Friday, September 30, 2022

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

#நமோ #நமோ
#நாராயணா
#ஓம் #நமோ
#நாராயணா....
திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா விஞ்ஞான பூர்வமான பதிவு.

 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்...

 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..

 ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.

பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.

வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

செல்வம் மலை போல குவியும்.

 உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்யுடன் உள்ளார்கள்.

 அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

 வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.

 இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

 குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள்,

 தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.

 திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்

 அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .

மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

 அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.?

மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

ஓம் நமோ வேங்கடேசாய 

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

 திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்..

வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்* 🌷 *எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்கு இங்கே என்று அருள் புரியும் எம்பெருமான்* (சம்பந்தர்)

⚜️ *தெய்வங்களும் பிறரும் சிவ பூஜை செய்து பெற்ற பொருட்கள்* .
வானலோக உயிரினங்களான தெய்வங்களுக்கும் அவதாரங்களுக்கும் இன்னார் என்று அவர்களைக் காட்டும் அடையாளமாக இருப்பவை கரத்தில் உள்ள ஆயுதங்களே, பொருட்களே. ⚜️ *வானகத்து அமரர் தாயே போற்றி* (திருவாசகம்) என இந்த ஆயுதங்கள் பொருட்கள் அனைத்தும் அவர்கள் தமக்கு அப்பனும் அம்மையுமாக உள்ள மெய்க்கடவுள் ஒரே மெய் யன்னையான சிவ பரம்பொருளைப் பூஜை செய்து சிவனருளால் கிடைக்கப் பெற்றவையே* . தெய்வம் அசுரர் மனிதர் என எல்லோருக்கும் கடவுளாய் யார் வேண்டி வழிபட்டாலும் *இல்லை என்று சொல்லாமல் அப்புறம் பிறகு என்று சொல்லாமல் உடனே அருள் புரியும் சர்வேஸ்வரனது அளவற்ற கருணையை*
🌺 *எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்* (சுந்தரர்)
🕉️ *தன்னை நோக்கித் தொழுது எழுவார்க்கு எலாம் பின்னை என்னார்* (அப்பர்)
🔯 *வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்* 🌷 *எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்கு இங்கே என்று அருள் புரியும் எம்பெருமான்* (சம்பந்தர்)
என்று திருமுறைகள் போற்றுகின்றன.
⚜️ *எல்லார்க்கும் தான் ஈசன்* (திருவாசகம்)
🙏 *எல்லோரும் தொழும் ஈசரே* (சம்பந்தர்)
என பரம சிவன் ஒரே மெய்க்கடவுளாய் எல்லோருக்கும் இறைவனாக சர்வேசுவரனாக அத்தனாக அன்னையாக இருப்பதால் தெய்வம் அசுரர் மிருகம் பறவை என எல்லோருக்கும் அருள் புரிகிறார். தெய்வங்களின் கையில் உள்ள ஆயுதங்களும் *எல்லை யில்லாத பேரருளை எட்டு குணங்களில் ஒரு குணமாக உடைய பரமேசுவரன் அருளியவையே* . அசுரர், அவதாரம் ஆகியோர் கையில் உள்ளவையும் பராபரன் அருளியவையே.
🔯 *திருமால்* திருவீழி மிழலையில் ஆயிரம் சிவ நாமம் ஓதிப் பூஜை புரிந்து சுதர்சனம் என்ற சக்கரத்தைப் பெற்றார். திருமால்பூரில் (திருமாற்பேறு) சிவ பூசை செய்து அதைத் தாங்கும் வல்லமை கொண்டார். திருச் சங்கமங்கை என்ற தலத்தில் சங்க நாதரைப் பூசை செய்து சங்கினைக் கைக்கொண்டார். சீர்காழியில் பிரம்ம புரீசரைப் பூசித்துச் சட்டை நாதரிடமிருந்து கதாயுதம் பெற்றார். முந்தைய ஒரு திருமாலின் தோலைச் சட்டையாக அணிந்து அருளியவர் சட்டை நாதர். சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் கோயில், மயிலாடுதுறை மயூர நாதர் கோயில், வைதீசுவரன் கோயில், திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்ப ஹரேஸ்வரர் கோயில் ஆகிய சிவத் தலங்களில் கதாயுதம் தாங்கிய சட்டை நாதரைக் காணலாம்.
🌷 *பிரம்மன்* ஞான தட்சிணா மூர்த்தியையும் யோக தட்சிணா மூர்த்தியையும் பூஜித்து வேதம் ருத்திராட்சம் கமண்டலம் பெற்றுக் கொண்டார். 🕉️ *சரஸ்வதி* வீணாதர தட்சிணா மூர்த்தியை வழிபட்டு வீணாபாணி ஆனாள்.
🌷 *லட்சுமி* பல தலங்களில் சிவ பூஜை செய்து ஐஸ்வர்யேஸ்வரரை வழிபட்டு சங்க நிதி பதும நிதி ஆகிய அட்சய செல்வம் பெற்றாள். 💥 *முருகன்* திருச்செந்தூரில் சிவ பூஜை செய்து ஞான வேல் உட்படப் பன்னிரண்டு ஆயுதங்களைப் பெற்றான். கீழ் வேளூரில் சிவ பூஜை செய்து எடுக்க எடுக்கக் குறையாத அட்சய ஆயுதங்களைப் பெற்றான். பார்வதிக்கு எந்த ஆயுதமும் கிடையாது. பார்வதிக்கும் முருகனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அதோமுக மூர்த்தியின் நெறிக் கண்ணிலிருந்து பிறந்து வந்த முருகனுக்குத் தாயும் சிவனே தந்தையும் சிவனே. *முருகன் உக்கிர குமாரப் பாண்டியனாகப் பிறந்த போதும் வேலோடு வளை செண்டு ஆகியவற்றை அருளியவர்* தாயாகிப் பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டிய *அன்னையும் அப்பனுமாக உள்ள சுயம்பு லிங்கச் சொக்க நாதரே*. சிக்கல் தலத்தோடு முருகன் வேலுக்கு சம்பந்தம் இல்லை. அம்மன் முருகனுக்கு வேல் கொடுத்தாள் சம்பந்தருக்குப் பால் கொடுத்தாள் ஓசை கொடுத்தாள் என்பவையெல்லாம் *எப்போதும் எல்லோருக்கும் பொய் கொடுக்கும் அஞ்ஞானிகளின் வடிகட்டிய நாடகக் கட்டுக் கதையே*.
🙏 *துர்கை* மகிஷாசுரனை வெல்லும் வரம் வேண்டித் திருக் கோவலூரில் தன்னைப் படைத்த பரமேஸ்வரனைப் பூஜை செய்தாள்.
🔱 *அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி* (சம்பந்தர்)
🔱 *சூலத்தால் கோத்துத் *துதித்து அங்கு அவன் இருக்கும் வண்ணம் அருள் கொடுத்து அங்கு ஏழேழ் பவம் அறுத்த* பாவனைகள் போற்றி (நக்கீரர்)
என அந்தகாசுரனைத் திரி சூலத்தில் கோர்த்து *முக்தி அளித்து சிவ கணமாக்கி சிவலோகத்தில் வாழ வைத்த* வீரட்டேஸ்வரரைப் பூஜித்துத் தொழுத துர்கைக்குத் திரி சூலத்தையும் வெற்றி வரமும் சூலபாணி அருளினார்.
⚜️ *ஜமதக்கினி முனிவரது மகன் இராமன்* கேரளம் முழுவதும் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுப் பரமேஸ்வரனிடமிருந்து பரசு என்ற மழுவாயுதம் (கோடரி) பெற்றுப் பரசு ராமன் ஆனார்.
🔴 *இராவணன்* ஈசனை இசையால் துதித்துத் தேரும் வாளும் மூன்று கோடி வாழ்நாளும் அதாவது எண்பத்தோராயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழு ( 81967) ஆண்டு இரண்டரை மாதம் ஆயுளும் பெற்றான்.
⚜️ *சம்பந்தரைத்* தோடும் குழையும் அணிந்த இருபாலீசராய் அம்மை யப்பனாய் நந்தி மேல் வந்து எடுத்து மடி மீது அமர்த்தித் *தங்கக் கிண்ணத்தில் பசும்பால் சாதம்* ஊட்டி ஆட்கொண்ட பிரம்மபுரீஸ்வரர் அவர் எதுவும் வேண்டாமலேயே கேட்காமலேயே *யாரும் இயக்காமல் பாடலுக்கு ஏற்றவாறு தானே ஒலிக்கும் தெய்வீகத் தாளம்* , முத்துப் பல்லக்கு, ஊது குழல், முத்துப் பந்தல், அட்சய ஆயிரம் பொன் முடிப்பு, படிக்காசு அருளித் தொடர்ந்து அருள் மழை பொழிந்தார்.
இவ்வாறு இன்னும் பலப் பல. தெய்வங்களின் கரத்தில் உள்ள பொருட்களும் தேவர் அசுரர் முனிவர் சித்தர் அடியார் தொண்டர் மற்றும் *பிறர் வாழும் வாழ்வும் சிவ பூஜையால் சிவனருளால் உண்டானவையே*. எல்லையில்லாத சக்தி உடைய ஈசன் கருணையால் பெற்றவையே.

லிங்கபைரவிஸ்துதி 🌺🌻🌼இது தான் தேவியின் 33 மங்களகரமான பெயர்கள். இதை பக்தியோடு உச்சரித்தால், அவள் அருட்பார்வை உங்கள்மீது படரும்

அம்மன் அருளைப் பெற - #நவராத்திரி சாதனா! 🌺🌻🌼
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 04 வரை கொண்டாடப்படும் இந்த நவராத்திரியில் தேவியின் அருளைப் பெற நாம் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு 'சாதனா'வை சத்குரு இங்கே நமக்கு வழங்குகிறார்.
 
#சாதனாபாதை 🌺🌻🌼

யோகக் கலாச்சாரத்தில் ஜூன் மாதத்தில் வரும் கதிர்திருப்பம், தக்ஷிணாயனத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. அதாவது, இப்பூமியின் வடக்குப் பாகத்தைப் பொருத்தவரை, அதன் வானில் சூரியன் தெற்கு திசையை நோக்கி பயணிக்கும் நேரம். இதே போல் குளிர்காலத்தில் வரும் கதிர்திருப்பம், அதாவது டிசம்பர் மாதத்தில், உத்தராயணம் துவங்கும். இது தான் சூரியனின் வடதிசை நோக்கிய பயணம். உத்தராயணத்தை (டிசம்பரில் துவங்கி, ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலம்) 'ஞான பதா' என்றும், தக்ஷிணாயனத்தை (அடுத்த ஆறு மாதக் காலம்), 'சாதனா பாதை' என்றும் வழங்குவர்.

தக்ஷிணாயனம் என்பது அன்னியோன்யத்திற்கான காலம். இப்பூமி தன்னை ஒரு பெண்ணாக வெளிப்படுத்திக் கொள்ளும் நேரம். பெண்தன்மை சார்ந்த பண்டிகைகள் இந்த ஆறு மாதத்தில் தான் கொண்டாடப்படும். நம் முழு கலாச்சாரமும் இதை பின்பற்றியது. இந்த ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு பண்டிகை இருக்கும்.

