Friday, December 9, 2022

வீட்டில் கன்னி தெய்வ வழிபாடு எப்படி செய்வது

🔥🌷ஓம் நமசிவாய 🌷🔥
🌹வீட்டில் கன்னி தெய்வ 
வழிபாடு எப்படி செய்வது🌹

🌺ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் இருக்கும். குல தெய்வத்தை சரியாக வணங்கி வந்தாலே வாழ்வில் அனைத்தும் சிறக்கும்.🌺

🌼குலதெய்வ வழிபாடு அனைத்து நன்மையையும் செய்யும் மற்ற தெய்வ வழிபாடுகள் பிறகுதான். 🌼

குலதெய்வம் தெரியாதவர்கள் ஆக இருந்தாலும் குலதெய்வத்தை வணங்குபவர்களாக இருந்தாலும் அவர்களின் குடும்ப முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பது கன்னி தெய்வ வழிபாடு.

உங்கள் வீட்டுக்கு யாராவது ஒரு குடுகுடுப்பை அடிப்பவர், குறி சொல்பவர்கள் என யாராவது வந்தால் பலரும் முதலில் சொல்லுவது உங்கள் வீட்டு கன்னிதெய்வம் பற்றித்தான்.
 யார் இந்த கன்னி தெய்வம்.

சில பல தலைமுறைகளுக்கு முன்னர் நம் அப்பா வழி உறவில் பிறந்து திருமணம் ஆகாமல் சிறு குழந்தையிலேயே இறந்து போன பெண் தான் நம் வீட்டின் கன்னி தெய்வமாக இருக்கிறது என்பது ஐதீகம். ஒவ்வொரு குடும்பத்திலும் திருமணம் ஆகாமல் யாராவது சிறு பெண்கள், குழந்தைகள் எத்தனையோ தலைமுறைக்கு முன்னர் ஒருவராவது இறந்திருப்பார்கள்.

அது தெய்வமாகி நம் வீட்டையே பாதுகாத்து வரும் என்பது நம்பிக்கை. இது உண்மையும் கூட.

பலரது வீட்டில்அவர்கள் குடும்பத்தில் வரும் பெரிய ஆபத்துக்களில் இருந்தும் வீட்டில் நடக்கும் சின்ன பிரச்சினைகள் வரை பெரிதாக பூதாகரம் ஆகாமலும், அப்படியே ஆனாலும் அந்த பிரச்சினையை சமரசமாக ஆக்கி கொண்டு வரும் சக்தி உடையது வீட்டின் கன்னி தெய்வம்.

இது போல வீட்டின் காவல் தெய்வமாக இருக்கும் கன்னி தெய்வத்துக்கு உரிய பூஜை முறைகளை நாம் செய்யவேண்டும். வீட்டின் பூஜையறையில் கடையில் விற்கும் பட்டுவினால் ஆன சிறு துணியை வாங்கி அதற்கு மஞ்சள் அல்லது சந்தனத்தில் கண் வாய் மூக்கு உருவங்கள் அந்த துணியில் வரைந்து ஒரு ஆணி அடித்து அந்த துணியை மாட்டி விட வேண்டும். உங்கள் வீட்டு கன்னி தெய்வமாய் நினைத்து தினமும் வழிபடவேண்டும். குடும்பத்தை முன்னேற்றவும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காகவும் வேண்டிக்கொள்ள வேண்டும்.

கன்னிதெய்வத்தை அம்மன் போல பாவித்து வணங்க வேண்டும். பவுர்ணமி தோறும் உங்கள் பூஜையறையில் உள்ள கன்னி தெய்வத்துக்கு வாசனை மலர்கள் சூடி, ஏதாவது ஒரு இனிப்போ, பலகாரமோ செய்து அதற்கு படைத்து சாம்பிராணி புகை, ஊதுபத்தி, கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். தெய்வத்துக்கு முன்பு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு பவுர்ணமி தோறும் சைவமாக சமைத்து இருக்க வேண்டும் அன்று அசைவம் சேர்க்க கூடாது இதை தொடர்ந்து செய்து வந்தால் குடும்பத்தில் சிறிது சிறிதாக நற்காரியங்கள் நடக்க ஆரம்பிக்கும்.

பொதுவாக " வில்வம் ' இருக்கும் இடத்தில் செல்வம்செழிக்கும்.

🌹அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவமே என் வரமே 🌹
இனிய சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் சிவனுக்குகந்த பஞ்ச பத்திரங்கள்(இலைகள்) பற்றி தெரிந்து கொள்வோமா!

1. வில்வம் 
2. நொச்சி
3. முட்கிளுவை
4. விளா
5. மாவிலங்கை
(6) மஹாவில்வம்.

இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் பத்திரங்கள்(இலைகள்) 

பொதுவாக " வில்வம் ' இருக்கும் இடத்தில் செல்வம்
செழிக்கும். 

ஒரே ஒரு வில்வத்தை
உள்ளன்புடன் சிவபெருமானுக்குச்
சமர்ப்பித்தால் மூன்று பிறவிகளில் செய்த பாவம் தீரும் என்கிறது வில்வாஷ்டகம்.

கூவிளம் என்று இலக்கியங்களில் குறிக்கப் பெறுவது வில்வம். 

இதனுடன் இன்னும்
நான்கு இலைகளையும் சேர்த்து ஐந்து இலைகளைப் பஞ்ச வில்வம் என்பர். 

கூவிளம் [வில்வம்], நொச்சி, கிளுவை, மாவிலங்கம்,
விளா என்பவை அவை.

பஞ்சமுக அர்ச்சனை:

சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு.

கிழக்கில் உள்ள முகம் தத்புருஷம். தெற்கில் உள்ளது அகோரம், 
மேற்கில் உள்ளது சத்யோஜாதம், 
வடக்கில் உள்ளது வாமதேவம்.
மேலே ஒரு முகம் உண்டு. அது ஈசானம் எனப்படும். 
இந்த ஐந்து முகங்களில் இருந்து
கூவிளம்[வில்வம்], நொச்சி, கிளுவை,மாவிலங்கம், விளா என்பவை தோன்றின. 

அது பஞ்ச வில்வங்களாயின என்பது
வில்வமகாத்மியத்தில் சொல்லப்பட்டுள்ள
செய்தியாகும்.

சிவபெருமானுக்கு விசேஷ அர்ச்சனை
பஞ்சமுக அர்ச்சனையாகும். 

ஒரே சமயத்தில் 5
சிவாச்சாரியர் 5 வகையான பஞ்ச
வில்வங்களைக் கொண்டு பூஜிப்பர். 

ஒரு முகத்துக்கு ஒரு இலை. 

இறுதியில் ஐந்து வகையான பிரசாதங்களை நிவேதனமாக வைத்து ஐந்து சிவாச்சாரியர்களும்
ஒரே சமயத்தில் தீபாராதனை செய்வர். 

இது பஞ்சமுக அர்ச்சனை எனப்படும்.

இந்த பஞ்சமுக அர்ச்சனை நிகழ்வில்
ஐந்தடுக்கு தீபத்தில் தீப ஆராதனை
செய்வார்கள்.

சிவலிங்க மூர்த்தியில் முகம்
இல்லாவிட்டாலும்
சிவப்பரம்பொருளின் ஐந்து
முகங்களை பாவனையால் 
நோக்கி இந்த அர்ச்சனை செய்யப்படுகிறது.

இதைப்போலவே பஞ்சமுக
விநாயக மூர்த்திக்கும்
 பஞ்சமுக அர்ச்சனை
செய்யப்படுகிறது

பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.

திரிதளஞ்ச; திரிகுணாகாரம்;
திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்;
திரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்

என்கிறது வில்வாஷடகம்.

பஞ்ச வில்வங்கள் எனப்படும் வில்வம், விளா, நொச்சி, கிளுவை, மாவிலங்கம் இவைகளை கொண்டு திங்கள் கிழமைகளில் சிவ பெருமானை அர்ச்சனையும் அபிஷேகமும் செய்வதால் மூன்று ஜென்ம பாபங்கள் விலகுவதுடன் அனைத்து இடர்களினின்றும்
நம்மை காப்பார் என்று கூறப்படுகிறது. 

பஞ்ச வில்வங்கள் எனப்படும் வில்வம், விளா, நொச்சி, கிளுவை, மாவிலங்கம்  ஆகியவை.

சிவாய நம🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி..

அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி🦜

ஹனுமன் கூறியபடி அந்த எட்டு சித்திகளையும் அடியார்களுக்கு அருள்வதால், திருமால் ‘ஸித்தித:’ என்றழைக்கப்படுகிறார்

ஜெய் ஸ்ரீராம் 🙏🏻🙏🏻
சீதா ராம பட்டாபிஷேகம் இனிதே நிறைவடைந்தது. 

பின், ஒருநாள் அரண்மனையில் உள்ள தனது அறைக்கு ஹனுமனை அழைத்த ஸ்ரீராமன், “ஹனுமனே! நீ இலங்கைக்குச் சென்றுவந்த பின், ‘கண்டேன் சீதையை!’ என்று மட்டும் என்னிடம் சொன்ன நீ, அங்கு நீ செய்த அற்புதச் சாகசங்களை எல்லாம் என்னிடம் சொல்லவே இல்லையே! 

இலங்கையில் நீ செய்த வீர தீரச் செயல்களை இப்போதாவது எனக்குச் சொல்வாயாக!” என்று கூறினார். 

