Monday, September 5, 2022

பசுவும் அதன் புண்ணியங்களும்

🌼_கோமாதா_🌾பசுவின் பலன்கள்🌼


பசுவுக்கு நாம் 
அகத்திக்கீரை தருவதால்...

முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.  

கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும். 

நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும். 

பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் 
சுப வாழ்வு ஏற்படும்.

பசுவும் அதன் புண்ணியங்களும்……..

*பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

*பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.

*பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), நாட்டுப் பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். 

இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.

*பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

*பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். நாட்டுப் பசுவின் கால் பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக் கொண்டார்கள்.

*`மா’ என்று நாட்டுப் பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது.

*பசு வசிக்கும் இடத்தில்  பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.

*மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள்  பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.

*ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசு தானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த 
பசு மாடு அங்கு தோன்ற, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு் வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

*உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சி அடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும்  பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது நல்ல ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

பசுவே நம் கோமாதா.
நம் கோமாதாவை காப்போம்....!

Sunday, September 4, 2022

ஸ்ரீ அனந்த பத்மநாபன் ஸ்வாமி விரதம்

ஸ்ரீராமஜெயம்🙏
ஸ்ர்வம் ஸ்ரீராம மயம்🙏
ஸ்ரீமதே ராமானுஜாயா நம:



அனந்த விரதம் என்றால் அனந்த பத்மநாப சுவாமியை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் இந்த நாளை, ‘அனந்த பத்மநாப விரதம்’ என்றும்  சொல்லுவார்கள். அனந்த பத்மநாபன் என்றால் திருவனந்தபுரத்தில் பள்ளி கொண்டிருக்கும் பத்மநாப ஸ்வாமிகளைத்தான் அனந்தபத்மநாப சுவாமிகள் என்று சொல்வோம்.

திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் என்று சொன்னாலே, நம் நினைவுக்கு வருவது அந்த ரகசிய அறைகளை திறந்தது தான். அதனுள்ளே எவ்வளவு பொன் பொருள் இருந்தது. அப்படிப்பட்ட செல்வ வளங்களை கொண்ட ஒரு தெய்வத்தை நினைத்து இருக்கக்கூடிய விரதம் தான் இந்த அனந்த விரதம். இந்த அனந்த விரதத்திற்கு பின்னால் உள்ள வரலாற்றுக் கதை என்ன. இந்த கதையை உணர்த்தும் வகையில் நம்முடைய வீட்டில் நாம்  எப்படி விரதம் இருந்தால், நம் வீட்டில் செல்வ கடாட்சம் மேலோங்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

பல யுகங்களுக்கு முன்பு சுமந்தன், தீக்ஷாதேவி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்களுடைய மணவாழ்க்கை சீரும் சிறப்புமாக சென்றது. இவர்கள் இருவருக்கும் சீலை என்ற பெண் மகளாக பிறந்து இருந்தால். சீலை சிறுவயதாக இருக்கும்போதே, சீலையின் தாயார் தீக்ஷாதேவி மரணம் அடைந்து விட்டாள். சுமந்தன், மனைவியை இழந்து தனி மரமாக இருப்பதால் சுமந்தனால் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்வதற்கு முன் வர முடியவில்லை. இதனால் சுமந்தன் இரண்டாவது திருமணம் செய்தான். சுமந்தனின் இரண்டாவது மனைவியின் பெயர் கர்க்கசை‌‌.

வழக்கம் போல தான். முதல் மனைவியின் பெண்ணை பார்த்தால் இரண்டாவது மனைவிக்கு விருப்பம் கிடையாது. சித்தி கொடுமை. சீலை வளர்ந்து பெரியவள் ஆனவுடன் அவளுக்குத் திருமணமும் நடந்து முடிந்தது. சீலையை கௌண்டின்யர் என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கிறார்கள். தாய் வீட்டிலிருந்து மணமுடித்த பெண்ணுக்கு சீதனமாக ஏதாவது கொடுக்க வேண்டுமல்லவா.

சுமந்தன் தன்னுடைய மனைவி கர்க்கசையை பார்த்து, வீட்டில் ஏதாவது பொருள் இருந்தால் அதைக் கொண்டு வந்து கொடு என்று சொல்கிறான். ஆனால் கர்க்கசையோ, வீட்டில் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று கோபமாக சொல்லிவிட்டு வீட்டிற்கு உள்ளே சென்று விடுகிறாள். என்ன செய்வது. சுமந்தன் தன் வீட்டில் இருந்த கோதுமை மாவை தன்னுடைய மகளுக்கு சீதனமாக கொடுத்து அனுப்பி வைக்கின்றான்.

சீலையும், சீலையின் கணவன் கௌண்டின்யரும் தனது பயணத்தை தொடங்குகிறார்கள். கால்நடையாக தானே பயணம் செய்யவேண்டும் அந்த காலத்திலெல்லாம். இவர்கள் பயணம் செய்யும்போது  ஒரு நதிக்கரை ஓரமாக ஓய்வு எடுத்துக் கொண்டபோது அந்த நதிக்கரையில் அன்று நிறைய பெண்கள் கூடி சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு, ஏதோ ஒரு பூஜையை செய்து கொண்டிருந்தார்கள். இதை சீலை கவனித்து, அங்கு பூஜை செய்து கொண்டிருக்கும் பெண்களிடம் போய் கேட்கின்றாள். ‘இது என்ன பூஜை எதற்காக செய்கிறார்கள் என்று.’

அங்கு உள்ள ஒரு பெண் இந்த பூஜையை பற்றி விரிவாக சீலைக்கு எடுத்துரைக்கின்றார். இது அனந்த பத்மநாப ஸ்வாமிகளை நினைத்து செய்யக்கூடிய பூஜை. இந்த பூஜையை செய்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். இழந்த செல்வத்தை நாம் மீட்டு எடுத்து விடலாம். வீட்டில் கஷ்டம் என்பதே இருக்காது. என்றபடி பூஜையின் மகிமையை எடுத்துச் சொல்கின்றாள்.

சீலையும் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரையில் தலைக்கு குளித்துவிட்டு, தன்னுடைய தந்தை தனக்கு சீதனமாக கொடுத்த கோதுமை மாவில், மாவு பிசைந்து எப்படியோ 14 பூரி போல ஒரு உணவை சமைத்து அதை பத்மநாப ஸ்வாமிகளுக்கு நிவேதனமாக வைத்து, சிவப்பு நிறப் கயிறை வைத்து இந்த விரதத்தை மேற்கொண்டு, பத்மநாபஸ்வாமிகளை நினைத்து பூஜை செய்கின்றாள். பூஜையும் நிறைவடைந்தது.

