Saturday, June 29, 2024

ஐந்து சபைகள் கொண்ட அந்த ஆலயத்தில் கனகசபை எனும் பொன்னம்பல சபை...

பஞ்ச சபைகள் 05 : சிதம்பரம்
பார்த்தாலே முக்தி தரும் தலம் சிதம்பரம். அவ்வகையில் இந்த தத்துவத்தில் இருந்துதான் அந்த தங்க சபையின் தாத்பரியத்தை புரிந்து கொள்ள முடியும்.

தங்க சபை, கனக சபை, ருக்மாதீப் எனப்படும் அந்த சிதம்பரம் பொற்சபையினை காணுமுன் அந்த சிதம்பர ஆலயத்தின் தாத்பரியத்தை உணர்ந்தால் இந்த தத்துவம் எளிதில் புரியும்.

அந்த ஆலயம் சங்க காலம் அல்ல வேத காலத்திலே தொடங்கிற்று. எந்த அளவு மிக மிகத் தொன்மையான ஆலயம் என்றால் புராணங்களிலும் இன்னும் வேத உபநிஷதங்களிலும் சொல்லப்பட்ட வெகு சில ஆலங்களில் அதுவும் ஒன்று.

“சாந்தோக்ய உபநிஷதம், கைவல்ய உபநிஷதம், ஜாபால தரிசனம், வராஹ உபநிஷதங்களில் அது சொல்லப்படுகின்றது.

அப்படியே ஸ்காந்த புராணம், ப்ரஹ்மநாரதீயம், சிவ புராணம், லிங்கபுராணம் என்றும், உபபுராணங்களில் தேவி பாகவதம், வசிஷ்டலிங்கம், பவிஷ்யோத்தரம் போன்றவற்றிலும் அது குறிப்பிடப்படுகின்றது.

ஸ்தல புராணங்களில் சிதம்பர மகாத்மியம், புண்டரீகபுர மகாத்மியம், திலவன மகாத்மியம், வ்யாக்ரபுர மகாத்மியம் மற்றும் ஹேம சபாநந்த மகாத்மியத்திலிருந்தும் அதன் குறிப்புகளை பெறமுடியும்.

நடேச விஜயம், பதஞ்சலி சரித்திரம், சங்கர திக்விஜயம், சிவலீலார்ணவம், மதுரா விஜயம் போன்றவற்றில் இருந்தும், சபாபதி விலாச நாடகம் போன்றவற்றில் இருந்தும் அதன் தொன்மையினை அறியலாம்.

இப்படியெல்லாம் எந்த ஆலயத்துக்குமில்லா பெரும் சிறப்புகளைக் கொண்ட அந்த ஞான ஆலயம் வசிஷ்டர் காலத்தில் இருந்தே வழிபாடுகள் கொண்ட ஆலயமாக அறியப்படுகின்றது.

அவரைத் தொடர்ந்துதான் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் வந்தார்கள். பின் திருமூலர் வந்தார், பெரும் பெரும் ஞானியர் வந்து வணங்கினார்கள்.

அது பின்னாளில் கணக்கற்று பெருகி வானத்து நட்சத்திரக் கூட்டம் போல எண்ணமுடியாத அளவு அதிசயங்களும் அவதாரங்களும் நிரம்பிய ஆலயமாயிற்று.

இன்று 51 ஏக்கர் பரப்பில் பெரும் கோபுரத்துடன் நிற்கும் அந்த ஆலயம், அன்று சுயம்பு லிங்கமாக தில்லை மரங்களிடைத் தொடங்கி இன்று மாபெரும் ஆலயமாக‌ பரந்து நிற்கின்றது.

ஹிரண்ய வர்மன் எனும் மன்னன் முதல், முற்கால சோழர்கள் பாண்டியர்கள் தொடங்கி நாயக்க மன்னர்கள் மராட்டியர்கள் வரை அங்கு திருப்பணி செய்த நீண்ட வரலாற்றை கொண்டது.

வசிஷ்டர் தொடங்கி வியாக்ர பாதர், பதஞ்சலி முனிவர் தொடங்கி மாணிக்கவாசகர், நந்தனார் வரை பெரும் பெரும் அவதாரங்கள் வந்து வணங்கி முக்திபெற்ற தலம் அது.

அதன் அருமையும் பெருமையும் பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு நீளமானது.

சிவனின் நடராஜகோலத்தை தாங்கி நிற்கும் அந்த ஆலயமே பராந்தக சோழன் அமைத்த பொற்கூரையினை தாங்கி நின்றது. பின் மாலிக்காபூர் காலத்தில் அந்த பொற்கூடை கொள்ளை போனாலும் சாம்பாஜி மன்னன் காலத்தில் அவ்வாலயம் தன் பொற்கூரையினை திரும்ப‌ பெற்றுக்கொண்டது.

ஏன் எந்த ஆலயத்திலும் இல்லா அளவு அந்த சபையினை மட்டும் பொன்னால் மூடினார்கள்?

ஏன் எந்த ஆலயத்திலும் இல்லா அளவு அங்கு மட்டும் ஆகாய தத்துவம் விளக்கப்படுகின்றது? சிதம்பர ரகசியம் என ஒன்றுமில்லாத ஒரு வெளி மட்டும் காட்டப்படுகின்றது?

நடராஜ கோலத்தில் அதாவது இடையறா நடனம் என சிவன் ஏன் அங்கு ஆடிய கோலத்தில் காட்சியருள வேண்டும்?

இந்த கேள்விகளோடு சிந்தித்தால் அந்த ஆலயத்தின் பெருமையும் அருமையும் தெரியும். அதை விஞ்ஞானத்தோடு பொருத்தினால் இன்னும் பல அதிசயமான ரகசியங்களும் புரியும், தங்க சபையின் தாத்பரியமும் விளங்கும்.

அதனை சூரியனின் தலம் எனச் சொன்னார்களே ஏன்?

சூரியனே உலகுக்கும் அதன் உயிருக்கும் மையம். பூமி முதலான கோள்கள் அதை சுற்றித்தான் வருகின்றன, அது இல்லாமல் உலகம் இல்லை எதுவுமில்லை, அது இல்லாவிட்டால் எல்லாமே இருள்.

அதுதான் ஜாதக கட்டம் முதல் எல்லா இயக்கத்துக்கும் பிரதானம்.

இந்துக்கள் அண்டத்தில் இருப்பதையெல்லாம் பிண்டத்திலும் கண்டவர்கள்.  அதனால் ஆத்மாவினை சூரியனின் வடிவமாகக் கண்டார்கள்.

மானுட ஆத்மாவினை சூரியனின் சாயலாக கண்டார்கள், சுருக்கமாகச் சொன்னால் உயிர்சக்தி ஆத்ம சக்தி என சரியாக சொன்னார்கள்.

சூரியனை ஆத்மகாரகன் என அவர்கள் சொன்னதிலே எல்லா ரகசியமும் அடங்கிப் போயிற்று.  அதுவும் அந்த தலம் சூரியனுக்கானது என்பதிலே ஆத்மபலம் தரும் ஆலயம் அது என்பது இன்னும் தெளிவாயிற்று.

சிவனுக்குரிய அந்த தலத்தில் ஆத்மபலம் அதிகரிப்பதும், சூரிய ஒளியில் உண்மை தெரிவதைப் போல இருள் நீங்கி எல்லாம் சரியாக பார்க்க முடிவதைப் போல அந்த தலத்தில் கிடைக்கும் சக்தியால் ஆத்மஞானம் ஒளிரும் என்பதை ரிஷிகள் உணர்ந்தார்கள்.

ரிஷிகளுக்கு அதனை தெரியப்படுத்திய சிவன், தன் அடியார்கள் ஞானியர் மூலமாக எல்லா மக்களுக்கும் அதை தெரியப்படுத்தவே புலிக்கால் முனிவர், பதஞ்சலி இன்னும் பலரை அழைத்து தன்னை வெளிப்படுத்தினார்.

இந்த பிரபஞ்சத்தின் இயக்கு சக்தியினை அண்டவெளி முதல் அணுசக்திவரை இயங்கும் சூட்சுமத்தை தன் தாண்டவம் எனும் ஆடலில் தெரியப்படுத்தினார்.

அது நடராஜ கோலமாயிற்று.

அந்த கோலத்தை கண்ட ரிஷிகள் அதனை ஒவ்வொருவரும் ஆத்மத்தால் உணர உண்மையினைக் கண்டு தெளிய அங்கே ஒரு ஆலயம் எப்படி வடிவமைக்கபட வேன்டும் என்பதை சொன்னார்கள்.

அது ஆத்ம ரகசியத்தை, ஆத்ம இயக்க தத்துவத்தை, உடலில் உயிர் ஆடும் தத்துவத்தை அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு, ஆகாய தத்துவம் உடலிலும் உண்டு என்பதை சொன்னார்கள்.

சிதம்பரம் ஆலயம் ஆகாய தத்துவமாய், இன்றும் அங்கு சன்னதியில் ஒரு வெளி மட்டும் இருப்பதாய் இருப்பதன் தத்துவத்திலே முழு உண்மையும் அடங்கிவிடுகின்றது.

சித் + அம்பரம் என்பதே சிதம்பரம் என்றாயிற்று.

அம்பரம் என்றால் ஆகாயம் என பொருள், சித் என்றால் மனம் அல்லது அறிவு.

ஆகாய தத்துவத்தை அறிந்துகொள்ளுமிடம் அதை உணருமிடம் என்பது பொருள், அதனாலே அதற்கு அம்பரம், சிதம்பரம் என பெயரிட்டார்கள்.

அண்டவெளியின் ஆகாயம் எனும் வெளி மானிட உடலிலும் உண்டு என்பதையும் அங்கேதான் ஆத்மா உணர்வாக வசிக்கின்றது சூரிய பிம்பமாக வசிக்கின்றது என்பதை சொன்னார்கள்.

அந்த சிதம்பரம் ஆலயத்தின் அமைப்பே உடலின் அமைப்பினை ஒத்திருக்கும்.

ஐந்து சபைகள் கொண்ட அந்த ஆலயத்தில் கனகசபை எனும் பொன்னம்பல சபை பிரசித்தியானது.

இக்கோவிலின் சிறப்பே மானிட உடல் இயக்கத்தை பின்பற்றி அமைக்கப்பட்டது.

அந்த தங்க கூரையில் 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் உண்டு. அவை மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாச மூச்சுகளின் எண்ணிக்கையைக் குறித்தது.

அங்கே 72 ஆயிரம் ஆணிகள் தங்கத்தில் உண்டு. அவை மனிதனின் நாடி நரம்புகளைக் குறிப்பது.  கோவிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கும். 

இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச(5) பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது.

மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், ப்ராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

இங்கு எல்லாமே ஒரு கணக்கு, மானிட உடல் முதல் இறைவனின் ஆகமங்களைச் சொல்லும் கணக்கு. அன்றே ரிஷிகளும் ஞானியரும் மானிட உடலை பிரபஞ்சத்தை இணைத்து உருவாக்கிய கோவில் இது.

அன்றே எல்லாவற்றையும் ஞானத்தால் உணர்ந்த இந்து ரிஷிகள் அந்த தத்துவப்படியே அதனை அமைத்தார்கள்.

மானிட உடலில் இதயம் அருகே ஒரு வெளி இருப்பதையும் ஆகாய வெளியோடு அது பொருந்துவதையும் அங்கேதான் ஆத்ம உணர்ச்சி இருப்பதையும் அறிந்து இந்த கோவிலில் அதை உருவமாக வைத்தார்கள்.

சிதம்பர சன்னதியில் வெளி என்பது ஆகாய தத்துவமாக காட்டப்படுவது, மானிட மனதினுள் ஒரு வெளி உண்டு அங்கேதான் ஆத்ம வடிவமாக இறைவன் உண்டு என்பது.

சூரியன் போல அந்த ஆத்மா சுடர்விடக் கூடியது. அதை ஞானத்தால் அடையலாம் தெளியலாம் என்பது ஞானியர் போதனை.

சூரியன் இருளை அகற்றுவது போல இந்த ஆலயத்தில் வழிபடுவோர்க்கு ஆத்ம தெளிவு எற்படும் என்பது நம்பிக்கை.

ஆத்ம தெளிவு என்பது எது நிஜம், எது மாயை என்பதை உணர்த்துவது, எது நிலையானது எனும் தெளிவினைக் கொடுப்பது.

இது ஏன் தங்கசபை என அழைக்கப்பட்டது என்றால் அங்கேதான் சிவனின் ஒரு தொழிலைச் சொல்லி அதனை குறித்தார்கள்.

இத்தலம் சூரிய தலம், சூரியன் என்றால் அக்னி, சிவன் அக்னி வடிவம் இங்கே சிவபெருமானே அக்னிவடிவில் நிற்கின்றார்.

இத்தலத்தில் அவர் அருளல் தொழிலை செய்கின்றார், அது அவரின் ஈசான முகம் என அழைக்கப்படுகின்றது.

இங்கு சூரியனாக அக்னி வடிவமாக இருக்கும் சிவனே, அருளல் அதாவது முக்தி அருளும் குருவாகவும் விளங்குகின்றார்.

