Sunday, January 28, 2024

சங்கடஹரசதுர்த்தி அருகம்புல் வாங்கி பூஜையறையில் வையுங்க தடைகள் விலகும்.

 சங்கடஹரசதுர்த்தி அருகம்புல் வாங்கி பூஜையறையில் வையுங்க 
தடைகள் விலகும் கோயிலுக்கும் முடிந்தால் சென்று இயன்றால் ஒரு நெய் தீபம் ஏற்றி வையுங்கள் 🌺🌺🌺 🙏🙏அல்லது மாலையில் அபிஷேக பொருட்களில் ஏதாவது முடிந்தால் வாங்கி கோயிலுக்கு கொடுங்கள் இல்லை ஒரு அருகம்புல் மாலை போதும் 🌺🌺🌺 🙏🙏


🌺🌺🌺 🙏🙏 சங்கடம் தீர்ப்பார்; சந்தோஷம் தருவார்!
🌺🌺🌺 🙏🙏சங்கடங்கள் தீரவேண்டும்தானே. நாளைய சங்கடஹர சதுர்த்தியை மறந்துடாதீங்க
🌺🌺🌺 🙏🙏கிரக தோஷங்கள் நீங்கணுமா? தை  மாத சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை இப்படி வழிபாடு பண்ணுங்க!
🌺🌺🌺 🙏🙏சங்கடங்கள் தீரவேண்டும்தானே. நாளைய சங்கடஹர சதுர்த்தியை மறந்துடாதீங்க. விநாயகருக்கு ஒரேயொரு அருகம்புல் மாலை வாங்கிச் சார்த்தினாலே போதும்... அதில் குளிர்ந்து போய், நமக்கு அருளும் பொருளும் அள்ளித் தருவார் ஆனைமுகத்தான்!

முடிந்தால், சுண்டலோ பொங்கலோ, கேசரியோ பாயசமோ நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையையும் இனிக்கச் செய்வார் பிள்ளையாரப்பன்!
காரியம் சித்தி அடைய, திருமண தடை அகல, கடன் தொல்லை தீர, இப்படி எனிலடங்கா பல நன்மைகள் அடைய சங்கடஹர சதுர்த்தி மந்திரம்:

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய
  ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய
  மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது
  அநுகூலம் மே வஸமானய நமஹ🌺தமிழ் அர்த்தம் படித்தாலும் போதும் ஒரு மூன்று முறை படியுங்கள் சொல்லுங்கள் உங்கள் வீட்டில் போதுமானது
 பக்தர்கள் வேண்டிய வரத்தை நல்கும் சங்கடஹர கணபதியே தங்களை நமஸ்கரிக்கிறேன். முழு முதற் கடவுளாகவும், பூத கணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே. பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்து இன்பம் அளிப்பவரே. பக்தர்கர்களோடு எப்போதும் நிலைகொள்பவரே. பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு செயலையும் வெற்றிகொள்ள செய்பவரே. பக்தர்களை சுற்றியுள்ள எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் நேர்மறை ஆற்றலை பெறுக செய்பவரே உங்களை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.

பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதமாகும். இந்நாளில் விரதம் அனுஷ்டித்து வந்தால் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் விநாயகரை எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
மிகவும் சக்தி நிறைந்த தை  மாதசங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகப் பெருமானைத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாது போகும். வாழ்வில் எல்லா வளமும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.
. இன்று விரதம் இருந்தால் நல்லது. அதிலும் இன்று  சந்திரனையும், விநாயகரையும் வழிபடுவது மிகவும் மங்களகரமானது என்பது ஐதீகம்.

சந்திர தரிசனம் காணப்படாவிட்டால் சங்கடஹர சதுர்த்தி விரதம் முழுமையடையாது.   சந்திரனை தரிசனம் செய்த பிறகே விரதத்தை முடிக்க வேண்டும்.

ஒரு வருடத்தில் சுமார் 13 சங்கடஹர சதுர்த்தி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் ஒவ்வொரு சதுர்த்திக்கும் உருவாகும் யோகமும் பலன்களும் வேறுபட்டது.சங்கடஹர சதுர்த்தியில், விநாயகருக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். அருகம்புல் மற்றும் வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி அவல் பாயசம் நைவேத்தியம் செய்து அருகில் உள்ளவர்களுக்கு வழங்குங்கள். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் ஆனைமுகத்தான்.
விரதம் இருக்கும் முறை

சங்கடஹர சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள விநாயகர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்தல் நல்லது. பின்னர் தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.

பின்னர் விநாயகருக்கு விளக்கேற்றி, கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம்.
பிரசாதம் கொடுக்க வேண்டும். பிரசாதத்திற்கு லட்டு அல்லது மோதகம் மிகவும் நல்லது. இவை இரண்டு விநாயகருக்குப் பிடிக்கும். மேலும் கடவுளுக்கு நெய் தீபம் ஏற்றி, கணேஷ் ஸ்துதி சொல்லி, ஆரத்தி செய்யவும். மேலும், இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து இரவில் சந்திர தரிசனம் செய்து உணவு உண்ண வேண்டும்.  சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம் இருப்பது ஆயிர லிங்கம்.


     
  ஆயிரம் முகம்,  ஆயிரம் கரம்,  ஆயிரம் திருவடி உடைய   பரமேஸ்வரனுக்கு *ஆயிர நாதர்* என்று திருநாமம்.  
*ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம் இருப்பது   ஆயிர லிங்கம்*.    
🌷  *ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்*
         *ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோள் உடையானும்*                                                  
       *ஆயிரம்  ஞாயிறு போலும் ஆயிரம்  நீள் முடியானும்* 
           ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே                                                                                                                                                                                                                                                                                                                   

☸️  *பத்து நூறு அவன்* பைங்கண் வெள்ளேற்று அண்ணல்                                                   
           *பத்து நூறு அவன்  பல் சடை தோள் மிசை*    (திருநாவுக்கரசர்) 

என்று  ஆயிர நாதரைத் திருநாவுக்கரசர் துதிக்கிறார்.                                                                      
        
*பெண்ணும் ஆயிரம் உடையார்*(சம்பந்தர்)   

என *ஆயிரம் முகம் உடைய   தாயாக உள்ளவர்  ஆயிர அம்மை ஆயிர நாயகி*. 

