Saturday, February 17, 2024

மேல்மலையனூர் மாசி மயானக்கொள்ளைத் திருவிழா - சிறப்புகள் என்ன

மேல்மலையனூர் மாசி மயானக்கொள்ளைத் திருவிழா - சிறப்புகள் என்ன, எப்போது நடக்கிறது மாசி மாத அமாவாசை தினமான 19/2/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று  மேல்மலையனூர் மயானத்தில் மயானக் கொள்ளைத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.

மேல்மலையனூர் அங்காளம்மன் அந்தரியே சுந்தரியே ஆபத்தில் காத்தருளும் அங்காள ஈஸ்வரியே! 
 மேல்மலையனூர்: அந்தரியே சுந்தரியே ஆபத்தில் காத்தருளும் அங்காள ஈஸ்வரியே! 
 மேல்மலையனூர்: அந்தரியே சுந்தரியே ஆபத்தில் காத்தருளும் அங்காள ஈஸ்வரியே! 
"திருவிளக்கின் ஒளியினிலே தீர்ப்பு சொல்லும் அங்காளி,

மாவிளக்கின் ஒளியினிலே மறுவார்த்தை சொல்வாளே.

மக்கள் குறை தீர்த்திடுவாள், மாங்கல்யம் காத்திடுவாள்

அங்காளி துணையிருக்க ஆன குறை ஏதும் உண்டோ!"

ஆண்டுதோறும் மேல்மலையனூரில் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழா இந்த ஆண்டும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆன்மிகச் சிறப்புப் பெற்ற ஆலயங்களில் ஒன்று ’மேல்மலையனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்.’ செஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது இந்தச் சிறப்பு மிக்க ஆலயம். பிரம்மனின் ஐந்தாவது சிரத்தைக் கொய்த சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டிருந்த கபாலத்தை, பார்வதிதேவி தன் பாதத்தால் நசுக்கி அழித்த இடமாகக் கருதப்படுகிறது இந்த மேல்மலையனூர். அதன் பின்பு சிவபெருமானுக்கு ஏற்பட்டிருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிட, சிவபெருமானும் பார்வதித் தாயாரும் சாபம் நீங்கி சுய உருவினை அடைந்ததாகக் கூறுகிறது தலவரலாறு.

இதன் நினைவாகவே மயானக்கொள்ளைத் திருவிழா மேல்மலையனூரில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் போது, மிகுந்த கோபத்தில் இருந்த அங்காளம்மனை சாந்தப்படுத்தும் நிகழ்வாகவே தேர்த்திருவிழா நடத்தப்படுவதாகவும், அமாவாசை தினங்களில் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள். அதன்படி, இந்த வருடமும் மாசி மாத அமாவாசை தினமான 19/2/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று  மேல்மலையனூர் மயானத்தில் மயானக் கொள்ளைத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.

  - மேல்மலையனூர்: அந்தரியே சுந்தரியே ஆபத்தில் காத்தருளும் அங்காள ஈஸ்வரியே!
இந்த மேல்மலையனூர் அங்காளம்மனை வணங்கி வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள்,  காய்கனிகள், கொழுக்கட்டைகள், கீரைகள், சில்லறைக் காசுகள், தானியங்கள் எனப் பலவகைப் பொருள்களை வீசி எறிந்து கொள்ளை விடுவார்கள். மேல்மலையனூர் மயானத்தில் திருவிழா முடிந்ததும் அந்த மயானச் சாம்பலை எடுத்துச் சென்று தங்களின் வீடுகளில் துணியில் முடிந்து வாசலில் தொங்கவிட்டால் தீய சக்திகள் விலகும் என்றும், அன்றைய தினத்தில் அங்கு அருள்வாக்குச் சொல்பவர்களின் வார்த்தைகள் அப்படியே பலிக்கும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

மயானக்கொள்ளைத் திருவிழா
மேல்மலையனூரில் நடைபெறவிருக்கும் மயானக்கொள்ளைத் திருவிழாவில் கலந்துகொண்டு அங்காள பரமேஸ்வரியை வழிபட சகல துன்பங்களும் நீங்கி நல்லருள் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மன், மேல்மலையனூரில் புற்றில் பாம்பாக இருந்ததாகக் கூறப்படுவதனால், அவர் இன்றளவும் அவ்வாறே காட்சி தருகிறார். அங்குள்ள புற்று மண்ணை நெற்றியில் பூசி வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிட்டும் என நம்புகின்றனர்.

