Sunday, January 8, 2023

திருச்சிற்றம்பலம் என்றால் என்ன

திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?...
சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.

நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டை விரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது. 

அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக் கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. 

இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோவில் புராணம் எடுத்துரைக்கின்றது.

அதாவது நாம்தான் அது,
அதுவே நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்த திருநடனம்.
அதாவது மனிதனின் 
அகம் ஒரு கோயில்
உள்ளம் பெருங்கோயில், 
ஊன் உடம்பு ஆலயம்,

திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான்.

பொதுவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும்,
சீவனே சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கை கூப்பி திருச்சிற்றம்பலம் என்று கூறுவர். 

அதற்கு எதிர் புறம் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் கூறுவர். 

இதற்கு என்ன பொருள் என்றால் உன்னுள் இருக்கும் (பிண்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்)உன் ஆன்மா சிற்றம்பலத்தில் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறுவதாக பரிபூரணமாவதாக என்று பொருள் 

அதற்கு எதிரில் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் சொல்லுவர்.

உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் ஆத்மா  நிறைவு பெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறாற்கள் என்று அர்த்தம் பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூற வேண்டும்.

கூறுவதோடு நில்லாமல்

தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை மனதால் தரிசிக்க வேண்டும்.
உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி. 

இதனை உணர்த்தவே திருசிற்றம்பலத்தில் நடராஜ  பெருமான் மனித ரூபத்தில் ஆனந்த கூத்தாடுகிறான். 

நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் .

மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சு விடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . 

மனித உடலும் கோவில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!.

சிதம்பர ரகசியம் என்றால் வேறு ஒன்றும் இல்லை ; 
எல்லாம் மனக் கண்ணால் பார்க்க வேண்டியது .திரை ரகசியம்.
திரை விலகினால் ஒளி தெரியும்.
மாயை விலகினால் ஞானம் பிறக்கும்

இப்பதிவை படிக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் திருச்சிற்றம்பல வணக்கம்.

திருச்சிற்றம்பலம் என்று சொல்ல சொல்ல நாம் அறியாமல் பார்க்கும் பேசும் செய்யும் அனைத்து பாவச் செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்கு புண்ணியம் சேற்க்கிறோம். அப்போது அறியாமையால் ஏற்படும் தவறு எவ்வளவு என்பது நமக்கு தெரியாது

அதனால் நாம் திருச்சிற்றம்பலம் என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா?.

மேலும் திருச்சிற்றம்பலத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும் உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது.

ஆனால் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவ கதி அடைய வேண்டும் என்பதற்காக ஒரு ரகசிய கோட் வேர்டாக இதை இறைவனே திருச்சிற்றம்பலமுடையான் என்று தன் பெயரை குறிப்பிட்டான்.
.

Saturday, January 7, 2023

புற்று நோயை கட்டுப்படுத்தும் திருப்பாராய்த்துறை திருத்தலம்

புற்று நோயை கட்டுப்படுத்தும் திருப்பாராய்த்துறை திருத்தலம்..மீள் பதிவு இன்று 7/1/2023 சனிக்கிழமை 