#தேவிபாதை 🌺🌻🌼

பெண்தன்மை நிறைந்த வருடத்தின் இப்பாதியில், செப்டம்பர் 23, குளிர்கால விஷ்வத்தைக் (பகலும் இரவும் சமபாதியாக இருக்கும் நாள்) குறிக்கிறது. இதையடுத்து வரும் முதல் அமாவாசை தான் மாஹாளய அமாவாசை, நம் வாழ்க்கைக்கு பெருமளவில் பங்களித்துள்ள நம் முன்னோர்களுக்கு, நம் நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாள். இந்த மஹாளய அமாவாசையின் இன்னொரு முக்கியத்துவம், அன்றிலிருந்து தேவிக்கு விசேஷமான காலமும் பிறக்கிறது. அன்றிலிருந்து, டிசம்பரில் துவங்கும் உத்தராயணம் வரையிலான மூன்று மாதங்களை 'தேவி பாதை' என்றழைப்பர். இந்த மூன்று மாதங்களில், பூமியின் வடக்குப் பாகம், மிக மென்மையாய் இருக்கும். இதற்குக் காரணம், இந்த மூன்று மாதத்தில் தான், பூமியின் வடக்குப் பாகத்தில் மிகமிகக் குறைவான சூரிய ஒளி விழுகிறது. இதனால் அனைத்துமே சிறிது வீரியம் குறைந்து செயல்படும். தீவிரமான செயல் எதுவுமே இம்மாதங்களில் நிகழாது.

#நவராத்திரிசாதனா 🌺🌻🌼

இந்நேரத்தில் தேவியோடு, அவளின் அருட்கொடையில் வியாபித்திருக்க வேண்டுபவர்களுக்கு, மிக சாதாரணமான, ஆனால் அதேநேரத்தில், மிக சக்திவாய்ந்த நவராத்திரி சாதனாவை சத்குரு இங்கே வழங்குகிறார். இதை வீட்டில் இருந்தவாறே நீங்கள் பின்பற்றி, தேவியின் அருளை வீட்டிலேயே பெறலாம். இதை செப்டம்பர் 26 அன்று ஆரம்பித்து, அக்டோபர் 04 வரை தினமும் பின்பற்ற வேண்டும்.

#சாதனாகுறிப்புகள்: 🌺🌻🌼

தேவிக்கு விளக்கு ஏற்றுங்கள்.'ஜெய் பைரவி' ஸ்துதியை குறைந்தபட்சமாக மூன்று முறை தேவியின் முன்னிலையில் உச்சரியுங்கள். இது தேவியின் படத்திற்கு முன்போ, லிங்கபைரவி குடியின் முன்போ, அல்லது லிங்கபரைவி யந்திரம் / அவிஞ்ன யந்திரத்தின் முன்போ அமர்ந்து உச்சரிக்கலாம். (ஸ்துதியில் உள்ள தேவியின் 33 பெயர்களையும் உச்சரிக்கவேண்டும். இப்படி மூன்று முறை செய்யவேண்டும்.)தேவிக்கு ஏதேனும் அர்ப்பணம் செய்யுங்கள். எதை வேண்டுமானாலும் தேவிக்கு நீங்கள் அர்ப்பணிக்கலாம்.

இதை ஒரு நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், பகலோ, இரவோ நீங்கள் செய்யலாம். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு எவ்வித உணவுக் கட்டுப்பாடும் கிடையாது. என்றாலும் இந்த நாட்களில் கடைபிடிக்கப்படுவது போல் சாத்வீக உணவை உண்பது அதிக பலனளிக்கும். உங்கள் வழக்கப்படி நீங்கள் செய்யும் பூஜைகளோடு சேர்த்து இதையும் நீங்கள் செய்யலாம்.

#லிங்கபைரவிஸ்துதி 🌺🌻🌼

இது தான் தேவியின் 33 மங்களகரமான பெயர்கள். இதை பக்தியோடு உச்சரித்தால், அவள் அருட்பார்வை உங்கள்மீது படரும்.

ஜெய் பைரவி தேவி குருப்யோ நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஸ்வயம்போ நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஸ்வதாரிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹாகல்யாணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹாபத்ராணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி நாகேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி விஷ்வேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி சோமேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி து:க்கஸம்ஹாரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஹிரண்யகர்பிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி அம்ருதவர்ஷிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி பக்தரக்ஷிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஸௌபாக்யதாயினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஸர்வஜனனி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி கர்பதாயினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஷூன்யவாஸினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹாநந்தினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி வாமேஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி கர்மபாலினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி யோனீஷ்வரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி லிங்கரூபிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி ஷ்யாமஸசுந்தரி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி த்ரிநேத்ரினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி சரவமங்களி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி மஹாயோகினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி க்லேஷநாசினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி உக்ரரூபிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி திவ்யகாமினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி காலரூபிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி திரிஷுலதாரிணி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி யக்ஷகாமினி நமஸ்ரீ
ஜெய் பைரவி தேவி முக்திதாயினி நமஸ்ரீ

அஉம் மஹாதேவி லிங்கபைரவி நமஸ்ரீ
அஉம் ஸ்ரீ ஷாம்பவி லிங்கபைரவி நமஸ்ரீ
அஉம் மஹாஷக்தி லிங்கபைரவி நமஸ்ரீ
நமஸ்ரீ / நமஸ்ரீ / தேவி நமஸ்ரீ /🙇‍♂️

#லிங்கபைரவியில் நவராத்திரி கொண்டாட்டங்கள் : 🌺🌻🌼

நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அத்தனை நற்பலன்களையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் தேவியின் அருள் கிடைக்கும். நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.

செப்டம்பர் 26 - 28 : துர்காவின் நாட்கள் - குங்கும அபிஷேகம் 🌺

செப்டம்பர் 29 - அக்டோபர் 01 : லக்ஷ்மியின் நாட்கள் - மஞ்சள் அபிஷேகம் 🌻

அக்டோபர்  02 - 04 : சரஸ்வதியின் நாட்கள் - சந்தன அபிஷேகம் 🌼

நவராத்திரி, இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும் ஒரு பயணம். இந்த ஒன்பது நாட்களும் தமஸ், ரஜஸ் மற்றும் சத்வ என்னும் மூன்று அடிப்படைப் குணங்களுக்கு தக்கவாறு பிரிக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று நாட்கள் துர்கா, காளி போன்ற தீவிரத்தன்மையிலிருக்கும் தேவிகளுக்கு உரிய 'தமஸ்' என்று வகைப்படுத்தப்படுகின்றன. அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியோடு தொடர்புடையவை. மென்மையான ஆனால் உலகியல் சார்ந்த பெண்தெய்வங்களுக்கு (ரஜஸ்) உரியவை. கடைசி மூன்று நாட்கள் அறிவு, ஞானம் போன்ற மற்ற விஷயங்களோடு தொடர்புடைய சரஸ்வதி, அதாவது சத்வ குணத்தோடு தொடர்புடையவை. கடைசி நாள், அதாவது பத்தாம் நாள் விஜயதசமி. அதாவது நீங்கள் இந்த மூன்று குணங்களையும் வெற்றி கொள்கிறீர்கள் என்று பொருள்.

இந்த மூன்று குணங்களில் எந்த ஒன்றின் மீது நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களோ அது உங்கள் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட வழியில் அழைத்துச் செல்லும். நீங்கள் தமஸில் கவனம் செலுத்தினால் ஒருவகையில் சக்தி வாய்ந்தவராவீர்கள். ரஜஸில் கவனம் செலுத்தினால் மற்றொரு வழியில் பலம் பெற்றவராவீர்கள். சத்வத்தில் கவனம் செலுத்தினால் முற்றிலும் மாறுபட்ட ஒரு வழியில் வலிமை பெற்றவராவீர்கள். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து நீங்கள் சென்றால் அது முழுமையான விடுதலை. இந்த மூன்றையும் நீங்கள் வென்றுவிட்டால், அன்றைய தினம்தான் விஜயதசமி-வெற்றியின் திருநாள்.

ஜெய் பைரவி தேவி லிங்கபைரவி நமஸ்ரீ🌺🌻🌼🙇‍♂️

_நம் வீடுகளுக்கு லக்ஷ்மியை அழைத்து வருவதற்கான சில எளிய வழிமுறைகள்_

_நம் வீடுகளுக்கு லக்ஷ்மியை அழைத்து வருவதற்கான சில எளிய வழிமுறைகள்_


#ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
 
#வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா


1. எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

2. வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.

3. இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

4. சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

5. ஊனமுற்றவர்களுக்கோ,ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.

6.எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

7. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மிகடாட்சியம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.

8.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.

9.செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள்,சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

10.காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்****

ஆடி மாதம் அம்மன் சிறப்புகள் அம்மன் மாதம்

ஆடி ஸ்பெஷல் ! ஆடி மாத  சிறப்புகள்!
தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கு கின்ற மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவிற்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை.
பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.
‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.
அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்யம் கைகூடும், நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி கூர்மையுடன் கூடிய குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி அன்று அம்பாள் குளிர்ந்த மனத்துடன் வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.
அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது!   ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய் ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. ஆடியின் சிறப்பு அளவில்லாதது; அனைத்து நலன்களையும் வழங்குவது.
இதில் ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.அவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடுவது.ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை அதுக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.  நெல்,கரும்பு முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதைஎன்ற பழமொழியும் வந்தது.  ‘ஆடிப்பெருக்கு’ அன்று பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள்.
நதிகள் ஓடும் இடங்களில் இன்றும் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபாடு செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைப்பர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுவர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து மகிழ்ச்சியாக உணவை சாப்பிடுவார்கள். இப்பொழுதெல்லாம் ஆற்றில் நீர் வரத்தும் குறைந்து விட்டது, நகரங்களில் மக்கள் அதிகமாகக் குடியேறி இருப்பதால் பழக்கமும் குறைந்து வருகிறது.
திருநெல்வேலி அருகில் உள்ள சங்கரன்கோவிலில் ஆடி தபசு பிரசித்தி பெற்றது. சங்கன், பதுமன் என்ற இரு நாக அரசர்கள் சிவபெருமானையும், திருமாலையும் முழுமுதற்கடவுளாக வழிபட்டு வந்தனர். ஒருநாள் இருவருக்கும் சிவபெருமான் பெரியவரா அல்லது திருமால் பெரியவரா என சண்டை மூண்டது. அனைத்தையும் அறிந்த ஆதிசக்தியிடம் விடைபெறுவதற்காக கைலாசம் சென்று முறையிட்டனர். சிவபெருமானே திருமால் என்பதை சங்கனுக்கும் பதுமனுக்கும் உணர்த்த விரும்பிய ஆதிசக்தி கோமதியம்மனாக வடிவமெடுத்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தார். கோமதி அம்மனின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார்.
ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து செந்தில் ஆண்டவனை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும். அம்பிகையின் அம்சமே வேல் என்றும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு. அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.
குரு பூர்ணிமா  ஆடி மாதப் பௌர்ணமி அன்று மாணவர்கள் தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய ஆசிரியர போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாச பூஜை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.
மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணன், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுஜர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர். ஆடிப் பௌர்ணமி அன்றுதான் ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது. இவர் கல்விக்குரிய கடவுள். இவர் வழிபாடு தொன்மையானது. புத்தர்கள் புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.
ஆடிப்பூரம் ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரம். கன்னிப் பெண்களும் திருமண பாக்யம் கைகூடாமல் இருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் ஆண்டாள் அருளிச் செய்த ‘வாரணமாயிரம்’ என்று  தொடங்கும் பாசுரத்தை பாடி வர திருமண உறவு கூடிவரும். பார்வதி தேவி ருதுவான நாளும் ஆடிப் பூரமே. அதனால் சிவன் கோவில்களிலும் ஆடிப் பூரம் அன்று அம்பாளுக்கு சிறப்பான வழிபாடுகள் உண்டு.
வரலட்சுமி நோன்பும் ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று வரும். இதுவும் பெண்கள் மிகவும் போற்றி வழிபடும் ஒரு பண்டிகை. வீட்டில் சௌகர்யங்கள் பெருகவும், இல்லத்தரசிக்கு மாங்கல்ய பலம் கூடவும் பெண்கள் மேற்கொள்ளும் நோன்பு இது. வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று பூஜை செய்து உபசரித்தாள் அவள் அருள் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் கோவில்களில் திருவிளக்குப் பூஜையும் நடைபெறும். நாகதேவதைக்குப் பால் தெளித்து விசேஷ பூஜையும் செய்வார்கள்.
இத்தனை சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது, செய்யக் கூடாது என்ற கருத்து நிலவுவதற்கும் காரணம் உண்டு. இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம். இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது.
ஆடியின் மகத்துவத்தை அறிந்து கொண்டோம் அல்லவா? இந்த நாட்களில் நம் மனதை தெய்வ சிந்தனைகளில் செலுத்தி, மன சுத்தியுடன் பூஜை முறைகளை க்ரமங்களுடன் செய்து, தெய்வ கடாக்ஷத்தினைப் பெறுவோம் !
ஓம் சக்தி ! பராசக்தி !

