Monday, December 23, 2024

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் வனங்கினால் மனைவி அமையாதவர்களக்கு நல்மனைவி அமைந்திடும்....

கச்சபேசுவரர்

தலச்சிறப்பு : இத்திருக்கோயிலினுள்,
1. அருள்மிகு கச்சபேசுவரர் பெருமான் சந்நிதி.
2. இட்ட சித்தீசப் பெருமான் சந்நிதி.
3. யோக சித்தீசப் பெருமான் சந்நிதி.
4. தரும சித்தீசப் பெருமான் சந்நிதி.
5. ஞான சித்தீசப் பெருமான் சந்நிதி.
6. சதுர்முகேசுவரப் பெருமான் சந்நிதி (வேதசித்தீசப் பெருமான்).
7. யுக சித்தீசப் பெருமான் சந்நிதி.
8. பாதாள ஈஸ்வரப் பெருமான் சந்நிதி.
9. லிங்கபேசர் பெருமான் சந்நிதி.
10. குளக்கரை சலகண்டேசுவரப் பெருமான் சந்நிதி மற்றும் மூலவர்க்கு வடக்கே சுற்றுப்  பிராகாரத்தில் 9 லிங்கங்களையும் (108, 1008 லிங்கங்கள்) தரிசித்துப் பேறு பெறலாம்.
வழிபட்டுப் பேறு பெற்றவர்கள் :  திருமால், சரஸ்வதி, விநாயகர், சூரியன், பைரவர், சாத்தனார்.  ஆகியோர் கச்சபேசரை வழிபட்டு பேறு பெற்றவர் ஆவர்.

தல வரலாறு : இத்திருக்கோவில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆகும்.  தண்டியலங்காரம் என்னும் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கண நூலில் இத்திருக்கோயிலைக் குறித்து, கீழ் குறிப்பிட்ள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரிசை வெண்பாப் பாடல் : 

“நீல மணிமிடற்ற னீண்ட சடைமுடியான்
நூலணிந்த மார்ப னுதல் விழியன் ‡தோலுடையான்
கைம்மான் மறியன் கனல் மழுவன் கச்சாலை
எம்மா னிமையோர்க் கிறை ‡என்பது”

கருங்குவளைபோன்றஅழகியமிடற்றினையும், முடியின் கண்ணே நீண்டு இருக்கப்பட்ட  சடையினையும், மார்பினிடத்தே அணியப்பட்ட முப்புரி நூலினையும், நெற்றியின்கட் சேர்ந்து  விழியினையும், உடையாக அசைத்த தோலினையும், கரதலத்தேந்திய மானினையும், கனல்  போன்ற மழுவினையும், திருக்கச்சாலை (கச்சபேசும்) என்னும் திருப்பதியினையும், உடையவனாய்  எம்மை யாண்டு கொண்ட பெரியோன் இமையவர்க்குத் தலைவன் என்று குறிப்பிட்டுக்  காட்டப்பட்டுள்ளது.

அருள்மிகு கச்சபேசர் எனப் பெயர் வரக் காரணம் : திருமால் தசாவதாரத்தில் ஆமைவடிவம்  கொண்டு இத்தலத்து ஈசனை-கச்சபேசனை-வணங்கினார்.  அதாவது கச்சபேசர் = கச்சப் + ஈசர் எனப்  பிரிக்கலாம். இதன்படி கச்சபம் என்றால் ஆமையைக் குறிக்கும்.  ஆமைக்கு அருள் புரிந்த ஈசனே  கச்சபேஸ்வரர் ஆனார். அதாவது திருமால் ஆமை வடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை வணங்கிய தால் இத்தலத்து ஈசனுக்கு கச்சபேஸ்வரர் எனப் பெயர் வந்தது.

கச்சபேஸ்வரரின் மகிமை : இத்திருத்தலத்தில் எழுந்தருளி அருள் புரிந்து கொண்டு இருக்கும் கச்சபேசனை (வழிபட வேண்டும்) கும்பிட வேண்டும் என்று சென்றவர்களும், செல்ல வேண்டும்  என நினைத்தவர்களும், சென்று கச்சபேசனைக் கண்டவர்களும், யாவரும் இவ்வுலகத்தில் துன்பம்  நீங்கி இன்பம் எய்தி, மீளா முக்தியும் அடைவார்கள்.

இவ்வாலயத்தில் அமைந்துள்ள இட்ட சித்த தீர்த்தம் - குளத்தின் சிறப்புகள் : ஆலயத்தில்  அமைந்துள்ள திருக்குளத்தின் பெயர் இட்ட சித்திக் தீர்த்தம் ஆகும்.  இக்குளத்தில் முழுகி  குளிப்பவர்களுக்குச் சிவபெருமான் திருவருள் பாலிப்பார்.  இத்தீர்த்தக் குளத்தைக் கண்டவர்களும்,  தன் உடம்பில் இத்தீர்த்தத்தை தெளித்தக் கொண்டவர்களுக்கும், மூழ்கிக் குளிப்பர்களுக்கு அறம்,  பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு போன்ற உறுதிப் பொருளை அடைவார்கள் என்றும் சிவஞான  முனிவர் அருளியுள்ளார்.  இந்த இட்ட சித்தி தீர்த்தக் குளத்தில் ஞாயிற்றுக் கிழமை முழுகினால்  குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறந்திடும், மனைவி அமையாதவர்களக்கு நல்மனைவி  அமைந்திடும், நோயில் துன்புறும் மக்கள் நோய் தீர்ந்து அவர்களின் ஆயுள் கெட்டிப்படும், கல்வி  அறிவைப் பெறுவர்.  பொன் பொருள் இல்லாதவர் அனைத்துச் செல்வமும் பெற்றுச் சிறப்புடன்  வாழ்வர்.  மற்றும் பதவி வேலை இல்லாதவர் பணியையும் பெற்று வாழ்வார்கள், என்று மாதவச்  சிவஞான முனிவர் அவர்கள் திருக்குளத்தைக் குறித்து சிறப்பித்துக் கூறியுள்ளார்.


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

பரதநாட்டிய நிலைகளை குறிக்கும் நூற்றியெட்டு சிவதாண்டவங்கள்...

நூற்றியெட்டு சிவதாண்டவங்கள்
நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளை குறிக்கும் நடன தாண்டவங்களை சிவபெருமான் ஆடினார்.
1. தாளபுஷ்பபுடம்
2. வர்த்திதம்
3. வலிதோருகம்
4. அபவித்தம்
5. ஸமானதம்
6. லீனம்
7. ஸ்வஸ்திக ரேசிதம்
8. மண்டல ஸ்வஸ்திகம்
9. நிகுட்டம்
10. அர்தத நிகுட்டம்
11. கடிச்சன்னம்
12. அர்த்த ரேசிதம்
13. வக்ஷஸ்வஸ்திகம்
14. உன்மத்தம்
15. ஸ்வஸ்திகம்
16.பிருஷ்டஸ்வஸ்திகம்
17. திக்ஸ்வஸ்திகம்
18. அலாதகம்
19. கடீஸமம்
20. ஆஷிப்தரேசிதம்

21.விக்ஷிப்தாக்ஷிப்தம்
22.அர்த்தஸ்வஸ்திகம்
23. அஞ்சிதம்
24. புஜங்கத்ராசிதம்
25. ஊத்வஜானு
26. நிகுஞ்சிதம்
27. மத்தல்லி
28. அர்த்தமத்தல்லி
29. ரேசித நிகுட்டம்
30. பாதாபவித்தகம்
பரதநாட்டிய நிலைகளை குறிக்கும் நடன
31. வலிதம்
32. கூர்நிடம்
33. லலிதம்
34. தண்டபக்ஷம்
35. புஜங்கத்ராஸ்த ரேசிதம்
36. நூபுரம்
37. வைசாக ரேசிதம்
38. ப்ரமரம்
39. சதுரம்
40. புஜங்காஞ்சிதம்
41. தண்டரேசிதம்
42. விருச்சிககுட்டிதம்
43. கடிப்ராந்தம்
44. லதா வ்ருச்சிகம்
45. சின்னம்
46. விருச்சிக ரேசிதம்
47. விருச்சிகம்
48. வியம்ஸிதம்
49. பார்ஸ்வ நிகுட்டனம்
50. லலாட திலகம்

51. க்ராநதம்
52. குஞ்சிதம்
53. சக்ரமண்டலம்
54. உரோமண்டலம்
55. ஆக்ஷிப்தம்
56. தலவிலாசிதம்
57. அர்கலம்
58. விக்ஷிப்தம்
59. ஆவர்த்தம்
60. டோலபாதம்

61. விவ்ருத்தம்
62. விநிவ்ருத்தம்
63. பார்ஸ்வக்ராந்தம்
64. நிசும்பிதம்
65. வித்யுத் ப்ராந்தம்
66. அதிக்ராந்தம்
67. விவர்திதம்
68. கஜக்ரீடிதம்
69.தவஸம்ஸ் போடிதம்
70. கருடப்லுதம்

71. கண்டஸூசி
72. பரிவ்ருத்தம்
73. பார்ஸ்வ ஜானு
74. க்ருத்ராவலீனம்
75. ஸன்னதம்
76. ஸூசி
77. அர்த்தஸூசி
78. ஸூசிவித்தம்
79. அபக்ராந்தம்
80. மயூரலலிதம்

81. ஸர்பிதம்
82. தண்டபாதம்
83. ஹரிணப்லுதம்
84. பிரேங்கோலிதம்
85. நிதம்பம்
86. ஸ்கலிதம்
87. கரிஹஸ்தம்
88. பர ஸர்ப்பிதம்
89. சிம்ஹ விக்ரீடிதம்
90. ஸிம்ஹாகர்சிதம்

91. உத் விருத்தம்
92. உபஸ்ருதம்
93. தலஸங்கட்டிதம்
94. ஜநிதம்
95. அவாஹித்தம்
96. நிவேசம்
97. ஏலகாக்ரீடிதம்
98. உருத்வ்ருத்தம்
99. மதக்ஷலிதம்
100.விஷ்ணுக்ராந்தம்

101. ஸம்ப்ராந்தம்
102. விஷ்கம்பம்
103. உத்கட்டிதம்
104. வ்ருஷ்பக்ரீடிதம்
105. லோலிதம்
106.நாகாபஸர்ப்பிதம்
107. ஸகடாஸ்யம்
108. கங்காவதரணம்

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வடுகூர் (திருவாண்டார் கோயில்)ஆண்டார்கோயில் வடுகூரார்....

வடுகூர் (திருவாண்டார் கோயில்)

வடுகூர் (திருவாண்டார் கோயில்)
ஆண்டார்கோயில்
இப்பெயர் பிற்கால வழக்கில் ஆண்டார் கோயில் என்றாகி இன்று மக்கள் வழக்கில் "திருவாண்டார் கோயில்" என்று வழங்குகிறது. புதுச்சேரி மாநில எல்லைக்குட்பட்டது.

விழுப்புரம் - பாண்டிச்சேரி (வழி கோலியனூர், கண்டமங்கலம்) பேருந்துச் சாலையில் சென்று, கோலியனூர், வளவனார் தாண்டி, புதுவை மாநில எல்லைக்குள் நுழைந்து, சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலுள்ள 'திருவாண்டார் கோயிலை' அடையலாம். ஊரின் தொடக்கத்திலேயே இந்திய உணவுக் கார்ப்பரேஷன் அலுவலகத்தின் எதிரில் சாலையோரத்திலேயே கோயிலும் உள்ளது.

தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். அஷ்டபைரவர்களுள் ஒருவராகிய வடுக பைரவர், முண்டகன் என்னும் அசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்டதலமாதலின் வடுகர் வழிபட்டது வடுகூர் என்று பெயர் பெற்றது. ஆண்டவனார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர்.

கோயிற் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று - ஆண்டார் கோயில்' என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில் என்றாயிற்று.

இறைவன் - வடுகீஸ்வரர், வடுகநாதர், வடுகூர் நாதர்.

இறைவி - திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி.

தலமரம் - வன்னி.

தீர்த்தம் - வாமதேவ தீர்த்தம்.

சம்பந்தர் பாடல் பெற்றது.

