Friday, October 27, 2023

சந்திரகிரகணத்தில் வரும் ஐப்பசி அன்னாபிஷேகம்...எந்த நேரத்தில், எப்படி வழிபட வேண்டும்?

சந்திரகிரகணத்தில் வரும் ஐப்பசி அன்னாபிஷேகம்...எந்த நேரத்தில், எப்படி வழிபட வேண்டும்?
பெருமாளை அலங்காரப் பிரியர் என்பது போல் சிவனை அபிஷேகப் பிரியர் என்பார்கள். ஒவ்வொரு பொருள் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வது ஒவ்வொரு விதமான பலனை தரும். அது போல் அன்னத்தால் அபிஷேகம் செய்தால் பிறவா நிலை கிடைக்கும். இதையே நம் முன்னோர்கள் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பார்கள். ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் ஐப்பசி மாதத்தில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது பாவங்கள் அனைத்தையும் போக்கக் கூடியதாகும்.


    
ஐப்பசி பெளர்ணமி நாளில் தான் சந்திரன், தனது சாபங்கள் முழுவதுமாக நீங்கி, பதினாறு கலைகருடன் தனது கதிர்களை வீசி பிரகாசமாக காட்சி அளிப்பார். இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம், கணவரின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியன கிடைக்கும். சந்திரனை முடியில் சூடி காட்சி தரும் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவது  சந்திரகிரகணத்தில் வரும் ஐப்பசி அன்னாபிஷேகம்...எந்த நேரத்தில், எப்படி வழிபட வேண்டும்?
ஐப்பசி அன்னாபிஷேகம் :
ஐப்பசி அன்னாபிஷேகம் :

சிவ பெருமானை வழிபட்டு, அவருடைய அருளை பெறுவதற்குரிய சிறப்பான நாட்களில் ஒன்று பெளர்ணமி. அனைத்து மாதங்களிலும் பெளர்ணமி வந்தாலும் கார்த்திகை மற்றும் ஐப்பசி மாதங்களில் வரும் பெளர்ணமிகள் சிவனடியார்களுக்கு மிக முக்கியமான ஒரு நாளாகும். கார்த்திகை பெளர்ணமி அன்று திருவண்ணாமலை தீபம். 

ஐப்பசி அன்னாபிஷேக பலன்கள் 

சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவதே அன்னாபிஷேகம் ஆகும். இன்றைய தினம் நாம் அபிஷேகம் செய்யம் ஒவ்வொரு பருக்கை அன்னத்திலும் சிவ பெருமான் எழுந்தருளி காட்சி தருவதாக ஐதீகம். அதனால் அன்னாபிஷேக தரிசனம் கண்டால், பல கோடி லிங்கங்களை ஒரே நேரத்தில் வழிபட்ட பலன் நமக்கு . இதனால் கடன் தீரும், வறுமை நீங்கும், பாவங்கள் தீரும், செல்வ வளம் சேரும், தரித்திரம் என்பது ஏற்படாது. ஒவ்வொரு யுகத்திலும் உயிர்கள் ஒவ்வொரு பொருளை ஆதாரமாக சொண்டு வாழ்வதை போல், கலியுகத்தில் உணவை ஆதாரமாகக் கொண்டே உலகம் இயங்கி வருகிறது.



ஒரு உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கக் கூடிய உணவைக் கொண்டு, சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஆண்டு ஐப்பசி மாத பெளர்ணமி அக்டோபர் 28 ம் தேதி சனிக்கிழமை வருகிறது. இதே நாளில் இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணமும் நிகழ உள்ளது. இதனால் கிரகணத்தன்று அன்னாபிஷேகம் செய்யலாமா? எந்த நேரத்தில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்ற குழப்பம் பக்தர்களிடம் எழுந்துள்ளது. இதனால் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதற்கு உரிய சரியான நேரம் 
எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்


​சந்திர கிரகணத்தில் வரும் அன்னாபிஷேகம் :
​சந்திர கிரகணத்தில் வரும் அன்னாபிஷேகம் :

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 28 ம் தேதி இரவு 11.31 மணிக்கு துவங்கி, அக்டோபர் 29 ம் தேதி அதிகாலை 03.36 வரை உள்ளது. ஏது பகுதி நேர சந்திர கிரகணமாகவே நிகழ உள்ளது. இந்தியாவில் இந்த சந்திர கிரகணத்தை காண முடியும் என சொல்லப்படுகிறது. பொதுவாக கிரகண நேரத்தில் கோவில்கள் அடைக்கப்பட்டு விடும், சுப காரியங்கள் எதையும் செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த சந்திர கிரகணமானது இரவு நேரத்திலேயே நிகழ்வதால், இந்த கிரகணத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாது என சொல்லப்படுகிறது. இதனால் ஐப்பசி மாத பெளர்ணமி வழிபாடு மற்றும் அன்னாபிஷேகம் ஆகியவற்றை வழக்கம் போல் செய்யலாம்.

அன்னாபிஷேகம் செய்ய ஏற்ற நேரம் :
அன்னாபிஷேகம் செய்ய ஏற்ற நேரம் :

அக்டோபர் 28 ம் தேதி அதிகாலை 04.01 மணிக்கு துவங்கி, அக்டோபர் 29 ம் தேதி அதிகாலை 02.27 வரை பெளர்ணமி உள்ளது. அன்று சனிக்கிழமை என்பதால் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலம் உள்ளது. அதனால் அன்னாபிஷேகம் செய்து வழிபடுபவர்கள் காலை 07.45 முதல் 08.45 மணிக்குள் வழிபாட்டை மேற்கொள்ளலாம். அந்த நேரத்தில் முடியாதவர்கள் காலை 10.35 மணி முதல் பகல் 01.20 மணிக்குள் வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். பகல் 01.30 முதல் 3 மணி வரை எமகண்டம் உள்ளது. மாலையில் வழிபடுபவர்கள் 4 மணிக்கு மேல் செய்யலாம். அதே சமயம் கிரகணம் துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் இரவு 9 மணிக்கு வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.

