Wednesday, June 30, 2021

கோவிலும்பலன்களும்

*
🔯கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.*

*⚜கும்பகோணத்தை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.*

கோவில் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான்.

இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம்.

அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர்.

இதனால் தான் இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்

*⚜கும்பகோணம் திருக்கோயில்கள் "கருமுதல் சதாபிஷேகம்" வரை பலனடைய இந்த கோவில்களை மட்டும் வழிபட்டால் போதும்.*

• 🔯கரு உருவாக  (புத்திரபாக்கியம்) -              கருவளர்ச்சேரி.

•🔯 கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற -  திருக்கருக்காவூர்.

• 🔯நோயற்ற வாழ்வு பெறுவதற்கு -  வைத்தீஸ்வரன் கோவில்.

• 🔯ஞானம் பெற - சுவாமிமலை.

• 🔯கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்.

• 🔯எடுத்த காரியம் வெற்றி மற்றும் மனதைரியம் கிடைக்க - பட்டீஸ்வரம்.

• 🔯உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோயில்.

•🔯 செல்வம் பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோவில்.

• 🔯கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்.

• 🔯இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி.

• 🔯பெண்கள் ருது ஆவதற்கும்,
ருது பிரச்சினைகள் தீர - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை).

•🔯 திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி.

•🔯 நல்ல கணவனை அடைய -  கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை.

•🔯 மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம்                    குழந்தைபாக்கியத்திற்கு.இரட்டை லிங்கேஸ்வரர்.சென்னியமங்கலம்.திப்பிராஜபுரம் 

• 🔯பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி.

• 🔯கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
• பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்.

• எம பயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம்.

• நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்.

திருமணஞ்சேரி


*தினம் ஒரு திருத்தலம்.... சிவனும், பார்வதியும் திருமணக்கோலத்தில் காட்சி தரும் தலம்.!!*

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் :

அமைவிடம் :

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் கும்பகோணத்திலிருந்து சற்று தொலைவில் திருமணஞ்சேரி என்கிற ஊரில் அமைந்துள்ளது.

மாவட்டம் :

திருமணஞ்சேரி, குத்தாலம் வழி, மயிலாடுதுறை மாவட்டம்.

எப்படி செல்வது?

இத்தலத்திற்கு மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உண்டு.

கோயில் சிறப்பு :

சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற தலமாக இக்கோயில் விளங்குகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இந்தத் தலத்தில் வந்து கல்யாண சுந்தரரை வேண்டிக்கொள்ள, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

சிவனும், விஷ்ணுவும் அருகருகே கோயில் கொண்ட திருமணஞ்சேரிக்கு வந்து தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல வரன் அமைந்து, இல்வாழ்க்கையில் சிறந்து வாழலாம்.

கோயில் திருவிழா :

சித்திரை மாதம் திருக்கல்யாண உற்சவமும், வருடந்தோறும் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசன் திருக்கல்யாண மக உற்சவமும் மூன்று நாட்கள் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூரம், திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகியன இத்தலத்தில் விசேஷமாக நடைபெறும்.

வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல் மற்றும் தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

வேண்டுதல் :

திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் இத்தல ஈசன் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமணமாக பெறுவர் என்பது இத்தல ஈசன் மகிமைகளுள் மிகப் பிரசித்தமானது.

பிரிந்த தம்பதியர் மற்றும் அண்ணன், தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேஷமான மற்றொரு அம்சம்.

நேர்த்திக்கடன் :

இத்தலத்தில் வழிபட்டு திருமண வரம் கைகூடப்பெற்றவர்கள் மீண்டும் வந்து கல்யாண சுந்தரருக்கு கல்யாண அர்ச்சனை செய்கிறார்கள். உத்வாகநாத சுவாமிக்கு வஸ்திரம் சாற்றலாம்.

மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். இதுதவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

கோயில் பிரசாதம் :

இக்கோயிலில் பிரசாதமாக விபூதி மற்றும் குங்குமம் கொடுக்கப்படுகிறது.

💫🌷🌷

Tuesday, June 29, 2021

பிள்ளையார் எறும்பு கதை

பிள்ளையார் எறும்பு* 🐜
🌀🐜🌀🐜🌀🐜🌀🐜🌀🐜🌀
*எனப் பெயர் வந்தது ஏன்?*

முப்பத்து முக்கோ டி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதி தேவி? ஆனாலும் அவளுக்கு 
'இந்தத் தொழிலை ஈசன் சரிவரக் கவனிக்கிறாரா? என்றொரு சந்தேகம். இதற்குத் தீர்வு காண முனைந்தாள்.

சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றைப் பிடித்துப் பிடித்துப் போட்டு மூடி விட்டாள். 
'இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார் பார்க்கலாம்! ' என்பது அவளது எண்ணம்.

" ஸ்வாமி, நேற்று எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்தீர்களா? " என்று ஈசனிடம் கேட்டாள். அனைத்தும் அறிந்தவனுக்கு, கேள்வியின் மர்மம் புரியாமல் இருக்குமா?  உலக நாயகி தன்னோடு விளையாடுகிறாள் என்பது ஈசனுக்குப் புரிந்தது. ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமேல்,
" இதிலென்ன சந்தேகம் ...பாத்திரத்தில் நீ சிறை வைத்த எறும்புகளைப் பார்த்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது! " என்றார். 

பார்வதி தேவி ஓடோடிச் சென்று பாத்திரத்தைத் திறந்து பார்த்தாள். சுறுசுறுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தன எறும்புகள். அத்துடன் சில அன்னப் பருக்கைகளும் கிடந்தன. 

'ச்சே ...வீணாக ஸ்வாமியை சந்தேகப்பட்டு விட்டோமே! ' என வருந்தினாள் தேவி.

"மகேஸ்வரி ...உனது ஐயம் விலகியதா? "
குறும்பாகக் கேட்ட பரமேஸ்வரன்,

"சரி ...சரி...விநாயகன் உன்னைத்தேடிக் கொண்டிருக்கிறான்...போய்ப் பார்! ..." என்றார்.

விநாயகனைச் சந்தித்த பார்வதி தேவி அதிர்ந்து போனாள். ஒட்டிய வயிறும் வாடிய முகத்துடனும் இருந்தார் கணபதி.

"ஏனம்மா...அப்படிப் பார்க்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் தாங்கள்தான் காரணம்! " என்றார் விநாயகர்.

" என்ன சொல்கிறாய்
நீ? " படபடப்புடன் கேட்டாள் பார்வதி தேவி.

" அன்னையே ...
அகிலம் ஆளும் நாயகனின் நித்திய தர்மபரிபாலனத்தில் சந்தேகம் கொண்டது தாங்கள் செய்த முதல் தவறு. அடுத்தது, அப்பாவி எறும்புகளை பட்டினி போடும் விதத்தில் சிறையிட்டது! தாயின் பழி தனையனைத்தானே
சாரும். எனவே, எறும்புகளின்  பசியை 
நான் ஏற்றுக் கொண்டு தாங்கள் எனக்களித்த அன்னத்தை, எறும்புகளுக்கு இட்டேன். பட்டினி கிடந்ததால், எனது வயிறு சிறுத்துப் போனது! " விளக்கி முடித்தார் விநாயகர்.

பார்வதி தேவி கண் கலங்கினாள். விநாயகரை அழைத்துக் கொண்டு சிவனாரிடம் சென்றவள், "ஸ்வாமி, என்னை மன்னியுங்கள்.  நான் செய்த தவறுக்கு நம் மகனை வதைக்க வேண்டாம்! " என்று வேண்டினாள்.

" வருந்தாதே தேவி! பக்தர்கள் என்பால் வைக்கும் நம்பிக்கை, சற்றும் குறைவில்லாததாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு இணையான பூஜையோ, வழிபாடோ கிடையாது. இதை உலக மக்களுக்கு உணர்த்த நடந்த திருவிளையாடலே இது. அன்னபூரணியான நீ, உன் பிள்ளைக்கு அன்னம் அளித்தாய். அவன் அதை எறும்புகளுக்கு வழங்கினான். விநாயகனின் பெருமையைப் போற்றும் வகையில், அவை பிள்ளையார் எறும்புகள் என்றே அழைக்கப்படட்டும் என்று அருளினார்.

பிறகு பார்வதியிடம்,
" எறும்பு உண்டது போக, மீதம் உள்ள உள்ள அன்னப் பருக்கைககளை விநாயகனுக்குக் கொடு! " என்றார்.  அப்படியே செய்தாள் பார்வதி. அந்தப் பருக்கைகளை உண்ட விநாயகனின் வயிறு பழைய நிலைக்குத் திரும்பியது. அவரது பசியும் தீர்ந்தது. இந்த அருளாடல் சம்பவம் தேய்பிறை சதுர்த்தி திதி நாளில் நிகழ்ந்தது. இதையே சங்கடஹர சதுர்த்தி நாளாக அனுஷ்டித்து விநாயகரை வழிபடுகிறோம் என்று கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு.

