Friday, December 9, 2022

_அகத்தியர் பூஜித்த சேலம் ஊத்துமலை சித்தர் சக்கரம்

_அகத்தியர் பூஜித்த  சேலம் ஊத்துமலை_



ஸ்தல மலை எனும் ஊத்துமலையில் சித்தர் அகத்தியர் பெருமான் மற்றும்  அவரின் மனைவி லோபமுத்திரா , போகர், போகரின் சீடர் புலிப்பாணி, ரேணுகர், கபிலர் என சித்தர்களின் தவம் செய்த இடமாகும்.

        ஸசரணம்த்யா- ஸ்ரீ சக்கரம்  உபாசனை பெற்ற பின்பு தம் கரங்களால் ஸ்ரீசக்கரம் அமைத்து பூசித்த அருமையான ஆலயம்..
ஒரே பாறை மீது புடைப்புச் சிற்பங்களாக மிக அழகாக செதுக்கப்பட்டுள்ள ஸ்ரீசக்ரம், சிவலிங்கம், நந்தி, ஆசிரமம், அகத்தியர், ரிசி பத்தினி, மற்றும் பல வகையான இயற்கைக் காட்சிகள். 

    கபிலர் தியான குகை: அகத்தியர், கபிலர் உள்ளிட்ட பல சித்தர்கள் தியானம் செய்த, பாறை நீர் ஊற்றுடன் கூடிய அமைதியான தியான குகை, கபிலர் தியான குகை

        தியான குகையில் அமாவாசை - பவுர்ணமி திதிகளில் அருமையான அனுபவங்களை பெறலாம்.. 
ஊத்துமலை சுமார் 2000 வருடங்களுக்கு மேல் உள்ளதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. 

அகஸ்தியர் இங்கு வந்து மலையை குடைந்து ஸ்ரீ சக்ரம்உருவாக்கியிருக்கிறார் அதோடு அவருடைய பத்னி லோபாமுத்ரா தேவியுடன் தான் இருப்பது போலவும் தண்ட கமண்டலுடன் வடிவமைத்திருக்கிறார்.
அகஸ்தியர் கபிலமுனி சுகபரம்ம ரிஷியும் வந்திருப்பதாக கல்வெட்டுகளில் உள்ளது.

 மேலும் சுகர் பிரம்ம ரிஷி இங்கு வந்த பிறகு சேலம் சுகவனேஸ்வரரிடம் வந்நிருந்து தன் சாபத்தை போக்கிக்கொண்டதாக சேலம் சுகவனேஸ்வரர் புராணம் கூறுகிறது. 

இவர்கள் தவிர சப்த ரிஷிகள் மற்றும் கரடி சித்தர் போகர் கன்வர் போன்ற மஹரிஷிகளும் இங்கு வந்து தவம் செய்து உள்ளார்கள் என்று  புராண கதையாக இங்கு சொல்கிறார்கள்.

 அதற்கு சான்றாக சப்த ஏழு வித ஊற்றுகளும் இந்த ஊத்துமலையில் உள்ளது அதனால்தான் இந்த மலைக்கு ஊத்து-மலை ஊத்துமலை என்று பெயர் வழங்கலாயிற்று. 
இந்த ஏழு ஊற்றுகளிலும் உள்ள தண்ணீர் நிறைந்த மருத்துவ குணங்கள் கொண்ட தண்ணீர் ஆகும். இந்த ஸ்ரீ சக்ர கோவிலுக்கு மேல் சென்றால் மலையின் உச்சி வரும் அங்கு பால சுப்ரமணியர்அருள்பாலிக்கிறார். மயிலை அரவணைத்து கொண்டு காக்ஷி தரும் முருகப்பெருமான்.  இந்த ஊத்துமவையில்மிகப்பெரிய கால பைரவர் சன்னதியும் 
உண்டு.

அகத்தியர் திருவடிகள் சரணம்....

பிரம்மபுரீஸ்வரர், கரவீரம், திருவாரூர்

பிரம்மபுரீஸ்வரர், கரவீரம், திருவாரூர்
 
திருமணமாகாத தேவலோகப் பெண்கள் ஒருமுறை கைலாசத்தில் சிவனையும் பார்வதியையும் வணங்கி, விரைவில் திருமணம் செய்து கொள்ள வரம் தேடினார்கள். பார்வதி பதில் சொல்லாமல், இறைவனைப் பார்த்தார். காவேரி நதிக்கரையில் (இந்தக் கிளை இப்போது வெட்டாறு) லிங்கத்தை நிறுவி, பெண்களை அங்கே வழிபடும்படி அறிவுறுத்தினார். எனவே, இக்கோயில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பிரார்த்தனை ஸ்தலமாகும். அந்த பக்தர்கள் அமாவாசை நாளில் இங்கு வழிபட்டு ஸ்தல விருட்சத்திற்கு நீராடினர்.

கௌதம முனிவர்

சிவபெருமான் கௌதம முனிவரை தான் நிறுவிய லிங்கத்தைப் பராமரிக்கும்படி பணித்தார். முனிவர் தனது கடமைகளை நேர்மையாகச் செய்தார், அதே நேரத்தில் தனது சொந்த தவம் செய்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவன், முனிவரிடம் ஒரு வரம் கேட்கச் சொன்னார், அதற்கு கவுதமர் பதிலளித்தார், தனது வாழ்நாளுக்குப் பிறகு, அவரது அஸ்தியை யாரும் பார்க்கக்கூடாது, மேலும் ஸ்தல விருட்சமாக இங்கு இருக்க விரும்புவதாக கூறினார். முனிவர் இங்கு ஜீவ சமாதி அடைந்தபோது, அவர் ஸ்தல விருட்சத்தில் இணைந்தார், இது பொன் அரளி (செவ்வரளி), இது கரவீரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இத்தலத்திற்கு அதன் பெயரைக் கொடுக்கிறது, மேலும் இங்குள்ள சிவபெருமான் கரவீரநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கௌதம முனிவருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.

இங்குள்ள மூலவர் – பிரம்மபுரீஸ்வரர் – பிரம்மாவால் வழிபட்டதால் இப்பெயர் பெற்றார்.

இங்கு ஒரு புராணம் உள்ளது, அதன்படி சிவபெருமான் கிராமத்திற்கு உலா சென்றுள்ளார், மேலும் சிவன் திரும்பி வருவதற்காக கோவிலின் மகா மண்டபத்தில் பார்வதி காத்திருப்பார். சிவன் மற்றும் பார்வதி இருவரும் கிழக்கு நோக்கியும், பார்வதி இறைவனின் வலப்பக்கமும் – இந்த சன்னதி அவர்களின் கல்யாண கோலத்தின் பிரதிநிதி என்பதை குறிக்கிறது.

இந்த இடத்துடன் தொடர்புடைய ஒரு கழுதையின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. இந்த கழுதை சிவபெருமானை தரிசனம் செய்ய கடும் தவம் செய்தது, ஆனால் முடியவில்லை. விரக்தியடைந்து, தன் வாழ்க்கையை

முடித்துக் கொள்ள முடிவு செய்து, நாகூர் வரை கடலில் மூழ்கடிக்கச் சென்றது, இறைவன் அதைக் கூப்பிட்டு இங்கிருந்து தரிசனம் கொடுத்தார்! இந்த கோவிலில் த்வஜஸ்தம்பம் இல்லை, குறைந்தபட்சம் பழைய நாட்களில், இந்த கோவிலுக்கும் நாகூருக்கும் இடையில் எந்த கட்டுமானமும் இல்லை, இது காகம் பறந்து செல்லும் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காரா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு கழுதை என்று பொருள், எனவே இங்குள்ள இறைவன் கரவீரநாதர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் ஒரு விளக்கம் உள்ளது.

சம்பந்தர் தாமதமாக இங்கு வந்து, ஒரு இரவு இங்கு தங்கி, மறுநாள் காலையில் கோயிலில் தனது பதிகம் பாடினார். பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் இங்கு வழிபடுவதால் பக்தர்களின் பாவங்கள் நிவர்த்தி செய்யப்படுவதைப் பற்றி பேசுகிறது. இதைத் தொடர்ந்து கரவீரத்தில் இரவு தங்கும் பக்தர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்குவதாக ஐதீகம். இக்கோயிலில் வழிபாடு செய்பவர்களுக்கு இனி எதிரிகள் இல்லை என்பதும் ஐதீகம்.

இந்த ஆலயம் சில கண்கவர் கட்டிடக்கலை மற்றும் உருவ அமைப்புகளைக் கொண்டுள்ளது. இறைவன் மற்றும் பார்வதி மூர்த்திகள் இரண்டும் மிகவும் உயரமானவை – 6 அடிக்கு மேல். இங்குள்ள அர்த்த மண்டபமும் மகா மண்டபமும் வவ்வால் நெத்தி வடிவமைப்பில் உள்ளன. இங்குள்ள விநாயகர் ராஜ கணபதி என்று அழைக்கப்படுகிறார் – ஒரு பெரிய மூர்த்தியும் இருக்கிறார்.

தொடர்பு கொள்ளவும் சரவண குருக்கள்: 97878 53460

Thursday, December 8, 2022

பிருங்கி முனிவர் வண்டாக மாறி சிவபெருமானை வழிபட்ட தலமான#திருவெண்டுறை எ

தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும் , 
பிருங்கி முனிவர் வண்டாக மாறி சிவபெருமானை வழிபட்ட தலமான
#திருவெண்டுறை என்ற
#திருவண்டுதுறை
#வண்டுறைநாதர் (மதுவனேஸ்வரர்) 
#வேனெடுங்கண்ணி அம்மன் (பிரகதாம்பாள்) திருக்கோயில் வரலாறு:

திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 112ஆவது சிவத்தலமாகும்.இத்தலத்தில்லுள்ள கருவறையில் தான் பிருங்கி முனிவர் சமாதி உள்ளது.

அத மீதுதான் வண்டுறைநாதர் லிங்கம் அமைய பெற்றுள்ளது,அதன் படி பிருங்கி முனிவர் தவமிருந்த மலையானது பிருங்கி மலையென்று அழைக்கப்படுகிறது. தற்போது இம்மலை பரங்கி மலை என்று அழைக்கப்படுகிறது.பரங்கியர் என்று சொல்லப்படுகிற ஆங்கிலேயர்களால் கைப்பற்றி ஏசுசிலை நிறுவப்பட்டு புனித தோமையார் மலை என்றும் அழைக்கப்படுகிறது. 

பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை மட்டும் வலம் வந்த திருத்தலம்.இந்த கோவிலில், பிருங்கி முனிவருக்கு சிவபெருமான் நந்தி ரூபத்தில் காட்சியளித்துள்ளார். 

மூலவர்:வண்டுறைநாதர், பிரமரேசுவரர், மதுவனேஸ்வரர்
அம்மன்:வேனெடுங்கண்ணி, பிரகதாம்பாள், சத்ய தாய தாக்ஷி
தல விருட்சம்:வில்வ மரம்
தீர்த்தம்:பிரம்மபுரீச தீர்த்தம்
புராண பெயர்:திருவெண்டுறை, வண்டுதுறை
ஊர்:திருவண்டுதுறை
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

சம்பந்தர்

தேவாரப்பதிகம் :

காலனை யோருதையில் லுயிர் வீடுசெய் வார்கழலான் பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன் மாலை மதியொடு நீரரவம் புனைவார் சடையான் வேலன கண்ணியொடும் விரும்பும்மிடம் வெண்டுறையே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 112வது தலம்.

தல வரலாறு :

பிருங்கி முனிவர் என்பவர் சிவனைத்தவிர வேறு தெய்வத்தை வழிபடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்தார். இதையறிந்த பார்வதி, அம்முனிவரின் உடலில் சக்தியாக உள்ள ரத்தம், சதை ஆகியவற்றை நீங்க செய்தார். உடல் தள்ளாடிய நிலையிலும் முனிவர் சிவனை தொடர்ந்து வழிபாடு செய்தார். சிவன் முனிவருக்கு அருள்புரிந்தார். இதனால் பார்வதி, சிவனை வழிபட்டு அவரது இடது பாகம் பெற்றார்.

சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவர்கள் என்பதை உணராத முனிவர், வண்டு உருவம் எடுத்து, அர்த்தநாரீஸ்வர திருமேனியில் ஒரு பாதியை துளைத்து கொண்டு சிவனை மட்டும் வணங்கினார். கோபமடைந்த பார்வதி பிருங்கி முனிவரை வண்டு உருவாகவே இருக்கும் படி சாபமிட்டார்.

