Monday, November 28, 2022

திருச்சேறை ருணவிமோச்சன லிங்கேஸ்வரர் திருக்கோயில்

.
திருச்சேறை ருணவிமோச்சன லிங்கேஸ்வரர் திருக்கோயில்.
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர திருச்சேறை ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரரை சரணடையுங்கள். நோயற்ற வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதே போல கடனில்லாத (பிறவி கடன்) வாழ்வு வாழ்வதும் மிகவும் முக்கியம்.
.
திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.
.
இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வமாகவும், எல்லா வகை கடன்களையும் நிவர்த்திசெய்கின்ற கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும் ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார்.
.
ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும்.
.
தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.
.
தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை.
.
கடன்நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை என 3 துர்க்கைகள் அருள்பாலித்து வருகின்றனர்.
.
கடன் தீர்க்கும் இறைவர் இத்தலத்தில் பரிகார தெய்வமாக ரிண விமோசன லிங்ககேஸ்வரர் விளங்குகிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார்.
.
அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
.
சிவனுக்கு அபிஷேகம் பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு.
.
ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம்.
.
எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் (பிறவி கடன்) என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
.
எப்படி செல்வது மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறியவரும், குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு.
.
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

ஓம் நமசிவாய வாழ்க

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

Sunday, November 27, 2022

உயிர்களின் அடிப்படையாக இருக்கும் உணவுக்கு ஆதார சக்தியாக விளங்குபவள் அன்னபூரணி தேவி.

அன்னபூரணிதேவி
`ஒரு சாண் உடலுக்கு சிரசே பிரதானம்’ என்பார்கள். 
அந்த உடலில் உயிர் தரித்திருக்க உணவு அவசியம். 

உணவில்லாமல் யாரும் வாழமுடியாது. 

உணவு என்னும் இரையைத் தேடுதலின் பொருட்டே உயிர்கள் 
இடம் பெயரத் தொடங்கின. 

உயிர்களின் அடிப்படையாக இருக்கும் உணவுக்கு 
ஆதார சக்தியாக விளங்குபவள் அன்னபூரணி தேவி. 

அங்கமெல்லாம் தங்க நகைகளால் ஜொலிக்க, 

நவரத்தின ஆசனத்தில் அமர்ந்து, 

ஒரு திருக்கரத்தில் அட்சயப் பாத்திரமும், 

மறு திருக்கரத்தில் தங்கக் கரண்டியும் ஏந்திக் காட்சியளிக்கும் இந்த தேவி, 

உலக உயிர்களின் பசியைத் தீர்க்கும் தயாபரி. 

உயிர்களின் பசியைத் தீர்க்கும் அன்னபூரணி தேவிதான், 

மண்ணின் உரமாக, 

மண்வளம் சிறக்கச் செய்யும் மழையாக, 

மண்ணில் விதைக்கும் விதையாக, 

விதை முளைத்து வரும் பயிராக, பயிரின் தானியமாக, மலராக, 
காயாக, 
கனியாக 
என்று அனைத்துக்கும் ஆதார சக்தியாக இருக்கிறாள். 

அனைத்து உயிர்களையும் அன்புடன் பரிபாலிப்பவள் அன்னபூரணி.

அன்னபூரணியின் அவதாரம்
ஒருமுறை பிரம்மதேவருக்கு கர்வம் ஏற்பட்டது. 

சிவபெருமானைப்போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் ஏற்பட்ட கர்வம் அது. 

பிரம்மதேவரின் கர்வம் சிவனாருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன? 

அதை அடக்கத் திருவுள்ளம் கொண்டார், சிவபெருமாள் !

சிவபெருமானின் திருவுள்ளக் குறிப்பை உணர்ந்துகொண்ட அன்னை பார்வதி, 

அதற்கேற்ப தானும் ஓர் அருளாடலை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டாள். 

அதன்படி கர்வத்துடன் கயிலைக்கு வந்த பிரம்மதேவரை, 

சிவபெருமான் என்று எண்ணி வணங்கினாள். 

அதைக் கண்டு பிரம்மதேவர் சிரித்துவிட்டார். 

அனைத்தும் தெரிந்த அம்பிகை தன்னை சிவனாராக நினைத்து வணங்கியது ,

அவளுடைய லீலைகளில் 
ஒன்று தான் என்பது #கர்வம் கொண்டிருந்த பிரம்மதேவருக்குப் புரியவில்லை.?

அடுத்து சிவனாரின் 
லீலை தொடங்கியது. 

கர்வத்துடன் கயிலைக்கு வந்த பிரம்மதேவரின் ஒரு தலையைக் கொய்துவிட்டார் #சிவபெருமான். 

பிரம்மதேவரின் தலையைக் கொய்த சிவபெருமானுக்கு தோஷம் ஏற்பட்டு விட்டது. 

தோஷத்தின் விளைவாக பிரம்ம தேவரின் கபாலம் சிவனாரின் கரத்துடன் ஒட்டிக்கொண்டது. 

தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க வேண்டி, 

பல இடங்களில் பலரிடமும் பிட்சை பெற்று வந்தும் கூட, 

அவர் கையில் ஒட்டிக்கொண்ட கபாலம் நீங்கவில்லை.

இந்தத் தருணத்தில், பிரம்மதேவரை சிவபெருமான் என்று நினைத்து வணங்கிய அன்னை பார்வதி, 

தனக்குத் தானே தண்டனை விதித்துக்
கொண்டு, 

பூவுலகில் 
காசி நகரத்தில் அன்னபூரணியாக அவதரித்தாள். 

பல இடங்களில் பிட்சை எடுத்து  வந்த சிவனார் இறுதியாக ,

காசி நகரத்தை அடைந்தார். 

மாதா அன்னபூரணியிடம் பிட்சை ஏற்றார். 

அன்னபூரணி பிட்சை இட்டது
தான் தாமதம் சிவனாரின் திருக்கரத்தில் இருந்த பிரம்ம கபாலம் அவர்கையை விட்டு நீங்கியது.

அன்னபூரணி சிவனாரின் பசி தீர்ப்பதற்காக மட்டுமா அவதரித்தாள்? 

ஆணவம் ஆபத்தானது. ஆனால், 

அதே நேரத்தில் ஆணவத்தை
விட ஆபத்தானது பசி என்பதை உணர்த்தவும், 

அம்பிகை அன்னபூரணியாக அவதரித்தாள். 

மேலும், 

பசிப் பிணியால் எந்த உயிரும் துன்புறக் கூடாது என்பதை உணர்த்தவும் 
காசி மாநகரில் அருளாட்சி
புரிகிறாள்.

காசி மாநகருக்கு அன்னபூரணி தேவி வந்த காரணம் என்று காசி தல புராணம் வேறொரு கதையும் கூறுகிறது. 

ஒருமுறை ஈசனும் சக்தியும் சொக்கட்டான் ஆடிக்
கொண்டிருந்த போது
ஆட்டத்தின் இறுதியில் ஈசன் வெற்றி பெற்றார். 

சக்தியோ, ஈசன் தவறாக ஆடி வெற்றி பெற்றார் என்று எண்ணி வாதம் புரிந்தாள். 

ஈசனோ `சகலமும் மாயை, அதில் இந்த ஆட்டமும் ஒரு சிறிய மாயை’ என்றும், `அதனால் வெற்றி தோல்வியைப் பெரிதாக எடுத்துக்
கொள்ள வேண்டாம்' 
என்றும் கூறினார். 

ஆனால், சக்தியோ `சகலமும் மாயை என்றால் உயிர்களின் இயக்கமும் மாயைதானா?' என்று வினவினார். 

ஈசனும், `ஆம். அப்படித்தான்’ என்று கூற, 

அதை மறுத்து 
காசி நகருக்குச் சென்று தவமியற்றத் தொடங்கினாள். 

அகிலத்துக்கும் படியளக்கும் பராசக்தி தனது கடமையை விட்டு நீங்கியதால், 

உலக உயிர்கள் பசியால் வாடின. 

உலக உயிர்களின் துயரம் போக்கத் திருவுள்ளம் கொண்டு சிவபெருமான், 

தாமே பிட்சாடனராக காசிக்குச் சென்று தேவியிடம் பிட்சை ஏற்றுப் பசியாறினார். 

அப்போது, `உலகம் மாயை என்றாலும், அதில் உயிர்கள் வாழ உணவு எனும் சக்தியும் அவசியம். 

அந்த உணவை அருள்பவளும் சக்தியே' என்று ஒப்புக்
கொண்டார். 

இதனால் மகிழ்ந்த அன்னபூரணி காசி நகரின் பிரதான தேவியாக அமர்ந்தாள். 

அங்கு அன்னக்கூடம் அமைத்து சகல உயிர்களின் பசியையும் நீக்கினாள் என்கிறது 

காசி புராணம். 

அன்னபூரணியை வணங்கு பவர்களுக்கு, `அன்னதோஷம்’ என்னும் வறுமை அணுகவே அணுகாது. 

வடநாட்டில் காசியிலும், தென்னாட்டில் மேல்மலையனூரிலும் அன்னபூரணியின் அருளாட்சி நடைபெறுகிறது. 

தீபாவளி அன்று இந்த தேவிக்கு விசேஷ விழாவும், வைபோகமும் நாடெங்கும் நடைபெறும். 

அன்னபூரணி சகஸ்ரநாமம், அன்னபூரணி அஷ்டோத்திர 
சத நாம ஸ்தோத்திரம், 

ஸ்ரீ அன்னபூரணி அஷ்டகம்... போன்ற துதிப்பாடல்களைப் பாராயணம் செய்பவர்களின் இல்லங்களில் அன்னத்துக்குக் குறைவே இருக்காது 
என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன. 

சகலருக்கும் பசியை நீக்கிய பிறகே இந்த அன்னை தனது பசியாறுவாள் என்றும் கூறப்படுகிறது. 

வயிற்றுப் பசியை மட்டுமல்ல ஞானப் பசியையும் போக்க வல்லவள் மாதா அன்னபூரணி. 

அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தில் 
பால் அன்னம் கொண்டு உலக உயிர்களின் 
பசிப் பிணி போக்கும் 

அன்னை அன்னபூரணியின் பிரியமும் அருளும் நமக்கு நாளும் கிடைக்க
வேண்டுமெனில், 

அன்னதானம் செய்வது ஒன்றே சிறந்த வழி.  

ஆம்,

 `உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' 

என்று 
சங்க இலக்கியம் சொல்வதைப்
போல, உணவளித்தவர் அந்த உயிரைக் காத்தவர் என்றே போற்றப்படுவார். 

எனவே, 
சக உயிர்களை நேசித்து உணவளிப்பவர்கள் வெகு நிச்சயமாக #அன்னபூரணியின் அருளைப் பெறுவார்கள் என்று 
ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.

🌷மார்பில் சிவலிங்கம் தாங்கிய 16 அடி உயர ஆஞ்சநேயர்-

🌷🌷மார்பில் சிவலிங்கம் தாங்கிய 16 அடி உயர ஆஞ்சநேயர்- துன்பங்களை தீர்க்கும் அஞ்சலி வரத ஆஞ்சநேயர்*
🙏🙏🙏🙏🙏🙏🙏

சனி ராகு போன்ற கிரகங்களால் வரும் துன்பங்களைத் தீர்த்து பணி உயர்வு திருமண வாய்ப்பு குழந்தைப்பேறு வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற் பயன்களை அருளுகிறார் *திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.*

அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது. அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது. அதைச் சாப்பிட்ட கேசரி அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அந்தக் குழந்தைக்கு ஒருநாள் பசி எடுத்தபோது வானத்தில் தெரிந்த சூரியனைப் ‘பழம்’ என நினைத்து அதைச் சாப்பிட வானிற்குச் சென்றது. வானம் நோக்கி வந்த குழந்தையை இந்திரன் தன்னிடமிருந்த ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார். இதில் அந்தக் குழந்தையின் தாடை சற்று வளைந்ததால் ‘அனுமன்’ என்று அழைக்கப்பட்டான். அனுமன் என்பதற்கு ‘வளைந்த தாடையை உடையவன்’ என்று பொருள்.

வளர்ந்து பெரியவனான அனுமன் சீதையைத் தேடி வந்த ராமனிடம் அன்பு கொண்டான். அந்த அன்பு பக்தியாக மாறியது. அனுமன் ராமனையே இறைவனாக வழிபடத் தொடங்கினான். இறைவன் மேலான பக்தியை மூன்று வகைகளாகக் குறிப்பிடுகின்றனர். இறைவன் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ இருந்து நம்மைக் காத்து அருள்கிறார் என்கிற எண்ணத்துடன் இறைவனை நினைத்து வழிபடுவது முதல் வகை.

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் இறைவன் இருப்பதாக நினைத்து அவைகளிடம் அன்பு செலுத்தி இறைவனை வழிபடுவது இரண்டாவது வகை. இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறார் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை. இதில் அனுமன் ராமனிடம் கொண்ட பக்தியும் வழிபாடும் மூன்றாவது வகையைச் சேர்ந்தது. அனுமன் சீதையை மீட்பதற்காக முதலில் ராமனின் தூதுவனாகச் சென்றார். பின்னர் ராவணனை அழிப்பதற்கான போரில் ராமனுக்குத் துணையாகச் சென்றார். அனுமன் தனது ராம பக்தியினாலும் தன்னலமற்ற சேவையினாலும் ராமாயண இதிகாசத்தில் ராமன் சீதைக்கு அடுத்த நிலையில் உயர்ந்து நின்றார்.

தன்னலமற்ற சேவையினால் உயர்ந்து நின்ற அனுமனுக்கு சுசீந்திரம் நாமக்கல் நங்கநல்லூர் தெய்வச்செயல்புரம் குலசேகரன்கோட்டை பஞ்சவடி என்று பல ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டும் பல ஊர்களில் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாக இருக்கிறது.

பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அனுமன் இந்த இடத்தில் தான் தியான கோலத்தில் இருப்பதாகவும் இங்கு தனக்குக் கோவில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த பக்தரின் முயற்சியினால் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலில் மூலவரான ஆஞ்சநேயர் ‘வணங்கிய நிலையில் 16 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரது மார்பில் சிவலிங்கம் உள்ளது. கால்களில் காலணி அணிந்து இடுப்பில் கத்தி சொருகியபடி கதாயுதத்துடன் போர்க்கோலத்தில் இருப்பது போன்று அவரது உருவம் வடிக்கப்பட்டிருக்கிறது. நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் செய்யப்பட்டது இந்தச் சிலை. அனுமனின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போன்றும் வடிக்கப்பட்டுள்ளது. சிவனைப் போன்று ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் கல்வி செல்வம் ஆகியவற்றுடன் நீண்ட ஆயுள் கிடைக்கும். அனுமனின் வால் காலை நோக்கிக் கீழாக அமைந்திருக்கிறது. மேலும் இத்தல அனுமனை வழிபட்டால் சனி ராகு போன்ற கிரகங்களின் தோஷங்கள் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோவிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆஞ்சநேயர் போர்க்கோலத்தில் இருப்பதால் கோவிலின் மகாமண்டபத்தில் அவரது துணைவர்களான நளன், நீலன், அங்கதன், குமுதன், சுக்கிரீவன், ஜாம்பவான், ஜிதன், ஜூவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. கோவில் வளாகத்தில் ராமர் சீதை லட்சுமணர் சிலைகளும் கோவிலின் சுற்றுப்பகுதியில் லட்சுமி சரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன. ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது இங்கு அவருடைய கால் பதிந்ததாகவும் சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோவிலின் எதிரில் உள்ள சிறு மலை என்றும் கூறுகின்றனர். ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திர நாட்களிலும் சனிக்கிழமைகளிலும் இங்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தை மாதம் முதல் நாளில் 5008 கரும்புகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் சித்திரை மாதம் முதல் நாளில் பத்தாயிரம் கனிகளைக் கொண்டு அலங்காரம் ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் முதலாவது சனிக்கிழமை ராஜ அலங்காரம், இரண்டாவது சனிக்கிழமையில் செந்தூர அலங்காரம், மூன்றாவது சனிக்கிழமை பச்சை அலங்காரம், நான்காவது சனிக் கிழமை சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அலங்காரம், ஐந்தாவது சனிக்கிழமை பத்மாசனத்தில் தியான அலங்காரம் என்று பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

ஸ்ரீராம ஜெய ராம
ஜெய ஜெய ராம 🙏🙏 நற்பவி 💕sv

பரமத்தி வேலூர்அழகிய காவிரி ஆற்றின் கரையில் அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மன் சமேத அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

நமச்சிவாய வாழ்க!
பரமத்தி வேலூர் என்பது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து கரூரிற்கு பரமத்திவேலூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 

அழகிய காவிரி ஆற்றின் கரையில் அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மன் சமேத அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பழமையான, உயர்ந்த மதில் சுவர்களுடன் விளங்குகிறது. 

சிவனடியார், பெருமக்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசனம் செய்ய வேண்டிய திருக்கோயில் நீண்ட காலமாக நடை சாத்தப்பட்டு இருக்கிறது. நீண்ட காலம் என்றால் ஏதோ இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அல்ல. அந்த பகுதி மக்கள் கூறியபடி சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேல் பூட்டியுள்ளது. இதற்கு காரணமாக கூறப்படுவது, உள்ளே திருப்பணிகள் நடைபெற்று வருகிறது என்பது.
அதற்கு ஏற்றார் போல் கோவிலுக்கு வெளியில் ஈசான திக்கில் சாலை அமைத்து பாலாலயம் செய்து பூசை செய்து வருகின்றனர். 

அருகாமையில் உள்ள குடிமக்களிடம் திருப்பணி சம்பந்தமாக பேச்சு கொடுத்ததில் இலங்கையிலிருந்து யாரோ ஒரு ஸ்தபதி உள்ளே பணி செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது யாரும் பணி செய்வதாக தெரியவில்லை.

ஊர் மக்கள் கிட்டத்தட்ட இந்த சிவாலயம் இருப்பதையே மறந்துவிட்டனர்.  

கோயில் புகைப்படங்கள் இங்கே பதிவிட்டிருக்கிறேன்.

விரைவில் பரமத்தி வேலூரில் அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் கும்பாபிஷேகம் நடைபெற்று அனைவரும் தரிசனம் செய்ய, ஈசனாரிடம் வின்னப்பிப்போம்

பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலம் செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே!

நமச்சிவாய வாழ்க!

_அண்ணாமலை கிரிவல மகிமை

_அண்ணாமலை கிரிவல மகிமை
(திருவண்ணாமலை கிரிவலத்தின் போது சொல்ல பட வேண்டிய அபூர்வ மந்திரங்களையும் அதனால் கிடைக்கும் அபூர்வ பலன்களையும் இன்று முழுமையாக பதிவிடுகிறேன். இந்த பதிவு சில வருடங்களுக்கு முன் அகத்தியர் விஜயம் நாளிதழில் தொடராக வந்த பதிவை முழுவதுமாக தொகுத்து பதிவிடுகிறேன். அவசியம் படித்து சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

உலகத்தில் பிறந்த 700 கோடி மனிதர்களில் மிகவும் அதிகமான ஆசிகள் பெற்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் 7 கோடி பேர்கள் மட்டுமே! ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வருபவர்கள் கூட அவ்வளவாக ஆசிகளைப் பெறவில்லை; ஆமாம்! நினைத்த உடனே அண்ணாமலைக்கு பயணிக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்களுக்கு மட்டுமே இருக்கின்றது;

அப்போ கேரளா, கர்னாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாழ்ந்து வருபவர்களுக்கு இந்த ஆசிகள் கிடையாதா? என்று நீங்கள் கேட்கலாம்; அவர்களது மொழியில் அண்ணாமலை கிரிவலம் பற்றிய செய்திகள் மிகவும் குறைவு கடந்த 100 ஆண்டுகளில் ஏராளமான திசை திருப்பல்கள் அவர்களிடையே ஆன்மீகத்தினுள் நிகழ்ந்திருக்கின்றது    ஷீர்டி சாய்பாபா 1008 முறைக்கும் மேல் கிரிவலம் வந்திருக்கின்றார் என்ற செய்தியே நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

விசிறிச்சாமியார் என்ற யோகிராம்சுரத்குமார் சுவாமிகள் 10,000 தடவைக்கும் மேல் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பது முழு உண்மை ஷேசாத்ரி சுவாமிகள் 1,00,000 தடவைகள் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பதும் அண்ணாமலை சத்தியம்  இவைகளெல்லாம் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசியங்கள்; இம்மகான்களின் உபதேசங்களை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றுவோம்;

அதே சமயம், இம்மகான்கள் ஏன் அண்ணாமலையில் ஆயுள் முழுவதும் வாழ்ந்தார்கள்?

அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை சராசரி மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதற்காகவே . . . !!!

சென்ற நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் வாழ்ந்த அனைவருக்கும் இப்போது இருக்கும் இணைய வசதி இல்லை ஆனால், ஓலைச்சுவடிகள், தாத்தா மற்றும் தாத்தாவின் அப்பாவின் உபதேசம் போன்றவைகளால் அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை உணர்ந்து கிரிவலம் வந்துள்ளார்கள்;

மனிதனாக பிறந்த நாம்  புண்ணிய ஆத்மாவாக இருந்தால் பணம் சம்பாதிக்கவும், சொத்துக்கள் சேர்க்கவும், சொகுசாக வாழவும், காம சுகத்தை அனுபவித்து திளைக்கவும் தான் வாழ்ந்து வருகின்றோம்; பாவ ஆத்மாவாக இருந்தால், கடனுடன் காலம் பூராவும் போராடவும், வாழ்க்கைத் துணையுடன் சண்டை போடவும், தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக் கொண்டு திண்டாடவும் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்;

     இதற்காக நம்மை ஈசன் இந்த பூமிக்கு அனுப்பவில்லை; அண்ணாமலை கிரிவலம் இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் செல்லவே பிறவியை பரம்பொருள் நமக்கு கொடுத்துள்ளார்;

ஆன்மீக பூமியான பாரத நாட்டில் 1,00,00,000 ஆலயங்கள் இருக்கின்றன; உலகம் முழுவதும் இருந்த ஆலயங்களின் மொத்த எண்ணிக்கை 1000 கோடி ஆகும்; அவைகளில் பெரும்பாலானவை மறைக்கப்பட்டிருக்கின்றன; அகஸ்தீஸ்வரம் தான் இன்றைய ஆஸ்திரேலியா; பிள்ளைப்பண் தான் பிலிப்பைன்ஸ்; முற்காலத்தின் அயனீஸ்வரம் தான் இன்றைய அயர்லாந்து;

ஒவ்வொரு முறையும் அண்ணாமலை கிரிவலம் செல்லும் போதும் ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும்; அப்படி 14 கி மீ தூரம் நடந்தே ஜபிக்கும் போது நமது ஜபத்தின் எண்ணிக்கை 1,00,000 ஐக் கடந்துவிடும்; இதனால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வந்துவிடும்; உயிர் உண்டான மந்திரமானது, நமக்கு வழிகாட்டும்; நம்மை பாதுகாக்கும்;

இங்கே ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு தேவையான மந்திரத்தை கொடுத்திருக்கின்றோம்; முறைப்படி தீட்சை பெற்றவர்கள், உண்மையான ஆன்மீக குருவை அடைந்தவர்கள், முற்பிறவியிலேயே குரு ஸ்தானத்திற்கு வந்துவிட்டவர்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கும் மந்திரங்கள் சாதாரணமானதாகத் தோன்றும்;

பவுர்ணமி அன்றுதான் அண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கமாக இருக்கின்றது; அதை விடவும் மிகவும் உயர்வான கிரிவலம் தேய்பிறை சிவராத்திரி அன்று கிரிவலம் தான்;

தவிர, உங்களுக்கு எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் கிரிவலம் செல்லலாம்; அஷ்டமி, கரிநாள் என்று எதையும் ஒதுக்க வேண்டாம்; எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்;

காலையில், மதிய நேரத்தில், மாலையில், இரவில், நள்ளிரவில், பின்னிரவில்,
அதிகாலையில் என்று எப்போதும் கிரிவலம் செல்லலாம்;
மழை பெய்யும் போதும், அக்னிநட்சத்திர நாட்களிலும், கடுங்குளிர் காலத்திலும் கிரிவலம் செல்லலாம்;

சிவனை அப்பாவாக, நண்பனாக, மகனாக நினைக்கும் ஒவ்வொருக்கும் அண்ணாமலை கிரிவலம் ஒரு கடமை; 100 முறைக்கு மேல் அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்தவர்களுக்கு அண்ணாமலையார் என்ற அருணாச்சலேஸ்வரர் இங்கேதான் மனித ரூபத்தில் வாழ்ந்து வருகின்றார் என்பதை உணருவார்கள்;

ஒவ்வொரு முறையும் கிரிவலம் ஆரம்பிக்கும் போதும், கழுத்தில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் உடைய மாலையை அணிவது நன்று;

(1) முதல் முறை கிரிவலம் செல்லும் போது:

"ஓம் அகத்தீசாய நமஹ"
"ஓம் அருணாச்சலாய நமஹ"

(நம் அனைவருக்கும் தலைமை குரு அகத்தியர்; இவர் தான் பூமி முழுவதும் தமிழ் மொழியைப்பரப்பினார்; எனவே, குருவின் அருள் நமக்குத் தேவை;

3,00,00,000 தடவை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தால் என்ன புண்ணியமோ அது ஒரே ஒரு முறை ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ அல்லது ஓம் அண்ணாமலையே நமஹ என்றோ ஒரே ஒரு முறை ஜபித்தாலே கிட்டிவிடும் என்று அருணாச்சல புராணம் கூறுகிறது.)

(2) இரண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

"ஓம் ஆதிகவசம் சிவகவசம்
சிவன் பிறந்த பரம கவசம்
ஆதிசிவ கவசாய கட்டு சிவாகா"

(இது ஒரு கட்டு மந்திரம் ஆகும்; ஏராளமான கட்டு மந்திரங்கள் இருந்தாலும், தலைமை கட்டு மந்திரம் இது; இந்த மூன்று வரிகளும் சேர்ந்தது தான் சிவ கட்டு மந்திரம்; இது நமக்கு கவசம் போல இப்பிறவி முழுவதும் பாதுகாக்கும்)

(3) மூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;

"சிவயநம-அம்-உம்-சிம்-க்லீம்-ஸ்ரீம்- ஓம்- ரம்-மம்-யம்-ஓம்"

(மந்திரங்களுக்கு உரிய சாபங்கள் உண்டு; கலியுகத்தில் தவறான மனிதர்களே மிக அதிகம்; அவர்கள் மந்திரங்களை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க அகத்திய மகரிஷி அனைத்து மந்திரங்களுக்கும் சாபம் கொடுத்துள்ளார்; இம்மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்துவிட்டால்,சாப நிவர்த்தி கிடைத்துவிடும்; அதன் பிறகு எந்த மந்திரம் ஜபித்தாலும் அது பலன் தர ஆரம்பிக்கும்)

(4) நான்காம் முறை கிரிவலம் செல்லும் போது;

"நமச்சிவாய"

(நமச்சிவாய மந்திரத்தில் இருந்துதான் ஓம் என்ற மந்திரமே உண்டானது என்பது அகத்திய மகரிஷி நமக்கு செய்திருக்கும் உபதேசம் ஆகும்)

(5) ஐந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:

"அருணாச்சல-சிவ"

(அண்ணாமலையாரின் சிவமந்திரங்களில் இதுவும் ஒன்று; இதை ஜபிக்க அதுவும் கிரிவலப் பாதை முழுவதும் ஜபிக்க நமது முன்னோர்களின் ஆசிகள் இருந்தால் மட்டுமே முடியும்)

(6) ஆறாம் முறை கிரிவலம் செல்லும் போது:

"ஓம்-ஆம்-ஹெளம்-செள"

(அறிந்தும் அறியாமலும் நாம் பஞ்சமாபாதகங்கள் செய்திருக்கின்றோம்; செய்து வருகின்றோம்; இனி ஒரு போதும் செய்யாமல் இருக்க இந்த சிவமஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டியது நமது கடமை ஆகும்)

(7) ஏழாம் முறை கிரிவலம் செல்லும் போது:

"சிவையை-நம"

(அர்த்தநாரீஸ்வர சூட்சும மந்திரம் இது)

(8) எட்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

"ஓம்-ரீங்-சிவசிவ"

(சைவ காயத்ரி மந்திரம் இது; இதைப் பற்றி 10,000 பக்கங்களுக்கு ஒரு புத்தகமே எழுதலாம்)

(9) ஒன்பதாம் முறை கிரிவலம் செல்லும் போது:

"சிவாய-நம"

(நமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்கும் மஹா சிவ மந்திரம் இது)

(10) பத்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:

"ஓம்-நமசிவாய-சிவாய-நம-ஓம்"

(ஹரே ராம, ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்ற வைஷ்ணவ மந்திரத்துக்கு இணையான சிவ மந்திரம்; இதை ஜபிக்கும் போது அதுவும் கிரிவலப் பாதையில் ஜபித்து வரும் போது உங்கள் கண்களுக்கு சில தெய்வீக சக்திகளை தரிசிக்கும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்)

(11) பதினோராம் முறை கிரிவலம் செல்லும் போது;

"சிவ-சிவ"

(இந்த மந்திர உச்சரிப்பின் மகத்துவத்தை நாம் உணரவே நமக்கு 12 மனிதப் பிறவிகள் எடுக்க வேண்டும்; அவ்வ்வ்வளவு மகிமைத்துவம் நிரம்பியது இது;)

(12) பனிரெண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

"சிவாய-சிவாய"

(நமது முற்பிறவி கர்மச்சுமையை இப்பிறவியில் எரிக்கக்கூடிய மந்திரம் இது)

(13) பதிமூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;

"சிவாய-நம-ஓம்"

(சிவாலயங்களில் மட்டுமே ஜபிக்க வேண்டிய மந்திரம் இது; அதுவும் ஈசன் மனித உருவில் இருக்கும் இடத்தில் இதை ஜபித்தால். . .)