🕉️புற்று நோயின் தீவிரம் கட்டுக்குள் வருவதற்காக, இந்த ஆலயத்திற்கு நேரில் வந்து வழிபட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
🕉️திருச்சிராப்பள்ளி மாநகருக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்தில் கரூர் குளித்தலை சாலையின் இடது ஓரத்திலேயே இருக்கிறது திருப்பாராய்த்துறை. முக்கொம்பு என்னும் சுற்றுலாப் பகுதியின் நுழைவு இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்தத் திருத்தலம்.
பராய் மரம் :
🕉️திருக்கோவிலின் வெளிச்சுற்று, உயர்ந்த மதிற் சுவர்களுக்கு இடையே இருக்கிறது. இருபுறமும் மலர்ச் செடிகளின் ஊடே நடுவில் கருங்கல் தள வரிசையில் நடந்து வந்தால், தென் மேற்கில் தனி சன்னிதியில் வீற்றிருக்கும் கன்னிமூலை கணபதியை தரிசிக்கலாம். வடமேற்கில் வள்ளி–தெய்வானை சமேத முருகப்பெருமான் தனிச்சன்னிதியில் கோவில் கொண்டுள்ளார்.
🕉️நடுவில் மிகப் பழங்காலத்து பராய் மரம், சுற்றிலும் கம்பி வேலி இடப்பட்டு காணப்படுகிறது. அடியில் சிவலிங்கம் வீற்றிருக்க சிறிது இலைகளுடன் உயர்ந்து நிற்கிறது பராய் மரம். இந்த மரத்தின் இலைகளும், பட்டையும், வேரும் முழுவதும் மருத்துவ குணமுடைய பராய்மரம் தான் தலவிருட்சமாக உள்ளது. மற்ற எந்த ஆலயத்திலும் இல்லாது இங்கே மட்டும் தான் இந்த மரம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த இடம் பராய் மரங்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. எனவே தான் ‘தாடுகாவனம்’ என்று வடமொழியில் அழைக்கிறார்கள். இறைவன் பராய்த்துறை நாதர் என்றும், தாருகாவன ஈசர் என்றும் மரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறார்.
பிரார்த்தனை :
🕉️கேன்சர் எனப்படும் புற்றுநோய் என்பது இன்றும் கடின நோயாகவே பார்க்கப்பட்டு வருகிறது. உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமான பெருக்கம் அடையும் தன்மை கொண்டது. இந்த நோய் உடலின் உள்ளுறுப்புகளிலும், வெளிப்புறத்திலும் தாக்கலாம். இடம், வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல, இந்த நோய்க்கு கதிரியக்கச் சிகிச்சை நவீன மருத்துவத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.
🕉️இருப்பினும் ‘இறைவன் சர்வ வல்லமை பெற்றவன்; நம்மைக் காப்பான்’ என்ற நம்பிக்கையில், அவனையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறோம். புற்று நோயின் தீவிரம் கட்டுக்குள் வருவதற்காக, இந்த ஆலயத்திற்கு நேரில் வந்து வழிபட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
🕉️கோவிலின் அக்னி மூலையில் உள்ள கிணற்றில் இருந்து நீர் இறைத்து, ஒற்றைப்படை வரிசையில் தல விருட்சத்துக்கு நீர் ஊற்றிவிட்டு அதனை பன்னிரண்டு முறை சுற்றி வரவேண்டும். பதினோரு முறை சிவ நாமம் சொல்லியும், பன்னிரண்டாவது சுற்றில் பிரார்த்தனையையும் சொல்லி இறைவனை வழிபட வேண்டும்.
🕉️மூலிகை மரக்காற்றே மனதுக்கும், உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சியைத் தரும். பிறகு பராய்த்துறைப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். கோவிலில் அர்ச்சகர் கொடுக்கும் மூலிகை பிரசாதத்தைத் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் அருந்திவிட்டு, சிவபெருமானின் அருள்பெற்ற விபூதியை உடலில் தரித்துக் கொள்வது நன்மை அளிக்கும்.
🕉️வாரம் தோறும் திங்கட்கிழமைகளிலோ அல்லது மாத சிவராத்திரி காலங்களிலோ, இத்தல இறைவனை தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தால், கை மேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
திருக்கோவில் அமைப்பு :
🕉️காவிரி தென்கரையோரம் 7 நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளது. நந்தியம்பெருமானை வழிபட்டு, அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றால், அங்கே மற்றொரு கோபுரம் ஐந்து நிலைகளுடன் நம்மை வரவேற்கிறது.