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்,

 திருவுத்தர கோச மங்கை  மங்களேஸ்வரர் கோயில்,

 ராமேஸ்வரம் ராம நாதர் கோயில், 

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்  கோயில், 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்,

 திருவாலங்காடு ஆலங்காட்டீசர் கோயில்,  

திருவொற்றியூர் தியாக ராஜர் கோயில் 

காளையார் கோயில், 

வைதீஸ்வரன் கோயில் 

மற்றும் பெரும்பாலான பழங்காலத் திருக் கோயில்களில்  *தனிச் சந்நிதியிலோ பிரகாரத்திலோ* சஹஸ்ர லிங்கம் எனப்படும் *ஆயிர லிங்கம்*  உள்ளது.  

ஆயிரம்  தாமரை போன்று ஆயிரம் திருவடி திருமுகம் உடைய ஈசன் திருக்காட்சி அருளினால் *தாமரைக் காடே வந்தது போல் உள்ள சிவந்த பேரழகுத் திருமேனியை* 

 🛑  *செந்தாமரைக் காடு அனைய மேனி*  

என்று ஓங்கார வாசகர் கண்டு களிக்கிறார்.  

*பெண்ணும் ஆயிரம் உடையார்*

என்று *ஆயிர  அம்மை தாயுமானவரைத்* திரு ஞான சம்பந்தர் போற்றுகிறார்.
           
              *ஆயிரம் திருவடிகளும் தூக்கி வைத்து ஆடும் ஆயிர நடராஜர் புஜங்க லலித மூர்த்தியின்  திரு நடனத்தைத்* திருநாவுக்கரசரும் திரு மங்கை ஆழ்வாரும் போற்றுகின்றனர். 

*சைவப் பெருமக்களுக்கு இந்து சிகா மணிக்களுக்கு  திருமுறைச் செம்மல்களுக்கு  சத்குரு ஜகத்  குருமார்களுக்கு ஆதீனங்களுக்கு*  
*ஆயிர நாதரை ஆயிர அம்மையைத்   தெரியாது*. 

            *ஈசனைப் பற்றி கண்டவனும் கண்டபடி  கிறுக்கிய  நாஸ்திகக் கதைகளும்   நாஸ்திக வசனங்களும் கற்பனை வடிவங்களும் கற்பனை விழாக்களும்  கற்பனை அம்மன்களும் மட்டுமே தெரியும். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

ஆதிநாள் முதலே அகிலம் முழுதும் சூரிய வழிபாடு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

உலகிற்கு ஒளி வீசும் கதிரவனின் நாளான ஞாயிறு, ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?
உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளை செய்யவேண்டும். மனிதர்கள் மட்டுமில்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன. 
ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது. அதனால், வாரத்தின் முதல்நாளில் சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர். 

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது. மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய்வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.

*சூரிய வழிபாடு :* 

ஆதிநாள் முதலே அகிலம் முழுதும் சூரிய வழிபாடு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சூரியனே உலகின் முதல்வன் என்கின்றன வேதங்கள். கண்களால் காணமுடியும் தெய்வம் சூரியனே என்று அவனையே முன்னிலைப்படுத்தி மந்திரங்கள் பலவும் ரிக்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன. 

உலகத்தின் இருளைப் போக்குவதற்கான ஜோதியினை உருவாக்குபவன் சூரியனே என்கிறது யஜுர் வேதம். 

உலகம் கதிரவனை நம்பியே இருப்பதாலும் அதையே சுற்றி வருவதாலும் கால மாற்றங்கள் சூரியனை வைத்தே நடக்கிறது என்பதாலும் இந்திய விண்வெளி கணக்கீடுகள் ஞாயிறை வைத்து ஆரம்பிக்கிறது. அதனால், வாரத்தின் முதல்நாளில் சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர். 

மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய்வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையை வாரத்தின் முதல் நாளாக வைத்துள்ளனர்.



ஓம் நமசிவாய

Saturday, January 27, 2024

விஷ்ணுவின் 10 அவதாரங்களில் வாமன அவதாரம் மிகச் சிறந்தது.



விஷ்ணுவின் 10 அவதாரங்களில் வாமன அவதாரம் மிகச் சிறந்தது. ராம கிருஷ்ண அவதாரங்களைப் போல் வாமன அவதா ரம்  மக்களிடையே பிரபலமாகாதது சற்று வியப்பையே அளிக்கிறது.
இந்த அவதாரம் தசாவதாரத்தின் முதல் மனித அவதாரமாகும். இந்த அவதாரத்தி ல் பகவான் யாரையும் சம்ஹராம் செய்ய வில்லை.  இது போன்ற பல சுவாரஸ்ய மான விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
வாமனர் தனது பெற்றோருடன் ப்ரஹலா தனின் பேரனான மஹாபலி குரு சுக்ராச் சார்யரின் வழிகாட்டுதலில் பல யாகங்கள் செய்து பல சக்திகளை பெற்று தேவலோக த்தை கைப்பற்றினான். 

அதனால் தேவேந்திரன் அங்கிருந்து தப்பி த்து ஒளிந்து கொள்ள நேர்ந்தது. கஷ்யப ரிஷியின் மனைவி அதிதி, தன் மகன் தேவேந்திரனை காப்பாற்றுவதற்காக, கடு மையான விரதத்தில் ஈடுபட்டு பகவான் விஷ்ணு தனக்கு மகனாக பிறக்கும் வரத்தைப் பெற்றாள். 

ஆவணி மாத துவாதசியில் ஷ்ரவண நக்ஷரத்தில் அதித்திக்கும் கஷ்யப முனிவ ருக்கும் மகனாக பிறந்தார் மஹாவிஷ்ணு. மிகவும் குள்ளமாக இருந்ததால் வாமனர் என்று அழைக்கப்பட்டார்.

தேவலோகத்தை நிரந்தரமாக தன் கட்டுப் பாட்டில் வைத்துக்கொள்ள ஆசைப்பட்ட மஹாபலி அஸ்வமேத யாகம் செய்து நர்மதா நதி கரையில் பிராமணர்களுக்கு தானம் வழங்கிக்கொண்டிருந்தான். 

அங்கு வந்த வாமனர் மூன்று அடி நிலத் தை தானமாக கேட்டார். வந்திருப்பவர் யார் என்பதை அறிந்த சுக்ராச்சாரியார் மஹாபலியைத் தடுக்க முயற்சித்தார். 