இந்த தலம் சூரியனும் குருவும் சேர்ந்த மங்கலத் தலம், அதாவது தெய்வீக ஞானம், உயர்நிலை ஞானம் இங்கு அருளப்படும்.

அருளல் தொழிலை செய்யும் சிவபெருமான் இங்கே குருவாக, ஞான குருவாக நின்று முக்தி அருள்கின்றார், ஞானத்தின் கடை நிலையினை அருள்கின்றார்.

இந்த நிலையினைத்தான் இந்த ஞானக் கடைநிலையினைத்தான் ஈசான முகம் அருளும் என்பார்கள்.  ஈஷா என்பது அந்த பொருளை சொல்வது.

பரந்த வெளியில் ஆத்மா கலந்துவிடும் மாபெரும் கடை நிலை அது. இதற்கு மேல் எதுவுமில்லை. எல்லாம் கடந்த நிலை. எல்லாமே ஒன்றான நிலை என்பதில் ஆத்மா கரைந்து போவது.

இந்த ஈஷா அல்லது ஈசா எனும் தெய்வீக நிலை, பிரபஞ்ச வெளியில் ஆத்மா கலந்துவிடும் அருளை பாக்கியத்தை தருவது இந்த சபை.

குருவின் உலோகம் தங்கம். குரு நிலையில் இன்றும் என்றும் அழியாத என்றும் மங்காத ஞானமுக்தியினை சிவன் அருள்வதால் இச்சபை தங்க சபை என்றாயிற்று.

புடமிடப் புடமிட பொன் துலங்கும்.  அப்படி சிவபக்தியிலும் தேடலிலும் இறங்கும் ஆன்மா பொன்போல் சுடர ஆரம்பிக்கும்.  அப்படிப்பட்ட வரம் தரும் இடத்தையே பொன் அம்பலம் என்றார்கள், பொற் கூரையிட்டு காத்தார்கள்.

சிவனில் கலக்கும் ஆன்மா சிவன் போல் ஜொலிக்கும் அதனாலே பொன்னார் மேனியனே எனப் பாடினார் சம்பந்தர்.

சிதம்பரம் ஆலயம் ஞானம் தருமிடம். ஞான முக்தி தருமிடம்.  மாணிகவாசகர் நந்தனார் போன்றோர் அப்படி முக்தி பெற்றார்கள்.

வெளி எனும் பரவெளியில் ஆத்மா கரைவதே ஞானக் கடைநிலை என்பதைச் சொல்லி அம்பல வெளி வைத்த ஞானியர், தங்கம் எப்போதும் தங்கமாக இருப்பது போல் உயர்நிலை ஞானம் அடைந்த ஆன்மா அதுவாகவே நிலைக்கும் என்பதைச் சொன்னார்கள்.

சிதம்பர ரகசியம் புரிந்துகொள்ள முடியாதது என்பதெல்லாம் விஷயம் அல்ல, அது உண்மையில் ரகசியமும் அல்ல, புரிந்துகொள்ள வேண்டும். அந்த புரிதல்தான் முக்கியம். அதைத்தான் ரகசியம் என்றார்கள்.

மனதில் இருக்கும் வெளியில் அதாவது இதயம் அருகே இருக்கும் சக்கர வெளியில் ஆகாய தத்துவமாக ஒரு வெளி இருக்கின்றது, அங்கே ஆத்மா சூரியன் தத்துவத்தில் இருக்கின்றது.

மனதை ஒருமுகப்படுத்தி இந்த வெளியினை பரவெளியுடன் கலந்தால், யோகத்தில் பக்தியில் இறங்கி மிக வைராக்கியமாய் சாதித்தால் மனிதன் தெய்வ நிலை அடைவான்.

அதுதான் சமாதி நிலை. அதுதான் எல்லாம் கடந்த ஞானயோக நிலை.

இதைச் சொல்வதுதான், எல்லாம் கடந்த நிலையில் அந்த சமாதி நிலை எனும் பரவெளி நிலைக்கு ஆத்மாவினை அழைத்து செல்வதுதான் அந்த ரகசியம்.

எல்லாம் கரைந்த நிலை அது, தான் எனும் அகந்தை நினைவு எல்லாம் கரைந்து, தானும் இறையும் ஒன்று என்பதை உணரும் நிலை அது.

குருவாக நின்று சிவபெருமான் முக்தி அருள்வார், அருளல் தொழிலை செய்யும் பெருமான் அங்கே ஞானமுக்தி தருவார்.

அப்படி பரவெளியில் இறைசக்தியுடன் கலந்து விடுவதைத்தான் அதுதான் நித்தியம் அதுதான் நிலையானது என்பதைத்தான் சிதம்பர ஆலயம் போதிக்கின்றது.

எல்லாம் கடந்துவிடு, அப்படிக் கடந்துவிட்டால் “தான்” இல்லா நிலை வரும். அந்த நிலைதான் இறைநிலை ஞானநிலை அதுதான் நிஜம். மற்ற எல்லாம் மாயை என போதிப்பதே அந்த ஆலய தத்துவம்.

அந்த ஆலயம் பாரதத் தனிப் பெருமை. பாரதத் தனி ஞான அடையாளம். இந்துக்களின் தனிப்பெரும் சொத்து.  தத்துவக் குவியல்.

பொன் வடிவில் ஆத்மா சுடர்விடும்போது அது சிவநிலை அடைகின்றது என்பதைத்தான் பொன்னம்பலமாகச் சொன்னார்கள்.

அதனாலே அந்த அலயம் பொற்சபை என்றாயிற்று.

இன்றும் வடமொழியில் அதற்கு “ருக்மா தீப்” அதாவது பொன் சபை என்றே பெயர், அனைத்து இந்து மக்களும் தேடிவரும் ஆலயம் அது.

அங்கே நடராஜ கோலத்தில் சிவன் நிற்பதும் இந்த ஆகாய தத்துவமும் இன்றைய விஞ்ஞானத்தையும் போதிக்கின்றன‌.

ஐன்ஸ்டீன் அதைத்தான் போதித்தான். அவன் தன் இயற்பியலில் புதுப் பாதையினை ஆராய்ச்சிக்காகத் திறந்தான்.  இன்றைய உலகம் அந்த வழியில்தான் விஞ்ஞானத்தைத் தேடுகின்றது.

அவன் காலம், வெளி, பொருள் என மூவகையினை அடிப்படையாகக் கொண்ட இயற்பியலை பிரபஞ்ச விதியாகச் சொன்னான்.

காலம், வெளி, பருபொருள் மூன்றுக்குமான தொடர்பை வரையறுத்தான்.  நவீன பவுதியியல் இதனை ஏற்று ஆய்வினைத் தொடர்கின்றது.

இந்த ஆலயமும் அதற்கான தொடர்பைச் சொல்கின்றது.  இன்றைய இயற்பியல் சொல்வதை என்றோ சொன்ன ஆலயம்தான் சிதம்பர ஆலயம்.

அது காலத்தை சிவன், வெளி எனும் ஆகாயத்தை விஷ்ணு, பருபொருளை பிரம்மன் எனப் பிரதிபலித்து நிற்கின்றது.

இங்கே பிரம்மனும் விஷ்ணுவும் வருவார்களா என்றால் வருவார்கள், தொடக்கத்தில் அபப்டித்தான் இருந்திருக்கின்றது.

விஷ்ணுவுக்கு இங்கே சன்னதியெல்லாம் இருந்து பின் அறியாமை குழப்பத்தால் அகற்றப்பட்டு பின் மீண்டும் ஸ்தாபிக்கப் பட்டிருக்கின்றது.

புலிக்கால் முனிவரிடமும் பதஞ்சலியிடமும் சிவனே திருவரங்கம் சென்று உண்மையினை உணருமாறுதான் நவபுலியூர் யாத்திரையினைத் தொடங்கி வைக்கின்றார்.

கடைசியில் பிரம்மனின் ஆலயத்தில்தான் அவர்கள் ஜீவசமாதி அடைகின்றார்கள்.

இந்த ஆலயம் காலம், வெளி, பொருள் எனும் மூன்று தத்துவங்களை நடராஜ கோலத்திலும், ஆகாய சபையிலும் இன்னும் பிரம்மனுக்குரிய தன்மையிலும் போதிக்கும் ஆலயம்.

படைத்தல், காத்தல், அழித்தல் என எல்லாமும் மறுபடி மறுபடி வரும் என்பதை போதிக்கும் ஆலயம்.  பரம்பொருளின் தன்மையினை இயல்பை அழகாய்ச் சொல்லும் ஆலயம்.

அதாவது எல்லாமே மூல சக்தி, ஒரே சக்தி. அது வேறு வேறு வடிவில் இயங்குகின்றதே தவிர மூலம் ஒன்றே எனச் சொல்லும் ஆலயம்.

அந்த மூல சக்தி, காலம் வெளி படைக்கபட்ட பொருள் என மூன்றிலும் இருப்பது போல் மூன்றிலும் ஒரு தொடர்பாய் இருப்பது போல் ஆத்மாவிலும் உண்டு.  இதயம் அருகே இருக்கும் வெளியின் ஒளியில் உண்டு.

அந்த ஒளியினை துலங்கவைத்து அதை உணர்ந்துகொள் என்பதே சிதம்பர ஆலய தத்துவம் அல்லது ரகசியம்.

யோகத்தால் ஆத்மாவினை பொன்போல் சுடர்விடச் செய்தால் அந்நிலையினை யோகத்திலும் தியானத்திலும் எட்டினால் மனதிலே இறைவனைக் காணலாம்.  இறை நிலை அடையலாம் என்பதே பொன் அம்பலம் என்பதன் பொருள்.

இதனாலே பொன்வண்ணக் கயிலாயம் போல இதனை தென்னகக் கயிலாயம் என்றார்கள்.

பொன்னார் மேனியனே என்பது சிவனின் சிவந்த ஜொலிப்பான வடிவினைச் சொல்லும் வரி, அந்த பொன்சுடரை ஆத்ம தரிசனத்தினிலே காணலாம்.  யோக வழிபாட்டில் காணலாம் என்பதை போதிப்பதே அந்த சபை கொண்ட ஆலயம்.

எவ்வளவோ வேதாந்தம், ரகசியம், சூட்சமம் ஏகப்பட்ட விழாக்கள் கொண்டாட்டங்கள் மகா பிரமாண்டமான அதிசயிக்க வைக்கும் வரலாறுகள் என ஏகப்பட்டது அந்த ஆலயத்தில் உண்டு எனினும் அதன் சுருக்கமான தாத்பரியம் இதுதான்.

அங்கு சென்று வணங்கினால் தெளிவுவரும் ஞானம் வரும், முக்தி நிலை வாய்க்கும்.

சூரியனின் தலமான அந்த ஆலயம் ஆத்ம சுடரை துலங்கச் செய்யும். அதனால் நல்ல பலன்கள் உண்டாகும். குருவாக சிவன் நிற்பதால் ஞானம் அருளப்படும்.

வாழ்க்கைக்கும் பூலோக இயக்கத்துக்கும் அடிப்படையானது சக்தி. அதைத் தருவது சூரியன். பூமியில் நேரத்தை காலத்தை வயதை இன்னும் பலவற்றை நிர்ணயம் செய்வதும் சூரியன்.

சூரியன் என்பது சிவனின் அம்சங்களில் ஒன்று, அதன் ஒளி, வெப்பம், காலநேர நிர்ணயமெல்லாம் அதை அழகாகச் சொல்லும்.

அந்த சூரியனின் ஆதிக்கத் தலமே சிதம்பரம். அது பல உண்மைகளை போதிக்கின்றது.  ஜாதக ரீதியாகவும் இந்த ஆலயம் தனி பலன்களை சூரிய அம்சமாகத் தருகின்றது.

ஆன்மீகத்தில் நாட்டமிருந்தால் அது யோக சூத்திரத்தை கற்றுத் தரும். பல ஞானங்களைத் தரும்.  அதனை நன்முறையில் பழக்கினால் அந்த ஆனந்த நடன கோலத்தையும் காட்டும்.

லவுகீக சிக்கலில் இருந்து நீங்கள் அந்த ஆலயம் சென்று வேண்டினால் மனம் தெளியும்; ஆத்மா தெளியும்; எது கர்மாவோ எது அவசியமோ அதை மட்டும் செய்வீர்கள். வீண் கவலையும் குழப்பமும் பயமும் அகலும்.

அதன்பின் நீங்கள் தொட்டதெல்லாம் வாய்க்கும்.

சிதம்பர ஆலயம் என்பதும் பொற்சபை என்பதும் ஆத்ம பயணத்தின் கடைநிலையினைக் குறிக்கும்.

சித்திரமாக உடலில் மண் தத்துவமாக இருக்கும் ஆத்மா, தாமிரமாக வலுப்பெற்று, வெள்ளியாக சுத்தமாகி, ரத்தினம் போல் ஜொலித்து, தங்கம் போல் எப்போதும் ஒளிவீசி முக்தி நிலை எய்தவேண்டும் என்பதுதான் பஞ்ச சபையின் தத்துவம்.

சிவனின் ஐந்தொழிலை சொல்லும் தத்துவம்.