🕉️அதையும் கடந்து சென்றால், கலை அழகுமிக்க மண்டபங்களுக்கு அடுத்தபடியாக இறைவனின் கருவறை காணப்படுகிறது. கிழக்கு நோக்கிய வண்ணம் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார் திருப்பராய்த்துறை நாதர். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி நடராஜர் சபை உள்ளது. அங்கிருந்து வெளியே வந்தால் அருகிலேயே தெற்கு நோக்கிய படி அன்னை ‘பசும்பொன் மயிலாம்பாள்’ என்ற திருநாமத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
🕉️உள் பிரகாரம் முழுவதும் கருங்கற்களால் மூடப்பட்டு குளிர்ச்சியாக இருக்கிறது. அந்த உட்பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், சப்த கன்னியர், சமயக் குரவர்கள் நால்வர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கிய வண்ணம் சோமாஸ்கந்தர், விநாயகர், வள்ளி– தெய்வானையுடன் சுப்ரமணியர், பஞ்சலிங்கங்கள், மகாலட்சுமி, விஷ்ணு, அவருக்கு அருகே துர்க்கை மற்றும் லட்சுமி சேர்ந்த துர்க்கா லட்சுமி ஆகியோர் வீற்றிருக்கிறார்கள்.
🕉️இந்த மூர்த்தங்களை அடுத்தாற்போல, அழகிய கோலங்கொண்ட ஆறுமுகப்பெருமான் பன்னிரு கைகளுடன் ஆயுதங்களைத் தாங்கி, மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி– தெய்வானை வீற்றிருக்கிறார்கள். ஆறுமுகப்பெருமானின் முன்பாக திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் இருப்பது தனிச்சிறப்பாகும்.
🕉️தேவ கோஷ்டத்தில் தெற்கு நோக்கிய நிலையில் மேதா தட்சிணாமூர்த்தி, பின்புறம் லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன. ஈசானிய மூலையில் நவக்கிரகங்களுக்கான மேடை உள்ளது. இதில் சனீஸ்வரருக்கு மட்டும் காக்கை வாகனம் உள்ளது. அருகே மேற்கு நோக்கிய திசையில் கால பைரவர் காட்சி தருகிறார்.
🕉️சுவாமி அம்பாள் வீற்றிருக்கும் வெளி மண்டபத்தில் நுழைவு வாசலின் ஒரு தூணில், காலை முழுவதும் உயர்த்தி ஊர்த்துவத் தாண்டவமாடும் கோலத்தில் நடராஜர் வீற்றிருக்கிறார். அதற்கு எதிர் தூணில் அவருடன் போட்டி போட்டு நடனமாடும் கோலத்தில் காளியின் திருக்கோலம் அமைக்கப்பட்டிருப்பது அற்புதக் காட்சியாக உள்ளது.
🕉️‘அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இரக்கை மேவிய ஈசனை பேத்துமின்
பொருக்க நம்வினை போயறுங் காண்மீனே’ –என்ற அப்பர் 11 பதிகங்களை இந்தத் திருத்தலத்தில் பாடியுள்ளார். மேலும் திருஞான சம்பந்தர் 11 பதிகங்கள் பாடியிருக்கிறார். இது தவிர இத்தல இறைவனைப் பற்றி திருவாசகத்தில் மாணிக்கவாசகரும், பட்டினத்தாரும் பாடி சிறப்பித்துள்ளனர்.
🕉️தினமும் காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
முதல் முழுக்கு :
🕉️காவிரியின் தென்கரை சாலையை ஒட்டி இந்த ஆலயம் அமைந்திருப்பதால், காவிரி நதியே இந்த ஆலயத்தின் தல தீர்த்தமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் துலா மாதத்தின் (ஐப்பசி), முதல் நாள் அன்று இங்கு ‘முதல் முழுக்கு’ என்ற நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகுதான் மயிலாடுதுறை திருத்தலத்தில் ‘கடை முழுக்கு’ என்ற நீராடல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
🕉️முதல் முழுக்கு அன்று காவிரிக்கரையில் சுவாமியும், அம்பாளும் உற்சவர்களுக்கும் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் அம்பாளும், இறைவனும் கோவிலுக்கு வருவார்கள். அப்போது அவர்களை வணங்கி வழிபட்டால், சகல தோஷங்களும், பாவங்களும் பறந்தோடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. புரட்டாசி மாதம் இந்த ஆலய இறைவனையும், இறைவியையும் அர்ச்சித்து வழிபடுவதும் தனிச் சிறப்பாக கூறப்படுகிறது.
               🌙ஓம் நமச்சிவாயம் வாழ்க
தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நற்றுணையாவது நமச்சிவாயவே

கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

சிவபெருமான் பற்றிய சிறப்பு செய்திகள்...!
சிவபெருமான் ஒவ்வொரு கோவில்களிலும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. 

இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்றபெயருடன் காட்சி தருகிறார். 

தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். 
இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.

பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். 

அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.

ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திபருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால்
அர்ச்சனை செய்கின்றனர். 

ஓம் நமசிவாய 🙏

Thursday, January 5, 2023

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன

*ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு)*  *சிவபெருமானுக்கு*
*உரிய நட்சத்திரம்* *திருவாதிரை என்கிறார்களே எப்படி ?*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*தமிழ் மொழியில் திருவாதிரை* *என்று கூறப்படும் நட்சத்திரத்*
*திற்கு* *வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா  சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பிறவா யாக்கைப் பெற்றோன்  பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.
🍁🍁🍁🍁🍁🍁🍁
சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமா
னுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்
🍁🍁🍁🍁🍁🍁🍁
 ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.
🍁🍁🍁🍁🍁🍁🍁
திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.
🍁🍁🍁🍁🍁🍁🍁
அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁
அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
 இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.
🍁🍁🍁🍁🍁
சேந்தனாருக்கும்  திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக  கொண்டாடப்படு
கிறது.

ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்
திருச்சிற்றம்பலம்...  
🙏🙏🙏🙏🙏🙏🙏
*வரும்,,6,, ஆருத்ரா தரிசனம்......🙏🌙*
*🔱 சிவசிவசிவ சிவாயநம  ஓம் நம சிவாய நம ஓம் காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

#கோயில்_என்றாலே #ஸ்ரீவைஷ்ணவர்களுக்குஸ்ரீரங்கம்தான்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

                 #கோயில்_என்றாலே #ஸ்ரீவைஷ்ணவர்களுக்குஸ்ரீரங்கம்தான்' என்று போற்றிச் சொல்லப்படும் பெருமை கொண்டது #திருவரங்கத்_திருத்தலம்

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

#குடதிசைமுடியை_வைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு
உடலெனக்குருகுமாலோ #என்செய்கேனுலகத்தீரே."

⭕எனத் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிப் பரவசமடைந்த இந்த ஸ்ரீரங்கத்தில் அருளும் ஸ்ரீரங்கநாதர்,

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

⭕இந்த ஆலயத்தின்
 #ஏழுசுற்றுகளையும்_ஏழுலோகங்களாகச்சொல்வார்கள். அவற்றில், 

🔯திருமாடங்கள் சூழ்ந்த சுற்று     
                                           `#பூலோகம்என்றும்,  

🔯திரிவிக்ரம சோழன் சுற்று `#புவர்லோகம்என்றும்_அகளங்கன்_சுற்றுஎனும் 

🔯கிளிச்சோழன் சுற்று `#ஸுவர்லோகம்’ என்றும்,  

🔯திருமங்கை ஆழ்வார் சுற்று `         
                               ]#மஹர்லோகம்_என்றும்,  

🔯குலசேகர ஆழ்வார் சுற்று 
                            `    #ஜநோலோகம்_என்றும், 

🔯 ராஜமகேந்திரச் சோழன் சுற்று   
                             `      #தபோலோகம்_என்றும்,  

🔯 ஆதிதர்மவர்ம சோழர் சுற்று `    #சத்யலோகம்என்றும் போற்றப்படுகிறது. 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

🌺 மேலும், இங்குள்ள #ஒன்பதுதீர்த்தங்களும் இந்தியாவின் புனிதமான ]#ஒன்பது_நதிகளின்அம்சமாக_அடங்கியுள்ளன என்கிறார்கள். 

