Monday, April 24, 2023

சிவ பக்தன் என்றால் யார்?சிவனடியர் என்றால் யார்?

சிவ பக்தன் என்றால் யார்?சிவனடியர் என்றால் யார்?
இவ்விரண்டுமே ஒரேபோல தான் தெரியும்.‌ ஆனால் சிவபக்தனுக்கும் சிவனடியருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன.
சிவனை கண்டதும் பனிபவன் பக்தன்.
சிவனுக்காக எதையும் செய்ய துனிந்தவன் அடியார்.
சிவனை வணங்குபவர் பக்தன்.
சிவனை மட்டும் வணங்குபவர் அடியார்.
உடல் தூய்மையாக இருந்தால் ஒரே கோயிலுக்கு செல்பவர் பக்தன்.
தூய்மையை ஒரு பொருட்டாக கருதாமல், மனத்தூய்மை வேண்டி கோயிலுக்கு செல்பவர் அடியார்.
அர்சனை செய்வதற்கு கோயில் செல்பவர் பக்தன்.
ஈசனை போற்றி பாடி அனந்தமடைய கோயில் செல்பவர் அடியார்.
அறமல்ல சிவம் என்று உணராதவர் பக்தன்.
அன்பே சிவமேன உணர்ந்தவர் அடியார்.
மறைக்குள்ளும் முறைக்குள்ளும் உள்ளவர் ஈசன் என்று நினைப்பவர் பக்தன்.
ஈசனை அடைய மனமும் மொழியும் தடங்களில்லை, ஆக மறக்கும் முறைவும் எனக்கு இல்லை என்று நினைப்பவர் அடியார்.
கூட்டமாக கூட்டமாக இறைவனை காண்பவர் பக்தன்.
கூட்டம் போனபின் ஈசனழகை தனித்து நின்று ரசிப்பவர் அடியார்.
ஈசனை அடைய சுத்தமாக இருக்க வேண்டும் என நினைக்கப்பவர் பக்தன்.
சுத்தத்தை பெரிதாக எண்ணாமல் சித்தத்தை சிவன்பால் வைப்பவர் அடியார்.
வாழ்வில் ஒரு பகுதி வழிப்பாடுக்கு செலவு செய்பவர் பக்தன்.
வாழ்வே வழிபாடமாக கொண்டவர் அடியார்.

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!

#அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 
10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!! 
எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்.
திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.
மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு *'விரிஷபாத்ரி'* என்று ஒரு பெயர் உண்டு.

தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது,
'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.
எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் *சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார்.* அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது.
பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.
மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். *'அபரஞ்சி'*
என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள்.
*உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன.* ஒன்று - அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.
*அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?* 

சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார்.
பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' *(தவளையாக போகக் கடவாய்!)* என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் *(வைகை)* நீ தவம் பண்ணிக்கொண்டிரு.
சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.
சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார்
*அழகர். மூன்றாம் நாள்*

மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள்.
அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர்,
அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு *(சுதபஸ்)* சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.
*கள்ளர் கொண்டை,* 

கொண்டையில் *குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்),இடுப்பில் ஜமதாடு*  
என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர்.
*அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில்* புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார்.
அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.
*நான்காம் நாள் இரவு* 

தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த *அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது.* அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம்.
இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் *சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...* என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும்.
கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு *ஏதாவதொரு புடவையை* எடுப்பார்.

அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, *அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும்.* அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
*பச்சைப்பட்டு* கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.

*சிவப்புப் பட்டு* கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.

*வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு* கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும்.
*மஞ்சள்பட்டு* கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
*ஐந்தாம் நாள்*

பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு *தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம்* தொடங்குகிறது.
அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது.
அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள்.
அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு *வண்டியூர்* போய்ச் சேருகிறார் அழகர்.
ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார்.
அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.
*தேனூர் மண்டபத்தில்* 

தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார்.
இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது)
தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.
எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார்.
பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.
*காவல் ஜமீன்!* 

அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு.
இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர்.

அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Sunday, April 23, 2023

திருப்புகழ் கிடைத்த கதை

திருப்புகழ் கிடைத்த கதை
இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்குக் கிடைக்கக் காரணமாக அமைந்த 24 நான்கு வருட உழைப்பை நாம் அறிவோமா ? 

அதற்கு யார் காரணம் என்பதை வரலாறு அறியுமா ?
அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல் திருப்புகழ் ஆகும்.

திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன அதாவது கிடைத்துள்ளன. இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும். இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள்.

திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை.
அத்தகைய திருப்புகழ் நமக்குக் கிடைக்கத் தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்ற தொண்டினாலும், ஆர்வத்தாலுமே காரணமாக அமைந்தது. அந்த போற்றுதலுக்குரிய அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை ஆவார்.

திருப்புகழ் நமக்குக்கிடைக்கவும் சுவையான ஒரு காரணமும் உள்ளது . அவர் குறித்து ஒரு கட்டுரையை தமிழ் இந்து 9/8/14 அன்று வெளியிட்டிருந்தது .

அதை இப்போது பார்ப்போம்
வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர்களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர். 

அப்பாடலின் வரி :
தாது மலர் முடியிலே வேத நன்முறை வாளுவமே தினம் வேல்வி யாலிலில் புனை மூவயீர வேட்டியர் மிகவே புகனை புரிகோவே
(கடவுளே வேத முறைகளில் கண்டிப்பாக இருந்தபடி பல்வேறு தியாகங்கள் செய்த மூவாயிரவர் என்ற பெருமை பெற்ற அந்தணர்களால் தினமும் துதிக்கப்படுபவரே நீங்கள்)
தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. 

அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.
தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து, ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை. அரசாங்கப் பணிகளுக்கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். 

ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின. 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன.

அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.

உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். 

இதை உ.வே.சா, தனது ‘என் சரித்திரம்’ நூலில் பதிவுசெய்துள்ளார்.
ஓலைச்சுவடிகளின் குறைகளைக் களைந்து சீர் செய்வதற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர்கள் ஆற்றிய பங்கு பெரிது.

திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்.

9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார். திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது.

புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். 

கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். 

வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும் புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த ஶ்ரீகிருஷ்ணரின் திருக்கோயிலே ஜகநாநாதர் ஆலயமாகும்.

#புரி_ஜெகன்நாதர்_ஆலயம் 🙏
    வட இந்தியாவில், கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த ஶ்ரீகிருஷ்ணரின் திருக்கோயிலே    ஜகநாநாதர் ஆலயமாகும். இக்கோயில் ஜெகன்நாதர், பாலபத்திரர் ( பலராமர்) மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும்.  முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், (*கிருஷ்ணர்) பாலபத்திரர்(*பலராமர்)  மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.

#புரி_ஜெகன்நாதர்_கோயில்.🙏
      இக்கோயில் 12ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் குல அரசன் ஆனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது.  இக்கோயிலின் மூலவர்களான ஜெகந்நாதர், பாலபத்திரர், சுபத்திரை தனித் தனியாக மூன்று தேர்களில் ஏறி ஊரை ஊர்வலம் வரும் நிகழ்வான இரத யாத்திரை திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை, ஆடி பௌர்ணமி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இவ்வருடம்   இது நாளை தொடங்குகிறது.
         சைதன்ய பிரபு, புரி ஜெகந்தாதரால் கவரப்பட்டு பல ஆண்டுகள் புரியில் வாழ்ந்தவர். ஜெயதேவர் மற்றும் சாது இராமானந்தரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்களாவர்.
        உலகப் புகழ் வாய்ந்த புரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும்   ஒன்பது  நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவில், இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்வார்கள்.
         தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பாலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் #சுபத்ராதேவியும் (கிருஷ்ணரின் தங்கை  மற்றும்  #அர்ஜுனனின்_மனைவி, மாவீரன்   #அபிமன்யுவைப்பெற்றவள்) எழுந்தருள்வர்.
         பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் *இரத்ன வீதியைத் தங்கத் துடைப்பத்தால் புரி நகர மன்னர் *கஜபதி   பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பாலபத்திரர்(பலராமர்)  தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர்( கிருஷ்ணர்)
எழுந்தருளிய தேர் புறப்படும்.
           குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் இரத யாத்திரையின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மௌசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.  புரி ஜெகநாதர் ஆலயத் தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.

