Saturday, January 18, 2025

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும் 
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான ,
ஐயப்பன் திருமண கோலத்தில் காட்சி தரும் தலமான, ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே தலமான,
பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட தலங்களில் ஒன்றான 
#கொல்லம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
#ஆரியங்காவு 
#தர்மசாஸ்தா (#ஐயப்பன்)
#புஷ்கலா_தேவி திருக்கோயில் வரலாறு:

சுவாமி ஐயப்பனின் அறுபடைவீடுகளில் சபரிமலைக்கு பிறகு முக்கியமானதாக கருதப்படுவது ஆரியங்காவு ஐயப்பன் கோவில் தான். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதலில் தரிசிக்க வேண்டிய கோவில் ஆரியங்காவு கோவில் தான். ஆசிரம தர்மபடி குளத்துபுழையில் பாலகனாக "பிரமச்சார்ய நிலை"யிலும், ஆரியன்காவில் திருமண கோலத்தில் "கிரகஸ்தாஸ்ரம" நிலையிலும், அச்சன்கோவிலில் "வானப்பிரஸ்த" நிலையிலும் சபரிமலையில் "சந்நியாசி" கோலத்திலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
*ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

* ஒற்றைக் கல்லால் அமைக்கப்பட்ட திருமண மேடை இங்கு அமைந்துள்ளது.

* கேரள முறைப்படி அமைந்த கோவிலில் தமிழக முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது.

திருமணத் தடை இருப்பவர்கள் கேரள மாநிலம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் சாஸ்தாவான ஐயப்பனை வந்து வழிபட்டுத் திருமணத் தடை நீங்கப் பெறலாம்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தினராகக் காட்சி தருகிறார். திருமணத் தடை இருப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டுத் திருமணத் தடை நீங்கப் பெறலாம்.

மதுரையை சேர்ந்த செளராஷ்டிர வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்கு தேடையான துணிகளை நெய்து கொடுக்க சென்றனர். அந்த வியாபாரிகளில் ஒருவர் ஆரியங்காவு கணவாய் வழியாக சென்றார். அவருடன் அவரது மகள் புஷ்கலாவும் சென்றாள். காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், ஆரியங்காவு சாஸ்தா கோவில் மேல்சாந்தியின் இல்லத்தில் தனது மகளை விட்டு சென்றார். தான் திரும்பி வரும் போது மகளை அழைத்துச் செல்லதாக கூறி விட்டு, திருவிதாங்கூர் சென்றுள்ளார்.

புஷ்கலா, தன்னால் ஆன காங்கரியங்கைளச் சாஸ்தாவிற்கு செய்து வந்தாள். நாளடைவில் சாஸ்தாவை தன் காதலனாகவே நினைக்கத் துவங்கி விட்டாள். சாஸ்தாவும் அவளை ஆட்கொள்ள முடிவு செய்தார். திருவிதாங்கூர் சென்று விட்டு திரும்பிய வியாபாரியை மத யானை ஒன்று துரத்தியது. அப்போது இளைஞன் ஒருவன் தோன்றி, யானையை அடக்கி, வியாபாரியை காப்பாற்றினார். அந்த இளைஞனுக்கு நன்றி தெரிவித்த வியாபாரி, உனக்கு என்ன வேண்டும் என அந்த இளைஞனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவன், உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தருவீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு வியாபாரி சம்மதம் சொன்னதும், அந்த இளைஞன் மறைந்து போனதை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தார் வியாபாரி. ஆரியங்காவு வந்து கோவிலுக்கு சென்ற வியாபாரி, தான் பார்த்த இளைஞனின் உருவில் சாஸ்தா காட்சி தருவதை கண்டு உள்ளம் உருகி, நீயா என் மகளை ஆட்கொள்ள வந்தாய்? என அதிசயித்தார். பிறகு தன் ஊர் மக்களை வரவழைத்து, திருவிதாங்கூர் சமஸ்தான அதிகாரிகளிடன் பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சாஸ்தாவும் தானே நேரில் வந்து புஷ்கலாவை ஆட்கொண்டார். இந்த திருமண கோலத்துடனேயே இவ்வாலயத்தில் ஐயப்பன் காட்சி தருகிறார்.