அப்போது இடையே குறுக்கிட்ட சீதை, “ஸ்வாமி! தற்பெருமை பேசுவதை விரும்பாத அனுமன், தனது புகழையும் சாகசங்களையும் தன் வாயாலேயே சொல்வானா? 

உணவுப் பதார்த்தங்களில் உள்ள உப்பு, அந்தப் பதார்த்தத்தின் சுவைக்கும் பதத்துக்கும் தானே ஆதாரமாக இருந்தபோதும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், உணவுப் பொருளினுள்ளே மறைந்திருக்கிறதல்லவா ? 

அதுபோலத் தான் ஹனுமனும் தனது பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு விளங்குபவன். 

பின்னாளில் உங்களது சரிதம் ராமாயணம் என்னும் மஹா காவியமாக வால்மீகி மூலம் வெளிவரப் போகிறது. 

அதன் அரங்கேற்றத்தின் போது தான் இலங்கையில் ஹனுமன் செய்த சாகசங்களை நீங்கள் கேட்டறிய இயலும்!” என்றாள் சீதை.

“அவ்வளவு நாட்கள் என்னால் காத்திருக்க இயலாதே!” என்றான் ஸ்ரீராமன். 

“ஸ்வாமி! ஹனுமனின் வீர தீரச் சாகசங்களை அசோக வனத்திலிருந்த எனது தோழிகளான சரமாவும், திரிஜடையும் கூற நானும் கேட்டிருக்கிறேன். 

நானும் சிலவற்றைக் கண்ணால் பார்த்திருக்கிறேன். 

அவற்றை எல்லாம் ஒன்று விடாமல் பட்டியலிட்டு நானே உங்களுக்குச் சொல்கிறேன். 

ஆனால் இங்கு அயோத்தி அரண்மனையில் அவற்றைச் சொல்வது சரியாக இருக்காது. 

காவிரிக் கரையிலுள்ள ஏகாந்தமான ஸ்தலமாகிய வடுவூருக்குச் சென்று விடுவோம். 

அங்கே நான் அனுமனின் மேன்மையைச் சொல்ல, நீங்கள் புன்னகையோடு அவற்றைக் கேளுங்கள்!” என்றாள் சீதை.

அதனால் சீதையையும் லக்ஷ்மணனையும் அழைத்துக் கொண்டு காவிரிக் கரையில் மன்னார்குடிக்கு அருகிலுள்ள வடுவூருக்கு எழுந்தருளினான் ராமன். 

ஹனுமனும் அங்கு வந்து ஸ்ரீராமன் முன்னே கைகூப்பியபடி நின்று கொண்டான். 

அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, ப்ராப்தி, ப்ராகாம்யம், ஈசித்வம், வசித்வம் ஆகிய எட்டு மகா சித்திகளையும் பயன்படுத்தி அரக்கர்களை அனுமன் எதிர்கொண்ட விதத்தைப் பற்றிச் சீதை கூற, அதை ஹனுமனும் கேட்டான். 

அப்போது லக்ஷ்மணன், “ஹனுமனே! தற்பெருமை பேசுவது உனக்குப் பிடிக்காது என்று எல்லோரும் சொல்கிறார்கள். 

ஆனால் இப்போது உன் பெருமைகளைக் கேட்க நீயே வந்து விட்டாயே!” என்று கேட்டான்.

 “இலங்கையில் நான் எட்டு மகா சித்திகளைப் பயன்படுத்திப் பல சாகசங்களை நிகழ்த்தியதாக அன்னை சீதா தேவி சொல்கிறார். 

ஆனால் அந்த எட்டு சித்திகளையும் அடியேனுக்குத் தந்தது ஸ்ரீராமனின் பரிபூர்ண அருளும் ஸ்ரீராம நாமமுமே ஆகும். 

எனவே, அந்த சித்திகளைப் பயன்படுத்தி நான் நிகழ்த்திய சாகசங்களில் எதுவுமே எனது பெருமையைப் பறைசாற்றாது. 

அந்த சித்திகளை எனக்கு அருளிய ராமனின் பெருமையையே பறைசாற்றும். என் பிரபுவின் பெருமைகள் பேசப்படும் இடத்தில் நான் இல்லாமல் இருப்பேனா? 

அதனால் தான் இங்கே ஓடி வந்து விட்டேன்!” என்று சொல்லின் செல்வனான அனுமன் விடையளித்தான். 

இன்றும் வடுவூர் கோதண்டராம சுவாமி திருக்கோவிலில் ராமன், லக்ஷ்மணன், சீதை, அனுமன் நால்வரும் முகத்தில் முறுவலோடு தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்கள்.

(எட்டு விதமான அமானுஷ்ய திறமைகளை அஷ்ட மஹா ஸித்திகள் என்று சொல்வார்கள்)

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை கரிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.

1. அணிமா - அணுவைப் போல் சிறிய தேகத்தை அடைதல்
2. மஹிமா - மலையைப் போல் பெரிதாகுதல்
3. லகிமா - காற்றைப் போல் லேசாக இருத்தல்
4. கரிமா - எடையை மலையளவு அதிகரித்தல்
5.  ப்ராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப்படுத்துதல்
6. ப்ராகாம்யம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்
7. ஈசித்வம் - அனைத்துலகிலும் ஆணையைச் செலுத்துதல்
8. வசித்வம்  அனைத்தையும் வசப்படுத்துதல்)

ஹனுமன் கூறியபடி அந்த எட்டு சித்திகளையும் அடியார்களுக்கு அருள்வதால், திருமால் ‘ஸித்தித:’ என்றழைக்கப்படுகிறார். ‘த’ என்றால் கொடுப்பவர் என்று பொருள். 

ஸித்தியைக் கொடுப்பவர் ‘ஸித்தித:’. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 255-வது திருநாமம்.“ஸித்திதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் அனைத்து விதமான
வெற்றிகளையும் ஸ்ரீமந் நாராயணன் தந்தருள்வார்.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

திருமுறைகளை மீட்டெடுக்கஇராசராச சோழன்

சித்தம் சிவமயம்
சைவத்திருமுறைகள் மீட்பு

சிவம் சைவசமயம் என்றால் 
மற்றையோர்க்கு எரிச்சல்,
தயக்கம், கலக்கம், நடுக்கம் ஏன்?
பதிவு : 8

சைவசமயத்தின் உயிர்நாடி சைவத்திருமுறைகள் ஆகும்.

திருமுறைகளை மீட்டெடுக்க
இராசராச சோழன் மிகுந்த
சிரமத்திற்கு ஆளாக நேர்ந்தது.

சோழநாட்டில் 
அபயகுல சோழன் என்ற பட்டம் உடைய
இராசராச சோழன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய
அவைக்களத்தில் சிவனடியார்கள் தங்களுக்குத் தெரிந்த தேவாரப் பாடல்களை அவ்வப் போது ஓதி வந்தார்கள்.
அவற்றைக் கேட்ட சோழன் தேவாரப் பாடல்கள் முழுமையும்
சேகரிக்க நினைத்தான்.     முழுமையும் அவனுக்குக்
கிடைக்கவில்லை. 

அவனுடைய காலத்தில்தான் திருநாரையூர்
என்ற ஊரில் நம்பியாண்டார் நம்பி வாழ்ந்துவந்தார். அவருக்கு
அவ்வூரில் எழுந்தருளியிருந்த பொல்லாப்பிள்ளையார்
(விநாயகர்) திருவருள் புரிந்ததை அரசன் கேள்விப்பட்டான்.
அவர் மூலமாகத் தேவாரத் திருப்பதிகங்களைத் தேடிக்
கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணி அவருடைய உதவியை
நாடினான். 

நம்பியாண்டார் நம்பியும் அவனுடைய
வேண்டுகோளை ஏற்றுத் தான் வணங்கும் பொல்லாப்
பிள்ளையார்பால் வேண்டிக் கொண்டார். பிள்ளையாரும்
சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகில் உள்ள அறையில்
தேவாரத் திருமுறைகள் வைத்துப் பூட்டப் பெற்றுள்ளன எனஅருளிச் செய்தார். 

நம்பியும் மன்னனும் சிதம்பரம்
பொன்னம்பலத்திற்குச் சென்றார்கள். தில்லைவாழ் அந்தணர்கள்
அறைக்கதவு திறக்கப்பட வேண்டுமானால் தேவாரத்தை
அருளிய மூவரும் நேரில் வரவேண்டும் என்றனர். 

வாழ்ந்து இறைவனடி கண்ட
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் நேரில்
வரமுடியாத காரணத்தால் அவர்களின் திருவுருவங்களை
அறையின்முன் எழுந்தருளச் செய்தான் மன்னன். 

சிலைவடிவாக இருக்கிற நடராசரை இறைவனாகவே எண்ணிவழிபாடு செய்யும் தில்லைவாழ் அந்தணர்கள், சிலைவடிவில் வந்திருக்கும் மூவரையும் நேரில் வந்ததாகவே கருதி அறையைத் 
திறந்து விட்டனர். 

அறைக்குள்ளே கரையான்
புற்றால் மூடப்பெற்றிருந்த ஏடுகளில் பழுதுபட்டதை நீக்கி
மற்றவற்றை எடுத்துவந்து நம்பியாண்டார் நம்பியைத் தொகுக்கச்செய்தான். 

நம்பியாண்டார் நம்பி கிடைத்த 
தேவாரத் திருப்பதிகங்களை முதல் 7 திருமுறைகளாகத்
தொகுத்தார். இதுவே திருமுறைகண்ட புராணம் கூறும் செய்தியாகும்.

நம்பியாண்டார் நம்பியையும்
இராசராச சோழனையும் 
தமிழ்ச்சைவர்கள் போற்றிக்
கொண்டாட வேண்டும்.

பதிவுகள் தொடரும்..........

திருச்சிற்றம்பலம்.

_மார்கழி மாதத்தில் மட்டுமே காண முடியுமாம் இந்த அதிசய லிங்கம்_

_மார்கழி மாதத்தில் மட்டுமே காண முடியுமாம் இந்த அதிசய லிங்கம்_


தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ளது அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்தக் கோயிலில் என்ன அதிசயம் என்றால்....இங்கு மார்கழி மாதம் மட்டும் பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தை வைத்து வழிபடப்படுகிறதாம். 

மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இதற்காக, குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும். 

பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கம்

முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் புரிந்தனர். அந்தப் போரினால் உலகில் அதிக பேரழிவுகள் ஏற்பட்டன. 

இந்தத் துன்பங்களை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர். 

அதன்படி ஆதிஷேசன் தன்படங்களால் மேருமலை சிகரத்தின் முடியை அழுத்திக் கொள்ள வேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியைத் தளர்த்த வேண்டும் என்று கூறினார்கள். 

ஆனால் வாயுதேவனால் பிடியைத் தளர்த்த முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் அனைத்தும் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்தப் பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிஷேசனிடம் பிடியைத் தளர்த்த வேண்டினார்கள்.

ஆதிஷேசன் தன் பிடியைக் கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிஷேசனின் சிரத்தையும் சேர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறி விழுந்தது. அவற்றிலொன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடு) காட்சியளிக்கிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன.

இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பார்ப்பதற்கே பிரம்மாண்டமான தோற்றத்தில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நாகரின் முழு உடலிலும் பக்தர்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து பூசி உள்ளனர். இவ்வாறு மஞ்சள் குங்குமம் தடவி வழிபடும்போது நாக தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. படமெடுத்த நிலையில் அமைந்துள்ள ஆதிசேஷன் லிங்க வடிவைத் தாங்கி நிற்பது சிறப்பு.

மரகத லிங்கத்தின் வரலாறு :

பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வழிபட்டு விட்டு, அவரது அருகில் இருக்கும் உமாதேவியை வழிபடாமல் விட்டு விடுவார். 

இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்துச் சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர், எனச் சாபமிட்டார்.

இதையறிந்த சிவன், நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். 

பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கௌரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார். (இக்கோயிலில் கேதார கௌரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைப்பிடிக்கப்படுகிறது).

அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவபெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார் பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார்.  அர்த்தநாரீஸ்வர மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். 

தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார். பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்துக் கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார். 

மற்ற நேரத்தில் சாதாரணமான லிங்கத்தை வைத்து வழிபடுங்கள் என்று கட்டளையிட்டாராம்.

ஓம் நமச்சிவாய.!

_27 நட்சத்திரங்களுக்கான ருத்ராட்சம்!

_27 நட்சத்திரங்களுக்கான ருத்ராட்சம்!
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக்ஷங்கள் நமது அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

ஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும்.

ருத்ராக்ஷத்தை ஆங்கிலத்தில் Elaco Carpus Seed என்பர்.

ஒவ்வொருவருடைய நட்சத்திரத்திற்கும் ஏற்ற ருத்ராக்ஷங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
இவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு. 

ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் நம் அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தில் பிருஹஸ்பதி உச்சத்தில் இருக்கிறார்.

 ஆகவே வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உன்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும்.

வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான்! ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும். 

நட்சத்திரம் நட்சத்திராதிபதி கிரகம் அணிய வேண்டிய ருத்ராக்ஷம்

1)அஸ்வினி :- கேது நவ முகம்(ஒன்பது)

(Alpha, Beta - Aries) 

2)பரணி :- சுக்ரன் ஷண்முகம்(6முகம்)( Taurus) 

3)கார்த்திகை:- சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதசமுகம்(12 முகம்)
(Pleiades) 

4)ரோஹிணி:- சந்திரன் த்விமுகம்(2முகம்)

(Aldebaran Hyades, Alpha, Theta, Gama, 
Delta and Epsilon Taurus) 

5)மிருகசீரிஷம் :-செவ்வாய்  
த்ரி முகம்(3முகம்)
(Lambda, Phi 1, Phi 2, Orion) 

6)திருவாதிரை:- ராகு 
அஷ்ட முகம்(8முகம்)
(Betelgeaux - Alpha Orion) 

7)புனர் பூசம் :-ப்ருஹஸ்பதி பஞ்ச முகம்(5முகம்)
(Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively) 

8)பூசம்:- சனி சப்த முகம்(7முகம்)
(Gama, Delta and Theta of Cancer) 

9) ஆயில்யம்:-புதன் சதுர் முகம்(4முகம்)
(Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra) 

10) மகம்:-கேது நவ முகம்(9முகம்)
(Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis) 

11)பூரம்:-சுக்ரன் ஷண் முகம்(6முகம்)
(Delta and Theta Leo) 

12)உத்தரம் :-சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம்(12முகம்)
( Beta and 93 Leo) 

13)ஹஸ்தம் :-சந்திரன் 
த்வி முகம்(2முகம்)
(Delta, Gama, Eta, Virgo) 

14)சித்திரை:- செவ்வாய் 
த்ரி முகம்(3முகம்)
(Spica, Alpha Virgo) 

15)ஸ்வாதி:- ராகு அஷ்ட முகம்(8முகம்)
(Arcturus - Alpha Bootes) 

16)விசாகம்:- ப்ருஹஸ்பதி பஞ்சமுகம்(5முகம்)
( Alpha, Beta etc Libra) 

17)அனுஷம் :-சனி சப்த முகம்(7முகம்)
(Beta, Delta, Pi -Scorpia) 

18)கேட்டை:- புதன் சதுர் முகம்(4முகம்)
( Antares Alpha, Sigma Tau Scorpio) 

19)மூலம்:- கேது நவ முகம்(9முகம்)
(Scorpio, tail stars) 

20)பூராடம் :-சுக்ரன் ஷண் முகம்(6முகம்)
(Delta and Epsilon Sagittarius) 

21)உத்திராடம் :-சூர்யன் ஏக முகம்(1முகம்) அல்லது த்வாதச முகம்(12முகம்)
(Zeta and Omicron Sagittarius) 

22)திருவோணம் :-சந்திரன் 
த்வி முகம்(2முகம்)
(Altair - Alpha Aquila) 

23)அவிட்டம் :-செவ்வாய் 
த்ரி முகம்(3முகம்)
(Delphinus) 

25)சதயம் :-ராகு அஷ்ட முகம்(8முகம்)
(Lambda Aquarius) 

25)பூரட்டாதி:- சனி பஞ்ச முகம்(5முகம்)
(Alpha and Beta Pegasus) 

26)உத்திரட்டாதி :-சனி 
சப்த முகம்(7முகம்)
(Gama Pagasus and Alpha Andromeda) 

27)ரேவதி:- புதன் சதுர்முகம் (4முகம்)
(Zeta Piscum) 

இந்த நட்சத்திரங்களெல்லாம் உண்மையிலேயே இருக்கின்றனவா, இருக்கின்றன என்றால் எங்கே உள்ளன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும்.

 மேலே கண்ட பட்டியலில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் மேலை நாட்டில் வானவியல் ரீதியாக குறிப்பிடப்படும் நட்சத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவை தாம் நமது நட்சத்திரங்களுக்கு சரியான அறிவியல் ரீதியிலான மேலை நாட்டு வானவியல் பெயர்கள். 

அனைவரும் அவரவர் நட்சத்திரங்களுக்குரிய ருத்ராக்ஷங்களை மேலே குறிப்பிடபட்ட நாளில்அணிந்து நலம் இறைவனை வேண்டுகிறேன்.

உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே. இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது.

_காசி_சிவன்

உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே. இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது.
ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். ஜோதிடர்களிடமும் கூட்டம். எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளிவைத்துவிட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது. ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். அந்த இடம்,தான் காசி நகரம். இங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள். துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை. அங்கே உள்ள கோவில்களில் இசையும், மந்திரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் இறுதி மூச்சும் அதோடு கலந்து காற்றோடு, மண்ணோடு, நீரோடு சங்கமித்துக் கொண்டிருக்கிறது.

,‘இறப்பு யார் கையிலும் இல்லை, இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை’ என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இலட்சங்களை ஆஸ்பத்திரிகளில் செலவிடுபவர்கள் திடீரென்று இறந்து போகிறார்கள். ஆனால் காசியில் இறப்புக்காக காத்திரு ப்பவர்கள், அதைத்தேடி வருடக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள். அதுதான் கிடைத்த பாடில்லை.

காசி, பூமி தோன்றிய போதே உருவான தாக கருதப்படும் புண்ணிய நகரம். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், கங்கை நதிக்கரையில் உள்ளது. 1800 கோவில்களுடன் அது, இந்தியாவிலேயே அதிகமான கோவில்களைக் கொண்ட நகரம் எந்நேரமும் பக்தர்கள் கோவில் களை நோக்கி நடந்து சென்று கொண்டே இருப்பதால் இரவுக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எந்நேரமும் வெளிச்சம்! (காசி என்றால் ஒளி தரும் இடம் என்பது புராண அர்த்தம்)

இந்து மதத்தை தழைக்க வைத்த ஞானிகள் பலரின் மூச்சு காற்றோடு கலந்து, அவர்கள் ஒவ்வொருவரின் பாதப் பதிவுகளும் அங்கே மண்ணோடு விரவிக்கிடக்கிறது. இந்த ஞானபூமியின் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு கதை! அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புராணம். காசியைத் தொட்டு ஓடும் புண்ணிய நதி கங்கை! வருணை நதியும், அஸி நதியும் இதன் எல்லைகள். அஸி கங்கையில் சங்கமம் ஆகும் இடம் அஸி கட்டம். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக 4 மைல்!

அங்கு புகழ் பெற்றிருப்பது விஸ்வநாதர் ஆலயம். இந்த கோவில் ஒரு குறுகிய தெருவில் அமைந்திருக்கிறது. உள் பிரகாரம் வளவளப்பான சலவைக் கல்லில் ஜொலிக்கிறது. மையத்தில் கருவறை, கங்கை நீர், பால், வில்வ இலைகளால் அபிஷேகம் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது. ஆலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடிசைகள்! இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும், நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் முதிய வயதில் வாழ்க்கையில் முழுமையைத் தேடி வந்து இந்த குடிசைகளில் தங்கியிருக்கிறார்கள், மரணத்தை தேடி!

அவர்கள் அதிகாலையிலே எழுந்து கிழக்கில் சூரியன் விழிக்கும் போது கூட்டம், கூட்டமாக வெளியேறி, காசியில் அமைந்திருக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களை நோக்கி நகர்கிறார்கள். தினமும் கங்கையில் குளித்து, ‘இறைவா எங்களை ஏற்றுக் கொள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள். இவர்கள் காசியைத் தேடிச் சென்று காத்திருப்பதன் நோக்கம், அங்கு கடைசி மூச்சை விட்டால் மோட்சம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை.

இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்நோக்க காத்திருக்கும் முதியோர்களால் சூழப்பட்டி ருக்கும் இடங்களில் ஒன்று ‘கங்கா லாப் பவன்’! இது மணிகர்ணிகா பகுதி யில் உள்ளது. அவர்கள் மூச்சு முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து அங்கு வந்து தங்கி உயிரைவிட 12 ஆயிரம் முதியோர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து விட்டு, எப்போது அழைப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். கியூவில் நிற்கும் அளவுக்கு இறப்பு மீது எவ்வளவு ஏக்கம் பாருங்கள்.

இன்னொன்று ‘காசி லாப் முக்தி பவன்’ ஜெய்டால் டால்மியா என்ற செல்வந்தர், தன்தாய் காசியில் மரணமடைந்த பிறகு தாயார் நினைவாக இந்த கட்டட த்தை விலைக்கு வாங்கினார். முதலில் வேத மந்திரம் ஓதவும், பகவத் கீதை சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், ஜதீக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அந்த இடத்தை பயன்படுத்தினார். ஆனால் இறப்பை எதிர்நோக்கும் முதியோர்கள் அந்த மையத்தில் வந்து குவிய, இறுதிக்குரிய இடமாக அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இங்கு கூடி இருக்கும் முதியோர்களின் மனம் எப் போதும் இறைவனை நாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேத மந்திரங்களின் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

நேபாள நாட்டு அரசுக்கும் இந்த மோட்ச நம்பிக்கை இருக்கிறது. அதனால் 30 பேர் தங்கி இருக்கும் இடத்தை நேபாள அரசு பராமரிக்கிறது. அங்கிருப்பவர்களுக்கு உணவு, உடை கொடுத்து இறுதி வழி யனுப்பி வைப்பது வரை நேபாள அரசால் நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பொறுப்பு.

இந்த மோட்ச பூமி 1891 மற்றும் 1921ம் ஆண்டுகளில் நோயால் துவண்டு மயான பூமியாக மாறி ஒரு இலட்சம் பேரை பலிவாங்கியிருக்கிறது. அப்போது மரணத்தை எதிர்நோக்கி நிறைய பேர் அங்கு செல்ல, அவர்களை கட்டுப்படுத்த ஆங்கிலேயே அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுத்தது, உடனே மனித ரீதியான சர்ச்சைகள் தொடங்கியது, ஆங்கிலேயே அரசு பின்வாங்கி, ‘நமக்கு என்னப்பா...’ என்று விட்டுவிட்டது.

