Monday, July 31, 2023

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் ஆலயம்.

சிவாயநம
நமசிவாய

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் ஆலயம்.
எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள்  திருக்கூட்ட சிவனடியார்களுடன்   சுவாமி ஆலயதரிசனம்

தஞ்சாவூர் மாவட்டம் 
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மி. தொலைவில் சுவாமிமலைக்கு அருகே  உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,
காவிரிதென்கரை தலங்களில் 25 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 276 தலங்களில் 88 வது தலமாகவும் விளங்குகிறது திருவலஞ்சுழிநாதர் சிவாலயம்.

அகஸ்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து வெளிப்பட்ட காவிரி , சோழ நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தி அறிந்த சோழ மன்னன் தனது பரிவாரங்களுடன் சென்றான். வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு இங்குள்ள சிவனை வலம் வந்து ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழ மன்னன் கவலையுற்றுத் ஹேரண்ட மகரிஷி என்ற முனிவரிடம் சென்று மன்னன் முறையிட்டான், முனிவரும் திருவலஞ்சுழி வந்தடைந்து சிவனை வழிபட்டார்.

அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் புகுந்தால் அப் பள்ளம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். இதைக் கேட்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள். இன்றும் மஹாசிவராத்திரி நாளில் இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

இத்திருத்தலத்தில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் இணைந்து, பாற்கடலில் அமுதம் கடைந்தனர். வாசுகியானது மந்திர மலையின் பாரம் தாங்காமல், தனது கொடிய விஷத்தை பாற்கடலில் கக்கியது. அதன்படி கக்கப்பட்ட ஆலகால விஷத்தின் கொடுமை தாங்காது தேவர்களும் அசுரர்களும் ஈசனிடம் சென்று முறையிட்டனர்.ஈசன் அவர்களிடம், விநாயகப் பெருமானை வழிபட்டால் தடையின்றி அமுதம் கிடைக்க பெறுவீர்கள் என அருளினார். தேவர்களுடன் அசுரர்களும், பாற்கடலை அடைந்து கடல் நுரையினை சேர்த்து விநாயகர் வடிவமாக செய்து வழிபட்டனர். அதன்பின் பாற்கடலை கடைந்து, அமுதம் கிடைத்து மகிழ்ந்தனர். விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் - வெள்ளை விநாயகர் என பெயர் பெற்றார் .

தேவேந்திரன் அகல்யையால் ஏற்பட்ட சாபத்தை போக்கி கொள்ளும் பொருட்டு, சுவேத விநாயகர் - வெள்ளை விநாயகரை கையில் எடுத்துக் கொண்டு, பூலோகத்தில் உள்ள சிவ தலங்களை தரிசனம் செய்துவிட்டு இத்தலத்திற்கு வந்தடைந்தார். அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். இன்றும் இந்திரன் பூஜித்த அந்த வெள்ளை விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து வெள்ளை விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.

திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் அரைத்து, இந்த விநாகயரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார்கள் அதனால் இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார்.
முருகனுக்கு ஆறு படை வீடு இருப்பதுபோல விநாயகருக்கு இந்தியா முழுவதும் 10 படை வீடுகள் உள்ளன. அதில் இத்தலமும் ஒரு படை வீடு என்பது சிறப்பு.

 மகாவிஷ்ணுவின் நேத்திர கமலங்களிலிருந்து தோன்றிய இந்திரதேவியாகிய கமலாம்பாளையும், பிரம்மாவின் வாக்கிலிருந்து தோன்றிய புத்தி தேவியாகிய வாணியையும் இத்தலத்தில் சுவேத விநாயகப் பெருமான் திருமணம் செய்துகொண்டார். எனவே திருமணம் தடை படுபவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டியவர்களும் இங்குள்ள சுவேத விநாயகப் பெருமானை வழிபட்டால் தாங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும் என்பது நம்பிக்கை.

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. அழகான கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் வலப்பக்கம் திருமணக் கோலக்காட்சி தருகிறார். இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்புவாய்ந்த மூர்த்தம். இங்குள்ள பைரவ மூர்த்தி மிகவும் உக்கிரம் வாய்ந்தவர். திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் திருவலஞ்சுழி விநாயகருக்கு உரிய தலமாகும்.

கிழக்கு நோக்கி உள்ள ஒரு இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன.இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் போக அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. சனீஸ்வரலுக்கும் இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.

பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது. இச்சந்நிதியிலுள்ள கருங்கல் பலகணி நுணக்கமான சிற்ப வேலைப்பாடுடன் திகழ்கிறது. இத்தலம் திருமுறைத் தலம் என்பதை விட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

இதலத்தின் தீர்த்தங்களாக காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் ஆகியவையும், தலமரமாக வில்வமரமும் உள்ளது. ஹேரண்ட முனிவர், ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், திருமால், பிரமன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையும் திருவலஞ்சுழிக்கு உண்டு.
இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இங்கு உள்பிராகாரத்திலுள்ள முருகப்பெருமான் ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் நிற்கின்றனர். திருப்புகழில் இத்தல முருகர் மீது ஒரு பாடல் உள்ளது.

இப்படி பல சிறப்புகளை கொண்ட திருநாவுக்கரசரால் பதிகம் பாடப்பட்ட  இந்த அற்புதமான
திருத்தலத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன்  அடியேனுக்கு அளித்தார்.

மேலும் அடியார்பெருமக்கள் அனைவரும் இங்கு வந்து இந்த பெருமானை வழிபாடு செய்து இவரின் பரிபூர்ண திருவருளை பெற வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பம் செய்ய.

திருச்சிற்றம்பலம்.

அடுத்த சில தினங்கள் ரோட்டில் சிறுவர்கள் நடக்கிறார்களோ இல்லையோ சப்பரம் ஓடும்,

ஆடிப்பெருக்கும் சப்பரத்தட்டியும்
ஆடி 18 வந்தாலே நினைவுகள் பின்னோக்கி பள்ளிப் பருவத்திற்குச் செல்லும்.  கும்பகோணம் பகுதிக்கென்றே உள்ள பிரத்யேகமான விஷயங்களில் ஒன்று ஆடிப்பெருக்கு அன்று குழந்தைகள் ஓட்டிச் செல்லும் சப்பரம்/சப்பரத்தட்டி. 
 'பதினைட்டாம் பேர்'  அன்றைய தினம் ஜே ஜே என இருக்கும் காவிரிக்கரை.  குளிக்கும் கூட்டம் ஒரு பக்கம், புதிதாய் மணமானவர்களின் தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கு ஒரு பக்கம், நோன்பு செய்பவர்கள் ஒரு பக்கம், வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் காதோலை கருகமணி என காவிரி நீரில் மங்கலப் பொருட்களை படைப்பவர்கள் ஒரு பக்கம் என காலை முதலே அமர்க்களமாக இருக்கும். 
எங்களுக்கு பிடித்தமானது என்னவோ மாலை வேளையே. பள்ளியில் இருந்தாலும் எப்பொழுது வீட்டிற்கு சென்று தயாராகி காவிரிக்கு செல்வோம் என்றே ஏங்கும் மனது.  பள்ளி மணி அடித்ததும் ஓட்டமாக ஓடி வீடு சென்று தயாராகி  காவிரியை நோக்கிச் செல்வோம். அன்று செய்த சித்ரான்னங்களை எடுத்துக் கொண்டு அலங்கரித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக செல்லும் அனைவரையும் தெருவில் பார்க்கும் பொழுது கல்கியின் பொன்னியின் செல்வனின் முதல் அத்தியாயத்தில் எழுதியது முற்றிலும் உண்மை என்றே தோன்றும்.

புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், பொறித்த வடகங்களுடன் பெரியவர்கள் நடக்க, சிறுவர்கள் நாங்கள் எங்கள் சப்பரத்தட்டியுடன் நடப்போம். முன்பெல்லாம் வீட்டில் மர வேலை செய்து மீதமான துண்டுகளில் வடிவம் கொடுத்து அதை ஓட்டிச் செல்ல ஏதுவான சக்கரங்கள் பொருத்துவர்.  இந்த சப்பரத்தின் மேல்  கலர் காகிதங்கள் ஒட்டி, நடுவில் சாமி படத்தையும் ஒட்டி ஒரு சணல் கயிறை இழுப்பதற்குக் கட்டினால் கண்ணைப் பறிக்கும் வண்ணமயமான சப்பரம் தயார். சப்பரத்தை இழுத்துச் செல்வதே பெருமையாக இருக்கும். நமக்கே நமக்கென சொந்தமாக ஒரு வண்டி கிடைத்தது போலத் தோன்றும். சில நாட்களாக வீட்டில் preparation work நடந்த பொழுது யாருக்கும் காட்டாமல் அன்றைய தினம் வாசலில் இறக்கி ஓட்டுவது தான்‌ surprise & கெத்து.  தெருவில் உள்ள அனைவரின் சப்பரத்தையும் பார்த்து யாருடையது புதிது, பெரியது, எதில் கலர் பேப்பர் அதிகம் என்ற மதிப்பீடு எங்களுக்குள்  நடக்கும். இதில் சிலர் நண்பர்களின் சப்பரத்தை share செய்து கொள்வர். அதிலும் சண்டை, அழுகை வருவது உண்டு. புதிய சப்பரத்தை வைத்து பந்தா காட்டுபவர்கள், சிறிதாக பழையதாக இருந்தாலும் என்னுடையது தான் fast பார்க்கறியா என வம்புக்கும் raceக்கும் இழுப்பவர்கள், தன் சப்பரத்தை தூசி கூட பட விடாமல் பொத்திப் பாதுகாப்பவர்கள் என பல category. மொத்தத்தில் சப்பரத்துடன் சென்று காவிரிக்கரையில் சித்ரான்னங்கள் சாப்பிட்டு, கதை பேசி, boat race பார்த்து வீட்டிற்கு வரவே மனசில்லாமல் வருவதில் முடியும் எங்கள் 'பதினெட்டாம் பேர்'.

அடுத்த சில தினங்கள் ரோட்டில் சிறுவர்கள் நடக்கிறார்களோ இல்லையோ சப்பரம் ஓடும், ஓடும், ஓடிக் கொண்டே இருக்கும். கலர் காகிதங்கள்க் தேயும் வரை ஓடும், வீட்டில் அடி விழும் வரை ஓடும். பின்பு அட்டாலிக்கு சென்று அடுத்த ஆடிப்பெருக்கிற்காகக் காத்திருக்கும்.

ஓம் நமசிவாய. 

🌹திருக்கடையூர் பல விதங்களில் சிறப்புப் பெற்ற தலம்.

♦️ஆடி மாத அம்மன் தரிசனம்
***********************************
🌹திருக்கடையூர் அபிராமி..
********************************
அம்பிகையை தரிசிக்க சரபோஜி மன்னர் வரு கிறார்' என்று கோயிலே பரபரத்துக் கிடந்தது. ஆனால் உலக நினைவேயின்றி சுப்ரமணிய பட்டர்  அம்பிகையின் முக ஜொலிப்பில் மெய் மறந்திருந்தார். 

அவர் ஸ்ரீவித்யை உபாசனையில் ஈடுபட்டு பரா சக்தியையே எப்போதும் பூஜித்து தன் நினைவு இன்றி இருந்து வந்தார் அப்போ து தஞ்சையை ஆண்டு வந்த முதலாம் சரபோஜி மன்னர் தன் பரிவாரங்களுடன் திருக்கடையூர் வந்திருந்தார். 

அன்று தை அமாவாசை. நேர்த்திக் கடன்க ளை நிறைவேற்றிய பின்னர், மன்னர் பட்டரைப் பார்த்து விட்டு, அங்கிருந்தவர்க ளிடம் "யார் இவர்?'' என்று கேட்கிறார்.  "இவர் ஒரு பித்தர், ஒரு துர்தேவதையை உபாசித்து எப்போதும் இப்படியே மெய் மறந்து கிடக்கிறார்'' என்றனர்.

