Thursday, February 29, 2024

நவகண்டம்".அப்படி என்றால்?திருவானைக்கோவில் செல்பவர்கள் காணவேண்டும்.

"நவகண்டம்".அப்படி என்றால்?
திருவானைக்கோவில் செல்பவர்கள் காண 
தவறக்கூடாத சிலை ஒன்று உள்ளது...!

வீரன் ஒருவனின்  நவகண்ட  சிலை...

மிக சாந்தமான முகம். அறுபட்ட தன் தலை தரையில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவன் தலைமயிரை கொத்தாக கையில் அள்ளி பிடித்திருக்கிறான். 

சாவின் பயம் அவன் முகத்தில் இல்லை. உறுதியான உடற்கட்டும் ஆரோக்கியமும் கொண்டவன் என்பது அவன் உடல்வாகில் தெரிகிறது..சிரித்தபடியான  உதடுகள்.  அழிந்த முகம் அடர்ந்த புருவங்கள். கொண்டையிட்ட கேசம். கழுத்தில் மணியாரத்துடன்..

நவ கண்டம்...

சோழ, பல்லவ, பாண்டிய மன்னர்கள் நம் தமிழ் நாட்டை ஆண்டபொழுது, எவ்வளவு வளமாக இருந்தாலும், போர் மற்றும் அதன் இழப்புகள், பற்றிய சிந்தனை எப்பொழுதும் மக்களிடம் இருந்தது. 

ஏதாவது ஒரு காரணத்திற்க்காக, இவ்மூவரும் போரில் ஈடுபட்டனர். ஆனால் எவ்வளவு முறை போர் செய்தாலும், மக்கள் அந்த, அந்த அரசர்களுக்கு  மிக விசுவாசமாக இருந்தார்கள். 

எவ்வளவு விசுவாசம்? 

தன் மன்னன், வெற்றி பெறவேண்டும், தன் நாடு செழிக்கவேண்டும் என்பதற்காக தன் உயிரையும் தியாகம் செய்யும் அளவிற்கு. 

இந்த தியாகம் போர்முனையில் அல்ல, போருக்கு போகும் முன்பே. 

இதனைத்தான் நவ கண்டம் என அழைத்தார்கள் நமது முன்னோர். 

நவ கண்டம் என்றால், தன் தலையை தானே வாளால் வெட்டி மாய்வது. 

நவ + கண்டம்,என்பதே நவகண்டம் எனப்படுகிறது. நவ என்பது நம் உடலிலுள்ள ஒன்பது துவாரங்களை குறிப்பதாகும். இந்த ஒன்பது துவாரங்களின் நரம்பு முடிச்சுகளும் நம் கழுத்தின் பின்புறத்தில் முள்ளந்தண்டு வடத்தில் அமைத்துள்ளது..

உடலின் ஒன்பது துவாரங்களையும் ஒரே தருணத்தில் செயலிழக்க செய்வது உயிர் துறப்பதற்கான வழிகளில் ஒன்று. எனவே இந்த முக்கிய நரம்புமுடிச்சை கொண்ட கழுத்தை (கண்டத்தை) தன் கையால் தானே துண்டம் செய்வது நவகண்டம் எனப்படுகிறது. ஒரே வீசில் தன் தலை உடலில் இருந்து அறுத்து வீசுவதால் அறிகண்டம் எனவும் கூறப்படும்..

இதற்க்கு எத்தனை துணிவு இருத்தல் வேண்டும்? 

சரி எப்படி தன் தலையை தானே வெட்டிக்கொள்ள முடியும்? 

ஒரு நீண்ட, நன்கு வளையக்கூடிய மூங்கில் கழியை, பூமியில் நன்கு ஊன்றி நட்டு, தன் குடுமியை (அப்பொழுதெல்லாம் எல்லா ஆண்களும் குடுமி வைத்திருந்தார்கள்) அக் கழியில் மாட்டி, நன்றாக தலையை கீழே குனிந்தால், மூங்கில் நன்கு வளையும், பின் வாளால் ஒரே வெட்டு. தலை துண்டாகி, மூங்கில் கழியில் தொங்கும்...இது தான் நவகண்டம்...

இதை அப்படியே எழுத்து சித்தர் பாலகுமாரன் அய்யா அவர்கள்  தன்னுடைய நாவலில்.....அரசன் போருக்கு செல்லும் வழியில் நடு சாலையில் அவன் முன் ஒருவன் செய்கிறான் இதே போல...தலை துண்டிக்கப்பட்ட மூங்கில் மேலே தலையுடன் செல்லும் போது அரசனுக்கும் அவர்கள் படையினருக்கும் நெற்றியில் திலகமாக,  அவனது தலை மேலே போகும் போது அதிலிருந்த ரத்த துளிகள் அனைவர் மீதும் தெளிக்கும்..தலையில்லா முண்டம் மட்டும் கீழே சாயும்... இதை நாவலாகவே எழுதியுள்ளார்..

இப்படி தன்னை பலியிடுவதன் மூலம், சூட்சம சக்தியாகி, தன் மன்னனுக்கும், நாட்டிற்க்கும், வெற்றி தேடி தருவதோடு, வீர சுவர்கமும் அடையமுடியும் என்பது, அக்காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை...

பலியானவர்களுக்கு, நடுகற்கள் நட்டு, அவர்களை தெய்வமாக வழிபடுவதும் நடந்திருக்கிறது. இன்றைக்கும் பல கிராம தேவதைகளின் கதைகளை கேட்டால், அவர்கள் அந்த ஊருக்கு எதோ மிகப்பெரிய தியாகம் செய்து, அதன் விளைவால் உயிர் நீற்று, அதனால் தெய்வம் ஆனவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.

அப்படி ஏதோ ஒரு நோக்கத்துக்காக தனது இன்னுயிரை தந்தவன் சிலையை நீங்க திருவானைக்காவில் காணலாம்...தமிழகத்தில் பல கோவில்களில் இது போன்ற சிலைகள் உள்ளன்...அவை அனைத்தும் யாரோ எங்கேயோ தேசத்துக்காக அரசனுக்காக நவகண்டம் ஆனவர்கள் தான்..

இந்த சம்பவங்களை நீங்களும் அறிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்க...இப்படிபட்ட உன்னதமானவர்கள் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோம் என ...

ஏதோ ஒரு சிலை தானே என ஒதுங்கி போகாமல் அவர்களுக்காக ஒரு நொடி அந்த சிலை முன் நின்று வணக்கம் செலுத்துங்கள்..

சிலை இருக்குமிடம்-
ஒன்று திருவானைக்கா முதல் நுழைவாயில் இளநீர் கடை வாசலில்..

இரண்டாவது சிவன்  சந்நிதி இரண்டாம் பிரகாரத்தில்.

ஒரு வேளை அவர்கள் உங்கள் மூதாதையர்களாக கூட இருக்கலாம்....

திருப்பதி சென்று திரும்பி வந்தால், திருப்பம் நேருமடா, உந்தன் விருப்பம் கூடுமடா’’

‘‘திருப்பதி சென்று திரும்பி வந்தால், திருப்பம் நேருமடா, உந்தன் விருப்பம் கூடுமடா’’ என்று பல ஆண்டுகளுக்கு முன்னால், கவியரசு கண்ணதாசன், தன்னுடைய சொந்த அனுபவமாக, திருப்பதி வேங்கடவனின் பெருமையை, ஒரு திரைப்படப் பாடலில் பாமரனுக்கும் புரியும் படியாகப் பாடினார். அது மட்டுமல்லாமல், அவர் தனக்கு மனது சரியில்லாத போது, திடீர் திடீரென்று புறப்பட்டு திருமலைக்குச் சென்று வருவார். அவருடைய அனுபவத்தை போல லட்சக்கணக்கான மக்களின் அனுபவமும் உண்டு. புரட்டாசி வந்து விட்டாலே, வேங்கடவன் மனதில் விரும்பி வந்து அமர்ந்துவிடுவான். அந்த வேங்கடவனின் எல்லையற்ற மகிமைகளை, ‘‘முத்துக்கள் முப்பது’’ எனத்  தொகுத்து வழங்குகின்றோம். ஏழு மலை ஏன் சுமக்கிறது? நம்மாழ்வார்  “குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்சென்று சேர்திரு வேங்கட மாமலை,ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே” என்று பாசுரம் பாடி இருக்கிறார். இதில் திருவிக்கிரம அவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தன கிரியைத் தூக்கி குடை பிடித்து ஆயர்களைக் காப்பாற்றிய வரலாறும் சொல்லி, அவன் விரும்பி வந்து நின்ற மலை என்பதால், அந்த மலையை வணங்கினாலே உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்கிறார்.   அதில் கிருஷ்ணாவதாரத்தில் மலையை ஏழு நாட்கள் தன்னுடைய விரலால் அவன் சுமந்துகொண்டிருந்தான். அந்த மலைதான் இங்கே ஏழு மலைகளாக மாறி, எம்பெருமானை நன்றிக் கடனாகச் சுமந்துகொண்டிருக்கிறது என்று பல பெரியவர்களும் சொல்கிறார்கள். இன்னொரு கோணமும் இருக்கிறது பகவானிடம் ஒரு பழக்கம் உண்டு. நாம் ஒரு மடங்கு வைத்தால், அவன் உடனடியாக ஒன்பது மடங்கு வைப்பான். இராமாவதாரத்தில் தம்பியாக பிறந்து, வாழ்நாள் முழுவதும் தன்னுடைய வாழ்க்கையைக் கூட தியா கம் செய்து சேவை செய்த லட்சுமணனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே, கிருஷ்ணாவதாரத்தில் தனக்கு அண்ணனாக பலராமனை பிறக்க வைத்து, “மூத்த நம்பி” என்று பெயர் கொடுத்து, கைங்கரியம் செய்து மகிழ்ந்தான் பகவான். அதாவது “நம்முடைய செயல், அவனுடைய எதிர் செயல்” (Reaction to action) என்பதாகவே அமைந்திருப்பதை கணித்தால், தன்னைத் தாங்கிய மலையை, கிருஷ்ணாவதாரத்தில் ஏழு நாட்கள் தூக்கிக் கொண்டான் என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும். காரணம் கோவர்த்தனகிரியை குடையாக எடுத்தது கிருஷ்ணாவதாரத்தில். ஆனால் அதற்கு முன், வராக அவதார காலத்திலிருந்தே, திருமலை எம் பெருமானைச் சுமந்து ஆனந்தமடைந்தது. “தன்னைத் தாங்கிய மலையைத் தான் தாங்கினான்” என்பது இன்னமும் பொருத்தமாக இருக்கும்,திருமலைக்கு செல்ல நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?திருமங்கையாழ்வார் திருவேங்கடத்தில், பாசுரம் பாடுகின்ற பொழுது வித்தி யாசமாகச் சிந்திக்கின்றார். எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள், இந்த நாட்டில் இருந்தாலும், எல்லோரும் திருமலையைச் சென்று சேவிப்பது இல்லையே! தனக்கு மட்டும் எப்படி இந்த ஆர்வம் வந்தது என்பதை சிந்தித்த, திரு மங்கையாழ்வார் இப்படி பாசுரம் பாடுகிறார்.கொங்கலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்சங்கு தங்கு தடங்கடல் துயில்கொண்ட தாமரைக் கண்ணினன்பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடம் அடை நெஞ்சமேஒருவன் திருமலைக்கு செல்ல வேண்டும் என்று நெஞ்சார நினைத்தால் ஒழிய அந்த பாக்கியம் கிடைப்பது இல்லை.  முயற்சியால் மட்டும் நடப்பது இல்லை என்று சொல்லி, இப்பதிகம் முழுக்க, தன்னுடைய நெஞ்சிற்கு அறிவுரை சொல்லுகின்றார். “நெஞ்சகமே! அங்கு செல்ல வேண்டும் என்று நினை! நெஞ்சார நினைத்தால்தான் போகலாம். உன் ஒத்துழைப்பு இன்றிப்   போக முடியாது.”  பலர் திருமலை செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதோ ஒரு தடை வரும். ஆனால், அதே நேரத்தில் நினைத்த நேரத்தில் சென்று தரிசனம் செய்துவிட்டு வருகின்ற அன்பர்களும் இருக்கின்றார்கள். இந்த உளவியலை பல்லாண்டுகளுக்கு முன்னர் பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார் பாடி இருக்கிறார் என்பதுதான் வியப்பு.வைகுந்தம் இதுதான்வைகுந்தத்தில் இருந்து பெருமாள் அடுத்து திருமலைக்கு வந்தார். பிறகு தான் மற்ற பிரதேசங்களுக்குச் சென்றார். இதனை ராமானுஜ நூற்றந்தாதியின் ஒரு பாடல் தெரிவிக்கிறது.“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்’’இதில் ஏன் திருவரங்கம் பேசப்படவில்லை என்று ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு இரண்டு விடைகள். 1. திருவரங்கன்தான் வைகுந்தநாதன்.  அதனால் வைகுண்டத்தின் பிரதி தேசமாக அரங்கம் இருப்பதால் வைகுண்டத்தை சொல்லிய பிறகு, அரங்கத்தை தனியாகச் சொல்லவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம். 2. திருவரங்கநாதன்தான் திருமலையில் இருக்கிறான். திருப்பதியில் நின்று திருவரங்கத்திற்குச் சென்று சேர்ந்தான் என்பதால், (“இவனும் அவனும் ஒன்று” என்பதால்) திருவரங்கனைத் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று விட்டிருக்கலாம். அவன் அருளை எதிர்பாருங்கள்சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய்! உலகுதன்னைவாழ நின்ற நம்பீ! தாமோதரா! சதிரா! என்னையும்என்னுடைமையையும் உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டுநின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே,என்பது பெரியாழ்வார் பாசுரம்.பயிர்களுக்கு உயிரானது மழை. இந்த மழை வருமா வராதா என்பதை விவசாயி அண்ணாந்து பார்த்து, மேகங்கள் திரண்டு இருக்கிறதா? திரண்ட மேகங்கள் கருத்து இருக்கிறதா? கருத்த மேகங்கள் மறுபடியும் குளிர்ச்சியுடன் இருக்கிறதா? என்று நோக்குவான். அந்த விவசாயி போலவே, ஒருபக்தனும் எம்பெருமானுடைய அருளை நோக்கவேண்டும். அவனை அண்ணாந்து பார்க்க வேண்டும். அப்படி அண்ணாந்து பார்க்கக் கூடிய உயர்ந்த மலையில் இருப்பவன் திருவேங்கடவன். பெரியாழ்வார் மழையை எதிர் பார்ப்பது போலவே ‘‘நின் அருளை நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று பாசுரத்தில் பாடுகின்றார். இங்கே மக்களும் திருவேங்கடவனின் திருவருளை எதிர்பார்த்து அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் பக்தர்கள் தலையை தூக்கி அண்ணாந்து பார்த்து “கோவிந்தா, கோவிந்தா” என்று கோஷம் எழுப்பி வணங்குவதை இப்பாடலொடு இணைத்து பாருங்கள்.  உயிர்ப்  பாசுரம் கொடுத்த தலம்நம்மாழ்வார் பகவானிடம் பற்பல இடங்களில் சரணாகதி செய்கின்றார். ஆனால் திருவேங்கடவன் திருவடிகளில் செய்த சரணாகதியானது உயிரானது. அந்தச் சரணாகதியின் பலனைத்தான் அவர் திருவரங்கத்தில் நம்மாழ்வார் மோட்ஷமாக அடைகின்றார். வைணவத்தின் மூன்று மந்திரங்களில் “த்வயம்” என்கின்ற மந்திரம் “மந்திர ரத்னம்” என்று வழங்கப்படுவது. அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா, நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!  என்னை ஆள்வானே, நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே, புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. “பிராட்டியுடன் கூடிய பெருமானே, உன் திருவடிகளை சரணம் புகுகிறேன், உன்னை விட்டால் எனக்குப் புகழ்  இல்லை” என்று, சரணாகதியின் முழுப்பொருளையும் இந்தப் பாசுரம் தெரிவிப்பதால், திருவாய்மொழியின் 1102 பாசுரங்களில் ‘‘உயிர் பாசுரம் இது’’ என்று, இந்தத் திருவேங்கடப் பாசுரத்தைச் சொல்லுவார்கள்.நெடியானே வேங்கடவாஇளங்கோவடிகள் போற்றிய வேங்கடவன் வடிவம்.‘‘பகை அணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்தகை பெறு தாமரைக் கையில் ஏந்திநலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டுபொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றியசெங்கண் நெடுமால் நின்ற வண்ணம்’’சங்க காலத்தில் இருந்தே திருமலையின் சிறப்பும், எம்பெருமான் சிறப்பும் பேசப்பட்டிருக்கிறது. அன்று இளங்கோவடிகள் அழகாக பெருமாளை “நெடுமால்” என்று அழைத்துப் போற்றுகிறார். இதே பதத்தை இளங்கோவின் சேர வம்சத்தில் வந்த குலசேகரர், “நெடியானே! வேங்கடவா!” என்று பாடுவதை கவனிக்க வேண்டும்.திருப்பணி செய்த மன்னர்கள்தொண்டைமான் சக்ரவர்த்தி என்னும் பேரரசன், இந்தக் கோயிலை எடுப்பித்தவன் என்று “வேங்கடாசல மாகாத்மியம்” நூல் கூறும். பல்லவர்கள், சோழர்கள், பாண்டிய மன்னர்கள், யாதவர்கள்  முதலிய அரசர் பெருமக்கள் எல்லாம் கோயிலை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆயினும் இக்கோயில் மிகவும் பெரிய அளவில் திருப்பணி செய்யப் பெற்றது விஜயநகர மன்னர்கள் காலத்தில்தான். அவர்கள் காலத்தில் கோயிலின் செல்வம் பல்கிப் பெருகியது. சாளுவ நரசிம்மனின் பெரிய பாட்டனான சாளுவ மங்க தேவனே ஆனந்த விமானத்துக்குத் தங்கத் தகடு வேய்ந்தான். விஜயநகர விஷ்ணு பக்தரான கிருஷ்ணதேவராயனும் அச்சுத தேவராயனும் பல துறைகளில் இந்தக் கோயிலை வளப்படுத்தி இருக்கிறார்கள். நீர்தான் ஆண்பிள்ளைஎந்தை தந்தை தந்தை தந்தைக்கும்முந்தை, வானவர் வானவர் கோனொடும்,சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே.‘‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’’ என்று 1200 வருஷத்திற்கு முன் ஆழ்வார் பாடினார். “திருமலையில் எங்கு பார்த்தாலும் பூக்கள். திருமலையில் ஒரு நந்தவனம் அமைத்து, இப்படிப்பட்ட பூக்களை மாலை கட்டி எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். யாராவது திருமலை சென்று இந்த கைங்கர்யம் செய்வார் உண்டோ?” என்று ராமானுஜர் தன் சீடர்களை பார்த்துக் கேட்க, திருமலையின் குளிருக்கு அஞ்சியும், ராமானுஜரைப் பிரிய அஞ்சியும், பலரும் தயங்க, ஒரே ஒருவர் மட்டுமே எழுந்தார்.‘‘இதில் நீர்தான் ஆண்பிள்ளை” என ராமானுஜர் அவரைக் கொண்டாடி திரு மலைக்கு அனுப்பி வைத்தார். அவர்தான் அனந்தாழ்வார். அவர் திருமலையில் வெட்டிய ஏரிதான் அனந்தாழ்வார் ஏரி. இருநூறு வகையான பூக்கள்திருமலையில் பூக்கும் பூக்கள் எல்லாம் எம்பெருமானுக்கே. அங்கே யாரும் தலையில் பூ சூடிக்கொள்வதில்லை. அழகான பூக்கள் பூத்துக் குலுங்கி மணம் வீசும் திருமலையில் நாம் பார்க்க வேண்டிய இடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தோட்டம். கோயிலின் பிரதான கட்டிடத்தை ஒட்டியுள்ள 460 ஏக்கர் பரப்பளவில் இந்த தோட்டம் அமைந்துள்ளது. தோட்டத்தில் பூக்கும் 200 வகையான பூக்கள் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும். இந்த தோட்டத்தில் பல குளங்களும் உள்ளன. இந்த தோட்டத்திலிருந்து வரும் பூக்கள் ஒவ்வொரு நாளும் பெருமாளையும் கோயிலையும் அலங்கரிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நாளுக்கு 500 கிலோவிற்கு மேல் அழகான பூக்கள் பூக்கக் கூடிய அற்புதமான தோட்டம் இது. வருடம் 450 திருவிழாக்கள்வருடத்தின் 365 நாட்களில் 450 திரு விழாக்களும்,உற்சவங்களும் நடைபெறும் திருமலை திருப்பதி திருத்தலத்துக்கு இணையான வேறு தலம் இல்லை.  திருவேங்கடவனுக்கு இணையான வேறு தெய்வம் இல்லை. ‘வேங்கடேத்ரி சமஸ்தானம் பிரம்மாண்டே நாஸ்தி கிஞ்சன வேங்கடேஸ சமோதேவோ நபூதோந பவிஷ்யதி’ என்பது ஸ்லோகம். ‘பூலோக வைகுண்டம்’ என்றே சிறப்பிக்கப்படும் திருமலையை சேஷாத் திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் தொகுப்பாகச் சொல்லி, பெருமாளுக்கு ‘ஏழுமலையான்’ என்றொரு திருநாமம் சூட்டி மகிழ்கிறோம்.முதலில் தாயார் பிறகு பெருமாள்திருமலையப்பன் நெடியோனாக நின்றருளும் திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருக்சுகனூரும் (திருச்சானூர் அல்லது அலர்மேல் மங்காபுரம்) இரு நகரங்களாக விளங்கினாலும், பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள். அலர்மேல்மங்கையைப் பார்த்துவிட்டு திருமலையப்பனை தரிசிப்பது சிறப்பானது. முதலில் தாயார், பிறகு பெருமாள் என்பது வைணவ வழிபாடு மரபு. ஏன் ப்ரம்மோற்சவம்?திருமலையப்பனுடைய திருநட்சத்திரம் புரட்டாசி திருவோணம். அதையொட்டியே பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த பிரம்மோற்சவத்தை “திருவோணப் பெருவிழா” என்று அழைப்பார்கள். இது பல ஆயிரம்  ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.பிரம்மோற்சவம் என்பதற்கு பல பொருள்கள் உண்டு. 1. பிரம்மம் என்றால் பெரியது. இருப்பதிலேயே அதிக நாட்கள் நடக்கும் உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம் என்று பெயர். 2. பிரம்மன் (நான்முகக் கடவுள்) முதன்முதலாக பெருமாளுக்கு நடத்திய உற்சவம். அதாவது பிரம்மனால் நடத்தப்பட்ட உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம் என்று பெயர். இது பவிஷ்யோத்ர புராணத்தில் உள்ள வேங்கடாசல மகாத்மியம் 15 ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. திருவேங்கடமுடையான் பிரம்மனை நோக்கி, ‘‘பிரம்மனே! எனக்கு நீ கொடி யேற்று விழா தொடங்கி, தேர் உற்சவம் முடிய பல வாகனங்களுடன் பெரிய திருநாளை நடத்திவைக்க கடவாய்’’ என்று கட்டளையிட, பிரம்ம தேவன் இந்த உற்சவத்தை, தொண்டமான் சக்கரவர்த்தி மூலம் நடத்தி வைத்ததாகவும் ஒரு குறிப்பு உண்டு. 3. உலகத்துக்கும் தேவர்களுக்கும் “பரப்பிரம்மம் யார்?” என்கின்ற கேள்விக்கு “நான் பரப்பிரம்மம்” என்பதை வெளிப்படுத்து முகத்தான் (அகம் பிரம்மாஸ்மி, மாம் ஏகம்) என்று தன்னை பிரம்மமாக பெருமாள் பிரத்யட்சமாக காட்டுகின்ற உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம் என்று பெயர்.  இந்த பிரம்மோற்சவ காலங்களில் எம்பெருமான் திருவீதி வலம் வருகின்ற பொழுது, காலையிலும் மாலையிலும் ஆழ்வார்களின் அருந்தமிழைக் கேட்க வேண்டும் என்கின்ற முறையை ஏற்படுத்தி, இன்றைக்கும் அந்த அருந்தமிழை திருவேங்கட முடையான் கேட்கும்படியான உற்சவ கிரமங்களை ஏற்படுத்தித் தந்தவர் ராமானுஜர்.இப்படி தொட்ட தொட்ட இடமெல்லாம் திருவேங்கடமுடையான் பெருமை எல்லையற்று விரிந்துகொண்டே போகும்.