பூஜையின் இறுதியில் நோன்பு கையிறாக அந்த சிவப்பு கயிறை எடுத்து சீலை, தன்னுடைய கையில் கட்டிக்கொண்டால். சீலை இந்தக் கயிறை தன்னுடைய கையில் கட்டிக் கொண்டதும் அவளுடைய அங்கங்கள் முழுவதும் தங்க ஆபரணங்களால் ஜொலிக்க ஆரம்பித்தது. அவளுடைய வாழ்வும் சிறப்பாக மாறியது. சீலை மேற்கொண்ட இந்த அனந்த விரதத்தை தான் நாமும் நம்முடைய வீட்டில் இருக்க வேண்டும். இந்த நிகழ்வு நடந்தது புரட்டாசி மாதம் மூன்றாவது நாள்.

இந்த அனந்த விரதத்தை நம்முடைய வீட்டில் சுலபமான முறையில் எப்படி செய்வது. காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, உங்களுடைய வீட்டில் அனந்த பத்மநாப சுவாமிகள் படம் இருந்தால் அந்த படத்திற்கு சிவப்பு நிற பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் பெருமாள் படம், கிருஷ்ணர் படம் எது இருந்தாலும் சரி தான். அந்த படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்

நீங்கள் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள். முடிந்தால் சிவப்பு நிற பூக்களை பூஜைக்கு பயன்படுத்துங்கள். சிவப்பு நிறத்தில் கட்டாயமாக இந்த பூஜைக்கு சரடு தேவை. சிவப்பு நிற நூல். சிவப்பு நிற கயிறு ஏதாவது கட்டாயமாக இருக்கவேண்டும். வெள்ளை நிற நூலில் கொஞ்சமாக குங்குமத்தை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து, உலரவைத்து வெள்ளை நிற நூலை சிவப்பு நிற நூலாக மாற்றிக் கொண்டாலும் சரி தான். இந்த சிவப்பு நிற கயிறை பெருமாளின் பாதங்களில் வைத்து விடுங்கள்.

நிவேதனமாக உங்களால் முடிந்த ஏதாவது ஒரு பிரசாதத்தை செய்து வையுங்கள்‌. முடிந்தால் கோதுமை மாவில் 14 பூரிகளை நிவேதனமாக வைக்கலாம். பிரசாதம் செய்ய முடியவில்லை என்றால் பழங்கள் நிவேதனமாக வைத்தால் கூட போதும் தான். அடுத்தபடியாக தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய வீட்டில் பொன் பொருள் எல்லாம் குறைவில்லாமல் பெருக வேண்டும் என்று அனந்த பத்மநாப சுவாமிகளை மனதார நினைத்து பிரார்த்தனை செய்துகொண்டு இறுதியாக தூப தீப ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

பூஜை முடிந்து ஒரு 15 நிமிடங்கள் கழித்து சுவாமியின் பாதங்களில் வைத்து இருக்கிறீர்கள் அல்லவா அந்த சிவப்பு கயிறு, அதை எடுத்து உங்களுடைய கையில் கட்டிக் கொள்ளலாம். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் இதை கையில் கட்டிவிடலாம்.

மூன்று நாட்கள் கழித்து கையில் இருக்கும் கயிறை அவிழ்த்துக் கொள்ளலாம். இதை கட்டாயமாக, ஓடுகின்ற நீரில் விட வேண்டும். அப்படி இல்லை என்றால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத மனிதர்கள் கால் படாத இடத்தில் கொண்டுபோய் போடவேண்டும். இந்த கயிறு அனாவசியமாக மனிதர்களின் காலில் மிதி படக்கூடாது. அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் ஏதாவது மரம் இருந்தால் அந்த மரத்தில் கட்டி தொங்க விட்டு விடுங்கள்.

இவ்வாறு வருடம் தோறும் இந்த பூஜையை செய்து வருபவர்களுடைய வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. தொழில் மேலோங்கும். லாபம் அதிகரிக்கும். பணம் காசு நகை பொன் பொருள் ஆபரணம் அனைத்தும் சேர்ந்து கொண்டே செல்லும். நம்பிக்கையோடு இந்த விரதத்தை மேற்கொண்டு அனைவரும் நல்ல பலனைப் பெற வேண்டும் என்று அந்தப் பெருமாளை மனதார வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

ஸ்ரீ அனந்த பத்மநாபன் ஸ்வாமி திருவடிகளே சரணம்🙏

ஓம் நமோ நாராயணாய 🙏🏻

ஆன்மீகம் என்பது என்ன❓

#அண்ணாமலை சிவமே
#அருணாச்சல சிவமே.......

** ஆன்மீகம் எனும் வார்த்தை இப்பொழுது மிகவும் அதிகமாக பயன்பாட்டில் உள்ள ஒரு வார்த்தை ஆன்மீகம் என்றால் கடவுளைப் பற்றி பேசுவது என்று எண்ணுகிறோம்...

 கடவுளைப் பற்றி என்றால் கடவுளிகம் என்றோ கடவுளிசம் என்றோ தானே சொல்ல வேண்டும் கம்யூனிஸ்ட் பேசுவது கம்யூனிசம் மார்க்சிஸ்ட் பேசுவது மார்க்சிசம். 

* நாம் கடவுளைப்பற்றி பேசுவதை ஏன் ஆன்மீகம் என்கிறோம்? ஆன்மீக சொற்பொழிவு ஆன்மீக பத்திரிகை ஆன்மீக நிகழ்ச்சி என்று எல்லாமே ஆன்மீகம் தான் ஏன்? ஆன்மீகம் என்பது ஆன்மா (உயிர்) பற்றியது ஆன்மாவை மீட்டு எடுக்கும் ஒரு இயல் இகம் ஆன்மீகம் கடவுளைப் பற்றி பேசுவதற்கும் உயிர் எனும் ஆன்மாவிற்கும் என்ன சம்பந்தம் ?....

கடவுளை நாம் வணங்குவதோ அல்லது வழிபடுவதோ இந்த ஆன்மா தான் செய்த கர்ம வினைகளை தீர்த்து உய்வு பெறவேண்டும் என்பதற்காகவே சொத்து வேண்டும் பணம் வேண்டும் கார் வேண்டும் பங்களா வேண்டும் இன்னும் பிற உலக சுகங்களுக்காக அல்ல.....

* ஏன் ஆன்மா உய்வு பெறவேண்டும் ? ஆன்மா அழியாதது. ஆனால் இந்த உடல் அழியக் கூடியது .நாம் இறப்பு என்று கூறுவது இந்த உடலுக்கு மட்டுமே....

 பெயரை நீக்கி பிணம் என்று பெயரிட்டு இன்னார் என்ற அடையாளம் எல்லாம் முடிந்து பிணம் என்று நாம் பெற்ற பிள்ளைகளும் உற்றாரும் கூறுவர் அந்த இன்னார் என்பது அந்த உடலா ? அல்லது அந்த உடலில் ஒட்டியிருந்த உயிரா ? உடல் இங்கே இருக்கிறது சரி அந்த உயிர் (ஆன்மா) எங்கே சென்றது அதன் பிறகு அந்த உயிர் எனும் ஆன்மா என்ன செய்யும்? எங்கு செல்லும் ? அதன் அடுத்த படி என்ன? 

