Tuesday, July 5, 2022

கூடா நட்பு

காலை வணக்கம்
GOOD MORNING 

"இன்றைய சிந்தனை.". 06.07.2022
..................................
''கூடா நட்பு .."
..................................

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். 

அதனால் தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது
நல்ல நட்பு இதயம் போல உனக்குத் தெரியாமலே உனக்காகத் துடிக்கும்! 

நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்க விடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்துப் பள்ளத்தில் போட்டு விடுவார்கள்.

நல்ல நண்பர்கள் உங்களுடைய மகிழ்ச்சியின் போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள். 

தங்களைப் பற்றிய தம்பட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்.

திடீர் என்று வருபவர்களைத் தெரியாமல் நட்பாக்கிக் கொண்டால் அந்த நட்பு கேடாய்த் தான் முடியும் .

'மனம் கனத்து இருக்கிறது., பணம் எனக்குத் தேவையாக இருக்கிறது. எனக்கு உன் உதவி தேவை இருக்கு' என்று உங்களிடம் உதவி கேட்டு வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். 

நட்பின் முக்கியத் தேவையே உதவுவதில் தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில் 'மட்டுமே' உங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்,

அதே போல் பதவி ஆசையில் வரும் நட்புகள் நம்முடன் இருக்கும் உயிர் நட்புகளையே விரட்டச் சொல்வார்கள் அவர்கள் நல்ல பாம்பின் விஷம் போன்றவர்கள்.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். 

நண்பனுக்கு இன்னொருவர் துரோகம் செய்து விட்டார்கள் என்றதும் அதை அறிந்து பொங்கி எழும் புனிதமான நட்பும் இந்த உலகத்தில் இருக்கிறது 

'உங்கள் நண்பர்களுடன் பேசும் போது உங்களுடைய மனம் 
நேர்சிந்தனைகளில் நிறைகிறதா? எதிர்சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள். 

எதிர்சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.

சில நண்பர்களோடு பழகும் போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.

உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்கு பேரை நினையுங்கள். 

அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்கள் என்றால் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது.

ஆம்.,நண்பர்களே..

நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே, நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்!

எதற்காகவும் பழகிய நட்புக்கு துரோகம் செய்யாதீர் அதன் வலி தாங்க முடியாதது. எல்லோரும் எல்லாவர்களுக்கும் நல்லவராய் இருக்க முடியாது 

எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்' என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.

நல்ல நட்பே நம் வளர்ச்சி

வாழ்க வளமுடன்

Sunday, July 3, 2022

💚💜♥💛❤💛💚💜♥💛❤💛♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪#திருவாதவூரா்திருவாசகம்|||====|||====|||====|||====||| 🔔#சிவபுராணம்🔔 🙏🙏🙏🙏🙏🙏🙏>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<♥#திருச்சிற்றம்பலம்♥************************************🔥#பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்🔥#நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த🔥#மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 🔥#மறைந்திட மூடிய மாய இருளை🔥#அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்🔥#புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி🔥#மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை🔥#மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥**********************************💥 #எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எம் பெருமானே!ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே! எம் பெருமானே! வலிய வினையையுடையவனாகிய என்னை, மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் கட்டப்பெற்று, வெளியே தோலால் மூடி, எங்கும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை குலையும்படி, ஐம்புலன்களும் வஞ்சனை பண்ணுதலால்,👣👣👣👣👣👣👣👣👣👣👣👣***********************************♦#தில்லையம்பலம்♦***********************************🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷

💚💜♥💛❤💛💚💜♥💛❤💛
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
#திருவாதவூரா்திருவாசகம்
|||====|||====|||====|||====|||
      🔔#சிவபுராணம்🔔
         🙏🙏🙏🙏🙏🙏🙏
>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<
♥#திருச்சிற்றம்பலம்♥
************************************
🔥#பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

🔥#நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த

🔥#மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 

🔥#மறைந்திட மூடிய மாய இருளை

🔥#அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

🔥#புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி

🔥#மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

🔥#மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
**********************************
💥 #எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எம் பெருமானே!
ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே! எம் பெருமானே! வலிய வினையையுடையவனாகிய என்னை, மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் கட்டப்பெற்று, வெளியே தோலால் மூடி, எங்கும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய
 குடிசை குலையும்படி, ஐம்புலன்களும் வஞ்சனை பண்ணுதலால்,
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
***********************************
♦#தில்லையம்பலம்♦
***********************************
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷

Friday, July 1, 2022

🌹அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவனடியை சிந்திப்போம் 🌹🌹காகபுஜண்டரின் திவ்விய சரித்திரம்🌹*63* *சீடர்களுடன் ஒரே இடத்தில்* *ஐக்கியமான ஒரு சித்தர் தலம்*.மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது.சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி சில ஆலயங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது. மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம் எனப்படும் இந்தத் திருக்கோவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்து கிறது.சோழவள நாட்டில் உள்ள சீர்காழியில், 14–ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை போற்றி வழிபட்டு தவம் செய்து வந்தார். அவரது தவத்தின் பயனாக திருச்செந்தூர் முருகப்பெருமான், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு, மெய்ஞானம் தந்து அருள் வழங்கினார்.முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற சீகாழி சிற்றம்பல நாடிகள், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடு துறைக்குச் சென்றார். அங்கு ஒரு மடாலயம் அமைத்து அங்கேயே தங்கியிருந்து தவமியற்றி வந்தார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக அறுபத்துமூன்று பேர் இருந்தனர். இந்த நிலையில், சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். சீடர்களிடம் தனக்கு உதித்த விருப்பத்தை எடுத்துக் கூறினார். சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழ மன்னனை அழைத்த சீகாழி சிற்றம்பல நாடிகள், ‘நான் என்னுடைய சீடர்களோடு சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் ஜீவ சமாதி என்னும் நிஷ்டையில் கூட விரும்புகின்றேன். அதற்கு தகுந்த இடம் ஒன்றை ஏற்பாடு செய்து தாருங்கள்’ என்று கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற மன்னன், அவரது விருப்பப்படியே மயிலாடு துறைக்கு மேற்கு பகுதியில் உள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில் இடம் ஒதுக்கிக் கொடுத்தான். பின்னர் அங்கு அறுபத்துமூன்று சமாதிக் கோவில்கள் அமைத்து, அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான். அதே போல இந்தச் செய்தி நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிசயத்தைக் காண பலரும் அங்கே கூடி நின்றனர். தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள், தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார். அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில், மூன்று திருவெண்பாக்கள் பாடினார். தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி, சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர். இந்த இடம் தற்போது சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது. இத்தலமே தற்போது சீகாழி சிற்றம்பலநாதர் திருக்கோவிலாக அருள் வழங்கி வருகின்றது. சித்தர் அங்கிருந்து அன்று போல் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். முறையாக தரிசித்து வணங்கும் எல்லாருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகிறார். கிழக்கு பார்த்த வண்ணம் எளிய நுழைவு வாசலைக் கொண்டு அமைந்துள்ளது இந்த ஆலயம். கருவறை முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறைக்குள் தல நாயகர் சீகாழி சிற்றம்பல நாடிகளின் ஜீவ சமாதியும், அதன் மீது சிவலிங்கத் திருமேனியும் ஒளி வீசும் பொலிவோடு காட்சி தருகிறது. இவரே முக்காலத்து வினைகளையும் போக்க உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்துமூன்று சிவலிங்கத் திருமேனிகள், நேர்த்தியாக ஒரே வரிசையில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. மேலும், கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.கருவறையின் பின்புறத்தில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சப்த பீடங்கள், தனி சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அம்பாள், சிவயோக நாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல, மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் செய்து வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம். *அமைவிடம்*:நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும், சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் சரணம்அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜🦜🦜

Thursday, June 30, 2022

இன்று சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்!

இன்று சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்!

இன்று சந்திர தரிசனம் செய்ய மறவாதீர் !

இன்று ஜூன் 30-06-2022, சுபகிருது வருடம், ஆனி 16, வியாழக்கிழமை, சந்திர தரிசனம்!

இன்று மூன்றாம் பிறை, சந்திர தரிசனம் செய்வதால் மன நிம்மதி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும். அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை தரிசனம் பார்த்து விட்டால் அந்த ஆண்டு இரண்டு மடங்கு வருமானம் செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்வதும், சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று மாலை தரிசனம் செய்வது சிறப்பு.

வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, 'பிறை காணுதல்' என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக 'சந்திர தரிசனம்' என்று குறிப்பிட்டுள்ளது.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காண வேண்டும் என்று கூறினார்கள்.


Monday, June 27, 2022

சிவன் கோயில்

சிவனின் தமிழ்ப் பெயர்கள்...
***********************************

சிவனின் தமிழ்ப் பெயர்களும்
அவற்றின் வடமொழி இணைச்சொற்களும் பின்வருமாறு.

1. அடியார்க்கு நல்லான் (வட)பக்தவத்சலன்

2. அம்மையப்பன் (வட) சாம்பசிவன்

3. உடையான் (வட) ஈஸ்வரன்

4. உலகுடையான் (வட) ஜகதீஸ்வரன்

5. ஒருமாவன் (வட) ஏகாம்பரன்

6. கேடிலி (வட) அட்சயன்

7. சொக்கன் (வட) சுந்தரன்

8. தாயுமானவன் (வட) மாத்ருபூதம்

9. தான்தோன்றி (வட) சுயம்பு

10. தூக்கிய திருவடியன் (வட) கொஞ்சிதபாதன்

11. பரமகுரு, (வட) தென்முகநம்பி, ஆலமரச்செல்வன் தட்சிணாமூர்த்தி

12. புற்றிடங்கொண்டான் (வட) வான்மீக நாதன்

13. நடனசிவம் (வட) நடராஜன்

14. பெருந்தேவன் (வட) மகாதேவன்

15. பெருவுடையான் (வட) பிரகதீஸ்வரன்

16. மாதொருபாகன் (வட) அர்த்தநாரி

17. மணவழகன் (வட) கல்யாணசுந்தரன்

18. வழித்துணையான் (வட). மார்க்க சகாயன்

19. அண்ணாமலையான் (வட) அருணாசலேசுவரன்

20. பிறைசூடன் (வட) சந்திரசேகரன்

சிவன்

உங்கள் இறுதிஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா?

ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு  ஆர்டர்கள்  ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,
பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..
வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...

படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..
சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,..
ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.

மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..
இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,
தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..
கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..
உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,
ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, 
உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர், 
ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,
அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,
அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,

மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும்,  ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..

நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,
இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.

கண்மூடித் திறக்கும் நொடியில்
வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, 
என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,
உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய்,அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..

மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும்..

மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,
இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?..

பிரதோஷ வழிபாடு

*பிரதோஷ வழிபாடு (26.06.2022) 

*பிரதோஷ வழிபாடு பலன்*

ஞாயிறு பிரதோஷம் – சுப மங்களத்தை தரும்

திங்கள் சோம பிரதோஷம் –  நல் எண்ணம், நல் அருள் தரும்.

*செவ்வாய் பிரதோஷம் –  பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்*

புதன் பிரதோஷம் –  நல்ல புத்திரபாக்யம் தரும்

வியாழன் பிரதோஷம் – திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.

வெள்ளி பிரதோஷம் –  எதிரிகள், எதிர்ப்பு விலகும்.

சனிப் பிரதோஷம் –  அனைத்து துன்பமும் விலகும்.

தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவ பூஜை செய்த பலன் உண்டாகும்.

1. அறிவும், வீரியமும், அழகும் பெற முருகப்பெருமானை வணங்கலாம்.

2. ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள ஆஞ்சநேயரை வழிபடலாம்.

3. குடும்ப செழிப்பை பெற திருமகளை வணங்கி வரலாம்.

4. யோக சக்தியையும், மந்திர சக்தியையும் பெற அன்னை பராசக்தியை வழிபட்டு வரலாம்.

5. கலையை, கல்விச் செல்வத்தை பெற சரஸ்வதியை வழிபடலாம்.

6. யோகத்தில் சிறந்து விளங்க சிவசக்தியை வணங்கலாம்.

7. வெற்றிமேல் வெற்றி பெற ராஜகணபதியை வழிபடலாம்.

8. குடும்பத்தை வாட்டிடும் இன்னல்கள் தீர மாரியம்மன், காளியம்மன், காமாட்சியம்மன் முதலிய தெய்வங்களை வழிபடலாம்.

9. வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்பட பெருமாளை வழிபடலாம்.

10. இவ்வுலகத்தில் எல்லாவித இன்பங்களையும் முக்தியையும் அடைய விரும்புபவர்கள் சிவபெருமானை வழிபடலாம்.

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

பிரதோஷம் என்பது சிவனை வழிபட உகந்த நேரம். வறுமை, பயம், பாவம், மரண பயம், மரண வேதனை, நஞ்சால் ஏற்படும் அபாயம் ஆகியவை இதனால் அகலும்.

*பிரதோஷ காலத்தில் சிவனை நினைத்தாலே நன்மை தான்*

பிரதோஷ காலத்தில் முதலில் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்க வேண்டும்.

அரிசி மாவினால் அகல் செய்து தூய்மையான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

அந்த நேரத்தில் சாமியைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்வது பெரும் புண்ணியமாகும். 

அவ்வாறு சாமி அன்னையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் அழகை தரிசித்து பலன் பெற விரும்புவோர் முதலில் நந்திதேவரைத் தரிசித்து, பிறகு அன்னையைத் தரிசித்து, அதன் பிறகுதான் ஈசனை தரிசித்து வணங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாக ஐதீகம்.

பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 

சிவபெருமான் விஷம் குடித்தது சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. நித்திய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாதப்பிரதோஷம், மகாப்பிரதோஷம், பிரளயப்பிரதோஷம் என பிரதோஷம் 5 வகைப்படும்.

தினமும் அதிகாலை சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்பு, நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள காலம் நித்திய பிரதோஷம் ஆகும். சுக்லபட்ச சதுர்த்தியின் மாலை நேரம் பட்ச பிரதோஷமாகும். கிருஷ்ணபட்ச திரயோதசி தினத்தை மாத பிரதோஷம் என்கிறார்கள்.

பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் இருக்க இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.

*தென்னாடுடைய சிவனே போற்றி…!*

*எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!*

*ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!* 

*ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!* 

*ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!*

*"திருச்சிற்றம்பலம்''*

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...