அவன் அதைக் கேட்காததால் ஒரு வண் டாக உருவெடுத்து கமண்டலத்தில் புகுந் துக்கொண்டு நீரை வெளிவரவிடாமல் தடுத்தார். வாமனர் ஒரு தர்ப்பையால் அந்த வண்டை வெளியே தள்ளினார். இதனால் சுக்ராச்சாரியரின் ஒரு கண் குருடானது.

 *வாமன அவதாரம்* 

தான் கேட்ட தானத்தைப் பெற வாமனர் தன் உருவத்தை பெருக்க ஆரம்பித்தார்.  எந்த அளவுக்கு என்றால்  வானத்தில்  உள்ள நக்ஷத்திரங்கள் அவரின் பாதங்க ளுக்கு ஆபரணங்களை போல் காட்சி  அளித்ததாம். 

தனது ஒரு காலால் பூலோகத்தையும், மற்றொரு காலால் மேல்  லோகத்தையும் அளந்தபின் மூன்றாவது அடியை எங்கு வைக்கவேண்டும் என்று மஹாபலியிடமே கேட்டார். கர்வ பங்கம் அடைந்த மஹாபலி அதனைத் தன்  தலையில் வைக்குமாறு கூறினார்.  

இதைக்  கண்டு மகிழ்ந்த பகவான் மகா பலியை பாதாள உலகிற்கு அரசனாக்கி அடுத்த தேவேந்திர பதவி மஹாபலிக்கு தான் என்று ஆசிர்வதித்தார். மேலும் மகா பலியின் அரண்மனை வாயிற்காப்பானா க தாமே இருக்கப்  போவதாக அவர் வாக்களித்தார்.

வாமனர் பிறந்த நாளான ஆவணி மாத துவாதசியில் வரும் திருவோண நக்ஷத்தி ரநாளை ஓணம் பண்டிகையாக கொண் டாடப்படுகிறது. 

ஆண்டு தோறும் மஹாபலி சக்கரவர்த்தி இந்த நாளன்று த்ரிக்ககராவில் (கொச்சி அருகில் உள்ள கோவில்) உள்ள வாமனர் கோவிலில் அவரின் பிறப்பைக் கொண்டா ட பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு வருவதாக சான்றோர்கள் வாக்கு.

ஸ்ரீமத் பாகவதம் படிப்பதின் மூலம் அனை த்து அவதாரங்களின் மகத்துவங்களை யும் நம் வாழ்க்கைக்கு உதவும் ஆழமான கருத்துக்களையும் தெரிந்துக் கொள்ள லாம். 

உதாரணத்திற்கு  நம்மில் பலர் நினைப்ப தைப்போல் பகவான் மூன்றாவது அடியை மஹாபலியின் தலையில் வைக்கவில் லை என்பதையும் அதிதி எப்படி விரதம்  இருந்து பகவானையே மகனாகப் பெற் றாள் என்பதையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

 *வாமன அவதாரம்* *உணர்த்தும்* *உண்மைகள்.* 

1. ஒருவன் எந்த குலத்தில் பிறந்திருந்தா லும் உண்மையாக தர்ம காரியங்களில் ஈடுபட்டு, கொடுத்த வாக்கை காப்பாற்றி னால் மிக உயர்ந்த நிலையை அடையலா ம் என்பதை அசுரர் குலத்தில் பிறந்த மஹா பலிக்கு கிடைத்த அருள் நமக்கு உணர்த்துக்கிறது.

2. ஒரு மனிதன் செய்யும் நல்ல காரியங்க ளை தடுக்க முயற்சித்தால் என்னவாகும் என்பதை சுக்ராச்சாரியரின் கண் குருடான சம்பவம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

3. மகாபலியைக் காக்கும் கடமையை பகவானே ஏற்றுக்கொண்டுதன் மூலம் ஒருவன் தன்னிடம் சரண் அடைந்தால் அவனை பகவான் காப்பாற்றுவார் என்ற சரணாகதியின் முக்கியத்துவத்தை இந்த சரித்திரம்  எடுத்துக்காட்டுகிறது.

படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்



🪷🪷🪷

கடவுள் பரம சிவம் எப்படிப்பட்டவர்

கடவுள் பரம சிவம் எப்படிப்பட்டவர்
   
         கன்றலும் கருதலும் கருமம் செய்தலும்
          தின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும்
          பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும் 
          என்று *இவை இறைபால் இயற்கை அல்லவே*  (திருமூலர்) 

என்ற திருமந்திரப் பாடல் இறை  கடவுள்  சிவம்  எப்படிப்பட்டது என்று கூறுகிறது.     

   *கோபப்படுதல்*  (கன்றல்)   சிந்தித்தல் (கருதல்)  சாதகமாகவோ பாதகமாகவோ செயல்கள் செய்தல்   (கர்மம்),   
பசியினால் உண்ணுதல்  (தின்றல்),
 ருசிக்காக  ஆசையினால் உண்ணுதல் (சுவைத்தல்), 
தீமை செய்தல், பின்வாங்குதல் (பின்றல்),
 *பால்யம் இளமை முதுமை உயர்வு தாழ்வு சிவத்தல் கருத்தல் வெம்மை  குளுமை சோர்வு தளர்ச்சி உள்ளிட்ட மாற்றங்களை அடைதல்* (பிறங்கல்), 

*தற்பெருமை பேசுதல் (பெருமை கூறல்) ஆகியவை*
இறை இயல்பு அல்ல  *கடவுள்  இயல்பு  அல்ல*  *சிவ இயல்பு அல்ல* என்று  மண்ணிலே பிறக்காமல் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து சென்ற சிவ கண  நாதரான திருமூலர் தெரிவிக்கிறார். 
         
  *கோபம் இயலாமையின் வெளிப்பாடு.  பிறப்பு உள்ளவர்களின் குற்றம் குறை*.
        
ஈசன் எல்லாம் வல்லவர்.  எல்லாம் கடந்த கடவுள். தோன்றாத பிறவாத பெருமையன்.  பிரம்மன் விசுணு ருத்திரன்  சக்தி லட்சுமி சரசுவதி முதலாக எல்லோரையும்  படைத்து காத்து அழித்து ஐந்து தொழில் புரியும்  முழுமுதற் பரம்பொருள்.   