மன்னர் அவரைப் பரிசோதிக்க எண்ணி, "இன்று என்ன திதி?''என்று கேட்கிறார். முழு நிலவுபோல் ஒளிவீசிய அன்னையின்  முக வதனம் கண்டு பட்டர் "இன்று பெளர்ணமி திதி!'' என்கிறார்.

மன்னர், "இன்று நிலவு உதயமாகவில்லை எனில், உனக்கு மரண தண்டனை!'' என்று அறிவித்து விடுகிறார்.

"தாயே, உன் நினைவில் ஆழ்ந்தே நான் இன்று பெளர்ணமி என்றேன். நீயே என்னை காப்பா ற்ற வேண்டும்!'' என்று பட்டர் அம்பாளைப் பிரார்த்தனை செய்து, ஆழமாய் ஒரு குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீ மூட்டினார். மேலே ஒரு விட்டமும், அதில் நூறு கயிறுகளால் உறி யையும் கட்டினார். அதில் அமர்ந்து அம்பி கை மேல் அந்தாதி பாட ஆரம்பித்தார்.

ஒவ்வொரு பாடலாய் பாடப்பாட ஒவ்வொரு கயிறாய் அறுத்துக் கொண்டே வந்தார்.

எழுபத்தி ஒன்பதாவது பாடலான "விழிக்கே அருளுண்டு...' என்ற பாடலைப் பாடும்போது அம்பிகை தோன்றுகிறாள். அவள் காது  தாடங்கம் ஒன்றைக்  கழற்றி வானில் எறிய, நிலவாகப் பிரகாசிக்கிறது. மன்னர் பிரமித்து, மகிழ்ந்து பட்டரைப் போற்றி, அவருக்கு இறை யிலியாக நிலங்கள் அளிக்கிறார்.

அம்பிகையின் உத்தரவின் பேரில் சுப்ரம ணிய பட்டர் நூறு அந்தாதிப் பாடல்களைப் பாடி மகிழ்கிறார். தமிழ் இலக்கியத்தில் 'அபிராமி அந்தாதி' ப் பாடல்கள் தனிச் சிறப்புடன் விளங்குகின்றன.

🌹திருக்கடையூர் பல விதங்களில் சிறப்புப் பெற்ற தலம்.

பிரம்மா சிவபெருமானிடம் ஞான உபதேசம் பெற விரும்பி வழிபட்டார். அப்போது ஈசன் சில வில்வ விதைகளைத் தந்து, "இது எங்கே முளைவிடுகிறதோ அங்கு உனக்கு ஞானம் கிடைக்கும்' என்கிறார். 

அதேபோல் பிரம்மா பல இடங்களில் நட்டும் விதை முளைக்கவில்லை. முடிவில் திருக்கடையூரில் வில்வ விதைகள் முளைவிட இத்தலம் "வில்வவனம்' என அழைக்கப்பட்டது.

பாற்கடலைக் கடைந்த பின் தேவர்களுக்கு அமிர்தத்தை பரிமாறும் முன் ஈசனை வணங்க விரும்பி மகாவிஷ்ணு தன் ஆபரணங்களைக் கழற்றி வைத்தார். அதிலிருந்து தோன்றியவ ள் அபிராமி அம்மை என்கிறது புராணங்கள். விநாயக ரை வணங்காமல் தேவர்கள் அமிர்த த்தை உண்ணச் சென்றதால் விநாயகர் அந்தக் கலசத்தை மறைத்து விட்டார். 

அதன்பின் அவரை வணங்கி தேவர்கள் கலச த்தைத் திரும்பப் பெற்றுச் செல்லும் போது நதிக்கரையில் குடத்தை வைத்து விட்டு நீராடச் சென்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை. எனவே தான் இத்தலம் "திருக்கடவூர்' எனப்படுகிறது.

மிருகண்டு முனிவர் மருத்துவதி தம்பதிய ரு க்கு குழந்தை பேறு இல்லை. சிவபெரு மானை நோக்கித் தவம் இருந்தவர்கள் முன் இறைவன் தோன்றி, "ஆயிரம் வருட ங்கள் வாழும் துர் நட த்தையுள்ள புத்திரன் வேண்டுமா? பதினாறு வருடமே வாழும் சத் புத்திரன் வேண்டுமா?' என கேட்கிறார். 

இதுவும் அவன் லீலைதானே. ஈசனின் மேல் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை முனிவரு க்கு. "சத்புத்திரன் வேண்டும்!' என கேட்க மார்க்கண்டேயன் பிறக்கிறார் ஈசனின் நாம த்தை ஜெபித்தபடி, தலை சிறந்த அறிவாளியாகவும் சிவபக்தராக வும் இருந்தவர் ஒவ்வொரு தலமாக இறை வனைத் தரிசித்து கொண்டு, வரும்போது திருக்கடவூர் வருகிறார். அங்கு அவர் ஆயுள் முடியும் நேரம்.

🌹எமன் பாசக் கயிறுடன் வருகிறான்.

மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை ஆரத் தழுவி கொள்கிறார். ஈசன் எமனை சம்ஹாரம் செய்கி றார். எனவே கால சம்ஹார மூர்த்தி என்று அழைக்கப்படுகி றார். ஈசனின் பாசக்கயிறு பட்டதால் லிங்க த்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் தழும்பும் காணப்படுகிறது. வருடத் திற்கு 11 முறை மட்டுமே இவருக்கு அபிஷே கம் நடைபெறுகிறது.

ஈசனுக்கு அபிஷேகம் செய்ய மார்க்கண்டேய ன் காசியிலிருந்து தீர்த்தம் கொண்டு வருவார். அவரின் சிரமத்தைப் போக்க ஈசன் மயான பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே உள்ள கிணற்றில் கங்கை தீர்த்தத்தைத் பொங்கச் செய்தார். அப்போது "பிஞ்சலம்' எனப்படும் ஜாதி முல்லையும் உடன் வந்ததால், இங்கு தல விருட்சமாக ஜாதி முல்லையும் இருக்கிற து. இறைவனுக்கு மட்டுமே இதன் மலர் அணிவிக்கப்படுகிறது.

இறைவன் மேற்கு நோக்கியும், அம்பிகை கிழக்கு நோக்கி தன் பதியைப் பார்த்தபடி நிற்பதால் இது நித்தியக் கல்யாணத் தல மாக விளங்குகிறது. அன்னை பளபளக்கு ம் பட்டாடை ஆபரணங்கள் அணிந்து கண் குளிர, மெய் சிலிர்க்கக் காட்சி தருகிறாள். 

இங்கு நவகிரகங்களுக்கு சக்தி இல்லை; என வே அவர்களுக்கு சந்நிதி இல்லை. பாம்பாட்டி சித்தர் பூஜித்த இடம். வெளிப் பிரகாரத்தில் ஐம்பத்து நான்கு கல்வெட்டு கள் உள்ளன. முதலாம் மற்றும் மூன்றாம் ராஜராஜன் கோயி லுக்கு செய்த திருப்ப ணிகள் அளித்த கொடை கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 

அதேபோல் சுந்தர பாண்டியன், வீர பாண் டிய ன், திருமலை நாயக்கர், கிருஷ்ண தேவராய ரின் கொடைகள் பற்றிய குறிப்பு களும் காணப் படுகின்றன.

இங்கு அறுபது, எண்பது, உக்ரரத சாந்தி, பீமரத சாந்தி போன்ற திருமணங்கள் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் இங்கு திரும ணம் செய்து கொண்டால் நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை என்கிறார்கள்.  

"ஆதிசக்தி, ரமேயாதமா, பரமா, பாவனாக்ருதி
அநேககோடி பிரம்மாண்ட ஜனனீ திவ்ய விக்ரஹா...''

என்கிறது லலிதா சகஸ்ரநாமம். 

அழுக்கு, பிணி என்று நிரம்பிய இந்த உட லை நம் கர்ம வினைகளின் காரணமாகப் பெறுகி றோம். இந்த நோயிலிருந்து விடு பட அவளை தியானிப்பதே வழி. அபிராமி அம்மையைப் பூஜித்தால் சகல விதமான நோய்களிலிருந்து ம் விடுபட முடியும். இங்கு "சப்த திரவிய ம்ருத் யுஞ்ஜெய ஹோமம்' செய்தால் இதய நோயிலி ருந்து விடுபடலாம்.

இங்கு அன்னைபார்வதி.முருகனை வலது தொடையில் அமர்த்தி குகாம்பிகையாக இருக்கிறாள். அவளை வணங்கினால் குழந்தைப் பேறு, மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

"மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த 
அணியே, அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே 
பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே 
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே'

என்று.பாடுகிறார் அபிராமி பட்டர். அபிராமி அந்தாதியில் அனைத்துப் பாடல் களையும் படிக்க முடியவில்லை என்றாலு ம் நூற்பயனை ப் படித்தாலே போதும் என்கிறார்கள்.

"ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே' 

ஆம், அவளைத் தொழுதால் போதும், சகல செளபாக்கியங்களையும் தருவாள்.

🌹🌹ஓம் நமசிவாய...

திருக்கோயில் வரலாறு:புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் சி.என்.பாளையம்

ஏராளமான யோகிகள் மற்றும் சித்தர்கள் வாழ்ந்து மறைந்த,பல வரலாற்றுச் சிறப்புமிக்க 
#கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
#புஷ்பகிரி
#மலையாண்டவர் 
(ராஜராஜேஸ்வரர்)
#ராஜராஜேஸ்வரி_அம்மன் 
திருக்கோயில் வரலாறு:
புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் சி.என்.பாளையம்
CNPalayam (  சென்னப்ப நாயக்கன் பாளையம் )  என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது கடலூர் நகரத்திலிருந்து மேற்கு நோக்கி 21 கிமீ தொலைவிலும், பண்ருட்டி நகரத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. 

இந்த கிராமத்தில் புஷ்பகிரி மலையாண்டவர் கோயில் என்று அழைக்கப்படும் சிறிய மலைக்கோயில் உள்ளது. இராஜராஜேஸ்வரர் வடிவில் சிவபெருமான் மூலவராக விளங்குகிறார்.

மூலவர்: ராஜராஜேஸ்வரர்
அம்மன்: ராஜராஜேஸ்வரி 
ஊர்: சென்னப்ப நாயக்கன் பாளையம்
சி.என்.பாளையம்_புஷ்பகிரி மலையாண்டவர் திருக்கோயில்
மாவட்டம்: கடலூர்
மாநிலம்: தமிழ்நாடு 

#இடம்:

சென்னப்ப நாயக்கன் பாளையம், கடலூர்
முக்கியத்துவம்
சித்தர் பீடம் ஜீவ சமாதி, 
மலைப்பிள்ளையார் கோவில்,
தண்டாயுதபாணி சுவாமி,
பண்டைய
பழமையான கோவில் என நம்பப்படுகிறது
பயணத் தளம்
கடலூர் / பண்ருட்டி

2016 ல் இக்கோயிலுக்குள் சித்தர் சமாதியும், கும்பாபிஷேகப் பணிகளைக் கோயில் கமிட்டியினர் செய்து கொண்டிருந்தபோது, ​​விநாயகர் கோயிலுக்கு அடியில், சுரங்கப்பாதையில் சித்தர் ஜீவ சமாதியும் இருப்பதைக் கண்டுபிடித்தனர். 

2016 ஆம் ஆண்டு அன்று கிடைத்த செய்திகள் பின்வருமாறு:

கடலூர் மாவட்டம் சித்தர்கள் வாழந்த பூமி என்பது அனைவரும் அறிந்த உண்மை. குறிப்பாக பண்ருட்டி திருவதிகை பகுதியில் ஏராளமான சித்தர்கள், யோகிகள், ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள் வாழ்ந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர் வாழும் போது பல அற்ப்புதங்களை நிகழ்த்தியதோடு தற்போதும் பல அற்புதங்களை நிகழ்த்திவருகின்றனர். இந்த நிலையில் தற்போது பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் ஸ்ரீபுஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் திருப்பணிக்கான பணி நடைபெற்றுவருகிறது. திருப்பணி வேலை நடைபெற்று கொண்டிருந்தபோது பூமிக்கடியில் சுரங்க அறை இருப்பது தெரியவந்தது.

