் இதுவும் ஒன்று. ஒரு புறம் இரும்பு மறு புறம் அதன் உச்சம் ஜோதி பிரகாசமாக இறைநிலை. இதற்குமேல் பிரகாசம் கிடையாதல்லவா?

ஆக, கொங்கண சித்தர் மனம் இறைவசப்பட்டு உணர்ந்து ஞானம் பெற்று இறைவனைவிட மிஞ்சிய சுயம்பிரகாச ஜோதி 1000 கோடி சூர்ய பிரகாசத்திற்கும் அதிகமாக ஜொலித்ததை கண்டு இனி, இறைவனே பரிபூரணஜோதி என்று உணர்ந்து சித்தி வாய்க்கப் பெற்று ஞானம் பெற்று, பின் வாழ்க்கை சக்கரம் சுழன்று பல இடங்களுக்கு சென்று இறுதியில் திருப்பதியில் ஜீவசமாதி அடைகின்றார்

மாத்தூர் கோவிலில் தங்கம் 500 (Touch) மாற்றுக்கள் கிடைத்ததால் ஐநூற்றீஸ்வரர் என்றும், இலுப்பைக்குடியிலோ 1000 கோடி சூர்யப் பிரகாசத்திற்கும் அதிகமாக காட்சி தந்து தானே மிக பிரகாசமானவன் என்று அர்த்தம் உணர்த்தி கொங்கணசித்தர் ஞானம் பெறச் செய்ததால் இலுப்பைக்குடி கோவில் சுவாமி சுயம்பிரகாசேஸ்வரர் என்றும், சுயம்புமூர்த்தம் என்பதால் தான்தோன்றிஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.

கொங்கணர் சித்தர் "ஸ்வர்ணாகர்ஷண பைரவரின்" அருளை பரிபூரணமாக பெற்றவர். திருமலை திருப்பதி கருவறையில் பெருமாளின் பாதத்தின் கீழ் ஜீவசமாதி பெற்றவர். கொங்கணரின் அழகிய திரு உருவம் வெகு காலமாக திருமலை பெருமாளின் உள்சுற்று பாதையில் பக்தி சிரத்தையோடு ஆராதிக்கப் பட்டும், மக்களின் தரிசனத்திற்காகவும் அனுமதிக்கப் பட்டது.

ஆந்திரா முன்னாள் முதல்வர் N T ராமாராவ் முதல்வராக இருந்த போது கொங்கணரின் அருள் கடாக்ஷம் தன் மாநிலத்தை விட்டு வேறு எங்கும் போய்விடக் கூடாது என்பதற்காக, கொங்கணரின் திரு உருவத்தை பொதுமக்களின் தரிசனம் செய்ய அனுமதிக்காமல் மறைக்க உத்தரவிட்டார். அதனால் கொங்கணரின் சாபத்திற்கு ஆளாகி அவரின் ஆட்சி, ஆயுள் முடிவுக்கு வந்தது . இப்போதும் அங்கே மறைக்கப் பட்ட கொங்கணர்க்கு ரகசியமாக பூஜை நடைபெறுகிறது. ஆனால் யாரும் பார்க்க முடியாது அனுமதி இல்லை. பழைய அர்ச்சகர்கள் மற்றும் பெரியோர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது.

ஆனால், உண்மை இப்போதும் திருப்பதி மூலஸ்தான சுற்று பாதையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அதிசயமாக இப்போதும் உள்ளது கொங்கண சித்தரின் சமாதி. கொங்கணர் வேண்டிக் கொண்ட படி திருமலையில் இறைவன் கொங்கணரின் தலையில் கால் வைத்து அழுத்தி பூமிக்குள் சமாதியில் வைத்து அருளினார். அதனால் தான் திருப்பதியில் மூலவர் இருக்கும் பகுதி முழுதும் பள்ளமாக இருக்கும் என்கிறார்கள்.
          
திருப்பதியில் ஏன் சொர்ண மழையும், பண மழையும் பொழிகின்றது என்று இப்போது உங்களுக்கு தெரிகிறதா....

சிந்தியுங்கள்.....
சித்தர்களின் அருள் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை உலகில்....


- குபேர குருஜி ஸ்டார் ஆனந்த் ஐயா எழுதிய ஸ்வர்ண ஆகர்ஷண கொங்கணர் நூலில் இருந்து.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

அறந்தாங்கி காவல் தெய்வம் வீரமாகாளியம்மன்....

ஆடி மாத சக்தி தலங்களின் வரிசையில் #புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான, 
பல கிராமங்களின் காவல் தெய்வமான
#அறந்தாங்கி (அறந்தை)
#வீரமாகாளியம்மன் திருக்கோயில் வரலாறு:
அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வமாக திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம்.
பூமிக்குள் இருந்து வெளிப்பட்ட அம்மன், திருமண வேண்டுதலுக்குப் பொட்டுதாலி காணிக்கை பெறும் ஆலயம், அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வம், முப்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம்.

தலவரலாறு :

இவ்வாலயம் அருகேயுள்ள மூக்குடி கிராம மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறாள், இந்த வீரமாகாளி அம்மன்.

சிறிய கல் வடிவில் சுயம்புவாகத் தோன்றிய வீரமாகாளிக்கு, சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவுருவச் சிலை செய்யும் எண்ணம் கிராம மக்களுக்கு ஏற்பட்டது. அப்போது உருவான சிலையை நான்கு கரங்களுடன் செய்து முடித்தனர். ஆனால், அந்தச் சிலையின் வலது மேல் கரத்தில் ஒரு விரலில், பின்னம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்தனர்.

அன்றைய தினம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் பூமியில் மறைந்து வாழ்ந்து வருகிறேன். நான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது. நான் இருக்க இன்னொரு வடிவம் தேவையா?. என் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை நடக்க விடுங்கள். அது எங்கு சென்று அமர்ந்து கொள்கிறதோ அங்கே தோண்டுங்கள். என் வடிவம் கிடைக்கும்’ என்று கூறியதும் அர்ச்சகர் கனவு கலைந்து எழுந்தார்.

தன்னுடைய கனவைப் பற்றி ஊர் மக்களிடம் கூறினார். அனைவரும் அவ்வாறே ஆட்டை நடக்கவிட்டனர். அது ஓரிடம் சென்று அமர்ந்தது. அங்கே மண்ணைத் தோண்டியபோது, சில அடி ஆழத்தில் அம்மனின் பிரம்மாண்ட கற்சிலை கிடைத்தது. அந்தசிலை எண் கரங்கள் கொண்டு, அசுரனை அழுத்திய கோலத்தில் இருந்தது. அதில் ஒரு அதிசயம் தென்பட்டது. அதன் வலது மேல்கரத்தில் ஒருவிரல் பின்னப்பட்டு இருந்தது.

எனவே ஊர் மக்களுக்கு இதை வைத்து வழிபாடு செய்யலாமா? என்ற ஐயம் ஏற்பட்டது.

அதன்பின் அன்றிரவும் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அன்னை, ‘உங்கள் வீட்டில் ஒருவருக்கு ஊனம் என்றால், அவரை தூக்கி வீசிவிடுவீர்களா? நான் உங்களைக் காக்க வந்த அன்னை. என்னை தயக்கம் இன்றி நிறுவி வழிபடுங்கள்’ என்றாள்.

இதையடுத்து அந்த பிரம்மாண்ட சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்ய ஊர் மக்கள் முடிவு செய்தனர். அன்று முதல் இன்று வரை அந்த அன்னையே ஊர் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறாள்.

ஆலய அமைப்பு :

ஆலயம் வடக்கு நோக்கிய வாசலைக் கொண்டு அமைந்துள்ளது. எளிய முன் முகப்பு மண்டபத்தின் வலதுபுறம், கருப்பசாமி மற்றும் விநாயகர் சிலை வடிவங்கள் அமைந்துள்ளன. கருவறை வாசலில் கல்லால் வடிக்கப்பட்ட பெரிய வடிவ துவாரபாலகியர்கள் காவல்புரிகின்றனர்.

கருவறையின் இடதுபுற முகப்பில் பழங்கால விநாயகர், பெருச்சாளி வாகனம் உள்ளிட்ட சிறிய வடிவிலான தெய்வ சிலை வடிவங்கள் அமைந்துள்ளன. முதல் மரியாதை இவர்களுக்கே. இதைக் கடந்ததும், கருவறையின் உள்ளே அன்னை வீரமாகாளி எழிலான கோலத்தில், பிரம்மாண்ட வடிவில் கருணை வடிவாக அருள்காட்சி வழங்குகிறாள்.

வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில், சிரசில் மகுடம் தாங்கி, வலது காதில் ஆணுக்குரிய நாகாபரணமும், இடது காதில் பெண்ணுக்குரிய பாம்படம் எனும் காதணியும் அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை, எண்கரங்களோடு காட்சியளிக்கிறாள். வலதுபுறம் சூலம், வாள், உடுக்கை, வேதாளம் கொண்டும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, வரதம் தாங்கியும் காட்சிதருகின்றாள். காளிக்குரிய கபாலம் அன்னையின் கரத்தில் காணப்படாதது குறிப்பிடத்தக்கது.