இந்த ஐந்தாம் நிலையினை, மகா உன்னத நிலையினைச் சொல்லி தன்னிடம் வருவோர்க்கெல்லாம் ஞானமும் முக்தியும் அளிக்க சிவன் சிதம்பரத்தில் காத்துக் கொண்டிருக்கின்றார். அதைத் தேடிச் சென்று பெறும் ஆத்மா பாக்கியம் செய்தது.

சிதம்பரத்தை கன்டாலே முக்தி என்பது, இந்த பொற்சபையின் தாத்பரியத்தில் இருந்து வந்தது.

"மோக்ச மூலம் குரு கிருபா" என்பது ஸலோகம்,அதாவது மோட்சபாக்கியம் குருவருளால் மட்டும் கிடைக்கும் என்பது பொருள்

அதைத்தான் இங்கே சிவன் அருள்கின்றார் என்பதை தங்க சபையாக சொல்கின்றது இந்த ஆலய தத்துவம்

"உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.... 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

வடசேரி தழுவிய மகாதேவர் ஆவுடையம்மன் திருக்கோயில் கன்னியாகுமரி...



உமையம்மை 
(பார்வதி தேவி)
எம்பெருமான் ஈசனை தழுவிய தலமான,
நாஞ்சில் நாடான #கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
சிவத் தலங்களில் ஒன்றான 
#நாகர்கோவிலில் உள்ள சுமார் 800 ஆண்டுகள் பழமையான ,
பழையாற்றின் கரையோரம் அமைந்துள்ள 
#வடசேரி 
#தழுவிய_மகாதேவர் (#சுயம்பு_ருத்ராட்ச_திருமேனி)
#ஆவுடையம்மன் 
திருக்கோயில் வரலாறு:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ளது தழுவிய மகாதேவர் ஆலயம்.

மூலவர்: தழுவிய மகாதேவர் (சுயம்பு ருத்ராட்ச திருமேனி)

அம்மன்: ஆவுடையம்மன் 

தல விருட்சம்: வில்வம் 

ஊர்: வடசேரி (நாகர்கோவில்) 

மாவட்டம்: கன்னியாகுமரி 
நாகர்கோவில் நகரின் பிரதான வணிக பகுதியான வடசேரியில் பிரசித்தி பெற்ற கனகமூலம் சந்தை உள்ளது. இந்த சந்தையால் மட்டுமல்ல வடசேரிக்கு பெருமை. இந்த சந்தையில் இருந்து சுமார் அரைமைல் தொலைவில் அமைந்துள்ள தடிமார் கோயில் என்று அழைக்கப்படும் தழுவிய மகாதேவர் கோயிலும் வடசேரிக்கு பெருமை சேர்க்கிறது. தாணுலிங்கம், தழுவியலிங்கம், பூதலிங்கம் இவர்களது ஆலயங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாஞ்சில் நாட்டில் புகழ் பெற்ற சிவஸ்தலங்களாகும்.

 சுமார் 800 ஆண்டுகள் பழமையானது இந்த திருக்கோயில். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கும் முந்தைய காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாக இக்கோயில் திகழ்ந்து வருகின்றது.

நெருக்கடியான சந்தையின் அருகே அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது வடசேரி தழுவிய மகாதேவர் கோயில். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் இரண்டு பிரகாரத்தை உடையது.

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயில், பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோயில், வடசேரி தழுவிய மகாதேவர் கோயில் ஆகிய மூன்று கோயில்களும் பழயாற்றின் கரையோரம் அமைந்ததால் இவர்கள் மூவரும் சகோதரர்கள் போன்று கருதப்பட்டு வந்தனர்.

உட்கோயில் வாசலின் இருபக்க சுவர்களில் விநாயகரும், சுப்பிமணியரும் உள்ளனர். உட்பிரகாரத்தில் கன்னிவிநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், சனீஸ்வரர், சுரதேவர் சன்னதிகள் உள்ளது. வெளிபிரகாரத்தில் சாஸ்தா மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளது. சுரதேவர் சம்ஹார மூர்த்தியின் ஒரு அரிய அம்சமாகும். மிக சில கோயில்களில்தான் இந்த திருஉருவத்தை காணமுடியும். இந்த உருவத்தை சிவபெருமான் எடுத்ததற்கு கூறப்படும் காரணம் சுவையானது. சிவனும், திருமாலும் ஒருமுறை விளையாட்டாக சண்டையிட்டனர். அப்போது திருமால் கொடியசுரத்தை உருவாக்கும் ஒரு அம்பை சிவபெருமான் மீது எய்தார். அதை தாங்கி நிற்க சிவபெருமான் மூன்று தலைகள், ஒன்பது கண்கள், நான்கு கைகள், மூன்று கால்கள் கொண்ட திருஉருவமாக மாறினர்.
இக்கோயிலில் உள்ள சிலையில் மூன்று தலை, ஆறு கண்கள், மூன்று கை, கால்களை தெளிவாக காணமுடியும். வலதுபக்கம் இரண்டு கைகள் மற்றும் கால்கள் தெளிவாகதெரியும். இடதுபக்கம் ஒருகையும், காலும் இருப்பதை காணமுடியும். இடது கையில் ஒரு ஓலைச்சுவடியும், உள்வலது கையில் ஒரு மருந்து தெளிக்கும், வெளி வலது கையில் திரிசூலமும் உள்ளது. உட்பக்கமுள்ள வலது கால் தூக்கிய நிலையில் உள்ளது. சுரதேவ மூர்த்தியை வணங்கினால் எந்த காய்ச்சலும் மாறிவிடும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும். பக்தர்கள் இவரது தலையில் நல்லமிளகு அரைத்து பூசுவர்.இங்கு மூலவர் தழுவியமகாதேவர். பார்வதி தேவியார் ஆவுடையம்மையாக இந்த ஊரிலேயே அவதரித்தார். அவர் தினமும் மகாதேவர் ஆலயத்துக்கு தரிசனத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு வரும்போது ஒரு நாள் மகாதேவர் அவரை அப்படியே தழுவி தன்னுடன் அழைத்துக் கொண்டார். அது முதல் இக்கோயிலின் மூலவர், தழுவிய மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். ஆவுடையம்மையாள் இங்கு தனிசன்னதியில் இருந்து மூலவரின் தேவியாக நின்றருளுகிறார்.

தழுவிய மகாதேவர் திருமேனி ருத்ராட்சம் அம்சம் கொண்டது என்பதால் சித்தர்களால் பூஜிக்கப்பட்ட ஆலயம் எனவும் பெயர் பெற்றது. திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் இந்த ஆலயத்தில் சிறப்பான பூஜைகளும் திருவிழாக்களும் நடத்தப்பட்டன.

இந்த கோயிலின் பின்பக்கம் ஒரு நீராவி போன்ற தெப்பக்குளம் போன்று உள்ளது. இந்த குளத்தில் இருந்து பெண் ஒருவர் தினமும் குவளையில் தண்ணீர் கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யும் முயற்சி செய்யும்போது எல்லாம் அந்த குவளையோ உடைந்து விடுவதாகவும், அதனை தொடர்ந்து அக்குவளை உடைந்து விடுவதால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்ய முடிவெடுத்து அந்த குளத்தில் குதிக்கும் போது, மகாதேவர் அந்தப் பெண்ணை தழுவி அவருக்கு முக்தி கொடுத்தமையால் தழுவிய மகாதேவர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த ஆலயத்தின் மகாதேவருக்கு எதிரே ஒருபுறம் ஆவுடை நாயகி அம்மனும் சுற்றுப்புறங்களில் நோய் தீர்க்கும் ஜீரா தேவர், முருகன், பூதத்தான், சனீஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி போன்ற கடவுள்களும் உள்ளன. மார்கழி மாதம் 10 நாட்கள் விசேஷமும், ஐப்பசி மாதம் பௌர்ணமி விசேஷமும், அன்னாபிஷேகம், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போன்றவை இக்கோயிலின் முக்கிய நாட்களாகும்.

நோய் தீர்க்கும் கோயில் என்பதாக வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

நாட்பட்ட காய்ச்சல்,  மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் இவரிடம் முறையிட்டால் நிவர்த்தியாகும்.  இந்த ஜுரதேவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். நேர்த்திக்கடனாக மிளகினை அரைத்து ஜுரதேவர் தலையில் பூசுவது இங்கு வழக்கமாம். ஜுரம் வந்தவர்களுக்காக அவர்களவது உறவினர்கள் பாலில் மிளகு போட்டு அரைத்து ஜுரதேவரின் நெற்றியில் சந்தனம் போல் அப்பிவிடுவார்களாம் அதை எடுத்து மறுநாள் ஜுரம் வந்தவர்கள் கஷாயமிட்டு சாப்பிட்டால் நோய் ஓடிப்போய்விடும் என்று மக்கள் நம்புகிறார்கள். இவரது சந்நிதியில் மிளகுப் பால் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது ..

ஜுரதேவர் அருகில் குரு தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் பக்தர்கள் இவருக்கு மஞ்சள் ஆடையும் கொண்டைக்கடலை மாலையும் அணிவித்து வழிபாடு செய்கினறனர். இங்கிருக்கும் சனிபகவான் வித்தியாசமான அமைப்புடன் பாலசனியாக, சாந்தமாகக் காக்கை வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். காகத்தை கையிலும் ஏந்தியிருக்கிறார். இவரை வணங்கினால் பாலாரிஷ்டம், குழந்தைகளுக்கு வரும் தீராத நோய்கள் போன்றவை குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இத்திருத்தலத்தில் உள்ள  மூலவர் தழுவிய மகாதேவர் சுயம்பு லிங்கமாகும். அருகில் இருக்கும் அம்பாள் அழகோ அழகு, ஆவுடையம்மையாள் இங்கு தனிசன்னதியில் இருந்து மூலவரின் தேவியாக நின்ற கோலத்தில் பக்தருக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த மூலவருக்கு தழுவிய மகாதேவர் என்ற  பெயர்வர காரணம் மிகவும் சுவாரஸ்யமானது. பார்வதி தேவியார் ஆவுடையம்மையாக இந்த ஊரிலேயே அவதரித்தார் என்றும், அவர் தினமும் மகாதேவர் ஆலயத்துக்கு தரிசனத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். கன்னிப்பெண் ஆவுடையம்மாள் தவறாமல் இந்தச் சிவனைக் காண வருவாள். ஈசன்மேல் அளவில்லாத காதல் அவளுக்கு. ஆண்டாள் அந்த ஸ்ரீரங்கநாதனிடம் எத்தனை அன்பு வைத்திருந்தாளோ அதுப்போல் இவளும் ஆடலரசனின் மேல் அளவில்லாத காதல் கொண்டு தினமும் காலையும் மாலையும் பூஜை செய்து இறைவனை கண்ணார கண்டு பிறகு வீடுபோவது இவளது தினசரி வழக்கமாக இருந்ததாம்.  

பூஜையுடன் . மணிக்கணக்காய் பாடல்களும் பாட, அவளது பக்தி அங்கு பிரதிபலிக்குமாம். ஒருநாள் ஈசன்மேல் நெஞ்சுருகிப் பாடிக்கொண்டிருக்கும்போது அந்த பரம்பொருளான ஆதிசிவன் ஆவுடையம்மனின் அன்பில் தன்னை மறந்து அவள் முன்தோன்றி, அப்படியே அவளை அணைத்தபடி மறைந்தார். இதனால், அன்றைய தினத்திலிருந்து இந்த தலத்து மூலவரை  ‘தழுவிய மகாதேவர்’  என மக்கள் அழைக்கின்றனர். இங்கு ஈசன் ஆவுடையம்மாளை அன்புடன் தழுவியபடிக் காட்சி அளிப்பதால் இந்த மகாதேவரைத் தொழுதால் இல்லறம் சுகம் பெறும். இனிமை கூடும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் தழுவியமகாதேவர், ஆவுடையம்பாள் சன்னதிகளும், ஜீரதேவர், தட்ஷிணாமூர்த்தி, முருகர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீசாஸ்தா, பிள்ளையார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் சிவாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் மார்கழி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் திருவிழாவாக நடைபெறுகிறது.

இக்கோயிலின் தல விருட்சம் வில்வ மரம். அதுவும் மிக அபூர்வமாக, இந்த வில்வ மரத்தின் இலை இருபத்தொரு தளங்கள்(இலைகள்) கொண்டதாக இருக்கிறது. வெளிபிரகாரத்தில் சாஸ்தா மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்கத்தில் காந்தி பார்க் என்னும் பூங்கா உள்ளது முன்பு எல்லாம் இது திறந்துதான் இருக்குமாம். ஸ்கூல்க்கு கட்டடித்து வரும் பசங்க இங்கதான் பொழுது போக்குவார்கள் என்பதால் இப்பொழுது பூட்டுப்போட்டு குறிப்பிட்ட சிலசமயங்களில் மட்டுமே பொதுமக்களுக்கு திறந்துவிடுகிறார்களாம். பக்கத்தில் உள்ள மலையாள ஸ்கூல் மற்றும் எஸ் எம் ஆர் வி பள்ளிக்கூடங்களில் உள்ள பிள்ளைகள் எல்லாம் மதியம் சாப்பாட்டுநேரம் இங்கே வந்து சாப்பிட்டு செல்வார்களாம்.