  #கோவிலின்_தலவரலாறு 🙏
               பல அற்புதங்களையும், மர்மங்களையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் ஆலயம் புரி ஜகன்னாதர் ஆலயம். 
           துவாபர யுகம் முடிவில் கிருஷ்ணர் பூதஉடலில் இருந்து தனது ஆன்மாவை  பிரித்து வைகுந்தம் அடைந்தார். அவரது   உடலுக்கு  இறுதி சடங்குகளை முடித்து உடலுக்கு தீ வைக்கும் போது, உடலில் அனைத்து  பகுதிகளும் சாம்பலானதாம்; ஆனால்   கொப்பூழ்  பகுதி மட்டும் அப்படியே இருந்ததாம்;  மக்களும்  அப்படியே கடலில் கரைக்க, ஆச்சரியம்  என்ன வென்றால்   கொப்பூழ்  பகுதி மட்டும் கடலில் கரையாமல் நீல நிற கல்லாக மாறி பின் கொஞ்சம் கொஞ்சமாக பகவன் விஷ்ணுவின் உருவமாக மாறியதாம். ( யுக முடிவில் விஷ்ணுவின்   கொப்பூழில்  இருந்து ஒரு தாமரைமலர் வர,  அதிலிருந்து  பிரம்மா  தோன்றி மீண்டும்  உலகைப் படைப்பாராம். அத்தகைய மகிமை உடையது பகவானின் கொப்பூழ்)
         அந்த சிலையைக்  கண்ட பழங்குடி இனத்தை சார்ந்த #விஸ்வசனன் அந்தச் சிலையை அங்கு இருந்த காட்டுப். பகுதிக்குக்  கொண்டு சென்று யாரும் அறியாத வண்ணம் காட்டு மலர்களால் தினமும் அர்ச்சனை செய்து வந்தாராம்.  இந்த   தகவல் எப்படியோ அங்கு ஆட்சி செய்த இந்திரதுய்மன்  என்ற  மன்னனுக்குத்    தெரியவந்ததாம். அதைப்  பற்றி    அறிந்து வரும்படி   மன்னர்,  வித்யாபதி என்ற    அந்தணரை அனுப்பி வைத்தாராம்.   அவனும் விஸ்வசனனை சந்தித்தார்;  விஸ்வசனனின்  மகள் மீது காதல் கொண்டு  திருமணமும் செய்துகொண்டார்.   அதன் பிறகு அந்த காட்டுக்குள் இருக்கும் சிலையைக்  காட்டுமாறு வற்புறுத்தி வேண்டினார்  வித்யாபதி.   அவரும்  வித்யாபதியின் கண்களை கட்டி  காட்டிற்குள் அழைத்து சென்றாராம்.
          வித்யாபதியும் வழியெங்கும் கடுகுகளை போட்டுக் கொண்டே சென்றாராம்.  பின்னர்   அதிசய  கிருஷ்ணர்  சிலையைக்  கண்டு வணங்கி  பூஜைகளை முடித்து  இருவரும்    வீடு திரும்பினராம்.   குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அந்த கடுகுகள் துளிர் விட ஆரம்பிக்க, சிலையை   அடையும்  வழி துல்லியமாக தெரியதத்  தொடங்கியது. அதை கண்டு வித்யாபதி,   மன்னனுக்குத்    தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த  #இந்திரத்துய்மன் தன் படையினருடன் அந்த காட்டுப்பகுதிக்கு சென்றான்.    
      ஆனால்  ஏழையின் பக்திக்குக்  கட்டுப்பட்ட கிருஷ்ணரோ, மன்னனோடு செல்லவிரும்பாது  மாயமாகிப்  போனார்.  அதை கண்டு மனம் உடைந்த   மன்னரோ  உண்ணாவிரதம் மேற்கொண்டு  ஒரு மண்டலத்தில் அசுவமேத யாகத்தை துவங்குகினாராம். தனக்கு   அருளும்படி   மனமுருகி மன்னன்,  பகவானை    வேண்டினாராம்.. 
            மன்னனின்   கனவில் கிருஷ்ணர் தோன்றி , கடலில் மிதந்து வரும்  ஒரு மரக் கட்டையைக்கொண்டு சிலையைச்  செதுக்குமாறு கூறினாராம்.  அதைப் போல  மறுநாள்    ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்ததாம்.   இந்திரதுய்மனும்  அந்த மரக்கட்டைக்குப்   பூஜைகளை   நடத்தி  தச்சர்களை அழைத்து பெருமாள் சிலையை    வடிக்குமாறு  கூறினாராம்.  ஆனால்  யாராலும்    சிலையை வடிக்க  இயலவில்லை.   அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல  தோன்றினார்.   மன்னனிடம்  21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது;  தான் உணவும்  உண்ண மாட்டேன்!  என்றும் கூறினாராம்    முதியவரான   தச்சர்;   அதற்கு  மன்னனும்  ஒப்புக்கொண்டாராம்.   
             பதினைந்து  நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது! என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் அறையிலிருந்து  சத்தமே கேட்கவில்லை. . இதனால் தச்சருக்கு  என்னவாயிற்றோ   என எண்ணி,  மன்னன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டாராம்.    உள்ளே   யாருமேயில்லை; பெருமாள் மறைந்துவிட்டார். ஆனால்  ஓர் அசரீரி  குரல்  கேட்டது.  'மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய்;  எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும்;  அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு; 
இக் கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்! என்ற எண்ணத்துடன் செல்வார்கள்!  என்று பகவான்   அருள்பாலித்தாராம்.   அந்த அறையில் வேலை முடியாத நிலையில் #ஜெகன்நாதர், (ஶ்ரீகிருஷ்ணர்)  #பலராமன், #சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே மன்னரூம்    பிரதிஷ்டை செய்தார். 
           இந்திரத்துய்மனின்  காலத்திற்குப் பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. தற்போதைய கோயில் ஏறக்குறைய கி.பி. 1135இல் அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. #ஆலயக்கொடிமரம் "ஏழைகளுக்கு அருள்பவன்" என்னும் பொருளில் #பதீதபவன்பாவனா  என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணர்,  ஏழைப் பங்காளன் அல்லவா?   அவரது கோயில்   கொடிமரத்தை   அவ்விதம் அழைப்பது மிகவும்  பொருத்தமே.   இன்னும் எண்ணற்ற அதிசயங்களைக் கொண்டது   புரி ஜகன்நாதர்   ஆலயம்.