வலதுகாலை மடக்கி, இடது காலை அசுரனின் தலையை அழுத்தியும், சூலத்தால் குத்தியும் காட்சி அளிக்கின்றாள். அன்னையின் முகத்தில் சிறிய கோரைப்பற்கள் காட்சி தந்தாலும், அன்னை சாந்த சொரூபியாக காட்சி தருவது அபூர்வக் கோலமாகும்.

இந்த அம்மன் திருமணத்தடை உள்ளவர்களும், அனைத்துவித திருமண தோஷம் உள்ளவர்களுக்கும், தலை சிறந்த தலமாக வீரமாகாளி திகழ்கிறாள்.

வரம் வேண்டுவோர் அம்மனை நேரில்வந்து அல்லது ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ள வேண்டும். விரைவில் திருமணம் கைகூடும். திருமணம் நிச்சயமான பிறகு அல்லது திருமணம் முடிந்தபிறகு, பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவுசெய்து கொள்ள வேண்டும்.

இதேபோல, நாகதோஷம் உள்ளவர்களுக்கும், புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், அன்னை வழிகாட்டுகிறாள். நேர்த்திக் கடன் செலுத்திய குழந்தை மண் பொம்மைகள் இங்கே குவிந்துள்ளதே இதற்கு சாட்சியாகும். குழந்தை வரம் நிறைவேறியவர்கள், அந்தக் குழந்தையைக் தத்துக் கொடுத்து, மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர்.

காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் தரிசனம் செய்யலாம்.

அமைவிடம் :

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி நகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 33 கி.மீ., திருச்சிராப்பள்ளியில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே அரை கி.மீ. தொலைவிலும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Monday, July 29, 2024

ஆடி அமாவாசை திருவையாற்றில் அப்பர் திருக்கயிலாயக் காட்சி....



திருவையாற்றில் அப்பர் 
திருக்கயிலாயக் காட்சி
தென்கயிலாயம் என்று போற்றப்படும் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர் கோவிலில் ஆடி அமாவாசையில் அப்பர் கயிலாயக் காட்சி திருவிழா பல ஆண்டுகளாக பெருஞ்சிறப்புடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
ஆடி அமாவாசை அன்று

 இதனை முன்னிட்டு அன்று முழுவதும் இடையறாது திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கும். காலை 7 மணி அளவில் சிவபூஜையும், பகல் 12 மணி அளவில் காவிரியில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், அபீஷ்ட வரத மகாகணபதி சந்நிதிக்கு எதிரில் இருக்கும் திருக்குளத்தில் (உப்பங்கோட்டை) அப்பர் எழுந்தருளி தீர்த்தவாரியும், இரவு 9 மணி அளவில் ஐயாறு ஆலயத்தில் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளுதலும் நடைபெறும்.

 அதற்கு முன் சந்நிதியின் மண்டபத்தில் 200-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் கூடி அப்பரின் பதிகங்களான கூற்றாயினவாறு, சொற்றுணைவேதியன், தலையே நீ வணங்காய், வேற்றாகி விண்ணாகி, மாதர்ப்பிறைக்கண்ணி யானை ஆகிய ஐந்து பதிகங்களை பக்கவாத்தியத்துடன் இசைத்து ஆராதனை செய்வார்கள்.
திருவையாற்றுக்கு உரிய சிறப்பு ஆடி அமாவாசை அப்பர் கயிலாயக் காட்சி திருவிழா, "யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது'' என்ற அப்பரின் திருவாக்கின்படி நாமும் இந்நாளில் திருவையாறில் திருக்கயிலைக் காட்சியைக் காண்போம். 

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸ்ரீ ஐயாறப்பருடன் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளும் அந்த பக்திப்பரவசமான காட்சியை காணக் கண்கோடி வேண்டும்.

 திருவையாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் பெறலாம். 

மேலும் திருக்கயிலைக்கு யாத்திரை மேற்கொண்டவர்கள் திருவையாற்றுக்கு வந்து தரிசித்தால் கயிலையை தரிசித்ததன் புண்ணியம் முழுமையாக கிடைக்கும்.

திருவையாற்றில் அப்பர் கயிலாயக்காட்சிக் காண திருவையாறு சிவ சேவா சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. அனைவரும் வருக எம்பெருமானின் திருவருளைப் பெருக.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

தேன் அபிஷேகத்தை உறிஞ்சும் அதிசய விநாயகரான கும்பகோணம் திருப்புறம்பியம் கோயில்....

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே உள்ள தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான ,
விநாயகர் சதுர்த்தியன்று செய்யப்படும் தேன் அபிஷேகத்தை உறிஞ்சும் 
அதிசய விநாயகரான 
#திருப்புறம்பியம் #சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள 
#பிரளயம்_காத்த_விநாயகர் (#தேனபிஷேகப்பெருமான்) திருக்கோயில் வரலாறு:
கும்பகோணத்தில் இருந்து  11 கி.மீ . தொலலைவிலுள்ள தேவாரத்தலம் திருப்புறம்பியம். இறைவன் திருநாமம் சாட்சிநாதேசுவரர். இறைவியின் திருநாமம் கரும்பன்ன சொல்லம்மை.

இராகு அந்தர கற்பத்தில் ஏற்பட்ட பரளயத்தில் திருப்புறம்பயம் திருத்தலத்தைக் கருனையால் காத்த ஸ்ரீ பரளயம் காத்த விநாயகர் நத்தான் கூடு, கிளிஞ்சல், கடல்நுரை, இவற்றாலான தெய்வத் திருமேனி கொண்டவர்.
ஸ்ரீ வருண பகவானால் பிரதீஷ்டைசெய்யப்பெற்ற இப்பெருமானுக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தித் திருநாளில் இரவு முழுவதும் தேனபிஷகம் செய்யபடும்.

அபிஷகம் செய்யப்படும் தேன் முழுவதும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவது கண் நிறைந்தகாட்சியாகும்.

விநாயகர் சதுர்த்தி அன்று ஸ்ரீ பிரளயம் காத்த விநாயகரை தரிசனம் செய்தால் சர்வசைங்கடைங்களும் நிவர்த்தியாகும்.

#தல வரலாறு:

ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயம் ஏற்பட்ட போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தனமயால், இத்தலம்   திருப்புறம்பியம் என்ற பெயர் பெற்றது.

இத்தலத்திலுள்ள விநாயகர் வருண பகவானால் உருவாக்கப்பட்டவர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்ற் கடல் சார்ந்த பொருட்களால் விநாயகர் திருமேனியை, வருண பகவான் உருவாக்கினார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று இரவு முழுவதும் முழுக்க முழுக்க தேனால் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். மாலை 6:30 மணிக்கு தொடங்கப்படும் அபிஷேகம் விடிய விடிய நடைபெறும். .அபிஷேகம் செய்யப்பெறும் தேன்யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். இந்தத் தேன் அபிஷேகம் நடைபெறும் வேலையில் விநாயகர் செம்பவளத் திருமேனியராய் காட்சித் தருகிறார் வேறு நாட்களில் இந்த விநாயகருக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட 
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான ,சிவபெருமான் செட்டிப் பெண்ணிற்கு சாட்சி சொன்ன தலமான #திருப்புறம்பியம்
#சாட்சிநாதேஸ்வரர்
#கரும்பன்னசொல்லிஅம்மன் திருக்கோயில்:

திருப்பிறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் திருப்புறம்பியத்தில் அமைந்துள்ளது. செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சிசொன்ன தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 46வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினத்திற்குரிய கோயிலாகும்.

மூலவர்:சாட்சி நாதேஸ்வரர், சாக்ஷீஸ்வரர், புன்னைவனநாதர்
அம்மன்/தாயார்:கரும்பன்ன சொல்லி, இக்ஷீவாணி
தல விருட்சம்:புன்னை
தீர்த்தம்:பிரமதீர்த்தம்
புராண பெயர்:திருப்புறம்பயம், கல்யாண மாநகர், புன்னாகவனம்
ஊர்:திருப்புறம்பியம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் , அருணகிரிநாதர்

தேவாரபதிகம் :

முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே என்னை நீதியக் காதெழுமட நெஞ்சமே யெந்தை தந்தையூர் அன்னச் சேவலோடு ஊடிப் பேடைகள் கூடிச் சேரும் அணிபொழில் புன்னைக் கன்னி கழிக்கண் நாறும் புறம்பயந் தொழப் போதுமே.

-சுந்தரர்

தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 46வது தலம்.

பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தனமயால் (புறம்பு – அயம்) திருப்புறம்பயம் என்ற பெயர் பெற்றது.