அந்த பார்க்கினை  தாண்டி வடக்குப்பக்கமாக ஒரு நீண்ட பாதை செல்கிறது .அந்த பாதை வழியே சென்றால் ’தந்தநதி’ ஓடுகிறது. தேவேந்திரனுடைய யானை தனது தந்தத்தால் தண்ணீருக்காகப் பூமியைக் கீறியதில் உண்டான நதி என்பதால் இந்தப் பெயராம். சிலர் இதை கோட்டாறு என்றும் சொல்வார்கள், அதாவது கோடு என்றால் யானை, தேவேந்திரனுடைய யானை தேவேந்திரன் பூஜை செய்ய நீர்கொண்டுவர தன் தந்தத்தை கொண்டு கோடு கிழித்து ஒரு நதியை உருவாக்கியது என்றும், கோடு-கீறிய நதி ஆதலால் கோட்டாறு என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. அதேசமயம் கோட்டாறு என்ற இடம்தான் முன்பு நாகர்கோயிலில் பெரிய வாணிகத்தலமாக இருந்திருக்கிறது. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Friday, June 28, 2024

அஷ்ட (எட்டு )பைரவர் மந்திரங்கள்

அஷ்ட பைரவர் காயத்ரீ மந்திரங்கள்


           1 .ஶ்ரீ அஸிதாங்க பைரவர் காயத்ரீ
             (கல்வியில் மேன்மை பெற)
ஓம் ஞானதேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ அஸிதாங்க பைரவ ப்ரசோதயாத்
       2. ஶ்ரீ ஶ்ரீ குரு பைரவர் காயத்ரீ
            (கடன் சுமை குறைய)
ஒம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ குரு பைரவ  ப்ரசோதயாத்

        3. ஶ்ரீ சண்ட பைரவர் காயத்ரீ
             (  சத்ரு தொல்லை நீங்க)
ஓம் சர்வசத்ரு நாஸாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்
         4.ஶ்ரீ குரோதன பைரவர் காயத்ரீ
             (அகங்காரம் அகல,சனி பாதிப்பு         குறைய)
ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்

          5.ஶ்ரீ உன்மத்த பைரவர் காயத்ரீ
              (தீய குணங்கள் விலக)
ஓம் மஹாமந்த்ராய வித்மஹே
வாராஹி மனோகராய தீமஹி
தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்
           6.ஶ்ரீ ஸம்ஹார பைரவர் காயத்ரீ
               (துஷ்டர்களை அழிக்க)
ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்

           7.ஶ்ரீ பீஷண பைரவர் காயத்ரீ
                   (பயம் நீங்க)
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ரஹாய தீமஹி
தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்

             8.ஶ்ரீ கபால பைரவர் காயத்ரீ
                   (அறியமை நீங்க)
ஓம்  காலதண்டாய வித்மஹே
வஜ்ரவீராய தீமஹி
தந்நோ கபாலபைரவ ப்ரசோதயாத்

             9.ஶ்ரீ யோக பைரவர் தியானம்
உஷ்ணீம் நீலோத்பல பத்ரபுஷ்பாம் த்வய 
                                        தம்ஸ்ட்ரவக்ராம்
அசனீம்சஹீம் யோகானஸ்த்தாம்
கர்ணேன தாடங்க கரண்டமகுடாம் கரத்வயாம்
ஶ்ரீ வல்மீக பைரவம் வந்தே நமாமி 

நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.

ஸ்லோகம் :

ஓம் கால காலாய வித்மஹே! 
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்

சனிக்கிழமை விரதம் சகல செல்வங்களும் கிடைக்கும்...

 சகல செல்வங்களும் கிடைக்கச் செய்யும் சனிக்கிழமை விரத வழிபாடு பற்றிய பதிவுகள் :*
நாம் கடவுளுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான். 

செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது. 

இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும்.
மற்ற விரதங்களை காட்டிலும் சனிக்கிழமை விரதத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு. ஒரு மாதத்தின் வளர்பிறையில் வரும் முதல் சனிக்கிழமை அன்று விரதத்தை தொடங்கலாம்.

இவ்வாறு தொடங்கும் சனிக்கிழமை விரதத்தினை 11 வாரங்கள் முதல் 51 வாரங்கள் வரை தொடர்ந்து கடைபிடித்தால், உங்களின் பாவ பலன்கள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

நவகிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும்.

"சனீஸ்வரனைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை" என்பது ஜோதிடப் பழமொழி.

அதனால் மக்களுக்கு சனிபகவானிடம் சற்று பயம் உண்டு. அவரவர் ராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் அந்த ராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

சனி தோஷம் உள்ளவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால், சனீஸ்வரன் மகிழ்வுற்று தாக்கங்களை குறைத்து பல நன்மைகளைத் தருவார். இவற்றுள் ஏழரைச் சனி காலம் மிகவும் கஷ்டமான காலமாகும்.

*சனிபகவான் விரத வழிபாடு :*

சனிக்கிழமையன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டில் பூஜை செய்து, காலை மற்றும் மதிய வேளைகளில் எந்த உணவு வகைகளும் உண்ணாமல் பால், பழம், தண்ணீர் மட்டும் குடித்து விரதம் மேற்கொள்ள வேண்டும்.

மாலையில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு இரவு வேளை மட்டும் ஏதேனும் ஒரு எளிமையான உணவை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று, சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி, கருப்பு எள் மற்றும் வேகவைத்த சாதம் இவற்றை படைத்து, தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கலாம். சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தில் கடைபிடிக்க வேண்டும்.

*சனிக்கிழமை விரதத்தின் பலன்கள் :*

✓சகல செல்வமும் கிடைக்கும். 

✓சனி தோஷத்தால் ஏற்படும் துன்பத்தின் தாக்கம் குறையும். 

✓திருமண தடை நீங்கும். 

✓பாவங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

அஷ்ட காளி கோயில்களில் தில்லை காளி கோயிலும் ஒன்றாகும்.

தில்லை காளியின் வரலாற்றை தெரிஞ்சிக்கலாம் வாங்க
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தை குறிக்கும்  தில்லை நடராஜர் கோயிலில் சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியதை அனைவரும் அறிவோம்.  சிதம்பர நடராஜர் கோயிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள  தில்லை காளி கோயில் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனால் 1229 - 1278ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் இருக்கும் அஷ்ட காளி கோயில்களில் தில்லை காளி கோயிலும் ஒன்றாகும். சிதம்பரத்தின் காவல் தெய்வமாக தில்லை காளியம்மனே திகழ்கிறார். சிவனை விட்டு தில்லை காளி ஏன் ஊரின் எல்லைக்கு சென்றாள் என்னும் வரலாற்றை இந்தப் பதிவில் காணலாம்.


ஒரு சமயம் தேவர்களையும், முனிவர்களையும் அசுரர்கள் துன்புறுத்தி வந்தனர். அப்போது அவர்கள் மகாவிஷ்ணுவிடமும், பிரம்மாவிடமும் சென்று முறையிட்டனர். அவர்களின் அறிவுரையின் பேரில் பிறகு சிவனிடம் வந்து முறையிட்டனர். பார்வதி தேவியால் மட்டுமே அந்த அசுரர்களை அழிக்க முடியும். ஆனால், அதற்கு பார்வதி தேவி சிவபெருமானை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டும். பார்வதி தேவி சிவபெருமானை பிரிந்து செல்லாவிட்டால், உக்கிர காளி அவதாரத்தை எடுக்க முடியாது. மேலும், பார்வதி தேவி முன்னர் பெற்ற சாபத்தின் காரணமாக சிவபெருமானை பிரிந்து சில காலம் வாழ வேண்டும். இதனால் சிவபெருமான் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

ஒரு சமயம் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் வந்தது. அப்போது பார்வதி தேவி, ‘சக்தியில்லையேல் சிவனில்லை’ என வாதாட, கோபமுற்ற சிவபெருமான் உக்கிர காளியாக உருமாறும்படி அவரை சபித்து விட்டார். இதனால் சாப விமோசனம் கேட்ட பார்வதி தேவியிடம், ‘அசுரர்களை அழிக்கவே உன்னை உக்கிரகாளியாக மாற்றினேன். காளி உருவில் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். உன் கடமைகள் முடிந்த பிறகு  தில்லை மரங்கள் சூழ்ந்த இடத்திலிருந்து என்னை நோக்கித் தவம் புரிவாயாக. தக்க தருணம் வரும்போது மீண்டும் என்னுடன் வந்து இணைவாய்’ என்று உரைத்தார்.


காலங்கள் ஓடின. காளி தேவி அரக்கர்களை போரில் அழித்து வெற்றி பெற்றார். சிவபெருமானை அடையும் பொருட்டு கடுமையாக தவம் புரிந்தார். அதே நேரத்தில்  சிதம்பரத்தில் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு சிவபெருமான் ஆனந்தத் தாண்டவத்தை காட்டிக்கொண்டிருந்தார். இதனால் கோபம் கொண்ட காளி, ‘இத்தனை காலமாக நான் தவம் புரிகிறேன். எனக்கு முதலில் காட்சி தராமல் உங்கள் பக்தர்களுக்குக் காட்சி தருவது என்ன நியாயம்? நானும் உங்களுடன் சேர்ந்து ஆடுகிறேன். யார் முதலில் ஆட்டத்தை நிறுத்துகிறார்களோ அவர்கள் தோல்வியுற்றவர்கள். அவர்கள் ஊர் எல்லையில் போய் அமர வேண்டும் என்று கூறி ஆடத் தொடங்கினர். தாண்டவத்தின்போது சிவபெருமானின் குண்டலம் கீழே விழ, அதை அவர் தனது கால்களில் எடுத்து தனது காதுகளில் மாட்டி ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார்.

பெண் என்பதால் சக்தியால் இந்த நடனத்தை ஆட முடியவில்லை. அதனால் தோல்வியுற்று உக்கிரமாக ஊர் எல்லையில் போய் அமர்ந்தார். அப்போது அனைத்து தேவர்களும் திருமாலும், பிரம்மாவும் அவரை சாந்தம் அடையும்படி கேட்டுக்கொண்டனர். பிரம்மா அவரை நான்கு  வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு முகத்துடன் உருமாறிக்கொள்ள வேண்டினார். அதைப்போலவே காளி பிரம்மசாமுண்டேஸ்வரியாக பிரம்மனை போலவே நான்கு முகங்களுடன் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் ஒரு சன்னிதியில் உக்கிரமாக எட்டு கைகளோடு காட்சியளிக்கிறார். இன்னொரு சன்னிதியில் சாந்தமாக பிரம்ம சாமுண்டீஸ்வரியாகவும் காட்சியளிக்கிறார்

மன்னன் கோப்பெருஞ்சோழன் தனது ஆட்சியில் வரும் இன்னல்களை சரிசெய்து வெற்றி அடைய வேண்டும் என்று காளி தேவியை வேண்டினான். அதை இந்தத்  தில்லை காளி நிறைவேற்றியதால், இங்கே ஆலயத்தை கட்டினான். பின்னர் சுந்தரபாண்டிய மன்னரால் திருப்பணி செய்யப்பட்டது என்று ஆலயக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. 

இந்தக் காளிக்கு பத்து நாட்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறும். ஆடி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெறுகிறது.  தில்லை காளியம்மனுக்கு வெள்ளை புடைவை மட்டுமே அணிவிக்கப்படுகிறது. நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டு, குங்கும வழிபாடும் செய்யப்படுகிறது. இந்த அம்மனை வழிபட்டால், நோய் நொடி தீரும், பிள்ளை வரம் கிட்டும், திருமணத்தடை விலகும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

63 நாயன்மார்களில் ஒருவரான,சுந்தரமூர்த்தி நாயனாரை

63 நாயன்மார்களில் ஒருவரான,
சுந்தரமூர்த்தி நாயனாரை பகைத்துப்பின், 
ஈசன் திருவிளையாடல் புரிந்து 
சூலை நோயால் ஆட்க்கொள்ளப்பட்டு பின் நட்பாகி பல சிவத்தொண்டுகள் புரிந்த நாயன்மாரான 
#ஏயர்கோன்_கலிக்காம_நாயனார் 
#குருபூஜை (#முக்தி_நாள்)
நாளை: (#ஆனி_ரேவதி)
ஏயர்கோன் கலிக்காம நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெரிதும் மதிக்கப்படும் ஒருவர் ஆவார். இவர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தவர். ஏயர்கோன் கலிக்காம நாயனார் இளம் வயதிலேயே சிவ பக்தியில் சிறந்து விளங்கினார். சிவனடியார்களின் திருவடிகளை வணங்கி, அன்போடு அவர்களுக்கு பலவிதங்களில் தொண்டு செய்து மகிழ்ச்சி அடைவார். இவர் திருப்புன்கூர் சிவபெருமானிற்கு திருத்தொண்டு செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.
ஏயர்கோன் கலிக்காம நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்ட தொகையில்...
“ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றுகிறார்..