#பூரி_ஜெகநாதர்_ஆலய_அதிசயங்கள் 
1. கோயிலின் கொடியானது  காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் தான் பறக்கும்.

2.  கோயில் இருக்கும் *பூரி (*புரி)என்ற ஊரின் எந்த இடத்தில் எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மையே  பார்ப்பது போல இருக்கும் .

3.  பொதுவாக காலையிலிருந்து மாலை வரை கடற் காற்றானது  கடலில் இருந்து நிலத்தை நோக்கியும்,  மாலை முதல் இரவு முழுவதும்  நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசுவதே எங்கும் வழக்கம்.  ஆனால் புரியில் இதற்க்கு நேர் எதிராக நடைபெறுவது ஓர் அதிசயமே.

4. இக்கோயிலின்  கோபுரத்தின் நிழல் கீழே விழுவதில்லை.

5.  இக் கோயிலின் மேலே விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை;  கோவிலில் ஒரு பறவை கூட அமர்வதுமில்லை.

6.  இக்  கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு  ஆண்டின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும்.
ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை  எத்தனை இலட்சமானாலும் சரி  சமைக்கப்பட்ட உணவு  பக்தர்களுக்குப் போதாமல்  போனதேயில்லை;  உணவு மிகுந்து  வீணாகப் போனதுமில்லை. என்பதும் ஓர் அதிசயமே.

7. இக்  கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் தான் உணவைச்  சமைப்பார்கள்.  அவ்வாறு  சமைக்கும்பொழுது அடியில் உள்ள பானையில் உணவு ,வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடுவதும் ஓர் அதிசயமே.  

8.இந்த ஜெகந்நாதர் ஆலய சமையல் கூடம் தான் உலகிலேயே தினமும் செயல்படும் மிகப்பெரிய சமையல் கூடம் என்பதும் இறைவன் கருணையே.

