Thursday, February 23, 2023

அனைத்து தோஷங்களையும் நீக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு

அனைத்து தோஷங்களையும் நீக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு... 
இரட்டை பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தியில் அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். .

ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதி தேவி தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தார். 

இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் திருத்தலத்தில் சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். ‘ஆதி இரட்டை விநாயகர்’ என்று போற்றப்படுபவரும் இவரே.

அது போலவே திருச்சி பாலக்கரைப் பக்கத்திலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாகக் கருதப்படுகிறது.

தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். மேலும் கார் அரிசியில் மோதகம் (கொழுக்கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.

திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும். விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

பொதுவாக, செவ்வாய்க் கிழமைகளில் வழிபட நாக தோஷம் விலகும், சனிக்கிழமைகளில் கனி வகைகளில் ஏதாவது ஒன்றைச் சம்ர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.

தஞ்சை, திருவையாறு, ஐயாறப்பன் கோவிலில் உள்ளார் இரட்டைப் பிள்ளையார். இவர் சந்நிதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருமணமாகாத பெண்கள் சந்தான அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும்.

மேலும் ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள உத்தமர்கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் அடுத்த ஆறகலூரில் இருக்கும் கோவில், ஊட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள விநாயகர் கோவில் திருவண்ணாமலை போன்ற இடங்களிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது.

இரட்டை விநாயகரை ஒரே சந்நிதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும்

சிவ_பக்திக்கு_அர்த்தம்_தெரியுமா

♦சிவபக்தி♦

ஓம் சிவாய நமஹ
சிவ சிவாய நமஹ....

#சிவ_பக்திக்கு_அர்த்தம்_தெரியுமா..??

ஸ்ரீ ஹரதத்தர் என்பவர் வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து சிறந்த சிவபக்தராக விளங்கியவர். ஒருநாள் காவிரி கரையில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர். 
அந்த சமயம் ஒரு வேடனும் அவனது மனைவியும் பேசிக் கொண்டது இவர் காதில் விழுந்தது. அவ்விருவரும் காவிரியை கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால் ஆற்றில் இறங்கி நடந்தே அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள் மனைவி.

அதற்கு அவள் கணவன் அப்படி செய்யக் கூடாது. கங்கையை காட்டிலும் காவிரி புனிதமானது.அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும் ஒவ்வொரு சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர்.நாம் கர்ம வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம். கரையிலிருந்த படியே ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து காவிரி ஸ்நானம் செய்து விடலாம். இந்த கர்ம சரீரத்துடன் காவிரியில் இறங்கி சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம். கொஞ்ச தூரம் சென்றால் மூங்கில் பாலம் வரும்.அதன் வழியாக அக்கரை சேரலாம்…என்றான்.

அவனது பக்தியும் ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால் அவன் அருகில் சென்று அவனை வணங்கி நின்றார்.
உடன் அவன் பதறிப் போய்

சுவாமிகளே… நீங்கள் என்னை வணங்கலாமா என்னை தொடலாமா இதனால் எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்…என்றான்.
அதற்கு ஹரதத்தர் அய்யனே…உன்னை போல சிவபக்தியும் ஞானமும் கொண்ட எவரையும் நான் பார்த்ததில்லை. காவிரியின் மகிமையையும் அதிலுள்ள மணல் ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை. வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட உன்னுடைய இந்த மனோபாவம் இருந்ததில்லை. நீயல்லவோ உண்மையில் சிவ தத்துவமறிந்தவன்… என்று புகழ்ந்து பாராட்டினர்.

இது சிவலிங்கம்; இது கல்; இது மண்; என்ற பேதமின்றி சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே சிறந்த சிவபக்திக்கு அடையாளம்.இப்படிப்பட்ட எண்ணம் எல்லாருக்கும் வந்து விடுமா? இதற்கு மனம் பக்குவப்பட வேண்டும். பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது. எதிலும் பகவானை காணும் மனோபாவம் இருந்தால் நாளடைவில் மனம் பக்குவப்படும்.
 
சரணம்  சரணம்
மகேஷ்வரா .....

Wednesday, February 22, 2023

புராண பெயர் : வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம். ஊர் : காசி மாவட்டம் : வாரணாசி மாநிலம் : உத்திர பிரதேசம்

*🔯அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்*
*🔯மூலவர் : காசி விஸ்வநாதர்*
  *அம்மன்/தாயார் : விசாலாட்சி*

  *தீர்த்தம் : கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.*

  🔯புராண பெயர் : வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம்.
  ஊர் : காசி
  மாவட்டம் : வாரணாசி
  மாநிலம் : உத்திர பிரதேசம்
 
  *🔯திருவிழா:*
     
  தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்ஸவம்), ஹோலிப் பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி.  
     
  *🔯தல சிறப்பு:*
     
  இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது,

 🔯அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.  
     
🔯 திறக்கும் நேரம்: 
     
  காலை 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

🔯 அமாவாசை நாட்களில் நாள் முழுதும் திறந்திருக்கும்.  
     
 🔯முகவரி: 
     
  அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி-221 001, வாரணாசி மாவட்டம்,- உத்தரப்பிரதேசம் மாநிலம்.  
     
 போன்: 
     
  +91 542-239 2629  
     
  *🔯பொது தகவல்: *
     
  ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன.

🔯 மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். 

🔯கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். 

*🔯காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள். காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம்.*

*🔯 ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.*
🔯இந்த கோயிலை முதன்முதலில் கட்டியது யார் எனக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். முகலாய சக்ரவர்த்தி அக்பர் தனது வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார்.

 தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துள்ளார். ஆனால் காசி விஸ்வநாதர் கோயிலின் பழங்கால வரலாற்றிலும் கல்வெட்டுகளிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதுமில்லை. கி.பி 1034ம் ஆண்டு முதல் காசி விஸ்வநாதர் கோயில் பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தள்ளப் பட்டுள்ளது. இதை இந்துக்கள் திரும்பத் திரும்ப கட்டி வந்துள்ளனர். 1669-ல் அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோயில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார். இப்போதும் இந்த மசூதி இருக்கிறது. சிருங்கர் மண்டப சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம். இதிலிருந்து காசி கோயில் ஒரு புண்ணி சத்திரம் மட்டுமல்ல ஒற்றுமையின் சின்னம் என்பதும் நமக்கு புரிகிறது.

