Wednesday, September 27, 2023

முருகன் ஆலயங்கள் மாவட்ட வாரியாக !..

முருகன் ஆலயங்கள் மாவட்ட வாரியாக !..
*🔯 அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தக்கோட்டம், சென்னை*

*🔯 அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், குமரன்குன்றம், சென்னை*

*🔯 அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கந்தாஸ்ரமம், சென்னை*

*🔯 அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில், மடிப்பாக்கம், சென்னை*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், ஊதியூர், கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு முருகன் திருக்கோயில், வேல்கோட்டம், கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், குமரன் கோட்டம், கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில், அனுவாவி, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில், இரும்பறை, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு வேதாயுத சுவாமி திருக்கோயில், செஞ்சேரி, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில், சரவணம்பட்டி, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமி பேட்டை, தர்மபுரி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருமலைக்கேணி, திண்டுக்கல்*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில், பழநி, திண்டுக்கல்*

*🔯 அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி, திண்டுக்கல்*

*🔯 அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், கதித்த மலை, ஈரோடு*

*🔯 அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோபி, ஈரோடு*

*🔯 அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை, ஈரோடு*

*🔯 அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை, ஈரோடு*

*🔯 அருள்மிகு முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில், மலையப்பப்பாளையம், ஈரோடு*

*🔯 அருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில், கொருமடுவு, ஈரோடு,*

*🔯 அருள்மிகுமுருகன் திருக்கோயில்,வட்டமலை, காங்கயம் திருப்பூர் மாவட்டம்*

*🔯 அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில், உத்திரமேரூர், காஞ்சிபுரம்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வல்லக்கோட்டை, காஞ்சிபுரம்*

*🔯 அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர், காஞ்சிபுரம்*

*🔯 அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில், காஞ்சிபுரம்,*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம்*

*🔯 அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், குமார கோயில், கன்னியாகுமரி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர், கன்னியாகுமரி*

*🔯 அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வேலாயுதம்பாளையம், கரூர்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வெண்ணெய் மலை, கரூர்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புத்தூர், உசிலம்பட்டி, மதுரை*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை, மதுரை*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நேதாஜி ரோடு, மதுரை*

*🔯 அருள்மிகு குமரன் திருக்கோயில், நாகப்பட்டினம்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரம்பூர், நாகப்பட்டினம்*

*🔯 அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி, நாகப்பட்டினம்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல்*

*🔯 அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில், பேளுக்குறிச்சி, நாமக்கல்*

*🔯 அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குருசாமிபாளையம், நாமக்கல்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், கபிலர்மலை, நாமக்கல்*

*🔯 அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், அலவாய்ப்பட்டி, நாமக்கல்*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர்*

*🔯 அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், குமரமலை, புதுக்கோட்டை*

*🔯 அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம்*

*🔯 அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில், ராமநாதபுரம், ராமநாதபுரம்*

*🔯 அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை, சேலம்*

*🔯 அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கஞ்சமலை, சேலம்*

*🔯 அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோயில், உடையாபட்டி, சேலம்*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி, சேலம்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை, சேலம்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், கோவனூர், சிவகங்கை*

*🔯 அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி, சிவகங்கை*

*🔯 அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தெப்பம்பட்டி, தேனி*

*🔯 அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி*

*🔯 அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில், சுருளிமலை, தேனி*

*🔯 அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம், திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், வானகரம், திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சிறுவாபுரி, சின்னம்பேடு, திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி, திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அம்மையார்குப்பம், திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி*

*🔯 அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில், மணக்கால், திருச்சி*

*🔯 அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில், கொழுந்துமாமலை, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், ஆய்க்குடி, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவகிரி, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம், வில்வாரணி, திருவண்ணாமலை*

*🔯 அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர்*

*🔯 அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், எல்க் மலை, நீலகிரி*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மஞ்சூர், நீலகிரி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர், வேலூர்*

*🔯 அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ரத்தினகிரி, வேலூர்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வள்ளிமலை, வேலூர்*

*🔯 அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்*

*🔯 அருள்மிகு ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழா*

*🔯 அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு, கடலூர்*

*🔯 அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர், விருத்தாசலம், கடலூர்*

*🔯 அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில், சி.மானம்பட்டி, கடலூர்*

*🔯 அருள்மிகு முத்துக்குமர சுவாமி திருக்கோயில், பரங்கிப்பேட்டை, கடலூர்*

*🔯 அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுவண்டிப்பாளையம், கடலூர்*

*🔯 அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், குக்கி சுப்ரமண்யா, தட்ஷின கன்னடா*

*🔯 அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர்*

*🔯 அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகு மலை, தூத்துக்குடி*

*🔯 அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், கிடங்கூர், கோட்டயம்*

*🔯 அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை.*

*முருகா உன் திருவடி சரணம்*
*திருச்சிற்றம்பலம்.*

 இறை பணியில் 
இரா. இளங்கோவன்.

மஹாளய #பக்ஷம் எதற்காக....?எப்படி செய்ய வேண்டும்...?என்னென்ன செய்ய வேண்டும்...?எதற்காக செய்ய வேண்டும்...?

#மஹாளய #பக்ஷம் எதற்காக....?
எப்படி செய்ய வேண்டும்...?
என்னென்ன செய்ய வேண்டும்...?
எதற்காக செய்ய வேண்டும்...? என அனைத்து கேள்விகளுக்கும் இந்த நீண்ட பதிவில் பதில் உண்டு அனைவரும் தெரிந்து கொள்ளவும்
👇👇👇✨✨💫🌷🌷🦚🕉️
#மஹாளய #பக்ஷம் எனும் மகத்தான புண்ணிய தினங்கள் 29.09.2023 பௌர்ணமி சோபகிருது புரட்டாசி 12ம் முதல் சோபகிருது புரட்டாசி27ம் நாள் 14 அக்டோபர் 2023 சனிக்கிழமை  வரை  16 நாட்கள் மஹாளயபக்ஷம் அமாவாசை  சனிக்கிழமை சோபகிருது14 அக்டோபர் 2023  புரட்டாசி27 ம் நாள் வருகிறது  பித்ரு தோஷம் நீக்கும் அமாவாசை தவரவிடாதீர்கள்

நம்மீது வைத்துள்ள ஈடிணையற்ற கருணையினால், பித்ருக்கள் எனப் பூஜிக்கப்படும் நம் முன்னோர்கள் எங்கோ கற்பனைகளுக்கும் மீறிய பலப் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ருக்களின் உலகத்தில் இருந்து, ஸ்வர்ணமயமான விமானங்களில், சூர்ய கதிர்களின் வழியாக பூவுலகிற்கு எழுந்தருளி, மஹாளய பட்சம் எனும் அந்த பதினைந்து புனித தினங்களிலும் நம்முடன் தங்கியிருக்கிறார்கள் என்று வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.

கிடைத்தற்கரிய  புண்ணிய பலனை நமக்கு அளித்தருளும் அந்தப் பதினைந்து நாட்களும் – நாம் தூய்மையான உள்ளத்துடன் இருக்க வேண்டும். வீட்டை தூய்மைப்படுத்தி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பதினைந்து நாட்களிலும், வீட்டில் எவருடனும் சண்டையிடுவதோ, அல்லது தவறான வார்த்தைகள் பேசுவதோ அல்லது அசைவ உணவு உண்பதோ கண்டிப்பாகக் கூடாது.  ஏனெனில், அப்போது நம் முன்னோர்கள் நம் வீடுகளில் தங்கியிருக்கிறார்கள். 

அவர்களது தேஜஸ்ஸை (தெய்வீக ஒளி) நம் ஊனக்கண்களில் பார்த்தால், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நம் பார்வை போய் விடும். ஆதலால்தான் அப்பெரியோர்கள் தங்கள் ஒளியை மறைத்துக் கொள்கிறார்கள்.

சக்தி உள்ளவர்கள் தினமும் சிராத்தம் செய்யலாம். இதற்கு வசதியில்லாத அன்பர்கள் அவரவர்கள் தங்கள் தந்தை இறைவனடி சேர்ந்த திதியன்று செய்யலாம். தந்தை காலமான தினத்தின் திதி தெரியாதவர்கள் ஏகாதசி அல்லது மஹாபரணி ஆகிய தினங்களில் செய்யலாம். புண்ணிய நதிக்கரையில் செய்வது மிகச் சிறந்த நற்பலனை அளிக்கும்.

பக்ஷம் என்றால் 16 நாட்கள்; மஹாளயம் என்பது பித்ரு தேவதைகள் வசிக்கும் இடம். பித்ருக்கள் பூமிக்கு வந்து நம்முடன் சூக்ஷ்ம ரூபத்தில் வசிக்கும் 16 நாட்களே மஹாளய பக்ஷம். புரட்டாசி மாச அமாவாசைக்கு முந்தைய 16 நாட்களை மாஹாளய பக்ஷம் என்று பெயர். புரட்டாசி அமாவாசையை மஹாளய அமாவாசை என்று சொல்கிறோம். 