இறைவனின் அறுபத்து நான்கு (அஷ்டாஷ்ட) வடிவங்களுள் வடுகக்கோலமும் ஒன்றாகும். அஷ்டபைரவ மூர்த்தங்களுள் வடுக பைரவக் கோலமும் அடங்கும். அவையாவன - 1. அசிதாங்க பைரவர் 2. ருருபைரவர் 3. சண்டபைரவர் 4. குரோத பைரவர் 5. உன்மத்த பைரவர் 6. கபால பைரவர் 7. பீஷணபைரவர் 8. சம்ஹார பைரவர்.

சம்ஹார பைரவரே வடுகபைரவர் என்றழைக்கப்படுபவராவார். இக்கோயில் சோழர்காலக் கலைப் பாணியில் அமைந்துள்ளது. சுவாமி விமானம் தஞ்சைக் கோயிலமைப்பிலுள்ளது. கோயில் தொல் பொருள் ஆய்வுத் துறையினரால் புதுப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அழகிய சுற்றுமதில்கள். கிழக்கு நோக்கிய கோயில்.

முகப்பு வாயிலைக் கடந்ததும் இடப்பால் நால்வர் சந்நதியுள்ளது. பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். தலமரம் வன்னி உள்ளது. ஆறுமுகர் திருவுருவம் மிகவும் அழகானது. உள்நுழைந்ததும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது - நின்ற திருக்« £லம். நேரே மூலவர் சந்நிதி. துவாரபாலகர்களைத் தொழுது உட்சென்று சிவலிங்கத் திருமேனியைத் தரிசிக்கலாம். நாடொறும் இருகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. கார்த்திகை அஷ்டமியில் பைரவருக்கு இங்கு விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன. இதுதவிர, ஞாயிறு தோறும் அன்பர்களின் உபயமாகப் பைரவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரைப் பெருவிழா ஏக தின உற்சவமாக நடைபெறுகிறது.

"பாலும் நறுநெய்யும் தயிரும் பயின்றாடி

ஏலுஞ்சுடு நீறும் என்பும் ஒளிமல்கக்

கோலம் பொழிற் சோலைக் கூட மட அன்னம்

ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே."

(சம்பந்தர்)

-"நேசதுற

வேற்றா வடுகூர் இதயத்தினார்க் கென்றுந்

தோற்றா வடுகூர்ச் சுயஞ்சுடரே"

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. வடுகீஸ்வரர் திருக்கோயில்

திருவாண்டார் கோயில் - அஞ்சல்

(வழி) கண்டமங்கலம் - 605 102.

(புதுவை மாநிலம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Sunday, December 22, 2024

விருதுநகர் அம்பலவாணர் கோவிலில் சிவனை தரிசித்ததால் திருமண தடை விலகும்.



விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியமான முடுக்கன்குளம் சிவகாமி அம்மன் சமேத அம்பல வாண சுவாமி கோவில் 13-ம் நூற்றாண்டில் அப்போதைய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பவரால் கட்டப்பட்டது என்பது வரலாறு. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோவிலில் முற்கால பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்யும் வகையில் கோவி லில் முன் மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. மேலும் ராவணன் மனைவி மண்டோதரி தன்னுடைய திருமணத் தடை நீங்குவ தற்காக தாமரைகள் நிறைந்த குளத்தினைக் கொண்ட, இந்த சிவனை தரிசித்ததால் அவருடைய திருமணம் சிறப்பாக நடைபெற்ற இடம் என்ற பெருமையை உடைய கோவிலாகும்.
இவ்வாறாக மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தலமாக விளங்கி வரும் அம்பலவாணர் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடத்தி பல வருடமாகி விட்டது.தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப் பாட்டில் உள்ள முடுக்கன் குளம் பழமை வாய்ந்த அம்பலவாணர் 
கோவில் இந்த கோவில் சிவனை வணங்கினால் நினைத்தது நடக்கின்றது என்பது ஐதீகம். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம் . 

தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்....

_தேய்பிறை அஷ்டமி.. வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்?_

அஷ்டதிதி என்பது பைரவர் வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. தேய்பிறை அஷ;டமி என்பது கூடுதல் விசேஷமான நாள்.

 காலபைரவரின் சிறப்புகள் :

 காக்கும் கடவுள் காலபைரவரை வழிபட பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம். பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள்.

 அந்தகாசுரனை அழிக்க அவதாரம் எடுத்தவர் பைரவர். சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வேலைகளையும் செய்கிறார்.

 இவருடைய உடம்பில் நவகிரகங்களும், 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. காலத்தை தாண்டி வெல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர் காலபைரவர் ஆவார். 
 சனீஸ்வரரின் குரு, பைரவர் என்பதால் பைரவரை வணங்கினால் சனிபகவானால் ஏற்படும் துன்பங்கள் தீரும்.

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை வணங்கலாம்.

 தேய்பிறை அஷ;டமி நாளில் பைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

காலபைரவரை வழிபடும் முறை :

 தேய்பிறை அஷ்டமியில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வேண்டினால் தடைகள் தகர்க்கப்பட்டு வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

 பைரவருக்கு மிளகு கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்வது மிகவும் சிறப்பானது.

 பைரவருக்கு வடைமாலை சாற்றி வேண்டிக்கொண்டால் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் தீர்வு கிடைக்கும்.

காலபைரவரை வழிபட கிடைக்கும் நன்மைகள் :

 காலபைரவரை வழிபட்டால் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

 வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.

 சனியின் தாக்கம் தீரும்.

 வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். 

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Saturday, December 21, 2024

இன்று பூரம் நட்சத்திரம் ஆண்டாள் நாச்சியார் திருவடிகள் சரணம்....

⚛️ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகள் சரணம்🙏
⚛️முன்பு திரேதா யுகத்தில் விதேக நாட்டில் மிதிலை நகரில் ஜனக மன்னன் யாகசலலை அமைத்தற்பொருட்டுக் கலப்பை கொண்டு பூமியை உழுகையில், அவ்வுழுபடைச் சாலிலே ஸ்ரீ தேவியின் அமிசமான ஒரு மகள் தோன்ற, அவளை அவ்வரசன் தன் புத்திரியாகப் பாவித்துச் சீதையென்று பெயரிட்டு வளர்த்து வந்தான். 
⚛️அச்சீதையை அயோத்தி வேந்தன் தசரதனுக்குக் குமாரனாக அவதாரம் செய்த திருமகள்நாதன் மணந்து, மனைவியைக் காரணமாகக் கொண்டு புவியில் தீயோரைக் கொன்று நல்லோரைக் காத்தார். ஸ்ரீ தேவி புவியில் தோன்றி, புவியிலுள்ள மறச் செயல்கள் மறையவும், அறச் செயல்கள் தழைத்து உலகம் உய்யவும் வேண்டி திருமாலின் அவதாரமாகிய இராகவனுக்கு இனிய துணைவியானாள்.

⚛️அதுபோலவே, பின்பு கலி யுகத்தில் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் இறைவனுக்கு மலர் மாலை கட்டித் தருவதற்கு அமைக்கப்பட்ட நந்தவனத்தில் துளசி மலரில் (A. H. 9-ஆம் நூற்றாண்டில்) நள ஆண்டு ஆடி மாதம் வளர்பிறையில் சதுர்த்தசி திதியில் செவ்வாய்க்கிழமையன்று பூர நட்சத்திரத்தில் பூமிப்பிராட்டியார் அமிசமாய்ப் பெண் குழந்தை தோன்றியது.

⚛️ அங்ஙனம் அவதரித்த அப்பெண் குழவியை நந்தவனத்தில் பார்த்த பெரியாழ்வார் பெருங்களிப்புக் கொண்டு, அக்குழவியைத் தமது மகளாகப் பாவித்துக் கோதை எனப் பெயரிட்டு வளர்க்கலாயினார்.

⚛️இந்நிலவுலகின்கண் திருமாலடியவர்களாக அவதரித்து, ஆழ்வார்களெனச் சிறப்பித்துக் கூறப்பெறும் பன்னிருவருள், பரமனைப் பக்தியினாலும் நாயகி பாவத்தினாலும் சொல்மலர்களாகிய பாமாலையைச் சுவைபடச் சித்தரித்ததோடு அமையாது, தாமே நாயகியாக வேண்டும் எனும் எண்ணத்தோடு, அரங்கனை ஆராதித்து, அவனை நாயகனாகவும் அடைந்துய்யும் பேறு பெற்ற செல்வியே இக்கோதையாவாள். வில்லிபுத்தூரார், கோதை என்னும் அப்பெண் குழவிக்குப் பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்து, பரமஞானத்தைப் போதித்தார்.

⚛️தந்தை முதலியோர் கண்டு வியக்கும்படி இளமை தொடங்கி எம்பெருமான் பக்கலிலே பக்திப் பெருவேட்கை கொண்டு, அவனையே தாம் மணஞ்செய்து கொள்ளக் கருதி, அப்பிரானது பெருமைகளையே எப்பொழுதும் சிந்தித்தல், துதித்தல், முதலியன செய்து வாழ்ந்த கோதையார், நாடோறும் விட்டுசித்தர் என்னும் பெரியாழ்வார் வடபெருங்கோயிலானுக்குச் சார்த்துதற்காகக் கட்டிவைத்த திருமாலையை அவரில்லாத காலத்து எடுத்துத் தம் குழலிலே தரித்துக் கொண்டுஅப்பெருமானுக்கு, 'நான் நேரொத்திருக்கின்றோனோ'எனச் சிந்தித்தல் வழக்கம். மாலை சூட்டிக்கொள்ளுதலுடன் சிறந்த அணிகலன்களை அணிந்து, உயர்ந்த பட்டாடையை உடுத்தித் தம்மை அலங்கரித்து, அவ்வொப்பனையழகைக் கண்ணாடியிலே கண்டு, தந்தையார் காணாதவாறு மலர் மாலையைக் களைந்து முன்போலவே செண்டாகச் சுற்றிப் பூங்குடலையினுள்ளே வைத்துவிடுதல் அவரது தினசரி வழக்கம். 

⚛️இதனை அறியாத ஆழ்வார் அம்மாலையைக் கொண்டு சென்று இறைவனுக்குச சாத்திவர, பெருமானும் விருப்புடன் அதனை ஏற்றருளினான்.
⚛️இங்ஙனம் பல நாட்கள் சென்றபின் ஒருநாள் வெளியிற் சென்ற ஆழ்வார் விரைவில் வீட்டிற்கு எழுந்தருளிய பொழுது, மலர்மாலையைக் கோதை சூடியிருத்தலைப் பார்த்துக் கோபங்கொண்டு கடிந்துரைத்து, அன்று வடபத்திரசாயியாகிய இறைவனுக்கு மாலை அணியக் கொடாமல், அத்திருப்பணிக்கு முட்டுப்பாடு நேர்ந்ததற்கு மனம் வருந்தியிருந்தார். அற்றை நாளிரவில் இறைவன் ஆழ்வாரது கனவில் வந்து, மாலை கொணராததற்குரிய காரணத்தை வினவி அறிந்து, பின்னர், 'அவள் சூடிக்கொடுத்த மாலையே நறுமணமிக்கு, நமது உள்ளத்திற்கு நனிவிருப்பமானது;ஆதலின் இனி அத்தன்மைத்தான மாலையையே நமக்குக் கொண்டு வருவாய்'என்றருளி மறைந்தனன்.

⚛️பின்பு துயில் நீங்கப்பெற்ற விட்டுசித்தர் தமக்கு மகளாக வாய்த்துள்ள கோதை, மலர்மங்கையின் அவதாரம் எனக் கொண்டு அவளுக்கு, 'ஆண்டாள்'என்றும் மாதவனுக்குரிய மலர் மலையைத் தாம் சூடிக்கொண்டு பார்த்துப் பின்பு கொடுத்தது காரணமாக, 'சூடிக்கொடுத்த நாச்சியார்'என்றும் திருப்பெயரிட்டு அழைத்துவந்தார்.

⚛️ஆண்டாள் தமது பருவம் வளருந்தோறும் இறை அறிவும் பக்திகளும் உடன்வளர்ந்து வரப்பெற்று, தமக்கு ஏற்ற காதலனாகக் கருதிய கடல்வண்ணன் விருப்பமாகக் காதல் அதிகரித்தவராகி, இனி அவனை ஒரு நொடிப் பொழுதும் கூடாதிருக்க முடியாது என்னுங் கருத்துடன் கண்ணனது பிரிவை ஆற்றாத ஆயர் மங்கையர் போலத் தாமும் நோன்பு நோற்று உயிர் தரிப்வராய், அவ்வெண்ணத்தைத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற திவ்வியப் பிரபந்தங்களின்மூலமாக இறைவனிடத்து விண்ணப்பஞ்செய்து வாழ்ந்திருந்தார்.