இக்கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் நிழல் சாயாமல் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது

ஈரோடு அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்: மகிமாலீஸ்வரர்.

அம்மன்/தாயார்: மங்களாம்பிகை

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:மகிமாலீஸ்வரம்

திருவிழா:

ஆண்டு தோறும் சித்திரை சதய நட்சத்திரத்தில் இத்தலத்தில் சித்திரை தேர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்போது அப்பரடிகளுக்கு சிறப்பான முறையில் விழாக்களும், சுவாமி மகிமாலீஸ்வரருக்கும், அம்பாள் மங்களாம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது.

தல சிறப்பு:

இக்கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் நிழல் சாயாமல் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது.

63 நாயன்மார்கள் சிலைகளும், 16 வகை லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது கோயிலின் மற்றொரு சிறப்பாகும்.

தலபெருமை:

ஈரோடு நகரம் பழங்காலம் தொட்டே சைவ மதத்தை போற்றி வந்துள்ளது. இரண்டு ஓடைகளுக்கு நடுவில் இருப்பதால் “ஈரோடை’ என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் மருவி ஈரோடு என அழைக்கப்பட்டது என ஒரு பெயர் காரணம் சொல்லப்பட்டாலும், ஈரோடு நகர மக்கள் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.

எந்நாட்டவருக்கும் அதிபதியான தென்னாடு கொண்ட சிவன் தன் தலையில் மனைவியான கங்கையுடன் வீற்றிருப்பதால் அவரது தலை ஈரமாக இருப்பதை உணர்த்தும் பொருட்டு ஈரஓடு என பெயர் பெற்றது என சொல்லப்படுவதும் உண்டு.

படைப்பு கடவுளான பிரம்மா இங்கு தன்னை மறந்து சிவனை பூஜித்ததால் மறந்தை எனவும், மயிலை எனவும், ஆர்த்த கபாலபுரி எனவும் பல பெயர்களை ஈரோடு நகர் தாங்கியிருந்தது இலக்கியங்கள் வழியாக தெரிய வருகிறது.

கொங்கு நாட்டு சிவன் கோயில்களில் மிகவும் பழமையான சிறப்பை பெற்றது ஈரோட்டில் உள்ள மகிமாலீஸ்வர் கோயில். மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருத்தலத்தில் அடியவருக்கு அடியவராக போற்றப்படும் சிவ பெருமான் மகிமாலீஸ்வரராக, மங்களாம்பிகை அம்மனுடன் மகாலிங்கமாக அருள்பாலித்து வருகிறார்.

தல வரலாறு:

இக்கோயிலின் தல வரலாறு குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இலங்கை மன்னன் ராவணனின் வம்சா வழியினர் சிறந்த சிவ பக்தர்களாக இருந்தனர். அவர்களில் மாலி, சுமாலி, மகிமாலி ஆகியோர் சிவன் குடிகொண்டிருக்கும் இமயமலைக்கு யாத்திரை சென்று விட்டு தங்களுடைய நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சிவ பக்தர்கள் மாலைப் பொழுதில் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பது வழிபாட்டு முறைகளுள் ஒன்று. அவர்கள் மூவரும் இன்றைய ஈரோடு பகுதிக்கு வந்த போது இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.

வழிபாட்டு முறைகளில் தவறாத ராவணனின் மூதாதையர்கள் காவிரி தென் கரையோரத்தில் அடர்ந்த வில்வ மரங்கள் கொண்ட பகுதியில் ஆறு அடி உயரமுள்ள மகாலிங்க மூர்த்தியை பிரதிஷ்டை செய்து சந்தியாவந்தன பூஜையை முடித்து சென்றனர். அவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பிற்காலத்தில் கோயில் கட்டி சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. மாலி என்ற சிறப்பு பெயரை உடைய மகிமாலியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட காரணத்தால் இத்தலம் மகிமாலீஸ்வரம் என பெயர் பெற்றுள்ளது.

இக்கோயில் தோன்றிய விதம் குறித்த வேறு ஒரு கருத்தும் உண்டு. தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்களின் கட்டுப்பாட்டில் பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதிகளை இருக்குவேளிர் வம்சத்தை சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.10ம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட கொங்கு நாட்டு பகுதிகளை ஆட்சி செய்த மகிமாலி இருக்குவேள் என்ற மன்னன் இக்கோயிலை கட்டி வழிபட்டு வந்ததால் அவனுடைய பெயரிலேயே மகிமாலீஸ்வரம் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. சுந்தரர் தனது தேவியர்களான பறவையார், சங்கிலியார் ஆகியோருடன் இத்தலத்தின் நாயகனான மகிமாலீஸ்வரரை நினைத்து தவம் செய்தார். அப்போது சிவத் தொண்டில் ஈடுபட்டு வந்த சேரமான் பெருமான் நாயனார் என்ற சிற்றரசன் அவர்கள் மூவருக்கும் கவரி வீசி சேவை செய்துள்ளார். இக்காட்சி கோயிலில் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆலயம் செல்ல :
Magimaleeshwar Kovil
28, Thiruvenkatasamy St, NMS Compound, Erode Fort, Erode, Tamil Nadu 638001

Wednesday, September 28, 2022

தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்கள் இருநூற்று எழுபத்து நான்காகும். இவைகளில் இருநூற்று அறுபத்து நான்கு தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன

தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்கள் இருநூற்று எழுபத்து நான்காகும். இவைகளில் இருநூற்று அறுபத்து நான்கு தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.
வரிசை  கோவில்  ஊர்  மாவட்டம்
இந்தப் பதிவுகளில் இருக்கும் கோயில்களில் பழைய புகைப்படங்கள் இருந்தால் தயவு செய்து எந்த கோயில் எந்த ஊர் என்று கீழே கமெண்டில் பதிவிடுங்கள்
1  அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்  அன்னியூர்  திருவாரூர்
2  அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்  திருப்புகலூர்  நாகப்பட்டினம்
3  அக்னீஸ்வரர் திருக்கோயில்  கஞ்சனூர்  தஞ்சாவூர்
4  அக்னீஸ்வரர் திருக்கோயில்  திருக்காட்டுப்பள்ளி  தஞ்சாவூர்
5  அக்னீஸ்வரர் திருக்கோயில்  திருக்கொள்ளிக்காடு  திருவாரூர்
6  அகத்தீஸ்வரர் திருக்கோயில்  அகஸ்தியன் பள்ளி  நாகப்பட்டினம்
7  அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்  கிளியனூர்  விழுப்புரம்
8  அசலேஸ்வரர் திருக்கோயில்  ஆருர் அரநெறி  திருவாரூர்
9  அண்ணாமலையார் திருக்கோயில்  திருவண்ணாமலை  திருவண்ணாமலை
10  அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்  அறகண்டநல்லூர்  விழுப்புரம்
11  அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில்  மணக்கால்ஐயம்பேட்டை  திருவாரூர்
12  அபிராமேஸ்வரர் திருக்கோயில்  திருவாமத்தூர்  விழுப்புரம்
13  அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்  சாக்கோட்டை  தஞ்சாவூர்
14  அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்  திருக்கடையூர்  நாகப்பட்டினம்
15  அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்  மேலக்கடம்பூர்  கடலூர்
16  அயவந்தீஸ்வரர் திருக்கோயில்  சீயாத்தமங்கை  நாகப்பட்டினம்
17  அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்  திருச்செங்கோடு  நாமக்கல்
18  அரசலீஸ்வரர் திருக்கோயில்  ஒழிந்தியாம்பட்டு  விழுப்புரம்
19  அருணஜடேசுவரர் திருக்கோயில்  திருப்பனந்தாள்  தஞ்சாவூர்
20  அவிநாசியப்பர் திருக்கோயில்  அவிநாசி  திருப்பூர்
21  ஆட்சீஸ்வரர் திருக்கோயில்  அச்சிறுபாக்கம்  காஞ்சிபுரம்
22  ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில்  திருவாலம் பொழில்  தஞ்சாவூர்
23  ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்  திருப்பாற்றுறை  திருச்சி
24  ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்  திருவாடானை  ராமநாதபுரம்
25  ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்  ஆடுதுறை  தஞ்சாவூர்
26  ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்  ஆலங்குடி  தஞ்சாவூர்
27  ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்  திருப்பழனம்  தஞ்சாவூர்
28  ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்  பொன்னூர்  நாகப்பட்டினம்
29  ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்  மாந்துறை  திருச்சி
30  ஆரண்யேஸ்வரர் திருக்கோயில்  திருக்காட்டுப்பள்ளி  நாகப்பட்டினம்
31  ஆலந்துறையார் திருக்கோயில்  கீழப்பழுவூர்  அரியலூர்
32  உச்சிநாதர் திருக்கோயில்  சிவபுரி  கடலூர்
33  உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில்  திருவிளநகர்  நாகப்பட்டினம்
34  உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்  குத்தாலம்  நாகப்பட்டினம்
35  உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில்  திருச்செங்காட்டங்குடி  திருவாரூர்
36  உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில்  திருமணஞ்சேரி  நாகப்பட்டினம்
37  உமாமகேஸ்வரர் திருக்கோயில்  கோனேரிராஜபுரம்  நாகப்பட்டினம்
38  உஜ்ஜீவநாதர் திருக்கோயில்  உய்யக்கொண்டான் மலை  திருச்சி
39  ஊன்றீஸ்வரர் திருக்கோயில்  பூண்டி  திருவள்ளூர்
40  எழுத்தறிநாதர் திருக்கோயில்  இன்னம்பூர்  தஞ்சாவூர்
41  எறும்பீஸ்வரர் திருக்கோயில்  திருவெறும்பூர்  திருச்சி
42  ஏகாம்பரநாதர் திருக்கோயில்  காஞ்சிபுரம்  காஞ்சிபுரம்
43  ஏடகநாதர் திருக்கோயில்  திருவேடகம்  மதுரை
44  ஐயாறப்பன் திருக்கோயில்  திருவையாறு  தஞ்சாவூர்
45  ஐராவதீஸ்வரர் திருக்கோயில்  திருக்கொட்டாரம்  திருவாரூர்
46  ஐராவதேஸ்வரர் திருக்கோயில்  மேலத்திருமணஞ்சேரி  நாகப்பட்டினம்
47  ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில்  ஓணகாந்தன்தளி  காஞ்சிபுரம்
48  கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில்  திருக்கச்சூர்  காஞ்சிபுரம்
49  கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில்  காஞ்சிபுரம்  காஞ்சிபுரம்
50  கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்  குளித்தலை  கரூர்
51  கடைமுடிநாதர் திருக்கோயில்  கீழையூர்  நாகப்பட்டினம்
52  கண்ணாயிரநாதர் திருக்கோயில்  திருக்காரவாசல்  திருவாரூர்
53  கண்ணாயிரமுடையார் திருக்கோயில்  குறுமாணக்குடி  நாகப்பட்டினம்
54  கபாலீஸ்வரர் திருக்கோயில்  மயிலாப்பூர்  சென்னை
55  கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில்  கரைவீரம்  திருவாரூர்
56  கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்  கரூர்  கரூர்
57  கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்  திருவேள்விக்குடி  நாகப்பட்டினம்
58  கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்  வெஞ்சமாங்கூடலூர்  கரூர்
59  கற்கடேஸ்வரர் திருக்கோயில்  திருந்துதேவன்குடி  தஞ்சாவூர்
60  கற்பகநாதர் திருக்கோயில்  கற்பகநாதர்குளம்  திருவாரூர்
61  காசி விஸ்வநாதர் திருக்கோயில்  காசி  வாரணாசி
62  காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்  நாகப்பட்டினம்  நாகப்பட்டினம்
63  காளத்தியப்பர் திருக்கோயில்  காளஹஸ்தி  சித்தூர்
64  கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்  திருவெண்ணெய்நல்லூர்  விழுப்புரம்
65  குந்தளேஸ்வரர் திருக்கோயில்  திருக்குரக்கா  நாகப்பட்டினம்
66  கும்பேஸ்வரர் திருக்கோயில்  கும்பகோணம்  தஞ்சாவூர்
67  குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்  தலைஞாயிறு  நாகப்பட்டினம்
68  குற்றாலநாதர் திருக்கோயில்  குற்றாலம்  திருநெல்வேலி
69  கேடிலியப்பர் திருக்கோயில்  கீழ்வேளூர்  திருவாரூர்
70  கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில்  கச்சனம்  திருவாரூர்
71  கொடுங்குன்றநாதர் திருக்கோயில்  பிரான்மலை  சிவகங்கை
72  கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்  கோட்டூர்  திருவாரூர்
73  கோகிலேஸ்வரர் திருக்கோயில்  திருக்கோழம்பியம்  தஞ்சாவூர்
74  கோடிக்குழகர் திருக்கோயில்  கோடியக்காடு  நாகப்பட்டினம்
75  கோடீஸ்வரர் திருக்கோயில்  திருக்கோடிக்காவல்  தஞ்சாவூர்
76  கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில்  கொட்டையூர்  தஞ்சாவூர்
77  கோணேஸ்வரர் திருக்கோயில்  குடவாசல்  திருவாரூர்
78  கோமுக்தீஸ்வரர் திருக்கோயில்  திருவாவடுதுறை  நாகப்பட்டினம்
79  சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில்  சக்கரப்பள்ளி  தஞ்சாவூர்
80  சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்  திருமீயச்சூர் இளங்கோயில்  திருவாரூர்
81  சங்கமேஸ்வரர் திருக்கோயில்  பவானி  ஈரோடு
82  சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில்  தலைச்சங்காடு  நாகப்பட்டினம்
83  சட்டைநாதர் திருக்கோயில்  சீர்காழி  நாகப்பட்டினம்
84  சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்  சேங்கனூர்  தஞ்சாவூர்
85  சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்  திருப்பரங்குன்றம்  மதுரை
86  சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்  அன்பில்  திருச்சி
87  சத்யநாதர் திருக்கோயில்  காஞ்சிபுரம்  காஞ்சிபுரம்
88  சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில்  பூவனூர்  திருவாரூர்
89  சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்  திருவக்கரை  விழுப்புரம்
90  சப்தபுரீஸ்வரர் திருக்கோயில்  திருக்கோலக்கா  நாகப்பட்டினம்
91  சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்  திருநாரையூர்  கடலூர்
92  சவுந்தரேஸ்வர் திருக்கோயில்  திருப்பனையூர்  திருவாரூர்
93  சற்குணநாதர் திருக்கோயில்  இடும்பாவனம்  திருவாரூர்
94  சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்  கருக்குடி  தஞ்சாவூர்
95  சற்குணேஸ்வரர் திருக்கோயில்  கருவேலி  திருவாரூர்
96  சாட்சிநாதர் திருக்கோயில்  அவளிவணல்லூர்  திருவாரூர்
97  சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்  திருப்புறம்பியம்  தஞ்சாவூர்
98  சாயாவனேஸ்வரர் திருக்கோயில்  சாயாவனம்  நாகப்பட்டினம்
99  சாரபரமேஸ்வரர் திருக்கோயில்  திருச்சேறை  தஞ்சாவூர்
100  சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்  திருநறையூர்  தஞ்சாவூர்
101  சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்  சிதம்பரம்  கடலூர்
102  சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்  திருச்சத்தி முற்றம்  தஞ்சாவூர்
103  சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்  தீர்த்தனகிரி  கடலூர்
104  சிவகுருநாதர் திருக்கோயில்  சிவபுரம்  தஞ்சாவூர்
105  சிவலோகத்தியாகர் திருக்கோயில்  ஆச்சாள்புரம்  நாகப்பட்டினம்
106  சிவலோகநாதர் திருக்கோயில்  கிராமம்  விழுப்புரம்
107  சிவலோகநாதர் திருக்கோயில்  திருப்புன்கூர்  நாகப்பட்டினம்
108  சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில்  திருக்கண்டலம்  திருவள்ளூர்
109  சிவானந்தேஸ்வரர் திருக்கோயில்  திருப்பந்துறை  தஞ்சாவூர்
110  சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்  திருத்தளூர்  கடலூர்
111  சுந்தரேஸ்வரர் திருக்கோயில்  அன்னப்பன்பேட்டை  நாகப்பட்டினம்
112  சுந்தரேஸ்வரர் திருக்கோயில்  திருவேட்டக்குடி  புதுச்சேரி
113  சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில்  மதுரை  மதுரை
114  சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்  செம்பொனார்கோவில்  நாகப்பட்டினம்
115  சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்  இராஜேந்திர பட்டினம்  கடலூர்
116  சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்  திருவெண்காடு  நாகப்பட்டினம்
117  சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில்  செருகுடி  திருவாரூர்
118  செம்மேனிநாதர் திருக்கோயில்  திருக்கானூர்  தஞ்சாவூர்
119  சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்  திருப்பாம்புரம்  திருவாரூர்
120  சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில்  நெய்வணை  விழுப்புரம்
121  சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்  காளையார் கோவில்  சிவகங்கை
122  சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்  ஆண்டான்கோவில்  திருவாரூர்
123  சோமநாதர் திருக்கோயில்  நீடூர்  நாகப்பட்டினம்
124  சோமேசர் திருக்கோயில்  கீழபழையாறை வடதளி  தஞ்சாவூர்
125  சோமேஸ்வரர் திருக்கோயில்  கும்பகோணம்  தஞ்சாவூர்
126  சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்  திருச்சோற்றுத்துறை  தஞ்சாவூர்
127  ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்  திருமெய்ஞானம்  தஞ்சாவூர்
128  ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்  திருவடிசூலம்  காஞ்சிபுரம்
129  ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்  திருப்பைஞ்ஞீலி  திருச்சி
130  தயாநிதீஸ்வரர் திருக்கோயில்  வடகுரங்காடுதுறை  தஞ்சாவூர்