இதனால் பரவசமடைந்த பக்தர்கள், ஊர் பொதுமக்கள் திருப்பணி குழுவினர் அந்த சுரங்க அறை வழியாக சென்று உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்கு கீழே அற்பூதமான கட்டிட அமைப்புடன் நூற்று கணக்கான சதுர அடி கொண்ட கட்டிடம் இருப்பது தெரியவந்தது. இது சுமார் 400, 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மிகவும் பழமையான மற்றும் அற்புதமான அறை என தெரியவந்தது. இந்த அறைக்குள் முக்கிய பிரமுகர்கள் தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பாதாள அறைக்குள் சென்ற பார்த்தபோது மேலும் ஆச்சரியமூட்டும் அற்பூத காட்சி கிடைத்தது.

அங்கு அந்த பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் சுவாமிகள் மூன்று பேர் தியானத்தில் அமர்ந்த நிலையிலே முக்தி அடைந்த நிகழ்வு இருப்பதை உணர்ந்தனர். வெவ்வேறு திசைகளில் அமர்ந்த நிலையில் இருந்த மூன்று சித்தர்கள் உயிருடன் தியானத்தில் ஆழ்ந்து ஜீவசமாதி அடைந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி சுற்றுவட்டார பகுதியில் காட்டு தீ போல பரவியது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் குவிய தொடங்கினர். இதற்கிடையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் வாழ்ந்த சித்தர்கள் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் குறிப்புகள் பழங்கால ஓலைச்சுவடி மற்றும் நூல்களை தேடி கண்டுபிடித்து இவர்களை பற்றிய குறிப்பு சேகரித்துவருகின்றனர். இந்த சித்தர்களால் இந்த மலை மேலும் சிறப்படையும் என்று திருப்பணிக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து திருப்பணிக்குழு தலைவரும் கடலூர் மாவட்ட முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் மல்லிகா வைத்திலிங்கம் கணவருமான வைத்திலிங்கம் இதுபற்றி கூறியதாவது: 

இந்த புஷ்பகிரி மலையாண்டவர் என்று அழைக்கப்படும் மலைப்பிள்ளையார் அருள்பாலிக்கும் இந்த மலை பல வரலாற்று பெறுமைகளையும் கொண்ட மலையாகும். இந்த கோவிலில் தை பொங்கல் நாளில் மூலவர் விநாயகர் பெருமானின் திரு உருவத்தின் மீது சூரிய கதிர்கள் அமையுமாறு அமைக்கப்பட்டுள்ளது பெரும் பெருமைக்குரியதாககும். வடலூர் வள்ளலார் மற்றும் பல சித்தர்கள் இந்த மலைக்கு வருகை தந்துள்ளனர். வள்ளலாரின் பஞ்சலோக வெண்கல உருவ சிலை இந்த கோவிலில் மட்டும்தான் உள்ளது.
5000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க கால வரலாற்று தடையங்களும் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் கி.பி.19ம் நூற்றாண்டுவரை பொலிவுடனும் புகழுடனும் விளங்கிய மிகப்பழமையான மற்றும் அற்புதமான இந்த மலைக்கோவிலில் நிம்மதியான இறை உணர்வு நிறைந்த வாழ்க்கைய மேற்கொண்டிருந்த மூன்று சித்தர்கள் பாதாள அறையில் தியான நிலையில் ஜீவ சமாதியான நிகழ்வை பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளிப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதி மேலும் வளர்ச்சி அடைந்து நலம் பல பெறும் என நம்புகிறோம் என அவர் கூறினார்.

திருச்சிற்றம்பலம் 🙏

⚜ *திரு மாணிகுழி உதவி நாயகர் திருக்கோயில்* .

⚜  *திரு மாணிகுழி உதவி நாயகர் திருக்கோயில்* .   
 
🙏 *வழிபட்டவர்கள்*  :  வாமனன், துர்வாசர், குபேரன், பரா சக்தி,  லட்சுமி,  வைஷ்ணவி  வராகி   உள்ளிட்ட  சப்த மாதர்கள்.        
                                                                                                                                                                            திருமாணி குழி  கடலூருக்கு அருகே உள்ளது. மாணி என்றால் அந்தணச் சிறுவன் என்று பொருள்.     
                                                                                                                                                                       🔴 *மூவடி மண் தருக என்று -----  மாவலியை வஞ்சித்து*   (திரு மங்கை ஆழ்வார்) 
     
  என குள்ள வடிவம் (வாமனன்) கொண்ட அந்தணச் சிறுவனாக வந்து   *மண்  என்று  விண்ணையும்  அளந்து*  மகா பலியை ஏமாற்றி தானம் கொடுத்தவனுக்கு துரோகம் செய்த திருமால் கொன்றை மரத்தடியில் *லிங்கப் பரம்பொருளைப் பூஜித்து வழிபட்டுத் தொழுது கொடிய பாவமும் குற்றமும் நீங்கி நலம் அடைந்ததால்*   மாணி குடி என்றும் வாமன புரி என்றும் பெயர். 

மாணி குடி என்பது மாணி குழி என்று ஆயிற்று. *வாமனனுக்கு அருளிய ஈஸ்வரனுக்கு வாமனபுரீஸ்வரர், மாணிக்கு வரதர் என்று திரு நாமங்கள்* . 

சிவ பூஜை செய்து வழிபட்ட *துர்வாச முனிவருக்கு உதவி அருள் புரிந்ததால் உதவி நாயகர்*  என்று   திருநாமம்.     

 ⚜️  சிவ பரம்பொருள் எழுந்தருளி யுள்ள பல திருத் தலங்களையும் வழிபட்டு வந்த வணிகர் ஒருவர் திருமாணி குழிக்கு வரும்போது வழியில் வழிப் பறி வேடர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். 

வணிகர் ஈசன் நாமம் ஓதித் துதித்துக் காத்தருளுமாறு வேண்டியபோது பரமன் வேடுவராகச் சென்று வணிகனுக்கு உதவி யருளி மறைந்தார். 

இதனாலும் மாணி குழி ஈசருக்கு உதவி நாயகர் என்று திருநாமம்.  

*உதவித் திரு மாணி குழி*  என்று தலப் பெயரையும் *உதவித் திருமாணி குழி ஆளுடையார்* ,  ஊர் செறி *உதவி நாயகர்*  என்று பரமன் திரு நாமத்தையும் கல்வெட்டுகள் கூறுகின்றன. 

திருவுருவைச் சித்திரமாக வரைந்து வழிபட்டுத் தொழுத குபேரனுக்கு சங்க நிதி பதும நிதி பற்றிய சந்தேகங்களை தீர்த்தருளியதால் பரா பரனுக்குக் *குபேர உத்தரர்*  என்று திருநாமம். 
  
🕉  *குபேரனொடு தோழமைக் கொள் பகவன்*   (சம்பந்தர்) 
           
🔯  *நெதியாளன் தோழனை மித்திர அச் சிரவணற்கு*                                                                       

☸️ *அளகைக் கோன் தன் சங்காத்தி*          (அப்பர்)
       
என பூஜையும் தவமும் செய்த குபேரனுக்குத் தோழனாக இருந்து அருளியதால் ஈசனுக்கு *குபேர மித்திரர்* என்று திரு நாமம்.       
🔴  *மூவடி மண் தருக என்று -----  மாவலியை வஞ்சித்து*    (திரு மங்கை ஆழ்வார்) 
     
  என மூன்றடி மண் வேண்டும் என்று கேட்டு வானத்தையும் மண் என்று அளந்ததாலும் ,
தானம் கொடுத்தவனை மிதித்துப் பாதாளத்தில் அழுத்தி மாபெரும் துரோகம் புரிந்ததாலும் *மகா விஷ்ணு தெய்வத் தன்மை இழந்து துன்பம் அடைந்து அல்லல் உற்றார்*. 
குறுமாணக் குடி ( கண்ணார் கோயில்)  முதலிய பல தலங்களில் சிவ பூஜை செய்து கடலூரை அடைந்தார்.    

🔥  *சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்*      (திருமந்திரம்)
      
என தீவினை நீக்கி தெய்வத் தன்மை அளித்து தேவனாக்கும் சிவ நாமத்தின் மகிமை உணர்ந்து மேனியில் திருநீறும் நாவில் சிவ நாமமும் நெஞ்சில் சிவ வடிவும் சிவ சிந்தனையுமாய் நாள் தோறும் நியமத்துடன் கொன்றை மலர்களால் கொன்றை மரத்தடியில் லிங்கப் பரம் பொருளை வழிபட்டுத் தொழுதார்.  *எல்லாப் பாவங்களையும் போக்கும் பாவ நாசப் பரமேசுவரன் திருமாலின்  பழியும் பாவமும் போக்கி யருளி மீண்டும் வைகுண்ட வாழ்வையும் தெய்வீகத்தையும் அருளினார்* . 
⚜️     *நித்த நியமத் தொழிலனாகி நெடுமால் குறளனாகி மிகவும்*
           *சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடமாம் -----உதவி மாணி குழியே* 
      
என நியமம் தவறாமல் நாள்தோறும் சிந்தை சிவ மயமாகத் திருமால் செய்த பூஜையையும் அவருக்கு அருள் புரிந்த உதவி நாயகரையும்  போற்றும் தெய்வ மழலை  *உதவி என்ற திரு நாமத்தைப்*  பதிகம் முழுவதும் காட்டுகிறார்.  

தல வரலாறு கூறும் சிற்பங்கள் சுவற்றில் உள்ளன.
            
 பக்க வாசலைக் கொண்டுள்ள கருவறையில் உள்ள மிக அழகிய *லிங்கப் பரம் பொருளை மகா விஷ்ணு எப்போதும் பூஜிக்கிறார்  என்பதால்* லிங்கப் பரம்பொருள் முன்  குபேர உத்தரர் திருவுருவம் வரையப்பட்டுள்ள திரை உள்ளது.  

தீபாராதனை நடக்கும்போது குபேர உத்தரருக்கு தீபாராதனை காட்டித் திரை விலக்கப்படுகிறது.

   இத் திருக் கோயிலில்  *சிவாலய மரபிற்கு ஏற்ப பள்ளியறை இல்லை* .                                       

⚜️  *கண் இன்றிக் காணும்  செவி இன்றிக்  கேட்டிடும்*  (திருமூலர்)     
                                                  
⚜️  *ஓய்விலாதன* ,     

*தாயான ஈசற்கே*    (திருவாசகம்)

  என   *உறக்கமும் விழிப்பும் இல்லாத*,  

*ஓய்வு இல்லாமல் சதா சர்வ காலமும்  ஐந்து தொழில் புரிகின்ற*, 

*அங்கம் இல்லாத நெருப்பு உரு லிங்கமான*,  

 *காம தகனராகிய*,   

*தானே இறைவியாய் அருள் பொழியும்  தாயுமான ஈஸ்வரன் அலயத்தில்  பள்ளியறை கட்டுவது பிற்காலப் புன்மை, சிவ நிந்தனை, சிவாலய அபச்சாரம்* .  

துர்வாசர்  உருவமும்  அவர் பிரதிஷ்டை செய்து  பூஜித்த லிங்கமும் பிரகாரத்தில் உள்ளன. 

சிவ பூஜை செய்யும் காட்சி சிற்பமாக உள்ளது.     
                                                           
         வாமனேஸ்வரரின்  பேரருளைப் பெற்ற வணிகர் உதவி நாயகருக்குக் கோயில் கட்டி மகிழ்ந்தார்.

  *தந்தை தாய் சேய் ஆகிய மூவுருவத்  தியாக ராஜர் சந்நிதி*  உள்ளது.