இந்த நாட்களில் நமது மூதாதையர்களான பித்ருக்கள் பூலோகத்திற்கு சூக்ஷம ரூபத்தில் வந்து நாம் அளிக்கும் பித்ருதர்பணங்களை நேரடியாக எற்பகிறார்கள். பொதுவாக பித்ருக்கள் எல்லா நாட்களிலும் பூலோகம் வர இயலாதாம். ஒவ்வொரு அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் அவர்கள் மறைந்த திதி நாட்கள் மற்றும் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே அவர்களால் பூலோகத்திற்கு வர இயலுமாம். அதனால்தான் அவர்கள் வரும் தினங்களில் பித்ரு பூஜையை செய்யச் சொல்லியிருக்கிறார்கள் மஹரிஷிகள்.

 புரட்டாசி அமாவாசையன்று சகல லோகங்களிலும் இருக்கும் மஹரிஷிகள், தேவர்கள்மற்ஸ எல்லா ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து பித்ரு தர்பணம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. நமது பித்ருக்களான வசு, ருத்ர, ஆதித்யர்கள் கூட பூலோகம் வந்து பித்ரு தர்பணங்களை சூக்ஷ்ம ரூபமாய் செய்கிறார்கள் என்பர்.

அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் க்ரஹண காலங்களில் செய்யும் தர்பணமானது நமது தந்தை மற்றும் முந்தைய 2 தலைமுறையினருக்கும், தாய் வழியில் 3 தலைமுறையினருக்குமாக 12 பேர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது.ஆனால் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே, காருணீகர்கள் எனப்படும் மாமா-மாமி, பெரியப்பா-பெரியம்மா, அத்தைகள், சகோதரர்கள்- அவர்களது மனைவிகள், சித்தப்பா-சித்தி, மாமனார்-மாமியார், குரு, நண்பர்கள் ஆகிய எல்லோருக்கும் செய்ய முடிகிறது.பித்ருக்களுக்கு உணவாவது எள் கலந்த நீரே. இதனை மந்த்ர பூர்வமாக அவரவர் பெயர் சொல்லி அளிப்பதன் மூலம் அவர்களது ப்ரீதிக்குப் பாத்திரமாகிறோம். 

இறந்தவர்கள் எங்கோ மறுபடி பிறந்திருப்பார்களே பின் எதற்கு இவை என்று ஒரு கேள்வி வரும்.அவ்வாறு பிறந்தாலும், மீண்டும் பிறந்த அந்த ஜீவனுக்கு அந்த நேரத்தில் வேண்டிய பொருளாக நாம் அளிக்கும் எள்ளும்-நீரும் மாறிவிடும் என்கிறார்கள். இன்னொரு கருத்துப்படி, நமது முன்னோர்கள் மற்றொரு பிறவி எடுத்தாலும்,நாம் செய்யும் சிராத்தம்/தர்பணம்போன்றவை ஸ்ரீவிஷ்ணுவுக்குப் ப்ரீதியாகிவிடுவதாகவும், செய்யத் தகுதியுடையவன் செய்யாது விடக்கூடாது என்பது பெரியவர்கள் கூற்று.
மஹாளயத்தை மூன்று விதங்களில் செய்யலாம். 

பார்ணவம் எனப்படும் ஹோமத்துடனான சிராத்தமாகவும், ஹோமமில்லாது ஹிரண்ய சிராத்தமாகவோ, அல்லது தர்பண ரூபமாகவோ செய்வது வழக்கம். நமது பொருளாதார, இட-கால வசதிக்கு ஏற்ப ஏதேனும்ஒரு வழியைப் பின்பற்றியோ அல்லது குலவழக்கத்தின்படியோ செய்வது அவசியம். 16 தினங்களும் தர்பணம் செய்வதற்கு பக்ஷ-மாளயம் என்று பெயர். 

இதனைச் செய்ய இயலாதவர்கள் விசேஷ தினங்களான மஹாபரணி, மத்யாஷ்டமி, வ்யதிபாதம், கஜச்சாயா,அல்லது தமது தாய்/தந்தையின் திதிகளில் மட்டுமாவது ஹிரண்ய ரூபமாக சிராத்தம் செய்து அன்னமிடுதல் வேண்டும். குடும்பத்தில் யாரேனும் சன்யாசியாகி மரணமடைந்திருந்தால் அவர்களுக்கு மாஹாளய ஏகாதசியன்று சிராத்தம் செய்வதும் துர்மரணமடைந்தவர்களுக்கு சதுர்தசி உத்தமமானதாகச் சொல்லப்படுகிறது.

பொதுவாக நாம் தர்பணங்கள் செய்யும் போது நமது வலதுகை ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் நடுவிலாக நீரை வார்க்கிறோம். இந்த இருவிரல்களுக்கு நடுவில் இருக்கும் ரேகைகளை பித்ரு-பூம்ய ரேகைகள் என்பர். இந்த ரேகைகள் மூலமாக அளிக்கப்படும் நீரானது பித்ருக்களுக்கானதாக மாறிவிடுகிறதாம். 
இந்த 16 நாட்களும் சிராத்தம், தர்பணம் போன்றவை மூலமாக தான தர்மங்களைச் செய்தல் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானதாச் சொல்லப்படுகிறது. இவ்வாறு ப்ரீதியான பித்ருக்கள் நமது வம்சம் தழைக்கவும், நோய்-நொடியற்ற வாழ்வுக்கும் ஆசிர்வாதிக்கின்றனர். நமது வாழ்வுக்கு நல்லது என்பது ஒருபுறமிருந்தாலும், நம்மை வளர்த்து ஆளாக்கிய நமது பெரியவர்களுக்கு நாம் செய்யும் நன்றி அறிவித்தல் என்ற எண்ணத்திலாவது இந்த பித்ரு பூஜையை விடாது செய்ய வேண்டும். அவரவர் குலாசாரத்தின்படியாக எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படியாக செய்து மூதாதயர்களை வணங்கி, அவர்களது அருளை நாடுவோம்.

மஹாளய பக்ஷம் எனும் மகத்தான புண்ணிய தினங்கள்

 10.09.2022 பௌர்னமி சுபகிருது ஆவணி 25ம் முதல் 25.09.2022  சுபகிருது புரட்டாசி 8ம் நாள்  ஞாயிறு கிழமை அமாவாசை வரை முடிவடைகிறது  16 நாட்கள்
 .
மஹாளயத்தில் வரும் திதி, நட்சத்திரம், யோகம் அடிப்படையில் தர்பணம், தான தர்மம் வழிகளில் முன்னோர்களை வழிபட மிகவும் உன்னதமான நாட்கள் கீழே தரப்பட்டுள்ளது

மஹாளயபக்ஷம் தர்ப்பண பலன்கள்!

29-செப்-2023 வெள்ளிக்கிழமை  பௌர்னமி: செல்வம் பெருகும் (தனலாபம்)

30-செப்-2023 சனிக்கிழமை  பிரதமை: செல்வம் பெருகும் (தனலாபம்) 

01-அக்டோபர்-2023 ஞாயிற்றுக்கிழமை துவிதியை: வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி) 

02-அக்டோபர்-2023  (திங்கட்கிழமை) திருதியை: திருப்திகரமான இல்வாழ்க்கை (வரன்) அமையும் 

03-அக்டோபர்-2023  (செவ்வாய்கிழமை) சதுர்த்தி மகா பரணி: பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)

சோபகிருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்தியாம் புண்யதிதௌ, ப்ருகு வாஸர அபபரணீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் சதுர்த்தியாம் புண்யகாலே,  பித்ருவ்ய, மாதூலாதி வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம் ஸகருஸ்ய காருண்ய பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்தியர்த்தம், ஸக்ரூன் மஹாளய ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

04-அக்டோபர்-2023  (புதன்கிழமை) - சதுர்த்தி  பஞ்சமி: மகா பரணி:பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)

05-அக்டோபர்-2023  (வியாழன்) பஞ்சமி ஷஷ்டி: அதிதி விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)

06-அக்டோபர்-2023  (வெள்ளிக்கிழமை) சஷ்டி தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)

07-அக்டோபர்-2023  (சனிக்கிழமை) சஷ்டி சப்தமி தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)

08-அக்டோபர்-2023  (ஞாயிறு) – சப்தமி மத்யாஷ்டமி வியாதிபாதம் மேலுலகோர் ஆசி

09-அக்டோபர்-2023  (திங்கட்கிழமை) நவமி: நல்லறிவு வளரும்

சோபகிருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர ஆர்த்ரா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அஷ்டம்யாம் புண்யகாலே,  பித்ருவ்ய, மாதூலாதி வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம் ஸகருஸ்ய காருண்ய பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்தியர்த்தம், ஸக்ரூன் மஹாளய ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

10-அக்டோபர்-2023 செவ்வாய்கிழமை  தசமி: ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை

11-அக்-2023  (புதன்கிழமை) ஏகாதசி : ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை

12-அக்டோபர்-2023 2 (வியாழன்) துவாதசி தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும் சன்யாஷ்ட மஹாளயம்

13-அக்டோபர்-2023  (வெள்ளிக்கிழமை) த்ரயோதசி வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்

14-அக்டோபர்-2023  (சனிக்கிழமை) சதுர்த்தசி மற்றும் மகம் நட்சத்திரம்  தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்
 
சோபகிருது14 அக்டோபர் 2023 சனிக்கிழமை சர்வ பித்ரு அமாவாசை அல்லது மஹாளயபக்ஷம் அமாவாசை : மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும் நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்

சோபகிருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர,உத்திரம்/ ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

மஹாளய அமாவாசை அன்று பஞ்சாங்கம்

சோபகிருது வருஷம், தக்ஷ்ணாயனம், வர்ஷ ருது, பாத்ரபத(அல்லது கன்யா) மாஸம், புரட்டாசி 27 ம் நாள்  14 அக்டோபர் 2023 (சனிக்கிழமை வருகிறது. முதல் நாள் இரவு 10.40 முதல்  சர்வ அமாவாஸ்ய திதி இரவு 11.57 வரைஅஸ்தம்  பிறகு அடுத்தநாள் பிரதமை சித்திரை நட்சத்திரம்   பின்னர் அடுத்தநாள்சுப்ர யோகம்  சது கரணம்.14 அக்டோபர் 2023 (சனிக்கிழமை மஹாளய அமாவாஸ்யை  தர்பனம்: சோபகிருது நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர, உத்திரம்/ ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

மஹாளய பக்ஷ தர்ப்பணம்

தர்ப்பணம் என்றால் போனவர்களுக்கு திருப்தியையும் நிறைவையும் தருவதாகும். அவர்களை திருப்திப்படுத்தி மேலும் நகர்த்தச் செல்ல சிரார்த்தம்  இது செய்யப்படுகிறது.