   செந்தமிழ் இலக்கிய இலக்கணப் பயிற்சி  சிறிதும் இல்லாமல்,  செந்தமிழ்ப் பாடல் மரபு தெரியாமல்,  
ஆன்மீக ஞானம் கடுகளவும் இல்லாமல், அசுரர்களோடும் பிறரோடும் சேர்க்க வேண்டிய கன்றல் முதலிய உயிரினச் சார்புச் சொற்களை ஈசனோடு சேர்த்து மனம் போனபடி  நாத்திகப் போக்கில் தேவாரம் முதலிய   திருமுறைகளுக்குப் பொருள் உரைப்பவர்கள்  சிவபெருமான் பற்றி பேசுகின்றவர்கள் எழுதுகின்றவர்கள் எல்லோரும் பரம சிவம் இப்படிப்பட்டது அல்ல என்று கூறும்  இப்பாடல் பொருளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.   

*கோபம் உள்ளவர்க்குப் பரம சிவனது  திருக் காட்சியும் பேரருளும்  கூடக் கிடைக்காது*. 

ஈசனது பேரருளும் திருக் காட்சியும் பெற்ற சித்தர்களுக்கு  ஜீவன் முக்தர்களுக்குக் கூட கோபம் இல்லை என்பதை அருளாளர் நாயன்மார் வரலாறு காட்டுகின்றது. 

தவ முனிவர்  மணமகளின் கூந்தலைக்  கேட்ட போது மானக்கஞ்சாறர் கோபப்படவில்லை. 

மனைவியை உடன் அனுப்புமாறு கேட்ட போது  இயற்பகை நாயனார் கோபப்படவில்லை.  

பாண்டியன்  மாணிக்க வாசகர் மேல் வீண் பழி சுமத்திப் பழித்துத் தூற்றி  மரண தண்டனை விதித்தபோது அவர்  கோபப்படவில்லை.   

நூற்றுக் கணக்கான அடியார்களுடன்  திருஞான சம்பந்தரைக் கொல்வதற்காக  மடத்தில் சமண குருமார்கள் தீ வைத்த போது சம்பந்தர் கோபப்படவில்லை. 

வானத்து நிலவு பூமியில் வந்துள்ளது போல்  ஈசன் புகழ் பாடி ஞானத்து உருவாய் இசையின் வடிவாய்  இருந்தார் என்று சேக்கிழார் விளக்குகிறார். 

 சமண குருமார்கள் பல்வேறு வகையில் கொல்ல முயன்று விடம் கொடுத்த போதும்  கொதிக்கும் சுண்ணாம்புக் கால்வாயில் போட்ட போதும் கொல்லும் மத யானையை  ஏவிய போதும்  கல்லோடு கட்டிக் கடலில் தள்ளியபோதும்  திருநாவுக்கரசர் கோபப்படவில்லை. 

*ஈசன் நாமம் சொல்லி வாழும்  அடியார்களுக்கே   அவன் காட்சி கண்ட அருளாளர்களுக்கே  கோபம்  முதலிய தீமை இல்லாத போது* உருவமே இல்லாமலும் அம்மை  அப்பன்   அம்மையப்பன்  பஞ்ச பூதம் என்று எல்லாமாகவும்   விளங்குகின்ற  எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட *நெருப்பே   மேனியான எல்லாம் வல்ல  காம தகன  சர்வேசுவரனைப் பற்றி பேசும்போது* மொழி அறிவு கூட இல்லாமல்  சாபம் தோசம்   கோபப்பட்டார்   கோபத்தால் கண் சிவந்தார் 
  வெகுண்டார்  ஆசைப்பட்டார்  மயங்கினார்
 வெம்மை அதனால் வில்வம் சந்தனம்    என்றெல்லாம் பேசி இழிவுபடுத்தி ஆன்மீகம் என்ற பெயரில் சிவ  வடிவம் பற்றி சிவாலயங்கள் பற்றி  நாத்தழும்பேற நாத்திகம் பேசிப் பாவத்தைச் சுமக்கின்றனர்.  

ஈசன் படைத்த  பிரம்மனது  ஐந்தாம் சிரம் கொய்து அவனை நான்முகன் ஆக்கிய  சிவ மைந்தரான நாய் வாகன  பைரவருக்கும் சிவ பெருமானுக்கும் வேறுபாடு தெரியாமல் இழிவுபடுத்துகின்றனர்.  

பிரம்மன் கொல்லப்படவில்லை ஒரு தலை மட்டுமே குறைக்கப்பட்டான்,  அதனால் சிரம் அகற்றிய  பைரவருக்குக் கூட பிரம்மஹத்தி தோஷம் இல்லை.

 *ஊழி முடிவில் பிரம்மன் திருமால் சக்தி உட்பட எல்லோரையும்  முடிப்பவர் பரம சிவன்* என்று தெரியாமல் சிவனுக்கு பிரம்மஹத்தி  இவரால்  தீர்ந்தது அங்கு  தீர்ந்தது  என்று நாத்திகக் கற்பனைக்  கோட்டை கட்டுகின்றனர். 

இவ்வாறு அனுசூயா சுருட்டப்பள்ளி  பழநி சுவாமி மலை போன்ற கட்டுக்கதை  பேசி எழுதி  கொடிய  பாவம் எல்லாம்,  சிவ நிந்தனை எல்லாம் செய்து விட்டு  துன்பம் வரும்போது  நான் என்ன பாவம் செய்தேன் ஏன் இந்த நிலை என்று அப்பாவி போல்  புலம்புகின்றனர்.  

*சிவன் சொத்து மட்டுமல்ல சிவ நிந்தனையும் சர்வ நாசமே*

.  சிவப்பிரியா

Friday, January 26, 2024

வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவை...

*தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 28 சிவன் கோயில்கள்...*
இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் *தமிழ்நாட்டில்தான் உள்ளன.*

*அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.*

இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதேபோல மற்ற பேரரசுகளின் காலத்திலும் கணிசமான அளவு சிவன் கோயில்கள் தமிழ்நாட்டில் எழுப்பப்பட்டுள்ளன. இப்படியாக கட்டப்பட்ட சிவன் கோயில்களில் சில சிவன் கோயில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 28 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோயில்களைப் பற்றி இங்கே காண்போம்...👇

*1 திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்*

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து
2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதேபோல பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.

*2 நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி*

திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.

