Friday, November 4, 2022

அரியும், சிவனும் ஒண்ணு என்பதில் சிவபெருமானை உணர்ந்தவர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை!

🕉️ஹரியும் , சிவனும் ஒன்று
ஒரு சில நாட்களுக்கு முன்பு அடியேன் திருவெண்ணைநல்லூரில் உள்ள வைகுண்டவாச பெருமாள் ஆலயத்திற்கு சென்றேன் அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டேன் . அப்பொழுது ஒரு நண்பர் ஒருவர்  என்னிடம் கேட்டார் நீங்க  எப்பயும் சிவன் கோயில் தானே தினமும் பாட்டு பாடுவிங்க ... நீங்க ஏன் இன்று பெருமாள் கோவில் வந்திர்கள் என்று கேட்டார்  . பெரும்பாலும் 
சிவன் அடியார்கள் ஏன் மற்ற கடவுளை வணங்குவது இல்லை 
மேற்கண்ட கேள்வியை என்னிடம்  நண்பர் கேட்டார்.

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!"

இதன் பொருள்,

முழுமுதற்கடவுளே! தென்நாட்டில் உன்னை சிவன் என்ற திருப்பெயர் உடையவனாகக் கருதி நாங்கள் வழிபடுகின்றோம்!

நீயே, எந்நாட்டவர்க்கும், அவரவர் ஊரில், அவரவர் மொழியில், பல்வேறு திருப்பெயர்களைக் கொண்டு வழிபடும் இறைவனாகவும் இருக்கிறாய் என்பதையும் நாங்கள் அறிவோம்!

எனவே, எப்பெயரில் நீ இருந்தாலும், எந்நாட்டு மக்களும் எப்பெயரில் உன்னை அழைத்தாலும், அப்பெயரால் வழிபடப்பெறும் இறைவன் நீயே என்று உணர்ந்து இறைவா! உன்னை வணங்கிப் போற்றுகின்றோம்! என்பதே அடியார்களின் குணம் .

இதை தான் மாணிக்கவாசகர் பெருமான் திருவாசகத்தில் திருத்தெள்ளேணம் என்னும்  பதிகத்தில் 
ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்
திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!  என்று பாடியுள்ளார் ..

யாதொரு தெய்வம் கொண்டீர் - ஆங்கு அத் தெய்வமாகி

மாதொரு பாகனார் தாம் வருவர்  சைவ சித்தாந்தம் சொல்கிறது 

இதை கேட்ட  நண்பரின் முகத்தில் வியப்பு மற்றும் ஆச்சரியம் 

பிறகு  அடியேன்  அவருக்கு புரியும் படி  இன்னும் தெளிவாக கூறினேன் .

பெருமாளை விட ஒரு சிறந்த சிவ பக்தர் யாரேனும் உண்டோ என்று கேட்டேன் அதற்க்கு அவர் பதில் சொல்ல தெரியாமல் சிந்தித்தார் எது பெருமாள் சிறந்த சிவ பக்தரா என்று கேட்டார் 

ஆம் 

சிவ பூசைக்கு வேண்டிய ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்று குறைந்துவிட்டதால், தனது தாமரையினும் மேலான கண்களில் ஒன்றை இடந்து அர்ச்சிக்க எம் பெருமாள் திருமால் முயல,
தடுத்தாட்கொண்ட சிவபெருமான், சக்கராயுதத்தைத் திருமாலுக்கு வழங்கினார்!
சோழநாடு- திருமாற்பேறு என்ற சிவத்தலத்தில், இத்திருவிளையாடல் நிகழ்ந்தது.

அதனால் தான் சிவபெருமான் ,   (பெருமாள் வேறு-சிவன் வேறு) இல்லை என்று  காட்டவே, எம்பெருமான் சங்கரநாராயணராக தோன்றி அருளினார்.

அது மட்டுமா சிவத்தை உணர்ந்தவர்களுக்கு, பெருமாளே முதல் துணை! கண்ணப்ப நாயனாருக்கும் முன்பே கண்-இடந்து அர்ச்சித்த முதல் நாயனார் எம்பெருமாள்; 

எம்பெருமாளும், எம்பெருமானும் வேறல்லர் ;

என்று கூறினேன் அவரும் இன்பம் அடைந்து சென்றார் ..
தீவிர சிவழிபாடு செய்பவர்கள்,

"நான் சிவனைத் தவிர ஏனைய கடவுள்களை வழிபாடு செய்வதில்லை" என்று கூறுவார்கள் .. 
  
இதற்க்கு முழுமுதற் கடவுளாக, சிவனை வணங்கவில்லை
என்றே பொருளாகும்.ஏனெனில், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஓரிறை-சிவபெருமான், ஏனைய கடவுளராகவும் தோன்றுவான் அல்லவா?
எங்கும் சிவமயம் என்று காண்போருக்கு, எந்தக் கடவுளரும், எந்த உயிரினமும் சிவமே அல்லவா? அடியேனுக்கும் அப்படி தான் தோன்றியது 

அரியும், சிவனும் ஒண்ணு என்பதில் சிவபெருமானை உணர்ந்தவர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை!

எங்கும் சிவம் எதிலும் சிவம் அன்பே சிவம்

🪔ஓம் நமசிவாய வாழ்க🪔 

🪔திருச்சிற்றம்பலம்🪔

என்றும் சிவ பணியில் சிவ கீர்த்தனா ஆறுமுகம் 🙏🙏

Wednesday, November 2, 2022

இன்று ஒரு வல்லரசு நாடுநினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை எந்தநாட்டு கொம்பனாலும் செய்ய முடியாது.

