Saturday, July 26, 2025

சிவனை மனம் உருகி வேண்டுகிறார் மாணிக்கவாசகர் பெருமான்...

#பக்தி" என்றால் 
#மாணிக்கவாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார் ,,,
அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ...

வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே...!

பாடல் விளக்கம்🍁

எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும். எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும். எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்.

ஆனாலும் சிவ பெருமான் மணிவாசக பெருமானை விடுவதாக இல்லை மீண்டும் கேட்கிறார் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று மீண்டும் மணிவாசகர் பாடுகிறார்..

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,

கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே...!

பாடல் விளக்கம்🍁

சொந்தங்கள் எனக்கு வேண்டாம், ஊர் வேண்டாம், நல்ல பெயர் வேண்டாம், நல்ல படிப்பு அறிவு வேண்டாம் உன் அருள் இருந்தால் அது தானாக கிடைக்கும். குற்றாலத்தில் அமர்ந்து இருக்கும் ஆனந்த கூத்தனே நான் உன் திருவடிகளை தேடி தாயை கண்ட கன்று போல அன்பில் உருக வேண்டும். பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார்.

என்று பக்தியால் மனம் உருகி வேண்டுகிறார் மாணிக்கவாசகர் பெருமான்...

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

மங்காத செல்வம் தரும் சக்கரத்தாழ்வார்

*பகவானின் எல்லா அவதாரத்தில் சக்கரத்தாழ்வார் வருவாரா?* 
எம்பெருமானுடைய ஒவ்வொரு அவதாரத்திலும் ஏதோ ஒருவகையில் இவரும் அவதாரம் செய்து நேரடியாகவோ மறை முகமாகவோ எம்பெருமானுடைய சங்கல்பத்தை நிறைவேற்றுபவர்.

 மச்சாவதாரத்தில் மீனாக அவதரித்த பகவானின் பல்லாக இருந்தவர். கூர்மாவதாரத்தில் மந்திர மலையை சுதர்சனம் கொண்டே பெயர்த் தெடுத்தனர்; எம்பெருமானுடைய வராக அவதாரத்தில் அவருடைய கோரைப்பற்களாக அவதரித்தவர். 

நரசிம்ம அவதாரத்தில் பகவான் இரு கைகளில் கூர்மையான நகங்களாக இருந்து இரணியனை சம்ஹாரம் செய்தவர். வாமனா வதாரத்தில் சுக்ராச்சாரியாரின் கண்ணை குத்திய தர்பையாக இருந்தவர். பரசுராம அவதாரத்தில் கூர் மழுவாக இருந்தவர்.

 ராமாவதாரத்தில் ஜுவாலா மூர்த்தியாகி பாணங்களில் புகுந்து எதிரிகளை சுட்டெரித்தவர். பூரணமான அவதாரமான கண்ணன் அவதாரத்தில் நினைத்தபோது வந்து நின்றவர். பிரத்யட்சமாகவே காட்சி தந்தவர். மகாபாரதத்தில் சிசுபாலன் வதம் சக்கரத்தால்தான் நடந்தது.

*மங்காத செல்வம் தரும் சக்கரத்தாழ்வார் மந்திரம்!* 

சக்கரத்தாழ்வாருக்கு உரிய நட்சத்திரம் சித்திரை. ஆனி மாத சித்திரை நட்சத்திரம் சக்கரத்தாழ்வார் ஜென்ம ஜயந்தித் திருநாள். என்றபோதும் மாதந்தோறும் வருகிற சித்திரை நட்சத்திர நன்னாளில், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
வேதசத்சங்கம்

எல்லா பெருமாள் கோயில்களிலும் சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும். ஸ்ரீரங்கம் கோயிலின் சக்கரத்தாழ்வார் மிகுந்த சாந்நித்தியம் மிக்கவர். அரங்கனைத் தரிசித்து வழிபடுவதற்கு வாரந்தோறும் பக்தர்கள் தொடர்ந்து வருவது போல், வாரந்தோறும் சக்கரத்தாழ்வாரை தரிசித்துப் பிரார்த்திக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதேபோல், அனைத்து பெருமாள் கோயில்களிலும் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம் பெருமளவு இருக்கும்.

சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் எத்தகையது தெரியுமா? சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது.

சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நம் வாழ்வில் நமக்கு வருகிற எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்கிறார் சக்கரத்தாழ்வார்.

சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள். வீட்டில் விளக்கேற்றி, இன்றைய ஜயந்தி நன்னாளில், ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். தினமும்

ஓம் சுதர்ஸனாய வித்மஹே.
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரஸோதயாத்:

என்று முடிந்தபோதெல்லாம் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 அல்லது 108 முறை என முடிந்த அளவுக்கு சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். எதிர்ப்புகளையும் தடைகளையும் தகர்த்து அருளுவார்.

மார்கழி சித்திரை நட்சத்திர நன்னாளான இன்று சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்களை நடத்தித் தந்திடுவார். மங்காத செல்வங்களை வாரி வழங்கிடுவார்!
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, July 25, 2025

ஆடி பூர நட்சத்திரத்தில் அம்மன் தோன்றினாள்.

#ஆடிமாதம்_பூர_நட்சத்திரத்தில்தான்_அம்மன்_தோன்றினாள்.
 பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா?

ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார்.  பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார்.

இதனால், அங்கு இருந்த  ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே   தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்.

அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். “நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன்.  பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்.” என்றாள் அம்பாள்.

தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார். இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள்.

அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிக்ஷங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.   அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும்.

அதேபோல ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம்.  இந்த நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்களில் இரண்டு வளையல்களை அணியலாம். அதேபோல ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைக்கூடும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

கோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா?

கோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா? 
இது பற்றி பல கருத்துக்கள் பதிவுகளாக இணையத்தில் உலா வருகின்றன.

பலரும் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றக்கூடாது என பதிவிட்டிருக்கின்றனர்.

மற்றவர் விளக்கு ஏற்றியதற்குரிய காரணங்கள் நமக்கு சரியாக வராது என்றும் பழைய விளக்குகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும்  அதற்கான காரணங்களாகக் காட்டுகிறார்கள்.

ஆனால் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு
தாராளமாக ஏற்றலாம். இதனால், தீபம் ஏற்றியவருக்கோ ஏற்றுபவருக்கோ பலன் ஏதும் குறைந்து விடாது. 

இதற்கு புராணத்தில் இருந்து விளக்கத்தைப் பார்ப்போம்.

ஒரு சிவன் கோயில் சந்நிதியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. 

ஒரு எலி அந்த விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வாயை வைத்தது. எதிர்பாராமல் எலியின் வாய்பட்டு அணைய இருந்த திரியில் சுடர், தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது.  

இந்நிகழ்ச்சி பெரிய புண்ணியச் செயலாக அமைந்து, மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. 

சுவாமி சந்நிதியில் விளக்கேற்றுவது தான் முக்கியமே தவிர மற்ற சந்தேகம் எதுவும் வேண்டாம்.

 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

நாம் அறியாத அற்புத சிவாலயங்கள்

நாம் அறியாத அற்புத சிவாலயங்கள்

திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகு காலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு
செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

★நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாத காலம்
கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.

 🌹சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம்
வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.

★வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.

★திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும்
உறிஞ்சப்படுகிறது.

★ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில்
நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை
உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

★கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும்
போது கருடன் தரிசனம் தருகிறது.

★கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருட சேவையின்போது கல்
கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து
வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம்
இன்றும் நடைபெறுகிறது.

★முருகனுக்கு விரதமிருந்து சர்ப்பக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள்
பாம்பும், மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் மீனும் தானாக
வருகின்றன.

★திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு
தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம்
நடைபெற்றது.

★திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள
தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளி சுனையின்
நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

★தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில்
கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும்
அற்புதம் நடக்கிறது.

★காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால்
நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

★சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார்
கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

★திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில்
சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

★குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை
கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.

★ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு
வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

★திருப்பத்தூர் – தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த
நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7
புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல்
விட்டு விட்டு சாலை அமைத்தனர்.

★வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை
பங்குனியில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது பட்டு தங்கநிறமாக
ஜொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது.

★திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்
கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை
அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

★சோமநாதபுரம் சிவன்கோவிலில் சிவலிங்கம் அந்தரத்தில் இருந்தது. கஜினி
முகமது உடைத்து அழித்தான்.

★அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல் போன்ற நோ்த்திக்
கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தையல்நாயகி அம்மன்.. இந்த கோயில் தெரியுமா?..

அனைத்து வளங்களையும் அருளும் தையல்நாயகி அம்மன்.. இந்த கோயில் தெரியுமா?..
இந்த ஆன்மிக மாதத்தில் பெண் தெய்வங்களுக்கு நாம் செய்யும் வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் அனைத்தும் நிச்சயம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் என நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் அரியலூர் மாவட்டம் அருகே கோயில் கொண்டிருக்கும் தையல் நாயகி அம்மன் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

🙏தையல் நாயகியாக அம்மன்.

இந்த கோயிலானது அம்மாவட்டத்தில் பொய்யாத நல்லூர் என்ற ஊரில் உள்ளது. இந்த கோயில் நடையானது காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும். மயிலாடுதுறையில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் அம்பாள் தையல் நாயகியின் சகோதரி தான் இக்கோயிலில் தையல் நாயகியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

🙏கோயிலின் அற்புத வரலாறு.