⚛️இந்நிலையில் பெரியாழ்வார் கோதையாரது மணவினையைப்பற்றிப் பேசத் தொடங்கிய காலையில், ஆண்டாள், 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்'என்று சொல்ல, பட்டர்பிரான், 'பின்னை எங்ஙனம் நிகழ்வது?'என்று கேட்க, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார், 'யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கின்றேன்'என்றுரைத்தார்.

⚛️பின்பு கோதையார், தந்தையாகிய பட்டர்பிரானிடம், 'நூற்றெட்டுத் திருப்பதிகளிலும் எழுந்தருளியுள்ள இறைவனுடைய பெருமைகளை விளங்க எடுத்துக் கூறியருளவேண்டும்'என வேண்ட, அவரும் அவ்வாறே விரித்துக் கூறினார். அங்ஙனம் அருளிச்செய்து வருகையில், ஆண்டாள் வடமதுரையில் எழுந்தருளியுள்ள கண்ணபிரானது வரலாற்றைக் கேட்டவளவிலே மயிர்சிலிர்ப்பும், திருவேங்கடமுடையானது வரன் முறையைச் செவிமடுத்தபொழுது முகமலர்ச்சியும், திருமாலிருஞ்சோலையழகரது வடிவழகை அறிந்த மாத்திரத்தில் மனமகிழ்ச்சியும் பெற்று, திரு அரங்கநாதனது பெருமை செவிப்பட்டவுடனே அளவற்ற இன்பமடைந்து நின்றார். அவர்களுள் அரங்கநாதனிடத்தே மனத்தைச் செலுத்தி, அவனுக்கே தம்மை மணமகளாக நிச்சயித்து அவ்வமலனையே எப்பொழுதும் எண்ணியிருந்தார் கோதையார்.

⚛️கோதையாருக்குத் திருவரங்கநாதன்பால் உண்டான விருப்ப மிகுதியை அறிந்த பட்டர்பிரான், தமது மகளின் மனம் மகிழ,

"குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம்நீட்டி

வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கைநோக்கிக்

கடல்நிறக் கடவுள எந்தை அரவணைத் துயிலும்"

திருவரங்கத்தின் வரலாற்றினைத் தெரிவித்தார்.

கோதையாரும் திருவரங்கநாதனைக் குறித்து,

"கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ

மருப்பொசித்த மாதவன்றன் வாய்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே"

⚛️என்பார். பின் கோதை நாச்சியார் தம் ஆற்றாமையைத் தணித்துக்கொள்ள எண்ணி வில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், அப்பதியிலிருந்த பெண்களையும் தம்மையும் ஆயர்குல மங்கையராகவும், வடபெருங்கோயிலை நந்தகோபன் மனையாகவும், அப்பெருமானைக் கண்ணனாகவும் கருதித் திருப்பாவையைப் பாடியருளிப் பின்பு பதினான்கு திருமொழிகளைப் பாடியருளினார். இதற்கு நாச்சியார் திருமொழி என்று பெயர்.

⚛️ஆழ்வாரும், 'நம்பெருமான் இவளைக் கடிமணம் புரிதல் கைகூடுமோ?'என்றெண்ணியிருக்கையில், திருவரங்கச் செல்வன் ஆழ்வாரது கனவில் எழுந்தருளி,

⚛️"உமது திருமகளைக் கோயிலுக்கு அழைத்துக்கொண்டு வாரும். அவளை யாம் ஏற்போம்"என்றருளினார். பின்பு திருவரங்கநாதர் கோயிற் பரிவாரமாகியுள்ளவர் கனவிலும் தேன்றி, "நீவிர் குடை, கவரி, விருந்துகள், வாத்தியங்கள் முதலியன பல சிறப்புகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் போய், பட்டர் பிரானாருடைய அருமைச் செல்வியாகிய கோதையை அவரது தந்தையாருடன் நம்பால் அழைத்து வருவீராக"என்று பணித்தருளினன். பிறகு பாண்டிய நாட்டிறையோனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, "c பலருடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டநாதருடைய மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்திற்கு அழைத்து வருவாயாக"என்றருளினன். கோதையாரும் தாம் அன்றிரவு பலவகைக் கனவுகளைக் கண்டதாகத் தோழியிடம் கூறினாள்.

⚛️அக்கனவில் திருமணவினைகள் அனைத்தையும் முறையே கண்டதாகப் பத்துப் பாடல்களில் அவர் பாடியுள்ளார். அவற்றுள்,

⚛️"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்"

என்பதும் ஒன்று.

⚛️பாண்டிய வேந்தன் வல்லபதேவனும் ஏவலாயரைன் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்தூரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் நடுவிலுள்ள நெடுவழியில் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தரிட்டும், தோரணங்கட்டியும், வாழை கமுகு நாட்டியும் நன்றாக அலங்கரித்து, நால்வகைச் சேனைகளையும் கொண்டு ஆழ்வார் பக்கல் வந்து சேர்ந்து, இறைவன் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான். பின்பு கோயிற்பரிவார மாந்தர் பட்டநாதரை வணங்கி, இரவு தம் கனவில் திருவரங்கத்து அமலன் காட்சி அளித்துக் கூறிய செய்திகளை அறிவித்தனர்.

⚛️பட்டர்பிரானார் இறைவனது அன்பினை வியந்து பாராட்டினார். பின்னர் மறையவர்கள் பலர் பல புண்ணிய நதிகளினின்று நீரினைக் கொண்டு வந்தார்கள்.

⚛️கோதையாருடைய தோழிகள் அந்நீரினால் கோதையாரை ஆட்டி, பொன்னாடை உடுத்திவிட்டுப் பலவாறு ஒப்பினை செய்தபின், தோழியர் புடைசூழக் கோதையார் சென்று தமக்கென அமைந்த மணிச்சிவிகையில் ஏறினார். ஏனையோர் பல்லக்கிலும், தேர் முதலிய ஊர்திகளிலும் சென்றார்கள், மற்றும் பலர் கோதையாருடைய சிவிகைக்கு முன்னும் பின்னுமாக நடந்து சென்றார்கள்.

⚛️இங்ஙனம் திருவரங்கம் நோக்கிச் சென்ற காலத்துப் பலர், "ஆண்டாள் வந்தாள்!சூடிக் கொடுத்த சுடர்க் கொடி வந்தாள்!சுரும்பமர் குழற் கோதை வந்தாள்!திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்!பட்டர்பிரான் புதல்வி வந்தாள்!வேயர் குல விளக்கு வந்தாள்!தென்னரங்கம் தொழும் தேசி வந்தாள்!"என்று முன்னே கட்டியங் கூறிச் செல்வாராயினர். அரசன், பட்டநாதர் முதலாயினருடன் கோதையாரின் சிவிகை திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்து, பெரிய பெருமாளுடைய முன்மண்டபத்தை அடைந்தது. பின்பு கோதையார் பெருமாளைச் சேவிக்கப் பண்ணுவிக்கையில், அத்திருமாலின் அழகு இரும்பைக் காந்தம் இழுக்கின்றவாறுபோல ஆண்டாளைக் கவரத் தொடங்கியது. சூடிக்கொடுத்த நாச்சியார் சிலம்பு ஆர்க்க, சீரார் வளையலிப்ப, கொடியேரிடையாட, காதளவு மோடிக் கயல்போல் மிளிருங் கடைக்கண் பிறழ, அன்னமென்னடை கொண்டு அருகிற்சென்று, இன்பக் கடலில் ஆழ்ந்து திருவரங்கன் திருவடி வருடக் கருதி, நாகபரியங்கத்தை மிதித்தேறி, நம்பெருமானது திருமேனியின் கண்மறைந்து, அவனை என்றும் பிரியாதிருப்பவளாயினார்.

⚛️அங்ஙனம் அரும்பேறு பெற்றதைத் தரிசித்து ஆழ்வாரும், அவரது சீடனான வல்லபதேவனும் ஏனையோரும் வியப்புற்றிருக்கையில், திருவரங்கமுடையான் அர்ச்சக முகமாக ஆழ்வாரை அருகிலழைத்து, 'கடல் மன்னனைப் போன்று நீரும் நமக்கு மாமனாராய் விட்டீர்'என்று முகமன் கூறித் தீர்த்தம், திருப்பரியட்டம், மாலை திருச்சடகோபம் முதலியவற்றை வழங்கி, 'வில்லிபுத்தூர் உறைவானுக்கே தொண்டு பூண்டிரும்'என்று திருவாய்மலர்ந்து விடை கொடுத்தருளினன். ஆழ்வாரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று முன்போலவே இறைவனுக்கு மாலை அணிவிப்பதில் ஈடுபடுதலுடன் ஆர்வமென்பதோர் பூவையும் இட்டுக் கொண்டு எண்பத்தைந்து ஆண்டுகள வாழ்ந்திருந்து, இறைமையின் இருப்பிடத்தை அடைந்தார்.

⚛️ஸ்ரீ ஆண்டாளால் பாடப்பெற்ற பாடல் தலங்கள்:
1. திருவரங்கம்,
2. திருக்கண்ணபுரம்,
3. திருமாலிருஞ்சோலைமலை, 
4. ஸ்ரீவில்லிபுத்தூர்,
5. திருவேங்கடம், 
6. துவாரகை,
7. வட மதுரை,
8. திருவாய்பாடி,
9. திருப்பாற்கடல் முதலியனவாகும்

இன்று பூரம் நட்சத்திரம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

குழந்தை பாக்கியம் வேண்டுவோரும், வியாபாரம் சிறக்க குழந்தை கிருஷ்ணன் வழிபாடு...



*திருச்சி மாவட்டம் தமிழ்நாடு பீமநகர் அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணன் ஆலயம்.*
*மூலவர் : வேணுகோபால கிருஷ்ணன்*

*பழமை : 500 வருடங்களுக்குள்*

*ஊர் : பீம நகர்*

*மாவட்டம் : திருச்சி*

*மாநிலம் : தமிழ்நாடு*

*திருவிழா:*

*கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, நவராத்திரி*

*தல சிறப்பு:*

*அண்ணன் கிருஷ்ணர், தங்கை காளி இருவரும் ஒரே தலத்தில், சம அந்தஸ்த்தில் வணங்கப்படுவது சிறப்பு.*

*திறக்கும் நேரம்:*

*காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணன் திருக்கோயில் ஹீபர் ரோடு, பீம நகர்திருச்சி மாவட்டம்.*

*பொது தகவல்:*

*இங்கு ராஜகணபதி, வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார ஸ்வாமி, விஷ்ணு துர்கை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.*

*பிரார்த்தனை:*

*குழந்தை பாக்கியம் கிடைக்க, வியாபாரம் செழிக்க, மனவளர்ச்சி குன்றியவர்கள் குணமாக என பக்தர்கள் இங்குள்ள கிருஷ்ணரை வழிபட்டுச் செல்கின்றனர்.*

*நேர்த்திக்கடன்:*

*கிருஷ்ணருக்கு வெண்ணெய் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.*

*தலபெருமை:*

*ஸ்ரீகிருஷ்ணனின் சாந்நித்தியத்தை அறிந்து சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்கள் மட்டுமின்றி, இலங்கையில் இருந்தும்கூட பக்தர்கள் வந்து, ஸ்வாமியைத் தரிசித்துச் செல்கின்றனர். குழந்தை கண்ணனுக்கு பால் பாயசம் என்றால் கொள்ளைப் பிரியம்.*

*எனவே, குழந்தை பாக்கியம் வேண்டுவோரும், வியாபாரம் சிறக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வோரும் பால் பாயசம் நைவேத்தியம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்தால், நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வான் ஸ்ரீகண்ணன் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.*

*மாதந்தோறும் ரோகிணி நட்சத்திர நாளில், வேணுகோபால கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.*

