Wednesday, November 5, 2025

பாசுபதேஸ்வரர் திருக்கோயில்,திருவேட்களம் கடலூர்

அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில்,
திருவேட்களம் கடலூர் ...!
தேவாரப்பபாடல் பெற்ற சிவத்தலங்களில் முதலானது சிதம்பரம். 

இரண்டாவது திருவேட்களம்.இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 2 வது தேவாரத்தலம் ஆகும்.

சாஸ்திரப்படி கோயில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ, அதன்படி அமைக்கப்பட்ட கோயில் இதுவாகும். 

பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்டது. 

தற்போது மூன்றடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.

அம்பிகையின் சன்னதியில் 4 தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்றவை சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

கோயிலின் சுற்றுப்பகுதியில் நர்த்தன விநாயகர், தல விநாயகர்-சித்தி விநாயகர், அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

தட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலைவைத்துள்ளார்.

 சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.

 திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

நேர்த்திக்கடன்

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.

தலபெருமை

சிதம்பரத்தை அடுத்துள்ள திருவேட்களம். இரண்டாயிரம் ஆண்டு பழமையான இங்கு தான் அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கினார்.

 அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். 

முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். இவளுக்கு எதிரிலும் நந்தி உள்ளது.

ஒரு முறை சம்பந்தர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார்.

திருவேட்களம் பற்றி சம்பந்தர் பாடும் போது,"வேட்கள நன்னகர்' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,"சிறப்புடன் வாழ வாழ்வில் ஒரு முறையாவது திருவேட்களம் போ', என்றும், அம்பிகையை "பெண்ணில் நல்லாள்' என்றும் குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.

தல வரலாறு

பாரதப்போரில் வெற்றிபெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன்,""நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். 

ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்து தான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும்,''என்றார்.

இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான்.அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார்.

நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். 

பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது.

கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது.

வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம் உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது,''என சமாதானப்படுத்தி "சற்குணா' (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார்.

சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். 

சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, November 4, 2025

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்...

*கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்...
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். 

வரலாறு :-

சங்க காலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும், தர்மதேவதை கொல்லி மலையாக இருப்பதால் ’அறமலை’ என்றும் அழைக்கப்பட்டது.

அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார்.

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

இத்தலத்து சிவபெருமான் சுயம்பு மூர்த்தி. இறைவன் அறப்பளீஸ்வரர், அன்னையின் பெயர் அறம்வளர்நாயகி என்பதாகும். அறை என்றால் மலை, பள்ளி என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் அறைப்பள்ளீஸ்வரர் என்று இறைவன் அழைக்கப்பட்டார்.

ஆனால் காலப்போக்கில் இப்பெயர் மருவி அரப்பளீஸ்வரர் என்று தற்போது மக்களால் அழைக்கப்படுகிறார்.

வழிபட்ட மன்னர்கள் :-

தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டிய ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமான செம்பியன் மாதேவி, விஜயநகர அரசர் வேங்கடபதி, சோழ மன்னர்கள் பராகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பராந்தக சோழன்.

மீன் :-

இத்தலத்தல தீர்த்தத்தில் உள்ள மீன்களைப் பக்தர்கள் ஒருமுறை சமைக்க, அவை உயிர்பெற்று நதியில் குதித்ததால் அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்று இங்குள்ள சிவபெருமான் வழங்கப்படுகிறார்.

ஆகாய கங்கை  :-

கோவிலின் அருகில் ஆகாய கங்கை அருவி உள்ளது.கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் ஆகியோர் தங்கியிருந்த குகைகள் அருவிக்கு சற்று தூரம் தள்ளி அமைந்துள்ளன.

ஓரி :-

ஓரி மன்னர் அரசாண்ட பகுதியாதலால் கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள செம்மேடு பகுதியில் அம்மன்னனுக்கு சிலை உள்ளது. ஆடிப்பெருக்கன்று விழா எடுக்கப்படும். மலைவாழ் மக்கள் நிகழ்ச்சிகளும் நடைபெறும்..

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று அன்னாபிஷேகம் காணும் சிவன் கோயில்.

தில் மட்டும் விதிவிலக்காக 
*ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில்..... அன்னாபிஷேகம் காணும் சிவன் கோயில்* ...

பொதுவாக.... *ஐப்பசி மாத பெளர்ணமி நாளில்தான்* சிவாலயங்களில், ஈசனின் லிங்க திருமேனிக்கு *அன்னாபிஷேகம்* செய்யப்படும். மற்ற நாட்களில் வழக்கமாக நடத்தப்படும் அபிஷேகங்கள் நடைபெறும். ஆனால், *மாதந்தோறும் அமாவாசை நாளில் அன்னாபிஷேகம் செய்யப்படும் அற்புதமான சிவன் கோயில்* ஒன்று தமிழகத்தில் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு சிறப்புக்குரிய ஆலயம்தான் *விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்* .

திருக்கோயில் அமைவிடம்...

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் இது.

இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் ஒரே கோயில் விளமல் பதஞ்சலி மனோகரர் ஆலயம்தான். இங்கு வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிவனுக்கு அன்னம் படைத்து வழிபடுவர்.
இக்கோயிலில் சிவனின் திருவடி தரிசனத்தை தரிசிக்க முடியும். சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோயில் எதிரில் உள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கோபுர வாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்கின்றனர். கோயில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் திரு உருவம் உள்ளது. வியாக்ரபாத முனிவர், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். அவர்களின் சன்னிதியும் இக்கோயிலில் உள்ளது.

இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும்போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீப ஜோதியாக தெரிவதைக் காணலாம். மற்ற கோயில்களில் சுவாமி, அம்பாள் யாராவது ஒருவர் சிறப்புக்குரியவர்களாக இருப்பார்கள். இத்தலத்தில் சுவாமி, அம்பாள், தீர்த்தம் என அனைத்தும் சிறப்புக்குரியதாகும்.

ஒவ்வொரு மாதமும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் ஒரே கோயில் விளமல் பதஞ்சலி மனோகரர் ஆலயம்தான். இங்கு வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிவனுக்கு அன்னம் படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசை நாளில் இந்தக் கோவிலுக்கு வருகிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, முன்னோர்கள் மோட்சம் பெறுவதற்காக மோட்ச தீபம் ஏற்றுகின்றார்கள்.

இந்தக் கோயிலில் வந்து அமாவாசையில் விளக்கேற்றி வழிபட்டால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து, தலைமுறை சிறக்க ஆசி வழங்குவார்கள் என்பது ஐதீகம். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பதஞ்சலி முனிவர் தனது உடலை பாம்பாகவும், வியாக்ரபாதர் தனது கால்களை புலிக்கால்களாகவும் மாற்றி, இங்குள்ள கமலாம்பாளை வணங்கினர். அதோடு, மணலில் லிங்கம் செய்து வழிபட்டனர். இந்த வழிபாட்டின் பலனாக சிவபெருமான் அவர்களுக்குக் காட்சி தந்து, அஜபா நடனம் மற்றும் தனது திருவடி தரிசனத்தையும் காட்டி அருளினார். இதனால் இந்த சிவனுக்கு பதஞ்சலி மனோகரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

சிவபெருமான் நடனமாடிய போது காட்டிய திருவடி ருத்ரபாதம் என அழைக்கப்பட்டது. இவர் நடனமாடி திருவடி காட்டிய தலம் என்பதால் விளமல் என அழைக்கப்படுகிறது. *விளமல் என்றால் திருவடி என்று பொருள்.* சிவனின் ருத்ரபாதத்திற்கு இன்றும் தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலின் மூலஸ்தானத்தில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என சன்னிதியில் சிவனின் மூன்று வடிவங்களை இங்கு தரிசிக்கலாம்.

சிவனுக்கு தீப்பொரிகள் கிளப்பும் நெற்றிக்கண் இருப்பதை போல், இத்தல அம்மனுக்கு குளிர்ச்சியான நெற்றிக்கண் உள்ளது. இந்த அம்மன் மதுரபாஷிணி என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறாள். 34 நலன்களையும் தரும் தேவியாக இவள் விளங்குவதால் இந்த தலம் வித்யா பீடமாகவும் கருதப்படுகிறது. இப்பகுதி மக்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு மதுரபாஷிணிக்கு தேன் அபிஷேகம் செய்து, அந்த்த் தேனை குழந்தையின் நாவில் தடவி பிரார்த்தனை செய்து, பள்ளியில் சேர்க்கும் வழக்கம் உள்ளது. குழந்தைகளுக்கு திக்குவாய் பிரச்னை உள்ளவர்களும் இந்த அம்மனை வேண்டினால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

ராகு - கேது தோஷம் இருப்பவர்கள் இங்குள்ள எட்டு கைகள் உள்ள துர்க்கையை வழிபடுவது சிறப்பானதாகும். தசரதன் புத்திர பாக்கியம் வேண்டி வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும். சிவன் திருவடி காட்டி அருளிய தலம் என்பதால் *இங்கு நவகிரகங்கள் கிடையாது* . தலை திருப்பிய நந்தி, விஷ்ணுவின் தலையில் சிவனின் திருவடி இருப்பது, எம சண்டிகேஸ்வரர், இரண்டு ஐராவதங்களுக்கு நடுவில் காட்சி தரும் மகாலட்சுமி என வேறு எங்குமே காண முடியாத அரிய திருக்காட்சிகள் பலவற்றை இத்தலத்தில் காண முடியும்.

 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, November 3, 2025

கற்பகநாதர் திருக்கோயில், திருக்கடிக்குளம்.

அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், திருக்கடிக்குளம்...!
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக எட்டுப் பட்டைகளுடன் எழிலாகக் காட்சி தருகிறார். இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை

இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. நாடொறும் நான்கு கால வழிபாடுகள். ஆனித்திரு மஞ்சனம், நவராத்திரி, கார்த்திகை தீபம், திருவாதிரை, தைப்பூசம், அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி முதலிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக தலபுராணம் கூறுகிறது. கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தின் கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார். இவரின் சந்நிதி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது. அருகில் கோதண்டராமர் கோவிலும் உள்ளது.

கார்த்திகாச்சுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான். தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார். 

திருஇடும்பாவனம் தலத்தைப் போன்றே பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய திருக்கடிக்குளமும் ஏற்ற தலம். ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்று தலபுராணம் கூறுகிறது.

திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் சாலையில் சென்றால் சுமார் 15 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

திருஇடும்பாவனம் இத்தலத்திலிருந்து மேற்கே 1 கி.மி. தொலைவில் உள்ளது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஐப்பசி பௌர்ணமி சிவனுக்கு அன்னாபிஷேகம் ஏன்?

அன்னாபிஷேகம்...!
ஐப்பசிமாத முழுநிலவு நாளில்      உலகெங்கும் உள்ள சிவ ஆலயங்களில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மரபு.
ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒவ்வொரு அபிஷேகம் சிறப்பாகும். ஐப்பசி மாத பவுர்ணமியில் உலகம் முழுவதையும் காத்து படி அளக்கும் சொக்கநாத பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகச்சிறப்பாகும்.

தானத்தில் சிறந்தது அன்னதானம் ஆகும். ஒருவனுக்கு எதைக் கொடுத்தாலும் போதும் என்று சொல்லும் மனம் வராது. சோறு எனப்படும் அன்னம் மட்டுமே போதும் என்று சொல்ல வைக்கும்.

நாம் உண்ணும் உணவிற்கும் நமது எண்ணத்திற்கும் கூட தொடர்பு உண்டு. நமது உணவு நமது மனசையும் உடலையும் ஆட்டுவிக்கிறது. இதைப்பற்றிய நிறைய கதைகள் உண்டு. 

துறவி ஒருவர் மன்னர் ஒருவரின் அரண்மனையில் தங்கினார்.அன்று அரண்மனையில் அவருக்கு தடபுடலான விருந்து பரிமாறப் பட்டது. அன்று இரவு அவர் அரண்மனையில் தங்கினார்.

 தூங்கி எழுந்த போது விடியவில்லைஅரண்மனையில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்த வெள்ளி குத்து விளக்கு அவர் கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றஎண்ணம்தோன்றி
விட்டது.

சொல்லாமல் கொள்ளாமல் அதை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.மறுநாள் அவருக்கு தான் செய்தது தவறு என்ற எண்ணம் உதித்தது. எத்தகைய பாவத்தை செய்து விட்டோம்! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்துவிட்டோமே என்று வருந்தினார்.   

உடனே அரண்மனைக்கு சென்று, மன்னரிடம் நடந்ததை கூறி விளக்கை ஒப்படைத்து தவறுக்கு வருந்தினார்.  

 அனைத்தையும் துறந்த தமக்கு ஏன் இவ்வாறு நேர்ந்தது என்று பலவாறு சிந்தித்தார். பின் தாம் உண்ட உணவே இதற்கு காரணமாக இருக்க கூடும் என்று அரசனிடம் விசாரித்தார்.

அரசன்மந்திரியிடம்கேட்டான் மந்திரி உணவுக்கூடத்தில் விசாரித்தார்.முடிவில்திருடன் ஒருவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி உணவுக்கூடத்திற்கு வந்து அது சமைத்து உணவாக பறிமாறப்பட்டுள்ளது தெரிந்தது.

 நாம் உண்ணும் உணவு நம்மை எப்படியெல்லாம் பாதிக்கின்றதுபார்த்தீர்களா?

அதனால்தான் அந்த காலத்தில் பெரியோர்கள் வெளியே யார் வீட்டிலும் உணவருந்த மாட்டார்கள். தன் வீட்டில் தானே சமைத்து உண்பார்கள்! அல்லது மனைவி சமைத்து உண்பார்கள். அன்னமே தெய்வம்! எனப்படுகிறது.   

இந்த காலத்தில் எப்படி எப்படியோ உணவுகள் வீணாக்கப்படுகிறது. ஒரு பருக்கை சாதம் சாக்கடையில் வீசினாலும் அடுத்த ஜென்மத்தில் புழுவாக பிறக்கவேண்டும்

 என்கிறது சாஸ்திரங்கள்! இரவில்  விளக்கு வெளிச்சம் இன்றி உணவை அருந்தக் கூடாதுஎன்றும்சொல்லப்
படுகிறது.

ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும்அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

 சிவலிங்கத்தைஅன்னத்தி
னால் முழுமையாக மூடி ஆராதனைகள்செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். அதை ஏன் ஐப்பசி மாத பவுர்ணமியில் செய்ய வேண்டும். மற்ற மாதங்களில் செய்யலாமே?

ஐப்பசி மாதப் பவுர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான். அது என்ன சாபம்? தெரிந்த கதைதான். 

சந்திரன், அஸ்வினி, முதல் ரேவதி வரையான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று பெற்ற சாபம். சந்திரனுக்கு ஒவ்வொரு கலையாக தேயஆரம்பித்தது.

 அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார்,   தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது.  

 மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.  .

கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒரு நாள் அதாவது ஐப்பசி பவுர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும்.   

இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர். திங்கள் முடிசூடியவருக்கு மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு !   

ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல்.

 நவகிரங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்தமாதத்தில்அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.

உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை. அன்னம் எனும் உணவே அனைத்திற்கும் ஆதாரம்.வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன. தைத்ரீய உபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன. 

ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்துசிவாலயங்களி
லும்  அன்னாபிஷேகம்  எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்கமூர்த்திக்குநடத்தப்
படுகிறது...

 அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டுவது இந்த நாளின் சிறப்பாகும். . 

இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்குகிறது. 

இந்த அன்னாபிஷேக நாளன்று சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்படுகிறது.   

லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன.

கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவனுக்கு ஆலயம் அமைத்த ராஜேந்திர சோழன் விசேசமாக அன்னாபிஷேகம் செய்வித்து விழா கொண்டாடினான். .

 தற்போது காஞ்சிப்பெரியவர் ஆலோசனையின் படி 108 மூட்டை அரிசி சாதம் வடிக்கப்பட்டு இறைவனுக்கு சார்த்தப்பட்டு பின்னர் பிரசாதமாகவழங்கப்
படுகிறது.

சோறு நம் பசிப்பிணியினை போக்கவல்லது! வயிற்றுத்தீயை அணைக்கவல்லது! யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்றார் திருமூலர்! அத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து அதை பிரசாதமாக பெறுவது என்பது நம் பாக்கியம் ஆகும்.

  அன்னாபிஷேக நன்னாள்.

பெரும்பாலான சிவாலயங்களில் உச்சிக்காலத்தில் இந்த அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். 

இறைவனுக்கு பலவித அபிஷேக திரவியங்களால் அபிசேகம் செய்வித்தபின் அன்னத்தால் அபிஷேகம் செய்வித்து காய்கறிகள் பழங்களால் அலங்காரம் செய்து நிவேதனம் செய்து தீபாராதனை
செய்விப்பார்கள்.   

அரிசியே லிங்க வடிவமானது. சிவலிங்கத்திற்கு லிங்க வடிவிலான அன்னத்தால் அபிஷேகம் செய்வதை காண்பது பெரும் பாக்கியமாகும். கோடி சிவதரிசனப் பலன் கிடைக்கும்.

இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாது அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறைவனின் அன்னாபிஷேக கோலத்தை தரிசித்து மகிழ்வோம்.

 அவனருளாலே, அவன் தாள் பணிந்து அவனருளைப் பெறுவோம்.

ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, November 2, 2025

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...
1)தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்றும் பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்கள். அந்த நாட்களில் வில்வ மரத்தின் அருகே போகக் கூடாது. 

2)பொதுவாக, வில்வ மரத்தின் வாசனை, அதன் வேர்களில் உள்ள குளிர்ச்சி ஆகியவற்றுக்கு பாம்புகள் வரும். அதனாலேயும் பயப்படுவர்கள். ஆனால், வீட்டில் வில்வ மரத்தை வைத்துக் கொள்வது மிகவும் விசேஷம். தவ விருட்ஷோத பில்வ: என்று சூக்தத்தில், மகாலட்சுமி அந்த மரத்தில் நித்யவாசம் செய்வதாகச் சொல்கிறது. 

எனவே, "யார் வீட்டில் சாஸ்திரங்களில் சொன்னபடி நியமத்துடன் வில்வ மரத்தை வளர்க்கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நித்ய வாசம் செய்வாள்."

சிவனுக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்...

வில்வத்தில் மூன்று, ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்கள் உள்ளன. இதில் மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஒவ்வொரு வில்வத்திலும் மும்மூர்த்திகள் நித்தியவாசம் செய்வதாக ஐதீகம். 

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியன் உதயமாவதற்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். 

வில்வத்துக்கு தோஷம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தின் மீது தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது வாழ்வில் சிறப்பினைத் தரும்.

வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்தாக சொல்லப்படுகிறது.

தேவலோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி, மா, வன்னி, மந்தாரை,

வில்வம்) என்று வில்வம், லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது.

வில்வ மரத்தை வழிபடுவதால் லட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிட்டும்.

வில்வ இலைகள் சிவன் எனவும், முட்கள் சக்தி எனவும் கிளைகளே வேதங்கள் என்றும் வேர்கள் யாவும் முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகிறது. 

சிவ பூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகன்று தோஷங்கள் மறைந்து பகவான் ஈசனது அருட்பார்வை கிடைக்கும்.

ஒரு வில்வ தனத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது.

இருபத்தோரு வில்வ வகைகளுள் மிகவும் சக்தி வாய்ந்த வகை. இதன் காய்கள் சற்றே ஆப்பிள் பழம் போன்று

தோற்றம் அளிக்கும். இலைகளை சிவார்ச்சனைக்கு பயன்படுத்திக் காய்களை மகாலட்சுமி யாகத்திற்கு

பயன்படுத்துவார்கள்.

வடநூலார் இதை ஸ்ரீபலம் (மகாலட்சமி ரூபம்) என்று புகழ்வர்.

இந்த பழத்தால் யாகம் செய்வதால் ஐஸ்வர்யத்தின் வடிவாக விளங்கும். யாகாக்னி தேவன் திருமகளது கருணையை விரைவில் பெற்றுத்தருவார். 

மிகப்பெரிய யாகங்கள் நடக்கும் போது 108 ஓமப் பொருட்களில் வில்வப்பழமும் ஒன்றாகிறது.

வீட்டில் அகண்ட வில்வ மரம் வளர்த்து வந்தால் அது பெரிதாகி கனி கொடுத்த பிறகே பூஜை செய்த அதன் இலைகள் அருகதை உடையது. ஆனால் வளரும் செடியை பூஜை செய்வதால் அதுவரை குடும்பத்தில் துர் சக்திகள் விலகத்தொடங்கும்.

படிப்படியாக பொருட்சேர்க்கை ஏற்படும்.

இதை வளர்த்து வரும் அனைவருமே நலமாக இருப்பதாக கூறி உள்ளனர்.

வில்வம் வளர்த்தால் செல்வம் வளரும்

சமீப காலங்களில் வில்வத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது. சிவலிங்கம் வீட்டில் பூஜிக்கக்கூடாது என்று விரும்பியபடி

பேசி வருகின்றனர். வில்வ மரம் எங்கு வளர்க்கப்படுகிறதோ அங்கே மகாலட்சுமி நிரந்தரமாக வசிப்பாள்.

பார்ச்சூன் ட்ரீ எனப்படும் அதிர்ஷ்ட வில்வமரத்தை விதையிட்டு வளர்த்து பூஜை செய்வதால் கடன் தொல்லைகள் அகன்று செல்வம்

அதிகமாகும்.

வளர்ப்பு முறையும் வழிபாடும்:

ஒரு பூத்தொட்டியில் பசும் சாணம் மண் கலந்து மூன்று நாட்கள் விதையை உள்ளே வைத்து அமாவாசை தினத்தில் எடுத்து ஈர மண்ணில் புதைக்க வேண்டும். 

45 நாட்கள் காத்திருந்தால் விதை முளைத்து வெளிவரும். விதை எல்லோரும் போடலாம்.சிலருக்கே அது முளைக்கும் யோகம் வரும்.  விதை

முளைத்து வந்ததும் உரமிட்டு வளர்த்து பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி துதி கூறி கற்கண்டு,தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து வழிபடலாம். வில்வ விருட்சம் முன் அமர்ந்து விநாயகரை வணங்கினால் வளமே பெருகும்.

இவைகள் தான் எனக்கு தெரிந்த தகவல்கள். மேலும் பல நன்மைகள் உண்டு..
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, November 1, 2025

நீங்கஅருள் தரும் குலதெய்வம். வழிபாட்டின் பலன்கள்

குலதெய்வ வழிபாடு .
         
தீராத கஷ்டங்கள் நீங்கஅருள் தரும் குலதெய்வம். வழிபடலாம் வாங்க.!

குலதெய்வ வழிபாட்டின் பலன்கள் 

நம் குலத்தைக் காக்கும் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபட வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

உங்களுடைய வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படுகிறதா? எந்த ஒரு நல்ல காரியத்தையும் நடத்த முடியவில்லையா? பிள்ளைகளுக்கு திருமணம் நடந்து குழந்தை பாக்கியம் இல்லையா? குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறதா?  இது போன்று தொடர்ந்து வீட்டில் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறதா? அதை சரிசெய்யலாம் வாங்க.

சுப நிகழ்ச்சி நடைபெற கொடுக்க வேண்டிய தானம்:

பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் பொருள் வெல்லம்.  மலிவான விலையில் நம்மால் வாங்க முடிகின்ற பொருளில் ஒன்று. அதை உங்களால் முடிந்த அளவு வாங்கி குலதெய்வ கோவிலுக்கு, உங்கள் கையால் தானம் கொடுங்கள்.  குலதெய்வ கோவிலில் நிர்வாகம் இருந்தால் அங்கும் தானம் கொடுக்கலாம். 

பின் இனிப்பான வெல்லத்தில் குலதெய்வத்திற்காக பிரசாதம் செய்து வழிபட வேண்டும். குறைந்த அளவு 1 கிலோ வெல்லம் வாங்கலாம்.  அதிகபட்சம் உங்களுடைய விருப்பம்.

எப்போதெல்லாம் குலதெய்வ கோவிலுக்கு செல்கிறீர்களோ, அப்போதெல்லாம் வாங்கி வைத்த வெல்லத்தை வீட்டிலிருந்து எடுத்து செல்ல வேண்டும்.

குறிப்பாக, குலதெய்வ கோவில் இருக்கும் இடத்தில் இருந்து வெல்லம் வாங்க கூடாது. நாம் வீட்டில் இருந்து தான் எடுத்து செல்ல வேண்டும்.

முடிந்தால் மாதந்தோறும் வீட்டில் இருக்கும் ஒருவர் மட்டும் குலதெய்வ கோவிலுக்கு சென்று இந்த வெல்லத்தை தானம் செய்து வர,  உங்களுடைய வீட்டு சுப நிகழ்ச்சிகளில் எந்த தடையும் ஏற்படாது.

வீட்டில் நடக்கும் எல்லா விஷயங்களுமே இனிப்பான வெல்லத்தை போல் இனிமையாக நடக்கும்.

தீராத சுமை நீங்க எளிய பரிகாரம்: 

வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது தீராத கடன் சுமை இருந்தாலும், தீராத உடல் உபாதைகள் இருந்தாலும்,  கரைக்க முடியாத கட்டியிருந்தாலும் சில நாட்களிலேயே பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து போக எளிய முறை ஒன்றை வாங்க பார்க்கலாம். 

குலதெய்வ கோவிலில் குளம் இருந்தால் அந்த குளத்தில் உங்கள் கையாலேயே ஒரு கட்டி வெல்லத்தை போட்டு கரைத்து விடுங்கள்.

உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தண்ணீரில் கரைந்த வெல்லம் போல கரைந்து போக வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.

கஷ்டங்கள் இருந்தாலும், உடல் உபாதைகளாக இருந்தாலும் ஒரு சில நாட்களில் உங்களை விட்டு கரைந்து போய்விடும்.


Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...