அங்காளபரமேஸ்வரி அம்மனின் மீதுள்ள பக்தியாலும், பிரசித்திபெற்ற இந்தத் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காகவும், தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காகவும் தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிவார்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாள்கள் இந்தப் பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. 18/2/2023 சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெறும்  நிலையில், கீழ்க்காணும் தேதிகளில் இத்திருவிழா தொடர்ந்து சிறப்பாக நடைபெறவுள்ளது.

தீயசக்திகளை அடித்துவிரட்டும் அங்காள பரமேஸ்வரியின் மயானக்கொள்ளை!
மாசி 7 ஞாயிற்றுக்கிழமை  (19/2/2023) - மயானக்கொள்ளை

மாசி 10  புதன்கிழமை (22.2.2023 ) - தீமிதி விழா உற்சவம்

மாசி 12 வெள்ளிக்கிழமை  (24/2/2023 ) - திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம்

மாசி 15 திங்கட்கிழமை  (27/2/2023) - அம்மன் தெப்பல் உற்சவம்

மாசி 18 வியாழக்கிழமை  (2/3/2023 ) - காப்பு களைதல்

பிரசித்திபெற்ற இந்த மாசித் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை மனமுருக வேண்டி நிறைந்த அருளைப் பெறுவோம்.

ஈசனின் ஒரு பாகமான அன்னை சக்தி மண்ணுலகில் முதன்முதலில் வந்திறங்கிய திருத்தலம் மேல்மலையனூர். அதனால் சக்தியைத் தொழுவாருக்கு அதுவே தாய் வீடு. தமிழகமெங்கும் உடுக்கை, பம்பை, சிலம்பு வாசிப்பவர்கள், சக்தி கரகம் எடுப்பவர்கள், கங்கா-காளி நாட்டியம் ஆடுவோர் எல்லோருக்கும் இதுவே முதன்மை கோயில் என்பதால் இங்கு நிகழ்ச்சி நடத்த அவர்கள் பணம் வாங்குவதே இல்லை என்பதுவே இந்த கோயிலின் சிறப்பு.

அங்காளி
  மேல்மலையனூர் எல்லைக்குள் கூட நுழைய முடியாது, அத்தனை மக்கள் கூட்டமும் மயங்கிக் கிடக்கும் சக்தி குடி கொண்ட ஆதார தலம் இது. பிரமனின் தலையைக் கொய்த ஈசன், கபாலம் ஏந்திய கபாலி ஆனார். எத்தனை பிக்ஷை ஏற்றாலும் நிறையாத கபாலமாக அது இருந்தது. சரஸ்வதியின் சாபத்தால் அன்னை சக்தியும் கொக்கு, குருவி சிறகுகளால் ஆன, உடை உடுத்தி மயானம் காக்கும் சுடலை பிச்சியாக அங்காள அம்மனாக மலையனூருக்கு வந்தாள். ஒருமுறை ஈசன் அங்காள அம்மனை நாடி வந்து பிக்ஷை கேட்க, ஆங்கார ஆவேசம் கொண்ட அங்காளி தயிர் அன்னத்தை மண்ணில் பிக்ஷையிட்டார். அதை உண்ண மண்ணுக்கு இறங்கிய கபாலத்தை காலால் நசுக்கி அழித்தாள் அங்காளி. சிவனின் சாபமும் நீங்கியது. அன்னையும் சாந்தமானாள்; அன்னபூரணி என்ற திருநாமமும் கொண்டாள். இங்கே எண்திசைக்கும் அரசியாக வீற்றிருந்து மண்ணுலகைக் காக்கும் மாதாவானாள் என்கிறது கோயில் புராணம்.

மேல்மலையனூர்
கண்டாலே உணர்ச்சி மீறி அருள் வந்து ஆட வைக்கும் திருக்கோலம் கொண்டவள் அங்காள அம்மன். சுயம்புவாக புற்று மண்ணால் உருவானவள் அங்காளி. நான்கு திருக்கரங்களுடன், இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்ட யோக வடிவில், பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி எழுந்தருளி காத்து வருகிறாள் அங்காளி.