* ஆன்மாவானது இந்த பிறவியில் தான் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப (வினை) அடுத்த பிறவியோ அல்லது முக்தியோ (பிறவாத நிலை) என்று ஏதாவது ஒரு நிலைக்கு செல்லும். 

* பிறக்கும் நிலை என்று பார்த்தால் நம் வினைக்கு ஏற்றாற்போல கல் புல் புழு பூச்சி மரம் பறவை பாம்பு மனிதர் பேய் தேவர் கணங்கள் முனிவர் அசுரர் என்று எதாவது ஒரு உடல் நமக்கு கொடுக்கப்படும் இதை மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகிறார் இதில் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் (சலிச்சுபோச்சு ) என்று கூறுகிறார்...

 அதனால் சிவபெருமானே உன் திருவடிகளை பிடித்தால் வீடு பேறு கிடைக்கும் என்று கண்டு கொண்டேன் என் ஆன்மா உய்வு பெற எனக்கு முக்தி எனும் வீடுபேற்றை கொடுத்து கடைத்தேற்று என வேண்டுகிறார் அப்பர் சுவாமிகளோ புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் வேண்டும் என்று கேட்கிறார்....

 இன்னும் மேலே சென்று இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ என்று இறைஞ்சுகிறார் அப்படி மீண்டும் ஒருமுறை மனிதபிறவி கொடுத்தால் குனித்த புருவமும் என்று தொடங்கி இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணவேண்டும் என்கிறார் ஏனெனில் இம்மனிதப் பிறவிஅவ்வளவு மகத்துவம் உள்ளது பிரம்மன் இந்த உயிரை படைத்து படைத்து சலித்து போனானாம் மாதா பிரசவித்து உடல் சலித்தாளாம்....

* பிறவாத நிலை என்றால் வீடுபேறு எனும் முக்தி. அதற்கு நாம் புண்ணியம் செய்ய வேண்டும். இறைவனை மகிழ்விக்க வேண்டும் எப்படி? பிரமாண்டமாக ஆலயம் கட்டுவதா? மிகப்பெரிய யாகம் செய்வதா? அபிஷேகம் செய்வதா? எதுவும் அவர் கேட்க வில்லை, சாதாரணமாக புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு ஆமாம் பூஜை செய்து இறைவனை வழிபட இது போதும்...

 விருப்பு வெறுப்பு என்ற நிலை கடந்த ஈசனுக்கு ஒரு சிறு விருப்பம் உண்டாம் என்னவென்றால் ஆன்மாக்கள் தன்னை பூஜை செய்து உய்வு பெறவேண்டும் என்று அதற்கு முன்னுதாரணமாக குழந்தையின் நோய் தீர தாய் மருந்து உண்ணுவது போல உலக உயிர்கள் யாவும் சிவனை அறிந்து பூசித்து உய்வு பெரும் பொருட்டு உலகத்தாய் உமை அம்மை ஆகமங்களை எல்லாம் இறைவரிடம் கேட்டு அவற்றில் விதித்த படி பூசித்தருளினார்.

* சூரசம்காரம் செய்யும் முன் தேவர்களுக்கு முருகப்பெருமான் திருசேய்ங்கலூரில் சிவ பூஜை செய்து காட்டினார் அவர் தேவ சேனாபதி அல்லவா ?தலைவர் அல்லவா? அவர் பூஜை செய்த பிறகு தேவர்களிடம் கேட்டார் உங்கள் கஷ்டத்துக்கு காரணம் என்ன தெரியுமா ? என்றார் ...

நீங்கள் சிவபூஜை செய்ய மறந்ததால் என்றுகூறி சிவாம்சமான முருக பெருமான் சிவபூஜை செய்து காட்டினார் தலைவன் என்பவன் தான் காட்டிய வழியில் தானே நடந்து காட்ட வேண்டும் என்று தலைவனுக்கான இலக்கணத்தையும் உணர்த்தினார்.... 

* ஆதலால் ஆன்மீகம் என்பதாவது இறைவனை வணங்கி ஆன்மாவை உலகத் தளைகளில் இருந்து மீட்டு எடுக்கும் செயலாகும்.....

#மகேஷ்வரன் அருளோடு ....

#ரமணர் திருவடிகளே
சரணம் சரணம் ....

ருத்திராட்சம் பற்றிய அனைத்து விதமான சந்தேகங்களையும் இப் பதிவு தீர்த்து வைக்கும்....முழுமையாகப் படித்துவிட்டு....அர்த்தமுடன்"அணியுங்கள்......

_ருத்திராட்சம்_


ருத்திராட்சம் பற்றிய அனைத்து விதமான சந்தேகங்களையும் இப் பதிவு தீர்த்து வைக்கும்....
முழுமையாகப் படித்துவிட்டு....அர்த்தமுடன்"அணியுங்கள்......

ருத்திராட்சம் பற்றிய சித்தர் பெருமக்களின் பாடல்களில் கூறப் பட்டுள்ள தகவல்....
வடமொழியில் ருத்ராக்ஷம் என்பதற்கு “ருத்திரனின் கண்கள்” என்பதாக பொருள் கூறப்படுகிறது. ருத்திரன் என்பது சிவனை
குறிக்கிறது. “ganitrus” என்ற மரத்தின் பழத்தில் இருந்து பெறப்படும் கொட்டைதான் இந்த உருத்திராட்சம். இந்த மரங்கள் உலகின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.

நேப்பாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே
தரத்தில் உயர்ந்தனவாக கருதப் படுகிறது..!
இயற்கையில் உருத்திராட்ச மணி செம்மையும், கருமையும் கலந்தேறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். கடையில் விற்பனைக்கு கிடைக்கும் மணிகள் பெரும்பாலும் மெருகேற்றப்பட்டும்,
சாயமேற்றப் பட்டிருக்கும். .!

#ருத்ராட்ஷத்தின் - மகிமை! #ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம்.
அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும்

#யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?

ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

*சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.*
ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.

#சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?

ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது).,

#பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330)
பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!.
எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

#எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?

பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான்
அணிந்திருக்கின்றனர்.
அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே?
இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும்.
*ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.*

#ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது.
இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது.

சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.
ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும்.
ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை.
*நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.*

#நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு,
கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?

முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது.
நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். ..
இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது....

#ருத்ராட்ஷத்தில் எத்தனை முகம் ?
#யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?

ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான்.
எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து.
பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து.
ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.
ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம்.
ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

ஒன்றிலிருந்து பதினான்கு முகங்கள் உடைய ருத்திராக்க்ஷங்களும் கிடைக்கின்றன ....
ஒரு முகம் கொண்ட ருத்ராக்க்ஷம்
***********************************
இதை அடைவது மிக கஸ்டமாகும் .இது பகவான் சங்கரனின் திருப்பிறப்பாக இது கருதப்படுகிரது இதை ஒரு பாா்வை பாா்த்தாலும் அல்லது ஒரு முறை இதை தொட்டாலும் , உங்களது பாவங்களை எல்லலாம் நீங்கள் இழப்பிா்கள் இதை அணிந்தால் ,சிவ தத்துவம் எங்கும் பரவியுள்ளதை ஒருவா் உணர முடியும் ஒருவா் அவரது விருப்பங்கள் பூா்த்தி அடைந்து மோச்சத்திருக்கான வழியை காணுவாா்.

இரண்டு முகங்கள்
********************
இரண்டு முகம் கொண்ட மணிகள் மிகவும் அபூா்வமானவை இதுவும் அதிகம் கிடைக்காது அதனால் விலை கூடுதலாக இருக்கும் இது சிவனும் சக்தியும் கூடிய அா்த்த நாாிஸ்வரா் ஸ்வரூபமாகும் இதன் கிரகம் சந்திரன் இதனை அணிவதால் விலங்குகளைக் கொன்ற கொலை பாவம் போகும் ,கொடும் பாவமான ,பசுவைக் கொன்ற கோஹத்தி தோஷம் கூட விலகிவிடும் இதை அணிபவா்கள் செல்வம் ,சந்தோசம் ,மன அமைதி,மனதை ஒருமுகப்படுத்துதல் ,குண்டலினியை (பாம்பு சக்தி) எழப்புதல் ஆகியவற்றைப் பெறுவாா்கள்,

மூன்று முகங்கள்:,
*******************
மூன்று முகம் கொண்ட மணிகளும்"அாிதானது சாதாரணமாகக் கிடைப்பதில்லை ,இதுவும் விலை கூடுதலானதே இது "சோம சூரிய அக்கினி" எனும் சிவனின் முக்கண் வடிவானவை. சூரியன்,சந்திரன், அக்கினிதேவன் முவருமே இதற்கு அதிபதிகள் இதன் கிரகம் அங்காரகன் எனும் செவ்வாய் இதனை அணிவதால் பெண்களைக் கொன்ற பஹு ஹத்தி 
தோஷம் கூட விலகும் ,பலவகை பாவங்கள் எாிந்து சாம்பலாகும் ,மேலும் இதனை அணிந்தவன் அண்மீகத்தில் மிக உயா்ந்த நிலைகளை எளிதாக அடைவான் சிவன் மகில்வாா் அக்கினி தேவன் அருள் தருவாா்.

நான்கு முகங்கள்:
*******************
இது பிரும்மாவைக் குறிப்பதாகச் சொல்ப்படுகிறது .இதை அணிந்தால் பக்தி ,செல்வம்,மகிழ்ச்சி,மோஷம்,ஆகியவற்றைப் பெறலாம் . இருள் அழிக்கப்பட்டு.அறிவுக்கூா்மை என்னும் வெளிச்சம் பிராசிக்கிறது போின்பத்தை அடையலாம்.இதன் கிரகம புதன் இதனை அனைத்த்து துறைகளிலும் உள்ள படைப்பாளிகள் அணியலாம் 
கல்வி , கலைதிறன்,நுண்கலைகள் வளா்ச்சிபெறும்

ஐந்து முகம் கொண்ட மணிகள்
**********************************
சாதாரணமாக கிடைப்பவை, விலை குறைவானவை இது காலாக்கினிருத்திர ஸ்வரூபம் "உடையது அகோரம், தத்புருஸ்ம்,வாமதேவம்,சத்யோஜாதம்,ஈசானம் எனும் சிவனின் ஜந்து முகங்கள் இதற்க்கு அதிதேவதைகள்.இதன் கிரகம் குரு இதனை அணிவதால் மாமிசம் முதலான உண்ணத்தகாத உணவுகளை உண்ட பாவம் தீரும் . பலவகை பாவங்கள் நசிந்து,சிவசாரூபம் கிகை்கும் உண்ணும் உணவில் உள்ள விஷக் குற்றங்கள் விலகும்.

ஆறுமுகம் :
************
ஆறுமுகம் கொண்டமணிகள் அதே போல் ஆறு முகங்கள் கொண்ட ஷண்முகா் வடிவானவை.இதன் கிரகம் சுக்கிரன் இவ்வகை மணிகளை ஆணிந்து கொண்டால் தமிழ்க் கடவுளான முருகன் அருள் பெருகும் பிராம்மணா்களை கொன்ற பழி பாவங்கள் நிங்கி அனைத்திலும் வெற்றி கிட்டும் புகழ் பெருகும் புத்தி தெளிவும் மெய்ஞானமும் பாாிசுத்தமும் வாய்க்கும்.

ஏழு முகம்:
***********
ஏழ முகங்கள் கொண்ட மணிகளும் மிக அாிதானவை பிரம்மதேவன் கட்டளையினால்,கீழேழ உலகங்களை அதலம்,விதலம்,சுதலம்,தராதலம்,ரசாதலம்,மஹாதலம்,எனும் சப்பதலோகங்களைில் உள்ள நாகா்களின் தலை னாக இருந்து ஆயிரம் தலைகளோடு கூடிய பூமியைதாங்கிய ஆதிசேஷன் அம்சமானவை இ்வகை மணிகளை .அணிவதால் பசுக்கொலை செய்த கோஹத்தி பாவமும் போகும் .
பிறா் பொன் பொருளைத் திருடிய பாவங்கள் விலகும் சப்த்தமாதாக்களின் சப்த கன்னிகளின் பேரருள் கிட்டும்.நாதோஷங்கள் நிவா்த்தியாகும் . கல்வி,நுன்கலைகள் மேம்படும் யோகசக்திகள் கைவரும்.சிலா் சப்தமாதா்களும் சப்த்தகன்னிகளும் கூட இதற்கு பிரதிதேவதை என்பாா்கள்.

எட்டு முகம்:
************
எட்டு முகம் கொண்ட மணிகளும் அாிதானவை எளிதில் கிடைக்காதை இ்வ் வகை மணிகள், பல்லாளேச கணபதி,வரத கணபதி,சிந்தாமணி கணபதி,மயூரேச கணபதி,சத்தி கணபதி ,மஹா கணபதி,என்று அஷ்ட கணபதி ஸ்வரூபபானவை.
இதன் கிரகம் ராகு.இதனை அணிந்து கொண்டுடால் அஷ்ட வசுக்களின் ஆசிகள் கி்ட்டும்.குருவை கொண்று குருபத்தினியைத் தீண்டிய கொடும் பாவங்களும் விலகி புண்ணியம் ஏற்படும் பொன் திருடிய குற்றங்கள் நீங்கும் அஷ்டமாசித்திகளும் வாய்க்கும் அஷ்ட லஷ்மிகளின் அருள் கி்ட்டும் பல வகையில் வரும் காாியத் தகைள் அகலும் கங்கை தேிவி மகிழ்ந்து அருள் புாிவாள்.