(14) பதினான்காம் முறை கிரிவலம் செல்லும் போது:

"சிவய-சிவ"

(இம்மந்திரத்தின் மகிமைகளை விவரிக்க ஒரு வரி; ஒரு பாரா போதாது)

(15) பதினைந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:

"அருணாச்சலாய-சிவ-நமஹ"

(16ம்) முறையில் இருந்து 1008 ஆம் முறை வரை கிரிவலம் செல்லும் போது அருணாச்சலேஸ்வரரே உங்களுக்கு மந்திர உபதேசம் செய்வார்;

மறுபிறவி இல்லாத முக்தியை அடைய இதுவே வழி;

"ஓம் அகத்தீசாய நமஹ"
"ஓம் அருணாச்சலாய"

திருநல்லூர்ப் பெருமணம், சிவலோகத்தியாகர் திருக்கோயில். ஆச்சாள்புரம் - 609101 மயிலாடுதுறை மாவட்டம்.

திருநல்லூர்ப் பெருமணம், சிவலோகத்தியாகர் திருக்கோயில்.       ஆச்சாள்புரம் - 609101          
மயிலாடுதுறை மாவட்டம்.

*புராண பெயர்கள்:
சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர்.

*இறைவர் திருப்பெயர் : 
சிவலோகத் தியாகர், சிவலோக தியாகேசர்

*இறைவியார் திருப்பெயர் :
திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி, விபூதி கல்யாணி

*தல விருட்சம்:
மாமரம். 

தீர்த்தம் : -  பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம்

*வழிபட்டோர் : பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சந்திரன், திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார், வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமதிக்கனி முனிவர், கங்கா தேவி, காக முனிவர்.

*பாடல்பெற்றதலம்: தேவாரப் பாடல்கள்  பாடியவர்  திருஞானசம்பந்தர்.  

*திருஞான சம்பந்தருக்கு, அவரது 16-வது வயதில் திருமணம் செய்து வைக்க பெற்றோரால் முடிவு செய்யப்பட்டது. முதலில் மறுத்த சம்பந்தர், பின் ‘ஈசனின் விளையாட்டு தான் இது’ என்று கருதி சம்மதித்தார். நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாளை நிச்சயித்தார் சம்பந்தரின் தந்தை சிவபாத இருதயர். ஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். 
ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலநக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார்.       

*ஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.   

*சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது "இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்'' என்று கூறி, "கல்லூர்ப் பெருமணம்' என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார்.

*அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி, "நீயும் உனது மனைவியும் "திருமணம் காண வந்தோர் அனைவரும்"  இந்த ஜோதியில் கலந்து விடுக'' என்று அருள்புரிந்தார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமசிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி, நமசிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுள் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார்.  

"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே''
எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம்  தான் சம்பந்தர் பாடிய கடைசிப்பதிகமாகும்.   

*சம்பந்தருக்கும், அவருடன் வந்த  அனைவருக்கும் சிவஜோதியில் கலக்கும் பேற்றை அளித்த  இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.       

*திருநீறு பிரசாதம்: திருநீற்று அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசினால் நோய் விலகும், முன்ஜென்ம பாவம் விலகும், என்பது ஐதீகம்.      

*பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். 
*விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார்.   
*இந்திரன் போகம் பெற்றான். 
*சந்திரன் அபயம் பெற்றான். 
*கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள்.               

*இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். *சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.
*காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார்.  

*கோவில் அமைப்பு:
சிவலோக தியாகேசர் ஆலயம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் 11 தீர்த்தங்களில் ஒன்றான பஞ்சாட்சர தீர்த்தம் கோவிலுக்கு எதிரில் உள்ளது. இராஜ கோபுரத்தின் வாயிலாக உள்ளே நுழைந்தவுடன் கவசமிட்ட கொடி மரம் மற்றும் நந்தி மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூராணாம்பிகையுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார்.  
*அதை அடுத்து கிழக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதி உள்ளது. சம்பந்தர், அவரது மனைவி மற்றும் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும்  முக்தி தந்தருளியதால் இத்தல ஈசனுக்கு சிவலோக தியாகேசர் என்னும் திருநாமம் வந்தது.  சம்பந்தர், அவரது மனைவி, திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் மற்றும் பல அடியவர்களையும் உள்வாங்கிய லிங்கம், இன்றும் நமக்கு சிவலோக பதவி வழங்க காத்திருக்கிறது. 

*சுவாமி கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், வேலைப்பாடமைந்த தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர்.  ஸ்ரீரிணவிமோசனர் சந்நிதியும், அதையடுத்து ஸ்ரீமகாலட்சுமி சந்நிதியும் கருவறை மேற்கு சுற்றுப் பிரகாரத்தில் உள்ளன. 

*இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதி தனிக்கோவிலாக மேற்கு வெளிப் பிரகாரத்தில் மதில் சூழ்ந்த தனி வாயிலுடன் ஒரு சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது.           

*தல சிறப்புக்கள் : திருஞானசம்பந்தர் திருமணம் நடைபெற்ற இத்தலம், ஒரு சிறப்புபெற்ற "திருமணத் தடை நீக்கும் தலமாக இருக்கிறது". 
*இத்தல இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீங்கும். 
*இங்குள்ள ருணலிங்கேஸ்வரை 
11 திங்கட்கிழமை வழிபட்டு அபிஷேக ஆராதனை செய்தால், நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி அருள் பெறலாம். நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள், நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களில் இருந்தும் விடுதலை பெறலாம். 
*இங்க வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும்.         

*இது தருமையாதீன நிர்வாகத்திலுள்ள திருக்கோயில். 

*திருவிழா: வைகாசி மூல நட்சத்திர நாளில் சம்பந்தரின் திருமண வைபவத்தில், காலை 7 மணி முதல் 8.45 மணி வரை திருஞான சம்பந்தர் உபநயனமும்; மாலை 5 மணிக்கு திருமுறைகள் வீதிவலமும்; 6.30 மணிக்கு மாலை மாற்றும் வைபவமும்; இரவு 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருமணமும் நடைபெறும். பின்பு அதிகாலை 2 மணிக்கு தேவார திருமுறை சம்பந்தர் உடன் ஆலய வீதி உலா நடைபெறும். அதிகாலை 4.45 மணிக்கு சம்பந்தரின் உற்சவ மூர்த்தியை கருவறைக்குள் கொண்டு சென்று மூலவர் காலடியில் வைப்பர். பின் மிகப்பெரிய கற்பூரக் கட்டிகளை ஏற்றி தீபாராதனை செய்வார்கள். அப்போது சம்பந்தர் ஜோதியில் கலப்பதாக ஐதீகம்.  

*அமைவிடம்: சீர்காழியில் இருந்து வடகிழக்கில் 13 கி.மீ. தூரத்திலும், சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் 13 கி.மீ தூரத்திலும் ஆச்சாள்புரம் அமைந்துள்ளது.
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 5 கி. மி. சென்று இந்த சிவஸ்தலம் அடையலாம். சிதம்பரம், சீர்காழியில் இருந்து மயேந்திரப்பள்ளி செல்லும் நகரப் பேருந்துகள் ஆச்சாள்புரம் வழியாகச் செல்கின்றன.

🙏 சிவாயநம

விதவிதமாய் அருளும் நந்தீஸ்வரர்🍁🐮

🐮🍁விதவிதமாய் அருளும் நந்தீஸ்வரர்🍁🐮
✨சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு,கொடி மரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு,நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின்னர் தான் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும்.

✨கொடி மரத்திற்கும்,நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபட வேண்டும்.இந்த நந்தியை அதிகார நந்தி என்பார்கள்.இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்;சிவகணங்களின் தலைவர்.

✨நந்தியானவர் சில திருத்தலங்களில் கருவறைக்கு நேராக இல்லாமல்,சற்றே விலகியபடி காட்சியளிப்பார்.அப்படிப்பட்ட தலங்கள் திருப்புன்கூர்,திருப்பூந்துருத்தி ஆகியவையாகும்.

❄️இவற்றில் இருந்தும் கொஞ்சம் வித்தியாசமாக காணப்படுகிறார்,வடஆற்காடு மாவட்டம் திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோவில் உள்ள நந்தி.
❄️இவர் இறைவனுக்கு புறமுதுகு காட்டியபடி,நின்ற நிலையில் காணப்படுகிறார்.இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது‌.
❄️ஒரு முறை கோவில் அர்ச்சகர்,சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வந்த போது அவரை கஞ்சன் என்ற அரக்கன் வழி மறித்து துன்புறுத்தினான்.
❄️அர்ச்சகர்,இறைவனிடம் முறையிட,இறைவனோ நந்திக்கு கண்ணசைவில் உத்தர விட்டார்.நந்தி உடனடியாக அசுரனை அடித்து துரத்தினார்.
❄️மீண்டும் அசுரன் வருகிறானா?என்பதைப் பார்ப்பதற்காகவே நந்தி கோவிலின் வாசலை நோக்கிய வண்ணம்,இறைவனுக்கு புறமுதுகு காட்டி நிற்பதாக கூறுகிறார்கள்.

✨இதே போல் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் நந்தீஸ்வரர் அருள்புரியும் சிவன் கோவில்கள் மிகவும் போற்றப்படுகின்றன.

✨சிவராத்திரியின் போதும் பிரதோஷ காலத்தின் போதும் இறைவனுடன் அங்கு அருள்பாலிக்கும் நந்தீஸ்வரரையும் வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பர். 

🌀விஷ்ணு நந்தி🌀
சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்தியை அடுத்த படியாக ஒரு நந்தி காட்சி தரும்.அது ‘மால்விடை’ எனப்படும் விஷ்ணு நந்தி. திரிபுர சம்ஹார காலத்தில்,திருமாலே நந்தியாக வடிவம் எடுத்து சிவபெருமானைத் தாங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.கொடி மரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார்.இவரை ‘பிராகார நந்தி’ என்பார்கள். 

🌿தரும நந்தி🌿
சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி,‘தரும நந்தி’எனப்படுவார்.இந்த நந்தியின் மூச்சுக் காற்று சுவாமியின் மீது பட்டுக் கொண்டேயிருக்கும்.அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லும்.

✨பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும்.அவை;
பத்ம நந்தி,
நாக நந்தி,
விநாயக நந்தி,
மகா நந்தி,
சோம நந்தி,
சூரிய நந்தி,
கருட நந்தி,
விஷ்ணு நந்தி,
சிவ நந்தி என்பனவாகும்.இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால்,ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம்.

🪐கும்பகோணம் அருகில் உள்ளது திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவில்.
🪐இங்குள்ள நந்தியம் பெருமான்,கோவில் வாசலை நோக்கியபடி காட்சி தருகிறார்.
🪐ஒரு முறை வேடன் ஒருவன் ஆலயத்திற்குள் வந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தான்.அப்போது அவனது உயிரைப் பறிப்பதற்காக எமதர்மன் ஆலயத்திற்குள் வந்தார்.
🪐அவரை நந்தியும்,துவார பாலகர்களும் தடுக்க எமதர்மன் திரும்பிச் சென்றார்.
🪐மீண்டும் எமன் கோவிலுக்கு வராமல் தடுக்கவே நந்தியம் பெருமான் வாசலை நோக்கி பார்த்தபடி இருப்பதாக கோவில் வரலாறு கூறுகிறது.

🐂விருத்தாசலத்திற்கு மேற்கே 15கி.மீ.தூரத்தில் உள்ளது பெண்ணாடகம்.
🐂இங்குள்ள ஆலயத்தில் கொழுந்தீசர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
🐂ஒரு முறை பெண்ணாடகத்தில் கடும் மழை தொடர்ந்து பெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது.அந்த ஊர் மக்கள் இறைவனை வேண்டவே,இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும் படி ஆணையிட்டார்.
🐂உடனே நந்தியம் பெருமான் கிழக்குப் பக்கமாக வாசலை நோக்கி திரும்பி,வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார்.
🐂அன்றிலிருந்து ஆலய வாசலை நோக்கியபடியே உள்ளார்.