மூதாதையரின் இறப்பு நேரம், தேதி மற்றும் இயல்பைப் பொருட்படுத்தாமல் ஒருவர் தனது மூதாதையருக்கு கடமையை நிறைவேற்றும் நாள் இது. இது ஒரு வகை பார்வண சிரார்த்தம். இந்த நாளில் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யப்படுகிறது. 

மஹாளய அமாவாஸ்யை  தர்பனம் மந்திரம்: 
பிலவ நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர, உத்திரம்/ ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஶ ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
சுவதா நமஸ் தர்பயாமி, சுவதா நமஸ் தர்பயாமி, சுவதா நமஸ் தர்பயாமி

செயல்முறைகள்

ஸ்ரார்த்தம்  நான்கு படிகளில் செய்யப்படுகிறது:

1. விஸ்வதேவ ஸ்தபனா - இது ஒரு தொழில்முறை பூசாரியைக் கலந்தாலோசிப்பது மற்றும் சடங்கைச் செய்வதற்குத் தேவையான மற்ற அனைத்து பொருட்களையும் சேகரிக்கும் செயல்முறையைக் குறிப்பிடுகிறது.

2. பிண்டம் - அரிசி, பார்லி, பசும்பால், தேன், நெய் மற்றும் சர்க்கரையால் ஆன ஆத்மாக்களுக்கு ஒரு வட்ட வடிவ பந்தில் உணவு வழங்கப்படுகிறது.

3. தர்ப்பன் - எள், பார்லி, தர்பை புல் மற்றும் வெள்ளை மாவு ஆகியவற்றுடன் தர்பனம் தண்ணீரை வழங்கி வருகிறது.

4. பிராமணர்களுக்கு உணவளித்தல் - இறுதியாக, பிராமணர்களுக்கு நன்றி உணவாக உணவு வழங்கப்படுகிறது.

இந்த வருடம் " சிரார்த்தம் " செய்வதற்கான காலம் பக்ஷ சிரார்த்தம் 29 செப்டம்பர் முதல் 14 அக்டோபர் 2023 வரை   பஞ்சாங்கங்களில்  சொல்லப்பட்டுள்ளது. சிரார்த்தம் கொண்டாட்டம்  சர்வபித்ரு அமாவாசை நாளில் முடிவடையும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இறுதி நாள் பிரசாதங்களுக்கு மிகவும் உகந்ததாகத் தெரிகிறது.
புரோஹித் முன்னிலையில் நிகழ்த்தப்படும் சிரார்த்தம்  விழா சிறந்தது. 

சிரார்த்தத் தில் என்ன தானம் செய்ய வேண்டும்
சிரார்த்தம் பூஜையில் சுப பொருட்களை தானம் செய்வது பித்ரு தோஷத்திலிருந்து விடுபட உதவுகிறது. புராண நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களின்படி ஒவ்வொரு பொருளுக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உள்ளது. 

வெல்லம் - இது வறுமையை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் செல்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கிறது.

நிலம் - ஒரு முனிவருக்கு நிலத்தை வழங்குவது உங்களுக்கு நிதி ரீதியாக வளர உதவுகிறது.
தங்கம் - இது வீட்டில் உள்ள ஒற்றுமையை குறைக்கிறது மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே அமைதியான உறவை ஏற்படுத்த உதவுகிறது.

மாடு - மற்றவர்களுக்குப் பரிசாகப் பசுவை கொடுப்பது, பெயர், புகழ் மற்றும் அனைத்து வார்த்தைகளான இன்பங்களையும் கொடுத்து உங்களுக்கு உதவுகிறது, ஏனெனில் இது யாராலும் செய்யப்படக்கூடிய தூய்மையான தானம்.

உணவு தானியங்கள் - இது செழிப்பை அளிக்கிறது.
நெய் - முனிவருக்கு நெய்யை வழங்குவது வாழ்க்கையின் அனைத்து கண்ணோட்டங்களிலும் வளர உதவுகிறது.

உப்பு - உப்பு நம் முன்னோர்களின் ஆத்மாவை சமாதானப்படுத்துகிறது, இதனால் அவர்கள் நமக்கு வரங்களை அளிக்கிறார்கள்.

ஆடைகள் - எப்போதும் செழிப்பு மற்றும் மன அமைதியுடன் ஆசீர்வதிக்கும் முனிவர்களுக்கு ஒரு ஜோடி ஆடைகள் பரிசாக வழங்கப்படுகின்றன.
வெள்ளி - வெள்ளியை வழங்குவது நம் முன்னோர்களின் ஆன்மாவை அமைதிப்படுத்தி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
எள் விதைகள் - எள் விதைகளை வழங்குவது எந்தவிதமான ஆபத்துகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

மஹாளயபக்ஷம் தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம்.

1) பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை ( பித்ருக்களாக ) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து, ப்ராம்ஹணர்களுக்கு சாப்பாடு போடுவது ,
2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது,
3) தர்ப்பணம் என்பது தானாகவே அமாவஸைபோல் தர்ப்பணமாகச் செய்வது.

இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் கட்டாயம் தனது பித்ருக்களுக்குச்செய்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள்

1.தேவகடன்,
2.பித்ருகடன்,
3.ரிஷிகடன்

ஒவ்வொரு மனிதனும், தேவகடன் நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனிலிருந்தும் நிவர்த்தி அடையலாம்.
பித்ருகடன்,தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றைத் தக்க காலங்களில் செய்வதன் மூலம் பித்ருகடனிலிருந்தும்நிவர்த்தி அடையலாம்.

ரிஷிகடன் முனிவர்கள் அருளிய உயர்ந்த படைப்புகளை பாராயணம் செய்து உபாசிப்பதன் மூலமும், குருமார்களையும் ரிஷிகளையும் ஆராதித்தல், வீடு தேடி வரும் சன்யாசிகளுக்கு உணவளித்தல், அவர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தல் போன்றவற்றின் மூலமும், ரிஷிகடனிலிருந்தும் நிவர்த்தி அடையலாம்.
கிடைத்தற்கரியது மஹாளயபக்ஷம் புண்ணிய காலம்.
முதன் முதலில் பிரபஞ்சத்தில் தோன்றிய ஆதிமூலச் சூரிய கிரகமும், ஆதிமூலச் சந்திர கிரகமும் இணைகின்ற கிரகமண்டல சங்கமத்தில் தோன்றுவதே மஹாளயபக்ஷபூஷித லோகமாகும்
இங்குதான் மஹாளயபக்ஷத்தை பெருந் திருவிழாவாக தேவர்களும் பித்ருக்களும் கொண்டாடுகிறார்கள். அதாவது, நமது மூதாதை யர்களது பித்ரு லோகங்களில் கொண்டாடப் படுகின்ற பிரம்மோற்சவமே மஹாளயபக்ஷம் மாகும்.

பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பணத்தில் எழுகின்ற தர்ப்பண நீரைக் கொண்டு, பித்ரு லோகங்கள் பலவற்றிலும், பித்ருக்களும் பித்ரு கணங்களும் பித்ரு பத்தினிகளும் கலச பூஜை செய்து, அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப் பெறுகின்றனர்.

நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத் திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற் றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக் கின்றனர்.

பொதுவாக அனைத்து அமாவாசை திதிகளிலும் 
ஸ்ரீ அக்னி பகவானின் பத்தினியான ஸ்வதா தேவியானவள், நாம் இடுகின்ற எள்ளையும் நீரையும் வாங்கி வானத்தில் எங்கெங்கோ உள்ள நீத்தார் உலகங்களுக்கு எடுத்துச் செல்கிறாள். ஆனால், மஹாளய பட்ச அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய- சந்திர உலகிற்கு வந்துபோவதால் ஸ்வதா தேவியால் அனைத்து உறவினர்களையும் அங்கு சந்திக்க முடிகிறது. எனவே மஹாளய பட்ச அமாவாசையில் நாம் சமர்ப்பிக்கும் எள், நீர் ஆகியவற்றை இறந்த நமது உறவினர்களி டையே உடனடியாக அவள் சேர்த்துவிடுகி றாள்.
இறந்துபோன மூதாதையர்களின் நினைவாக நாம் அளிக்கும் உணவானது, (இந்த மஹாளயபக்ஷம் காலத்தில்) உடனே அவர்களைச் சென்று அடைவதாய் ஐதீகம்.