9.  கடற்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் சிங்கத் துவாராவின் முதல் படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்குக்  கேட்பதில்லை.
       ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நாம்  நுழையும் பொழுது கடலிலிருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்குத் தெளிவாகக் கேட்பதும் ஓர் அதிசயமே.
     __இவையனைத்தும் சர்வ வல்லமை மிக்க பரந்தாமன் ஸ்ரீகிருஷ்ணரின் எல்லையற்ற பராக்கிரமத்தையும், அருளையும் இன்றுவரை உலகிற்கு பறைசாற்றி  கொண்டிருக்கும்  அரிய அதிசயங்கள் நிறைந்த ஆலயமே புரி ஜெகநாதர் ஆலயம். 
#ஶ்ரீகிருஷ்ணா_சரணம். 🙏

Saturday, April 22, 2023

*" 274 தேவார பாடல் பெற்ற சிவாலயங்கள் :"**172- வது ஸ்தலம்

*" 274 தேவார பாடல் பெற்ற சிவாலயங்கள் :"*
*172- வது ஸ்தலம்...*

*தென்கரை ஸ்தலம்....*

*கற்பகநாதர்குளம் கற்பகநாதர் திருக்கோயில்...*

*மூலவர்:கற்பக நாதர்*

*அம்மன்/தாயார்:பாலசுந்தரி, சவுந்தர நாயகி*

*தல விருட்சம்:பலா*

*தீர்த்தம்:விநாயகர் தீர்த்தம், கடிகுளம்*

*புராண பெயர்:திருக்கடிக்குளம்*

*ஊர்:கற்பகநாதர்குளம்*

*மாவட்டம்:திருவாரூர்*

*மாநிலம்:தமிழ்நாடு*

*பாடியவர்கள்:*

*சம்பந்தர்*

*தேவாரப்பதிகம்*

*தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 109வது தலம்.*

*திருவிழா:*

*மகா சிவராத்திரி*

*தல சிறப்பு:*

*இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்*

*சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 173 வது தேவாரத்தலம் ஆகும்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர் குளம்-614703. தொண்டியக்காடு வழி, திருவாரூர் மாவட்டம்.*

*போன்:*

*+91- 4369 – 240 187 ,240632 ,99428 12437*

*பொது தகவல்:*

*இத்தல விநாயகர் மாங்கனி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்*

*பிரார்த்தனை*

*சகல வரங்கள் பெற இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய ஏற்ற தலம்.*

*நேர்த்திக்கடன்:*

*பிரார்த்தனை நிறைவேறியதும் வெண்ணெய் தானம் செய்து வழிபாடு செய்கின்றனர்.*

*தலபெருமை:*

*இத்தல சிவபெருமான் 8 முக பட்டை லிங்கமாக அருள்பாலிக்கிறார்*

 *இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.*
*இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.*

*இத்தலத்தில் வெண்ணெய் தானம் செய்வது சிறந்தது. ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது.*
*இதன் காரணமாக கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது.*

*ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்பர்.*
*தல வரலாறு:*
*கார்த்திகாச்சுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான்.*

*தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான்.*

 *இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார். கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்*

*தொடரும்*

*🌷வாழ்க வளமுடன்🌷*

*🙏ஓம் நமசிவாய🙏*

Friday, April 21, 2023

குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை

💢💢💢💢குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை.
இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு,ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள்.

குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.

இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட யானைகள் மிகவும் விஷேசம். அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.

இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன. திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும்.

இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.

நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.

இந்த ஸ்தலத்தில் உள்ள துலாபாரம் சிறப்பு எண்ணில் அடங்கா. பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்திக்ல் பழங்கள் , பொருள், காசுகள் என்று எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர். கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டி கொள்ளாமல், குரு+ வாயு சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது. இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை. இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம். மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள். இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.💢

. யார் குரு பகவான் வடக்கை பார்ப்பவர். தெட்சிணாமூர்த்தி தென்முககடவுள்.