🙏🏻❄️ௐ நமசிவாய❄️

🔥🔱#அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில் உடனுரை மங்களாம்பிகை

🔥🙏🏼51 #சக்தி_பீடத்தில் இக்கோவில் 8 வது சக்தி பீடம் ஆகும்.. 🙏🏼
🔥🔱#அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில் உடனுரை மங்களாம்பிகை
 
 
🙏🏼#மூலவர் : 
கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்)
  அம்மன்/தாயார் : மங்களாம்பிகை
  தல விருட்சம் : வன்னி
  தீர்த்தம் : மகாமகம், காவிரி
  #புராண பெயர் : திருக்குடமூக்கு
 
 #ஊர் : கும்பகோணம்
  மாவட்டம் : தஞ்சாவூர்
  மாநிலம் : தமிழ்நாடு
 
 #பாடியவர்கள்: 
     சம்பந்தர், அப்பர் 
தேவாரப்பதிகம்

நக்கரை யனை நாடொறும் நன்னெஞ்சே வக்கரை உறைவானை வணங்கு நீ அக்கரை யோடு அரவரை யார்த்தவன் கொக்கரை யுடையான் குட மூக்கிலே.

-திருநாவுக்கரசர் 
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 26வது தலம்.

     
  🔥#திருவிழா: 
     
  மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத்திருவிழாவும், சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கி.மீ, தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கு, ஆடிப்பூரம், பங்குனித்திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடி ஏறி, எட்டாம் நாளில் வெண்ணெய்த்தாழி நிகழ்ச்சியும், ஒன்பதாம் நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளில் மூஷிக, மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக திருவிழா ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் சார்பிலேயே நடத்தப்படும். தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது.  
     
  🔥#தல சிறப்பு: 
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 89 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விஷ்ணு சக்தி பீடம், மந்திரிணி சக்தி பீடம் ஆகும்.  
     
 🙏🏼#திறக்கும் நேரம்: 
     
  காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
 👍#முகவரி: 
     
  அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயில், கும்பகோணம்- 612 001, தஞ்சாவூர் மாவட்டம்.  
     
 போன்: 
     
  +91-435- 242 0276.  
     
  பொது தகவல்: 
     
  
மலையாள ஆண்டின் (கொல்லம்) துவக்க மாதமாக சிம்மம் எனப்படும் ஆவணி உள்ளது. இம்மாதத்தில் சூரியனின் நிலையைப் பொறுத்தே ஆண்டு முழுவதும் சீதோஷ்ண நிலை அமையும். எனவே, சூரிய பகவானை மகிழ்ச்சிப்படுத்தும் பொருட்டும், பயிர்களை அழிக்கும் எலிகள் முதலான ஜந்துக்களிடமிருந்து பாதுகாப்பு பெற நாகராஜாவை வேண்டியும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.

🔥#உலகம்_அழிந்த போது, உயிர்களை மீண்டும் இவ்வுலகில் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவபெருமான், பிரம்மா மூலம் படைப்புக்கலன்களை ஒரு கும்பத்தில் வைத்து காப்பாற்றினார். இதனால் "கும்பேஸ்வரர்' என்று பெயர்பெற்றார். கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் இவரது தலத்திலும் ஆவணி ஞாயிறன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

ராஜகோபுரம் வழியாக நுழைந்து, நீண்ட மண்டபத்தை கடந்து, பலி பீடத்தையும் கொடி மரத்தையும் வணங்கி, வாசலில் உள்ள நந்தி தேவரிடம் அனுமதி பெற்று கோயிலுக்குள் நுழைய வேண்டும். கும்பேஸ்வரரை வணங்கிய பிறகு, முதல் பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், காமதேனு, பவலிங்கம், சர்வ லிங்கம், ஈசான லிங்கம், பசுபதி லிங்கம், ருத்ர லிங்கம், உக்ர லிங்கம், பீம லிங்கம், மகாலிங்கம், தெட்சிணாமூர்த்தி ஆகியோரை தரிசித்து, சற்று தள்ளியுள்ள வலஞ்சுழி விநாயகரை வணங்க வேண்டும். பின்னர் பிட்சாடனர், முருகன், அட்சயலிங்கம், சகஸ்ரலிங்கம், அன்னபூரணி, கஜலட்சுமி, மகாலட்சுமி, கோஷ்டத்திலுள்ள பிரம்மா, சரஸ்வதி ஆகியோரை வழிபட்டு அம்மன் சன்னதியை வணங்க வேண்டும்.பிறகு கண்ணாடி அறையில் இறைவன் பள்ளி கொண்டுள்ள காட்சியை கண்டு, அஷ்ட புஜ துர்கையை வணங்கி, அருகிலுள்ள நவநீத விநாயகர், கிராத மூர்த்தி, பைரவர், கால பைரவர்,ஜுரகேஸ்வரர், சாஸ்தா, மகான் கோவிந்த தீட்சிதர், நாகாம்பாள் ஆகியோரை தரிசிக்க வேண்டும்.  இதன்பிறகு, நவக்கிரகமண்டபத்தை சுற்றி கோயிலிலிருந்து வெளியேற வேண்டும். இம்முறைப்படி வணங்கினால், வாழ்வுக்குத் தேவையான பாதுகாப்பு அனைத்தும் கிடைக்கும்.

🔥🙏🏼#பிரார்த்தனை 
     
  கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.  
     
 🙏🏼#நேர்த்திக்கடன்: 
     
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும்,நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.  
     
  🔥#தலபெருமை: 
     
நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகப்பெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகத்தார்க்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில், இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. பெரும்பாலான கோயில்களில் சுவாமி, அம்பாள் பிரகாரங்களை தனித்தனியே சுற்றிவரும் அமைப்பே இருக்கிறது.

இங்கு மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது. இது சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.

நவராத்திரி மண்டபத்தில் ஒரு சிங்க வாகனம் தனது தலையில் நீண்ட படுக்கை கற்களை தாங்கியபடி அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். கோயிலின் முன்பு பொற்றாமரைக்குளம் இருக்கிறது. மகாமகத்திற்கு வருபவர்கள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரைக்குளத்திலும் நீராடுவர்.

நவகன்னியரான நதிகள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரை குளத்தில் நீராடினர் என்பது ஐதீகம். வெளிப்பிரகாரத்தில் கும்பமுனிசித்தர் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும்.

🔥🙏🏼#மங்கள நாயகி: இத்தல அம்மனுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள் ஆகிய திருநாமங்கள் உண்டு. சம்பந்தர் இவளை "வளர்மங்கை' என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக "மந்திரபீடேஸ்வரி' என்ற திருநாமமும் பெறுகிறாள்.அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது.

அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருள்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

🔥#மகாமக தீர்த்தம்: ஊரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தின் போது அமுத குடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை "பூமி குழிந்து தாங்குக' என சிவபெருமான் நினைத்ததால் அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. இங்கு தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது தான் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு ஆகிய 9 நதிகளும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள நீராடுவதாக ஐதீகம். மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும், அவரைச்சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன.

🔥🔱#சிவனும் அம்மனும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்ததால் இத்தல விநாயகர் "ஆதி விநாயகர்' எனப்படுகிறார். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திர பீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இங்குள்ள கார்த்திகேயர் ஆறுமுகம், ஆறு திருக்கரங்களுடன் உள்ளார். இது போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை என கூறப்படுகிறது. இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

சிவபெருமான் வேடர் (கிராதர்) வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இங்கு கிராதமூர்த்திக்கு சன்னதி உள்ளது. மகம் நட்சத்திர நாளில், இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தால் விரும்பியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

 🙏🏼🔥#தல வரலாறு: 
     முன்னொரு காலத்தில் தண்ணீரால் உலகம் அழிய இருந்த போது, பிரம்மா தனது படைப்புத்தொழிலை எங்கிருந்து ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், ""நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய்.

அந்தக் கும்பத்தில் அமுதத்தை நிரப்பி, படைப்புக் கலன்களை அதனுள் வைத்து நீரில்மிதக்க விடு,'' எனச்சொல்லி அதை மிதக்கவிடும் முறை பற்றியும் விளக்கமாகத் தெரிவித்தார். இதன்படியே பிரம்மா செய்த கும்பம் வெள்ளத்தில் மிதந்தது. அந்தக் குடம் ஒரு இடத்தில் தங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். இதனால் கும்பத்தின் மூக்கு சிதைந்தது.

கும்பத்திலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் வெண்மணலுடன் கலந்து ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே "கும்பேஸ்வரர்' எனப் பெயர் பெற்றது.

 
     
 🔥#சிறப்பம்சம்: 
     
  அதிசயத்தின் அடிப்படையில்: 
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது..🙏🏼

இதனால் சுடுகாட்டுப் பித்தன் என்று சிவனுக்கு ஒரு நாமம் உருவானது.

கார்த்திகையில் காவல் தெய்வங்கள் விரதம் 🙏🙏🙏
பிரபஞ்சத்தில் மனிதன் உருவெடுத்தபோது எதிர்பாராத நிகழ்வுகளை, இயற்கை இடையூறுகளை சந்திக்க முடியாமல் அதைக் கண்டு அஞ்சியவன்.

அச்சத்தின் காரணமாக அதை வணங்க முன்வந்தான். அதுபோல் கொடும் மிருகங்களையும் வணங்கினான். அதன்பிறகு இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து அவனைக் கைதொழுதான். படிப்படியாக மனிதன் நிலைமாற வழிபட்ட கடவுளின் நிலையையும் அவன் மாற்றினான். ஆம் உருவம் கொடுத்தான். பிறப்புக்குக் காரணமான ஆணைவிட பெற்றெடுப்பது பெண்தான் என்பதால் பெண்கடவுள் சக்தி கொண்டவள் என்பதை அறிந்து பெண்கடவுளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வழிபடலானான்.

நிலம், ஆறு, கடல் என பலவற்றையும் பெண்ணாக கருதினான். இவ்வாறு உருவான கடவுள் வழிபாடு கோயில்வழிபாடாக மாறியது. திருவிழா காண நேர்ந்தது. அதன் பின் வசதி படைத்தவன், வசதி அற்றவன் என பிரிவு எழுந்தது. அதுவே கோயில் வழிபாடுகளிலும் உருவானது. இதுவே பின்னர் இனப்பிரிவானது. பெருங்கோயில், சிறு கோயில் என உருவானது. இதனிடையே பார்வதி தேவி எடுத்த மாகாளி அவதாரத்திற்கு பின்னர் பூலோகத்தில் மீண்டும் மந்திரசக்தியின் ஆதிக்கம் மேலோங்கியது. 

இதை கவனித்த தேவர்கள் பிரம்மனிடமும், மகாவிஷ்ணுவிடமும் முறையிட்டனர். அவர்கள் சிவனிடம் கூறினர். ''சுவாமி, மந்திரசக்தி மேலோங்குகிறது. இதை உடனே தடுக்காவிட்டால் படைத்த உயிர்களை எப்படி காப்பது?'' என்று கேட்டபோது, 'மாந்த்ரீக சக்திகளுக்கு முடிவு கட்ட விரைவாக தீர்வு காண்போம்' என்று கூறிய சிவன், மந்திரமூர்த்தியாக அவதாரம் எடுக்க முடிவுசெய்தார்.

அதன் காரணமாக சிவன், 61 மாடன்களையும், மாடத்திகளையும் உருவாக்கினார். அவர்கள்தான் சிவனின் இயக்கியவர்களாக (சேவகர்களாக) செயல்பட்டனர். அவர்களே சிறு தெய்வங்களில் முதன்மையானவர்களாக திகழ்ந்தனர். இதுபோல் விதி முடியும் முன்னே தன்னைத்தானே அழித்ததன் பேரில் மாண்டுபோன மனிதர்களின் ஆவிகள் மக்களை அச்சுறுத்தியது. இதனை அறிந்த தேவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். அந்த ஆவிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு சுடலை வனத்திற்கு காவலாக வருகிறார். 

இதனால் சுடுகாட்டுப் பித்தன் என்று சிவனுக்கு ஒரு நாமம் உருவானது. மகாவிஷ்ணுவும், சக்தியும் சிவனிடம் வேண்ட, சிவபெருமான் தனது சக்தியின் மூலம் சுடலைமாடன் போன்ற தெய்வங்களை அவதரிக்கச்செய்து அவர்களை சுடுகாட்டுக்கு காவலாய் வைத்தார். சுடலைமாடன், பேச்சி, பிரம்மராட்சி, இசக்கி, தளவாய்மாடன், கரடி மாடன், கொம்பு மாடன், இருளப்பன், கருப்பன், கருப்பண்ணசாமி, தூசி மாடன், மாரியம்மன், முத்தாலம்மன், முண்டன், புதியவன், திருவரங்கச் செல்வி, முனீஸ்வரன், முப்பிடாதி, காந்தாரி, உச்சிமாகாளி, வண்டிமலைச்சி, சந்தனமாரி, முத்தாரம்மன், முத்துமாலையம்மன், குழலியம்மன் ஆகிய தெய்வங் களின் வரிசையில் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த முத்துவீரன், சேர்வராயன், பலவேசம் சண்டையில் இறந்த பட்டவராயன், வண்ணாரமாடன், பலியிடுதலில் இறந்த கசமாடன், வன்னியராயன், சின்னதம்பி, மாசானம், கட்டையேறும் பெருமாள், கொலை செய்யப்பட்ட பொன்னியம்மன், மாடத்தி, தற்கொலை செய்துகொண்ட மாலையம்மன், நல்லதங்காள், பாப்பாத்தியம்மன், பொம்மக்கா, திம்மக்கா, தீப்பாச்சி அம்மன், அம்மணி அம்மன், சுந்தரநாச்சியார், நீலகேசி, பொய்லாம் பூச்சியம்மன், பூலங்கொண்டாள், அருணாலட்சுமி அம்மன், ஜக்கம்மா என பல்வேறு தெய்வங்களை வழிபடலாயினர்.

இந்த தெய்வங்களுக்கு ஊரைக்காக்கும் எல்லை தெய்வங்களாக ஊரின் எல்லையில் அல்லது ஊரின் நடுவில் கோயில் எழுப்பினர். இதில் சில கோயில்கள் ஊர்க்கோயிலாக உள்ளன. அதாவது ஊரில் உள்ள அனைவரும் வரி செலுத்தி அந்த வருவாயில் கோயிலுக்கு விழா நடத்துவது. 