🍒 சந்திர புஷ்கரணி #கங்கையாகவும், 

🍒வில்வ தீர்த்தம் #யமுனையாகவும், 

🍒 சம்பு தீர்த்தம் #சரஸ்வதியாகவும், 

🍒பகுள தீர்த்தம் #கோதவரியாகவும்

🍒, பலாச தீர்த்தம் #கிருஷ்ணாவாகவும், 

🍒அசுவ தீர்த்தம் #நர்மதாவாகவும்,  

🍒ஆம்ர தீர்த்தம் #துங்கபத்ராவாகவும்,

🍒 கதம்ப தீர்த்தம் #கண்டகி_நதியாகவும், 

🍒புன்னாக தீர்த்தம் #காவிரியின் வடிவாகவும் இங்கு போற்றப்படுகின்றன. 

#விண்ணகத்து_லோகங்களும்_மண்ணகத்து_நதிகளும்_ஒருசேர_அமைந்திருக்கும்புண்ணியத்தலம்_திருவரங்கம்.

🙏🙏🙏'இந்திரப்பதவி தரினும் வேண்டேன், இந்த  
#அரங்கமாநகரத்து_ஆலயம்_போதும்' என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பெருமைக்குரிய ஆலயம்.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

உத்திரகோசமங்கைபச்சைக்கல் நடராசப்பெருமான்வரலாறு

சித்தம் சிவமயம்
உத்திரகோசமங்கை
பச்சைக்கல் நடராசப்பெருமான்
வரலாறு

மங்களநாதசுவாமியும் மரைக்காயரும்

பெருமை மிக்க உத்தரகோசமங்கையில் இந்த மரகத நடராசர் சிலை உருவானதே எதிர்பாராத நிகழ்வாகும். 

இராமேசுவரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற மீனவ கிராமப் பகுதி இருந்தது. அங்கு மரைக்காயர் என்ற மீனவர் வறுமையில் வாழ்ந்து வந்தாலும், மிகுந்த நம்பிக்கையுடன் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமியை அன்றாடம் வழிபட்டு வந்தார். தினந்தோறும் பாய்மரப்படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

பாறையில் மோதிய படகு
ஒரு நாள், மரைக்காயர் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென கடலில் சூறாவளிக் காற்றுடன் பேய் மழை பெய்ய ஆரம்பித்தது. அதில் அவருடைய பாய்மரப்படகு நிலைகுலைந்து எங்கேயோ அடித்து சென்றது. அப்படியே வெகு தூரம் போனபிறகு, படகு ஒரு பாசிபடர்ந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது. அதில் அந்த பாசி படர்ந்த பாறை அப்படியே சரிந்து மூன்று துண்டுகளாக அந்த படகில் விழுந்து விட்டது. பாறை சரிவதற்காகவே காத்திருந்தது போல், அது வரையிலும் அடித்து துவைத்து வந்த பேய் மழையும் சட்டென்று நின்றது.

உயிர் திரும்பிய மரைக்காயர்
மரைக்காயர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, திரும்ப மண்டபம் நோக்கித் திரும்பி வருவதற்கு பார்த்தால், அவருக்கு தான் எந்த திசையில் இருக்கிறோம் என்ற தெரியவில்லை. 

உடனே தான் அன்றாடம் கும்பிட்டு வரும் மங்களநாதசுவாமியை மனதில் நினைத்துக்கொண்டு, பல நாட்கள் கஷ்டப்பட்டு படகை செலுத்திக்கொண்டு ஒரு வழியாக மண்டபம் வந்து சேர்ந்தார். கடலுக்கு சென்றவர் இன்னும் திரும்பி வரவில்லை என்று காத்திருந்த மரைக்காயரின் உறவினர்கள், அவரை உயிரோடு பார்த்த உடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

படிக்கல்லாக மாறிய பாறை
மரைக்காயர் படகில் கொண்டு வந்த பாசி படர்ந்த பாறைக் கற்களை என்ன செய்வது என்று தெரியாமல், சரி வீட்டுக்கு படிக்கல்லாக இருக்கட்டும் என்று போட்டு வைத்தார். வீட்டுக்குள் போக வரும் ஆட்கள் அந்த பாறைக் கல் மீது நடந்து நடந்து பாறை மேலிருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி, சூரிய வெளிச்சத்தில் பளபளவென்று மின்னத் தொடங்கியது.