தட்சிணாமூர்த்தி (அல்லது) தென்முகக்கடவுள்
தட்சிணாமூர்த்தி என்றும் தென்முகக்கடவுள் என்றும் போற்றப்படும் இவர் ரிஷிகளுக்கு யோகத்தையும் ஞானத்தையும் குருவாக அமர்ந்து உபதேசிக்கும் நிலை ..

சிவனின் லீலாமுர்த்திகள் இருபத்தைந்தில் சௌமியம் (சாந்தம்) சம்ஹாரம் (வதம்), நிருத்தம் (நடனம்), யோகம் (தியானம்) அனுக்கிரகம் (அருளல்) ஆகிய ஐந்தொழில்களில் யோக நிலையில் இருந்து ரிஷிகளுக்குக் கல்வியையும், ஞானத்தையும், யோகத்தையும் உபதேசிக்கும் மூர்த்தியாகத் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார்.

தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தில் “தெக்கினான்” என்றும், “ஆலமர் செல்வன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆகவே, தென்திசை அறிவும், ஞானமும் நிறைந்த திசையாகக் கருதப்படுகிறது. இவர் மகாராஜலீலாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், உத்குடிக்காசனம் போன்ற ஆசனங்களில் அமர்ந்திருப்பார்.

வியாக்யான தட்சிணாமூர்த்தி

இமயமலையின் மீது ஆலமரத்தினடியில் அமர்ந்து சாஸ்திரங்களை விளக்குவது போல அமைந்திருக்கும். இவர் புலித்தோலினையோ அல்லது வெள்ளைத் தாமரையிலோ பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். 

வலது காலைத் தொங்கவிட்டும் இடது காலை வலது காலின் மீது அமர்த்தியவாறும் இருக்கும். இவ்வகையான அமைதியினை “வீராசனம்” என்று அழைக்கப்படுகிறது.

தொங்கவிடப்பட்ட வலது காலினை அபஸ்மாறன் அல்லது முயலகன் மீது வைத்திருப்பது போலமைந்திருக்கும். முன்று கண்களையும், (நெற்றிக்கண்) நான்கு கரங்களையும், பெற்றிருப்பார். 

முன் வலது கை ஞான முத்திரை அல்லது சுதர்சன முத்திரையினையும், இடது கை வரத முத்திரை அல்லது தண்ட ஹஸ்தத்தினையும் (முன் கை முழங்காலின் மீது வைத்து நீட்டியவாறு அமைந்திருக்கும்), பின் வலது கை அக்கமாலையும், பின் இடது கை அக்னியும் அல்லது சர்பமும் தரித்திருக்கும். 

தலையில் சடாமுடி தரித்திருக்கும் சடையின் மீது ஊமத்தம் பூ அணிந்திருக்கும் சடாபாரம் அணிந்திருக்குமேயானால் அதன் உள்ளே கங்கையைத் தாங்கியவாறு இருக்கும்.

இவரது மேனியின் நிறம் வெண்ணிறமான ஸ்படிகத்தின் நிறத்தைப் போல அமைந்திருக்கும். சகலாபரணங்களும் அணிவிக்கப்பட்டிருக்கும் மார்பில் திருநீற்றுச்சாந்து பூசியிருப்பார்.

யக்ஞோபவீதம் அணிந்திருப்பார் இடது காதினில் சங்கபத்ர குண்டலமும், வலது காதினில் குண்டலமும் அணிந்திருக்கும். தட்சிணாமூர்த்தியின் பார்வையானது காலின் பெருவிரலினைப் பார்த்தவாறு அமைந்திருக்கும்.

தர்மத்தையும், ஞானத்தையும் கற்கும் ஆவலில் ரிஷிகள் சூழ்ந்திருப்பர். அம்சுமத் பேதாகமம், சபதரிஷிகளான நாரதர் ஜமதக்னி, வசிஷ்டர், பிருகு, பரத்வாஜர், சனகர் மற்றும் அகஸ்த்தியர், ஆகியோர் சூழ்ந்திருப்பதாகக் கூறுகிறது. 

அகஸ்த்தியர், புலஸ்த்தியர், விஸ்வாமித்திரர், மற்றும் ஆங்கீரசர் ஆகிய நான்கு ரிஷிகள் ஞானம் பெறுவதாகக் காரணாகமம் குறிப்பிடுகின்றன. இவர்கள் தலையில் சடாமுடியும் கழுத்தில் ருத்திராட்சமும் அணிந்திருப்பதாகக் குறிப்பிடுகின்றன.

