Thursday, March 7, 2024

கபிஸ்தலம் அருள்மிகு கஜேந்திர வரதன் ஆலயம்.*

*தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு கபிஸ்தலம் அருள்மிகு கஜேந்திர வரதன் ஆலயம்.*
*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள், கண்ணன்)

*உற்சவர்:*

செண்பகவல்லி

*அம்மன்/தாயார்:*

ரமாமணி வல்லி, பொற்றாமரையாள்

*தல விருட்சம்:*

மகிழம்பூ

*தீர்த்தம்:*

கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம்

*ஆகமம்/பூஜை:*

வைகானச ஆகமம்

*பழமை:*

1000-2000 வருடங்களுக்கு முன்

*புராண பெயர்:*

திருக்கவித்தலம்

*ஊர்:*

கபிஸ்தலம்

*மாவட்டம்:*

தஞ்சாவூர்

*மாநிலம்:*

தமிழ்நாடு

*பாடியவர்கள்:*

*மங்களாசாசனம்*

*திருமழிசையாழ்வார்*

*கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ மாற்றமும் சாரா வைகயறிந்தேன்- ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு*

*திருமழிசையாழ்வார்*

*திருவிழா:*

*ஆடி பவுர்ணமி கஜேந்திர மோட்சலீலை. வைகாசி விசாகம் தேர், பிரமோற்சவம். பெருமாளுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடக்கிறது.*

*தல சிறப்பு:*

*பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 9 வது திவ்ய தேசம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.*

*திறக்கும் நேரம்:*

*காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம்- 614203தஞ்சாவூர் மாவட்டம்.*

*போன்:*

*+91- 4374 - 223 434*

*பொது தகவல்:*

*இத்தல இறைவன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ககனாக்ருத விமானம் எனப்படும். கஜேந்திரன் என்ற இந்திராஜும்னன், முதலை யாயிருந்த கூஹு, பராசரர், ஆஞ்சனேயர் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.*

*பிரார்த்தனை:*

*ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.*

*நேர்த்திக்கடன்:*

*பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.*

*தலபெருமை:*

*இத்தலபெருமாளை ஆழ்வார், "ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்,' என பாடினார். அன்றிலிருந்து கண்ணன் என்ற பெயரே பெருமாளுக்கு வழங்கி வருகிறது. திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக் கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான், பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.*

*தல வரலாறு:*

*இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதுமில்லை. இவனும் யாரையும் காண்பதுமில்லை. இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் கோபக்கார துர்வாச முனிவர் அவனைக்காண வந்தார்.*

*இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பக்திக்குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த துர்வாசர், மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் வந்திருப்பதை அறியாமல் ஆழ்ந்த பக்தியில் மூழ்கியிருந்தான். இதனால் முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில்,""மன்னா! நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதாலும், நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்,''என சபித்தார்.*

*முனிவர் போட்ட கடும் சத்தத்தினால் கண்விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும், பாவி விமோசனமும் கேட்டான். இவனது நிலையுணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு, ""நீ யானையாக இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்'' என்று கூறினார்.*

*அத்துடன்,""ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ "ஆதிமூலமே!' என மகாவிஷ்ணுவை அழைக்க, அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி, உனக்கு மோட்சமும், சாப விமோசனமும் கிடைக்கும், ''என்றார். ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டிருந்தான்.*

*ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது. அருகிலிருந்த குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின் காலைப்பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர்,""நீ வருபவர்களையெல்லாம் காலைப்பிடித்து இழுப்பதால், முதலையாக மாறுவாய்,''என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான்.*

*அகத்தியர்,""கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக்காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்,''என்றார்.இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின் காலைக்கவ்வியது."ஆதிமூலமே! காப்பாற்று' என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணு வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித் ததாக வரலாறு.

Wednesday, March 6, 2024

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?*

*மஹா சிவராத்திரி  - 8 மார்ச் 2024 - வெள்ளிக்கிழமை  - இரவு*

*மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?*

விரதங்களில் மகத்துவம் மிக்கதும் தனிச் சிறப்பு மிக்கதும் சிவராத்திரி விரதமே ஆகும்.
###இது ஈசனை தேடி... குழுவின் பதிவு ###
மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதற்கு முந்தைய தினமான (வியாழன் 07/03/2024) அன்று ஒரு பொழுது மட்டும் உணவருந்தி,

மறுநாள்
 (வெள்ளி 08/03/2024) 
அன்று உபவாசம் இருந்து தூக்கம் 
களைந்து இரவு நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை பூஜித்து வழிபட்டு

அதற்கு அடுத்த நாள் (சனி 09/03/2024) காலை ஏழை-எளியவர்களுக்கு , அந்தணர்க்கு, தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, பிறகு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.

சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

மகா சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.

மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*சிவராத்திரி வரலாறு*

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்துப் பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது ‘சிவராத்திரி‘ என்றே - கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.
###இது ஈசனை தேடி... குழுவின் பதிவு ###
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவனைப் பூஜிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லா விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின்  வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
👇👇👇👇👇
http://m.youtube.com/@esanaithedi 

கடைபிடிக்க வேண்டிய விரத முறை

சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், 
ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.

விரதம் கடைப்பிடிப்போர்

சிவராத்திரிக்கு முதல் நாள்    (வியாழன் 07/03/2024)

அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும்.

தொடர்ந்து, சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.

அன்றைய தினம்  ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்

மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும்.

அன்று இரவு ( 07/03/2024) முழுவதும் சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும்.

மறு நாள் 
(வெள்ளி 08/03/2024)
அதாவது அன்று இரவு தான்
 சிவராத்திரி) அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவசிந்தனையோடு சிவாலயத்திற்கு போய் இறைவனை வணங்க வேண்டும்.

மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் ருத்திராட்ச மாலையுடன் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.
###இது ஈசனை தேடி... குழுவின் பதிவு ###
கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம்.

சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
👇👇👇👇👇
http://m.youtube.com/@esanaithedi 

மறுநாள் காலையில் (சனி 09/03/2024) விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும்

அன்னதானம் அளித்து விட்டு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.

சிவராத்திரி அன்று கண் விழித்த பின்னர் மறுநாள் பகல் பொழுதில் தூங்கக்கூடாது. சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை முடித்து, அன்றிரவும் எதுவும் உண்ணாமல் இருந்து உறங்க வேண்டும்.

சுருங்கக் கூறின் மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதற்கு முந்தைய தினமான ( 07/03/2024) அன்று ஒரு பொழுது மட்டும் உணவருந்தி,

மறுநாள் 
( 08/03/2024) அன்று உபவாசம் இருந்து தூக்கம் களைந்து இரவு நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை பூஜித்து வழிபட்டு

அதற்கு அடுத்த நாள் ( 09/03/2024) காலை ஏழை-எளியவர்களுக்கு , அந்தணர்க்கு, தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, பிறகு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும் 
ஓம் நமசிவாய

நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…



41.நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…

சங்கார தாண்டவம்
42.இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?

வெள்ளியம்பலம்(மதுரை)

43.மாலைவேளையில் இறைவன் 
மகிழ்ந்தாடும் திருநடனம்…

பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44.நடராஜருக்குரிய விரத நாட்கள்….

திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45.நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….

களி.

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்…

தாயுமானசுவாமி

47.பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்….

காளஹஸ்தி

48.வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்…

பிருங்கி

49.திருமூலர் எழுதிய திருமந்திரம் ….

திருமுறையாகும்

பத்தாம் திருமுறை

50.திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்…

திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

51.விபூதி என்பதன் நேரடியான பொருள்…

மேலான செல்வம்

52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்…

கஞ்சனூர்

53.ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?

12

54.மதுரையில் உள்ள சித்தரின் பெயர்….

சுந்தரானந்தர்

55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்…

ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)

56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி….

திலகவதி

57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்…

சேரமான் பெருமாள் நாயனார்

58.. “அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்’ என்ற அருளாளர்…

வள்ளலார்

59.மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை……

மங்கையர்க்கரசியார்

60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?

அரிமர்த்தனபாண்டியன்

61.திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்

மகேந்திரபல்லவன்

62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் …

தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)

63.சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?

எட்டு

64.மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?

மாசி தேய்பிறை சதுர்த்தசி

65.மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால
அபிஷேகம் நடக்கும்?

4 கால அபிஷேகம்

66.வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை
ஓதும்விதம்…..

நமசிவாய

67.முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி
ஓத வேண்டும்?

சிவாயநம

68.சிவசின்னங்களாக போற்றப்படுபவை…

திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம்
(நமசிவாய அல்லது சிவாயநம)

69.சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில்
லிங்கம் எவ்வகை?

அருவுருவம்

70.பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில்
உள்ள தலம்….

ராமேஸ்வரம்

71.சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்…

தட்சிணாமூர்த்தி

72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை
நடத்துவர்?

12

73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட
கோயில்…

குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

74.ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்…

வில்வமரம்

75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில்
அமைந்திருக்கும் ஏரி…

மானசரோவர்

76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

81

77.பதிகம் என்பதன் பொருள்…

பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

78.சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான
சாத்திர நூல்…

சிவஞானபோதம்

79.உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை….

டமருகம் அல்லது துடி

80.அனுபூதி என்பதன் பொருள்….

இறைவனுடன் இரண்டறக் கலத்தல்
ஓம் நமசிவாய... 