*🔯இங்கு அன்ன பூரணி, சத்திய நாராயணர், டுண்டி ராஜவிநாயகர், சாட்சி விநாயகர், இராமர், அனுமன், சனிபகவான், துர்காதேவி, கவுடி மாதா, பைரவர், மகாகாளர், மகா காளி, பாண்டுரங்கன், நீலகண்டர், தண்டபாணீச்வரர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.*

*🔯 விசுவநாதர் கோயில் கர்ப்பகிருகம் வடநாட்டுப்பாணியில் கோபுரம் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது.*

 மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார்.

*🔯 பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர்.*

 லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.

🔯கோயிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி. ஆதி விசுவநாதர் கோயிலிருந்த இடத்தில் மசூதி உள்ளது. அந்த நந்தியின் அருகேதான் ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார். இந்த கோயில் மிகவும் சிறிய கோயில் தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம்.

🔯அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்னபூரணி கோயிலும், விசாலாட்சி கோயிலும் தனியே சிறிது தொலைவில் உள்ளன.

🔯 விசாலாட்சி கோயில் நமது தென்னாட்டுப் பாணியில் உள்ளது. இங்கே நவக்கிரகங்களும் உள்ளன. 

🔯அன்னபூரணி அம்பாள் கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள்.
     
 
 *🔯பிரார்த்தனை* 
     
  🙏வியாச காசியில், வியாசர் வழிபட்ட சிவலிங்கத்தை வழிப்பட்டால் தான், காசிக்கு வந்த முழுப் பலனையும் அடையலாம். காசிக் காவலர் பைரவர் கோயிலில், காசிக் கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டால், நம்மைத் தீய சக்திகள் அண்டாது. 

*🔯கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. விசுவநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. ஞான வாவியைத் தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது - என்று முனிவர்கள் பலர் கூறியுள்ளனர்.*  
     
 *🔯நேர்த்திக்கடன்:*
     
  பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் தம் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.  
     
  *🔯தலபெருமை:*
     
  இங்கு விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே, இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர்.

🔯 வெள்ளித்தகடு பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது இவர் காட்சியளிக்கிறார். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது, அவர்களை எரித்து அழித்த இடம் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே, இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வந்தது. 

🔯விசாலாட்சி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது. கங்கை நதியின் மேற்குக்கரையில் காசி அமைந்துள்ளது.

🔯 காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கைநதி ஓடுகிறது. இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால் உத்தர வாகினி என்று அழைக்கின்றனர்.

*🔯தீர்த்தக் கட்டங்கள்:*

 கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும்.

 ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும்.

🔯இதற்கு பஞ்சதீர்த்த யாத்திரை என்று பெயராகும். 

🔯அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் அஸ்சங்கமேஸ்வரர் எனப்படுகிறார். 

🔯முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும்.

🔯 துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது.

🔯 இந்த தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது. இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள ஆதிகேஸ்வரரை வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள பிந்துமாதவர் மற்றும் கங்கேஸ்வரரை வணங்க வேண்டும். 

🔯பஞ்ச தீர்த்தக்கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். 

🔯இந்த கரையிலுள்ள மணிகர்ணிகேஸ்வரரையும், அம்பாளையும் வழிபட வேண்டும்.

🔯மகாராஜா ரஞ்சித்சிங் கோயிலுக்கு 820 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். காசியில் மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்ஹேஸ்வர் என்றுமே அழைக்கப்பட்டார். இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன்பிறகே சூட்டப்பட்டது. பொதுவாக வயதானவர்களே இந்த தலத்திற்கு போய்வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இளைஞர்களும் இங்கு சென்றுவரலாம்.

 ஏனெனில் காசி விஸ்வநாதர் ஆலயம் ஒரு அறிவுத் திருத்தலம் ஆகும். 

🔯கல்வியும் ஞானமும் தரும் புண்ணிய ஸ்தலம் இது. காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. 

இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டிவிநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் என்னைப் போல் அரைகுறையாகத் தான் இருக்கும் என்று சொல்லாமல் சொல்வதைப் போல இந்த விநாயகரின் வடிவமைப்பு அமைந்துள்ளது. எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விநாயகரையும் வழிபடவேண்டும்.

🔯பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது. காசி என்றால் மிகப் பிரகாசம் என்று பொருள். பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர்.

🔯 பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால் இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர்.

🔯 சிவபெருமான் விரும்பி மகாமயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர். கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில்சுமந்துகொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர்.

🔯 வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது. 

🔯பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது.

 அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது என்பர்.

 இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது. 

அதிக வெப்பகாலம், அதிக மழைக்காலம், தவிர ஆண்டு முழுதும் காசியாத்திரைக்கு ஏற்ற காலங்கள் ஆகும்.

🔯 முன்பெல்லாம் கால்நடையாகவோ, மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் யாத்திரை போவார்கள். ஆனால் தற்போது ரயில், பேருந்து, விமானம் மூலம் யாத்திரை செய்வதால் எப்பொழுது வேண்டுமானாலும் காசியாத்திரை மேற்கொள்ளலாம்.

🔯நம் நாட்டில் உள்ள முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும். 

🔯நம் நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது, காசி - இராமேசுவரம் யாத்திரை மேற்கொள்ளும் சிறப்புமிக்க தலம் காசி ஆகும்.

🔯 பூலோகக் கைலாசம் என்று சைவர்கள் போற்றும் தலம். காசிக்கு நிகரான தலம் மூவுலகிலும் இல்லை என ஆன்மீகவாதிகள் கூறுவர். 

🔯ஈசன் காக்கும் மகாமயானம் இங்கே உள்ளது. காசியில் இறப்போர் உடனே மோட்சம் அடைவார்கள். காசி என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும். இங்கே இறக்கும் உயிர்களுக்குச் சிவபெருமான் காதில் ராமமந்திரம் ஓதி மோட்சம் அடைய வழி செய்கின்றார். காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. 

*🔯காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும். நம் நாட்டிலுள்ள புனிதத்தலங்களில் தலை சிறந்த தலம் காசிப்பதியே ஆகும்.*

🔯 லோகமாதா அன்னபூரணி காசிய ம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார். காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், காசியில் காவாசி அவினாசி என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர். தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.

🔯கங்கையின் மகிமை உணர்ந்தவர்கள், சிவகங்கை, நூபுரகங்கை, கங்கைகொண்ட சோழபுரம் எனவும் தங்கள் ஊர்களுக்குப் பெயரிட்டு மகிழ்கின்றனர். மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும்.