*3 தியாகராஜர் கோயில், திருவொற்றியூர்*

சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு 11-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பெரிதாக புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை.

*4 ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை*

மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். இந்த திருவிழாவை, சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழா நடக்கும் வேளைகளில் மகா சிவராத்திரியையொட்டி சப்தஸ்வரங்கள் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.

*5 ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்காவல்*

திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது. 18 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழநாள் கட்டப்பட்டதாகும். இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரியின் தனி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது.

*6 பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்*

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்

பியுள்ளன என்றால் அது மிகையில்லை.

*7 தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்*

மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.

அதேவேளை மனிதனுக்கு இதயம் (ஆகாயம்) இடப்புறம் அமைந்திருப்பது போல் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் இடதுபுறமாக சற்று நகர்ந்து இருக்கிறது.

அதோடு சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தின் உதவியால் மூச்சுவிடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது.

*8 மருந்தீஸ்வரர் கோயில், சென்னை*

சோழ நாட்டை பல்லவம் ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோயில் இருந்ததை வரலாற்றுச்சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக்கடற்கரைச்சாலையாக உருமாறியுள்ளது. பரபரப்பான சென்னையின் நடுவே திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும்.

*9 ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், 
ராமேஸ்வரம்...*

12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம். அதாவது இராவணனை கொன்ற பாவத்தினை நீங்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக இராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் 'இராம+ஈஸ்வரம்' இராமேஸ்வரம் ஆனது

*10 அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை*

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது. இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார். அதோடு உண்ணாமலையம்மனாக சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியும் இங்கு வழிபடப்படுகின்றார்.

11 கபாலீசுவரர் கோயில், சென்னை

சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்று சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

12 ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்

600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோயில்களுள், நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும். இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு இந்தியாவின் உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

13 வேதகிரீஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்

சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில் 1400 ஆண்டுகள் பழமையானது. இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.

14 தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர்

சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை "வன்மிகிநாதர்" என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.

15 ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோ

ழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.

16 ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு

தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோயில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர். இங்கு சிவபெருமான், "ஸ்வேதாரண்யேஸ்வரர்" என்ற திருப்பெயருடன், மூலவராக இருந்து அருள் பாலிக்கிறார். பார்வதி தேவி, "பிரம்மவித்யாநாயகி" என்ற பெயரில் வழிபடப்படுகிறார்.

17 ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

18 பழமலைநாதர் கோயில், விருத்தாச்சலம்

கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர் கோயில் சைவத் திருத்தலங்களில் முக்கியமானதாகும். இந்தக் கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. இத்தலம் காசியை விட வீசம் (தமிழ் அளவு : 1/16) புண்ணியம் அதிகம் கொண்டதென நம்பப்படுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு

19 சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13-ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது. பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.

20 திருவாலீஸ்வரர் கோயில்

சென்னையிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள பாடி என்ற பகுதியில் திருவாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவபெருமான் திருவாலீஸ்வரர் வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு சிவன் சன்னதியை தவிர விநாயகர், பாலசுப்பிரமணியர், சூரிய பகவான் சன்னதிகளும் உள்ளன. அதோடு இங்குள்ள விநாயகர் சன்னதியில் விநாயகர் தொந்தி இல்லாமல் காட்சியளிக்கிறார்.

21 ஐராவதீஸ்வரர் கோயில்

கும்பகோணத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள். ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில், நிச்சயமாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திருக்கோவில் ஆகும். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த இந்திரனின் யானை ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

22 காசி விஸ்வநாதர் கோயில்

கும்பகோணம் மகாமகம் குளத்துக்கு அருகிலேயே சிவாலயமான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவன் சன்னதியை தவிர நவகன்னியர்களான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, ,காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் குறித்து தேவாரத்தில் பாடல் இடம்பெற்றிருப்பதுடன், இராமாயண காலத்திலேயே இராமரும், லக்ஷ்மணனும் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.

23 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்

சோழர்கள் ஆட்சிசெய்த காலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. ஐந்து அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கத்திற்கு இக்கோவில் பெயர்பெற்றது. மேலும் இங்கே ஐந்து சிலைகளின் கூடுகை இருக்கிறது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பதைப் போன்று லிங்கம் கர்ப்பக்கிரகத்தில் காட்சியளிக்கிறது.

24 கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டதெனினும், அவனுடைய மகனான 3-ஆம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை முடித்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

25 பாட

லீஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர்

கடலூர் நகரின் ஒரு பகுதியாக உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதோடு, பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பாடலீஸ்வரர் கோவில் மிகவும் புனிதமான சைவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

26 காசிவிஸ்வ நாதர் கோவில், தென்காசி

காசிவிஸ்வ நாதர் கோவில் குற்றாலத்திலிருந்து 8 கி. மீ தொலைவில் தென் காசியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கி.பி 1455-ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது. புராணங்களின் படி இந்த மனனன் காசிக்கு செல்ல விரும்பியதாகவும், ஆனால் அந்நகரம் முஸ்லீம்களின் கட்டுப்பாட்டின் இருந்ததால் காசியில் உள்ள அதே அசல் கோவிலின் மாதிரியாக இந்தக் கோயிலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

27 திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில், மதுரை

மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில் அமைந்துள்ளது. சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது திருவாப்புடையாரை (சுயம்புலிங்கத்தைக்) கண்டு முதன்முதலில் தரிசனம் செய்துள்ளான். அப்பாண்டியனது மகன் சுகுணன், திருவாப்புடையாருக்குக் கோயில் எடுப்பித்தான் என்று சொல்லப்படுகிறது.

28 மாசில்லாமணீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில்

சென்னையின் அம்பத்தூர் பகுதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள திருமுல்லைவாயிலில் மாசில்லாமணீஸ்வரர் கோயில் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நந்தி சிலை வழக்கத்துக்கு மாறாக சிவபெருமானை நேராக நோக்காமல், கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது.

