Saturday, August 6, 2022

தஞ்சாவூர் ஆண்ட தஞ்சை புரீஸ்வரர்

🌺அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவனடியை சிந்திப்போம் 🌺

🔥இனிய நம் தந்தை சிவனாரை போற்றும் சிறப்புமிகு ஆலயங்கள் பற்றிய பதிவுகள் 🔥

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தையை பணிந்து 🙏

🔥*உயரமான மூலவர் விமானம்*

1. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்

2. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்

3. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்

4. திருபுவனம் கம்பேஸ்வரர் கோவில்

*சிவன் விசேஷ தலங்கள்*

1. திருவேள்விக்குடி - கவுதுகாபந்தன ஷேத்ரம்

2. திருமங்கலகுடி - பஞ்சமங்கள ஷேத்ரம்

3. திருவையாறு - பஞ்ச நந்தி ஷேத்ரம்

4. திருவிடைமருதூர் - பஞ்சலிங்க ஷேத்ரம்

5. திருநீலக்குடி - பஞ்சவில்வாரண்ய ஷேத்ரம்

6. திருவிற்கோலம் - நைமிசாரண்ய ஷேத்ரம்

7. திருநெல்லிக்கா - பஞ்சாட்சரபுரம்

8. காஞ்சி - சத்தியவிரத ஷேத்ரம்

9. திருவல்லம் - வில்வாரண்யம்

10. திருகண்டியூர் - ஆதிவில்வாரண்யம்

🔥🔥பன்னிரு ஜோதிர்லிங்க தலங்கள்*

1. கேதாரம் - கேதாரேஸ்வரர் (இமயம்)

2. சோமநாதம் - சோமநாதேஸ்வரர் (குஜராத்)

3. மகாகாளேசம் - மகா காளேஸ்வரர் (உஜ்ஜையினி)

4. விஸ்வநாதம் - விஸ்வநாதேஸ்வரர் (காசி)

5. வைத்தியநாதம் - வைத்தியனாதர் (மகாராஷ்டிரம்)

6. பீமநாதம் - பீமநாதேஸ்வர் (மகாராஷ்டிரம்)

7. நாகேஸ்வரம் - நாகேஸ்வர் (மகாராஷ்டிரம்)

8. ஓங்காரேஸ்வரம் - ஓங்காரேஸ்வரர் (மத்தியப்பிரதேசம்)

9. த்ரயம்பகம் - திரயம்பகேஸ்வரர் (மகாராஷ்டிரம்)

10. குசுமேசம் - குஸ்ருணேஸ்வர் (மகாராஷ்டிரம்)

11. மல்லிகார்ஜுனம் - மல்லிகார்ஜுனர் (ஸ்ரீசைலம், ஆந்திரா)

12. ராமநாதம் - ராமேஸ்வரம் (தமிழ்நாடு)

🔥🔥🔥முக்தி தலங்கள்*

1. காசி

2. காஞ்சி

3. மதுராபுரி

4. ஹரித்துவார்

5. உஜ்ஜையினி

6. அயோத்தி

7. துவாரகை

*பித்ரு கடன் தலங்கள்*

1. காசி

2. கயா

3. திருவெண்காடு

4. பத்ரிநாத்

5. திருக்கோகர்ணம்

6. பவானி

7. திலதர்ப்பணபுரி

8. செதிலப்பதி,

9. ராமேஸ்வரம்

10. துவாரகாபுரி

11. பூம்புகார்

12. இடும்பாவனம்

13. சங்குமுகேஸ்வரர்

🔥🔥🔥🔥காசிக்கு சமமான தலங்கள்*

1. திருவெண்காடு

2. திருவையாறு

3. மயிலாடுதுறை

4. திருவிடைமருதூர்

5. திருச்சாய்காடு

6. ஸ்ரீவாஞ்சியம்

7. விருத்தாசலம்

8. மதுரை

9. திருப்புவனம்

🔥🔥🔥🔥🔥சிவ பூஜையில் சிறந்த தலங்கள்*

1. திருக்குற்றாலம் - திருவனந்தல் பூஜை

2. ராமேஸ்வரம் - காலை சந்தி பூஜை

3. திருவானைக்கா - உச்சிகால பூஜை

4. திருவாரூர் - சாயரட்சை பூஜை

5. மதுரை - இராக்கால பூஜை

6. சிதம்பரம் - அர்த்தஜாம பூஜை

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் அரன் நாமம் சூழ்க எங்கும் துயர் தீர்க

அகிலம் காக்கும் அண்ணாமலையார் பொன் மலர் பாதத்தில் நன்றியுடன் ஆத்ம நமஸ்காரம் ஈசனே 🙏

உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தைக்கு ஆத்ம நமஸ்காரங்கள்

அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜🦜🦜

Friday, August 5, 2022

அதிசயம் நிகழ்த்தும் அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்

🌺🌺🌺🌺🌺மகாவிஷ்ணுவை போல பள்ளிகொண்ட நிலையில் இறைவன் அருளும் சுருட்டப்பள்ளி அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில், சுருட்டப்பள்ளி

🌺🌺🌺🌺அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில், சுருட்டப்பள்ளி, சித்தூர், ஆந்திரா.

🙏🏻🙏🏻🙏🏻காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் – பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரர்
அம்மன் – மரகதாம்பிகை
தல விருட்சம் – வில்வம்
பழமை – 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர் – சுருட்டப்பள்ளி
மாவட்டம் – சித்தூர்
மாநிலம் – ஆந்திரா

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு கூறினார்.

திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வரக் கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது அனைத்து தேவர்களும்,”சிவபெருமானே. இந்த விஷத்தை வெளியில் வீசினாலும், தாங்களே உண்டாலும் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான் சூழ்நிலையிலிருந்து எங்களைக் காத்திடுங்கள்” என மன்றாடினார்.

 

 
 
 
 
 

உடனே சிவன் “விஷாபகரண மூர்த்தி“யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த பார்வதி, சிவனைத் தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கண்டத்தில் கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அவர் “நீலகண்டன்” ஆனார். விஷத்தைத் தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் “அமுதாம்பிகை” ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணத்திலும், ஸ்கந்த புராணத்திலும் கூறப்படுகிறது.

பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்தார். இந்த அருட்காட்சியை சுருட்டப்பள்ளியில் பார்க்கலாம்.

 
சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், “பள்ளி கொண்டீஸ்வரர்” எனப்படுகிறார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மூலவரை வால்மீகிஸ்வரர் என்கிறார்கள். இவருக்கு எதிரில் இராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவாரபாலகருக்குப் பதில் சங்கநிதியும், பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில், துவாரபாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளது.

தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில்தான் தன் மனைவி தாராவுடன் தம்பதிகளாக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

 
எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதிகளாக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் – சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி, சாஸ்தா – பூரணை, புஷ்கலை, குபேரன் – கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி தன் மனைவியருடன் இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

சிவராத்திரி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்

பிரார்த்தனை:

பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் சிவபெருமானக்கு பிரதோஷ தினத்தன்று வில்வமாலை அர்ச்சனை செய்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

ஆலயமுகவரி:

சென்னையிலிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் வழியில் 56 கி.மீ., தூரத்தில் சுருட்டப்பள்ளி உள்ளது

வரலட்சுமி விரத பூஜை முறை

🌹 வரலட்சுமி விரதம்... 

வரலட்சுமி விரத பூஜை முறை...!

🙏 செல்வம் செழித்தோங்கவும், மாங்கல்ய பலம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.

🙏 ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். அந்த வகையில் ஆடி 20ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை (05.08.2022) இவ்விரதம் அனைத்து வயது பெண்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது. 

🙏 வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.

பூஜைக்கு வேண்டிய பொருட்கள் :

🙏 மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலுமிச்சைப்பழம், குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்துவிளக்கு, நோன்பு கயிறு, நகை மற்றும் பணம் வைத்தும் வழிபடலாம்.

பூஜை செய்யும் முறை :

🙏 ஒரு தாம்பூலத்தில் அரிசியை பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்திற்காக வைக்கலாம்.

🙏 அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியே நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டிற்குள் வருமாறு அழைக்க வேண்டும். 

🙏 மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் (தெய்வத்தை மனதில் எண்ணுதல்) செய்ய வேண்டும்.