ஶ்ரீ எர்ணாகுளம் சிவன்* *கோயில்,எர்ணாகுளத்தப்பன் கோயில்,*கொச்சி எர்ணாகுளம் , கேரளா மாநிலம்.*

ஶ்ரீ எர்ணாகுளம் சிவன்* *கோயில்,எர்ணாகுளத்தப்பன் கோயில்,*கொச்சி எர்ணாகுளம் , கேரளா மாநிலம்.*

🙏🏻தென்னாடுடைய  சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🏻


கேரளா கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம் 1900 ஆண்டுகள் முதல் 2900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .



🛕தெய்வம் : சிவபெருமான்



🛕 இடம் : எர்ணாகுளம்



🛕மாநிலம் :  கேரளா



🛕நாடு : இந்தியா




🛕திருவிழாக்கள் :
மகரம் ( மலையாள நாட்காட்டி )
சிவராத்திரியில் ஆண்டு விழா



🛕ஆளும் குழு :
கொச்சி தேவசம் போர்டு


🛕எர்ணாகுளம் சிவன் கோயில், கேரளத்தின் முக்கிய கோயில்களில் ஒன்றாகும், 



🛕இது கொச்சி நகரத்தின் நகரியப் பகுதியான எர்ணாகுளத்தின் மையத்தில் அமைந்துள்ளது. 



🛕 சிவபெருமானுக்கு கட்டப்பட்ட இந்த கோயில், உள்ளூர் இந்து மத நம்பிக்கைகள் மற்றும் மரபுகளின்படி, நகரத்தின் கோயிலாக கருதப்படுகிறது. 



🛕கேரளாவில் உள்ள பொதுவான நடைமுறையின்படி, தெய்வத்தை பயபக்தியுடன் எர்ணாகுளத்தப்பன் என்று அழைக்கின்றனர், அதாவது எர்ணாகுளத்தின் இறைவன் . 




🛕இந்த கோயில் தர்பார் ஹால் மைதானத்திற்குள் அமைந்துள்ளது. 



🛕கோயில் வரலாற்று நகரத்தின் வரலாற்றுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது மற்றும் இது கொச்சி மகாராஜாக்களின் 7 அரச கோவில்களில் ஒன்றாகும். 



🛕இந்த கோயில் இப்போது கொச்சி தேவசம் வாரியத்தின் நிர்வாகத்தில் உள்ளது. 



🛕தற்போதைய வடிவத்தில் உள்ள கோயில் 1846 ஆம் ஆண்டில் திவான் ஸ்ரீ எடக்குன்னி சங்கரா வாரியாரின் தீவிரமான உதவியுடன் கட்டப்பட்டது. மேலும் கொச்சி இராச்சியத்தின் ஒரு அரச கோவிலாகவும் தகுதி உயர்தது. 



🛕இந்த கோயில் 1-ஏக்கர் (4,000 m2) ) நிலத்தில் கட்டப்பட்டுள்ளது . இந்தக் கோயிலானது எட்டுமனூர் மகாதேவர் கோயில், கதுத்ருதி மகாதேவா கோயில், வைக்கம் சிவன் கோவில், செங்கன்னூர் மகாதேவர் கோயில், வடக்குநாதன் கோவில் போன்ற கேரளத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றாகும்.


🛕எர்ணாகுளம் சிவன் கோயிலை நிறுவியவர் தெற்கு சித்தூரைச் சேர்ந்த சேரநல்லூர் கர்த்தா குடும்பம். 



🛕தேவ பிரஸ்னத்தின்படி இந்த ஆலயம் வைணவத்துடன் தொடர்புடையது. 


🛕எர்ணாகுளம் சிவன் கோயில் மற்றும் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் சுவாமியாக ஜாதவேதன் நம்பூதிரி இருந்தார். இவர் தெற்கு சித்தூர் சேரநல்லூர் கர்த்தா குடும்பத்தைச் சேர்ந்தவர்




🛕கோயிலின் புராணக்கதை இந்து இதிகாசமான மகாபாரதத்துடன் ஆழமாக தொடர்புடையது . 


🛕3வது பாண்டவரான அர்ஜுனன் சிவபெருமானை சாந்தப்படுத்த கடுமையான தவம் செய்தான். 


🛕அர்ஜுனனின் பக்தியில் மகிழ்ந்த சிவன், தன் துணைவி ஸ்ரீ பார்வதியுடன் கைலாச மலையில் உள்ள தங்கள் வசிப்பிடத்திலிருந்து அர்ஜுனனைச் சந்திக்க புறப்பட்டார் .



🛕அர்ஜுனன் தன் மீது கொண்டுள்ள பக்தியால் பார்வதியை கவர நினைக்கிறார் சிவன் . 



🛕சிவன் அர்ஜுனன் முன் தோன்றுவதற்கு முன் "கிராதா" என்ற பழங்குடி வேட்டைக்காரனாக மாறுவேடமிடுகிறார். 



🛕சிவன் அர்ஜுனன் முன் தோன்றியதைப் போலவே, காட்டுப்பன்றி அர்ஜுனனை நோக்கி வருவதைக் கண்டு பன்றியின் மீது அம்பு எய்தினார். 



🛕சிறந்த வில்லாளியான அர்ஜுனனும் பன்றியின் மீது அம்பு எய்கிறான். 


🛕உண்மையில் மாறுவேடத்தில் இருந்த மூகாசுரன் என்ற அரக்கனாக இருந்த பன்றி கொல்லப்பட்டு அதன் அசல் வடிவம் வெளிப்படுகிறது. இருப்பினும், விலங்கின் உண்மையான கொலையாளி யார் என்பதில் அர்ஜுனனுக்கும் கிராதனுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. 
இருவருக்கும் இடையே ஒரு போர் நடந்து, நீண்ட நேரம் நீடித்தது, இறுதியில் அர்ஜுனன் மீது கிராதன் வெற்றி பெறுகிறது.



🛕தோற்றுப்போன அர்ஜுனன், எழுந்து நிற்கக்கூட முடியாமல், சேற்றில் சிவலிங்கத்தை உருவாக்கி, மலர்களை சமர்ப்பித்து பூஜை செய்கிறான். 



🛕சிவலிங்கத்தின் மீது அவர் அர்ப்பணித்த மலர் கிராதனின் தலையில் விழுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். 



🛕அர்ஜுனன், கிராதன் வேறு யாருமல்ல, தன் சிவபெருமானே என்பதை உணர்ந்தான். அவரது பக்தி மற்றும் நேர்மையால் மகிழ்ந்த சிவபெருமான், அர்ஜுனனுக்கு பசுபத அம்பு கொடுத்தார். 



🛕அர்ஜுனன் இந்த இடத்தை விட்டு வெளியேறினான், விரைவில் இந்த பகுதி அடர்ந்த காடுகளால் மூடப்பட்டது, நீண்ட காலமாக மக்கள் வசிக்கவில்லை. 



🛕அர்ஜுனன் செய்த சிவலிங்கத்தின் இருப்பும் அனைவரின் நினைவுகளிலிருந்தும் மறைந்தது.



🛕பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, முனிவரால் சபிக்கப்பட்ட தேவாலா என்ற சிறுவன், இப்போது ஒரு பாம்பின் உடலுடன், இந்த காட்டில் ஊர்ந்து சென்று, இந்த லிங்கம் முற்றிலும் சேற்றில் மூழ்கியிருப்பதைக் கண்டான். 



🛕சாபத்தில் இருந்து மீட்பதற்காக ஆழ்ந்த தவத்தின் ஒரு பகுதியாக இந்த லிங்கத்தை வழிபட்டார். விரைவில் சிலர் பாம்பு உடலுடன் இந்த மர்ம மனிதனைக் கண்டு அவரை ரிஷி நாகம் (புனித பாம்பு) என்று அழைத்தனர், மேலும் அவர் அருகில் வரக்கூட பயந்தனர். சிலர் குச்சிகள் முதலியவற்றைக் கொண்டு அவரைத் தடுக்க முயன்றனர். இந்தச் செயல்களெல்லாம் அசையாமல், ரிஷி நாகம் தனது கடுமையான தவத்தைத் தொடர்ந்தார். 




🛕இறுதியாக சிவனும் பார்வதியும் தங்கள் அசல் வடிவில் தோன்றி முனிவரை அருகில் உள்ள குளத்தில் நீராடச் சொன்னார்கள். மூழ்கியவுடன் சாப விமோசனம் பெற்றார். 


🛕விரைவிலேயே மூல லிங்கத்தின் அருகில் ஒரு புதிய சிலை தோன்றியது. இந்த புராணத்தின் அடிப்படையில், இந்த இடத்திற்கு ரிஷ்னககுளம் (ரிஷி நாகத்தின் குளம்) என்ற புதிய பெயர் வந்தது மற்றும் கோயில் பொதுமக்களால் கட்டப்பட்டது


🛕சேர வம்சத்தின் கீழ் இருந்த முக்கிய கோவில்களில் ஒன்றாக சங்க இலக்கியத்தில் கோவில் இருப்பது முதலில் குறிப்பிடப்பட்டது . 