சில கோயில்கள் இனக் கோயில்களாக, குடும்பக் கோயில்களாக, தனிநபர் கோயில்களாக உள்ளன. இனக்கோயிலாக இருக்கும் கோயில்களில் எல்லோரும் வழிபட்டு வந்தாலும். ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டுமே வரி என ஒரு தொகையை நிர்ணயம் செய்து பணம் வசூலித்து விழா நடத்துவர். இதுபோல் குடும்பக் கோயில்களில் அந்த குடும்பத்தினர் மட்டும் பணம் பிரித்து விழா நடத்துவர்.இத்தகைய சிறுதெய்வ, கிராமதெய்வக்கோயில்களில் விழாவின் போதும், தமிழ் மாதக் கடைசி வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளின் போதும். ஆடு, கோழி என உயிர்ப் பலிகள் உண்டு. 

பல கோயில்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடுகின்றனர். இத்தகைய கோயில்கள் மிகுதியாக மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் மலையோர மாவட்டமான தேனி, சேலம், கிருஷ்ணகிரி, நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் உள்ளன.
குறிப்பாக சிறு தெய்வங்களுக்கு சேனாதிபதியாக விளங்குவது சாஸ்தா. அந்த சாஸ்தாவின் கலியுக அவதாரமான ஐயப்பனுக்கு உகந்த மாதம் கார்த்திகை. ஆகவே கார்த்திகை மாதத்தில் மட்டும் சிறுதெய்வக் கோயில்களில் திருவிழா நடத்துவதில்லை. 

சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டாலும் அதில் உயிர்ப்பலிகள் இல்லை. காரணம் கார்த்திகை மாதத்தில் தெய்வங்கள் விரதம் இருப்பதாக சொல்லுகின்றனர். பெரும்பாலான கிராமங்களில் கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் கோயிலோடு தொடர்புடையவர் ஒருவர் சென்று விளக்கு ஏற்றுவார்.

கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி மாத தொடக்கத்தில் வரும் முதல் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வெண் பொங்கலிட்டும், சர்க்கரைப் பொங்கல் படைத்தும் பலியிடுகின்றனர். கார்த்திகை மாதம் முழுவதும் எந்தவித பலியிடுதலும் இல்லை. சிறுதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் பெரும்பாலான பக்தர்களின் வீடுகளிலும் அசைவ சமையல் செய்வதில்லை. காரணம் நம்ம சாமியே கார்த்திகை மாதம் விரதமிருக்கும் நிலையில் நமக்கு மட்டும் ஏன் அசைவ உணவு என்று முடிவு செய்து அவர்களும் தங்கள் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.

61 மாடன்கள்.......

1. அருவாமாடன், 2. அத்திமாடன், 
3. அகழிமாடன், 4. அக்னி மாடன், 
5. அடுப்படிமாடன், 6. அன்னமாடன், 
7. அரிமுத்து மாடன், 8. அரகுலமாடன், 
9. அரையடிமாடன், 10. அரசடி மாடன், 
11. ஆண்டிமாடன், 12.ஆவேசமாடன், 
13. ஆகாச மாடன், 14.ஆலடிமாடன், 
15. இசக்கிமாடன், 16.ஈனமாடன், 17.ஈனமுத்துமாடன், 18.உடுக்கைமாடன், 19. உறிமாடன், 20. உதிரமாடன், 
21. ஊசிக்காட்டு மாடன், 22. எசமாடன், 
23. ஏறுமாடன், 24. ஒளிமுத்துமாடன், 
25. ஒய்யாரமாடன், 26. ஓங்காரமாடன்,
27. கசமாடன், 28.கரடிமாடன், 
29. சக்திமாடன், 30. சிவமாடன், 
31. பன்றி மாடன், 32. பரன்மாடன், 33.படித்துறைமாடன், 34. தேரடிமாடன், 
35. குளக்கரை மாடன், 
36. கிணத்தடிமாடன், 37. வேம்படிமாடன், 38. பனையடிமாடன், 39.மடையடிமாடன், 40.கரையடிமாடன், 41. செக்கடிமாடன், 
42. தெப்பக் குளத்து மாடன், 
43. வயக்கரை மாடன், 
44. வாழை மரத்தடி மாடன், 45.சுடுகாட்டுமாடன், 46.நல்லமாடன், 47.நடுக்காட்டுமாடன், 48. வண்டிமாடன், 49. முச்சந்திமாடன், 50. சந்தையடிமாடன், 51.வண்ணாரமாடன், 
52. வெள்ளாவி மாடன், 
53. அணைக் கரைமாடன், 
54. சப்பாணிமாடன், 
55. கொம்புமாடன், 56. கொடிமரத்து மாடன், 57. தூசிமுத்துமாடன், 
58. குதிரமாடன், 59. பிச்சிப்பூமாடன், 
60. பூக்குழிமாடன். 61. பேச்சி மாடன்.

உடுப்பி கிருஷ்ணன் பின்புறமாக அமர்ந்த ஒரே ஒரு சிலை. தயிர் கலந்த மருந்தை கையில் ஏந்திய குழந்தை

_உடுப்பி கண்ணன்
ஸ்ரீகோவிலில் உடுப்பி கிருஷ்ணன் பின்புறமாக அமர்ந்த ஒரே ஒரு சிலை. தயிர் கலந்த மருந்தை கையில் ஏந்திய குழந்தை கிருஷ்ணன் இங்கே.
'திக்வாசம் கனக பூஷித பூஷிதங்கம்'
சொல்லும் அழகான தோற்றம்.
இடுப்பில் ஒரு அணில் கூட இல்லை. ஆனால், யசோதா அணிந்திருந்த அனைத்து ஆபரணங்களும் இன்னும் அங்கே உள்ளன. ஸ்ரீகோவிலின் பின்புறம்
பறவை வாயிலில் தங்க ஆபரண கண்களுடன் நிற்கும் கருப்பு கிருஷ்ணனை பார்க்க எவ்வளவு அழகு?
கண்ணன் ஏன் இப்படி திரும்பினார் தெரியுமா?
பக்தியின் மகத்துவத்தையும் கண்ணனின் பக்தியையும் உணர்த்தும் ஒரு சம்பவம் இதற்கு பின்னால் இருக்கிறது.
ஆபிரகாமாக இருந்த கனகதாசர் முழுமையான கிருஷ்ண பக்தர். கோவிலுக்குச் சென்று கண்ணனைச் சந்திக்க வேண்டும் என்ற அடங்காத ஆசை அவனுக்கு இருந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? அநீதிக்கு கட்டளையிட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர்.
கோவிலுக்கு முன்னால் செல்லும் வழியில் கூட
அது ஒரு காலம் வந்திருக்கக்கூடாதது. கோவிலின் பின்புறத்தில் அமர்ந்து கண்ணனை மனதில் வைத்து கீர்த்தனைகள் பாடுவார். ஒவ்வொரு நாளும் கடக்க அவனுக்கு கண்ணனை காண ஆசை அதிகரித்தது. ஒரு நாள் அவர் மனதை உருக்கும் சோகத்துடன் பாடினார்
"கிருஷ்ணா நீ பேகனே பரோ... '
பெகனே பரோ முதல்வர் தோரோ'
கிருஷ்ணா நீ சீக்கிரம் வா
அந்த திருமுகத்த காட்டு வாங்க
கலாலண்டிகே கஜ்ஜே நீலாட பாவுலி நீலவர்ணன் பாரோ வாசித்தவர்
உங்கள் கால்களை வைத்து, நீல வளையல்களை அணிந்து கொள்ளுங்கள், நீல நிறத்தில் நடனமாடுங்கள்
உடியல்லி உடிகஜ்ஜே, விரலல்லி மோதிரம்;
ஹகிதா வைஜயந்தி ஆண் அழைக்கவும்
இடுப்பில் மணியுடன் அரஞ்சனம், விரலில் மோதிரம், கழுத்தில் வைஜயந்தி கழுத்தில் அணிந்திடு
காஷி பீதாம்பர கைவேலை செய் பூசீத ஸ்ரீகந்த கமகம
கையில் குழாயோடு. உடம்பில் பூசும் சந்தன வாசனை காசி மஞ்சள் பட்டு உடுத்தி வா
(காசியில் பட்டு மிகவும் விசேஷமானது)
உலகத்துக்கே எஜமான் நாமே உலகத்துக்கே அன்னையே நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர்
தன் தாய்க்கு வாய் திறந்து மூவுலகையும் காட்டிய உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ணா வா வா
கடைசி வரியை பாடும் போது அவர் அழுதார். உன் பிஞ்சு வாயில் அண்டத்தை காட்டிய கண்ணா, உலகை மேற்கோள் காட்டும் என் முன் நீ வருவதென்ன கஷ்டம்? இந்த வரிகளில் இன்னும் ஒரு சோகம் நீ வரவில்லை என்று. அந்த பக்தனின் சோகம் தாங்க முடியாமல் கண்ணனும் பக்தியால் சோர்ந்து போனான். சட்டென திரும்பிப் பார்த்தான் கண்ணன். கையில் இருந்த மதுவை வைத்து சுவற்றில் ஓட்டை போட்டு கனகதாசர் தரிசனம் தந்தார். பின்னர் அந்த சிலை முன்பு போலவே
அதை திரும்பப் பெற யாருக்கும் தைரியம் இல்லை. ஆதலால், ஸ்ரீகோவிலின் பின்புறத்தில் அமர்ந்திருக்கும் உடுப்பி கிருஷ்ணன் கோயில்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை

குல தெய்வ வழிபாட்டின் மகிமை
குல தெய்வ வழிபாட்டின் மகிமை
குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது
குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்க கூடாது
குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை
குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு!
5) குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை
எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்
குலதெய்வத்தை வணங்குங்கள்
உங்கள் வம்சத்தை காக்க முதலில் படி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான்
வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம்
9) நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்
10} குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை
குலதெய்வம் நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகள் பலன்களையும் பெற்றுத் தரும்
குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தி அளவிட முடியாது சிறுதெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆரும்
இந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வாழ்வு படைத்தவை
எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன!
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்
குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது
18) குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான்
இந்த குலதெய்வம் மனிதன் வௌகீக/இல்லற வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது
குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது!
குலதெய்வ வழிபாடு முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும்
வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீக வழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்!
குலதெய்வத்தை மறப்பது நம் அம்மா. அப்பாவை மறப்பது
குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்குச் சமம்
குலதெய்வ வழிபாட்டினால் தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது கல்வி, திருமணம் அமைவது. தொழில் விருத்தி கிடைப்பது. குழந்தை வரம் பெறுவது முதலிய பயன்கள் பெறலாம்.
குலதெய்வ வழிபாடு இல்லாமல் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் அவற்றின் பலன்கள் கிடைக்காது!
குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது
குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால் நவக்கிரகங்களும் துணை நிற்கும்
துன்பமான நேரத்தில் நம் தாயை போல காப்பது குலதெய்வம் ஆகும்' நாள் செய்யாததை கோள் செய்யும், கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்
குலதெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை சார்ந்த நீங்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விசயங்கள் தள்ளி போகும். ஆகவே எல்லோரும் வராது குலதெய்வ வழிபாட்டை செய்து சந்தோசமாய் இருங்கள்
ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே படாது அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி, ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் நான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்துவிடும்
குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனை கண்ட பனி போல் விலகி விடும்!
குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்!
குலதெய்வ வழிபாடு என்பது இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடு என்பதினால் தான்
குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்படும் அது ஜென்மங்களுக்கு தண்டனை கிடைக்கிறது
B) நாம் நம் குல தெய்வத்தை வழிபடும் போது நமக்கு வரும் வினைகள் இன்னல்கள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது
உங்கள் வீட்டிலேயே குல தெய்வ படத்தை அலங்கரித்து பாரம்பரிய வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்!
நீங்கள் ஒரு வேளை குலதெய்ல வழிபாட்டை மறந்து இருந்தால் முதலில் மீண்டும் தொடங்குங்கள், வேறு எந்த தெய்வமும் அதற்கு இவை இல்லை

சிதம்பர ரகசியம் - சித்தம் போக்கு, சிவன் போக்கு!

சிவ சிவ

சிதம்பர ரகசியம் - சித்தம் போக்கு, சிவன் போக்கு!
==================================

திருவாரூரில் “திருச்சிற்றம்பலம்” என்று சொல்வதில்லை. மாறாக "ஆரூரா, தியாகராஜா" என்றே சொல்லப் படுகிறது. மேலும் வன்மீகம் என்னும் புற்றில் இருந்து ஈசன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியமையால், இது ப்ருத்வித் தலம் என அழைக்கப் படுவதாயும் அறிகிறோம். திருமாலால் பாற்கடலில் வழிபடப் பட்டு, பின்னர் அவரிடமிருந்து இந்திரன் பெற்று, இந்திரனிடமிருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியை வந்து அடைந்து ஆரூரில் கோயில் கொண்ட தியாகராஜருக்கே இங்கே முதல் மரியாதை! தில்லையில் ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜரின் அழகை இப்போது சற்று பார்ப்போம்.

"குனித்த புருவமும்,கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே!" என்றார் நாவுக்கு அரசர். இறைவனின் திரு அழகில் மயங்கிய அவர் இம்மாதிரி வர்ணிப்பது மிகை அன்று என்றாலும், அவர் தம் வர்ணனையில் மறைந்திருக்கும் பொருள் என்ன வென்றால்,

குனித்த புருவமும் = பரத நாட்டியத்தில் புருவங்கள் ஏறி இறங்குவதின் மூலம் பாவங்களை வெளிப்படுத்தும் கலை உண்டு அல்லவா? இங்கே இறைவன் தன் புருவங்களைக் குனிப்பதின் மூலம் அடியார்களின் குறைகளைக் கூர்ந்து கேட்டு அறிந்து, தன்னையே சரண் என வந்தவர்களின் குறைகளைக் களையும் விதமாய்ப் புருவம் குனித்துக் கொள்வதாயும்,

கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்= தன்னை அடைக்கலம் என நம்பி வந்தோரை வருக என வரவேற்று அவர்களின் பிழைபொறுக்கும் விதமாய் கருணையுடன் கூடிய சிரிப்பையும்,

பனித்த சடையும்= சிவநெறியாளர்க்கு உரிய ஒழுக்கத்தைக் காட்டும் விதமாய் அமைந்ததாம் அந்தச் சடை

பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்= நெருப்பை ஒத்த வண்ணத்தை ஒத்த இறைவன், தன்னிடம் நெருங்கும் பொருட்களை நெருப்பானது எவ்விதம் எரித்துத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறதோ, அவ்வாறே இறைவனும் தன்னிடம் நெருங்கும் அடியார்களைத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறான் என்னும் விதமாய்

இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்=இறைவன் தன் தூக்கிய திருவடியால் அனைத்து உயிர்களையும் பிறவிக்கடலில் இருந்து விடுவிக்கிறான். ஊன்றிய திருவடியால், இப்பிறவியின் அனைத்துக் கருமங்களான ஆணவம், கன்மம், மாயையை அழுந்தித் தேய்த்து அவற்றை அகற்றுகிறான். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடல் வல்லானின் ஆடல் திருக்கோலத்தைக் காணப் பெறுவோருக்கு வேறு என்ன வேண்டும் இந்த உலகில்? இதைவிடப் பேரானந்தம் வேறே உண்டோ? என்கிறார் அப்பர்.