மனம் வருந்திய முனிவர் சாப விமோசனம் வேண்டினார். மனமிறங்கிய பார்வதி, “”சக்தியின்றி சிவமில்லை. சிவனின்றி சக்தியில்லை, திருவண்டுதுறைத் தலத்தில் எங்கள் இருவரையும் இணைத்து வழிபாடு செய்து சாபவிமோசனம் பெறுக” என அருள்புரிந்தார்.

தலபெருமை :

பிருங்கிமுனிவர் வண்டு உருவில் வழிபாடு செய்ததால் இத்தலம் “திருவண்டுதுறை’ ஆனது. இப்போதும் கூட சிவன் சன்னதியில் வண்டு ஒலி கேட்கிறது என்கிறார்கள். திருமால் இத்தல சிவனை பூஜித்து சிவபூஜையின் சிறப்பை உலகிற்கு எடுத்து காட்டினார். பிரம்மா தன் படைப்புத்தொழிலில் தடை ஏற்பட்ட போது இங்கு வழிபாடு செய்து தடை நீங்க பெற்றார். துருவ மன்னன், அங்கவன், அரிச்சந்திரன், முசுகுந்த சோழனின் மகன் தியாகசோழன் ஆகியோரும் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.

நங்கை எனும் பெண்முனிவருக்கு இத்தலத்தின் மண்ணெல்லாம் சிவலிங்கங்களாக தோன்ற, அதன் மேல் கால் வைக்க கூடாது என்பதால் வடதிசை நோக்கி நின்று வணங்கினாராம். இதன் காரணமாக இங்கு நடுமண்டபத்தில் உள்ள நந்தி வடதிசையை பார்ப்பதாக ஐதீகம்.

பொது தகவல் :

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்த சன்னதி. அம்மன் தெற்கு பார்த்த சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் சுற்றுப்பகுதியில் விநாயகர், முருகன், அர்த்தநாரீஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, பைரவர், விசுவநாதர், விசாலாட்சி, சம்பந்தர், சனிபகவான், சூரியன், சந்திரன், பிட்சாடனர், சண்டிகேசுவரர், நவகிரகங்கள் ஆகியன அமைந்துள்ளன.

தல சிறப்பு :

1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 176 வது தேவாரத்தலம் ஆகும்.

திருவிழா:

வருடப்பிறப்பு, விசாகம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, திருவாதிரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

கோவில் திறக்கும் நேரம் :   

காலை 8 மணி முதல் 11 மணி வரை, 
                              மாலை  6 மணி முதல் இரவு 7.30 மணி வரை.

முகவரி : 

அருள்மிகு வண்டுறைநாதர்  திருக்கோவில் 
திருவண்டுதுறை (Po)-  திருவாரூர் மாவட்டம் - 614 717.

திருச்சிற்றம்பலம்🙏
ஓம் நமசிவாய🙇

Tuesday, December 6, 2022

தெய்வ வழிபாட்டின்போது செய்யவேண்டிய உபசாரங்கள்

*தெய்வ வழிபாட்டின்போது செய்யவேண்டிய உபசாரங்கள்*
தெய்வ வழிபாட்டின்போது முக்கியமான 16 உபசாரங் களை செய்ய வேண்டும்.

 *அவற்றில் -*

 1. ஆவாஹனம் (பூஜை செய்யப்பட வேண்டிய உருவத்தில் இறைவனை எழுந்தருளும்படி செய்தல்)

2. இறைவன் உட்கார ஆசனம் அளிப்பது

3. பாத்யம் 

4. அர்க்யம்

5. ஸ்நானம்

6. வஸ்த்ரம்

7.ஆசமநியம்

& சந்தனம் அணிவித்தல்

 9. மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்தல்

10. தூபம் காட்டுதல்

11.தீபம் காண்பித்தல்

12.நிவேதனம் செய்தல் 

13. தாம்பூலம் சமர்ப்பித்தல்

14. கற்பூர ஆரத்தி செய்தல்

15.புஷ்பாஞ்சலி சமர்ப்பித்தல்

16.பிரதட்சிணம் செய்தல்.

 தெய்வத்தை வலம் வந்தபின் பிழைகள் அனைத்தையும் மன்னிக்கும்படி வேண்டி தன்னையே முழுமையாக இறைவனிடம் அர்ப்பணித்து வழிபடுதல்.