புராண வரலாறு:

பிற்கால சோழ பேரரசு உருவாக காரணமான சிறப்புமிக்க போர் நடந்த ஊர் இது. இப்போரின் வெற்றியின் நினைவாக முதலாம் ஆதித்த சோழன் இங்கிருந்த செங்கற்கோயிலை அழகிய கருங்கல் கோவிலாக கட்டினார். இங்குள்ள பிரளயம் காத்த விநாயகர் சிறப்பானவர். சிவபெருமான் கிருதயுக முடிவில் உண்டான பிரளயத்தில் இருந்து இவ்வாலயத்தை காக்கும் பொருப்பை விநாயகரிடம் ஒப்படைத்தார். ஆணையை ஏற்று ஓங்காரத்தைப் பிரயோகம் செய்து ஏழு கடலின் ஆக்ரோஷத்தை ஒரு கிணற்றுக்குள் அடக்கினார். திருக்குளத்தின் கிழக்கே இந்த ஏழு கடல் கிணறு அமைந்துள்ளது. இத்தலத்தை காத்த விநாயகபெருமானை வருணபகவான் கடல் பொருட்களான சங்கம், நத்தாங்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகியவற்றால் பிரதிஷ்டை செய்தார். பிரளயம் காத்த விநாயகருக்கு எப்போதும் தேன் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது இவ்வாலயத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

தல வரலாறு:

ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயம் ஏற்பட்ட போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தனமயால் (புறம்பு - அயம்) திருப்புறம்பயம் என்ற பெயர் பெற்றது.

வணிகர் ஒருவன்  மாமன்  மகள்  இரத்தினவல்லி உடன் இவ்வூருக்கு வந்தார். இரவு தங்கியிருந்த போது வணிகன் பாம்பு கடித்து இறந்தமையால் இரத்தினவல்லி வருந்தியழுதாள். சிவபெருமானிடம் முறையிட்டாள். அவ்வூருக்கு வந்திருந்த திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி அவனை எழுப்பியருளி இரத்தினவல்லிக்கு திருமணம் செய்து வித்தார். இறைவன் சான்றாக நின்றருளினார். இதனால் இறைவனுக்கு சாட்சிநாதர் என்று பெயர் பெற்றார். இதற்கு வன்னிமரமும் ஒரு சான்றானது. இறைவன் திருமணம் நடத்தி வைத்ததற்கு சாட்சியாக இருந்த வன்னிமரம் இத்தலத்தின் இரண்டாம் பிரகாரத்திலுள்ளது. சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும் தலபுராணத்திலும் வருகிறது.

தெட்சிணாமூர்த்திக்குரிய 24 முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். அகத்தியர், பிரமன், சனகாதி நால்வர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட தலம். அரித்துவசன் என்னும் அரசனுக்குத் துர்வாச முனிவர் சாபத்தால் ஏற்பட்ட முயலக நோய் நீங்கிய தலம். கோவிலுக்கு விறகு கொண்டுவந்த ஒரு ஏழைக்கு இறைவன் தெட்சிணாமூர்த்தி ரூபமாகத் தரிசனம் கொடுத்தார்..

இத்தலத்திலுள்ள விநாயகர் வருண பகவானால் உருவாக்கப் பட்டவர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்ற் கடல் சார்ந்த பொருட்களால் விநாயகர் திருமேனியை உருவாக்கினார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று இரவு முழுவதும் தேன் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யப்பெறும் தேன் யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். வேறு நாட்களில் இந்த விநாயகருக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரளயம் காத்த விநாயகர்:

இங்கு தேனபிஷேகப்பெருமான் எனப் போற்றப்படும் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதியில் உள்ளார். இந்த விநாயகருக்கு ஆண்டு தோறும் விநாயக சதுர்த்தி தினத்தன்று இரவு மட்டுமே தேனால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதைத் தவிர மற்ற நாள்களில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அபிஷேம் செய்யப்படும் தேன் முழுவதும் இந்த விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் வேறு எங்கும் காணமுடியாதது. 

திருப்புறம்பியம் போர்:

பல்லவ - பாண்டிய - சோழ வரலாற்றை மாற்றிய திருப்புறம்பியம் போர்.

பல்லவர்களும் பாண்டியர்களும் மோதிக்கொண்ட  இடம். எங்கள் பல்லவ சாம்ராஜ்யம் இந்த போரில் தான் முற்றுபெற்றது.

பல்லவப் பேரரசின் கடைசி மன்னன் அபராஜித வர்ம பல்லவன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் கடைசி மன்னன்

கிபி 250-இல் தென்னகம் வந்து கிபி 340 அளவில் தமிழகத்தில் காலூன்றிக்கொண்டுவிட்ட பல்லவர்கள் ஒரு பேரரசை நிறுவிக்கொண்டவர்கள்; பல்லவநாட்டைவிடப் பன்மடங்கு பெரிதான சாளுக்கியப் பேரரசையும் சமுத்திரகுப்தனின் சமுத்திரம்போன்ற படைகளையும் எதிர்த்து நின்று வெற்றியும் பெற்றவர்கள்.

திருப்புறம்பியத்தில் போரில் பல்லவன் நிருபதுங்க பல்லவரின் சார்பாக அவர் மகன் அபராஜித பல்லவன் தலைமை தாங்கினார். அபராஜிதன் - அ + பர + ஜிதன் = எதிரிகளால் வெல்லப்படமுடியாதவன்.பல்லவர்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும் கூட அவர்களும் தங்களின் வலுவை இழந்தார்கள்.

அபராஜிதர் கிபி 862-63 ஆண்டு திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன் வரகுண வர்மனை தோற்கடித்தார். இருப்பினும் அதே இடத்தில் சோழ மன்னர் ஆதித்தன் இவரை கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார். இவனது அழிவுடன் பல்லவ வழிமுறை முடிவிற்கு வந்தது.

தலபெருமை:

இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகசதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளிவராது. மற்ற நாள்களில் திருமுழுக்கு இல்லை. தெட்சிணாமூர்த்திக்குரிய 24 முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். அகத்தியர், பிரமன், சனகாதி நால்வர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட தலம்.

அரித்துவசன் என்னும் அரசனுக்குத் துர்வாச முனிவர் சாபத்தால் ஏற்பட்ட முயலக நோய் நீங்கிய தலம். கோவிலுக்கு விறகு கொண்டுவந்த ஒரு ஏழைக்கு இறைவன் தெட்சிணாமூர்த்தி ரூபமாகத் தரிசனம் கொடுத்தார். கோவிலின் கிழக்கேயுள்ள குளக்கரையில் இத்தெட்சிணாமூர்த்தியுள்ளார். கிழக்கு நோக்கிய கோபுரவாயில், முதற்பிரகாரத்தில் நால்வர், அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட லிங்கங்கள், முதலியவை உள்ளன.

இரண்டாவது பிரகாரத்தில் அம்பாள் கோயில் உள்ளது. குளத்தின் தென்கரையில் தெட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இதற்கு மேலே சட்டைநாதர் சன்னதி உள்ளது. தலவிநாயகர் – பிரளயங் காத்த பிள்ளையார் – வெண்ணிறத் திருமேனி. தலபுராணமும், உலாநூலும் உள்ளனவாகத் தெரிந்தாலும் அச்சிடப்பட்டுக் கிடைக்கவில்லை. திருவையாறு வித்வான் வை. சுந்தரேசவாண்டையார் அச்சிட்டுள்ள “புறம்பயமாலை’ என்னும் நூலில் 10 பாடல்களே கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகசதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளிவராது. மற்ற நாள்களில் திருமுழுக்கு இல்லை.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 46 வது தேவாரத்தலம் ஆகும். கி.பி. 800இல் ஆதித்த சோழன் கற்றளியாக மாற்றியதாக வரலாறு.

கோவில் அமைப்பு:

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பிற்கால சோழ பேரரசு உருவாக காரணமான சிறப்புமிக்க போர் நடந்த ஊர் இது. இப்போரின் வெற்றியின் நினைவாக முதலாம் ஆதித்த சோழன் இங்கிருந்த செங்கற்கோயிலை அழகிய கருங்கல் கோவிலாக கட்டினார். இக்கோவில் மதுரை திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதீனத்திற்கு சொந்தமானது. இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறது.

கோபுர வாயில் வழியே உள்ளே சென்றவுடன் நாம் காண்பது விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம். நேரே பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம் ஆகியவற்றைக் காணலாம். நந்தி மண்டபத்தின் விமானத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சுதை சிற்பங்களைக் காணலாம். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கடும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன. முதற்பிரகாரத்தில் நால்வர், அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட லிங்கங்கள், முதலியவை உள்ளன.

இரண்டாவது பிரகாரத்தில் அம்பாள் கோயில் உள்ளது. இடப்புறமாக குஹாம்பிகை சன்னதியும், அடுத்து கரும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன.ஆறுமுகனை குழந்தை வடிவில் தன் இடையில் தாங்கி நிற்கும் ஸ்ரீகுகாம்பிகை சந்நிதி சிறப்பு வாய்ந்தது. இந்த அன்னைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப்படும். இது திருமண பரிகாரத் தலமாகும்.குளத்தின் தென்கரையில் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது.. இதற்கு மேலே சட்டைநாதர் சந்நிதி உள்ளது. சிறப்பான அமைப்பாக சட்டநாதர் சன்னதியை இங்கு காணமுடியும். மிக அழகாக காணப்படுகின்ற அச்சிற்பங்களில் ஒன்றாக சிவபெருமான் தன் தேவியுடன் நிற்கின்ற சிற்பத்தைக் காணலாம்.