*இதில் கலந்துகொண்டு, வெண்ணெய் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், மனவளர்ச்சி குன்றியவர்கள், விரைவில் நலம் பெறுவார்கள்; பூரண குணம் பெறுவார்கள் என்பது திருச்சி வாழ் மக்களின் நம்பிக்கை.*

*இங்கு, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி திருநாள், மூன்று நாள் விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.*

*அன்றைய நாளில் சிறப்பு ஹோமங்கள், உறியடி உத்ஸவம், புஷ்பாஞ்சலி என அமர்க்களப்படும்.*

*தல வரலாறு:*

*இப்போது கோயில் உள்ள பகுதி, ஆங்கிலேயர் காலத்தில் பட்டாலியன்களின் மிகப் பெரிய முகாமாக இருந்ததாம்.*

*அந்த இடத்தில் சுயம்புமூர்த்தமாகத் தோன்றி, அருட்காட்சி தந்தாள் காளிதேவி. எனவே, அந்த இடத்தில் காளியம்மன் கோயில் உருவானது.*

*பின்னாளில், இந்தப் பகுதியில் உள்ள யாதவ மக்களில் ஒருவர், எங்களின் குலதெய்வம், இஷ்ட தெய்வம் எல்லாமே எங்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர்தான்.*

*எனவே, இந்தக் கோயிலில் கண்ணபரமாத்மாவுக்கு சன்னதி அமைத்து வழிபட விரும்புகிறோம் எனத் தெரிவிக்க, காளிதேவியும் சம்மதித்தாள்.*

*அதையடுத்து, கையில் புல்லாங்குழலும் அருகில் பசுமாடுமாக, அழகு கொஞ்சும் வேணுகோபால கிருஷ்ணரின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள்.*

*காலப்போக்கில், காளியம்மன் கோயில் என்று சொல்வது மாறி, தற்போது ஸ்ரீகிருஷ்ணன் கோயில் என்றழைக்கும் அளவுக்கு, அனைவருக்கும் கேட்ட வரங்களை தந்தருளிக் கொண்டிருக்கிறார் வேணுகோபால கிருஷ்ணன்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*அண்ணன் கிருஷ்ணர், தங்கை காளி இருவரும் ஒரே தலத்தில், சம அந்தஸ்த்தில் வணங்கப்படுவது சிறப்பு.*

*அமைவிடம்:*

*திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது பீம நகர். இங்கே, ஹீபர் ரோட்டில் உள்ளது வேணுகோபால கிருஷ்ணன் கோயில்.  

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

கண்ணாயிரமுடையார் திருக்கோயில்,குறுமாணக்குடி,

அருள்மிகு. கண்ணாயிரமுடையார் திருக்கோயில்,
குறுமாணக்குடி,
கொண்டத்தூர் அஞ்சல்,
தரங்கம்பாடி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் 609 117. 
*திருக்கண்ணார்கோயில் இப்போது 
மக்கள் வழக்கில் குறுமாணக்குடி என்று வழங்குகிறது.  

*இறைவன் - கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சஹஸ்ரநேத்ரேஸ்வரர்.

*இறைவி - முருகுவளர்கோதை, சுகந்தகுந்தளாம்பிகை.

*தலமரம் - சரக்கொன்றை.

*தீர்த்தம் - இந்திர தீர்த்தம் 

* இது சம்பந்தரால் பாடல் பெற்றதலம் .            

*மூலவர் கண்ணாயிரமுடையார் சுயம்புத் திருமேனி.   பெயருக்கேற்ப  மூலலிங்கத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன.      

*தெற்கு நோக்கிய சந்நிதியில் அ/மி முருகுவளர்கோதை அம்பாள் நின்ற திருக்கோலம். பெயருக்கேற்ற அழகு வடிவம். அம்பாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும்  வடிக்கப்பட்டுள்ளன.                 

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கண் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபாடுசெய்கிறார்கள். செய்தால் சிறந்த பலன் உண்டு.  

திருமணமாகாதோர் இங்கு வந்து சுவாமிக்கு மாலை சார்த்தி வழிபடுதலும், அவ்வாறு வழிபட்டோர் திருமணத்திற்கு பிறகும் இங்கு வந்து மாலை சார்த்துதலும் மரபாக உள்ளது. 

 *தல வரலாறு: 
தேவராஜன் இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு நாள் முனிவர் வெளியே சென்ற சமயம்  முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை நெருங்கினான். அதற்குள் முனிவர் திரும்பி வர இந்திரன் பூனை வடிவமெடுத்தான். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு இந்திரனின் உடல் முழுவதும் ஆயிரம் பெண் உறுப்பு உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். 
தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க, "ராமரின் திருவடி பட்டதும் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்" என்றார் முனிவர். 
இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மனிடம் சென்றான். அதற்கு பிரம்மன், சிவனை கோயில்களில் வழிபட்டு சாப விமோசனம் பெறுமாறு வழி கூறினார். 

அக்கோயில்களில் குறுமாணக்குடியும் ஒன்று. இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட அவனது உடலில் இருந்த ஆயிரம் குறிகளும் ஆயிரம் கண்களாக மாறின. இறைவன் அவற்றை ஏற்றுக்கொண்டார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. 
இதனால் இத்தல இறைவன் கண்ணாயிரமுடையார் ஆனார். 

*மகாபலி என்ற மன்னனை வெல்லுமாறு தேவர்கள் வேண்ட திருமால் வாமன அவதாரம் எடுத்தார். 
குறு மாண் (குள்ளமான பிரமச்சாரி) வடிவில் தோன்றி மகாபலியிடம்  மூன்றடி மண் கேட்டார். தனது குருவான சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாமல் மூன்றடி மண் தருவதாக மன்னன் வாக்களித்தான். அப்போது வாமனர் திரிவிக்கிரம வடிவெடுத்து மண்ணை ஓர் அடியாலும் விண்ணை ஓர் அடியாலும் அளந்தார். மூன்றாவது அடியாக மகாபலியின் முடி மீது வைத்தார். 
அந்த "குறு மாண்" வடிவில் வந்து திருமால் வழிபட்ட தலம் இக்கண்ணார் கோயிலாகும். அதனால் தான் இத்தலத்திற்கு 
 குறுமாணக்குடி என்ற பெயர் வந்தது. 

*திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் அணுகாது. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் வந்தடையும். அவர்களுக்கு எமனால் வரும் துன்பங்கள் இல்லை. அவர்கள்  மும்மலம் நீங்கப் பெற்றவராய் வானுலகில் இனிது உறைபவராவர் என்றும், பதிகப் பாடல்கள் பத்தினாலும் இறைவனை போற்றி வழிபடுபவர்கள் தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர் என்றும்  பாடியுள்ளார்.  

*குறுமாணக்குடி திருக்கண்ணார்கோயில்  மயிலாடுதுறை - சீர்காழி சாலை வழியில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 
12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கதிராமங்கலம் எனுமிடத்திலிருந்து வலப்புறமாக சென்று சுமார் மூன்று கிலோமீட்டர்  தொலைவிலுள்ள கோயிலை அடையலாம்.                  

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் ராமநாதபுரம்.

மூலவர்                    :     ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர்
அம்மன்                   :     சினேகவல்லி, அம்பாயி அம்மை

தல விருட்சம்      :     வில்வம்

புராண பெயர்   :     திருஆடானை

ஊர்                             :     திருவாடானை

மாவட்டம்              :     இ ராமநாதபுரம்

 

ஸ்தல வரலாறு :

வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர். துர்வாச முனிவர் கோபத்துடன், “”வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய். எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்,”என சாபமிட்டார். ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் அஜகஜபுரம் ஆனது. தன் தவறை உணர்ந்தான் வாருணி. இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது. அத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினர். அதன்படி தினமும்.

இறைவனும் இவனது சாபம் நீக்கி, என்ன வரம் வேண்டும் எனக்கேட்க, கலிகாலம் முடியும் வரை இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும் என வரம் பெறுகிறான். அத்துடன் பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கேட்கிறான். இறைவனும் அதற்கிசைந்து இத்தலத்தை “அஜகஜக்ஷத்திரம்’ ஆடு+ஆனை+புரம் என வழங்க அருள்புரிந்தார். இதுவே காலப்போக்கில் “திரு’ எனும் அடைமொழியோடு “திருவாடானை’ என ஆனது.

 

கோயில் சிறப்புகள் :

இத்தலம் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தில் இருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும் திருவாடானை தலபுராணம் கூறுகிறது.
 

இத்தலத்து இறைவனை வணங்குவோருக்கு முக்தி அளிப்பதால் முக்திபுரம் எனவும், சூரியன் வணங்கியதால் ஆதிரத்தினேசுவரம் எனவும், வாருணி சாபம் நீக்கியதால் ஆடானை எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
 

ஆட்டுத் தலையும் யானை உடலுமாகச் சபிக்கப்பெற்ற வருணன் மகன் வாருணி, சாபம் நீங்கப் பெற்ற பதி.
 

நீலமணியை லிங்கமாக ஸ்தாபித்து, சூரியன் பேறு பெற்றான்.
 

சூரியன், தானே மிகுந்த ஒளி உடைவன் என்று மிகவும் கர்வத்துடன் இருந்தான். அதன் காரணமாக, நந்தியால் அவனது ஒளி ஈர்க்கப்பட்டு சூரியன் ஒளி குன்றினான். பிரம்மதேவர் கூறியபடி சூரியன் இத்தலத்துக்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, நீலமணியால் ஆவுடையார் மற்றும் லிங்கம் ஸ்தாபித்து, ரத்தினமயமான லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது ஒளியை மீண்டும் பெற்றான். ஆதியாகிய சூரியன் நீல நிறமுள்ள ரத்தினமயமான இறைவனை வழிபட்டதால், இத்தலத்து இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் பெயர் பெற்றார். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும்போது இறைவன் நீல நிறமாக காட்சி கொடுக்கிறார்.
 

சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில், 130 அடி உயரம் உள்ள 9 நிலைகளை உடைய அழகிய சுதைச் சிற்பங்களோடு கூடிய ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. நீண்ட மதில் சுவர்களும், பெரிய வெளிப் பிராகாரமும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை உடைய மண்டபமும் உடைய இக்கோவில் பாண்டிய நாட்டு தேவார சிவஸ்தலங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
 

இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மாசி மாதத்தில், மூலவர் மற்றும் அம்பாள் மீது சூரிய ஒளி விழும்படி கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
 

இத்தலத்தின் தீர்த்தங்கள் க்ஷீரகுண்டம், வருணதீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் ஆகியவை.
 

இத்தல முருகப்பெருமான் ஓரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு இரு தேவியர் உடனிருக்க மயிலுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இவர் சுமார் 5 அடி உயரத்துடன் கம்பீரமாக உள்ளார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது.
 

பாண்டி நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று. அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு இங்கு வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளனர். அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தல முருகனை, “சிற்றின்பம் கலக்காமல் பேரின்ப நிலையில்’ பாடியுள்ளார்.
 

ஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூன்றுமே சிறப்புடையது. மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு.
 

அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன்’ என்றார். அதன்படி அர்ஜுனனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தெரிந்து கொள்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம்.
 

கோயில் கோபுரம் மிக உயரமானதாகும். 9 நிலை 130 அடி.
 

திருவிழா: 

வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள்,

ஆடிப்பூரத்திருவிழா 15 நாள்,

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், தி

ருவாடானை-623407.

இராமநாதபுரம் மாவட்டம்.

 

அமைவிடம் :

மதுரையில் இருந்து தொண்டி செல்லும் வழியில் 100 கிலோமீட்டர் தொலைவில் திருவாடானை உள்ளது. சிவகங்கையில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்குடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், தேவகோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த திருத்தலத்தை அடைய முடியும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

Friday, December 20, 2024

ராகுகேது தோஷ ஸ்தலம் செவிலிமேடு கைலாசநாதர் ஆலயம். காஞ்சிபுரம்...