ஒன்பது முகம்:
***************
ஒன்பது முகம் கொண் மணிகள் கூட அவ்வளவாக கிடைப்பதில்லை கைலை மலையின் எண்திசைகளிலும்காவல் புாியும் தேவதைகளான அசிதாங்க பைரா்,ருருபைரவா்,சண்டபைரவா்,குரோதபைரவா்,உன்மத்தபைரவா்,கபாலபைரவா்,சம்ஹரபைரவா்,என்ற அஷ்ட பைரா்களின் உற்பத்திக்கு மூலகாரணன் ஆன மஹா பைரவா் ஸ்வரூபமானவைகளே இந்த ஒன்பது மகம் கொண் ருத்திராக்க்ஷமணிகள் இதன் கிரகம் கேது இதனை அணிவதால் பில்லி சூனியம் விலகும் பலவகை கொலை பாவங்கள் பாம்புகளால் வரும் துன்பங்கள் நீங்கும் நவக்கிரஹ பீடைகள் விலகி ,நவசக்திகளின் பேரருள் கிட்டும் சித்தி முக்தி எற்படும் (இடது கை மணிக்க்டில் அணிக.

பத்து முகம்:
*************
பத்து முகம் கொண்ட மணிகள் அாிதானவை.இம் மணிகள் மத்ஸ்ய, 
கூா்ம,,நிசிம்ம,வாமன,பரசுராம,ராம,பலராம,கிருஸ்ண,கல்கி,அதாரங்களின் நாயகனான விஷ்னு ஸ்வரூபமானவை இவற்றை அணிவதால் பூத,பிரேத,பைசா,பிரம்மராக்ஷசா்களால் ஏற்ப்படும் ஆபத்துகள் விலகும் ஏவல் பில்லி சுணியங்கள் வலுவிழந்து போகும்,பலவகையான பீடைகளிலிருந்து காப்பாற்றப் படுவீா்கள் . மிருகங்களால் வரும் ஆபத்துகள் விலகும்

பதிணோரு முகம்,
******************
பதிணோரு முகம் கொண்ட மணிகளும் அபூா்மானவை எளிதில் கிகை்காதவை இவ்வகை மனிகள் ,மஹாதேவன்,அரன்,ருத்திரன்,சங்கரன்,நீலோஹிதன்,ஈசானன்,கபாலி,சௌமியன் என்ற எகாதச ருத்திரா்களின் அம்சமானவை. இவற்றை அணிந்து கொண்டால்,பலவகை உயிாினங்கள் ,பறவைக் என பிராணிகளை கொன்ற பாவம் நீங்கும் வேதாகமங்களில் கூறப்பட்டுள்ள அஸ்வமேதாயகம் முதலான அனைத்துவிதமான யாகங்களையும்,விரதங்கள் பூஜை பண்ணியம் வரும் ,சிவஞானம் சித்திக்கும்
*****************************************************************

#நம்முடைய புராதன மருத்துவ நூல்களில் சிறப்பாக சொல்லப்பட்ட இருபத்தேழ நக்ஷத்திரங்கள் பிறந்தவா்கள் அணிய வேண்டிய 
ருத்ராட்சம்.....!

1,அஸ்வினி = 9_2_3 முகம்

2,பரணி = 6 முகம்

3,காா்த்திகை = 1_3_11_12 முகம்

4,ரோகிணி - 2_3 முகம்

5,மிருகசீாிடம் = 3 முகம்

6,திருவாதிரை = 8_5_11 முகம்

7,புணா்பூசம் = 5 முகம்

8,பூசம் = 7 முகம்

9,ஆயில்யம் = 4 முகம்

10,மகம் = 9_2_3 முகம்

11,பூரம் = 6 முகம்

12,உத்திரம் = 1_3_11_12 முகம்

13,ஹஸ்தம் = 2_3 முகம்

14,சித்திரை = 3 முகம்

15,சுவாதி = 8_5_11 முகம்

16,விசாகம் = 5 முகம்

17,அனுஷம் = 7 முகம்

18,கேட்டை= 4 முகம்

19,மூலம் = 9_2_3 முகம்

20,பூராடம் = 6 முகம்

21,உத்திராடம் = 1_3_11_12 முகம்

22,திருவோணம் = 2_3 முகம்

23,அவிட்டம் = 3 முகம்

24,சதயம் = 8_5_11 முகம்

25,பூரட்டாதி = 5 முகம்

26,உத்திரட்டாதி = 7 முகம்

27,ரேவதி = 4 முகம்
********************************

#ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்ட பலன்கள் ?

நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது.
ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.
இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 4 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

#ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்...
அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர்.
இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார்.

மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும்.

ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே...!!!
**********************

இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?

உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்?
ஆனால் ருத்ராட்சம் அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம்.

ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது....
அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் ருத்ராட்சம் அணிந்து 
அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்...!
ஓம் நமசிவயநம
ஓம்....
ஷிவஷம்போ....

நன்றி

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் எந்த எந்த மாத பெளர்ணமிக்கு எப்படி அம்பிகை வழிபட வேண்டும்?

****** பெளர்ணமி வழிபாடு ******

அம்பிகை வழிபாட்டிற்கு பௌர்ணமி தினம் மிகவும் சிறப்பான நாளாகும். அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். வேண்டியது வரமாக கிடைக்கும் பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் எந்த எந்த மாத பெளர்ணமிக்கு எப்படி அம்பிகை வழிபட வேண்டும்? என்ன நைவேத்தியம் படைக்க வேண்டும்? அப்படி வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும்? வாருங்கள் காணலாம்....

* சித்திரை மாதம்:

நட்சத்திரம்:
சித்திரை நட்சத்திரம்.

வழிபடும் முறை:
சித்திரை மாத பௌர்ணமியன்று அம்பாள் திருவுருவ படம் அல்லது சிலையில் பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, தங்களால் முடிந்தவர்கள் பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவித்து வழிபடலாம்.

நைவேத்தியம்:
மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பலன்:
இந்தப் பூஜை செய்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி என்றால் மிகவும் விசேஷம்.

* வைகாசி மாதம்:

நட்சத்திரம்:
விசாக நட்சத்திரம்.

வழிபடும் முறை:
வைகாசி பௌர்ணமியில் அம்மனுக்கு நீலநிற ஆடையும்  தங்க ஆபரணமும் அணிவித்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.சந்தனாபிஷேகம் செய்வது சிறப்பு.

நைவேத்தியம்:
எலுமிச்சை சாதம், சீரகமும், சர்க்கரையும் கலந்த சாதம், விளாம்பழம் இவற்றை அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

பலன்:
இப்பூஜையால் பிறவி எடுக்காத புண்ணிய கதி அடையலாம். வைகாசியில் விசாக நட்சத்திரத்துடன் கூடிய வைகாசி விசாகமும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.

* ஆனி மாதம்:

நட்சத்திரம்:
மூல நட்சத்திரம்.

வழிபடும் முறை:
ஆனி மாத பௌர்ணமியில் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவிக்க வேண்டும். வெள்ளெருக்கம்பூ, செண்பகப்பூ இவற்றால் அர்ச்சனை செய்யவேண்டும்.

நைவேத்தியம்:
முக்கனிகளையும், உளுத்தம் பருப்பு சாதத்தையும் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

பலன்:
இந்த வழிபாட்டின் மூலம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறலாம். ஆனி மாதப் பௌர்ணமியில் சுமங்கலிகள் சாவித்திரி விரதம் அனுஷ்டித்து மாங்கல்ய பலம் அடையலாம்.

* ஆடி மாதம்:

நட்சத்திரம்:
உத்திராட நட்சத்திரம்.

வழிபடும் முறை:
ஆடி பௌர்ணமியில் சிவப்பும், மஞ்சளும் கலந்த ஆடை சார்த்தி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்தல் வேண்டும். பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அறுகம்புல்லாலும் அர்ச்சிப்பது சிறப்பு வாய்ந்தது.

நைவேத்தியம்:
அன்றைய தினம் அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்வது சிறப்பானதாகும்.

பலன்:
ஆடிமாத பூஜையால் புண்ணிய கதி கிட்டும். ஆடி மாதத்தில் வடநாட்டில் சாவித்திரி விரதம், கோபத்ம விரதம் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.

* ஆவனி மாதம்:

நட்சத்திரம்:
அவிட்ட நட்சத்திரம்.

வழிபடும் முறை:
ஆவணி மாத பூஜையில் நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி தங்களால் முடிந்தவர்கள். வைடூரிய ஆபரணம் அணிவிக்கலாம்.

நைவேத்தியம்:
நாட்டுச் சர்க்கரையால் அபிஷேகம் செய்து, நெய் சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். 
பலன்:
இந்த பூஜை செய்வதன் மூலம் கடன் தொல்லைகள் தீர்ந்து நன்மை பெறலாம். ஆவணி பௌர்ணமியில் ரட்சா பந்தனமும் விசேஷமானது.

* புரட்டாசி மாதம்:

நட்சத்திரம்:
உத்திரட்டாதி நட்சத்திரம்.

வழிபடும் முறை:
புரட்டாசி பௌர்ணமியன்று அம்மனுக்கு நான்கு வண்ணங்களில் ஆடையும், பிரவாளரத் தினக்கல் ஆபரணமும் அணிவித்தல் வேண்டும். மல்லிகைப் பூவால் அர்ச்சிப்பது சிறப்பானது.

நைவேத்தியம்:
இளநீர்.

பலன்:
இந்த பூஜையின் பலனாக சகல சௌபாக்கியங்களும் கிட்டும். புரட்டாசி பௌர்ணமியில் உமாமகேஸ்வர விரதமும் மேற்கொள்வது சிறப்பானது.

* ஐப்பசி மாதம்:

நட்சத்திரம்:
அசுவினி நட்சத்திரம்.

வழிபடும் முறை:
ஐப்பசி பௌர்ணமியில் அம்பிகைக்கு இந்திர நீல நிறக்கல் ஆபரணம் அணிவிக்க வேண்டும். எந்த நிறத்தில் வேண்டுமானாலும் ஆடை சார்த்தலாம். அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்து மகிழம்பூ, வில்வம், பாதிரிப்பூ ஆகியவற்றால் அர்ச்சிக்க வேண்டும்.

நைவேத்தியம்:
மிளகு சாதம், கரும்புச்சாறு இவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பலன்:
இந்த பூஜை செய்வதன் மூலம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.பலர் ஐப்பசி பௌர்ணமியில் லட்சுமி விரதமும் மேற்கொள்வார்கள்.

* கார்த்திகை மாதம்:

நட்சத்திரம்:
கிருத்திகை நட்சத்திரம்.

வழிபடும் முறை:
கார்த்திகை மாத பௌர்ணமியன்று பூப்போட்ட ஆடையும், பூ மாலையும் அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

நைவேத்தியம்:
வெண் பொங்கல், நெய் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பலன்:
வேண்டியது நிகழும் அனைத்து நலன்களையும் பெற்றுத் தரும் பூஜையாக இது நம்பப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமியில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

* மார்கழி மாதம்:

நட்சத்திரம்:
திருவாதிரை நட்சத்திரம்.

வழிபடும் முறை:
மார்கழி மாதம் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை உடுத்தி ஒற்றைப்படை எண்ணிக்கையில் நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். தாமரைப்பூவால் அர்ச்சித்தலும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தலும் சிறப்பானவை.

நைவேத்தியம்;
களி நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பலன்:
இப்பூஜை செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண அருளைப் பெறலாம். கஷ்டங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமியில் திருவாதிரை திருநாள் விரதத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

* தை மாதம்:

நட்சத்திரம்:
பூசம் நட்சத்திரம்.

வழிபடும் முறை:
தை மாத பௌர்ணமியன்று அம்மனுக்கு மஞ்சளும், சிவப்பும் கலந்த ஆடை அணிவித்தல் வேண்டும். தேன் அபிஷேகம் சிறப்பானது. வில்வம், வெள்ளை தாமரைப்பூ, நந்தியாவட்டை இவற்றால் அர்ச்சனை செய்தல் நற்பலனை தரும்.

நைவேத்திம்:
பாயசம்.

பலன்:
ஆயுள் விருத்தியை தரும் இந்த பூஜை. தை மாதப் பௌர்ணமியில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

* மாசி மாதம்:
மாசி மகம் என்ற இனிய நாளன்று.

வழிபடும் முறை:
வெள்ளை நிறம் கலந்த 5 வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி, ஸ்படிக மணியால் மாலை அலங்காரம் செய்ய வேண்டும்.

நைவேத்திம்:
சர்க்கரைப் பொங்கல் படையல் அம்பிகைக்கு ஏற்றது.

பலன்:
மாசி மாதம் மாசி மகத்தன்றும் தினத்தில் செய்யும் வழிபாடு சிவதீட்சை பெற்ற பலனை தரக் கூடியது.

* பங்குனி மாதம்:

நட்சத்திரம்:
பங்குனி உத்திரம்.

வழிபடும் முறை:
பங்குனி உத்திரம் அன்று மஞ்சள் நிற வஸ்திரம் சார்த்தி, கோமேதகம் பதித்த ஆபரணம் அணிவிக்கலாம். தயிர் அபிஷேகம் சிறப்பானது. தாமரைப்பூவால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

நைவேத்திம்:
பருப்பு மற்றும் நெய் சேர்த்த சாதம் நைவேத்தியம் செய்தலும் சிறப்பானது.

பலன்:
திருமண பாக்கியம் கிட்டும். இந்த பூஜையின் மூலம் புண்ணிய கதி அடையலாம்.

வீட்டில் அம்மன் சிலை வைத்து வழிபடுபவர்கள் அபிஷேகம் செய்யலாம். இல்லாதவர்கள்  அம்மன் திருவுருவ படம் வைத்து வழிபடலாம். ஒவ்வொரு மாத பௌர்ணமியையும் அம்பிகை வழிபட்டு துன்பங்கள் , துயரங்கள் நீங்கி உமையன்னை  அருளும் நலமும் பெறுவோம்
குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

தமிழ்மாதங்களும் பௌர்ணமியும்

🌹பௌர்ணமி பூஜை🌹

பௌர்ணமி பூஜை என்பது இந்து சமய கோயில்களிலும், இந்து சமயத்தினர் வீடுகளிலும் கடைபிடிக்கப்படும் விழாவாகும். இப்பூசையைச் செய்தால் மாங்கல்ய பாக்கியமும் (திருமணம்), மாங்கல்யம் நிலைக்கும் (கணவன் உயிருடனுடம் நலமுடனும் இருப்பான்) எனவும் நம்பப்படுகிறது. இந்து சமயத்தில் இன்றும் நிலவுகின்ற இயற்கை வழிபாடுகளில் இந்த பௌர்ணமி பூசையும் ஒன்றாகும். இந்நாளில் சந்திரனிலிருந்து அதிகப்படியான வெளிச்சம் பூமிக்கு கிடைக்கிறது. இந்த காரணத்தினால் பௌர்ணமி நாட்களில் இரவுகளை மக்கள் கொண்டாடியுள்ளார்கள். அருகிலிருக்கும் நீர்நிலைகளின் கரைகளில் சென்று பொழுதினை கூடி ஒன்றாக கழிப்பதிலும், வீடுகளிலிருந்து வெளிவந்து மக்கள் கூடி கொண்டாடவும் இந்த வெளிச்சம் பயன்பட்டுள்ளது. பண்டைய வழிபாட்டின் நீட்சியாக இன்றும் இந்து சமயத்தினர் இந்த விழாவினை கொண்டாடுகிறார்கள்.

🌹 பௌர்ணமி விரதம்🌹

பௌர்ணமி நாளில் காலையில் எழுந்ததிலிருந்து உண்ணா நோம்பிருந்து, பௌர்ணமியை பூசையை முடித்த பின்பு உண்ணுதலை பௌர்ணமி விரதம் என்கிறார்கள். வருடத்திற்கு 12 நாட்கள் இவ்வாறு பௌர்ணமி விரதம் இருக்க நேரிடும்.

🌹 தமிழ்மாதங்களும் பௌர்ணமியும்🌹

🌹 தமிழ்மாதங்கள் ஒவ்வொன்றில் பௌர்ணமி வருகையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பொதுவாக தமிழ்மாதங்களில் வருகின்ற பௌர்ணமி சில நட்சத்திர நாட்களில் வருமென கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பு சில நேரங்களில் தவறுகிறது.

🌹 சித்திரை மாதம் - சித்திரை நட்சத்திரம்

🌹 வைகாசி மாதம் - விசாக நட்சத்திரம்

🌹 ஆனி மாதம் - மூல நட்சத்திரம்

🌹 ஆடி மாதம் - உத்திராட நட்சத்திரம்

🌹 ஆவனி மாதம் - அவிட்ட நட்சத்திரம்

🌹 புரட்டாசி மாதம் - பூரட்டாதி நட்சத்திரம்

🌹 ஐப்பசி மாதம் - அசுவினி நட்சத்திரம்

🌹 கார்த்திகை மாதம் - கிருத்திகை நட்சத்திரம்

🌹 மார்கழி மாதம் - மிருகசீரிஷம்/ திருவாதிரை நட்சத்திரம்

🌹 தை மாதம் - பூச நட்சத்திரம்

🌹 மாசி மாதம் - மக நட்சத்திரம்

🌹 பங்குனி மாதம் - உத்திரம் நட்சத்திரம்

🌹 திருவிழாக்கள்

சித்திரை மாதம் - சித்ரா பௌர்ணமி

வைகாசி மாதம் - வைகாசி விசாகம்

ஆனி மாதம் - சாவித்திரி விரதம்

ஆடி மாதம் - சாவித்திரி விரதம், கோபத்ம விரதம்

ஆவனி மாதம் - ரட்சா பந்தனம் ஆவணி அவிட்டம்

புரட்டாசி மாதம் - உமாமகேஸ்வர விரதம்

ஐப்பசி மாதம் - சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா

கார்த்திகை மாதம் - கார்த்திகை தீபத் திருவிழா

மார்கழி மாதம் - திருவாதிரை விரதம்

தை மாதம் - தைப்பூசம்

மாசி மாதம் - மாசி மகம்

பங்குனி மாதம் - பங்குனி உத்திரம்

Friday, September 2, 2022

சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன்🌹🌿

🌹🌿சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன்🌹🌿 

🌹🌿மேல்மலையனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்தது. இந்த ஆலயத்தில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை அங்காளபரமேஸ்வரி விளங்குகிறாள். மயானத்தில் வீற்றிருந்து பக்தர்களை பிடித்திருக்கும் பேய், பிசாசு மற்றும் பில்லி சூனியம் ஆகியவற்றை முறியடித்து அருளாட்சி புரிந்து வரும் அங்காளபரமேஸ்வரியின் வரலாறு சிவனோடு தொடர்புடையது.

🌹🌿ஆதிகாலத்தில் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷத்தை நீக்கும் பொருட்டு தோன்றியவர் அங்காளம்மன். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி அன்று சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாக ஐதீகம். 

🌹🌿இதற்கு ஒருபுராணக்கதை உண்டு. சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பதை போல், தனக்கும் 5–வது தலை வேண்டும் என்று நினைத்தார் பிரம்மதேவர். 

🌹🌿ஆகவே சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வரம் கேட்டு பெற்றுக்கொண்டார். இதனால் பிரம்மாவுக்கும் 5 தலைகள் இருந்தது. ஒருநாள் பிரம்மா கர்வத்துடன் கயிலாயத்துக்கு சென்றார். பிரம்மதேவனை கண்ட பார்வதி, சிவபெருமான் தான் வந்துவிட்டார் என்று நினைத்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கி பூஜை பொருட்களை சமர்ப்பித்தார். பின்னர் பிரம்மாவின் முகத்தை பார்த்து உண்மை நிலையை தெரிந்து கொண்ட பார்வதி ஆத்திரம் அடைந்தாள். பிரம்மாவை நோக்கி உன் ஒரு தலை அழியக்கடவது என்று சாபம் இட்டார். மேலும் நடந்ததை சிவனிடமும் கூறினார் பார்வதி. பரமசிவன் தன் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒரு தலையை வெட்டினார். ஆனால் வெட்டப்பட்ட இடத்தில் புதிய தலை முளைத்தது. சிவன் தலையை வெட்டுவதும் அந்த இடத்தில் புதிய தலை முளைப்பதுமாக இருந்தது. இந்த புதிரை சிவபெருமானால் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் வெட்டப்பட்டு கீழே கிடந்த பிரம்மாவின் தலைகளை ஒரு கயிற்றில் கோர்த்துக்கட்டி அதை தன் கழுத்தில் மாலையாக சிவன் அணிந்து கொண்டார். 