ஏயர்கோன் கலிக்காம நாயனார், இறைவனை தன்னுடைய காதலுக்காக தூது அனுப்பிய சுந்தரரை பகைத்து, பின் சூலைநோயால் ஆட்கொள்ளப்பட்டு சுந்தரருடன் நட்பான வேளாளர்.

வளம் பொருந்திய சோழநாட்டில் உள்ள பெருமங்கலம் என்னும் ஊரில் சிவவழிபாட்டைப் பின்பற்றும் ஏயர்கோன் என்னும் வேளாள மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சோழ மன்னர்களிடம் வழிவழியாக சேனாதிபதியாக இருந்து வந்தனர்.

அம்மக்களில் ஒருவராக கலிக்காமன் நாயனார் வாழ்ந்து வந்தார். அவர் தம் வழிதோன்றல்களின் மரபுப்படி சிவவழிபாட்டையும் சிவனடியார் வழிபாட்டினையும் முறையாகச் செய்து வந்தார்.

இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படும் மானக்கஞ்சாற நாயனாரின் மகளைத் திருமணம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தார்.

சிவனடியார்களின் வியக்கத்தக்க செயல்களையும் அவர்களது பக்திப் பெருக்கின் தன்மையையும் கேள்வியுற்று களிப்பெய்தி வந்தார்.

அப்போதுதான் சுந்தரமூர்த்தி நாயனார் தம்முடைய காதலுக்கு தூதுவராக இறைவனாரை பரவை நாச்சியாரிடம் அனுப்பினார்.

அதனைக் கேள்வியுற்ற ஏயர்கோன் கலிக்காம நாயனார் பெரும் அதிர்ச்சியும் கோபமும் கொண்டார்.

பெண்ணின் மேல் கொண்ட பேரராசையினால், உலகாளும் நாயகனை, திருமாலும் பிரம்மனும் அறியாத திருவடியை, திருவாரூரின் தேரோடும் வீதியில் அலைய விடுவதா?

இறைவனாரே தூது செல்ல இசைந்தாலும், தொண்டன் எனக் கூறிக் கொள்ளும் சுந்தரன் அவரைத் தூது அனுப்புதல் முறையாகுமோ?’ என்றெல்லாம் எண்ணி மனதில் சுந்தரரின் மீது பெருத்த கோபத்தைக் கொண்டிருந்தார் கலிக்காமர்.

‘இறைவனாரை தூது அனுப்பியவன் நெஞ்சம் எவ்வளவு கடினமாக இருக்க வேண்டும்? அவனை நான் காண்பேன் ஆகில் என்னாகுமோ?’ என்று எல்லோரிடத்திலும் பொருமினார்.

இறைவனாரை தூது அனுப்பியதால் கலிக்காமர் தன் மீது கோபத்தில் இருக்கும் செய்தி சுந்தரர் காதுக்கு எட்டியது.

‘தம்மால் ஒரு அடியவருக்கு ஏற்பட்ட வருத்தத்தை எவ்வாறு போக்குவது?’ என எண்ணினார். தம்முடைய பிழையைப் பொறுத்தருள வேண்டுமாறு இறைவனிடம் வேண்டினார் சுந்தரர்.

சிவனார் சுந்தரரையும் கலிக்காம நாயனாரையும் நண்பராக்க திருவுள்ளம் கொண்டார். ஆதலால் கலிக்காமருக்கு தீரா வயிற்றுச்சூலை நோயை உண்டாக்கினார்.

கலிக்காமர் சூலைநோயால் துடித்துக் கொண்டிருந்தார்.

கலிக்காமரின் கனவில் தோன்றிய இறைவனார் “உனக்கு ஏற்பட்ட சூலை நோயினை தீர்ப்பவன் சுந்தரன் ஒருவனே” என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.

கனவில் இருந்த எழுந்த கலிக்காமர் இறைவனார் உரைத்ததைக் கேட்டு அதிர்ந்தார்.

அதேசமயம் சுந்தரரிடம் ‘நீ போய் கலிக்காமனுக்கு ஏற்பட்டுள்ள சூலை நோயை போக்கு’ என்று ஆணையிட்டார் இறைவனார்.

இறையாணைக் கேட்டதும் சுந்தரர் கலிக்காமரின் சூலையை நோயைப் போக்கி அவருடன் நட்பு கிடைக்க இதுவே சரியான வழி என்று மகிழ்ந்திருந்தார்.

சுந்தரர் இறையாணையின்படி கலிக்காமரின் சூலை நோயை தீர்க்க வருவதாக ஆட்கள் மூலம் கலிக்காமருக்கு சொல்லி அனுப்பினார்.

ஏவலாள் மூலம் சுந்தரர் சூலை நோயை தீர்க்க வருவதை அறிந்த கலிக்காமர் ‘இந்த சூலைநோயால் உண்டாகும் துன்பத்தை ஏற்பேன் அன்றி, பெரிய பிழையைச் செய்த வன்தொண்டனால் உண்டாகும் பரிகாரத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.’ என்று எண்ணினார்.

“வன்தொண்டன் இங்கு வந்து சூலையை நோயை தீர்ப்பதற்கு முன்பு, இச்சூலையையும் அதுபற்றி இருக்கும் வயிற்றையும் கிழிப்பேன்” என்று கூறி உடைவாளால் தன்னுடைய வயிற்றினைக் கிழித்து மாண்டார்.

இதனைக் கண்ட அவருடைய மனைவியார் தம்முடைய கணவர் சென்ற இடத்திற்குச் செல்ல ஆவண செய்யலானார். அப்போது வன்தொண்டர் அருகில் வந்து விட்டார் என்ற செய்தியை ஏவலாள் அவ்வம்மையாரிடம் தெரிவித்தார்.

உடனே அப்பெண்மணி “வருபவர் சிவனடியார். ஆதலால் அவருக்கு உரிய மரியாதையை நாம் தரவேண்டும். இங்கு நடந்தது பற்றி யாரும் அவரிடம் தெரிவிக்கக்கூடாது.” என்று ஆணை பிறப்பித்தார்.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் உடலை மற்றொரு அறையில் வைத்துவிட்டு வரவிருக்கும் சிவனடியாரை வரவேற்க எல்லோரும் தயார் ஆனார்கள்.

சுந்தரர் குறித்த நேரத்தில் கலிக்காமரின் இல்லத்தில் எழுந்தருளினார். குலிக்காமரின் மனைவியார் அவரை முறைப்படி வரவேற்று ஆசனத்தில் அமர்த்தி கால்களை நீராட்டினார்.

அதன் பின்னர் சுந்தரர் அப்பெண்ணிடம் “அம்மையே, ஏயர்கோனுக்கு ஏற்பட்டிருக்கும் சூலையைப் போக்கி அவருடன் சிலநாட்கள் இங்கிருக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன். அவரைக் காண வேண்டும்.” என்று கூறினார் சுந்தரர்.

அதற்கு அங்கிருந்தோர்
“அவருக்கு ஒரு துன்பமும் இல்லை. அவர் உள்ளே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.” என்றனர்.

“அவருக்கு ஒருதீங்கு இல்லை என்றாலும் என்னுடைய மனம் தெளிவு பெறவில்லை. ஆதலால் நான் அவரைக் காண வேண்டும்” என்று கூறினார் சுந்தரர்.

சுந்தரரின் வற்புறுத்தலால் அங்கிருந்தோர் அவரை அழைத்துச் சென்று கலிக்காமரின் உடலைக் காட்டினார்கள். அங்கே அவர் வயிறு கிழிந்து குடல் வெளியேறி இரத்த வெள்ளத்தில் மாண்டு கிடந்தார்.

அதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற சுந்தரர் “ஐயோ, இப்படி ஆகிவிட்டதே. நானும் இவர் வழியிலேயே செல்வேன்.” என்றபடி கையில் உடைவாளைப் பற்றினார்.

அப்போது கலிக்காமர் இறையருளால் உயிர்பெற்று எழுந்து “நான் நண்பராகி விட்டேன்” என்றபடி சுந்தரரின் கையில் இருந்த வாளைப் பற்றினார்.

அதனைக் கண்டதும் சுந்தரர் வீழ்ந்து பணிந்தார். உடனே ஏயர்கோன் கலிக்காம நாயனார் சுந்தரரை பணிந்து வீழ்ந்து வணங்கினார்.

அதுமுதல் இருவரும் நண்பர்களாகினர். அந்நண்பர்களைக் கண்டு கலிக்காமரின் மனைவியாரும் மகிழ்ந்தார்.

சுந்தரர் கலிக்காமரின் மனஉறுதியைப் பாராட்டினார். மானக்கஞ்ச மாற நாயனாரின் மகள் அல்லவா என்று அவர் மனைவியை வியந்து போற்றினார்.

சிலநாட்கள் அங்கு தங்கிவிட்டு பின்னர் திருப்புன்கூர் திருத்தலத்திற்கு நண்பர்கள் இருவரும் சென்று இறைவனாரை வழிபட்டனர். அப்போது சுந்தரர் ‘அந்தனாளன்’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.

பின்னர் அங்கிருந்து திருவாரூர் சென்று புற்றிடங்கொண்ட பெருமானாரை வணங்கினர். ஏயர்கோன் கலிக்காம நாயனார் திருவாரூரில் சுந்தரருடன் பரவை நாச்சியார் இல்லத்தில் சிலநாட்கள் தங்கியிருந்து வீதிவிடங்கரை வணங்கிவிட்டு திருபெருமங்கலம் திரும்பினார்.

சிவவழிபாட்டினையும் சிவனடியார் வழிபாட்டினையும் முறையாக மேற்கொண்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார் இறுதியில் பேரின்ப வீடாகிய இறைபதம் பெற்றார்.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை ஆனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுந்தரரைப் பகைத்து பின் நண்பரான ஏயர்கோன் கலிக்காம நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘ஏயர்கோன் கலிகாமன் அடியார்க்கும் அடியேன்‘ என்று போற்றுகிறார்.

#திருப்பெருமங்கலத்தில் அவதரித்த கலிக்காம நாயனார்:

சோழ நாட்டில் திருப்பெருமங்கலம் என்னும் தலத்தில் கலிக்காம நாயனார், வேளாளர் குலத்தில் அவதாரம் செய்தார். இவர் குடும்பம் பரம்பரை பரம்பரையாக சோழ மன்னர்களிடம் சேனாதிபதியாக இருந்து வந்துள்ளனர்.

“ஏயர்கோன்” என்பது சிறந்த சேனைத் தலைவனுக்கு, மன்னன் வழங்கும் பட்டமாகும். இவர் சிவபக்தியிலும் சிவனடியார் பக்தியிலும் சிறந்து விளங்கினார். இவர் மானக்கஞ்சாற நாயனாருடைய மகளைத் திருமணம் செய்து நல்வழியில் இல்லறத்தை இனிது நடத்தி வந்தார் .

#ஏயர்கோன் கலிக்காம நாயனார் கோபம்:

ஏயர்கோன் கலிக்காம நாயனார் சிவத்தொண்டில் மகிழ்ந்து இன்புற்று வாழ்ந்து வரும் நாளில், ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை பரவைநாச்சியாரிடம் (சுந்தரரின் மனைவி) தூது செல்லுமாறு வேண்ட, சிவபெருமானும் அவ்வாறே சென்றார். இது குறித்துக் கேள்விப்பட்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார், சிவபெருமானே இதற்கு இசைந்திருந்தாலும், தன்னை அடியார் என்று கூறிக்கொள்ளும் சுந்தரர் எவ்வளவு பெரிய பாவத்தை செய்திருக்கிறார். இந்தச் செய்தியை கேட்ட பின்னும் என்னுயிர் போகவில்லையே என்று வருந்தி சுந்தரமூர்த்தி நாயனார் மீது சொல்லொணா துயரமும், கடும் கோபமும் கொண்டார்.

#சிவபெருமான் திருவிளையாடல்:

ஏயர்கோன் கலிக்காம நாயனாரின் கடும் கோபத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிகவும் மனம் வாடினார். அவரது சினத்தை தணித்தருளும்படி சிவபெருமானிடம் சுந்தரர் வேண்டினார். இதற்காகவே காத்திருந்த சிவபெருமான் திருவிளையாடலை தொடங்கினார்.

சிவபெருமான் அவ்விருவரையும் நண்பர்களாக்கத் திருவுளம் கொண்டு, ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு சூலை நோயை உண்டாக்கி ஆறாத வலியைக் கொடுத்தார். என்ன செய்தும் வலி குறையவில்லையே என்று வருந்தி கலிக்காம நாயனார் சிவனை வேண்டினார். அப்பொழுது இறைவன் உன்னைத் துன்புறுத்துகின்ற சூலை நோயைத் தீர்க்க வல்லவன் சுந்தரனே ஆவான் என்று அசரீரியாக சொல்லி மறைந்தார் .
“உம்மால் முடியும் என்றாலும் உங்களை அடியேனாக நடத்திய சுந்தரரால்தான் என் நோய் தீர்க்கமுடியும் எனில் என் நோய் தீராமல் அப்படியே இருக்கட்டும்” என்றார்.

சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரின் முன் தோன்றி, “கலிக்காம நாயனாரின் சூலை நோய் நீர் போய் தீரும்” என்று கூறி மறைந்தார்.
சுந்தரமூர்த்தி நாயனாரும் உடனே, தாம் சூலை நோய் தீர்க்க வரும் செய்தியை ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்குச் சொல்லியனுப்பினார். ஆனால் சுந்தரமூர்த்தி நாயனார் வருகையை விரும்பாத கலிக்காம நாயனார் “இச்சூலையையும் அதுபற்றி இருக்கும் வயிற்றையும் கிழிப்பேன்” என்று கூறி உடைவாளால் தன்னுடைய வயிற்றினைக் கிழித்து மாண்டார்.

இந்நிலைக் கண்ட கலிக்காம நாயனாரின் மனைவி நானும் தங்களோடு வந்துவிடுகிறேன் என்று மாய்த்துகொள்ள முயன்ற போது சுந்தர நாயனார் வந்துவிட்ட தகவல் எட்டியது. வேறு வழியின்றி வெளியே சென்று அவரை வரவேற்றார்.

சுந்தரர் தான் வந்த காரியத்தைக் கூற, கலிக்காமர் அவ்வாறு நோயால் வருந்தவில்லை என்று தன் கணவரின் இறப்பை மறைக்க முயன்றார். சுந்தரர் விடாது வற்புறுத்தவே வேறு வழியின்றி தன் கணவரின் அறைக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு கலிக்காமர் வயிறு கிழிந்து, குடல் வெளிப்பட்டு, இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைச் சுந்தரர் கண்டார்.

நடந்த எல்லாவற்றுக்கும் நானே காரணம் என்று வருந்திய சுந்தரமூர்த்தி நாயனார் தம்மிடம் இருந்த வாளால் மாய்த்துக்கொள்ளும் போது சிவபெருமான் அருளால் கலிக்காமர் உயிர்த் தெழுந்தார்.

#சுந்தரமூர்த்த நாயனார் நண்பர் ஆனார்:

உயிர்த் தெழுந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரை அன்பினால் தழுவிப் பிரியாத நண்பரானார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் சில நாட்கள் ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் தங்கி திருப்புன்கூர் திருத்தலத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டனர். பின்னர் சுந்தரமூர்த்தி நாயனாரின் விருப்பத்துகிணங்க அவருடன் திருவாரூர் சென்று சில நாட்கள் தங்கியிருந்து தியாகராஜரை வணங்கி மகிழ்ந்தார். பிறகு சுந்தரரின் சம்மதத்தோடு தம்முடைய ஊரான திருப்பெருமங்கலம் திரும்பி வந்து சிவத்தொண்டு பல புரிந்து இறுதியில் பேரின்ப வீடாகிய இறைபதம் பெற்றார்.

#குருபூஜை நாள்:

ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை ஆனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் திருப்பெருமங்கலம் வன்தொண்டரீசர் திருத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. (நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மேற்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது) இக்கோயிலில் ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு தனி சந்நிதி உள்ளது.
 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

சோழவரம் வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளூர்.....

வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள்
சோழவரம் வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் குறித்து இங்கே காணலாம்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர்.. 

விஜயநகர பேரரசு காலத்தில் 108 சிவாலயங்களில் நிறுவிய மன்னன் இங்குள்ள வர வரமூர்த்தீஸ்வரர் கோயிலை ஈசான மூலையில் கட்டி உள்ளார். திருக்கோயிலில் நான்கு நிலை கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. மூலவராகவும் உற்சவராகவும் வரமூர்த்தீஸ்வரர் காட்சி தருகிறார்.

அம்பாளாகக் காமாட்சி அம்மன் அருள்புரிகிறார். சுவாமியும், அம்பாளும் கிழக்கு நோக்கி இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். இக்கோயிலின் தலமரமாக வில்வமரம் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள சுற்றுப்பிரகார தூண்களில் பல்வேறு சிற்பங்கள் கலை நயத்துடன் தத்ரூபமாகக் காட்சி அளிக்கின்றது.
கோயிலில் விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா, பைரவர், மற்றும் சண்டிகேசுவரர், நந்தி சன்னிதிகள் உள்ளன. இக்கோயிலில் நவகிரகம் இல்லாததால் சுவாமியே பிரதான மூர்த்தியாகக் காட்சி தருகிறார். அதனால் இத்தலம் அனைத்து தோஷங்களுக்கும் பரிகார தலமாக அமைந்துள்ளது.

திருமணத் தடை, அனைத்து நோய்களும் நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இக்கோயிலில் சிவராத்திரி மார்கழி ஆருத்ரா, மாதம் தோறும் பிரதோஷ வழிபாடு, ஐப்பசி அன்னாபிஷேகம், கால பைரவருக்கு அஷ்டமி பூஜை, ஆகியவை விசேஷ தினங்கள் ஆகும்.

செல்லும் வழி

சென்னை கோயம்பேட்டிலிருந்து சோழவரம் வழியாக எருமை வெட்டி பாளையம் சென்றடைந்தால் வர மூர்த்தீஸ்வரரை வழிபடலாம் மேலும் இக்கோயில் அருகே அபூர்வமாக மலைக் குன்றின் மேல் கோதண்ட ராமர் ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓம்நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 



Thursday, June 27, 2024

திருச்செந்தூர் முருகன் கோவில் சித்தர் ஜீவசமாதிகள்...

திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள் பற்றிய பதிவுகள் :*
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறையில் திருப்பணி செய்த சித்தர்களை நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர். 

உலகில் தீயவர்களை அழித்து நல்லவர்களை காத்திட முருகப்பெருமான் அவதரித்த தலமாக திருச்சீரலைவாய்  எனும் திருச்செந்தூர் முருகன் கோயில் புராண காலத்திலிருந்தே போற்றப்படுகிறது. 

இக்கோயிலில் இன்றளவும் பேசப்படும் ஐந்து சித்தர்களின் ஜீவ சமாதியை பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர். அவர்கள் இறைவனின் கட்டளைக்கு இணங்கவே கோயில் திருப்பணி முடித்து ஜீவசமாதியாகி தங்கள் பிறவியின் பயனை அடைந்ததாக கூறப்படுகிறது.
கடற்கரை மட்டமும்  இக்கோயில் மூலவர் வீற்றிருக்கும் கருவறை மட்டமும் ஒரே அளவாக இருந்தாலும், கடல் நீர் இக்கோயிலின் உள்ளே புகாதவாறு ஞான நுட்பத்துடன் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. 

இந்தக் கோயில் திருப்பணியை செய்தவர்களில் மவுனசுவாமி, காசி சுவாமி, தேசிக மூர்த்தி சுவாமி, ஆறுமுகசாமி, வள்ளிநாயகம் சாமி ஆகிய ஐந்து சித்தர்களின் பக்தி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 

இதில் மவுனசுவாமி, காசி சுவாமி, தேசிக மூர்த்தி சுவாமி ஆகிய மூன்று சுவாமிகளும் திருக்கோயிலின் உள் பிராகாரத்தில் குரு பகவான் சன்னிதிக்கு எதிரே மூன்று தூண்களில் நின்ற கோலத்தில் சிலை வடிவில் காட்சி அளிக்கின்றனர்.

ஜீவசமாதி அடைந்த இம்மூவர் சமாதி திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக் கிணறு அருகிலும் கோயில் ராஜகோபுரம் வடக்கு டோல்கேட் அருகே வள்ளி நாயகம் சுவாமிக்கு ஜீவசமாதி உள்ளது.

ராஜகோபுரம் திருப்பணி செய்த ஸ்ரீ தேசிக மூர்த்தி சுவாமி ஜீவசமாதி ஸ்ரீ வைகுண்டத்திற்கு அருகே உள்ள ஆழ்வார்தோப்பில் அமைந்துள்ளது. இந்த ஜீவசமாதியை திருவாவடுதுறை ஆதீனம் பராமரித்து வருகிறது.

இந்த ஐந்து ஜீவ சமாதிகளிலும் நாள்தோறும் பூஜைகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு சுவாமிகளுக்கும் ஜீவசமாதியான நட்சத்திரத்தன்று குரு பூஜையும் நடத்தப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து 67 மீட்டர் தொலைவில் உள்ளது. 133 அடி உயரமுள்ள திருக்கோயிலின் ராஜகோபுரம் கடற்கரையிலிருந்து 140 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இக்கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. திருச்செந்தூர் முருகன் கோயிலில் கல் மண்டபம், ராஜகோபுரம், கிரி பிராகாரம் போன்ற திருப்பணி செய்த அடியவர்களை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

இவர்களது சமாதிகள் இன்றும் கடற்கரையை ஒட்டி காணப்படுகின்றன. குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் இங்கு நம் கோரிக்கைகளை வைத்து இந்த ஜீவசமாதிகளில் உட்கார்ந்த மனதார தியானித்தி வந்தால் நம் மனக்குறைகள் தீர்ந்து சிறப்பாக வாழலாம்... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

விளக்கேற்றும் திரியை பொறுத்து அதற்கான அருள் கிடைக்கும்...

 தீபம் ஏற்றும் திரிகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :*
விளக்கேற்றும் திரியை பொறுத்து அதற்கான அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

வீட்டில் தினமும் தொடர்ந்து விளக்கேற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும். 

*குபேர திரி ( பெரிய தும்பை இலை) :*

குபேர திரி என்பது பெரிய தும்பையின் இலை. அதைத்தான் நாம் திரியாக பயன்படுத்துகிறோம். இந்த திரிக்கு அதிக விதமான சக்திகள் உண்டு. 
பச்சை இலையை திரியாக பயன்படுத்தினால் எரியக்கூடியது. தும்பை என்றால் "துன்பம்" என்று பொருள். அதனால் இதில் விளக்கு எற்றினால் :

• குடும்பத்தில் சந்தோஷம் பெருகம்
• நோய்களை குணமாக்கும்
• செல்வம் அதிகரிக்கும்
• கண் திருஷ்டி நீங்கும்
• நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.

*தாமரை நார் திரி / தாமரை தண்டு திரி :*

தாமரை நார் திரி அதாவது தாமரை மலர்களின் தண்டை உலர்த்தி, காய வைத்து விளக்கில் திரியாக போட்டு ஏற்றி வர வாழ்வின் செல்வ நிலை உயரும். 

உங்களுடைய முந்தைய பிறவிகளின் பாவங்கள் அனைத்தையும் போக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால் உங்களுக்கு இந்த வழி உதவியாக இருக்கும். 

தாமரை தண்டை திரி போல கத்தரித்து காயவைத்து அதில் நெய்தீபம் ஏற்றவும். இதில் விளக்கு ஏற்றுவதால் லட்சுமியின் பூரண அருள் கிடைக்கும்.


*வாழை திரி :*

வாழைத்தண்டை கொண்டு திரி செய்து அதன் மூலம் விளக்கேற்றுவது நீங்கள் உங்களுக்கே தெரியாமல் செய்த தவறுகளுக்கு உங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பை பெற்றுத்தரும். இதுமட்டுமின்றி உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு அளித்த சாபங்களை நீக்கும்.

. ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Wednesday, June 26, 2024

நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதிய வடிவில் நாகலிங்கப் புஷ்பம் மரம்....



🌳நாகலிங்க_பூவின் அதிசயம் 🌳
🌺 இனிய சிவலிங்கத்தை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்றால், லிங்கத்திற்கு மேல்  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கட்டவேண்டும்.  அந்த பாத்திரத்திலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழும்.

சோழமன்னர் ஒருமுறை ஒரு சிவாலயத்தை கட்டினார்;  அப்போது அவருக்கு ஒரு அச்சம்தோன்றியது.
நம் காலத்திற்குப் பிறகு தண்ணீர் ஊற்றுவார்களோ இல்லையோ என்ற அச்சம்தான் அது.

உடனே ஒரு யோசனைத் தோன்றியது, சந்திரகாந்த கற்கலால் கருவரையின் மேற்கூறையை அமைத்து மையத்தில் ஒரு கமலத்தை அமைத்தார்.

என்ன "அதிசயம்" 24 வினாடிக்கு ஒரு முறை காற்றின் ஈரத்தை . சந்திரகாந்தக்கல் உறிஞ்சி சிவலிங்கத்தில் தண்ணீராகச் சொட்டியது. கோயில் இருக்கும் ஊர் திட்டை

அதுபோல் இந்த நாகலிங்க மலரின் மேற்கூறையில், சின்னச் சின்ன ஆட்டணா இருக்கும் அந்தத் தும்பித் தாரையில் இருந்து 24 வினாடுக்கு ஒருமுறை ஒரு பனித்துளி அளவு தண்ணீர் லிங்கத்தில் விழும் அதிசயம் நடைபெறும்.

☘மேலும் சில தகவல்.

1."நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும் .பூவுலகின் மகத்தான .நாம் ஒரு வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது ,நாம் பெற்ற புன்னியப் பேறே. தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்.

 🌳2.நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.

🌳3.பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.

 🌲4.நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.

 🌳5.நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் .

 🌳6.ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது.

 🌳7.ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள்.