🔯 அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி. மகாராஜா ரஞ்சித் சிங், காசி விசுவநாதர் ஆலய விமானத்தைப் பொன் தகடுகளால் வேய்ந்தார். இன்றும் கோபுரம் தங்கமாக ஒளிர்கிறது. கோயில் தூண்களில் சிற்பங்கள் உள்ளன. காசியில் மீட்டருக்கு ஒரு கோயில் எனப் பலகோயில்கள் உள்ளன. கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர்.

🔯 விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும். சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில். காசியின் கங்கைக் கரையில் நம் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால் நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம். ஏழு அர்ச்சகர்கள் நடத்தும் பூஜை: அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு முனிவர்களும் சப்தரிஷிகள் எனப்படுவர். வான மண்டலத்தில் சனி கிரகத்திற்கு அப்பால் உள்ள சப்தரிஷி மண்டலத்தில் வாழும் இவர்கள், தினமும் மாலையில் விஸ்வநாதரைத் தரிசிக்க காசிக்கு வருவதாக ஐதீகம்.

🔯இதன் அடிப்படையில் தினமும் இரவு 7:00 மணி முதல் 8:30 வரை சப்தரிஷி பூஜை நடக்கிறது. 

ஏழு பண்டாக்கள் (அர்ச்சகர்கள்) விஸ்வநாதரைச் சுற்றி அமர்ந்து பூஜையை நடத்துவர். 

🔯ராம நாமம் எழுதிய வில்வ இலைகளால் அர்ச்சித்த படியே சிவனுக்குரிய மந்திரம், ஸ்தோத்திரங்களை ஏற்ற இறக்கத்துடன் ராகமாகப் பாடுவர். 

🔯பண்டாக்கள் கோரஸாக மந்திரம் ஜெபிப்பதைக் கேட்கும் போது பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்து விடுவர்.

   *🔯தல வரலாறு:* 
     
  
இமயத்தில் சிவபெருமானை உதாசீனம் செய்துவிட்டுத் தக்கன் யாகம் செய்தார். தமது கணவனை அவமதித்த தங்கள் யாகத்தை தடுக்கச் சென்ற பார்வதி தேவியைத் தக்கன் அவமதித்து விட்டார். அதனால் பிராணத்தியாகம் செய்த பார்வதி தேவியின் உடலை, சிவபெருமான் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தார். 

இதனைப் பார்த்த திருமால் தமது சக்ராயுதத்தை ஏவி, பார்வதி தேவியின் உடலின் பாகங்களைத் துணித்தார். 

🔯ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு பாகம் விழுந்தது. ஆவேசம் தணிந்த சிவபெருமான் மகாமயானமான காசிக்கு, மீதமுள்ள உடல் பாகத்தைக் கேதார நாத்திலிருந்து கொண்டு வந்தார். மகாமயானத்தில் பார்வதி தேவியின் உடலை அக்கினியில் இடமுனைந்தார். சிவபெருமான் பார்வதி தேவியின் காதில் தாரக மந்திரம் உபதேசம் செய்தார். 

🔯அப்போது அவரது காதிலிருந்த காதணி எங்கேயோ விழுந்து விட்டதை அறிந்தார். அப்போது அங்கே திருமால் தமது சக்கரத்தால் ஒரு தீர்த்தக் கிணறு தோண்டி, அதனருகே அமர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டு இருந்தார். சிவன் அவரை அணுகி பார்வதி தேவியின் காதணி பற்றிக் கேட்டார். திருமால் தாம் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே உள்ள கிணற்றைச் சுட்டிக் காட்டினார். சிவபெருமான் அக்கிணற்றை எட்டிப்பார்க்கையில் அவரது காதிலிருந்த குண்டலமும் கிணற்றில் விழுந்துவிட்டது. கிணற்றினுள்ளிலிருந்து பிரகாசமான பேரொளியுடன் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்தச் சிவலிங்கத்தில் சிவபெருமானின் சக்தியும் பார்வதி தேவியின் சக்தியும் ஒன்றாக ஐக்கியமாகி இருந்தது.

🔯திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 

சிவ பெருமானை நோக்கித் தமது தவத்தை தொடர்ந்து மேற்கொண்டார். சிவபெருமான், திருமால் முன்பு விசுவரூபம் கொண்டு தோன்றினார். திருமால் விரும்பும் வரம் யாதெனக் கேட்க, அவர் இங்கு பிரதிஷ்டை செய்த ஜோதிர் லிங்கத்திலிருந்து எப்போதும் மக்களை ஆசிர்வதிக்க வேண்டினார். மேலும் சிவபெருமான் ஜடாமுடியிலிருக்கும் கங்கை இத்தலத்தில் வந்து சிவபெருமானை அர்ச்சிப்பதுடன், இத்தலம் வந்து கங்கையில் நீராடும் மக்களுடைய பாவங்களைப் போக்க வேண்டும் எனவும், சிரார்த்தம் செய்தால் அவர்கள் பாவம் எல்லாம் விலகி புனிதம் அடைந்து சுவர்க்கம் போக வேண்டும் எனவும் வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரம் தந்து, தாமும் அந்த லிங்கத்தில் ஒளியாக ஐக்கியமாகி இன்றும் மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருமாலுக்கு விசுவரூபம் காட்டித் தந்தமையால், சிவலிங்கத்திற்கு விசுவநாதர் எனப்பெயர் உண்டாகியது.

 அதன்பின்பு விசாலாட்சியாக அவதாரம் கொண்டிருந்த அன்னை பார்வதி தேவியை, சிவபெருமானுக்குத் திருமால் திருமணம் செய்து வைத்தார்.

🔯 பிரம்மதேவர் பல யாகங்கள் செய்து அவர்கள் திருமணத்திற்கு உதவி செய்தார். இவ்வாறு திருமாலின் வேண்டுதலின்படி ஜோதிர்லிங்கமாகத் தோன்றிய சிவன் விசுவநாதர் என வழங்கப்பட்டு வருகிறார். காசியைப் பற்றி ஏகப்பட்ட புராணக் கதைகள் உள்ளன.

 ஏனெனில் காசியம்பதி வேதகாலம், புராண காலத்திற்கு முற்பட்டது. பல தேவர்களும், முனிவர்களும், மன்னர்களும், இங்கு தவம்செய்து பேறு பெற்றுள்ளார்கள்.