இந்த சிவராத்திரியில் இந்த 21 வில்வத்தைமனதால் மனதால் நினைத்து அர்ப்பணித்து மகிழ்வோம்...

இந்த சிவராத்திரியில் இந்த 21 வில்வத்தை
மனதால் தந்தை ஜோதியான விஸ்வநாதருக்கு அர்ப்பணித்து மகிழ்வோம்...
1) ஆத்மாவின் மனம் புத்தி சுபாவம் இந்த மூன்றையும் தந்தை சிவனுக்கு வாழும் வரை அர்ப்பணித்து விட வேண்டும்.

2) பிரம்மா விஷ்ணு சங்கரன் இம்மூவரையும் படைத்த மேலான பரம தந்தை சிவன் என்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

3) தான் ஒரு உடலற்ற ஆத்மா என்ற மெய் உணர்வையும் எனக்குள் எந்த ஒரு தீய குணங்கள் இல்லாத புனிதன் என்பதையும் நான் அகங்காரம் அற்றவன் என்பதையும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தனது நடத்தை இருக்க வேண்டும்.

4) எண்ணம் சொல் செயல் அனைத்திலும் தூய்மையும் நேர்மையும் இருக்க வேண்டும்.

5) உடல் மனம் பொருள் இவை யாவும் இறைவன் கொடுத்தது இறைவனுடைய சேவைக்கே அர்ப்பணம் என்று புரிந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

6) கடந்தது முடிந்தது நடப்பது மூன்றிலும் எனக்கு நன்மையே என்பதை உறுதியாக எண்ண வேண்டும்.

7) தனது பேச்சு எண்ணம் செயல் தனக்கும் இறைவனுக்கும் மற்றவருக்கும் மகிழ்ச்சி ஒன்றையே தர வேண்டும்.

8) சுயநலம் இச்சை பொய் மூன்றும் 
இல்லாது இருக்க வேண்டும்.

9) ஆரோக்கியம் செல்வம் மகிழ்ச்சி மூன்றும் நிரம்பிய வாழ்க்கையை வரமாக பெற்றிருக்க வேண்டும்.

10) அன்பு அறிவு ஆற்றல் இம்மூன்றும் நிறைந்த பொக்கிஷத்தை உலக நன்மைக்கான காரியத்தில் ஈடுபடுத்த வேண்டும்.

11) நட்பு உறவு தொடர்பு 
இம் மூன்றிலும் பாதுகாப்பு மற்றும் கவனமாக இருக்க வேண்டும்.

12) எந்த சூழ்நிலையிலும் கவலை பயம் குழப்பம் இம்மூன்றையும் பெருமானாருக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.

13) இறைதொண்டு 
இறைவனின் புகழ் பாடுதல்
இறை சிந்தையிலேயே நிலைத்திருத்தல்
இம்மூன்றையும் வாழும் வரை கடைபிடித்தல் வேண்டும்.

14) உள்நோக்கம் சமநிலையற்ற உபசரிப்பு பேதம் பார்ப்பது இம்மூன்றும் யாரிடத்திலும் கூடாது என்பதாக நினைத்து தந்தை ஈசனுக்கு வில்வத்தை அர்ப்பணிக்க வேண்டும்.

15) எதுவும் எடுத்துச் செல்லப் போவதில்லை. 
இந்த உடல் புண்ணிய காரியம் செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வாழும் வரை ஆத்மாவாகிய நான் தந்தை ஈசனின் புகழை பாடிக்கொண்டே இருப்பேன்இம்மூன்றையும் நினைவில் வைத்து தந்தை ஈசனுக்கு வில்வத்தை அர்ப்பணிக்க...

16) மாயை ஆசையின் மூலமாகத்தான் உட்புகுகின்றது. பற்றின் மூலமாகத்தான் உலக பந்தத்தை உருவாக்குகின்றது. ஈர்ப்பு மூலமாகத்தான் கர்மா உருவாகின்றது. எனவே அந்த ஆசை பற்று ஈர்ப்பு இம்மூன்றும் தந்தை ஈசனைத் தவிர வேறு எதன் மீதும் ஈடுபடாதிருக்க வேண்டும் என வில்வத்தை மனதால் தந்தை ஈசனுக்கு அர்ப்பணிக்க...

17) சிவ சிந்தையை ஆக்கல் 
சிவ சிந்தையை காத்தல் 
சிவ சிந்தைக்கு புறம்பானதை அழித்தல்
இந்த ருத்ராட்சத்தை எப்பொழுதும் மனதில் அணிந்திருப்பேன் என வில்வத்தை தந்தை ஈசனுக்கு அர்ப்பணிப்பீராக...

18) அன்பு சமாதானம் ஆனந்தம் இந்த மூன்று நிலையில் நிலைத்திருந்து தந்தை ஈசனுடன் இணைந்து இருப்பேன் என்று வில்வத்தை அர்ப்பணிப்பீராக...