🌹🌿அதன்பிறகு பிரம்மனின் தலையை வெட்டி அதை கீழே போடாமல் தன் கையிலேயே வைத்துக்கொண்டார். இப்போது பிரம்மனின் தலை வெட்டப்பட்ட இடத்தில் புதிய தலை முளைப்பது நின்றுவிட்டது. ஆனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து விட்டது. பிரம்மாவின் ஒரு தலை அழிந்து விட காரணமாக இருந்த பார்வதியிடம் கோபத்தோடு வந்தாள் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. ‘பார்வதி! இனி நீ அழகுமிக்க ஆடைகளை அணியக் கூடாது. அதற்கு பதிலாக கொக்கு, சிறகு, மயில் தோகைகளை அணிந்து பூமியில் புற்றாக இருக்க வேண்டும்’ என்று சாபமிட்டாள். 

🌹🌿அதன்படி பார்வதிதேவி உருவம் மாறி,  திருவண்ணாமலை வழியாக மேல்மலையனூர் வந்து புற்றாக அமர்ந்தாள். இந்த சூழ்நிலையில் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு வடகயிலாயம் நோக்கி சென்ற சிவன், மேல்மலையனூரில் அங்காளம்மன் 4 ஆயிரம் நோய்கள், பில்லி–சூனியம் ஆகியவற்றை தீர்த்து வைப்பதை அறிந்து மேல்மலையனூர் வந்தார். அங்காளம்மன் கோவில் முன்வந்து ‘அரகரா! அன்னதான பிச்சை’ என்று உரக்க சத்தம் போட்டார். இந்த சத்தம் அங்காளம்மன் காதில் விழுந்தது. உடனே அவர் மனம் மகிழ்ந்தார். யாசகம் கேட்கும் கணவருக்கு எதை வழங்குவது என்று யோசித்தார். அப்போது சிவனுக்கு எதை வழங்குவது என்று மகாவிஷ்ணு யோசனை கூறினார். ‘அம்பிகையே! உன் கணவருக்கு எது சாப்பிடக் கொடுத்தாலும் அதை அவரது கையில் உள்ள கபாலம் சாப்பிட்டு விடும். ஆதலால் நீ உலகத்தில் உள்ள பயிர் பட்சணங்களை எல்லாம் வரவழைத்து உணவாக சமைக்க வேண்டும். 

🌹🌿பின்பு அதை 3 கவளமாக தயார் செய்ய வேண்டும். இரண்டு கவளத்தை உன் கணவர் கையில் உள்ள கபாலத்தில் போட வேண்டும். 3–வது கவளத்தை கபாலத்தில் போடுவதை போல் நடித்து அதை கைதவறி கீழே போடுவதை போல் தரையெங்கும் சிதறிவிட வேண்டும். சாதத்தின் ருசி அறிந்த கபாலம் அதை பொறுக்க பரமசிவன் கையில் இருந்து கீழே இறங்கும். அப்போது நீ பெரிய உருவெடுத்து அதை காலால் நசுக்கிவிடு. அந்த நேரத்தில் உன் கணவரை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகி விடும்’ என்றார். 

🌹🌿அன்னையும் மிக மகிழ்ந்து திருமால் கூறிய யோசனைப்படி செயல்பட்டார். சாதம் தயாரானது. உடனே அங்காளி, மூத்த பிள்ளை விநாயகரை அழைத்து விஷயத்தை சொல்லி, ‘உன் தந்தையை அக்னி குளத்தில் குளித்து வரச்சொல்’ என்று கூற, சிவனும் அதன்படி அக்னி குளத்தில் தீர்த்தமாடி கோவிலுக்கு வந்தார். அவருக்கு அங்காளம்மன் பாதபூஜை செய்து பணிவுடன் வரவேற்று உபசரித்தார். பிறகு கவள சாதங்களை எடுத்து வந்து ஒரு கவளத்தை சிவன் கையில் இருக்கும் கபாலத்தில் போட்டார். 

🌹🌿உடனே அதை கபாலம் சாப்பிட்டு விட்டது. 2–வது கவளத்தையும் போட அதையும் கபாலம் சாப்பிட்டது. 3–வது கவளத்தையும் உண்டு விட கபாலம் காத்திருக்க சாதத்தை தரை முழுவதும் வாரி இறைந்தாள் அங்காளம்மன். சாதத்தின் ருசிக்கு அடிமைப்பட்ட கபாலம், பரமசிவனின் கையில் இருந்து விருட்டென்று கீழே இறங்கி தரையில் சிதறிய அன்னத்தை பொறுக்கியது. அப்போது அங்காள பரமேஸ்வரி அகிலமே நடுங்கும் அளவு, மண்ணுக்கும் விண்ணுக்கும் வளர்ந்து நின்று, மிகுந்த சினத்துடன், அகோரவடிவில் கபாலத்தின் மீது ஓங்கி மிதித்தார். கபாலம் பெரும் கூச்சல் போட்டு, 

‘நீயார்? என்னை ஏன் மிதித்தாய்?’ என்று ஆக்ரோஷத்துடன் கேட்டது. 

🌹🌿அதைக்கேட்ட அன்னை, ‘கபாலமே! நீ இனி சிவனிடம் போக முடியாது. என் கீழ் தான் இருக்க வேண்டும். உனக்கு தேவையானவற்றை என்னிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்’ என்றாள். அதற்கு கபாலமும் உடன்பட்டது. இந்த நேரத்தில் பரமசிவனை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சுயநிலை வரப்பெற்ற பரமசிவன் ஆனந்த நிலை அடையப்பெற்றார். 

🌹🌿சிதம்பரம் சென்று ஆனந்த தாண்டவம் ஆடினார். அப்போதும் அங்காள பரமேஸ்வரியின் சினம் தணியவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்களும், 40 ஆயிரம் ரிஷிகளும் ஒன்று கூடி அங்காள பரமேஸ்வரியின் கோபத்தை தணிக்க தேர்த்திருவிழா நடத்தினர். அங்காளபரமேஸ்வரி கோபம் தணிந்து சிறிய உருவாக மாறி அந்த ரதத்தில் ஏறி அமர்ந்தார். உருமி மேளம் முழங்க மங்கள நாதம் இசைக்க வாணவேடிக்கை ஜாலம் காட்ட பிரமாண்டமான முறையில் தேர்த்திருவிழா நடைபெற்றது. சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது மகா சிவராத்திரியன்று தான் என்பதால் இக்கோவிலில் மகாசிவராத்திரியை தொடர்ந்து 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அப்போது மயானக்கொள்ளை, தேரோட்டம் நடைபெறும். புத்திசுவாதீனம் இல்லாதவர்கள், பில்லி, சூனியம், செய்வினை கோளாறு, ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து அக்கினி தீர்த்தத்தில் நீராடி அம்மனை வணங்கி நோய் நீங்கி அவர்கள் நலம் பெறுகின்றனர்.

🌹🌿விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் மேல்மலையனூர் அமைந்துள்ளது. செஞ்சியில் இருந்து வடதிசையில் 20 கி.மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 30 கி.மீட்டர் தூரத்திலும் மேல்மலையனூர் உள்ளது.

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவடிகள் சரணம் 🌹🙏🏻🌹

Followers

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் பலன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள எட்டு திசை லிங்கங்களே (அஷ்ட லிங்கங்கள்) நவகிரக தோஷங்...