🛕சேரர்கள் சிவபெருமானை வழிபடுபவர்கள். 



🛕சேர வம்சம் முடிவுக்கு வந்ததும், அந்த இடம் ஒரு சில நாயர் பிரபுக்களின் கைகளில் விழுந்தது, அவர்கள் இந்த கோவிலின் புகழ்பெற்ற புனித குளத்தை அங்கீகரிப்பதற்காக அந்த இடத்தை எர்ணாகுளம் (அசல் வார்த்தையின் சிதைந்த வடிவம் - எப்போதும் தண்ணீர் கொண்ட குளம் என்று பொருள்படும் ஈரே நாள் குளம்) என மறுபெயரிட்டனர். விரைவில் இந்த பகுதி கொச்சி இராச்சியத்தின் கீழ் வந்தது. 



🛕கொச்சி ஆட்சியாளர்கள், 17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் ஃபோர்ட் கொச்சியை முற்றுகையிட்டதால் , தங்கள் தலைநகரை எர்ணாகுளத்திற்கு மாற்றினர் மற்றும் இந்த கோவிலுக்கு அருகில் ஒரு அரண்மனையை நிறுவினர். 



🛕இது அரச ஆதரவின் காரணமாக, கோவில் முக்கியத்துவம் பெற உதவியது. கோவில் தெய்வம் எர்ணாகுளம் நகரின் (நகர தேவதா) பாதுகாவலராக அறிவிக்கப்பட்டது.



🛕கோவிலின் இரண்டாம் கட்டம் 1842 இல் கொச்சியின் திவான் ஸ்ரீ எடக்குன்னி சங்கர வாரியார் சிதிலமடைந்த நிலையில் இருந்த கோயிலைப் புதுப்பிக்க நினைத்தபோது வந்தது. 



🛕1843 இல் பணிகள் தொடங்கப்பட்டன. கொச்சி மகாராஜாக்களின் தலைமை அரச கோவிலாக இருந்த திரிபுனித்துரா ஸ்ரீ பூர்ணத்ரயேசா கோயிலைப் போலவே பாரம்பரிய கேரள பாணியில் இரண்டு புதிய கோபுர மண்டபங்கள் (நுழைவு கோபுரங்கள்) கட்டப்பட்டன. 



🛕புதிய கோவில் வளாகம் 1846 ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. 



🛕இந்த கோவில் அரச கோவிலாக உயர்த்தப்பட்டு கொச்சி அரசாங்கத்தின் தேவஸ்வம் வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. 



🛕1949 இல், கொச்சி இந்திய யூனியனுடன் இணைந்தபோது, தேவசம் போர்டு புதிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, அது இன்னும் உள்ளது.


🛕கோயில் நிர்வாகத்தில் உள்ளூர் பங்களிப்பை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக, எர்ணாகுளம் நகரின் முன்னணி இந்து உறுப்பினர்களைக் கொண்ட எர்ணாகுளம் க்ஷேத்ர க்ஷேம சமிதி கோயிலுக்கு அருகிலுள்ள நிலத்தை வாங்குவதற்கான நிதி சேகரிப்பில் பங்கேற்றது. 



🛕கொச்சி மாநகராட்சி வசம் இருந்த சொத்தை வாங்கினார்கள். எர்ணாகுளம் க்ஷேத்திர க்ஷேம சமிதியின் செயல்பாடுகள் கோவிலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நல்லது.


🛕கோயிலின் முதன்மைக் கடவுள் கௌரிசங்கர வடிவில் உள்ள சிவன், பிரதான கருவறையில், மேற்கு நோக்கி அரபிக்கடலை நோக்கி அமைந்துள்ளது. 



🛕பிரதான கருவறையில் உள்ள லிங்கம் சுயம்புவாக (தெய்வீகமாக உருவானது) கருதப்படுகிறது . 


🛕பிரதான கருவறையின் வடக்குப் பகுதியில், அர்ஜுனன் வழிபட்ட மூல லிங்கமாக நம்பப்படும் கீர்த்தமூர்த்தியின் சிறிய சன்னதி உள்ளது . 



🛕தெற்குப் பக்கத்தில் சிவன் மகன் விநாயகருக்கு ஒரு சிறிய சன்னதி உள்ளது . பிரதான கருவறைக்கு பின்னால் ஒரு சிறிய பகுதி உள்ளது, இது சிவனின் மனைவி பார்வதியின் சன்னதியாக கருதப்படுகிறது , எனவே கிழக்கு வாசல் தேவி வாசல் என்று அழைக்கப்படுகிறது. 



🛕உள்கோயில் வட்டத்திற்கு வெளியே, ஐயப்பன் மற்றும் நாகராஜா சன்னதிகளில் வழிபடுகின்றனர்.



🛕இக்கோயில் வழக்கமான கேரள கோவில் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. 


🛕கருவறை வளாகம் நேர்த்தியான செதுக்கப்பட்ட சுவர்களுடன் வட்டமானது. 



🛕கூரை செப்பு ஓடுகளால் மூடப்பட்டிருக்கும். இந்த கோவிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன, மேற்கு கோபுரம் என்பது வழக்கமான கேரள கட்டிடக்கலையில் கேபிள் கூரைகள் மற்றும் சாய்ந்த ஜன்னல்கள் கொண்ட இரண்டு அடுக்கு அமைப்பாகும். 



🛕கிழக்கு கோபுரம் சமீபத்தில் மேற்குப் பகுதியைப் போலவே புதுப்பிக்கப்பட்டது. மேற்கு கோபுரம் அருகே தேவசம் அலுவலகம் உள்ளது. 



🛕சமீபத்தில் புதிய திருமண மண்டபம் மற்றும் ஊட்டுப்புரா (உணவு கூடம்) வடக்கு பகுதியில் கட்டப்பட்டது.



🛕சிவன் கோவிலின் உத்சவம் (கோயில் திருவிழா) கொச்சி நகரின் பிரமாண்டமான திருவிழாக்களில் ஒன்றாகும், இது பொதுவாக மகரமாதத்தில் கொண்டாடப்படுகிறது . 


🛕முதல் நாள் மாலை கொடியேற்றத்துடன் (கோயில் கொடியேற்றம்) விழா தொடங்குகிறது. ஏழாவது நாள் பகல்பூரம், பஞ்ச வாத்தியத்துடன் யானைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, புகழ்பெற்ற பாண்டிமேளம் மற்றும் வண்ணமயமான தீப வேலைப்பாடுகளுக்குப் பிறகு தர்பார் மண்டபத்தில் முடிவடைகிறது . 



🛕இறுதி நாள் மாலையில், ஒரு புனிதமான விழாவில் கொடி இறக்கப்பட்டு, தெய்வம் அருகில் உள்ள கோயில் குளத்தில் ஆராட்டுக்கு (புனித நீராடலுக்கு) கொண்டு செல்லப்படுகிறது. அதன் பிறகு பஞ்ச வாத்தியம் முழங்க பிரசித்தி பெற்ற ஆராட்டு ஊர்வலம் தொடங்குகிறது. 



🛕 ஊர்வலம் தர்பார் ஹால் மைதானத்தில் முடிவடைகிறது. பிரம்மாண்டமான வானவேடிக்கைகள் இந்த வாரம் நீடிக்கும் திருவிழாவிற்கு திரையைக் கொண்டுவருகின்றன. இத்தனை நாட்களிலும் கோவிலுக்குள் சீவேலி ஏற்பாடு செய்யப்பட்டு, கிடைக்கும் சிறந்த செண்டமேளம் கலைஞர்கள் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் சென்னோஸ் மற்றும் புளியன்னூர் மானாவை சேர்ந்த பிரபல அர்ச்சகர்களால் நடத்தப்படுகிறது. 



🛕இந்த நாட்களில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயில் கலைகளான ஓட்டம் துள்ளல் , பாடகம், தாயம்பகா , கதகளி , பாரம்பரிய நடனங்கள், பாரம்பரிய இசைக் கச்சேரிகள், பஜனைகள் போன்றவற்றை ஊக்குவிக்க சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது . அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



🛕இந்த நிகழ்ச்சிகளைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலில் குவிந்துள்ளனர். பகல்பூரம் மற்றும் ஆராட்டு ஊர்வலங்களைப் பார்ப்பது யாருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அருகில் உள்ள தர்பார் ஹால் மைதானம் உத்ஸவத்தின் போது தேனீக் கூட்டமாக மாறுகிறது.




🛕கும்பம் மாதம் மகா சிவராத்திரி , தனுமாதத்தில் திருவாதிரை, பிரதோஷம் , திங்கள் கிழமைகள் போன்றவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.



🛕பிரதான சிவன் கோயிலுக்கு அருகில், கோயில் மைதானத்தில் மேலும் இரண்டு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன, இது எர்ணாகுளம் கோயில் வளாகத்தை உருவாக்குகிறது. 



🛕வடக்குப் பகுதியில் தமிழ் பாணியில் கட்டப்பட்ட முருகன் கோவிலைக் காணலாம். 



🛕இது தமிழ் பிராமணரான திவான் வெங்கடசுவாமியின் நிர்வாகத்தின் போது கொச்சியில் வசிக்கும் தமிழர்களால் கட்டப்பட்டது . 



🛕எர்ணாகுளத்தில் உள்ள தமிழ் பிராமணர் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் முருகா கோவில், இந்த கோவிலில் அனைத்து சடங்குகளும் தமிழ் பாணியில் உள்ளன. 




🛕முருகப்பெருமான் தனது துணைவிகளான வள்ளி மற்றும் தேவயானியுடன் மூலவராக இருக்கிறார் . 


🛕விஷ்ணு , தட்சிணாமூர்த்தி மற்றும் துர்க்கா தேவி ஆகியோருக்கு வழக்கமான பூஜைகளைத் தவிர, நவக்கிரகங்களுக்கும் விநாயகருக்கும் இரண்டு தனித்தனி சன்னதிகள் உள்ளன .



🛕கிழக்குப் பகுதியில் கன்னடிக உடுப்பி பாணியில் கட்டப்பட்ட அனுமன் கோயிலைக் காணலாம். 


🛕துளு பிராமணரான திவான் வெங்கட் ராவ், பாரம்பரிய உடுப்பி மத்வ சம்பிரதாய பாணியில் கோயில் வேண்டும் என்ற தனது கனவின் ஒரு பகுதியாக 1850 ஆம் ஆண்டில் இது கட்டப்பட்டது . 


🛕கிருஷ்ணர் முக்கிய தெய்வமாக இல்லாமல் மத்வ சம்பிரதாயத்தில் கட்டப்பட்ட மிகச் சில கோயில்களில் இதுவும் ஒன்று.



🛕மேற்குப் பகுதியில் உள்ள சிவன் கோவிலை நோக்கியவாறு அனுமன் காட்சியளிக்கிறார். 



🛕பிரதான கருவறையில் ஒரு சிறிய ராமர் சிலையும் வழிபடப்படுகிறது. இது தவிர, நாகராஜா மற்றும் ராகவேந்திர சுவாமி சன்னதிகளும் வழிபடப்படுகின்றன. தற்போதைய எர்ணாகுளத்தப்பன் கோயில் வளாகம் இந்த மூன்று கோயில்களைக் கொண்டுள்ளது, அவை மற்றவர்களின் பழக்கவழக்கங்களில் குறுக்கீடு இல்லாமல் ஒன்றாக உள்ளன. 



🛕இது தெலுங்கு கலாச்சாரம் தவிர்த்து தென்னிந்தியாவின் மினி பதிப்பையும் காட்டுகிறது .




🛕கோயில்களைத் தவிர, புகழ்பெற்ற எர்ணாகுளம் கோயில் குளம் கிழக்குப் பகுதியில் முருகன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. கோயில் ஆலோசனைக் குழு அலுவலகங்கள் தவிர எர்ணாகுளம் பிராமணர் சங்கத்தின் அலுவலகங்களும் அதன் திருமண மண்டபமும் உள்ளன. 


🛕அனுமன் கோவிலுக்கு அருகில் 900ஆண்டுகள் பழமையான ஆலமரம் காணப்படுகிறது.


🛕 திருக்கோவில் முகவரி

*அருள்மிகு ஶ்ரீ எர்ணாகுளம் சிவன்* *கோயில்,எர்ணாகுளத்தப்பன் கோயில்,*எர்ணாகுளம் , கொச்சி, ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Wednesday, February 28, 2024

சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி.



#மஹா_சிவராத்திரி
சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. 

பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். 

பல சதுர்யுகங்கள் முடிந்து, பல கல்பங்கள் முடிந்து, இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள். 

தொடர்ந்து 12 சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும் என்று சிவனடியார்கள் கூறியுள்ளனர்.

மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். 

அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம் ஆகும்.

ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நித்திய சிவராத்திரி
************************
ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள்! ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள்! ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள்! அவை வளர்பிறை சதுர்த்தசி,தேய்பிறை சதுர்த்தசி ஆகும் இது நித்திய சிவராத்திரி ஆகும். தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே பட்ச சிவராத்திரி ஆகும்.

யோக சிவராத்திரி
********************
திங்கட்கிழமையன்று சதுர்த்தசி திதி பகலும், இரவும் 60 நாழிகைகள் சேர்ந்து வந்தால், அது யோக சிவராத்திரி ஆகும். இந்த சிவராத்திரியை இவ் வருடம் வருகிறது. அதாவது,யோகியர் மறந்திடாத சிவராத்திரி ஆகும். அனைவரையும் யோகிகளாக மாற்ற கூடிய சிவராத்திரி.

மகா சிவராத்திரி
********************
மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மகாசிவராத்திரி ஆகும். இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும் மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என்கிறார் அகத்தியர்.

பாவங்கள் நீக்கும் விரதம்
***************************
இந்த சிவராத்திரி பூஜையால் பெண்களுக்கு இழைத்த துரோகம், பெண்களுக்கு செய்த சாபம், பெண்களுக்கு இழைத்த கொடுமைகள் நீங்கும். அதே போல, ஒரு பெண் தனது கணவனுக்கு துரோகம் செய்திருந்தால், தவறை உணர்ந்து திருந்தி, இந்த சிவராத்திரி பூஜையைச் செய்தால்கணவனுக்கு செய்த துரோகம் மறைந்துவிடும் என சிவ மஹா புராணம் கூறுகிறது.

எமபயம் நீக்கும்
*****************
சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்று பரஇதிகாசம் உரைக்கிறது. சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால் நோய்கள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், உருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.

நமசிவாயம் வாழ்க 

சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.

*சிவனை காலை வணங்கினால் - நோய் தீரும்*
பகலில் வணங்கினால்- விருப்பங்கள் நிறைவேறும்

இரவில் வணங்கினால்
- மோட்சம் கிட்டும்

மேலும் சிவராத்திரி பற்றிய தகவல்கள

*சி*வனுக்கு உகந்த இரவு என்று சொல்லக்கூடிய சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. 

சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.

 சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி ஆகும். 

நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருந்தால் நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும்.

 சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும்.

மாத சிவராத்திரி விரத வழிபாட்டின் முக்கியமான ஆறு அம்சங்கள் :

 சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலை குறிக்கும்.

 லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் நல்லியல்பையும், நல்ல பலனையும் வழங்கும்.

 நைவேத்தியம் கொடுத்தல் நீண்ட ஆயுளையும் கொடுக்கும். 
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்

உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் உலகிலேயே தட்சிணாமூர்த்தி சிம்மத்தின் மீது அமர்ந்துள்ள ஒரே இடம்.

உலகிலேயே தட்சிணாமூர்த்தி சிம்மத்தின் மீது அமர்ந்துள்ள ஒரே இடமான,
புகழ்பெற்ற தொண்டை நாட்டுத் தேவார வைப்புத் தலமான,
"புலிக்கால் முனிவர்" என்ற 
"வியாக்ரபாதர்" 
சிவபெருமானை வழிபட்ட தலமான, 
பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டு , சோழர்கள் காலத்தில் சிறப்பு பெற்ற 
1500 ஆண்டுகள் பழமையான, தட்சிணாமூர்த்தி சிம்மத்தின் மீது ஒரு வைத்து அமர்ந்த
"இராஜயோக சிம்ம தட்சிணாமூர்த்தி" உள்ள ஒரே தலமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 
உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள
#திருப்புலிவனம்
#வியாக்ரபுரீஸ்வரர் (திருப்புலிவனநாதர்)
#அமிர்தகுஜலாம்பாள் திருக்கோயில் வரலாறு:
திருப்புலிவனநாதர் கோயில் அல்லது திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சைவத் தலமாகும்.

