ஆடிப்பெருக்கு (ஆடி 18) அன்றைய தினம் விரதமிருந்து வழிபாடு செய்தால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர்.
தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலி கயிறு மாற்றிக்கொள்வர்.
எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால்,
அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும்.
மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் புண்ணியநதி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடப்படுகிறது. ஆடி 18-ம்பெருக்கு விழா;-
அனைவருக்கும் ஆடி பண்டிகை வாழ்த்துக்கள்
ஆடி மாதம்:- இதனை சூரியனின் தட்சிணாயன பயணமாக பார்க்கலாம்...
அயனம் 2 ;-உத்ராயணம்/தட்சிணாயனம் என்பது ஆடி மாதம் 1 முதல் மார்கழி 31 வரை..
இதனை ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள்...
அதனால் விவசாயிகள் ஆடிமாதம் வந்தவுடன் விவசாய நிலங்களை உழவு செய்ய தொடங்குவார்கள்...
ஆடிப்பெருக்கில் :- நாடு செழிக்க தேவையான நீரை போற்றி பாதுகாக்கும் பொருட்டு நதியை தெய்வமாக வழிபட்டார்கள் நம் முன்னோர்கள்...
இதனால் ஓடிவரும் காவிரி சூல் கொண்டு வருவதை கொண்டாடிட
10 நாட்கள் முன்பே நவதானியங்கள் வைத்து முளைப்பாரி எடுத்து காவிரியில் நதிக்கரையில் சாணியில் பிள்ளையார் பிடித்து...
பச்சரிசி+சர்க்கரை கலந்து நைவேத்தியம் படைத்து...
மற்றும் பழவகைகள், பூவகைகள், சாத வகைகள் , காதோலை கருகமணி கொண்டு... தீபமேற்றி தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது வழக்கம்...
நுரைத்து பொங்கும் காவிரியால் வளமாக விவசாயம் செழிக்க வேண்டும் என்று வேண்டுதல்..
இதில் வயதான சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் தடவிய நூலை எல்லோருக்கும் தரும் போது சிலர் கைகளிலும் கழுத்திலும் கட்டிக் கொள்வார்கள்....
இதில் ஆடிப்பெருக்கில் புதுமண தம்பதிகள் தாலிக்கயிற்றை பெருக்கி போடும் பழக்கம் உண்டு...
அது போர்க்களத்திற்கு சென்று வந்த கணவரின் ஆயுளுக்காக செய்யப்பட்டது...
ஆனால் முதன்மை கோட்பாடு...விவசாயம் செழிப்பதற்கான பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று...
18-ம் நாள் போர்க்களம் என்பது :- பாண்டவர்கள்/கௌரவர்கள் நடத்திய மஹாபாரத போர் முடிந்த நாள் ஆடி 18...
பாண்டவர்கள் வெற்றி பெற்றதை கொண்டாடும் விழாவாக அதனை கொண்டாடினார்...
இன்றளவும் ஆடி 18-ம் நாள் முடியும் வரை எந்த நல்ல விஷயங்களையும் பேச மாட்டார்கள் நம் முன்னோர்கள்...
நாளை காவிரி வழிபாடு செய்வது மிகவும் நல்லதே ஆனால் தயவுசெய்து நதியை அசுத்தமாக்கும் வேலைகளை செய்து பாவத்தை பெற்றுக்கொள்ளாதீர்கள்..
(குளித்து போட்ட துணிகள் -பிளாஸ்டிக் பாட்டில் -கண்ணாடி பாட்டில் -டயப்பர் ) நதியில் போடாதீங்க புண்ணியம் கிடைக்கும்...
புண்ணிய நதிகளை போற்றுவோம்..
பழைய பண்பாட்டு கலாச்சார முறைகளை வளர்ப்போம்..
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment