Tuesday, January 31, 2023

தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்றான ,கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அகத்தியர் வழிபட்ட தலமான#திருச்சோபுரம்#மங்களபுரீஸ்வரர்

தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்றான ,கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அகத்தியர் வழிபட்ட தலமான
#திருச்சோபுரம்
#மங்களபுரீஸ்வரர்
(திருச்சோபுரநாதர்)
#சத்யாயதாட்சி அம்மன் (வேல்நெடுங்கண்ணி)
திருக்கோயில் வரலாறு:
புராணக் கதைகளில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டவையாக இருக்கும். ஆனால், அதுபோன்ற கதைகளுக்கு நிகழ்காலத்து சாட்சிகளைப் பார்க்கும்போது, மெய்சிலிர்த்துப் போகிறோம். மங்களபுரீஸ்வரரும் அப்படித்தான் மெய்சிலிர்க்க வைக்கிறார்.

கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் அருகே உள்ளது திருச்சோபுரம். இங்குதான் மங்களபுரீஸ்வரர், வேல்நெடுங்கண்ணி அம்பாளுடன் வீற்றிருக்கிறார். திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தபோது, பூலோகம் சமநிலையை இழக்க அகத்தியர் சிவனால் தென்பகுதிக்கு அனுப்பப்பட்ட கதை நமக்குத் தெரிந்ததே.

#மூலவர்: மங்களபுரீஸ்வரர், சோபுரநாதர்
#உற்சவர் :சோபுரநாதர்
#அம்மன் : தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி
#தலவிருட்சம் :கொன்றை
#தீர்த்தம் :வங்கக் கடல், கிணற்று தீர்த்தம்
#பழமை :1000 வருடங்களுக்கு முன்
#புராணப் 
பெயர் :திருச்சோபுரம், தியாகவல்லி
#ஊர் :திருச்சோபுரம்
#மாவட்டம் :கடலூர்
#மாநிலம் :தமிழ்நாடு

#பாடியவர்கள்: 
திருஞானசம்பந்தர்

#தேவாரப்பதிகம்:

விடை அமர்ந்து வெண்மழு ஒன்று ஏந்தி விரிந்து இலங்கு சடை ஒடுங்கத் தண்புனலைத் தாங்கியது என்னை கொலாம் கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்தத் தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுரம் மேயவனே.

–திருஞானசம்பந்தர்

#தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தி சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 217 வது தேவாரத்தலம் ஆகும்.

#தலபெருமை:

மஞ்சள் குங்கும வழிபாடு: இத்தலத்தில் சோபுரநாதர், சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் லிங்கமாக காட்சி தருகிறார். லிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. மஞ்சளும், குங்குமமும் அம்பாள் வழிபாட்டிற்கு உரியது. ஆனால், திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்.

அகத்தியர் அமைத்த லிங்கத்திலேயே அம்பாள் ஐக்கியமாகி விட்டதாகவும், அதன் காரணமாக சிவலிங்கத்துக்கு மஞ்சள், குங்கும வழிபாடு நடப்பதாகவும் ஐதீகம். இதனால், சுவாமிக்கு “மங்கள புரீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. பிற்காலத்தில் அம்பாளுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவளை “சத்யாயதாட்சி’ என்கின்றனர்.

#தெட்சிணாமூர்த்தி சிறப்பு: 

சில தலங்களில் கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். இவரது சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார்.

இசைப்பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர் ஞானம், அமைதி மற்றும் இசைக்கு அதிபதியாக இருப்பதாலும், மூலவர் சோபுரநாதர் மங்களம் தருபவராக இருப்பதாலும் இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம்.

#புதைந்த கோயில்: 

வங்கக்கடலின் கரையில் அமைந்த கோயில் இது. கடலே இத்தலத்தின் தீர்த்தம் ஆகும். மூலஸ்தானத்தில் சுவாமி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

திருஞானசம்பந்தர் சுவாமியை வணங்கி, பதிகம் பாடியுள்ளார். கோஷ்டத்தின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா இருவரும் அவரை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். மும்மூர்த்திகளின் இந்த தரிசனம் விசேஷமானது. பிரகாரத்தில் கண்ணப்பநாயனார் காட்சியளிக்கிறார். இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் மணலால் மூடப்பட்டு விட்டது. பிற் காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தை பற்றி அறிந்து சுவாமியை தரிசனம் செய்ய வந்தார். ஆனால் இங்கு கோயில் இல்லை. ஓரிடத்தில் கோபுர கலசத்தின் நுனி மட்டும் தெரிந்தது. அதன்பின், ஊர்மக்கள் மணலை அகற்றி இக் கோயிலை வெளிக்கொண்டு வந்தனர்.

#வயிற்றுவலியால் அவதிப்பட்ட அகத்தியர் :

அகத்தியர் தென்புலம் நோக்கி வருகையில் வழி நெடுகிலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுக்கொண்டே வருகிறார். வங்கக் கடலோரம் வருகையில் அகத்தியர் தாங்கமுடியாத வயிற்று வலியால் அவதிப்படுகிறார். தனது வேதனையை எம்பெருமானிடம் சொல்லியபடியே கடற்கரை மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயற்சிக்கிறார்; அவரால் அமைக்க முடியவில்லை.

மூலிகைச் செடிகளைப் பறித்து வந்து சாறு எடுத்து அதை மணலோடு சேர்த்து உதிராத சிவலிங்கத்தை உருவாக்கி அதற்குப் பூஜைகள் செய்து வழிபடத் தொடங்கினார். சற்று நேரத்தில் வயிற்று வலி குணமானது. அப்போது அங்கே சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சி கொடுத்தனர்.

கடல் மணலையும் மூலிகைச் சாற்றையும் கலந்து அன்றைக்கு அகத்தியர் சிவலிங்கம் படைத்த இடம்தான் திருச்சோபுரம். இத்திருக்கோயிலில் உள்ள சிவலிங்கம் ஒழுங்கற்ற வடிவில் உள்ளது. அகத்தியர் பிடித்து வைத்த சிவலிங்கம்தான் இப்போதும் இந்த ஆலயத்தில் வழிபடப்படுபவதாக நம்பிக்கை உள்ளது.
 அதற்கு அடையாளமாக அகத்தியரின் கைத்தடங்களைக் காட்டுகின்றனர் பக்தர்கள்.

இத்தலத்தில் சோபுரநாதர், சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் இலிங்கமாகக் காட்சி தருகிறார். இலிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். இலிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது.

அகத்திய முனியின் வேண்டுகோளை ஏற்று, பார்வதி தேவியும் இந்த சிவலிங்கத்தில் ஐக்கியமாகி இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால்தான், இங்கே சிவனுக்கு, மஞ்சளும் குங்குமமும் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. மங்களபுரீஸ்வரர் மேற்கு நோக்கி அமர்ந்திருக்க. வேல்நெடுங்கண்ணி அம்பாள் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். ஒரே இடத்தில் நின்று சிவனையும் அம்பாளையும் தரிசிக்கும்படியாக சந்நிதிகள் அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.

திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல் மனைவி தியாக வல்லி என்பவர் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததால் இவ்விடத்திற்குத் தியாகவல்லி என்ற பெயரும் உண்டு. முன்பொருமுறை இப்பகுதி கடல் கொள்ளப்பட்டு கோயிலும் மணலுக்குள் புதைந்து போனது. பிற்பாடு ராமலிங்க சிவயோகி என்வரால் இத்திருத்தலம் மீண்டும் வெளியில் வந்ததாம். இதனால், இத்திருக்கோயிலை தம்பிரான் கண்ட கோயில் என் றும் சொல்கிறார்கள்.

#இசை தட்சிணாமூர்த்தி:

சில தலங்களில் கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். இவரது சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார்.

திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத்திருத்தலத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு. 

இங்குள்ள தட்சிணாமூர்த்தி ஸ்வர மூர்த்தியாய் அமர்ந்திருக்கிறார். தட்சிணாமூர்த்தி சிலையைத் தட்டினால் சப்த ஸ்வரங்களையும் கேட்க முடியும். இசைப் பயிற்சியில் இருப்பவர்கள் இவரை வணங்கினால் இசையில் பிரகாசிக்கலாம். இதேபோல், மங்களபுரீஸ்வரருக்கு மஞ்சளும் கும்குமமும் வைத்துப் பூஜை செய்தால் மனக்குறைகள் எதுவாக இருந்தாலும் போக்கி வைப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

வங்கக்கடலின் கரையில் அமைந்த கோயில் இது. கடலே இத்தலத்தின் தீர்த்தம் ஆகும். மூலஸ்தானத்தில் சுவாமி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். கோஷ்டத்தின் பின்புறம் உள்ள இலிங்கோத்பவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா இருவரும் அவரை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். மும்மூர்த்திகளின் இந்த தரிசனம் விசேஷமானது. பிரகாரத்தில் கண்ணப்பநாயனார் காட்சியளிக்கிறார். இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் மணலால் மூடப்பட்டு விட்டது. பிற் காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தை பற்றி அறிந்து சுவாமியை தரிசனம் செய்ய வந்தார். ஆனால் இங்கு கோயில் இல்லை. ஓரிடத்தில் கோபுர கலசத்தின் நுனி மட்டும் தெரிந்தது. அதன்பின், ஊர்மக்கள் மணலை அகற்றி இக் கோயிலை வெளிக்கொண்டு வந்தனர். பிரகாரத்தில் சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வர இலிங்கம், கண்ணப்பர், திரிபுவனசக்கரவர்த்தி, அவர் மனைவி வழிபட்ட இலிங்கம், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.

இப்பகுதி ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்ததாம். இங்கு வந்த 'மதுரை இராமலிங்க சிவயோகி ' என்பவர் இம்மேட்டைக் கண்டு, மணலில் புதைந்திருந்த கோயிலின் விமானக்கலசம் மட்டும் மேலே தெரிய; அவர் உடனே அப்போது கடலூரிலிருந்த சேஷாசல நாயுடு, இராமாநுஜலு நாயுடு, ஆயிரங்காத்த முதலியார், நஞ்சலிங்க செட்டியார் ஆகியோரை அணுகி; செய்தி சொல்லி, அவர்களின் ஆதரவோடு, மணல் மேட்டைத் தோண்டிக் கோயிலை கண்டுபிடித்துக் கட்டுவித்தார் என்றொரு செய்தி சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக; இன்னும் அம்பாள் கோயில் தெற்குப் பகுதியில் மண்மேடிட்டுப் புதைந்துள்ளதாகவும் சொல்கின்றனர். இதனால் இக்கோயிலுக்கு 'தம்பிரான் கண்ட கோயில்' என்ற பெயரும் மக்களால் வழங்கப்படுகிறது.

 "கடலுக்கு மேற்கில், தொண்டமாநத்தத்திற்கு கிழக்கில் பெண்ணையாற்றுக்குத் தெற்கில் வெள்ளாற்றுக்கு வடக்கில் உள்ள நிலங்கள் இக்கோயிலுக்குரிய பட்டா நிலங்களாக இருந்தனவென்றும், அவைகளை அரசு எடுத்துக்கொண்டு அதற்குரியதாக ஆண்டுதோறும் கோயிலுக்கு ரூ.600/- (ரூபாய் அறுநூறு மட்டும்) தருவதாகவும் தெரிகிறது."
பிற்காலத்தில், தொண்டை மாநத்தத்தைச் சேர்ந்த மு. துரைசாமி ரெட்டியார் என்பவர் கோயிலில் ஆராதனைக்காக, வீடுகளை விட்டு அதன் வருமானத்தில் ஆராதனை நடத்துமாறு உயில் சாசனம் எழுதி அதை 26 - 08 - 1912-ல் ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்துள்ள கல்வெட்டு ஒன்று கோயிலில் உள்ளது.

 சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு நிலம் விட்ட செய்தியையும்; தொண்டைமாநல்லூரைக் கோயிலுக்குத் தானமாக அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றன.

சுந்தரரின் 'திருவிடையாறு' தலப்பதிகத்தில் - ஊர்த்தொகையில் இத்தலம் குறிக்கப்படுகிறது.
 

திருவிழா:

சிவராத்திரி, திருக் கார்த்திகை, அன்னாபிஷேகம், பங்குனி உத்திரம்.

பிரார்த்தனை:

இசைப்பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

விஞ்ஞானம் அடிப்படையில்: தெட்சிணாமூர்த்தி சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது.

#அமைவிடம் 

மாநிலம் : தமிழ் நாடு கடலூர் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் புகை வண்டி நிலையம், என்று கைகாட்டி உள்ள பாதையில் (இடதுபுறம்) திரும்பிச் (மங்களபுரீஸ்வரர் - தியாகவல்லி என்று பெயர்ப் பலகை உள்ளது) சென்று, 'இரயில்வே' கேட்டைக் கடந்து நேரே மேலும், சென்று உப்பங்கழியின் மேல்கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக அக்கரையை அடைந்து கோயிலை அடையலாம். (கோயிலுக்குச் செல்லும் வழி நொய்ம்மணலாக இருப்பதால் காலையில் 10 மணிக்குள்ளும், மாலையில் 4 மணிக்குப் பிறகும் செல்வது நலம்.

திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏

Monday, January 30, 2023

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் அறியப்படாத சிறப்பம்சங்கள் என்ன?

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் அறியப்படாத சிறப்பம்சங்கள் என்ன?
ரகசிய ஊர்
பாலாஜிக்கு தேவையான அனைத்து அபிசேக பொருட்களும் இது நாள் வரைக்கும் யாருக்குமே சொல்லப்படாத கிராமத்தில் இருந்து தான் வருகிறது. பூ, பால், பழம், நெய், மோர், துளசி எல்லாமே அங்க இருந்து தான் வருகிறது. ஆனால் வெளியில் இருந்து அந்த ஊருக்கு யாரும் போகவும் முடியாது. அனுமதியும் இல்லை. திருப்பதியில் இருந்து வெறும் 20 கி.மீ.ல் தான் அந்த ரகசிய கிராமம் இருக்கிறது.
கருவறை
கோயிலின் கருவறையில் சிலையை வைத்து வழிபடுவது தான் ஐதீகம். ஆனா இந்த கோவிலில் இருக்குற திருப்பதி மூலவர் கருவறைக்கு வலது புறமா இருந்து தரிசனம் தருவார்
மொட்டை
திருப்பதி அவருடைய இளமை காலத்தில் மிகவும் அழகாவும், அதே நேரத்தில் நீண்ட அழகான தலைமுடியை கொண்ட கடவுளாகவும் இருந்திருக்கின்றார். பூமிக்கு வந்த கொஞ்ச நாளலில் அவருக்கு கொஞ்சம் முடி கொட்ட ஆரம்பித்துள்ளது. இதனை கண்ட அவரின் பக்தை
காந்தர்வ இளவரசி நீல தேவி தன்னுடைய தலைமுடியை கொஞ்சம் வெட்டி தன்னுடைய கடவுளுக்கு கொடுத்துள்ளார். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட திருமால், தன்னுடைய வரம் வேண்டி, திருப்பதி ஸ்தலத்தில் வந்து மொட்டியிட்டு வேண்டிக் கொள்பவர்கள் அனைவருக்கும் வேண்டியதை தருவேன்” அப்டின்னு சொல்லியிருக்காரு.
விடாது ஒலிக்கும் அலைச்சத்தம்
கடவுளின் கர்பகிரகத்தில் நிற்காமல் நீண்டு நீண்டு ஒலிக்கும் கடல் அலைகள் என்பது பல ஆண்டுகளாக பக்தர்களாலும் மக்களாலும் நம்பப்பட்டு வருகிறது.
அணையவே அணையாத விளக்கு
கடவுளின் முன்னால் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டே தான் இருக்கும். இந்த விளக்குகளை எப்போது யார் ஏற்றினார்கள் என்பது இது வரை யாருக்கும் தெரியாது.
சிலை
திருப்பதி ஏழுமலையான் சிலையின் பின்புறமாக எப்போதும் ஈரம் கசிந்து கொண்டே இருக்குமாம். ஏன் என்ற காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கோவிலுக்குள் இருக்கும் பூசாரிகள், அந்த இடத்தினை ஈரமின்றி வைத்திருப்பதையே ஒரு வேளையாக வைத்திருக்கின்றார்கள்.
சூடாகவே இருக்கும் அணிகலன்கள்
பெருமாளின் கழுத்தில் அணி்விக்கப்படும் நகைகள் மற்றும் ஆபரணங்களை ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சுத்தம் செய்வதற்காக கழற்றுவது வழக்கம். அப்படி சிலையில் கழுத்தில் இருந்தும், இதர பகுதிகளில் இருந்தும் கழட்டப்படும் அணிகலன்கள் எப்போதுமே சூடாகவே இருக்கும்.

சனியினால் வரும் இடா்ப்பாடுகள் நீங்கவும்,வாழ்க்கையில் எதிா்பாராத இடா்ப்பாடுகள் ஏற்படாமலிருக்கும் பொருட்டு ஓத வேண்டிய பதிகம்.

சனியினால் வரும் இடா்ப்பாடுகள் நீங்கவும், எதிா்பாராத இடா்ப்பாடுகள் ஏற்படாமலிருக்கும் பொருட்டு ஓத வேண்டிய பதிகம்.
_____________________________

தலம் : திருநள்ளாறு.
________________________

சுவாமி :
ஸ்ரீ தா்பார்ண்யேஸ்வரா்.

அம்பாள் ;
ஸ்ரீ போகம் ஆா்த்த பூண்முலையாள்.
--------------------------------------------

திருஞானசம்பந்தா் அருளிய திருக்கடைக்காப்பு.
_______________________

பச்சை திருப்பதிகம்.
♦♦♦♦♦♦♦♦

முதல் திருமுறை.
♦♦♦♦♦♦♦

பண்: பழந்தக்கராகம்.
___________________________

1. போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோலுடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே

2. தோடுடைய காதுடையன், தோலுடையன், தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே

3. ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே

4. புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே

5. ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே

6. திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே

7. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர,
அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே

8. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே

9. உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே

10. மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,
மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே

11. தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.

     திருச்சிற்றம்பலம்...

வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன் கோவில் ...!

வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன் கோவில்  ...!
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே முருகப்பெருமான் வேலை தலைகீழாகப் பிடித்து நிற்கும் தோற்றத்தில் அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது.

தல வரலாறு

உம்பிளி மற்றும் பெருநா எனும் இரு கிராமங்களில் அந்தணர்கள் வசித்து வந்தனர். இதில் பெருநா எனுமிடத்தில் வசித்த அந்தணர்கள் நற்செயல்கள் செய்யும் சாத்விக குணம் கொண்டவர்களாக இருந்தனர். 

உம்பிளியில் இருந்தவர்கள் மாய, தந்திர வேலைகளைச் செய்பவர்களாகவும், தீய எண்ணங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.

பெருநாவில் இருந்த அனைவரும் சிவ பக்தர்கள் என்பதால், அவர்கள் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள கீழக்குளக்கரை என்ற இடத்தில் இருந்த சிவாலயத்தில் வழிபாடு செய்தனர். 

பெருநா மக்களின் மீது பொறாமை கொண்டிருந்த உம்பிளி பகுதி மக்கள், சிவன் கோவிலை இடித்து சேதப்படுத்தினர். 

இதையறிந்த பெருநா ஊர் மக்கள், உடனடியாகச் சென்று சிவபெருமான் சிலையை மட்டும் பாதுகாப்பாக மீட்டனர். இந்நிலையில், இடமனா இல்ல நம்பூதிரி என்பவர் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, பழனி முருகன் கோவிலுக்குப் புனிதப்பயணம் சென்றார்.

அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகளைச் செய்து வழிபட்டு வந்தார். சில வாரங்களுக்குப் பின்பு, அவருக்குக் காட்சியளித்த பழனி முருகப்பெருமான், ‘பத்தினம்திட்டா மாவட்டத்தில் செல்லும் கொடுந்துறா ஆற்றில் கிடைக்கும் தனது சிலையை எடுத்து வழிபட்டு வந்தால், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்’ என்றார்.

இடமனா நம்பூதிரி, முருகப்பெருமான் சொன்னபடியே கொடுந்துறா ஆற்றில் கிடைத்த சிலையை எடுத்துக் கொண்டு போய், பெருநா கிராமத்தில் நிறுவினார். 

இதனையறிந்த உம்பிளி கிராமத்தினர், சில ரகசியத் தந்திரச் சடங்குகளைச் செய்து, பெருநா முருகன் கோவிலை அழிக்க முயன்றனர். 

இதனைக் கேள்விப்பட்ட இடமனா நம்பூதிரி, அவரது நண்பரான காரணவர் என்பவரை அழைத்துக் கொண்டு உம்பிளியை நோக்கிச் சென்றார்.

வழியில், உம்பிளி கிராமத்தினர் செய்த மாய, தந்திரங்களால், நெருப்புப் பந்து ஒன்று உருவாகி அது கோவிலை அழிக்கும் வேகத்துடன் வந்து கொண்டிருந்தது.  

இடமனா நம்பூதிரி அதனைத் தடுக்க, முருகப்பெருமான் அருளுடன் சில சடங்குகளைச் செய்யத் தொடங்கினார்.  இந்த பூஜையில் காரணவர் பலியானார். நண்பன் இறந்தாலும், தன் பணியைத் தொடர்ந்த இடமனா நம்பூதிரி அந்தத் தீயசக்தியை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினார்.

பின்னர் உம்பிளியிலிருந்து எந்தத் தீயசக்திகளும், பெருநா கிராமத்திற்கு வந்துவிடாமல் இருக்க சில சிறப்புச் சடங்குகளைச் செய்து முடித்தார்.
அதன் பிறகு, உம்பிளி கிராமத்தினர் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. 

பிற்காலத்தில் உம்பிளி கிராமமே முற்றிலுமாக அழிந்து போனதுடன், அடர்ந்த காடாகவும் மாறிப் போய்விட்டதாக ஆலய வரலாறு சொல்கிறது.

பெருநா கிராமத்தில் முருகப்பெருமான் கோவில் அமைந்த தல வரலாறு இதுதான். 
இக்கோவிலில் நிறுவப்பட்டிருக்கும் முருகன் சிலை, முன்பொரு காலத்தில் முனிவர்கள் மற்றும் தேவர்களாலும் வணங்கப்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது. 

பிரம்மாவின் மகனான காசிப முனிவருக்கும், சுக்ரனின் மகளான மாயாவுக்கும் பிறந்தவர்கள் சூரபதுமன், சிங்கமுகன் மற்றும் தாரகாசுரன். 
இவர்கள் மூவரும் சிவபெருமானை வேண்டிக் கடுந்தவமியற்றினர்.

தங்களுக்கு எந்த வழியிலும் அழிவு வரக்கூடாது என்று நினைத்த அவர்கள், சிவபெருமானுக்குச் சமமானவராக இருக்கும் ஒருவரால் மட்டுமே தங்களுக்கு அழிவு வர வேண்டும் என்ற வரத்தை பெற்றனர்.