விநாயகர் யானையின் கருப்பு நிறம் கொண்டவர். கருணைக்கடலாக இருந்து பக்தர்களைப் பாதுகாக்கிறார். கருப்பு நிறமுள்ள. பிள்ளையார் எறும்பும் யாரையும் கடிப்பதில்லை. அதனால் அப்படி ஒரு பெயரை வைத்துவிட்டார்கள்.
🌀🐜🌀🐜🌀🐜🌀🐜🌀🐜🌀

Monday, June 28, 2021

காசியை மிஞ்சும் கோவில்

#காசியை #மிஞ்சும் #ஒரு #கோவில் 
புதுச்சேரி மாநிலத்தில் எங்குள்ளது தெரியுமா.??

இந்துக்கள் பலரும் வாழ்வில் ஒரு 
முறையாவது காசிக்கு செல்லவேண்டும் 
என்று நினைப்பதுண்டு. 

கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். 

அதே போல காசிக்கு நிகரான, ஏன் காசியை 
விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் புதுச்சேரியிலும் உள்ளது. 

அந்த கோவில் எங்கு உள்ளது, அதன் சிறப்புகள் என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனுர் அருகில்   திருக்காஞ்சி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம். 

காசியில் உள்ள கோவில் எப்படி கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதே போல ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது.

 சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு நிகராக போற்றப்படுகிறது. இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு. 

இந்த கோவில் சங்கராபரணி நதிக்கரையில் இருந்தாலும் இங்குள்ள இறைவன் கங்கைவராக நதீஸ்வரர் என்று அழைக்கப்படுவதில் இருந்தே நாம் சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு ஒப்பானது என்று அறிந்துகொள்ளலாம் .

இந்த கோவிலில் வீற்றிருக்கும் ஐயனை வேண்டினால் பதினாறு செல்வங்களும் ஒருசேர கிடைக்கும் என்பது ஐதீகம். 

அதோடு பூர்வ ஜென்ம பாவ தோசங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகும் என்று கூறப்படுகிறது. 

இந்த திருத்தலத்தில் சித்தர்களின் சமாதிகள் 
பல இருப்பதாக குறிப்புகள் உள்ளன. 

இந்த ஸ்தலமானது காசிக்கு நிகராக போற்றப்படுவதற்கு பின் ஒரு புராண 
காலத்து கதையும் உள்ளது.

ஒரு சமயம் வேத விற்பன்னர் ஒருவர் தன்னுடைய தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைக்க புறப்பட்டு சென்றுள்ளார். 

போகும் வழியில் இங்குள்ள இறைவனை தரிசிக்க விரும்பிய அவர் இங்கு வந்துள்ளார். இங்கு வந்ததும் தன்னுடைய தந்தையின் அஸ்தி முழுவதும் பூக்களாய் மாறி உள்ளது. 

இதை கண்டு அவர் மெய் சிலிர்த்துள்ளார். 

அஸ்தியை பூக்களாக மாற்றும் சக்தி இந்த தளத்திற்கு உள்ளது என்றால் இது காசியை மிஞ்சும் வகையில் சக்தி பெற்ற ஒரு தலம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். 

அந்த சமயம் அவருக்கு, காசியில் 
செய்ய வேண்டிய பிதுர் கர்மாக்களை இங்கும் செய்யலாம் என்றொரு அசரீரி கேட்டுள்ளது.

இங்குள்ள சிவலிங்கமானது ஏறத்தாழ 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று கூறப்படுகிறது. 

இந்த சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்துள்ளார் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது. மூலவர் மேற்கு நோக்கி அமர்ந்துள்ள இந்த தலத்தில் காமாட்சி மீனாட்சி என இரு அம்மன்கள் உள்ளனர். 

இங்குள்ள கருவறையானது தஞ்சை பெரிய கோவிலின் கருவறையை ஒத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.🙏🙏🙏

சிவாய நம💐💐💐

Sunday, June 27, 2021

Eggo less Devotion

கர்வம் இல்லா பக்தியே உயர்ந்தது!

பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதிக்கு பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச உலகில் வேறு ஆளில்லை என்று கர்வம் இருந்தது.

 இதனை உணர்ந்த கண்ணன் பாஞ்சலியின் இந்த கர்வத்தை அகற்ற எண்ணம் கொண்டான்.

ஒருநாள் காட்டில் இருந்த திரௌபதியை காண அந்த  மாயவன் வருகை புரிந்தான்….,

கண்ணனை கண்ட திரௌபதைக்கு மிக்க மகிழ்ச்சி. அவள் கண்ணனிடம் “அண்ணா, நீங்கள் துவாரகையில் இருந்து எப்படி வந்தீர்கள்? தேர் குதிரை பல்லக்கு என எதையும் இக்காட்டில் காணவில்லையே?” என்றாள்.

 “தங்கையே ஏனோ மனம் உன்னைப் பார்க்கும் ஆவலால் உந்தித் தள்ளியது. அதனால் நடந்தே உன்னை காண இங்கே வந்து விட்டேன்” என்றார்.

அதைக்கேட்டு திரௌபதையின் கண்களில் கண்ணீர் அரும்பியது.

“அண்ணா, என்னை காண உங்கள் பொற்பாதம் நோக நடந்தே வந்தீர்களா? அவை எந்தளவுக்கு வலிக்கும்.. சரி சரி, நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். நீராடுங்கள் தங்களின் உடல் களைப்பு நீங்கும் நடந்த கால்களுக்கும் இதமாக இருக்கும்” என்றாள்.

”கண்ணனும் சிரித்துக் கொண்டே தலையாட்டினார்.

திரௌபதையின் வேண்டுதலை ஏற்று பீமன் தன் பலத்தையெல்லாம் காட்டி ஒரு பெரிய கொப்பறையை வெந்நீர் போட தூக்கி வந்தான். வந்தவன் அருகே ஓடிய ஆற்றில் கொப்பறையை ஒரே அழுத்தாக அழுத்தி தண்ணீர் எடுத்தான்.

மூன்று பெரிய பாறைகளை உருட்டி வந்து  அதையே அடுப்பாக்கி கொப்பறையைத் தூக்கி வைத்தான். ஒரு காய்ந்து போன மரத்தையே ஒடித்து வந்து தீப்பற்ற வைத்தான். தீ ஜூவாலை விட்டு எரிந்தது, ஆனாலும் மதியமாகியும் கொப்பறை தண்ணீர் துளிகூட சுடவில்லை.

கண்ணன் தங்கையிடம்

“தங்கையே மதியம் ஆகிறது வயிறும் ஆகாரம் கேட்கிறது. அடியேன் தீர்த்தமாட வெந்நீர் என்னாச்சு?” என கேட்க திரௌபதி கண்கலங்கியவாறே “அண்ணா, என்ன சோதனையோ தெரியவில்லை. ஏனோ கொப்பறையின் நீர் துளிக்கூட கொதிக்கவில்லை.. மாறாக ரொம்பவும் குளிர்ந்திருக்கிறது” என்றாள்.

கண்ணன் பாஞ்சாலியின் பக்கத்தில் இருந்த பீமனிடம் “பீமா, அந்த கொப்பரை தண்ணீரை கீழே கொட்டு” என்றார். பீமனும் கண்ணன் ஆணைக்கிணங்கி நீர் நிறைந்த கொப்பறையை கீழே கவிழ்க்க, கொப்பறையின் உள்ளிருந்து ஒரு குட்டி தவளை தாவி ஓடியது.

கண்ணன் பாஞ்சாலியிடம் “தாயே தீ ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்தும் அந்த நீர் குளிர்ச்சியாக இருக்க காரணம் இதுதான். அந்த தவளை சுடுநீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை பிரார்த்தித்துகொண்டே இருந்தது. பிரார்த்தனையை ஏற்று அதைக் காப்பாற்றவே கொப்பறை நீரை குளிர்ச்சியாக இருக்க செய்தேன். இப்போது புரிகிறதா ஏன் கொப்பறை நீர் கொதிக்கவில்லை என”.

ஒரு குட்டி தவளையின் சரணாகதி பிரார்த்தனை கூட எனக்கு எவ்வளவு பெரியதென்று பார்த்தாயா? என்றார்.  திரௌபதிக்கு நெஞ்சில் சுரீரென உரைத்தது. ஆஹா, பகவான் கண்ணனிடம் நான் கொண்ட என் பக்தியே உயர்ந்ததென நினைத்தேனே, இப்போது இந்த தவளையின் பக்தி அல்லவா உயர்ந்ததாக காண்பித்து விட்டான். ஒரு தவளை கண்ணன் மீது கொண்ட பக்தியின் காரணமாக கொழுந்து விட்டு எரிந்த தீயிலிருந்து உயிர் பிழைத்து ஓடுகிறது, அதன் பக்தியை மிஞ்சி என் பக்தி எப்படி உயர்ந்ததாக முடியும் என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.