#kudavasalswamy #குடவாசல்சுவாமி உலக
அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின்
அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது
என்பது தான் உலக அதிசயம்.

👉 நம் தமிழ்நாட்டின் *நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால்*
*" ச, ரி, க, ம, ப, த, நி "*
என்கிற ஏழு
இசை சப்த ஸ்வரங்கள் ஒலிக்கும் *கல்லுக்குள் 7*
*ஸ்வரங்களை* வைத்தார்களே. அது உலக
அதிசயம்.

👉 திருப்பூரில் உள்ள *குண்டடம் வடுக நாத*
*பைரவர் கோவிலில்* *குழந்தை தாயின்*
*வயிற்றில் இருக்கும்* *பொழுது, குழந்தை*
*இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில்*
*இந்த விதமான Positions-ல் இருக்கும்*
என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அது
உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.

👉 இன்றும் நிறைய கோவில்களில்
குறிப்பிட்ட *ஒரு தேதி,* *நேரத்தில் பூ மாலை*
*போல் வந்து* *சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும்.* அப்ப
எவ்ளவு துல்லியமாக Measurement செய்து
ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று
பாருங்கள். சில கோவில்களில் தினமுமே
சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது பூ மாலை
போல் வந்து விழும். 

👉 வட சென்னையில் உள்ள *வியாசர்பாடி* *ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3*
*வேளையும் சூரிய ஒளி* *சிவலிங்கத்தின் மீது*
*மாலை போல் வந்து* *விழும்*. இந்த கோவிலில்
உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள்
பழமையான லிங்கம் தெரியுமா? *ஐயாயிரம்*
*ஆண்டுகள்*. இது உலக அதிசயம். 

👉 *மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரியகோவில்* சிற்ப, கட்டிட வேலைபாடுகளில்
உள்ள அதிசயங்களை பற்றி முழுமையாக நமக்கு தெரியவேண்டுமென்றால் 
அதற்கு இந்த ஒரு பிறவி போதாது.

👉 *ஓசோன்* 20-ம் நூற்றாண்டில் கண்டு
பிடிக்கப்பட்ட படலம். *700 ஆண்டுகளுக்கு*
*முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன்* *கோவிலில்*
ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம்,
அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் என்று அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது.
அது உலக அதிசயம். 

👉 *யாழி என்கிற மிருகத்தின்* சிலை பல பழங்கால கோவில்களில் இருக்கும்.
*டைனோசர் போல்.* அதுவும் உலகில் வாழ்ந்து
அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில
பழம்கால கோவில்களில் உள்ள யாழி
*சிலையின் வாயில் ஒரு உருண்டை*
*இருக்கும்*. அந்த உருண்டையை நாம்
உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள்
ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி
வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.

👉 இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய
மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி
விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு
நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7
ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை எந்தநாட்டு கொம்பனாலும்  செய்ய முடியாது. வாயில்
உள்ள *உருண்டையை* *உருட்டலாம். ஆனால்*
*உருவ முடியாது*.இந்த வித்தையை இன்று
எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.

👉 மிகப்பெரிய பிரம்மாண்ட கற்கோவில்களை
அழகிய கலை வேலைபாடுகளோடு
உருவாக்குவது, இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது.

👉 அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள *கங்கை*
*கொண்ட சோழபுரம்* கோவில் ஒரு வரலாற்று
சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள
கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம்
இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு
தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால்
*கிணற்றில் குளிக்கலாம். ஆனால்*
*மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது*
*தெரியாது.* அன்றைய ராணிகளுக்காகவே
கட்டப்பட்ட கிணறு அது.
அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில்
சுவர்களில் *மரகதகற்கள்* பதித்துள்ளனர். அதனால்
*வெளியே வெயில் அடித்தால் உள்ளே*
*குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே*
*கதகதப்பாக இருக்கும்.*
அது போல்k கோவில் மேற்கூரையில் ஒரு ஆள்
பதுங்கும் உயரத்தில் *பாதுகாப்பு பெட்டகம்*
உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும்
படைவீரர்களும் பதுங்கும் வகையில்
கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.

மறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம்.
தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.