19) உலகம் ஒரு குடும்பம் அதில் அனைவரும் ஆத்மாக்கள். அந்த குடும்பத்திற்கு தகப்பன் தந்தை ஈசன் அவர் பரமாத்மா. இந்த உலகம் ஒரு நாடக மேடை இதில் அனைவரும் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இம்மூன்றையும் நினைவில் எப்பொழுதும் வைத்திருப்பேன் என்று வில்வத்தை அர்ப்பணிப்பீராக...

20) தர்மம் தானம் நிதானம் மூன்றும் ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு காரியத்திலும் தந்தை ஈசனின் துணையுடன் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என்று வில்வத்தை மனதால் தினமும் தந்தை ஈசனுக்கு அர்ப்பணித்து மகிழ்வீராக...

21) எப்பொழுதும் துணை நிற்பவர் தந்தை ஈசன் எப்பொழுதும் ஆபத்தில் பாதுகாப்பவர் தந்தை ஈசன்
எப்பொழுதும் துன்பத்தின் துயரத்தை துடைப்பவர் அந்த பரமாத்மாவான மேலான தந்தை ஈசன் என்பதை சதாகாலம் நினைவில் வைத்து மனதார வில்வத்தை தந்தை ஈசனுக்கு அர்ப்பணித்து மகிழ்வோமாக...

நாம் வாழும் வரை நம் ஒவ்வொருவருக்கும் இரு புருவ மத்தியில் ஜோதியாகிய ஆத்மா என்ற கண் விழித்திருக்கும் வரை தந்தை பரமாத்மா சிவன் நமக்கு முன்பாக சத்தியத்தின் ஜோதி வடிவமாக தென்பட்டு கொண்டே இருப்பார். அவரை நினைக்கும் நேரம் எல்லாமே நாம் சிவராத்திரியில் தான் இருக்கின்றோம். அவ்வாறு நாம் அவரை நினைத்து நமது பாவங்கள் அனைத்தும் அழிவதற்கு இந்த 21 வில்வங்களை சதா சர்வ காலங்களிலும் மனதால் அவருக்கு அர்ப்பணிப்போம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

மகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்.



மகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்?
மகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது நல்லது?

சிவனுக்கு உரிய நாளான மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால் ஒருவர் நினைத்த காரியம், ஆசை மற்றும் அவர்களின் கஷ்டங்கள் நீங்கி சுகமுடன் வாழலாம்.

இந்நாளில் சிவபெருமானுக்கு பூஜை செய்வதால் சிவனின் அருள்பார்வையை பெறலாம். அதிலும் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் சிவனின் அருளை முழுமையாக பெறமுடியும் என தெரிந்துகொண்டு அபிஷேகம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா...!

மேஷ ராசி 

மேஷ ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்குப் படைத்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் நினைத்தது அனைத்தும் நடக்கும்.

ரிஷப ராசி 

ரிஷப ராசிக்காரர்கள், தயிரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மிதுன ராசி 

மிதுன ராசிக்காரர்கள், சிவலிங்கத்தை கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் ஆசைகள் நிறைவேறும்.

கடக ராசி

கடக ராசிக்காரர்கள், சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மந்தாரைப் பூவால் அலங்கரித்தால், நினைக்கும் காரியம் கூடிய விரைவில் நடக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவப்பு சந்தனம் கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், சிவன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குவார்.

கன்னி ராசி 

கன்னி ராசிக்காரர்கள், பால் மற்றும் நீரால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நல்ல ஆரோக்கியத்தை அருள்வார்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்கள், பசு மாட்டுப் பாலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வாழ்வில் நல்ல செல்வ செழிப்போடு இருக்க அருள்புரிவார்.

விருச்சக ராசி 

விருச்சக ராசிக்காரர்கள், தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்கள், குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தைப் படிக்க வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கும்.

மகர ராசி

மகர ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தைப் படைத்தால், வாழ்வில் எதிலும் வெற்றிக் கிட்டச் செய்வார்.

கும்ப ராசி

மகாசிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள், இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நிதி ஆதாயம், லாபம் கிடைக்க உதவுவார்.

மீன ராசி

மீன ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், செல்வ செழிப்போடு இருக்க வழி வகுக்கும்

 எல்லா வளமும் பெற மகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி?

🌷 மகாசிவராத்திரி விரத முறை..!

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகாசிவராத்திரிதான். அதனால்தான் மகாசிவராத்திரியன்று நாம் சிவபெருமானை வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் போய்விடும் என்று கூறுகின்றனர். மகாசிவராத்திரியன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும். விரதம் இருப்பதால் உண்டாகும் பலன் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

👉 சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை.

👉 சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம்.