பகவான் ஒருவரின் உள்ளத்தின் பக்தியை தான் பார்க்கிறானே தவிர  அதை  நான் செய்தேன் இதை நான் செய்தேன்  என்ற கர்வமும் கூடாது. பக்திக்கு துளி கூட கர்வமும் கூடாது என்பது புரிகிறதல்லவா..

Uppiliyappa perumal koil

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம்
108 திவ்யதேசங்கள்.

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோவில்:-

திருவிண்ணகர் (எ) ஒப்பிலியப்பன் கோவில் 

மூலவர்: ஒப்பிலியப்பன்

தாயார்: பூமிதேவி

உற்சவர்: ஸ்ரீனிவாசன்

கோலம்: நின்ற திருக்கோலம்

திசை: கிழக்கு

விமானம்: சுத்தானந்த விமானம்

தீர்த்தம்: அகோராத்ரா புட்கரணி, ஆர்த்தி புட்கரணி, சாரங்க தீர்த்தம், சூரிய தீர்த்தம், இந்திர தீர்த்தம்

மங்களாசாசனம்: பேயாழ்வார் - 2 பாசுரம், நம்மாழ்வார் -11 பாசுரம், திருமங்கையாழ்வார் - 34 பாசுரம். 

நாமாவளி: ஸ்ரீ பூமிதேவி ஸமேத ஒப்பிலியப்பன் ஸ்வாமிநே நமஹ.

ஊர்: திருநாகேஸ்வரம், கும்பகோணம்.

தல வரலாறு :-

முற்காலத்தில் மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேய மகரிஷி, "பூமாதேவி" தனக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென்றும், "திருமால்" தனக்கு மாப்பிள்ளையாக வேண்டுமென்றும் ஆசையுற்று இங்குள்ள துளசி வனத்தில் கடும் தவம் செய்தார்.

அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த பெருமாள், பெரிய பிராட்டியை நோக்கி "தேவி! நீ சென்று மார்க்கண்டேயரின் மகளாக இரு. தக்க நேரத்தில் நான் வந்து உன்னுடன் உறைவேன்" என்றார்.

அதற்கு மனமிறங்கிய பூமாதேவி ஒருநாள் துளசிச் செடியின் அருகே இரண்டு வயது பெண் குழந்தையாகத் தோன்றினார். அக்குழந்தை பூமி பிராட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிய மார்க்கண்டேய மகரிஷி "பூமாதேவி"எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்.

"பூமாதேவி" திருமண வயதை அடைந்தாள். அவளுக்கு திருமணம் செய்து வைக்க தக்க மணமகனைத் தேடினார் மார்க்கண்டேயர்.  அவரிடம் நாராயணர் கொஞ்சம் விளையாடத் தீர்மானித்தார்.

"திருமால்" வயோதிக அந்தணர் வேடம் பூண்டு, கந்தலான ஆடையை உடுத்திக் கொண்டு முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். அவரை வணங்கி வரவேற்ற முனிவர், "தாங்கள் விரும்புவது யாது?" எனக் கேட்டார்.

அதற்கு முதியவர், "நான் உயர்ந்த குடியில் பிறந்தவன். வயதான காரணத்தால் தள்ளாமையால் வருந்துகிறேன். மனைவி இல்லாதவனுக்கு இல்லறமில்லை.  தங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்" என்றார்.

இதைக்கேட்டு திடுக்கிட்ட முனிவர் "இதற்கு நான் உடன்பட மாட்டேன்" என்று உறுதியுடன் கூறிவிட்டார்.

ஆனால், முதியவரோ "தங்கள் மகளை திருமணம் செய்து தராவிட்டால் தங்கள் எதிரிலேயே உயிரை விடுவேன்" என்றார்.

செய்வதறியாது திகைத்த முனிவர், தனது மகளிடம் சென்று நடந்ததை விளக்கினார். அதற்கு அவள், வயோதிகரை மணக்க சம்மதிக்கமாட்டேன். வற்புறுத்தினால் உயிரை விட்டு விடுவேன் என்றாள்.

மார்கண்டேய மகரிஷி வேறு வழி தெரியாமல் திருப்பதி வெங்கடேச பெருமாளை நினைத்து வழங்கினார். அப்போது அந்தணர் வெங்கடேசப் பெருமாளாகக் காட்சி தந்தார். 

முனிவரே உமது ஆசையை நிறைவேற்றவே இங்கு வந்தேன். உமது மகள் பூமாதேவியை எனக்கு திருமணம் செய்து தர வேண்டும்.

உமது மகள் சிறு பெண்ணாதலால், அவளுக்கு உப்பு போட்டு உணவு வகை எதுவும் சமைக்கத் தெரியாது என்று கூறினீர்கள். ஆதலால், "இந்த தலத்தில் யாம் உப்பை மறுத்தோம். உப்பில்லாமல் எனக்கு நைவேத்தியம் படைப்பவரும், உப்பற்ற பண்டங்களை உண்பவரும் எனது அருளை பரிபூரணமாக பெறுவர். உமது மகளை எனக்குத் திருமணம் செய்து தருவீராக!" என்றார்.

இதைக்கேட்டு மகிழ்ந்த முனிவர், "பரந்தாமனே! எனது பதல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள். நீர் எந்நாளும் எனது புதல்வியுடன் இத்தலத்திலேயே இருக்க வேண்டும். இந்த தலம் எனது பெயரால் அழைக்கப்பட வேண்டும். உப்புற்ற உனது உணவு பக்தர்களுக்கு, பெரும் சுவையுடன் இருக்க வேண்டும்" என்ற வரங்களைக் கேட்டார். பெருமாளும் அவர் கேட்ட வரங்களை அருளி "பூமாதேவியை" மணந்தார்.  இன்றளவும் பூமாதேவியுடன் தம்பதியாக திருமண கோலத்திலேயே காட்சி தருகிறார்.

உப்பில்லாத உணவையே விரும்பி ஏற்றதால் "உப்பிலியப்பன்" என்ற திருநாமம் பெற்றார்.  அப்பெயர் மருவி "ஒப்பிலியப்பன்" என்று ஆனது. இன்றளவும் இவருக்கு உப்பில்லாத உணவு வகைகளே நைவேத்தியமாகச் சமர்ப்பிக்கப்படுகிறது.

 சிறப்புகள் :-

உப்பில்லாத உணவு படைக்கப்படும் ஒரே திவ்யதேசம்.   தாயார் பூமிதேவி மூலவருக்கு அருகிலேயே காட்சி தரும் திவ்யதேசம்.

செண்பக வனம், ஆகாசவனம், திருவிண்ணகர், மார்க்கண்டேய சேத்திரன், தென்திருப்பதி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் தலம்.  

ஆழ்வார்களில் ஒருவரன "நம்மாழ்வார்" பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் என ஐந்து வடிவங்களில் காட்சி கண்ட தலம்.

மார்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தர்மதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்த தலம்.

மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்யதேசம்.

என்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாயப்
          பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய்
     மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
          தன்னொப் பாரில்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே

 வழித்தடம் :-

கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்.  திருநாகேஸ்வரம் இரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு ஒப்பிலியப்பன் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு பூமிதேவி தாயார் திருவடிகளே சரணம். 

 நாளைய பதிவில்  :-

அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோவில் - நாச்சியார் கோவில் திருக்கோவிலைத் தரிசனம் பண்ணலாம்.

ஒம் நமோ நாராயணாய நமஹ

#இராமானுசநூற்றந்தாதி
#எம்பெருமானார்
#உடையவர்

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் இராமானுசா என்னும் நாமம்

இராமானுச நூற்றந்தாதி

உறுபெருஞ்செல்வமும் தந்தையும்தாயும்  உயர்குருவும் வெறிதருபூமகள்நாதனும்  மாறன்விளங்கியசீர் நெறிதருஞ் செந்தமிழாரணமேயென்று இந்நீணிலத்தோர் அறிதரநின்ற  இராமானுசன் எனக்காரமுதே

உய்ய ஒரேவழி உடையவர் திருவடி

Temples360.in

*For More Spiritual Content*

*Visit our YouTube Channel*
https://youtube.com/channel/UCzyuoCjvB15KPJjIL9HGNHA

*Visit our Instagram Page*
https://www.instagram.com/p/CQX0u7Nhyxh/?utm_medium=copy_link

*visit our Facebook page*
https://www.facebook.com/100104942230621/posts/128135026094279/

*Visit our Blogger*
http://temples360dotin.blogspot.com/2021/06/namakal-narasimmar.html

🌷🌷

Saturday, June 26, 2021

8th Divyadesam Gajendra Varadha Temple





Gajendra Varadha Perumal Temple in Thirukkavithalam, a village in the outskirts of Papanasam in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu god Maha Vishnu. Constructed in the South Indian style of architecture, the temple is glorified in the Divya Prabandha, the early medieval Tamil canon of the Azhwar saints from the 6th–9th centuries AD. It is one of the 108 Divyadesam dedicated to Vishnu, who is worshipped as Gajendra Varadha and his consort Lakshmi as Ramamanivalli. The temple is one of the five Pancha-Kannan temples, where Krishna, an avatar of Vishnu is given prominence over the presiding deity. 

 The temple is believed to have been built by the Medieval Cholas of the late 8th century AD, with later contributions from Vijayanagar kings and Madurai Nayaks. A granite wall surrounds the temple, enclosing all its shrines and its bodies of water. Gajendra Varadha is believed to have appeared to Gajendra the elephant also called Indrajumnan, the crocodile called Koohoo, Sage Parasara and Sri Anjaneya. Six daily rituals and four yearly festivals are held at the temple, of which the Gajendra Moksha Leela, celebrated during the Tamil month of Aadi (July–August), is the most prominent. The temple is maintained and administered by the Hindu Religious and Endowment Board of the Government of Tamil Nadu.

As per Hindu legend, King Indrajuman, who immersed himself in the worship of Lord Vishnu, failed to strengthen his army and lost his kingdom. While doing worship, he also did not observe the sage Durvasa (some sources claim it as Agasthya) who went along his way. The sage got irritated and cursed the king to be born as an elephant in his next birth. The king apologized to the sage for his negligence and moved by his innocence, the sage wished that he would continue to be a Vishnu devotee as an elephant and that Vishnu would bestow him goodwill. 

There was a demon by name Koohoo in the temple tank at this place, who troubled all who took bath in the tank. He was cursed by a sage to be born as crocodile in his next birth. The elephant Gajendra continued as a Vishnu devotee and while drinking water from the temple tank, his leg was grabbed the crocodile. The elephant cried in rescue calling the name "Adimulam" and Vishnu sent his discus to fend off the crocodile.

 Both the elephant and crocodile turned to their human form by the grace of Vishnu. Since Vishnu appeared heard to save the elephant Gajendra, he came to be known as Gajendara Varadar. Hanuman, the monkey lieutenant of Rama, (avatar of Vishnu) also worshiped Vishnu at this place and hence the place came to be known as Kabisthalam (kabi in Tamil indicated monkey).

The Temple

The temple is located in Kabisthalam, a village situated 3 km (1.9 mi) away from Papanasam and around 20 km (12 mi) away from Kumbakonam and Thanjavur, towns in the South Indian state of Tamil Nadu. The village is located in between the two rivers Kaveri and Kollidam. The temple is believed to have been built by the Medieval Cholas of the late 8th century AD, with later contributions from Vijayanagar kings and Madurai Nayaks. A brick wall surrounds the temple, enclosing all its shrines and bodies of water. The temple has a five-tier rajagopuram and a single precinct. The prime deity, Gajendra Varadhar is enshrined in the sanctum, in a reclining posture, called Bhujanga sayanam. The vimana (roof above the sanctum) is called Ganganakrutha Vimanam. There is a separate shrine for Ramanavalli, located to the right of the sanctum. There are separate shrines for Yoga NarasimharSudarsanaGaruda and the Azhwars in the first sanctum. The main temple tank is Gajendra Pushkarani and there is another tank called Kapila Theertham, located inside the temple complex


Festivals and religious practices

The temple priests perform the pooja (rituals) during festivals and on a daily basis. As at other Vishnu temples of Tamil Nadu, the priests belong to the Vaishnavaite community, a Brahmin sub-caste. The temple rituals are performed six times a day: Ushathkalam at 7 a.m., Kalasanthi at 8:00 a.m., Uchikalam at 12:00 p.m., Sayarakshai at 6:00 p.m., Irandamkalam at 7:00 p.m. and Ardha Jamam at 8:00 p.m. Each ritual has three steps: alangaram (decoration), neivethanam (food offering) and deepa aradanai (waving of lamps) for both Gajendra Varadhan and Ramanavalli. During the last step of worship, nagaswaram (pipe instrument) and tavil (percussion instrument) are played, religious instructions in the Vedas (sacred text) are recited by priests, and worshippers prostrate themselves in front of the temple mast. There are weekly, monthly and fortnightly rituals performed in the temple. The Gajendra Moksha Leela celebrated in the Tamil month of Adi (July–August), Chariot festival during the Tamil month of Vaikasi (May–June) on Visakam star and Brahmmotsavam are the major festivals celebrated in the temple, along with all Vishnu related festivals


The temple is revered in Nalayira Divya Prabandham, the 7th–9th century Vaishnava canon, by Tirumazhisai Alwar in one hymn. The temple is classified as a Divyadesam, one of the 108 Vishnu temples that are mentioned in the book.[5] Since there is only a passing mention about the place in the verse, it was earlier not clear on whether the verse refers to the temple. But it has been concluded that the verse "Aatrankarai Kidakkum Kannan" meaning the Lord on the banks of the river refers to Gajendra Varadar in this place.[3] Religious scholars consider this place is a unique Vishnu temple as he descended to rescue to an animal, while he appeared in all other places to rescue sages, celestial bodies or demons.[4]

This temple is one of the Panchakanna (Krishnaranya) Kshetrams. Kannan refers to Krishna, the avatar of Vishnu, while pancha means five and Kshetrams refers to holy places. Four of the five temples are situated in Chola Nadu, in modern times, in the region surrounding Kumbakonam and Nagapattinam and one of them in Nadu Nadu. There are five similar temples located in North India, called Pancha-dvarakas. Krishna is not the presiding deity in any of the temples. The processional deity, Krishna, led to the derivation of the names of these places. In Kabisthalam, Kannan is referred as "reclining Lord in the river banks

Friday, June 25, 2021

தாளி சரடு

தாலி சரடில் உள்ள ஒன்பது இழைகளும்!அவற்றில் உள்ள ஒன்பது தத்துவங்களும்... சிறப்பு பதிவு ❤️ :*

இந்துக்களிடையே மஞ்சள் நிறம் என்றாலே அது புனிதமான நிறம் என்றே கருத்து ஆழமாக பதிந்துள்ளது. திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள்

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. 

தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.

பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப் பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் “தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.

மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

தெய்வீகக் குணம்
தூய்மைக் குணம்
மேன்மை & தொண்டு
தன்னடக்கம்
ஆற்றல்
விவேகம்
உண்மை
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
மேன்மை
இந்த ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திரு மாங்கல்யச்சரடு (தாலி சரடு) அணிவிக்கப்படுகிறது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பிரம்ம புரிஸ்வரர் கோவில்

தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடிகொண்டிருக்கும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்  கோயில் சிவபெருமானையும்  குருபகவானின் அதிதேவதை பிரம்மாவையும் வணங்கினால் நம் தலையெழுத்தே மாறும் ! இன்று 25/6/2021 வெள்ளிக்கிழமை பூராடம் நக்ஷத்திரம்நமது துன்பங்களுக்கு கவலைகளுக்கு விமோச்சனம்   நிச்சயம் கிடைக்கும்.!யார் நம்புகிறார்களோ இல்லையோ நான் மிகவும் நம்புகின்றேன் !பிரம்மபுரீஸ்வரர் திருவருள் புரிவார் என்று !
💐💐💐இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !! 🌺🌺🌺🌹🌹🌹🌸🌸🌸💐💐💐நற்பவி நற்பவி🌺🌺🌹🌹🌹🌸🌸🌸💐💐💐நற்பவி நற்பவி🌺🌺🌹🌹🌹🌸🌸🌸💐💐💐நற்பவி நற்பவி
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்  கோயில்   ! பிரம்மா தான் குருபகவானின் அதிதேவதை !எனவே ஒவ்வொரு வியாழன் தோறும் குருவை வழிபடுவதோடு பிரம்மாவையும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஸ்வாமியையும் வழிபட வேண்டும் !இறை சிந்தனை எனக்குள் புகட்டி என்னை வளர்த்த பெற்றோருக்கும் பெரியோர்களுக்கும் வணக்கம் செலுத்தி பிரம்மா தான் நம்மை படைத்தார் என்பதால் அவரை வணங்கும் விதமாக இன்று 13/8/2020 வியாழன்  திருப்பட்டூர் கோவில் பற்றிய 20 தகவல்கள் பதிவு செய்து வணங்குகின்றேன் 💐💐💐இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !! 🌺🌺🌺🌹🌹🌹🌸🌸🌸💐💐💐நற்பவி நற்பவி🌺🌺🌹🌹🌹🌸🌸🌸💐💐💐நற்பவி நற்பவி🌺🌺🌹🌹🌹🌸🌸🌸💐💐💐நற்பவி நற்பவி

 திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

மூலவர் : பிரம்மபுரீஸ்வரர்

அம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி)

தல விருட்சம் : மகிழமரம்

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்பிடவூர், திருப்படையூர்

ஊர் : சிறுகனூர், திருப்பட்டூர்

மாவட்டம் : திருச்சி

திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

இங்கு பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. பிரம்மன் சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம் இது. சிவன் கோவிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது.

சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்த ஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச் சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர்.

இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இந்த கோவில் உள்ளது.

திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.

'குருர் பிரஹ்மா, குருர் விஷ்ணு, குருர் தேவோ மகேச்வர, குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ’ என்ற குரு மந்திரப்படி அமைந்த கோவில் இது. பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோ தரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர்.

பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோவிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.

பிரம்மன் வழிபட்ட சோடச லிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது.

இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.

பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும்.

வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் பதஞ்சலி பிடவூர் எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக் கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.

வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார்.

அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்ம நாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.

பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது.

தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.

பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார்.

தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய், எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார்.

படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.

பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார்.

பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.

என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக, என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.

பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது.

முகவரி:

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,

சிறுகனூர்,

திருப்பட்டூர்-621 105,

திருச்சி மாவட்டம்.

போன்: +91 431 2909 599 (தொடர்பு நேரம்: காலை 9.30 - மாலை 6 மணி)
   
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

திருப்பட்டூர் கோவில் பற்றிய 20 தகவல்கள்
திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், சமய புரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், சிறுகனூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பட்டூர் திருத்தலம் உள்ளது. இங்கு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

* இத்தலத்தில் 3001 வேதம் ஓதுபவர்கள், அனு தினமும் வேதங்களை பாராயணம் செய்ததால் ஏற்பட்ட அதிர்வலைகள் அனைத்து இடங்களிலும் பரவிக் கிடந்ததால் ‘திருப்பிடவூர்’ என்று பெயர் பெற்றது. அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ ஆனது.

 
* புலியின் கால்களைப் பெற்றிருந்தவர் ‘வியாக்ர பாதர்’. இவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்ய தேர்வு செய்த திருத்தலம் இதுவாகும்.

* இத்தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்து நீரை, எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

* இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமன் நாராயணரை வணங்கி தொழுததால், ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.

* திருக்கயிலாய ஞான உலா என்னும் நூல் அரங்கேறிய இந்தத் தலத்தில், கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், பின் அவர்களே இறைவனாக மாறிப்போவதும் நிகழும் என்பது ஐதீகம்.

* சிவபெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.

* சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர். அந்த பிரம்மன் பரிகாரம் தேடிக் கொண்டது திருப்பட்டூர் என்ற இந்த திருத்தலத்தில் தான்.

* பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளமும், சிவலிங்கச் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

* பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பிரம்ம சம்பத் கவுரி என்ற திருநாமத்துடன் அம்பாள், கனிவு ததும்ப.. கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புடவை சாத்தி வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

* பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

* குரு பகவானுக்கு அதி தேவதையான பிரம்மா, இந்த ஆலயத்தில் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். பிரம்மாவை வணங்கும் போதே, குரு தட்சிணாமூர்த்தியையும் கண்டு தரிசிக்கலாம்.

* இங்குள்ள சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

* தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடிகொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.

* தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் இங்குள்ள காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்க வேண்டும். அதற்காகத் தான் இந்த காலபைரவரின் வலது காது வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

* இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் வீற்றிருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வரியம் கிடைக்கும்.

* 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்து பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.

* இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வ நாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து வணங்குபவர்களுக்கு புத் துணர்ச்சி கிடைக்கும்.

* திருப்பட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.

* இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சன்னிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சாத்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

* வெள்ளைத் தாமரை சாத்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும். 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் சேரும்.

இராச இராச சோழன்

ஐப்பசி சதயம் ராஜராஜ சோழனுக்கு என்றால் ஆடி திருவாதிரை ராஜேந்திரனுக்கானது.  ஆடி திருவாதிரை. ஆனால் அவரை கொண்டாட யாருமில்லை.

ஆம், ராஜராஜனை விட பல மடங்கு வெற்றிகளை குவித்தவர் ராஜேந்திரன். ராஜராஜனின் அரசு தஞ்சையிலும் ஈழத்திலுமே இருந்தது, 

அதை கலிங்கம், சாளுக்கியம் வங்கம் கடல்தாண்டி கடாராம், கம்போடியா வியட்நாம், சுமத்ரா என எங்கெல்லாமோ விரிவாக்கி வைத்திருந்தார் ராஜேந்திரர்.

நிச்சயம் சரித்திரத்தின் சீசருக்கும், செங்கிஸ்கானுக்கும் இணையான அரசன் அவர். இன்னொரு இனத்தில் பிறந்திருந்தால் கொண்டாடி தீர்த்திருப்பார்கள். ஆனால் தமிழினத்தில் பிறந்ததால் மறைக்கப்பட்டார்.

தமிழினம் அவரை கொண்டாடி தீர்த்தது, ராஜேந்திரன் எனும் அப்பெயர் இன்றும் தமிழ்நாட்டில் சூட்டப்படும் அளவுக்கு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் அவரை பெருமையாய் எண்ணிற்று.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே “மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே..”

தனது “ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர்.. 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்.. “

அவரது போர்ப்படையில் 60,000 யானைகளும், 
5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன..

இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும்  ஆகும் தீவன செலவு  200 ரூபாய்.. பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய்.. ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய்.. ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் பால், தயிர் , வெண்ணை, நெய் போன்ற வற்றால் லாபம் ஈட்ட முடியும்...

ஆனால் எந்த லாபத்தையும் வழங்காத 60,000 யானைகளையும் 
5 லட்சம் குதிரைகளையும் , ராஜேந்திர சோழர் பராமரித்தது எதற்காக.. ?

போர் புரிவதற்காக மட்டும்தான்.. !

யானைப்படை  மற்றும் குதிரைப் படையே இலட்சக் கணக்கில் வைத்திருந்தவரின் , காலாட் படை எவ்வளவு இருந்திருக்க வேண்டும்..?

தனது பதினேழாம் வயதில், இளவரசனாக இருந்து  ராஜேந்திர சோழன் வென்ற போரில் அவருடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 90,000...

1016 ஆண்டுக்கு பிறகு சோழர் படை முழுவதும் அவர் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.. சுமார் 20 லட்சம் வீரர்கள் அவன் படையில் இருந்தனர்... தன் சேனை முழுவதற்கும் நாளொன்றுக்கு ஆகும் சாப்பாட்டு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்..?

பராமரிப்பு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்..?
நிச்சயம் கோடிக்கணக்கில் இருந்திருக்கும்..!

அத்துணை பேருக்கும் உணவு வழங்குவதற்கு, அவர் நாட்டை எவ்வளவு செழிப்பாக  வைத்திருந்திருப்பார் என்பதை கற்பனை செய்யுங்கள்.. மாதக் கணக்கில் வீரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான உணவை கையில் எடுத்துச் சென்றிருப்பார்கள் அல்லவா..?.

தஞ்சை டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தில் உயர்ந்து நின்றதற்கு இராஜேந்திர சோழரே முதன் முதற் காரணம்...

எதிரிகள் தன் நாட்டைத் தாக்கி அழிக்க நேரிட்டால், தஞ்சையின் நெற்களஞ்சியங்கள் எல்லாம் அழிந்துவிடும்  என்ற ஒரே காரணத்திற்காக தனது தந்தை ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்த தஞ்சை மண்ணிலிருந்து “ஜெயங்கொண்ட சோழ புரத்திற்கு” தனது தலைமை இடத்தை மாற்றினார் ராஜேந்திர சோழன்...

“உழவர்களின் மேல் அவ்வளவு வாஞ்சை”!

ராஜேந்திர சோழன் தன் படைகள் ஓய்வு எடுப்பதற்காக காடுகளை வெட்டி சீர் படுத்தினான் என்பதற்கு  இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள " படை நிலை காடுவெட்டி" என்ற  ஊரே சாட்சியம்...

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டை , பத்தாயிரம் போர் கப்பலுடன் வெற்றி பெற்றான் என்பது நம் கற்பனைக்கு எட்டாதவை... இந்தியாவை பிடிப்பதற்கு கூட பிரிட்டிஷ், பிரஞ்ச் அரசுகள்  அவ்வளவு கப்பலில் வந்ததாகத் தெரியவில்லை...

ஒரு நாட்டைப் பிடிக்க 
6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகும் என்பதும், அத்தனை நாட்கள் தனது யானைகள் , குதிரைகள் , காலாட் படை வீரர்களுக்கான உணவை தன்னுடன் எடுத்துச் சென்றார் என்றால் அவனின் உணவு தானிய உற்பத்தி எவ்வளவு இருந்திருக்க வேண்டும் ?

உப்பு நீர் சூழ்ந்த கடல்களின் இடையே, லட்சக்கணக்கான வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் மாதக்கணக்கில்  தூய்மையான குடிநீரை எவ்வாறு அவன் வழங்கியிருக்க முடியும்..?

அசுத்தமான குடிநீரால் அந்த காலத்திலும் காலரா பரவியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.. அப்படியானால்,  கடல் நீரை சுத்தப்படுத்தும் அறிவியலை அறிந்தவரா அவர்..?

போரில் அடிபட்ட வீரர்களின் காயங்களை ஆற்றுவதற்கு எத்தனை ஆயிரம் மருத்துவர்கள் அவருடன் சென்று இருக்க வேண்டும்..?
மருத்துவத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற குழுவை அவர் பெற்றிருக்கவில்லை என்றால்  60 ஆண்டுகளாக தொடர்  வெற்றி பெற்றிருக்க முடியுமா..?

தற்போதைய “இந்தோனேஷியா, மலேசியா, சீனா, கம்போடியா, இலங்கை* போன்ற நாடுகளை கப்பல் படையால் வென்றெடுத்த மாவீரர் அவர்... 

அதுவும் குறிப்பாக ஸ்ரீவிஜய நாடு பெரும் வணிக நாடாக விளங்கியது.. உலகிலுள்ள பல வணிகர்களும் அங்கு வந்து போவது வழக்கம்.. நாட்டின் பொருளாதாரமான வணிகத்தை காப்பாற்ற எப்பேர்ப்பட்ட போர்வீரர்கள் அவசியம்?? அப்படிப்பட்ட சிறந்த போர்வீரர்களை  துவம்சம் செய்து பல நாட்டு வணிகத்தை கைப்பற்றியவர் ராஜேந்திர சோழன்..

தமிழக வாணிப செட்டியார்கள், அவன் காலத்தில்தான் உலகம் முழுவதும் பயணம் செய்து பெரும்பணம் ஈட்டினர்..

நமது அறிவுசார் காப்பியங்களான, “தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சிவபுராணம், திருக்குறள், மன்னரின் நூல்கள்” உள்ளிட்ட பலவற்றையும் பாடசாலைகள் அமைத்து அதன் மூலம் பாதுகாத்தவர் அவர்..

கங்கை கொண்ட சோழபுரம்.

அவர் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கிழக்கு ஆசியாவின் தலைநகராய் விளங்கிற்று, இந்த கண்டத்தின் அமைதியும் போரையும் அந்த ஊர்தான் முடிவு செய்தது.

இது பற்றிய கல்வெட்டும் படமும் சுதை சிற்பமும் ஏராளம் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்தன, பின் வெள்ளையன் காவிரி கரையினை பலபடுத்த கல் வேண்டி அவற்றை அடித்து உடைத்து காவிரி கரைகளில் படியாகவும் ஆற்றுக்கல்லாகவும் புதைத்தனர்.

ராஜேந்திரனின் மிகப்பெரும் வாழ்வின் ஆவணங்களை காவிரிக் கரை படிகளாக அலைக்கல்லாக மாறிவிட்டது வரலாற்று சோகம்.இடையில் வந்த தெலுங்கர் இங்கு வரலாறு தொடர்பை துண்டித்ததும், பின் வந்த வெள்ளையர் அதை இன்னும் அழித்ததும் தமிழ்நாட்டின் கரும்காலம்.

தமிழனை ஒழிக்க ஆலயங்களை குறிவைத்தான் வெள்ளையன். திருசெந்தூர் ஆலயம் முதல் தஞ்சை ஆலயம் வரை வெள்ளையனின் ஆயுத குடோன்களாக இருந்த காலமும் உண்டு, அப்படி பாழ்பட்ட நிலையில்தான் சோழபுரம் ஆலயமும் சிதைவுற்றது.

ஆனாலும் தீக்குச்சியில் ஒரு குச்சி விளக்கேற்றும் என்பது போல எஞ்சியிருக்கும் கல்வெட்டுகளே ராஜேந்திரனின் வரலாற்றை நமக்கு சொல்கின்றன‌.அதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும், அவரின் வரலாற்றை மீட்டெடுத்தால் தமிழ்நாட்டில் இருந்த சைவ சமயப் பெருமையும் ஆளுமையும் வெளிவரும்.

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் கொஞ்சமும் குறையாத சமயப் பணி அவருடையது, இராஜ இராஜருக்காவது நாள் நட்சத்திரமுண்டு,
கொண்டாட படுவதுண்டு.
ஆனால் இராஜேந்திரருக்கு அதுவுமில்லை.

அவரை மீட்டெடுத்து முன்னிலைப்படுத்தல் வேண்டும். ஆடித் திருவாதிரைக்கு அவருக்கு அஞ்சலி செலுத்த மறந்த நாம், 
ஆடி அமாவாசையன்று தமிழகத்தின் தனிப்பெரும் சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் கொடுத்து நினைவு கூறல் வேண்டும்.

இங்கு தேடி மீட்டெடுக்க வேண்டிய விளக்குகள் ஏராளம், அதை மீட்டெடுத்து ஜோதி ஏற்றினாலே போதும், காரிருள் விலகும்.நாம் இனி அதைத்தான் செய்ய வேண்டும், நிச்சயம் செய்தாக வேண்டும்.

ஏழு வகையான தானங்கள்

சிவாலயத்தில் ஏழு வகை தானங்கள் செய்வது சிறப்பு....

1. எலுமிச்சை,
2. வெல்லம்,
3. அவல்,
4. மாதுளை,
5. நெல்,
6. தேங்காய்,
7. பசும்பால்..

இந்த ஏழு வகை பொருட்களை, சிவாலயத்தில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
கல்வி கலைகளில் சிறக்க
குழந்தைகள் நன்றாகப் படிக்க, பெருமாள் கோயில்களில் அஸ்த நட்சத்திரத்தன்று துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும்.
சரஸ்வதிதேவிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்வதாலும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

தெய்வீக ரகசியங்கள்

1.‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.

2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்தம்பதிகள்
ஒற்றுமையாக,அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

 3.குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

4.கொடிய கடன் தொல்லைகளுக்கு                 ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

5.ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

6.ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

7.வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

8.சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல்நீங்கும் 21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

9.கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

10.ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

11.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

12.பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

13.மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.

14.கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில், செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

15.வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட, தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

16.சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி, அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

17.இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.

18.செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

19.விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.

20.ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.

21.பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

22.புத்திர பாக்கியம் இல்லாதோர் 
6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

23.வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

24.பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

25.வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல்,அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

26.தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.

27.எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்...

Thursday, June 24, 2021

அருள்மிகு கனகாம்பிகை தாயார் உடனுறை உச்சிநாதர்


🙏 இன்றைய கோபுர தரிசனம் 🙏

*அருள்மிகு கனகாம்பிகை தாயார் உடனுறை உச்சிநாதர் என்கிற மத்யானேஸ்வரர் திருக்கோவில்*

திருநெல்வாயில்,
சிவபுரி,
கடலூர் மாவட்டம்.

தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 3வது தலமாகும்.

சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர்.

சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார். சிதம்பரம் நகருக்கு உட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி திருநெல்வாயில் என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோவில் அமைந்துள்ளது.

சக்தியிடம் ஞானபால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது.

சுமங்கலி பவ பொருள்

தீர்க சுமங்கலி பவா ...!
அறிந்துகொள்ளுங்கள் 

🌼 தீர்க சுமங்கலி பவா ...!
என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம்
5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

🌼 திருமணத்தில் ஒன்று,

🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,

🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,

🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,

🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!.

 இவைகள் பற்றிய ஒரு சிறு விளக்கம் ;

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. 

🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது. 

🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன. 

🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. 

🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.

🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். 

🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. 

🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு ⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், ⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜புதனுக்கு ஒரு வருடமும்,
⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும், ⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், ⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன. 

🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். 

🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும். 

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். 

🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. 

🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும். 

🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன? 

🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம். 

🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...
⚜அக்னி,
⚜சூரியன்,
⚜சந்திரன்,
⚜வாயு,
⚜வருணன்,
⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
⚜அமிர்த கடேஸ்வரர்,
⚜நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம். 

🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,
🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,
🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,
🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள். 

🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும். 

🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும். 

🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். 

🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும். 

🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். 

🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும் 

🌼 இறையோடு இரண்டரக் கலந்து
இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு
96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.
 
🌼 தீர்க சுமங்கலி பவா ...! 
என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம்... ஐந்து மாங்கல்யம் பெற வேண்டும்!.

படித்தேன்! பகிர்ந்தேன்!! நன்றி.  நன்றி..

Chidambaram Shiva


சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் என பெரும்பாலோனோரும் நினைத்து
கொண்டிருக்கின்றனர் .

ஆனால் இது சரியா?

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இக்கோவில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் பூலோக கைலாசம் என்றும் அழைக்கப்படுகிறது.

பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பி ,
இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்ய, இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவனார் , தைமாத பூசத்தில் நாட்டிய தரிசனம் தந்ததாக வரலாறு.

இக்கோவிலின் மூலவர் திருமூலநாதர்சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர்தான்எனநினைத்து கொண்டிருக்கின்றனர் .

ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் திருமூலநாதர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாகஅருள்செய்கி
றார்.(கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது)

மேலும் சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது.

இத்தில்லை காளியை தரிசித்த பின்பே திருமூலநாதரையும் , நடராஜரையும் தரிசிக்க வேண்டும் என்ற மரபும் சொல்லப்படுகிறது.

கல்லார்க்கும் கற்றவர்க்கும்
களிப்பு அருளும் கனிப்பே!

காணார்க்கும் கண்டவர்க்கும்
கண்அளிக்கும் கண்ணே!

வல்லார்க்கும் மாட்டார்க்கும்
வரம் அளிக்கும் வரமே!

மதியார்க்கும் மதிப்பவர்க்கும்
மதிகொடுக்கும் மதியே!

நல்லார்க்கும் பொல்லார்க்கும்
நடுவில் நின்ற நடுவே!

நரர்களுக்கும் சுரர்களுக்கும்
நலம் கொடுக்கும் நலமே!

எல்லார்க்கும் பொதுவில்
நடனம் இடுகின்ற சிவமே!

என்னரசே! யான்புகலும்
இசையும் அணிந்து அருளே!

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்;
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்;

அலகு இல் சோதியன்; இம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்

*"திருச்சிற்றம்பலம்''*

Tuesday, June 22, 2021

விருத்தகிரிஸ்வரர் விருத்தாசலம்



🕉️தேசியமும் தெவீகமும்
எனது இருகண்கள்🙏

*தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்களில் ஒன்றான* *திருமுதுகுன்றம் ( விருத்தாச்சலம்*)

பழமலைநாதர்
கோயிலின் வரலாறு உங்களுக்காக

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)

இறைவன் பெயர்

பழமலைநாதர், விருத்தாசலேசர்

இறைவி பெயர்

பெரியநாயகி, விருத்தாம்பிகை, பாலாம்பிகை

தேவாரப் பாடல்கள்

பதிகம் : திருநாவுக்கரசர் – 1
திருஞானசம்பந்தர் – 7
சுந்தரர் – 3

🕉️சம்பந்தர்🕉️

1. மத்தாவரை நிறுவிக்கடல்

2. தேவராயும் அசுரராயும்

3. நின்று மலர்தூவி

4. மெய்த்தாறு சுவையும்

5. தேவா சிறியோம் பிழையை

6. வண்ணமா மலர்கொடு

7. முரசதிர்ந் தெழுதரு

🕉️அப்பர்🕉️ 

1. கருமணியைக் கனகத்தின்

🕉️சுந்தரர்🕉️

1. பொன்செய்த மேனியினீர்

2. நஞ்சி யிடையின்று நாளை

3. மெய்யை முற்றப்பொடி

🌺எப்படிப் போவது🌺

தேவாரப் பாடல்களில் திருமுதுகுன்றம் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம் தற்போது விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. விருத்தாசலம் சென்னையில் இருந்து 215 கி.மி. தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் இருந்து விருத்தாசலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.

🌺தல வரலாறு🌺

சிவபெருமானால் 🙏🙏
முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்றது. எனவே,முதுகுன்றம் எனப்படுகிறது.
காசியைக் காட்டிலும் சிறந்தது. இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
🌺 ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.

🌺காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🌺சம்பந்தரால், இத் தலத்தை அடையும்போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித்தனிப் பதிகங்கள் பாடியருளப்பெற்ற பெருமையுடையது.

🌺இங்கு இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் அவர்களுக்கு ஐந்தெழுத்தை உபதேசித்துத், தமது உருவமாக்கும்(சாரூப நிலை) திருப்பதி. ஆதலால், இது காசியினும் மேம்பட்டதாகும்.

🌺சுந்தரர், இறைவனைப் பாடிப் பன்னீராயிரம் பொன்பெற்று அவற்றை மணிமுத்தாறு நதியிலிட்டு, திருவாரூர் கமலாயக் குளத்தில் பெற்றார்.

🌺திருமுதுகுன்றத்தில் உள்ள சிவாலயம் 4 புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும்.
🌺ஆலயத்தின் 4 புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் காண்போரைக் கவரும் விதமாக நெடிதுயர்ந்து காணப்படுகின்றன.
🌺ஆலயத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஐந்து பிரகாரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம் இவ்வாலயத்தில் உள்ளன.
🌺கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.
🌺முதல் வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது.
🌺பாதாள விநாயகர் என்று அழைக்கப்படும் இவரை வணங்கினால் எல்லக் குறைகளும் நீங்கி நல்ல வாழ்வு அமையும் என்பதால் பக்தர்கள் இங்கு வந்து இவரை வணங்குகின்றனர்.
🌺விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
🌺இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோவிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
🌺மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன.
🌺63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது.
🌺நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன.
🌺மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.

🕉️ஆகமக் கோவில்🕉️:

🌺சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு.
🌺இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார்.
🌺இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன.
🌺இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.
🌺28 ஆகமங்களுக்குரிய பெயர்களான,
காமிகேஸ்வரர்,
யோகேஸ்வரர்,
சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர்,
அஜிதேஸ்வரர்,
தீபதேஸ்வரர்,
சூட்சமேஸ்வரர்,
சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர்,
வீரேஸ்வரர்,
ரவுரவேஸ்வரர்,
மகுடேஸ்வரர்,
விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர்,
சித்தேஸ்வரர்,
சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர்,
கிரணேஸ்வரர்,
வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

🌺இத்தலத்தின் தல விருட்சமான வன்னிமரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆதி காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுத்தார் என்றும் அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறியது என்று தலபுராணம் கூறுகிறது.

🌺இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் மூன்றாம் பிரகாரத்தில் ஆறுமுருகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் வாகனத்தில் எழுந்தருளியுள்ளார்.

🌺சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி, சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசிவிட்டு, திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள் செய்தார்.

தலத்தின் சிறப்பு:
🏵️இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.

  "தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்

   மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி

   ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த

   காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்."

                                   (கந்தபுராணம் - வழிநடைப்படலம்)

🏵️ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது. இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🌺காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடமே புண்ணிய மடு எனப்படுவதாகும். இந்த புண்ணிய மடுவில் இறந்தோரின் எலும்புகளை இட்டால் அவை கூழாங்கற்களாக மாறிவிடும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும், பிணிகள் யாவும் அகன்று சித்தி அடைவர் என்பது ஐதீகம்.

🌺இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா, வைகாசி வசந்த உற்சவம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் 10 நாள் பிரம்மோற்ஸவம் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

குருநமசிவாயர் என்னும் மகான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து சிதம்பரம் சென்ற போது வழியில் திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார். பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து விட்டுக் கோயிலுள் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசிமிகுந்தது. பசி உண்டான போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியை துதித்து

     நன்றி புனையும் பெரிய நாயகி எனுங்கிழத்தி

     என்றும் சிவனாரிடக் கிழத்தி - நின்ற

     நிலைக் கிழத்தி மேனி முழுநிலக் கிழத்தி

     மலைக் கிழத்தி சோறு கொண்டு வா

என்று பாடினார். பெரிய நாயகி, முதியவடிவில் எதிரே தோன்றி "என்னைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய்?" கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டு வர முடியும் என்று கேட்க, குருநமசிவாயர்

     முத்தி நதி சூழும் முதுகுன் றுறைவாளே

     பத்தர் பணியும் பதத்தாளே - அத்தன்

     இடத்தாளே முற்றா இளமுலை மேலார

     வடத்தாளே சோறு கொண்டு வா

என்று பாடினார். அம்மையும் மகிழ்ந்து இளமை நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள் என்று சொல்லப்படுகிறது. பெரிய நாயகியே குருநமசிவாயருக்கு இளமை நாயகியாக வந்து உணவளித்ததால் இவ்வாலயத்தில் இளமை நாயகிக்குத் (பாலாம்பிகை) தனிக்கோயில் உள்ளது.

🌸சிறப்புகள்🌸

🌺இத்தல விநாயகர், பாதாள விநாயகர் மிக்க சிறப்புவாய்ந்தவர்.

🌺காசியில் இறந்தால் முத்தி என்பது போல இத்தலத்தில் இறந்தால் சாரூப பதமுத்தி கிடைக்கும் என்று கந்த புராணம் கூறுகிறது.

🌺சோழர்கள், காடவர், பாண்டியர், விஜய நகரத்தார் மற்றும் குறுநில மன்னர்கள் ஆகியோரது கல்வெட்டுகள் மொத்தம் 74 உள்ளது.

இக்கோயிலிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆஸ்த்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நியு சவுத் வேல்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது . பல கட்ட விசாரணைகள் மற்றும் முயற்சிகளுக்குப்பின் ஆஸ்த்திரேலிய பிரதமர் டோனி அபாட் அவர்களின் 2014 இந்திய வருகையின் போது இச்சிலை இந்தியாவிடம் ஓப்படைக்கப்பட்டது.

ஓம் நமச்சிவாய வாழ்க🙏🙏

பசுபதேஸ்வரர்


*🙏 இன்றைய ஆலய தரிசனம் 🙏*

*அருள்மிகு சற்குணாம்பாள், நல்லநாயகி  உடனுறை பாசுபதேஸ்வரர் திருக்கோவில்*

திருவேட்களம்,
அண்ணாமலை நகர்,
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம்.

தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 2வது தலம்.

சிதம்பரத்தை அடுத்துள்ள திருவேட்களம், இரண்டாயிரம் ஆண்டு பழமையான இங்கு தான் அர்ஜூனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கினார். அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். அம்மனுக்கு எதிரிலும் நந்தி உள்ளது.

ஒரு முறை சம்பந்தர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார்.

திருவேட்களம் பற்றி சம்பந்தர் பாடும் போது, "வேட்கள நன்நகர்" என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிறப்புடன் வாழ வாழ்வில் ஒரு முறையாவது திருவேட்களம் போ என்றும், அம்பிகையை பெண்ணின் நல்லால் என்றும் குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.

பிரதோச வழிபாடு பலன்கள்


🙏🕉🌺பிரதோஷம்🌺🕉🙏

🕉ருண விமோசன பிரதோஷம்: கடன், நோய், எதிரி தொல்லைகள் தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்

🕉: தீராத நோய்களும், கடன் பிரச்சினைகளும் தீர செவ்வாய்கிழமை வரும் பிரதோஷ நாளில் சிவனை விரதமிருந்து வணங்கினால் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை.

🕉மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே மக்களை காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை தனக்குள் ஏற்றுக்கொண்டார் சிவபெருமான். விஷத்தின் வீரியத்தினால் மயக்கமடைந்திருந்த இறைவன் திரயோதசி நாளில் மாலை வேளையில் கண் விழித்தார். சிவ தரிசனம் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

🕉பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

🕉சிவ தரிசனம்

🕉பிரதோஷம் விரதம் இருப்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும். இப்போது கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் வீட்டிலேயே விரதம் இருந்து சிவபெருமானை வணங்கலாம்.

🕉சிவன் நந்தி வழிபாடு

🕉ருணம் என்றால் கடன். கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர். ரோகம் என்றால் நோய். கடனும் நோயும்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நோயினால் பலரும் கடனாளியாகின்றனர்.
செவ்வாய்கிழமையன்று ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை.

🕉பிரதோஷ நாளில் அபிஷேகம்

🕉ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாவிட்டாலும் சிவனுக்கு பிடித்தமான அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அபிஷேகப்பிரியரான சிவனடியார்க்கு கறந்த பாலில் அபிசேகம் செய்வது சிறப்பு. தூய்மையான இளநீரில் அபிஷேகம் செய்வதும் நன்று. இறைவன் இயற்கையை விரும்பக்கூடியவர். இயற்கையான வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக்கொண்டு பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் சகலதோஷங்களும், பிரம்மஹத்தி தோஷமும், ஏழு ஜென்மங்களில் உண்டான தோஷமும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

🕉கடன் வாங்கக் கூடாது

🕉கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம். சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. அதற்கு பதிலாக செவ்வாய்கிழமைகளில் கடன் அடைக்கலாம்.

🕉பிரதோஷ வழிபாடு

🕉சிவனுக்கு சனிப் பிரதோஷம் எப்படி சிறப்பு வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை. லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும். ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும்.

🕉கடன் தீர்க்கும் முகூர்த்தம்

🕉நாளைய தினம் ருண விமோசன பிரதோஷம் மட்டுமல்ல கடன் தீர்க்கும் மைத்ர முகூர்த்த நாளும் வருகிறது. செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் ஆகும். இதே போல செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தமாகின்றது. நாளைய தினம் 22ஆம் தேதி செவ்வாய்கிழமை அனுஷ நட்சத்திரம் இணைந்து விருச்சிக லக்கினம் வரும் நேரம் கடன் அடைக்க ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமை மாலை 03:52 மணி முதல் 05:58 வரை கடன் அடைக்கலாம். கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிப்பவர்கள் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து,அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு.

🕉இறை வழிபாடு நல்லது

🕉மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷ விரதம் இருக்க வேண்டும். செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். ருண விமோசன பிரதோஷ நாளில் இருக்கும் மௌன விரதம் கூடுதல் பலன் தரும். காலையில் எழுந்து குளித்து விட்டு சிவபுராணம், நீலகண்டப் பதிகம், கோளறு பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்.

🕉🌺🙏ஓம் நமசிவாய 🙏🌺🕉
🕉🌺🙏சிவாய நம ஓம் 🙏🌺🕉
🕉🌺🙏திருச்சிற்றம்பலம்🙏🌺🕉

Sunday, June 20, 2021

Namakal Narasimmar


*லட்சுமி நரசிம்மர்*

நாமக்கல் மாவட்டம் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் சாளக்கிராம மலையின் மேற்குபுறம் உக்ர நரசிம்மர் திருகு;கோலத்தில் காட்சியளிக்கிறார்.

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை பல்லவ மன்னர்கள் புதுப்பித்தனர் இங்குள்ள நரசிம்மர் இங்கு லட்சுமி நரசிம்மர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார் .

இவரை துஷ்ட சக்தியால் பாதிக்கப்பட்டவர்களும் பயம் போக்கி பயம் தீர்ப்பார் என்பது இங்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை, பிரார்த்தனைகள் நிறைவேறியதும் வெற்றிலை மாலை சாத்தி புது வஸ்திரம் அணிவித்து நேர்த்தி கடனை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்

*பல்லவமன்னரால் சீரமைக்கப்பட்டது*

குடவறைக் கோயில்களில் பிரசித்தி பெற்றது நாமக்கல் நரசிம்மசாமி கோயில். ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்ட இந்த கோயில், கிபி.7ம் நூற்றாண்டில் ஆதியேந்திர குணசீலன் என்ற பல்லவமன்னரால் சீரமைக்கப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டுக்குறிப்புகள் கூறுகின்றன.

இரணியனின் கொடுமைகளில் இருந்து பிரகலாதனை காப்பதற்கு மகாவிஷ்ணு எடுத்தது தான் நரசிம்மஅவதாரம். இரண்யவதத்திற்கு பிறகு உக்கிரம் பொங்க காட்சியளித்தார் நரசிம்மர்.

பிரகலாதனின் வேண்டுகோளால் சாந்தமூர்த்தியாகி, சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர்ந்தார்.

விஷ்ணுவை பிரிந்த மகாலட்சுமி, கமலாலய குளத்தில் நின்று தவம் செய்தார். சஞ்சீவி மலையோடு சாளக்கிராமத்தை தூக்கி வந்த அனுமன், கமலாலய குளத்தை கண்டதும், தனது தாகம் தீர்க்க சாளக்கிராமத்தை அங்கு வைத்தார்.

தாகம் தீர்த்த அனுமாரால் சாளக்கிராமமான நரசிம்மரை அங்கிருந்து தூக்கிச் செல்ல முடியவில்லை. அப்படியே அந்த இடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்த நரசிம்மருக்காக கட்டப்பட்டது தான்,

இந்த அற்புத குடவறைக் கோயில் என்கின்றது தலவரலாறு. பாறையில் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டுள்ள நரசிம்மர், சிம்மாசனத்தின் மீது அமர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கும் நரசிம்மரின் வலதுகையில் இரணியனை வதம் செய்த ரத்தக்கறையும், நகங்களின் கூர்மையும் நுட்பத்துடன் தென்படுகிறது. திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களிலும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். நரசிம்மருக்கு நேரே உள்ள சுவற்றின் ஒரு சாளரத்தின் வழியே அனுமாரைக் காணலாம்.

ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரின் பாதங்களைப் பார்த்தபடி இருப்பது சிற்பக்கலையின் சிகரமாக உள்ளது. நாமக்கல் மலைக்கோட்டையை மகாவிஷ்ணுவின் கோட்டை என்கின்றனர் பக்தர்கள்.

மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும், மலைக்கோட்டையின் உள்ளே வரதராஜராகவும், மலையின் மேல் நரசிம்மராகவும் காட்சியளிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் இங்கு பூஜிக்கப்படுவதால், இந்த தலத்தை மும்மூர்த்தி தலம் என்று அழைக்கின்றனர்.

மூர்த்திகளுக்கும் நரசிம்மர் சன்னதியில் மூன்று காலப்பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...