தட்சிணாமூர்த்திக்குரிய முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். கருவறையின் கோஷ்டத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில், புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் போன்ற கோயில்களில் உள்ளவாறு நுணுக்கமான அளவிலான சிற்பங்களைக் காணமுடியும். மந்திர மலையை மத்தாக நட்டு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் கடையும் காட்சி அவற்றில் உள்ளன. சோமாஸ்கந்தர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகியவை உள்ளன. தொடர்ந்து லிங்க பானம், லிங்கங்கள், மூன்று நந்திகள் உள்ளன. தனிக்கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடி கொண்டுள்ளார். தமிழகத்திலேயே தனிக்கோவிலில் குரு பகவான் எழுந்தருளி அருள் வழங்கும் திருத்தலம் இது ஒன்று தான்.

ஞானசம்பந்தர் பாடல்:

சம்பந்தர் 2ஆம் திருமுறையில் இத்தலத்து இறைவனைப் பின்வருமாறு போற்றுகிறார்.

‘மறம்பய மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை
நிறம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை
திறம்பய னுறும்பொரு டெரிந்துணரு நால்வர்க்
கறம்பய னுரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்‘

பிரார்த்தனை:

திருமண வரம் வேண்டியும், குழந்தைச்செல்வம் வேண்டியும், கல்வி, கேள்விகளில்சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

சிறப்புக்கள் :

திருமண வரம் வேண்டியும், குழந்தைச்செல்வம் வேண்டியும், கல்வி, கேள்விகளில்சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

திருவிழா:

மாசிமகத்தில் 10 நாட்கள் உற்சவம், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.

அமைவிடம் 

மாநிலம் : தமிழ் நாடு

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மி. தொலைவிலுள்ள இன்னம்பர் திருத்தலத்தை அடுத்து அதே சாலையில் மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பியம் ஸ்தலம் உள்ளது. 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

செம்மண் குன்றின் மேல் வீற்றிருக்கும் விலங்கல்பட்டு முருகன்!

செம்மண் குன்றின் மேல் வீற்றிருக்கும் விலங்கல்பட்டு முருகன்!

கடலூர் வட்டத்தைச் சேர்ந்த இவ்வூர், கடலூருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவிலும்,நெல்லிக்குப்பம் தெற்கே 5 கி. மீ தொலைவில் உள்ளது கடலூர்-திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையை ஒட்டிக் கெடிலம் ஆற்றின் தென்கரையில் இருக்கிறது.

நெடும் பாதையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் மண் பாதையில் ஆற்றைக் கடந்து இவ்வூரை அடைய வேண்டும். கடலூர் துறைமுக நகருக்கு மேற்கேயும், திருவந்திபுரத்திற்குத் தெற்கேயும் அமைந்துள்ளது நீண்ட மலைத் தொடர். இந்த மலை கடலூர் குன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



செம்மண் மணற்பாறைகளும் காணப்படுகின்றன. இந்த மலைத் தொடரில் பல சிறப்பான திருத்தலங்கள் உள்ளன. திருவந்திபுரம், திருமாணிக்குழி, விலங்கல் பட்டு, மலையாண்டவர்கோயில், நடுவீரப்பட்டு சிவாலயம் போன்றவை.

இப்போது நாம் விலங்கல்பட்டு முருகனைப் பார்ப்போமா.. விலங்கல் என்றால் மலை எனப் பொருள் மலைமேல் உள்ள தலம் எனப் பொருள்கொள்ளலாம். நூறடி உயரக் குன்று அதன்மேல் முருகனாலயம் கிழக்கு நோக்கி உள்ளது. மலையின் தென்புறம் மேலே ஏறுவதற்குச் சரிவு படிக்கட்டுகளும், சரிவான ஒரு சாலையும் உள்ளன. சாலை வெறும் ஜல்லியாக உள்ளது, அதனால் நடந்தே மலையேறுவோம்.



ஐந்து நிலை கோபுரம் ஒன்று தெற்கு நோக்கி உள்ளது, படிக்கட்டுகள் தென்புறமே உள்ளது. முருகன் கருவறை கிழக்கு நோக்கி உள்ளது முகப்பில் நீண்ட மண்டபம் உள்ளது. அதில் மயிலும் பலிபீடமும் 
உள்ளது. சுற்றிவர அகலமான பிரகாரம் உள்ளது. கிழக்குப் பகுதியில் இடும்பன் சிலை கொண்ட மாடமும், ஆதிவேல் சன்னதி ஒன்றும் உள்ளது. வடபுறத்தில் பக்தர்கள் காவடி வைத்தல், உணவருந்துதல் செய்ய நீண்ட தகர கொட்டகை உள்ளது.

இங்குள்ள மூலவர் சிவசுப்ரமணியர் சிலையின் நெற்றியில் சிவலிங்கம் உள்ளது சிறப்பு, இதனை வேறு எங்கும் காண இயலாத ஒன்றாகும். இக்கோயில் ஒரு தனிமையான மலையில் இருப்பதால் காலை பூஜை செய்துவிட்டு அரைமணியில் அர்ச்சகர் கிளம்பிவிடுகிறார், மாலை ஐந்து மணிக்கு வந்து பூஜை செய்துவிட்டு ஒரு மணிநேரம் இருந்து விட்டுக் கிளம்பிவிடுகிறார். கார்த்திகை நாட்கள், முழுநிலவு நாட்களில் போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே மக்கள் அதிகம் வருகின்றனர்.

பங்குனி உத்திரம் இங்குச் சிறப்பானது. காலை,மாலை வேளையில் கெடில நதியின் ஈரக்காற்றும், தென்புற பசுமை வயல்களின் மரகதப்பச்சையும், தென்னையின் உச்சியில் நின்று அகவும் மயிலும், தூரத்து மலையாண்டவர் கோயிலில் ஒளிரும் மின்விளக்கும், இக்கோயிலின் மெல்லிய மணியோசையும் உங்கள் கவலைகளை மறக்கடிக்கச் செய்யும்.

 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்...

Sunday, July 28, 2024

ஆடி கிருத்திகை விரதம் இருப்பது நல்லது.

ஆடி கிருத்திகை 
இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை ஜூலை 29 இன்று மதியம் 2.41 மணிக்கு தொடங்கி நாளை ஜூலை 30)மதியம் 1.40 மணி வரை கார்த்திகை நட்சத்திரம் உள்ளது.

பொதுவாக கார்த்திகை விரதம் இருப்பவர்கள், பரணியிலேயே விரதத்தை தொடங்கிவிட வேண்டும் என்பது நியதி. பரணியில் தொடங்கி, கார்த்திகை முடியும் வரை விரதம் கடைபிடிப்பார்கள். அந்த வழக்கப்படி பார்த்தால் இன்று  காலையிலேயே விரதத்தை தொடங்கி, நாளை  மாலையில் நிறைவு செய்யலாம். அல்லது திருச்செந்தூர் கோவில் நேரத்தை கணக்கில் எடுத்து விரதம் இருப்பவர்கள் நாளை  (ஜூலை 30) காலையில் விரதத்தை தொடங்கி, மாலையில் நிறைவு செய்து கொள்ளலாம்.

காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் கிருத்திகை விரதம் இருப்பது நல்லது.

முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் மூன்று கார்த்திகைகள் மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அவை உத்திராயன காலத்தின் துவக்க மாதமான தை மாதத்தில் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை, தட்சிணாயன காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை ஆகியவையாகும். இவற்றில் ஆடிக்கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆடி கிருத்திகையின் புராணம்

சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த முருகப் பெருமானை ஆறு கார்த்திகை பெண்கள்தான் வளர்த்தனர். அவர்களை சிறப்பிக்கும் விதமாக அவர்கள் முருகனுக்குரிய நட்சத்திரமாக கருதப்படுவார்கள் என்றும், அந்த நாளில் கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் வழிபடப்படுவார்கள் என்றும், கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுபவர்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்றும் சிவ பெருமான் வரம் அளித்தார். அவர் அளித்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரமாக கருதப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது

ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.

விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறை களே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.

கிருத்திகை நாளில் சூரிய உதயத் திற்கு முன்பே எழுந்து நீராட வேண்டும். பின்னர் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது முருகப் பெருமானின் ஆலயத்திலோ முருகனை வழிபட்டு பின்னர் விரதத்தை தொடங்க வேண்டும். இந்த நாளில் காலை யிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் பால் அல்லது பழங்கள் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். 

விரத காலத்தில் முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், பக்தி பாடல்கள் பாடி முருகனை ஆராதிக்கலாம். மாலை நேரத்தில் வீட்டில் பூஜைகளை செய்துவிட்டு சைவ உணவு சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

ஆடிக்கிருத்திகை வழிபாடு :​

ஆடிக்கிருத்திகை அன்று முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்தும் முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நாளில் பலவிதமான காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் முருகப் பெருமானை வழிபட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். ஆடிக் கிருத்திகை அன்று முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானது என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த நாளில் பாலகுடம் ஏந்தி வந்து, முருகனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

கிருத்திகை விரத பலன்கள் :​

ஆடிக்கிருத்திகையில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும். குறிப்பாக குழந்தை வரம், திருமண வரம் அமையும். பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், திருமண தடை, செவ்வாய் தோஷம், வம்பு வழக்குகளில் சிக்கியவர்கள் ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து வழிபட்டால் பிரச்சனைகள், கவலைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்... 

ஆடி கிருத்திகை என்றால் என்ன ❓


ஆடி கிருத்திகை என்றால் என்ன. 
கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு. கிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.

கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்.
 அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல் வேண்டும். 
மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலையில் நதிநீராடி திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள் முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம் தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும்.

இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்ன தானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும்.

ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதா மாதம் வரும் கார்த்திகை மாதக் கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.

கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.

கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள்.

அது போல ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு. ஆடிகிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.

செவ்வாய்க்கு அதிபதி முருகன் . ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய் க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் கிருத்திகை நாளில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள்  கார்த்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால்  மகிழ்ச்சி உண்டாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Saturday, July 27, 2024

குற்றம் பொறுத்த நாதர் கோயில், திருக்கருப்பறியலூர், தலைஞாயிறு

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் கோயில்,      திருக்கருப்பறியலூர், தலைஞாயிறு 609201 மயிலாடுதுறை மாவட்டம்.  
*இறைவர் திருப்பெயர்:  குற்றம் பொறுத்த நாதர்.

*இறைவியார் திருப்பெயர்:  கோல்வளை நாயகி.

*தல மரம்:  கொகுடி முல்லை.

*தீர்த்தம் :  இந்திர தீர்த்தம்.

*வழிபட்டோர்:  வசிஷ்டர், ஆஞ்சநேயர், இந்திரன், சூரியன்.               
*இது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். சம்பந்தர், சுந்தரர் இருவராலும் பாடப் பெற்றதாகும். 

*கொகுடி முல்லையைத் தலவிருட்சமாகக் கொண்டதால்  இக்கோயில் கொகுடிக்கோயில்என்றும் வழங்கப்படுகிறது.

*இறைவன் குற்றம் பொறுத்த நாதர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார்.        

*வெளிப் பிராகாரத்தில் சீர்காழியில் இருப்பதுபோல உயர்ந்த தனிக்கோயிலாக சட்டைநாதர் சந்நிதி உள்ளது. மேலேறிச் சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கும் மேலே சென்று சட்டைநாதரைத் தரிசிக்கலாம்.          

*இதனால் இத்தலம் மேலக்காழி,  என்றும் அழைக்கப்படுகிறது.             

*தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்றழைக்கின்றனர்.           

*பக்குவப்பட்ட ஆன்மாக்கள் கருப்பறியலூர் தலத்தில் வழிபட்டால் மறு பிறவி கிடையாது. அவை இனி கருவாக உருவாக மாட்டா.   

*இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை சிவன் மேல் பிரயோகித்ததால் ஏற்பட்ட பாவத்தை இங்கே போக்கிக் கொண்டான். இறைவன் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்து அருளியதால் இவர் `குற்றம் பொறுத்த நாதர்’ என அழைக்கப்படுகிறார். இறைவனுக்கு `அபராத சமேஷ்வரர்’ என்ற பெயரும் உண்டு. 

*சூரிய தோஷம் நீக்கும் பரிகாரத் தலம் குற்றம் பொறுத்தநாதர் கோவில். சூரிய பகவான்  வழிபட்டதால் இத் தலம் `தலைஞாயிறு’ என்றும் அழைக்கப்படுகிறது. 
தான் பெற்ற சாபத்தில் இருந்து விடுபட சூரியன் வழிபட்ட தலங்கள் அனைத்தும் சூரிய தோஷ பரிகாரத் தலங்களாக போற்றப்படுகின்றன. அந்த வகையில், திருக்கருப்பறியலூர் தலமும் சூரிய தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. 
இந்த தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபடுவதன் மூலம் தோஷம் நீங்கப் பெறலாம்.

*விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்து, இறைவன் அருளால் குழந்தை பெற்றான். இதனால் மகிழ்ந்த மன்னன் இந்தத் தலத்தை அழகுறக் கட்டினான் என்பது வரலாறு.

*இந்தத் திருத்தலத்திலுள்ள இறைவனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 
சிலருக்குக் கருவிலே சிசு கலைவது உண்டு. சிலருக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்துவிடும். சில குடும்பங்களில் விபத்துகளினால் துர்மரணம் நிகழ்வதும் உண்டு. இந்த அனைத்து தோஷங்களும் இங்குள்ள இறைவனை வந்து வழிபட்டால்   நீங்கும் என்பது நம்பிக்கை.    

*ராவணனின் மகன் இந்திரஜித் தனது புஷ்பகவிமானத்தில் இத்தலத்தின் மீது பறந்தபோது விமானத்தின் நிழல் கோயிலின் மீது விழ  விமானம் நின்றுவிட்டது. இந்திரஜித்தும் அவன் தந்தை ராவணனும் இப்பழி நீங்க  இங்கு வழிபாடு செய்துள்ளனர். 

*இத்தலத்து இறைவன் அனுமனால் பூஜிக்கப்பட்டவர்.
யுத்தத்தில் ராவணனைக் கொன்ற ராமர், அந்த தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். அனுமனிடம் இரண்டு நாழிகைகளுக்குள் சிவலிங்கம் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். ராமரின் கட்டளையை ஏற்று  வடதிசை நோக்கிச் சென்ற அனுமன் வரத் தாமதமானது. எனவே ராமர் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது தோஷமும் நீங்கியது. தான் வருவதற்குள் ராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அந்த லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுத்தான். முடியவில்லை. இப்படிச் செய்ததால் அனுமனுக்கு தோஷம் ஏற்பட்டது.   "சிவனை நோக்கி தவமிருந்தால் அந்த தோஷம் நீங்கும்’’ என ராமர் அனுமனுக்கு யோசனை கூற அனுமனும்   தலைஞாயிறு எனும்  இத்தலத்து இறைவனை வணங்க தோஷம் விலகியது.  

*'இந்த தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்குப் பத்தாக பெருகும்’ என்பதை பிரம்மன் வசிஷ்டருக்குக் கூறினார். அதனால் வசிஷ்டர் இங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு, மெய்ஞானம் பெற்றார் என்கிறது தலபுராணம். 

*தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது இவ்வாலயம்.     
 
*இத் திருத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் அருகில் பட்டவர்த்தி என்னும் ஊரின் வடகிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

Friday, July 26, 2024

சமயபுரம் முத்து மாரியம்மனுக்கு ஆறு தங்கைகள்...

1. சமயபுரம் முத்து மாரியம்மன் திருச்சி மாவட்டம்
 சமயபுரத்திலேயே இந்த முத்து மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சோழ மன்னர் ஒருவர் தனது தங்கைக்கு சீதனமாக கொடுத்த நகரம் தான் இந்த சமயபுரம் என சொல்லப்படுகிறது.

 2. புன்னை நல்லூர் மாரியம்மன்

தஞ்சை மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அம்மன் காட்சி தரும் தலமாகும். மூலவர் சிலை புற்று மண்ணால் ஆனதால் இந்த அம்மனுக்கு அபிஷேகங்கள் ஏதும் செய்யப்படுவதில்லை.ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு மட்டுமே நடைபெறும். 

3. அன்பில் மாரியம்மன்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள அன்பில் கிராமத்தில் அமைந்துள்ளது இக்கோவில். சுமார் 700 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மனின் திருமேனி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது வேப்ப மரத்தடியில் கரை ஒதுங்கியதாக சொல்லப்படுகிறது. 

4. தென்னலூர் மாரியம்மன்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. தென்னலூர் கிராமத்தின் அதிதேவதையாக இந்த மாரியம்மன் விளங்குகிறாள். ஆரம்பத்தில் எளிமையாக கூரையில் இருந்த அம்மனுக்கு பிறகு கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படு கிறது

 5.நார்த்தமலை முத்துமாரியம்மன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தமலை என்ற ஊரில் இந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மலைகளால் சூழப்பட்டதாக இந்த கோவில் அமைந்துள்ளது. 

6. கொன்னையூர் மாரியம்மன்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி அருகே உள்ளது கொன்னையூர் கிராமம். இந்த கோவில் ஊர் மத்தியில் அமைந்து உள்ளதால் நான்கு திசைகளிலும் உள்ள மக்களை இந்த மாரி யம்மன் காத்து வருவ தாக ஐதீகம்.

 7. வீரசிங்கம்பேட்டை மாரியம்மன்

திருவையாறு அருகே உள்ள குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது வீரசிங்கம்பேட்டை என்ற ஊர். இங்கு தான் இந்த மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சமயபுரம் மாரியம்மனின் சகோதரிகளில் கடைசி தங்கை இவர் தான் என சொல்லப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.... 

திருவெண்ணெய்நல்லூர்கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்....



அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர்:கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்)

தாயார்: மங்களாம்பிகை
(வேற்கண்ணியம்மன்)

தல விருட்சம்: மூங்கில் மரம்

தீர்த்தம்: தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், 
சிவகங்கா தீர்த்தம், 
காம தீர்த்தம், 
அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம்,
வேத தீர்த்தம்

புராண பெயர்: திருவருள்துறை, திருவெண்ணெய்நல்லூர்

ஒருமுறை திருக்கயிலாயத்தில், பளிங்கு போல் காட்சியளித்த பனிப்படலத்தில் தன் கண்களைத் திறந்து நோக்கினார், சிவபெருமான். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. 
தன் எதிரில் பிரதிபலித்த அந்த பிம்பத்தின் அழகில் மயங்கிய ஈசன், அதை நோக்கி “சுந்தரா வா” என்றார். உடனே அந்த பிம்பம் உயிர் பெற்று, சிவபெருமானை நோக்கி வந்தது. அவருக்கு சுந்தரர் என்று பெயரிட்டு, அணுக்கத் தொண்டராய் அருகில் அமர்த்திக் கொண்டார் சிவன்.

திருப்பாற்கடல் கடைந்தபோது, அதில் இருந்து வெளிப்பட்ட ஆலகால விஷத்தை, பந்து போல உருட்டி சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தவர், சுந்தரர்தான். அதனால்தான் அவரது பெயர் ‘ஆலால சுந்தரர்’ என்றானது.

சிவபெருமான் சாப்பிட்ட விஷம் அவரது கழுத்தில் நின்றது. அது வெம்மையை தராமல் இருக்க, பெண்ணை ஆற்றின் கரையில் பசுவின் வெண்ணெயால் கோட்டை அமைத்து, அதனுள் பஞ்சாக்கினி வளர்த்து, அதன் நடுவில் தவம் இயற்றினார். அந்த திருத்தலமே ‘திருவெண்ணெய் நல்லூர்’ என்றானது.

ஒருநாள் சிவபூஜைக்காக பூப்பறிக்க, கயிலையில் இருந்த நந்தவனத்திற்கு சென்றார் சுந்தரர். அப்போது அங்கே பார்வதியின் தோழியர்களான கமிலினி, அனிந்ததை ஆகியோர் மீது சுந்தரருக்கு ஈர்ப்பு உண்டானது. 

இதனை அறிந்த ஈசன், தம் அடியவர்களான ஆலால சுந்தரர், கமிலினி, அனிந்ததை ஆகிய மூவரையும் பூலோகத்தில் பிறப்பெடுத்து காதல் வாழ்வை வாழ்ந்து, பின்னர் திருக்கயிலாயம் வந்தடையும்படி அருளினார்.

உடனே சுந்தரர் ஈசனை வேண்டி, “தன்னை பூலோகத்தில் தக்கச் சமயத்தில் தடுத்தாட்கொள்ள வேண்டும்” என்று வேண்டினார். ஈசனும் அதற்கு இசைந்தார்.

இதையடுத்து திருநாவலூரில் சடையனார் - இசைஞானியார் தம்பதிகளுக்கு ஆதிசைவ மரபில் நம்பிஆரூரர் எனும் திருநாமத்தில் சுந்தரர் பிறந்தார். 

சிறு வயதில் சுந்தரரை பார்த்த, அந்தப் பகுதி மன்னனான நரசிங்கமுனையர், அவரை தன்னுடைய அரண்மனையிலேயே வளர்த்து வந்தார். சுந்தரருக்கு 16 வயதான போது, புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை அவருக்கு மணம் செய்து வைக்க பேசி முடித்தனர்.

சுந்தரருக்கு கொடுத்த வாக்கின்படி, அவரை தடுத்தாட்கொள்ள வேண்டிய தருணம் சிவபெருமானுக்கு வந்தது. அதன்படி திருமணம் நடைபெற இருந்த இடத்திற்கு ஓர் அந்தணக் கிழவராக உருவெடுத்து வந்தார் சிவபெருமான்.

அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் நம்பி ஆரூரரை காட்டி, “இவன் என் அடிமை. இவனை என்னோடு அனுப்புங்கள். மணம் செய்து வைக்காதீர்கள். 

இவன் பாட்டன் எழுதிக் கொடுத்த ஓலையில், அவனும், அவனது வழிவழி சந்ததியினரும் இந்த திருவெண்ணெய் நல்லூர் அந்தணனுக்கு அடிமை” என்று கூறியதோடு, அதற்கான ஓலையையும் காட்டினார்.

அதைக் கேட்ட சுந்தரர், “உமக்கு என்ன பித்து பிடித்திருக்கிறதா?” என்று கேட்டவாறே, முதியவரின் கையில் இருந்த அடிமை ஓலையை பிடுங்கி, படித்துக்கூட பார்க்காமல் கிழித்து எறிந்தார்.

முதியவருக்கும், சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. “இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய் நல்லூருக்குச் செல்வோம். அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள்
முன்னிலையில்
உண்மையை நிரூபிக்கிறேன்” என்று கூறி சுந்தரரை தன்னுடன் அழைத்துச் சென்றார் முதியவர்.

சுந்தரரோ, “அப்படியோர் வழக்கு இருக்குமெனில், அதை முடித்த பின்னரே இங்கு வந்து மணம் முடிப்பேன்” எனச் சபதம் இட்டு முதியவருடன் சென்றார்.

பின்னர் வழக்கு திருவெண்ணெய்நல்லூரில் மறையவர்கள் முன்னிலையில் நடந்தது. அப்போது சுந்தரரின் பாட்டனார் கையெழுத்திட்ட பழைய ஓலைச் சுவடிகளை கொண்டுவந்து சரிபார்த்தனர். 

முதியவர் காண்பித்த அடிமை ஓலைச் சுவடியில் உள்ள சுந்தரரின் பாட்டனார் கையெழுத்தும், இதுவும் பொருந்திப்போயின. எனவே அங்கிருந்த மறையவர்கள், சுந்தரரை அந்த முதியவருக்கு அடிமை என தீர்ப்பளித்தனர்.

இதனால் வழியின்றி அந்த முதியவருடன் சென்றார், சுந்தரர். வழியில், “ஐயா.. என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்? உமது வீடு எங்கு இருக்கிறது?” என வினவினார்.

உடனே அந்த முதியவர், “அன்பனே! நமது வீடு அதோ இருக்கிறது” என திருவெண்ணெய்நல்லூர் ஆலய அருட்துறையை கைகாட்டி அழைத்துச் சென்றார்.

சுந்தரருக்கு ஒன்றும் புரியவில்லை. “ஐயா.. அங்கே தெரிவது திருவெண்ணெய்நல்லூர் ஆலயம் அல்லவா? நான் கேட்டது, உமது வீடு எங்கிருக்கிறது என்றுதானே” என்றார் சுந்தரர்.

முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான் மீண்டும் திருவெண்ணெய்நல்லூர் ஆலய அருட் துறையை கைகாட்டி, சுந்தரரை ஆலயக் கருவறைக்குள் கைப்பிடித்து அழைத்துச் சென்றார். அங்கு சிவலிங்கத்திற்கு முன்பாக தமது பாதக் குறடுகளைக் கழற்றி விட்டுவிட்டு, சிவலிங்கத்திற்குள் சென்று மறைந்தார், முதியவர்.

சுந்தரர் திகைப்பில் ஆழ்ந்து போனார். அப்போது கருவறைக்குள் இருந்து சிவபெருமான் தோன்றி, சுந்தரரின் முற்பிறவியையும், இப்போதைய பிறவியையும் பற்றி விளக்கிவிட்டு மறைந்தார்.

இதையடுத்து சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்து சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானின் மீது, 

பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை 
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் 
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே

யென்று
தன்னுடைய முதல் பதிகத்தை பாடினார் சுந்தரர்.

சுந்தரருடன் பஞ்சாயத்துச் சபையில் ஈசன் வழக்காடிய மண்டபம் இன்றும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது. 

தீராத வழக்குகளில் வெற்றி கண்டிட இத்தல வழிபாடு பெரிதும் கைகொடுக்கும் என் கிறார்கள். சடையப்ப வள்ளல், கவிச்சக்கரவர்த்தி கம்பரை ஆதரித்துப் போற்றிய பவித்திரமான புண்ணியபூமி இதுவாகும்.

சந்தான குரவரான மெய்கண்டார், ‘சிவஞான போதம்’ அருளிய திருத்தலமும் இதுதான். மெய்கண்டாருக்கு அவரது ஐந்தாம் வயதில் ஞான உபதேசம் செய்த பொல்லாப் பிள்ளையார் இங்கு அருள்கிறார்.

இத்தல மங்களாம்பிகை அம்மன் சன்னிதியில் வழிபட செல்வம், வீடு, வாசல், கல்வி, நன்மக்கட்பேறு, நீண்ட ஆயுள் அனைத்தும் கிடைக்கும். இங்கு அம்பாள் சன்னிதியில் ஸ்ரீசக்கரம், சங்கநிதி, பதுமநிதி அமைந்துள்ளது சிறப்பாகும். அறுபத்து மூவர், சப்தகன்னியர் சன்னிதிகளும் உள்ளன.

இத்தல ஈசனின் திருநாமம் ‘கிருபாபுரீஸ்வரர்’ என்பதாகும். சுந்தரரை தடுத்தாட்கொள்ள ஈசன் வந்தபோது அணிந்திருந்த பாதக்குறடுகள் இன்றும் இங்கு உள்ளது. இத்தல இறைவனுக்கு ‘தடுத்தாட்கொண்ட நாதர்’ என்ற பெயரும் உண்டு.

வழிபாட்டு பலன்

இத்தல ஈசனின் சன்னிதியில் 11 திங்கட்கிழமைகள் கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து வந்தால், நம்முடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

இங்குள்ள ஈசனின் பாதக்குறடுகளுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்றும் சொல் கிறார்கள். 

இத்தல ஈசனை அர்ச்சுனன், இந்திரன், திருமால் வழிபட்டுள்ளனர். விஜயலிங்கம் என்ற பெயரில் அர்ச்சுனன் வழிபட்ட லிங்கமும், சுந்தர லிங்கம் எனும் பெயரில் இந்திரன் வழிபட்ட லிங்கமும் இங்குள்ளது. 

திருமால் வழிபட்ட லிங்கத்திற்கு, ‘சங்கரலிங்கம்’ என்று பெயர். நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கமும் காணப்படுகிறது.

இத்தல பலிபீடத்தின் நேர் உயரத்தில், சுந்தரருக்கு ஈசன் ரிஷபாரூடராகக் காட்சிகொடுத்த விமானக் கோவில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே கையில் ஓலைச்சுவடியுடன் சுந்தரர் உள்ளார். 

ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரர் குருபூஜை விழா இங்கு இரண்டு நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். 

விழா நாளில் சுந்தரரின் திருமண உற்சவம், ஈசன் சுந்தரரின் திருமணத்தை தடுத்தாட்கொண்டது, அவிநாசியில் முதலை உண்ட பாலகனை மீட்டது, சுந்தரருக்கு ஈசன் காட்சி கொடுத்தது, திருக்கயிலாயம் செல்லுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

மகாசிவராத்திரி அன்று இத்தலத்தில் நடைபெறும் திருமுறை பாராயணம் சிறப்பானது. மகாசிவராத்திரி நாளில் விரதமிருந்து இத்தலத்தில் தங்கியிருந்து ஈசனை மனமுருகி வழிபட்டால் வாழ்வில் தீவினைகள் அகன்று நல்லனவெல்லாம் வந்தடையும். சிவராத்திரி அன்று நள்ளிரவில் இத்தல மூலவர் கருவறைச் சுற்றின் பின்புறமுள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

அமைவிடம்

விழுப்புரத்தில் இருந்து அரசூர் செல்லும் வழியில் 19 கிலோமீட்டர் தூரத்தில் திருவெண்ணெய்நல்லூர் அமைந்துள்ளது. இத்தலத்தின் அருகில் அப்பரின் பாடல்பெற்ற திருத்தலமான திருமுண்டீஸ்வரம் சிவலோகநாதர் திருக்கோவிலும் அமைந்துள்ளது.. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

Thursday, July 25, 2024

குலதெய்வ வழிபாடும் அறிவியல் உண்மையும்....

_குலதெய்வம் அறிவியல் உண்மை_


நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”

குலதெய்வம்

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ
அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.

பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை…

அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது

எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும்.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா…..?

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.

ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை. ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது . 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. ஹ

_ஆடி கிருத்திகை எப்போது? முருகன் வழிபாடு ஏன்?

_ஆடி கிருத்திகை முருகன் வழிபாடு..._

ஆடிக்கிருத்திகை

நமது கர்ம வினைகள் நீங்க, ஆடி கிருத்திகையில் முருகனை வழிபடுங்கள் .....

‘ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை’ என்பது ஆன்றோர் வாக்கு. அரசியல் ஆதாயம், அரசு உத்தியோகம், ஆன்ம பலம், ஆரோக்கியத்தை பெருக்கும் நாளாக ஆடிக் கிருத்திகை அமைந்துள்ளது. அன்றைய தினம் ஆறுமுகனை வழிபட்டு அருள் பெறுங்கள்.
பலன்கள்

ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் ஞானப் பிழம்பான முருகப் பெருமான். தமிழ் கடவுளான முருகப் பெருமானின் வழிபாடு சர்வ ரோக நிவாரணி. தன்னை வழிபடும் பக்தர்கள் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குபவர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர அவற்றை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அதனால் முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களைத் தன் தாயினும் மேலாகப் போற்றுவார்.

கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். எனவே, கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.

கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம். சூரியன் கால புருஷ பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து செந்தில் ஆண்டவனை வணங்குவதால் கர்ம வினையால் தடைபடும் புத்திர பிராப்தம், திருமணம், உத்தியோகம், தொழில் அனுகூலம், வீடு, வாகன யோகம், சொத்து பிரச்சினை, உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை, கடன் நிவர்த்தி, அரச பதவி, அரசாங்க உத்தியோகம், அரசியல் ஆதாயம், நோய் நிவாரணம், புத்திக் கூர்மை, ஆன்ம பலம் பெருகுதல் போன்ற எண்ணிலடங்கா சுப பலன்கள் பெருகும். வள்ளல் பெருமானான முருகனை நினைத்து திருப்புகழ், கந்த சஷ்டிக் கவசம், வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றைப் படிப்பது மிகவும் நல்லது.
 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

பட்டீஸ்வரம் பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் தழுவக் குழைந்த ஈசன் தலம்.

_பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் தழுவக் குழைந்த ஈசன் அருள்பாலிக்கும் தலம்_


கும்பகோணம் அருகில் உள்ளது திருசத்திமுற்றம் சிவத் திருத்தலம். இந்தத் தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு சிவக்கொழுந்தீசர் மற்றும் தழுவக் குழைந்தநாதர் எனும் பெயர்கள் உள்ளன. கணவன், மனைவிக்கிடையே மன ஒற்றுமை இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்தான் அது வாழ்க்கையாக இருக்கும். அதை வலியுறுத்தும் வகையில் இந்த கோயிலில் அம்பிகையும் ஈசனும் காட்சி தருகிறார்கள்.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது கோயில். கோபுர வாயிலில் வல்லபகணபதி காட்சியளிக்கிறார். முதல் கோபுர வாயிலை கடந்தால் பெரிய வெளிப்பிராகாரத்தை காணலாம். அடுத்துள்ள இரண்டாவது கோபுர வாயிலில் விநாயகர், முருகன் சன்னிதிகள் உள்ளன. மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி கருவறையில் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதி பிராகாரத்தில் உள்ள பைரவர் சன்னிதியில் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கிறார். கண்ணையும் கருத்தையும் கவரும் அழகுடன் காணப்படும் இதுபோன்ற பைரவரை வேறு எங்கும் காண முடியாது.
ஒரு சமயம் பார்வதி தேவிக்கும் சிவபெருமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வழக்கம் போல பார்வதி தேவி பூலோகத்தில் பிறக்க நேரிட்டது. மீண்டும் சிவபெருமானை சென்று சேர வேண்டுமானால் காவிரி நதிக்கரையில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பார்வதி தேவி, காவிரி நதிக்கரையில் எந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து ஈசனை வழிபடுவது என்று பார்த்துக்கொண்டே வந்தாள். அப்போது கும்பகோணம் அருகே உள்ள திருச்சத்தி முற்றம் பகுதியைத் தேர்ந்தெடுத்தாள்.

காவிரி கரையோரத்தில் மண் எடுத்து அதில் லிங்கம் பிரதிஷ்டை செய்து தினமும் அதற்கு மலர்மாலைகள் சூடி தவ வழிபாடு செய்து வந்தாள். அம்பிகையின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆழ்ந்த தியானத்தில் இருந்த பார்வதி தேவியை சற்று சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டார். அதன்படி காவிரியில் கரைபுரண்டு ஓடும் வகையில் வெள்ளம் வருமாறு செய்தார். திடீரென வெள்ளப்பெருக்கு உண்டானதால் பார்வதி தேவி அதிர்ச்சி அடைந்தாள். தாம் வழிபடும் மணல் லிங்கம் வெள்ளத்தில் கரைந்து விடுமே என்று பரிதவித்தாள். அடுத்த வினாடி ஓடிச் சென்று அந்த லிங்கத்தை கட்டிப்பிடித்து இறுகத் தழுவிக்கொண்டாள். இதனால் காவிரி வெள்ளத்திலிருந்து மணல் லிங்கத்தை அவளால் காப்பாற்ற  முடிந்தது.

இதுபோன்ற சோதனைகள் இனி வரக்கூடாது என்பதற்காக தனது வழிபாட்டை மேலும் கடுமையாக்க பார்வதி தேவி முடிவு செய்தாள். அதன்படி ஒற்றைக் காலில் நின்றபடி  சிவபெருமானை மனதில் நிறுத்தி மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டாள். அவளது இந்தத் தவத்தை கண்ட ஈசனுக்கு மீண்டும் மனதில் இரக்கம் பிறந்தது. என்றாலும் இன்னொரு சோதனை செய்து பார்க்கலாம் என்று ஈசன் நினைத்தார். பார்வதி தேவியின் தவத்தை கலைக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். பார்வதி தேவியை அச்சுறுத்தும் வகையில் தீப்பிழம்பாகத் தோன்றினர்.