 🌳இவ்வாறு கண்ணுக்குத் தெரிந்த நாகலிங்க பூவின் மகிமையை இனிமேலாவது உணர்ந்து நாகலிங்க பூவைக்கொண்டு இறைவனை வணங்குவோம் ,நாகலிங்க மரத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்
தரிசிப்போம்.   
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

12_ஆண்டுகளுக்கு_ஒருமுறை ஆலயத்திற்கு கண்டிப்பாக கும்பாபிஷேகம் ஏன் செய்ய வேண்டும்?

12_ஆண்டுகளுக்கு_ஒருமுறை ஆலயத்திற்கு கண்டிப்பாக கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகம ஐதிகம்.!
அதாவது கும்பத்தில் வைக்கப்பட்ட புனித நீரில் இறை சக்திகளை ஆவாஹனம் செய்து குறிப்பிட்ட யாகத்தின் மூலம் மந்திர உச்சாடனம் செய்து.கும்பத்திற்குள் வரவழைக்கப்பட்ட சக்தியை,கடவுள் சிலைகள் மற்றும் ஆலய ராஜகோபுர கலசங்களில் நிலையாக இருக்கும்படி அபிஷேகம் செய்து பூஜைகள் நிறைவேற்றப்படும்.

இங்கே கும்பம் என்பது கடவுளின்
உடலாகவும்,அதில் சுற்றப்பட்ட நூலானது 72000 நாடி நரம்புகளாகவும்.உள்ளே இருக்கும் தீர்த்த நீரானது ரத்தமாகவும்,அதற்குள் இடப்பட்ட சொர்ணம்(தங்கம்) ஜீவனாகவும்,மேலே உள்ள தேங்காயானது சிரமாகவும்ரும்பந்தில் சாத்தப்பட்டிருக்கும் பட்டானது ஆடையாகவும், கும்பத்தின் கீழே பரப்பிய நெல் போன்ற தானியங்கள் ஆரனமாகவும் கருதப்படுகின்றது.

#கும்பாபிஷேகத்தின்போது_ஆற்றப்படவேண்டிய_ஆகம_விதிமுறைகள்.
#பாலாலயம் இதனை 'பாலஸ்தாபனம்" என்பர் பூரணகும்பம் ஒன்றை ஆலய மூலவர் சிலைக்கருகில் வைத்து,தர்ப்பையமாவிலை கொண்டு மந்திர உச்சாடனங்கள் செய்து தெய்வ சக்தியை அப்பூரணக்கும்பத்திற்குள் எழுந்தருளச் செய்யப்படும் அல்லது மாற்றப்படும். கும்பாபிஷேகம் வரை அப்பூரணக்கும்பத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டும்,

#ஆவாஹனம்: கும்பத்தில் உள்ள திருக்குக்குள் தெய்வ சக்திகளை வரவழைக்கச் செய்வதை "ஆவாஹனம் என்பர்.

கும்பத்தை ஆலயத்தில் உள்ள
மூலவர்க்கருகில் தர்ப்பைமாவிலை. ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி,பிம்பத்தில் உள்ள சக்தியை கும்பத்தில் எழுந்தருளச்செய்யப்படும்.

கும்பம் யாகசாலையில் வைக்கப்படும் வெள்ளி அல்லது செப்புக் குடத்தினாலான கும்பம்,இறைவனின் வடிவமாகவே கருதப்படுகிறது.

மந்திரம்,கிரியை,தியானம், ஹோமம் மற்றும்
பக்தர்களின் நல்லெண்ணங்களுடன்
எங்கும் உள்ள இறைவளை சக்தி
கும்பத்திற்குள் வரவழைக்கப்படும்.

#கும்பாபிஷேகம் நடக்கும் போது ஒரு கால
பூஜைக்கு 64 கிரியைகள் வரை
முற்காலங்களில் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது கால அவகாசம் கருதி 12
அல்லது 13 கிரியைகள் மட்டும் செய்யப்பட்டு
கும்பாபிஷேக விழா நடாத்தப்படுகின்றது.

#ஆச்சார்ய_வர்ணம் : கும்பாபிஷேகத்தின்
பொருட்டு கிடைக்கும் பணம் அல்லது
பொருட்களின் மேல் செய்யபடுவது நன
பூஜையாகும். அவ்வாறு கிடைக்கும் பணம்
அல்லது பொருட்களின் ஒரு பகுதி கட்டிட
பணிகளுக்கும் ஒரு பகுதி நித்திய
மாதாந்திர, விஷேட நட்சத்திர பூஜை
உற்சவத்திற்கும்,மூன்றாவது பாகம்
ஆபரணங்கள் வாங்கவும் செலவிடப்படும்.

கும்பாபிஷேகத்தை தலைமை ஏற்று
நடாத்தும் பிரதம குருவான சிவாச்சாரியார்
சிரோண்மணியை வணங்கி மேற்கண்ட
செல்வத்தைக் கொண்டு
கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி தர
வேண்டும் என கேட்டுக் கொள்வது
"ஆச்சார்ய வர்ண மாகும்.

#அனுக்ஞை: ஆலய பணிகள் நிறைவுற்ற
பிறகு. ஓர் சுப நாளில் சுபமுகூர்த்த
வேளையில் கும்பாபிஷேக நிகழ்வினை
முன்னின்று நடாத்தி வைக்க தகுதியான ஓர்
சிவாச்சாரியாரை தேர்ந்தெடுப்பதையே
அனுக்ஞை" என்பார்கள்.

விநாயகர் சன்னதி முன்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட சிவாச்சாரியார்
கும்பாபிஷேகத்தை நடாத்தி தர வேண்டும்
என முதல் வணக்கத்திற்குரிய ஸ்ரீவிநாயகப்
பெருமானை வேண்டுவது அனுக்ஞை'
யாகும்.

#பிரவேசபலி:கும்பாபிஷேகம் செய்யும் இடத்திலிருந்து எண்(8) திசைகளிலும் உள்ள சகல ராட்சதர்கள் மற்றும் தேவதைகளுக்கு உணவு கொடுத்து எழுப்பி, அவர்களை வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும்படி
வழியனுப்பி வைப்பதே 'பிரவோ
பலியாகும் ஆலய திருவிழா
தருணங்களிலும் இதைச் செய்ய வேண்டும்
என ஆகமங்கள் கூறுகின்றன.

#வாஸ்துசாந்தி: வாஸ்து புருஷனால்
கும்பாபிஷேக கிரியைகளுக்கு
எவ்விதமான இடையூகளும் நேரா வண்ணம்
53 விதமான தேவதைகளுக்கு
பூஜை,பவி,ஹோமம், ஆகியவற்றால் சாந்தி
செய்வதே 'வாஸ்து சாந்தியாகும்.

#ரக்க்ஷாபந்தனம் : காப்பு கட்டுதல் என
இதற்கு பொருள் பூஜை செய்பவர்கள் சர்ப்ப
தேவதைகளுக்கு பூஜை செய்து,மந்திரித்த
மஞ்சள் கயிறை வலது மணிக்கட்டில்
கட்டிக்கொள்வார்கள் கும்பாபிஷேகத்தில்
கலந்து கொள்ளும் நேரத்தில் குடும்பத்தில்
எதிர்பாராமல் ஏதேனும் தீட்டு ஏற்படும்
பட்சத்தில் காப்பு அவிழ்க்கப்படும் வரை
அத்தீட்டு அவர்களை பாதிக்காது என்பது
ஐதீகம்,
இதனையே 'ரக்ஷா பந்தனம்'என்பர்.

#கடஸ்தாபனம் கலசம் அமைத்தல் என்பது
பொருள்,தங்கம்,வெள்ளி, தாமிரம்,மண்
ஆகிய ஏதாவது ஒன்றில் செய்யப்பட்ட
கலசம் என்ற கும்பங்கள்
பயன்படுத்தப்படும்
கும்பங்கள் இப்படித்தான் அமைக்க
வேண்டும் என்ற வரையறைகள்
உள்ளன

கும்பத்தின் மேற்புறத்தை நூலால்
சுற்றிநதிநீரை திரப்பி.மேற்பகுதியில்
மாவிலை செருகி தேங்காய்
வைக்கப்படும்.எந்த தெய்வத்திற்கு
கும்பாபிஷேகம் நடக்கின்றதோ அந்
தெய்வத்தின் உடலாக குறிப்பிட்ட கும்பம்
கருதப்படும்.இதனை 'கடஸ்தாபனம்'னை
அழைப்பர்.

#அஷ்டபந்தனம்: கும்பாபிஷேகத்தை
அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் எனச்
சொல்வதுண்டு
பீடத்தின் மீது வைக்கப்படும் தெய்வத்
திருவுருவங்கள் அசையாமல் உறுதியுடன்
நிலைத்து நிற்க கொம்பரக்கு,
சுக்கான்தான்,குங்கிலியம்,கற்காவி,செம்பஞ்ச
ஜாதிலிங்கம்,தேன் மெழுகு எருமையின்
வெண்ணெய் ஆகிய எட்டு வகையான
மருந்துகளை கலந்து
சாத்துவார்கள் அஷ்டம் என்றால் எட்டு இந்த
எட்டு வகையான மருத்துகளை
சாத்துவதையே அஷ்ட பந்தனம்'எனக்
கூறுவர்.

#மிருத்சங்கிரஹணம்: கும்பாபிஷேக
விழாவிற்கு அங்குரார்ப்பணம்
செய்யப்படுவது.அதாவது நவதானியங்கள்
முளைவிட்டு வளர வைக்கப்படும்.அதற்காக
சுத்தமான மண் எடுக்கப்பட்டு
முளைப்பாலிகைகளில் வைத்து,அதற்குள்
நவதானியங்களையிட்டு வைப்பார்கள்.
இவ்வாறு தானியங்களை வளர்
வைப்பதையே #மிருத்சங்கிரஹணம் எனக்கூறுவர்

#நான்கு_வகை_கும்பாபிஷேகங்கள்....

கும்பாபிஷேகங்களில்
ஆவர்த்தம் அனுவர்த்தம், புனராவர்த்தம்
அந்தரிதம் என நான்கு பொதுவான
வகைகள் உள்ளன

1.புதிதாக ஆலயம் அமைத்து நிர்மாணம்
செய்து அங்கே புதிய இறைவன்
திருவுருவச் சிலைகளை அமைத்து
பிரதிஷ்டை செய்யப்படுவதை
#ஆவர்த்தம் என அழைப்பர்.

2.ஆலயம் அல்லது தெய்வ மூர்த்தங்கள்
ஆகியவை வெள்ளம் மற்றும் இயற்கை
சிற்றத்தால் பாதிக்கப்பட்டு அவற்றை
மீண்டும் சீரமைப்பது '#அனுவர்த்தம்'எனச்
சொல்லப்படும்.

3. குறிப்பிட்ட காலம் கடந்த நிலையில்
ஆலயத்தின் பழுதுகளை சரி செய்து அஷ்ட
பந்தன மருந்துகள் சாற்றி,மீண்டும்
புதுப்பிக்கும் முறை "#புனராவர்த்தம்" ஆகும்.

4. கள்வர்களால் தெய்வச் சிலைகள்
களவாடப்பட்டு அவற்றை மீண்டும்
பிரதிஷ்டை செய்யும் முறைக்கு
#தந்தரிதம்'என சொல்வர்

Tuesday, June 25, 2024

திங்கட்கிழமை இரவு மட்டும் திறக்கும் அதிசய சிவன் கோவில்...!

திங்கட்கிழமை இரவு மட்டும் திறக்கும் அதிசிய கோவில்...!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பரக்கலக்கோட்டை.

 இங்கு பொது ஆவுடையார் கோவில் இருக்கிறது. பொதுவாக அனைத்து ஆலயங்களும் காலையிலேயே நடை திறந்து இரவில் நடை அடைக்கப்படும்.

 ஆனால் இத்தலத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை இரவு மட்டும் திறக்கும் அதிசிய கோவில் ஆகும்.ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (லிங்கம்) வழிபடப்பெறும் சிவபெருமான், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார். எனவே, இங்கு லிங்க வடிவம் கிடையாது. 

கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர். அப்போது சன்னதிக்குள் மரத்தை காண முடியாதபடி சுற்றிலும் வெண்ணிற துணியால் மறைத்து விடுகிறார்கள். நமக்கு லிங்க சொரூபம் மட்டுமே தெரிகிறது.

 மூலஸ்தானத்திற்குள் ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சிவபெருமான், முனிவர்களுக்கும் காட்சி தந்ததன் அடையாளமாக பாதம் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் பகலில் நடை திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மட்டும் இரவில் நடை திறக்கப்படுகிறது.

 அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். அன்றிரவில் 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கிறது. அப்போது சுவாமியை தரிசிக்க முடியாதபடி திரையிடப்படுகிறது. அதன்பின் 11.30க்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்திவிட்டு, பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சன்னதி திறக்கப்படுகிறது.

அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களின் தரிசனம் முடிந்தபின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்திவிடுகின்றனர். தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம்.

 இதுதவிர, சிவனுக்குரிய சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை.இக்கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செல்கிறார்கள்.

 திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.கார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். மற்ற கோயில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும். சோமாவார நாள் தவிர மற்ற நாட்களில் கதவு மூடப்பட்டு, கதவுகளுக்கு பூக்கள் சூடி பூஜைகள் நடத்தப்படும். வெண் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மத்தியஸ்தம் செய்ததால் வெண் ஆலமரமே ஸ்தல விருச்சமாக வணங்கப்படுகிறது.