*மூலவர் கைலாசநாதர் மேற்குநோக்கி அருள்பாலிப்பதும், உத்தர, தட்சிண சுயம்புலிங்கங்கள் அமைந்துள்ளதும் சிறப்பு.*
*திறக்கும் நேரம்*

*காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி*

*அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்செவிலிமேடு, காஞ்சிபுரம்.*

*போன்*

*+91 94432 53666*

*பிரார்த்தனை*

*ராகுகேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பிதுர்சாபம், களத்திரதோஷம் நீங்க இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.*

*நேர்த்திக்கடன்*

*சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து ராகுகேது தோஷ பரிகார பூஜைகள் நடக்கின்றன.*

*தலபெருமை*

*பெரியவர் திருப்பணி*

*காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கரையில் புதர்மண்டிக்கிடந்தது. அப்பகுதி மக்கள் ஒரு அரசமரத்தின் அடியில் சிவலிங்கம் புதைந்து கிடப்பதைக் கண்டனர். 16 பட்டைகளுடன் அந்த ÷க்ஷõடச லிங்கத்தை காஞ்சிப் பெரியவரின் வழிகாட்டுதலின்படி வழிபட்டனர். ராகுகேது இருவராலும் வழிபாடு செய்யப்பட்ட சுயம்புமூர்த்தி என்றும், சிவலிங்கமேடு என்று அழைக்கப்பட்ட பகுதியே செவிலிமேடு என்றானதாகவும் தெரிய வந்தது. இந்தக் கோயிலை லிங்க குட்டை என்று அழைப்பர்.*

*தல வரலாறு*

*தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அதில் கிடைத்த அமிர்தத்தை விஷ்ணு, மோகினி கோலத்தில் எழுந்தருளி, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பங்கிட்டு வழங்க முன் வந்தார். தேவர்களும், அசுரர்களும் ஆளுக்கொரு வரிசையாக அமர்ந்தனர். ஸ்வர்பானு என்ற அசுரன் அமிர்தம் பெறும் ஆசையில், தன் உருவத்தை தேவரைப் போல மாற்றிக் கொண்டு சூரிய சந்திரர் இருவருக்கும் நடுவில் அமர்ந்து அமிர்தம் பருகி விட்டான். இதனை சூரிய சந்திரர் கண்டுபடித்து விட்டனர். விஷ்ணுவிடம்புகார் கூறினார். அவர் அசுரனின் தலையை வெட்டினார். தலை வேறு,உடல் வேறானாலும் அமிர்தம் பருகி விட்டதால், அவன் உயிர் இழக்கவில்லை. வெட்டுப்பட்ட தலைக்கு கீழே பாம்பு போல அவனுக்கு ஒரு உடல் ஏற்பட்டது. உடலுக்கு மேலே ஐந்துதலை பாம்பு முகம் ஏற்பட்டது. மேல்பகுதி ராகு, கீழ்பகுதி கேது என்று பெயர் பெற்றது. ராகு, கேது இருவரும் காஞ்சிபுரத்தை அடைந்தனர். அங்கு சுயம்பு மூர்த்தியான கைலாசநாதரைக் கண்டு மகிழ்ந்தனர். ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். சிவன் அவர்களை மன்னித்ததுடன் நவக்கிரக பதவியையும் அருளினார்.*

*சிறப்பம்சம்*

*அதிசயத்தின் அடிப்படையில்*

*மூலவர் கைலாசநாதர் மேற்குநோக்கி அருள்பாலிப்பதும், உத்தர, தட்சிண சுயம்புலிங்கங்கள் அமைந்துள்ளதும் சிறப்பு.  

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, December 19, 2024

முருகன் ஆலயத்தில் கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருகின்றனர்...

27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோவில் அமைந்திருக்கிறது.
இக்கோவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
இங்கு சுயம்பு மூர்த்தியாக முருகபெருமான் அருள்பாலிக்கிறார்.
சுயம்பு முருகனை காண்பது அரிது. அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம்.
வில்வாரணி நட்சத்திரகிரியில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவில் தனிச்சிறப்பு பெற்றது.

முருகப்பெருமானின் கருணையால் உருவான இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சிதரும் சிறப்பு இங்கு மட்டுமே காண இயலும்.

27 நட்சத்திரங்களும், சிவ சர்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை.


வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப்பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க கோவில் எனும் பெருமையும் இத்திருதலத்துக்கு உண்டு.

27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோவில் அமைந்திருக்கிறது. எனவேதான், நட்சத்திர கோவில் எனும் சிறப்புடன் பக்தர்கள் அழைக்கின்றனர்.

இக்கோவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. காஞ்சிபுராணம், அருணாச்சல புராணம் வாயிலாக அறியும் இக்கோவில் தொடர்பான ஆன்மிக வரலாறு மிகவும் சுவையானது. வேல் விளையாட்டில் வல்லவனாம் வேலவன், வாழைப்பந்தலில் இருந்து எய்த அம்பு, பருவதமலை மீது பாய்ந்தது. அப்போது அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன.

அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடு த்து மலையில் இருந்து வழிந்தோடியது. உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு சிவப்பு நதி, செய்நதி எனும் பெயரும் உண்டு. சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்ம கத்திதோஷம் பிடித்தது.

எனவே செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி உபதேசித்தார்.

அதேபோல் முருகப்பெருமான், செய்நதியின் வலதுகரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், குருவிமலை, பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு, ஓரந்தவாடி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, மோட்டுப்பாளையம், பழங்கோவில், மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.


இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. முருகப்பெருமான் வழிபட்ட இந்த 14 சிவாலயங்களை யும் இரண்டு சிவாச்சாரியார்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்விருவரும் ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.

ஒரு வருடம் ஆடிக்கிருத்திகைக்கு திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. அதனால், மனம் வருந்தினர். இருவரின் கனவிலும் தோன்றிய முருகன், திருத்தணிக்கு செல்லவில்லை என வருந்தவேண்டாம், நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாக சிவசுப்ரமணிய ஐக்கியத்தில் குடியிருக்கிறேன். சூரியன், சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கின்றன.

எனவே, நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட என்னை வந்து சேருங்கள் என இருவர் கனவிலும் முருகர் அருள்புரிந்தார்.

திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு, நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர். அப்போது, சப்பாத்திகள்ளி புதரில் சுயம்பு வடிவாக முருகப்பெருமான் காட்சியளித்தார்.

முருகனே அருள்காட்சியளித்த நட்சத்திரகிரி கோயிலில், சித்திரை பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகை பெருவிழா, கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், தைக்கிருத்திகை, பங்குனி உத்திர பிரம்மோற்சவம், மாதாந்திர கிருத்திகை விஷேசமானவை.

கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

இவ்வாலயத்தில் கிருத்திகைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்க ளின் நாகதோஷம் புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும்; புதுவாழ்வு பிறக்கும்.

பாலபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும்; நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை!

ஆலய அமைவிடம் :

திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சுக்கிரன் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார் தென்திருப்பேரை.....

தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதன் திருக்கோயில்*
*தென்திருப்பேரை* *தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம்.*

*(108 திவ்ய தேசங்களில் 97 வது திருக்கோவில் ஆகும்)*

தென்னிந்திய
(தமிழக) கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த வைணவஸ்தலம் 1200 ஆண்டுகள் முதல்2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைணவ ஸ்தலம்,திருக்கோவில் முழுக்க முழுக்க எம்பெருமாள் மகாவிஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .


🛕மூலவர் : எம்பெருமாள் மகாவிஷ்ணு
🪷மகர நெடுங்குழைக்காதன் 
🪷(வீற்றிருந்த திருக்கோலம்)


🛕 அம்மன்/ தாயார்:  
மகாலட்சுமி 
🪷குழைக்காத நாச்சியார், 
🪷திருப்பேரை நாச்சியார் (இரு தனித்தனி சன்னதி)

🛕உற்சவர்:
நிகரில் முகில் வண்ணன்
🛕தீர்த்தம்:
🌷சுக்கிர புஷ்கரணி, 
🌷சங்கு தீர்த்தம், 
🌷கூடுபுனல் (தாமிரபரணி) தீர்த்தம்

🛕பாடல் வகை:
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

🛕மங்களாசாசனம் செய்தவர்கள்:
நம்மாழ்வார்

🛕விமானம்:
பத்ர விமானம்

🛕 இடம்: தென்திருப்பேரை


🛕மாவட்டம்:
தூத்துக்குடி

🛕 மாநிலம் : தமிழ்நாடு


🛕 புராண பெயர் :
தென்திருப்பேரை


🛕 ஆழ்வார்களில் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் பாடல் பெற்றது. 


🛕மணவாள மாமுனிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளார்.

🛕வரலாறு : ஸ்ரீமத் நாராயணன் திருமாலை விடுத்து பூமிதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல, தான் அழகு இல்லாத காரணத்தால்  ஸ்ரீமந் நாராயணனே தன்னை வெறுக்கின்றார்.  அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும்  நிறமும் வேண்டும் எனக் கேட்டார்.  


🛕துர்வாசரும் பூமிதேவியை காண வந்த பொழுது திருமாலின்  மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க, கோபத்தில் துர்வாசகர் பூமாதேவியை நீ  இலக்குமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டார்.  எனவே சாப விமோசனம் பெற பூமாதேவி  இத்தலம் வந்து ஓம் நமோ நாராயணன் என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வர பங்குனி பவுர்ணமி  தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் பொழுது இரண்டு மகர குண்டலங்கள் (மீன்  வடிவான காதில் அணியும் ஓர் அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் பிரத்யட்சமாக  குண்டலங்களை திருமாலுக்கு அளித்து மகிழ்ந்தார்.

🛕தேவர்கள் பூ மாரி சொரிய பூமா தேவியின் மேனி அழகானது.  லக்குமியின் உடலுடன் பூமா தேவி தவமிருந்தால் ஸ்ரீபோரை (லக்குமியின் உடலைப் பெற்றவர்) என்று ஆனது.  


🛕இன்று பெருமாள் மகர குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார்.  இதனால் பொருளின் திருநாமம் மகர நெடுங்குழைகாதன்  (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்) வருணன், அசுரர்களிடம் போரிட்டு தன் பாசம்  என்னும் ஆயுதத்தை இழந்து இத்தலம் வந்து தவம் செய்து திரும்பப் பெற்றதால் இத்தலத்தில் மழை  வேண்டி (வருண பகவானை) பிராத்திக்கும் பிராத்தனைகள் இன்று வரை பொய்ப்பதில்லை.   

🛕சுக்கிரனும் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார்.


🛕விதர்ப்ப நாட்டு மன்னன் இங்கு வந்து வழிபட்டதால் நாட்டின் 12 வருட பஞ்சம் நீங்கி நாடு  செழித்ததாக வரலாறு கூறுகிறது.

🛕பிரம்மனும் ஈசானய ருத்தரருக்கும் முன்பாக குழைக்காத  நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதம் வீற்றிருந்த பரமபத திருக்கோலத்தில் பெருமாள் சேவை  சாதிக்கின்றார்.

🛕வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும்  குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால்  கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது. 

🛕வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக் குழாவிளையாட்டு ஒலியும் அறாத்திருப்பேரையில்  சேர்வன் நானே.  என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதையே காட்டுவதாக கூறப்படுகின்றது.   


🪷நம்மாழ்வார் காலத்திற்கும் முன்னே அமையப் பெற்றது.  

✡️இக்கோவில் பின் பத்தாம் நூற்றாண்டின்  மத்தியில் கொடி மரமும், மண்டபமும், பின் வெளி மண்டபம், தேரும் செய்யப்பட்டுள்ளதாக  கல்வெட்டுகள் கூறுகின்றன. 

✡️சுந்தரபாண்டியனுக்கு குழந்தை பேறு பெற வேண்டி அவனால் சோழ  நாட்டில் இருந்து இவ்வூருக்கு அழைத்து வரப்பட்டு தினசரி பெருமாளை பூஜை செய்வதற்காக  குடியமர்த்தி பொன்னும் பொருளும் கொடுக்கப்பட்ட ஜெய்முனி சாமவேத தலவகார நூற்றெண்மர்  வழி வந்த அவ்வூர் அந்தணர்கள் பெருமாளை தங்களுள் ஒருவராகவே கருதி கைங்கரியங்களை  செய்து வருகின்றனர்.


🛕சுந்தர பாண்டியனுக்காக 108 நபர் இருந்தனர்.  

🛕பெருமாளே காணாமல் போன நபர் வடிவில் அரசன்  முன் தோன்றினார் எனவும் அதனால் பெருமாள் எங்களில் ஒருவர் எனவும் இவ்வூர் மக்கள்  கூறுகின்றனர்.