 🔯சூரியனின் புத்திரர்கள் எமனும், சனி பகவானும் சிவபெருமானை நோக்கி இப்பதியில் தவம் செய்து, எமன் தென்திசைக் காவலனாகவும், எமலோகத்திற்கு அதிபதியாகவும், பதவி பெற்றார். சனிதேவன் சிவபெருமான் அருளால் நவக்கிரகங்களில் ஒரு கிரகமாகப் பதவி பெற்றார்.பிரம்மாவே இங்கு யாகம் செய்தும், தவம் செய்தும் பிரம்ம பதவியைப் பெற்றார் எனில், காசியின் மகிமையும் தொன்மையும் யாரால் எடுத்துக் கூற முடியும்?

🔯 சப்தரிஷிகள் என்னும் ஏழு ரிஷிகளும் இங்கு தவம் செய்து, சிவபெருமான் அருளால் நட்சத்திரப் பதவியடைந்துள்ளார்கள். 
‌🔯காசியில் இரவு பூஜை சப்த ரிஷிகள் பூஜை என மிகவும் சிறப்பாக, தினசரி நடைபெறுவதால் இத்தலத்தை அவர்கள்தான் தாபித்தார்களோ என ஓர் எண்ணம் உண்டாகிறது.

🔯 இராமபிரான் முன்னோர்களில் ஒருவரான ஹரிச்சந்திரன் வரலாறு அறியாதோர் இலர். அவர் விசுவாமித்திரர் சோதனைக்குட்பட்டு காசியில் வந்து சுடலையைக் காத்து, மனைவியைப் பிறர்க்கு விற்றுத் துன்பப்பட்டும், பொய்யே பேசாமல் முடிவில் சிவபெருமான் அருளால் இழந்த செல்வம் எல்லாம் பெற்று சுபிட்சம் அடைந்தார். இதிசாக காலத்தில் இராமர் இங்கிருந்து சிவலிங்கம் கொண்டு சென்று, இராமேசுவரத்தில் வைத்து வழிபட்டு, இராவணனை வதைத்த தோஷம் நீங்கப் பெற்றார் என இராமயணத்தில் வரலாறு காண்கிறோம்.

மகாபாரதக் காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காசி வந்து வழிபாடுகள் செய்ததாகவும் மகா பாரதத்தில் வரலாறு கூறப்படுகிறது. இன்னும் இப்படி எத்தனையோ புராணங்கள் காசிப் பதியைப் பற்றியுள்ளன. புராண காலத்தில் சத்தியபுரம் என்னும் ஊரில் பூரித்தியும்னன் என்பான் அரசாண்டு வந்தான். அவனுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள். இன்பத்தில் மூழ்கியிருந்ததால் அவனால், அரசாட்சியை சரிவர கவனிக்க இயலவில்லை. இதனைச் சாதகமாக்கி அவனது விரோதிகள் அவனை நாட்டை விட்டுத் துரத்தி விட்டனர்.

 விபாவரை என்னும் தமது பட்டத்து ராணியை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, மன்னன் விந்திய மலைச்சாரலில் வந்து வாழ்ந்து வந்தான். வறுமையின் கொடுமையால் தன் மனைவியையே கொன்றுவிட்டான். அவள் மாமிசத்தை உண்ணப் போகும் போது, இரண்டுசிங்கங்கள் அங்கே வர பூரித்தியும்னன் ஓடிவிட்டான். அப்படி அவன் ஓடும்போது அவன்எதிரே வந்த நான்கு பிராமணர்களைக் கொன்று தின்ன முற்பட்டான். அப்போது பிராமணர்களது கையிலிருந்த வேத ஏடுகள், மான்தோல் ஆசனம், அவர்கள் அணிந்திருந்த பூணூல் இவைகளைக் கண்டதாலும் தொட்டதாலும் அவனுக்குப் புத்தி தெளிந்தது.
பூரித்தியும்னன் தான் செய்த பெண் கொலை, பிராமணர்கள் கொலை இவைகளினால் பாவ ஆத்மாவாக ஆகிவிட்டதை உணர்ந்தான். பிரம்மஹத்தி தோஷம் அவனைப் பற்றவே அவன் பெரும் சண்டாளன் ஆகிவிட்டான். காட்டில் அலைந்து சாகல்யா என்ற தவமுனிவரைக் கண்டு பாவவிமோசனம் கேட்டான். அந்த முனிவர் ஐந்து கருப்புத் துணிகளைக் கொடுத்து அவனை உடுத்திக் கொள்ளக் கூறினார். காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி விசுவநாதரைத் தரிசித்தால் பாவ விமோசனம் ஆகும் என்று கூறினார். அவனும் முனிவர் சொற்படி, காசிக்குச் சென்றான். அவன் காசிமண்ணை மிதித்ததும் ஒரு துணி வெண்மை ஆகிவிட்டது. கங்கையில் மூழ்கி எழுந்தான். என்னே ஆச்சர்யம்! இறந்த அவனது மனைவி அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு உடன் எழுந்தாள். மற்றும் ஒரு கருப்பு ஆடை வெண்மை ஆகிவிட்டது. இரண்டு ஆடைகளையும் கங்கையில் அவிழ்த்து விட்டு மூன்று ஆடைகளுடன் கரை யேறினான்.

🔯இரண்டாவது அதிசயம்! இவனால் கொல்லப்பட்ட நான்கு பிராமணர்களும் கரையில் நின்று கொண்டு தம்பதிகள் இருவரையும் வரவேற்றனர். அவனதுபாவம் தீர மந்திரம் ஓதி அட்சதை தெளித்தனர். மூன்றாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. கணவன் மனைவி இருவரையும் மணி கர்ணிகா கட்டத்தில் அவர்கள் மூழ்கச் செய்தனர். நான்காவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. பின்பு விசுவநாதரைத் தொட்டு, பக்தியுடன் வழிபடக் கூறினர். அவ்விருவரும் அதன்படியே வழிபட, ஐந்தாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. அவனது பாவங்கள் எல்லாம் நீங்கிப் புனிதன் ஆனான். விசுவநாதர் ஆலயத்தின் முன்பு அவர்கள் இருவரையும் அவனது எதிரிகள் அன்புடன் வரவேற்றனர். நாட்டிற்கு அழைத்துச் சென்று, அவனது அரசை அவனிடமே கொடுத்து, மீண்டும் பூர்த்தியும்னனை அரசனாக்கினர். எனவே கங்கையில் மூழ்கி காசி விசுவநாதரைத் தரிசித்தால் கொடிய பாவங்களும் நீங்கிவிடும். எனவேதான் காசிக்கு விடும் பக்தர்கள், தம்பதிகளாக, இரு ஆடைகள் அணிந்து கங்கையில் மூழ்கி, ஓர் ஆடையை கங்கை நீரில் விட்டுவிட வேண்டும் என்கின்றனர். 