#தொன்மம்:

பரசுராமர் கிழக்கு மலை தொடர்ச்சியில் கேரளத்தில் நான்கு இடங்களில் நான்கு தர்மசாஸ்தா கோவில்களை நிறுவினார் என்பது ஐதீகம். அவற்றில் குளத்துபுழையில் பாலகனாக "பிரமச்சார்ய நிலை"யிலும், ஆரியன்காவில் திருமண கோலத்தில் "கிரகஸ்தாஸ்ரம" நிலையிலும், அச்சன்கோவிலில் "வானப்பிரஸ்த" நிலையிலும் சபரிமலையில் "சந்நியாசி" கோலத்திலும் உள்ளார். அதன்படி சாஸ்தாவின் நான்கு முக்கிய கோவில்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலும் ஒன்று. இங்கு தர்மசாஸ்தா, சௌராட்டிர குலப் பெண்ணான புஷ்கலா தேவியுடன் திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.

மதுரையிலிருந்து திருவிதாங்கூர் மன்னருக்கு துணி நெய்துதரும் சௌராஷ்டிர இன வியாபாரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் அவ்வாறு மதுரையிலிருந்து திருவிதாங்கூருக்கு துணிவிற்கச் செல்லும்போது தனது மகள் புஷ்கலையைக் கூட்டிச் சென்றார். ஆனால் பாண்டிய நாடு தாண்டி ஆரியங்காடு சென்றதும் புஷ்கலை அடர்ந்த காட்டில் பயணம் செய்யப் பயப்பட்டாள். அதனால் வியாபாரி தன் மகளை ஆரியங்காவு ஐயப்பன் கோவில் பூசாரியின் வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். புஷ்கலை ஐயப்பன் கோவிலுக்கு வேண்டிய கைங்கரியங்கள் செய்து வர, அவள் ஐயப்பனிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது.

திருவிதாங்கூரில் தன் வியாபாரத்தை முடித்துவிட்டுத் திரும்பிய வியாபாரியை ஒரு மதயானை துரத்தியது. ஒரு இளைஞன் மதயானையை விரட்டியடித்து, பயந்து ஓடிய அவரைக் காப்பாற்றினான். வியாபாரி தன்னைக் காப்பாற்றிய அவ்விளைஞனுக்குத் தான் செய்யக்கூடிய நன்றிக்கடனாக தன்னிடம் இருந்த பட்டு அங்கவஸ்திரத்தை அந்த வேடனுக்கு வழங்கினார். வேடனும் அந்த பட்டு அங்கவஸ்திரத்தை தன்னுடைய கழுத்தில் தோளில் அணிந்து கொண்டு,இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு இப்போது நான் எப்படி இருக்கிறேன்? என்று அந்த வியாபாரியிடம் கேட்டான் அந்த வேடன். கட்டுமஸ்தான உடம்பு,திமிறிய தோள்கள்,ராஜ தேஜஸுடன் மந்தகாச புன்னகையுடன் கூடிய வேடனின் முகத்தை கண்ட வியாபாரி,உனக்கு என்னப்பா குறை,மாப்பிள்ளை போல இருக்கிறாய் என்று மனதார கூறினார். அதைக் கேட்ட வேடன் அப்படியானால் உன்னுடைய மகளை எனக்கு திருமணம் செய்து தருவீர்களா?என்று கேட்டான். அதனால் என்னப்பா, என் உயிரை காப்பாற்றியதன் மூலம் என் குலத்தையே காப்பாற்றிய என் குல தெய்வம் நீ...! உன் விருப்படியே என் மகளை உனக்கே மணம் முடித்து தருகிறேன் என்று வாக்களித்தார்.

ஆரியன்காடு வந்த வியாபாரி தான் காட்டில் கண்ட இளைஞனின் உருவம் போன்றேயுள்ள ஐயப்பனைக் கோவில் கருவறையில் கண்டு ஐயப்பனின் கருத்தை உணர்ந்து கொண்டார். திருவிதாங்கூர் மன்னரின் சம்மதத்துடன் மதுரையிலிருந்த சொந்தபந்தங்கள் சீர்வரிசை எடுத்துவர ஐயப்பனுக்கும் புஷ்கலைக்கும் திருமணம் ஏற்பாடாகியது. ஐயப்பன் நேரில் தோன்றி புஷ்கலையைக் கரம்பற்றியதாக மரபுவழிச் செய்தி கூறுகிறது.

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இத்திருமண விழா கொண்டாடப்படுகிறது. அவ்விழாவிற்கு இப்பொழுதும் மதுரையில் வாழும் சௌராஷ்டிர இனத்தவர் சீர் எடுத்து வரும் வழக்கம் உள்ளது.