  நடராஜர் நேரே நுழை வாசலுடன் தனிச் சந்நிதியில் உள்ளார். 
    
🔥  *நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து*  (சம்பந்தர்) 
     
என தேடித் திரிந்து அலைந்து  கை கூப்பித் தொழுது நிற்கும் பிரம்ம விஷ்ணுக்களுக்கு  *லிங்கத்தின் நடுவே அடி முடி மறைத்துக் காட்சி அருளிய லிங்கோற்பவர்  அண்ணா மலையார்*  உள்ளார் . 

  பரா சக்தி பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கம் மண்டபத்துடன் கூடிய தனிச் சந்நிதியில் உள்ளது. 

*பரா சக்திக்கு அருளிய அருள்புரி லிங்கமும் நான்கு யுக லிங்கங்களும் உள்ளன* .  

பரா சக்தி,  லட்சுமி,   சப்த மாதர்கள்  உதவி நாயகரை   வழிபட்டு  நலம் அடைந்துள்ளனர். 

சப்த மாதர்கள் பிரகாரத்தில் உள்ளனர்.   

ஈசனுக்குச் சற்று பின்னால் அதே  திசையில் தனிச் சந்நிதியில்  பரா சக்தி  உள்ளாள். 

 *பெரும்பாலான கோயில்கள் போன்றே  இக்கோயிலிலும்  கற்பனைப் பெயருடன் உள்ள அம்பாள்  சந்நிதி  பிற்காலச் சந்நிதி* .  

யானை லட்சுமியும் சிவ மைந்தர் காவல் தெய்வ  பைரவரும்  தனிச் சந்நிதியில் உள்ளனர். 
         
திருக் கோயிலுக்கு  அருகே சிரீ காழி நாடு உடைய பிள்ளைத் திரு மடம் என்று திருஞான சம்பந்தர் திருமடம் இருந்ததைக் கல்வெட்டு கூறுகின்றது. 

 சிவப்பிரியா

°°°°°°°°°°°°°°°°°🌹🌹சங்கரன் கோவில் சங்கரநாராயணர் ஆலயத் தில் ஆடித்தபசு விழா கொண்டா டப்படுகிறது. 🌹🌹


♦️♦️சங்கரன்கோவில்  ஆடித்தபசு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🌹🌹சங்கரன் கோவில் சங்கரநாராயணர் ஆலயத் தில் ஆடித்தபசு விழா கொண்டா டப்படுகிறது. 🌹🌹

கோமதி அம்மன் ஊசிமுனையில் ஒற்றை காலில் தவம்இருக்கிறாள் என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. யாருக்காக இந்த தவம் இத்தனை பக்தியோடுஅம்மன் தவம் இருப்பதே அண்ணன் நாராயணரும் கணவர் சங்கரரும் ஒருவரே என்பதே உலகிற்கு உணர்த்துவதற்காகத்தான். 

🌹🌹சங்கரநாராயணர் திருக்கோவில்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கர நாரா யணர் கோமதி அம்மனுக்கும், சங்க ன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித் ததை நினைவு கூரும் வகையில் ஆடி மாத த்தில் தபசு விழா கொண்டாடப்படுகிறது.

சங்கரநாராயணர் கோவிலுக்கு வருவோர் தங்கம், பித்தளை, வெண்கல சாமான்கள், துணி, ஆடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு காய்கறிகள், பலவகைத் தானியங்கள் மற் றும் பாம்பு, தேள் ஆகியவற்றின் வெள்ளி யால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணி க்கையாக செலுத்துகின்றனர்.

🌹🌹நாகங்களுக்குள் சண்டை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சங்கன் பதுமன் என்ற நாக வம்சத்து அரச ர்க ளுக்கு இடையே ஒருபோட்டி இருந்தது. சங்கன் சிவனை வணங்குபவர். பதுமன் நாராயணரை வணங்குபவர். சிவன்தான் பெரியவர் என்று சங்கன் சொல்ல, இல் லை  நாராயணர் தான் பெரியவர் என்று பதுமன் சொல்ல இருவருக் குமே சண்டை வந்தது.

🌹🌹அன்னையின் கருத்து
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாமாக ஏன் சண்டை போட வேண்டும் அந்த பார்வதியிடமே கேட்டு விடுவோம் என்று இருவரும் அன்னை பார்வதியிடமே சென்று கேட்டு விடுவோம் என்று சென்று பஞ்சாயத்து வைத்தனர். அன்னை என்ன சொல்லுவாள் யாருக்கு ஆதரவாக கருத்து கூறுவாள். அன்னை க்கு தெரியாதா இரு வருமே ஒருவர் தான் என்று. நேராக கண வனிடம் போய் சொன்னாள் அன்னை.

🌹🌹தவம் இருக்க வேண்டும்.
°°°°°°°’°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஹரியாகிய அண்ணனும், ஹரனாகிய நீங்க ளும் ஒருவர்தான் என்று மக்களுக்கு உணர்த் துங்கள் என்று சொல்லவே அதற் கு சிவனோ அவ்வளவு சீக்கிரம் நான் காட் சி அளித்து விடுவேனா நீ தவம் இருக்க வேண்டு ம் என்று சொன்னார் சிவன்.

🌹🌹புன்னை வனத்தில் தவம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவம் இருந்தால்தான் வரம் கிடைக்கும் என்று சிவன் சொல்லவே அதைக்கேட்ட அன்னை நான் தவம் இருக்க எங்கு செல் வது என்று கேட்டார். அதற்கு சிவனோ புன்னை வனங்கள் நிரம்பிய வனத்தில் முனிவர்கள் புன்னை மரங்கள் வடிவில் என்னை நோக்கி தவம் இருக்கிறார்கள் அங்கு சென்று நீ தவம் இரு ஆடி மாத பௌர்ணமி நாளில் நான் வந்து காட்சி தருகிறேன் என்று சொன்னார் சிவபெருமான்.

🌹🌹ஒற்றைக்காலில் தவமிருந்த கோமதி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குழந்தைகளுக்கு தெளிவு வர நான் தவமி ருப் பதுதானே நியாயம் என்று சொல்லி விட்டு கிளம்பினார் அன்னை. அன்னை கிளம்பிய உடன் கூடவே தோழியர்களும் கிளம்பினார்க ள். 

அவர்கள் பசுக்கூட்டங்களாக அன்னையு டன் தவம் இருக்க, அன்னை ஆவுடை நாய கியாக ஒற்றைக்காலில் ஊசிமுனையில் இறைவனை நோக்கி தவம் இருந்தாள். இன்றைய சங்கரன் கோவிலில் அன்னை இருந்த தவம் நீடித்தது. பசுக்களுடன் அன் னை தவம் இருந்ததால் கோமதி என்று அழைக்கப்பட்டார்.

🌹🌹தவத்தில் மகிழ்ந்த சிவன்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோ என்றால் பசுக்கள் மதி என்றால் மதி போன்ற முகம் கொண்டவர் என்று பொருள். அன் னையின் தீவிர தவத்திற்கு வரம் கிடைக்கும் நாளும் வந்தது. ஆடி மாதத்தில் பௌர்ணமி தினத்தில் வானத் தில் நிலவு ஒளி வீச ஊசி முனையில் தவ மிருந்த அன்னையின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பௌர்ணமி யில் புன்னை வனத்தில் சங்கரநாராயணராக அன்னை பார்வதி மட்டுமல்லாது சகல பக்தர்க ளுக்கும் காட்சி அளித்தார்.

🌹🌹அரிஹரனாக காட்சி அளித்த இறைவன்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம் ஒரு புறம் கங்கை சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர மாணிக்க மகுடம் ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு ஒரு புறம் புலித்தோ ல், மறு புறம் பீதாம்பரம், ஒரு புறம் ருத்தி ராட்சம், மறு புறம் துளசி மாலை , ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடி க்கிறான்; மறு புறம் சைவச் சங்கன் பெரு மாளுக்குக் குடை பிடித்து நிற்க அரிஹர னாய் காட்சி தந்தார் இறைவன்.

🌹🌹கோமதி சங்கரன்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அரிஹரனாய் காட்சி தந்த இறைவனை கண்டு உருகி நின்ற பார்வதியிடம் வேண் டிய வரங்க ளைக் கேள்என்று சொன்னார் சிவபெருமான். 'இத்திருக்கோலத்தை மறைத்து உம்முடைய திருஉருவைக் கொ ண்டு என்னுடன் தங்கவே ண்டும் என அம் பாள் வேண்ட, ஈசனும் சிவலிங்க வடிவமா க புன்னைவனத்தில் உமாதேவிய ருடன் எழுந்தருளி, அங்கேயே கோமதி சங்கர னாய் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

🌹🌹பிரசாதம்
°°°°°°°°°°°°°
சங்கரன்கோவில் பாம்புகள் சங்கன், பதும ன் வழிபட்ட கோயில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதா ன பிரசா தம். நோயுள்ளவர்கள் இந்த மண் ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். சரும நோய்கள் நீங்கும். 

மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களி ல் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டி கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும்.

🌹🌹பக்தர்களின் ஆடிச்சுற்று
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவமிருக்கும் அன்னைக்காக பக்தர்கள் ஆடிச் சுற்று சுற்றுகின்றனர். தவக்கால த்தில் கோம தி அம்மனை சுற்றினால் தங்களது வேண்டுத ல் உடனடியாக நிறை வேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை யாகும். கொடியேற்றம் துவங்கியதிலிரு ந்து தினமும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் அம்மனின் அருள் வேண்டி காலை, மாலை வேளைகளில் கோயில் பிரகாரத்தில் சுற்றி வருகின்றனர். 

🌹🌹கோமதி அம்மனுக்காக விழா
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சங்கரன்கோவில் அரியும் ஹரனும் இணை ந்து சங்கர நாராயணராக காட்சி கொடுத்த தலம். மக்கள் அனைவரும் இறைவனை வழிபட வேண்டும் என்பதற் காகவே இந்த திருவிளையாடலை நிகழ்த் தினார் இறைவன். மக்களுக்காக அன் னையே ஊசி முனையில் தவம் இருந்தார். 

சங்கரன் கோவிலில் அன்னை கோமதி யை பிரதானப்படுத்தி நடக்கும் திருவிழா இது. ஆடித்தபசு நாளில் அம்பிகையையும் சங்கரர் நாராயணரையும் வழிபட நன்மை கள் நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும்.
*ஓம் நமசிவாய*

Sunday, July 30, 2023

*10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .

சிவனை பற்றி நாம் அறியாத உண்மைகள்.🍂 *10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு 🍂.சிவபெருமானின் வாகனமான காளையின் சிறப்பம்சங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம் பொறுமையாக படித்து சிவத்தின் பெருமை பற்றி தெரிந்து கொள்வோம் 

சிவார்ப்பணம்

சிவனின்றி அணுவும் அசையாது

*10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.

அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.

சிவபூமிதான் நாம் வாழும் பூமி .

இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்

இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.

பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.

நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

திருக்கேதீஸ்வரம்,

திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.

உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்

புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,

ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,

வாழ்க்கையையும்,

பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).

வட அமெரிக்காவில்கொலராடா என்றஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிவலிங்கத்தின் வடிவத்தில் வத்திக்கான் சிட்டி டாப் வியூ சிவலிங்கம் வடிவத்தில் வத்திக்கான் நகரம் கட்டப்படுவதை ஒருவர் கவனிக்க முடியும் (மேல் பார்வையில் இருந்து பார்க்கப்படுகிறது)

அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.

பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.

சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.

சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.

எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.

எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்

சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.

சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.

சிவனின் பெருமையையும் தமிழின் பெருமையையும் உலகளாவிய அமைப்பு.

🍂 சிவபெருமானின் வாகனமான காளையின் சிறப்பம்சங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்
*🍂 " ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப..." என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. 'சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும் சீரார்ந்த பெருமையும்கொண்டது என்பதே இதன் பொருள்.