இறையவன் ஆடல் தெற்கு நோக்கியே இருக்கிறது. தென் திசை யமதர்மனின் திசை என்பர். அந்த யமபயத்தை நீக்கி நம்மைப் பேரருட்கடலில் ஆழ்த்தி நம்மை உய்விக்கவும், தெற்கே இருந்து வீசும் தென்றல் காற்று சுமந்து வரும் தென் தமிழின் மகத்துவத்துக்கும், மணத்துக்காகவும் கூட இருக்கலாம். 

"சித்தம் போக்கு சிவன் போக்கு" என்பர். 

இவன் போக்கை யாரோ கண்டார்? 

தன் கையில் உள்ள உடுக்கையைக் கொட்டிக் கொண்டு இவ்வுலக ஆன்மாக்களின் மாயையை உதறுகிறான். ஏந்திய நெருப்பால் கன்ம மலத்தைச் சுட்டுப் பொசுக்குகிறான். ஊன்றிய திருவடியால் ஆணவத்தை அகற்றுகிறான். தூக்கிய திருவடியால் பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுவிக்கிறான். அபய ஹஸ்தம் காட்டி உயிர்களுக்கு "அஞ்சேல்" என அபயம் அளிக்கின்றான்.

 தண்ணொளி வீசும் திருமுகத்தினால் அனைவருக்கும், அனைத்துக்கும் "நானே தலைவன்" எனத் தெரியப் படுத்துகிறான். திருமுடியில் சுமந்திருக்கும் கங்கையின் மூலம் அவன் பேராற்றலையும் உயிர்களைத் தடுத்தாட்கொள்ளும் வேகத்தையும் வெளிக்காட்டுகின்றான். பித்தனாகிய அவன் பிறையைத் தன் தலையில் சூடியதின் மூலம், தன்னைச் சரண் என வந்தடைந்தவர்களைக் கைவிடாமல் காப்பான் எனவும் தெரிவிக்கின்றான். ஆடலரசனே சரணம், 

அவன் திருவடிகளே போற்றி, போற்றி!

Saturday, November 26, 2022

🛕கோவில் தரிசனம் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினால் கோடி புண்ணியம் கிட்டும்.

#🛕கோவில் தரிசனம் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினால் கோடி புண்ணியம் கிட்டும்.
 திருவண்ணாமலை சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க இயலாதவர்கள் மனதால் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.  
 சிவபெருமானின் வடிவங்களில் அர்த்தநாரீஸ்வர வடிவமும் முக்கியமான ஒன்றாகும். சிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர் சக்திதேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டும் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பராசக்தி பிருங்கிமுனிவரின் சக்தியை பறித்து விடுகிறார்.
 உடலில் சக்தி இல்லாமல் பிருங்கி முனிவர் துவண்டு போனார். இதை கண்ட சிவபெருமான் சிவனும் சக்தியும் ஒன்றே என்பதை இவர்கள் மூலமாக உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திதேவியை விட்டு பிரிந்தார் ஈசன்.     
 சிவபக்தரை சோதித்துவிட்டோமே என வருந்திய சக்திதேவி தன் தவறை உணர்ந்து சிவலிங்கமே மலையாக இருக்கும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று தவம் செய்தார். தவத்தை ஏற்ற சிவபெருமான் சக்திதேவிக்கு காட்சி தந்து தனது இடதுபாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார்.     
 ஆகவே கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான் அர்த்தநாரீஸ்வராக வலம் வருவார். இந்த நாளில் அர்த்தநாரீஸ்வரரின் தரிசனத்தை கண்டால் கோடி புண்ணியம் கிட்டும். திருவண்ணாமலை சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க இயலாதவர்கள் மனதால் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.🙏

Friday, November 25, 2022

ரீவாஞ்சியம் காவிரி தென்கரையில் அமைந்துள்ள 70 வது தலம்.♦️இது அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்று மூவரால் பாடல் பெற்றது.

#பயணங்கள்
#தேவாரத்தலங்கள்
#திருவாஞ்சியம்
          பயணங்கள் எப்பொழுதும் அதிக திட்டமிடல் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட ஊரை நோக்கி செல்லத் தொடங்கினால் சுவையான அனுபவங்கள் கிடைக்கக் கூடும் .நாங்கள்  நிச்சயம் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த ஒரு ஊரை  எதிர்பாராமல் போகும் வழியில் பெயர்பலகையில் பார்த்து சென்று தரிசனம் செய்தோம்.
அது தான் ஸ்ரீவாஞ்சியம்.
        திருவாரூர் நோக்கி சென்ற போது இந்தப் பெயரைக் கண்டவுடன் அங்கு சென்றோம். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 25கிமீ தொலைவில் உள்ளது.
       அந்த ஊருக்கு பல சிறப்புகள் உள்ளன.

  ♦️ஸ்ரீவாஞ்சியம் காவிரி தென்கரையில் அமைந்துள்ள 70 வது தலம்.
♦️இது அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்று மூவரால் பாடல் பெற்றது.
 ♦️மங்கலாம்பிகை உடனுறை வாஞ்சிநாத சுவாமி எழுந்தருளியுள்ள கோவில்.
♦️காசிக்கு இணையான 6 தலங்களில் இதுவும் ஒன்று.அவை மாயவரம், சாயாவனம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு,திருவிடைமருதூர் மற்றும் திருவையாறு.
♦️மாணிக்கவாசகரும் பாடியுள்ளார்.
♦️சந்தன மரம் தல விருட்சம்.
 ♦️குப்த கங்கை  தீர்த்தம்.
♦️எமன் மனக்கவலை நீங்கப் பெற்றத் தலம்.
♦️இங்கு முதலில் எமனை வணங்கி பின் வாஞ்சிநாத சுவாமியை வணங்க வேண்டும்.
 ♦️எமன் இத்தலத்தில் க்ஷேத்திர பாலர் ஆவார்.
♦️கொடுப்பினை இருந்தால் தான் இந்த இறைவனை வணங்க முடியும் என்பது நம்பிக்கை.
♦️எம பயம் நீக்கும் தலம்.
♦️அமர்ந்த நிலையில் யோக பைரவர் உள்ளார்.
♦️ஒரே கல்லில் ஆன ராகு கேது தனி  சிறப்பு.
♦️பிற்கால சோழர்களின் கல்வெட்டுகள் உள்ளன.
♦️இது பித்ரு கடன் நிவர்த்தி தலம்.
♦️இது ராகு கேது பரிகாரத் தலம்.

மதுரை #தெப்பக்குளம்#முக்தீஸ்வரர்#மரகதவல்லிஅம்மன்திருக்கோயில் வரலாறு

மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றான
#மதுரை #தெப்பக்குளம்
#முக்தீஸ்வரர்
#மரகதவல்லிஅம்மன்
திருக்கோயில் வரலாறு:

இந்த உடலில் உயிர்க்காற்று அந்த ஆண்டவன் கருணையால் ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதியில் அந்தக் காற்று சேர வேண்டிய இடமும் அவன் திருவடிதான். அப்படி உயிர்களுக்கு முக்தியை அளித்துக் காக்கும் இறைவனை 'முக்தீஸ்வரர்' என்ற திருநாமம் கொண்டு அழைப்பது வழக்கம்.

இந்திரனின் வாகனமான வெள்ளை யானை (ஐராவதம்) சாபவிமோசனம் பெற்ற ஸ்தலம்.இக்கோயிலானது
மதுரையிலுள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு தத்துவ ஸ்தலமாகும். சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் இதுவும் ஒன்று.

மூலவர்: முக்தீஸ்வரர்

அம்பாள்: மரகதவல்லி தாயார்

சிறப்பு: மதுரையின் வாயு ஸ்தலம்

விசேஷம்: சூரிய ஒளி இறைவனை பூஜிப்பது

விநாயகர்: வில்வ விநாயகர்

தலவிருட்சம்: வில்வம்

தீர்த்தம்: வைகை

ஊர்: மதுரை

புராணப் பெயர்: ஆலவாய்

தல வரலாறு:

சிவனின் 64 திருவிளையாடல்களில், இரண்டாவது திருவிளையாடல் நடந்த இடம் தான், ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோவில்.
இத்திருவிளையாடலின் முக்கிய கதாநாயகன் ஐராவதம் என்ற யானை. இந்த யானை எப்படி இங்கு வந்தது, எங்கிருந்து வந்தது, ஏன் வந்தது என்பதை விவரிக்கிறது, அய்யனின் திருவிளையாடல்.

ஐராவதம் என்ற வெள்ளை யானை, தேவலோகத்தின் யானை. இது இந்திரனின் வாகனம் ஆகும்.துர்வாச முனிவர் ஒருநாள் இந்திரனைக் காண தேவலோகத்துக்கு வந்தார். சிவ பூஜை முடித்து விட்டு பிரசாதமாக மலர் மாலையைக் கொண்டு வந்து தேவேந்திரனிடம் கொடுத்தார். சிவ பிரசாதத்தின் மகிமையையோ, முனிவரின் தவ வலிமையையோ அறியாத ஐராவதம், அகங்காரம் அதன் அறிவை மறைக்க, மலர் மாலையைத் தும்பிக்கையால் இழுத்து, தன் காலடியில் போட்டு மிதித்தது.

இதனால் ஐராவதம் துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளானது. சாபம் பெற்ற யானை பல நூறாண்டுகள் காட்டு யானையாக அலைந்து திரிந்து கொண்டிருந்தது. சிவனுக்கு பூஜை செய்வதினால் சாப விமோசனம் பெற்றது.

சாப விமோசனம் பெற்ற தன் வாகனத்தை அழைத்து செல்வதற்காக இந்திரன் வருகிறார். தேவலோகம் செல்லும் முன் மீண்டும் சிவ பூஜை செய்ய வேண்டும் என்று ஐராவதம் விரும்புகிறது எனவே தன் பெயரிலேயே மதுரையின் கிழக்கே ஒரு பகுதியை உருவாக்கி முக்தீஸ்வரரை பூஜித்து பின் இந்திரனுடன் தேவலோகம் செல்கிறது. 

முக்தி தரும் சிவன்:

பூமியில் பிறக்கும் அத்தனை ஜீவராசிகளுக்கும் முக்தியைக் கொடுக்கும் தலம் மதுரையம்பதி அல்லவா! இதனை "ஜீவன் முக்திபுரம்" என்று ஹாலாஸ்ய புராணம் வர்ணிக்கிறது.

ஐராவதம் போன்று, இம் மதுரையிலே நாரைக்கும் கூட முக்தி கிட்டியது. ஆறறிவு மக்களுடன் ஐந்தறிவு விலங்கு இனங்களுக்கும் இறைவன் முக்தி அளிப்பதனால், மதுரையம்பதி "ஜீவன் முக்தி புரம்" என அழைக்கப்படுகிறது.

இன்றும் அரசு ஆவணங்களில் இக்கோயில் அமைந்துள்ள பகுதி ஐராவதநல்லூர் என்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐராவதம் வழிபட்ட முக்தீஸ்வரர் ஆலயம், புராண காலத்திற்குப் பிறகு, சுமார் 400ஆண்டுகளுக்கு முன், முத்து வீரப்ப நாயக்கர் என்பவரால் ஓர் ஏக்கர் பரப்பளவில் கோவிலாக நிர்மாணிக்கப்பட்டது.

முக்தி விளக்கு:

ஆதியில், இங்குள்ள சிவனார், முத்து வீரப்ப நாயக்கரின் பெயரால் முத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இவரை இந்திரேஸ்வரர் என்றும், ஐராவதேஸ்வரர் என்றும் அழைத்துவந்தனர். காலப்போக்கில், இங்கு வாழும் மக்கள், சிவபதம் அடைந்தவர்களுக்காக இந்தச் சிவ சந்நிதியில் "முக்தி விளக்கு" ஏற்றலாயினர். இக்காரணத்தினால் தற்பொழுது "முக்தீஸ்வரர்" என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

ஆலயத்தின் சிறப்புகள்:

இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் சூரிய ஒளி இறைவன் மீது பிரகாசிக்கிறது. இந் நிகழ்ச்சி தினமும் இருபது நிமிடம் வரை நீடிக்கிறது.

அர்த்த மண்டபத்திற்கு மேல் ஏகாபத்ரிமூர்த்தி என்ற சுதை சிற்பம் உள்ளது. ஏகாபத்ரிமூர்த்தி என்பது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒரு சேர ஒரே பாதத்தில் நிற்பதாகும்.

சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதி கிடையாது. முக்தீஸ்வரரை வழி பட்டாலே நவகிரக தோஷங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

விநாயகர் மகிமை:

இத்திருத் தலத்தில் வடகிழக்கிலும் வடமேற்கிலும் விநாயகர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். வில்வம்,நெல்லி, கிளுவை,மாவிலங்கை எனப்படும் நான்கு வகையான மரங்கள் இங்கு இருக்கின்றன.

இங்கு வடமேற்கில் உள்ள வில்வமரத்தின் கீழ் அருள்பாலிக்கும் விநாயகருக்கு நாற்பத்தியெட்டு நாட்கள் தீபம் ஏற்றி வலம் வந்து வழி பட்டால் வேண்டியற்றை அருள்வார் என்பது ஐதீகம்.