 மரத்தின் வேரில் சந்தனம் பூசி, அதன் மேல் நெற்றிப்பட்டம், நாசி, திருவாய், முன்புறம் திருவாய்ச்சி அமைத்து சிவலிங்க வடிவில் இருப்பதை பக்தர்கள் வழிபடுவர்.ஒவ்வொரு வருடமும் கடைசி சோமவார தினத்தில் நள்ளிரவு சரியாக 12 மணியளவில் விசேஷ பூஜைகள் செய்து நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பொதுஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படும்.

 இவ்விழாவில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் கலந்துக்கொண்டு, தங்கள் கொண்டு வரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை காணிக்கைகளாக செலுத்தி வழிபடுவர்கள்..... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்... 

மனோக்ஞ நாதசுவாமி ,திருநீலக்குடி திருவிடைமருதூர்...

அருள்மிகு. 
மனோக்ஞ நாதசுவாமி திருக்கோயில்,
திருநீலக்குடி 612 108.        
திருவிடைமருதூர் வட்டம்,           தஞ்சை மாவட்டம்.    
*திருநீலக்குடி  (தென்னலக்குடி)   

*இறைவர் திருப்பெயர்:   மனோக்ஞ நாதசுவாமி, வில்வாரண்யேசுவரர், பிரமநாயகர், நீலகண்டேஸ்வரர், தைலாப்பியங்கேசர், காமதேனுபுரீஸ்வரர்.          *இரு இறைவியர் திருப்பெயர்: 1.அநூபமஸ்தனி (திருமணக்கோலம்), 2.பக்தாபீஷ்டதாயினி (தவக்கோலம்).   
*தல மரம்: வில்வம், பலா 
*தீர்த்தம் : தேவி தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்,               பிரம்ம தீர்த்தம், க்ஷீரகுண்டம்.  *வழிபட்டோர்: அப்பர், வசிட்டர், காமதேனு, தேவமாதர், மார்க்கண்டேயர் முதலியோர்.
*பாடல் பெற்ற தலம் -        *அப்பர் தமது தேவாரப் பதிகத்தில் “சமணர்கள் கல்லினோடு என்னைப்பூட்டி கடலில் எறிந்த அன்று நீலக்குடி சிவன் நாமத்தைக்கூறிப் பிழைத்தேன்" என்கிறார்.  
*அப்பரின் திருவாக்கில் 'நெல்லுநீள் வயல் நீலக்குடி' என்று மலர்ந்ததற்கேற்ப சுற்றிலும் வயல்கள் உள்ளன.

*இத்தலத்திற்கு பஞ்ச வில்வாரண்யக்ஷேத்திரம் என்றும் பெயருண்டு.

*பாற்கடலில் அமுதுகடைந்த போது தோன்றிய நஞ்சையுண்டு இறைவன் நீலகண்டராக எழுந்தருளி விளங்கும் தலமாதலின் இது திருநீலக்குடி என்றாயிற்று.

பாற்கடலில் வெளிவந்த  ஆலகால விஷத்தை, முழு பிரபஞ்சத்தையும் காக்க,  சிவபெருமான் அதை அருந்தினார்.  உலகின் எதிர்காலத்தைப் பற்றி பயந்து, விஷம் பரவுவதைத் தடுக்க, பார்வதி தனது கைகளை இறைவனின் கழுத்தில் வைத்தாள். அவரது தொண்டையில் விஷம் சிக்கி, கருநீல நிறத்தைக் கொடுத்தது. மேலும், உட்கொண்ட விஷத்தின் விளைவுகளை நீக்குவதற்காக, பார்வதி  எண்ணெயால் சிவனுக்கு அபிஷேகம் செய்தார்.

*இக்கோயிலில் இறைவனை சாந்தப்படுத்த எண்ணெய் பூசும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

*மூலவர் அதிசய மூர்த்தியாக திகழ்கிறார். இங்கு மூலவருக்கு எவ்வளவு எண்ணெய் வார்த்துத் தேய்த்தாலும் அவ்வளவும் பாணத்திற்குள்ளேயே உரிஞ்சப்படும்; வெளியே வழியாது. 
தவமிருக்கும் அம்பாளே, சுவாமிக்குத் தைலாபிஷேகம் செய்வதாக ஐதீகம். ஆகவே அம்பாள் முன் எண்ணெய் வைத்துப் பின்பு எடுத்துச் சுவாமிக்குத் தேய்ப்பர். 

*இந்த கோயிலில்  "எண்ணெய் அபிஷேகம்" மிக முக்கியமானதாகும். 
 
*திருமணம், குழந்தை வரம், மன அமைதி, வேலை வாய்ப்பு மற்றும் வியாபார முயற்சிகளில் வெற்றி பெற பலர் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.   

*திருக்கடையூரில்,   மார்க்கண்டேயருக்காக  எமனை சம்ஹாரம் செய்த  சிவபெருமான் திருநீலக்குடியில் மார்க்கண்டேயருக்கு "சிரஞ்சீவி" எனும் நித்திய வாழ்வு அருளினார். 

*மார்க்கண்டேயர் வழிபாட்டுக்குப் பயன்படுத்திய லிங்கம்  கோயிலில் உள்ளது.             

*சித்திரையில் நடைபெறும் கோயில் திருவிழா இந்த மார்க்கண்டேயர் புராணத்தைக் கொண்டாடுகிறது.

*நீண்ட ஆயுளுக்காகவும், எமபயம் நீங்கவும் பரிகார பூஜைகள் இங்கு செய்யப்படுகிறது.

*இங்குள்ள பலாமரத்தில் காய்க்கும் பலாச்சுளை நித்யபடியாக நிவேதமுண்டு. ஆனால் நிவேதிக்காமல் பலாப்பழத்தை வெளியில் எடுத்துக்கொண்டு போனால் வண்டுகள் உண்டாகிப் பலாப்பழம் கெட்டுப்போவதாக   சொல்லப்படுகிறது.
 
*இந்த கோவிலின் புராணத்தின் படி, தக்ஷனின் யாகத்தில் தாக்ஷாயினி அவமதிக்கப்பட்ட பிறகு, அவள் சிவனை வழிபட இங்கு வந்து மீண்டும் இணைந்தாள். 

*பல்வேறு காரணங்களால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவதற்கும், குடும்ப வாழ்க்கை புதுப்பிப்பதற்கும் நீலகண்டேஸ்வரரை வேண்டிக்கொள்கிறார்கள்.

  *பிரம்மா  இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது,  அவர் நிறுவிய லிங்கம் பிரகாரத்தில் உள்ளது. 

*மனித உடலில் உள்ள ஆறு ஆதாரங்களான  மூலதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி மற்றும் ஆஜ்ஞா  ஆகியவற்றுள் இத்தலம் மூலதாரத் தலமாக சிறப்புடன் விளங்குகிறது.

*அப்பருடன் உள்ள தொடர்பைக் கருத்தில் கொண்டு, இந்தக் கோயில் குறைந்தது 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியலாம். இது பாண்டியர்கள் மற்றும் விஜயநகர வம்சத்தின் பிற்காலச் சேர்க்கைகளுடன் ஆரம்பகால சோழர் காலத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட கோயில்.

*அமைவிடம்
கும்பகோணம் - காரைக்கால் சாலையில், கும்பகோணத்தை அடுத்துள்ளது. 

ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்...

Monday, June 24, 2024

ஆனி திருமஞ்சனம் என்பது என்ன?

ஆனி திருமஞ்சனம் என்பது என்ன?

 

எல்லா சிவத்தலங்களில், ஆனி உத்திரம் நட்சத்திரத்தில் அருள்மிகு நடராஜப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்று வீதி உலா நடைபெறும்.
சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் ஆனித் திருமஞ்சனம் விசேஷமாகக் கொண்டாடப்படும். 
நடராஜப் பெருமானுக்கு ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித்திருமஞ்சனம். 
அன்று சிதம்பரம் ஆலயத்தில் மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது.
பக்தர்கள் நடராஜரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனித்திருமஞ்சனம் மிக நல்லநாள்.

கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் நடராஜரைத் தரிசிக்க வேண்டும்.

அன்று சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். 
அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும். ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. 

இவர் ஆதிசேஷனின் அம்சம். இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் சிறப்பாக நடக்கும். அதில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது. 

தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. 
அன்றிரவு மீண்டும் சித்சபையாகிய சிற்றம்பலத்தில் கடாபிஷேகம் நடைபெறும்.
அடுத்த நாள் விடையாற்றி உற்சவம் முடிந்தபின் கொடியிறக்கம் கண்டு விழா இனிதே நிறைவுறும்
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம்.
இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.

சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.
பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா. 

ஆனிஉத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். அன்று பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். இன்றைய தினத்தில் தான் நடராஜர் சன்னதிகளில் ஆனித்திருமஞ்சனம் நடக்கிறது. 

கோயில் என்பது எல்லா கோயிலுக்கும் பொதுப்பெயர் என்றாலும், சிவத்தலங்களில் சிதம்பரம் மட்டுமே கோயில் என்று குறிப்பிட்டு வழங்கப்படுகிறது. 

தில்லைவனம், பெரும்பற்றப்புலியூர், சிதாகாசம், ஞானாகாசம், பொன்னம்பலம், பூலோககைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் போன்ற பெயர்களும் இவ்வூருக்கு உண்டு. 
                                   சிதம்பரம், பழநி, பாபநாசம், குற்றாலம், ஸ்ரீரங்கம்(ன்) போன்ற திருத்தலங்களின் பெயரை குழந்தைகளுக்கு இடும் வழக்கம் உண்டு. அதுபோல சிதம்பரம், பொன்னம்பலம் என்று பெயரிடும் வழக்கமும் நீண்டகாலமாக இருந்து வருகிறது.

தேவி மஹாத்மியம்
யா தேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்மை ; நமஸ்தஸ்மை ; நமஸ்தஸ்மை நமோ நமஹ ! ,

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. ஹ

மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்.

_மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்.!_


 1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. 

3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால்  கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல்  பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும். 
4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின்  சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள்.
இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.  

5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.
6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

7.அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும்.

8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும். 

8.மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

9.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை. 

10.அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும். 

13.வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம். சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணிமூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட  கோவில்

14. தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம்.சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

15. இவளின் அண்ணன் மாயவன் அழகர்மலை அழகுமலையான்.உலக அதிசியங்களுள் ஒன்று அன்னையின் ஆலயம். இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாட்சி.

மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள் பற்றி அறிவோம்.!

1168 – 75  சுவாமி கோபுரம்
1216 – 38  ராஜ கோபுரம்
1627 – 28 அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47  மேற்கு ராஜா கோபுரம்
1372 -சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்

1452 - ஆறு கால் மண்டபம்
1526 -100 கால் மண்டபம்
1559 -சௌத் ராஜா கோபுரம்
 முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 - சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 - தேரடி மண்டபம்
1563 -பழைய ஊஞ்சல் மண்டபம்
வன்னியடி நட்ராஜர் மண்டபம்

1564 – 72  வடக்கு ராஜா கோபுரம்
1564-72 வெள்ளி அம்பல மண்டபம்
கொலு மண்டபம்
1569 - சித்ர கோபுரம்
 ஆயிராங்கால் மண்டபம்
 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 - அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

1611 - வீர வசந்தராயர் மண்டபம்
1613 - இருட்டு மண்டபம்
1623 - கிளிக்கூட்டு மண்டபம்
புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59  ராயர் கோபுரம்
அஷ்டஷக்தி மண்டபம்

1626 -45  புது மண்டபம்
1635 - நகரா மண்டபம்
1645 - முக்குருணி விநாயகர்
1659 - பேச்சியக்காள் மண்டபம்
1708 -மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -சேர்வைக்காரர் மண்டபம்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்..

குலசேகர பாண்டியன்  1168 – 75
மாறவர்மன் சுந்தரபாண்டியன்  1216 –38
பாராக்ரம பாண்டியன் 1315 – 47
விஸ்வநாத நாயக்கர்  1529 – 64

கிருஷ்ணப்பா நாயக்கர் 1564 – 72
வீரப்ப நாயக்கர்  1572 – 94
கிருஷ்ணப்பா நாயக்கர் 1595 – 1601
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் 1601 – 09

முத்து நாயக்கர் 1609 – 23
திருமலை நாயக்கர்  1623 – 1659
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை  1623 – 59
 (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர்  1659

சொக்கநாத நாயக்கர்  1659 – 82
முத்து வீரப்ப நாயக்கர் 1682 – 89
விஜயரங்க சோகநாத நாயக்கர்  1706 -32
மீனாட்சி அரசி  1732 –36

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.!

1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',
2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',
3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',
4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',
5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்
அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள்.!

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.!

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .
மதுரையில் பிறந்தாலும் 
மதுரையில் வாழ்ந்தாலும் 
மதுரையில் இறந்தாலும் 
மதுரையில் வழிபட்டாலும் 
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்..

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்
இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.

சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி


Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...