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் சாலையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருப்புலிவனம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

மூலவர் –வியாக்ரபுரீஸ்வரர்
அம்மன் –அமிர்தகுஜலாம்பாள்
பழமை – 1500 வருடங்களுக்கு முன்
ஊர் – திருப்புலிவனம்
மாவட்டம் – காஞ்சிபுரம்
மாநிலம் – தமிழ்நாடு

#புராண வரலாறு:

சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதர் என்பவரும் வசித்தனர். இவர்கள் சிவனுக்கு தினமும் மலர் மாலை அணிவித்து வணங்குவது வழக்கம். ஆனால், பல சமயங்களில் நல்ல மலர்கள் கிடைக்காது. அழுகல் மலர்கள் கலந்து விடும். மரத்தின் உச்சியிலுள்ள நல்ல மலர்களை பறிக்க வியாக்ரபாதருக்கு முடியாத சூழல் இருந்தது. அவர் மன வருத்தத்தில் இருந்தார். பக்தனின் வருத்தம் போக்க சிவன் அவர் முன் தோன்றினார்.

“பக்தனே. உன் வருத்தத்தின் காரணத்தைச் சொல்” என்றார் தெரியாதவர் போல. வியாக்ரபாதர் சிவனிடம், “தங்களுக்கு பூஜை செய்ய சிறந்த மலர்கள் கிடைப்பதில்லை. அதிகாலையில் நடை திறக்கும் முன் மாலை தொடுத்தாக வேண்டும். இருளில் நல்ல மலர்கள் தெரிவதில்லை. அதற்குரிய வசதியைச் செய்து தர வேண்டும்” என்றார். சிவன் அவருக்கு புலிக்கால்களைக் கொடுத்தார். அந்த நகங்களால் மரத்தை இறுகப் பற்றிக் கொண்டு ஏறி சிறந்த மலர்களைப் பறித்து வழிபட்டார் வியாக்ரபாதர். இவர் புலிவடிவில் தரிசித்த தலமே திருப்புலிவனம். சுவாமியும் தன் பக்தனின் பெயரையே தனக்கும் சூட்டிக் கொண்டு “வியாக்ரபுரீஸ்வரர்” ஆனார்.

இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே நிர்மாணிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பல்லவர்கள் காலத்து கட்டுமானப் பணியே பிரதானமாக உள்ளது. இங்குள்ள வியாக்ரபுரீஸ்வரர் சுயம்புலிங்கமாவார். ஆவுடையார் சதுர வடிவில் தாமரை மீது உள்ளது. லிங்கத்தின்மீது புலியின் பாதங்கள் படிந்துள்ளன. சிவனின் விலா எலும்பும் தெரிகிறது. லிங்கத்தின் மேல்பாகத்தில் ஜடாமுடி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தலங்களில் மட்டுமே ஜடாமுடி தரித்த சிவலிங்கத்தைக் காண இயலும். அதே வடிவம் இங்கும் அமைந்துள்ளது விசேஷம். உத்ராயணம், தட்சிணாயணம் இரண்டு புண்ணிய காலங்களிலும் இங்குள்ள சூரியன் சிலையின் நிழல், சாயாமல் நேராகவே சுவரில் விழுவது ஒரு அதிசயம். அம்பிகை அமிர்த குஜலாம்பாள், நோய்நொடி இன்றி ஆயுள், ஆரோக்கிய, ஐஸ்வர்யத்தை அள்ளித்தருகிறாள்.

தெட்சிணாமூர்த்தி ஒரு காலை சிங்க வாகனத்தில் வைத்துள்ளார். மற்றொரு கால் வழக்கம் போல் முயலகன் மீது இருக்கிறது. இந்த அமைப்பை வேறு எங்கும் காண இயலாது. இவரை “ராஜயோக சிம்ம தெட்சிணாமூர்த்தி” என்கின்றனர். இவரை “அர்த்தநாரீஸ்வர தெட்சிணாமூர்த்தி” என்றும் சொல்வர். காரணம், அம்பாளுக்கு உகந்த சிம்மத்தின் மீதும், மறுகால் நடராஜப் பெருமானின் காலடியில் உள்ள முயலகன் மீதும் உள்ளதாலும் ஆகும். ஒருபுறம் ஆண்மையின் மிடுக்கும், மறுபுறம் பெண்மையின் நளினமும் இச்சிலையில் தெரிகிறது. தம்பதியரிடையே மனவேற்றுமை வந்து விவாகரத்து வரை செல்லும் போது கூட, அர்த்தநாரீஸ்வர வடிவில் உள்ள ராஜயோக சிம்ம தெட்சிணாமூர்த்தியை தரிசித்து, பூஜித்தால் ஒற்றுமை ஏற்பட்டு குடும்பத்தில் பல சுபிட்சம் பெருகும் என்கின்றனர். இத்தலம் சிதம்பரத்திற்கு ஒப்பானது என்பதற்கு அறிகுறியாக பதஞ்சலி, வியாக்கிரபாதர், சனகாதி முனிவர்கள் இந்த ராஜயோக சிம்ம தெட்சிணாமூர்த்தியின் இரு பக்கங்களிலும் உள்ளனர்.

இக்கோயிலின் மூலவராக திருப்புலிவனநாதர் உள்ளார். மூலவர் சுயம்பு ஆக உள்ளார். ஆவுடையார் சதுர வடிவில் தாமரை மீது காணப்படுகிறது. லிங்கத்தின் மீது புலியின் பாதங்கள் காணப்படுகின்றன. லிங்கத்தின் மேல் பாகத்தில் ஜடாமுடி காணப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றிலும், திருநெல்வேலி மாவட்டம் சிவசைலத்திலும் இவ்வாறாக ஜடாமுடியுடன் கூடிய லிங்கத்தைக் காணலாம். இங்குள்ள இறைவி அமிர்தகுஜலாம்பாள் ஆவார். மகாசிவராத்திரி, மார்கழி, திருவாதிரை உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.

கருவறை தரை மட்டத்தில் இருந்து 15 அடி உயரத்தில் உள்ளது. சிவன் சன்னதியில் ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. இது ஒருபுறம் காஞ்சிபுரம் வரையிலும், மறுபுறம் உத்திரமேரூர் வரையிலும் செல்கிறது என்றும், ஒரு பெரிய பாறை மூடிய முக்கிய அறை இதற்குள் உள்ளதாகவும் கூறுகிறார்கள். சிவன் சன்னதிக்கு பின்னால், உள்ள பெருமாள் சன்னதியில் திருமால் நின்ற கோலத்தில் உள்ளார். இதன் அருகில் ஒரு தூணில் “நரசிம்மர்” சிற்பம் நின்ற கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் முகப்பில் முருகப்பெருமான் சிலையும், அழகிய விநாயகர் சிலையும் உள்ளது. விஷ்ணுதுர்க்கை, துர்க்கை, பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னதிகளும் உள்ளன. இந்த திருத்தலம் அனைத்து ராசியினருக்கும் பரிகாரத் தலமாகும்.

கோயிலின் முகப்பில் விநாயகர், முருகன் சிலைகள் உள்ளன. கருவறை தரைத்தளத்திலிருந்து 15 அடி உயரத்தில் காணப்படுகிறது. மூலவர் சன்னதிக்குப் பின் திருமால் நின்ற கோலத்தில் உள்ளார். அருகில் ஒரு தூணில் அருகே நரசிம்மர் நின்ற நிலையில் உள்ளார். கோயிலில் விஷ்ணு துர்க்கை, துர்க்கை, பைரவர், சண்டீசுவரர், நவக்கிரகங்கள் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. பதஞ்சலி, வியாக்கிர பாதர், சனகாதி முனிவர்கள் ஆகியோர் தட்சிணாமூர்த்தி அருகில் உள்ளனர். பல்லவர் காலப்பணியாக கோயில் உள்ளது. உத்திராயணம், தட்சிணாயணம் ஆகிய இரு காலங்களிலும் சூரிய நிழல் லிங்கத்தின்மீது விழுவதைக் காணலாம்.

கருவறை பூமியில் இருந்து 15 அடி உயரத்தில் உள்ளது. சிவன் கோவிலில் ஒருபுறம் காஞ்சிபுரம் மற்றும் மறுபுறம் உத்திரமேரூர் வரை செல்லும் பாதாள வழி இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த பாதையின் கீழே ஒரு பெரிய பாறையால் மூடப்பட்ட ஒரு அறை இருப்பதாகவும், இதற்கான ஆதாரத்தை தொல்லியல் துறையால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறாக பகவான் ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட ஆறு வழிபாட்டு முறைகளை (ஷன்மதா) குறிக்கும் அனைத்து தெய்வங்களும் கோயிலில் உள்ளன.

இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் லிங்கத்தின் மீது புலியின் கால்தடங்களுடன் கூடிய சுயம்புவாகும். மேலும் இடுப்பு எலும்பும், தலையில் ஜடாமுடி எனப்படும் முடிகளும் தெரியும். கோவிலில் உள்ள தெய்வீக அதிசயம் என்னவென்றால், உத்தராயண மற்றும் தட்சிணாயன இரண்டு காலங்களிலும் லிங்கத்தின் நிழல் இல்லாமல் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் பின்புறத்தில் மட்டுமே விழுகின்றன. (உதராயணம் என்பது ஜனவரி-பிப்ரவரி முதல் ஜூன்-ஜூலை வரையிலான ஆறு மாதங்கள் சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய பயணத்தைக் குறிக்கும். தக்ஷிணாயனம் என்பது சூரியனின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய பயணத்தைக் குறிக்கும் ஜூலை-ஆகஸ்ட் முதல் டிசம்பர்-ஜனவரி வரையிலான ஆறு மாதங்கள்).

கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தியின் ஒரு கால் சிங்கத்தின் மீதும் மற்றொன்று முயலகனின் மீதும் அறியாமையைக் குறிக்கும். இந்தியாவிலேயே இந்த வடிவில் தட்சிணாமூர்த்தி உள்ள ஒரே கோயில் இதுதான். ராஜயோக சிம்ம தட்சிணாமூர்த்தி என்று போற்றப்படுகிறார். அன்னை சக்திக்குக் காரணமான சிம்மத்தின் மீது ஒரு கால் இருப்பதால் அவர் அர்த்தநாரீஸ்வரர் தட்சிணாமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். முயலகன் மீது ஒரு காலை நடராஜராகவும், மற்றொன்று சிங்கத்தின் மீதும் இறைவன் இருப்பதால், ஆணின் கம்பீரமான தோற்றத்தையும், பெண்மையின் மென்மையையும் பிரதிபலிக்கிறார்.

கருவறைக்கு முன்னால் உத்திரமேரூர் சுந்தர வரதராஜர் கோயிலில் மற்றொரு முனைக்கு செல்லும் பெரிய குழி (சுரங்கம்) உள்ளது. குழிக்குள் கற்பூரத்தை வைத்து காட்டியுள்ளார். பிரகாரத்திற்கு வெளியே தாயாருக்கு தனி சந்நிதியும், முனிவரின் சமாதியின் மேல் சிவலிங்கமும் உள்ளது. வெளியே இருபுறமும் தேர் சக்கரங்களைக் கொண்ட மண்டபம் உள்ளது, ஆனால் அது இப்போது முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது, மண்டபத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய செடிகள் நிறைந்துள்ளன. முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ள அழகிய கோவில், கோவிலின் உள்ளே வௌவால்களின் இருப்பிடமாக மாறியது, மேலும் துர்நாற்றம் தாங்கவில்லை.

கோவிலின் ராஜகோபுர நுழைவாயிலுக்குள் நுழைந்தவுடன் வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு அம்மன் சந்நிதியைக் காணலாம். இது பிரதான கோவிலில் இருந்து விலகி தனி அமைப்பு. அம்மன் நின்ற கோலத்தில் சிரித்த முகத்துடன் சுமார் 4 அடி உயரம் கொண்டவர். கோவிலின் நுழைவாயில் பல தூண்கள் கொண்ட மண்டபத்தின் வழியாக உள்ளது, இது பல அழகிய கற்சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.

வரலாறு மற்றும் கல்வெட்டுகள்
அசல் கோயில், (ஒரு செங்கல் கோயில்) பல்லவர் காலத்தைச் சேர்ந்தது, இது குலோத்துங்க சோழன்-I (1070 - 1125 CE) காலத்தால் மீண்டும் கட்டப்பட்டது. கல்வெட்டுகளின்படி இத்தலம் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து காழியூர் கோட்டத்து தானியூர் ஸ்ரீ ராஜேந்திர சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. சிவபெருமான் திருப்புலிவலமுடைய நாயனார் என்றும் ஆளுடையார் திருப்புலிவலமுடையார் என்றும் அழைக்கப்பட்டார்.

பழமையான கல்வெட்டு குலோத்துங்க சோழன்-I உடையது. மற்றொரு கல்வெட்டு ஸ்ரீ ராஜ நாராயண சம்புவராயர், ஸ்ரீ விருப்பண்ண உடையார், ஸ்ரீ வீர பிரதாப தேவராய மஹாராயர், ராஜாதி ராஜன் ஆகியோருக்கு சொந்தமானது மற்றும் இன்னும் சில கல்வெட்டுகள் உள்ளன. நிரந்தர விளக்குகள் எரியும் வார்டுகளுக்கு நிலங்கள், பசுக்கள் (32) வழங்கப்பட்டதை கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன. வேட்டையாடும்போது கவனக்குறைவாக ஒருவரைக் கொன்றதற்காக நிரந்தர விளக்குகளை எரித்ததற்காக 15 பசுக்களை பரிசாக வழங்கியதாக மற்றொரு கல்வெட்டு பதிவு செய்கிறது. குலோத்துங்க சோழன் காலத்தில் விக்ரம சோழ மண்டலம் கோயில் அபிஷேக மண்டபத்தில் முத்து பந்தலின் கீழ் குலோத்துங்கன் அமர்ந்திருந்தபோது 60 வேலி நிலம் இறையிலியாக வழங்கப்பட்டது.

ஒரு சம்புராயரா கல்வெட்டு ஒரு எரியை சரிசெய்து நிலத்திற்கு பாசனம் செய்ய நிலம் தானம் செய்யப்பட்டது. மற்றொரு 17 ஆம் நூற்றாண்டின் சம்புவராயர் கால கல்வெட்டு, நெசவாளர்கள் சுமை வரி காரணமாக கிராமத்தை காலி செய்ய முயன்ற 5 ஆண்டுகளுக்கு தரி (கை நெசவு இயந்திரம்) மீதான வரி நீக்கம் / ஒழிப்பு பதிவுகளை பதிவு செய்கிறது. கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டு, தேவரடியாள் பிச்சியாரின் மகன் ஜெயநாயனன் 60 பசுக்களையும், 2 காளைகளையும்/ ரிஷபங்களையும் தானமாக அளித்து, 2 நிரந்தர தீபங்களை எரிப்பதற்கு ஒரு உரி நெய் அளித்ததாகக் குறிப்பிடுகிறது.

திரிபுவனச்சக்கரவர்த்தின் திரிபுவனவீரதேவாவின் (அதாவது குலோத்துங்கசோழன் III) தனது 37வது ஆண்டில் (கி.பி. 1215, ஜூன் 7, ஞாயிற்றுக்கிழமை) தேதியிட்ட இந்தப் பதிவு, திருப்புலிவனம்-உடையார் கோயிலின் சுவர்களில் பொறிக்கப்பட்ட அபராஜிதாவின் கல்வெட்டைக் கவனிப்பதால், இங்கே சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவின் நகல் உத்தரமல்லூரிலும் (AR எண். 67 of 1898) காணப்படுகிறது. ஜெயங்கொண்டச்லமண்டலத்தின் உட்பிரிவான களியூர்-கோட்டத்தில் உள்ள ஒரு சுதந்திரக் கிராமமான உத்தரமேலூர் என்ற ராஜேந்திரசோழ-சதுர்வேதிமங்கலத்தின் பேரவை, திருப்புலிவனமுடைய-நாயனார் கடவுளின் முன் பராமரிக்க ஒப்புக்கொண்டது. 14 ஆம் ஆண்டில் தேதியிட்ட அபராஜிதவிக்ரமவர்மனின் அத்தகைய பதிவுகளில் ஒன்று ராஜமட்டாண்டனை அபராஜிதாவின் குடும்பப்பெயராக வழங்குகிறது. சூரிய கிரகணத்தன்று, கோவிலில் நான்கு விளக்குகளை எரித்ததற்காக 100 கழஞ்சு தங்கத்தை அரசன் பரிசாக அளித்ததாக இந்த கல்வெட்டு கூறுகிறது. இருப்பினும், பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சூரிய கிரகணம், அபராஜிதாவின் ஆரம்ப தேதியை நிர்ணயிக்க உதவாது. உள் பிரகாரத்தின் தூண்களில் உள்ள  10 ஆம் CE கல்வெட்டுகளில் நாயன்மார்கள் (63 var) மற்றும் சோழ மன்னர்களின் பெயர்கள் அவர்களின் பட்டங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விஜயகண்டகோபாலனின் கிபி 13 ஆம்  நூற்றாண்டு கல்வெட்டு, ஒரு நடனக் கலைஞர் அருகிலுள்ள உத்தரமேரூரில் உள்ள கோயிலுக்கு பசுக்கள், விளக்குத்தண்டு, தங்க நெக்லஸ், வெள்ளித் தகடு, தேர் ஆகியவற்றைப் பரிசாக அளித்ததாகவும், அதற்குப் பிரதிபலனாக அவளுக்கு அசையும் பாக்கியம் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. தேர் திருவிழாவின் போது தெய்வத்தின் முன் சாமரம். மேலும் இது பரம்பரை உரிமையாகவும் ஆக்கப்பட்டது.