_ஆறுபடை வீடு ரகசியம்

_ஆறுபடை வீடு ரகசியம்
சித்தர்கள் ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா?
மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், அபயம் (பாதுகாப்பு) ஆளுமை, ஞானம் ஆஉண்டாகட்டும்க இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் சக்தியுள்ள இடங்களில் ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டன. ஆரோக்கியத்திற்கு சுவாமிமலை, உறவுக்கு திருப்பரங்குன்றம், பொருளாதார வசதிக்கு சோலைமலை, பாதுகாப்புக்கு திருச்செந்தூர், ஆளுமை திறனுக்கு திருத்தணி, ஞானம் பெற பழநி ஆகிய தலங்களை தரிசிக்கலாம்.

அறுபடை வீடு என்றால் என்ன? வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது? இதைப் புரிந்து கொள்ள நாம் நக்கீரரைத்தான் துணைக்கு அழைக்க வேண்டும். அவர்தானே தமிழில் முதன்முதலாக கடவுளைப் போற்றி நூல் எழுதியவர்.

புலவர்கள் பொதுவாக அரசர்களிடம் சென்று பாடிப் பரிசு பெறுவார்கள். அப்படி நல்லபடி பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள். இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று தமிழில் பெயர்.

ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்று பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.

பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.

செந்தமிழ்க் கடவுளாம் செந்திலங்கடவுளின் செம்மையான பண்புகளைப் பாராட்டி அவனிடம் அருள் பெறலாம் என்று எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை. தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கே உண்டு. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான்.

ஆற்றுப் படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் இவரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார். அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.

அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.


*சரி. நக்கீரர் எந்த வரிசையில் ஆற்றுப்படை வீடுகளை பட்டியல் இடுகிறார்?*

முதற் படைவீடு – திருப்பரங்குன்றம்

இரண்டாம் படைவீடு – திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

மூன்றாம் படைவீடு – திருவாவினன்குடி (பழனி)

நான்காம் படைவீடு – திருவேரகம் (சுவாமிமலை)

ஐந்தாம் படைவீடு – குன்றுதோறாடல் ( திருத்தணி )

ஆறாம் படைவீடு – பழமுதிர்ச்சோலை


மேலே குறிப்பிட்டிருப்பதுதான் நக்கீரர் பாடிய ஆற்றுப்படை வீடுகளின் வரிசை. கந்தன்கருணை பாடலில் ஒவ்வொரு படைவீட்டுக்கும் சொல்லப்பட்ட முருகன் வாழ்க்கை நிகழ்வுகளை நக்கீரர் ஆற்றுப்படை வீடுகளோடு தொடர்பு படுத்தவில்லை. பின்னாளில் ஆறுபடை வீடுகளோடு முருகனின் வாழ்க்கை நிகழ்வுகளும் தொடர்புபடுத்தப்பட்டன.

காலங்கள் மாறினாலும் கருத்துகள் மாறினாலும் கந்தப் பெருமான் தமிழர்களுக்குச் சொந்தப் பெருமானாய் ஆறுபடைவீடுகளிலும் வீற்றிருந்து அன்பு மாறாமல் அருள் புரிந்து கொண்டிருக்கிறான். கால மாற்றத்தில் தமிழ்நாடு என்று மாநிலம் உருவான போதும் ஆறுபடை வீடுகளும் தமிழ்நாட்டுக்குள்ளேயே அமைந்ததும் தற்செயல் அல்ல முருகனின் தமிழ்த் தொடர்பே என்பதும் கருதத்தக்கது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் குமரனின் ஆற்றுப்படை வீடுகளுக்கு நாமும் செல்வோம். நல்லருள் பெறுவோம்.

*திருப்பரங்குன்றம்:* தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

*திருச்செந்தூர்:* அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.

*பழனி:* ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக் கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.

*சுவாமிமலை:* தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

*திருத்தணி:* சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.

*பழமுதிர்ச் சோலை:* தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும். 
எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்

Monday, December 5, 2022

பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும்

#திரு_பட்டீஸ்வரம்
#தேனுபுரீஸ்வரர்
#ஞானாம்பிகை
#துர்க்காம்பிகை
திருக்கோயில்
பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காமதேனுவின் புதல்வியான பட்டி பூசித்த தலமென்பதும் சம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அருளிய தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 23ஆவது சிவத்தலமாகும்.

மூலவர்:பட்டீசுவரர்
அம்மன்/தாயார்:பல்வளைநாயகி, ஞானாம்பிகை
தல விருட்சம்:வன்னி
தீர்த்தம்:ஞானவாவி
புராண பெயர்:மழபாடி, பட்டீஸ்வரம், பட்டீச்சுரம்
ஊர்:பட்டீஸ்வரம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார் துறவியெனும் உள்ளமுடை யார்கள் கொடி வீழியழ காயதொகுசீர் இறைவனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலாய் நறவவிரை யாலுமொழி யாலும்வழி பாடுமற வாதவரே.

தல சிறப்பு:

பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அளித்து முத்துப்பந்தல் நிழலில் வரும் அழகைக்காண நந்தியை விலகி இருக்கும்படி பணித்த தலம். இங்கு துர்க்கை சாந்த சொரூபியாக , மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன்,இடப்புறம் நோக்கிய சிம்ம வாகனத்துடன் அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.விசுவாமித்திர முனிவருக்கு காயத்திரி மந்திரம் சித்தி பெற்று பிரம்மரிஷி பட்டம் பெற்றதும் இத்தலத்தில் தான் என்கின்றனர். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 86 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:

அஷ்டபுஜங்களுடன் அருள் பாலிக்கும் இவ்வன்னையை விஷ்ணு துர்க்கை, துர்க்கா லட்சுமி எனவும் அழைப்பர். நவசக்தி நாயகி, நவரத்ன நாயகி, நவயோக நாயகி, நவகிரக நாயகி , நவராத்திரி எனவும் போற்றப்படுகிறாள்.

தலபெருமை:

மாமன்னன் இராஜராஜ சோழன் முதலான சோழ மன்னர்கள் அனைவராலும் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யப்பட்ட அம்பிகை இவளே. ஒரு நூற்றாண்டுகளுக்கு மேலாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டீசுவரத்தின் வடபுறம் அமைந்திருந்த சோழன் மாளிகையில் சோழ மன்னர்களின் அரண்மனைக் காவல் தெய்வமாக அருள் பாலித்து வந்த தெய்வம். அரண்மனையின் வாயில்களில் முறையே விநாயகரும் முருகரும் பைரவரும் எழுந்தருளி அருள்பாலித்து வந்தனர். சோழமன்னர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும் வெற்றி வாகை சூட போர்க்களம் புகும்போதும் இந்த தேவியின் அருள் வாக்கு பெற்ற பின்னரே செயல்படுவர்.

சோழ ராஜ்ஜியம் முடிவுக்கு வந்த பின்னர் துர்க்கையம்மனை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த துர்க்கை மற்ற தலங்களில் இருப்பது போல் அல்லாமல் சாந்த சொரூபியாக இருக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும்.ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது. அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள்பாலிக்கிறாள்.

*திருஞான சம்பந்தர் முத்துப்பந்தல் பெற்றது: திருஞானசம்பந்தர் சிவாலயங்கள் தோறும் சென்று வழிபட்டு வரும் நேரத்தில் திருச்சத்திமுற்றத்தில் வழிபட்ட பின் இத்தலத்துக்கு வந்தார்.அப்போது வெயில் காலமாதலால் சூரியனின் கதிர்கள் சுட்டெரித்தன.

வெயிலின் கொடிய வெப்பத்தை தணிக்க இத்தலத்து பட்டீசர் பூதகணங்கள் மூலமாய் அழகிய முத்துப்பந்தலை அனுப்பி வைத்தார். ஞானசம்பந்தர் இறைவன் அருளை வியந்து பணிந்து போற்றி முத்துப்பந்தலின் நிழலில் வந்தார். ஞானசம்பந்தர் நடந்து வந்த அழகிய காட்சியை காணவும், திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்கவும் பெருமான் நந்தி தேவரை விலகி இருக்க கட்டளையிட்டார். நந்தியும் விலகியது.

ஞானசம்பந்தர் பரவசத்தில் இறைவனை வணங்கி ஆனந்தப்பெருவெள்ளத்தில் பாடல் மறை எனத்தொடங்கும் பாமாலையை பாடி தலத்தில் தங்கினார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் ஆனிமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.

* காமதேனுப்பசுவின் புத்திரி பட்டி பூசித்ததால் பட்டீச்சரம் என்று பெயர் ஏற்பட்டது.

*ராமருக்கு சாயகத்தி தோஷம் நீங்கப்பெற்ற தலம்.

*பராசக்தியே தவம் செய்து வழிபட்ட தலம்.

*மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்தில் உள்ள ஞான வாவியின் துளி பட்டமையால் சாபம் நீங்கப் பெற்றது இத்தலத்தில்தான்.

துர்க்கையம்மன் மிகவும் சக்தியுள்ள தேவதையாய் விளங்குவதால் வெளியிடங்களிலிருந்தும் பலர் தங்கள் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.

*நாயக்கர் கால கலை அம்சம் பொருந்தியகோயில் இது.

*மராட்டியர் கால ஓவியங்கள் கோயிலில் காணப்படுகின்றன.

*மிகவும் பழமையான கோயில் இது.

தல வரலாறு:

பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர்.தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது. தேவியாரின் தவத்திற்கு உவந்து பெருமான் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்தார். அதனால் அப்பெருமானுக்குக் கபர்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

இவ்வனத்தின் பெருமையையும், தூய்மையையும் பட்டி உணர்ந்ததால் தானும் பெருமானை பூஜிக்க விரும்பி மணலினால் ஓர் லிங்கம் அமைத்து நாள்தோறும் விதிப்படி பூசித்து வந்தது. தனது தூய்மையான பாலைக் கொண்டும், ஞானவாவியின் நீரைக் கொண்டும் நீராட்டி வழிபட்டது. பெருமான் அவ்வழிபாட்டிற்கு மகிழ்ந்து மணலினால் ஆகிய லிங்கத்தில் என்றும் நிலையாய் அமர்ந்தருளினார். பட்டிக்கன்று வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

வரலாற்றுத் தொடர்பு :

பாண்டிய மன்னர்களுக்கு மீனாட்சி எப்படி குலதெய்வமாக விளங்கினாளோ அவ்வாறே சோழ மன்னர் பரம்பரை முழுவதற்கும் பட்டீஸ்வர துர்க்கை குலதெய்வமாக விளங்கிவந்தாள். பாண்டியனை மணந்த சோழ அரசியான மங்கையர்க்கரசி தேவியாரும், ராஜராஜ சோழனுக்கு மதியூகி ஆலோசகராக விளங்கிய குந்தவைப் பிராட்டியாரும் பட்டீஸ்வர துர்க்கை மீது அபார பக்தி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓம் நமசிவாய🙏

Saturday, December 3, 2022

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁
༺சித்தம் சிவமயம்༻
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁                                   

🌹பிறைசூடி துதிபாடி🌹

💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫

🍃🌹🍃🌹🍃🌹🍃🌹🍃

     💫🪷பாடல்🪷💫

🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁

🍁நெய்தான் மிகஆடும் நிமலன் அடிபோற்றிப்🍁

🍁பொய்தான் அடையார்முன் புரிவல் வினைதீரச்🍁

🍁செய்தான் கணையொன்றால் திரியும் புரமூன்றும்🍁

🍁எய்தான் அமர்கோயில் இராமேச் சுரந்தானே🍁

🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁

விளக்கம் : 

நெய்யால் மிகவும் அபிஷேகம் செய்யப்பெறும் நிர்மலனான சிவன் திருவடியைத் தொழுது போற்றுகின்றவர்களும், பொய் அடையாதவர்களுமான பக்தர்களின் முன் செய்த வல்வினை எல்லாம் தீர்த்தருள்பவன்; விண்ணில் திரிந்த மூன்று புரங்களையும் ஓர் அம்பால் எய்தவன்; அப்பெருமான் விரும்பி உறையும் கோயில் இராமேஸ்வரம் ஆகும்.

🍃🌹🍃🌹🍃🌹🍃🌹🍃
                                                                                                    
 
꧁༺சிவசிவ༻꧂
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️🌴

💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫

💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫

💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫

💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫

💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫

💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫

💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫

🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️🌴

🍀🍁🍀🍁🍀🍁🍀🍁🍀                                                     
🌹திருச்சிற்றம்பலம்🌹
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁🍀

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...