நிலப்பகுதிகளில் மட்டுமல்லாது கடற்கரைகள் பக்கத்திலும் பல சிறப்புக்கு வாய்ந்த கோவில்கள் உள்ளது அப்படி கடற்கரை அருகில் உள்ள 10 தமிழக கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம்

29. அஷ்டலட்சுமி கோவில், சென்னை

இந்த கோவிலானது சென்னை பெசன்ட் நகரில் எலியட்ஸ் கடற்கரையின் இறுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன. 
முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி ஆகிய தெய்வங்கள் அருள் புரிகின்றனர். 
இரண்டாவது தளத்தில் திருமால் திருமகளுடன் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இவர்களை வழிபட்ட பின்பே ஏனைய தெய்வங்களை மக்கள் வழிபாடு செய்கின்றனர். 
மூன்றாவது தளத்தில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்தியாலட்சுமி, கஜலட்சுமி ஆகிய தெய்வங்கள் அருள்புரிகின்றனர். 
நான்காவது தளத்தில் தனலட்சுமி அருள்பாலிக்கிறார். இக்கோவில் 1976-ல் சலவைக் கற்களால் கட்டப்பட்டது. இக்கோவிலின் கோபுரத்தின் நிழலானது தரையில் விழுவதில்லை.

30. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்

இந்த கோவிலானது சென்னையில் திருவான்மியூரில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் மருந்தீஸ்வரர், ஒளசதநாதர், பால்வண்ணநாதர் என்ற திருப்பெயரிலும், அம்மை திரிபுரசுந்தரி, சொக்கநாயகி என்ற திருப்பெயர்களிலும் அருள்புரிகின்றனர். இத்தலம் 2000 வருடங்கள் பழமையானது ஆகும்.

31. காயாரோகனேஸ்வரர் கோவில், நாகபட்டினம்

பழங்காலத்தில் இந்த கோவில் ‘நாகை காரோணம்’ என்றழைக்கப்பட்டது. இங்கு இறைவன் காயாரோகணேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மை நீலதாயாட்சி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். 
புண்டரீக மகரிஷிக்கு இத்தல இறைவன் கட்டித் தழுவி முக்தி கொடுத்தால் காயாரோகணேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

32. அமிர்தகடேஸ்வரர் கோவில் கோடியக்கரை

இந்த கோவிலானது நாகை மாவட்டத்தில் வேதாரண்யத்தின் அருகில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் அமிர்தக்கடேஸ்வரர், திருக்கோடி குழகர் என்ற திருப்பெயர்களிலும், அம்மை அஞ்சனாட்சி, மைதடங்கண்ணி என்ற திருப்பெயர்களிலும் அருள்புரிகின்றனர்.

33. திருமறைக்காடர் கோவில், வேதாரண்யம்

வேத நூல்கள் வழிபட்ட தலமாதலால் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டு வேதாரண்யம் என ஆனது. 
இங்கு இறைவன் திருமறைக்காடர் என்றும் அம்மை யாழைப்பழித்த மென்மொழியாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

34. இராமநாதர் கோவில், இராமேஸ்வரம்

இராமநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்னும் ஊரில் வங்காள விரிகுடா கடற்கரையோரம் அமைந்துள்ளது.

35. சுப்பிரமணியசுவாமி கோவில், திருச்செந்தூர்

இந்த கோவிலானது தூத்துக்குடி மாவட்டத்தில் வங்காள விரிகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இவ்விடம் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடாகும்.

36. சுயம்புலிங்க சுவாமி, உவரி

இந்த கோவிலானது திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரிலிருந்து 35கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்புலிங்கம் என்ற பெயரிலும், அம்மை பிரம்மசக்தியம்மன் என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

37. குமரிஅம்மன் கோவில், கன்னியாகுமரி

இக்கோவில் முக்கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமமான கன்னிய

ாகுமரியில் அமைந்துள்ளது. இவ்விடம் தாட்சாயணியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்பட்டு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு அன்னை துர்க்காதேவி, பகவதி, பாலசவுந்தரி, தியாகசவுந்தரி என்றெல்லாம் போற்றப்படுகிறாள்.

38. மாமல்லபுரம் , காஞ்சிபுரம்

மாமல்லபுரம் என்றாலே கடற்கரை கோவிலே அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்விடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது. 
இக்கோவில் இரண்டாம் நரசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டது. 
இக்கோவிலின் விமானம் 60 அடி உயரம் உடையது. இக்கோவிலில் சிவபெருமான், உமையம்மை, குமரக்டவுள், விநாயகப் பெருமான் ஆகியோர் உள்ளனர்.

*கோபுர அமைப்பு...*

ஆலய நுழை வாயிலில் நம்மை வரவேற்பது இராஜ கோபுரம். இராஜ கோபுரத்தை ஸ்துல லிங்கம் எ‌‌‌‎ன்று கூட கூறுவார்கள். ஆலயத்தி‎ன் உள் இருக்கும் கோபுரங்கள் எல்லாம் உயர்ந்திருக்கும். இப்படி உயர்ந்து இருப்பதால், நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்தும் கோபுரத்தை காணலாம். கோபுரத்தையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள். தூரத்தில் ‏ இருப்பவர்களுக்கும் இறைவனி‎ன் நினைவு கூறவே கோபுரம் அமைக்கப்பெற்றது. கோபுரத்தின் தளங்கள், கோபுர நிலைகள் என்று அழைக்கப்படும்.

கருவறை சிறியதாகவும், கோயில்களின் மையப்பகுதியிலும் அமையும். கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபம், அதற்கு முன்பாக ஸ்தபன மண்டபம், அதற்கும் வெளியே மகா மண்டபம் ஆகியன காணப்படும். உள்ளிருக்கும் பிரதான தெய்வத்தைப் பொறுத்து வாகனம் இடம் பெறும்.ஒரே கோயில், ஒன்றுக்கு மேற்பட்ட சந்நிதிகள் இருக்கலாம். ஆனாலும் மூலஸ்தானம் என்பது பிரதான தெய்வத்தின கருவறைக்கு வழங்கப்படும். மூலஸ்தானக் கருவறையும், பிற சந்நிதிகளையும் தனித்தனியாக வலம் வரும் அமைப்பு இருக்கலாம்.

*இராஜகோபுரத்தி‌‎ன் கோட்பாடுகள்:-)*

எல்லா கோபுரஙகளிலும் உயரமானது இராஜ கோபுரம். கருவறையின் மீது அமைக்கப்படும் சிகரம், விமானம் எனப்படும். எண்கோண வடிவத்தைக் கொண்தாகவே இவை அமைக்கப்படுகின்றன. இராஜ கோபுரத்தி‌‎ன் அருகில் செ‌‌‌‌‌‎ன்‎று அத‎ன் அமைப்பைக் கவனித்தால் சில அதியசங்களைக் காணலாம். கோபுரத்தில் கணக்கற்ற சிறிய, பெரிய சுதையிலான சிற்ப வடிவங்களைக் காணலாம். அவற்றுள் மா‎னிட வடிவங்களையும் காணலாம். ‏இறைவனி‎ன் திருவிளையாடல்கள், அற்புதம் நிகழ்த்திய காட்சிகள், தேவர்கள், விலங்குகள், பறவைகள், ஏனைய சிற்றுயிர்கள் அதில் ‏ இடம் பெற்று‏ இருக்கும். பிரபஞ்ச அமைப்பில் ‏இவைகளுக்கும் இடமுண்டு எ‎ன்பது கோட்பாடுகள்.

சிற்றுயிர்கள், பேருயிர்கள், விலங்கினம், மக்கள் ‏இனம், தேவர் கூட்டம் ஆகிய எல்லோரும் பிரபஞ்சத்தில் இருக்கிறார்கள், அண்டத்தினுள் ‏ இ‌‎ன்‎னது இருக்கிறது எ‌‌‌‎ன்று எல்லாப் படித்தரங்களிலும் உள்ள அனைத்தும் அங்கு ‏ இடம் பெற்றிருக்கும். இக்கோட்பாட்டை ‏ இராஜகோபுரம் உருவகப்படுத்தி விளக்குகிறது. இயற்கையி‌‎ன் நடைமுறையி‎ன் புறச்சி‌‎ன்‎னமாகப் பெரிய கோபுரம் அமைந்திருக்கிறது எ‌‎ன்றால் ‏ இயற்கையில் ‏உள்ளவைகளை எல்லாம் அத‌‎ன் மூலம் விளக்கம் பெற்றுள்ளன.

*யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு...*

ஒரு யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு காணப்படுகிறது. மனிதனுடைய உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டே திருக்கோவில்கள் கட்டப்பட்டு, வழிபாட்டுக்கு உரிய அமைப்பாக மதிக்கப்படுகின்றன.

*கொடிக்கம்பம்...*

கொடிக்கம்பம் உள்ளிருக்கும் தெய்வத்தையும், தெய்வத்தை வணங்குவதால், உண்டாகும் மகிழ்ச்சியையும் சுட்டுகிறது. கொடிமரத்துக்குக் கீழ் வாகனம் இருக்கும்; இது ஆன்மாவைச் சுட்டு; ஆன்மாவான வாகனம் தெய்வத்தைப் பார்த்தபடி காணப்படும். 
குண்டலினி சக்தி உறங்கிக் கிடக்கும் மூலாதாரமே கொடி மரமாகச் சித்திரிக்கப்பட்டு, ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. கொடி மரத்தில் காணப்படும் 32 வளையங்கள், மனித உடலின் முதுகுத் தண்டிலுள்ள 32 எலும்புகளைக் குறிப்பதாகும். மேலும் மனிதனுடைய முப்பத்து இரண்டாவது வயதில்தான் அறிவுப் பல் முளைக்கிறது.

*கருவறை...* 

கோயிலின் மையப்பகுதியாக உள்ள கருவறையில், தெய்வ திருமேனி இருக்கும். கருவறை, மனித இதயத்தைக் குறிப்பதாகும். கருவறையில் இருப்பது போல், இறைவன் இதயத்தில் இருக்க வேண்டும். கோவில்களும், கோயில் கட்டுமானமும் வளர்ச்சி பெறப் பெற, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகிய பல்வேறு துறைகளும் கோயில்களோடு இணைக்கப்பட்டுள்ளன.

எண்ணங்களின் பிறப்பிடமாக விளங்கும் கொப்புள் ஸ்தானத்தில் சிவனுடைய வாயிற் காப்போனாகிய நந்தியைப் பிரஷ்டை செய்வதன் மூலம் எண்ணங்களை அடக்கி, மனதினைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. கர்ப்பக்கிரகம் அல்லது மூலஸ்தானத்தைப் பிரம்ம கபால உருவில் அமைப்பது வழக்கம். புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படும் பொழுது ஆன்ம ஒளி ஏற்படும் என்பதைக் குறிக்கவே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள் சிறந்த கோயில்களையும், அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்துக் கொடுத்து, கோயில் தி

சை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள். 
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

*கோபுர தரிசனம் கோடி புண்ணியம்...*

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து, அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது புணர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியைக் கிரகித்து வெளிவிடுகிறது. அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் கூறினர்.

*பிராண சக்தி...*

கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுக்கிறது.

இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை
*(14 ஆயிரம் உயிர் சக்தி)* நம் உடலில் உள்ள உயிர் அணுக்களை தாக்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அப்போது அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. இதனால் நமக்கு ஆன்மீக உணர்வு, புத்துணர்வு, புத்துணர்ச்சியை ஏற்படுத்தி நம்முள்ள கவலைகள், பிரச்சனைகள், உடல் நோய்களைப் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.

கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த துவாரத்தின் வழியே செல்லும் நீரிலும் பிராண சக்தி கலந்து வெளிப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரைக் கோயிலை வலம் வரும் நாம் எடுத்து கண்ணிலும், சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நிமிடங்களில் நம் மீது பிராண சக்தி பரவுகிறது.

*விஞ்ஞானத்தின் அடிப்படை...*

இந்த பிராண சக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது. சிலையின் பக்கவாட்டில்தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக் கூடாது. ஒரு காலை வெளியிலும், மறுகாலை கர்ப்பக்கிரத்தின் வாயிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான் கூறியுள்ளனர்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

தாலி பலம் தரும் தை வெள்ளி தரிசனம்

தாலி பலம் தரும் தை வெள்ளி தரிசனம்!
தை வெள்ளிக்கிழமை நாளில், பெண் தெய்வ வழிபாடு நற்பலன்களை வழங்கும். நம் குடும்பத்தைத் தழைக்கச் செய்யும். அம்பாளுக்கு உகந்த தை மாத வெள்ளிக்கிழமையில், அம்மன் கோயிலுக்குச் சென்று அவளை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் வாழையடிவாழையென தழைக்கச் செய்வாள் தேவி.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள். அதனால்தான், செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில், சக்தி என்று போற்றி வணங்கப்படுகிற அம்மன் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.