🙏 மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அப்போது மங்கலபாயாசம கரமான மந்திரங்களை சொல்லவும். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களையும் பாடலாம்.

🙏 இதையடுத்து நோன்புக் கயிற்றை கும்பத்தில் சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லவும். மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நீங்கள் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீங்கள் தர வேண்டும் என்று மனம் உருகி வணங்க வேண்டும்.

🙏 பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நிவேதனம் :

🙏 பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன் மற்றும் கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

பலன்கள் :

🙏 வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், செல்வ வளம் உண்டாகும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

Tuesday, August 2, 2022

சிவன் கோயிலில் சடாரி வைக்கும் அதிசயம்! - இது திருநல்லூர் ஸ்பெஷல்!🌹

🌹சிவன் கோயிலில் சடாரி வைக்கும் அதிசயம்! - இது திருநல்லூர் ஸ்பெஷல்!🌹
🌹அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவனடியை சிந்திப்போம் சிவனே சரணாகதி 🌹

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தையை பணிந்து 🙏

நாம் பெருமாள் கோயில்களுக்குச் செல்லும்போது, நமக்கு தீர்த்தப் பிரசாதம் கொடுப்பதுடன், நமக்கு பகவானின் திருவடி ஸ்பரிசம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, பகவானின் திருவடிகள் பதிக்கப்பட்ட சடாரியை நம் தலையில் வைத்து எடுப்பார்கள். 

அப்படி பெருமாள் கோயில்களில் சடாரி வைப்பதுபோலவே, ஒரு சிவன் கோயிலிலும் சடாரிவைத்து எடுக்கிறார்கள். பக்தர்களின் தலையில் சடாரி வைக்கும் நடைமுறை, தொன்மைச் சிறப்பு வாய்ந்த, நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆச்சர்யமான பழக்கத்துக்குக் காரணம், சிவபெருமான் திருநல்லூரில் திருநாவுக்கரசரின் முடியில் தன் திருவடிகளைவைத்து ஆசீர்வாதம் செய்ததுதான். இதன் பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

திருச்சத்திமுற்றம் தலத்தைத் தரிசித்த திருநாவுக்கரசர், ``இறைவா, யமன் என்னைக் கொண்டுபோகு முன்னர் உன் திருவடியை என் தலை மீது சூட்டி ஆசீர்வாதம் செய்யுங்கள்" என மனமுருகி வேண்டினார். 

திருச்சத்திமுற்றத்தில் வேண்டிக்கொண்ட திருநாவுக்கரசருக்கு, நல்லூர் திருத்தலத்தில் தன் திருவடிகளைவைத்து ஆசீர்வதித்தார்.

 அதை நினைவுகூரும் வகையில், இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சிவபெருமானின் திருவடிகள் பதிக்கப்பட்ட சடாரிவைக்கப்படுகிறது

திருநாவுக்கரசருடைய தலைமீது இறைவன் தன் திருவடியை வைத்து ஆசீர்வதித்த நிகழ்வு நடந்த இந்த நல்லூர்த் திருத்தலம் பல்வேறு சிறப்புகளை உடையது.

தினமும் ஐந்து முறை சிவலிங்கம் நிறம் மாறுகிறது. ஆதலால் கல்யாண சுந்தரேஸ்வரர் `பஞ்சவர்ணேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

நவகிரகம் எதுவும் இல்லாத சிவ திருத்தலம் இது.

குந்திதேவிக்கு தோஷ நிவர்த்தி அளித்த ‘சப்த சாகர’ தீர்த்தம் இருக்கும் இடம்.🙏

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசனே 🙏🌹🙏

உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை  இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🙏🌹🙏

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தைக்கு ஆத்ம நமஸ்காரங்கள்

அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜🦜🦜

Monday, August 1, 2022

காவிரி அன்னைக்கு ஆடி விழா

`ஆடி பெருக்கு.......

`தமிழ் மாதமான ஆடியில் வரும் 18-ம் நாளைத்தான் `#ஆடிப்பெருக்கு’, `#ஆடி18’, `பதினெட்டாம் பெருக்கு’... எனப் பல பெயர்களில் கொண்டாடுகிறார்கள். இந்த நாளை, தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமத்தால் வாசலில் பொட்டு இட்டு, வரவேற்று மகிழ்வார்கள் பெண்கள்’’ ..