இந்தக் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் கடைசி பாண்டியர்களின் இறுதியில் வடகரை ஆதிக்கத்திற்கு உட்பட்ட "சொக்கம்பட்டி ஜமீன்" சார்பில் ஆலய திருப்பணி நடைபெற்றதற்கான சான்றுகள் இங்கு காணப்படுகின்றன. இதனால் இதை திராவிட கட்டிடக் கலைப் பாணியில் கட்டப்பட்டது என்று கூறுவதும் உண்டு. கோயிலினுள் ஆண்கள் மட்டுமே நுழைய அனுமதி உள்ளது. பத்து முதல் ஐம்பது வயது வரை உள்ள பெண்கள் நுழையக் கூடாது.

இத்தலம்,"மூர்த்தி", "தலம்", "தீர்த்தம்' என்ற மூவகையிலும் பெருமை வாய்ந்த திருக்கோவில் என்று கூறப்படுகிறது. "மூர்த்தி" என்ற வகையில், ஒரு திருக்கோவிலின் கருவரையில் தாபிக்கப்படும் தெய்வ (பிராண) பிரதிட்டைகள் அதாவது மூல விக்கிரகங்கள் அந்த திருக்கோவிலின் தல புராணத்தை விளக்கும் வகையில் அமையும். அந்த வகையில் இக்கோயிலில் தர்மசாஸ்தா "மதகஜ வாஹன ரூபனாக" அதாவது மதம் பிடித்த யானை அடக்கி, வேட வடிவில் மாப்பிள்ளை கோலத்தில் புஷ்கலா தேவியோடு இங்கு திருமண காட்சி தருகிறார்.

தலம்" என்ற வகையில் ஆரியன் திரிந்த காடு "ஆரியன்காவு" என்ற பெயர் பெற்ற ஸ்தலமாக இது விளங்குகின்றது.

"தீர்த்தம்" என்ற வகையில் சாஸ்தா குடி கொண்டுள்ள குளத்துப்புழை, அச்சன்கோவில், பாம்பை ஆகிய இடங்களில் புனிதமான ஆறுகள் இருப்பது போல ஆரியன்காவு திருக்கோவிலின் சன்னதியிலும் "கருப்பா நதி" சல சலத்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

சாஸ்தா கோவில்களில் இங்கு மட்டுமே திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது.

சாஸ்தா கோவில்களில் இங்கு மட்டுமே திருக்கல்யாண தினத்தன்று "சப்பர புறப்பாடு" நடைபெற்று மாலை மாற்றும் நடைபெறுகிறது.

திருக்கோயிலுக்கு உள்ளே மலையாள தாந்தீரிக முறைப்படியும், வெளிப்பிரகரத்தில் நடைபெறும் திருக்கல்யாணம், "பாண்டியன் முடிப்பு" @ நிச்சயதார்த்த வைபவம், சப்பர புறப்பாடு ஆகியவை தமிழ் நாட்டு ஆச்சார முறைப்படியும் நடைபெறுகிறது.

சௌராஷ்டிர குல மக்கள் "சம்பந்தி" முறையில் இந்த திருக்கல்யாண வைபவத்தில் மணமகள் புஷ்கலா தேவி சார்பில் கலந்து கொள்கிறார்கள்.

தேவஸ்வம் போர்டாரல் மூன்று நாள் "சம்பந்தி விருந்தும்" அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஐயப்பனின் பரவலாக அறியப்பட்ட கோவில்களில் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் ஒன்றாக உள்ளது. குளத்துப்புழா, அச்சன்கோவில், எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகியவை ஐயப்பனின் பிற முக்கியமான கோவில்கள் ஆகும். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவு, குளத்துப்புழா சென்று, ஐயப்பனை வழிபட்டபின் பந்தளம் சென்று பின் அங்கிருந்து சபரிமலைக்குச் செல்வது வழக்கம். சபரிமலையைப் போன்றே இங்கும் பூசைகளும் விழாக்களும் நடைபெறுகின்றன.

*#தல வரலாறு : 

பரசுராமர் தான் தோற்றுவித்த கேரளாவின் பாதுகாப்புக்காகவும், செழிப்புக்காகவும் கடலோரங்களில் பத்ரகாளியம்மன் கோவில்களையும், மலைப்பகுதிகளில் சாஸ்தா கோவில்களையும் நிறுவினார் என்று சொல்லப்படுகிறது. பரசுராமர் மலைப்பகுதிகளில் குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில், சபரிமலை, காந்தமலை (பொன்னம்பல மேடு) ஆகிய ஐந்து இடங்களில் சாஸ்தாவிற்கான கோவில்களை நிறுவியிருக்கிறார். அவற்றில் ஆரியங்காவு சாஸ்தா கோவிலும் ஒன்றாக இருக்கிறது என்று தல வரலாறு கூறுகிறது.

*#ஐயப்பன் திருமணம் : 

சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போன்று, இந்தக் கோவிலில் இருக்கும் ஐயப்பன் பிரம்மச்சாரியாக இல்லாமல், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தவராகக் காட்சி தருகிறார். இங்கிருக்கும் ஐயப்பனுக்குத் திருமணம் நடந்தது பற்றி சுவையான கதை ஒன்று இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிரா வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனைக்குத் தேவையான துணிகளை நெசவு செய்து கொண்டு போய் விற்பனை செய்து வந்தனர். அப்படிச் சென்ற வணிகர்களில் ஒருவர், ஒரு முறை தனது மகள் புஷ்கலையையும் உடன் அழைத்துக் கொண்டு திருவிதாங்கூர் சென்றார். அவருக்கு மகள் புஷ்கலையைக் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்வது மிகவும் கடினாமக இருந்தது.
அவர்கள் இருவரும் ஆரியங்காவு கணவாய்ப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். புஷ்கலை அதற்குள்ளாகவே மிகவும் களைத்துப் போயிருந்தார். இனி அவளை திருவிதாங்கூருக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று நினைத்த அந்த வணிகர், அங்கிருந்த சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரைச் சந்தித்து, தான் திருவிதாங்கூர் சென்று திரும்பி வரும் வரை, தனது மகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி ஒப்படைத்துச் சென்றார். சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரின் வீட்டில் தங்கிய புஷ்கலை, சாஸ்தா கோவிலுக்குத் தேவையான சில பணிகளைச் செய்து வந்தார். நாளடைவில், அவளது மனத்தில் அந்தக் கோவிலில் இருக்கும் சாஸ்தாவையேத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது.
இந்நிலையில், புஷ்கலையின் தந்தை திருவிதாங்கூர் சென்று துணிகளை விற்பனை செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் அவரை, மதம் பிடித்த யானை ஒன்று விரட்டத் தொடங்கியது. அதனைக் கண்டு பயந்த அவர் வேகமாக ஓடத் தொடங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞன், அந்த மத யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான். தன்னைக் காப்பாற்றிய இளைஞனுக்கு நன்றி தெரிவித்த அவர், அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமென்று கேட்டார். அந்த இளைஞன், ‘உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தாருங்கள்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான். அதன் பிறகு, வணிகர் ஆரியங்காவு வந்து சேர்ந்தார்.
ஆரியங்காவிலுள்ள சாஸ்தா கோவிலுக்குச் சென்ற வணிகருக்கு, கோவில் கருவறையிலிருந்த சாஸ்தாவின் உருவம், காட்டில் மதயானையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய இளைஞரின் உருவமாகத் தெரிந்தது. தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியே சாஸ்தா, காட்டிற்குள் மதம் பிடித்த யானையைக் கொண்டு, நம்மை ஓடச் செய்து, காப்பாற்றியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார். அதன் பிறகு வணிகர், அந்தக் கோவில் அர்ச்சகரிடம் காட்டில் நடந்த கதையைச் சொல்லித் தன் மகள் புஷ்கலையை சாஸ்தாவிற்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொன்னார். அர்ச்சகரும், கோவில் உயர் அதிகாரிகளுக்கு அந்தத் தகவலைத் தெரிவித்து வரச் செய்தார். வணிகரும், தனது ஊரான மதுரையிலிருந்து தனது உறவினர்களை வரச் செய்தார்.
அதன் பிறகு, சாஸ்தாவிற்கும் புஷ்கலைக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையை மனைவியாக ஏற்றுத் தன்னுடன் ஆட்கொண்டார் என்று இக்கோவிலில் ஐயப்பன், புஷ்கலை திருமணம் நடந்த கதை மரபு வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது.
புஷ்கலையுடன் ஆரியங்காவு ஐயப்பன்

*கோவில் அமைப்பு : 

கேரளக் கட்டுமான அமைப்புடன் அமைந்த இக்கோவில் கருவறையில், ஐயப்பன் வலது காலைக் கீழே ஊன்றியும், இடது காலைச் சிறிது உயர்த்தியும் வைத்து அமர்ந்த நிலையில் அரசர் தோற்றத்தில் இருக்கிறார். இவருக்கு வலது புறம் சிவபெருமான் லிங்க வடிவிலும், இடதுபுறம் புஷ்கலை நின்ற நிலையிலும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில், நாகராஜர், கணபதி, வலியக்கடுத்தா கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோரும் துணைக் கடவுள்களாக இருக்கின்றனர்.

*வழிபாடுகள் : 

இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில், சபரிமலையில் நடக்கும் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இங்கு ஆண்டுதோறும், மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதத்தில் ஐயப்பன் - புஷ்கலை திருமண விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் முதல் நாளில் பாண்டியன் முடிப்பு எனப்படும் நிச்சயதார்த்த நிகழ்வும், தாலிப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வும், சமபந்தி விருந்தும் மிகச் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.
திருமணத்தடை இருப்பவர்கள், இங்கிருக்கும் சாஸ்தாவை வழிபட்டு வேண்டினால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடை பெறும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

*ஆரியங்காவு பெயர்க்காரணம் : 

‘ஆரியன்’ என்ற சொல்லுக்கு ‘உயர்ந்தவன்’ என்று பொருள். ‘காவு’ என்றால் ‘சோலை’ என்று பொருள். ‘உயர்ந்தவன் குடியிருக்கும் சோலை’ என்ற பொருளில், இவ்விடம் ‘ஆரியன் காவு’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘ஆரியங்காவு’ என்று மருவி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

*சம்பந்தி விருந்து:

மார்கழி மாதத்தில் இத்தலத்தில் ஐயப்பன் - புஷ்கலா திருமணம் நடைபெறுகிறது. அந்த சமயத்தில் மதுரையில் இருந்து செளராஷ்டிர இனத்தவர்கள் தங்கள் குல பெண்ணுக்கு சீதனம் எடுத்து வந்து திருக்கல்யாணத்தை நடத்துகின்றனர். திருமண சமயத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் 3 நாட்கள், பெண் வீட்டாருக்கு சம்பந்தி விருந்தளிக்கும் முறை தற்போதும் வழக்கத்தில் உள்ளது.

சாஸ்தா என்ற சொல்லை சாத்தன் என்றும் கிராம மக்கள் பயன்படுத்துகிறார்கள். சாத்து என்றால் கூட்டம். காட்டிற்குள் இருக்கும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டமாக வழந்து வழிபடுவதால் சாஸ்தா என்ற பெயரால் வழங்கப்படுகிறார். சிலர் அய்யனார் தான் சாஸ்தாவாக மாறி உள்ளதாக கூறுகின்றனர். ஐயன் என்றால் தலைவன் என்றும், தலைசிறந்தவன் என்றும் பொருள். ஆரியன் என்ற சொல்லுக்கு உயர்ந்தவன் என்றும், காவு என்றால் சோலை என்றும் பொருள். உயர்ந்தவன் குடியிருக்கும் சோலை என்பதால் இதற்கு ஆரியங்காவு என்னும் பெயர் வந்துள்ளது.

ஆரியங்காவு ஐயப்பன் கோவில் கேரள கட்டிட கலையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சடங்குகளும், பூஜைகளும் தமிழக முறையில் நடத்தப்படுகிறது. மூலஸ்தானத்தில் பார்வதி, லிங்க வடிவில் சிவன் ஆகியோருடன், திருமண கோலத்தில் புஷ்கலாவுடன் ஐயப்பன் காட்சி தருகிறார். நடுவில் பாலகனாக ஐயப்பனும் அவருக்கு இடப்புறம் அம்மனும் வலப்புறம் சிவனும் அமைந்துள்ளனர்.

இத்தலம்,"மூர்த்தி", "ஸ்தலம்", "தீர்த்தம்' என்ற மூவகையிலும் பெருமை வாய்ந்த திருக்கோவிலாகும். மதகஜ வாஹன ரூபனாக (மத யானையை அடக்கிய கோலம்) தர்மசாஸ்தா காட்சி தருகிறார். கருப்பா நதி என்ற நதிக்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. ஐயப்பன் கோவில்களில் இக்கோவில் மட்டுமே திருக்கல்யாண மண்டபம் உள்ளது. திருக்கல்யாண தினத்தன்று "சப்பர புறப்பாடு" நடைபெற்று மாலை மாற்றும் நடைபெறுகிறது.

ஆலயம் தினமும் 
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

*அமைவிடம் : 

கேரள மாநிலம், கொல்லம் நகரில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவிலும், புனலூர் நகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் ஆரியங்காவு உள்ளது. இங்கு செல்ல மேற்கண்ட ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதி இருக்கிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...