முன்பு காலத்தில் இரு சகோதரிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நடந்தே பயணம் மேற்கொண்டு வந்தனர். அவர்கள் இருவருக்கும் தையல் நாயகி என பெயர் இருந்தது. வெகு தூரம் இருவரும் நடந்து வந்த நிலையில் களைப்பில் மூத்த பெண் கரிசல் மண் நிறைந்த பகுதியில் அயர்ந்து தூங்கினாள். சகோதரி அமர்ந்ததை அறியாமல் தொடர்ச்சியாக நடந்த தங்கை வளம் பொருந்திய நஞ்சை மண்ணை அடைந்தாள். 

பின்னால் திரும்பிப் பார்க்கும்போது தனது சகோதரி இல்லாததை கண்டு இந்தப் பெண் கூவி அழைத்தாள். ஆனால் தனக்கு இந்த கரிசல் மண் பிடித்து போய் விட்டதால் இங்கேயே கோயில் கொள்கிறேன் என அந்த சகோதரி கூறினார். அதற்கு இந்த பெண்ணும் சம்மதம் சொல்ல, எனக்கு ஊரில் மக்கள் விழா எடுத்தால் நீ அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டாள். அதற்கு கரிசல் மண்ணில் இருந்த சகோதரியும் இசைந்தாள். 

இப்படியாக மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் விழா நடைபெறும் போது பொய்யாத நல்லூர் கோயிலில் உள்ள உற்சவ அம்மனை மக்கள் தோளில் சுமந்து சாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டு திரும்புவது வழக்கமாக உள்ளது.

🙏கோயிலின் மகிமைகள்..

பொய் பேசாத மக்கள் வாழும் ஊர் என்பதால் இந்த ஊருக்கு பொய்யாத நல்லூர் என பெயர் ஏற்பட்டதாக கூறுவார்கள். எப்படி வைத்தீஸ்வரன் கோயிலில் வீற்றிருக்கும் தையல்நாயகி அம்மனுக்கு பேரும் புகழும் உள்ளதோ அதேபோல் இங்கு உள்ள தையல்நாயகி அம்மனுக்கும் எதற்கும் குறைவில்லாத புகழ் உள்ளது. இந்தக் கோயிலின் அருகிலேயே வைத்தீஸ்வரன் குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் அய்யனார், காமாட்சியம்மன், பொன்னியம்மன், சாமுண்டீஸ்வரர், வீரமுத்தையா, மருதையன் ஆகியோரும் இந்தக் கோயிலில் காட்சி கொடுக்கின்றனர். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, July 23, 2025

*ஆடி பூரம் அம்மனுக்கு வளையல் திருவிழா*

*ஆடி பூரம் அம்மனுக்கு வளையல் திருவிழா*
ஆடி பூரத்தன்று, அம்மன் கோயில்களில் ஹோமங்கள்  பூஜைகள்  நடத்துகின்றன.

 ஆண்டாளின் பிறப்பிடமான ஸ்ரீவல்லிபுத்தூரில் ஆடி பூரம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

 இந்த விழா ஸ்ரீரங்கம் கோயிலிலும் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

 10வது நாளில், ஆண்டாளுக்கும் ரங்கநாதருக்கும் (விஷ்ணு) தெய்வீக திருமணம் கொண்டாடப்படுகிறது.

 இன்னும் திருமணம் ஆகாத அல்லது சரியான மணமகனைத் தேடாத பெண்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ளவும், சரியான துணையைப் பெறவும் 10வது நாளில் (அதாவது தெய்வீக திருமண நாள்) ஆண்டாளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

ஆண்டாள் ரங்கநாதரைப் போற்றிப் பல பாசுரங்களை  இயற்றியுள்ளார்.

 திருமஞ்சனம் முடிந்ததும் பக்தர்கள் திருப்பாவை மற்றும் பிற பாசுரங்களை பாடுகின்றனர்.

இந்த நாளில் அனைத்து சக்தி கோயில்களிலும், தேவி அழகாக அலங்கரிக்கப்படுகிறாள், மேலும் பல கண்ணாடி வளையல்கள் பல்வேறு வடிவங்களில் தேவிக்கு படைக்கப்படுகின்றன.

 பின்னர், வளையல்கள் அனைத்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. 

இந்த வளையல்களை அணிவது தம்பதிகளுக்கு சந்ததியினரை கொடுத்து ஆசிர்வதிக்கும் என்று நம்பப்படுகிறது. 

*மேலும் வளைகாப்புபிரசாதமான*
*சர்க்கரை பொங்கல்,புளி சாதம்,எழும்பிச்சை சாதம், தேங்காய் சாதம்,தயிர் சாதம் மற்றும் பச்சை அரிசி மாவு புட்டு பிரசாதமாக வழங்கபடுகிறது*. 

கர்ப்பிணிப் பெண்கள் இந்த வளையல்களை அணியும்போது, அது அவர்களின் குழந்தையை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...