வியாக்ரபாதர் சிவலிங்கத்தை சுற்றி வருவதால், அந்த இடம் திருப்புலிவலம் என்று அழைக்கப்பட்டு, தற்போது திருப்புலிவனம் என்று அழைக்கப்படும்.
   
இந்திரன் இந்த கோவிலுக்கு வந்து சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. பராந்தக சோழனும் குலோத்துங்க சோழனும் சிவபெருமானை வழிபட்டனர்.

கோரிக்கைகள்:

விவாகம் நடக்க, பதவிஉயர்வு பெற, குழந்தை பாக்கியம் பெற, நவக்கிரக தோஷம், நாகதோஷம் நீங்க, பணி, தொழில் விருத்தி பெற, அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள், பதவியில் உள்ளவர்களுக்கு ராஜயோகம் பெற வரமளிக்கும் தலம் இது.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, வில்வத்தால் அருச்சனை செய்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

உத்திரமேரூர் காஞ்சிபுரம் சாலையில் உத்திரமேரூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்புலிவனம் கோயிலை சாலையில் இருந்து எளிதாகக் காணலாம். அருகிலுள்ள ரயில் நிலையம் காஞ்சிபுரத்திலும், அருகிலுள்ள விமான நிலையம் சென்னையிலும் அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, February 27, 2024

சேலம் மாவட்டம் தமிழ்நாடு கஞ்சமலை அருள்மிகு பாலமுருகன் ஆலயம்.


சேலம் மாவட்டம் தமிழ்நாடு கஞ்சமலை அருள்மிகு பாலமுருகன் ஆலயம்.
கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் - பாவ விமோசனம்

மூலவர்:

பாலமுருகன்

பழமை:

500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்:

கஞ்சமலை

மாவட்டம்:

சேலம்

மாநிலம்:

தமிழ்நாடு

திருவிழா:

கந்தசஷ்டி, கிருத்திகை, பவுர்ணமி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

தல சிறப்பு:

கர்ப்பகிரகத்தில் பாலமுருகன் குழந்தை வடிவில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்கஞ்சமலை, சேலம்.

போன்:

+91 98431 75993

பொது தகவல்:

பாலமுருகன் சன்னதி எதிரில் நாரதர், பிரம்மா, விஷ்ணு, ஐயப்பன், நவக்கிரகங்கள், சண்டிகேஸ் வரர், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் காணப்படுகின்றன.

பிரார்த்தனை:

குழந்தை வடிவில் பாலமுருகன் என்ற பெயரில் திகழும் இவர் குழந்தைகளின் நோய் தீர்ப்பவராகவும் உள்ளார். தங்கம், இரும்பு, பூ வியாபாரம் செழித்து விளங்க இங்குள்ள முருகனை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் என்று பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

மாலாங்கன், இந்திரன், சோமன், பிரம்மன், ருத்திரன், காளாங்கி, கஞ்சமலையானோடு எழுவரும் என் வழியாமே, என்று திருமந்திரத்தில் பாடல் பெற்ற தலம் இது. மலையின் உயரத்தை அடிவாரத்தில் இருந்து பார்த்தால், இதில் ஏறிவிட முடியுமா என மலைப்பாகத் தோன்றும். ஆனால், 250 அடி உயரமே உள்ள இந்த மலையில், 101 படிக்கட்டுகளை கடந்தால் கோயிலை அடைந்து விடலாம். அதுமட்டுமல்ல! மலைக்கோயிலுக்கு நேரடியாக கார்களிலும் சென்று விடலாம்.

தங்கம் அருளும் தங்கம்: 

கஞ்சம் என்ற சொல்லுக்கு தங்கம், இரும்பு, தாமரை என்ற மூன்று பொருள்கள் உள்ளன. இம்மூன்று பொருள்களும் இம்மலைக்கு பொருந்தும். கஞ்சம் என்பதற்கு முதல் பொருள் பொன் என்பதாகும். 

பராந்தக சோழன் தில்லையம்பலத்தில் பொன் வேய்ந்தான் என்பது வரலாறு. சிதம்பரத்தில் ஆனந்தக் கூத்தாடும் நடராஜப் பொருமானுக்குத் தங்க நிழல் தந்தது கஞ்சமலையில் உள்ள தங்கத்தைக் கொண்டே என்று சொல்கிறார்கள்.

கஞ்சமலையிலும், சுற்றுப்புறங்களிலும் இரும்புத்தாதும் மிகுந்துள்ளது. இம்மலைப் பாறைகளில் கருத்த இடங்கள் அதிகம் இருப்பதால் கருங்காடு என்ற பெயரும் உள்ளது.

இக்கருங்காட்டில் விளையும் கருமை நிற மூலிகைகள் மற்ற மூலிகைகளை விட மருத்துவ குணம் மிக்கவை. கருமை படர்ந்த மூலிகைகளில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. கஞ்சன் என்பது பிரம்மாவையும் குறிக்கும். அவரால் உருவாக்கப்பட்ட மலை என்பதால் கஞ்சமலை என்று பெயர் வந்ததாக கரபுரநாதர் புராணம் கூறுகிறது.

இங்கு எழுந்தருளியுள்ள முருகனை சஷ்டி திதிகளில் விரதம் இருந்து வழிபட்டால் மனம் அமைதியாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தங்கம், இரும்பு, பூ வியாபாரிகளுக்கு வியாபாரம் விருத்தியடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

குழந்தை முருகன்:

கர்ப்பகிரகத்தில் பாலமுருகன் குழந்தை வடிவில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 15வகை நோய்கள், மயக்கம், மனோவியாதியை நீக்கும் சக்தி படைத்த கருநெல்லி மரங்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தால் நீண்டகால நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. சஷ்டி மற்றும் கிருத்திகை, பவுர்ணமி நாட்களில் பாலமுருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம், திருமணத்தடை விலகல், இழந்த வருமானத்தை மீண்டும் பெறுவது ஆகிய பலன்களும் கிடைக்கிறது.

தல வரலாறு:

திருமால் ஒருமுறை தன் மருமகன் முருகப் பெருமானைக் காணச் சென்றார். அவரிடம் முருகனின் வாகனமான மயில், கர்வத்தால் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது. மாமனாரிடம் மரியாதைக்குறைவாக நடந்ததால் முருகனுக்கு கோபம் ஏற்பட்டது. மயிலை கல்லாகும்படிச் சாபமிட்டார். மயில் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் மயிலின் தவத்துக்கிரங்கிச் சாப விமோசனம் அளித்தார். முருகனுக்கும், மயிலுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இப்பகுதியிலுள்ள பக்தர்கள், கஞ்சமலை அடிவாரத்திலுள்ள குன்றில் குழந்தை ரூபத்திலான முருகனுக்கு கோயில் எழுப்பினர். கோயில் அமைந்துள்ள குன்று கஞ்சமலைத் தொடரை சேர்ந்தது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

கர்ப்பகிரகத்தில் பாலமுருகன் குழந்தை வடிவில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அமைவிடம்:

சேலம் பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து இளம் பிள்ளை என்ற கிராமத்துக்குச் செல்லும் ரோட்டில் 19 கி.மீ., சென்றால் கஞ்சமலை சித்தர் கோயிலை அடையலாம். இந்தக் கோயில் பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் பாலமுருகன் கோயில் உள்ளது. சேலத்தில் இருந்து டவுன்பஸ்கள் உள்ளன.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்


செவிசாய்த்த விநாயகர் - அன்பில் `சத்யவாகீச்வரர்’, `பிரம்மபுரீச்வரர்’, `ஆலந்துறையார்’

செவிசாய்த்த விநாயகர் - அன்பில்
திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர் ஆகியோர் பாடியுள்ள திருத்தலம், அன்பில் ஆலந்துறை. `அன்பில்’ என்பது தலத்தின் பெயர். 

`ஆலந்துறை’ என்பது கோயிலின் பெயர். சம்பந்தப் பெருமான் இங்கே எழுந்தருளியபோது, கொள்ளிட நதியில் வெள்ளம் கரை புரண்டோடியதால், தென்கரையிலிருந்தே சம்பந்தர் பதிகம் பாடினார் என்பார்கள். 

அதை இறைவன் ஆணையின்படி அங்கிருந்த விநாயகர் செவிசாய்த்துக் கேட்டார். இதனால் அவருக்குத் `தேவாரம் கேட்ட விநாயகர்’ என்ற பெயரும் உண்டு. 

இதற்கு ஏற்ப இந்த விநாயகர் திருவுருவம் திருமுடியை வலதுபுறம் வளைத்து, செவிசாய்த்துக் கேட்கிற பாவனையுடன் அமைந்ததை நாமும் கண்டு ரசிக்கலாம்.

பராந்தகச் சோழன் வேத வேள்வியில் சிறந்த 108 அக்னிஹோத்ரிகளை அழைத்து வந்து, இந்தத் தலத்தில் குடியேறச் செய்தான். 

இந்த 108 குடும்பத்தார்களும் ஜைமினி சாமவேத வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய சாமவேத பாராயணத்தைக் கேட்டருளிய விநாயகர், சம்பந்தரின் பாடல்களையும் கேட்டதால் இவரை `சாமகானம் கேட்ட விநாயகர்’ என்றும் அழைப்பார்கள்.

`மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்றடையும் புனல் அன்பில் ஆலந்துறையே...’

என்பது சம்பந்தர் தேவாரம். `நிறைந்த பொழில் சூழ்ந்த அன்பில் ஆலந்துறையில் வேதம் ஓதும் சிறுவர்கள் கூட்டத்தில் ஒலி எழும்புகிறது. 

அங்குள்ள கிளிகள் அந்த வேத ஒலியைச் சந்தத்தோடு இசைக்கின்றன. அங்கே வீற்றிருக்கும் சிவ பெருமான் சடைபொருந்தியவர்; சாமர்த்தியமுடையவர்; முற்றாத இளம் சந்திரனைச் சூடியவர். 

அவரே இடபக் கொடியுடையவராகிய எந்தை’ என்று சம்பந்தர் மற்றொரு பாடலில் குறிப்பிடுகிறார்.

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் காவிரியின் வடகரையில் உள்ள இந்தக் கோயிலுக்கு, திருச்சி மற்றும் லால்குடியிலிருந்து செல்ல வசதிகள் உள்ளன. 

இங்கே இறைவன் `சத்யவாகீச்வரர்’, `பிரம்மபுரீச்வரர்’, `ஆலந்துறையார்’ என்றும் அம்பிகை, `சௌந்தர நாயகி’ என்றும் அழைக்கப் பெறுகிறார்கள்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன். 

Monday, February 26, 2024

வாணியம்பாடி அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்.

*அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்..!!*
*காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7மணி வரை திறந்திருக்கும்.

*மூலவர் 😗

*அதிதீஸ்வரர்*
*அம்மன் 😗

*பெரியநாயகி,பிரகன் நாயகி*

*தல விருட்சம் 😗

*அகண்ட வில்வமரம்*

*தீர்த்தம் 😗

*சிவதீர்த்தம்*

*பழமை 😗

*1000வருடங்களுக்கு முன்*

*புராணப் பெயர் 😗

*வாணியம்மைபாடி*

*ஊர் 😗

*வாணியம்பாடி*

*மாவட்டம் 😗

*வேலூர்*

*மாநிலம் 😗

*தமிழ்நாடு*

*பிரம்மா சரஸ்வதியிடம், “உலக உயிர்களைப் படைக்கும் நான்தான் பெரியவன். எனவே தான் பிரம்மா,விஷ்ணு, சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள்” எனக் கூறினார்.*

*இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது.கோபமடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சபித்தார். வருந்திய வாணி பூலோகம் வந்து சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் இருந்தாள்.*

*வாணியை பிரிந்த பிரம்மா,தேவர்களைத் திருப்திப்படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர்.*

*எனவே பலதிசைகளிலும் தேடி,சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார்.செல்லும் வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் தங்கினார்.*

*இதனால் மகிழ்ந்த சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள்செய்து அவளைப்பாடும்படி கூறினர்.வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள்.*

*கலை)வாணி பாடிய தலம் என்பதால், இவ்வூர் “வாணியம்பாடி”ஆனது.*

*மேற்கு நோக்கிய இந்தக் கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.* 

*இராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.*

*காச்ய முனிவரின் தர்ம பத்தினி அதிதி. இவள் புனர்பூசம் நட்சத்திரம் தோறும் இத்தலத்தில் விரதமிருந்து தேவர்களை பெற்றாள் எனப் புராணங்கள் கூறுகிறது.*

*எனவே புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் வாணியம்பாடி.*

*மாதம் தோறும் புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகை சாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும். புதுவீடு, வாடகை வீடு பால் காய்ச்சுதல் போன்ற விருத்தியாககூடிய செயல்களை இந்த நட்சத்திரத்தில் செய்வது சிறப்பு.*

*வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால்,குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன்பும்,பள்ளிமாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு இங்கு வந்து வாணியை வழிபாடு செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது நம்பிக்கை.*

*ஆசிரியர்கள் தங்கள் தொழிலை துவங்கும் முன்பும் இங்குள்ள வாணியை வழிபடுவது சிறப்பு. ஹோட்டல் தொழில் செய்பவர்கள் அடிக்கடி இங்கு வந்து அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.* 

*இதனால் தங்களது தொழிலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீங்கும் என்பது நம்பிக்கை.*

*இக்கோயில் பல்லவப்பேரரசர்களால் கட்டப்பட்டது. மூன்று நிலை மேற்கு இராஜகோபுரமும், ஐந்து நிலை கிழக்கு இராஜகோபுரமும் உள்ளது.சிவன் மேற்கு நோக்கியும், சரஸ்வதி கிழக்கு நோக்கியும் உள்ளது சிறப்பு.*

*இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான்,மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார்.*

*திருவிழா:*

*சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை*

*கோரிக்கைகள்:*

*புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.*

*கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய்,ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.*

*நேர்த்திக்கடன்:*

*பால், தேன், நதிநீர், அன்னம் ஆகியவற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.*
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

Sunday, February 25, 2024

ரவிகுல மாணிக்க ஈஸ்வரர் தாதாபுரம் விழுப்புரம் மாவட்டம்.



*மூலவர்: ரவிகுல மாணிக்க ஈஸ்வரர்
*அம்மன்: மாணிக்கவல்லி (காமாட்சி அம்மன்)
*தல விருட்சம்: வில்வம்
*புராண பெயர்: மணிக்கேஸ்வரம்
*ஊர்: தாதாபுரம்
*மாநிலம்: தமிழ்நாடு
*காலம்: 1000 ஆண்டுகளுக்கு மேல்
*அமைத்தவர்: குந்தவை நாச்சியார் 

விழுப்புரம் மாவட்டம், தாதாபுரம் என்று இன்று அழைக்கப்படுகிற ஊர் அன்று வெண் குன்ற கோட்டத்து நல்லூர் நாட்டு நகரமான ராஜ ராஜபுரம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குதான் ராஜ ராஜனின் 19 ஆட்சியாண்டில் சுந்தர சோழனின் மகளான குந்தவையால் இக்கோயில் எடுப்பிக்கப்பட்டது. 

இக்கோயில் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இக்கோயிலைக் கட்டிய குந்தவை பிராட்டியாரின் நினைவாக அவரது சிலையும் இடம் பெற்றுள்ளது.

இக்கோயிலை அடிப்படையாகக் கொண்டே கீபி 1010 ஆம் ஆண்டில் தஞ்சை பெரிய கோயிலான பிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதாக மாணிக்க ஈஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இக்கோயில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலாகும்.

சோழ இளவரசி குந்தவை தன்தம்பிக்காக ஒரு கோயிலை எடுப்பித்து அதற்க்கு சூரிய குலத்தில் மாணிக்கம் போல் பிறந்தவன் என்ற பொருள் பட ரவி குல மாணிக்கஈஸ்வரம் என்று பெயரிட்டு பொன், மாணிக்கம், வைரம், வைடூரியம், ஆடுகள் என ஏகப்பட்ட நிவந்தங்கள் அளித்து இருக்கிறாள்.