மேலும் இந்தத் தலத்தில் நடராஜப் பெருமான், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சுப்பிரமண்யர், துர்கை ஆகியோரும் சந்நிதி கொண்டருள்கிறார்கள். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் கைகளில் வீணையை ஏந்தியபடி காட்சியருள்வதால் வீணை தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். பொதுவாகவே தட்சிணாமூர்த்தியை 'ஞானத்தின் கடவுள்' என்று போற்றுவோம். அவரை வணங்கி வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்களாம். இந்த தட்சிணாமூர்த்தி வீணை ஏந்தி இருப்பதால் இவரை வேண்டிக்கொண்டால் இசைக்கலையில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

பல ஆயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த மூர்த்தி என்றாலும் இதற்குத் திருப்பணி புரிந்தவர்கள் நாயக்க மன்னர்கள்.

ஓம் நமசிவாய🙏

விதவிதமாய் அருளும் நந்தீஸ்வரர்🍁🐮

🐮🍁விதவிதமாய் அருளும் நந்தீஸ்வரர்🍁🐮
✨சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு,கொடி மரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு,நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின்னர் தான் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும்.

✨கொடி மரத்திற்கும்,நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபட வேண்டும்.இந்த நந்தியை அதிகார நந்தி என்பார்கள்.இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்;சிவகணங்களின் தலைவர்.

✨நந்தியானவர் சில திருத்தலங்களில் கருவறைக்கு நேராக இல்லாமல்,சற்றே விலகியபடி காட்சியளிப்பார்.அப்படிப்பட்ட தலங்கள் திருப்புன்கூர்,திருப்பூந்துருத்தி ஆகியவையாகும்.

❄️இவற்றில் இருந்தும் கொஞ்சம் வித்தியாசமாக காணப்படுகிறார்,வடஆற்காடு மாவட்டம் திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோவில் உள்ள நந்தி.
❄️இவர் இறைவனுக்கு புறமுதுகு காட்டியபடி,நின்ற நிலையில் காணப்படுகிறார்.இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது‌.
❄️ஒரு முறை கோவில் அர்ச்சகர்,சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வந்த போது அவரை கஞ்சன் என்ற அரக்கன் வழி மறித்து துன்புறுத்தினான்.
❄️அர்ச்சகர்,இறைவனிடம் முறையிட,இறைவனோ நந்திக்கு கண்ணசைவில் உத்தர விட்டார்.நந்தி உடனடியாக அசுரனை அடித்து துரத்தினார்.
❄️மீண்டும் அசுரன் வருகிறானா?என்பதைப் பார்ப்பதற்காகவே நந்தி கோவிலின் வாசலை நோக்கிய வண்ணம்,இறைவனுக்கு புறமுதுகு காட்டி நிற்பதாக கூறுகிறார்கள்.

✨இதே போல் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் நந்தீஸ்வரர் அருள்புரியும் சிவன் கோவில்கள் மிகவும் போற்றப்படுகின்றன.

✨சிவராத்திரியின் போதும் பிரதோஷ காலத்தின் போதும் இறைவனுடன் அங்கு அருள்பாலிக்கும் நந்தீஸ்வரரையும் வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பர்.

🌀விஷ்ணு நந்தி🌀
சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்தியை அடுத்த படியாக ஒரு நந்தி காட்சி தரும்.அது ‘மால்விடை’ எனப்படும் விஷ்ணு நந்தி. திரிபுர சம்ஹார காலத்தில்,திருமாலே நந்தியாக வடிவம் எடுத்து சிவபெருமானைத் தாங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.கொடி மரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார்.இவரை ‘பிராகார நந்தி’ என்பார்கள்.

🌿தரும நந்தி🌿
சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி,‘தரும நந்தி’எனப்படுவார்.இந்த நந்தியின் மூச்சுக் காற்று சுவாமியின் மீது பட்டுக் கொண்டேயிருக்கும்.அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லும்.

✨பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும்.அவை;
பத்ம நந்தி,
நாக நந்தி,
விநாயக நந்தி,
மகா நந்தி,
சோம நந்தி,
சூரிய நந்தி,
கருட நந்தி,
விஷ்ணு நந்தி,
சிவ நந்தி என்பனவாகும்.இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால்,ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம்.

🪐கும்பகோணம் அருகில் உள்ளது திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவில்.
🪐இங்குள்ள நந்தியம் பெருமான்,கோவில் வாசலை நோக்கியபடி காட்சி தருகிறார்.
🪐ஒரு முறை வேடன் ஒருவன் ஆலயத்திற்குள் வந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தான்.அப்போது அவனது உயிரைப் பறிப்பதற்காக எமதர்மன் ஆலயத்திற்குள் வந்தார்.
🪐அவரை நந்தியும்,துவார பாலகர்களும் தடுக்க எமதர்மன் திரும்பிச் சென்றார்.
🪐மீண்டும் எமன் கோவிலுக்கு வராமல் தடுக்கவே நந்தியம் பெருமான் வாசலை நோக்கி பார்த்தபடி இருப்பதாக கோவில் வரலாறு கூறுகிறது.

🐂விருத்தாசலத்திற்கு மேற்கே 15கி.மீ.தூரத்தில் உள்ளது பெண்ணாடகம்.
🐂இங்குள்ள ஆலயத்தில் கொழுந்தீசர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
🐂ஒரு முறை பெண்ணாடகத்தில் கடும் மழை தொடர்ந்து பெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது.அந்த ஊர் மக்கள் இறைவனை வேண்டவே,இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும் படி ஆணையிட்டார்.
🐂உடனே நந்தியம் பெருமான் கிழக்குப் பக்கமாக வாசலை நோக்கி திரும்பி,வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார்.
🐂அன்றிலிருந்து ஆலய வாசலை நோக்கியபடியே உள்ளார்.

🙏🏻❄️ௐ நமசிவாய❄️

ஆதித்தன் எனும் சூரியன் வழிபட்டதால் ஆதித்தன்மங்கலம் எனப்பட்டது, இதுவே ஆதமங்கலம் என மருவியது.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை  வட்டம், ஆதமங்கலம்  சிவன்கோயில்
Adhamangalam sivan temple 
ஆதித்தன் எனும் சூரியன் வழிபட்டதால் ஆதித்தன்மங்கலம் எனப்பட்டது, இதுவே  ஆதமங்கலம் என மருவியது. 

 சிவபெருமான்  அருளால் தோன்றிய பன்னிரண்டு சூரியர்கள் 1. வைகருத்தன் 2. விவசுவான் 3.  மார்த்தாண்டன் 4. பாஸ்கரன் 5. இரவி 6. லோகப்பிரகாசன் 7. சாக்கி  8.சுவிக்கிரமன் 9. ஆதித்தன் 10. சூரன் 11. அஞ்சுமாலி 12. திவாகரன்  என்பவர்களாவர். இவர்களைத் துவாதச ஆதித்தியர்கள் என்றழைப்பர். ஒரு சமயம்  இவர்கள் தங்களில் யார் உலகில் பணிசெய்வது என்று போட்டியிட்டுக் கொண்டனர்.  பிரமன் அவர்களை சித்திரை தொடங்கி மாதத்திற்கு ஒருவராகப் பணி செய்யும்படி  ஆணையிட்டார்.

இவ்வூர் கிவளூரின் தெற்கில் 13 கமி தொலைவில் உள்ள விடங்கலூரின் மேற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது. ஆதமங்கலம் சித்தாறு எனும் சிறிய ஆற்றின் கரையிலேயே உள்ளது. 

இங்கு சாலையோரத்தில் கிழக்கு நோக்கிய சிவன் கோயில் உள்ளது, கோயிலின் எதிரில் ஒரு அழகிய குளமும் அருகில் பள்ளி கட்டிடம் ஒன்றும் உள்ளது. கோயில் கருவறை முகப்பு மண்டபம் இவை அதிட்டானம் வரை கருங்கல் கொண்டும் அதற்க்கு மேல் செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளன. 

இங்குள்ள இறைவன் பெயர்  ஆபத்சகாயேஸ்வரர் இறைவி சௌந்தரநாயகி. 

கிழக்கு நோக்கிய கருவறை இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார். இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். முகப்பில் இரு சன்னதிகளையும் இணைக்கும் மண்டபம் உள்ளது. 
 இதில் இறைவனை நோக்கி நந்தி  ஒன்றும் பலிபீடம் ஒன்றும் உள்ளது. இந்த முக மண்டபத்தினை தாண்டி வெளியில் ஆத்ம நந்தி எனும் நந்தி இறைவனை நோக்கியுள்ளது. 

 முகமண்டபத்தில் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார். இதே மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் சண்டேசர் மற்றும் ஒரு பெரிய பைரவர், பெரியதாக ஒரு சூரியன் சிலை உள்ளன. இந்த சூரியனே ஆதித்தனாக இருக்கலாம்..

 கருவறை சுற்றில் தென்முகன், மட்டுமே உள்ளார். சண்டேசர் சன்னதி உள்ளது.  பிரகார சிற்றாலயங்கள் என விநாயகர் மட்டும் உள்ளார் அவர் சத்தரத்து விநாயகர் என பெயர்கொண்டுள்ளார். 

எளிமையான கிராமக்கோயில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ஆளக்கூடிய சூரியன், சிறப்பாக இல்லாவிட்டால் பூர்வீக சொத்து பிரச்னை, வில்லங்கங்கள் ஏற்படும், இப்படி  உள்ளவர்கள் சூரியன் வழிபட்ட இத்தலம் வந்து வழிபடலாம். 

#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்

திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது.

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் !
திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. 

ஒன்று ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார். தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.

இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம். ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.

தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள் தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப் போக்கில் நோய் நீங்கும்! என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சி யுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர். காலப்போக்கில் அனைத்து வர்ணத்தாரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது. சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனை போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் முறை::

திருக்கார்த்திகையன்று காலையில் ஏற்றப்படுவது பரணிதீபம். இத்தீபத்தை அண்ணாமலையார் கருவறையில் ஏற்றுவர். பரம்பொருள் ஒன்று என்பதை காட்டுவதற்காக ஒரு பெரிய கற்பூரக் குவியலில் ஜோதி ஏற்றி தீபாராதனை செய்வர். அதிலிருந்து ஒரு மடக்கில் உள்ள நெய்த்திரியில் விளக்கு ஏற்றப்படும். அந்த தீபத்தை நந்திதேவரின் முன் காட்டி ஐந்து மடக்குகளில் நெய் விளக்கேற்றுவர். விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டிகேஸ்வரர் என்னும் பஞ்சமூர்த்திகளையும் இந்த ஐந்து தீபங்கள் குறிக்கும். முதலில் ஏற்றப்பட்ட நெய்தீபத்தை உண்ணாமுலை அம்மன் சந்நிதிக்கு கொண்டு செல்வர். அங்கே ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றுவர். இது தேவியின் பஞ்சசக்திகளைக் குறிக்கும். அதன்பின் எல்லா சந்நிதிகளிலும் தீபம் ஏற்றப்படும். பரணி நட்சத்திர வேளையில் ஏற்றுவதால் இதை பரணிதீபம் என்பர். இந்த தீபங்கள் அனைத்தும் மாலையில் ஒன்று சேர்க்கப்படும். உலகம் எல்லாம் பரம்பொருளின் மாறுபட்ட கோலங்களே. அவை அனைத்தும் மீண்டும் பரம்பொருளில் ஐக்கியமாகிவிடும் என்பதை உணர்த்தும் விதத்தில் இதைச் செய்வர். மாலையில் பின்னர் பஞ்சமூர்த்திகளும், அர்த்தநாரீஸ்வரரும் கோயிலுக்குள் எழுந்தருள்வர். இவர்களுக்கு தீபாரதனை செய்யும் போது மலையில் தீபம் ஏற்றப்படும்.

அண்ணாமலை தீபம்: 

கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை மலை உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது. மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் 3500 கிலோ நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகிறது. இந்த பெருஞ்சுடர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும். 60 கி.மீட்டர் தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாகத் தெரிகின்றது. தீபம் குளிர்ந்த பின்னர், மலையுச்சியில் இருந்து திருக்கோயிலுக்கு தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் அதனை அப்படியே பாதுகாத்து, மார்கழி- ஆருத்ரா தரிசன திருநாளில், கொப்பரையில் இருந்து தீப மை சேகரித்து, அதனுடன் இதர வாசனைத் திரவியங்கள் சேர்த்து, நடராஜருக்குசார்த்தி வழிபாடு நடைபெறும் பிரசாத மை பக்தர்களுக்கும் வழங்கப்படும். அதை, தினமும் அண்ணாமலையாரை தியானித்து நெற்றியில் இட்டு வர, துயரங்கள் நீங்கி நன்மைகள் பெருகும்; நம் இல்லத்தை தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை.

அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும். பெரும் தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது தடுக்கப்படும் என்றும் தோன்றிய புயலின் வேகம் தணியும் என்பதும்  நம்பிக்கையாக உள்ளது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் ஒருங்கே பிரசன்னமாகி அருள் பாலிக்கின்றனர். சுடர் லட்சுமியாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது. ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையிலுள்ள உறவை திருவிளக்குகள் உணர்த்துகின்றன. விளக்கில் சுடர் எரிவது நமக்கு நன்றாக தெரியும் புறத்தோற்றமாகும். ஆனால் அந்தச்சுடர் எண்ணெயை மெல்ல கிரகித்து எரிகின்றது என்பது நாம் உணர வேண்டிய அகத்தோற்றமாகும். வாழ்க்கையில் தெளிவான புறத்தோற்றத்தையும் அதற்கு அடிப்படையான, நுட்பமான அகத்தோற்றத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை தீப வழிபாடு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. திருவிளக்கால் அறியத் தக்க மறைபொருள்கள் பல இருக்கின்றன என்பதை தெரிந்து செயல்பட்டால் வாழ்வில் இருள் நீங்கி, ஒளி பெருகும்..

தீபதரிசனம் பாவவிமோசனம்::

சிவனுக்குரிய பஞ்சபூதத்தலங்களில் அக்னி தலமாகத் திகழ்வது திருவண்ணாமலை. இறைவன் அக்னி வடிவமாகத் திகழ்வதால் இங்கு திருக்கார்த்திகை நாளில் தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர். இந்த தீபத்தை தரிசிப்போர் பெறும் நற்பேறுகளை கார்த்திகைத் தீபவெண்பா கூறுகிறது.