131  தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்  திருநள்ளாறு  காரைக்கால்
132  தாயுமானவர் திருக்கோயில்  திருச்சி  திருச்சி
133  தாளபுரீஸ்வரர் திருக்கோயில்  திருப்பனங்காடு  திருவண்ணாமலை
134  தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்  ஆக்கூர்  நாகப்பட்டினம்
135  தியாகராஜர் திருக்கோயில்  திருவாரூர்  திருவாரூர்
136  திரிபுராந்தகர் திருக்கோயில்  கூவம்  திருவள்ளூர்
137  திருத்தளிநாதர் திருக்கோயில்  திருப்புத்தூர்  சிவகங்கை
138  திருநேத்திரநாதர் திருக்கோயில்  திருப்பள்ளி முக்கூடல்  திருவாரூர்
139  திருப்பயற்றுநாதர் திருக்கோயில்  திருப்பயத்தங்குடி  நாகப்பட்டினம்
140  திருமறைக்காடர் திருக்கோயில்  வேதாரண்யம்  நாகப்பட்டினம்
141  திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்  திருமாகறல்  காஞ்சிபுரம்
142  திருமுருகநாதர் திருக்கோயில்  திருமுருகன்பூண்டி  திருப்பூர்
143  திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்  காஞ்சிபுரம்  காஞ்சிபுரம்
144  திருமேனிநாதர் திருக்கோயில்  திருச்சுழி  விருதுநகர்
145  திருமேனியழகர் திருக்கோயில்  மகேந்திரப் பள்ளி  நாகப்பட்டினம்
146  திருவல்லீஸ்வரர் திருக்கோயில்  பாடி திருவலிதாயம்  சென்னை
147  திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில்  திருவலஞ்சுழி  தஞ்சாவூர்
148  திருவாப்புடையார் திருக்கோயில்  செல்லூர் மதுரை  மதுரை
149  தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில்  திருவட்டத்துறை  கடலூர்
150  தூவாய் நாதர் திருக்கோயில்  தூவாநாயனார் கோயில்  திருவாரூர்
151  தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்  எலுமியன்கோட்டூர்  காஞ்சிபுரம்
152  தேவபுரீஸ்வரர் திருக்கோயில்  தேவூர்  திருவாரூர்
153  தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்  பட்டீஸ்வரம்  தஞ்சாவூர்
154  நடுதறியப்பர் திருக்கோயில்  கோயில் கண்ணாப்பூர்  திருவாரூர்
155  நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில்  திருத்தலையாலங்காடு  திருவாரூர்
156  நவநீதேஸ்வரர் திருக்கோயில்  சிக்கல்  நாகப்பட்டினம்
157  நற்றுணையப்பர் திருக்கோயில்  புஞ்சை  நாகப்பட்டினம்
158  நாகநாதர் திருக்கோயில்  பாமணி  திருவாரூர்
159  நாகேஸ்வரர் திருக்கோயில்  கும்பகோணம்  தஞ்சாவூர்
160  நாகேஸ்வரர் திருக்கோயில்  திருநாகேஸ்வரம்  தஞ்சாவூர்
161  நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்  இலுப்பைபட்டு  நாகப்பட்டினம்
162  நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்  திருநீலக்குடி  தஞ்சாவூர்
163  நீள்நெறிநாதர் திருக்கோயில்  தண்டலச்சேரி  திருவாரூர்
164  நெடுங்களநாதர் திருக்கோயில்  திருநெடுங்குளம்  திருச்சி
165  நெய்யாடியப்பர் திருக்கோயில்  தில்லைஸ்தானம்  தஞ்சாவூர்
166  நெல்லிவனநாதர் திருக்கோயில்  திருநெல்லிக்கா  திருவாரூர்
167  நெல்லையப்பர் திருக்கோயில்  திருநெல்வேலி  திருநெல்வேலி
168  பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்  திருநாவலூர்  விழுப்புரம்
169  பசுபதீஸ்வரர் திருக்கோயில்  ஆவூர் (கோவந்தகுடி)  தஞ்சாவூர்
170  பசுபதீஸ்வரர் திருக்கோயில்  திருக்கொண்டீஸ்வரம்  திருவாரூர்
171  பசுபதீஸ்வரர் திருக்கோயில்  பசுபதிகோயில்  தஞ்சாவூர்
172  பசுபதீஸ்வரர் திருக்கோயில்  பந்தநல்லூர்  தஞ்சாவூர்
173  பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்  உறையூர்  திருச்சி
174  பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்  நல்லூர்  தஞ்சாவூர்
175  பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில்  திருவண்டார்கோயில்  புதுச்சேரி
176  படம்பக்கநாதர் திருக்கோயில்  திருவொற்றியூர்  திருவள்ளூர்
177  படிக்காசுநாதர் திருக்கோயில்  அழகாபுத்தூர்  தஞ்சாவூர்
178  பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்  விளமல்  திருவாரூர்
179  பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்  கானாட்டம்புலியூர்  கடலூர்
180  பராய்த்துறைநாதர் திருக்கோயில்  திருப்பராய்த்துறை  திருச்சி
181  பல்லவனேஸ்வரர் திருக்கோயில்  பூம்புகார்  நாகப்பட்டினம்
182  பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில்  பனையபுரம்  விழுப்புரம்
183  பாசுபதேஸ்வரர் திருக்கோயில்  திருவேட்களம்  கடலூர்
184  பாடலீஸ்வரர் திருக்கோயில்  திருப்பாதிரிபுலியூர்  கடலூர்
185  பாதாளேஸ்வரர் திருக்கோயில்  அரித்துவாரமங்கலம்  திருவாரூர்
186  பார்வதீஸ்வரர் திருக்கோயில்  திருத்தெளிச்சேரி  புதுச்சேரி
187  பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்  திருக்களர்  திருவாரூர்
188  பால்வண்ணநாதர் திருக்கோயில்  திருக்கழிப்பாலை  கடலூர்
189  பாலுகந்தநாதர் திருக்கோயில்  திருவாய்பாடி  தஞ்சாவூர்
190  பாலைவனேஸ்வரர் திருக்கோயில்  பாபநாசம்  தஞ்சாவூர்
191  பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில்  பரிதியப்பர்கோவில்  தஞ்சாவூர்
192  பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்  ஓமாம்புலியூர்  கடலூர்
193  பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில்  கண்டியூர்  தஞ்சாவூர்
194  பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்  அம்பர், அம்பல்  திருவாரூர்
195  பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்  திருக்குவளை  நாகப்பட்டினம்
196  பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்  திருமயானம்  நாகப்பட்டினம்
197  பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்  பெண்ணாடம்  கடலூர்
198  பிராணநாதேஸ்வரர் திருக்கோயில்  திருமங்கலக்குடி  தஞ்சாவூர்
199  புண்ணியகோடியப்பர் திருக்கோயில்  திருவிடைவாசல்  திருவாரூர்
200  புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்  திருப்புவனம்  சிவகங்கை
201  புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்  மேலைத்திருப்பூந்துருத்தி  தஞ்சாவூர்
202  பொன்வைத்தநாதர் திருக்கோயில்  சித்தாய்மூர்  திருவாரூர்
203  மகாகாளநாதர் திருக்கோயில்  திருமாகாளம்  திருவாரூர்
204  மகாகாளேஸ்வரர் திருக்கோயில்  இரும்பை  விழுப்புரம்
205  மகாதேவர் திருக்கோயில்  திருவஞ்சிக்குளம்  திருச்சூர்
206  மகாபலேஸ்வரர் திருக்கோயில்  திருக்கோகர்ணம்  உத்தர் கன்னடா
207  மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்  திருநின்றியூர்  நாகப்பட்டினம்
208  மகாலிங்கம் திருக்கோயில்  திருவிடைமருதூர்  தஞ்சாவூர்
209  மகுடேஸ்வரர் திருக்கோயில்  கொடுமுடி  ஈரோடு
210  மங்களபுரீஸ்வரர் திருக்கோயில்  திருச்சோபுரம்  கடலூர்
211  மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்  திருமால்பூர்  வேலூர்
212  மதுவனேஸ்வரர் திருக்கோயில்  நன்னிலம்  திருவாரூர்
213  மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்  கோவிலூர்  திருவாரூர்
214  மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்  ஈங்கோய்மலை  திருச்சி
215  மருந்தீசர் திருக்கோயில்  டி. இடையாறு  விழுப்புரம்
216  மருந்தீஸ்வரர் திருக்கோயில்  திருவான்மியூர்  சென்னை
217  மனத்துணைநாதர் திருக்கோயில்  வலிவலம்  நாகப்பட்டினம்
218  மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்  வடதிருமுல்லைவாயில்  சென்னை
219  மாணிக்கவண்ணர் திருக்கோயில்  திருவாளப்புத்தூர்  நாகப்பட்டினம்
220  மாயூரநாதர் திருக்கோயில்  மயிலாடுதுறை  நாகப்பட்டினம்
221  மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்  திருவாசி  திருச்சி
222  முக்தீஸ்வரர் திருக்கோயில்  சிதலப்பதி  திருவாரூர்
223  முல்லைவனநாதர் திருக்கோயில்  திருக்கருகாவூர்  தஞ்சாவூர்
224  முல்லைவன நாதர் திருக்கோயில்  திருமுல்லைவாசல்  நாகப்பட்டினம்
225  மேகநாதர் திருக்கோயில்  திருமீயச்சூர்  திருவாரூர்
226  யாழ்மூரிநாதர் திருக்கோயில்  தருமபுரம்  புதுச்சேரி
227  யோகநந்தீஸ்வரர் திருக்கோயில்  திருவிசநல்லூர்  தஞ்சாவூர்
228  ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்  அய்யர் மலை  கரூர்
229  ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்  திருமருகல்  நாகப்பட்டினம்
230  ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில்  திருநாட்டியத்தான்குடி  திருவாரூர்
231  ராமநாதர் திருக்கோயில்  திருக்கண்ணபுரம்  திருவாரூர்
232  ராமநாதர் திருக்கோயில்  ராமேஸ்வரம்  ராமநாதபுரம்
233  வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்  தென்குடித்திட்டை  தஞ்சாவூர்
234  வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்  திருவாலங்காடு  திருவள்ளூர்
235  வண்டுறைநாதர் திருக்கோயில்  திருவண்டுதுறை  திருவாரூர்
236  வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில்  திருப்புகலூர்  திருவாரூர்
237  வல்லபேஸ்வரர் திருக்கோயில்  திருக்கூடலையாற்றூர்  கடலூர்
238  வலம்புரநாதர் திருக்கோயில்  மேலப்பெரும்பள்ளம்  நாகப்பட்டினம்
239  வாசீஸ்வரர் திருக்கோயில்  திருப்பாசூர்  திருவள்ளூர்
240  வாஞ்சிநாதர் திருக்கோயில்  ஸ்ரீ வாஞ்சியம்  திருவாரூர்
241  வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்  திருமாணிக்குழி  கடலூர்
242  வாய்மூர்நாதர் திருக்கோயில்  திருவாய்மூர்  நாகப்பட்டினம்
243  வாலீஸ்வரர் திருக்கோயில்  குரங்கணில்முட்டம்  திருவண்ணாமலை
244  வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்  திருப்பெரும்புலியூர்  தஞ்சாவூர்
245  விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்  விருத்தாச்சலம்  கடலூர்
246  விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்  திருப்புனவாசல்  புதுக்கோட்டை
247  வில்வநாதேஸ்வரர் திருக்கோயில்  திருவல்லம்  வேலூர்
248  வில்வவனேசுவரர் திருக்கோயில்  திருவைகாவூர்  தஞ்சாவூர்
249  வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில்  திருக்கொள்ளம்புதூர்  திருவாரூர்
250  விஜயநாதேஸ்வரர் திருக்கோயில்  திருவிஜயமங்கை  தஞ்சாவூர்
251  வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்  திருவதிகை  கடலூர்
252  வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்  திருவிற்குடி  திருவாரூர்
253  வீரட்டேஸ்வரர் திருக்கோயில்  கீழப்பரசலூர்  நாகப்பட்டினம்
254  வீரட்டேஸ்வரர் திருக்கோயில்  கொருக்கை  நாகப்பட்டினம்
255  வீரட்டேஸ்வரர் திருக்கோயில்  திருக்கோவிலூர்  விழுப்புரம்
256  வீழிநாதேஸ்வரர் திருக்கோயில்  திருவீழிமிழலை  திருவாரூர்
257  வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில்  கோயில்வெண்ணி  திருவாரூர்
258  வெள்ளடைநாதர் திருக்கோயில்  திருக்குருகாவூர்  நாகப்பட்டினம்
259  வெள்ளிமலைநாதர் திருக்கோயில்  திருத்தங்கூர்  திருவாரூர்
260  வேதகிரீஸ்வரர் திருக்கோயில்  திருக்கழுகுன்றம்  காஞ்சிபுரம்
261  வேதபுரீஸ்வரர் திருக்கோயில்  செய்யாறு  திருவண்ணாமலை
262  வேதபுரீஸ்வரர் திருக்கோயில்  திருவேதிகுடி  தஞ்சாவூர்
263  வேதபுரீஸ்வரர் திருக்கோயில்  திருவேற்காடு  காஞ்சிபுரம்
264  வேதபுரீஸ்வரர் திருக்கோயில்  தேரழுந்தூர்  நாகப்பட்டினம்
265  வைகல்நாதர் திருக்கோயில்  திருவைகல்  நாகப்பட்டினம்
266  வைத்தியநாதர் திருக்கோயில்  திருமழபாடி  அரியலூர்
267  வைத்தியநாதர் திருக்கோயில்  வைத்தீஸ்வரன் கோயில்  நாகப்பட்டினம்
268  ஜகதீஸ்வரர் திருக்கோயில்  ஓகைப்பேரையூர்  திருவாரூர்
269  ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்  திருவானைக்கா  திருச்சி
270  ஜலநாதீஸ்வரர் திருக்கோயில்  தக்கோலம்  வேலூர்
271  மல்லிகார்ஜுனர் திருக்கோயில்  ஸ்ரீசைலம்  கர்நூல்இந்தியா
பிறமுக்தி தரவல்ல சிவத்தலங்கள்

முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள்

    திருவாரூர்-பிறக்க முக்தி தரவது
    சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது
    திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
    காசி-இறக்க முக்தி தருவது
🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️
இவன்
பழமையான சிவாலயங்களை மீட்டெடுக்கும் சேலம் சுகப்பிரம்ம ரிஷி உழவாரப்பணி குழு அடியேன் செந்தில் குமார்

தானாய்_முலைத்த_லிங்கமும்_வில்வமும்

#தானாய்_முலைத்த_லிங்கமும்_வில்வமும்

சதாசிவ பிரமேந்திரர் என்ற ஞானி கோயில் நகராம் மதுரையில் 18ம் நூற்றாண்டில் அவதரித்தவர். 

அக்காலத்தில், குழந்தை திருமணம் செய்து வைப்பது வழக்கம்.
பிரம்மேந்திரருக்கும் அவ்வாறே செய்து வைக்கப்பட்டது. திருமணமான குழந்தைகள் பருவமடையும் வரை பெற்றோர் வீட்டிலேயே இருப்பது வழக்கம். 

பிரம்மேந்திரரின் மனைவியும் அவ்வாறே இருந்தாள். பிரம்மேந்திரர் குருகுலம் சென்று விட்டு திரும்பியதும், அம்மா வாசலில் நின்று எதிர்பார்த்துக் காத்திருப்பார். வந்ததும் அவருக்கு உணவு தருவாள். 

ஒருநாள், அம்மாவை வாசலில் காணவில்லை. வீட்டிற்கு, மனைவியின் தந்தையும், உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். 

எல்லார் முகத்திலும் ஆனந்தம். உணவு தயாராகிக் கொண்டிருந்தது. பிரம்மேந்திரர் 13 வயது பாலகன் தானே!

பசியோடு வந்தார். அம்மாவைக் காணததால் ஏமாற்றம். வீட்டுக் குள் சென்று, உறவினர்கள் வருகைக்கான காரணத்தை அறிந்து கொண்டார். அம்மாவிடம் சாப்பாடு கேட்டார்.

""கொஞ்சம் பொறுத்துக் கொள். மாமாவும் உ<றவினர்களும் வந்துள்ளார்கள் இல்லையா? சாப்பாடு தயாராகிறது. அவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம். அதுவரை பசியைப் பொறுத்துக் கொள்ளடா குழந்தை!'' என்று அமைதிப்படுத்தினாள். இது எல்லா தாய்மார்களும் சொல்வது தானே! ஆனால், சிறுவனான பிரம்மேந்திரர் மனதில் இது பெரிய அலைகளைக் கிளப்பியது. 

""ஆஹா...குடும்ப வாழ்க்கை துவங்கும் முன்னரே இப்படி ஒரு நிலையா? இன்று சாப்பாடு இல்லை என்கிறாள் அம்மா. நாளை என்ன இல்லை என்று சொல்வாளோ? இப்படி எத்தனை 'இல்லை' களை நாம் சமாளிக்க வேண்டியிருக்குமோ! வேண்டாம் இந்த குடும்ப வாழ்க்கை,'' என்று யோசித்தவர் வீட்டை விட்டுப் போய்விட்டார். துறவறம் பூண்டார். ஒரு கவுபீனம் (கோவணம்) கூட உடலில் இல்லாமல் நிர்வாண நிலையில் இருந்தார். 

வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் முறையாக சாஸ்திரங்களை கற்று தேர்ந்தார். பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் சமஸ்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார்.

உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மவுனத்தை கடைபிடித்து வந்தார். மேலும், மனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசிக்க ஆரம்பித்தார். தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டார். தவத்தின் விளைவாய் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கி ஸ்திதப் பிரக்ஞன் ஆனார். 

அதுமுதல் சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. ஊன் இல்லை. உறக்கம் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை ஆசை, அபிலாஷைகளைத் துறந்த அவதூதராக நடமாடத் துவங்கினார்.

புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். 

மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.
பின் ஒருநாள், ”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். 

அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)

ஒருமுறை சதாசிவ பிரமேந்திரர் உடல்,மனம் என்ற உணர்வின்றி தான் எல்லையற்ற பிரமம் என்கிற ஏகாந்த உணர்வில் திகம்பரராய் ஒரு அரசரின் அரண்மனைக்குள் நுழைந்து விட்டார் பார்த்த  அரசன் பிரமேந்திரரைப் பற்றி அறியாததால்,  தன் அவையில் நுழைந்த பிரமேந்திரரின் மீது கடும் கோபம் கொண்டு அவரின் கையை வாளால் வெட்டி விட்டார் .ஆனாலும் பிரமேந்திரர் தான் சரீரமல்ல என்ற ஏகாந்த உணர்வில் இருந்ததால், தன் கை வெட்டுப்பட்டதை கூட உணராமல் சென்று கொண்டிருந்தார் .அரசன் தன் தவறை உணர்ந்து வருந்தி பிரமேந்திரரிடம் மன்னிப்பு கேட்டான்.

பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார்.

இவர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் (நெரூர்) 10வது நாளில் அந்த இடத்தில் வில்வமரம் வளரும், அதன் அருகிலேயே சுயம்பு லிங்கம் தோன்றும் என்று கூறினார். அதே போன்று நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு லிங்கமும் காட்சி தருகிறது.

மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

தஞ்சாவூரில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைக்க காரணமானவர். தேவதானப்பட்டியில் காமாட்சி அம்மன் கோயிலை நிறுவியவர். கரூரில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலை நிர்மாணிப்பதில் பங்கு கொண்டவர்.தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச கோயிலில் அனுமார் விக்கிரகத்தை நிர்மாணித்தவர்..
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலின் ராகு தலத்தில் கணபதி இயந்திர மந்திரத் தகட்டை எழுதிப் பதித்தவர்.

வாழ்வில் ஒரு முறையேனும் கரூர் அருகிலுள்ள நெருரில் உள்ள ஶ்ரீ சதாசிவபிரமேந்திராள் மஹா சந்நதி அமைந்துள்ள தலத்திற்க்கு சென்று தரிசித்து வாருங்கள்...

செல்லும் வழி: கரூர் சென்று, அங்கிருந்து ஆட்டோ,லோக்கல் பஸ் மூலம் இந்த சிற்றூரை அடையலாம்.

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

🤲 திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

🤲 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்...

🤲 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..

🤲 ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

🤲 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.

🤲 பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

🤲 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.

🤲 வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

🤲 செல்வம் மலை போல குவியும்.

🤲 உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்யுடன் உள்ளார்கள்.

🤲 அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

🤲 வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.

🤲 இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

🤲 கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

🤲 குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

🤲 நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

🤲 நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

🤲 சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள்,

🤲 தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.

🤲 திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

🤲 திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

🤲 அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

🤲 அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்

🤲 அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

🤲 அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .

🤲 மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

🤲 அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.?

🤲 மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

🤲 வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

🤲 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " 

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

🤲 பொதுப் பொருள்: 

🤲 திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

🤲 ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்...

👉

கும்பகோணத்தை கோயில் நகரம் என்பார்கள். கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது உள்ளது பட்டீஸ்வரம்.

சாந்தமனசுக்காரி... பட்டீஸ்வரம் துர்கை;  தீப வழிபாட்டில் ஓடோடி வருவாள்! 
 
கும்பகோணத்தை கோயில் நகரம் என்பார்கள். கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது   உள்ளது பட்டீஸ்வரம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அற்புதத் திருத்தலம்.

காமதேனுவின் மகள் பசு பட்டி. உமையவள், சாப விமோசனம் பெறுவதற்காக, இங்கே தவமிருந்தாள். சிவபூஜை செய்தாள். பார்வதிதேவிக்கு உதவுவதற்காக பட்டியும் வந்து பணிவிடைகள் செய்தாள். பால் சுரந்து தந்தாள். மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத் திருமேனிக்கு பாலபிஷேகம் செய்து, பூஜித்து வந்தாள் பார்வதி. பட்டி வழிபட்ட தலம் என்பதால், இந்த ஊருக்கு பட்டீஸ்வரம் எனப்பெயர் அமைந்தது. காமதேனு உள்ளிட்ட பசுக்கள் வழிபட்டதால், சிவபெருமானுக்கு தேனுபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது.

பிரமாண்டமான சிவாலயம் என்றாலும் இங்கே துர்கையின் ராஜ்ஜியம்தான். பொதுவாகவே, எல்லா சிவாலயங்களிலும் கோஷ்டத்தில்தான் தரிசனம் தருவாள் துர்கை. மகாவிஷ்ணு ஆலயங்களிலும் கோஷ்டத்தில்தான் இருப்பாள். அங்கே அவளுக்கு விஷ்ணு துர்கை என திருநாமம் உண்டு.

ஆனால் இங்கே, தனிச்சந்நிதியில், அற்புதமாகக் காட்சி தருகிறாள். நின்ற திருக்கோலத்தில் ஒய்யாரமாக அழகு ததும்பக் காட்சி தருகிறாள். மூன்று கண்களைக் கொண்டிருக்கிறாள் துர்கை. எட்டு திருக்கரங்களுடன், எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்தபடி காட்சி தருகிறாள். நிமிர்ந்த கோலம், நின்றகோலம்.
எட்டு திருக்கரங்களின் ஒன்றில் அபயஹஸ்தம் காட்டுகிறாள். மற்றொரு கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்திருக்கிறாள். ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருக்கிறாள். ஆனால், சாந்தமாக காட்சி தருகிறாள். அவளின் இதழோரம் ததும்பும் புன்னகையே அவளை சாந்த சொரூபினி எனச் சொல்கிறது.

மிகுந்த வரப்பிரசாதி இந்த பட்டீஸ்வரம் துர்கை. ஆதித்த கரிகாலனுக்கு இஷ்ட தெய்வமாகவும் சோழர்களின் குலதெய்வமாகவும் திகழ்ந்தாள் என்றும் ஸ்தல வரலாறு விவரிக்கிறது. தேனுபுரீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்ட போது, துர்கைக்கு இப்படியான சந்நிதி இல்லை என்றும் சொல்வார்கள். பின்னர் அடுத்தடுத்து வந்த காலகட்டங்களில், துர்கையை இங்கே ஸ்தாபித்து, தனிக்கோயிலாகவே எழுப்பி வழிபடத் தொடங்கினார்கள்.

பட்டீஸ்வரமும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் காய்ந்த பூமியாகிவிட்டதாம். மழை தப்பியதால் இந்த நிலையாம். எல்லோரும் வறுமையில் தவித்து மருகினார்கள். ஊரே கூடிப் பேசியது. பின்னர், பட்டீஸ்வரம் துர்கையின் சந்நிதிக்கு ஓடிவந்து, அவளிடம் முறையிட்டது. அன்றிரவே, நல்ல மழை பெய்தது. காடுகரையெல்லாம் நிறைந்தது. மக்கள் மகிழ்ந்துபோனார்கள். அன்று முதல், துர்கையின் சாந்நித்தியத்தை, சோழ தேசம் முழுவதும் தெரிந்து தரிசிக்க வந்தது. கேட்டதைத் தரும் அன்னை பட்டீஸ்வரம் துர்கை என்று இன்றைக்கும் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.

பட்டீஸ்வரம் துர்கைக்கு,தாமரை ரொம்பவே இஷ்டம். தாமரை மலர்கள் அல்லது அரளி மாலை கொண்டு துர்கைக்கு சார்த்துவது மிகச் சிறந்தது. வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் என்றிருந்தால், உடனே பட்டீஸ்வரம் துர்கையை மனதார நினைத்து தீபமேற்றினால் போதும். நெய் தீபம் அல்லது எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அந்த தீபத்தையே துர்கையாக நினைத்து வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். பிரிந்த கணவனும் மனைவியும் ஒன்றுசேருவார்கள். இதுவரை இருந்த அமைதியற்ற சூழல் மாறி, அமைதியும் ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும். தனம், தானியம் பெருக்கித் தருவாள் துர்கை.