👉 மனிதர்களுக்கு ரொம்ப முக்கியமானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.

  👉 மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்தால் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்று ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விரதத்தை 24 அல்லது 12 வருடங்களாவது மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் வாழ்வில் எல்லா வளமும் வந்து சேரும். 

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

👉 மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

👉 சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும்.

👉 தொடர்ந்து, சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும்.

👉 வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம். அருகில் உள்ள சிவன் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் வழிபடலாம்.

👉 பூஜையின் போது சிவாய நம என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனோ சக்தியை கொடுக்கும்.

👉 பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகச் சிறந்த பலனை தரும். அன்றைய தினம் இரவில் தூங்கக்கூடாது.

👉 நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, சிவனை வழிபட்டு, ஏழை-எளியவர்களுக்கு தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

👉 சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேதயாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பதற்கு ஈடாகாது என்பர்.

மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று மாத சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் மட்டும் சிவராத்திரி, மகா சிவராத்திரி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபடுவார்கள். உலகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

மகிமை மிக்க இந்த மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது.

விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டையைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார். அந்த நெருப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.

அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் “எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்” என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்புப் பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.

பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறேன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை. இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற்சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிடம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.

ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார்.

நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான்.... நெருப்புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமான் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.

விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலராவாய் என்றும் சாபமிட்டார்.

இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்துதான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.

இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் “லிங்கோத்பவர்” வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவராத்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி விழா தோன்றிய தலமும் திருவண்ணாமலையே.

திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்குப் பரவியது.

சிவபெருமானுக்குரிய முக்கிய 25 வடிவங்களில் முதலாவது அமைவது லிங்கோத்பவர் வடிவம்தான். லிங்கம் என்பது சிவ வடிவம். அந்த லிங்கத்தில் இருந்து தோன்றிய உருவம்தான் லிங்கோத்பவர். அதாவது லிங்கத்துக்கு தலை, கை, கால் முளைத்தால் கிடைக்கும் உருவம்தான் லிங்கோத்பவர்.

சிவபெருமான் முதலில் உருவம் இல்லாமல் அருவமாகத்தான் இருந்தார். ஆனால் உலக உயிர்கள் முன்பு தோன்ற நினைத்தபோது அருவுருவாகவும், பிறகு உருவமாகவும் தோன்றினார். அருவத்துக்கும், உருவத்துக்கும் இடையில் நின்றதே அருவுருவமாகும். இதுதான் திருவண்ணாமலையில் நெருப்புப் பிழம்பாக நின்ற லிங்கோத்பவர் உருவமாகும். எனவேதான் திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் வழிபாடு, மிக, மிக சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதை காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

பொதுவாக லிங்கோத்பவரை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். மலையில் இருட்டத் தொடங்கும் நேரத்தில் இவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் நமது ஆணவம், அகந்தை எல்லாம் ஓடோடி விடும்.

மகாசிவராத்திரி நாளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களில் மூன்றாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அருவுருவமாக லிங்கோத்பவர் அருள்பாவித்த காலமாக இதை சொல்கிறார்கள்.

ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் மகா சிவராத்திரியின் இரண்டாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கோத்பவர் முதன் முதலில் திருவண்ணாமலையில் தோன்றியவர் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் மற்ற தலங்களுக்கு முன்பாக இரண்டாம் ஜாமத்திலேயே திருவண்ணாமலையில் பூஜைகள் நடத்தப்படுவதாக ரமேஷ் குருக்கள் தெரிவித்தார்.

உலக உயிர்கள் “நான்”, “எனது” என்பன போன்ற ஆணவம், அகந்தை கொள்ளாமல், தானும் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறு அணுவே என்பதை உணர்ந்து புரிந்து கொள்வதே லிங்கோத்பவர் வடிவத்தின் தத்துவமாக உள்ளது. இந்த வடிவை வழிபட்டால் உடல் நலமும், மோட்ச பிராப்தமும் கிடைக்கும். எனவேதான் இந்த வழிபாட்டை, “மோட்ச பிரதாயினி” என்று சொல்கிறார்கள்.

லிங்கோத்பவர் பூஜையின்போது மட்டும் சுவாமிக்கு நெய்பூசி, வெண்ணீர் அபிஷேகம் செய்து, பிறகு கம்பளி போர்த்தி தாழம்பூ சூட்டுவார்கள். இந்த ஒரு காலத்தில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ அணிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரியன்று இந்த பூஜையை நேரில் பார்த்து தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கெல்லாம் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்படும். பிறகு தங்கக்கவசம் அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெறும்.

அன்றிரவு 4 ஜாம பூஜைகள் நடத்துவார்கள். இரவு 7 மணிக்கு முதல் ஜாம பூஜை, 11 மணிக்கு இரண்டாம் ஜாம பூஜை நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் ஜாம பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் ஜாம பூஜை நடத்துவார்கள்.