என் அருமையான தகப்பன் கடினமாக உழைத்து, சிக்கனமாக வாழ்ந்து, என்னைப் படிக்க வைத்து, நல்ல வேலையில் கொண்டுபோய் சேர்த்து, நான் உயர்வதைப் பார்த்து மகிழ்ந்து, எனக்குத் திருமணம் செய்து வைத்து, பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்துவிட்டு, என்னையும் என் குடும்பத்தையும் ஆசிர்வதித்துவிட்டுப் போனாரே... அதற்காக நன்றி என்று தெரிவிப்பது நல்லதல்லவா? 
அந்தத் தாய் இல்லையெனில் நான் இல்லை. தன் உதரத்தில் சுமந்தவள் என்பதால் மட்டுமல்ல, ஒவ்வொரு கணமும் என் நினைவாகவே வாழ்ந்து, எனக்காகவே தன் வாழ்க்கை வசதிகளை சுருக்கிக்கொண்டு, என்னுடைய வளர்ச்சியையும் கம்பீரத்தையும் பார்த்துப் பூரித்து ‘அது என் பிள்ளை’ என்று பலபேர் முன்னால் கர்வமாகச் சொல்லி, அந்தக் கர்வத்தின் காரணமாகவே இன்னும் அதிக உதவிகள் செய்து, உங்கள் மனைவிக்கு வாழ்வின் மேன்மைகளை உணர்த்தி, உங்கள் பேரப் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்கள் சொல்லி, சட்டென்று ஒருநாள் போய் வருகிறேன் என்று சொன்னதுபோல மறைந்து போனாளே... அவளுக்கு மனமார்ந்த நன்றியாக தர்பனம் செய்வதுதான் எத்தனை சுகம்! நெஞ்சார்ந்த நன்றி என்று தாய் தந்தையாரை நினைத்துக் கொண்டுவிட்டால் அந்த நீத்தார் கடனில் எவ்வளவு ஆழமாக, உணர்வுப்பூர்வமாக ஈடுபட முடியும்!
‘அன்பு தாயே, தந்தையே, நீங்கள் வெளிச்சத்திற்கு வாருங்கள் உங்கள் பசி தீர்க்க இந்த அரிசி மாவினால் செய்த பிண்டத்தை சமர்ப்பிக்கிறேன். உங்கள் தாகம் தீர்க்க எள் நீர் வார்க்கிறேன். உங்களை கைகூப்பி இந்த இடத்தில் இந்த இந்த மஹாளயபக்ஷத்தில், என் அருகே வந்து நான் கொடுக்கின்ற இந்த சிறிய பொருட்களை காணிக்கையாக ஏற்று சந்தோஷமடைய வேண்டும். எங்களையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேண் இங்கே உட்கார்ந்து இத்தனை கம்பீரமாக இதைச் செய்ய முடிகிறதென்றால் அது நீங்கள் என்னை நன்கு வளர்த்ததுதான் காரணம்’ என்று நெகிழ்ந்து சொல்லுங்கள்.

அரிசி மாவினால் செய்த பிண்டத்தை  காக்கை தின்று விட்டது. ஐயர் தட்சணையை வாங்கிக்கொண்டு போய்விட்டார். நீரில் இறைத்த ஜலம், நீரோடு கலந்துவிட்டது. நீங்கள் மட்டும் குளக்கரையில் அமர்ந்து நீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மனம் மட்டும் அந்த மஹாளயபக்ஷத்தில், அம்மாவையும், அப்பாவையும், மற்ற முன்னோர்களையும் நினைத்துக் கொள்ளும். உள்ளுக்குள் கை கூப்பும். கண்களின் ஓரம் நீர் திரளும்.

பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பணத்தில் எழுகின்ற தர்ப்பண நீரைக் கொண்டு, பித்ரு லோகங்கள் பலவற்றிலும், பித்ருக்களும் பித்ரு கணங்களும் பித்ரு பத்தினிகளும் கலச பூஜை செய்து, அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப் பெறுகின்றனர்
.
எவ்விதம் பித்ருக்கள் வருகிறார்கள்?

மஹாளயபக்ஷம் ஆரம்ப தினத்தன்று பித்ரு தேவதைகள், சூரிய பகவான், தர்மராஜன் ஆகியோரின் அனுமதி பெற்று பித்ருக்கள், ஸ்வர்ண (தங்கம்) மயமான விமானங்களில் ஏறி நம்மிடம் வருகிறார்கள். இந்த விமானங்கள் சூரியனின் ஒளிக்கற்றைகள் மூலம் பறந்து வருகின்றன. இவ்விதம் பித்ருக்கள் பூமியில் இறங்கும்போது அவர்களை தேவர்களின் உலகிலுள்ள மகரிஷிகள் ஆசீர்வதிக்கின்றனர். 

தேவர்கள் வணங்குகின்றனர். பித்ருக்கள் பரம பவித்திரமானவர்கள். தங்களது ஜீவித காலத்தில் செய்துள்ள புண்ணிய செயல்களால் புடமிட்ட தங்கம்போல் ஒளிபொருந்தியவர்களாகப் பித்ருக்கள் பிரகாசிக்கிறார்கள் எனப் புராதன நூல்கள் போற்றிப் புகழ்கின்றன.

மீண்டும், தங்கள் குழந்தைகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதால், அவர்கள் பேருவகை அடைவதாக ‘கருடபுராணம்’ கூறுகிறது. அவர்கள் நம்மிடையே வந்து நம்முடன் தங்கும் இந்தப் பதினைந்து புனிதநாட்களும் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பேசவேண்டும், வீட்டை எப்படிப் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை ‘வைத்யநாத தீக்ஷிதம்’ என்ற வடமொழி நூல் அதிஅற்புதமாக நமது நன்மைக்காக விளக்கியுள்ளது. 

இந்த, பதினைந்து நாட்களிலும், ஒவ்வொருவரும் நமது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, ஆபாசமான படங்களைப் பார்த்தல், பாலியலைத் தூண்டும் புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றைப் படித்தல், புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். 

பித்ருக்களை வழியனுப்பி வைத்தல்!
இவ்விதம் மஹாளயபக்ஷம் பதினைந்து நாட்களும் பூஜித்த பிறகு, மஹாளய அமாவாசை அன்று விசேஷ பூஜை செய்து நம்மை ஒரு பொருட்டாகக் கருதி இப்பூவுலகிற்கு எழுந்தருளி நம்முடன் இந்தப் பதினைந்து நாட்களும் தங்கி, நமக்கு அருள்புரிந்ததற்காக அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களுக்குப் பாதபூஜை செய்து (பெரியவர் ஒருவர் மூலம்), நன்றி கூறி அம்மகாபுருஷர்களையும், அவர்களது தேவியரையும் (மனைவி) வழியனுப்பி வைக்கிறோம். அவர்களும் தாங்கள் வந்த தங்கமயமான விமானத்திலேயே சூரியனின் கிரணங்கள் வழியாக தங்களது நல்லுலகிற்குச் செல்கிறார்கள். ஆதலால், மஹாளயபக்ஷம்என்ற மகத்தான புண்ணிய காலம் நமக்கு அளவற்ற நற்பலன்களைத் தேடித் தருகிறது. 

தர்ப்பணம் 

உடல் நிலை சரியில்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்திலும் அளிக்கலாம். ஆனால் தீர்த்தத் தலங்களுக்கு சென்று தர்ப்பணத்தை எள், நீர் தெளித்துச் செய்தால் பலன் பல மடங்கு கூடும் என்பது ஐதீகம். 
தர்ப்பணங்களில் எள் பித்ருக்களுக்கு உரித்தானதாக இருக்கிறது. இந்தத் தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும் என்பது சாஸ்திரம். இதனால் வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பது ஐதீகம்.
 
செய்ய வேண்டியவை 

இல்லத்தில் உள்ள பெரியவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பசியால் வாடிவிடாமல் காக்க வேண்டும். இருக்கும்போதும், இறந்த பின்னும் முன்னோரைக் காப்போம், வழிபடுவோம். 
தர்ப்பணத்திற்குப் பின்னரே இல்லத்துப் பூஜைகள் செய்ய வேண்டும்.தர்ப்பணம் செய்ய வேண்டிய இம்மாதத்தில் திவச நாள் முடிந்த பின்னரே இல்லத்து மங்கள நிகழ்ச்சிகளை செய்ய வேண்டும்.ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் பித்ருக்களை வணங்கிச் சூரியனை வழிபடலாம்.ஆண்டொன்றுக்குத் தொண்ணூற்றாறு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்ற கணக்கொன்று உண்டு.மகா புண்ணியத்தை அளிக்கக்கூடியது தாய், தந்தையருக்கு இடைவிடாமல் செய்யும் திவசமே. 

தவிர்க்க வேண்டியவை 

கர்த்தா என்ற தர்ப்பணம் செய்பவர் தனது பெயரை இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு எந்தப் பூஜையிலும் சங்கல்பம் செய்துகொள்ளக் கூடாது.