தீயின் வெப்பத்தால் பார்வதி தேவியின் ஒற்றைக்கால் தவம் கலைந்தது. ‘என்ன இது சோதனை’ என்று நினைத்தபோது, தீப்பிழம்பாக எழுந்து நிற்பது ஈசனே என்பதை பார்வதி தேவி அறிந்து கொண்டாள். ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் சிவபெருமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க பார்வதி தேவி முடிவு செய்தாள். ‘ஜோதியே சிவம்’ என்று சொல்லியபடியே பார்வதி தேவி அத்தீயை ஆரத்தழுவிக் கொண்டாள். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்கு அருள்பாலித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

இதை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் தலத்தின் கருவறையின் நுழைவு வாயிலின் வலது பக்கத்தில் சிவனை அம்பாள் தழுவிய கோலத்தில் ஒரு சன்னிதி அமைந்துள்ளது. அம்பாள் ஒற்றைக் காலை தரையில் ஊன்றியபடி மற்றொரு காலை மடக்கி வைத்து தனது இரு கைகளாலும் சிவலிங்கத்தை தழுவியபடி நிற்பதை இங்கு பார்க்கலாம்.

பார்வதி தேவியை பரிசோதிக்க சிவபெருமான் ஜோதி பிழம்பாக நின்றதால் அவருக்கு சிவக்கொழுந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கருவறையில் உள்ள மூலவர் திருமேனியில் தீச்சுடர்கள் இருக்கின்றன. அர்ச்சகர்கள் தீப ஆராதனை செய்யும்போது நன்கு உற்று பார்த்தால் இந்த அதிசயத்தைக் காண முடியும். பார்வதி தேவி, தீயை கட்டிப்பிடித்ததால் ஈசன் மனம் உருகிப்போனார் என்பது புராண வரலாறு. இந்த சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே இந்தத் தலத்து ஈசனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த ஆலயம் திருமண யோகத்தைப் பெற்றுத் தரும் பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. நீண்ட நாட்களாக திருமணம் கைகூடாமல் இருக்கும் இளைஞர்களும் பெண்களும் சக்தி தழுவிய ஈசனை மனம் உருக வழிபட்டால் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும். கணவன், மனைவி விதிவசத்தால் பிரிவது உண்டு.  ஒருகாலத்துக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவார்கள் இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

Wednesday, July 24, 2024

சீர்காழி சிவலோகநாதர் திருக்கோவில்,திருப்புன்கூர்,

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்,
திருப்புன்கூர், 
சீர்காழி வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் - 609 112. 
*இறைவன்: சிவலோகநாதர்  

*இறைவி: சவுந்தரநாயகி 

*தலவிருட்சம்: புங்கமரம் 

*தீர்த்தம் : கணபதி தீர்த்தம்,  தேவேந்திர தீர்த்தம்,  அக்கினி தீர்த்தம், இடப தீர்த்தம்.                

*இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடல்  பெற்ற தலம். 
*வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஏயர்கோன் கலிக்காமர், கபிலதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், பிரமன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், அக்கினி,  பதஞ்சலி, வியாக்ரபாதர், சப்தகன்னியர், இராசேந்திர சோழன் முதலியோர்.  

*புற்று வடிவமாய் அமைந்துள்ள சிவலோகநாதருக்கு வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணியளவில் புனுகு சட்டம் சாத்துகிறார்கள். சுவாமி மீது திருக்குவளை சாத்தி பூஜைகள் நடத்துகிறார்கள்.    

*புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் சுவாமியை வணங்குவோருக்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். 
நாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால், அவர்களின் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

 *இத்தலத்திற்குரிய பன்னிருவேலி பெற்ற வரலாறு : தன் நாட்டில் பஞ்சம் நிலவியதால் இராசேந்திரசோழன் எல்லாச் சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர் சிவலோக நாதரை வழிபடின் மழையுண்டாகும் என்றருள, அவ்வாறே மன்னனும் அங்கு வந்து சுவாமியை வழிபட்டான். அப்போது சுந்தரர் அங்கு வந்தார். அரசன் அவரை வணங்கி, சந்நிதியில் பாடி மழை பொழியச் செய்யுமாறு வேண்டினான். சுந்தரரும் மழை பெய்தால் சுவாமிக்குப் பன்னிருவேலி நிலமளிக்குமாறு மன்னனுக்கு கட்டளையிட்டுவிட்டுப் பாடினார், மழை பெய்தது. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழைமிகுதியைக் கண்ட மன்னன், அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணி மழையை நிறுத்துமாறு சுந்தரரை  வேண்ட, அவரும் மேலும் பன்னிருவேலி, நிலம் கேட்க, மன்னனும் தர, சுந்தரரும் பாடியருள மழையும் நின்றது. 

*இது ஏயர்கோன் கலிக்காமர், சுந்தரருடன் வந்து தரிசித்த தலம்.   

*சுந்தரர்பால் கோபங்கொண்ட விறன்மிண்ட நாயனார் (இத்தலத்திற்கு வந்து தங்கியிருந்து) வழிபட்ட சிறப்புடைய தலம். 
*திருநாளைப்போவாரின் (நந்தனார்) ஊரான ஆதனூர் இத்தலத்திற்குப் பக்கத்தில் 5 கி.மீ. -ல் உள்ளது.     

*இந்த ஆலயத்தில் குளம் வெட்டிய பிள்ளையார் மிகவும் பிரசித்தி பெற்றவர். நந்தனார்  நீராடுவதற்காக ஒரே இரவில் பூதங்களைக் கொண்டு இங்கு திருக்குளம் அமைத்தார் விநாயகர். இதனால் இத்தல விநாயகர் குளம் வெட்டி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். 

*திருநாளைப்போவார் (நந்தனார்) இக்கோயிலுக்கு வெளியில் நின்று இறைவனை வழிபடமுயன்றார். கொடிமரமும் நந்தியும் இறைவனை மறைத்து நிற்க நந்தனார்  இறைவனைக் காண மனமுருக வேண்டினார். நந்தனாருக்காக கருவறை முன்பிருந்த துவாரபாலகர்களும் இறைவனிடம் "சுவாமி நந்தனார் வந்திருக்கிறார்" என்றனர். நந்தனாரின் பக்தியை மெச்சிய சிவபெருமான் தனக்கு முன்பாக இருந்த நந்தியை சற்று விலகி இருக்கும்படி சொன்னார். நந்தியும் அதன்படியே விலகிக் கொண்டது. இப்போது இறைவனின் திருக்காட்சி நந்தனாருக்கு நன்றாக தெரிந்தது.    
இப்போதும் இந்த ஆலயம் சென்றால் நந்தி இறைவனின் கருவறைக்கு நேராக இல்லாமல் சற்று ஒதுங்கி இருப்பதை  தரிசிக்கலாம். 

*சுவாமி சந்நிதிக்கு முன்புள்ள இரு துவாரபாலகர்களுள் தென்புறமுள்ள வடிவம் சற்றுத் தலையைச் சாய்த்து நந்தியை விலகியிருக்குமாறு கட்டளையிடுவதுபோலக் காட்சித்தருவது கண்டு மகிழத்தக்கது.  

*வெளிப்பிரகாரத்தில்  நந்தனார் திருவுருவம் உள்ளது.   

*இங்குள்ள அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி என்பதாகும். இந்த அன்னைக்கு புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர் களின் முக்கிய நேர்த்திக்கடனாக உள்ளது.               

*ஒரு முறை சுவாமிக்கும் அம்பாளுக்கும்
போட்டி வந்தபோது, ஒரு தர்ப்பை புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு கீழே போடுகிறேன். அது பூலோகத்தில் எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கே அழகில் சிறந்தவள் இருப்பதாக ஒப்புக்கொள்கிறேன் என்று சிவபெருமான் கூறினார். அதற்கு அம்பாளும் சம்மதித்தார்.
அதன்படி சிவபெருமான், ஒரு தர்ப்பையை எடுத்து கீழே போட்டார். அது இந்தத் திருத்தலத்தில் வந்து விழுந்து பஞ்ச லிங்கங்களாக மாறியதாக தல புராணம் சொல்கிறது. இந்த பஞ்ச லிங்கங்களை வணங்கினால், திருமணத்தடை, மற்றும் நாகதோஷம் நிவர்த்தியாகும்.   

*பிரம்மா, சூரியன், அக்கினி வழிபட்ட லிங்கங்கள் கோயிலுள் உள்ளன.            

*வெளிப்பிரகாரத்தில் நாக சிற்பங்களும், புற்றும் உள்ளன. நாக தோஷத்தினால் நீண்ட நாள் கல்யாணம் ஆகாமல் இருப்பவர்கள் தங்கத்தில் நாகத்தகடு செய்து உண்டியலில் போடுகிறார்கள். இவ்வாறு செய்தால் திருமணம் தடை நீங்கி உடனே கல்யாணம் நடக்கிறது.            

*இத்தலத்தில் உள்ள மூர்த்திகளான சுவாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், அகத்தியர் ஆகியோருக்கு செய்யப்படும் "பஞ்ச அர்ச்சனைகள்", பூர்வ ஜென்ம பாவங்களை விலக்கி அருள்புரியும். 

*வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால்  திருப்புன்கூர் கைகாட்டியும்,  திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...