``காவிரியை அம்மனாக, தாயாக நினைத்து ஆற்றில் தண்ணீர் வரும் நாளில் அங்கு சென்று வணங்கி ஆசி பெற்றால், எல்லாம் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் சுபிட்சமும் ஆற்று நீரைப்போல் பெருக்கெடுத்து ஓடும் என்ற நம்பிக்கையோடு அதற்கு மரியாதை செய்யும்விதமாகவே அந்த நாளில் காவிரிக் கரையில் கூடுகிறார்கள் மக்கள்.

காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். படிதுறைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாகக் கூடுவார்கள். சுமங்கலிப் பெண்கள், கன்னிப் பெண்கள், அந்த வருடத்தில் திருமணம் ஆன புதுமணத் தம்பதிகள் என அனைவரும் தங்கள் சொந்த பந்தங்களோடு காவிரிக் கரைக்கு வந்துவிடுவார்கள். ஆற்றில் தண்ணீர் வெள்ளமும், படித்துறையில் மக்கள் வெள்ளமுமாக காவிரிக் கரைகளில் மகிழ்ச்சி வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடும். அந்த நாளில் ஆற்றுப் படிகளில் தலைவாழை இலை போட்டு, அதில் காப்பரிசி, (அரிசி, எள்ளு, பொட்டுக்கடலை, வெல்லம் எல்லாம் சேர்த்துக் கிளறுவது) காதோலைக் கருகமணி, கறுப்பு மணி, கண்ணாடி வளையல், மஞ்சள் கயிறு, கண்ணாடி, பூ, பழங்கள், தேங்காய், பால், மரப்பலகையில் செய்யப்பட்ட சப்பரம்... அதில் அம்மன் படம், பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலிச் சங்கிலி எல்லாவற்றையும் வைத்து பூஜை செய்து காவிரித் தண்ணீரைப் பார்த்து மனமுருகி சாமி கும்பிடுவார்கள். தாம்பூலத்தில் மஞ்சள் தண்ணீர் இட்டு, கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து, காவிரி நீருக்கு வரவேற்புக் கொடுத்து வணங்குவார்கள்.

பெண்களின் வாழ்வையும் விவசாயத்தையும் செழிப்பாக மாற்றும் புனிதநாள் ஆடி பதினெட்டு வாழ்த்துகள்....

அதுதான் இன்று மழைபெய்கிறது முடிந்தால் நனையுங்கள்.....
நமசிவாய🙏💐

கோவை மருத மலையின் அதிசயம்

🌹 மருதமலை தல வரலாறு ...

கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மருதமரங்கள் மிகுதியாக காணப்படுவதன் காரணமாக இந்த பகுதி மருதமலை என்று அழைக்கப்படுகிறது. 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுகிறது. பேரூர் புராணம், திருப்புகழ் மற்றும் காஞ்சிப் புராணங்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி மருதாசலபதி, மருதப்பன், மருதமலையான், மருதமலை முருகன், மருதாசலமூர்த்தி என பல பெயர்களால் போற்றித் துதிக்கப்படுகிறார். முன்னொரு காலத்தில் முருக பக்தரான சித்தர் ஒருவர் இப்பகுதிக்கு வருகை தந்தார். அவர் களைப்பாலும், தாகத்தாலும் சோர்வடைந்து அங்கிருந்த மருத
மரம் ஒன்றின் கீழ் அமர்ந்து இளைப்பாறினார். அச்சமயத்தில் மருதமரத்தின் கீழ்ப்பகுதியில் ஊற்று நீர் பீறிட்டது.