குந்தவை நாச்சியார் தனது திருவுருவ சிலையையும் இக்கோயிலில் இடம்பெற செய்துள்ளார்.. இதற்கான சான்று இக்கோயின் தெற்கே உள்ள தேவா கோட்ட மாடத்து அருகே அழகிய மங்கை ஒருவரின் உருவச்சிலை உள்ளது .இது குந்தவை நாச்சியாரின் சிலை ஆகும் . இந்தத் திருக்கோயில் 1,000 ஆண்டுக்கால பழைமை வாய்ந்தது. இந்தத் தலத்தின் தற்போதைய பெயர் ‘தாதாபுரம்’ என்று வழங்கப்பட்டாலும் இதன் வரலாற்றுக் காலப் பெயர் ‘ராஜராஜபுரம்’ என்பதாகும். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.

மற்ற கோயில்களில் தெய்வ சிற்பங்கள் அழகாக இருக்கும் ஆனால் இங்குள்ள துவார பாலர்கள் மிக மிக அழகாக சொல்ல வார்த்தைன்றி புன்முறுவலுடன் குழந்தை போன்ற முகத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்களின் ஆடை, கழுத்தணி, கேயூரம், குண்டலம், பத்ர, மகர பூரிமம், ஆபரணங்கள், தலைக்கோலம், ஆயுதங்கள் ஆகியவை நேர்த்தியாக காண்பவர் கண்ணை கவரும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. நேரில் பார்த்தால் பிரிய மனமே வராது.

கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் காணப்படுகின்றது. மூலவராக ரவிகுல மாணிக்க ஈஸ்வரரும், உற்சவராகக் காமாட்சி உடனுறை மாணிக்க ஈஸ்வரரும் காட்சி தருகின்றனர். கோயிலில் நுழைந்ததும் கோயிலின் முகப்பில் தாமரை வடிவில் பலிபீடம், கல்மேடை மீது அமைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குந்தவை நாச்சியாரின் கலைநயத்திற்குச் சான்றாக விளங்கும் நந்தி தேவர் இறைவனை நோக்கியபடி கம்பீரமாக அமர்ந்து காட்சி தருகின்றார். முக மண்டபம், மகா மண்டபத்தின் முன்புறமாக அமைந்துள்ளது.

முக மண்டபத்தின் கூரை உட்குவிந்த நிலையில் மடிப்புகளுடன் செதுக்கப்பட்டுள்ளது போலக் காணப்படுகின்றது. சதுர மகா மண்டபம் நான்கு தூண்களுடனும் அதற்கு அடுத்ததாக அர்த்த மண்டபமும் காணப்படுகின்றது.

ஆவுடையாரின் மீது அமைந்துள்ள சிவலிங்கமே மூலவரான மாணிக்க ஈஸ்வரராகும். இவர் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். மாணிக்க ஈஸ்வரரான சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திர கோடுகள் காணப்படுகின்றன.

தென் திசையை நோக்கியவாறு மாணிக்க வல்லி தாயார் நான்கு கைகளுடன் பக்தர்களுக்குக் காட்சி புரிகின்றார். கோயில் கருவறைக்குச் செல்லும் முன் துவார பாலகர்களும் காட்சி தருகின்றனர்.

கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் கணபதி, தட்சிணாமூர்த்தி, திருமால், துர்க்கை, சண்டிகேசுவரர், பைரவர் போன்ற சுவாமி சிலைகள் குந்தவைப் பிராட்டியாரின் சிற்பக்கலைக்கு எடுத்த காட்டாக அமைந்துள்ளது.

கோயில் வளாகத்தினுள் இடது புறமாக விநாயகரும், முருகரும் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் ஒரு கால பூஜை மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது.

#கோயிலமைப்பு :

சிங்கமும், கஜமும் மூலைகளில் இருக்கும் உயரமான உபபீடத்தின் மீது கபோத பந்த அதிட்டானமாக அமைக்கப்பட்டு சாலைகளும், பத்திகளும் பத்ரமாக உள்ளது.சாலைக்கும், பத்திக்கும் இடையே நிஷ்கிராந்த பஞ்சரங்கள் அமைக்கப்பட்டு அழகாய் காட்சியளிக்கிறது. இரு தள விமானம் இப்போதைய காலத்தியதாக உள்ளது. தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, எண் கரங்களோடு துர்கை, நிருத்த விநாயகர் மற்றும் தெற்கு பக்க சுவற்றில் ரிஷபாந்தகர் சிற்பமும் உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம்,முக மண்டபம், மஹா மண்டபம் என பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறது.
வெளிச்சுற்றில் விநாயகர்,முருகன், அம்மனுக்கு தனி சன்னதியும், ஷேத்ரபாலர் மற்றும் ஒரு சூர்யன் சிற்பமும் உண்டு. வின்னப்பட்ட தவ்வை, சண்டீஸ்வரர், வராஹி, பிராமி, கௌமாரி, இந்திராணி போன்ற சப்த மாதர் சிற்பங்களும் இருக்கிறது.

#கல்வெட்டுகள் :

முதலாம் ராஜராஜனின் 19ம் ஆட்சியாண்டில் நந்தா விளக்கிற்கு 90 ஆடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 21ம் ஆட்சியாண்டில் குந்தவை எடுப்பித்த இக்கோயில், குந்தவை விண்ணகரம், குந்தவை ஜிநாலயம் முதலியவற்றிக்கு கொடுத்த  ஆபரணங்கள், பரிகலன்கள் பற்றி குறிப்பிடுகிறது. 25ம் ஆட்சியாண்டில் நந்தாவிளக்கு எரிக்க கொடையை பற்றி குறிப்பிடுகிறது.

முதலாம் ராஜேந்திரனின் 4ம் ஆட்சியாண்டில்,இருபத்தி ஒன்பது பேர்  இவ்விறைவனுக்கு பத்து நந்தா விளக்கு இரு நாழி  எரிக்க கொடை அளித்துள்ளனர். 

கோமுகத்தின் கீழ் உள்ள 1888 வருட கல்வெட்டு இக்கோயில் செப்பனிடப்பட்ட தகவலை தருகிறது.

மூலவரான லிங்கத்திருமேனியின் மீது பிரம்ம சூத்திரக்கோடுகள் காணப்படுகின்றன. ஆகவே, இந்தத் தல இறைவனை வணங்கி வழிபட்டால் சகல ஞானங்களும் ஸித்திக்கும் என்பது ஐதிகம். இந்தத் தலத்தில் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பில் கலந்துகொண்டால், குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மாதம் தோறும் பிரதோஷ வழிபாடு, ஆண்டுதோறும் காணும் பொங்கல் என்று மாணிக்க வல்லி தாயாரும், சுவாமியும் வீதி உலா செல்கின்றனர். பௌர்ணமி, ஆடிக் கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி மற்றும் மாதம் தோறும் பௌர்ணமி வழிபாடு இங்குச் சிறப்பாக நடைபெறுகின்றது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சில விநாடிகள் மட்டும் தரிசனம் தரும் அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி.

*சில விநாடிகள் மட்டும் தரிசனம்... வித்தியாசமான தோற்றத்தில் தட்சிணாமூர்த்தி.!*🌹
அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் :

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப்பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.

கோயில் சிறப்பு :
தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும், அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பக்கிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது.

பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் பூஜை நேரத்தின்போது சிவலிங்கத்தை நாம் பார்த்து தரிசித்து கொண்டே இருக்கலாம். ஆனால் இத்தலத்தில் இரண்டு, மூன்று விநாடிகள் மட்டுமே சிவன் தரிசனம் தந்து விட்டு திரைக்குள் மறைந்து கொள்கிறார்.

இறைவனும், இறைவியும் இணைந்திருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11 ருத்ரர்களில் ஒருவரான 'பீமருத்ரர்" திரைச்சீலை வடிவில் உள்ளார். எனவே அவருக்குத்தான் முதல் அர்ச்சனை, பூஜை. அதன்பின் திரை நீக்கப்பட்டு ஒரு சில விநாடிகள் உள்ளிருக்கும் சுவாமியை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி தரப்படுகிறது.

விநாயகருக்கு மூஷிக வாகனம் எதிரில் இல்லாமல் அருகில் அமைந்துள்ளது விசேஷம். துர்க்கையின் பாதத்திற்கு கீழ் எருமை தலை கிடையாது, கையில் உள்ள கரம் திரும்பி உள்ளதுடன் கதாயுதமும் தாங்கியிருக்கிறாள்.

வாமனபுரீஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். இந்த வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில், வாமனபுரீஸ்வரர் கோவில் அருகே அகத்தியர் சுயம்புலிங்கக் கோவில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் உள்ள யுகலிங்கங்கள், கஜலட்சுமி, வடுகநாதர் நடராஜர் சப்தமாதர்கள், அறுபத்து மூவர் சன்னிதிகள் விசேஷமானவை. மேலும் கோயிலுக்கு எதிரில் உள்ள மலை செம்மலையாகக் காட்சியளிக்கிறது.

இத்தலத்தில் உள்ள மலையில் தீபம் ஏற்றும்போது இறைவனுடைய நெற்றிக்கண் ஒளிர்வது போலவே இருக்கும். இந்த மலைக்கு ஜோதிகிரி, ரத்னகிரி, புஷ்பகிரி, ஒளஷதகிரி என்ற பெயர்களும் உண்டு. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, நாகத்தை கையில் ஏந்திய நிலையில் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.

கோயில் திருவிழா :

மகா சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

இத்தலத்தில் கார்த்திகையில் (பரணியில் அல்லாமல்) திருவண்ணாமலையில் நடைபெறுவது போல ரோகிணியில் தீப தரிசனம் நடைபெறுகின்றது.

வேண்டுதல் :

குழந்தை வரம் வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் ஈரத்துணியுடன் அம்மனை 11 முறை சுற்றி வர வேண்டும். பின் அம்மனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து அதை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன் :

சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன். 

Saturday, February 24, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பூமீஸ்வரர் கிரிஜாம்பிகை அம்மன்.

#முதலாம்_இராஜராஜசோழன் தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பழைமையான தலமான, 
#விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள #மரக்காணம்
#பூமீஸ்வரர்
#கிரிஜாம்பிகை அம்மன் திருக்கோயில் வரலாறு:

பூமிக்கு அடியில் பரவியிருக்கும் நீர் ஊற்றுக்கண் வழியாக வெளிப்படுவது போல், எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் திருவருள் கடாட்சம் நமக்காக வெளிப்படும் இடம் திருக்கோயில்கள். நம் மனதைச் செம்மைப்படுத்தி, செயல்களைச் சிறப்பாக்கி வாழ்வைப் புனிதமாக்கும் வல்லமைகொண்டவை ஆலயங்கள்.
எனவேதான், நம் தேசத்தை ஆண்ட மன்னர்கள் பலரும் நாட்டு மக்கள் நன்மை அடையும்பொருட்டு, எண்ணற்ற ஆலயங்களை நிர்மாணித்தார்கள். அவ்வகை யில் சோழர்கள் அமைத்த ஆலயங்கள் பலவும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நானிலம் சிறக்க நல்லருளைப் பொழிந்து திகழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயில்.

சோழா் காலத்து அரசியல் மற்றும் சமுதாய நிகழ்வு களை இன்றும் நமக்கு எடுத்துக்காட்டும் பொக்கிஷமாக விளங்கும் ஈசனின் இந்த ஆலயம்,  கிழக்குக் கடற்கரைச் சாலையில் மரக்காணம் நகாில் அமைந்துள்ளது.

தமிழா்களின் தொன்மையான நாகாிகம் மற்றும் பண்பாட்டுக்கு ஆதாரமான திருத்தலம் மரக்காணம். 2005-ம் ஆண்டில் இங்கு நிகழ்ந்த அகழ்வாய்வின் மூலம், இவ்வூரின் தொன்மைக்கு ஆதாரமான பல சான்றுகள் கிடைத்தன. சோழா்கள், விஜயநகரப் பேரரசர்கள்,  மராட்டிய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயா் காலத்து நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன.

அலெக்ஸாண்டிாியா நாட்டின் வணிகா் ஒருவரால் எழுதப்பட்ட நூல் `செங்கடல் பயணக் கையேடு'. இதில், `சோபட்மா' என்று குறிப்பிடப்படும் மரக்காணம் துறை முக நகரமாகத் திகழ்ந்த தகவல் உள்ளது. சங்க இலக்கியங்கள் மரக்காணத்தை `எயிற்பட்டினம்' என்று குறிப்பிடுகின்றன. `எயில்' என்பதும் `சோ' என்பதும் மதிலைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்தத் துறைமுக நகரைச் சூழ்ந்து மதில் இருந்ததால், இப்பகுதிக்கு `எயிற்பட்டினம்' என்ற பெயா் ஏற்பட்டுள்ளது.

மரக்காணத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூமீஸ்வராின் திருக்கோயில், திருமுறைகண்ட சோழ மன்னன் ராஜராஜனால் தஞ்சை பொியகோயில் நிா்மாணிக்கப்படுவதற்கு முன்னரே கட்டப்பட்டது என்பதை அறிய முடிகிறது. மரக்காணம் தலத்திலிருந்த ஈசனின் திருக்கோயில், அக்காலத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை  சீற்றத்தால் மண்மூடிப் போனதாகவும், பின்னா் மீண்டும் ராஜராஜ சோழனின் காலத்தில் புதிதாக நிா்மாணிக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆசிாியா்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது.

மரக்காணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமீஸ்வரா், சோழர்கள் காலத்தில் ஸ்ரீபூமீஸ்வர தேவா், ஸ்ரீபூமீஸ்வரத்தாழ்வாா், திரு பூமீசுவரமுடையாா், ஸ்ரீபூமீஸ்வரமுடைய மகாதேவா், ஸ்ரீபூமீஸ்வரமுடைய நாயனாா் என்று பல திருநாமங்களுடன் வணங்கப்பட்டதைக் கல்வெட்டு தகவல்களிலிருந்து அறிய முடிகிறது.

விழுப்புரம் மாவட்டத்தின் கடைசி எல்லையாகவும், புதுச்சேரி மாநிலம், செங்கல்பட்டு மாவட்டங்களின் எல்லைகளை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது மரக்காணம். இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கருங்கற்கலைக் கொண்டு கற்றளி முறையில் அழகிய தோற்றத்துடன் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க பூமீஈஸ்வரர் கோயில். இக்கோயிலின் வடக்கு புரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கற்களைகொண்டு கட்டப்பட்ட பெரியகுளம் உள்ளது. இப்பகுதி பண்டைய காலத்தில் எயிர் பட்டினம் என அழைக்கப்பட்டது. எயிர் என்றால் அரண் என்று பொருள் ஆகும். கி.மு 300 ம் ஆண்டு இப்பகுதி தொண்டை நாட்டு அரசனின் துறைமுகபட்டினமாக திகழ்ந்துள்ளது. அதன் பிறகு ஒய்மா நாட்டு நல்லியகோடன் ஆட்சி காலத்தில் முக்கிய துறைமுகமாக இருந்துள்ளது. அந்த மன்னன் திண்டிவனத்தில் உள்ள கிடங்கல் பகுதியை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்துள்ளார். இதனால் இந்த மன்னன் கிடங்கல் கோமான் எனவும் அழைக்கப்பட்டுள்ளார்.

#புராண முக்கியத்துவம் :

கோயிலில் 47 கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் விஜய ராஜேந்திரன் ராஜாதிராஜா சோழன், இரண்டாம் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர வம்சம்.

சிவபெருமான் பூமீஸ்வர தேவர், பொம்மீஸ்வரத்தாழ்வார், திருபூமீஸ்வரமுடைய நாயனார், பூமிஸ்வரமுடைய தம்பிரான், திருபூமியப்ப தம்பிரான் (விஜயநகர காலம்) என்று அழைக்கப்பட்டார். கல்வெட்டின்படி மரக்காணம் இராஜராஜ பேரளம், பட்டினம், எயில் பட்டினம், கண்டராதித்த நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரக்காணம் பட்டின நாட்டுக்கு உட்பட்டது, ராஜராஜ சோழன் காலத்தில், கண்டரரித்த நல்லூர் பட்டின நாட்டில், விஜய ராஜேந்திர சோழ வளநாடு ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் இருந்தது. விக்ரம சோழன் காலத்தில் மரக்காணம் பிராமணர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு விக்ரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுகள் சில இந்த இடத்தை மணற்கானம் என்று குறிப்பிடுகின்றன, கடற்கரை மணல் மற்றும் பின்னர் மரக்காணம் திரும்பியது.