கரைக்கு வந்து பிராமணர்களைத் தரிசித்து அவர்களுக்கு தானம் வழங்க வேண்டும் என்றும் கூறுவர். விசுவநாதர் ஆலயம் சென்று விசுவநாதரைத் தொட்டு வழிபட வேண்டும் என்றும் இங்கே கூறுகின்றனர். அவ்வாறு செய்தால்தான், நாம் நம்மையும் அறியாமல் செய்த பாவங்கள் கூட விலகும் என்கின்றனர். இவ்வரலாற்றினால் நாம் கங்கை நீராடும் முறைக்கு விளக்கம் அறிகின்றோம். மாபலிச்சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்ட நாராயணன், திருவிக்கிரமராக ஓங்கி வளர்ந்து உலகளந்து விட்டு, மற்றொரு காலை தேவலோகம் வரை நீட்ட, ஆகாச கங்கை நீர்கொண்டு பிரம்மா அத்திருப்பாதத்தைக் கழுவிப் பூஜித்தார். அப்போது பெருக்கெடுத்து ஓடிய கங்கை நீரைச் சிவபெருமான் தன் சடையில் தாங்கிப் பூமியில் விட்டார். அந்த கங்கையே காசியில் புனிதத்தீர்த்தமாக விளங்குகிறது என்கின்றனர்.
 
     
 🔯சிறப்பம்சம்: 
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இந்தியாவில் 12ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா பீடமாகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு. 

    
 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

கும்பகோணத்தை சுற்றினால்.,வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும்!! எந்த கோயிலில், என்ன பலன்

🌹 கும்பகோணத்தை சுற்றினால்.,வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும்!! எந்த கோயிலில், என்ன பலன்
கோவில் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான்.

இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம்.

அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர்.

இதனால் தான் இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்பதை தெரிந்து கொண்டு எளிதாக பயணிக்க நாங்கள் உதவுகிறோம்.

கும்பகோணம் திருக்கோயில்கள் கருமுதல் சதாபிஷேகம் வரை பலனடைய இந்த கோவில்களை மற்றும் வழிபட்டால் போதும்.

கரு உருவாக (புத்திரபாக்கியம்) -              கருவளர்ச்சேரி,

கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற     - திருக்கருக்காவூர்,

நோயற்ற வாழ்வு பெறுவதற்கு         - வைத்தீஸ்வரன் கோவில்,

ஞானம் பெற                 - சுவாமிமலை,

கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்,

எடுத்த காரியம் வெற்றி பெற,         
மனதைரியம் கிடைக்க.             - பட்டீஸ்வரம்,

உயர் பதவியை அடைய             - கும்பகோணம் பிரம்மன் கோயில்,

செல்வம் பெறுவதற்கு             - ஒப்பிலியப்பன் கோவில்,

கடன் நிவர்த்தி பெற             - திருச்சேறை சரபரமேஸ்வரர்,

இழந்த செல்வத்தை மீண்டும் பெற     - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி, 

பெண்கள் ருது ஆவதற்கும், 
ருது பிரச்சினைகள் தீரவும்         - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை),

திருமணத்தடைகள் நீங்க         - திருமணஞ்சேரி,

நல்ல கணவனை அடைய     - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை,

மனைவி, கணவன் ஒற்றுமை பெற     - திருச்சத்திமுற்றம்,

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர         - திருவலஞ்சுழி,

பில்லி சூனியம் செய்வினை நீக்க     - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி,

கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்,

பாவங்கள் அகல             - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்,

எம பயம் நீங்க                 - ஸ்ரீ வாஞ்சியம்,

நீண்ட ஆயுள் பெற             - திருக்கடையூர்.

Tuesday, February 21, 2023

செவ்வாய்க்கிழமைக்கு, 'மங்கள வாரம்' என்றும் ஒரு பெயருண்டுதிருமணம் கூடி வரும், கிரக தோஷங்கள் நீங்கும்... செவ்வாய் விரத மகிமை!

செவ்வாய்க்கிழமைக்கு, 'மங்கள வாரம்' என்றும் ஒரு பெயருண்டு
திருமணம் கூடி வரும், கிரக தோஷங்கள் நீங்கும்... செவ்வாய் விரத மகிமை!
செவ்வாய்க்கிழமைக்கு, 'மங்கள வாரம்' என்றும் ஒரு பெயருண்டு. மங்களங்கள் அனைத்தையும் தரக்கூடிய நாள். மங்களங்கள் அனைத்தும் நமக்குக் கிடைக்கவேண்டுமானால், நாம் விரதமிருந்து இறைவனை வழிபட வேண்டும் என்பதுதானே முறை. எனவேதான், செவ்வாய்க்கிழமைகளில் தெய்வ வழிபாடும் விரதமும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. செவ்வாய்க்கிழமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதத்தைப் பற்றியும், அது தரும் பலன்களையும் பார்ப்போம்.

செவ்வாய்க்கிழமை ராகுகால விரதம்:

செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலத்தில் விரதமிருந்து துர்கையை வழிபட்டால் பல நன்மைகளைப் பெறலாம். செவ்வாய்க்கிழமை 3 முதல் 4:30 வரை ராகுகாலம். இந்த நேரத்தில் துர்கையை வழிபடுவது மிகவும் விசேஷம். 'மங்கள வார விரதம்' என்று இந்தியா முழுவதும் சிறப்பிக்கப்படும் ராகுகால வழிபாடு துர்கைக்குச் செய்யப்படுகிறது. இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். செவ்வாய் தோஷத்தின் காரணமாக திருமணம் தடைப்படும் பெண்களுக்கு திருமணம் கூடிவரும். கிரக தோஷங்களால் எண்ணற்ற துன்பங்களுக்கு உட்படுபவர்கள், செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் விரதமிருந்து துர்கையை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் விலகி, வாழ்க்கையில் சந்தோஷம் நிலவும்.

கயிலையில் சிவ - பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்றபோது, சமநிலை தவறிய பூமியை சமன்படுத்த தென் திசைக்குச் சென்ற அகத்தியரின் பாதையில், அவருடைய பயணத்தைத் தடை செய்வதுபோல் விந்தியமலை உயர்ந்து நின்றது. அகத்தியர் கேட்டுக்கொண்டும் விந்தியமலை அவருக்கு வழிவிடவில்லை. அகத்தியர் செவ்வாய்க்கிழமை ராகுகால விரதமிருந்து துர்கையை வழிபட்டார். துர்கையின் அருளால் விந்திய மலையின் செருக்கை அடக்கி, தம்முடைய தென் திசைப் பயணத்தைத் தொடர்ந்தார் என்பது புராண வரலாறு.