ஞானதட்சிணாமூர்த்தி

வியாக்கியான தட்சிணாமூர்த்தியைப் போன்ற வடிவில் அமைந்திருப்பார் பின் வலது கையில் அக்கமாலையும், பின் இடது கையில் நீலோத்பல மலரும், வலது கையில் ஞானமுத்திரையும், முன் இடது கையில் அபயம் அல்லது தண்டஹஸ்தமும் தரித்துக் காணப்படுவார்.

யோக தட்சிணாமூர்த்தி

1. முதல் வகை

இரண்டு கால்களைக் குறுக்காக மடக்கி ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்திருப்பார். முன் வலது கை மார்பிற்கு நேராக யோகமுத்திரை தரித்து முன் இடது கை தொடையின் மீது அமர்த்தி யோக நிலையில் அமைந்திருக்கும். பின் வலது கை அக்கமாலையும், பின் இடது கை தாமரை மலரினைத் தரித்திருக்கும் இவரின் பார்வை மூக்கின் நுனியைப் பார்த்தவாரமைந்திருக்கும். தோள்களின் மீது பரவலாகச் சடைகள் காணப்படும்.

2. இரண்டாவது வகை

யோக தட்சிணாமூர்த்தியின் இடதுகால் மடக்கி உத்குடிக்காசணத்திலும் இடது காலையும் உடலையும் யோகபட்டையால் இணைக்கப்பட்டிருக்கும் வலதுகால் தொங்கவிடப்பட்ட நிலையிலிருக்கும். முன் இடது கையின் முழங்கை இடது முழங்காலின் மீது அமர்த்தப்பட்டிருக்கும்.

3. மூன்றாவது வகை

இரண்டுகால்ளையும் குறுக்காக மடக்கி ஆசனத்தின் மீது ஊன்றியவாறு அமைந்திருக்கும். இவரது கால்களையும் உடலையும் யோகப்பட்டையால் இணைக்கப்பட்டிருக்கும். முன் கைகள் இரண்டும் ஆசனத்தில் ஊன்றியிருக்கும் முழங்காலில் மீது அமர்த்திய வாறிருக்கும் பின் வலது கையில் அக்கமாலையும், பின் இடது கையில் கமண்டலமும், தரித்திருக்கும் சடைகளை ஒன்றாக இணைத்து சடா மண்டலமாகக் கொண்டு அதன் மேல் பிறைச்சந்திரன் மற்றும் நாகத்தினை அணிந்திருப்பார். வெள்ளை நிற மேனியராய் இருப்பார். கழுத்தின் நிறம் கருப்பாக அமைந்திருக்கும். சகலாபரணங்களும் அணிந்திருப்பார்.

வீணாதர தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல யோகம் மற்றும் ஞானத்தில் தேர்ச்சிபெற்றது மட்டுமல்லாமல் கலையிலும் தேர்ச்சி பெற்றவர். குறிப்பாக இசையில் பிரியர். பல கருவிகளை உபயோகிப்பவர். மிருதங்கம் (வெட்டுவான் கோயில் ), வீணை (லால்குடி) கருவிகளை மீட்டும் வல்லமை பெற்றவர்.

காமிகம் காரணம், அம்சுமத்பேதாகமம் இவரை இசைப்பிரியர் என்று எடுத்துக்காட்டுகின்றது. இடது காலை உத்குடிக்காசனத்தில் இருப்பதாக அமைத்து முன்னிரு கைகளில் வீணையைப் பிடித்தவாறும், பின் இருகைகளில் மான் மற்றும் மழுவினைத் தரித்திருப்பார்.

பொதுவாக தட்சிணாமூர்த்தி பலவித விலங்கினங்கள், ஊர்வனவைகள், ரிஷிகள், சித்தர்கள், வித்யாதரர்கள், பூதகணங்கள், கின்னரர்கள் ஆகியோர் சூழ அமைந்திருக்கும். ஆலமரத்தினடியில் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின் விரிக்கப்பட்ட புலித் தோலின் மீது சௌமிய தோற்றத்துடன் அமர்ந்திருப்பார்

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...