புராணத்தின் படி, சிவபெருமான் முனிவர் வடிவில் ஒரு பக்தரின் வீட்டிற்கு வந்தார். பக்தர் உணவு அளித்தபோது, முனிவர், பூஜை செய்த பிறகே உணவு எடுத்துக் கொள்வார் என்றார். பக்தர் தனது மரக்கால் (நெல் அல்லது உப்பை அளவிடும் பாத்திரம்) தலைகீழாக வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். பூஜை முடிந்து முனிவர் உணவு உண்டுவிட்டு கிளம்பினார். பக்தர் அகற்ற முயன்றார் ஆனால் முடியவில்லை. மாறாக காணாமல் போனது. இதைப் பார்த்த பக்தர் மரக்கால் காணோம் என்று கத்திக் கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் அவர் கடலோரத்தில் உள்ள மரக்காலை கண்டு அங்கு  கோவிலைக் கட்டினார். “மரக்கால் காணோம்”, பின்னர் மரக்காணம் என்று மாறியது.

 
 இங்கு அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்ககோயில் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் கி.பி 996 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அதாவது தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே கோயிலை கட்டியுள்ளனர். அப்போது இந்த ஊர் ஒய்மா நாட்டு பட்டினநாட்டு பட்டனமான மரக்காணம் என அழைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ராஜேந்திரசோழன் காலத்தில் ஒய்மா நாட்டு பட்டன நாட்டு பட்டனம் என அழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாம் குலோத்துங்க மன்னர் காலத்தில் மீண்டும் எயிர்பட்டினம் என அழைத்துள்ளனர். அதன் பிறகு விஜயராஜமன்னன் கம்பண்ண உடையார் ஆட்சியின் போது மரக்காணம் என பெயர் மாற்றி அழைத்துள்ளனர்.
 இந்த கோயிலின் தல விருட்சம் வில்வம். இத்தனை வரலாற்று சிறப்புமிக்க இந்தகோயிலின் தெற்குபுரத்தில் பிச்சாடனார், தட்சணாமூர்த்தி சிலைகளும், மேற்கு பக்கம் விஷ்ணு சிலையும், வடக்குபக்கம் பிரம்மன் மற்றும் துர்க்கையும் அமைந்துள்ளது. இது போல் இந்த கோயிலை தினமும் வந்து தரிசனம் செய்தால் நிலம் சம்மந்தமான பிரச்னைகள் தீரும். பூமி வாங்கவும், விற்கவும் பூமி சம்மந்தமான கோயில் என்பதால் பூமீஈஸ்வரர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். 
இங்குள்ள சிவலிங்கம் தான்தோன்றி லிங்கம் என்று கூறுகின்றனர். இந்த கோயிலுக்கு கூறப்படும் சிறப்புக்கள் ஒருவர் தனது நிலத்தை விற்கவோ அல்லது வாங்கவோ நினைத்தால் இந்த கோயிலுக்கு வந்து இங்கு இருக்கும் சிவனை வணங்கிவிட்டு கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்து சென்று பிரச்னை உடைய நிலத்தில் தூவினால் சில நாட்களிலேயே அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமண தடை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகளுக்கும் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டால் தீர்வு கிடைக்கும்.
 கோயிலின் உட்பகுதியில் கிரிஜாம்பாள் கோயில் அமைந்துள்ளது. மேலும் நவக்கிரகங்கள், காலபைரவர், முருகப்பெருமான் சித்தி வினாயகரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கோயிலின் எதிர் புறத்தில் அழகிய தோற்றத்துடன் கூடிய கொடிமரம் மற்றும் நந்தீஸ்வரர் சிலையும் உள்ளது. மேலும் கோயிலின் எதிர்புறம் சூரியன், சந்திரன் இணைந்த நிலையில் தனியாக சிறிய கோயிலும் அழைந்துள்ளது. இந்த சிற்பங்கள் தற்போதும் சிறிதுகூட சேதம் அடையாமல் இருப்பது ஆச்சரியம் தருகிறது. இந்த கோயிலில் மாதம் இரண்டு முறை பிரதோஷ விழா நடத்துகின்றனர். இந்த பிரதோஷ விழாவில் மரக்காணம், புதுவை, சென்னை, செங்கல்பட்டு போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். மேலும் மாழ்கழி மாதத்தில் நடத்தப்படும் ஆருத்ரா விழாவும் மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.

சிறப்பு அம்சங்கள்:
 கோயில் நுழைவு வளைவுடன் கிழக்கு நோக்கி உள்ளது. நுழைவாயிலுக்கு முன் அடிவாரத்தில் பல்வேறு தெய்வங்களின் திருவுருவங்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் விஜயநகர காலத்தைச் சேர்ந்தது. கருவறைக்கு முன்பாக தீபஸ்தம்பம், பலிபீடம், துவஜ ஸ்தம்பம், நந்தி மண்டபம் மற்றும் நவகண்ட நடுகல் ஆகியவற்றைக் காணலாம். கருவறையில் கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், ஒரு முக மண்டபம் மற்றும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் இரண்டு மண்டபங்கள் உள்ளன.

சன்னதி பாதபந்த அதிஷ்டானம். மூலஸ்தானம் பூமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அவர் கருவறையில் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். பிக்ஷதான (விநாயகருக்குப் பதிலாக), தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியவை கருவறைச் சுவரைச் சுற்றி அமைந்துள்ள கோஷ்ட சிலைகள். துர்க்கை (6 கைகளுடன்) குடை, மாலை மற்றும் 2 துவாரபாலகிகளுடன் காட்சியளிக்கிறார். பிரதான சன்னதியைச் சுற்றிலும் பல கல்வெட்டுகள் உள்ளன. நுழைவு வளைவுக்குப் பிறகு வலது பக்கத்தில் சந்திரன் மற்றும் சூரியன் சன்னதி உள்ளது.

முன் மண்டபத்தில் கர்ணபூஷண விநாயகர், நந்தி, லக்ஷ்மி விநாயகர் ஆகியோரைக் காணலாம். கருவறையின் நுழைவாயிலில் சோழர் கால துவார பலகைகள் காணப்படுகின்றன. உற்சவ சிலைகள் (சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், அம்மன் கிரிஜாம்பிகை மற்றும் காளி) அந்தரளத்தில் அமைந்துள்ளன. இடது மண்டபத்தில் நால்வர், 3 விநாயகர் சிலைகள், சப்தமாதாக்கள், அய்யனார் ஆகியோரைக் காணலாம். அர்த்தமண்டபத்தில் நவகிரகங்கள் மற்றும் பைரவர் உள்ளனர். பைரவரின் உடலில் சேவை முடிகள், காதணிகள், வளையல்கள் மற்றும் கணுக்கால்கள் மற்றும் உடலின் பிற ஆபரணங்களுடன் முறுக்கப்பட்ட நாகங்கள் உள்ளன. பைரவர் புலித் தோலை உடுத்தி, மனித எலும்புகளுடன் தனது நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார்.

தாயார் கிரிஜாம்பாள் / கிரிஜாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். அவள் கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் வீற்றிருக்கிறாள். அபய ஹஸ்தத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். இக்கோயிலில் வழக்கத்திற்கு மாறாக அம்மன் முன் நந்தியும், சிவன் முன் பாவை விளக்கும் உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், அவரது துணைவியார் வள்ளி, தேவசேனா மற்றும் சிவலிங்க சன்னதிகள் உள்ளன. விஷ்ணு சிவனை வழிபடும் சிற்பங்களும், சிறுத்தொண்ட நாயனாரின் வரலாற்றை விளக்கும் சிற்பங்களும் சோழர்களின் தலைசிறந்த படைப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள். கோவிலில் 3 பெண்களின் நடனக் காட்சியைக் காட்டும் சிற்பம் உள்ளது. 3 பெண்களுக்கு 4 கால்கள் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளன, ஆனால் தனித்தனியாக கவனிக்கும்போது, ஒவ்வொரு பெண்ணும் 2 கால்களுடன் இருப்பதைக் காணலாம். சோழர்களின் அற்புதமான சிற்பம் இது. இக்கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இது கோயிலுக்கு மேற்கே அமைந்துள்ளது.

#கல்வெட்டுகள்:

கோயிலில் 47 கல்வெட்டுகள் உள்ளன. ராஜராஜசோழ-I, ராஜேந்திர சோழ-I, விஜய ராஜேந்திரன் ராஜாதிராஜா சோழ-I, குலோத்துங்க சோழ-II மற்றும் III மற்றும் விஜயநகர வம்சம்.

சிவபெருமான் பூமேஸ்வர தேவர், பொம்மேஸ்வரத்தாழ்வார், திருபூமேஸ்வரமுடைய நாயனார், பூமிஸ்வரமுடைய தம்பிரான், திருபூமியப்ப தம்பிரான் (விஜயநகர காலம்) என அழைக்கப்பட்டார்.

கல்வெட்டின்படி மரக்காணம் இராஜராஜ பேரளம், பட்டினம், எயில் பட்டினம், கண்டராதித்த நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரக்காணம் பட்டினநாட்டின் கீழ் வந்தது, ராஜராஜ சோழன் காலத்தில், கண்டரித்த நல்லூர் பட்டினநாட்டில், விஜய ராஜேந்திர சோழ வளநாடு ஜெயங்கொண்ட சோழ மண்டலம். விக்ரம சோழன் காலத்தில் மார்க்கானம் பிராமணர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு விக்ரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுகளில் சில இந்த இடத்தை மணற்கானம் என்று குறிப்பிடுகின்றன, கடற்கரை மணல் மற்றும் பின்னர் மரக்காணம் திரும்பியது.

கல்வெட்டுகள் முக்கியமாக 2 விளக்கு எரிப்பதற்காக உப்பளத்தின் மீதான வரி தளர்வு, விளக்கு எரிக்க செம்மறி ஆடு பரிசு, நந்தவனத்திற்கு நிலம் விற்றது பற்றி பேசுகிறது. 

செல்வது எப்படி?
புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் பூமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பேருந்து வசதி உள்ளது.

   
திருச்சிற்றம்பலம் 🙏🙇

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில்.

#திருவந்திபுரம்
#தேவநாதப்_பெருமாள்
#ஹயக்ரீவர்
#செங்கமலத்_தாயார்
திருக்கோயில்
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கெடிலம் ஆற்றங்கரை யோரத்தில் அமைந்துள்ளது.
ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்ய பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப் பட்டுள்ளது.
திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று வழங்கப்படுகிறது.
கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில். இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும். கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.

மூலவர் : தேவநாதப் பெருமாள், ஹயக்ரீவர்

உற்சவர் : அச்சுதன்

தாயார் : பார்கவி (ஹேமாம்புஜ வல்லித் தாயார்) 

விமானம்: சந்திர விமானம்

தீர்த்தம்: கருட தீர்த்தம்

தல விருட்சம் : வில்வம்

புராணப் பெயர்:அயிந்தை

ஊர் : திருவந்திபுரம்

மாவட்டம்: கடலூர்

மாநிலம் : தமிழ்நாடு

இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட ஊர் ஆகும் .அருகில் உள்ள மலை பிரம்மன் தவம் செய்த இடம் என்பதால் பிரம்மாச்சலம் என்று அழைக்கப்படுகிறது . கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில். 

இந்த கருடநதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் கங்கை போன்று இங்கு குளித்தால் பாவங்கள் நீங்கி புண்ணியத்தை  அடையலாம் . மழைக்காலத்தில் இவ் நதி ரத்த வண்ணத்தில் நீர் செல்வதை காணலாம் .

இக்கோயில் சோழர்கள் ,பாண்டியர்கள் ,விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டது .

தல வரலாறு :

ஒருமுறை சனகர் ,சனந்தனர் ஆகிய இரு முனிவர்கள் இறைவன் நாராயணின் மீது மிகுந்த பக்தி வைத்திருந்தார்கள் ,ஆனால் அவர்களால் இறைவனை காண முடியாமல் அவரை காண வழியை அறியாது தவித்தனர் .ஒரு நாள் இவர்களை கண்ட வியாசர் முனிவர் அவர்களிடம் இந்த ஒளஷதகிரி என்ற மருந்து மலைக்கு அருகில் உள்ள கருட ஆற்றங்கரையில் தவமமிருந்தால் இறைவன் காட்சி தந்து அருள்தருவார் என்று யோசனை தந்தார் . அவரின் யோசனை படி முனிவர்கள் கடும் தவம் இருந்தனர் அவர்களின் தவத்திற்கு மனம் இறங்கிய இறைவன் தன் அற்புத காட்சியை அவர்களுக்கு தந்தார் .ஒளஷதகிரி என்பதே பிற்காலத்தில் ஆயிந்திபுரம் என்று ஆனது .திருமால் இங்கு அவதரித்ததால் திருவயந்திபுரம் என்று ஆனது .

பிரம்மாண்டபுராணத்தில் இத்தலத்தை பற்றி கூறும் போது ஒரு முறை தேவர்களை காக்கும் பொருட்டு திரிபுர அசுரர்களை அளிக்க மும்மூர்த்திகளும் ஒன்றாக இணைந்து அழித்தனர்.அசுரர்களை அழித்த மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாக காட்சி தந்த தலம் என்று கூறுகிறது . இதனாலேயே தேவர்களை காத்த நாதன் என்பதால் ‘தேவநாதன் ‘ என்ற திருநாமம் ஏற்பட்டது .

பிரம்மாண்டபுராணத்தில் இத்தலத்தை பற்றி கூறும் போது ஒரு முறை தேவர்களை காக்கும் பொருட்டு திரிபுர அசுரர்களை அளிக்க மும்மூர்த்திகளும் ஒன்றாக இணைந்து அழித்தனர்.அசுரர்களை அழித்த மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாக காட்சி தந்த தலம் என்று கூறுகிறது . இதனாலேயே தேவர்களை காத்த நாதன் என்பதால் ‘தேவநாதன் ‘ என்ற திருநாமம் ஏற்பட்டது .
ஸ்ரீ செங்கமலநாயகி பற்றிய பதிவு

ஒரு காலத்தில் ப்ருகு ஔஷத மலைமேல் வந்து தவம் செய்ய, அவருக்குப் பிரம்மா பிரத்தியக்ஷமாகி, அவருக்கு ஒரு குமாரி உண்டாகி அவள் மூலமாக எம்பெருமான் ஸ்ரீ தேவநாதன் தரிசனம் கிடைக்கும் என்று சொன்னார்.
  
     பிறகு எம்பெருமானைக் குறித்துக் கடுந்தவம் இயற்றியதுடன் பூதீர்த்தம் என்று ஒரு தடாகம் நிர்மித்து எம்பெருமானைத்  தியானித்து வந்தார்.

    அந்த பூதீர்த்தத்தில் ஓர் ஆயிரம் இதழுள்ள பொற்றாமரையில் ஸ்ரீமஹாலஷ்மி அவதரித்துப் பிருகுவின் பெண்ணாக வளர்ந்து, பரமனை விரும்பிப் பூசித்து எம்பெருமானைத் திருமணம் செய்துகொண்டாள்.

   ப்ருகுவின் குமாரியாக வந்தமையால் 'பார்கவி' என்றும், பொற்றாமரையில் அவதரித்தபடியால் 'ஹேமாப்ஜநாயகி' , 'அம்போருஹவாஸிநீ', 'செங்கமலநாயகி' என்றும் பிராட்டி பல பெயர்களை அடைந்தாள்.

  அவள் அவதரித்த தீர்த்தம் பூதீர்த்தம் என்ற பெயருடன் இன்றும் விளங்குகிறது. பார்கவியைத் திருமார்பிலும் பிருகுவை தம் இடப்பக்கத்திலும் இருக்கச் செய்தருளினார் எம்பெருமான் ஸ்ரீ தேவநாதன்.