ஆக, அதியற்புதமான- தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து, பல்லாயிரக்கணக்கான கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மஹாளய பட்ச தர்ப்பண தான- தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காணலாம்..!

வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். 
மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழிகூறினார்.

மஹா-கல்யாணம், ஆலயம் -இருப்பிடம் என்ற பொருளில் கல்யாணத்திற்கு இருப்பிடமாயிருப்பதால் மஹாளயம் என்று பெயர் வந்ததாகவும் கருதலாம். 
திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். 

""மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது'' என்பது பழமொழி. 

இனம்புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் - குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். 
இந்துக்களுக்கு தமது முன்னோரது ஆசி பெற அமாவாசைகள் அதிலும் குறிப்பிட்ட சில அமாவாசைகள், வருஷதிதி, மகாளயபட்சநாட்கள் மிகவும் உகந்தவை.

பிதுர்தர்ப்பணத்தை பிள்ளைகள் அவசியம் பெற்றோருக்காகச் செய்யவேண்டும். தர்ப்பணம் என்றால் திருப்தியுடன் செய்வது என்றும், சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் செய்வது என்று அர்த்தம்.
மஹாளயபக்ஷ அமாவாசையில், சீக்கிரம் எழுந்து புனித நதிகளில், கடலில் அல்லது அருகிலுள்ள ஏரி குளம் இவற்றில் நீராடுவார்கள். இந்த நாளில் உண்ணாவிரதம் இருந்து அமாவாசை நோன்பையும் 
கடைப்பிடிக்கின்றனர். 

ஸ்ரார்த சடங்குகளை செய்வது, எள் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புனிதமான செயல் என்று நம்பப்படுகிறது.

பிந்திய மாத காலத்தில் தங்கள் முன்னோர்களை வணங்க முடியாதவர்கள் இந்த நாளில் இருந்தாவது, இவற்றினை செய்தால் நலம் ஆகும். அன்று அந்தணர்கள், முதியவர்கள், ஏழைகள் என்பவருக்கு தானம் தர்மம் செய்வது பல தலைமுறைக்கும் பயன் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
தடைபட்ட திருமணம், வேலையின்மை, நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் நம் வாழ்வில் கிடைக்கப்பெறும்.

அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூயைறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர் களும் சௌபாக்கியங்களுடன் வாழ்வர்.

ஆகவே, அவர்களுக்குரிய திதி, தர்ப்பணம், திவசம் ஆகியவற்றை முறையாக செய்வது ஒன்றே அவர்களுக்கு நிச்சயமாக விடுதலை அளிக்கும். அதனால் இந்த அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து, திதி,திவசம் செய்து முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று இன்பமாக வாழவேண்டும்.

பிதுர் தோஷம் நீக்கும் மஹாளயபக்ஷ அமாவாசை  பிதுர்களாகிய மறைந்த நம் முன்னோர்கள் பூஜைக்கு ஏற்றதாக போற்றப்படுகின்றது.  அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும். பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும். இடையூறு இல்லாமல் சுகமாக வாழலாம் என்பது நம்பிக்கை.

இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.

 (ஆதாரம் : ஸ்ரீ பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், ஸ்ரீ கருடபுராணம், ஸ்ரீ பவிஷ்ய புராணம், ஸ்ரீ மத் மகாபாரதம், ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீ அகத்தியர் பூஜா விதானம், முதலிய நூல்கள்).

இந்த மாளய  பக்ஷத்தில் பித்ரு தோஷம்  நீங்கி வாழ்க்கையில் சந்தோஷம் அடைய கோதானம் மற்றும் கோவிற்கு உணவு அளித்தல், சம்பிரதாய பிராமின் அன்னதானம், வஸ்திரதானம் செய்ய விருப்பமுள்ள அன்பர்கள் தொடர்பு கொள்ளலாம்....🪷🪷🦚
சிவாகம சிந்தனை குழு தலைவர்
ஜோதிடம் மற்றும் ஆன்மீக ஆலோசகர்
சிவ ஸ்ரீ வசந்த கிருஷ்ண சிவம் திருக்கோவிலூர்
தொடர்பு எண்:8431329141

Tuesday, September 26, 2023

கச்சி ஏகம்பனே, கடையானேன் பிழை பொறுத்துக் கண்ணளித் தருளாய்' கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கு..

கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும், இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கும் வந்து வழிபடவேண்டிய தலம்...!

மூலவர் - மணல் (பிருதிவி) லிங்கம். 

உமாதேவியார் கம்பை  நதிக்கரையில்  மணலால்  இலிங்கம் அமைத்து வழிபட, இறைவன் ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்ய,  உமையம்மை இலிங்கத்தைத் தழுவிக் காத்தாள்.

தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் தழுவலை  ஏற்றுத் தழுவக் குழைந்தார். இதனால் இறைவனுக்குத் ‘தழுவக் குழைந்த பிரான்’ என்றும் பெயர்.

சக்தி பீடங்களுள்   சிறந்ததாகிய  காமகோடி  பீடத்தலம். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வாழ்ந்த 
தெய்வப் பதி.

      தலமரம் மாமரம். ஆம்ரம் - மாமரம்.
      ஏகம்+ஆம்ரம் = ஏகாம்ரம் - ஒற்றை மாமரம்.

இம்மாவடியின் கீழ் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இறைவன் ஏகாம்அரநாதர் எனப் பெயர் பெற்றார். இப்பெயரே ஏகாம்பரநாதர் என்று வழங்கலாயிற்று. 

மாமரம் இத்தல மரம். இவ்விடம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமாகும். திருமணங்கள்   நடைபெறுமிடம். புத்திரப் பேறில்லாதவர்கள் அப்பேறு வேண்டி, தொட்டிலைக் கட்டி வேண்டிக்கொள்ளும் நிலையை இன்றும் காணலாம். 

வேதமே மாமரம். வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு கிளைகள். இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600 ஆண்டுகளுக்கு 
மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இம்மரத்தின்மீது ஏறுவதுகூடாது. இயல்பாகவே பழுத்துக் கீழே விழும் கனிகளைச் சுவைத்தோர், நான்கு கிளைகளிலிருந்தும் கிடைக்கும் மாங்கனிகள் நான்கு விதமான சுவையுடையதாகச் சொல்கின்றனர். தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி தந்தருளினார்.

காஞ்சிபுர மண்டலம்  முழுமைக்கும்  தேவி,   காமாக்ஷியே யாவாள். ஆதலின் காஞ்சியில் எச்சிவாலயத்திலும் தனியாக அம்பாள் (மூல)   சந்நிதி கிடையாது. 

எனினும் ஒவ்வொரு கோயிலிலும் உற்சவமூர்த்தமாக ஓர் அம்பாள் சந்நிதி ஒரு பெயர் தாங்கி இருக்கும்.   

கோயிலுக்கு முன்புள்ளது ‘திருக்கச்சி மயானம்’ கோயிலாகும். இது வைப்புத் தலமாகும். அப்பரால் வைத்துப் பாடப்பட்டதாகும்.

ஏகம்பத்தின்  நாற்புறத்திலும்  நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் கச்சிமயானம் ஒன்று. மற்றவை வாலீசம், ரிஷபேசம், சத்தியநாதேசம்  என்பன.

கண் பார்வையிழந்த சுந்தரர் திருவெண்பாக்கத்தில் (பூண்டி) ஊன்றுகோலைப் பெற்றவாறே இத்தலத்திற்கு வந்து காமக்கோட்டம் பணிந்து பின்னர்த் திருவேகம்பம் அடைந்து இறையருளால் இடக்கண்பார்வை பெற்ற அற்புதம் நிகழ்ந்த தலம்.

திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் எனும் பெண்ணை சிவனை சாட்சியாக வைத்து அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். 

ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவன் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். 

சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். 

அவரோ கண்கள் தரவில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீஸ்வரர் திருக்கோயில் வந்தார் சுந்தரர்.

அங்கு சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை.

பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே! என்று சொல்லி வேண்டினார். 

சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவன், அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து "நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்' என்றார். 

தன் நண்பனான சிவன் தனக்கே அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். 

சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை. கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். 

அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் கொம்பு ஒடிந்து விட்டது. 

மறைந்த கண்களைத் தரவேண்டிப் பல தலங்களிலும் வணங்கிப் பாடி, திருவெண்பாக்கத்தில் (பூண்டி) ஊன்றுகோலைப் பெற்றுத் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், தக்கோலம் (திருவூறல்) ஜலநாதீஸ்வரர் திருக்கோயில்களைத் தொழுது காஞ்சிபுரத்தை அடைந்து, காமக்கோட்டத்தில் அறம்புரக்கும் அம்மையை வணங்கித் திருவேகம்பத்தை அடைந்து, 

"கச்சி ஏகம்பனே, கடையானேன் பிழை பொறுத்துக் கண்ணளித் தருளாய்' 

என்று வேண்டிப் பெருமான், இடக்கண் கொடுக்கப்பெற்று மகிழ்ந்து பாடியருளியது இத் திருப்பதிகம். 

குறிப்பு: இத்திருப்பதிகம், தமக்குக் கண் அளித்த இறைவரது திருவருளை வியந்து சுந்தரர் அருளிச்செய்தது.