இதில் இரவு 11 மணி முதல் 1 மணி வரையிலான இரண்டாம் ஜாம பூஜை லிங்கோத்பவருக்கான பூஜையாக நடைபெறும். அடி, முடி காண முடியாதபடி சிவபெருமான் நெருப்புப் பிழம்பாக நின்ற நேரம் அது. எனவே இந்த நேரத்தில் லிங்கோத்பவரை வழிபாடு செய்வதும், கிரிவலம் வருவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்காக இரவு முழுவதும் பன்னிரு திருமுறை இசைக் கச்சேரி நடைபெறும். ராஜகோபுரம் அருகே 108 தவில், நாதஸ்வர வித்வான்களின் கச்சேரி நடக்கும்.

கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வைப்பார்கள். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் லட்சதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரி தினத்தன்று லட்ச தீபத்தை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அது மட்டுமல்ல, கிரிவலம் வரும் பக்தர்கள், மகாசிவராத்திரி தினத்தில் மட்டும் வில்வ கூடையை ஏந்தியபடி கிரிவலம் செல்வது வித்தியாசமாக இருக்கும். நெருப்பு மலையாக இருக்கும் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்த பக்தர்கள் கூடை, கூடையாக வில்வம் எடுத்துச் செல்கிறார்கள் என்பது ஐதீகமாகும். சிவராத்திரி கிரிவலம் காரியசித்தி தரும் என்பார்கள்.

சிவபெருமான் நெருப்பு மலையாக உருவெடுத்தது பற்றி பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழக்கூடும். கார்த்திகை தீபத்தன்றுதானே ஈசன் நெருப்பு உருவில் தோன்றினார் என்று நினைக்கலாம்.

உண்மையில் சிவபெருமான் திருவண்ணாமலையில் இரண்டு தடவை ஜோதி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மாசி மாதம் விஷ்ணு, பிரம்மாவின் ஆணவத்தையும், அகந்தையையும் விரட்ட நெருப்புப் பிழம்பாக வந்தார். கார்த்திகை மாதம் அம்பாளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தப்போது ஜோதிச்சுடராக வந்தார். முதல் ஜோதி தரிசனத்துக்கும் இரண்டாம் ஜோதி தரிசனத்துக்கும் வித்தியாசம் உள்ளதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாசியில் நெருப்புப் பிழம்பு, கார்த்திகையில் ஜோதி சுடர்.

சிவபெருமான் ஜோதி ரூபமாக வெளிப்பட்டதால்தான் திருவண்ணாமலை தலம், “அக்னி தலம்” என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அண்ணாமலையார் சன்னதியின்அர்த்த மண்டபத்தில் சிறிது நேரம் நின்று பாருங்கள்... அனல் வீசுவதுபோல இருக்கும். வியர்த்துக் கொட்டும். திருவண்ணாமலை நெருப்புத்தலம் என்பதை உறுதிப்படுத்த இந்த உதாரணம் ஒன்றே போதும் என்கிறார் ரமேஷ்குருக்கள்.

சமீபத்தில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அணுவில் உள்ள எலக்ட்ரானுக்குள்ளும் லிங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். எலக்ட்ரானுக்குள்ளும் பச்சை நிற வட்டமும, நடுவில் செந்நிறமான ஜோதி வடிவமும் இருப்பதைக் கண்டார்கள். இது திருவண்ணாமலையில் பச்சை பசேல் இயற்கை வளத்துக்கிடையே ஈசன் நெருப்புப் பிழம்பாக தோன்றியதை பிரதிபலிப்பதாக ஆன்மிக பெரியவர்கள் சொல்கிறார்கள்.

அந்த நெருப்பு மலைதான் பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக விஷ்ணு, பிரம்மா வேண்டுதலின்பேரில் சிறு லிங்கமாக மாறியது. அந்த லிங்கத்தை சுற்றியே தற்போதைய ஆலயம் உருவானது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, March 5, 2024

முக்தித் தலங்கள்* *ஐந்து*

*முக்தித் தலங்கள்* *ஐந்து* 
பிறவி நோய் உள்ளவர்களை வழிபடாமல்  பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தீஸ்வரரை வைதீஸ்வரரை வழிபடும் மெய்யடியார்களுக்கு       பிறப்பு இறப்பு நீக்கிப் பிறவா நிலையாகிய  பேரின்பம் அளித்து சிவ லோகத்தில் சேர்க்கும் ஈசனுக்கு முத்தன் முக்தீஸ்வரன் என்று திருநாமங்கள்.