* 🍂 மாடு என்றால் செல்வம் என்று பொருள். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன்

நந்தி தேவருக்குத்தான் முதன்முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.

* 🍂தென்னக சிவாலயங்களில் இருப்பவை, ஓங்கோல் ரக மாடுகளின் தோற்றமுடைய சிற்பங்களே. கவர்ச்சியும் மிடுக்கும் மிக்க இந்த ஓங்கோல் ரக மாடுகள் ஆந்திர மாநிலத்தின் பெருமைக்குரிய சொத்தாகப் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

*🍂சிவன் கோயில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி தேவரை 'தர்ம விடை' என்று அழைப்பார்கள். அழிவே இல்லாமல் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பது தர்மம். அந்த தர்மம்தான் ஈசனைத் தாங்கி நிற்கின்றது.

* 🍂நந்தி தேவனின் மூச்சுக்காற்றைத்தான் ஈசன் சுவாசிக்கிறார். தர்மம்தான் இறையனாரின் சுவாசம். கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும் வீழ்ந்து வணங்குவதும் கூடாது.

*🍂 சிலாதர் முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

*🍂 நந்தி தேவர், ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.

* 🍂மராட்டிய மாநிலம், நாசிக் அருகே உள்ள பஞ்சவடியில் இருக்கும் கபாலீஸ்ரவரர் மகாதேவ் கோயிலில்தான் சிவபெருமானுக்கு எதிரே நந்திக்கு சிலை இல்லாமல் இருக்கின்றது. நாட்டிலேயே இங்குள்ள சிவனுக்குத்தான் நந்தி தேவர் இல்லை.

* 🍂தமிழ்நாட்டிலேயே, கோயம்புத்தூர் மாவட்டம் நவகரை மலையாள துர்கா பகவதி கோயிலில் மிகப் பெரிய நந்தி உள்ளது. 31 அடி உயரமும் 41 அடி நீளமும் 21 அடி அகலும் கொண்டதாகும். இதற்கடுத்த பெரிய அளவிலான நந்தி தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளதாகும். 12 அடி உயரமும் 20 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்டதாகும்.

* 🍂சிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமாந்தான். சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் வணங்க வேண்டும்.

* 🍂பிரதோஷ காலங்களில் நந்திக்கு ராஜமரியாதை. நந்தியின் காதுகளில் நமது பிரச்னைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார் எனபது நம்பிக்கை.

*🍂 பாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக்கொண்டார். அதைத்தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம்.

* 🍂பிரதோஷ பூஜையில் நந்திக்குத்தான் முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிப்பாடு செய்தமைக்கு ஒப்பாகும்.

* 🍂சிவபெருமானின் வாகனமாக காளை திகழ்வதால்தான், பிரதோஷ காலத்தில் அருகம்புல்லை மாலையாகக் கட்டி அணிவித்து வணங்குகிறோம்.

*சமயபுரம் மாரியம்மனின் 7 சகோதரிகள்* 🌹



*சமயபுரம் மாரியம்மனின் 7 சகோதரிகள்* 🌹
 தமிழக அம்மன் கோவில்களில் பெரும்பேறும் தலைமைப் பண்பும் கொண்டு அருளாட்சி நடத்தும் பெருமை சமயபுரம் அம்பாளுக்கு மட்டுமே உண்டு என்பதை உணரலாம். இத்தகைய நிலையில் பெருமக்கள் வழக்கின்படி சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகள் இருப்பதாக கூறுகின்றனர். அவர்களை பற்றிச் சுருக்கமாக பார்ப்போம்... 

1.சமயபுரம் முத்துமாரியம்மன்

திருச்சி மாவட்டம் சமயபுரம் ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும் தொடர்ந்து அங்கு அம்மன் கோவில் உருவானதாகவும் கூறப்படுகிறது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள்.

2.அன்பில் மாரியம்மன்

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உட்பட்ட உபகோவில் ஆகும். மகா மாரியம்மன் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கோவிலாக விளங்குகிறது. இக்கோவிலில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வரும்பொழுது வேப்பமரத்தடியில் அம்மன் தங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இத்திருக்கோவிலை முதலாங்க சக்கரவர்த்தி கட்டியதாகக் கூறப்படுகிறது. சமயபுரம், நார்த்தான் மலை, வீரசிங்க பேட்டை, கண்ணனூர், புன்னை நல்லூர், திருவேற்காடு, அன்பில் மாரியம்மன் ஆகிய சிறப்பு மிக்க அம்மன் தலங்களில் அன்பில் மாரியம்மன் மற்ற அனைத்து அம்மனுக்கும் மூத்தவள் என்ற கருத்தும் உண்டு. அன்பில் மாரியம்மனுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. மற்ற கோவில் களில் அம்மனுக்கு குழந்தை கிடை யாது. நண்ப கல் 12.00 மணியளவில் கண்குறைபாடு உள்ளவர்களுக்கு பூசாரியால் பச்சிலை மூலிகைகளால் ஆன சாறு கண்களில் பிழிந்து விடப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கண் நோயில் இருந்து குணமடைவதாக நம்பப்படுகிறது. 

3.புன்னை நல்லூர் முத்துமாரியம்மன்

தஞ்சைக்குக் கிழக்கே உள்ள இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலவரான அம்பாளுக்கு திருமுழுக்கு செய்யப்படுவதில்லை தைலக்காப்பு சாற்றப்படுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு திருமுழுக்கு நடைபெறும். அம்மையால் பாதிக்கப்பட்ட வர்கள் பிராத்தனைக்காக இங்குத் தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர். தஞ்சை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எண்வகைச் சக்திகளைக் காவல் தெய்வமாக அமைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்குக் கீழ்ப்புறத்தில் அமையப் பெற்ற சக்தியே புன்னை நல்லூர் மாரியம்மன் என்று "சோழ சம்பு" என்னும் நூல் கூறுகிறது. 

4.நார்த்தமலை முத்துமாரியம்மன்

முத்துமாரியம்மன் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தமலை என்கிற ஊரில் அமைந்துள்ளது. நார்த்தமலை கோவில் மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கர் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை என 9 மலைகள் சூழ அமைந்துள்ளது. இந்த நார்த்தமலை முத்துமாரியம்மன் சந்நிதியில் வடக்குபுறம் அமைக்கப்பட்டிருக்கும் முருகன் யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பங்குனி மாதத்தில் இக்கோவிலில் நடக்கும் பங்குனி திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுகின்றனர். நீண்ட காலமாக உடலில் பல வியாதிகள் ஏற்பட்டு அவதிபடுபவர்கள் இக்கோயிலில் "அக்னி" காவடி எடுத்து வழிபட நோய்கள் தீருவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழிந்தும் குழந்தை பேறில்லாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து கரும்பு கொண்டு தொட்டில் செய்து வைத்து அம்பாளை வழிபடுவதால் நிச்சயம் குழந்தைப் பாக்கியம் கிடைப்பதாகக் கூறுகின்றனர். தல புராணங்களின்படி இலங்கையில் ராவணனுடனான யுத்தத்தின் போது ராம - லட்சுமணர் மற்றும் காயம்பட்ட வானர வீரர்க ளைக் குணமாக்கும் பொருட்டு, இமயத்தில் இருந்து ஆகாய மார்க்க மாக சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தூக்கி வந்து கொண்டிருந்த போது, அதிலிருந்து கீழே விழுந்த பாறைகளே இங்கிருக்கும் மலைகள் எனக் கருதப்படுகிறது. 


5.தென்னலூர் முத்துமாரியம்மன்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமே "திருநல்லூர்" என அழைக்கப்படும் "தென்னலூர்" ஆகும். இந்த கிராமத்தின் அதிதேவதை "முத்துமாரியம்மன்" ஆகும். இந்த அம்மன் தானாக உதித்த சுயம்புவடிவான காவல்தெய்வம் ஆகும். மிக எளிமையாக கூரையிலே குடிகொண்ட குலதெய்வம் இந்த "முத்துமாரியம்மன்" ஆகும். தென்னலூர் முத்துமாரியம்மன் தலவரலாறு கர்ணபரம்பரை கதைகளாக (செவிவழிக் கதைகள்) அறியப்படுகின்றது.

இதற்கென கல்வெட்டு குறிப்புகளோ, ஓலைசுவடிக் குறிப்புகளோ, பட்டயங்களோ இல்லை எனலாம். 

6.கொன்னையூர் முத்துமாரியம்மன்

தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகில் உள்ள கிராமம் கொன்னையூர். இவ்வூர் புதுக்கோட்டையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் பொன்னமராவதியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மையப்பகுதியில் கோவில் கொண்டு, நாலாத் திசையிலும் உள்ள மக்களையும், காடு கரைகளையும் கால்நடைகளையும் காத்து வருகிறாள் முத்து மாரியம்மன். 

7.வீரசிங்கம்பேட்டை முத்துமாரியம்மன்

திருவையாற்றிற்கு அருகில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் கிராமம் வீரசிங்கம்பேட்டை. வீர சோழன் என்னும் மன்னனால் ஆளப்பட்ட வீரணன்சோலை என்ற இடமே நாளடை வில் வீரசிங்கம்பேட்டை ஆகியுள்ளது. சுற்றிலும் திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருப்பழனம் ஆகிய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. பொதுவாக மாரியம்மனின் அக்காள், தங்கை, ஏழு பேர் என்பர். அவர்களில் கடைசி தங்கை வீரசிங்கம்பேட்டையில் வீற்றிருப்பவள் இந்த இள மாரியம்மன் என்பது தல வரலாறு. மேற்குறிப்பிட்ட செய்திகளால் மாரியம்மன் வழிபாட்டில் தமிழ்மக்கள் ஒன்றியிருப்பதும் அருளாட்சியால் ஈர்க்கப்பட்டு பக்தி பரவசத்தில் இருப்பதும் அம்மன் மீது மக்கள் கொண்டுள்ள ஈடுபாடும் மாரியம்மனின் அருஞ்செயல்களும் வெளிப்பட்டு நிற்கின்றன. அந்தந்த பகுதி மாரியம்மன் பூச்சொரிதல் விழாவின் போதும் திருவிழாக்காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வழிபட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியும் காவடிதூக்கியும் அலகு குத்தியும் பெருமை செய்கின்றனர். தமிழகத்தில் அம்மன், அம்பாள் என்று சொல்வதைக் கர்நாடகத்தில் சாமுண்டி, கேரளாவில் பகவதி,வங்காளத்தில் காளி, உத்தரபிரதேசத்தில் விந்தியாவா கினி, அசாமில் காமாக்யா, காஷ்மீரில் ஷீர்பவானி, மராட்டி யத்தில் துலஜா பவானி, பஞ்சாப்பில் ஜவாலாமுகி, குஜராத்தில் அம்பாஜி என்று அழைக்கின்றனர். 🙏🌹

நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால், அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

ஆடிப்
18ம் பெருக்கு - 03-08-2023 வியாழக்கிழமை. 
 அன்றைய தினம் விரதமிருந்து வழிபாடு செய்தால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர். 
தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலி கயிறு மாற்றிக்கொள்வர். 
எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால், 
அந்த காரியம் மேலும் மேலும்  பெருகும் என்பது ஐதீகம்.
 
பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். 
மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள்  முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன. 
இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் புண்ணியநதி அன்னைக்கு, ஆடிப்  பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள்.

திருமணம், 
காதணிவிழா, 
மஞ்சள்நீர் சடங்கு என்று எல்லா விதமான சுபநிகழ்ச்சிகளையும் ஆடி மாதத்தில் செய்தால் சரிப்பட்டு வராது என்பது நம்மில் பலரால் பலகாலமாக பின்பற்றப்படும் நம்பிக்கை. 
அதே சமயம் கோயில், தெய்வம் சார்ந்த அனைத்து விசேஷங்களுக்கும் ஆடி மாதம் தான் கொண்டாட்ட மாதமாக இருக்கிறது. குறிப்பாக அம்மன் கோயில்களில் 
தீ மிதித்தல், பூச்சொரிதல், காவடி எடுப்பது, கூழ் ஊற்றுவது, கஞ்சி ஊற்றுவது, மற்றும் உற்சவம் என ஆடி மாத விசேஷங்களே தனி விழா தான்.

