Friday, January 30, 2026

மன்மதனை எரித்தத் தலம் திருவேள்விக்குடி கல்யாணசுந்தரேஸ்வரர்

மன்மதனை எரித்தத் தலம்.
 
காமனைத் தகனம் செய்த இடம் 'விபூதிக்குட்டை ' என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாவேயுள்ளது.

மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம். மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் ஒன்றான தாமரை பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது.

திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். 
அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது.

அமைவிடம்:- மயிலாடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.
 திருவேள்விக்குடி - கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் 
இக்கோயிலுக்கு அருகில் உள்ள 32 கோயில்கள்:- 

I. மயிலாடுதுறை to திருஆப்பாடி

1. குத்தாலம் (திருத்துருத்தி) – உக்தவேதீஸ்வரர் திருக்கோயில் 
தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருவேள்விக்குடி - கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் (NCN023)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
குத்தாலத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 

3. திருஎதிர்கொள்பாடி - ஐராவதேஸ்வரர் திருக்கோயில் (NCN024)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருவேள்விக்குடியிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 

4. திருமணஞ்சேரி - உத்வாக நாதர் திருக்கோயில் (NCN025)
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருஎதிர்கொள்பாடியிலிருந்து  500 மீ தொலைவில் உள்ளது. 

5. பந்தனைநல்லூர் – பசுபதிநாதர் திருக்கோயில் (NCN035)
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருமணஞ்சேரியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது. 

6. திருப்பனந்தாள் - செஞ்சடையப்பர் திருக்கோயில் (NCN039)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
பந்தனைநல்லூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருஆப்பாடி - பாலுகந்த ஈஸ்வரர் திருக்கோயில் (NCN040)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்பனந்தாளலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

II. மயிலாடுதுறை to திருக்கடையூர் மயானம்

1. திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் திருக்கோயில் (SCN040)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருப்பறியலூர் (பரசலூர்) - வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (SCN041)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
திருவிளநகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 

3. செம்பொனார்கோவில் - சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN042)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்பறியலூரியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 

4. திருக்கடைமுடி (கீழையூர்) - கடைமுடிநாதர் திருக்கோயில் (NCN018)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
செம்பொனார்கோயிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருநனிபள்ளி (புஞ்சை) - நற்றுணையப்பர் திருக்கோயில் (SCN043)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்கடைமுடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

6. திருதலைச்சங்காடு - நான்மதிய பெருமாள் திருக்கோயில் (திவ்யதேசம்)
திருநனிபள்ளியிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருதலைச்சங்காடு - சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் (SCN045)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
நான்மதிய பெருமாள் கோயிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

8. மேலப்பெரும்பள்ளம் (திருவலம்புரம்) - வலம்புரிநாதர் திருக்கோயில் (SCN044)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருதலைச்சங்காட்டிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

9. கீழப்பெரும்பள்ளம் - நாகநாதஸ்வாமி திருக்கோயில்
(கேது பரிகார தலம்)
மேலப்பெரும்பள்ளத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

10. திருஆக்கூர் - தான்தோன்றியப்பர் திருக்கோயில் (SCN046)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
கீழப்பெரும்பள்ளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது. 

11. திருக்கடையூர் – அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் (SCN047)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருஆக்கூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 

12. திருக்கடையூர் மயானம் - பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN048)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்கடையூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

III. மயிலாடுதுறை to அம்பர் பெருந்திருக்கோவில்

1. திருமீயச்சூர் - மேகநாதசுவாமி திருக்கோயில் (SCN056)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து  18 கி.மீ தொலைவிலும், பேரளம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது.

2. திருமீயச்சூர் இளங்கோயில் - சகலபுவனேஸ்வரர் திருக்கோயில் (SCN057)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
(திருமீய்ச்சூர் மேகநாதசுவாமி கோயிலின் உள்ளே திருமீய்ச்சூர் இளங்கோயில் தலம் உள்ளது).

3. செதலபதி (திருதிலதைப்பதி) - மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில் (SCN058)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருமீயச்சூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

4. கூத்தனூர் - சரஸ்வதி திருக்கோயில் 
செதலபதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 

5. கொத்தவாசல் – ஆபத்சகாயஸ்வரர் திருக்கோயில்
(63 நாயன்மார்களுள் ஒருவரான கோச்செங்கட்சோழர் கட்டிய மாடக்கோயில்)
கூத்தனூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 

6. அம்பர் மாகாளம் - மாகாளநாதர் திருக்கோயில் (SCN055)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
கொத்தவாசலில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 

7. அம்பர் பெருந்திருக்கோவில் - பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN054)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
அம்பர் மாகாளத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

IV. மயிலாடுதுறை to திருக்கோழம்பம்

1. தேரழுந்தூர் (திருவழுந்தூர்) - தேவாதிராஜன் திருக்கோயில் 
(திவ்ய தேசம்)
மயிலாடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. 

2. தேரழுந்தூர் (திருவழுந்தூர்) -  வேதபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN038)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
தேவாதிராஜன் கோயிலில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

3. திருக்கோழம்பம் - கோகிலேஸ்வரர் திருக்கோயில் (SCN035) 
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
தேரழுந்தூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. 

V. மயிலாடுதுறை to நீடூர்

1. கோழிக்குத்தி - வானமுட்டி பெருமாள் திருக்கோயில் 
மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.  

2. அன்னியூர் (பொன்னூர்) - ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (NCN022)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
கோழிக்குத்தியிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3. குறுக்கை - வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (NCN026) * * * * * (பதிவில் காணும் கோயில்)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
அன்னியூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

4. நீடூர் - அருட்சோமநாதேஸ்வரர் திருக்கோயில் (NCN021)  
குறுக்கையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள்.

ஆரண்யேச்வரம் (கீழைத் திருக்காட்டுப் பள்ளி)  ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள்! - கீழைத்திருக்காட்டுப்பள்ளி அதிசயமும் வரலாறும்  தமி...