🛕இங்கு பங்குனி ப்ரமோஸ்தலத்தின் 5ம் திருநாள் இரவு பெருமாள் கருட சேவையில்  பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு ஏழுகின்ற சமயத்தில் பெருமாளை சேவிக்கும்  நாத்திகனும் ஆத்திகனும் ஆவான். 

🛕வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத அப்பேற்பட்ட காட்சி அது.  ஸ்ரீ ரங்கநாதனின் அழகை முகில்வண்ணன் (அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் பின்வரும் பாடலில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று ஸ்ரீமகர நெடுங்குழைக்காதனை பாடியுள்ளார்.


 🛕“கூடுபுனல் துறையும் (தாமிரபரணி கரை) குழைக்காதனை திருமாலையும் கிடைக்க கொடுத்து  வைத்திருக்க வேண்டும்” என்பது இவ்வூரில் வழக்கில் உள்ள ஒரு கூற்று. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

திருவொற்றியூர் படம்பக்கநாதர்... அபிஷேகம் கிடையாது புற்றினால் ஆன சிவலிங்கம்....



சென்னை #திருவொற்றியூர் கோயில் #மூலவர் #படம்பக்கநாதர்... 
இவருக்கு அபிஷேகம் கிடையாது இது புற்றினால் ஆன சிவலிங்கம் சுயம்பு மூர்த்தி.
வருடத்திற்க்கு மூன்று நாட்கள் மட்டும் கவசம் இல்லாமல் காட்சி தருவார். இந்த மூன்று நாட்கள் புனுகு ஜவ்வாது மூலவருக்கு சாற்றி பிறகு கவசம் அணிவிப்பார்கள்... 
காணக்கிடைக்காத அற்புத காட்சி...தரிசியுங்கள்....

கார்த்திகை பௌர்ணமியில் விஸ்வரூப தரிசனம் தரும் 
திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் :

தொண்டை நாட்டின் 32 தேவாரத் தலங்களுள் ஒன்று சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோவில். இக்கோவிலின் மூலவர் ஆதிபுரீசுவரர். இறைவியின் திருநாமம் வடிவுடை அம்மன். மூலவரான சுயம்பு ஆதிபுரீசுவரர் புற்று வடிவில் எழுந்தருளி, கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். ஆவுடையாரின் மீது வழக்கமான லிங்கத் திருமேனிக்கு பதிலாக, படம் எடுத்த நாக வடிவில் இறைவன் காட்சி தருவது அபூர்வக் கோலமாகும். தன்னை வழிபட்ட வாசுகி பாம்பை, தன்னுள் ஐக்கியப் படுத்தியதால், இத்தல இறைவன் இப்படி காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.
இவர் கவசம் சார்த்தப்பட்டு நாக வடிவில், சதுர வடிவ ஆவுடையாரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 

வாசுகி என்னும் பாம்பு நாகலோகத்தில் அரசராக இருந்து வந்தது. தன் மகனுக்கு பட்டம் சூட்டியபின், உபமன்னியு முனிவரை சந்தித்து மோக்ஷம் பெற வழி என்ன என்று கேட்டது. அவர் திருவொற்றியூர் சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி அங்கே எழுந்தருளிய சிவனை துதிக்க சொன்னார். வாசுகியும் அவ்வாறே செய்ய, மனமகிழ்ந்த ஈசன் புற்று வடிவில் தோன்றி, அந்த வாசுகிப் பாம்பைத் தன் திருக்கரம் கொண்டு பற்றியிழுத்து தம்முடைய திருவடியில் பொருந்தும்படிச் செய்தார். அதுவும் சிவபெருமானிடத்தில் ஐயக்கியமானது. பாம்புக்கு படம் என்றும் ஒரு பெயர் உண்டு. பாம்பு சிவன் அருகில் ஒதுங்கியதால் படம் பக்க நாதர் என்று ஈசன் அழைக்கப்பட்டார். அந்த புற்றில் இருந்து சுயம்புவாக ஒரு லிங்கமும் தோன்றியது. அதனால் புற்றீஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

புற்று மண்ணால் சுயம்பு லிங்கமாக உருவானதால், லிங்கத்திருமேனி ஆண்டு முழுவதும் லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சாத்தி, கவசத்தால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் நிகழும் பௌர்ணமி தினத்தில் மட்டுமே  கவசம் அகற்றப்பட்டு, பௌர்ணமியன்று மாலையில். ஆதிபுரீசுவரருக்கு, புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆதிபுரீசுவரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாற்றப்படும். சிவபெருமானை வழிபட பிரம்மன், விஷ்ணு, வாசுகி மூவரும் கடுந்தவம் இருந்து வரம் பெற்றனர். அதன் பயனால் ஆண்டுதோறும், மூவரும் கார்த்திகை பௌர்ணமி தொடங்கி மூன்று நாட்கள் இத்தல இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, December 18, 2024

அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்


அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
*ஊர்:*
அவனியாபுரம், மதுரை

*மாவட்டம்:*
மதுரை

*மூலவர்:*
கல்யாண சுந்தரேஸ்வரர்

*தாயார்:*
பாலமீனாம்பிகை

*தல விருட்சம்:*
வில்வ மரம்

*தீர்த்தம்:*
சூர்ய தீர்த்தம்

*தொன்மை:*
1000 ஆண்டுகளுக்கு முன்

*தல வரலாறு:*
இக்கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர் (செவ்வந்தீஸ்வரர் ) மூலவராகவும், பாலாம்பிகை தயாராகவும் அருள் பாலிக்கின்றனர். இத்தல விருட்சம் வில்வம் ஆகும். மலையத்துவச பாண்டியனின் மகளாக அவதரித்த மீனாட்சி தனது குழந்தைப் பருவத்தில் பிள்ளையார் பாளையம் என்று அழைக்கப்பட்ட இன்றைய அவனியாபுரத்தில் தோழியருடன் விளையாடி மகிழ்ந்தாள். தனது பருவ வயதில், சுந்தரேஸ்வரரை மணம் முடித்துச் செல்லும் ‌போது தோழியர்கள் கேட்டுக் ‌கொண்டதின் பேரில், மணக்கோலத்தில் கணவர் கல்யாண சுந்தரருடன் இத்தலத்தில் காட்சியளித்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

குறை ஏதும் உண்டா என்று பட்டர் கேட்பார்.. திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர்....

மார்கழி மாத வைணவத் திருத்தலங்கள் வரிசையில் 
இன்று 
108 வைணவத் திவ்ய தேசங்களில் பாண்டிய நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான, 
12 ஆழ்வார்களில் திருமாலுக்கு அதிக பாசுரங்கள் பாடிய திருமங்கையாழ்வார் கடைசியாக பாசுரம் பாடி முக்தி பெற்ற தலமான, 
திருமால் ஐந்து நிலைகளில் காட்சி தரும் தலமான நம்பியாற்றங்கரையில் அமைந்துள்ள #திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கலைப் பொக்கிஷமாக விளங்கும் 
#திருக்குறுங்குடி (வாமன க்ஷேத்திரம், குரங்கச் க்ஷேத்திரம்) 
#அழகிய_நம்பிராயர் (#வைஷ்ணவ_நம்பி)
#மலைமேல்_நின்ற_நம்பி (#திருமலை_நம்பி)
#குறுங்குடிவல்லி_நாச்சியார்
திருக்கோயில் வரலாறு:

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் என்றும் தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார். 

இங்கு நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார். 

*மூலவர்:வைஷ்ணவ நம்பி,
நின்ற நம்பி, குறுங்குடி நம்பி, இருந்த நம்பி, வடுக நம்பி, 
திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி
நின்ற திருக்கோலம்

*தாயார்:குறுங்குடிவல்லி நாச்சியார்

*தீர்த்தம்:திருப்பாற்கடல், பஞ்சதுறை

*புராண பெயர்:திருக்குறுங்குடி

*ஊர்:திருக்குறுங்குடி

*மாவட்டம்:திருநெல்வேலி
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

மங்களாசாசனம்

திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்

"கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம் புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய் திரண்டு தோளி ரணியன் சினங்கொளாக மொன்றையும் இரண்டு கூறு செய்துகந்த சிங்க மென்ப துண்ணையே"

-திருமழிசையாழ்வார்

ராமாயணக் காலத்தில் ராமரும், லட்சுமணரும், ராவணனுடன் போர் புரிவதற்காக வானரப் படைகளுடன் தங்கிய இடம் இந்த மகேந்திரகிரி மலை என்று கூறப்படுகிறது.

இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராகப் பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
திருவாலித் திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்று பரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்).

ஸ்ரீ பாஷ்யகாரராம் இராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத் தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு இராமானுஜர் இட்ட பெயரே வைஷ்ணவ நம்பி என்பதாகும்.

இராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடமிருந்து இராமானுஜரை மீட்டு இத்தலத்திற்குக் கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்பெறுகிறது.. 

ஸ்ரீ இராமானுஜர் பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து வரும்போது, திருக்குறுங்குடி வந்தார். அவரிடம் நம்பி, அவரை ஆசாரியனாகக் கொண்டு, தான் சிஷ்யனாக இருக்க விருப்பம் தெரிவித்து, அவருக்கு திவ்ய ஆசனம் அளித்தார். இராமானுஜரும், நம்பிக்கு த்வய மந்திரோபதேசம் செய்து, “ஸ்ரீ வைஷ்ணவ நம்பி” என்று தாஸ்ய நாமம் கொடுத்தார். திருவட்டாறு, திருவெண்பரிசாரம் போன்ற திவ்ய தேசங்களைக் கடந்து, திருவனந்தபுரம் சென்ற இராமானுஜரை, அங்குள்ள நம்பூதிரிகளின் வேண்டுகோளுக்கு இரங்கிப், பெருமாள் இராமானுஜரைத் திருக்குறுங்குடியில் விட்டுவிடுமாறு தனது கருடனைப் பணித்தார். கருடனும், திருக்குறுங்குடியில் உள்ள திருவட்டப் பாறையில் விட்டுவிட்டார்.

காலையில் கண்விழித்த இராமானுஜர், திருக்குறுங்குடியில் இருந்ததைக் கண்டு வியந்து, அனுஷ்டானம் முடித்த பின், திருமணக் காப்பிடத் தனது சிஷ்யனான வடுக நம்பியை அழைத்தார். நம்பி, வடுக நம்பியாக வேடம் பூண, இராமானுஜரும் அவருக்குத் திருமண் காப்பிட்டார். நம்பியைச் சேவிக்க சன்னதிக்கு சென்ற இராமானுஜர், வடுக நம்பியைத் தன்னருகே காணாமல் தேடிய போது, தம்மால் இடப்பட்ட திருமண் காப்பு, நம்பியின் திருநெற்றியில் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்குக் கீழே பூமியைத் தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தைத் தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களைக் கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாகச் செய்தி உலவுகிறது.

பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘ பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்..

“வெள்ளிறா” என்னும் சாதி மீனை தாய் கொக்கு ஊட்ட, கொக்கின் குஞ்சு உண்ணும் திருக்குறுங்குடி என்னும் இத்தலமானது. எலும்பு மாலையும், புலியின் தோலையும் உடையவரான சிவபெருமானை அருகே இருக்க இடம் கொடுத்து எழுந்தருளியிருக்கின்ற சீலகுணமுடையவரான
பெருமாளுடைய திவ்விய தேசமமாம்).

கோவில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது, இங்குள்ள சிவனுக்குப் பூஜை நடந்து விட்டதா என்பதை அறிய, சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பருக்குக் குறை ஏதும் உண்டா என்று பட்டர் கேட்பார் அதற்குக் குறை ஒன்றும் இல்லை என பட்டர்கள் பதில் அளிப்பார்கள்.

இது இன்றும் நடைமுறையில் உள்ளது. 

மேலும், இக் கோவிலுள் நடராஜர், சிவகாமி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், பிள்ளையார் ஆகிய எல்லோரும் செப்புச்சிலை வடிவில் எழுந்தருளியிருக்கின்றனர். மகேந்திரகிரிநாதருக்குப் பக்கத்திலேயே காலபைரவருக்குத் தனிச் சந்நிதி இருக்கிறது.