இப்போதும் முடிவைத் தேடி நிறைய மக்கள் அங்கு செல்வதால், அவர்கள் கடைசி காலம் வரை தங்கி இருக்க இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. அதனால் அங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளை அத்தகைய முதியோர்களுக்காக வாடகைக்கு விடுகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோர்களை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டு விட்டு பணத்தைக் கட்டிவிட்டுச் சென்று விடுகிறார்கள். இறுதிக் காலம் வரை பராமரிக்கவும், இறப்புக்குப் பின்புள்ள சடங்குகளை செய்யவும் ஒப்பந்தக்காரர்கள் அந்தப் பபணத்தை பபயன்படுத்துகிறார்கள். எல்லாத்தையும் கடவுள் பார்த்துக் கொள் வார் என்ற நம்பிக்கைத்தான் அவர்களுக்கு!

காசியில் 9 ஆயிரம் ஆண்டுகளாக ‘அணையாத தீபம்’ எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தீயை எடுத்துத்தான் அங்கு இறப்பவர்களின் சடலங்களில் வைத்து உடலை எரிக்கிறார்கள். தினமும் அங்கு 350 சடலங்கள் வரை எரிக்கப் படுகின்றனவாம். இங்கு உடல் எரிக்கப்படும் போது, உறவினர்களை அழ அனுமதிப்பதில்லை. யாராவது அழுதால் இறந்தவர் ஆன்மா மோட்சத்திற்கு சொல்லாது என்று கூறி அழுகைக்கு அணை போட்டு விடுகிறார்கள்.

விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து எட்டிப் பார்த்தால், அதே தெருவில் சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது அன்னபூரணி ஆலயம். தமிழ்நாட்டு கலைப்பாணி அதன் தனிச்சிப்பு. தமிழகத்து நாதஸ்வரம் எப்போதும் அங்கு இசையருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. அங்கு நிகழும் மரணம், எரிப்பு எல்லாவற்றிலும் இசை கலந்து மனித மனங்களில் துக்கம் ஏற்படாமல் இதமாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் இறந்தவரை முழு மனதோடு முழுமையாக வழியனுப்பி விட்டுச் செல்கிறார்கள்.

கங்கை நதி தனது கரைக் கரங்களால் காசி நகரை கிழக்கு- மேற்காக பிரிக்கிறது. மேற்கு கரையில் ‘மணிகர்ணிகா கட்’ உள்ளது. இது தான் பூமியில் முதலில் தோன்றியதாகவும் பூமி முடியும் வரை (இறந்த உடல்கள்) அங்கு எரிந்து கொண்டே இருக்கும் என்பதும் ஐதீகம். வருடத்தின் 365 நாட்களும், முழு நேரமும் ஓயாத தீயுடன் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.
இயந்திரமயமான உலகில் அங்கேயும், அதிலும் சுறுசுறுப்பு, உடலை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்காக தரையில் கிடத்துகிறார்கள். அதற்குள் உரிமையானவர் மொட்டை அடித்துக் கொள்கிறார். தகனம் செய்பவர் ‘ரெடி’ என்றதும் உடல், தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அணையா தீப மாய் எரியும் தீயில் இருந்து, தீயை எடுத்து சடலத்திற்கு ‘பொட்டு’ வைக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் பிடி சாம்பல். அது அப்படியே கங்கையில் கரைக்கப்படுகிறது. அவ்வளவுதான் வாழ்க்கை என்று உணர்த்தப்படுகிறது. அந்த ஜென்மத்திற்கு அங்கே விழுகிறது முற்றுப்புள்ளி. அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி இறந்து போன தன் மகன் லோகிதாசனின் உடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்கு வருவாள். அரிச்சந்திரன் அங்கே வெட்டியான்.

அவன் தன் மனைவியையும், மகனையும் அடை யாளம் காண்கிறான். ஆயினும் எரிப்பதற்குத் தேவையான பணத்தைக் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று பொதுநிலை தவறாமல் உண்மை பேசுகிறான். மரணத் தில் கூட மனசாட்சிக்கு பயப்படாமல் உண்மை பேசியதால் அரிச்சந்திரனின் உண்மை, உலகிற்கே உன்னதம் ஆனது. இந்த அரிச்சந்திரன் வெட்டியானாக இருந்து மகன் உடலை எரித்த ‘அரிச்சந்திர கட்’ கங்கை ஓரத்தில் உடல்களுக்காக காத்திருக்கிறது. இங்கு உடலை எரிப்பதை இந்துக்கள் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள்.

ஆனால் இறப்பு என்பது உண்மை’ என்று கருதுகிறவர்களில் ஒரு பகுதியினர் மறுபிறப்பு என்பதை நம்புகிறார்கள். ஒரு மனிதன் முக்தி அடையும் வரை அவன் மீண்டும், மீண்டும் பிறப்பான் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி யுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ‘காசியில் மரணம் முக்தியைத் தரும். அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்’ என்பது நம்பிக்கை யாக்கப்பட்டிருக்கிறது

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...