பாண்டியன் பரிசு

பாறை மின்னுவதைப் பார்த்த மரைக்காயர், அந்த மங்களநாதசுவாமி தான் தன்னுடைய வறுமையை போக்க அளித்த பரிசு என்று நினைத்து, மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாக அளித்தால் வறுமை நீங்கும் என்ற நல்லெண்ணத்துடன் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். அங்கு, தனக்கு நடந்த அனைத்தையும் விளக்கிக் கூறி, தன்னிடம் ஒரு பச்சைப் பாறை உள்ளது என்று தெரிவித்தார்.

பொற்காசுகள்
பாண்டிய மன்னரும், 

மரைக்காயர் சொன்னதைக் கேட்டு உடனடியாக ஆட்களை அனுப்பி அந்த பச்சை பாறைக்கற்களை எடுத்துவரச் சொன்னார். கொண்டு வந்த அந்த பாறைக் கற்களை, அது பற்றிய விவரம் தெரிந்த ஆட்களை வைத்து சோதித்து பார்த்தார். பாறையை சோதித்து பார்த்த அவர்கள் மன்னரிடம், நிச்சயம் இது விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக்கல். உலகில் வேறு எங்கு தேடினாலும் நிச்சயம் கிடைக்காது என்று சொன்னார்கள். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சை பாறைக்கற்களுக்கு உரிய பொற்காசுகளை வெகுமதியாக அளித்து வழி அனுப்பி வைத்தார்.

சிலை வடிக்க ஆள் இல்லையே
மரைக்காயரை வழியனுப்பி விட்டு வந்த பாண்டிய மன்னர், இவ்வளவு விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக் கல்லில் ஒரு நடராசர் சிலை வடித்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு, நடராசர் சிலை வடிக்க பல இடங்களிலும் தேடி கடைசியில், இலங்கை மன்னன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தரான இரத்தின சபாபதியைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை நடராசர் சிலை வடிக்க அனுப்பி வைக்குமாறு இலங்கை மன்னருக்கு ஓலை அனுப்பி வைத்தார்.

மரகத நடராசர்
சிலை வடிக்க சிற்பியும் வந்து சேர்ந்தார். சிலையை வடிக்க அந்த பாறையை பார்த்த உடனேயே மயங்கிச் சரிந்தார். மன்னரிடத்தில் தன்னால் மரகத நடராஜர் சிலையை செய்ய முடியாது என்று பின்வாங்கி சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பாண்டிய மன்னர், அந்த மங்களநாதசுவாமி சன்னதி முன் நின்று பிரார்த்தனை செய்தார். 

அப்போது, 
நான் மரகத நடராசர் சிலையை வடித்து தருகிறேன் மன்னா கவலை வேண்டாம், என்று ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய மன்னர், அங்கே ஒரு மனதை மயக்கும் வகையில் ஒரு சித்தர் நிற்பதைக் கண்டார். அவர் தான் சித்தர் சண்முக வடிவேலர். உடனே மன்னரின் கவலை நீங்கியது.

ஆடல்வல்லான் 
நடராசர் மரகத நடராசர் சிலையை வடிக்கும் பொறுப்பை சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அதோடு அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். 

சித்தரும், 
அந்த பெரிய பாறையில் ஐந்தரை அடி உயர மரகத நடராசரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில், மிகவும் நுணுக்கமாக, நடராசரின் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் புடைக்க தெரியும் படி வடித்தார் சித்தர் சண்முக வடிவேலர். பின்பு பாண்டிய மன்னரை அழைத்து முதலில் நடராச மூர்த்தியை பிரதிட்டை செய்த, பின்பு கருவறை அமைக்கும் படி அறிவுறை கூறினார். அப்படி செய்ததால் தான்.

உத்தரகோசமங்கை 
நடராசர்
பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என பல படையெடுப்புகளையும் தாண்டி, இன்றைக்கும் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் ஆடவல்லால் ஆன நடராசர் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் திருநடனம் புரிந்து வருகிறார். சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும். இந்த உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் கைலாயம் செல்வது நிச்சயம்.


முப்பத்து முக்கோடி தேவர்கள் யார்?.