#சேலம் மாவட்டத்தில் உள்ள மிகப் புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான #சேலம்_கோட்டை#பெரிய_மாரியம்மன்

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் தலங்களில் ஒன்றான 
சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு #சேலம் மாவட்டத்தில் உள்ள மிகப் புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான #சேலம்_கோட்டை
#பெரிய_மாரியம்மன் திருக்கோயில் #குடமுழுக்கு_நன்னீராட்டு_பெருவிழா 
இன்று காலை சிறப்புடன் நடைப்பெற்றது 🙏🙇

           
#கோயில் வரலாறு:

சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது
பெரிய மாரியம்மன் கோயில்

சேலத்தில் அமைந்துள்ள
கோட்டை மாரியம்மன்
, அம்மாப்பேட்டை, மாரியம்மன்
செவ்வாய்ப்பேட்டை, மாரியம்மன்
சஞ்சீவிராயன்பேட்டை, மாரியம்மன்
சின்னக் கடைவீதி, சின்னமாரியம்மன்
குகை, மாரியம்மன்
அன்னதானப்பட்டி, மாரியம்மன்
பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன்
ஆகிய எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரியமாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையானவள் என்பதற்கு மற்றொரு சான்றையும் சொல்லலாம்.

#கோவில்_வரலாறு :

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள்.

இந்த அம்மன் கோயிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது.

இக்கோட்டையில் அமைந்த இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் “கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி” என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் தெரியவருகிறது.

இந்த கோட்டைக்குள் இருந்த அம்மனை திருமணிமுத்தாற்றின் அருகில் சேலம் கணக்கர் தெருவில் இருக்கும் திரு.கனகசபை முதலியார், சிவசங்கர முதலியார் ஆகியோர் இப்போதிருக்கும் இடத்திற்கு இடம் மாற்றம் செய்து கோயில் அமைத்து கும்பாபிசேகம் செய்தார்கள். அப்போது திருமணிமுத்தாற்றிலிருந்து அம்மன் அபிசேகத்திற்கு தண்ணீர் எடுத்து வந்து அபிசேகம் செய்தனர்.

கோட்டை மாரியம்மனை தரிசிக்க சுற்றிலும் இருக்கிற ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். இவர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை. தங்குவதற்கு இடவசதி இல்லாமல் பக்தர்கள் அல்லல்படுவதை அறிந்த சேலம் திரு.முத்துகுமார பிள்ளையும், பட்டாக்காரர் பார்வதி அம்மாளும் இவர்களின் மகன் மதுரைபிள்ளை ஆகியோர் தங்கள் சொந்த செலவில் இலவசமாக தங்குவதற்கு என்று 1876 தாது வருடம் சித்திரை மாதம் ஒரு தர்ம சத்திரத்தைக் கட்டி கொடுத்தார்கள்.

இந்த தர்ம சத்திரம் தான் கோயிலின் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. இக்கட்டிடம் பழுதடைந்து இடியும் நிலையில் அதை இடித்துவிட்டு அறநிலையத்துறை ஆணையர் அவர்களின் அனுமதியின்பேரில் ரூபாய் பன்னிரண்டு இலட்சத்தில் அலுவலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு பொங்கு மண்டபம் மற்றும் தங்கும் மண்டபம் ரூபாய் 1 லட்சம் மதிப்பில் “ஸ்ரீகோட்டை பெரிய மாரியம்மன் அறக்கட்டளை” சார்பில் நன்கொடையாக கட்டி முடிக்கப்பட்டு உபயோகத்தில் இருந்து வருகிறது. 1881-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் விசு ஆண்டு கார்த்திகை திங்கள் சேலத்தைச் சேர்ந்த தாயம்மாள் என்பவரின் மகள் நாகம்மாள் என்பவர் கோயில் வடபுறம் அமைந்துள்ள தளம் அமைத்தும், கட்டிடத்தைப் புதுப்பித்தும் கொடுத்துள்ளார்கள்.

இவ்வாறாக திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு, சேலம் நகர மக்களிடையேயும், சுற்றுப்புற கிராம மக்களிடையேயும் பிரபலமடைந்து வருகிறது. 1982-1989 ம் ஆண்டிலும் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு 81 அடி உயர இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 01.07.1993-ந் தேதியன்று திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

#அன்னையின் திருக்கோலம்:
           
அன்னையின் சிரசில் ஜூவாலா கிரீடம் அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது. அக்கிரீடத்தில் நாகம்படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது கீழ்க்கரத்தில் திரிசூலம் விளங்குகிறது.

இடது மேற்கரத்தில் அங்குசமும், அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது. அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு ஈசான திசை நோக்கி அமைதி வடிவமாய், ஆனந்தம் பொங்கும் முகத்தாளாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாட்சி செய்து வருகின்றாள்.

#பூஜைகள்:

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.

தமிழ்ப் புத்தாண்டு
ஆங்கிலப் புத்தாண்டு
மகாசிவராத்திரி வழிபாடு ,
வைகாசி விசாகம் வழிபாடு,
சித்ரா பெளர்ணமி வழிபாடு,
தை அமாவாசை வழிபாடு,
ஆடி அமாவாசை வழிபாடு,
மாசி மகம்
கார்த்திகை தீபம்
நவராத்திரி
தீபாவளி
விநாயகர் சதுர்த்தி

போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

#ஆடித்திருவிழா:

ஆடிப்பெருந்திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சேலம் மாநகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாவாகும். இவ்விழாவின்போது பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொன்றுதொட்டு வரும் நிகழ்ச்சியாகும். எனவே, இந்த வகையிலும் பெரிய மாரியம்மன் என்று அழைப்பது பொருத்தமாகும்.

ஓம் சக்தி 🙇🙏

Thursday, October 26, 2023

அகர வரிசையில் இறைவன் சிவபெருமான் பெயர்கள்

சிவ சிவ
தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல் தேவாரப் பாடல் பெற்ற, சோழ நாட்டு [1] காவிரியாற்றின் தென் கரையில் அமைந்துள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.

பாடல் பெற்ற தலங்கள்
**********************************

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), சோழ நாடு காவிரியாற்றின் வட கரை (63), சோழ நாடு காவிரியாற்றின் தென் கரை (128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். [2] [3]

காவிரி தென் கரைத் தலங்கள்
****************************************

சோழ நாட்டின் காவிரியாற்றின் தென் கரையில் அமைந்துள்ள தலங்கள் இறைவன் மற்றும் தலத்தின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன.

அகர வரிசையில் இறைவன் பெயர்கள்
********************************************

1.அகத்தீஸ்வரர், அகத்தியான்பள்ளி
2.அக்னிபுரீஸ்வரர், திருப்புகலூர்
3.அக்னிபுரீஸ்வரர், அன்னியூர்
4.அக்னீஸ்வரர், திருக்காட்டுப்பள்ளி
5.அக்னீஸ்வரர், திருக்கொள்ளிக்காடு

6.அசலேஸ்வரர், திருவாரூர்
7.அபிமுக்தீஸ்வரர், மணக்கால் ஐயம்பேட்டை
8.அமிர்தகடேஸ்வரர், சாக்கோட்டை
9.அமிர்தகடேஸ்வரர், திருக்கடையூர்

10.அயவந்தீஸ்வரர், சீயாத்தமங்கை
11.ஆலந்துறைநாதர், புள்ளமங்கை
12.ஆபத்சகாயேஸ்வரர், ஆடுதுறை
13.ஆபத்சகாயேஸ்வரர், ஆலங்குடி
14.ஆத்மநாதேஸ்வரர், 
       திருவாலம்பொழில்
15.உசிரவனேஸ்வரர், திருவிளநகர்

16.உத்தவேதீஸ்வரர், குத்தாலம்
17.உத்திராபசுபதீஸ்வரர்,        திருச்செங்காட்டாங்குடி
18.உமாமகேஸ்வரர்,    கோனேரிராஜபுரம்
19.உஜ்ஜீவநாதர், உய்யக்கொண்டான்மலை

20.எறும்பீஸ்வரர், திருவெறும்பியூர்

21.ஜகதீஸ்வரர், ஓகைப்பேரையூர்
22.ஐராவதீஸ்வரர், திருக்கொட்டாரம்
23.கடம்பவனேஸ்வரர், குளித்தலை
24.கண்ணாயிரநாதர், திருக்காரவாயில்
25.கரவீரநாதர், கரைவீரம்
கற்பகநாதர் கோயில், கற்பகநாதர்குளம்

26.காயாரோகணேஸ்வரர், நாகை
27.கும்பேஸ்வரர், கும்பகோணம்
28.கேடிலியப்பர், கீழ்வேளூர்
29.கைச்சினேஸ்வரர், கச்சனம்
30.கொழுந்தீஸ்வரர், கோட்டூர்

31.கோகிலேஸ்வரர், திருக்கோழம்பியம்
32.கோடிக்குழகர், கோடியக்கரை
33.கோணேஸ்வரர், குடவாசல்
34.கோமுக்தீஸ்வரர், திருவாவடுதுறை
35.ஞானபரமேஸ்வரர், திருமெய்ஞானம்

36.சகலபுவனேஸ்வரர், திருமீயச்சூர் இளங்கோயில்
37.சக்கரவாகேஸ்வரர், சக்கராப்பள்ளி
38.சங்காரண்யேஸ்வரர், தலைச்சங்காடு
39.சதுரங்க வல்லபநாதர், பூவனூர்
40.சவுந்தேஸ்வரர், திருப்பனையூர்

41.சற்குணநாதர் கோயில், இடும்பாவனம்
42.சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடி
43.சற்குணேஸ்வரர், கருவேலி
44.சாட்சிநாதர், அவளிவநல்லூர்
45.சிவகுருநாதர், சிவபுரம்

46.சிவக்கொழுந்தீசர், திருச்சத்திமுற்றம்
47.சித்தநாதேஸ்வரர், திருநறையூர்
48.சிவானந்தேஸ்வரர், திருப்பந்துறை
49.சுந்தரேஸ்வரர், திருவேட்டக்குடி
50.சுவர்ணபுரீஸ்வரர், செம்பொனார்கோயில்

51.சூஷ்மபுரீஸ்வரர், செருகுடி
52.செந்நெறியப்பர், திருச்சேறை
53.சேஷபுரீஸ்வரர், திருப்பாம்புரம்
54.சொர்ணபுரீஸ்வரர், ஆண்டார்கோயில்
55.சோமநாதர், கீழப்பறையாறை

56.சோமேஸ்வரர், கும்பகோணம்
57.சோற்றுத்துறை நாதர், திருச்சோற்றுத்துறை
58.தர்ப்பாரண்யேஸ்வரர்,திருநள்ளாறு
59.தாயுமானவர், திருச்சி
60.தான்தோன்றீஸ்வரர், ஆக்கூர்

61.தியாகேசர், திருவாரூர்
62.திருநேத்திரநாதர், திருப்பள்ளி முக்கூடல்
63.திருப்பயற்றுநாதர், திருப்பயத்தங்குடி
64.திருமறைக்காடர், வேதாரண்யம்
65.தூவாநாய்நாதர், திருவாரூர்

66.தேனுபுரீஸ்வரர், பட்டீஸ்வரம்
67.தேவபுரீஸ்வரர், தேவூர்
68.நடுதறியப்பர், கோயில் கண்ணாப்பூர்
69.நர்த்தனபுரீஸ்வரர், திருத்தலையாலங்காடு
70.நவநீதேஸ்வரர், சிக்கல்

71.நற்றுணையப்பர், புஞ்சை
72.நாகநாதர், பாமணி
73.நாகேஸ்வரர், கும்பகோணம்
74.நாகேஸ்வரர், திருநாகேஸ்வரம்
75.நீலகண்டேஸ்வரர், திருநீலக்குடி

76.நீள்நெறிநாதர், தண்டலச்சேரி
77.நெடுங்களநாதர், திருநெடுங்குளம்
78நெல்லிவனநாதர், திருநெல்லிக்காவல்
79.பசுபதீஸ்வரர், ஆவூர்
80.பசுபதீஸ்வரர், 
திருக்கொண்டீஸ்வரம்

81.பஞ்சவர்ணேஸ்வரர், உறையூர்
82.பஞ்சவர்ணேஸ்வரர், நல்லூர்
83.படிக்காசுநாதர், அழகாபுத்தூர்
84.பதஞ்சலி மனோகர், விளமல்
85.பராய்த்துறைநாதர், திருப்பராய்த்துறை

86.பரிதியப்பர், பரிதியப்பர்கோயில்
பாதாளேஸ்வரர், அரித்துவாரமங்கலம்
87.பாரிஜாதவனேஸ்வரர், திருக்களர்
88.பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி
89.பாலைவனனேஸ்வரர், பாபநாசம்
90.பிரம்மசிரகண்டீஸ்வரர், கண்டியூர்

91.பிரம்மபுரீஸ்வரர், அம்பர்
92.பிரம்மபுரீஸ்வரர், திருக்குவளை
93.பிரம்மபுரீஸ்வரர், திருமயானம்
94.புண்ணியகோடியப்பர், திருவிடைவாசல்
95.புஷ்பவனேஸ்வரர், மேலைத்திருப்பூந்துருத்தி

96.பொன்வைத்தநாதர், சித்தாய்மூர்
97.மகாகாளநாதர், திருமாகாளம்
98.மகாலிங்கேஸ்வரர், திருவிடைமருதூர்
99.மதுவனேஸ்வரர், நன்னிலம்
100.மந்திரபுரீஸ்வரர், கோவிலூர்

101.மயூரநாதர், மயிலாடுதுறை
102.மனத்துணைநாதர், வலிவலம்
103.முக்தீஸ்வரர், சிதிலப்பதி
104.முல்லைவனநாதர், திருக்கருகாவூர்
105.மேகநாதர், திருமீயச்சூர்

106.யாழ்முரிநாதர், தருமபுரம்
107.ரத்தினகிரீஸ்வரர், அய்யர்மலை
108.ரத்தினகிரீஸ்வரர், திருமருகல்
109.ரத்தினபுரீஸ்வரர், திருநாட்டியத்தான்குடி
110.ராமநாதர், திருக்கண்ணபுரம்

111.வசிஷ்டேஸ்வரர், திட்டை
112.வண்டுறைநாதர், திருவண்டுறை
113.வர்த்தமானீஸ்வரர், திருப்புகலூர்
114.வலஞ்சுழிநாதர், திருவலஞ்சுழி
115.வலம்புரநாதர், மேலப்பெரும்பள்ளம்

116வாஞ்சிநாதர், ஸ்ரீ வாஞ்சியம்
117.வாய்மூர்நாதர், திருவாய்மூர்
118.வில்வாரண்யேஸ்வரர், திருக்கொள்ளம்புதூர்
119.வீரட்டானேஸ்வரர், திருவிற்குடி
120.வீரட்டேஸ்வரர், கீழப்பரசலூர்

121.வீழிநாதேஸ்வரர், திருவீழிமிழலை
122.வெண்ணிகரும்பேஸ்வரர், கோயில்வெண்ணி
123.வெள்ளிமலைநாதர், திருத்தங்கூர்
124.வேதபுரீஸ்வரர், திருவேதிகுடி
125.வேதபுரீஸ்வரர், தேரழுந்தூர்

126.வைகல்நாதர், திருவைகல்

சிவன் கோவிலிற்கு சென்றால் சண்டிகேசரை வணங்குவது அவசியம்.

*சிவனை மட்டும் வழிபட்டால் போதாது... சிவாலயத்தில் இவரையும் வழிபடவேண்டும்.*
சிவன் கோயிலிற்கு சென்று சிவனை மட்டும் வணங்கி வந்தால் அருள் கிடைப்பது கடினம். சிவன் கோவிலிற்கு சென்றால் சண்டிகேசரை வணங்குவது அவசியம். 
 
சிவனடியார்களில் முதன்மையானவர் என்று கருதப்படும் சண்டிகேசர், சிவபூஜையில் இடையூறு செய்ததால் தன் தந்தையின் காலையே துண்டித்தவர்.
 
 இவரது பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான், தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் போன்றவை சண்டிகேசருக்கே தினமும் வழங்கப்படும் என அருள்பாலித்தார். அதே போல் கோவிலிற்கு வந்து சிவனை வேண்டுபவர்களின் பக்திக்கு ஏற்றவாறு பலன் அளிக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு. ஆகையால் இவரை வணங்குவது மிக மிக அவசியம். 
 
சண்டிகேசரை வணங்கும் முறை: 
சிவன் கோவிலில் உள்ள சண்டிகேசரின் சன்னதியை அடைந்ததும் சிலர் கை தட்டி வணங்குவர். சிலர் பவ்யமாக கை கூப்பி வணங்குவர். சண்டிகேசர் எப்போதும் தியானத்தில் இருப்பவர். நாம் கைகளைத் தட்டி அவரது  தியானத்தை கலைப்பதென்பது முறையான செயல் ஆகாது. ஆகையால் அமைதியாக அவர் முன் நம் இரு உள்ளங்கைகளையும் காட்டி  நான் உங்களது அருளைத் தவிர வேறு ஏதும் கொண்டு செல்லவில்லை என்று சொல்லி அவரை வேண்டினால்  நமக்கு பலன் உண்டு.
🙏ஓம் நமசிவய🙏

சீனாவின் எல்லைக்குட்பட்ட திபெத் பகுதியில் அமைந்திருக்கும் 'திசே' எனும் ஒரு மலை தான் நமது புராணங்களில் 'கயிலை' என்று போற்றப்பட்ட மலை.

#திருக்கைலாயம் என்ற #திருநொடித்தான்மலை 🙏🙇
சீனாவின் எல்லைக்குட்பட்ட திபெத் பகுதியில் அமைந்திருக்கும் 'திசே' எனும் ஒரு மலை தான் நமது புராணங்களில் 'கயிலை' என்று போற்றப்பட்ட மலை.
#கண்டேன்_அவர்_திருப்பாதம் #கண்டறியாதன_கண்டேன் 
🙏🙇

சீனாவின் எல்லைக்குட்பட்ட திபெத் பகுதியில் அமைந்திருக்கும் 'திசே' எனும் ஒரு மலை தான் நமது புராணங்களில் 'கயிலை' என்று போற்றப்பட்ட மலை.  சைவம், பௌத்தம், சமணம், திபெத்திய பொன் சமயம் நான்கிலும் முக்கியமானது இம்மலை. பொன்  சமயத்தவருக்கு உலகத்தின் அச்சு. சைவத்தில் சிவனது உறைவிடம். பௌத்தநூல்கள் சொல்லும் மகாமேரு. சமணரின் தீர்த்தங்கரர் இடபதேவர் முக்தியடைந்த அஷ்டபத கிரி, எல்லாம் இதுதான். சிந்து நதியும் பிரம்மபுத்திரா முதலிய ஆறுகளும் இம்மலையடிவாரத்தில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியில் தான் ஊற்றெடுக்கின்றன.

இந்தியாவிலிருந்து பயணிப்பது என்றாலே, விசேட அனுமதி பெற்று  விமானத்தில் நேபாளம் போய், அங்கிருந்து இப்பகுதிக்குச் செல்லவேண்டும். இந்தியாவிலிருந்து செல்ல சாதாரணமாக 2000 அமெரிக்க டொலர் செலவு செய்யவேண்டுமாம்.  மிகக்கடுமையான பயணம் அது. எந்தவித வசதிகளுமற்ற பனிப்பிரதேசம். உயரம் அதிகம் என்பதால் மூச்சுத்திணறல், சுவாசப்பிரச்சினைகள் ஏற்படும். யாத்திரை செல்லும் முதிர்ந்த பலர் அங்கேயே மரிப்பதுண்டு. 

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலேயே இப்படி இருக்கும் இந்த மலைக்கு, அந்தக்காலத்தில் பயணப்பட்டார் ஒரு மனிதர். வயது எழுபதைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலிருந்தே கால்நடையாகச் சென்றார். கேட்கவும் வேண்டுமா? கல்லும் மண்ணும் அடர்ந்த வரண்ட காட்டுப்பாதை. கால் தேய்ந்தால் என்ன, கையால் நடப்பேன், கை தேய்ந்தால் நெஞ்சால் நடப்பேன், நெஞ்சும் தேய்ந்தால் ஊர்ந்தாவது போவேன்,  என்னும்  வைராக்கியம். உடல் கேட்கவில்லை. பல இடங்களில் தடுமாறி விழுந்தார். சாப்பாடில்லை. தண்ணீரில்லை. உடம்பில் சிராய்ப்புக்காயங்கள். தோலெல்லாம் உரிந்துவிட்டது. கண்ணெல்லாம் இருட்டி வந்தது. முடியவில்லை. அறிவுமயங்கி கீழே விழுந்துவிட்டார்.

கண் விழித்தபோது இன்னொரு வயோதிபர் தனக்கு பணிவிடை செய்துகொண்டிருப்பதைக் கண்டார். அவர் கொடுத்த தண்ணீரை திணறியபடி அருந்தி மீண்டார். விடாய் அடங்கியிருந்தது. உடம்பில் ஓரளவு தெம்பு திரும்பியது போலிருந்தது. இவருக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட முயன்றார்.

"எங்கு செல்கிறீர்?"

"கயிலைக்கு."

"இந்த வயதிலா?"

"ஏன் போகக்கூடாதா?"

"இல்லை மோசமான பாதை"

"அது தெரியும்"

"ஏற்கனவே களைத்து விழுந்து விட்டீர்"

"இதோ, எழுந்து விட்டேன் தானே?"

"ஐயா, சொன்னால் கேளும். உம்மால் கயிலைக்குப் போகமுடியாது"

"போக முடியாவிட்டால் போகும் வழியிலேயே செத்து விழுகிறேன்"

"உம் மீது அக்கறையில் தான் சொல்கிறேன்"

"உம் அக்கறைக்கு நன்றி"

வயோதிபர் புன்னகைத்தார். "சரி.  சொல்லும், ஏன் கயிலைக்குப் போகிறீர்?"

"இதென்ன கேள்வி. அங்கே என்னப்பனும் அம்மையும் அழகுற அமர்ந்திருக்கும் காட்சியைத் தரிசிக்கத்தான்" அவர் கண்கள் கசிந்தன.

"சரி. நம்புகிறேன். நீர் கட்டாயம் கயிலையைக் காண்பீர். அதற்கு முதல் களைப்புத் தீர கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லும்.   நான் உமக்கு ஏதாவது உண்பதற்கு  தயார் செய்கிறேன்."

"உமக்கு கடன்பட்டிருக்கிறேன். ஆனால் நேரத்தை வீணாக்க நான் தயாரில்லை. புறப்படுகிறேன்"

"சரியான பிடிவாதக்காரர் நீர், ஓய். ஓய்வெடுக்கவேண்டாம். அருகில் ஒரு தடாகம் இருக்கிறது. குளித்துவிட்டாவது புறப்படுகிறீரா? உடல் களைப்பாவது தீரும்."

இவர் யோசித்தார். குளித்தால் கொஞ்சம் நன்றாகத் தான் இருக்கும். அப்படியே நடந்து குளத்தில் இறங்கினார். குளிர்ந்த நீர் முதிர்ந்த உடலை மெல்ல நடுங்கச்செய்தது. உடலிலிருந்த காயங்கள் எல்லாம் தீப்பட்டது போல் எரிந்தன. சிவசிவ என்றபடியே நீரில் மூழ்கினார். உடல் குளிரத்தொடங்கியது. கண்கள் சொக்கிக்கொண்டு வந்தன.

மூச்சுத்திணறுவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்து மேலே வந்தவர் திகைத்துப்போனார். "இது எந்த இடம், எங்கு நிற்கிறேன் நான்?  என்னை குளிக்கச்சொன்ன முதியவரைக் காணவில்லையே? ஆ! இது ஐயாறு, திருவையாறு சிவன் கோவில். இங்கெப்படி நான் வந்தேன்?"

இப்படி அதிர்ந்தவர் தன்னை மேலும் கீழும் பார்த்தார். உடல் மீண்டிருந்தது. காயங்களின் தடத்தைக் கூடக் காணவில்லை. அதிசயமாக இருக்கிறது. ஒருவேளை கனவேதும் கண்டபடி இந்தக் குளத்தில் விழுந்துவிட்டேனோ!

வியப்புடன் சுற்றுமுற்றும் பார்வையை செலுத்தினார். இனிமையான அதிகாலை. இப்போது தான் விடிய ஆரம்பித்திருக்கிறது. கோவில் இளவெயிலில் மெல்ல தெளிந்துவந்தது. பறவைகளின் ஓசை. விடிவதை அறியாத சுவர்க்கோழியின் சத்தம். 

சில அடியவர்கள் வந்து குளத்தில் இறங்கி தாமரைமொட்டுக்களைப் பறித்து  குடத்தில் நீரள்ளி கோவில் நோக்கி நடந்துசென்றார்கள். ஏதோ முடிவுக்கு வந்தது போல் குளத்திலிருந்து வெளியேறி அவர்களுக்குப் பின்னால் நடக்கத் தொடங்கினார். இவர் 

தூரத்தே ஒரு பிளிறல், திரும்பிப் பார்த்தால் கோவில்யானைகள் இரண்டு மெல்ல அசைந்தாடி வந்துகொண்டிருந்தன. ஆண் யானை, பிடியானை மீது மெல்ல முட்டியது. பிடி விலகி கோபத்துடன் உறுமியது. களிறு மீண்டும் செல்லமாக முட்டியது. பின் அதன் மீது அன்போடு  தும்பிக்கையைப் போட்டது. பிடி செவிச்சுளகுகளை வீசி மெல்ல முனகியது. 

யானைகளின் குறுக்கே ஓடியது ஒரு பெட்டைக்கோழி. அதைத் துரத்திக்கொண்டு வந்தது ஒரு சேவல். கொக்கரக்கோ என்று அது கூவ, கோழி கொக்கொக் என்று மறுத்தபடி வேகமாக நடந்தது. விர்ரென்று கிறீச்சிட்டபடி  இரு பறவைகள் வானில் தோன்றின. அண்ணாந்து பார்த்தால் குயில்கள். குளத்தின் கரையிலிருந்த  வில்வ மரத்தின் ஒரு கிளையில்  ஊடலுடன்  ஒரு குயில் அமர, மற்றையது அடுத்த கிளையில் அமர்ந்து கூவியது. "கூ...!" வசந்தத்தின் கீதம். 

மரத்தின் கீழே கொடியில் காயப்போட்ட வெண்ணிறத்துணிகள் இரண்டு பறந்தன. என்ன அது? ஓ, அன்னங்கள். இரு அன்னங்கள் "அழகாக நடக்கிறோம், இல்லையா?" என்று இடையை அசைத்து கேட்டபடி நடந்து மெல்ல குளத்தில் இறங்கின. குளத்தின் அக்கரையில் "மாயோன்" என்று அகவியது ஆண்மயிலொன்று. அருகே அவன் தோழி மண்ணைத் தோண்டி எதையோ கொத்தி உண்டுகொண்டிருந்தாள். "நான் அருகில் இருக்க என்ன தீனி வேண்டிக் கிடக்கிறது உனக்கு" என்று  தோகைவிரித்து சிலிர்த்தாடினான் அவன். அவள் அவனைக் கவனிக்கவேயில்லை. நிலத்தைக் கிளறுவதில் மும்முரமாக இருந்தாள்.

அவர்களின் தலைக்கு மேலால் பறந்த இரு அன்றில் பறவைகள் கீச் என்றபடி வேகமாக வந்து கரையிலிருந்த கோரைப்புதரில் புகுந்து மறைந்தன. உறுமியபடி அந்தப்பக்கம் குளத்தில் நீர்குடிக்க வந்தன காட்டுப்பன்றியும் அதன் துணையும். அதனருகே கலைமானும் அதன் பிணையும் "ம்?" என்றன. எங்கிருந்தோ வந்து குளத்தில் இறங்கிய ஒரு நாரைச்சோடி "பேக்!" என்றபடி நீரில் பாய்ந்தது. "கீக்கீ!" என்று அவற்றுக்குப் பதிலளித்தபடி அடுத்த மரத்தில் சிரித்தன இரு கிளிகள்.

மிக அருகே "ம்பா" என்று கேட்ட சத்ததைக் கேட்டு அவர் பதறி விலகினார். அது ஒரு மாடும் பசுவும். கனிந்த கண்களால் அவரைப் பார்த்து நாக்கைச் சுழற்றி மூக்கைத் துடைத்தது எருது. பசு அதனருகே குனிந்து "ஹ்ரூம்" என்றது. இரண்டும் அவரை விலகி நடந்து குளக்கரையை நெருங்கின. 

ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தவருக்கு உள்ளே எதுவோ அதிர்ந்தது. மயங்கிக்கிடந்த தன்னை மீட்டு தண்ணீர் தந்த வயோதிபரின் கள்ளமற்ற விழிகள் நினைவில் எழுந்தன. "இதென்ன கேள்வி. அங்கே என்னப்பனும் அம்மையும் அழகுற அமர்ந்திருக்கும் காட்சியைத் தரிசிக்கத்தான்" என்று தான் சொன்னதும், அவர் சிரித்து "சரி. நம்புகிறேன். நீர் கட்டாயம் கயிலையைக் காண்பீர்." என்று சொன்னதும் இவர் மூளையில் பளிச்சிட்டன.  உடல் முழுதும் மெல்லிய பரவசம் பரவியது. ஆ! இதுதான் கயிலை! இதுதான் கயிலை! நான் எதற்கு அவ்வளவு தூரம் செல்லமுயன்றேன்? கண்டுகொண்டேன்! இதுவரை கண்டறியாததைக் கண்டுகொண்டேன்! என் அப்பனே, என் அம்மையே, இத்தனை அருகிலா இருந்தீர்கள் நீங்கள், தெரியாமல் போய் விட்டதே எனக்கு!

பெரியவர் உருகினார். அவர் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வடிந்தது. அதற்குள் வந்திருப்பது யாரென்று அந்தப்பகுதியில் உலவியவர்களுக்குத் தெரிந்துவிட்டது. எல்லோரும் கைகூப்பியபடி ஓடிவந்தார்கள். அவர் கண்களை மூடி குரலை சுருதிகூட்டினார்.  கிழக்கே எழுந்த சூரியனின் முதற் கிரணம் அவர் மீது விழுந்ததில் முதிய குரல்வளை ஏறி இறங்குவது தெரிந்தது. உதடுகள் மெல்ல அசைந்தன. வந்துவிழுந்தன சொற்கள் "மாதர் பிறைக்கண்ணியானை மலையான் மகளோடும் பாடி"  பாடிமுடித்ததும் கூடியிருந்தவர்கள் நெகிழ்வுடன் கைகூப்பினார்கள் " நமோ பார்வதீபதயே! அரகர மகாதேவா! அப்பரே போற்றி! தம்பிரான் அடிகளே போற்றி!"

*********

இப்படியாக,  சைவத்தின் சமய நாற்குரவர் நால்வரில் ஒருவரான அப்பரடிகள், கயிலைக்குச் செல்ல திட்டமிட்ட பயணம், திருவையாறு நோக்கித் திருப்பப்பட்டு அவர் அங்கு “மாதர்பிறைக்கண்ணி யானை” என்று தொடங்கிப் பாடிய பதினொரு பாட்டுகளுக்கும் “கயிலைப்பதிகம்” என்று பெயர்.  இந்தப் பாடல்கள் எல்லாவற்றிலுமே ஒரு கவித்துவ அழகு உண்டு. 

இந்த எல்லாப் பாடல்களுமே சந்திரனைக் கண்ணியாகக் கொண்டவன் என்று தொடங்குகின்றன. மாதர்ப்பிறை (அழகான பிறை), போழிளம் (இளம்பிறை), எரிப்பிறை (ஒளிரும் பிறை), ஏடுமதி (இளம்பிறை) என்றெல்லாம் அவை சந்திரனை வர்ணிக்கின்றன. கண்ணி என்றால் ஆண்கள் தலையில் அணியும் பூமாலை. சிவன் தலையில் இளம்பிறையே கண்ணியாக விளங்குகிறது என்று பாடுகிறார் அப்பர்.

இரண்டாம் வரிகள் எல்லாம் சிவன் உமையோடு இருப்பதைப் பாடுகின்றன. மலையான்மகளொடும் பாடி, பூந்துகிலாளொடும் பாடி, ஏந்திழையாளொடும் பாடி, என்று பலவாறு வருகின்றது. பதினொரு பாட்டின் எல்லா ஐந்தாம் வரிகளும் “கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்” என்று முடிகின்றன. இதற்கு முன்பு தான் அறியாத ஏதோவொன்றைத் தான் கண்டுவிட்டேன். அப்படிக் கண்டதால் அவர் திருப்பாதம் கண்டேன் என்று பொருள்.

சிவன் தலையில் அணிந்த பிறையைப் பாடுவதில் தொடங்கி பாதங்களைப் பாடுவதில் முடியும் இப்பாடல் “கேசாதிபாதம்” எனும் பிற்கால சிற்றிலக்கிய வகைக்கு அடிப்படை. தெய்வங்களை உச்சி (கேசம் - தலைமுடி) முதல் உள்ளங்கால் (பாதம்) வரை வர்ணிப்பது தான் கேசாதிபாதம். பிற்காலத்தில் பாதத்திலிருந்து தலை வரை மாறிப் பாடும் வழக்கமும் ஏற்பட்டது. அதற்கு “பாதாதிகேசம்” என்று பெயர்.

பதினொரு பாடல்களிலும் கேசாதிபாதம் பாடும் அப்பர், ஈசனுடன் இணைபிரியாதிருக்கும் உமையவளையும் பாடுகிறார். இப்படி இருவரையும்  அடி முதல் முடி வரை கண்ணாரக் கண்டுவிட்டதால், கண்டறியாதன கண்டுகொண்டேன் என்கிறார் அவர். அப்படி என்ன கண்டறியாததைக் கண்டுவிட்டார் அப்பர்?

இதற்கான பதில் ஒவ்வொரு பாட்டிலும் நான்காவது வரியில் வருகின்றது. ஒவ்வொரு பாட்டிலுமே ஒவ்வொரு விலங்குச்சோடி பாடப்படுகிறது. நாம் மேலே பார்த்த களிறும் பிடியும், சேவலும் கோழியும், அன்னமும் பேடும், இப்படி பதினொரு விலங்குகளின் இணையைப் பார்த்ததைத் தான் கயிலையில் சிவனுமையைக் கண்டதாகப் பாடுகிறார் அப்பர்!

ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்ட, ஆனால் முற்றாக மாறுபட்ட இரண்டை இறைவனின் உருவமாகக் காணும் மரபே சைவமரபு. மணிவாசகர் “மெய்மையும் பொய்மையும் ஆயினாருக்கு, சோதியுமாய் இருள் ஆயினார்க்கு, இன்பமும் துன்பமும் ஆயினார்க்கு” என்று முரண்களின் இருமையாகவே இறைவனைப் பாடுவார். சிவனும் உமையுமே கூட முரண்களின் இருமை தான். அவன் ஆண், அவள் பெண்; அவன் சிவப்பு, அவள் கறுப்பு; அவன் நெருப்பு அவள் நீர். அந்த இருமையைத் தான் அப்பர் பாடுகிறார். யானைச்சோடி, அன்னச்சோடி, கிளிச்சோடி என்றெல்லாம். 

இறைவனின் அடியையும் முடியையும் ஆனானப்பட்ட பிரம்மா விஷ்ணுவாலேயே காணமுடியாது என்பது ஐதிகம். ஒன்றை ஒன்று நிரப்புகின்ற – ஒன்றாலொன்று ஆன இயற்கையின் ஆண்-பெண் இருமையில் சிவசக்தியைக் கண்டுகொண்ட அப்பர், அடிமுடி கண்டதாக உரிமைகோருகிறார். கயிலையைக் கண்டேன், கண்டறியாதன கண்டுகொண்டேன் என்று மகிழ்ந்தாடுகிறார்.   

தமிழ்ப்பக்தி மரபில் அப்பரின் கயிலைப்பதிகம், முக்கியமான புரட்சி. கயிலைக்கெல்லாம் புறப்பட்டுக் கடவுளைத் தேடி நீ போகத் தேவையில்லை. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு உயிர்ச்சோடியுமே சிவனுமை தான். நாம் வாழும் இடமே கயிலை தான் என்ற மகத்தான தரிசனம் இடம்பெற்ற பாடல் அது. எத்தனை மனமுடைந்திருந்தாலும், மனதுக்குப் பிடித்தவர் அருகில் இருக்கிறார் என்று கற்பனை செய்துகொள்வதே சில சந்தர்ப்பங்களில் நாம் மீண்டுகொள்ளப் போதுமானது. கடவுளே நம்மருகில் இருக்கிறான் என்று எண்ணிக்கொள்வது? அவனது இடத்தில் இப்போது நாம் இருக்கிறோம் என்று எண்ணிக்கொள்வது?

அந்த மகிழ்ச்சியைத் தருவது இந்தக் கயிலைப்பதிகம். 

"மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது

காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

**“கண்டேனவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்!”** 

திருச்சிற்றம்பலம்
🙏🙇

வாலி வழிபட்ட ஆதிபுரீஸ்வரர்

வாலி வழிபட்ட ஆதிபுரீஸ்வரர்
கிஷ்கிந்தை எனும் நாட்டை அரசாண்டு வந்த வாலி வீடுபேறடைவதற்காக தினசரி 4 சமுத்திரத்தில் நீராடி விதிப்படி நித்யகருமம் முடித்து பின்பு கயிலை மலை சென்று முதலில் நந்தி தேவரை வழிபட்டு அவரிடம் அனுமதி பெற்று பார்வதி சமேதரான சிவபெருமனை வாக்கு காயங்களினால் வழிபட்டுப் பின் தன் நகரினை அடைந்து நீதியுடன் நல்லாட்சி புரிந்து வந்தார்.

ஒரு நாள் திக் விஜயம் செய்து வந்த இராவணன் வாலியைக் கண்டு குறும்பாக அவனை தன் கையை விட்டுப் பிடிக்க முற்படுகையில் வாலி தன் வாலினால் இராவணன் உடல் முழுவதையும் சுற்றி கட்டி விடுகிறார். பின்னர் அப்படியே சமுத்திரங்களில் நீராடி கயிலை மலை சென்று நந்தி தேவனை வணங்கி சிவனைக் காண அனுமதி கேட்டார். அதற்கு நந்தி தேவர் கைலாசபதியானவர் முப்பத்து முக்கோடி தேவர்களோடும் அதிகாபுரியை அடுத்த ஆதிபுரத்திற்கு சென்றுள்ளார் என்றார். உடனே சிவபெருமானை தரிசிக்க வேண்டி நந்திதேவரிடம் வாலி ஆதிபுரத்திற்கு வழி கேட்டார். நந்திதேவரோ உன் வாலினால் கட்டுண்டு கிடக்கும் இராவணன் அந்த ஆதிபுரத்தை அறிவான் என்று கூறுகிறார்.
(இராவணன் மிகச்சிறந்த சிவ பக்தன். சிவன் இருக்கும் இடம் எதுவாகினும் இராவணனிற்கு தெரியும்) உடனே வாலி இராவணனைப் பார்த்து ஆதிபுரத்திற்கு வழி சொன்னால் இந்த கட்டை தளர்த்தி உன்னை விடுவிப்பேன் என்கிறார். உடனே இராவணன் இந்த ஆதிபுர திருத்தலத்தை காட்டிட அங்கு திரிபுரசம்கார மூர்த்தியாய் உள்ள சிவபெருமானைக் கண்டு பேரானந்தம் அடைந்து வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம் இந்த ஆதிபுரம். இராவணன் வழிபட்டதும் பின் இராவணன் காட்ட வாலி வழிபட்டுப் பேரானந்தம் அடைந்த பெருமைக்குரிய திருத்தலம். வாலியின் வாலினால் கட்டுண்டு இராவணன் விழிபிதுங்கி நிற்கும் காட்சி மூல விக்ரகம் உள்ள சுற்றுச்சுவரின் வெளிப்புறத்தில் தெற்கு திசையில் உள்ளது.

இடம்: பத்மதளநாயகி உடனுறை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் ஆதிபுரம் எனும் எய்தனூர் (நெல்லிக்குப்பம் அருகில்) கடலூர் மாவட்டம்.

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான விளக்கங்கள்

படித்ததில் பிடித்தது...

இந்துக்களின் சம்பிரதாயங்கள்
************************************
இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான விளக்கங்கள்

 ( காரணங்கள்)❗

ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்து கொள்வதில் அவ்வளவு சுவாரசியம் உண்டாகும்.

_*நமஸ்காரம்:*_

நமஸ்காரம் செய்வது இந்துக்களின்  உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். ஆனால், நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.

_*மெட்டி:*_

திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான ஒன்றே. அது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லை. பொதுவாக பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள். இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாக செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடைந்து, மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.

_*பொட்டு:*_

ஒவ்வொரு பெண்ணும் நெற்றியில் குங்குமம் அணிவது வாடிக்கையான ஒன்றே. நெற்றியில் தான் ஆட்ன்யா சக்கரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நெற்றியில் பொட்டு வைக்கும் போது இந்த சக்கரம் தானாக செயல்பட தொடங்கி விடும். இது உடலில் உள்ளல ஆற்றல் திறனை இழக்க விடாமல் செய்யும். மேலும் புத்தி ஒருமுனைப்படுதலை மேம்படுத்தும்.

_ *கோவில் மணிகள்:* _

கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை தான் மணிகள்.

 கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா? மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும்.

 அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும். அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும்.

 அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்.

_ *துளசியை வழிபடுதல்:* _

 இந்துக்களின் வீடுகளில் துளசி செடியுடன் கூடிய துளசி மாடம் இருக்கும். அதனை தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை உண்டாக்கினார்கள். அப்படி செய்வதால் அச்செடியை மதித்து அதனை பத்திரமாக பாதுகாத்திடுவர்.

_ *அரசமரம்:* _

பொதுவாக அரசமரத்தை பயனற்ற மரமாக பார்க்கின்றனர். அதனால் எந்த ஒரு கனியோ அல்லது திடமான மரமோ கிடைப்பதில்லை. இருந்தும் கூட அதனை பல இந்துக்கள் வழிபடுகின்றனர். ஆனால், இரவு நேரத்தில் ஆக்சிஜென் உண்டாக்கும் சில மரங்களில் அரசமரமும் ஒன்று. என்ன சுவாரசியமாக உள்ளதா? அதனால், இந்த மரத்தை பாதுகாப்பாக வைத்திடவே அதை புனித மரமாக கருதுகின்றனர்.

_*உணவருந்திய பின் இனிப்பு உண்ணுது:*_

காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடிவடையும். அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடும் இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.

_*கைகளில் மருதாணி வைப்பது:*_

அலங்கார காரணத்தை தவிர, மருதாணி என்பது சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். திருமணங்கள் என்பது அழுத்தத்தை உண்டாக்கும், குறிப்பாக மணப்பெண்ணுக்கு. மருதாணி தடவிக் கொண்டால், நரம்புகளை குளிரச் செய்யும். அதற்கு காரணம் குளிரச் செய்யும் குணங்களை கொண்டுள்ளது மருதாணி. அதனால் தான் மணப்பெண்ணின் கைகளிலும் கால்களிலும் மருதாணி தடவப்படுகிறது.

_*தரையில் அமர்ந்து உண்ணுவது:*_

நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன் தோரணையில் அமரும் போது நம் உணவு சுலபமாக செரிமானமடையும்

_*காலையில் சூரியனை வழிபடுதல்:*_

விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது. அதற்கு காரணம் விடியற்காலையில் வரும் சூரிய ஒளிகள் கண்களுக்கு மிகவும் நல்லதாகும். மேலும் காலையில் வேகமாக எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது.

_*கோவிலை வலம் வாருங்கள்:*_

உடல் ஆரோக்கியத்திற்கு காலை வேளையல் சுத்தமான இடத்தில் வலம் வர வேண்டும். அதுவும் வெறும் பாதத்தில் மேடும் பள்ளமாக பதித்து இருக்கின்ற வெளி பிரகாரத்தில் நடக்கும் போது உங்கள் பாதம் உண்மையான ஒரு உணர்வை ஏற்படுத்தும், வெளி பிரகாரத்தை 51 சுற்று அல்லது 101 சுற்று சுற்றவேண்டும் வெறும் பாதத்தில் நீங்கள் கோவிலை வலம் வரும் பொது அக்குபஞ்சர் முறை உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும். 

இது புன்னியதுடன் கூடிய ஆரோக்கியம் நம் உடல் உறுப்புகளின் அனைத்து நரம்புகளும் பாதங்களின் இணைந்துள்ளன, பீச் மற்றும் சாலைகளில் நடப்பதை தவிர்த்து, வெறும் பாதங்களில் கோவிலை வலம் வாருங்கள், புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

  இணையதள உதவியுடன் இந்த பதிவு....

 படம்:-    18ம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள்....

Followers

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் பலன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள எட்டு திசை லிங்கங்களே (அஷ்ட லிங்கங்கள்) நவகிரக தோஷங்...