திருவிழா:

சித்திரை வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை தெப்ப உற்சவம். பங்குனி பிரம்மோற்சவம்.

தல சிறப்பு:

தாயார் ”குறுங்குடி வல்லி நாச்சியார்” என்ற பெயரில் தனியே சன்னதி  கொண்டிருக்கிறார். மேலும் குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இங்கே வந்து வழிபாடு செய்ததால் இத்தலத்திற்கு குரங்கச் க்ஷேத்திரம் என்ற பெயரும்  உண்டு.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 79 வது திவ்ய தேசம்.இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பது தனிச்சிறப்பு.

மூலவர் நம்பிராயரின் வலது புறத்தில் அருகில் நின்றான் என்ற பெயரில் சிவபெருமான் சன்னதி அமைந்திருப்பது இத்தலத்தின் மிகச்சிறப்பம்சமாகும். நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் இக்கோயிலில் காட்சி தருகிறார்.

 இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் முக்தியடைந்துள்ளார். ஸ்ரீ பாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுஉபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்.

ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரி களிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..

பொது தகவல்:

இங்கு மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் பஞ்சகேத விமானம்.

#தலபெருமை:

நம்பாடுவானுக்காக நகர்ந்த கொடிமரம்: 

திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்த தாழ்ந்த வகுப்பை சேர்ந்தவர் நம்பாடுவான். கோயில் மூலவரான அழகிய நம்பியை பார்க்கமால் போனதற்காக மிகவும் வருத்தப்பட்டார். அப்போது பெருமாள் கொடிமரத்தை விலகி இருக்க சொல்லி நம்பாடுவானுக்கு தாமே தரிசனம் தந்தார். இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பதை நாம் இப்போதும் காணலாம்.

#சைவ வைணவ ஒற்றுமை: 

சைவ கோயில்களில் பெருமாள் எழுந்தருளி இருப்பதும், வைணவ கோயில்களில் சிவன் எழுந்தருளி இருப்பதும் சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும். அதே போல் வைணவ கோயிலான இங்கு கோயிலின் உள்ளேயே சிவன் கோயிலும், பைரவர் சன்னதியும் அமைந்திருப்பது மிகச்சிறந்த அம்சமாகும்.

கோயில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது, இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா? என்பதை அறிய, சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா? என்று பட்டர் கேட்பார். அதற்கு “குறை ஒன்றும் இல்லை’ என பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இது இன்றும் நடைமுறையில் உள்ளது.நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்,திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார் என நான்கு ஆழ்வார்களால்
மங்களாசாசனம் செய்யப்பட்டது. நம்மாழ்வாராக அவதரித்ததும் இந்த அழகிய நம்பி தான். திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்க பெருமாளிடம் மோட்சம் கேட்டபோது, திருக்குறுங்குடி போ அங்கு மோட்சம் கிடைக்கும் என்றார். திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இத்தலம் தான். நின்ற, அமர்ந்த,நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் காட்சி தருகிறார். குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு குரங்கச் க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு.

இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட அந்த தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.

பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘ பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்..

பெயர்க்காரணம்: 

நம்பியாற்றின் கரையில் அமைந்திருக்கும் இத்தலத்தின் தீர்த்தம் திருப்பாற்கடல். வராஹ அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராஹ ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் “குறுங்குடி’ ஆனது. அதேபோல் திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது தனது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாக புராணம் கூறுகிறது.

#தல_வரலாறு:

ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்க, இசையால் இறைவனை அடையலாம் என்கிறார். இதன் பலனாகவே ஒரு முறை பின்தங்கியவகுப்பை சேர்ந்த மனிதனுக்கும், பூதம் ஒன்றிற்கும் பிரச்னை ஏற்படுகிறது. பிரச்னை முற்றி மனிதனை சாப்பிட பூதம் விரும்புகிறது. அதற்கு அந்த மனிதன் பூதத்திடம், இன்று ஏகாதசி. எனவே கைசிகம் என்ற விருத்தத்தில் பகவானை பாடிவிட்டு வருகிறேன். அதன்பின் நீ என்னை உண்ணலாம் என்று கூறுகிறான். ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் பாடியதால் அந்த மனிதனுக்கும், பாடலை கேட்டதால் பூதத்திற்கும் மோட்சம் கிடைத்தது.

மகேந்திர கிரி அடிவாரத்தில் பாணர் குடியில் பிறந்த நம்பாடுவான் என்பவர் இத்தலத்து பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டு கைசிகப் பண்ணில் அவரை பாடி வணங்கி வந்தார். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று விரதம் இருப்பது அவர் வழக்கம்.

ஒரு சமயம் அவர் விரதம் இருக்கும் அன்று அவர் பாடியவண்ணம் காட்டுப் பாதையில் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது பிரம்ம ராட்சசன் ஒருவன் அவரை உண்ணப்போவதாக அவரிடம் தெரிவித்தான். நம்பாடுவானும் தான் விரதத்தில் இருப்பதால் விரதம் முடிந்ததும் அவனுக்கு உணவாக தன்னைத் தருகிறேன் என்றார். ராட்சசன் இவரை நம்ப மறுத்ததால், தான் திருமால் பக்தன் என்றும் பொய் சொல்ல மாட்டேன் என்றும் அவனிடம் கூறுகிறார். அவனும் அதற்கு உடன்படுகிறான்.

பிரம்ம ராட்சசனுக்கு கொடுத்த வாக்குப்படி தனது இறுதி யாத்திரையை எண்ணி பெருமாளைப் பார்க்க நினைத்தார். ஆனால் உள்ளே செல்ல முடியாததால் (பாணர் இனத்தவர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை) வருத்த மிகுதியால் கோயிலுக்கு வெளியே நின்று ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கிறார். திடீரென்று துவஜஸ்தம்பம் விலகி எம்பெருமான் தெரிய சந்தோஷமாக நம்பாடுவான் பெருமாளை தரிசனம் செய்தார்.

நம்பாடுவனுக்காக விலகிய நகர்ந்த கொடிமரம் இன்னமும் அப்படியே விலகி இருப்பதை இங்கு காணலாம். தரிசனம் முடித்து நம்பாடுவான் பிரம்ம ராட்சசனைக் காணச் செல்லும்போது, காட்டு வழியில் திருக்குறுங்குடி பெருமாள் வயது முதிர்ந்த அந்தணராக வேடமிட்டு அவ்வழியே செல்லவேண்டாம் என்றும் அங்கு பிரம்ம ராட்சசன் இருக்கிறான் என்றும் அங்கு சென்றால் உங்களை அவன் உண்டுவிடுவான் என்றும் அவரிடம் தெரிவிக்கிறார்.

இருப்பினும், “பரவாயில்லை. நான் இத்தல பெருமான் மீது சத்தியம் செய்திருக்கிறேன். நான் சத்தியம் தவறமாட்டேன்” என்று நம்பாடுவான் அந்த முதியவரிடம் தெரிவிக்கிறார். அதைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் தன் சுயரூபம் காட்டி அவருக்கு அருள்பாலித்தார்.

பிறகு பிரம்ம ராட்சசனிடம் சென்று தன்னை உணவாக உட்கொள்ளும்படி கூற, அவன் தனக்குப் பசி இல்லை என்று கூறி இவரது விரத புண்ணியத்தில் கால் பாகத்தையாவது கொடுங்கள் என்று சரண் அடைந்தான். ஏன் இந்த பிரம்ம ராட்சச கோலம் என்று நம்பாடுவான் கேட்க அதற்கு அவன், “முற்பிறவியில் யோகஷர்மா என்ற அந்தணராக இருந்தபோது யாகம் செய்வதை இழிவாகப் பேசியதால் இவ்வாறு ஆகிவிட்டேன். உண்மையான பக்தர்களின் தரிசனத்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்பதால் இப்போது நீங்கள் எனக்கு சாபவிமோசனம் கொடுக்க வேண்டும்” என்று கூறினான்.

நம்பாடுவானும் மிக்க மகிழ்ச்சியுடன் தான் கைசிகம் என்ற பண் பாடிப் பெற்ற பலத்தில் பாதியை அவனுக்கு தருகிறேன் என்று கூறியதும் அவனுக்கு சாப விமோசனம் கிடைத்தது. இந்த வரலாற்றை வராக மூர்த்தியே தன் மடியில் இருக்கும் பிராட்டியிடம் சொல்லியதாக கைசிக புராணத்தில் கூறப்படுகிறது.

இந்தக் கோயில் சுற்றளவு மிகப்பெரியது. இது கோயிலின் நுழைவு வாயில். சுவர்கள் எல்லாம் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய கல்சிலைகளால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த அழகிய நம்பிராயர் கோயில், தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் 1,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் 108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று . மகேந்திரகிரியின் அடிவாரத்தில் அமைந்த இந்தக் கோவிலை ‘திருமங்கை ஆழ்வார்’ கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

வைணவ கோயிலான இங்கு கோயிலின் உள்ளேயே சிவன் கோயிலும், பைரவர் சந்நிதியும் அமைந்திருப்பது மிகச்சிறந்த அம்சமாகும். கோயில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடைபெறும்போது, இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்தது என்பதை அறிந்து கொள்வர். நம்மாழ்வாராக அவதரித்தது அழகிய நம்பிதான். திருமங்கையாழ்வார் நம்பெருமாளிடம் மோட்சம் கேட்க, அவரை திருக்குறுங்குடிக்கு செல்லுமாறு பணித்தார் நம்பெருமாள். திருமங்கையாழ்வார் நிறைவாக மங்களாசாசனம் செய்தது இத்தலத்தில் தான்.

நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் அருள்பாலிக்கிறார். குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்துக்கு குரங்கச் க்ஷேத்ரம் என்ற பெயர் உண்டு. வராக அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராக ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் ‘குறுங்குடி’ ஆனது. அதேபோல் திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்தபோது தனது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாக புராணம் கூறுகிறது.

காலபைரவர் மூச்சு விடும் அதிசயம்:

சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இக்கோவிலில் சிவபிரான் 'மகேந்திரகிரி நாதர்' என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறார்.

இங்கே பெருமாள் சன்னதியில் காலபைரவர் அதிசயிக்கதக்க வகையில் இருக்கிறார். உள் பிரகாரத்தை சுற்றி வரும்போது பிரமாண்டமான தோற்றத்தில் இருக்கும் இவரே, இக்கோவிலின் காவல் தெய்வமாக இருக்கிறார்.

காலபைரவர் சன்னதியில், கருவறையின் மேற்பக்கம் ஒரு விளக்கும், கீழ்பகுதியில் ஒரு விளக்கும் ஏற்றப்பட்டிருக்கும். இவைத் தவிர பக்கவாட்டில் இரண்டு சரவிளக்குகளும் இருக்கும். இந்த நான்கு தீபங்களும் எரியும்போது தெரியும் பிரகாசமான ஒளியில் பைரவர் ரூபம் அழகாகக் காட்சியளிக்கும். இந்தக் கருவறைக்குள் எந்த திசையிலிருந்தும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் மேற்பகுதியில் உள்ள விளக்கின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டால் அசையும் தீபம் போல ஆடிக் கொண்டேயிருக்கும். கீழே உள்ள விளக்கின் தீப ஒளி எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கும்.

மேல் இருக்கும் விளக்கு மட்டும் வெளிபக்கமாகவும் , உள்பக்கமாகவும் அசைவது பைரவர் விடும் மூச்சு காற்று என சொல்லபடுகிறது. அதாவது பைரவர் மூச்சை இழுக்கும்போது தீபம் உள்பக்கமாகவும், மூச்சு வெளிவிடும்போது தீபம் வெளிப்பக்கமாகவும் அசைகிறது. மற்ற தீபங்கள் எல்லாம் எந்த சலனமும் இல்லாமல் அசையாமல் இருக்கும்போது அவருடைய முகத்துக்கு பக்கத்தில் இருக்கும் விளக்கு மட்டும் உள்பக்கம் வெளிபக்கமாக அசைவதை பகதர்கள் நேரில் கண்கூடாகப் பார்க்கலாம்.

குழந்தைப்பேறு வேண்டி இங்கே வழிபாடு நடத்துபவர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கிறது. இவருக்கு தயிரன்னமும், வடைமாலையும், பூசட்டையும் படைக்கப்படுகிறது.