முப்பத்து முக்கோடி தேவர்கள் யார்?.... 

தெரிந்து கொள்வோம்.....

நம்முடைய தெய்வங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் போது முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று கூறுவது உண்மைதான். 

முப்பத்து முக்கோடி என்பது 33 கோடி ஆகும்.

இங்கே "கோடி" என்பதை எண்ணிக்கையைக் குறிக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்
ஆனால் "கோடி" என்ற சொல் சமஸ்க்ருதத்தில் " பிரிவு அல்லது வகை" என்பதைக் குறிக்கும்.

ஆக மொத்தம் 33 வகையான தெய்வங்கள் ஹிந்து சனாதன தர்மத்தில் உள்ளன என்பதை சொல்லவே முப்பத்து முக்கோடி என்கின்றனர்

உதாரனமாக.......
கிராமங்களில் ஒருவர், அந்த தெரு கோடியிலிருந்து வருகிறேன் என்றால் கோடி தெரு என்பதல்ல அர்த்தம் அதாவது அந்த தெருவின் பிரிவிலிருந்து வருகிறேன் என்பதாகும்.

அது போல் கோடி வேஷ்டி என்றால் ஒரு கோடி வேஷ்டி எனபதல்ல அர்த்தம் அது வெண்மையும் அல்லாத மஞ்சளும் அல்லாத ஒரு வேஷ்டி (வெள்ளாவியில் வண்ணார் வைத்தால் வெள்ளையாகி விடும் எனவே அதை கோடி வெளுப்பாக கொடு என்பர் ஊர்களில்)

○ கோடி என்பது எண்ணிக்கை அல்ல அதன் உண்மையான அர்தம் "பிரிவு" என்பதே

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால்

வசு, ருத்ர, ஆதித்ய ரூபம் என்று மூன்றாகப் பிரிப்பர்

நாங்களோ அல்லது உங்களை போன்றவர்களோ பொதுவாக அமாவாசை தர்பணத்தில் பித்ரு வசு ரூபமாகவும், பிதாமஹர் ருத்ர ரூபமாகவும், பிதுர்பிதாமஹர் ஆதிதய ரூபமாகவும் உள்ளதாக கூறி தர்பணம் செய்வோம்.

அதில் வசு கீழ் நிலை. ருத்ரர் இரண்டாம் நிலை. ஆதித்யர் மூன்றாம் நிலை. இந்த மூன்று நிலையில் 31 பிரிவுகள் அடங்கும்

அந்த 31 பிரிவுகள் எவை பார்ப்போம்.

31 அதில்....

□ ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள்

1) விஷ்ணு

2) தாதா

3) மித

4) ஆர்யமா

5) ஷக்ரா

6) வருண

7) அம்ஷ

8) பாக

9) விவாஸ்வான்

10) பூஷ

11) ஸவிதா

12) தவாஸ்தா

□ வசு நிலையில் 8 வகையாவன:

13. தர

14. த்ருவ

15. சோம

16. அனில

17. அனல

18. ப்ரத்யுஷ

19. ப்ரபாஷ

□ ருத்ரன் நிலையில் 11 பிரிவுகள்

21. ஹர

22. பஹூரூப

23. த்ரயம்பக

24. அபராஜிதா

25. ப்ருஷாகாபி

26. ஷம்பூ

27. கபார்தி

28. ரேவாத்

29. ம்ருகவ்யாத

30. ஷர்வா

31. கபாலி

□மற்றும் 2 பிரிவு அஷ்வினி குமாரர்கள்.

ஆக மொத்தம் = 33 வகையான (பிரிவுகளான) தெய்வங்கள்.

முப்பத்து முக்கோடி என்பது இதுதான். புரிந்ததா?....... 
நாம் நினைப்பது போல் 33 கோடியும் இல்லை. முப்பத்து முக்கோடியும் இல்லை.

இனிமேல் கோயில்களில் தெய்வங்களை வழிபடும் போது இதை மனதில் வைத்து கொண்டு வழிபடுவோம்.

வாழ்க வளமுடன் 🙏🙏🙏

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...