*நமது முன்னோா்களின் திறமையையும்*
*கலைநயத்தையும்* *போற்றி* *தலைவணங்குவோம்*

இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம்
கொள்வோம்.🙏🙏🙏

எங்கும் நீக்கமற காட்சி கொடுக்கும்சொக்கநாதபெருமானே உம் திருவடி வணங்குகிறேன்

**திருச்சிற்றம்பலம்**
🙏**சிவமே தவம்
தவமே சிவம்**🙏
எங்கும் நீக்கமற காட்சி கொடுக்கும்

சொக்கநாதபெருமானே உம் திருவடி வணங்குகிறேன்

🙏மதுரையம்பதியில் சொக்கநாதபெருமான்

🙏திருவேடகத்தில் திருஏடகநாதர் 

🙏திருவாதவூரில் 
திருமறைநாதர்

🙏திருச்சுழியில்
பூமிநாதர்

🙏திருப்பூவனத்தில் 
பூவனநாதர்

🙏திருக்கானபேர் என்ற
காளையார்கோவிலில்
சோமேசுவரர்
சுந்தரேசுவரர்
காளீசுவரர்

🙏திருவாடானையில் 
ஆதிரெத்தினேசுவரர்

🙏திருஉத்திரகோசமங்கையில் 
மங்களநாதர்

🙏நயினார் கோயில் 
நாகநாதர் 

🙏திருப்பெருந்துறை
ஆத்மநாதர்

🙏காஞ்சிபுரம்
ஏகாம்பரேசுவரர்

🌹 🌿 தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் 

🌹 🌿 திருவாரூரில் தியாகராஜர் 

🌹 🌿 திருநெல்வேலியில் நெல்லையப்பர் 

🌹 🌿 திருவையாறில்
ஐயாறப்பர் 

🌹 🌿 திருவண்ணாமலையில் அண்ணாமலையார் 

🌹 🌿 திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர் 

🌹 🌿 திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் 

🌹 🌿 திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்

🌹 🌿 திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் 

🌹 🌿 திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர் 

🌹 🌿 திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் 

🌹 🌿 திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர் 

🌹 🌿 திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர் 

🌹 🌿 திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர் 

🌹 🌿 திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்

🌹 🌿 திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர் 

🌹 🌿 திருச்சியில் தாயுமானவர் 

🌹 🌿 திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர் 

🌹 🌿 திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் 

🌹 🌿 திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர் 

🌹 🌿 திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர்

🌹 🌿 திருக்கண்ணபுரத்தில் ராமநாதர்

🌹 🌿 திருமழபாடியில் வைத்தியநாதர் 

🌹 🌿 திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர்

🌹 🌿 திருப்புனவாசலில் விருத்தபுரீஸ்வரர் 

🌹 🌿 திருவண்டுதுறையில் வண்டுறைநாதர்

🌹 🌿 திருமாணிக்குழியில் வாமனபுரீஸ்வரர் 

🌹 🌿 திருவாளப்புத்தூரில் மாணிக்கவண்ணர் 

🌹 🌿 இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில் , ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

🌹 🌿 'த' வரிசையில் ஒரு பாதி ஊர்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். இதற்கே மூச்சு வாங்குது.

🌹 🌿 இன்னும் மயிலாப்பூரில் காபாலீஸ்வரர் , சிதம்பரத்தில் நடராஜர் , வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதன், மேலகோட்டையுரில்  கோமதிஸ்வர் என ஆரம்பித்தால் பதிவு நீண்டு கொண்டே இருக்கும்.

🌹 🌿 தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63. 

🌹 🌿 ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.

🌹 🌿 தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.

🌹 🌿 எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு , இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.

🌹 🌿 இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர். வாழ்க தமிழர்களின் புகழ்.

வாருங்கள் நம் முன்னோர்கள்
எதிர்கால சந்ததிக்காக
 பாதுகாத்து வழிபட்ட பழம்பெருமை வாய்ந்த சிவனார் ஆலயங்களை நாமும் பாதுகாத்து வழிபடுவோம்

ஆலவாயர் அருட்பணி மன்றம்.மதுரை

பழமையான சிவனார் ஆலயங்களில் மூலிகை பொடிகளால் அபிடேக பணியில் என்றென்றும்

🌻சைவம்போற்றி தமிழ்வளர்ப்போம்🌻

 *🌻தமிழ் எங்கள் மொழி சைவம் எங்கள் வழி 🌻*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
**சொக்கநாதா
சொக்கநாதா 
🙏🙏🙏🙏🙏🙏🙏

Tuesday, November 1, 2022

தலச் சிறப்புகள்:பஞ்சபூத தலம்: நீர்த்தலம்திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும்.

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும், நான்கு திசைகளில்  கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களையும் கொண்டது.
திருவானைக்கா எனப்படும், திருவானைக்கோவில் திருச்சிக்கு 
அருகே அமைந்துள்ள மாபெரும்சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர்,  அருணகிரிநாதர், தாயுமானவர்,  ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம்என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில்  ஒன்றான #நீருக்கு உரியது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இது அறுபதாவதாக அமைந்துள்ளது. 

தல வரலாறு:
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

சிவ பக்தர்களாக யானையும் சிலந்தியும் சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.

சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

திருநீறு தங்கமான எம்பிரானின் திருவிளையாடல் இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

தலச் சிறப்புகள்:
பஞ்சபூத தலம்: நீர்த்தலம்திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில்  அப்பு என்பதன் பொருள் நீர். மூலவரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். கடும் கோடை காலத்திலும், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம், நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி 
என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.  

திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க 
ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். 

அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

அம்பிகை வழிப்பட்ட லிங்கம்
இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.

குபேர லிங்கம்மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிப்பட்டததால், சிவன் அருள் பெற்று செல்வேந்தன் ஆனான் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்களில் ஒன்றாக குபேர லிங்க சந்னதியும் ஆகிப்போனது.

பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கும், திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் அமையவும், தண்ணீர் பஞ்சம் நீங்கவும், இந்த கோவிலில் வீற்றிருக்கும் அம்பாள் அகிலாண்டேஸ்வரியையும்,  ஜம்புகேஸ்வரரையும்  மனம் உருகி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

சிற்பங்கள்பல அரிய சிற்பங்களும் இத்தளத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னதிக்கு இடது புரம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தூண்களில் இந்த சிற்பம் காணக் கிடைக்கின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சந்ததிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.

அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மி்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்திரூபமாக செதுக்கப்பட்டுள்ளாள். 

ஆலய பிரகாரம் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழி வரலாற்றுச் சிறப்புகள் கல்வெட்டுகள் பல்வேறு  சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இதுவரை இங்கு கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிகவும் தொன்மையானவை.

அரசர், சான்றோர் திருத்தொண்டு இத்தலப் பெருமை அறிந்து தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ  பாண்டியர்கள் மட்டும் அன்றி போசளப் பேரரசர்கள், விஜயநகர அரசர்கள்,  மதுரை நாயக்கர்கள் போன்றோரும் ஆற்றிய திருப்பணிகளை சுமார் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.

ஐந்து பிரகாரங்களைக் கொண்ட இத்திருத்தலத்தின் முதலாம் பிராகாரத்திலான துவார பாலகர் திருவுருக்களை செய்வித்தவர் இளைய நயினார் மகனார் தெய்வங்கள் பெருமாள். நீலகண்ட நாயக்கர் நான்காம் பிராகாரத்தில் அகிலாண்டநாயகியின் முன் உள்ள பசுபதீஸ்வரம் உடையாரை எழுந்தருளுச செய்தார். சதாசிவ வரஜப்பைய யாஜி தீட்சிதராயர் இக்கோயிலின் உற்சவ மண்டபத்தை உருவாக்கினார்.முதற் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள எடுத் தருளிய ஷ்ரீபாதீஸ்வரம் உடைய நாயனார் கோயிலைக் கட்டியவர், திருஞானசம்பந்தர். சந்தபேந்திரன் நான்காவது பிராகாரத்திலுள்ள மேலக்கோபுரத்தினை எழுப்பியருளினார்.வலம்புரி விநாயகரையும், சுப்பிரமணியரையும் எழுப்பியருளியவர் மும்முடி திம்மரசர்.விபூதி பிராகாரத்து மதிற்சுவரைத் தோற்றுவித்தவன் திருநீற்றுச் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான். எம்பிரானின் திருவிளையாடல்களில் ஒன்றான திருநீறு தங்கமாக மாறிய அற்புதம் காலமும் இதுவேயாகும்.பெரும் சிவனடியாரான வீரசோம ஈசுவரன் என்னும் ஹொய்சால மன்னன் இத்திருத்தலத்தில் கிழக்கில் ஒரு ஏழுநிலைக் கோபுரத்தை எழுப்பினான்.பாண்டிய அரசர்களான மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் தமது பிறந்த நாளை ஒட்டி இத்திருத்தலத்திற்கு நிபந்தங்களை வழங்கியுள்ளனர். திருபுவனச் சக்கரவர்த்தி என்னும் சிறப்புற்ற இராஜேந்திர சோழன் (கங்கை கொண்ட சோழன்) இருபத்தைந்து வேலி நிலத்தை இத்திருத்தலத்திற்கு இறையிலியாக அளித்தான்.திருத்தலப் பாடல்கள்
திருவானைக்கா நாயன்மார்கள் 
மற்றும் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும், நான்கு திசைகளில்  கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களையும் கொண்டது.

மற்றும் தாயுமானவரின் பாடல் பெற்ற ஒரு தலம். 

மூலவர்:  ஜம்புகேஸ்வரர்
பிறபெயர்கள்: திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர்
அம்மன்: அகிலாண்டேஸ்வரி
தல மரம்: வெண்நாவல்
தீர்த்தம்: காவிரி, இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம்
தொன்மை: 1000-2000 வருடங்களுக்கு முற்பட்டது.
சிறப்பு: நாயன்மார்கள் மற்றும் சேக்கிழார் பெருமான் போன்றோரின் பாடல்கள் பெற்ற தலம்.

ஓம் நமசிவாய...! இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.

மூலவர்:  ஜம்புகேஸ்வரர்
பிறபெயர்கள்: திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர்
அம்மன்: அகிலாண்டேஸ்வரி
தல மரம்: வெண்நாவல்
தீர்த்தம்: காவிரி, இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம்
தொன்மை: 1000-2000 வருடங்களுக்கு முற்பட்டது.
சிறப்பு: நாயன்மார்கள் மற்றும் சேக்கிழார் பெருமான் போன்றோரின் பாடல்கள் பெற்ற தலம்.

ஓம் நமசிவாய...!

உலக அதிசயமான தஞ்சை பெரிய கோயில் என்கின்ற மாபெரும் பொக்கிஷத்தை தந்த மன்னர் ராஜராஜ சோழனின் பெருமையை உலகம் முழுவதும் பரவட்டும்…

உலக அதிசயமான தஞ்சை பெரிய கோயில்"... -  
   
தஞ்சைப் பெரிய கோயில் தஞ்சாவூரில் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவ ஸ்தலமும், இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். சோழ மன்னர்களின் பரம்பரையில் தோன்றிய ராஜ ராஜ சோழன் சிவபெருமான் மீது, தான் கொண்ட அளவு கடந்த பக்தியால் தஞ்சையில் கி.பி 1010இல் கட்டி முடிக்கப்பட்டது தஞ்சை பெரிய கோயில்.

இந்த கோயிலுக்கு ராஜராஜன் வைத்த பேர் ராஜராஜேஸ்வரம் பெருவுடையார் கோயில். பிறகு மாராத்தியர்கள் ஆண்ட போது அது பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்பட்டது. இன்று அதை நாம் தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கிறோம். கருவூர் சித்தர் அறிவுரைப்படியே ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. மூலவர் சன்னதியின் பின்புறம் கருவூர் சித்தருக்கும் சந்நிதி அமைத்துள்ளது.