கோடி நன்மைகளை அள்ளி வழங்கும் சிவபுரம் பஞ்சலிங்கேஸ்வரர்...!

தேடி வருவோருக்கு கோடி நன்மைகளை அள்ளி வழங்கும் சிவபுரம் பஞ்சலிங்கேஸ்வரர்...!
சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழியில், சுமார் 75 கி.மீ.தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது கொண்டாபுரம். ஆமாம், சிவபுரத்துக்கு தற்போது வழங்கப்படும் பெயர் இதுதான்.

சிவபுரம் யார், என்ன காரணத்துக்காக இந்தப் பெயரை இந்தத் தலத்துக்கு வழங்கினார்களோ தெரியவில்லை; ஆனால், மிகப் பொருத்தமான திருப்பெயர்.

பின்னே… நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களுக்கும் நாயகனான ஈசன், ஐந்து லிங்கங்களாய் அருளோச்சும் தலம் ஆயிற்றே!

மேலும், பன்னிரு ராசிகளையும் நால்வகை யாகப் பிரித்து, ஒவ்வொரு வகைக்கு ஒரு  லிங்கம் என்றும், தன்னுடைய ராசி எதுவெனத் தெரியாதவர்கள் வணங்க ஐந்தாவதாக ஒரு லிங்கம் எனவும் நியதிகள் வகுத்து, முன்னோர் வழிபட்டு வரம்பெற்ற  புண்ணிய க்ஷேத்திரம் அல்லவா இது!

அதுமட்டுமா? இங்கு, ஐந்து லிங்கங்கள் உள்ளபடியால், முறையே ஐந்து பிரதோஷங்கள் விரதம் இருந்து, இங்கு வந்து வழிபட்டால் சகல வரங்களும் கைகூடுகிறது.

இப்படி, சிவ சாந்நித்தியம் செழித்தோங்கும் இந்தத் தலத்துக்கு சிவபுரம் எனும் திருப்பெயர் மிகப்பொருத்தம்தான் இல்லையா?

சிவ சாந்நித்தியம் மட்டும்தானா? அம்பிகையின் அருளும் பொங்கிப் பெருகும் தலம் இது. சொல்லப்போனால்… அந்த ஸ்ரீபுரத்து நாயகி மனது வைத்ததாலேயே இங்கு இந்தச் சிவபுரம் உருவானது. 

அதென்ன திருக்கதை?

ஒருமுறை, அறங்கள் குறைந்து அல்லல்களால் நிறைந்து தவித்தது பூவுலகம். ஜகன்மாதா கலங்கினாள். உலக உயிர்களின் துன்பம் தீர்க்க பூலோகம் செல்வது என்று முடிவெடுத்தாள்.

அருளாடலைத் துவங்கினாள். ஒருநாள், விளையாட்டாக தன் கரங்களால் தன் நாயகனின் கண்களைப் பொத்தினாள். அதனால் அண்டசராசரங்களிலும் இருள் சூழ்ந்தது. அந்த இருளின் கருமை அன்னையின் மேனியிலும் படர்ந்தது. 

தன் கரிய நிறம் மாற, கயிலைநாதனிடமே வழிகேட்டாள். சிவம் சிரித்தது.

அம்பிகையின் எண்ணம் எதுவோ அதுவாகத் தானே சிவ சிந்தையும் இருக்கும். ”பூலோகம் சென்று தவம் இயற்று. உன் மேனியின் கருமை நீங்கும்; பூமியின் கவலையும் தீரும்” என்று  உலகம் உய்ய, உமையாளுக்கு வழிசொன்னது சிவம்.

தேவியும் பூலோகத்தின் பத்ரிகாச்ரமத்துக்குக் குழந்தையாய் வந்தாள்; காத்யாயன முனிவரிடம் வளர்ந்தாள்.

குறிப்பிட்ட பருவம் வந்ததும், அவளிடம் சில பொருட்களைத் தந்த முனிவர், ‘காசிக்குச் சென்று சில காலம் அறம் நிகழ்த்தும்படியும், ‘பின்னர் தெற்கு திசை வரும்போது, ஓரிடத்தில் தான் கொடுத்த பொருட்கள் மாற்றம் அடையும்; அங்கே சிவனருள் கைகூடும்’ என்றும் கூறி, வழியனுப்பிவைத்தார். 

அதன்படி, அன்னை வடக்கே காசிக்குச் சென்று அன்னபூரணியாக அறம் வளர்த்து, நலம் சேர்த்தாள். தக்க காலம் வந்ததும் தெற்கே வந்தவள், மாங்காட்டில் பஞ்சாக்னியின் நடுவில், ஊசி முனையில் தவமியற்றினாள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, காஞ்சியை அடைந்தாள். அங்கே முனிவர் அவளிடம் கொடுத்த பொருட்கள் மாற்றம் அடைந்தன.

புலித்தோல் சோம விருத்தமாக; குடம் குட தீபமாக; ருத்ராட்சம் வில்வ மாலையாக; குடை நாகாபரணமாக; யோக தண்டம் திரிசூலமாக; மணல் சிவலிங்கமாக மாறின.

அங்கே, சிவ பூஜை செய்த அம்பாளுக்குப் பல சோதனைகளுக்குப் பிறகு சிவ தரிசனமும் கிடைத்தது. ஆனால், அன்னை எண்ணிவந்த காரியம் இன்னும் முழுமை பெறவில்லையே! அதைப் பூரணமாக்கும் விதமாக சிவகட்டளை பிறந்தது.

”ராவண வதம் முடிந்து, நமது திருக்கல்யாணக் காட்சியை தரிசிக்க வேண்டி தகடூரில் காத்திருக்கிறான் ராமன். நீ அங்கு செல்” என்று பணித்தார் சிவனார்.

அதன்படி, தகடூருக்கு (தற்போதைய தர்மபுரி) அவள் வரும் வழியில் ஓரிடத்தைக் கண்டாள். உலகை உய்விக்க உகந்த இடம் அதுவே என்று உணர்ந்தாள்.

உலகின் மாற்றங்களுக்கும், உயிர்களின் துயரங்களுக்கும் பஞ்ச பூதங்களின் முரண்பட்ட செயலாற்றல்களே காரணம் அல்லவா? 

ஆகவே, ஐம்பூதங்களையும் ஆற்றுப்படுத்தும் விதமாகவும், அவர்களால் நல்லன மட்டுமே விளையும் படியாகவும் ஐந்து லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாள் மீண்டும் அவளுக்கு சிவதரிசனம் கிடைத்தது. 

”பஞ்சபூதங்களின் பேராற்றலால் பூமியும் உயிர்களும் செழிக்கும்படி, தாங்கள் இங்கேயே கோயில் கொண்டருள வேண்டும்” எனப் பிரார்த்தித்தாள். அதை ஏற்று சிவனாரும் பஞ்சலிங்கேஸ்வரராக அங்கே கோயில் கொண்டார்.

கோவில் அமைப்பு

வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது திருக் கோயில். உள்ளே நுழைந்தால், முதலில் பிள்ளையாரைத் தரிசிக்கிறோம். உருவில் மட்டுமல்ல, அருள்வதிலும் பெரியவரான இவரை வணங்கி, பஞ்ச லிங்க தரிசனத்துக்குத் தயாராவோம்.

அப்பு லிங்கம்: இந்தக் கோயிலில் உள்ள ஐந்து லிங்க மூர்த்தியரையும் பஞ்சலிங்கேஸ்வரர் என்றே வழிபடு கின்றனர். 

முதல் தரிசனம் அப்பு (நீர்) மூர்த்தம்:

வாமதேவ அம்சமாக அருள் கிறார் இவர். மீனம், கடகம், விருச்சிகம் ஆகிய அப்பு தத்துவ ராசிக்காரர்கள் இவரை வழிபடுவது சிறப்பு!

இவர் சந்நிதிக்கு அருகிலேயே நடராஜர் சந்நிதியும், காமாட்சி அம்பிகை சந்நிதியும் உள்ளன. இந்தத் தலத்தில் இரண்டு காமாட்சிகள்.

மூலவருக்கான காமாட்சி, பிரதான மூலவர் சந்நிதிக்கு அருகில் சந்நிதி கொண்டிருக்கிறாள். அதேபோல், இந்தக்கோயிலில் கோஷ்டத்திலும் பிராகாரத்திலுமாக இரண்டு தட்சிணாமூர்த்திகள் அருள்கின்றனர்.

ஆகவே, இத்தலம் குரு வழிபாட்டுக்கு உகந்தது. தவிர, தேவியருடன் முருகன், பைரவர், நவகிரக மூர்த்தியரையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம்.

இரண்டாவது தரிசனம்
வாயு லிங்கம்: 

தத்புருஷ அம்சமாக அருளும் இந்த மூர்த்தியை மிதுனம், துலாம், கும்பம் ஆகியவாயு தத்துவ ராசிக்காரர்கள் வழிபடுவது விசேஷம்!

மூன்றாவது தரிசனம்
அக்னி லிங்கம்: 

அகோர அம்சத்தினராக அருளும் லிங்க மூர்த்தி இவர். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய அக்னி தத்துவ ராசிக்காரர்கள் இவரை வழிபடுவதால், வாழ்க்கை சிறக்கும்.