காலக்கோடு :

தற்போதைய வடிவத்தில் உள்ள கோவில் இடைக்கால சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது, பின்னர் பாண்டியர்கள், ஹொய்சள சாம்ராஜ்ஜியம் மற்றும் விஜயநகர சாம்ராஜ்ஜியத்திலிருந்து விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த கோவிலில் 50 கல்வெட்டுகள் விக்ரம சோழர் (1118-1135), ராஜராஜ சோழர் III (1216-1256), ஜாடாவர்மன் சுந்தர பண்டியன் (1251-1268), விக்ரம பாண்டியன், வீரபாண்டியன் III, விஜயநகர ராஜா அச்சுத தேவா ராயா (1529-1542) மற்றும் கோபருஞ்சிங்கன் காலத்திலிருந்து உள்ளது. கல்வெட்டு துறை 50 கல்வெட்டுகளை இடைகால சோழர் ஆட்சியில் கண்டுபிடித்தது. அந்த கல்வெட்டுகளில் விக்ரம சோழர் (1118-1135), ராஜராஜ சோழர் III (1216-1256), ஜாடாவர்மன் சுந்தர பண்டியன் (1251-1268), விக்ரம பாண்டியன், வீரபாண்டியன் III, விஜயநகர ராஜா அச்சுத தேவா ராயா (1529-1542) மற்றும் கோபருஞ்சிங்கன் காலத்தில் இக்கோவிலுக்கு கொடை வழங்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. ராஜராஜ சோழர் III ஆட்சியின் போது இக்கோவில் முற்றுகையிடப்பட்டது. பல்லவ வம்சத்தின் கோபருஞ்சிங்கன்என்பவரால் ராஜராஜ சோழர் III சிறை வைக்கப்பட்டார். வீர நரசிம்மர் II (1220-1234) சோழா் ஆட்சியை காப்பாற்ற ஆட்சிக்கு வந்தார், இறுதியில் இலங்கை மன்னன் பராக்கிரமபாகுவைக் கொன்றார். கோபருஞ்சிங்கின் ஆட்சிக்காலத்தில் இந்த கோவிலின் கோபுரம் எழுப்பப்பட்டது, அதே சமயத்தில் கடவுள்வழிபாடுகள் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் மற்ற கோவில்களை ஒத்திருந்தது. ராமனுஜாவின் வழித்தோன்றல்கள் விஜயநகர பேரரசின் காலத்தில் வழிபாட்டிற்கான விசேஷ ஏற்பாடுகள் வழங்கப்பட்டன. நவீன காலங்களில் இந்த கோயில் தமிழ்நாட்டின் இந்து சமய மற்றும் அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. 

கோயிலைச் சுற்றி ஒரு கிரானைட் சுவர், அதன் அனைத்து சிவாலயங்களையும், நீர்நிலைகளையும் உள்ளடக்கியது. ராஜகோபுரம், கோயிலின் நுழைவாயில் கோபுரம் ஐந்து அடுக்குகளைக் கொண்டுள்ளது மற்றும் 60 அடி (18 மீ) உயரத்திற்கு உயர்கிறது. ஆதிசேஷா (விஷ்ணுவின் புனித பாம்பு), மார்க்கண்டேய முனிவர் மற்றும் இந்திரன் ஆகியோருக்கு தேவநாதசுவாமி காட்சி கொடுத்துள்ளார். 

சொற்பிறப்பியல்  :

இந்த இடம் முதலில் ஒரு சிவன் கோவிலைக் கொண்டிருந்ததாக நம்பப்பட்டது. சிவன் கோயில்களில் காணப்படாத விநாயகர் மற்றும் தட்சிணாமூர்த்தியின் உருவங்களைப் பார்த்து, அவர் அதிர்ச்சியடைந்தார். சர்வவல்லவரின் ஒற்றுமையை ஒப்புக் கொள்ள விஷ்ணுவே மன்னர் முன் தோன்றினார் என்று நம்பப்படுகிறது.புராணத்தைத் தொடர்ந்து, பிரசங்கத்தின் தெய்வத்தின் உருவம் தாமரையை வைத்திருக்கிறது, இது பிரம்மாவின் சின்னமாகவும், சிவனைப் போன்ற மூன்றாவது கண்ணையும் கொண்டுள்ளது, இது ஒற்றுமையைக் குறிக்கிறது.முதலில் வாகீந்திரன் என்று அழைக்கப்பட்ட ஆதிசேஷரை மாறியாதை செலுத்துதும் விதமாக இப்பகுதி திருவாஹீந்திரபுரம் என்று அழைக்கப்பட்டது. வகீந்திரர் வான தெய்வங்களின் ராஜாவான இந்திரனை ஆதரித்ததாக நம்பப்படுகிறது. திருவஹீந்திரபுரம் காலப்போக்கில் திருவந்திபுரம் ஆனது.

புராணம்:

இந்த கோவில் பிரம்மந்த புராணம், நாரதிய புராணம் மற்றும் ஸ்கந்த புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணக்குகளின் படி, முனிவர்கள் ஒரு குழு விஷ்ணுவைப் பற்றி ஒரு புனிதமான பார்வையைப் பெற விரும்பியதுடன், பால் பெருங்கடலான திருப்பர்கடலுக்குச் சென்றது.அவர்களால் அங்கு விஷ்ணுவைப் பார்க்க முடியவில்லை, விஷ்ணுவின் பரலோக வாசஸ்தலமான வைகுண்டத்திற்கு சென்றார். அங்குள்ள பாதுகாவலர்கள், விஷ்ணுவை கும்பகோணத்தின் வடக்கே, திருப்பதிக்கு தெற்கிலும், காஞ்சிபுரத்தின் மேற்கிலும் உள்ள ஒரு இடத்தில் மட்டுமே சந்திக்க முடியும் என்று கூறினர்.முனிவர்கள் அங்கு சென்றபோது, ​​முனிவர் மார்க்கண்டேயா மற்றும் அவரது மகள் பூதேவி தவம் செய்வதைக் கண்டார்கள். மகாவிஷ்ணுவை அவரது ஆயுதங்களான சுதர்ஷனா (சக்கரம்), பஞ்சாஜண்யா (சங்கு) மற்றும் கௌமோதகி ஆகியோர் தனது கைகளை அணைத்துக்கொள்வதைக் காணலாம்.

மற்றொரு புராணத்தின் படி, விஷ்ணு, உலகில் அமைந்துள்ள வ்ராஜா தீர்த்த ஏரியின் தூய நீரைப் பெறும் வேலையை கழுகு வாகான கருடாவிடம் ஒப்படைத்தார். கருடா நெருங்கிய உலகத்தை அடைந்து, முனிவருக்குத் தெரியாமல், ஏரியிலிருந்து ரகசியமாக தண்ணீரைப் பெற்றார். முனிவர் அதைப் பற்றி அறிந்து, தூய்மையற்றதாக மாற தண்ணீரை சபித்தார். கருணா பின்னர் விஷ்ணுவின் கட்டளைகளைக் குறிக்கும் முனிவரிடம் கெஞ்சினார். நீளமான பரிவர்த்தனை நடவடிக்கைகளை தாமதப்படுத்தியது மற்றும் விஷ்ணு தனது மற்ற பிரதான பக்தரான ஆதிசேஷா பாம்பை நோக்கி திரும்பினார், அவர் பூமியை தனது வால் மூலம் தட்டுவதன் மூலம் கிணறு கட்டினார். இந்த கிணற்றில் இருந்து வரும் தண்ணீர் கோயில் பிரசாத் தயாரிப்பதற்கு தினமும் பயன்படுத்தப்படுகிறது. புராணக்கதை கூறுகிறது, இந்த கிணற்றில் உப்பு, மிளகு மற்றும் வெல்லம் சேர்ப்பது எந்தவொரு வியாதியின் பக்தரையும் குணப்படுத்துகிறது மற்றும் தோல் வியாதிகள் உள்ளவர்களால் மத ரீதியாக பின்பற்றப்படுகிறது. கருடா மிகவும் வேதனையடைந்தார் மற்றும் அவரது குற்றத்திற்காக உணர்ந்தார். கெதிலம் நதி என்று நம்பப்படும் ஒரு நதியை நிறுவுவேன் என்று விஷ்ணு அவரை சமாதானப்படுத்தினார். நிகழ்வின் நினைவாக ஆண்டுதோறும் ஒரு சடங்கு குளியல் கொண்டாடப்படுகிறது.

ஹயக்ரீவர் கோயில் :

குதிரை முகம் கொண்ட ஞான கடவுளாம் ஹயக்ரீவர் முதன்முதலில் தோன்றிய தலம் இதுவாகும் .

இந்த கோயில்
ஹயக்ரீவத்திற்கு பெயர் பெற்றது, விஷ்ணுவின் அவதாரமான குதிரை. தென்னிந்தியாவில் ஹயக்ரீவாவின் சன்னதி உள்ள ஒரே வரலாற்று கோயில் இந்த கோயில்.
பிரம்மாவிற்கு ஞானத்தை அளித்ததாக கூறப்படுகிறது . மேலும் நரசிம்மர் சுவாமிக்கு தனியாக சன்னதி உள்ளது .

வேதாந்த தேசிகர் :

வேதாந்த தேசிகர் இவ் தலத்தில் சுமார் 40 ஆண்டுகள் தங்கியிருந்து இவ் இறைவனை வழிபட்டு நிறைய பாசுரங்களை இயற்றினார் . அவர் ஒரு கிணறை வெட்டினார் அவ் கிணறு இன்றும் இங்கு காணலாம் . மற்றும் அவரே தன் விக்ரகத்தை தானே செய்துகொண்ட தேசிகரது விக்ரகத்தை இன்றும் நாம் இங்கு காணலாம் .

மேலும் புரட்டாசி மாதத்தில் முக்கிய விழாவாக  முக்தி அடைந்த தேசிகர் மகா உற்சவம் நடக்கிறது.

கட்டிடக்கலை:

ஹயக்ரிவ கோவிலைக் கொண்டிருக்கும் அவுட்சாதகிரி என்ற சிறிய மலையின் அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலின் மறுபுறத்தில் அமைந்துள்ள கெடிலம் நதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்கிறது மற்றும் உள்நாட்டில் உத்தரவாஹினி என்று அழைக்கப்படுகிறது. திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயில், ஆற்றின் கரையில் கட்டப்பட்ட ஒரே விஷ்ணு கோயில், சில முக்கிய சிவன் கோயில்கள் உள்ளன. கோயிலைச் சுற்றி ஒரு கிரானைட் சுவர், அதன் அனைத்து சிவாலயங்களையும், நீர்நிலைகளையும் உள்ளடக்கியது. கோயில்கள் கிழக்கு நோக்கி உள்ளன, ஆனால் கோயிலின் நுழைவாயில் கோபுரமான ராஜகோபுரம் மேற்கு நுழைவாயிலில் அமைந்துள்ளது மற்றும் ஐந்து அடுக்குகளைக் கொண்டுள்ளது மற்றும் 60 அடி (18 மீ) உயரத்திற்கு உயர்கிறது. பிரதான தெய்வமான தேவநாதசுவாமியின் உருவம் மத்திய சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவறையில் அமர்ந்திருக்கும் தோரணையில், செங்கமலவள்ளி தையர் (ஹேமாபுஜவள்ளி, வைகுந்த நாயகி மற்றும் அம்ருதவர்ஷினி என்றும் அழைக்கப்படுபவர்) உருவம் உள்ளது.

மூவராஜியா ஓருவன், அச்சுதா, திவிஸ்தந்தா, தேவநாதா, விபுதநாதா மற்றும் தஸ்யாதா போன்ற வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் விஷ்ணுவின் திருவிழா படங்கள் கருவறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் பல்லிகொண்ட பெருமாள், ஆண்டல், ஆதிகேசவ பெருமாள், அஸ்வார், ஹனுமார் மற்றும் கருடா போன்ற பிற தெய்வங்களின் உருவங்கள் உள்ளன. விஷ்ணுவின் குதிரை எதிர்கொள்ளும் அவதாரமான ஹயக்ரிவாவுக்கு கோயில் அறியப்படுகிறது, ராமர் ஒரு தனி ஆலயம் உள்ளது, ராமர், தெய்வநாதசுவாமி. கருடா மற்றும் அனுமனின் படங்கள் அனஜலிஹஸ்தாவின் தனித்துவமான தோரணையில் சித்தரிக்கப்பட்டுள்ளன, இது மற்ற அனைத்து கோவில்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமானது. தென்னிந்தியாவில் ஹயக்ரீவாவின் சன்னதி உள்ள ஒரே வரலாற்று கோயில் இந்த கோயில்.

தல சிறப்புகள் :

இந்த கோயில் 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு வைணவ நியதி நளயிர திவ்ய பிரபந்தத்தில் பதினொரு பாடல்களில் திருமங்கை அஸ்வாரால் போற்றப்படுகிறது. இந்த கோயில் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 விஷ்ணு கோயில்களில் ஒன்றான திவ்யதேசம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. திருமங்கை அடிவாரத்தில் கோயிலின் இருப்பிடம் பற்றி குறிப்பிடுகிறது மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள அழகிய இடத்தை மகிமைப்படுத்தியது. விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களையும் அவர் குறிப்பிடுகிறார். ஸ்ரீவில்புதுரர், தனது வில்லிபாரதத்தில், பாண்டவ இளவரசர் அர்ஜுனன் தனது புனித யாத்திரையின் போது இந்த கோவிலுக்கு விஜயம் செய்ததாக விவரிக்கிறார். திவ்ய காவி பிள்ளை பெருமல் அய்யங்கர் தனது அஷ்ட பிரபாண்டாவில் கோயிலின் பக்தர்கள் மீது வானம் பூக்களை பொழிவதாகக் கூறுகிறது.

தலைமை தெய்வம் இரண்டு கைகளால் சங்கு பிடித்து, விஷ்ணுவைக் குறிக்கும் அவரது இரண்டு கைகளிலும் விவாதிக்கிறது, தாமரை பிரம்மாவைக் குறிக்கிறது மற்றும் மூன்றாவது கண் சிவன். இந்த இடத்தில் இந்திரன் விஷ்ணுவை வணங்குவதற்காக விஷ்ணுவை வணங்குவதற்காக வைஷ்ணவ யாகம் செய்தார். விஷ்ணு அவருக்கு வஜ்ராயுதத்தைக் கொடுத்தார், அதன் பிறகு இந்திரன் தலைமறைவாக வெளியே வந்து அரக்கனைக் கொன்றான்.

வைஷன்வதத்தா தத்துவம் மற்றும் வடகலை பாரம்பரியத்தின் ஆதரவாளரான வேதாந்த தேசிகா கோயிலுடன் தொடர்புடையவர். அவர் 102 வயது வரை வாழ்ந்தார், மேலும் தனது பெரும்பாலான நேரத்தை கோவிலில் கழித்தார். சமஸ்கிருத மொழியில் தேவனேய பஞ்சசாத் மற்றும் அச்சுதா சதகா ஆகிய இரண்டு படைப்புகளும், தமிழில் ஏழு படைப்புகள், அதாவது மும்மானிகோவை, அம்மானை, ஓசல், ஏசல், நவமணிமலை, கஜல் மற்றும் பாண்டு ஆகியவையும் இதற்குக் காரணம். இந்த படைப்புகள் அனைத்தும் கோவிலின் மறைமுக மற்றும் நேரடி குறிப்புகளைக் கொண்டுள்ளன. வேதாந்த தேசிகரின் உருவம் ஒரு தனி சன்னதியில், ஒரு தனி த்வாஜஸ்தம்பம், ஒரு கொடி ஊழியருடன் வைக்கப்பட்டுள்ளது. கோயிலில் அமைந்துள்ள ராமர், ரகுவீர கடயத்தில் அவரது படைப்புகளில் தேசிகா பாராட்டியுள்ளார்.

குதிரை முகம் கொண்ட விஷ்ணுவின் அவதாரமான ஹயக்ரீவாவின் உருவத்தை தென்னிந்தியாவில் உள்ள ஒரே வரலாற்று கோயில் இந்த கோயில். மது மற்றும் ஹைதாபா என்று பெயரிடப்பட்ட இரண்டு அக்கிரம குதிரைகள் வேதங்களை உலகத்திலிருந்து எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது. ஹயக்ரீவ வடிவில் பிரசங்கித்த விஷ்ணுவின் உதவியை பிரம்மா நாடினார். ஹயக்ரீவா அறிவு மற்றும் ஞானத்தின் கடவுள் என்று நம்பப்படுகிறது, அவர் வேதங்களை பிரம்மாவிடம் மீட்டெடுத்ததாக நம்பப்படுகிறது. ஹயக்ரீவாவை ஹயாவதான என்றும் அழைக்கிறார்கள். வேதாந்த தேசிகர் தனது படைப்புகளில் ஹயக்ரீவாவைப் புகழ்ந்துள்ளார்.

திருமணம்:

திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.

புனித தீர்த்தங்கள்:

இந்த கோவிலில் கருட பகவானால் கொண்டு வரப்பெற்ற கெடில நதியும், ஸ்ரீஆதிசேஷன் தன் வாலினால் அமைத்த சேஷக்கிணறும், பிரம்ம தீர்த்தம், பூ தீர்த்தம் மற்றும் லட்சுமி தீர்த்தம் என 5 வகை தீர்த்தங்கள் உள்ளன. 

திருவந்திபுரம் தேவநாதசாமி திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று கருதப்படுகிறார். எனவே திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்விறைவன் மீது வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவை என்ற நூலை இயற்றியுள்ளார். மணவாள மாமுனிகளாலும் இத்தலம் பாடல்பெற்றுள்ளது. வடமொழியில் தேவநாயக பஞ்சாசத்து என்னும் தோத்திரப் பாடலும், பிராக்ருத மொழியில் அச்யுத சதகம் என்ற தோத்திரப் பாக்களடங்கிய நூலும் இத்தலத்தைப் பற்றிப் பேசுகின்றன.

ஓம் நமோ நாராயணய.
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...