Wednesday, July 3, 2024

திருநெல்வேலி புளியறை சதாசிவமூர்த்தி திருக்கோயில்..

அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில்.. 
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்   –     சதாசிவமூர்த்தி

உற்சவர்   –     சதாசிவம்

அம்மன்   –     சிவகாமி

தல விருட்சம்   –     புளியமரம்

தீர்த்தம்   –     சடாமகுடம்

பழமை   –     500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்   –     புளியரை

மாவட்டம்   –     திருநெல்வேலி

மாநிலம்   –     தமிழ்நாடு
சமண மதம் மேலோங்கிருயிருந்த காலத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் அவர்களின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது. இதனால் சிவபக்தர்கள் நடராஜர் சிலையை எடுத்துக் கொண்டு தெற்கே வந்தனர். திரிகூடாசல மலை எனப்படும் குற்றாலத்தைக் கடந்து, புளியமரங்கள் நிறைந்த வனத்தை அடைந்தனர். சுவாமியை அங்கிருந்த பெரிய புளிய மரப்பொந்து ஒன்றில் மறைத்து வைத்தனர். அம்மரத்தின் உரிமையாளரின் கண்ணில் சிலை பட்டது. அவர் தினமும் நடராஜரை வணங்கி வந்தார். பல ஆண்டுகள் கழித்து சிலையை மீட்க சிதம்பரம் பக்தர்கள் புளியமரப் பொந்தை தேடி வந்தனர். சிலையை மீட்டுச்சென்றனர்.

சுவாமியை பூஜிக்க வந்த மரத்தின் உரிமையாளர் சிலை காணாமல் போனது கண்டு வருந்தினார். சுவாமியை வேண்டினார். அந்த இடத்தில் மீண்டும் எழுந்தருள வேண்டினார். சுவாமி இலிங்க வடிவில் அங்கே சுயம்புவாகத் (தானாக) தோன்றினார். இவரை “சதாசிவம்” என அழைத்தார். இதையறிந்த அப்பகுதி மன்னர் அவ்விடத்தில் கோயில் கட்டினார்.

பொதுவாக தெட்சிணாமூர்த்தி சன்னதி சிவாலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால், இத்தலத்தில் மூலவருக்கும், வாசலில் உள்ள நந்திக்கும் நடுவே உள்ளது. இது வேறெந்த சிவாலயத்திலும் இல்லா சிறப்பு. கோயிலுக்குள் நுழைய 27 படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை 27 நட்சத்திரங்களாக கருதப் படுகின்றன. ஜாதகதோஷம் உள்ளவர்கள் இந்தப் படிகளில் ஏறிச் சென்று, சிவனைப் பூஜித்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

புளிய மரத்தின் அடியில் சிவன் அருட்காட்சி தந்ததால், புளியரை என்றழைக்கப்படும் இவ்வூர், சிறிய சிருங்கேரி என்ற சிறப்பு பெயருடனும் அழைக்கப்படுகிறது. சிவாலயமாக இருந்தாலும் தெட்சிணாமூர்த்திக்கே மதிப்பு. குருபரிகார ஸ்தலமாக திகழும் இங்கு வியாழக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகளவில் உள்ளது. சதாசிவமூர்த்திக்கு வலப்புறம் அருள்பாலிக்கும் அம்பாள், சிதம்பரத்திலிருந்து கொண்டு வரப்பட்டமையால் சிவகாமி அம்பாள் என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள்.

சிவனுக்கு வலது பின்திசையில் நவநீதகோபாலர், சுற்றுப்பிரகாரத்தில் சதாசிவமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரன், சுப்பிரமணியர், பைரவர், நாகர், சந்திரன் மற்றும் சப்தகன்னிகள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இத்தலவிநாயகர் தெப்பக்குளவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைக்கின்றனர்.

திருவிழா:

தை மாதம் 10 நாட்கள் பிரதானத்திருவிழா, குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, மகாசிவராத்திரி, நவராத்திரி, ஆடிப்பூரம்.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, குழந்தைபாக்கியம் கிடைக்க, கல்வி, வேலை, வியாபாரங்களில் சிறக்க, நட்சத்திரம் மற்றும் நாகதோஷங்கள் நீங்கிட வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டிக்கொண்ட காரியங்கள் நடந்திட சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி பூஜை, குருபகவான், தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை, முல்லைப்பூ மாலை சாத்தி தயிர்சாத நைவேத்யம் படைத்து கோடி தீபம், சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றப்படுகிறது.

இருப்பிடம் :

தென்காசியில் இருந்து புளியரை செல்ல பல பஸ்கள் உள்ளன. ஸ்டாப்பில் இறங்கி ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள கோயிலை அடையலாம்.

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

பூஜைகள் நடைபெறும் முறைகள்.....

பூஜைகள் செய்யும் முறை.. 
◆பூசை என்பது இந்து சமய வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். பொதுவாக தெய்வத் திருவுருவங்களை பக்தி உணர்வுடன் வழிபடுதலே பூசை அல்லது பூசனை என்று கூறப்படுகிறது. அதோடு, குருமார்கள், மகான்கள், போற்றுதலுக்குரிய பெரியோர்கள், முன்னோர்கள், பெற்றோர் ஆகியோரை வழிபாட்டுணர்வுடன் தொழுவதும் பூசை என்பதில் அடங்கும்◆

◆பூசை விளக்கம் தொகுப்பு..◆

◆பூசை என்ற சொல்லுக்கு இறையன்பில் மலர்தல் என்பது பொருள். பக்தர்கள் தாங்கள் வழிபடும் விக்கிரகங்களில் தெய்வத்தின் உயிர்ச்சக்தி இருப்பதாகக் கொண்டு பல்வேறு செயல்பாடுகளைச் செய்வார்கள். பொதுவாக, பூஜையில் பதினாறு வகைசெயல்கள்(உபசாரங்கள்) செய்யப் படவேண்டும் என்று ஆகம நூல்கள்  குறிப்பிடுகின்றன.◆

1...தியானம் - பூசைக்குரிய இறைவன் அல்லது இறைவியின் உருவத்தை தியானித்தல்

2...ஆவாகனம் - தியானிக்கப் பட்ட தெய்வத்தை வருமாறு அழைத்தல்

3...ஆசனம் - தெய்வம் அமர இருக்கை அளித்தல்

4...அர்க்கியம் - கைகழுவ நீர் அளித்தல்

5..ஆசமனியம் - பருக நீர் அளித்தல்

6...பாத்யம் - பாதம் கழுவுதல்

7..அபிடேகம் - நீராட்டுதல். விரிவான பூசைகளில் பால், தயிர், தேன், நெய் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிடேகம் செய்யப் படும்.

8...வஸ்திரம் - ஆடை அணிவித்தல்

9..ஆபரணம் - அணிகலன்கள் பூட்டுதல்

10...கந்தம் - சந்தனம், குங்குமம் போன்ற நறுமணப் பொருட்களைப் பூசுதல்

11..அர்ச்சனம் - மலர்மாலைகள் சூட்டுதல், 

12..நறுமலர்களால் அருச்சித்தல்.

13..தூபம் - அகில், சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவற்றால் நறுமணப் புகை காட்டுதல்

13..தீபம் - நெய்விளக்கேற்றி தெய்வத் திருவுருவத்தைச் சுற்றிக் காட்டுதல்

14..நைவேத்யம் - பல்வேறு உணவுப் பொருட்களை இறைவனுக்குப் படைத்தல். இந்தப் படையலைப் பின்னர் பக்தர்கள் பிரசாதமாக உண்பர்.

15...நீராஜனம் - கற்பூரம் ஏற்றி ஆரத்தியெடுத்தல்

16..தாம்பூலம் - வெற்றிலை, பாக்கு அளித்தல்
◆விரிவான பூசைகளில் இத்துடன் இசைபாடுதல், இசைக் கருவிகளை முழக்குதல், நடனமாடுதல் ஆகிய செயல்களும் இடம்பெறுகிறது. இது கருதியே பல பெரிய இந்துக் கோயில்களில் பாடகர்கள், நாதஸ்வரம், தவில், மிருதங்கம் போன்ற கருவிகளில் வல்ல இசைக்கலைஞர்கள், நடன மாதர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.◆

◆வேத மந்திரங்கள் தொகுப்புகள்..◆

◆பூசையின் போது வேத மந்திரங்களையும், அந்தக் குறிப்பிட்ட தெய்வம் மீது புனையப்பட்ட தோத்திரங்களையும், பக்திப் பாடல்களையும் ஓதுவார்கள். தமிழகத்தில் பக்தி இலக்கிய  காலகட்டத்தில் பூசை மிகப் புகழ் பெற்ற வழிபாட்டு முறையாக இருந்திருக்கிறது.◆

வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் 
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே

என்று திருஞான சம்பந்தர் தேவாரமும்,

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் 
தமிழோடிசை பாடல் மறந்தறியேன் 
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் - உன் 
நாமம் என் நாவில் மறந்தறியேன்

என்று திருநாவுக்கரசர் தேவாரமும்

பூசை பற்றிக் குறிப்பிடுகின்றன.◆

கோயில் பூசைகள் தொகுப்பு..◆

◆கோயில்களில் நடைபெறும் பூசைகள் மிக விரிவானவை. இந்து சமயத்தின் இருபெரும் பிரிவுகளான சைவ, வைணவப் பெருங்கோவில்களில் தினந்தோறும் ஆறு காலம் பூசைகள் நடைபெறுகின்றன. இந்தப் பூசை முறைகள் பற்றி சைவ/வைணவ ஆகம  நூல்கள் மிகவும் விரிவாகக் கூறுகின்றன. இவை தவிர அம்மன் கோயில்கள் மற்றும் கிராம தேவதை கோயில்களில் அந்தந்த ஊர் மரபுப்படியோ அல்லது தாந்திரீக முறைகளின் அடிப்படையிலோ பூசைகள் நடைபெறுகின்றன.◆

◆பூசை செய்பவர்கள் தொகுப்பு.◆

திருக்கோயில்களில் பூசை 
செய்வோர்களுக்கு அர்ச்சகர், சிவாசாரியார், குருக்கள், பட்டாசாரியார், பூசாரி, பூசகர் என்று பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. மரபு வழக்கப்படி தமிழகத்தின் ஆகம முறையிலான பெருங்கோயில்களில் குறிப்பிட்ட அர்ச்சக சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே பூசை செய்ய முடியும் என்னும் நிலை 
இருந்தது. ◆

◆வீடுகளில் பூசை தொகுப்பு◆

◆பஞ்ச மகாயக்ஞம் செய்தல்(மேல் இடது மூலையிலிருந்து, ரிஷி, தேவ, பித்ரு, பூத, மற்றும் மனுஸ்ய யக்ஞம் செய்தல்)
கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்கள் வீடுகளில் வழிபாட்டுக்கென அமைக்கப்படும் அறை பூசையறை எனப்படுகிறது. இங்கு தெய்வங்களின் படங்களும், சிறு சிலைகளும் இடம் பெற்றிருக்கும். இந்தப் பூசையறையில் தினந்தோறும் குடும்பத்தலைவி விளக்கேற்றி வழிபடுகிறார். குடும்ப உறுப்பினர்கள் தனியாகவோ, சேர்ந்தமர்ந்தோ தங்கள் வசதிக்கேற்ற படி பூசைகள் செய்வதுண்டு. மேலும் யக்ஞம் எனும் பூசையும் இந்து மதத்தில் இருந்து வருகிறது.◆

◆சமயச் சடங்கு பூசைகள் தொகுப்பு..◆

திருமணம், பெயர் சூட்டல், புதுமனை புகுதல், காதணி விழா போன்ற பல்வேறு இந்து சமயச் சடங்குகளிலும் பூசை ஒரு முக்கியப் பகுதியாக இடம் பெறுகிறது.

ஓம்நமசிவாய
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 


இதய நோய் நிவாரண பரிகாரத் தலம் சகாயேசுவரர் ஆலயம்...!மாயூரம்....

இதய நோய் நிவாரண பரிகாரத் தலமாகத் திகழும் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்...!
மயிலாடுதுறை மாவட்டம், மூவலூரில் அமைந்துள்ளது மார்க்க சகாயேசுவரர் ஆலயம். திரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய தலம்,

மகிஷாசுரனை வதம் செய்த துர்ககையின் தோஷம் நீக்கிய தலம் என பல்வேறு பெருமைகளைக் கொண்ட சிறப்பு மிக்கது இந்த ஆலயம். 

ஆதியில் இத்தலம் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இது புன்னாகவன க்ஷேத்ரம் என வழங்கப்பட்டது. இறைவன், ‘புன்னாகவனேசுவரர்’ என்று அழைக்கப்பட்டார்.

ருத்ரன், திருமால், பிரம்மா மூவருக்கும் இத்தலத்து இறைவன் வழிகாட்டி தன்னை வெளிப்படுத்தியதால் இறைவனுக்கு, ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் பெயர் வழங்கலாயிற்று. 

இதேபோல் மூவரும் வழிபட்ட ஊர் இதுவென்பதால், ‘மூவரூர்’ என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது, ‘மூவலூர்’ என்றாகி இருக்கிறது.

வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு, தேவர்களையும் மக்களையும் கொடுமைப்படுத்தி வந்தனர். 

தன்னிடம் சரணாகதி அடைந்த தேவர்களையும் மக்களையும் காத்திட திருவுளம் கொண்டார் ஈசன். அதைத் தொடர்ந்து பிரம்மா, திருமால், தேவர்கள் உள்ளிட்டோரைக் கொண்டு தேர் பூட்டி திருவதிகை நோக்கி புறப்பட்டார்.

அப்போது திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள், ‘அசுரர்களை அழிக்கும் செயல் தங்கள் உதவியினாலேயே நடக்கிறது’ என்று எண்ணி கர்வம் கொண்டனர். 

இந்த கர்வத்தால் திருமால், பிரம்மா, தேவர்களுக்கு சாபம் ஏற்பட்டது. இதனால் மனம் வருந்திய இம்மூவரும், இறைவனிடம் விமோசனம் வேண்டினர். 

இறைவனின் ஆலோசனைப்படி காவிரி தென்கரையில் உள்ள புன்னாகவனேசுவரரைத் தேடி வந்தனர். இறைவனின் கருணையால் அங்கு சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அங்கு ஈசனை வணங்கி வழிபட்டு தோஷம் நீங்கினர் என்கிறது தல புராணம்.

பங்குனி ஆயில்யத்தில் சவுந்திரநாயகி திருக்கல்யாண உத்ஸவம், உத்திர நட்சத்திரத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி, தைப்பூசம், நவராத்திரி, மகா சிவராத்திரி, மாசி மகம், தீர்த்தவாரி, பிரதோஷம் உள்ளிட்ட சிவாலய விழாக்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறுகின்றன.

இத்தலத்து இறைவனை, அன்னை பார்வதி, திருமால், பிரம்மா, சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். மகா சிவராத்திரியின் நான்காம் ஜாமத்தில் நவ நாகங்களும், ரத சப்தமியில் சப்த மாதர்களும் வழிபட்டுப் பேறு பெற்றனர். 

இது தவிர, கர்மசேனகியர் என்ற மன்னன், பிப்பிலர் என்ற உபமன்யு முனிவர் என பலரும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

இந்த ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாகத் திகழ்கின்றது. 

இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலபிஷேகம் செய்தும், அபிஷேகப் பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் சவுந்திர நாயகியுடன், மங்களாம்பிகை என்ற அம்மனுக்கும் தெற்கு முகமாய் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. 

அன்னை இருவரின் வடிவங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. அமாவாசை தோறும் சவுந்திரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும், லலிதா திரிசடையும், சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகின்றது.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மூவலூர் அமைந்துள்ளது.

மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில்,
மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. 

அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. மூவலூர் தேரடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே ஆலயம் அமைந்துள்ளது.
ஓம்நமசிவாய.. 

Tuesday, July 2, 2024

திருவாரூர் சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமான்.

சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமானின் அபூர்வத் தோற்றம்: 
கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அழகாபுத்தூர். 

முருகப்பெருமான் இத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். 

ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். 
சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார். 

அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். 
திருமால் , முருகனுக்கு தனது 
சங்கு, சக்கரத்தை கொடுத்தார். 

ஆயுதங்களுடன் சென்ற முருகன், 
அசுரர்களை சம்ஹாரம் செய்தார். 
இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன்  ~ கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். 

சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. 
இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். 
 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

முனிவர்களுக்கெல்லாம் ஈசுவரனாக இருப்பது முனீஸ்வரர்....



முனீசுவரர் என்பவர் இந்து சமய சிறு தெய்வங்களில் ஒருவராவார். இவர் சைவ கடவுளான சிவபெருமானின் வடிவமாவார். வீரமும்,ஆவேசமும் நிறைந்த தெய்வமான இவர் அந்தகாசுரனை அழித்தவராகக் கருதப்படுகிறார்.

 முனீஸ்வரன் எனும் பெயர் முனிவர்களுக்கெல்லாம் ஈசுவரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் எனக் குறிப்பிடும்.

கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்களாலும் அழைத்து வழிபடுவர்.
முனி என்ற சொல் ரிக் வேதத்தில் 'தெய்வ ஆவேசம் படைத்தவர்' என்றும், பயமற்றவர் என்றும் பொருள் கொள்ளப் படுகின்றது. உபநிடதம், பகவத்கீதை என்பவற்றில் உலக வாழ்க்கையை வெறுத்து ஞான வரம்பாகிய மௌனத்தைக் கடைப்பிடித்து பரமதியானத்தில் ஆழ்ந்து தட்பவெப்ப, சுகதுக்கம் தாக்கப்படாமல் விருப்பு - வெறுப்பு, கோபதாபம் முதலியவை அறவே நீக்கியவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
கிராம மக்கள் மத்தியில் தவறு செய்தால் தலையில் அடிப்பவர், நம்மோடு ஒரு மனிதராகவே வருவார், வானுக்கும் பூமிக்குமாக ஒளிப்பிழம்பாகக் காட்சி தருபவர் என்று பலவாறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன.

தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் முனீசுவரர் வழிபாடு சிறப்படைந்து காணப்படுகின்றது.

மொட்டைக்கோபுர வழிபாடு

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு என்பது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் அமைந்துள்ள மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாட்டைக் குறிக்கின்றது.

நாட்டார் தெய்வங்களில் முனி என்பது காவல் தெய்வத்தின் பெயராகும். இந்தப் பெயரில் எண்ணற்றவர்கள் உள்ளதாக குறிப்புகள் உள்ளன. பஞ்ச முனி என ஐந்து முனிகள் பச்சையம்மனுக்கு காவலாக உள்ளன. சில இடங்களில் சப்த முனிகளும் உள்ளார்கள்.

வாழ்முனி, 
செம்முனி, 
கருமுனி, 
முத்துமுனி, 
வேதமுனி, 
போன்ற ஐந்து முனிகளை பஞ்ச முனி என்கிறார்கள், இவர்கள் பச்சையம்மனுக்கு துணையாக இருந்தவர்கள்.
பூமுனி,
வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, ஜடாமுனி, பாலக்காட்டு முனி, வேதமுனி, இலாடமுனி ஆகிய ஏழு முனிகளையும் வணங்குகின்றனர்... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Monday, July 1, 2024

கருப்பசாமி (போற்றி )பெயர்கள்....

108 கருப்பசாமி பெயர்கள்...

 கருப்பசாமி பெயர்கள்
1.கருப்பண்ணசாமி போற்றி 
2 முன்னோடி கருப்பசாமி
3பெரிய கருப்பசாமி
4 சின்ன கருப்பசாமி
5 சந்தனக் கருப்பசாமி
6 முப்புலிகருப்பசாமி
7 மாசாணகருப்பசாமி
8 ஆகாய கருப்பசாமி
9 18ம்படி கருப்பசாமி
10பாரி கருப்பசாமி
11 பிலாவடி கருப்பசாமி
12 முத்து கருப்பசாமி
13 உத்திர கருப்பசாமி
14 ஒண்டி கருப்பசாமி
15 நொண்டி கருப்பசாமி
16 சப்பாணி கருப்பசாமி
17 சோனை கருப்பசாமி
18 கரந்தமலை கருப்பசாமி
19 சமைய கருப்பசாமி
20 கோட்டை கருப்பசாமி
21 வேட்டை கருப்பசாமி
22 கனவாய் கருப்பசாமி
23மாரநாட்டு கருப்பசாமி
24 சங்கிலி கருப்பசாமி
25புனுகு கருப்பசாமி
26மாட கருப்பசாமி
27ஆண்டி கருப்பசாமி
28மாரடி கருப்பசாமி
29தேரடி கருப்பசாமி
30வீரடி கருப்பசாமி
31 பேய் கருப்பசாமி
32மலையாள கருப்பசாமி
33 கரையடி கருப்பசாமி
34 சிங்க கருப்பசாமி
35 காங்கேயம் கருப்பசாமி
36 பொட்டல் கருப்பசாமி
37பூமாலை கருப்பசாமி
38 பூதநாயகா கருப்பசாமி
39 வெள்ளை கருப்பசாமி
40 தாணிப்பாறை கருப்பசாமி
41 பாறை கருப்பசாமி
42 மாயாண்டி கருப்பசாமி
43  மடபுரம் கருப்பசாமி
44எல்லை கருப்பசாமி
45வாழையடி கருப்பசாமி
46 நாட்டுக்கோட்டை கருப்பசாமி
47 நல்லண்ண கருப்பசாமி
48 சடைமுடி கருப்பசாமி
49 அடைகாக்கும் கருப்பசாமி
50 தேனருவி கருப்பசாமி
51 வல்லைய கருப்பசாமிபோற்றி  l
52 பணங்காட்டு கருப்பசாமி
53அருவிகரை கருப்பசாமி
54பச்சை மலை கருப்பசாமி
55ஆணைமலை கருப்பசாமி
56 மஞ்சமலை கருப்பசாமி
57 பாதள கருப்பசாமி
58 ஓம் கார கருப்பசாமி
59 மாங்காடு கருப்பசாமி
60 உரிமடத்துயடி கருப்பசாமி
61 கருமாத்தூர் கருப்பசாமி
62 கச்சை கருப்பசாமி
63  சண்ட பிரசண்ட கருப்பசாமி
64 வளையங்குளம் கருப்பசாமி
65 காட்டு கருப்பசாமி
66 அன்பு கருப்பசாமி
67வல்லடி கருப்பசாமி
68  கன்னிமார் காவல் கருப்பசாமி
69 மலையடி கருப்பசாமி
70 அமுத கருப்பசாமி
71அழகு கருப்பசாமி
72ஆங்கார கருப்பசாமி
73வேலங்குடி கருப்பசாமி
74சாம்பிராணி கருப்பசாமி
75ஒண்டிபுலி கருப்பசாமி
76அழகுமுத்து கருப்பசாமி
77அழங்கார கருப்பசாமி
78வேப்படி கருப்பசாமி
79மேலமடை கருப்பசாமி
80தோப்பு கருப்பசாமி
81குடல் வெட்டி கருப்பசாமி
82வல்லநாட்டு கருப்பசாமி
83வள்ளக்காட்டு கருப்பசாமி
84வழிவிடும் கருப்பசாமி
85வட்டமலை கருப்பசாமி
86வானரமுட்டி கருப்பசாமி
87பனையடி கருப்பசாமி
88கிளிகூண்டு கருப்பசாமி
89கிராம கருப்பசாமி
90ரணவீரன் கருப்பசாமி
91ஈசாண கருப்பசாமி
92மச்சை கருப்பசாமி
93கருங்காலி கருப்புசாமி
94பால கருப்பசாமி
95சூர கருப்பசாமி
96பேயாண்டி விளையாட்டு கருப்பசாமி
97அகோர கருப்பசாமி
98பாலையத்து கருப்பசாமி
99மஞ்சன கருப்பசாமி
100கொக்கு வெட்டி கருப்பசாமி
101மளுவேந்தி கருப்பசாமிபோற்றி  
102குருவிகுளம் கருப்பசாமி
103வன்னிகருப்பண்ணசாமி
104மீனமலை கருப்பசாமி
105முன்னோடை கருப்பசாமி
106கொம்படி கருப்பசாமி
107 கொல்லிமலை கருப்பசாமி
108 சிவன் மலை கருப்பசாமி.போற்றி  

கருப்பசாமியை 108யில் அடக்கமுடியாது 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

ஓம் என்னும் ஓங்கார மந்திர இரகசியம்..

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் பற்றிய பதிவுகள் 
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். 

இந்த பிரணவ மந்திரத்தின் முழு விளக்கத்தை பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். 

ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். 
காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.

ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும், காக்கும் கடவுளான விஷ்ணுவும், சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம். 

ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும். 

எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும். மன சாந்தி ஏற்படும். 

உலகத்தோடு ஒட்டி வாழலாம், வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.

வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் "ஓம்", "ஓம்", "ஓம்" என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . .ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.

கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.

எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.

உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...