நான்காவது தரிசனம் 
ப்ருத்வி லிங்கம்: 

சத்யோஜாத அம்சமாக அருளும் இவரை ரிஷபம், கன்னி, மகர ராசிக்காரர்கள் வழிபட்டு வளம் பெறலாம்.

ஐந்தாவது தரிசனம் ஆகாய லிங்கம்: 

ஈசான அம்சமாக அருள்கிறார் ஆகாயத்துக்கான லிங்க மூர்த்தி. இவரே இக்கோயிலின் பிரதான மூலவர். அனைத்து ராசி அன்பர்களும் இவரை வழிபட்டு வளம் பெறலாம். ராசி இன்னதென்று தெரியாத அன்பர்களும் இவரைப் பிரதானமாக வழிபடுகிறார்கள்.

சிறப்புப் பரிகார பூஜைகள்:

இந்தக் கோயிலில் நட்சத்திர தீப வழிபாடு சிறப்பம்சம். இங்கு வந்து பஞ்சலிங்க சந்நிதிகள் ஒவ்வொன்றிலும் 27 நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட, எண்ணிய காரியங்கள் இனிதே நிறைவேறும்.

அதேபோல், இங்கே ஐந்து சிவலிங்க மூர்த்திகள் அருள்வதால், தொடர்ந்து ஐந்து பிரதோஷங்களுக்கு இங்கு வந்து பிரதோஷ பூஜையில் பங்கேற்று வழிபட்டுச் சென்றால், சகல தோஷங்களும் நீங்கும்; சந்தோஷம் பெருகும் .

தேடி வருவோருக்கு கோடி நன்மைகளை அள்ளி வழங்கும் பஞ்சலிங்கேஸ்வரரை நாமும் தரிசித்து செல்வோம்; சிவனருளால் சிந்தை மகிழும் வாழ்வைப் பெறுவோம்.

🙏 சதுர கிரி மலை - மனிதர்கள் அறியாத இரகசியங்கள்

சிவசிவ 🙏

 🙏 சதுர கிரி மலை - மனிதர்கள் அறியாத இரகசியங்கள்
சதுரகிரி மலை - சித்தவித்தை - சித்தர்கள் உள்ள தொடர்பு           
                                   
சதுரகிரி என்ற மலையில் பல யுகங்களுக் கு முன்னர் அதாவது இராமாயணம் கால கட்டத்திற்கு முன்பாக அகத்தியர், கோரக்க ர், சட்டைமுனி நாதர் இந்த மூன்று சித்தர்க ளும் ஒன்றாக இணைந்து சதுரிகிரி மலையின் வெவ்வேறு பகுதிகளில் கடும் தவத்தை மேற்கொண்டிருந்தார்கள்.  
     
அவர்கள் தவமிருந்த இடம்தான் இன்று இன்னும் சொல்லப்போனால் சட்டைமுனி நாதர் கடும் தவமிருந்த இடம்தான் இரட்டை லிங்கமாகவும், அகத்தியர் கடும் தவமிருந்த இடம்தான் நாவல் ஊற்றாகாவு ம், கோரக்கர்கடும் தவமிருந்த இடம்தான் தவசி பாறையாகவும் காட்சி கொடுத்து வருகிறது. இந்த மூன்று இடங்களுக்கு ஓர் ஒற்றுமை உள்ளதப்பா. 
  
அது என்னவென்று கேட்டால், இரட்டை லிங்கம் என்பது மனிதனின் இரண்டு கண்களை குறிக்கும் இடமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது மனிதனின் விந்துவை வாசி என்கின்ற கண்ணிற்கும், வாசி என்கின்ற கண்ணிலிருந்து பிரம்ம ரந்திரம் என்கின்ற கண்ணிற்கும் எடுத்து செல்லும் இரகசியம்தான் இரட்டை லிங்க மாகும். இன்னும் சொல்லப்போனால் ஜீவசமாதியின் இரகசியம்தான் இரட்டை லிங்கமாகும்.  

அதில் ஒன்று ஜீவன் என்றும், மற்றொன்று பிரம்ம ரந்திரம் என்றும் வைத்துக் கொள் ளலாம். ஜீவனை பிரம்ம ரந்திரத்துக்குள் செலுத்துவதுதான் இரட்டை லிங்கத்தின் மகிமையாகும். எனவே சித்த வித்தை வித்யாதிரிகள் என்று சொல்பவர்கள் இரட்டைலிங்கம் முன் அமர்ந்து ஓம்கார மௌனம் தவத்தை ஒரு மண்டலம் அல்ல து இரண்டு மண்டலம் அல்லது பல வருட ங்கள் கடைபிடித்து வந்தால் சட்டைமுனி நாதரின் அருளால் அவனுக்கு ஜீவசமாதி நிலை கொடுக்கப்படும் என்பது சட்டை முனி நாதரின் சத்தியவாக்காகும்.  
 
அகத்தியரின் தவபீடமான நாவல் ஊற்று என்கின்ற நாவல் கிணறு என்பது விந்து வை மணியாக மாற்றும் இடமாகும். நா என்ற அட்சரம் நாதத்தைக் குறிக்கும். வ என்ற அட்சரம் விந்துவை குறிக்கும். ல் என்றால் நாதத்தை விந்துவாக மாற்றும் அட்சரத்தைக் குறிக்கும்.

கி என்றால் விந்துவை ரசத்துடன் இணை த்து ண என்கின்ற சகஸ்ர லிங்கத்தில் மணியாக மாற்றி, று என்கின்ற பிரம்ம ரந்திரத்தின் ரசமணி கதவை திறந்து, அந்த விந்தானது, பிரம்ம ரந்திரத்திற்குள் ரசமணியாக மாறும் இரகசியம்தான் நாவல் கிணறு என்கின்ற இடத்தின் அட்சர ரகசியமாகும். 

எனவே அந்த இடத்தில் ஒருவன் தொடர்ந் து அமர்ந்து அகத்தியரை மானசீக குருவா க பாவித்து என்னுடைய விந்துவை பிரம்ம ரந்திரத்தில் ரசமாகமாற்றிவிடுங்கள் என்று தொடர்ந்து ஒரு மண்டலமாவது தவம் செய்தால்அவனுடைய விந்தானது ரசமணியாக மாறிவிடும். இதுவும் ஜீவச மாதி நிலையை கொடுக்கக்கூடிய ஒரு நிலைதான் என்றாலும் அதன்பிறகு அகத்தியர் அவனுக்கு வழி காட்டுவார்.  

தவசிப் பாறை என்பதில் த என்பது விந்து, வ என்பது ரசம். விந்துவையும் ரசத்தையும் இணைத்து சி என்கின்ற ஜீவனின் விந்து கதவைத் திறந்து, அதனைமுப்புவாக  மாற்றி ப் என்கின்ற ஜீவனின் துருசு கதவைத் திறந்து, அதை முப்பு முடிக்கும் துருசுவாக மாற்றி, பா என்கின்ற சகஸ்ர லிங்கத்தின் நாதம் கதவு திறந்து, துருசு வாகிய விந்துவை அதனுடன் இணைத்து நாதமணியாக்கி, றைஎன்கின்ற பிரம்ம ரந்திரத்தின் நாதமணி கதவு திறந்து பரிபூரண யோக தன்மைக்கு கொண்டு செல்வதே தவசிப்பாறை என்கின்ற இடத்தின் அட்சர ரகசியமாகும்.

 எனவே ஒருவன் சித்தர் மார்க்கத்தில்  சித்தராகவும் மாறலாம். மேலும்சித்தர் நிலை கடந்து யோகி நிலையையும் அடையலாம் என்பது சதுரகிரிமலையின் இரகசியமாகும். 

ஆயினும் இந்த மலை பகுதியில் இந்த மூன்று இடங்கள்தான் சித்த வித்தை குறிக்கும் இடங்கள் என்று குறிப்பிட்டுள் ளோம். ஆனாலும் இந்த மலையில் பல இடங்கள் அட்சர உபதேசம் இடங்களாக உள்ளது. 

இன்னும் சொல்லப்போனால் இறைவன் மார்கத்தில் அல்லது சித்தர் மார்கத்தில் இன்னும் பல மார்க்கத்தில் செல்ல எண்ணுபவர்களுக்கு பல இடங்கள் இந்த மலையில் உள்ளது.

சதுரகிரி மலைபயணத்தின்போது சித்தன் அருள்கிடைக்க கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்

1-மாவூத்து குளத்தில் நீராடி அங்குஉள்ள உதயகிரிநாதரை வணங்கவேண்டும்.

2-குடும்பபந்தத்தில்உள்ளவர்கள் கட்டாயம் காவிஅணியக்கூடாது.

3-ஆணகள் மேல்சட்டை அணிவதை தவிர் க்கவேண்டும்.முடிந்தால் செருப்பு அணிவ தை அனைவரும் தவிர்க்கவேணடும்.

4-மலைபயணத்திக்கு ஐந்து நாட்குக்கு முன்மாமிசம் உண்பதை கட்டாயம் தவிர்கவேண்டும்.

5.இரவு அபிசேகம் பார்த்து மனம்குளிர மூன்று மூர்த்திகளையும் தரிசனம் செய்து, மீண்டும் அதிகாலை மூன்று மூர்திகளை யும் தரிசனம்செய்துவிட்டு, மாவூத்து குளத்தில் மீண்டும் குளித்து உதயகிரிநாதர், 

நந்தி,ஆஞ்சநேயர்,சப்தகன்னிகள், அருகில் உள்ள சடாதாரி அம்மணையும் தரிசனம் செய்துவிட்டு, சித்தன் அருள் கிடைத்த சித்ததெளிவோடு இன்பச் சிந்தனையோடு, இனிதே நம்  இல்லம் திரும்புவோம். 