மகளுக்கோ மகனுக்கோ திருமணம் நடக்க வேண்டும் என்றோ வீடு வாசல் வாங்கவேண்டும் என்றோ குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றோ...உங்கள் பிரார்த்தனை இருந்தால் வீட்டில், ராகுகாலவேளையில், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால வேளையில் தீபமேற்றுங்கள். மஞ்சள் துணியில் ஒருரூபாய் முடிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதை பூஜையறையில் வைத்து, தினமும் குங்கும அர்ச்சனை செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருமணம் இனிதே நடந்தேறும். வீடு வாசல் வாங்கும் நிலை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள்.

பின்னர், பட்டீஸ்வரம் செல்லும்போது, துர்கைக்கு அந்தக் காணிக்கையை, மஞ்சள் துணியை அப்படியே உண்டியலில் செலுத்திவிடுங்கள்.

சாந்த மனசுக்காரி துர்கையை வழிபடுங்கள்; சந்தோஷ வாழ்வைத் தந்திடுவாள் பட்டீஸ்வரம் நாயகி!
ராகு கால துர்க்கா அஷ்டகம்…

வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்குமானவள்

வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்

தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்

தாபம் நீக்கியே என்னைத்தாங்கும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உலகை யீன்றவள் துர்க்கா உமையுமானவள்

உண்மையானவள் எந்தன் உயிரைக்காப்பவள்

நிலவில் நின்றவள் துர்க்கா நித்திய மானவள்

நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

செம்மையானவள் துர்க்கா ஜெயமுமானவள்

ஆம்மையானவள் அன்புத் தந்தை யானவள்

இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்

மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே

உயிருமானவள் துர்க்கா உடலுமானவள்

உலகமானவள் எந்தன் உடமை யானவள்

பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்

பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

துன்பமற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்

துறையு மானவள் இன்பத் தோனி யானவள்

அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்

நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள்

குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே

திருவு மானவள் துர்க்கா திரிசூலி யானவள்

திலகமாய் என்றும் திகழும் துர்க்கையே!

தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே

அன்னை துர்க்கையே! என்றும் அருளும் துர்க்கையே!

அன்பு துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

கன்னி துர்க்கையே! இதயக் கமல துர்க்கையே!

கருணை துர்க்கையே! இதயக் கமல துர்க்கையே!

கருணை துர்க்கையே! வீர சுகுண துர்க்கையே!

தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

தேவி துர்க்கையே ஜெய தே

ஜெய தேவி துர்க்கையே

எண்ணியது எண்ணியபடி நடக்க படிக்க வேண்டிய துர்க்கை அம்மன் துதி..
மந்திரம் உச்சரிக்கும் முறை…

துர்க்கை அம்மன் துதி பாடும்முன் அகல் விளக்கேற்றி, புஷ்பம் வைத்து துதி பாடல் தொடங்க வேண்டும். எலுமிச்சை அகல் விளக்கேற்றல் மிக சிறப்பு. தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே! என்ற நாமம் பாடும் ஒவ்வொரு தடவையும் கையெடுத்துத் வணங்க வேண்டும். இப்பாடலை பாடிக்கொண்டே அடிமேல் அடி வைத்து 7 முறை துர்க்கை அம்மனை வலம் வந்து முடித்தல் வேண்டும்.

இப்படி ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்து வர நினைத்தது நிறைவேறும்…

ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே போற்றி!! போற்றி!!

ருத்ர-ரூபினி" "திரிபுர-சூலனி"* *எய்தனூர் துர்க்கையை பற்றி நாம் அறியாத சில ஆச்சரியமான தகவல்கள்*

சிவ சிவ 

🔴🔱🔱 👑🔱🔱🔴
 *அளவில்லாத  ஆற்றலையும் மகத்தான மகிமையும் கொண்ட *ருத்ர-ரூபினி"  "திரிபுர-சூலனி"* 
*எய்தனூர் துர்க்கையை பற்றி நாம் அறியாத சில ஆச்சரியமான தகவல்கள்* 

இன்று   நவராத்திரி உற்சவத்தின் மூன்றாம் நாள் சூலினி துர்க்கையின் வழிபாட்டுக்குரியது. இன்று உலகலாம் கொண்டாடப்படுகிற தசரா, நவராத்திரி, துர்க்கா பூஜை போன்றவை இந்தியாவின் வட, வடமேற்கு மாநிலங்களில் மக்கள் அவர்களின் பிரதான விழாவாக 10 நாட்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். இவர்கள் சிறப்பாக  கொண்டாடுகிற, இந்த சூலினி துர்க்கையின் உருவாக்க தலம் *அவதாரத்தலம்* எது தெரியுமா? *எய்தனூர்*!😳 
ஆம் சிவபெருமான் திரிபுராந்தகர்களை வதம் செய்ய  திரிபுராந்தக மூர்த்தியாக திரிபுரம் எரிக்க புறப்பட்டபோது, கூடே உருவானவள் தான் இந்த சூலினி துர்க்கை !அவள் அவதரித்த மூலாதார பீடம் இந்த எய்தனூரே ஆகும். திருவதிகையில் கூட இவளுக்கு அந்த உருவமில்லை அங்கு இருக்கக்கூடிய அம்பாளே சூலினியின் வடிவமாக வழிபடபடுகிறள்.

சமீபத்தில் ஒரு பெரிய சிவாலய கும்பாபிஷேகத்திற்கு சென்று இருந்த போது, ஒரு வயதான பெரிய சிவாச்சாரிய பெருமானோடு குழுவாக சில  விஷயங்களில் தெளிவு பெற பேசிக் கொண்டிருந்தோம், அப்போது அங்கே வந்த ஒரு பெண்மணி துர்க்கை பற்றி அவரிடம் ஏதோ கேட்க.. அவர் சொன்ன பல விஷயங்களை நமக்கு  ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நவ துர்கைகளிலே திரிபுர-சூலினி மிகவும் சக்தி வாய்ந்தவள் திருவதிகையிலே கூட அவளுக்கு மூர்த்தம் இல்லை. இவள் சிவ பெருமானுடைய கையில் இருக்கக்கூடிய சூலத்தின் ரூபமாகவே கருதப்படுகிறாள்  இதனால் இவளுக்கு *ருத்ர ரூபினி* என்கிற பட்டமும் உண்டு. தனி ஆலயத்தில் உள்ள துர்க்கையை வழிபடுவதை விட சிவாலயங்களில் உள்ள பஞ்ச கோஷ்டத்தில் உள்ள மூர்த்தங்களை, துர்க்கையை வழிபடுவதால் மிகச் சிறப்பான பலன்களை பெற முடியும் என்றும் சிவபெருமானின் அருளை அவர்கள் பிரதிபலிப்பார்கள் என்றார். அப்பொழுது நாம் எய்தனூர்  திருவதிகையோடு தொடர்புடைய திரிபுர சம்ஹார தலம் என்றும் தல வரலாற்றை  சொன்ன உடனேயே அவர்  கோஷ்டத்தில் துர்க்கை இருக்கிறாளா? எப்படிப்பட்ட ரூபம் உள்ளவள் என்று கேட்டார்.  அப்போது நாம் ஏதோ ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டிருந்த எய்தனூர் துர்க்கை புகைப்படத்தை  அவரிடத்திலே காண்பித்தோம் ஆச்சரியப்பட்டு போனார். "சூலினி பராக்கிரம ஆவஹனாதி" என்ற சமஸ்கிருத சுலோகத்தை சொல்லி *இவளே தான்! இவளே தான்!* என்று  சொல்லி கருணாய ஸந்ததமாக இருப்பதாக சொன்னார் தற்போது எந்த விதமான பின்னம் இல்லாமல் இருக்கிறதா என்று கேட்டார் கட்டைவிரலில் தான் என்றோம் அதில் ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை இதற்கு கவசம் சாற்றி பிம்பசுத்தி செய்து ஓரடி அளவிலான சூலினி துர்க்கையின் எந்திரம் உருவேற்றி உச்சாடனம் செய்து  வையுங்கள் அவள் கையில் வைத்திருக்கிற சூலத்திற்கு பௌர்ணமி தோறும் ஈசன் மீது வைத்து அபிஷேகித்து துர்க்கையை மீது சாற்றினால் மிக மிக விசேஷமாக இருப்பாள் என்றும். உலகெங்கும் இருக்கிற அம்பாள் கோயில்களில்இருக்கும் விக்ரங்களிலே வைக்கப்பட்டு இருக்கிற திரிசூலங்களிலே இவளுடைய சாநித்தியமே எங்கும் பரவியிருக்கும் என்றும், திரிசூலமே திரிபுர சம்ஹாரத்தின் போது இந்த தலத்தில் உருவானது என்றும், அபிஷேகத்தின் பொழுது முட்டாமஞ்சள், சந்தனம் அரைத்து அந்த மஞ்சளை சந்தனத்தை திருமணமாகவர்ள், நோயுற்றோர் குழந்தை பேறு வறுமை நீங்க மக்களுக்கு கொடுத்து உடம்பில் பூசி முகத்தில் பூசி குளிக்க செய்தால் வெகு விரைவில் பலன் கிடைக்கும் என்றும், அவளை வழிபடுவதற்கு முன்பு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து அவரின் அனுக்ஞை பெற்று, சங்கல்பம் செய்து பிறகு அவளுக்கு வழிபாடுகள் நடத்தினால் மிக சிறப்பான பலன்களை விரைவில் பெற முடியும்,   என்றும் இதனால் பலனடைந்தவ ர்கள் மூலமாக பலர் தேடி வர ஆரம்பிப்பார்கள் என்றும் குறிப்பாக வடநாட்டில் இருக்கக்கூடிய மக்களும் இங்கே தேடி வருகிற வாய்ப்பெல்லாம் இருக்கிறது என்றும் நிறைய நியமங்களை முறைகளை சொன்னார்கள். அந்தப் பக்கம் வரும் பொழுது கண்டிப்பாக நானும் வந்து தரிசிக்கிறேன் என்றார்கள், சிலரிடம் இதை சொன்ன பொழுது இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இருந்தபோதிலும் இந்த பதிவின் மூலமாக இந்த விஷயங்கள்  பலருக்கும் போய் சேரட்டும் என்கிற நல்லெண்ணத்தில் இதை பதிவிடுகிறோம் ! 

🙏🙏🙏🙏🙏

Tuesday, September 27, 2022

சுவாரஸ்ய பகுதி.. மகிஷாசுரனை வதம் செய்த அம்பிகை... நவராத்திரி உருவான புராண கதை...!! நவராத்திரி உருவான கதை

சுவாரஸ்ய பகுதி. மகிஷாசுரனை வதம் செய்த அம்பிகை... நவராத்திரி உருவான புராண கதை...!!
                நவராத்திரி உருவான கதை...!!


சக்தி வழிபாட்டின் பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச்சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா தான்.

மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் ஆகிய இம்மூன்றையும் வேண்டி அவற்றிற்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்ற மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே நவராத்திரி வழிபாட்டின் முக்கிய நோக்கமாகும்.

நவராத்திரி உருவான கதை :

மகிஷாசுரன் என்னும் ஓர் அரக்கன் மூவுலகையும், தேவர்களையும் அடிமைகளாக்கி அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அவன் ரம்பன் என்பவனுக்கும், எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன். அதனால்தான் மனித உடலுடனும், எருமை தலையுடனும் தோன்றினான். மகிஷாசுரன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாறாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான். பிரம்மன் அவன் முன் தோன்றியதும் சாகாவரம் வேண்டும் என்று கேட்டான். இவ்வுலகில் பிறந்த யாவருக்கும் இறப்பு என்பது நிச்சயம் நடந்தே தீரும். அதனால் உன் வரத்தை மாற்றி கேள் என்றார் பிரம்மதேவர்.