*முத்தி தந்து இந்த மூவுலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் அத்தன்* 

*செடி சேர் உடலைச் செல நீக்கிச் சிவ லோகத்தே நமை வைப்பான்*
(திருவாசகம்) 

*முத்தன் முத்தி வழங்கும் பிரான்* ( திருக்கோவையார்) 

என  அடியார்களுக்கு முக்தி அருளும் பல தலங்களில் 
 திருவாரூர், திருவண்ணாமலை ,
திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில்,
சிதம்பரம் ,
காசி
ஆகிய  *ஐந்து தலங்கள் முக்தித்  தலங்கள் என்று புகழ் பெற்றன*.

திருவாரூரில் பிறக்க 
திருவண்ணா மலையை நினைக்க
திருப்பெருந்துறையை 
வாழ்த்த
சிதம்பரத்தை தரிசிக்க
காசியில் இறக்க முக்தி உண்டாகின்றது.

1 *திருவாரூர்*

பிறந்த நாள் காண்பவர் எல்லாம் பிறந்தவர் அல்லர். 
ஈசனை நாள்தோறும் நினைந்து  சிவ மகிமை போற்றி வாழ்பவரே  பிறந்தவர். 
*பரமேஸ்வரனைப் போற்றாத நாள் யாவும் பிறவா நாளே*.   

*பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே*(அப்பர்) 

என  திருவாரூரில் பிறந்தும்  *ஈசன் நாமம் பேசத் தெரியாதவர்கள் பிறக்காதவர்களே*. 
      ஆதலால் அவர்களுக்கு முக்தி இல்லை.  

2 *திருவண்ணாமலை*

*நீதியே நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே*(அப்பர்) 

*மறவாதே நினைக்கின்றேன் மனத்து  உன்னை*(சுந்தரர்)  

என  பிற நினைவு இல்லாமல் சிவ நினைவு நீங்காமல் *அண்ணா மலையாரை மட்டுமே  நினைத்து வாழ்பவருக்கு  முக்தி அருளும் தலம்* திருவண்ணாமலை 

திருவண்ணா மலையில் பிறந்து வளர்ந்தும் *அண்ணா மலையார் கோயிலுக்குச் சென்றும்* *அண்ணாமலையார் பற்றிய நினைவே இல்லாமல்* கோபுர வாசலில் உள்ள உருவங்களையும்   சந்நிதிகளையும் பாடி வாழ்ந்த *துர்பாக்கிய மனிதர் அருணகிரி நாதர்*.  

எங்கோ மதுரை அருகே திருச் சுழியலில் பிறந்த *ரமணர்  அண்ணா மலையை நினைத்துக் கொண்டு வந்து இறுதி மூச்சு வரை  *அருணாச்சலா அருணாச்சலா* என்று வாழ்ந்தார். 

⚜️ *பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப் பெற்றேன்*  (சுந்தரர்) 

என *இது அவர் செய்த பாக்கியம் . புண்ணியப் பலன்*

3 *திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில்* .

*பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக் கருவும் கெடும் பிறவிக் காடு*(திருவாசகம்) 

என  *மாணிக்க வாசகரை ஆட்கொண்ட* *தட்சிணா மூர்த்தி*  திருப் பெருந்துறை *ஆளுடை நாயகனைப் போற்றி*  வணங்குபவருக்குப் பிறவி இல்லாத முக்தி உண்டாகிறது.   

*அடியோம் அடிக்குடில் ஒருத்தரும்  வழாமை ஒடுக்கினன்*

என  மாணிக்க வாசகர் குடும்பம் முழுவதும் திருப்பெருந்துறையில் தோன்றிய பரஞ்சோதியில் புகுந்து முக்தி பெற்றனர்.

 *4. சிதம்பரம்* 

*அப்பனாய் அம்மையாய் இருபால் அம்மை யப்பனாய் அருள் பொழியும்* 
நடராஜரை தரிசித்து  அவரைப் பார்த்த கண்ணால் *வேறு யாரையும் தரிசிக்காமல்  சிவ தரிசனம் மட்டுமே செய்து வழிபடுபவருக்கு முக்தி அருளும்* தலம் சிதம்பரம்.

 *கண் கொண்டு  காண்பது  என்னே* ? 

என்று இதை ஒரு பதிகம் முழுவதும் திருநாவுக்கரசர் கூறுகிறார்.  

*அம்மை குலாத் தில்லை ஆண்டானை*( திருவாசகம்) 

*பெண்ணுமாய் ஆணும் ஆகிப்   போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி*(சேக்கிழார்) 

*முத்தன் முத்தி வழங்கும் பிரான் எரி யாடி*
(திருக்கோவையார்) .


 5.*காசி* 

*சிவ நாமம் ஓதி இறப்பவருக்கு* முக்தி அருள்வது காசி. 