#சிவன் சன்னதி இடிப்பு சர்ச்சை:

இந்தக் கோயிலில் நின்ற, இருந்த, கிடந்த என மூன்று கோலங்களில் பெருமாள் சந்திதிகள் உள்ளன. அந்த கோலத்தில் உள்ள பெருமாள்களை நின்ற நம்பி, வீற்றிருந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி என்று அழைக்கின்றனர். இதில் வீற்றிருந்த நம்பி சந்திதிக்கு எதிரில் பக்கம் நின்ற பிரான் அலது மகேந்திரகிரிநாதர் என்ற பெயரில் சிவன் தனி கொண்டுள்ளார்.
இங்குள்ள சிவன் சன்னதி சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக இருந்தது. ஆனால் அந்த சந்திதி 2004 சூன் மாதம் இடிக்கப்பட்டு அதில் இருந்த இலிங்கம் பெயர்த்து எடுத்து வெளியே வைக்கபட்டது. சிவன் சந்நிதி இடிக்கபட்டதை எதிர்த்து சிவனடியார்களால் நாங்குநேரி முனிசிப் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2006 ஆண்டு சிவன் சந்நிதி அகற்றப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது. இதை எதிரத்து வள்ளியூர் நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகத்தால் மேல் முறையீடு செய்யப்பட்டது. வள்ளியூர் நீதின்றம் நாங்குநேரி நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்தது. இதனையடுத்து சிவனடியார்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தனர். விசாரணைக்குப் பின்னர் சிவன் சன்னதியை அகற்றியது செல்லாது என்றும் மூன்று மாதங்களுக்குள் மீன்டும் சிவன் சன்நதியை அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று உயர் நீதிமன்றக் கிளை 2010 இல் உத்தரவு இட்டது.
வழக்கின் போது இந்து சமய அற நிலையத்துறை முன்னுக்குப் பின் முரணாக நீதிமன்றத்தில் நடந்துகொண்டது சர்ச்சையை உருவாக்கியது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இங்கு மற்ற கோயில்களைப் போல் இல்லாமல் கொடிமரம் விலகி இருப்பது தனிச்சிறப்பு.

#திருமலை நம்பி கோயில் சிறப்பு வழிபாடு:

இந்த கோவிலுக்கு வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் சென்று வழிபடுவார்கள். தமிழ் மாத கடைசி, முதல் சனிக்கிழமைகளில் கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

*பங்குனி பிரம்மோஸ்வம்:

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திவ்ய தேசத்தில் ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றாலும் பங்குனியில் வரும் பிரம்மோஸ்வம் சிறப்பாக 11 தினங்கள் கொண்டாடப்படுகின்றது.

*திருவிழாக்கள்: 

சித்திரை வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை தெப்ப உற்சவம், பங்குனி பிரம்மோற்சவம் போன்ற நாட்களில் சிறப்பு ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடைபெறும். மோட்சம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பணகுடியிலிருந்து 15 கிமீ தொலைவிலும், வள்ளியூரிலிருந்து 12 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, December 17, 2024

சிறப்புலி நாயனார் அவதரித்தத் தலம். தான்தோன்றியப்பர் திருக்கோயில்,ஆக்கூர்...

அருள்மிகு தான்தோன்றியப்பர் திருக்கோயில்,
ஆக்கூர் அஞ்சல்,
தரங்கம்பாடி தாலுக்கா,
மயிலாடுதுறை மாவட்டம்,
தமிழ்நாடு - 609301.           
*மூலவர்:
தான்தோன்றியப்பர்.

*தாயார்:
வாள்நெடுங்கண்ணி.

*தல விருட்சம்:
சரக்கொன்றை

*தீர்த்தம்:
குமுத தீர்த்தம்             

*சம்பந்தர் பாடிய தேவாரம் இரண்டாம் திருமுறையிலும், கபிலதேவ நாயனார் பாடிய பாடல் பதினொராம் திருமுறையிலும் உள்ளது.             

*இது கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில். 
*இது காலசம்ஹார மூர்த்தி உருவான தலம். 
மூலவர் தான்தோன்றியப்பர் சுயம்புநாதராக  சிரசு பிளந்த நிலையில் உள்ளார். இந்தப் பிளவு இறைவன் திருக்கடையூரில் எமனை சம்ஹாரம் செய்யத்தோன்றிய போது ஏற்பட்டதாக வழங்கப்படுகிறது.                                    
*இக்கோயிலில் சிவன் மற்றும் பார்வதி தேவியின் சந்நிதிகள் கிழக்கு நோக்கி உள்ளன. இறைவனுக்கு வலதுபுறம் இறைவி சந்நிதி உள்ளதாலும், அகத்தியருக்கு திருமணக்காட்சி அளித்த தலம் என்பதாலும்        இத்தலம் திருமண வரம் அருளும் தலமாக விளங்குகிறது. மேலும் இது மகப்பேறு அளிக்கும் பரிகாரத்தலமாகும்.       

*இது சிறப்புலி நாயனார் அவதரித்தத் தலம். 
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான, சிறப்புலி நாயனார் சிவனடியார்களை வணங்கி அவர்களுக்கு அறுசுவை உணவு படைப்பது வழக்கம். 
ஒரு சமயம் 1000 அடியார்களுக்கு உணவளிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 999 அடியார்கள் வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு அடியார் வரவேண்டுமே என மனம் கலங்கி, இறைவனிடம் முறையிட்டார். அப்போது இறைவன் தானே வயதான ஒரு சிவனடியாராக வந்து சிறப்புலி நாயனாரின் வேண்டுதலைப் பூர்த்தி செய்தார். இறைவன் அந்த ஆயிரம் அடியார்களில் ஒருவராகக் காட்சி தந்ததால் ஆயிரத்துள் ஒருவர் என்றும் வழங்கப்படுகிறார்.                           

*இங்கு சரஸ்வதி தேவிக்கு தனி சன்னதி உள்ளது. 

*அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இக்கோயிலின் முருகப் பெருமானைப் போற்றிப் பாடியுள்ளார். 

*இக்கோயிலில் கல்வெட்டுகள் உள்ளன.

*ஆக்கூர் என்னும் இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி வழித்தடத்தில் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

பைரவ நாதஸ்வாமி கோயில் கடன் தொல்லை நீங்க அஷ்டமி வழிபாடு..



*சிவன் கோயிலில் பைரவரே மூலவர்*
திருச்சி பெரிய கடை வீதியில் உள்ளது பைரவ நாதஸ்வாமி கோயில். இங்கு பைரவர்தான் மூலவர். கடன் தொல்லை நீங்க அஷ்டமி தேய்பிறையில் இவரை பூஜை செய்கிறார்கள். சாபம், பாவம், கடன் தொல்லை, நோய் ஆகிய அனைத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கும் கோயில் இது! கோயிலின் இடது ‘மூலை’யில் சிவன் தனி சந்நிதானத்தில் இருக்கிறார்!

மும்மத சங்கமம்

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகில் தர்ம ஸ்தலா என்ற ஊரில் மஞ்சுநாத சுவாமி என்ற சிவன் ஆலயம் உள்ளது. இக்கோயிலை சமண மதத்தினர் நிர்வகிக்கின்றனர். பூஜை செய்யும் அர்ச்சகர்கள், வைணவர்கள். இறைவனுக்கு துளசி இலையால்தான் பூஜை செய்கின்றனர்!
குடும்பம் ஒரு கோயில்

சிவாலயங்களில் பொதுவாக சிவபெருமான் கருவறையில் தனியாக லிங்க வடிவில் இருப்பார். சில ஆலயங்களில் பார்வதியுடன் இருப்பார். ஒரே கருவறையில் சிவன், தனது மனைவி, மக்களுடன் இருக்கும் ஒரு கோயில் உள்ளது.

கோவையிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் ராயர் தோட்டம் ஸ்ரீசக்தி பஞ்சாட்சரி நாகமாதா கோயிலின் மூலஸ்தானத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகனை கருவறையில் ஒருசேர தரிசிக்கலாம்.

லிங்க நடராஜர்

திருவாரூர் அருகிலுள்ள விளமல் பதஞ்சலீஸ்வரர் கோயிலில், பதஞ்சலி, வியாக்ரபுரீஸ்வர முனிவர்களின் வேண்டுதலுக்காக சிவன் லிங்க வடிவிலும் நடன கோலத்திலும் காட்சி தருவதாக ஐதீகம். எனவே, இங்கு கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறத்தில், நடராஜரின் உற்சவத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு முன் சிவபாதம் இருக்கிறது. ஆனித் திருமஞ்சனத்தின் போது நடராஜருக்கு மட்டுமல்லாமல் இந்தப் பாதத்திற்கும் விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

பாறைக்குள் நீரூற்று

மதுரை மாவட்டம் பேறையூரில் உள்ள மொட்டைமலையின் உச்சியில் மல்லிகார்ஜுனர் என்ற சிவன் கோயில் உள்ளது. மலை அடிவாரத்தில் மேலப்பரங்கிரி சுப்பிரமணியசாமி கோயில் இருக்கிறது. இந்தக் கோயில் அருகே ஒரு அதிசய நீரூற்று உள்ளது. 100 அடி உயரமுள்ள, கருங்கல் மலையிலிருந்து இந்த நீரூற்றுக்கு எப்படி தண்ணீர் வருகிறது என்பது இதுவரை கண்டு பிடிக்க முடியாத அதிசயமாக இருக்கிறது. இந்த சுனைக்கு வரும் நீர் மருத்துவ குணம் நிறைந்தது என்பதால் மக்கள் காத்திருந்து அதை வாங்கிச் செல்கிறார்கள்.

சிலந்திக்கும் அருளிய சிவன்

வேடன் கண்ணப்பனை கண்ணப்ப நாயனாராக ஈசன் மாற்றிய தலம் இது. முற்பிறவி சாபத்தால் சிலந்தியாய் மாறிய ஊர்ணநாபன் இந்த ஈசனின் மேல் வெயில் படாமலிருக்க வலை பின்னி, குடை பிடித்தான். அந்த சிலந்தியின் பெயர் ஸ்ரீ. அதே போல காளன் எனும் நாகத்திற்கும் அத்தி எனும் யானைக்கும் இத்தலத்தில் ஈசன் அருள்புரிந்ததால் இத்தலம் ஸ்ரீகாளஹஸ்தி என அழைக்கப் படுகிறது. கேது தோஷ பரிகாரத்தலமான இத்தலத்தில் காளஹஸ்தீஸ்வரர் தன் தேவி ஞானப்ரசுன்னாம்பிகையுடன் அருள்கிறார்.

சிவன் கோயிலில் சடாரி

பொதுவாக பெருமாள் கோயில்களில் மட்டுமே சடாரி சார்த்தப்படும். ஆனால் கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள திருநல்லூர் சிவன் கோயிலில் தரிசனம் செய்ய வருகின்றவர்களுக்கு, சிவபிரானின் திருவடி பதிக்கப் பெற்ற சடாரியை சாத்தும் வழக்கம் நிலவுகிறது. திருநாவுக்கரசர் நல்லூருக்கு வந்து சிவபெருமானை வழிபட்டபோது சிவனின் திருவடி சூட்டப்பெற்றார். இந்த அரிய நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகவே இன்றும் சடாரி சார்த்தும் வழக்கம் உள்ளது.

விஸ்வரூப சிவன்

பு துக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேருந்துநிலையம் அருகே மெய்நின்ற நாத சுவாமி மற்றும் ஸ்ரீஒப்பில்லாமணி அம்மன் என்ற சிவத்தலம் அமைந்துள்ளது. அதன்எதிரே, ஆசியாவிலேயே மிக உயரமான 81 அடி சிவ பெருமானின் நீண்ட நெடிய நின்ற திருக்கோலம் அமைந்துள்ளது. நக்கீரரால் பாடப்பட்ட தலமிது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் வனங்கினால் மனைவி அமையாதவர்களக்கு நல்மனைவி அமைந்திடும்....

கச்சபேசுவரர் தலச்சிறப்பு : இத்திருக்கோயிலினுள், 1. அருள்மிகு கச்சபேசுவரர் பெருமான் சந்நிதி. 2. இட்ட சித்தீசப் பெருமான் சந்நிதி. ...