இதைக்கண்ட சித்தர் இது முருகப்பெருமானின் அருளே என்று வியந்து முருகப்பெருமானை ‘மருதம் சலம் ஆகியவற்றின் தலைவா’ என்று வாழ்த்திப் பாடியதாகவும், அதுவே பின்னர் மருதாசலபதி என்று மருவி அழைக்கப்படுவதாகவும் செவிவழிச் செய்தி நிலவுகிறது. மலையடிவாரத்தின் படிக்கட்டுப் பாதை தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சந்நதி அமைந்துள்ளது. இந்த விநாயகரின் அமைப்பு மிகவும் வித்தியாசமானது மற்றும் அழகானது. இதுபோன்ற விநாயகப்பெருமானை வேறு எந்த தலத்திலும் தரிசிக்க இயலாது. தான்தோன்றி விநாயகரை வழிபட்டு மலையேறினால் 18 படிகளைக் கொண்ட ‘பதினெட்டு படி’ உள்ளது. சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வழிபட இயலாதவர்கள் இந்த பதினெட்டாம் படிக்கு வந்து வணங்குகிறார்கள். மருதமலை முருகன் கோயிலுக்குப் படிக்கட்டுகளின் வழியாகச் செல்லும்போது இடும்பனுக்கென அமைந்துள்ள தனி சந்நதியைக் காணலாம்.

இந்த இடும்பனை வணங்கினால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரே பிராகாரத்துடன் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என முறைப்படி அமைந்துள்ளன. கருவறையில் அழகே வடிவாக முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கருவறைக்கு முன்னால் முருகப்பெருமானை நோக்கியவண்ணம் அவருடைய வாகனம் மயில் நின்றிருக்கிறது. அதற்குப் பின்னால் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன. இதன் அருகே தனி சந்நதியில் வலம்புரி விநாயகர் அருட்பாலிக்கிறார். மருதமலை கோயிலில் ஆதிமூலஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு வள்ளிதெய்வானையோடு அருள்புரியும் முருகப்பெருமானை முதலில் வழிபட்டு பின்னர் பஞ்சமுக விநாயகரை தரிசித்து அதன் பிறகு மூலவரை வணங்க வேண்டும்; பின்னர் பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வரதராஜப் பெருமாள், நவகிரக சந்நதி என வழிபட வேண்டும்;  

இதைத் தொடர்ந்து பாம்பாட்டி சித்தர் சந்நதிக்குச் சென்று அவரை வணங்கிவிட்டு பின்பு சப்தகன்னியரை வழிபட வேண்டும் என்பது மரபு. மருதமலைக் கோயிலின் தென்புறத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி கிழக்கு திசை நோக்கிச் சென்றால் அப்பகுதியில் பாம்பாட்டி சித்தர் சந்நதியைக் காணலாம். இத்திருக்கோயிலில் அமைந்துள்ள சப்தகன்னியர் சந்நதிக்குப் பின்புறம் வற்றாத ஊற்று ஒன்று அமைந்துள்ளது. எப்போதும் நீர் சுரந்து கொண்டேயிருக்கும் இந்த ஊற்றுத் தண்ணீரைக் கொண்டு தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மருதமலை முருகன் கோயிலில் உள்ள விநாயகர் சந்நதியின் பின்புறத்தில் ஒன்றாக பின்னிப் பிணைந்தபடி பழமையான ஐந்து மரங்களைக் காணலாம். இதனை ‘பஞ்ச விருட்சம்’ என்றழைக்கிறார்கள். அதிசயமான இந்த மரத்தில் குழந்தை வரத்துக்காக வேண்டிக்கொள்ளும் பெண்கள் தொட்டில் கட்டுகின்றனர். இத்திருக்கோயிலில் பதினாறரை அடி உயரம் கொண்ட தங்கத்தேர் உள்ளது. தினமும் மாலை ஆறு மணிக்கு கோயிலில் இந்தத் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது.  

இத்தலத்தின் தீர்த்தம் மருதத்தீர்த்தம், தலவிருட்சம் மருத மரம். நீண்டகாலமாக திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் போன்றவற்றை சமர்ப்பித்து கல்யாண உற்சவத்தை நடத்தினால் விரைவில் முருகப்பெருமான் அருளால் திருமணம் கைகூடும். மேலும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தம்பதி சமேதராய் இக்கோயிலுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் வந்து வழிபாடு செய்தால் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பதும் பக்தர்களின் அனுபவ உண்மை. இத்திருத்தலத்தில் தினசரி காலை ஐந்து மணிக்கு கோ பூஜை, பிறகு 5.30 மணிக்கு நடைத்திறப்பு. காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 8.30 முதல் 9.00 மணி வரை காலசந்தி பூஜை, 11.30 முதல் 12.00 மணி வரை உச்சிக்கால பூஜை, மாலை 4.30 முதல் 5.00 மணி வரை சாயரட்சை பூஜை, இரவு 8.00 மணி முதல் 8.30 மணி வரை இராக்கால பூஜை என நடைபெறுகின்றன.

ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்குரிய விழாக்கள் இத்திருக்கோயிலில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம், ஆடி மாதத்தில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடி பதினெட்டு, ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் என விழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை தீபம், ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பூச விழா, வள்ளிதெய்வானை திருக்கல்யாணம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இத்திருக்கோயில் காலை ஐந்தரை மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும்.

மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை நடை சாத்தப்படுகிறது. கிருத்திகை மற்றும் முக்கியமான விழா நாட்களில் கோயில் காலை முதல் இரவுவரை தொடர்ந்து திறந்திருக்கும். கோவையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மருதமலை அமைந்துள்ளது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையம். உக்கடம், டவுன்ஹால், சிங்காநல்லூர், ஈச்சனாரி போன்ற பல பகுதியிலிருந்தும் மருதமலைக்கு நகரப் பேருந்துகளும், மலை அடிவாரத்திலிருந்து மேலே கோயிலை அடைய கோயில் நிர்வாகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. படிக்கட்டுகள் ஏறியும் மலைக்கோயிலை அடையலாம். மலைப்பாதையில் ஏறிச் செல்லுவோர் இளைப்பாறுவதற்காக வழியில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மூலிகை மலையும் ஆடி பதினெட்டும்

ஆடி 18 என்றாலே கரூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்ட மக்களுக்கு நினைவிற்கு வருவது... கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரங்கமலை. 
கரூர், திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லை யில் உள்ள இந்த மலையின்  தென்பகுதி திண்டுக்கல் வனத்துறை மேற்பார்வையிலும், வடபகுதி கரூர் மாவட்ட வனத்துறை பாதுகாப்பிலும் உள்ளது. சுமார் ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட இந்த ரங்கமலையை பசுமையான காடு சூழ்ந்துள்ளது. ரங்கமலை மீது அமைந்துள்ள மல்லீஸ்வரன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜை ஆகியவை நடைபெறுவது வழக்கம். 
மேலும், ஆண்டுதோறும் ஆடி 18-ந் தேதி ஆடி பெருக்கு விழாவின் போது சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ரங்கமலைக்கு வந்து மல்லீஸ்வரரை தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு செல்வதற்கு முன்பு பக்தர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள விநாயகரை தரிசனம் செய்து விட்டு பின்னர் மலை ஏறி மல்லீஸ்வரர் கோவிலுக்கு செல்கின்றனர்.
கோவிலின் சிறப்புகள்
இக்கோவிலில் கழுத்தை பிடித்த நிலையில் மேற்கு நோக்கிய சுயம்பு லிங்கம் உள்ளது. மேலும் இந்த கோவிலில் கிண்ணாரக்கல், தோரக்கல், தங்கம்-வெள்ளி ஆறு, கருடன் வலம், கருநொச்சி குச்சி, விராலி மூலிகை, சஞ்சீவி மூலிகை, கைலாயக்குகை, நுழையாம்பாளி, காணாச்சுனை என பல்வேறு சிறப்புகள் உள்ளது. மேலும், இம்மலையில் மூலிகைகள் அதிகமாக உள்ளதால் சிலர் தேக நலன் கருதி மலையில் சில நாட்கள் தங்கி விட்டு செல்வதும் உண்டு. ரங்கமலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலை மீது நடந்து சென்றால் கோவிலுக்கு சற்று கீழே பாதாளத்தில் பாறையில் நீர் ஊற்று உள்ளது. இந்த கோவிலுக்கு வந்து சென்றால் திருமணம் கைகூடும் என்பதும், குழந்தைப்பாக்கியம் ஏற்படும் என்றும், நினைத்த காரியம் கைகூடும் என்றும் பெரியோர்கள் கூறுகின்றனர். அதனால் புதுமணத்தம்பதிகள் இந்த கோவிலுக்கு அதிக அளவில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த மலையில் ஏறும்போது பச்சை பசேலென்ற அழகான இயற்கை அழகு பக்தர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று இங்கு வருபவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...