தாங்கள் பெற்ற வரங்களால் அகந்தை கொண்ட மூவரும், தேவர்களையும், உலக உயிர்களையும் துன்புறுத்தத் தொடங்கினார்கள். 

இதனால் வருத்தமடைந்த தேவர்கள் அனைவரும் அசுரர்களின் தொல்லைகளில் இருந்து விடுபட என்ன வழி என்பது குறித்து ஆலோசித்தனர்.
பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். 

அவர்களின் துன்பங்களைத் தீர்க்க விரும்பிய சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியேற்றினார். அவை ஆறையும் ஒன்றாக்கியதில் முருகப்பெருமான் தோன்றினார்.

தேவர்களின் அரசனான தேவேந்திரன், தேவர்களுடன் சென்று முருகப்பெருமானைச் சந்தித்து, அவரது பிறப்பிற்கான காரணம் குறித்து தெரிவித்து, அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பாற்றும்படி வேண்டினான். முருகப்பெருமானும் அதற்குச் சம்மதித்துத் தேவர்களின் படைத்தலைவனாக (தேவசேனாதிபதி), மூன்று அசுரர்களையும் அழிக்கப் புறப்பட்டார். 

போருக்குச் செல்லும் முருகப்பெருமானை வாழ்த்திய தந்தை சிவபெருமான் அவருக்குப் பதினொரு ஆயுதங்களைக் கொடுத்தார். தாய் பார்வதிதேவி தன்னுடைய சக்தி அனைத்தையும் சேர்த்து வேல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார்

முருகப்பெருமான் முதலில் தாரகாசுரனை அழிக்கும் நோக்குடன் அவன் இருக்கும் இடத்திற்குச் சென்றார். முருகப்பெருமான் படையுடன் தன்னை அழிக்க வந்திருப்பதை அறிந்த தாரகாசுரன், தனது படையுடன் அங்கு வந்தான். 

இரு படையினருக்கும் இடையில் கடுமையான போர் நடந்தது. முருகப்பெருமானின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத தாரகாசுரன் பின் வாங்கினான்.

அப்போது அகத்திய முனிவரின் சாபத்தால், பறவையாக இருந்து மலையாக மாறிய கிரவுஞ்சன், முருகனின் படைகளை வழிமறித்துப் பெரிய மலையாக வளர ஆரம்பித்தான். 

அதனால், முருகப்பெருமானின் படைகள் முன்னேறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தாரகாசுரனும் எலியாக மாறி, கிரவுஞ்ச மலைக்குள் சென்று பல மாய வித்தைகளைக் காட்டத் தொடங்கினான்.

அதனைக் கண்டு கோபமடைந்த முருகப்பெருமான், தாய் தந்த வேலாயுதத்தைக் கையில் எடுத்து அந்த மலையை நோக்கி வீசியெறிந்தார். அந்த வேல் கிரவுந்த மலையைப் பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனையும் அழித்துத் திரும்பியது.

தாரகாசுரனை அழித்த ரத்தம் படிந்த வேலை கையில் பிடித்த முருகப்பெருமான், வேலில் படிந்திருந்த ரத்தம் மண்ணில் இறங்கும்படியாக வேலை, தலைகீழாகத் திருப்பி தரையில் ஊன்றி நின்றார். முனிவர்களும், தேவர்களும் மூன்று அசுரர்களில் ஒருவன் அழிந்ததை எண்ணி மகிழ்ந்து, முருகப்பெருமானை வாழ்த்தினர். சில முனிவர்கள் முருகப்பெருமானைத் தாங்கள் கண்ட அதே தோற்றத்தில் சிலையமைத்து வழிபட்டு வந்தனர். அந்தச் சிலையே பிற்காலத்தில் இடமனா நம்பூதிரிக்குக் கிடைத்தது என்று சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

கேரளக் கட்டுமானப்பணிகளுடன் அமைந்திருக்கும் இக்கோவிலின் கருவறையில், ஆறடி உயரத்திலான முருகப்பெருமான் கிழக்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். 

அவரது கையில் இருக்கும் வேல், தலைகீழாக இருக்கிறது. கோவில் வளாகத்தில் மகாகணபதி, சிவபெருமான், மகாவிஷ்ணு, நாகர்கள் உள்ளிட்ட பல துணைத் தெய்வங்கள் இடம் பெற்றிருக்கின்றன. 

இந்த ஆலயத்தில் மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதம் பத்து நாட்கள் நடைபெறும் ‘பள்ளிவேட்டை விழா’ சிறப்பானதாகும். இவ்விழா நாட்களில் சாக்கியார் கூத்து உள்ளிட்ட கேரள மரபு வழி கலைநிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகின்றன. 

மகரம் (தை) மாதம் வரும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடக்கிறது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வளமான வாழ்வு கிடைக்கும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், காவடி எடுத்து வந்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டால், அவர்களின் நோய் நீங்கி நலம் பெறுகிறார்கள்.

ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்:–
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சங்கனாச்சேரி. 

இங்குள்ள நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில்  பெருநா திருத்தலம்  அமைந்துள்ளது.

ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம் பற்றிய பதிவு :*

*ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம் பற்றிய பதிவு :*
ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக லிங்கத்தை ராமரும், சீதையும் பூஜித்தனர் என்பது தல வரலாறு. தன்னருகில் வைக்கப்படும் பொருட்களின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியது என்பதால், ஸ்படிகம் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த ஸ்படிகத்தில் செய்யப்பட்ட லிங்கத்திற்கு கூடுதல் சிறப்புண்டு. 

ஒரு முறை கயிலாய மலையை நோக்கி ஆதிசங்கரர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், அவரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் கொடுத்தனுப்பினார். அவை,

1. முக்தி லிங்கம், 
2. வர லிங்கம், 
3. மோட்ச லிங்கம், 
4. போக லிங்கம், 
5. யோக லிங்கம் 

ஆகிய அந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களையும், சிவபெருமானின் ஆணைப்படி, ஐந்து இடங்களில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார். அவற்றில், முக்தி லிங்கம் கேதார்நாத்திலும், வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்டத்திலும், மோட்ச லிங்கம் சிதம்பரத்திலும், போக லிங்கம் கர்நாடகா மாநிலம் சிருங்கேரியிலும், யோக லிங்கம் காஞ்சிபுரத்திலும் அமைக்கப்பட்டன. 

தமிழ்நாட்டில் சிதம்பரம் ஆலயம், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம், ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயங்களில் உள்ள ஸ்படிக லிங்கங்கள் சிறப்புக்குரியவை. 

இதில் ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக லிங்கம் கூடுதல் சிறப்பு கொண்டது. இந்த ஸ்படிக லிங்கம் விபீஷணனால் இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதை ராமரும், சீதையும் பூஜித்தனர் என்பது தல வரலாறு. 

ராமேஸ்வரத்தில் அதிகாலை 4 மணிக்கு இந்த ஸ்படிக லிங்கத்தை தரிசித்து விட்டு, கோவிலில் இருக்கும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

இதேபோல் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரனார் கோவில் ஆகியவற்றிலும் ஸ்படிக லிங்க வழிபாடு பிரசித்தம்.

Sunday, January 29, 2023

யோகமும் ஞானமும் தரும் வீணா தட்சிணாமூர்த்தி*

*யோகமும் ஞானமும் தரும் வீணா தட்சிணாமூர்த்தி* 🦜🙏🙏🙏💕🦜
🕉திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில்,சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது துடையூர்.

🕉இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் விஷமங்களேஸ்வரர்.சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த திருத்தலம் இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

🕉ஆலயத்திற்குள் நுழையும் போதே இடது புறம் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அமர்ந்த நிலையில்,நான்கு கரங்களுடன்,பின் வலக்கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன் திருமால் காட்சி தருகிறார்.

🕉பொதுவாக சிவாலயங்களில் கருவறையை நோக்கி இருபுறங்களில் சூரிய சந்திரர்கள் காட்சி தருவர்.இங்கு சூரியன் இருக்க வேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு சூரிய நாராயணராக தேவியரோடு காட்சி தருவது அரிது என்கிறார்கள் பக்தர்கள்.

🕉சூரிய பகவான் திருமால் அம்சமாக,சூரிய நாராயணர் என்று போற்றப்படுகிறார்.

🏵️கருவறையை வலம் வரும் போது தெற்கு கோஷ்டத்தில் வீணையை ஏந்தியபடி,நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
🏵️பின்னிரு கரங்களில் மான்,மழு ஏந்தி,முன்னிரு கரங்களில் வீணையை மீட்டி,அந்த நாதத்தில் மெய் மறந்த நிலையில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
🏵️இவர் திகசண்டளா வீணா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார்.
🏵️லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்திலும் இதே போன்ற வீணா தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

🕉குருப் பெயர்ச்சியையொட்டி,இந்தத் தலத்துக்கு வந்து விஷமங்களேஸ்வரரையும் வீணா தட்சிணாமூர்த்தியையும் மனதாரப் பிரார்த்தனை செய்தால்,"குருவருளும் திருவருளும்" கிடைத்து யோகத்துடனும் ஞானத்துடனும் திகழலாம்.

🕉கருவறையின் பின்புற கோஷ்டத்தில் சிவபெருமானின் 64 திருமேனிகளில் ஒன்றான உமா ஆலிங்கன மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

🕉சிவபெருமான்,
வலது கையால் சின் முத்திரை காட்டியும் இடது கையால் பார்வதி தேவியை அணைத்தபடி அபூர்வமாக காட்சியளிக்கிறார்.இங்கே வந்து இந்த மூர்த்தியை வணங்கினால்,கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்.பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

🕉ஈசன் தனது இடது பாதத்தின் சுண்டு விரலை தேவியின் வலது பாதத்தின் மீது வைத்திருப்பது போன்றுநுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது,இச்சிலை.

🕉இந்த உமா ஆலிங்கன மூர்த்தியை வழிபட மணப்பேறு,மகப்பேறு கிட்டும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

🕉தொடர்ந்து மேற்கே,தனிச் சந்நதியில் லட்சுமி நாராயணர்,கருவறையின் வட கோஷ்டத்தில் பிரம்மா,சரஸ்வதி,துர்க்கை சந்நதிகள் உள்ளன.அனைத்துச் சிற்பங்களும் கலைநயம் ததும்ப காட்சியளிக்கின்றன.

🕉ஆலயத்திற்கு வெளியே நாக தோஷங்களை நீக்கும் பாம்புப் புற்று காணப்படுகிறது.

ௐ நமசிவாய.

உடல் குறைபாட்டைப் போக்கும் ஆதிகுடி அங்குரேசுவரர் திருக்கோயில்...!

உடல் குறைபாட்டைப் போக்கும் ஆதிகுடி அங்குரேசுவரர் திருக்கோயில்...!

உடல் குறைபாட்டைப் போக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஆதிகுடியில் அமைந்துள்ள பிரேமாம்பிகை அம்மன் உடனுறை அங்குரேசுவரர் சுவாமி திருக்கோயில்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத் திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந் திருக்கும் இங்கு சிறப்பு வாய்ந்த விமல லிங்கம் உள்ளது.

இத்திருக் கோயிலின் எதிர்த் திசையில் மயானமும் அமைந் திருப்பது  தனிச் சிறப்புக் குரியது. 

இங்குள்ள வாய்க் காலுக்கு கமல காசித் தீர்த்தம் என்ற பெயர் உண்டு. இதனால் காசிக்கு இணையான தலமாக ஆதிகுடி அங்குரேசுவரர் திருக்கோயில் போற்றப் படுகிறது. மேலும் நீத்தார் கடன் செய்ய உகந்த இடம் என்றும் கூறப்படு கிறது.

நவக்கிரக நாயகர்களில் ஆயுள் காரராகப் போற்றப் படுவர் சனி பகவான்.  

இவர் சூரிய பகவானுக்கும் சாயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர்.  ஒரு சந்தர்ப்  பத்தில் எம மூர்த்தியின் தண்டத்தால் சனி பகவான் கால் ஊனம் அடைந்தார்.

இந்த ஊனத்தைப் போக்க           பல திருக் கோயில்களில் வழிபட்டார். புனிதத் தீர்த்தங்களில் சனி பகவான் நீராடினார். 

கடைசியாக ஆதிகுடி திருக் கோயிலை அடைந்தார். இக்கோயிலில் பல யுகங்கள் தவம் புரிந்து, இங்கு எழுந்தருளிய அங்குரேசு வரரின் அருளைப் பெற்றார் சனி பகவான். 

அதன் விளைவாக அவரது குறை நீங்கியதாக அங்குரேசுவரர் திருக்கோயில் தல புராணம் எடுத்துரைக் கிறது.

இத்திருக் கோயிலின் மகா மண்டபத்தில் நுழைந்தால், எதிரில் தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் பிரேமாம்பிகை அம்மன் காட்சியளித்து வருகிறார்.

தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டு தல்களை நிறைவேற்றித் தரும் சாந்த சொரூபியாக அம்மன் எழுந்தருளி யுள்ளார். மகா மண்டபத்துக்குள் நுழைந்தால் ஒரே நேரத்தில் இறைவன், இறைவியை வழிபடலாம். 

விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந் திருந்தால், பக்கவாதம் போன்ற  நோயால் பாதிக்கப் பட்டிருந்தால், இத்திருக் கோயிலில் காட்சி யளிக்கும் விமல லிங்கத்தின் வலதுபுறத்தில் நன்றாகத் திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறத்தில் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்து வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

சத்திரம் பேருந்து நிலையம், திரு வானைக்கா, நெ.1.டோல் கேட், வாளாடி, மாந்துறை வழியாக லால்குடி வந்து, லால்குடி யிலிருந்து         சுமார் 5 கி.மீ. தொலைவில் ஆதிகுடி அமைந்துள்ளது

தை கிருத்திகையில் கஷ்டங்கள் போக்கும் கிருத்திகை வழிபாடு.*

* தை கிருத்திகையில் கஷ்டங்கள் போக்கும் கிருத்திகை வழிபாடு.*
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
தை கிருத்திகையில் வேலவனைத் தரிசிப்போம். வேதனைகளையும் வினைகளையும் தீர்த்தருளுவான் கந்தகுமாரன்.
🌟
சிவ வழிபாடு, கணபதி வழிபாடு, வைணவ வழிபாடு, சக்தி வழிபாடு என வழிபாட்டு தெய்வங்களும் வழிபடும் முறைகளும் ஏராளம். இந்த வழிபாட்டு முறைகளில் முருக வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
🌟
முருக வழிபாடு என்பது மிக மிக எளிமையானதாகவே சொல்கிறார்கள் முருக பக்தர்கள். முருகப்பெருமானை வழிபடுகிற விதங்களில்தான், காவடி எடுத்து பக்தர்கள் வருகிறார்கள். அலகு வழிபாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பால் குடம் ஏந்தி வந்து ஆறுமுகப் பெருமானை தரிசிக்கும் பக்தர்களும் இருக்கிறார்கள்.
இன்னும் முக்கியமாக, முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து தரிசித்துச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள்.
ஆறுபடை வீடுகள் முருகக் கடவுளுக்கு அமைந்திருக்கின்றன. தை மாதம் என்பது வழிபாட்டுக்கான அற்புதம். தை மாதத்தில் இயற்கையையும் வணங்குகிறோம். கால்நடைகளையும் வணங்கி வழிபடுகிறோம். தை மாதத்தில்தான் முருகக் கடவுளுக்கு பூசத்திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.
🌟
திதியில் சஷ்டி திதி முருகக் கடவுளுக்கு உகந்த நாள். மாதந்தோறும் வருகிற சஷ்டியில் விரதம் மேற்கொண்டு முருகக் கடவுளை தரிசித்து வணங்கிச் செல்வார்கள் பக்தர்கள். அதேபோல், நட்சத்திரங்களின் அடிப்படையிலும் முருகக் கடவுளுக்கு உரிய தினங்கள் இருக்கின்றன.
🌟
பங்குனி மாதத்தின் உத்திரம் நட்சத்திரநாளில் முருகக் கடவுள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதேபோல் வைகாசி மாதத்தில் வருகிற விசாகம், கந்தனுக்கு உகந்தநாள். இந்தநாளிலும் வேலவனை தரிசித்து வணங்குவார்கள்.
🌟
அதேபோல், நட்சத்திரங்களில் கிருத்திகை நட்சத்திரம் மிக மிக முக்கியமான நட்சத்திர நாள். மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாள் விசேஷமானது. குறிப்பாக, கார்த்திகேயனை வணங்குவதற்கு உரிய மிக முக்கிய தினமாக தை கிருத்திகை நட்சத்திர நாளும் ஆடிக்கிருத்திகை நட்சத்திர நாளும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளக் கூடிய நாட்கள். உத்தராயன புண்ய காலத்தின் தொடக்க மாதத்தில் வருகிற கிருத்திகையும் தட்சிணாயன புண்ய காலத்தில் வருகிற கிருத்திகையும் மும்மடங்கு பலன்களைத் தரக்கூடியது.
🌟
நாளைய தினம் 30 ம் தேதி திங்கட்கிழமை தை மாத கிருத்திகை. இந்த அற்புதமான நாளில், அருகில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கோ, முருகப்பெருமான் சந்நிதி கொண்டிருக்கும் கோயிலுக்கோ சென்று மனம் குளிர தரிசியுங்கள். மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
🌟
வீட்டில் சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுவதும் பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதும் இல்லத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும்.
🌟
உங்கள் வேதனைகளையெல்லாம் போக்கி அருளுவான் வேலவன். கஷ்டங்களையெல்லாம் அகறி அருளுவான் கந்தகுமாரன். குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்து தந்தருளுவான் தணிகைவேலன்.

உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும், உபதேசித்த இறைவனும், உபதேசம் பெற்ற இறைவனும்.*

*🕉️ உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும், உபதேசித்த இறைவனும், உபதேசம் பெற்ற இறைவனும்.*
1) திருவெற்றியூர்-  சிவனான வல்மீகநாதசுவாமி பார்வதி தேவியான  பாகம்பிரியாள் அம்மனுக்கு தன் இடப்பாகத்தில் ஒரு பகுதி சக்தியை தந்து உமாதேவிக்கு உபதேசம் செய்த திருத்தலம்.

2) . ஓமாம்புலியூர் – தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

3) உத்திரகோசமங்கை - பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

4). இன்னம்பர் – அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.

5) திருவுசாத்தானம் - இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.

6.) ஆலங்குடி - சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.

7.)  திருவான்மியூர் - அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

8). திருவாவடுதுறை - அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

9) சிதம்பரம் - பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.

10). திருப்பூவாளியூர் - நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.

11.) திருமங்களம் - சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

12.)  திருக்கழு குன்றம் - சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

13.)  திருமயிலை - 1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.

14) செய்யாறு - வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.

15.) திருவெண்காடு - நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.

16.)  திருப்பனந்தாள் - அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.

17.) திருக்கடவூர் - பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.

18.) திருவானைக்கா - அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.

19.) மயிலாடுதுறை - குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.

20) திருவாவடுதுறை - அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.

21.) தென்மருதூர் - 1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.

22.) விருத்தாசலம் - இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.

23.) திருப்பெருந்துறை - மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.

24.) உத்தரமாயூரம் - ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.

25.) காஞ்சி - ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.

26.) திருப்புறம்பயம் - சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.

27.) விளநகர் - அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.

28) திருத்துருத்தி - சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.

29.( கரூர் - ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.

30.)  திருவோத்தூர் - ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்.

*🕉️ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம்.*

*🕉️ வாழ்க வளமுடன் நலமுடன்.*

மஹா சிவராத்திரி ஸ்பெஷல் !

மஹா சிவராத்திரி ஸ்பெஷல் !
சிவ சிவ என்று சொன்னால் போதும்...துன்பங்கள் பறந்தோடும்..

சிவராத்திரி என்பதற்கு 'சிவனுக்கு உகந்த இரவு" என்பது பொருள். சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.

சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள்.

சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி. நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது.

சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும்.

சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும் தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

மாத சிவராத்திரி :

மாதந்தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.

சிவராத்திரி சிறப்புகள் :

திருவைக்காவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், ஆயுள் பலம் அதிகரிக்கும்.

எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவ பூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரக்கூடியது.

சிவராத்திரி விரதம் இருந்ததால் விஷ்ணு சக்ராயுதத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

சிவனின் மூன்று கண்களாக சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் உள்ளனர்.

சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

சிவராத்திரி விரதமானது வயது,இன,மதவேறுபாடுகளை கடந்த யாவரும் அனுஷ்டிக்கக்கூடியது.

சிவராத்திரியில் விரதம் இருந்து வழிபட்டால் புத்திர தோஷம், திருமணத்தடை என அனைத்துதுன்பங்களும் நீங்கும்.

Saturday, January 28, 2023

எப்படி வந்தது யானை முகம் ?விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார்

எப்படி வந்தது யானை முகம் ?
விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான். கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.
தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.
யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத்தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது. விநாயகருக்கு, சுமுகர் என்ற பெயருண்டு. ச என்றால் மேலான அல்லது ஆனந்தமான என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார். விநாயகர் சதுர்த்தி நன்னாளில், ஓம் கணேசாய நம என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.
பெண் உருவ பிள்ளையார்
பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையார் கணேசினி என்றும், கஜானனி என்றும் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர், பெண்ணுருக் கொண்டு இருகரங்களில் அபய, வரத முத்திரைகளைக் கொண்டு நிற்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுவாமி சன்னதி நுழைவு வாயிலின் வலது பக்க தூணில் கணேசினியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால் வியாக்ரபாத கணேசினி என அழைக்கப்படுகிறார்.
பிள்ளையார் சுழி தேவதைகள்!
பிள்ளையார் சுழியில் உள்ள அகரத்திற்குப் பிரம்மன், உகரத்திற்குத் திருமால், மகரத்திற்கு ருத்திரன், பிந்துவிற்கு மகேசன், நாதத்திற்குச் சிவன் என்று குறிப்பிடுகின்றனர். எனவே, ஐந்து தெய்வ வணக்கமே பிள்ளையார் சுழி என்பர்.
விநாயகரும், சர்ப்பமும்!
விநாயகர் உதரவந்தம் பாம்பு. அணி பாம்பு, பூணூல் பாம்பு எனத் தம் உடலில் சர்ப்ப அணிகலன் கொண்டுள்ளார். பிள்ளையார்பட்டியில் லிங்கமும் பாம்பும், திருப்பரங்குன்றத்தில் கரும்பும், பவானியில் வீணையும், மானாமதுரையில் சங்கும், சங்கரன்கோவிலில் பாம்பாட்டிச் சித்தர் பீடத்தில் நாகத்தையும் கையில் கொண்டுள்ளார். தேனியில் அமிர்த கலசம் ஏந்தி காட்சியளிக்கிறார்.
பிள்ளையார் பிரார்த்தனை பலன்கள்!
மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும்.உப்பால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிவர்.கல்லால் அமைந்த விநாயகரை வழிபட, சகல பாக்கியங்களும் பெறலாம்.
விநாயகர் - சில தகவல்கள்!
தமிழ்நாட்டில் முதன் முதலாக தங்கத் தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர் கோவை ஈச்சனாரிப் பிள்ளையார். இங்குள்ள தேர், ஏழரை கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது.                                                               
இழந்த பதவிகளை மீண்டும் பெற...
சிலருக்கு தொழிலில் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்; சிலருக்கு பதவி இழப்பு ஏற்பட்டிருக்கலாம்; சிலருக்கு சொத்து இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இவர்கள், நடனமாடும் தோற்றத்தில் இருக்கும் நர்த்தன விநாயகரை அணுகி, அவருக்கு அபிஷேகம் செய்து, இனிப்பு நைவேத்யம் செய்து, வழிபட்டு வந்தால், இழந்தவைகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.        
வியப்பூட்டும் விநாயகர்!
வித்தியாசமான விநாயகர்: கை - தொழில், கும்பம் ஏந்திய கை - ஆக்கும் தொழில், மோதகம் ஏந்திய கை - காக்கும் தொழில், அங்குசம் ஏந்திய கை - அழிக்கும் தொழில், பாசம் ஏந்திய கை -மறைத்தல் தொழில். விநாயகருக்கு விருப்பமான நிவேதனம்: மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், தேன், கல்கண்டு, சர்க்கரை, தினை மாவு, பாகு, அதிரசம் முதலியன. பன்னிரெண்டு விநாயகர்: வக்ரதுண்டர்,  சிந்தாமணி, கணபதி, கஜானை கணபதி, விக்ன கணபதி, மதுரேச கணபதி, துண்டு கணபதி, வல்லப கணபதி, தூப கணபதி, கணேசர், மதோத்கட கணபதி, ஹேரம்ப கணபதி, விநாயகர். விநாயகர் என்ற சொல்லுக்கு சிறந்த தலைவர் என்று பொருள். வி - சிறந்த, நாயகர் - தலைவர். விநாயகரை உருவாக்க: கருங்கல், சலவைக்கல், பளிங்குக்கல், சுத்தி, வெள்ளை எருக்குவேர், பஞ்சலோகம், வெள்ளி, செம்பு, பொன், தந்தம், மஞ்சள், சந்தனம், சர்க்கரை, பசுஞ்சாணம், முத்து, பவளம், மண், விருட்ச மரங்கள் முதலியன.
கணபதியின் 16 வடிவங்கள்
விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதால் மாறுபட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும்.
1. பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.
2. தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால 
ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை 
வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.
3. பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நன்கு அமையும்.
4. வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.
5. சக்தி கணபதி: பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
6. துவிஜ கணபதி: இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.
7. சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.
8. உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.
9. விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற 
மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.
10. க்ஷிப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.
11. ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விள
ங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள்.
12. லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.
13. மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.
14. புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.
15. நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும்  துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில்நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.
16. ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர்.  தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
ஐங்கரன்- பெயர்க்காரணம்
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு  கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால் ஐங்கரன் என்று பெயர் பெற்றார்.  நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில்  விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது.  விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது  கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும்  வைத்திருப்பார். இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம்  அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும்  அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.

காவிரியாற்றின் வடகரையில் உள்ள திருத்தலம் கஞ்சனூர். இத்தலத்தில் விஷ்ணுவின் இருபத்திஐந்தாம் அவதாரமாக அவதரித்தவர் ஸ்ரீ ஹரதத்தாச்சாரியர்.

சிவமே பரம் 
.சிவமே பரம் என நின்ற ஸ்ரீ ஹரதத்தர் கைலைக்காக்ஷி பேறு பெற்ற நாள்.சோழ வளநாட்டில் காவிரியாற்றின் வடகரையில் உள்ள திருத்தலம் கஞ்சனூர். இத்தலத்தில் விஷ்ணுவின் இருபத்திஐந்தாம் அவதாரமாக அவதரித்தவர் ஸ்ரீ ஹரதத்தாச்சாரியர்.
அத்தலத்தில் காஸ்யப கோத்திரத்தில் வந்த வாசுதேவர் என்ற வைணவ பிராமணர், மஹாவிஷ்ணு மீது மிகுந்த பக்தி கொண்டவர்.அவர் மகாவிஷ்ணுவே தமக்கு புத்திரனாக பிறக்கவேண்டும் என்று தவம் செய்தார்.பரமேஸ்வரன் ஆக்ஞைப்படி, திருமால் சுதர்ஸன அவதார சொருபமாக வாசுதேவருக்கு புத்திரராக அவதரித்தார்.குழந்தைக்கு பெற்றோர்கள் "சுதர்ஸனன் "என்றுபெயரிட்டார்கள்.சுதர்ஸனன் வைணவகுலத்தில்பிறந்தாலும்இயற்க்கையாகவே சிவபக்தி மிகுந்தவராகவிளங்கினார்.கஞ்சனூரில்உள்ளசிவாலயம்
சென்று நாள்தோறும் விபூதி தரித்து ஸ்ரீ அக்னீ ஸ்வரப் பெருமானைவழிபடும்நியதிகொண்டவராகவிளங்குனார்.சுதர்சனின்இச்செயல்கள்அவர்கள்பெற்றோர்களுக்கு கவலை அளித்தது. ஒரு முறை சுதர்ஸனர் இல்லத்தில் சிவக்கோலத்தில் இருப்பதைக் கண்ட, தந்தை வாசுதேவர் வெகுண்டெழுந்து தன் மனைவியைப் பார்த்து, இவன் குலத்துரோகி, நம் சமயத்திற்க்கு விரோதி. இவனுக்கு உணவு இடாதே என்று வீட்டை விட்டு வெளியே துரத்தினர்.
சுதர்ஸனர் நேராக கஞ்சனூர் சிவாலயம் சென்று, அங்கு
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சந்நிதியில் தியானத்தில் அமர்ந்தார்.
அப்பொழுது ஹே மகாப்பிரபோ, இச்சிறியவன் தங்களை சரணடைந்தேன்.என்னுடைய சரீரத்தை பெற்றெடுத்த தாய் தந்தையரை விட்டுவந்தேன், உலகத்திற்க்கு அம்மையப் பராகிய தாங்களே எம் பிதா மதா. என்று மனம்முருகி வேண்டினார்.
குழந்தையாகிய சுதர்ஸனின் வேண்டுதலுக்கு மனமிறங்கி இறைவன் ரிஷபாரூடராய் காட்சி அளித்து குழந்தையின் கண்களுக்கு தம்மை தரிசிக்கவல்ல சக்தியையும் கொடுத்தார்.அப்பொழுது அக்குழந்தை நமஸ்கரித்து கண்ணீர்மல்க நிற்க,குழந்தாய் உனக்கு சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருள் செய்கிறோம்.நீ உலகத்தில் உம் பிறவி நோக்கமாகிய "சைவ ஸ்தாபனம் " செய்து சிவஞானம் போதித்து சில காலம் கீர்த்தியோடு வாழ்ந்து வருவாய்என்று அருள்செய்தார்.மேலும் குழந்தாய் உம் உடல், பொருள், ஆவி மூன்றையும்எமக்குதத்தம்செய்துகொடுப்பாய்என்றுஇறைவன் கேட்க,சுதர்ஸனனான சிவகுழந்தை உடனே தயங்காமல் தனது ஆவியையும், உடலையும், உடமையையும் தத்தம் செய்து கொடுத்தார்."மகனே! நீ ஹரனான எனக்கு உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்து கொடுத்ததால் உனக்கு "ஹரதத்தன்" "என்ற தீக்ஷா நாமம் தந்தோம் என்று அருளிச் செய்து, தமது திருக்கரங்களால் வீபூதியிட்டு, பஞ்சாக்ஷர உபதேசம் செய்து ஸ்படிக லிங்கம் அளித்து சிவபூஜா விதிமுறைகளை தாமே உபதேசித்து அருள்செய்தார்.
"ஹரதத்தர் " என்றால் தன்னை ஹரனுக்கு தத்தம் செய்து கொடுத்தவர் என்று பொருள் ஆகும்.
ஸ்ரீ ஹரதத்தர் சிவக்கோலத்தோடு தம் தாயாரை காணச் சென்றார்.அப்பொழுது தந்தை வாசுதேவர் இவரின் சிவக்கோலத்தைக்கண்டு, கோபாவேசமுற்றார்.நீ சிவச்சின்னம் தரித்துக்கொண்டதால், கையில் சிவலிங்கம் ஏந்தியால் வைணவ துரோகியாகிவிட்டாய் என்று ஏசினார்.
அப்பொழுது ஸ்ரீ ஹரதத்தர் தந்தையைப் பார்த்து, விபூதி, சிவலிங்க பூஜை செய்வது வைணவத் துரோகமா?
திருவீழிமிழலையில் மஹாவிஷ்ணுவே விபூதி ருத்திராக்ஷம் அணிந்து, சிவலிங்க பூஜை செய்து, தனது கண்ணைத் தாமரை மலராகக் கருதி அர்ச்சித்து வழிபட்டது உமக்கு தெரியாதோ ?அவ்வாறாகையில் விஷ்ணு வைணவ துரோகியா? என்றார்.இதைக்கேட்ட தந்தை வாசுதேவர் திடுக்கிட்டார்.இப்படி ஹரதத்தருக்கும் வாசுதேவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது.அந்நிலையில் தந்தையார் உள்ளிட்ட வைணவர்கள், சிறுவனே வாயால் வெறுமனே "சிவமே பரம் " என்றால் நாங்கள் ஏற்கமாட்டோம். பழுக்க காய்ச்சிய மழு முக்காலியில் அமர்ந்து கையை உயர்த்தி மூன்று முறை சத்தியம் கூறினால் நம்புவோம் என்றார்கள்.ஸ்ரீ ஹரதத்தர் இதற்க்கு உடன்பட்டார்.கஞ்சனூர் வரதராஜப் பெருமாள் சன்னிதி முன்தீவளர்க்கப்பட்டது.தீக்குழிஉண்டாக்கி இரும்புமுக்காலிஇட்டுதீயில்பழுக்ககாய்ச்சினார்கள்.
ஸ்ரீ ஹரதத்தர் சிவசிந்தனை கொண்டவராக பெருமாள் சன்னிதி முன்பு வந்தார்.பெருமாளே, நீர் சக்கரம் பெறுவதற்க்காகக் கண்மலரிட்டுச் சிவனை வழிபட்டதாலும்,
இராமாவதாரத்தில் ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாலும்,
கிருஷ்ணாவதாரத்தில் உபமன்னிய முனிவரிடம் சிவதீக்ஷை பெற்று சிவபூஜை செய்ததாலும் நீரும் ஒரு சிவபக்தராவீர். ஆகவே உம்மை வணங்குகிறேன்.
நான்கு வேதங்களும், புராணங்களுக்கும் சிவமே பரம்பொருள் என்பது உடன்பாடானால் இந்த நெருப்புக்குழி பொய்கை போன்று குளிரட்டும்.இந்த பழுக்ககாய்ச்சிய மழு முக்காலி தாமரை மலர்போல் குளிரட்டும் "-என்று பிரார்த்தனைசெய்து கொண்டு,திக்குழியில் இறங்கி மழுமுக்காலியில் அமர்ந்தார் .இரண்டு கைகளையும் உயர்த்திச்,சிவனே பரம்,சிவமே பரம்பொருள்,என்று கூறிச், சிவபரத்துவ ஸ்லோகங்களையும், இருபத்திரண்டுகாரணங்கள் அடங்கிய பஞ்சரத்ன ஸ்லோகங் களையும் பாடி அருளினார். தேவர்கள் கற்பக மலர் மாரி பொழிந்தார்கள். எங்கும் "ஹர ஹர மஹாதேவா "என்று முழக்கமிட்டார்கள்.இவ்வாறு சிவபரத்துவத்தை நிலைநாட்டிய புண்ணியர் ஸ்ரீஹரதத்தாச்சாரியர்.
சுவாமிகள் செய்த நூல்கள்.:
1)சிவபரத்துவ ஸ்லோகங்கள்.இந்நூல் ஆறு ஸ்லோகங்களால் ஆனது. ஹரதத்தர்மழுமுக்காலில்அமர்ந்துசிவனேபரம்பொரும் என்பதை நிலைநாட்டும் போது முதற்கண் இயற்றியது.
2)சுலோக பஞ்சகம். இந்நூல் ஐந்து ஸ்லோகங்களால் ஆனது .எனவே பஞ்சரத்ன ஸ்லோகம் என்று அழைப்பார்கள். இந்நூலில் சிவமே பரம் என்பதற்க்கு 22காரணங்களை அருளியுள்ளார். ஸ்ரீ ஹரதத்தர் செய்த இந்த வடமொழி நூலை, திருவாவடுதுறை ஆதின ஸ்ரீ மாதவ சிவஞான சுவாமிகள் தமிழில் மொழிபெயர்த்து பாடியுள்ளார்.
3)தச ஸ்லோகி :இந்நூல் சிவபெருமைகளை கூறும் பத்து ஸ்லோகங்களால் ஆனது.
4)ஹரிஹர தாரதம்மியம் :இந்நூல் 108ஸ்லோகங்களால் ஆனது.ஹரிக்கும் ஹரனுக்கும் உள்ள தாரதம்மியத்தை எடுத்து கூறியுள்ளார் இந்நூலில்.
5)சுருதி சூக்த மாலை:ஸ்ரீ ஹரதத்தரால் வடமொழியில் செய்யப்பட்ட இந்நூலுக்கு சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் என்ற மறுபெயரும் உண்டு.இந்நூலுக்கு ஹரதத்தரின் சீடரான சிவலிங்க பூபதியால் வடமொழியில் விளக்கவுரை செய்யப் பட்டிருக்கின்றது.திருவாவடுதுறை ஆதின மகாவித்வான் சபாபதி நாவலர் இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இவ்வாறு சிவமே பரம் என்று அருளி சைவசமய ஸ்தாபனஞ் செய்தருளிய ஸ்ரீ ஹரதத்தர் தைமாதம் சுக்ல பஞ்சமி அன்று கைலாயம் சென்று இறைவன் திருவடியை அடையும் பேறு பெற்றார்.
சிவமே பரம் என்று உயிர் மூச்சாக வாழ்ந்து அருள்புரிந்தவர் ஸ்ரீ ஹரதத்தர் பெருமான்.
அவர் திருவடிகளை இந்நாளில் நினைந்து வணங்கி புண்ணியம் பெருவோம்.சிவ சிவ 
சிவார்ப்பணம்.ஹரதத்தர்

💥 அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில் எனப் பெயர் வந்ததற்கு காரணம் அங்கு ஒரு சம்பவம் நடைபெற்றது தான்.

🌺அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவமே என் வரமே 🌺
🌷அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில்*

மூலவர் : எழுத்தறிநாதர்

தல விருட்சம் : செண்பகமரம் மற்றும் பலா மரம் உள்ளது.

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. 

ஊர் : இன்னம்பூர்.

மாவட்டம் : தஞ்சாவூர்.

தல வரலாறு :

💥 அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில் எனப் பெயர் வந்ததற்கு காரணம் அங்கு ஒரு சம்பவம் நடைபெற்றது தான். அக்காலத்தில் சோழ மன்னனின் கணக்கரான சுதன்மன் ஒரு முறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையான உத்தரவிட்டார். சரியான கணக்கு காட்டியும், தன் மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவபெருமானை வேண்டினார். 

💥 உடனே சிவபெருமான் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே, ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்? என மன்னன் கேட்டார். அதற்கு சுதன்மன் தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், சிவபெருமானுக்கு கோயிலும் எழுப்பினார்.

💥 ஆகையால் அக்கோயிலுக்கு எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அட்சரம் என்றால் எழுத்து. இது சுயம்புலிங்கம் என்பதால் தான் தோன்றீயீசர் என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. 

💥 அம்பாள் கொந்தார் குழலம்மை என்னும் சுகந்த குந்தலாம்பாளுக்கு தனி சன்னதியும், நித்திய கல்யாணி அம்மனுக்கு தனி சன்னதியும் மொத்தம் இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன. சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். அவனுக்கு இனன் என்றும் பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால் இனன் நம்பு ஊர் என்று பெயர் ஏற்பட்டு இன்னம்பூர் என்று மாறிவிட்டது.

தல பெருமை :

💥 இக்கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விஞ்ஞானத்தின் அடிப்படையில் லிங்கம் மீது சூரிய ஒளி ஆவணி 31, புரட்டாசி 1 மற்றும் 2, பங்குனி 13, 14, 15 தேதி காலையில் விழுகிறது. இதனை சூரிய பூஜையாக கருதுகிறார்கள்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் : 

💥 குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் இங்கு வந்து அர்ச்சனை செய்தால் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். மேலும் குழந்தை பாக்கியத்துக்காக இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறினால் சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்வார்கள். அம்பாளுக்கு திருமாங்கல்ய பூஜையும் செய்வார்கள்.

திருவிழா : 

💥 நவராத்திரி பூஜை பத்து நாட்கள் நடைபெறும் மற்றும் சித்திரையில் கோடாபிஷேகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருவாதிரை, சிவராத்திரி ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும்.

திறக்கும் நேரம் :

💥 காலை 7 மணி முதல் நற்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

முகவரி : 

அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், 
இன்னம்பூர் - 612 303. 
தஞ்சாவூர் மாவட்டம். 
போன் : +91 435 2000157, 96558 64958.

கோயிலிற்கு செல்ல வேண்டிய வழி :

 💥 கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் ரோட்டில் புளியஞ்சேரிக்கு வடக்கே 2 கி.மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏

உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்

அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி 🦜

சிதம்பரத்தை பற்றி சில விவரங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும்.

பூலோக கைலாசம் - தில்லை அம்பலம்
பூலோக கைலாசம் - தில்லை அம்பலம்:
சிதம்பரத்தை பற்றி சில விவரங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும். பூலோக கைலாசம் என்று அழைக்கப்படும் தலம் இது. (அரங்கன் பள்ளி கொண்ட ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்னுமாப்போல் சிதம்பரத்தை பற்றி எழுத வேண்டும் என்றாலே உடலில் ஒருவித பரவசம்  ஏற்படுகிறது.
சிதம்பரத்தை பற்றிய கடல் போல விரிவான,பரந்த  செய்திகளில் எதை சொல்வது, எதை விடுவது என்ற பெருங்கவலை ஏற்படுகிறது.)
நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து அடிப்படையான பஞ்ச பூதங்களுக்காக  தனித்தன்மையான கோவில்கள் தென்னிந்தியாவில் ஐந்து இடங்களில் கட்டப்பட்டிருக்கின்றன. பஞ்சபூத ஸ்தலங்கள் என்று இவைகளுக்கு பெயர். இவைகளில் தற்போதைய *தமிழகத்தில்* (நன்றாக கவனிக்கவும். தமிழகத்தில்) நான்கும், ஆந்திரப் பிரதேசத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளன.
*நீர் - திருவானைக்காவல்,*
*நெருப்பு - திருவண்ணாமலை,*
*காற்று - காளஹஸ்தி*,
*பூமி - காஞ்சிபுரம்*
மற்றும்
*ஆகாயம் -- சிதம்பரம்* ஆகிய இடங்களில் இந்த கோவில்கள் உள்ளன.
(சிதம்பரம் கோவிலை பதஞ்சலி முனிவர் உருவாக்கும்போது எந்த ஆடம்பர நோக்கத்துடனும் செய்யவில்லை. ஒரு மகத்தான சக்தியூட்டப்பட்ட புனித ஸ்தலத்தை உருவாக்க என்ன தேவையோ அதை மட்டுமே செய்தார்)
இதில், சிதம்பரம் கோவில் நம்பவே முடியாத அளவுக்கு ஆச்சரியங்களை உள்ளடக்கிய ஒன்று. கோவிலில் கொஞ்சம் புதிதாக தெரியும் பகுதியானது சுமார் 1000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாம். ஆனால் கோவிலின் புராதன உட்புறம் எப்போது கட்டப்பட்டது என்பது பற்றி யாருக்குமே தெரியவில்லை. 3500 ஆண்டுகள் அல்லது அதற்கும் முற்பட்டதாக இருக்கலாம் என்று  கருதப்படுகிறது.
சிதம்பரம் கோவிலில், நடனக்கலையின் அரசனாக 'நடராஜன்' எனும் வடிவில் சிவன் இருக்கிறான். 'நடேசன்' அல்லது 'நடராஜன்' சிவன் எடுத்துள்ள குறிப்பிடத்தக்க வடிவங்களில் ஒன்று. நடராஜனின் மற்ற பெயர்களை கேட்கும்போது மலைப்பேற்படுகிறது. மற்ற பெயர்கள்
திருமூலநாதர் (மூலட்டானேஸ்வரா்),
சபாநாயகா்,
கூத்தப்பெருமாள்,
கூத்தபிரான்,
விடங்கா்,
மேருவிடங்கா்,
தட்சிணமேருவிடங்கா்,பொன்னம்பலம்,
பொன்னம்பலகூத்தா்,
தில்லைவனநாதா்,
தில்லைநாயகா்,
தில்லைவாசா்,
கனகசபை,
கனகசபாபதி,
கனகரத்னம்,
சபாரத்னம்,
சபேசர்,
சித்சபேசர்,
சபாபதி,
ஸ்ரீசபா,
திருச்சபைநாதர்,
திருச்சிற்றம்பலநாதர்,
சிற்றம்பலம்,
அம்பலநாதா்,
அம்பலவாணா்,
அம்பலத்தரசா்,
ஆடலரசா்,
ஆடியபாதம்,
குஞ்சிதபாதம்,
நடனசிவம்,
நடனசபாபதி,
நடேசமூா்த்தி,
நடேஸ்வரா்,
தாண்டவமூா்த்தி,
தாண்டவராயா்,
ஆனந்ததாண்டவா்,
சிதம்பரநாதா்,
சிதம்பரேஸ்வரா்.
சிதம்பரம் கோவிலின் கட்டிட பகுதிகள் மட்டுமே  35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. முற்றிலும் கற்களை கொண்டு அற்புதமாக கோவில் உருவாக்கப் பட்டிருக்கிறது. இது தவிர, நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள் நிவந்தங்களாக ( அரசனுக்கு வரிசெலுத்த வேண்டா இடங்கள்)  கோவிலை பராமரிப்பதற்காகவே விடப்பட்டது. ஏராளமான ஆபரணங்களும், நவரத்தின மணிகளும் கோவிலின் சொத்தாக இருந்தன.
"உள்ளம் பெருங்கோயில்,
ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு"
என்றார் திருமூலர்.
மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து  பிரகாரங்கள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை நுரையிரல் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராஜரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.
இச்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும். அங்கு திருவுருவம் இருக்காது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்க விடபட்டிருக்கும். இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது. ,அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதேயாகும்.
பராந்தக சோழன் கூரைக்கு பொன் வேய்ந்தான் என அறிகிறோம்.
இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையை சிரமேற்று, 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை கூறுகின்ற விதமாக சேக்கிழார் தில்லை நடராஜர் கோயிலில் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்துதான் "பெரிய புராணத்தை" இயற்றியிருக்கிறார்.
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"
எனத் தொடங்கும் முதல் பாடலுக்கு
"உலகெலாம் உணர்ந்து" என்று ஈசனே அடி எடுத்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
சுந்தரர் திரு தொண்டர் தொகையை இங்குதான் எழுதியுள்ளார். அதில் அவர் "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்கிறார்.
மாணிக்க வாசகர் முக்தி அடைந்த தலம் இதுவே.
தில்லை மூவாயிரம் என அழைக்கப்படும் மூவாயிரம் தீக்ஷதர் குடும்பங்களில் இப்போது சுமார் 360 குடும்பங்களே உள்ளன. இந்து விரோத கட்சிகளாலும், அரசாலும் இவர்கள் படும் துயர் கணக்கிலடங்காது.
சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள  CERN என்ற பௌதீக ஆராய்ச்சிக் கூடத்தில் அணுக்களை ஒன்றோடு ஒன்று மோதச்செய்வது, பிளப்பது என அணுவை பற்றிய எல்லாவிதமான ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றது. அந்த பரிசோதனைச் சாலையின் வாயிலில் நடராஜரின் சிலைவடிவம் வைக்கப் பட்டிருக்கிறது. ஏனெனில் இப்போது அவர்கள் செய்து வரும் பரிசோதனைகளுக்கு மனிதர்களால் உருவாக்கப்பட்ட கலாச்சாரத்தில் உள்ள வேறு எதுவும் அருகில்கூட வரவில்லை என்பதை அவர்கள் கண்டுள்ளனர்.
பொதுவாக நமக்கெல்லாம் சிதம்பரம் என்று அறியப்பட்ட தில்லை, ஸ்ரீவைணைவர்களுக்கு  திருச்சித்ரகூடம் ஆகும்.
*அத்வைதம்* என்ற வார்த்தையில் *த்வைதம்* இருப்பதற்கு எடுத்துக் காட்டாக இங்கு நடராஜர் கோவில் உள்ளே கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. இது108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் 41-வது திவ்ய தேசம் திருச்சித்திரக்கூடம்.
(சில தரவுகளில் இந்த திவ்ய தேசத்தை வேறு நெம்பராக குறிப்பிடுகிறார்கள்.
விவரம் அறிந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் என்னை திருத்தவும்)
அசுரகுலத்தைச் சேர்ந்த தில்லி என்பவள் பெருமாளிடம், “தான் மரங்கள் நிறைந்த வனமாக இருக்க விரும்புவதாகவும், அவ்விடத்தில் சுவாமி எழுந்தருள வேண்டும்” என்றும் வேண்டினாள். விஷ்ணுவும் அருள்புரிய அவளே சிதம்பரத்தில் தில்லை மரங்களாக வளர்ந்து நிற்க விஷ்ணு இத்தலத்தில் பள்ளி கொண்டார். இத்தலமும் “தில்லை நகர்” எனப்பட்டது. தாயார் புண்டரீகவல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்தில் சுவாமியின் பாதத்திற்கு நேரே அவரது திருவடிகள் இருக்கிறது. இதனை வணங்குபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆனால் இந்த இடத்தில் சிவன் மற்றும் விஷ்ணு மற்றும் காளி தேவியை இணைக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. ஒருமுறை, சிவனுக்கும் அவரது துணைவி பார்வதிக்கும் இடையில் யார் நடனத்தில் சிறந்தவர் என்று வாக்குவாதம் ஏற்பட்டது. விஷ்ணு நடுவராக தில்லை வனத்தில் போட்டி நடந்தது. சிவன்  ஊர்த்வ தாண்டவத்தைத் தேர்ந்தெடுத்த போது, ​​தனது காதணியை தனது காலால் எடுத்து, காதில் அணிந்துகொள்ள, அந்த அளவிற்கு தனது காலை உயர்த்தினார். ஆனால் பெண் என்பதால் பார்வதியால் இந்த சாதனையை செய்ய முடியவில்லை. இதனால், நீதிபதி விஷ்ணு, சிவனை வெற்றியாளராக அறிவித்தார், அதே நேரத்தில் பார்வதி கோபத்தில், காளியாக, ஊரின் வேறு பகுதிக்கு சென்றாள். அவள் தில்லை காளி என்று வணங்கப்படுகிறாள்.
தில்லை நடராஜனை தரிசிப்பவர்கள் தில்லைக்காளியை வழிபட்டே போகவேண்டும் என்ற நியதி உள்ளது.
*(எழுதியவர் மாயவலை வீசிய திரு கிருஷ்ணமூர்த்தி)*