புத்தி தரும் தீபம்; நல்ல புத்திர சம்பத்து முதல்
சித்தி தரும் தீபம் சிவதீபம்- சக்திக்கு
உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப்
பயிராகும் கார்த்திகை தீபம்.

திருவண்ணாமலை தீபத்தை தரிசிப்போர் நல்ல புத்தி, புத்திரபாக்கியம், காரிய சித்தி, ஞானம் ஆகிய நலன்களைப் பெற்று வாழ்வர்.

அனலே, அண்ணாமலையே::

பார்வதிதேவிக்கு திருவண்ணாமலை தீப மகிமை குறித்து கவுதம மகரிஷி எடுத்து உரைத்ததாக ஸ்கந்த புராணம் விவரிக்கிறது.

திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையை கிரிவலம் வரும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது; வாய்ப்பு கிடைத்தவர்கள் பெரும் புண்ணியசாலிகள். கார்த்திகை மகாதீபத்தைத் தரிசித்தவருக்கு மறுபிறப்பு இல்லை. ஒரு மண்டலமோ, பதினோரு நாட்களோ கிரிவலம் வருதல் சிறப்பு. முடியாதவர்கள், கார்த்திகை தீபத்திருநாள் அன்றாவது உரிய நியதிகளைக் கடைப்பிடித்து அண்ணாமலையை கிரிவலம் வந்தால்... ஒவ்வொரு அடிக்கும் ஓர் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.

திருக்கார்த்திகையில் ஈசனுக்கு நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றால் தீபமேற்றி வழிபடுதலும், சிவாலயங்களில் உள்ள தீபங்களை வணங்குதலும் அளப்பரிய நன்மைகளைத் தரும்; அனைத்து தர்மங்களையும் செய்த பலனும், கங்கை முதலான எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனும் கிடைக்கும்.

தீப தரிசனம் காணச் செல்பவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்வதுகூட மிகப்பெரிய புண்ணியத்தைத் தரவல்லது. மகாதீபத்தை பக்தியோடு தரிசித்தவரை நாம் கண்ணால் கண்டாலே நமது பாவங்கள் விலகும். எனில், தீபத்தை தரிசித்தவருக்கு எத்தகைய புண்ணியம் கிடைக்கும்?! ஆயுளில் ஒரு முறையாவது திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பவரது சந்ததி வளம் பெறும்; அவருக்கு மறுபிறவி என்பதே இல்லை; அத்தகையவர், மேலான தேவ நிலையினை அடைகின்றார்கள்.

அனைவருக்கும் அட்வான்ஸ் தீபத்திருநாள் வாழ்த்துகள்.....

Tuesday, November 22, 2022

வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 
#திருவிரிஞ்சிபுரம்
#மார்க்கபந்தீஸ்வரர்
#மரகதாம்பிகை
திருக்கோயில்
வழித்துணைநாதர் கோயில் அல்லது மார்க்கபந்தீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 1300 வருடங்கள் பழமையான சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.  விரிஞ்சிபுரத்தலத்தில் அமைந்துள்ள சிம்மக்குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்கப்படுகின்றது. தமிழகத்தின் எந்தவொரு சிம்மக்குளங்களிற்கும் இல்லாத சிறப்பை உடையது இத்திருத்தலச் சிம்மக்குளம்.

இங்கு பிரதான தெய்வம் மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் உள்ளது.

மூலவர்:
மார்க்கபந்தீஸ்வரர்
தாயார்:
மரகதாம்பிகை
தீர்த்தம்:
சிம்ம தீர்த்தம்

புராண வரலாறு :

சிவபெருமானின் திருமுடையைக் காண பிரம்மனும் பாதத்தினைக் கண்டு வருவதாக திருமாலும் சென்ற வேளை நான்முகன் சிவனின் திருமுடியினைத் தொட்டதாகப் பொய் ஒன்றைக் கூறினார் அதற்குத் தண்டனையாக மனித உருவத்தினைப் பெற்று விரிஞ்சிபுரம் இறைவனைப் பூசை செய்து வந்த சிவநாதன் - நயனா, நந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சிவசர்மன் எனப்பெயரிடப்பட்ட அவர் தன் ஜந்தாம் வயதில் தந்தையினை இழந்தார், பூசை செய்யும் உரிமையினை உறவினர் பறித்துக்கொண்டனர். இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார் சிவனிடம் மன்றாட சிவன் அவர் கனவில் தோன்றி திருக்கோயிலின் பிரம்ம தீர்த்தத்தில் மகனை நீராட்டிக் காத்திருக்கும் படியும் தாம் வழிகாட்டுவதாகவும் கூறினார் எனக் கருதப் படுகின்றது. கனவு கண்ட மறுநாள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை ஒரு முதியவர் உருவில் வந்த அம்பலவாணன் சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து, பிரம்ம, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்ததாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு சிவசர்மன் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயத்தினை அடைந்து பூசைகள் செய்ய அதை ஏற்க சிவன் தலை சாய்த்ததாகக் கூற்றுக்கள் உளன குறிப்பிடத்தக்கது.

தல சிறப்பு:

கோயிலின் உட்பிரகாரத்தில் தலமரமாக பனைமரம் உள்ளது. இது ஒரு அதிசய பனை மரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கருப்பாக காய்க்கின்றன. மறு வருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக காய்க்கின்றன.  மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியக் கதிர்கள் விழுகின்றன.
சிம்மக்குள நீராடல் - பிரம்மாவிற்குச் சாப விமோசனம் கிடைத்த கார்த்திகை மாதம் இறுதி ஞாயிறு மகளிர் ஈர ஆடையுடன் நீராடிப்பின் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் உறங்குவர். அன்றிரவு உறங்குபவர்கள் கனவில் பூக்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றினைத் தாங்கியபடி முதியவர் கனவில் காட்சி தந்தால் அப்பெண்கள் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியத்தினை அடைவர் என்பது தொன்நம்பிக்கை. இச்சிம்மக்குளத் தீர்த்தத்தின் பீஜாட்சர யந்திரம் ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது. 

நேரம் காட்டும் கல் :

கோயிலின் உள்ளே தென்புறத்தில், "நேரம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.

கல்வெட்டுகள் :

கி. பி 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் விஜயநகரப் பேரரசு விரிஞ்சிபுரம் பகுதியினை ஆண்டு வந்தது. மணமகன் வீட்டில் இருப்பவர் மணமகள் வீட்டிற்கு பொன்னை வரதட்சணையாக வழங்கும் முறை இருந்து வந்தது. இத்தகைய முறையில் மாற்றம் வேண்டும் என எண்ணிய மணமகன் வீட்டாரினால் விஜயநகரப் பேரரசிடம் முறையிடப்பெற்றது. கி. பி. 1426 ஆம் ஆண்டுக் கல்வெட்டின் படி 'பிராமணர்களில் கன்னடியர், தெலுங்கர், தமிழர், இலாலர் முதலானோர் திருமணம் செய்யுமிடத்து கன்னிகா தானம் ஆக செய்திட வேண்டும். அப்படிச் செய்யாமல் பொன் வாங்கி பெண் கொடுப்பது, பொன் கொடுத்து திருமணம் செய்வது அரசத் துரோகம் ஆகும். மீறுவோர் சாதியிலிருந்து, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.' என விஜய நடரப் பேரரசு|விஜய நகரப் பேரரசினால் உத்தரவிடப்பட்டது என்பது அக்கல்வெட்டில் உள்ள தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாவிற்காக தலைகுனிந்த சிவன்:

திருவண்ணாமலையில் ஜோதியாய் அருளிய சிவபெருமானின் திருவடியைக் காண முடியாத பிரம்மா, விரிஞ்சிபுரத்தில் மனிதப் பிறவி எடுத்து மார்க்கபந்தீஸ்வரர் திருமுடியைத் தரிசித்தார். அவருக்காக சிவபெருமானே தலையை வளைத்து அருளிய பெருமை இத்தலத்திற்கு உண்டு.

கலைநயக் கட்டிடம்:

மார்க்கபந்தீஸ்வரர் கோவில் சோழர்களின் கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் உள்ளது. இக்கோவிலின் வடக்கு கோபுர வாயில் வருடத்தின் அனைத்து நாட்களுமே திறந்த நிலையில் இருக்கும். இதன் வழியாகத்தான் தேவர்கள் அன்றாடம் வந்து இறைவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது. இத்தலத்தில் மூன்று பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். கோவிலின் ஒவ்வொரு சுவர்களிலும், தூண்களிலும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்திருப்பதை காணலாம்.

தீர்த்தகுள மகிமை

இத்தலத்து சிம்ம தீர்த்த குளம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. கோவிலின் முதல் பிராகாரத்தில் தென் கிழக்காக அமைந்துள்ள இது ஒருசிங்கத்தின் வாய் வழியாக நுழைந்து செல்லும் முறையில் நடபாவிக் கிணறாக அமைந்துள்ளது. குழந்தைகள் இன்றி தவிப்போர் இத்தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வேண்டினால் குறிப்பிட்ட காலத்திலேயே குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இவைத் தவிர சூலி தீர்த்தம், சோம தீர்த்தம் என வேறு இரு தீர்த்தக்குளங்களும் இங்கே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தீர்த்தகுள மகிமை:

இத்தலத்து சிம்ம தீர்த்த குளம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. கோவிலின் முதல் பிராகாரத்தில் தென் கிழக்காக அமைந்துள்ள இது ஒருசிங்கத்தின் வாய் வழியாக நுழைந்து செல்லும் முறையில் நடபாவிக் கிணறாக அமைந்துள்ளது. குழந்தைகள் இன்றி தவிப்போர் இத்தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வேண்டினால் குறிப்பிட்ட காலத்திலேயே குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இவைத் தவிர சூலி தீர்த்தம், சோம தீர்த்தம் என வேறு இரு தீர்த்தக்குளங்களும் இங்கே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒரே உடலில் 1008 லிங்கம்!

ஒரு பெரிய லிங்கத்தின் உடலில் 1008 சிவலிங்கம் இந்தத் திருத்தலத்தில் அமைந்திருப்பது கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும். மூலவர் இத்தலத்தில் சுயம்பு லிங்கமாகவும் சற்று சாய்ந்த கோனத்திலும் காட்சியளிக்கிறார். சிவலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதற்கு காரணமாக கதைகளும் உண்டு. மேலும், இச்சிலைகளின் வடிவமைப்பும், கல்வெட்டுக் குறிப்புகளும் கோவிலின் உள்ளே சோழர்களால் மறைக்கப்பட்ட புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது. 

அருணகிரிநாதர், திருமூலர், பட்டினத்தார், கிருபானந்த வாரியார், எல்லப்பா தேசிகர் உள்ளிட்டோர் பாடல் பெற்ற திருத்தலம் இது.

விரிஞ்சிபுரம் ஈசனுக்கு பூஜை செய்து வந்த, சிவநாதன்- நயனாநந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், பிரம்மதேவன். சிவசர்மன் எனப் பெயரிடப்பட்ட அவர், தன் ஐந்தாம் வயதில் தந்தையை இழந்தார். சிறுவனாய் இருந்ததால் ஆலயத்திற்கு பூஜை செய்யும் உரிமையை, உறவினர் பறித்துக்கொண்டனர்.

இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார், இத்தல ஈசனிடம் வேண்டினார். அவர் கனவில் சிவபெருமான் தோன்றி, ‘ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சிவசர்மனை நீராட்டிக் காத்திரு. நான் வந்து உனக்கான வழியைக் காட்டுகிறேன்’ என்றார்.

நயனா நந்தினி கனவு கண்ட மறுநாள், கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆகும். அந்த நாளில் ஒரு முதியவர் உருவில் வந்த ஈசன், சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து வேத சாஸ்திரங்கள் புகட்டி, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்தார். பிரம்மனுக்கு, சிவபெருமானே சிவ தீட்சை அளித்த திருத்தலம் என்ற பெரும் சிறப்புடையதாக இந்த ஆலயம் திகழ்கிறது.

பின்னாளில் சிறுவன் சிவசர்மன் பூஜை செய்யும் பொருட்டு ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவும் திறந்துகொண்டது. பின்பு சிறுவன் சிவசர்மன் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதருக்கு அபிஷேகம் செய்ய எண்ணினான். ஆனால் சிறுவனான அவனது உயரம் குறைவு என்பதால் வருந்தினான். சிறுபாலகனின் வருத்தம் அறிந்த ஈசன், சிவலிங்கத்தின் மேல் பகுதியான பாணத்தைச் சாய்த்து, சிவசர்மன் செய்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆம்! சிருஷ்டி கர்த்தாவாக விளங்கும்போது, திருஅண்ணாமலையில் பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, அதே பிரம்மன் சிறுவனாக வந்து விரிஞ்சிபுரத்தில் வருந்தியபோது ஈசன் தலை சாய்த்து காட்டியருளினார். அந்த சிறப்பு மிக்க நாள் கார்த்திகை கடைசி ஞாயிறு ஆகும்.

பாலகனாகத் தோன்றிய பிரம்மா இத்திருத்தலத்தில், சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார். எனவே அடியவர்கள் சிவதீட்சை பெற இதனைக் விட உயரிய தலம் வேறில்லை எனலாம். இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. 

வழித்துணை நாதர் :

மைசூரைச் சேர்ந்த ஒரு வணிகர், இத்தலம் வழியாக காஞ்சீபுரம் சென்று மிளகு வியாபாரம் செய்வது வழக்கம். ஒரு முறை வியாபாரத்திற்காகச் சென்றபோது, வணிகர் இந்த ஆலயத்தில் தங்க நேரிட்டது. அவர் திருடர்களிடம் இருந்து தன்னைக் காத்து உதவும்படி வேண்டினார். இறைவனும் வேடன் உருக்கொண்டு, வணிகருக்கு வழித்துணையாக வந்ததாக தல வரலாறு சொல்கிறது. எனவேதான் இத்தல இறைவனுக்கு ‘வழித்துணை நாதர்’ என்றும் பெயர் வந்தது.

ஓம் நமசிவாய🙏
திருச்சிற்றம்பலம்🙏

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...