        *பறக்கின்ற ஒன்று* பயன் உற வேண்டில் 
         **இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்* 
         *சிறப்பொடு சேரும் சிவ கதி* 
பின்னைப் 
            *பிறப்பு ஒன்று இலாமையும்  பேருலகு ஆமே* ( திருமந்திரம் ) 

என  *சிவ நினைவோடு பிரியும் உயிர்களுக்கு இனிய முக்தி வழங்குவதால்* அவி முக்தம் என்று காசிக்குப் பெயர்.  
ராமன்  அதாவது ரம்மியமானவன் (இனியன்)  என்று விஸ்வ நாதருக்குத் திரு நாமம் .

மதுரையில் பரிமேல் அழகன் மறைந்த பின் உண்டான  அருள் ஜோதியில் மாணிக்க வாசகர்  அன்பர்களைப் புகுவித்து யாத்திரைப் பதிகம் பாடி முக்தி அடையச் செய்தார்.

நல்லூர்ப் பெருமணம் எனப்பட்ட ஆச்சாள் புரத்தில் திரு ஞான சம்பந்தர் தன் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் பரஞ்சோதியில் புகுவித்து முக்தி அடையச் செய்து நமசிவாயப் பதிகம் பாடினார்.
 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Monday, March 4, 2024

மஹா சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்

மஹா சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள் பற்றிய பதிவுகள் :
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

'சிவ' என்ற சொல்லே 'மங்களம்' என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிவராத்திரிகளில், மாத சிவராத்திரி, யோகசிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மஹாசிவராத்திரி என்று ஐவகை உண்டு. இதில் மகாசிவராத்திரி விரதமே மிகப் பெரும் வழிபாடாகக் கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி தினத்தன்று, ஒரு வில்வமரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்கு, இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து, வில்வ இலைகளைப் பறித்து, அந்த மரத்தின் கீழே போட்டுக் கொண்டிருந்தது. அந்த மரத்தடியில் அச்சமயம், சிவனாரும் உமையம்மையும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். குரங்கு அறியாமல் செய்த பூசனையை ஏற்று, சிவனார், மறுபிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார்.

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று காலை நீராடி, இறைவனை நினைத்து, விரதம் நன்முறையில் நிறைவேறப்  பிரார்த்திக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, இறைச்சிந்தனையில் இருக்க வேண்டும்.

மாலையில் வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வில்வத்தால்  பூஜை செய்ய வேண்டும். இரவு நான்கு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். சிவராத்திரி இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையே லிங்கோற்பவ நேரம் எனப்படுகிறது. ஆகவே நான்கு காலங்களிலும் பூஜை செய்ய முடியாதவர்கள், லிங்கோற்பவ காலத்திலாவது பூஜை செய்ய வேண்டும். இயலாதவர்கள், கோவிலில் நடைபெறும் நான்கு கால வழிபாடுகளிலும் பங்கு கொள்ளலாம்.

சிவபெருமான் அபிஷேக பிரியர். ருத்ராபிஷேகம், என்பது சிவனாருக்கு செய்யப்படும் அபிஷேகம், மந்திரப்பூர்வமாக செய்யப்படும் இது மிகச் சிறப்பு வாய்ந்தது. ருத்ராபிஷேகத்தைப் பற்றிய விவரங்கள் அறிந்து, இதை இல்லத்தில் செய்ய இயலாவிட்டால், ஆலயங்களில் செய்யலாம். சிவராத்திரி அன்று ருத்ராபிஷேகம் செய்வது மிக சிறப்பு.

மறுநாள் காலை தீபாரதனை செய்து விரதம் நிறைவு செய்ய வேண்டும். இல்லத்தில் பூஜை செய்திருந்தால், புணர்பூஜை செய்து, சிவனாரை உத்யாபனம் செய்ய வேண்டும்.

*சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்*

யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மற்ற விரதங்கள் அனைத்தும் கடைப்பிடித்தவருக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால் சிவராத்திரி விரதம், கடைப்பிடித்தவருக்கு மட்டுமின்றி அவரது தலைமுறைக்கே ஈடு இணையற்ற புண்ணியத்தை தரும்.

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர் சிவசாயுஜ்ய நிலையை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.

அர்ஜுனன் சிவராத்திரி விரதத்தை கடைபிடித்தே பாசுபதாஸ்திரம் பெற்றான். கண்ணப்ப நாயனார் தம் கண்களை சிவனாரின் திருமேனியில் இட்டு, தம் அசையாத பக்தியால் முக்தி பெற்ற தினமும் சிவராத்திரியே, சிவராத்திரி விரத மகிமையாலேயே, அம்பிகை இறைவனின் உடலில் சரிபாதியைப் பெற்றார். சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக, காலனை உதைத்து, காலகண்டேசுவரர் என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி தினத்தன்றுதான்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் பலன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள எட்டு திசை லிங்கங்களே (அஷ்ட லிங்கங்கள்) நவகிரக தோஷங்...