விரதமிருப்பது எப்படி?

செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பவர்கள், வளர்பிறை செவ்வாய்கிழமையில் விரதத்தைத் தொடங்குவது நல்லது. ராகுகால வேளையில், வீட்டு பூஜையறையிலிருக்கும் அம்பிகையின் திருவுருவத்தையோ அல்லது படத்தையோ அலங்கரித்து, கிழக்குமுகமாக விளக்கேற்றி வழிபட வேண்டும். செந்நிறப் பூக்களால் அம்மனை அர்ச்சிப்பது நல்ல பலனைத் தரும். செவ்வரளி, செம்பருத்தி, செந்தாமரை, செவ்வல்லி போன்ற மலர்கள் பூஜைக்கு உகந்தவை. இந்த விரதமிருக்கும் நாளில், அதிகாலையில், 'கோபூஜை' செய்து வழிபடுவது கூடுதல் நன்மைகளைத் தரும். கோபூஜை செய்ய முடியாவிட்டால், பசுக்களுக்கு கீரை மற்றும் பழங்களை அளிக்கலாம்.

விரதமிருக்கும் நாளில் வீட்டில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் புனிதப் பொருள்களைக் கொண்டு தூபமிடவேண்டியது அவசியம். சாம்பிராணி, குங்கிலியம், சந்தனம், மூலிகைகள் ஆகியவற்றை எரித்து தூபமிடுவதால் வீடு சுத்தமாகி கிருமிகள், பூச்சிகள் இல்லாமலிருக்கும். புனித அதிர்வுகள் உண்டாகி வீடு மகிழ்ச்சிகரமாக மாறும். துர்கை கவசம், துர்கை சந்திரகலா ஸ்துதி, துர்கா சப்த ஸ்லோகம், அம்மன் தாலாட்டு என அம்பிகைக்கான பாடல்களைப் பாடி விரத வழிபாட்டைச் செய்யலாம்.அன்று சிவப்பு அல்லது மஞ்சள் ஆடையை உடுத்திக்கொள்வது சிறப்பு.

செவ்வாய்க்கிழமை ராகுகால விரதத்தில் கோயிலுக்குச் சென்று துர்கையை நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

வீட்டில் விரதம் இருப்பவர்கள் தேன், பசும்பால், சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு என நைவேத்தியம் படைத்து அம்பிகையை வணங்கலாம். உபவாசம் இருப்பவர்கள் பூஜையை முடித்ததும், துர்கைக்கு செய்யும் நைவேத்திய பிரசாதத்தில் சிறிது உண்ட பிறகு உணவு உண்ணலாம்.

செவ்வாய்க்கிழமை விரதம் தரும் பலன்கள்...

செவ்வாய்க்கிழமை விரதமிருப்பவர்கள் வளர்பிறை செவ்வாய்க்கிழமையில் விரதத்தைத் தொடங்க வேண்டும். தொடர்ந்து பதினோரு வாரங்கள் செவ்வாய்க்கிழமை ராகுகால விரதமிருந்தால் எல்லா கஷ்டங்களும் நீங்கும். கல்யாண யோகம் கூடி வரும். எதிர்மறையான எண்ணங்கள் விலகும். `வாழ்க்கையே அவ்வளவுதான்’ என்ற விரக்தி நிலையிலிருப்பவர்கள் இந்த விரதமிருந்தால் மனக்குழப்பங்கள் நீங்கி நலம் பெறுவார்கள் என ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

ஆண்களும் இந்த விரதமிருக்கலாம். ராகுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்க, வீண் செலவுகள் ஏற்படாமலிருக்க, வீட்டில் சண்டை சச்சரவுகள் தீர இந்த விரதத்தை,மேற்கொள்ளலாம். அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் ஆண்கள், இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், நோய்களிலிருந்து விடுபடலாம். ஆண்களால் முடியாத பட்சத்தில், அவர்களுக்காக அவர்களின் தாயார் அல்லது மனைவி இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

செவ்வாய்க்கிழமை ராகுகால விரதமிருந்தால் ஸ்ரீதுர்கை, செவ்வாய் பகவான், ராகு பகவான் ஆகியோரை ஒரே நேரத்தில் ப்ரீதி செய்த பலன் கிடைக்கும். அதனால், அனைத்து மங்களங்களும் உ ண்டாவதுடன், மனத்துணிவு, உடல் வலிமை ஆகிய நன்மைகள் ஏற்படும்; சகல தோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில்.இறைவன் - சக்கரவாகேஸ்வரர்இறைவி - தேவநாயகி.ஊர் - சக்கரப்பள்ளிமாவட்டம் - தஞ்சாவூர்.

சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில்.
இறைவன் - சக்கரவாகேஸ்வரர்
இறைவி  -  தேவநாயகி.

ஊர் - சக்கரப்பள்ளி
மாவட்டம் - தஞ்சாவூர்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள
17வது சிவத்தலமாகும்.

சக்கரவாகப் பறவை வழிபட்டதாலும், (சக்கரமங்கை வழிபட்டதாலும்) இவ்வூர் சக்கரப்பள்ளி என்று வழங்கலாயிற்று.

திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம். சக்கரவாகப் பறவை வழிபட்டத் தலம் என்று கூறுவதும் உண்டு.

பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியன்று சூரியன் இவ்விறைவனை வழிபடும் அற்புதக் காட்சியைக் காணலாம்.

செம்பியன்மாதேவி இக்கோவிலை கற்றளியாக மாற்றியமைத்தார். செம்பியன்மாதேவி இவ்வூர் இறைவனை மலர்கொண்டு வழிபடும் புடைப்புச்சிற்பம் இதனை உறுதிப்படுத்தும். 

சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில், சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலமாகக் கோயில்களில், இதுவும் ஒன்றாகும்.

சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நவக்கிரகம் கிடையாது. இறைவனே நவக்கிரக நாயகனாக அருள் ஆட்சி செய்து வருகிறார்.

சக்கரவாகேஸ்வரர் கோவிலில் உள்ள தெட்சிணாமூர்த்தி சன்னதி வேறு எங்கும் காண இயலாத சிற்ப அழகுடன் 5 தலை நாகம் குடைபிடிக்க ஆலமரத்தின் கீழே அமர்ந்து தன்னை நாடும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போன்ற தோற்றத்துடன் உள்ளது.

தஞ்சாவூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள அய்யம்பேட்டை என்ற ஊரில் நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே சற்று உள்ளடங்கி கோயில் உள்ளது.

சிவனுக்கு சீடர்களான #சப்தரிஷிகளின் சரித்திரம்

சிவனுக்கு சீடர்களான #சப்தரிஷிகளின் சரித்திரம்! 
" பிரிட்டனில் உள்ள மானுடவியல் அருங்காட்சியகத்தில் உள்ள சான்றாதாரங்களைக் காண்கையில் சிவனின் வடிவமாகிய #ருத்ரன்தான் உலகின் பழமையான இறைவடிவம் என்று தெரிகிறது. 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வடிவம் அது."

சத்குரு:
சிவன் என்று சொன்னால், அந்தச் சொல் பலருக்கும் பலவிதமான பொருள்களைத் தருகிறது. பல்விதமான பரிமாணங்கள் கொண்ட ஒருவருக்கு அப்படி விதம் விதமான வர்ணனைகள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஞானத்தின் உச்சமென்று கருதப்படுகிற சிவன்தான், பெருங்குடிகாரராகவும் கருதப்படுகிறார். அழகின் உச்சமாய், சுந்தரமூர்த்தியாய் விளங்குகிற சிவன்தான், அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகிறார். இப்படி வெவ்வேறு எல்லைகளின் வடிவமாகவும் விளங்குபவர் சிவன்.

ஆனால் ஆன்மீகப் பாதையில் நடையிடுபவர்களுக்கு சிவன் என்பவர் ஒரு யோகி. வெறும் யோகியல்ல. அவரே ஆதியோகி. மனிதனாகப் பிறந்தவன், தன் எல்லைகளுக்குள் நின்று போக வேண்டியதில்லை என்றும், அதனைக் கடந்த ஒரு பரிமாணத்தை உணர முடியுமென்றும் உணர்த்தியவர் சிவன்தான். உடல் என்ற எல்லைக்குள் இருந்தபடியே இந்த உடலுக்குள் மீண்டும் வரவேண்டிய தேவையை உடைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கித் தந்தவர் சிவன்தான்.

உடல் மனம் ஆகிய கருவிகளை மிகத் திறமையாகக் கையாண்டு, அதேநேரம் மனதின் இன்னல்களுக்கு ஆட்படாமல் இருக்கும் தன்மையை உணர்த்தும் யோகக்கலையை வழங்கிய ஆதியோகி சிவன்தான்.

யோகா என்றால் இணைதல் என்று பொருள். ஒரு மனிதன் இந்தப் பிரபஞ்சத்துடன் தன்னை இணைப்பதன் மூலம், மனிதன் என்ற குறுகிய எல்லையைக் கடந்து பிரபஞ்சம் என்னும் எல்லையின்மையை உணர்ந்து, படைப்புக்கும் படைத்தவனுக்கும் பேதமில்லாத நிலையை உணர்த்தும் அருங்கலையாகிய யோகா சிவபெருமானால் வழங்கப்பட்டது.

வெவ்வேறு பிணைப்புகளுக்கும் எல்லைகளுக்கும் ஆட்பட்ட மனிதன் எல்லையின்மையை உணர்வதுடன் நில்லாமல், எல்லை எல்லையின்மை இரண்டின் பயன்களையும் ஒரே நேரத்தில் நுகர முடிந்தால் அதுவே யோகா. சிவம் என்ற சொல்லுக்கு, “எது இல்லையோ, அது” என்று பொருள்.

வெற்றிடமும் சூன்யமுமே சிவம். வெற்றிடம் என்பதை நீங்கள் சரியான பொருளில் புரிந்து கொள்வது அவசியம். இரவு நேரத்தில், ஆகாயத்தை நீங்கள் அண்ணாந்து பார்த்தால், கோடிக்கணக்கான விண்மீன்களும் கோள்களும் இருப்பது போலத் தெரியும். ஆனால், உண்மையில் அத்தனை பிரபஞ்சங்களும் இருளென்னும் வெற்றிடத்தின் மடியில் சின்னஞ்சிறு துகள்களே ஆகும். படைப்புகளின் மூலமாகிய இந்த வெற்றிடமே, பிரபஞ்சத்தின் 99% ஆகும். தன்னுள் எல்லையின்மையை உணர்ந்ததாலேயே தானும் எல்லையில்லாத் தன்மையை எய்தியவர் என்பதால் சிவம் எனும் சொல் எல்லையின்மையையும் குறிக்கும். ஆதியோகியையும் குறிக்கும்.

தன்னுடைய உச்சத்தை ஆதியோகி தொட்டபோது, பலரும் அவர்பால் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் மிக முக்கியமானவர்கள், சப்தரிஷிகள் என்று அழைக்கப்பட்ட ஏழு முனிவர்கள். ஆதியோகியின் புரிதலையும் ஞானத்தையும் பெற்று பூமி முழுமைக்கும் விநியோகிப்பதற்கான பாத்திரங்களே அவர்கள்.

" அகத்திய முனிவர், அத்ரி முனிவர், அங்கிர முனிவர், பிருகு முனிவர், கௌதம முனிவர், காச்யப முனிவர், வசிஷ்ட முனிவர் ஆகிய எழுவரே அந்த சப்த ரிஷிகள். "

அவர்கள் வெவ்வேறு கலைகளிலும் அறிவியலிலும் வல்லவர்களாக விளங்கினார்கள். அந்த யுகத்தின் நாகரீகங்களையும் அறிவியல் மேம்பாட்டையும் சிகிச்சை முறைகளையும் வடிவமைத்தார்கள்.

அவர்களில் மூவர், தென்னிந்தியா முழுமையிலும் மிக முக்கியமானவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்களில் மிக முக்கிய பங்களிப்பை ஆற்றியவர் அகத்திய முனிவர். சித்த வைத்தியம், ரசவைத்தியம் ஆகியவற்றின் தந்தையென்று கருதப்பட்டவர் அவர். ஞானமடைந்த பிறகு தன்னுடைய ஞானத்தை தென்னகத்துடன் பகிர்ந்துகொள்ள வந்தவர் அவர்.