அதற்கு மகிஷாசுரன் முன்யோசனை ஏதுமின்றி எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னி பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவ்வரத்தையே பிரம்மதேவரும் அருளினார். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷாசுரன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான்.

வரத்தை பெற்றதும் மகிஷாசுரனின் அராஜகம் ஆரம்பித்தது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டனர். மகாவிஷ்ணு தேவர்களுக்கு உதவி செய்ய மகிஷாசுரனிடம் போருக்கு சென்றார். ஆனால், மகிஷாசுரனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை.

எதனால் மகிஷாசுரனை அழிக்க முடியவில்லை என்று குழப்பத்தில் ஆழ்ந்தார். பின் பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றதால் தான் மகிஷாசுரனை அழிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் சென்று முறையிட்டார்.

சிவன் தன் சக்தியால் 'சந்தியாதேவி" என்ற சக்தியை உருவாக்கினார். அந்த சக்தியின் கண்கள் கறுப்பு, சிவப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது.

மகிஷாசுரன் தன்னிடம் போர் செய்ய வரவேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷாசுரனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின் அழகில் மயங்கிய அவன், சக்தியை திருமணம் செய்ய தூது விட்டான். இதை அறிந்த சந்தியாதேவி, 'தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன்" என்று தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.

இதனால் மகிஷாசுரன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினான். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பவில்லை. இதை கண்ட மகிஷாசுரன், கடைசியாக தேவியிடம் யுத்தத்திற்கு வந்தான். தேவி, மகிஷாசுரனிடம் பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷாசுரன் மாண்டான்.

இதை கண்ட தேவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகிஷாசுரனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் மகிஷாசுரமர்த்தினி என்று தேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.

சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!.

சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!.

அதெப்படி? சங்கு சக்கரம் பார்த்தவுடன் திருமால் ஞாபகம் தானே வரும்! சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள் அல்லவா?.உண்மைதான். சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள்தான்.

அதை யார் அவருக்குக் கொடுத்தது? எப்படி திருமால் அதைப் பெற்றார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரம்பொருளின் ஐந்து தொழில்களுள் ஒன்றான காக்கும் தொழிலைச்செய்யும் தொழிற்கடவுளான திருமால் சங்கு சக்கரம் இரண்டையும் சிவபூசை முறையாகச் செய்து அதனைப் பரம்பொருள் சிவபெருமானிடமிருந்து பெற்றார்.

சங்கு பெற்ற கதை
********************

சகோதர்களான அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட பலப்பல தெய்வீக அற்புதப் பொருட்களில் சங்கும் ஒன்று.

பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு ‘நமசிவாய’ என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால் பாஞ்ச சைனம் எனப்பெயர் பெற்றது.

காப்போனைக் காக்கும் கடவுளான சிவபெருமான் திருக்கரத்தில் இருந்த இந்தச் சங்கினைப் பெறுவதற்குக் காக்கும் தொழிலைச் செய்யும் திருமால் விரும்பினார்.

சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து நியமம் தவறாமல் சிவ பூசை செய்தார்.

திருமால் ஆசைப்பட்ட மங்கலப்பொருளை சங்கினை சிவபெருமான் திருமாலுக்கு அருளிச் செய்தார். திருமால் சிவபூசை செய்து தெய்வீகச் சங்கினைக் கைக்கொண்ட திருத்தலம் திருச் சங்க மங்கை (திருச் சங்கம் அங்கை) எனப்பெயர் பெற்றது.

திருமாலுக்குச் சங்கினை அருளித் திருச்சங்க மங்கையில் எழுந்தருளியுள்ள சிவனுக்குச் சங்கநாதர், சங்கேசுவரர் என்ற திருநாமம் உண்டு.

சக்கரம் பெற்ற கதை:-
************************

சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான்.

அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் நான்முகனின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான்.

அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். நான்முகன், அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

இதையடுத்து, அவன் திருமாலைக் குறிவைத்தான். திருமாலை அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம், அவனையும் கொல்ல திருமாலால் முடியவில்லை.

அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற் கேற்ப, அவனும் ஒருமுறைகைலாயம் சென்றான்.

அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான்.

சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார்.

தாராளமாக! தேர்வைத்துவக்கலாம், என்றான்.
சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார்.

சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான்.

இந்த சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தார் திருமால். பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார்.

பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார்.

தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. திருமால் சற்றும் யோசிக்காமல் தன் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தார்.

அவரின் பூசையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார்.

சிவாயநம..

சுமார் 12000 வருடங்களுக்கு முன் மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பைரவர்

🌹 நவபாஷாண பெரிச்சி கோவில்
சுமார் 12000 வருடங்களுக்கு முன் மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பைரவர்..

இவர் காசி ஷேத்திரத்தில் இருந்து இங்கு வந்தவர் என்று கூறுகின்றனர்..

இவரின் சக்தி தற்போதும் மிக மிக அதிகமாக உள்ளதால் இவருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் சாற்றப்படும் வடை மாலை பிரசாதமாக தருவதில்லை..

அந்த வடை மாலை கோவில் மேல் போட்டு விடுவார்கள் பறவைகளும் அதை தொடுவதில்லை இவரின் அதிர்வுகள் மிகவும் அதிகமாக உள்ளது ..

பழனி முருகர் சிலா ரூபம் செய்வதற்கு முன்பே இதை செய்ததாக செவி வழி செய்தி உண்டு.. (வரலாறு சரியாக தெரியவில்லை)..

இவருக்கு இரண்டு முகங்கள் உண்டு.. பின்புற முகத்தை காண முடியாது அந்த முகத்தால் வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம்..

இவருக்கு வன்னி இலைகளில் பூஜைகள் நடை பெறுகிறது என்பது சிறப்பு...

மிகவும் அபூர்வ சக்தி படைத்த இந்த பைரவர் கண்டராமாணிக்கம் ஸ்ரீ சுகந்தவனேஸ்வரர் என்ற கோவிலில் ஆண்டபிள்ளை நாயனார் என்ற பெயரில் வீற்றிருக்கிறார் ..

இவரை வழிபட வேண்டும் எனில் பூர்வ புண்ணியம் மிகவும் அவசியம்..

சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரி தோஷம், சகல பாப நிவர்த்தி, நீண்டகால நோய்கள் நிவர்த்தி, அஷ்டமா சித்தி அளிக்க கூடியவர் அதற்கு சாட்சியாக அருகில் பட்டமங்கலம் என்ற இடத்தில் அஷ்டமா சித்தி பொய்கை உள்ளது மிகவும் அதிசயம்..

இவரை வழிபட்டு சகல பாப விமோசனம் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும்...

அமைவிடம்
அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்.
பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம் வழி, சிவகங்கை மாவட்டம்.🌹

நவராத்திரி இரண்டாம் நாள் : கெளமாரி தேவியை வழிபாடு

நவராத்திரி நாள் : கெளமாரி தேவியை வழிபடும் முறைகள் என்னென்ன?
                சகல சௌபாக்கியங்களையும் அருளும் இரண்டாம் நாளான கௌமாரி..!!
🌟 அம்மன் வடிவம் : கௌமாரி.

🌟 பூஜையின் நோக்கம் : மகிஷாசுரனை வதம் செய்ய புறப்படுதல்.

கௌமாரி வடிவம் :

🌟 அடியாருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவள்.

🌟 மயில் வாகனமும், சேவல் கொடியும் கொண்டவள்.

🌟 முருகப்பெருமானின் அம்சத்திற்கு ஆதாரமானவள்.

🌟 அகங்கார சொரூபம் கொண்டவள்.

🌟 அழகிற்கும், வீரத்திற்கும் உரியவள்.

🌟 உடல் பலமும், ஆன்ம பலமும் என இரண்டையும் அளித்து ரட்சிக்கக்கூடியவள்.

🌟 கௌமாரி தேவியை தேவசேனா என்றும் அழைப்பார்கள்.

🌟 தென்நாட்டில் இரண்டாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் சூலினி துர்க்கை.

🌟 திரிபுர சம்காரத்தில் சிவபெருமானுடன், அம்பிகை கரங்களில் சூலம் கொண்டு சூலப்பணியாக சென்றார்கள்.

🌟 சிவபெருமான் திரிபுரத்தில் இருந்த சான்றோர்களை அருள் செய்த போது அம்பிகையும், சிவபெருமானுடன் இருந்து அருள் பாவித்தார்.

🌟 திரிபுர வதத்தில் அம்பிகை கொண்ட சொரூபம் சூலினி துர்க்கை வடிவம் ஆகும்.

🌟 நாம் செய்த வினைப்பலனுக்கு ஏற்ப தீமைகளை குறைத்து நன்மைகளை அருளும் குணம் கொண்டவள்.


🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : முல்லை

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : துளசி 

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : சந்தன நிறம் 

🌟 அன்னைக்கு செய்ய வேண்டிய அலங்காரம் : ராஜ ராஜேஸ்வரி அலங்காரம்

🌟 அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர் : பன்னீர் ரோஜா 

🌟 கோலம் : கோதுமை மாவால் கட்ட கோலம் போட வேண்டும்.

🌟 நைவேத்தியம் : புளியோதரை

🌟 குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 3 வயது.

🌟 குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : ஆரோக்கியம் பெருகும்.

🌟 பாட வேண்டிய ராகம் : கல்யாணி

🌟 பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : புல்லாங்குழல்

🌟 குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : சுண்டல் வறுவல்

🌟 பலன் : உடல் ஆரோக்கிய குறைகள் நீங்கும்.

Monday, September 26, 2022

*நலம் தரும் நவராத்திரி*🌺 நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம்

🌺*நலம் தரும் நவராத்திரி*🌺 
நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம்.
🌸 *பிரதமை* 
நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. அன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.
🌸*துவிதியை* 
இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி தேவியாக போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும்.
🌸*திரிதியை* 
மூன்றாவது நாளுக்கு உரிய வாராகி அன்னை, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.
🌸*சதுர்த்தி* 
நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
🌸*பஞ்சமி* 
ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை.
🌸*சஷ்டி* 
ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம் இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. இவள் விரும்புவது தேங்காய் சாதம்.
🌸*சப்தமி* 
ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து வழிபடலாம்.
🌸*அஷ்டமி* 
எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, சர்க்கரை பொங்கல் படையல் இட்டு வழிபடலாம்.
🌸*நவமி* 
ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னை யை வழிபடுவது வழக்கம். இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து
🌸 *விஜயதசமி* 
பத்தாவது நாள் விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.
விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு என்றாலும் அதில் விசேஷமான நாட்கள் கடைசி மூன்று நாட்கள். சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும். இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும். 
அஷ்ட லஷ்மி ஸ்தோத்ரம், லலிதா சஹஸ்ரநாமம், லஷ்மி சஹஸ்ரநாமம் ,தேவி பாகவதம், படித்து நாமஸ்மரணை செய்து நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அளவில்லாத பலன்களை அடைவார்கள்.....             🙏🌼🔱🌹🌺🪷🪷🪷🌺🌹🔱🌼🙏

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...