ருத்ராட்சம்_அணிய_விரும்பினால் கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.

#ருத்ராட்சம்_அணிய_விரும்பினால் 
கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள். 

ருத்ராட்சம் என்றதும் அனைவருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர். 
  
திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம் 
(ஓம்நமசிவாய) இவை மூன்றும் சிவனடியார்களின் சிவ சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே!  

ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு  ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். அல்லது இந்த ஜென்மத்தில்  மஹா புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் மட்டுமே அணிவதற்கு இறைவன் கருணை செய்வார். 

இவ்வுலகில் பிறந்த அனைவரும்  ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் ஜாதி மதம் பேதம் இல்லாமல் யார் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம் பயப்பட வேண்டாம்.

ருத்ராட்சத்தின் மகிமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். பல யுகங்களாக ஆன்மிக அன்பர்களுக்கு பல்வேறு வகையில் ருத்ராட்சம்  பலன்களை  கொடுத்துக் கொண்டிருந்தாலும், அது தோன்றிய வரலாறு என்பது மிகவும் சுவாரஸ்யமானது. 

முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து, இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு நாரதா பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவனாகவும்,பிரம்மனிடம் வரம் பெற்றவனாகவும் இருந்தான்.அந்த கர்வத்தினால் சர்வ தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டினார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் முறையிட்டோம்.

அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரேசக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல 1000 ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் (தியானம், தவம்) சிந்தனையில் ஆழ்ந்தார்.

அப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது, பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்சமரமாக உண்டானது. அந்த ருத்ராட்சம் மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது, என்று மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார். பக்தியுடன் அதை அணிபவரை எப்பொழுதும் கண்போலக் காப்பாற்றுவார் . எனவே அனைவரும்  ஒரு ஐந்து முகம்  ருத்ராட்சம் கழுத்தில் எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாமா?

ஆமாம்! ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில் ஈடுபடும் போதும், பெண்கள் மாதவிடாய் காலத்திலும், இறப்பு வீட்டிற்கு போகும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபுராணம் தெரிவிக்கிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் மேன்மையும், வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். 
பெண்கள் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியவேண்டும்.. 

எல்லா காலத்திலும் எல்ல வயதினரும் எல்லா நேரங்களிலும் அணிந்து கொண்டே இருக்கலாம் இதனால் பாவமோ தோஷமோ கிடையாது. ருத்ராட்சம் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?

குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா! நோய் உள்ளவனுக்குத்தான் மருந்து தேவைப்படுகிறது நோய் இல்லாதவருக்கு மருந்து தேவையில்லை. அது போல வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள், சிரமங்களில் தவிப்பவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள்,

திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்,  கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள், மன நிம்மதி இல்லாதவர்கள், பிரச்சனைகளில் உலாவி கொண்டே இருப்பவர்கள், நாம் எதற்காகப் பிறந்தோம் என்று வேதனைப்பட்டு கொண்டிருப்பவர்கள், முதியோர்கள், ஆதரவற்றோர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், (ஊனமுற்றோர்) மனநிலை, பாதித்தவர்கள், இவர்கள் அனைவரும் ருத்ராட்சம் அணியவேண்டும். இவர்களுக்காக தான் ருத்ராட்சம் இறைவனால் அருளப்பட்டது.

ருத்ராட்சம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். நல்வழி நற்கதி முக்திக்கு வழிநடத்தும் எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு உடனே ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்சம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக  விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடவேக்கூடாது). 

ருத்ராட்சம் அணிந்தது முதல் 10008 நாட்களுக்குள்  முழுவதுமாக விட்டுவிட வேண்டும். சுத்த சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும் அதுவே உத்தமமானது.

ருத்ராட்சதில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம்?

ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.

அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதாக, மிகமிக சகாயமான விலையில் சகல மானோரும் அணிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில்  ஐந்து முக ருத்ராட்ஷத்தையே இறைவன் அதிகமாக விளைச்சல் (படைக்கின்றார்) விளைவிக்கிறார் அனைவரும் ஒரு ஐந்து முக ருத்ராட்சம் அணிவதே சிறந்தது அதுவே போதுமானது. பகவான் சிவபெருமான் திருமுகம் ஐந்து, நமசிவாய ஐந்தெழுத்து, பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்), நமது கை கால் விரல்கள் ஐந்து, புலன்கள் ஐந்து. இப்படி ஐந்தை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம் ஐந்திற்கும் இவ்வுலகிற்கும் அதிகமான சம்பந்தம் உண்டு மற்றும் சிவபெருமான் புரியும் கரும (தொழில்)  காரியங்கள் ஐந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஆகையால்  ஐந்து முக ருத்ராட்சத்தையே நமக்காக மிக மிக அதிகமாக படைக்கின்றார்.  ஐந்து முக ருத்ராட்சம் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

பெண்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்சத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? 

நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்சம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணிய வேண்டும். 
மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

பெண்கள், தங்களுடைய தாலிக் (கொடியில்) கயிற்றில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்ற வற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? 

இவற்றைப் போல் ருத்ராட்சத்தையும் தாலி கயிற்றில் கோர்த்து கட்டிக்கொண்டு எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிந்து இருக்க வேண்டும். ருத்ராட்சம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. 

நமது 💖 உயிரின் ஆன்மாவிற்காகவே நாம் அனைவரும் பிறவிப்பயன் அடைய வேண்டியே சிவபெருமானால் அருளப்பட்டது.

ருத்ராட்சம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?

ஆம் இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் - பெண் 
 இருபாலரும் கண்டிப்பாக கழுத்தில் ருத்ராட்சம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி மீண்டும் சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே பிறந்துள்ளோம் 
 நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், துன்பம், துயரம், துக்கம், வேதனை,  வலி கஷ்டம் இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே நாம் ருத்ராட்சம் அணிய வேண்டும். ருத்ராட்சம் அணிந்தால்  மஹா பேரானந்தமே. ருத்ராட்சம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கும். ருத்ராட்சம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்சம்.

ருத்ராட்சத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் வேதனையையும் கொடுப்பாரா?. நம்மை நல்வழிப் படுத்துவதற்காக வலியுறுத்துவாரே தவிர நம் வாழ்வைக் கெடுக்க மாட்டார்  அதனால் யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல் கண்டிப்பாக ருத்ராட்சத்தை அணியவேண்டும். ருத்ராட்சதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய தினந்தோறும் 108 முறை சொல்லி  வந்தாலே போதுமானது.

நீத்தார் கடன் (திதி), இறப்பு வீடு, பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்ய நேரங்களில் ருத்ராட்சம் அணியலாமா?

கண்டிப்பாக அணியலாம்
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் திதி போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்சம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும்  இறந்தவர்களின் ஆன்மா மோட்சம் பெரும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போதும் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிந்து இருக்கலாம் அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

சரி ருத்ராட்சத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?

நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.

மேலும் ருத்ராட்சம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், வெற்றியும் சகலவிதமான ஐஸ்வர்யங்களும்  ஆனந்தமும் கிடைக்கும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.

இது மட்டுமல்ல ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. 
எனது அனுபவத்தில் நானும் 100% கண்ட உண்மை எனவே தூங்கும்போது கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க கூடாது.

திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் பிரார்த்தனை வைப்பவர்களும் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிந்து தினந்தோறும் ஓம் நமசிவாய என்று 108 முறை எழுதியும்.  காலை தூங்கி எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை மனதினுள் 1008 முறை ஓம் நமசிவாய சொல்லியும் வந்தால்  மேற்கூறிய பிரார்த்தனைகள் கண்டிப்பாக 1008 நாட்களுக்குள் நிறைவேறும். இது என் அனுபவத்தில் கண்டு அனுபவித்த உண்மை. 

இறைவனின் கருணையால் அடியேன் 1993 முதல் 25 வருடங்களாக இன்றுவரை தினந்தோறும் 108 முறை ஓம் நமசிவாய எழுதி வருகிறேன். இதே போன்று நீங்களும் எழுதி வாருங்கள் நமது உடம்பின் சக்தியை (பேட்டரியை சார்ஜ்) அதிகப்படுத்தி கொள்ளுங்கள் 

ருத்ராட்சம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இறைவன் சிவபெருமான் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட 
ஓம் நமசிவாய நம்மால் சொல்ல முடியும். 

அப்படியிருக்க நாம் பிறவிப்பயன் அடைய வேண்டி நமக்காக ருத்ராட்சத்தை  அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்சம் அணிதல், பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தல் இம்மூன்றும் ஒருவர் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவது உறுதி இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள்  (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) நமக்கு நன்மையே செய்யும் தோஷத்தின் தாக்கங்கள் குறையும்.
 
ருத்ராட்சம் அணிந்திருக்கும் வேளையில் ஒருவர் உயிர் பிரிந்தால் அவர்கள் சிவபெருமானின் திருவடியையே அடைவார்கள்  நற்கதி முக்தி எற்படும்.

பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், எந்திரம் இவை அனைத்தும் ருத்ராட்சம் கழுத்தில் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. மாறாக அவர்களுக்கு நன்மையே செய்யும் ஆகையால் ஒவ்வொருவரும் பயம் கொள்ளாமல் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியலாம். 

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.

இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்சம் அணியத் தயங்குகிறார்களே?

உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்சம் மற்றும் நமசிவாய என்ற நாம ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நமக்கு நன்மை செய்கின்றார்கள் அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களை சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார்.

ருத்ராட்சம் அணிந்த பின் அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம். 

ருத்ராட்சம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ஒரு வினாடி நேரம் கூட ருத்ராட்சதைக் கழற்றவே கூடாது. யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். இத்தனை மேன்மைகள் இருந்தும் இதனைப் படித்துப் பார்த்துத் தெரிந்த பின்பும் மனிதராகப் பிறந்தவர்கள் ருத்ராட்சம் அணியவில்லை என்றால் அவர்கள் பிறந்தும் இப்பிறப்பிற்கே பிரயோஜணமில்லாமல் போய்விடுவார்கள் ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ஐந்து முக ஒரு ருத்ராட்சம் எப்பொழுதும் கழுத்தில் அணிந்து கொண்டே இருக்க வேண்டும். 

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

ஆரண்யேசுவரர் திருக்கோவில் கோபுரம்.இறைவன் - ஆரண்யேசுவரர்இறைவி - அகிலாண்டேஸ்வரி.ஊர் - திருக்காட்டுப்பள்ளிமாவட்டம் - நாகப்பட்டினம்.

ஆரண்யேசுவரர் திருக்கோவில் கோபுரம்.

இறைவன் - ஆரண்யேசுவரர்
இறைவி - அகிலாண்டேஸ்வரி.

ஊர் - திருக்காட்டுப்பள்ளி
மாவட்டம் - நாகப்பட்டினம்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு 
காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 12 வது தலம் ஆகும். 

2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது ஆரண்யேஸ்வரர் கோயில். 

“ஆரண்ய” முனிவர் இங்கு வந்து சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டதால் அந்த முனிவரின் பெயராலேயே ஆரண்யேஸ்வரர் என அழைக்கப்படுகிறார் இங்குள்ள சிவபெருமான்.

இந்திரனின் சாபத்தை போக்கி, அவனுக்கு மீண்டும் தேவலோக பதவி கிடைக்கச் செய்த தலம் இத்தலம்.

இக்கோயில் பிரகாரத்தில் 
தச லிங்க சந்நிதி இருக்கிறது. இங்கு ஏழு லிங்கங்கள் இருக்கின்றன. 
மேலும் ஒரே லிங்கத்தில் இரண்டு நாண்கள் இருக்கும் லிங்கம் எங்கும் காணக்கிடைக்காத அம்சமாகும்.
இக்கோயிலில் சுவாமியே பிரதானம் என்பதால் இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது. இங்கு கோயில் கொண்டிருக்கும் “ராஜயோக தட்சிணாமூர்த்தி” வழக்கமான நான்கு சீடர்களுக்கு பதிலாக ஆறு சீடர்களுடன் இருப்பது ஒரு அதிசய அமைப்பாகும்.

அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் திருக்காட்டுப்பள்ளி என்கிற ஊரில் அமைந்துள்ளது. 
இந்த ஊருக்கு செல்ல சீர்காழி, நாகை நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

Friday, January 27, 2023

இலுப்பைக்குடிபைரவர்,தான்தோன்றீஸ்வரர் கோயில்,

இலுப்பைக்குடிபைரவர்,தான்தோன்றீஸ்வரர் கோயில், இலுப்பைக்குடிபைரவர், “ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்” என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது.

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோயில், இலுப்பைக்குடி, அரியக்குடி போஸ்ட், சிவகங்கை மாவட்டம்.

+91- 4561 – 221 810, 94420 43493

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் – தான்தோன்றீஸ்வரர்
அம்மன் – சவுந்தர்யநாயகி
தல விருட்சம் – வில்வம்
தீர்த்தம் – பைரவர் தெப்பம்
ஆகமம் – சிவாகமம்
பழமை – 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – இலுப்பை வனம்
ஊர் – இலுப்பைக்குடி
மாவட்டம் – சிவகங்கை
மாநிலம் – தமிழ்நாடு
சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்று தங்கம் தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, “சுயம்பிரகாசேஸ்வரர்” என்றும், “தான்தோன்றீஸ்வரர்” என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

இத்தலத்து பைரவர், “ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்” என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது.

பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.

தான்தோன்றீஸ்வரர், சிறிய அளவிலேயே இருக்கிறார். அம்பாள் சவுந்தர்ய நாயகி சிலை திருவாசியுடன் இணைத்து அமைக்கப்பட்டிருக்கிறது.

பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட “நாய்க்கடி பலகை” இருக்கிறது. நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது கொங்கணர் புறப்பாடாகிறார். இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால், “இலுப்பைக்குடி” என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

தலவிநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர்.
நடராஜர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பெருமாள், மகாலட்சுமி, முருகன், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன. சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள “குட்டி விநாயகர்” சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராகி சிற்பம் இருக்கிறது.

திருவிழா:

சித்திரையில் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.

கோரிக்கைகள்:

குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமண, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். திருமணத்தடையுள்ள பெண்கள் வாராகிக்கு சந்தனக்காப்பு செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சிவன், அம்பாளுக்கு புத்தாடை அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை அணிவித்தும் விசேஷ பூஜை செய்தும் வேண்டிக்கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்கியவர்கள் பைரவர் சன்னதியில் தேங்காயில் நெய் தீபம் ஏற்றியும், வடை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்

மூன்று வாசல்கள் கடந்தால் மட்டுமே முழு ரூபத்தை தரிசிக்க முடியும் அதிசயம்.

மூன்று வாசல்கள் கடந்தால் மட்டுமே முழு ரூபத்தை தரிசிக்க முடியும் அதிசயம்.

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். பெருமாள் சயனக்கோலத்தில் இருக்கும் திருத்தலங்களுள் மிகவும் முக்கியமானது திருவட்டாறு அதிகேசவப் பெருமாள் திருத்தலம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வைணவத்திருத்தலம், 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவாதாக எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பெருமாள், 16008 சாளக்கிராம கற்களால்லும், கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையாலும் செய்யப்பட்டவர்.

தெற்கே தலை வைத்து திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்தாவரே மேற்கு நோக்கி அருள் புரிகிறார். பிரமாண்ட திருமேனியாக ஆழ்துயிலில் இருக்கும் இந்த பெருமாள் திருமேன்னி 22 அடி நீளம் உடையது. இவரை ஒரே காட்சியில் தரிசிக்க இயலாது. இவரை முழுவதும் தரிசிக்க மூன்று வாயல்களை தரிசிக்க வேண்டும். இதனை திருமுகம், திருக்கரம், திருப்பாதம் என்று அழைக்கப்படுகிறது திருக்கர வாயிலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஶ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார்.

இங்குள்ள பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது . இதனால் இவரை வணங்கினால் மறு பிறவி கிடையாது என்பது நம்பிக்கை. பெருமாளின் மேனி கடுசர்க்கரைப் கலவையால் செய்யப்பட்டிருப்பதால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவருக்கே செய்யப்படுகிறது.

இங்கு பள்ளி கொண்டுள்ள ஆதிகேசவரின் திருப்பாதத்தை வட்டமிட்ட வாறு பரளியாறு ஓடுவதால், இந்த ஊருக்கு திருவட்டாறு என்று பெயர். கேசன் என்ற அசுரனை விஷ்ணு பெருமான் அடக்கிய தலம் இதுவென புராணங்கள் சொல்கின்றன.

அதிசய நிகழ்வாக சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஆதிகேசவப் பெருமாள் இந்த தலத்தில் காட்சி கொடுத்ததால் இக்கோவிலின் கருவறையில் சூரியனும், சந்திரனும் அமைந்துள்ளன்னர். இந்த கோவிலின் மற்றொரு அதிசயமாக புரட்டாசி மற்றும் பங்குனி மாதத்தின் 6 நாட்கள் மட்டும் சூரிய கதிர்கள் நேராக கர்ப கிரகத்தின் உள்ளிருக்கும் பெருமாள் மேல் விழுகிறத்உ. இந்த காட்சியை காண்பது அரிதென்பதால். இந்நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இங்கே காண முடிகிறது.

இக்கோவிலின் மற்றுமொரு தனித்துவமான அம்சமாக இருப்பது, இக்கோவில்ன் பூஜை முறை. இங்கு பூஜைகள் செய்பவரை போத்திமார் என்றழைக்கிறார்கள். அதே வேளையில் இக்கோவிலின் கட்டிடக்கலை பெரும் புகழ் பெற்றது. தனித்துவமாக சயன கோலத்தில் இருக்கும் பெருமாளின் அருகில் பரமசிவன் காட்சியளிக்கிறார். இங்கிருக்கும் சிறப்புமிக்க ஒற்றைக்கல் மண்டபம் ஒரே கல்லால் ஆனது என்பது பெரும் ஆச்சர்யம்.

இக்கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதேசி மிகவும் பிரசித்தமனது. தமிழக பண்டிகைகள் கொண்டாடப்படும் அதே வேளையில், கேரளா பண்டிகைகளான ஓணம், சித்திரை விஷு ஆகியவையும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...