அனுசூயாவை மணந்து கொண்ட அத்ரி, குருஷேத்திர யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்டிய பெருமைக்குரியவர். துரோணாச்சாரியார் என்னும் மாவீரர், இலட்சக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருந்த யுத்தத்தில் சுற்றிச் சுழன்று வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்த போது அவரைத் தடுத்து நிறுத்தி அவருடைய தர்மத்தை நினைவூட்டியவர் அத்ரி மௌனிவர். அதன்பின் துரோணர் தியானத்தில் அமர்ந்து தன் உடலை உதறினார்.

கௌதமர் என்றதும் பலரும் கௌதம புத்தர் என்று நினைக்கிறார்கள். ஆனால் சப்த ரிஷிகளில் ஒருவரான கௌதமர், அகல்யையை மணந்தவர். த்ரயம்பகேஸ்வர் என்னும் இடத்தில் ஒரு சிறிய ஆசிரமத்தில் மனைவியுடன் வசித்தார். அவருடன் பல சீடர்களும் வசித்தனர். ஒருநாள் அவருடைய ஆசிரமத்தில் நுழைந்த பசுவொன்று அங்கிருந்த அரிசியைத் தின்றது. கௌதம முனிவர் அதனை விரட்ட முனைந்த போது, அது தவறி விழுந்து இறந்தது. பசு இறந்ததும் குற்றவுணர்வில் வருந்தினார் கௌதமர். சிவன் அவர் முன் தோன்றி, “உணவுப் பஞ்சத்தினாலேயே நீ அந்தப் பசுவை விரட்டினாய். அதனால் வேண்டுமளவு அரிசியை நீ விளைவித்துக் கொள்ள ஒரு வாய்ப்பைத் தருகிறேன்” என்று சொல்லி, திரியம்பகேஸ்வரில் ஒரு நதியை உருவாக்கினார். கௌதமி என்ற பெயரில் உருவான அந்த நதிதான் கோதாவரி என்ற பெயரில் ஆந்திராவிலும் ஒரிசாவிலும் நெற்பயிர்களை விளைவித்து வருகிறது.

தங்கள் காலத்திலேயே பெரிதும் போற்றப்பட்ட இந்த யோகியர் கயிலாயத்தில் ஆதியோகியின் சீடர்களாயினர். தான் உணர்ந்த ஞானத்தை சிவன் இவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர்களை உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பினார். 
ஒருவர் #மத்திய_ஆசியாவுக்கு சென்றார். இன்னொருவர், தற்போது #எத்தியோப்பியா என்றும் #எகிப்து என்றும் அழைக்கப்படும் #மத்திய_கிழக்கு பகுதிக்குச் சென்றார். இன்னொருவர் #தென்னமெரிக்காவுக்கும், மற்றொருவர் #தென்மேற்கு_ஆசியாவுக்கும் சென்றார். இன்னொருவர் கயிலாயத்தில் சிவபெருமானுடனே தங்கிவிட்டார். இன்னொருவர் இமயத்தின் கீழ்ப்பகுதிக்கு வந்தார். அவர்களில் தென்னகம் வந்தவர்தான் அகத்திய முனிவர். அவர் வெள்ளியங்கிரி மலை வரை வந்திருக்கிறார். தென்னக ஞான மரபின் தந்தையென்று போற்றப்படுபவர் அகத்திய முனிவர்.

இந்த உலகில் எத்தனையோ ஞான மரபுகள் உண்டு. அவற்றில் எல்லாம் தனித்தன்மையும் பெருஞ்செறிவும் கொண்டது தென்னிந்திய ஞானமரபு. ஞானிகள் எதையும் கண்டுணரவும் பரிசோதனை செய்து பார்க்கவும் தேவையான சூழல் இங்கே இருந்து வந்துள்ளது. உலகின் வேறெந்தப் பகுதியிலும் இல்லாத அமைப்பு இது.

உலகின் பல பகுதிகளிலும் இந்த ஏழு முனிவர்கள் உருவாக்கிய இந்த ஞான மரபு, இன்றும் கண்கூடாகத் தெரிகிறது. #கிரீஸ், #லெபனானின் #பால்பெக் ஆலயங்கள், #எகிப்தின் சில கோயில்களில் எல்லாம் யோக முத்திரைகள் இன்றும் காணப்படுகின்றன. 16 மூலைகளில் குருபூஜைக் கற்கள் காணப்படுகின்றன. ஆதியோகியின் நேரடி தீட்சை பெற்றவர்களைத் தவிர பிறரிடமிருந்து இவை வந்திருக்க வாய்ப்பில்லை.

சிவனுடன் எப்போதும் இருந்தவை கணங்கள். அவை வடிவற்றவையாக புராணங்களில் சித்தரிக்கப்படுகின்றன. எலும்பில்லாத முழங்கைகளும் முழங்கால்களும் கொண்டிருந்தன. யானையின் தலையை சிறுவனின் உடலில் பொருத்தியதாக சொல்லப்படும் விநாயகர் கதை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று. அது ஒரு கணத்தின் தலை. எனவேதான் அவர் கணபதி என்றழைக்கப்பட்டார். கணபதி என்றால் கணங்களின் தலைவர் என்று பொருள். வடிவற்ற கணங்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோருடன் திரிபவராக சிவன் கருதப்படுகிறார்.

இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால், பலராலும் ஏற்க முடியாத காரியங்களுக்குரிய கடவுளாக அவர் கருதப்படுகிறார். ஆனால் உலகம் அவரை மகாதேவன் என்று கொண்டாடுகிறது. பிரிட்டனில் உள்ள மானுடவியல் அருங்காட்சியகத்தில் உள்ள சான்றாதாரங்களைக் காண்கையில் சிவனின் வடிவமாகிய ருத்ரன்தான் உலகின் பழமையான இறைவடிவம் என்று தெரிகிறது. 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வடிவம் அது.

8000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் படையெடுத்தபோது, அவர்கள் இந்திரனை வழிபட்டனர். அவர்களால் இங்கிருப்பவர்களைத் தோற்கடிக்க முடிந்தது. ஆதிக்கம் செலுத்தவும் அடிமை கொள்ளவும் முடிந்தது. ஆனால் தோற்றவர்களின் கடவுளை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். படையெடுத்து வருபவர்கள் தங்கள் கடவுளரைத் திணிப்பதுதான் வழக்கமாக நடக்கும். ஆனால் இங்கு வந்தவர்கள் தோற்றவர்களின் கடவுளை ஏற்றுக் கொண்டனர். அத்தனை சக்தியும் வாய்ப்புகளும் சிவனிடம் இருந்ததே அதற்குக் காரணம். ஆதியோகியின் ஆற்றலை விளக்க இதனினும் ஆதாரம் வேண்டுமோ!

#Shiva #MahaShivRatri☘️

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...