 
ஒருபுறம் ஸ்ரீ துர்க்கை அம்மன், 
ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், 
ஸ்ரீ நாகாத்தம்மன், ஸ்ரீ வேம்புலியம்மன், 
ஸ்ரீ பச்சையம்மன் என அம்மன் கோயில் திருவிழாக்கள் இருக்கும் ஆடி மாதத்தின் இன்னொரு முக்கிய சிறப்பு 
ஆடி மாதம் 18ம் நாள், ஆடிப்பெருக்கு நாள்.

முன்னாட்களில் கிராமப்புற மக்கள், விவசாயம் செய்யும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதை நீங்க வழிபாடு செய்தது தான் அம்மன் வழிப்பாடு. 
ஊர் வளம் பெறவேண்டி நதிகளை போற்றுவதுமாக தான் இன்றும் தொடர்கிறது.

முக்கியமாக, சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி-ஆனி மாதம் வரை நெல்லோ, தானியங்களோ சேமிப்பில் வைத்திருக்கும் ஏழை மக்கள், ஆடியில் அது தீர்ந்து உணவுக்கு தடுமாறுவார்கள். 
மழை இன்றி பஞ்சத்தில் இருக்கும் அவர்கள் ஆடி மாதத்தில் விதைவிதைத்து, விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டி விளைச்சலுக்கு முக்கிய காரணமான தண்ணீரை போற்றியும், விளைச்சலுக்கு ஏற்ற மாரி மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும் வழிப்படுகிற விழா 
ஆடிப் பெருக்கு.

ஆடிப் பெருக்கு நன்னாளில், நதிகளை வணங்கினால் விவசாயம் செழிப்பது போல், கன்னிப்பெண்கள் இந்த நாளில் நதிக்கரையில் வழிப்பட்டால் மனசுக்கு ஏற்ற மன்னவர் வாய்ப்பர். 
சுமங்கலிகள் வழிபட்டால் வம்ச விருத்தி, கணவனின் ஆயுள் கூடும் என்பதும் ஐதீகம்.

இந்தியாவில் காவிரி நதி ஓடுகிற ஊர்களில் ஆடிப் பெருக்கு வைபவம் நடக்கும். 
காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சேலை, திருமாங்கல்யம், பழங்கள், கருமணி, சீர்வரிசை பொருட்கள், காப்பரிசி ஆகியவற்றை வைத்து காவிரியை வணங்கி, படைத்த மஞ்சள் சரடை பெரியவர்களிடம் கொடுத்து, பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகையிலும் கட்டிக்கொள்வார்கள்.

இதனால் வாழ்வில் தொட்டதெல்லாம் வளமாக அமையும் என்றும், குறிப்பாக புதுமணத் தம்பதியர்கள் காவிரிக் கரையில் குடும்பத்தோடு வந்து, திருமணத்தின் போது அணிவித்த மாலையை ஆற்றில் விட்டுவிட்டு, தாலிபிரித்து கட்டும் சடங்கு காவிரிக் கரையில் செய்வதால், காவிரிக் கரையில் தண்ணீரில் புரண்டோடுவதுப் போல் நம் வாழ்விலும் இன்பம் பெருகுமாம்.

ஆடிப் பெருக்கு கொண்டாடும் காரணம்:

விவசாயிகளுக்கும் உகந்த மாதம் 
இந்த ஆடி மாதம். ஆம், 
உழவு பணிகளை துவங்கும் மாதம். பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீரை நாம் தெய்வமாக மதிக்கிறோம். தண்ணீரை அதிகம் செலவு செய்தால் பணம் விரையம் ஆகும் என்கிறது சாஸ்திரம். 
பல நதிகளை புண்ணிய நதிகளாக, தெய்வீக இடமாக கருதி போற்றி, அங்கு பூஜை செய்வார்கள். எல்லாம மாதங்களிலில் பூஜை செய்வதை விட ஆடிமாதம் பூஜித்தால் விசேஷம் என்று ஏன் கருதுகிறார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை அறிந்துக்கொள்வோம்.

ஆடிபெருக்கு நாளில் புண்ணிய நதியில் நீராடி தன் தோஷத்தை போக்கி கொண்ட ஸ்ரீராமர்.

ஸ்ரீ ராமசந்திரருக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ஸ்ரீஇராமர் கொல்ல நேர்ந்தது. 
ஸ்ரீராமர் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டதால் ஸ்ரீஇராமரை பிரம்ஹத்தி பிடித்துக்கொண்டது. 
இந்த தோஷத்தில் இருந்து விலக என்ன செய்யவேண்டும என்று வசிஷ்டமுனிவரிடம் கேட்டார் ஸ்ரீராம பிரபு.

“இந்த பாவத்தில் இருந்தும் தோஷத்திலிருந்தும் நீ விலக கங்கையில் நீராடு. ஆடிபெருக்கு நாளில் நீராடினால் உடனே உன்னை பிடித்து வாட்டும் பிரம்ஹத்தி தோஷம் விலகும்.” என்றார் வசிஷ்டமுனிவர். முனிவர் கூறியது போல் ஆடிபெருக்கு நாளில் காவேரியில் நீராடி தன் தோஷத்தை போக்கிக்கொண்டார் ஸ்ரீராமர்.

தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர்.
இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப் பணிகளைத் தொடங்குவர்.

ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. 
நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப்  பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி  பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர்.

அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. 
இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். 
நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய்  பெருகும் என்பர்.*

*ஓம் நமசிவாய*

ஆடி 18, ஆக 3 -8 -2023 வியாழக்கிழமையில்சிறப்பு: ஆடிப்பெருக்கு, ,வழிபாடு



ஆடி 18, ஆக 3 -8 -2023 வியாழக்கிழமையில்
சிறப்பு: ஆடிப்பெருக்கு, ,
வழிபாடு: சகல நதி தீரங்களில் புனித நீராடுதல், முருகனுக்கு விரதமிருந்தும், அம்மனுக்கு பொங்கலிட்டும் வழிபடுதல்

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை.இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றன. நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம் பெருகி ஒடி வரும்.

ஆடி பதினெட்டாம் நாள் அற்புதமான நாள். தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள். காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் நதிக்கரை யோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நாள் ஆடிப்பெருக்கு நன்னாள். ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும்.

ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தைத் தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்

திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்கவும் இந்த ஆடிப்பெருக்கு நாளில் அம்பிகையை வேண்டிக்கொள்வது வழக்கம். 

ஆடிப்பெருக்கு நாளில் செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும்.

காவிரி அன்னையை கர்ப்பிணியாக பாவித்து வளைகாப்பு செய்வது போல பலவகை உணவுகளை படைத்து மஞ்சள் சரடு, காதோலை கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். சிலரது வீடுகளில் முளைப்பாறி வளர்த்து எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள்.

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம்.

மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அதில் முக்கியமான இந்த ஒரு பொருளை ஆடிப்பெருக்கென்று நீங்கள் வாங்கி வைத்தால் குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி செல்வ செழிப்பானது அதிகரிக்கும்.

சுபகாரிய தடைகள், வருமானம் பெருகுவதில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி குடும்பம் வறுமையில் இருந்து, நல்ல நிலைக்கு மென்மேலும் வளர்ச்சி அடைய ஆடிப்பெருக்கு நாள் அன்று அம்மனை வீட்டில் வழிபடுங்கள்.சர்க்கரை பொங்கல் நெய்வேதியமாக படைத்து அம்மனுக்கு வேப்பிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.

கல் உப்பு வாங்குவது ரொம்பவே சிறப்பானது. கல் உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறார் எனவே ஆடிப்பெருக்கு அன்று புதிதாக கல் உப்பு பாக்கெட் ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து வீட்டில் இருக்கும் பீங்கான் ஜாடியில் முழுவதுமாக தழும்ப நிரப்பி வைக்க வேண்டும். அது போல இந்த ஒரு முக்கியமான பொருளையும் ஆடிப்பெருக்கில் வாங்க வேண்டும். குண்டு மஞ்சள் ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய முக்கிய பொருளாகும்.

குண்டு மஞ்சள் மகாலட்சுமியின் பூரண அம்சமாக விளங்குகிறது. வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு ஒவ்வொரு மஞ்சள் கிழங்கை கொடுத்து வழி அனுப்பினால் உங்களுடைய வறுமை நீங்கி தனதானியம் பெருகும்.

வீட்டிற்கு வரும் பெண்களை வெறுங்கையோடு அனுப்பாமல் குடிக்க மோர் அல்லது தண்ணீர் கொடுத்து குண்டு மஞ்சள் ஒன்றை கொடுத்து அனுப்புங்கள். அது போல ஆடிப்பெருக்கு நாளில் குண்டு மஞ்சளை புதிதாக வாங்கி வந்து அதை ஒரு பாத்திரத்தில் முழுவதுமாக நிரம்பும் படி வைக்க வேண்டும். 

எப்பொழுதும் பெண்கள் குண்டு மஞ்சளை சிறிதளவு தேய்த்து முகத்தில் பூசி தலைக்கு குளித்து வந்தால் பலவிதமான நோய்கள் நீங்கும் .

இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி மட்டுமல்ல வைகையை, தாமிரபரணி என பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. எனவே ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா இந்த களைகட்டப்போகிறது.

ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினம் அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். தங்கம், வெள்ளி வாங்கலாம். வீட்டின் பூஜை அறையில் தங்கம், வெள்ளி காசுகள், நாணயங்களை வைத்து வணங்கி அதை பீரோவில் வைக்க செல்வ வளம் பெருகும்

ஞாயிறு பிரதோஷம் என்ன விசேஷம் ஞாயிறு பிரதோஷம்... ராகுகால பிரதோஷ தரிசனம்

ஞாயிறு பிரதோஷம் என்ன விசேஷம் ஞாயிறு பிரதோஷம்... ராகுகால பிரதோஷ தரிசனம்! சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி  சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி  கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி என்று சிவன் கோயிலுக்குச் சென்று நந்தியம் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள். இது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும்.

ஞாயிற்றுக்கிழமையில், ராகுகால வேளையில், பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்யுங்கள். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி. இன்று 30/7/23 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம். மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள்.

இன்று பிரதோஷம். இந்த நாளில், சிவன் கோயிலுக்குச் சென்று நந்தியம் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள். இது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும்.

பொதுவாகவே பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக் கிழமையன்று ராகுகாலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவாலயங்களில், பிரதோஷ பூஜை சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
குறிப்பாக, நந்திதேவர்தான் பிரதோஷ பூஜையின் பிரதான நாயகன். எனவே நந்திதேவருக்குத்தான் அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படும். அப்போது, 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.

இன்று 30/7/23  ஞாயிற்றுக்கிழமை, பிரதோஷம். மாலையில் குடும்பத்துடன் சிவாலயம் சென்று தரிசியுங்கள். முடிந்தால் வில்வமும் செவ்வரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்வோம். கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தியுங்கள்.

இந்தநாளில், பிரதோஷ தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது உறுதி.
 நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர்

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி

கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி

வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
செவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி

Saturday, July 29, 2023

74 தேவார பாடல் பெற்ற சிவாலயங்கள்...**தொன்டை நாட்டு ஸ்தலம்...*

*274 தேவார பாடல் பெற்ற சிவாலயங்கள்...*
*தொன்டை நாட்டு ஸ்தலம்...*

*சென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் நகரில் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.*

*இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.*
*சென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் நகரில் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.*

*கோவில் வரலாறு :*

*பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்து கொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினர்.*

*தேவர்களுக்கு மனம் இரங்கிய சிவன், வானுலகு மற்றும் பாதாள உலகை இணைத்துத் தேராக்கி, அதில் ஏறி அசுரர்களை அழிக்கச் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதில் நினைத்துவிட்டோ தான் செய்ய வேண்டும் என்பது நியதி.*

*சிவனுக்கும் இந்த நியதி பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களும், ‘சிவனே நம்முடன் இருக்கும்போது, வேறென்ன துணை வேண்டும்’ என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர்.*
*கோபம் கொண்ட விநாயகர், தேரின் அச்சை முறித்து, சிவனை செல்ல விடாமல் தடுத்து விட்டார். தேர் அங்கேயே நின்றது.*

*இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து, செல்லும் செயல் சிறப்பாய் நடந்திடக் காவலனாய் இருக்கும்படி வேண்டினார். தந்தை சொல்கேட்ட விநாயகர், தேர் அச்சை சரியாக்கினார்.*

*பின் சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று(முறிந்து) நின்ற இடம் என்பதால் இத்தலம் ‘அச்சு இறு பாகம்’ என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் ‘அச்சிறுப்பாக்கம்’ என்றானது. சிவன் ‘அட்சீஸ்வரர்’ என்றும், ‘ஆட்சிபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். கண்ணுவ முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இங்கு வழிபட்டுள்ளனர்.*

*பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று கொண்டிருந்தபோது, இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது. பணியாளர்கள் சக்கரத்தை சரி செய்து கொண்டிருந்த போது, தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதை மன்னன் கண்டான். தங்கத்தால் ஜொலித்த அந்த உடும்பைப் பிடிக்க மன்னன் சென்றான்.*

 *உடும்போ, ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது. காவலர்கள் மரத்தை வெட்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது. உடும்பு வெட்டுப்பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் தோண்டிப் பார்த்தான். எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டும் அகப்படவில்லை.*

 *அன்றிரவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன், உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி, இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளி இருப்பதை உணர்த்தினார்.*
*சிவபெருமானுக்கு அங்கேயே கோவில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன்.*

*அப்போது அங்கு ‘திரிநேத்ரதாரி’ எனும் மூன்று கண்களை உடைய முனிவர் ஒருவர் வந்தார். தீவிர சிவபக்தரான அவரைப் பற்றி அறிந்து கொண்ட மன்னன், இத்தலத்தில் சிவாலயம் கட்டித்தரும்படி கூறிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தான்.*

 நெடுநாட்கள் கழித்து மன்னன் திரும்பி வந்தபோது கோவில் மத்தியில் நந்தி, கொடி மரத்துடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும், அவருக்கு வலது பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமும் கட்டி வைத்திருந்தார். (இக்கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் பார்வதியுடன், சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்).
இதற்கு விளக்கம் புரியாத மன்னன் காரணம் கேட்டான். ‘உமை ஆட்சி செய்த ஈஸ்வரனே, உடும்பு வடிவாகி என்னையும் ஆட்சி செய்தார். 

எனவே, உங்களுக்கு காட்சி தந்த ‘உமை ஆட்சீஸ்வரருக்கு’ பிரதான வாசல் கொண்டு ஒரு கருவறையும், ‘எமை ஆட்சி செய்த ஈஸ்வரருக்கு’ பிரதான கருவறையுமாக வைத்து கோவில் கட்டினேன்’ என்றார் திரிநேத்ரதாரி. அதனை மன்னனும் ஏற்றுக்கொண்டான். சுயம்பு லிங்கமாக இருக்கும் எமையாட்சீஸ்வரரே இங்கு பிரதானம்.

 திருவிழாக்களும் இவருக்கே நடக்கிறது. ராஜகோபுரத்தில் இருந்து கொடிமரமும், நந்தியும் விலகியே இருக்கிறது. பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் “கொன்றையடியீஸ்வரர்” சன்னிதியில், சிவனை வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி இருக்கிறார். 

இம்மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்வது சிறப்பு.
சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் “அச்சுமுறி விநாயகராக” கோவிலுக்கு வெளியே தனிச் சன்னிதியில் மேற்கு திசை பார்த்து அமர்ந்திருக்கிறார்.

 அருணகிரிநாதர், இவ்விநாயகரை தரிசித்து விட்டு, ‘அச்சிறு பொடி செய்த’ என்று இவரது சிறப்புக்களை பாடித்தான் திருப்புகழை தொடங்கியுள்ளார்.

புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை. சிவனின் பிற பெயர்கள் அச்சேஸ்வரர், அச்சுகொண்டருளிய தேவர் என்பதாகும். ஐந்து நிலை பிரகாரத்தில் சீனிவாசர், அலமேலு மங்கைத்தாயார் தனிச்சன்னிதியில் இருக்கின்றனர்.

 ஆட்சிபுரீஸ்வரர், உமை ஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். இளங்கிளி அம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்.

இத்தல சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தை திருநாவுக்கரசர் தனது சேத்திரக் கோவையில் குறிப்பிட்டிருக்கிறார்.

 அகத்தியருக்கு இத்தலத்திலும் சிவன் தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் அவருக்கு துவாரபாலகர்களாக இருக்கின்றனர்.

 உமையாட்சீஸ்வரருக்கு முன்னே தியான நந்தி இருக்கிறது. தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 29-வது தலம். சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், பவுர்ணமியில் விசேஷ பூஜைகள் நடக்கிறது.

 ஆட்சிபுரீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பதும், சுவாமி அட்சரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால் கல்வி, வேள்விகளில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கை. இங்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. 

இதில் கலந்துகொண்டால் தோஷங்கள், ஜென்ம வினைகள், தொழில் தடைகள், மனக் குழப்பங்கள் நீங்கும் என நம்புகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூைஜகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம் : 

சென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

 சென்னையில் இருந்து 100 கி.மீ., காஞ்சீபுரத்தில் இருந்து 70 கி.மீ., செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. மேல்மருவத் தூரில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.
 
*தொடரும்*

*🌷வாழ்க வளமுடன்🌷* 

*🙏ஓம் நமசிவாய🙏*

🌷சனிப்பெயர்ச்சியும் - ஆடித்திருவிழாவும்

குச்சனூர் - சனீஸ்வர பகவான்.
*************************************
ஆடி சனிக்கிழமை
**********************
தமிழகப் பெருங்கோவில்களில் சனீஸ்வர பகவானை உபசந்நிதியிலேயே காண முடியும். ஆனால், இங்கே அப்படியல்ல! 

சனீஸ்வர பகவான் தலை நாயகனாக மும் மூர்த்தியாக மற்ற தெய்வங்களோடு இணை இல்லாமல் தனிப்பெருந்தெய்வ மாக நின்று விளங்கும் திருத்தலம் ‘குச்சனூர்’ ஆகும்.  

சனீஸ்வர பகவானே இங்கு மூலவர். ‘குச்சனூரான்’ என்ற திருப்பெயரும் பேச்சு வழக்கில் இங்கே வழங்கி வருகின்றது.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபி நதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் குச்ச னூர் எனுமிடத்தில் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.

🌷தலவிருட்சமும் - மூலஸ்தானமும்

மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுயம்பு வாகத் தோன்றியவர். கருநிறமுடன் லிங்க வடிவில் தோற்றம். உடன் உற்சவ மூர்த்தி யும் உள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை உற்ச வர் பவனி வருவார். 

முப்பெரும் தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் சேர்ந்து இருப்ப தால் (ஐக்கியமாகி இருப்பதால்) மூலவரு க்கு ஆறு கண்கள் இருக்கின்றன.

அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சன க் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.

திருக்கோவிலின் வளாகத்தில் வினாயக பெருமான், முருகன் சந்நிதிகள் உள்ளன. உட்புறமாக லாடசந்நியாசியின் கோயில் உள்ளது. வாய்க்கால் கரையில் சோணை கருப்பனசாமி கோவில் உள்ளது.  

அதற்குப் பக்கத்தில் கன்னிமார் கோவிலு ம், நாகர் கோவிலும் உள்ளன. மூலஸ்தான த்திற்கு பின்புறம் விடத்தலை மரம் உள்ள து. விடத்தலை மரம் ஸ்தலவிருட்சமாகும்.

🌷காகத்திற்கு முதல்மரியாதை

நாள்தோறும் முக்கால பூஜைகளும் தவ றாமல் நடைபெறுகிறது. பூஜை முடிந்த பின் தளிகை காகத்திற்கு வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அன்றைய தினம் தடையாகக் கருதி மீண்டும் பூசாரிகள் மன்னிப்புக் கேட்டு மீண்டும் காகத்திற்கு தளிகையை வைப்பர்.  

தளிகையை காகம் உண்டபின்தான் பக்தர் களுக்கு பரிமாறப்படும். இது மிகவும் சிற ப்பானது. தவிர, சனி பகவானுக்கு உகந்த து என எள் பொங்கலும் வைக்கப்படும்.

🌷சனிப்பெயர்ச்சியும் - ஆடித்திருவிழாவும்

சனிப்பெயர்ச்சி தினம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடிமாதம் சனிக்கிழமை தோறும் உற்சவகாலம் சிறப்பாகக் கொண் டாடப்படும். மூன்றாம் சனிக்கிழமை மிகவும் பிரசித்தமாகும். 

அன்று கம்பளத்தார் மேல்ப்பூலாநந்தபுரம் ஊரைச் சேர்ந்தவர்கள் ஆட்டம் ஆடி கோவி லில் சிறப்பு பூஜை செய்வார்கள். இந்த திருக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் ஆளுகைக்கு உட்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

🌷தலவரலாறு
 
செண்பகநல்லூர் என்ற பகுதியைசேர்ந்த அரசன் தினகரன் குழந்தைப் பேறின்மை யால் அவதிப்பட்டான். குழந்தைக்காக இறைவனிடம் வேண்டிவந்தான். கோயிலி ல் அவனுக்கு அசரீரி ஒன்று கேட்டது. 

அந்த அசரீரியில் அவனது வீட்டிற்குப் பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வளர்த்து வர வேண்டும் என்றும், அதன் பிறகு அரசனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. 

அசரீரியில் சொன்னபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் அவனிடம் வந்து சேர்ந்தான். அந்த மன்னனும் அந்தச் சிறுவனுக்குச் சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான்.  

அதன் பின்பு, அசரீரியில் சொல்லியபடியே அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அரசனும், அரசியும் அந்தக் குழந்தைக்குச் சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். 

இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரிய வர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். சதாகன் அப்படி இருக்கவில்லை.  

இதனால், அரசன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனையே அரச னாக்குவது என்று முடிவு செய்து அவனுக் கே முடிசூட்டினான். 

🌷அரசனுக்கு சனி
 
இந்நிலையில் அரசன் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. இதனால் தினகரன் பெரும் துன்பத்திற்கு ஆளானான். தந்தை யின் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென் று இரும்பால் சனியின் உருவத்தை படை த்து வழிபடத் தொடங்கினான். 

அவனது வழிபாட்டால் மன மிறங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றி, “மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்க ளின் முற்பிறவிப் பாவ வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது.  

பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவ ர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. 

இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு, நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும்” என்று கூறினார். 

🌷தந்தையின் தோஷம் ஏற்ற மகன்
 
சந்திரவதனன் தனது தந்தையின் துன்பத் தைக் குறைக்கும்படி வேண்டினான். சனீ ஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகை காலம் சனி தோஷம் பிடிக்கும் என்றும், அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும்.  

அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக் க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவ தனனும் சம்மதித்தான். 

சனீஸ்வர பகவான் அளித்த துன்பங்களை யெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதன னின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான், இந்த ஏழரை நாழிகைக் கால சனி தோஷம்கூட சந்திரவதனனின் முற் பிறவியின் வினைகளுக்கேற்பதான் வந்த தாகவும் இனி யாருக்கும் எக்குறையும் இருக்காது என்றும் உறுதியளித்தார். 

உடனே சந்திரவதனன் சனீஸ்வர பகவானி டம், சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்க ளை அத்துன் பத்திலிருந்து மீட்க அங்கே யே எழுந்தருள வேண்டினான். சனீஸ்வர னும் அக்கோரிக்கையை ஒப்புக்கொண்டு, அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றினார். 

சந்திரவதனன், சுயம்பு வடிவிலான சனீஸ் வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற் குக் குச்சுப்புல்லால் கூரை அமைத்தான்.  

அதன் பிறகு செண்பகநல்லூர் என்றிருந் த ஊர் குச்சனூர் என்று பெயர் மாற்றமடை ந்து விட்டது. அதன் பிறகு, சனி தோஷம் பிடித்துத் துன்பப்படும் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுத் துன்பம் நீங்கிச் செல்கின்றனர்.

*ஓம் நமசிவாய*
 

முகூர்த்த கால் நடுவது ஏன்?திருமண 💑 நிகழ்ச்சிகளில் முகூர்த்த கால் 🌵 நடுவதற்கு இது தான் 👉 காரணமா?

🦚 முகூர்த்த கால் நடுவது ஏன்?

திருமண 💑 நிகழ்ச்சிகளில் முகூர்த்த கால் 🌵 நடுவதற்கு இது தான் 👉 காரணமா?
💑 திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள், கோவில்களில் திருவிழாக்கள் போன்றவை துவங்குவதற்கு முன் பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது மங்கள நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்யப்பட்டு விட்டதன் அடையாளமாக கருதப்படுகிறது. 

💑 பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஏன் நடுகிறார்கள்? என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

ஈசான்ய மூலை :

💑 திருமணத்திற்கு முன் வீட்டின் முன்பு முகூர்த்த கால் அல்லது பந்தக்கால் நடுவது, மாவிலைத் தோரணம் கட்டுவது போன்றவை மரபு. பெரும்பாலும் பந்தக்கால் நடுவதற்கு மூங்கில் மரங்களையே பயன்படுத்துவார்கள். மூங்கிலை நன்கு சுத்தம் செய்து பின்பு மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்பு வெள்ளைத் துணியில் செப்புக்காசை வைத்து கட்டி, இதை அந்த மூங்கிலின் மேற்பகுதியில் கட்டுவார்கள். 

💑 பந்தக்கால் நடும் குழியில் நவதானியங்கள் போட்டு, பால் ஊற்றி உறவினர்கள் ஒன்று சேர்ந்து இந்த பந்தக்காலை வடகிழக்கு மூலையில் நடுவார்கள். வடகிழக்கு மூலையை ஈசான்ய திசை எனக் கூறுவர். ஈசான்ய திசை சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசையாகும். நடைபெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு, மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் நடப்படுகிறது.

💑 மணமகன் வீடு, மணமகள் வீடு, விசேஷம் நடக்கும் இடம் ஆகியவற்றில் தனித்தனியாக, இந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சுபமுகூர்த்த நாளில், சுபமுகூர்த்த வேளையில் நடப்படும். இந்த பந்தக்காலே நடக்க போகும் விசேஷத்திற்கு பந்தலை தாங்கி நிற்கும் தூண் போன்றதாக அமையும் என்பார்கள். 

💑 மூங்கில் மரம் செழித்து உயரமாக வளர்வது போல, புதிதாக வாழ்க்கையை துவங்க போகும் மணமக்களின் வாழ்க்கையும் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த சடங்கு நடத்தப்படுகிறது.

வரலாற்றில் பந்தக்கால் :

💑 தற்போது திருமண விழாக்களின் போது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு அழைப்பிதழ் வைத்து வணங்குவது போல, முந்தைய காலத்தில் நாட்டில் நடக்கும் திருமணங்களுக்கு அந்நாட்டின் அரசருக்கும் மரியாதை நிமித்தமாக திருமண அழைப்பிதழ் வைக்கும் வழக்கம் இருந்தது. 

💑 அப்படி அழைப்பு தந்த அனைவரது திருமணத்திற்கும் அரசனால் செல்ல முடியாது. எனவே, அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் என்பது பிற்காலத்தில் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அத்திருமணம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். 

💑 அந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்பதை குறிப்பதற்காகவே பண்டைய காலம் தொட்டு திருமணத்திற்கு முன்பு பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஊன்றப்படும் வழக்கம் இருந்து வருகிறது.

💑 கண்திருஷ்டி விலகி நடக்க போகும் சுபகாரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும், மணமக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காகவும் முகூர்த்த கால் நடப்படும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்தே மற்ற திருமண சடங்குகளை தொடங்குவார்கள்.

Friday, July 28, 2023

விநாயகர் வழிபாடும் - சனி தோஷமும்...!

விநாயகர் வழிபாடும் - சனி தோஷமும்...!
ஜாதகத்தில் சனி தோஷம் கொண்டு துன்பங்கள் அனுபவிப்பார்கள் “விநாயகரை” வழிபட்டால் போதும், வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. 

இதனை விளக்கும் புராண கதை ஒன்றை காணலாம். ஒரு தடவை ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் நிஷ்டையில் இருந்து, விநாயகர் தன்னைப் பிடிப்பதற்காகச் சனி பகவான் வருவதை அறிந்து கொண்டார். அவன் வந்ததும் ஒரு ஓலைச் சுவடியை நீட்டினார். “அதில் இன்று போய் நாளை வா” என்றிருந்தது. 

பின்னர் விநாயகப் பெருமான் அதை அரசமரத்தடியில் வைத்தார். பின்பு சனி பகவானிடம் “சனீஸ்வரா எந்த நாளும் இந்த அரசமரத்திற்கு வருக. இந்த ஓலைச் சுவடியில் என்ன எழுதி இருக்கிறதோ அதன்படி நடப்பாயாக!” என்று சபித்து விட்டு மறைந்து விட்டார். 

அதன் பிரகாரம் சனீஸ்வர பகவான் தினமும் அந்த அரச மரத்தடிக்குச் சென்று அதில் உள்ள வாசகத்தைப் படித்து ஏமாந்தபடி திரும்புவது வழக்கமானது. 

இப்படி பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஏமாந்துபோன சனிபகவான், விநாயகரைப் பிடிப்பது என்பது முடியாத காரியம் என்றுணர்ந்து அவரை துதித்து வழிபடத் தொடங்கினார். 

விநாயகரும், அவர் முன்தோன்றி “சனீஸ்வரா, காரணமின்றி யாரையும் உன் சக்தியைப் பயன்படுத்தித் தவறாக நடக்கக்கூடாது. இதற்கு உன் அனுபவம் ஒரு படிப்பினையாகட்டும். இன்று முதல் என்னை வணங்கும் பக்தர்களையும் நீ பிடித்து துன்புறுத்தக் கூடாது” என்று கூறி அவருக்கு ஆசி அளித்து மறைந்தார்.

இதன்படியே இன்றும் சனி தோஷம் உள்ளவர்கள் விநாயகரை அவருக்கு உகந்த நாட்களான சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி இன்னும் பிற நாள்களிலும் வணங்கி வர சனிதோஷத்தில் இருந்து முற்றிலும் விடுபடுகிறார்கள்.

சனி பிடிக்காதது மட்டுமல்ல, சனியின் கெடுபலன் களையும் குறைத்து அருள்புரிகிறார் விநா யகர், நவக்கிரக கோட்டையில், அதுவும் சனி பகவான் எதிரில் அமர்ந்து கொண்டு.

நவக்கிரக கோட்டையில் ஸ்ரீ நவசக்தி சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்கள் எல்லாம் தனித்தனி சந்நிதிகளில் விநாயகர் எழுந்தருளியிருக்கும் 
ஒரே வளாகத்தில் அமைந்துள்ளனர். 

வேலூரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்னை. பொன்னையில் இருந்து 3 கி.மீட்டரில் உள்ளது நவக்கிரகக் கோட்டை. வேலூரிலிருந்து பொன்னைக்கு பேருந்து வசதி உண்டு. பொன்னையில் இருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ மூலம் நவக்கிரகக் கோட்டையை அடையலாம்.

1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்...!திருவண்ணாமலை

1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்...!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்
கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன.

தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன.

திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. 
அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது.

இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள், ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் அண்ணா மலையார் ஆலயத்தின் பழமை சிறப்புகள், நமக்கு மேலும் அதிக அளவில் துல்லியமாக கிடைத்திருக்கும். சங்கநாட்டு மன்னன், காலச்சூரி மன்னன் ஆகியோரும் திருவண்ணாமலையார் அருளை கேள்விப்பட்டு நிறைய பொன்னும், பொருட்களையும் தானமாக கொடுத்துள்ளனர்.

இதுவரை ஆராயப்பட்ட 119 கல்வெட்டுகளில் இருந்து திருவண்ணாமலை ஆலயம் முதலில் எப்படி தோன்றியது, எப்படி வளர்ச்சி பெற்றது, யார்-யாரெல்லாம் கோவிலை கட்டினார்கள் என்ற உண்மை ஆதாரப்பூர்வமாக நமக்கு கிடைத்துள்ளது.

திருவண்ணாமலை ஆலயம் இப்போது 24 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. ஆனால் கல்வெட்டு ஆய்வுப்படி பார்த்தால், இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றினார் என்று தெரிய வருகிறது. அதனால்தான் திருவண்ணாமலை தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.

அடி, முடி காண முடியாதபடி, ஆக்ரோஷமாக, தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும், பிரம்மாவும், “இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்?” என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன், மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 
4-ம் நூற்றாண்டில் கருவறை, செங்கல்லால் கட்டப்பட்டது. 5-ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது.

6, 7, 8-ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது.

9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது, திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 

817-ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 

10-ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள்தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள்.

அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது. 11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின. முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான்.

1063-ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது.

12-ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 

13-ம் நூற்றாண்டில் சிறு, சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா, கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி, வாரி வழங்கினார்கள்.

14-ம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன.

1340-ம் ஆண்டு முதல் 1374-ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார்.

15-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணா மலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில்தான்.

16-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராய ருக்கு, திருவண்ணாமலை கோவில் மிக, மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றி அமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் அவர்தான்.

அவர் மற்ற மன்னர்கள் போல ஏதோ ஒன்றிரண்டு திருப்பணிகள் மட்டும் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். அந்த திருப்பணிகள் ஒவ்வொன்றும் இன்றும்திருவண்ணாமலையில் கிருஷ்ண தேவராயரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள், கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் ‘கிருஷ்ணராயன்’ என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில.

1529-ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர், கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார்.

இதற்கிடையே குறுநில மன்னர்களும், சிவனடியார்களும் சிறு, சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பே கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது.

கோபுரங்கள் அனைத்தும் 1370-ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590-ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னர்கள் மட்டுமல்ல... மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். 

சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய, விஜயநகர, தஞ்சை மன்னர்கள் போட்டி போட்டு செய்த திருப்பணிகள்தான் திருவண்ணாமலை தலத்தை நோக்கி மக்கள் அலை, அலையாக வர உதவி செய்தது.

14-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது. என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது.

கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் மகத்தானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள்.

மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும், சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179-ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். 

அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12.06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த புண்ணியமும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கே சாரும்.

மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும், பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. இன்று நாம் திருவண்ணாமலை ஆலயத்தை வியந்து, வியந்து பார்க்கிறோம் என்றால் அதற்கு இந்த இரு மன்னர்களிடம் இருந்த அண்ணாமலையார் மீதான பக்தியே காரணமாகும்.

எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்ததுதான்.

திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார், அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார்.

அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார். ஒரு மகன், தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை அண்ணாமலையார் செய்து வருகிறார்.

Followers

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

_வில்வ மரத்தை வழிபட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கும்_ 'பிரும்மா விஷ்ணு சிவன்' என்ற மும்மூர்த்திகளைத் தன்னக...