அந்த வகையில் தை மாத வெள்ளிக்கிழமைகள், அம்பாளுக்கு ரொம்பவே விசேஷமானவை. தை வெள்ளிக்கிழமையில், தவறாமல், வீட்டைத் தூய்மைப்படுத்தி, அபிராமி அந்தாதி, கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவது, மனதில் தெளிவையும் செய்யும் தொழிலில் மேன்மையையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.

தை மாத வெள்ளிக்கிழமை நாளில், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்யுங்கள். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். குறிப்பாக, செவ்வரளி மாலை சார்த்துங்கள்.

அடுத்த  தை வெள்ளிக்கிழமை. .   கடைசி வெள்ளிக்கிழமையும் மறக்காமல், அம்பிகையை தரிசிப்போம். அவளை ஆராதிப்போம்.
முக்கியமாக, வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் (காலை 10.30 முதல் 12 மணி வரை) அம்மன் கோயிலுக்கு அல்லது அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று, துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவோம். சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கியருளுவாள் தேவி என்கிறது தேவி மகாத்மியம். எனவே வெள்ளிக்கிழமை நாளில், அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்கை சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவோம்
தை வெள்ளி: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் விரதம் - கடன் தொல்லை நீங்கும் தை மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால், துயரங்கள் விலகிப்போகும். அம்மனை வணங்கினால் குலம் தழைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை. 

    தை மாத வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோயிலுக்குச் சென்று அவளை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள். அம்மன் ஆலயங்களில் சந்தனக் காப்பு சாத்தி வழிபட்டால், சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். அம்மன் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரத்தை தருவாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கடன் தொல்லைகள் நீங்கி நிம்மதி பிறக்கும்.

 அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை எத்தனை முக்கியமோ அதுபோல தை வெள்ளிக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. தை மாத முதல் வெள்ளிக்கிழமை இன்று மஹிஷாசுர மர்த்தினியையும், ப்ரத்யங்கிரா தேவியையும் வழிபடும் விதமாக 1000 மஞ்சள் கிழங்கு கொண்டு மாபெரும் துர்கா யாகம் நடைபெறுகிறது. மேற்கண்ட யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தெய்வங்களை தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் வளம் பல சேர்க்கும் என்கிறார் ஸ்தாபகர் "யக்ஞஸ்ரீ" முரளிதர ஸ்வாமிகள்.

தை மாத வெள்ளிக்கிழமைகள், அம்பாளுக்கு மிகவும் விசேஷமானவை. தை முதல் வெள்ளிக்கிழமையான இன்று அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மையாவும் கிடைக்கும். செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சமர்பித்து வணங்குவது சிறப்பு.   தை வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோயிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும். துர்கை சந்நிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபட வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். மங்கல காரியங்களை விரைவில் நடத்தித் தருவாள் அன்னை பராசக்தி!  
தை மாதத்தின் வெள்ளிக் கிழமையான இன்று வீட்டில் பாயசமோ சர்க்கரைப் பொங்கலோ செய்து, நைவேத்தியம் செய்து ஸ்வாமி படத்துக்கு முன்னே அமர்ந்து பிரார்த்தனை செய்ய நன்மைகள் நடைபெறும். மகாசக்தியின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டியும் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெற வேண்டியும், சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் கிடைத்து குலம் தழைக்க வேண்டியும் சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும் விதத்திலும், குடும்பத்தில் மங்கல காரியங்கள் விரைவில் நடைபெறவும் அன்னை பராசக்தியை வேண்டி நடைபெறும் யாகங்களில் பங்கேற்கலாம். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்னாடகா மாநிலங்களிலிருந்தும், வேலூர், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் பலரும் இங்கு வந்து, ப்ரத்யங்கிரா தேவியையும், நவகன்னியையும், மஹிஷாசுர மர்த்தினியையும் பிரார்த்தனை செய்து, மிளகாய் வற்றல், நவதான்னியங்கள், வேப்ப எண்ணெய், மஞ்சள் போன்ற பொருட்களை யாக குண்டத்தில் சேர்த்து, அம்பாளை வணங்கி மாங்கல்ய சரடு, திருஷ்டி கயிறு போன்ற பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். தை செவ்வாய், வெள்ளி முதலான நாட்களிலும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கும், அஷ்ட பைரவருக்கும், காலபைரவருக்கும், சொர்ணாகர்ஷண பைரவருக்கும் சிறப்பு பூஜைகளும் பரிகார வழிபாடுகளும் நடைபெறுகின்றன .

திருவிளக்கு பஜனை |  
திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே

தேவியின் வடிவே திருவிளக்கே தேவியே உனக்கு நமஸ்காரம்
இருளை அகற்றும் திருவிளக்கே இன்பம் அளிக்கும் திருவிளக்கே

எங்கும் ஒளிதரும் திருவிளக்கே லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்
மங்கள ஜோதியாம் திருவிளக்கே மாலையில் ஒளி தரும் திருவிளக்கே .

காலையில் ஒளிதரும் திருவிளக்கே சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்
திருமகள் வடிவே திருவிளக்கே தேவரும் பணியும் திருவிளக்கே

தெள்ளிய ஜோதியே திருவிளக்கே சாரதே உனக்கு நமஸ்காரம்
அஷ்டலக்ஷ்மி வடிவே திருவிளக்கே ஆனந்த நர்த்தினி திருவிளக்கே

ஆலய பூஷணி திருவிளக்கே ஆதிபராசக்தி நமஸ்காரம்
பாக்கிய லக்ஷ்மியாம் திருவிளக்கே பக்தியை அளித்திடும் திருவிளக்கே

பதவியைத் தந்திடும் திருவிளக்கே பவானி உனக்கு நமஸ்காரம்
ஜெகமெல்லாம் விளங்கும் திருவிளக்கே ஜெகதீஸ்வரி வடிவே திருவிளக்கே

அழகை அளிக்கும் திருவிளக்கே அம்மா உனக்கு நமஸ்காரம்

சௌந்தர்ய ரூபிணி திருவிளக்கே
சந்தான பலம்தரும் திருவிளக்கே

சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே சக்தியே உனக்கு நமஸ்காரம்.

Followers

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் பலன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள எட்டு திசை லிங்கங்களே (அஷ்ட லிங்கங்கள்) நவகிரக தோஷங்...