ஓம் நமசிவாய...  ஓம் நமசிவாய....
இறைபனியில்  இரா. இளங்கோவன்

கடன் பிரச்சினையில் இருந்து அடைபட வேண்டும் என்றால் ருண விமோசனரை வழிபடலாம்.



கடன்பிரச்சினை தீர செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் பரிகாரம் செய்யலாம். செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியில் இருந்து 7.00 மணிவரை செவ்வாய் ஹோரை. இதேபோல் செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணி வரை செவ்வாய் ஹோரை அதே போல இரவு 8 மணி முதல் 9 மணி வரைக்கும் 
தீராத கடனும் காணாமல் போகும்..செவ்வாய்கிழமை இதை மட்டும் செய்யுங்கள்..ஆன்மீகம் கூறும் ரகசியம்

கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்வார்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர். கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கடன் தீர்க்கும் பைரவர் 
அவசிய தேவைக்காக நாம் திங்கட்கிழமை கடன் வாங்கலாம். செவ்வாய்கிழமை கடனை அடைக்கலாம். கடன் பிரச்சினையில் இருந்து அடைபட வேண்டும் என்றால் ருண விமோசனரை வழிபடலாம். பைரவர் வழிபாடு கடன் பிரச்சினையை தீர்க்கும். 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அதனை நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். பின்னர் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு பைரவர் முன் நின்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். தீபம் ஏற்றும் போதே கடன் தீர மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

செவ்வாய்கிழமை பரிகாரம் 

கடன்பிரச்சினை தீர செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் பரிகாரம் செய்யலாம். செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியில் இருந்து 7.00 மணிவரை செவ்வாய் ஹோரை. இதேபோல் செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணி வரை செவ்வாய் ஹோரை அதே போல இரவு 8 மணி முதல் 9 மணி வரைக்கும் செவ்வாய் ஹோரை வருகிறது. உங்கள் வீட்டு பூஜையறையில் மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் நினைத்து தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பின்பு 3 கை பிடி அளவு கல்லுப்பு தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். புதிய கல் உப்பு பாக்கெட் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் வாங்கிவைத்துக்கொள்வது நல்லது.

காணாமல் போகும் கடன் 

பூஜை அறையில் அமர்ந்து ஒரு மஞ்சள் நிறத் துணியில் 3 முறை உங்களுடைய உள்ளங்கை நிரம்ப கல்லுப்பைக் கிண்ணத்திலிருந்து எடுத்து அந்த மஞ்சள் துணியில் வைக்க வேண்டும். மூன்று கைப்பிடி கல் உப்பை, உங்கள் கைகளால் எடுக்கும்போதும் 'கடன் சுமை கரைந்து போக வேண்டும் பணப்பிரச்சனை தீர வேண்டும்.' இவ்வாறாக மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, அந்த மஞ்சள் துணியில் உப்பை வைத்து, ஒரு முடிச்சுப் போட்டு கட்டி இந்த முடிச்சை மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடவேண்டும். ஒரு வாரம் வரை கல் உப்பை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்திருங்கள். மறு வாரம் வரக்கூடிய செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில், பூஜை அறையில் இருக்கக்கூடிய கல் உப்பை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு கரைக்க வேண்டும். குறிப்பாக மஞ்சள் துணியில் கட்டி இருக்கும் கல் உப்பை உங்களுடைய உள்ளங்கைகளால் எடுத்து மூன்று முறை தண்ணீரில் போட்டு உங்கள் கடன் கரைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கரையுங்கள். உப்பை கரைத்து இந்த தண்ணீரை கால்படாத இடத்தில் விட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்தால் எவ்வளவு பெரிய கடனும் தண்ணீரில் கரைத்த உப்பு போல சீக்கிரம் கரைந்து போகும்.

மிளகும் கல் உப்பும் 
கறுப்பு மிளகுடன் சிறிதளவு கல்லுப்பு சேர்த்து உங்களையும், உங்கள் வீட்டையும் சுற்றி விட்டு அதனை எரியும் நெருப்பில் போட்டு விட்டால் அந்த நெருப்பில் எப்படி மிளகு வெடிக்கிறதோ அதே போல் உங்களுக்கு இருக்கும் அனைத்து கண் திருஷ்டிகளும் காணாமல் போய் விடும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் கடன் பிரச்சினை படிப்படியாக காணாமல் போகும். அதிக பண வருமானமும் வரும்

குங்குமம் பரிகாரம்

 வியாழக்கிழமை தோறும் குங்குமம் வாங்கி வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு குங்குமத்தை கொடுத்து விட்டு வர கடன் பிரச்சினை நீங்கும். தொடர்ந்து 11 வாரம் குங்குமம் வாங்கி வைத்து வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு கொடுத்து விட்டு வர வேண்டும். கடனாளியாக எழுவதை விட பட்டினியாக உறங்குவது மேல் என்று கூறுவார்கள். வேறு வழியின்றி கடன் பெற்றவர்கள் இந்த பரிகாரங்களை செய்து வாருங்கள் கடன் பிரச்சினை நீங்கி நிம்மதி பெறுவீர்கள்.

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள்

நவபாஷாணம்
நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும். எனவே இதனை முறைப்படி புடம் போட்டு கட்டவேண்டும். வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட பாஷாணத்தின் அணுக்களை சேர்ப்பது மற்றும் பிரிப்பதன் மூலம் புதிய மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்கட்டமைப்பை உருவாக்கி சித்தர்கள் இதனை செய்கின்றார்கள். அதன்படி நவ பாஷாணம் என்பது ஒன்பது வகை கடுமையான விஷங்களைக் கொண்டது. அவை

1. சாதிலிங்கம்.
2. மனோசிலை
3. காந்தம்
4. காரம்
5. கந்தகம்
6. பூரம்
7. வெள்ளை பாஷாணம்
8. கௌரி பாஷாணம்
9. தொட்டி பாஷாணம்

மேற்கண்ட ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமான தனி வேதியல் இயல்புகளைக் கொண்டதாகும். இந்த ஒன்பது பாஷாணங்களை திரவமாக்கி மீண்டும் திடமாக்க ஒன்பது வகை விறகுகளும் (எரிபொருட்களும்) ஒன்பது தடவை வடிகட்ட ஏதுவாக ஒன்பது வடிகட்டிகளும் கையாளப்பட்டன. சித்தர்கள் பாஷானங்களைக் கட்டும்போது அரைத்து வேகவைத்து எரித்து நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவார்கள். வறட்டிகளைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும். இதற்கு தங்கவாறு பெயர்களும் உள்ளது. அவை

1. காடைபுடம் 1 வறட்டி
2. கவுதாரிப் புடம் 3 வறட்டி
3. குக்குடப் புடம் 8 முதல் 10 வறட்டி வரை
4. வராக புடம் 50 வறட்டி
5. யானை புடம் 500 வறட்டி முதல் ஆயிரம் வறட்டி வரை
6. கன புடம் 700 முதல் 800 வரை 
7. மணல் மறைவுப் புடம் 800 வறட்டி
8. கோபுடம் 1000 வறட்டி

இது தவிர நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம் தரும் புட வகைகளும் சித்தர்களால் பயன்படுத்தப்பட்டன. அவை

1. கோபுர புடம் - மணல்
2. பாணிடப் புடம் - தண்ணீர்
3. உமிப் புடம் - உமி
4. தானியப் புடம் -நெல்
5. சூரியப் புடம் - வெயில்
6. சந்திரப் புடம் - நிலவொளி
7. பருவப் புடம் - பௌர்ணமி நிலவு
8. இருள் புடம் - அமாவாசை இரவு
9. பனிப்புடம் - பனி
10. பட்டைப் புடம் - மரத்தூள்
11. நிழற்புடம் - சூரிய ஒளி படாத அறை

நவபாஷாணம் சிலைகளை உருவாக்கியவர் போகர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர். சர்வ சாத்திரங்களையும் கற்ற போகியாவார். இவர் சித்தத்தை அடக்கி இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கையை முற்றிலும் அறிந்து இந்த உலக இயக்கத்தையும், பிரபஞ்சத்தையும், இறைஆற்றலையும், உயிர் தத்துவத்தையும், பிரபஞ்ச ரகசியத்தையும் ஆராய்ந்து அறிந்தவர். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் ஆவார். இவரது மருத்துவ ஞானம் அளவற்றது. இவருடைய வைத்திய நூல்களில் நிகண்டு, வைத்தியம், துவாத காண்டம், சப்ப காண்டம், வைத்திய சூத்திரம், ஆகியவையும் ஆன்மீகத்தில் ஞான் சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கது. நவ பாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை நாம் அருந்தினால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். நவ பாஷாணங்களின் சேர்க்கையில் போகர் மூன்று முருகர் நவ பாஷாண சிலைகள் உருவாக்கினார். அதில் 1. பழனி மலைக்கோவில் 2. கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். 3 வது சிலை கலியுகத்தின் இறுதியில் வெளிப்படும் என்று புராண வரலாறுகளில் உள்ளது.

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...