தஞ்சை பெரிய கோயில் தென் இந்திய வரலாற்றில் தலை சிறந்த சின்னமாகும். கட்டடக் கலை, சிற்பக் கலை, செப்புத் திருமேனிகள் வார்ப்புக்கலை, ஓவியக் கலை, கல்வெட்டுகள் கூறும் செய்திகள் ஆகிய அனைத்துக்கும் சிறப்பிடமாகத் திகழ்கிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பும் கொண்டது.

1987 ஆம் ஆண்டு “ஐ. நா.” சபையின் உலக பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாதுகாப்பு அமைப்பால் இக்கோயில் “பாரம்பரிய முக்கியத்தும் கொண்ட இடம் மற்றும் நினைவு சின்னம்” என்று அறிவிக்கப்பட்டது.

உலக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோயில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால், சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் பெரியகோவிலின் அதிசயங்கள்:

பெரிய கோபுரம்:

தஞ்சாவூர் பெரியகோவிலின் சிறப்பே அதன் கலைநயம் மிக்க கட்டமைப்பு, கோபுரம் வடிவமைக்கப்பட்டிருப்பது தான். பூமியிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி உள்ளது. ஒரு டிகிரி கோணம் கூட சற்று சாய்வு இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. அதாவது சூரிய ஒளி பட்டு, கோபுரத்தின் உச்சி நிழல் கீழே படாதவாறு உள்ளது. இது பழந்தமிழர்களின் விஞ்ஞானபூர்வமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

இக்கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர்ந்து காணப்படும் விமானம், “தட்சிணமேரு” எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

சிவலிங்கம்:

கருவறையில் உள்ள சிவலிங்கம் ஆறு அடி உயரமும் ஐம்பத்து நான்கு அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், மற்றும் பதிமூன்று அடி உயரமும் இருபத்திமூன்று அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் ஆகியன தனித் தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள துவார பாலகர்களை பதினெட்டு அடி உயரத்திற்கு ஒரே கல்லில் செதுக்கியுள்ளனர்.

மகாநந்தி:

இங்கு சிவபெருமானுக்கு எதிரில் உள்ள பெரிய நந்தி சிலையும் ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. இந்த நந்தியின் உயரம் பன்னிரெண்டு அடி, நீளம் பத்தொன்பதரை அடி, அகலம் எட்டேகால் அடி.

ராஜ ராஜன் வைத்த நந்தி சிலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதால், அதில் அதிர்ச்சியும், பிரமிப்பும் அடைந்த மராட்டியர்கள் அந்த நந்தி சிலையை அகற்றிவிட்டு புதிய நந்தி சிலை வைத்துள்ளனர். இப்போது ராஜ ராஜன் வைத்த பழைய நந்தி சிலை கோயில் பிரகாரத்தில் வடதிசை நோக்கியவாறு வைக்கப்பட்டுள்ளது.

கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ கலசம்:

கோயில் விமானத்தின் உச்சியில் உள்ள பாறை போன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது என்றும், 80 டன் எடை கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வட்டவடிவ கலசம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இருந்தாலும் ஒரே கல் போன்று தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை ஒன்றுகொன்று இணைக்கப் பட்டுள்ளது என்று வரலாற்று ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்தது.

அஸ்திவாரம்:

மொத்தம் ஒன்றரை லட்சம் டன்கள் எடை கொண்ட கருங்கற்களை உடைய கோயிலைத் தாங்கி நிற்பதற்கு ஆழமான அடித்தளம் (அஸ்திவாரம்) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இக்கோயிலின் ஆயிரக்கணக்கான அதிசயங்களில் ஒன்றாக கோயிலுக்கான அடித்தளம் வெறும் 5 அடி ஆழம் மட்டுமே போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கோயில் அமைந்துள்ள இடம் சுக்கான் பாறை பகுதி. கோயிலின் கட்டுமான அளவுக்குப் அந்தப் பாறையை ஆழமாகத் தோண்டி தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது. இது தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. அதனால்தான் தலையாட்டி பொம்மைகள் தஞ்சாவூரில் செய்தார்களோ!!

கிரானைட் கற்கள்:

மன்னர் ராஜ ராஜ சோழன் இக்கோவில் முழுவதையும் கிரானைட் கற்களால் கொண்டு கட்டியுள்ளார். ஏறக்குறைய 1,30,000 டன் கற்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. கோவில் கட்டுமானத்தில் மரம், சுடு செங்கல், பூராங்கல் இல்லாமல் மொத்தமும் நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே. அருகே மலைகள் இல்லாத நிலையிலும், மற்றும் நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையிலும் சுமார் 50 கல் தொலைவில் இருந்து கோயிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது அதிசயமாகும்.

இக்கோவிலை ராஜராஜ சோழனின் ஆணைப்படி கட்டி கொடுத்த சிற்பிகள் 1.வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன், 2.குணவன் மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன், 3.இலத்திச் சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்ற இம்மூவரும் ஆவர். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில், மூன்று சிற்பிகளின் பெயர்களும் காணப்படுகின்றன.

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள்:

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள் பல வகைகளில் தனித்தன்மை மற்றும் சிறப்பு பெற்றவை. குறைந்தது எண்பைத்தைந்து கல்வெட்டுகள் இங்கு இருக்கின்றன. இவை நமக்கு பல அரிய விஷயங்களைத் தருகின்றன. மொத்தம் கோவில் பணியில் ஈடுபட்ட ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் எல்லாம் கல்வெட்டுகளில் உள்ளன. இதையெல்லாம் நுணுக்கமாக கல்லில் பொறித்து வைத்த மன்னரின் நிர்வாகம் எவ்வளவு சீரும் சிறப்புடனும் நடந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. நாள்தோறும் அபிஷேகத்திற்கும், விளக்குகள் எரிப்பதற்கும், கோவில் பணிக்காக தளிச்சேரிப் பெண்கள் நியமிக்கப்பட்டதையும், மெய்க்காவலர்கள் - பரிசாரகர்கள் நியமிக்கப்பட்டதையும், திருக்கோவிலில் பணியாற்றியவர்கள் பற்றியும், நடந்த திருவிழாக்கள் பற்றியும் இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள், மிக அழகாகப் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. தஞ்சைப் பெரிய கோவிலுக்கு மெய்க்காப்பாளர்கள் நியமிக்கப்பட்ட விபரமும் கல்வெட்டில் காணப்படுகிறது. மற்றும் மன்னன் ராஜராஜனுக்கு இந்த ஆலயம் எழுப்பிட பலர் உதவியிருக்கிறார்கள். இவ்வாலயம் எழுப்ப உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கோவிலைப் பற்றிய அநேக தகவல்களை கல்வெட்டில் காண்பது என்பது இந்த கோயிலின் சிறப்பு. இத்தகு கல்வெட்டுகளின் மூலம் ஓர் ஒழுங்கான ஆவணத்தை அழியாத வகையில் நமக்கு விட்டு சென்றிருக்கிறார் இராஜராஜ சோழன் என்றே சொல்ல வேண்டும். இவற்றை ஆவணங்களாக அல்லது செப்பு பட்டயங்களாக உருவாக்கியிருந்தால் அவை அழிந்து போக வாய்ப்பு உண்டு. ஆனால் கல்வெட்டுகளாக பொறித்ததன் மூலம் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் அவை நமக்கு காணக் கிடைப்பது சிறப்பாகும்.

கோயிலில் உள்ள கல்வெட்டில் கோயிலை கட்ட யார் பணியாற்றினார்களோ, கட்டடக்கலை நிபுணர்களிலிருந்து அவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என கோயில் பணி செய்ய உதவியவர்களின் பெயர் கூட கல்வெட்டில் பதிவு செய்திருப்பது ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையும், மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும், ராஜ ராஜ சோழன் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் புலப்படுகிறது.

மன்னன் ராஜராஜன் பொறித்த ஒரு கல்வெட்டு சொல்லும் செய்தி பிரமிப்பானது. “இந்தக் கோயிலை மக்கள் பாதுகாக்க வேண்டும். எனக்குப் பின்னால் இந்தக் கோயிலைக் காப்பவர்களின் காலில் நான் இப்போதே விழுந்து தொழுகிறேன்” என்று எழுதி வைத்திருக்கிறார்.

பழமையான அற்புத ஓவியங்கள்:

இங்கு ராஜராஜனுடன் அழகிய உருவத்துடன் கருவூர்த்தேவர் என்னும் சித்தரும் காட்சியளிக்கும் ஓவியம் உள்பட பல ஓவியங்களும் உள்ளன. இவை அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையான சிறப்பு வாய்ந்தவை.

மழைநீர்சேகரிப்புத் திட்டம்:

மழைநீர் சேகரிப்புத் திட்டத்துக்கும் ராஜராஜ சோழனுக்கும் சம்பந்தம் உண்டு என்றால் ஆச்சரியப் படுவீர்கள். மழைநீர் சேகரிப்பை முதன் முதலில் செயல்படுத்திய மன்னர் ராஜராஜசோழன்தான்! பெரியகோயிலில் விழும் மழைநீரை துளியும் வீணாக்காமல் அப்படியே கோயிலுக்கு அருகிலுள்ள சிவகங்கை குளத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று திட்டம் போட்டார். மழை நீர் செல்வதற்கு இரண்டு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் விழுகிற மழைநீர், தரையில் உள்ள அழுக்கோடு நந்தவனத்திற்குச் செல்லும். பின்னர் நல்ல நீர், சிவகங்கைப் பூங்காவில் உள்ள குளத்திற்குச் செல்லும். அந்தக் காலத்திலேயே மழை நீரைச் சேமிக்கும் வியக்கத்தக்க முறையை ராஜராஜசோழன் பெரியகோயிலில் அறிமுகப் படுத்தியிருக்கிறார்.

மன்னர் ராஜராஜசோழன் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரை ‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்துள்ளார்.

மன்னர் ராஜராஜனின் பிறந்த நட்சத்திரம் ஐப்பசி மாத சதய நட்சத்திரம். அதனால் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத சதய நட்சத்திர தினத்தை ராஜராஜனின் சதய விழாவாக தஞ்சையில் கொண்டாடப்படுகிறது.

கும்பாபிஷேகம்:

மன்னர் ராஜராஜ சோழனுக்கு பிறகு அரியணை ஏறிய ராஜேந்திர சோழனும், பின்னர் வந்த சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், நாயக்கர்களும், தஞ்சை பெரிய கோவிலை நன்கு பராமரித்து அவ்வப்போது செப்பனிட்டு பாதுகாத்து கும்பாபிஷேகமும் செய்து வந்துள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், கடந்த 1980ஆம் ஆண்டிலும், அதற்கு அடுத்ததாக 1997ஆம் ஆண்டிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றன. அதன் பின்னர் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வருடம் 2020-ல் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது  

உலக அதிசயமான தஞ்சை பெரிய கோயில் என்கின்ற மாபெரும் பொக்கிஷத்தை தந்த மன்னர் ராஜராஜ சோழனின் பெருமையை உலகம் முழுவதும் பரவட்டும்…

அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும்.

_அஷ்டதிக் பாலகர்கள்
அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும்.

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை எண்திசைகள் ஆகும்.

இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர்.

அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர் என்று கருதப்படுகிறது. மேலும் இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாகவும் இருப்பதாகவும் இந்துமதத்தில் நம்பப்படுகிறது.

 இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக கருதப்படுகிறது.

அஷ்டதிக் பாலகர்கள் கோபுரங்கள், வாயில்கள், சுவர்கள், கூரைகள் ஆகியவற்றில் ஓவியங்களாகவும், சிலைவடிவிலும் காணப்படுகின்றனர். இனி ஒவ்வொருவரையும் பற்றிக் காண்போம்.

இந்திரன்
**********

இந்திரன்
இவர் கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தேவர்களின் தலைவனாகவும் உள்ளார். இவரின் துணைவியார் இந்திராணி அல்லது சசிதேவி என்று அழைக்கப்படுகிறார்.
இவர் ஐராவதம் என்னும் வெள்ளை யானையினை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள வஜ்ராயுதம் ஆகும். இவரே அஷ்டதிக் பாலகர்களின் தலைவர் ஆவார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.

அக்னி தேவன்
****************

அக்னி தேவன்
இவர் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. வேள்வின்போது இடப்படும் நிவேதானப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய துணைவியார் சுவாகா தேவி ஆவார்.
இவருடைய வாகனம் ஆட்டுகிடா ஆகும். இவருடைய ஆயுதம் தீச்சுவாலையுடன் கூடிய வேல் ஆகும். இவரை வழிபட தேக வனப்பு மற்றும் பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.

யமன்
*******

யமன்
இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். இவர் எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என அழைக்கப்படுகிறார். அவர் இறப்பின் கடவுள் ஆவார்.
சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி யமி அல்லது யமுனை என்ற நதியாகவும் கூறப்படுகிறார்.
இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் குபேர ஜாயை ஆவார். இவர் எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் பாசக்கயிறு ஆகும். .யமனை வழிபட்டால் தீவினைப்பயன்களை அகற்றி நல்வினைப் பயன்களை பெறலாம்.

நிருதி
*******

நிருதி
இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் கட்கி ஆவார். இவருடைய வாகனம் பிரேதம். இவருடைய ஆயுதம் கட்கம் என்னும் வாள் ஆகும். இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும்.

வருண பகவான்
******************

வருண பகவான்
இவர் மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். ஆறு,குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன.
ஐவகை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். இவருயைட துணைவியார் வாருணி ஆவார்.
இவருடைய வாகனம் மரகம் என்ற மீன் ஆகும். இவர் வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவு பஞ்சம் தீரும்.

வாயு பகவான்
****************

வாயு பகவான்
வாயு வடிவமற்றவர். மக்களின் உயிர் மூச்சு, பிராணனுக்கு ஆதாரமாக உள்ளவர். இவர் வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.
இவரின் துணைவியார் வாயுஜாயை ஆவார். இவருடைய வாகனம் மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட்டால் நீண்ட ஆயுளையும் பலத்தையும் பெறலாம்.

குபேரன்
**********

குபேரன்
இவர் வடக்கு திசையின் அதிபதியாவார். செல்வத்தின் அதிபதியாகவும் இவரைக் கூறுவோர் உண்டு. இவர் சிவனை நோக்கி தவம் இருந்து வடக்கு திசையின் அதிபதியானதாக புராணங்கள் கூறுகின்றன.
இவரின் துணைவியார் யட்சி ஆவார். இவர் மதுஷனை வாகனமாக கொண்டுள்ளார். இவரின் ஆயுதம கதை ஆகும். இவரை வழிபட சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.

ஈசானன்
**********

இவர் வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் வடிவம் ஆவார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவரின் துணைவியார் ஈசானயஜாயை ஆவார்.
இவர் எருதினை வாகனமாகக் கொண்டவர். திரிசூலம் இவரின் ஆயுதமாகும். இவரை வழிபட அறிவும், ஞானமும் கிடைக்கும்.
நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம்.

நன்றி -------

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள்93 வருட உலக அனுபவம்.. 73 வருட துறவறம்: 48 வருட காலம் நமக்கெல்லாம் குருவாக விளங்கி நல்வழிகாட்டியவர்

⛩️⛩️⛩️மகான்கள்...
 
🔥சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமி. (2)

🙏🏼ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள்

93 வருட உலக அனுபவம்.. 73 வருட துறவறம்: 48 வருட காலம் நமக்கெல்லாம் குருவாக விளங்கி நல்வழிகாட்டியவர் திருக்கயிலாய பரம்பரையில் 450 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி குரு முதல்வர் குருஞான சம்பந்தரால் தோன்றி அருளிய குருபீடமே தருமை ஆதீனம். இந்த ஆதீனத்தின் 26வது குருமகா சந்நிதானம் அவர்கள் காட்டுமன்னார்குடி வட்டம், சிறுகாட்டூர் என்னும் திருத்தலத்திலே கார்காத்தார் குலம் - முனையதரையன் கோத்திரம் கந்தசாமி பிள்ளை அவர்களுக்கு ஐந்தாவது மகனாக 21.4.1926ம் ஆண்டு அவதரித்தார்.

🔥🙏🏼திருஞானசம்பந்தன் என்ற திருநாமத்தோடு, இவர் உள்ளூர் திண்ணைப்பள்ளியிலும், 5ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வியும் பயின்றார். 1936ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாசி மகோற்சவத்தில் 6ம் திருநாளன்று தந்தையருடன் விருத்தாசலம் சென்று சபாபதி செட்டியார் தேவாரப்பாடசாலையில் சேர்ந்து திருமுறை பயிற்சி பெற்றார்.

பின்னர் திருப்பனந்தாள் காசித்திருமடத்து 20 ஆவது அதிபர் ஸ்ரீலஸ்ரீ அருணந்தித் தம்பிரான் சுவாமிகளால் ஆதரிக்கப்பெற்று திருமுறைகள் பாடியும், தருமையாதீனம் 25 ஆவது குருமகா சந்நிதானம் கயிலை குருமணிகளால் ஆற்றுப்படுத்த பெற்றும், பின்னர் தருமையாதீனத்தில் 1945 ஆம் ஆண்டு ஆனி மாதம் 31 ல் துறவு ஏற்றார்கள். முன்பு செய்த தவத்தின் பயனால் 25வது குருமகா சன்னிதானத்தை தரிசித்து விண்ணப் பம் செய்தார். அடுத்த நாள் குருவாரம் வடக்கு குருமூர்த்தம் சச்சிதானந்த விநாயகர் கோயிலில் காஷாயம் வழங்கச் செய்தருளினார்கள். அது முதல் ஸ்ரீமத் சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். திருப்பனந்தாளில் ஓதுவார் பணியில் இருந்தபோதே காசிமடத்தின் சார்பில் தொடங்கிய காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் வித்துவான் புகுமுக வகுப்பிலும் சேர்ந்து பயின்றார். தருமபுரம் வந்தவுடன் தருமை குருமணியின் அருளால் தொடங்கப்பெற்ற புகுமுக வகுப்பில் சேர்ந்து 1946ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றார். 1945ம் ஆண்டு ஆவணி மாதத்தில் கயிலை குருமணிகளிடம் சமய தீட்சை பெற்றார். தீட்சா நாமம் சோமசுந்தரம் என்பது அதே ஆண்டில் ஐப்பசி கந்த சஷ்டியன்று விசேட தீட்சை பெற்று சிவபூசை எழுந்தருள பெற்றார்.

1950ம் ஆண்டு பிப்ரவரியில் சிவராத்திரியன்று உடையவர் பூசை எழுந்தருளப் பெற்றார். 1951ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி நிர்வாண தீட்சை பெற்று 23.9.1951ல் சொக்கநாதர் பூசை செய்யும் பேறு பெற்றார். 1953 மார்ச் மாதம் திருச்சி மலைக்கோட்டை மவுன மடம் கட்டளை விசாரணை பணியில் அமர்ந்தார். பின்னர் சென்னை தியாகராய நகரில் சைவமும் தமிழும் தழைத்து இனி ஒங்கவும் திருமுறைப் பாடல்கள் திக்கெல்லாம் முழங்கவும்” கயிலை குரு மணியவர்கள் ஆதீனத் திருமடம், ஆதீன தேவஸ் தானங்களின் சார்பில் சமயப் பிரசார நிலையம் தொட ங்கினார். அதில் பிராசார நிலைய விசாரணையாக பணியாற்றி வந்தார்.

11.11.1971 ம் ஆண்டு காசிவாசி அருணந்தி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் காசி மடம் இளவரசு காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் குன்றக்குடி அடிகளார் மற்றும் திருக்கூட்டத்து தம்பிரான் சுவாமிகள் அனைவரும் சொக்கநாதர் திருமுன்னிலையில் கூடி ஒருமனதாக மவுனமடம் கட்டளை விசாரணையும் சென்னை சமயப்பிரசார நிலைய விசாரணையுமாக இருந்த சோமசுந்தர தம்பிரான் சுவாமிகளை தருமையாதீனம் குருமகா சன்னிதானமாக அறிவித்தனர். அவருக்கு சண்முகதேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் என்று நாமதீட்சை (பெயர்) சூட்டப்பட்டது. கயிலை குருமணிக்கு செய்ய வேண்டிய குருமூர்த்த அமைப்பு கிரியைகளையெல்லாம் சிவாகம முறைப்படி 10 நாட்கள் செய்து குருபூஜையும் சிறப்பாக செய்தார். 19.11.1971 முதல் குருஞான சம்பந்தர் அமைத்தருளிய ஞான பீடத்தில் எழுந்தருளினார். அது முதல் சைவ சமயப் பரிபாலனம் செய்து வந்தார். இவருக்கு கடந்த 5.5.2006ல் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சதாபிஷேக விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சைவமும் தமிழும் தழைத்து இனி ஓங்குக என்பது தருமை ஆதீனத்தின் குறிக்கோள் உரை. அதை நடைமுறைப்படுத்தி வாழ்ந்து வந்தார்.

🔥திருக்கோயில் குடமுழுக்கு, பன்னிருத்திருமுறை வெளியீடு, கல்வி நிறுவனங்கள் தொடங்கல் என பல்வேறு சிறப்புகளுடன் தமது ஆட்சி காலத்தை பொற்காலமாக நிகழ்த்தினார். இவரது வயது மூப்பின் காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2019 டிசம்பர் 4ம் தேதி முக்தியடைந்தார். 

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக, திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற 27 ஆலயங்கள் தமிழகம் மட்டுமின்றி, காசி உள்ளிட்ட இடங்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை திக்கு நோக்கி மனம் மொழி மெய்களால் வணங்கி மகிழ்வோம்.

திருச்சிற்றம்பலம்..🙏🏼 நற்பவி 🙏🏾 நற்பவி

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...