இவளுக்கு அருகிலேயே பெரிய புற்றும் எழுந்தருளி உள்ளது. இதனால் இவள் 'புத்துமாரி', 'வன்மீக காளி' என்றெல்லாம் வணங்கப்படுகிறாள். கோயிலுக்கு வெளியே படுத்த நிலையில் பெரியாயி வணங்கப்படுகிறாள். இவள் நிறை சூலியான பெண்களுக்கு காவல் தெய்வமாக இருக்கிறாள்.

மயானக் கொள்ளை
தீய சக்திகளால் அச்சம் கொண்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், நோய்நொடிகளால் அவதிப்படுவோர், கடன் தொல்லையால் கலங்குபவர்கள் என எல்லாவித மக்களும் இங்கு நம்பிக்கையோடு வந்து அங்காளியை சரண் அடைந்து அருள் பெற்று செல்கிறார்கள். ஒவ்வொரு மாத அமாவாசையும் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிறும், மகாளய அமாவாசையும், நவராத்திரி, கார்த்திகை தீபம், தைப் பொங்கல் போன்ற நாள்களும் இங்கு விசேஷமானவை. மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாள்கள் இங்கு நடைபெறும் மயானக் கொள்ளை விழா பெரும் விசேஷம் எனலாம். காண்பவர்கள் உணர்ச்சிவசப்படும் அற்புத கொண்டாட்டம் அது.

மயானக் கொள்ளை வைபவத்தில் காய், கனிகள், சுண்டல், கொழுக்கட்டைகள், கீரைகள், சில்லரை ரூபாய்கள், தானியங்கள் என தங்களால் இயன்ற காணிக்கைகளை பக்தர்கள் அம்மனை நோக்கி சூறையிட்டு வணங்குவார்கள். இதனால் விளைச்சல் பெருகும், தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
நள்ளிரவில் மயானத்தில் நடைபெறும் அங்காளியின் மயானச் சூறைக்குப் பிறகு சாம்பல் வடிவிலான அசுரனை அழித்தப் பிறகு, அந்த சுடுகாட்டுச் சாம்பலை பக்தர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள். இந்த சுடுகாட்டுச் சாம்பலை வாசலில் கட்டிவைத்தால் தீய சக்திகள் அணுகாது என்பதும் நம்பிக்கை. பிரமாண்டத் தேரில் அங்காளம்மன் பவனி வரும் திருக்காட்சி உணர்ச்சியைத் தூண்டி பக்தர்களை வாய் விட்டு அழவைக்கும் என்பார்கள்.

3 அமாவாசை இந்த கோயிலுக்கு வந்து ‘ஊஞ்சல் உற்சவம்’ கண்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும், திருமண வரன் சரியாக அமையாதவர்களுக்கு தகுந்த வரன் கிட்டும் என்பது நம்பிக்கை. புற்று மண்ணை நீரில் கலந்து தரும் தீர்த்தப் பிரசாதம் வெம்மை நோய்களை தீர்க்கும். அண்டசராசரங்களையும் காத்து நிற்கும் அங்காள அம்மன், வடதமிழ் நாட்டு மக்களின் தொன்றுதொட்ட பழைமையான தெய்வமாக விளங்கி வருகிறாள். தீமைகளை அழிக்கும் துடியான சக்தியாக விளங்கி வருகிறாள். ஆபத்தில் உதவும் தாயாகவும், அநீதியை தட்டி கேட்கும் நீதிபதியாகவும் இவள் எளிய மக்களுக்கு இருந்து வருகிறாள். இவளை வேண்டிக்கொண்டால் எல்லாம் நல்லவிதமாக முடியும் என்பது லட்சோப லட்ச மக்களின் நம்பிக்கை. நம்பிக்கையை விதைக்கும் இந்த தயாபாரியை நீங்களும்  சென்று தரிசித்து வாருங்கள். நலமே அளிப்பாள்; நல்லருள் புரிவாள்!

"திருவிளக்கின் ஒளியினிலே தீர்ப்பு சொல்லும் அங்காளி,

மாவிளக்கின் ஒளியினிலே மறுவார்த்தை சொல்வாளே.

மக்கள் குறை தீர்த்திடுவாள், மாங்கல்யம் காத்திடுவாள்

அங்காளி துணையிருக்க ஆன குறை ஏதும் உண்டோ!"

No comments:

Post a Comment

Followers

மிக சக்தி வாய்ந்த 18ம்படி கருப்பண்ணசாமி கோவில்

மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி . அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவ...