Friday, December 27, 2024

சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென் றால் ஐந்து வருடங்கள் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்.

அழியா வரம் வேண்டி அசுரர்களுடன் சேர்ந்து தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது ஆல கால விஷம் உருவானது அந்த விஷம் உலகை அழித்துவிடாதபடி அதை ஒன்றுதிரட்டி அருந்தி விட்டார் சிவபெருமான். 
🕉அதைக்கண்டு பதறிய பார்வதி தேவி, விஷம் உள்ளே இறங்கி விடாமல் கழுத்தைப் பற்றி, விஷம் அவருடைய கண்டத்தில், அதாவது கழு த்திலேயே தங்கும் படி செய்தாள். இதையொட் டியே சிவனாருக்கு திருநீலகண்டன் என்றும் திருப்பெயர் உண்டு.

🕉விஷம் அருந்திய சிவப்பரம்பொருளின் அரு ளாடல் தொடர்ந்தது. அதீத களைப்பு மேலிட்டது போல் அப்படியே படுத்துவிட்டார் சிவனார். இதனால் ஆதிசக்தி முதலாக அண்டபகிரண் டமும் கலக்கம் அடைந்தது. விரைவிலேயே அவர்கள் கலக்கம் நீங்கும் வகையில் கண்வி ழித்த சிவனார் ஆனந்த தாண்டவம் புரிந்தார். அப்படி, அவர் ஆனந்தத்துடன் திருநடனம் புரிந்தது பிரதோஷ காலம். 

🕉பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி தினத் தில்; களைப்புற்றவராக பள்ளி கொண்டது துவாதசித் திருநாளில். உலக உயிர்கள் மேன்மையுறும்பொருட்டு அவர் சந்தியா தாண்டவம் ஆடியது. திரயோதசி புண்ணிய தினத்தில், பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா காலத்தில்! 

🕉புனிதமான இந்தக் காலத்தையே பிரதோஷ வேளையாகக் கருதி, சிவபூஜை செய்து வழிபடுகிறோம். தொடர்ந்து 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் சிவாலய தரிசனத்தை முறைப்படி செய்பவர்கள், சாரூப பதவி பெற்று சிவ கணங்களாகத் திகழ்வர் என்கின்றன புராணங்கள். 

🕉அதிலும் சனிக்கிழமையுடன் இணைந்து வரும் சனி மஹா பிரதோஷம் மிகச் சிறப்பானது. சிவபெருமான் விஷம் அருந்தி சயனித்து எழுந்து, ஒரு சனிக்கிழமை மாலையில் தான் முதன் முதலாக சந்தியா தாண்டவத்தை நிகழ்த்தினார் என்பதால் சனிக் கிழமை வரும் பிரதோஷம் மிகச்சிறப்பாக அனுஷ்டிக்கப் படுகிறது.

🕉உஜ்ஜயினியில் நிகழ்ந்த ஒரு திருக்கதையை படித்தால், சனிப் பிரதோஷத்தின் மகத்துவம் இன்னும் தெளிவாக விளங்கும்.

🕉சனிப் பிரதோஷத்தை மெச்சிய ஆஞ்சநேயர்

🕉உஜ்ஜயினி நாட்டின் அரசர் சந்திரசேனன்; உஜ்ஜயினி ஈஸ்வரனான வீரமாஹாளர் மீது அதீத பக்தி கொண்டவர். ஒருமுறை இவரது அரண்மனைக்கு வந்த மாணிபத்திரர் என்ற சிவகணநாதர், மன்னனுக்கு உயரிய சிந்தாமணி ரத்தினம் ஒன்றை பரிசளித்தார்.

🕉அந்த ரத்தினம் மிகவும் மகத்துவமானது. அதன் உன்னதத்தை அறிந்த அண்டை நாட்டு வேந்தர்கள், ரத்தினத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இல்லையேல் போர் மூளும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அவர்களது இந்த அறைகூவலை சந்திரசேனன் கண்டுகொள்ளவே இல்லை.

🕉அதனால் கோபம் கொண்ட அந்த மன்னர்கள் பெரும்படையுடன் வந்து உஜ்ஜயினியை முற்றுகையிட்டனர். எந்த நேரமும் போர் மூளும் அபாயம்.

🕉உஜ்ஜயினி மன்னரான சந்திரசேனன் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. வீரமாகாளர் கோயிலுக்குச் சென்றார். முறைப்படி பூஜை செய்து, முப்புரம் எரித்தவனை முழு மனதோடு தியானம் செய்தார். அரசர் செய்த அத்தனை பூஜைகளையும் அங்கே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான், யாதவ குலச் சிறுவன் ஒருவன். உடனே அவன் மனதில், ‘நாமும் இதே போல பூஜை செய்ய வேண்டும்!’ என்ற எண்ணம் உண்டானது. வீடு திரும்பினான்.

🕉மறுநாள் பொழுது விடிந்தது. சிவபூஜையை ஆரம்பித்தான். கருங்கல் ஒன்றை எடுத்து, சிவலிங்கம் போல நட்டு வைத்தான். மணலையும் பச்சை இலைகளையும் பூஜைப் பொருட்களாக எடுத்து வைத்துக் கொண்டான். ‘சந்தனம், மாலை, அபிஷேகத் தீர்த்தம், தூபம், தீபம், சாமிக்கு உண்டான ஆபரணம், ஆடை, நைவேத்திய சாதம்’ என்று சொல்லி மணலை யும் பச்சை இலைகளையும் தனித் தனியே பங்கீடு செய்து பிரித்து வைத்து கொண்டான். அவற்றால் அன்போடு அரனை பூஜை செய்தான். பூஜை முடிந்ததும் தியானத்திலும் ஆழ்ந்தான்.

🕉நேரம் இரவு ஆனது. அவனின் தாயார் சாப்பிட அழைத்தாள். தியானத்தில் இருந்தவன், அவள் மீண்டும் மீண்டும் குரல்கொடுத்தும் பதிலே சொல்லவில்லை. ஆதலால், கோபத்துடன் வெளியே வந்தாள். அவனை நன்கு அடித்தது டன், சிவலிங்கமாக அவன் வைத்து பூஜித்த கருங்கல்லையும் பிடுங்கி எறிந்து, வீட்டுக்குள் சென்று படுத்துத் தூங்கி விட்டாள்.

🕉அவள் மகனோ... ‘‘ஐயோ, என் ஸ்வாமியை எடுத்து எறிந்து விட்டாளே அம்மா!’’ என்று கதறித் துடித்து மயங்கி விழுந்தான். இரண்டு நாழிகை (48 நிமிடங்கள்) ஆயிற்று. அவனுக்கு மயக்கம் தெளிந்தது. மெள்ள நிதானித்து எழுந்தான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. வீடெங்கும் ரத்தினமும் தங்கமும் இறைந்து கிடந்தன. அவன் அம்மா வால் எடுத்து எறியப்பட்ட கல்லால் ஆன சிவலிங்கமும், ரத்தின மயமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. சிறுவன் ஆனந்தத்தில் மிதந்தான். சிறுவனின் தாயார் திடீரென்று விழித்தெழுந்தாள். வீடு முழுவதும் தங்கம் மற்றும் ரத்தின மயமாக இருந்ததைக் கண்டு வியந்தாள்.

🕉தகவல் அரசருக்கும் எட்டியது. அரசர் உடனே ஆயர்சேரிக்குக் கிளம்பினார். அங்கே எழுந்தருளி இருந்த இறைவனை வலம் வந்து வணங்கினார். யாதவ சிறுவனை நெஞ்சோடு நெஞ்சாகத் தழுவிக் கொண்டார். ஊரார் எல்லாம் சிவ நாம கோஷம் செய்தார்கள். 

🕉ஊருக்குள் கேட்ட மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கேட்டு பகை அரசர்கள் திகைப்பில் ஆழ்ந்தா ர்கள். ஒற்றர்களை அனுப்பி காரணத்தை தெரிந்து கொண்டவர்கள், சிவனருளை அறிந்து சிலிர்த்தார்கள். படைகளைத் திருப்பி அனுப்பி விட்டு, ஊருக்குள் வந்து சந்திரசேன னிடம் மன்னிப்பு வேண்டியதுடன், யாதவச் சிறுவனின் பக்திக்காகத் தோன்றி அருள் புரிந்த சிவலிங்கத் தையும் தரிசித்து மகிழ்ந் தார்கள். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த அந்த நேரத்தில், ஆஞ்சநேயர் அங்கு வந்தார். அவருக்கு சகல மரியாதைகளும் செய்து வழிபட்டார் சந்திரசேனன்.

🕉யாதவ சிறுவனை நெஞ்சோடு தழுவி அணை த்துக் கொண்டார் ஆஞ்சநேயர். ‘‘மன்னர்களே! அனைவரும் கேளுங்கள்! ஒன்றும் தெரியாத இந்தச் சிறுவனின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவ பெருமான் தரிசனம் தந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? இதற்குக் காரணம், சந்திரசேன மகாராஜா சனிப் பிரதோஷம் அன்று சிவபெ ருமானைப் பூஜை செய்ததைப் பார்த்து, இந்தச் சிறுவனும் சிவ பூஜை செய்ததுதான். சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததனால் அடையு ம் பலன், இந்த அளவோடு நின்றுவிடாது.

🕉இந்தச் சிறுவனின் பரம்பரையில் எட்டாவது தலைமுறையில் மஹாவிஷ்ணு, ‘கிருஷ்ணன்’ என்ற திருநாமத்துடன் அவதாரம் செய்வார். அவரை வளர்க்க இருக்கும் நந்தன் என்னும் ஆயர்கோன் ஒருவன், இந்தக் குலம் பெருமை அடையுமாறு தோன்றுவான். இன்று முதல் இந்தச் சிறுவனை ‘ஸ்ரீதரன்’ என்று அழையுங்க ள்!’’ என்ற ஆஞ்சநேயர், ஸ்ரீதரனுக்குச் சிவ பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளை உபதேசித்துச் சென்றார்.

🕉சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததற்கே இவ்வளவு பலன் என்றால், விரதம் இருந்து பூஜிப்ப வர்கள் அடையும் பலனை அளவிட முடியுமா?

🕉சனிப் பிரதோஷத்தின் சிறப்பை அறிந்தோம். இனி பிரதோஷ தினத்தில் நந்தியெம் பெருமானை வழிபடுவது பற்றி அறிவோம்.

🕉நந்தி தரிசனம்
****************
🕉பிரதோஷ வேளையில் நந்திக்குத் தனி சிறப்பு உண்டு. இந்த வேளையில் மூலவரை நந்தியம் பெருமானின் கொம்புகளுக்கு இடையேயுள்ள இடைவெளியின் வழியே தரிசித்து வணங்க வேண்டும்.

🕉சிவபெருமான் விஷம் உண்டு சயனித்துத் திரு விளையாடல் புரிந்த பிறகு எழுந்து, அம்பிகை தரிசிக்கும்படி சந்தியா நிருத்தம் ஆட, அதைக் கண்ட நந்திதேவர், ஆனந்த நிலையால் உடல் பருத்தார். அதனால், கயிலாயமே மறைக்கப் பெற்றது. நந்தியின் கொம்புகளுக்கு இடையே இருந்த இடைவெளி யில், ஈசனின் நடனத்தை தேவர்கள் கண்டு களித்தார்களாம். இதையொ ட்டியே, பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே சிவ பெரு மானை தரிசிக்கிறோம்.

🕉இந்த வேளையில் அறுகம்புல்லை மாலையாக கட்டி நந்திக்குச் சாற்றவேண்டும். வில்வம், மருக்கொழுந்து, மல்லிகை ஆகிய மலர்களா 
லும் அலங்காரம் செய்வார்கள்.

🕉சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களு ம் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். மேலும், பிரதோஷத் தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலன் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கி ன்றன.

🕉ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென் றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சனி பிர தோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக் கூடியது ஆகும்.

🕉சனி பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்து நந்தி பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்
அன்றைய தினம் நந்திக்கும், சிவபெருமானுக் கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவி ப்பது நற்பலன்களை தரும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க சனிமஹா பிரதோஷம் வழிபாடு...

சனிமஹா பிரதோஷம் பற்றிய பதிவுகள் 
ஜாதகத்தில் எந்த கிரகம் சரியில்லை என்றாலும், எந்த திசை நடந்தாலும் சரி, வாழ்வில் என்ன கஷ்டமாக இருந்தாலும் சரி பிரதோஷத்தன்று சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் அனைத்தும் நீங்கி விடுதலை. 



சனிக்கிழமையில் வரும் சனி பிரதோஷத்தன்று விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்தால் அனைத்து விதமான பாவங்களும் நீங்கி விடும் என்பது ஐதீகம். சிவ நாமங்களை சொல்லி வழிபட்டால் சிவனின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.

சிவபெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வரும் திரியோதசி திதியை சிவ வழிபாட்டிற்குரியதாக சொல்கிறோம். 

திரியோதசி திதியில் மாலை 04.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். 

சிவ பெருமானின் அருளை முழுமையாக பெற வேண்டும் என்கிறவர்கள் பிரதோஷத்தன்று விரதம் வழிபட்டாலே போதும். பிரதோஷ விரதம் சிறப்பானது என்றாலும் ஒரு குறிப்பிட்ட மாதங்கள், கிழமைகளில் வரும் போது கூடுதல் சிறப்பு பெறுகிறது.

பிரதோஷங்களில் திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷமும், சனிக்கிழமையில் வரும் சனிப்பிரதோஷமம் மிகவும் விசேஷமானவை. அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை சனி மஹாபிரதோஷம் என சிறப்பித்து சொல்கிறோம். 

ஒரு சனி மஹா பிரதோஷத்தன்று விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் 5 ஆண்டுகள் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பலனை பெற முடியும். சனிப் பிரதோஷத்தன்று சிவ பெருமானையும், சனீஸ்வரனையும் விரதம் இருந்து வழிபட்டால் கிரக தோஷங்கள், சனியால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கி விடும்.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சனி மஹா பிரதோஷம் 

அதிகாலையில் எழுந்து நீராடி, நெற்றியில் திருநீறு பூசி, சிவ நாமங்களை உச்சரித்தபடி இருக்க வேண்டும். பகல் முழுவதும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருக்க வேண்டும்.

முழுவதும் உபவாசமாக இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று, நந்தி தேவரையும், சிவ பெருமானையும் வழிபட்டு, அதற்கு பிறகு அங்கு தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

ராஜராஜ சோழன் மகளானபஞ்சவன்மாதேவி கட்டிய சிவன் கோவில்...



கீழ்பழுவூர் ஆவினம் காத்த ஆலந்துறை மகாதேவர்.
தஞ்சாவூரிலிருந்து அரியலூர் செல்லும் நெடுஞ்சாலையும் திருச்சிராப்பள்ளியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையும் இணையும் கடைவீதியில் கூட்டுச்சாலையின் ஒரு புறம்இருசிவாலயங்களும் எதிர்ப்புறம் ஒரு தீர்த்தக் குளமும் அமைய விளங்குவது கீழ்பழுவூர் என்னும் திருவூராகும்.

இவ்வூர் தற்போது அரியலூர் மாவட்டத்தில் இடம்பெற்றுதிகழ்கின்றது சோழ அரசர்களின் சிற்றரசர்களாகவும், மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு தங்கள் மகளானபஞ்சவன்மா
தேவியை அரிசியாக மணம் முடித்த அரச மரபைச்சார்ந்தவர்களு
மானபழுவேட்டையர்களின் தலைநகரத்தின் ஒரு பகுதியே இந்த கீழ்பழுவூராகும்.
மன்னு பெரும் பழுவூர் என கல்வெட்டுகளும், செப்பேடுகளும் குறிப்பிடும் தலைநகரம் கீழப்பழுவூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் மூன்று கல் தொலைவில்மேலப்
பழுவூர் என்ற பெயரில் விளங்குகின்றது. அங்கு மூன்று சிவாலயங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு உலகப் புகழ்பெற்ற கீழையூர் ஆலயங்கள்ஆகும்.
கீழையூர் ஆலயங்களும் கீழப்பழுவூர்ஆலயங்களும் பழுவேட்டரையர்கள் சோழர்கால கோயில் கலைக்குதந்தஅருட்
கொடைகளாக விளங்குகின்றன.

அங்கு திகழும் கல்வெட்டுகள் முறையே திருவாலந்துறை மகாதேவர் திருக்கோயில் என்றும், மறவனேஸ்வரர் என்றும்குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள் ஆலந்துறை மகாதேவர் கோயில் பெரிய சிவாலயமாகவிளங்குவதோடுதிருஞானசம்பந்தரால் ஒரு பதிகம் பாடப்பெற்ற காவிரியின் வடகரை தேவாரத் தலமாகும். 

பேரேரிக்கரையில் ஆலமரக் காட்டுப் பகுதியில் இவ்வாலயம் தோற்றம் பெற்றதால், ஆலந்துறை என பெயர் பெற்றது. தற்போது இவ்வாலயத்தின் தலமரம் ஆலமரமே ஆகும். வட ஆரண்யம் எனப் பெரும் ஆலங்காட்டில் ஒரு மரத்தடியில்சிவபெருமான் புற்றுவடிவில் லிங்பமாகத் தோன்றி காட்சி அளித்ததாகவும், பரசுராமர் தம்பாவ தோஷத்தைப் போக்கிக் கொள்ள இக்காட்டு பகுதியை அழித்து சுயம்பு மூர்த்தியை வழிபட்டு விமோசனம்பெற்றதாகவும் தலபுராணம் விவரிக்கின்றது. மேலும் உமாதேவி கடுந்தவம் புரிந்து ஈசனைக் கண்டு வழிபட்டதும் இந்த ஆரண்யமே என்பதால் இதற்கு யோக வனம் என்றபெயர்ஏற்பட்டதாகவும் அப்புராணமே எடுத்து உரைக்கிறது.

திருவாலந்துறை மகாதேவர் திருக்கோயில் பல நிலைகளையுடைய ராஜகோபுரம் திருமதில், திருச்சுற்றுக்கள், சுற்றுமண்டபங்கள், பரிவாராலயங்கள், அழகிய ஸ்ரீ விமானம், அர்த்தமண்டபம், முக மண்டபம், அம்மன் ஆலயம் ஆகியவற்றுடன் அழகு பெட்டகமாக காட்சி நவில்கின்றது. மூலஸ்தானத்தில் திகழும் லிங்க மூர்த்தியை ஆலந்துறை மகாதேவர், ஆலந்துரையார், வட மூலநாதர்,யோகவனேஸ்வரர்எனபலதிருநாமங்களில் காலங்காலமாக குறிப்பிட்டு வந்துள்ளனர்.

உமா தேவியை அருந்தவ நாயகி, யோக தபஸ்வினி, மகாத பஸ்வினி எனவும் குறிப்பிட்டு வந்துள்ளனர் கோயிலின் முன்னர் திகழும்தீர்த்தகுளத்தினை பிரம்ம தீர்த்தம் என்றும், பரசுராம தீர்த்தம் என்றும் குறிப்பிடுவர்.

அழகிய படிக்கட்டுகள் காப்புசுவர்ஆகியவற்றுடன்திகழும்இக்குளக்கரையில் திகழும் ரிஷபச் சிற்பங்கள் (அமர்ந்த காளை உருவங்கள்) மிகவும்குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கருவறையின் புறத்தே அமைந்த கோஷ்டங்களில் திகழும் ஆலமர் செல்வர் (தக்ஷிணாமூர்த்தி) லிங்கோத்பவர், பிரம்மா, கணபதி, துர்க்கை ஆகிய திரு மூர்த்தங்களும் மண்டபக்கோஷ்டங்களில் திகழும் காலசம்ஹாரர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாணசுந்தரர், கங்காளர், பைரவர், அடியார் ஒருவர் உருவம் ஆகிய அழகுறு படைப்புக்களும் முற்கால சோழர்களையும் உன்னத முத்திரைகளாக காட்சியளிக்கின்றன. 

திருவாலந்துறையார் திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்திற்கு அருகில் தென்புறமுள்ள தற்கால கட்டடப் பகுதிகளுக்கு இடையே அழிவின் விளிம்பில் நிற்கும் கற்றலியான பழைய சிவாலயம் ஒன்று பராமரிப்பார் யாரும் இன்றி காட்சி நல்குவது வேதனைக்குரிய ஒன்றாகும். 

பசுபதீஸ்வரர் என தற்காலத்தில்அழைக்கப்
படும் இவ்வாலயத்தின் பெரும் பகுதி மக்களாலும் அரசு நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. எஞ்சிய கருவறையும் முகப்பு பகுதியும் மட்டுமே இன்று பசுபதீஸ்வரர்ஆலயம்.
இவ்வாலயத்தில் உள்ள பரகேசரி வர்மனின் கல்வெட்டுக்கள் மறவனீஸ்வரர் என்ற அச்சோழர் கால பழுவேட்டரையர் எடுத்த கோயிலின் வரலாற்றுச் சிறப்புகளை நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. 

இங்கு குறிப்பிட பெரும் பரகேசரி என்பான் முதல் பாராந்தகச் சோழன் என்றுசிலஆராய்ச்சியாளர்களும், உத்தம சோழன் என்றுசிலஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். எப்படி இருப்பினும் முற்காலச் சோழர்கால கோயில் என்பதில் ஐயமில்லை. 

இத்தனை அழிவுகளுக்கி டையேயும் அந்த ஆலயத்தில் காணப்படும் முதல்பராந்தகச்சோழனின் 36 ஆம் ஆண்டு கி.பி 943 கல்வெட்டுச் சாசனம் ஒன்று ஒரு தனி சிறப்புடன்விளங்குகின்றது. இச்சாசனம் இங்கு நாம் முன்பு கண்ட திருவாலந் துறையுடைய மகாதேவர் கோயில் என்ற அந்தபெரியஆலயத்திற்கு இரண்டு கிணறுகள் பற்றிய செய்திகளை உரைப்பனவாகும். 

இந்தளூர் என்ற ஊரினை சார்ந்த சாத்தன் திருவாரூர் அடிகள் என்பவர்திருவாலந்துரையார் கோயிலுக்காக முதலீடாக அளித்த பொற்காசுகளை பெற்றுக்கொண்ட மூன்று ஆலய ஊழியர்கள், அம் முதலீட்டின் ஆண்டு வட்டித் தொகையினை ஊதியமாகப் பெற்றுக் கொண்டு ஆலந்துறை யாராகிய ஈசனுக்கு நாள்தோறும் அபிடேக நீர் எடுக்க பெறும் திருமஞ்சன கிணற்றில் ஒரு ஏற்றத்தை அமைத்து அதை இயக்கி அதனால் எடுக்க பெற்ற நீரினை கால்நடைகளின் தாகத்தை தணிக்க அளிப்பதற்காகவும், திருவேங்கைபுன்னங்
காடு என்ற இடத்தில் உள்ள இக்கோயிலின் திருநந்தவனத்துக்கு கிணற்றில் மற்றொரு ஏற்றத்தை அமைத்து ஈசனின் பூசனைக்காக மலர் தரும் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதற்காகவும் ஒப்புக்கொண்டதை இக்கழ்வெட்டு சாசனம் விவரிக்கின்றது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Thursday, December 26, 2024

முப்பத்து முக்கோடி தேவதைகள் யார் தெரியுமா?

முப்பத்து முக்கோடி தேவதைகள் யார் தெரியுமா?
பக்கத்து கோவிலில் பசுமாட்டுக்கு  பூஜை செய்தபோது தீபாராதனை காட்டி பசுவை வணங்குங்கள். 

பசுவை வணங்கினால்  பிரம்மா விஷ்ணு சிவன் அஷ்டலட்சுமி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வணங்கிய பலன் கிட்டும் என்றார் 

அப்படியானால் நம் இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனரா? 

 நமது ஹிந்துமத்த்தில் நம்முடைய தெய்வங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் போது முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று கூறுவது உண்மைதான்
முப்பத்து முக்கோடி என்பது 33 கோடி ஆகும்.

 அப்படியானால் நமது ஹிந்து தர்மத்தில் 33 கோடி தெய்வங்கள் இருக்கின்றனவா?....
 இங்கே  “கோடி” என்பதை எண்ணிக்கையைக் குறிக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்
ஆனால் “கோடி” என்ற சொல்  சமஸ்க்ருதத்தில் “ பிரிவு அல்லது வகை” என்பதைக் குறிக்கும்.

ஆக மொத்தம் 33 வகையான தெய்வங்கள் ஹிந்து சனாதன தர்மத்தில் உள்ளன என்பதை சொல்லவே முப்பத்து முக்கோடி என்கின்றனர் 

 கோடி என்றால் பிரிவு என்கிறீர்கள் அது (Number) நம்பராகாதா?
 கிராமங்களில் ஒருவர் அந்த தெரு கோடியிலுருந்து வரேன் என்றால் கோடி தெரு என்பதல்ல அர்த்தம் அதாவது அந்த தெருவின் பிரிவிலிருந்து வருகிறேன் என்பர் 
அது போல் கோடி வேஷ்டி என்றால் ஒரு கோடி வேஷ்டி எனபதல்ல அர்த்தம் அது வெண்மையும் அல்லாத மஞ்சளும் அல்லாத ஒரு  வேஷ்டி ( வெள்ளாவியில் வண்ணார் வைத்தால் வெள்ளையாகி விடும் எனவே அதை கோடி வெளுப்பாக கொடு என்பர் ஊர்களில்) 

கோடி என்பது எண்ணிக்கை அல்ல அதன் உண்மையான அர்தம் "பிரிவு" என்பதே

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் 
வசு 
ருத்ர 
ஆதித்ய ரூபம் என்று மூன்றாகப் பிரிப்பர்

நாங்களோ அல்லது உங்களை போன்றவர்களோ பொதுவாக அமாவாசை தர்பணத்தில் பித்ரு வசு ரூபமாகவும் பிதாமஹர் ருத்ர ரூபமாகவும் பிதுர்பிதாமஹர் ஆதிதய ரூபமாகவும் உள்ளதாக கூறி தர்பணம் செய்வோம்

அதில் வசு கீழ் நிலை ருத்ரர் இரண்டாம் நிலை ஆதித்யர் மூன்றாம் நிலை இந்த மூன்று நிலையில் 31பிரிவுகள் அடங்கும்

அந்த 31 பிரிவுகள் எவை பார்ப்போம்.

31 அதில்....

ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள்

1) விஷ்ணு 
2) தாதா 
3) மித 
4) ஆர்யமா 
5) ஷக்ரா 
6) வருண 
7) அம்ஷ 
8) பாக 
9) விவாஸ்வான் 
10) பூஷ 
11) ஸவிதா 
12) தவாஸ்தா 

வசு நிலையில் 8 வகையாவன:
13. தர 
14. த்ருவ 
15. சோம 
16. அனில 
17. அனல 
18. ப்ரத்யுஷ 
19. ப்ரபாஷ 

ருத்ரன் நிலையில் 11 பிரிவுகள்
21. ஹர 
22. பஹூரூப 
23. த்ரயம்பக 
24. அபராஜிதா 
25. ப்ருஷாகாபி 
26. ஷம்பூ 
27. கபார்தி 
28. ரேவாத் 
29. ம்ருகவ்யாத 
30. ஷர்வா 
31. கபாலி 

மற்றும் 2 பிரிவு அஷ்வினி குமாரர்கள் 

ஆக மொத்தம் = 33 வகையான

(பிரிவுகளான) தெய்வங்கள்

முப்பத்து முக்கோடி என்பது இதை தான். புரிந்ததா?. நீ நினைப்பது போல் 33 கோடியும் இல்ல,  முப்பத்து முக்கோடியும் இல்ல. 

இனிமேல் கோவில்களில் இந்து தெய்வங்களை வழிபடும் போது இதை மனதில் வைத்து கொண்டு வழிபடுங்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

இழந்த செல்வங்களைத் திரும்ப பெறுவதற்கு ஹரிகேசநல்லூர் ஸ்ரீ அரியநாதர் திருக்கோயில்.


 ஹரிகேசவநல்லூர், திருநெல்வேலி  
நெல்லை மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் அருமையான ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றுதான் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள ஹரிகேசநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத அரியநாதர் திருக்கோயில். சுமார் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், குபேரனே இத்தலம் வந்து சிவனை வழிபாடு செய்திருக்கிறார். இங்கே சனீஸ்வரனின் மனைவி ஜேஷ்டா தேவிக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டியதால் மன்னன் பெயரால் இவ்வூர் ஹரிகேசநல்லூர் என்றழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆலயத்தின் முகப்பில் கோபுரம் எதுவும் இல்லை. உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி. அடுத்து மண்டபம் கடந்து உள்ளே நுழைந்தால் ஆகமக் கோயிலுக்குரிய சூரியன், சந்திரன் ஜுரதேவர், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்ற அனைத்து பரிவார தேவதைகளுக்கும் சன்னிதிகள் உள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்பு வாய்ந்தவர். இடக்காலை வலது காலின் மீது மடித்து வைத்தபடி தோற்றமளிக்கிறார். பின்னிரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தியிருக்கிறார். இந்த ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
இவை அனைத்தையும் விட முக்கியமானது, ராவணன் தனது சகோதரன் குபேரனிடம் இருந்த செல்வங்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு, அவனது புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டு துரத்தியடித்தபோது அவர் ஹரிகேசநல்லூரில்தான் வந்து விழுந்தாராம். அவர் ஸ்தாபித்த லிங்கம்தான் ஹரிகேசநல்லூர் சிவனாவார். குபேரன் இந்த சிவனை பூஜித்து, தான் இழந்த செல்வங்களையெல்லாம் திரும்பப் பெற்ற தலம் என்பதால், இந்த ஹரிகேசநல்லூர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகக் திகழ்கிறது. கடன் தொல்லை இருப்பவர்கள், செல்வ வளம் வேண்டுபவர்கள் இங்கு வந்து குபேரன் பூஜித்த சிவனை வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு உண்டாகி, வாழ்வில் எல்லா வளங்களும் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.

வெளிச் சுற்றுப்பிராகாரத்தில் சனீஸ்வரனின் மனைவி ஜேஷ்டா தேவி  தனது மைந்தன் மாந்தியை மடியில் வைத்துக்கொண்டு சன்னிதி கொண்டிருக்கிறாள்.  சாதாரணமாக ஜேஷ்டா தேவியின் சன்னிதியை சிவாலயங்களில் காண முடியாது.  ஆனால், இக்கோயிலில் பெரிய திருவுருவத்துடன் சன்னிதி கொண்டிருக்கிறாள். ஜேஷ்டா தேவி இங்கே சன்னிதி கொண்டு அருள்பாலிப்பதால்  இது சனீஸ்வர பரிகாரத் தலமாகவும் வழிபடப்படுகிறது.

 
அதேபோல, வடக்குச் சுற்றில் இறைவன் சன்னிதிக்கு வடகிழக்கே செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப்பெரிய கற்சிலை காணப்படுகிறது. வலக்கையில் கதையை ஏந்தி, இடக்கையை மடித்த காலின் மீது வைத்துக் கொண்டு சுமார் 4 அடி உயரத்தில் மிகப்பெரிய உருவமாக குபேரன் காட்சியளிக்கிறார். இங்கே குபேரன் எழுந்தருளியிருக்கும் காரணத்தால் ஒரு காலத்தில் இந்த ஊர் அழகாபுரி என்னும் பெயரால் கூட அழைக்கப்பட்டதாம். இந்த குபேரனுக்கு தீபாவளி மற்றும் அட்சய திருதியை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் வெளியூரிலிருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து இங்கே வழிபாடு செய்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி - அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூருக்கும் முக்கூடலுக்கும் இடையே ஹரிகேசநல்லூர் அமைந்துள்ளது.

தீபாவளி அன்று வழிபட வேண்டிய குபேரத் தலம்

செல்வச் செழிப்பை அருளும் தலம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி - அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூருக்கும் முக்கூடலுக்கும் இடையே, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது 

அரிகேசநல்லூர். இறைவன் திருநாமம் அரியநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இக்கோவில் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டியதால், மன்னன் பெயரால் இவ்வூர் அரிகேசநல்லூர் என்றழைக்கப்படுகிறது.

குபேரன்  இத்தலத்து இறைவனை வழிபட்டு, தான் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற்றதால், இத்தலம் மிகவும் சிறப்புக்குரியது. ராவணன் தனது சகோதரன் குபேரனிடம் இருந்த செல்வங்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு, அவனது புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டு துரத்தியடித்தபோது, அவர் அரிகேசநல்லூர் வந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டார். அவர் ஸ்தாபித்த லிங்கம்தான் அரிகேசநல்லூர் சிவனாவார். குபேரன் இந்த சிவனை பூஜித்து, தான் இழந்த செல்வங்களையெல்லாம் திரும்பப் பெற்ற தலம் என்பதால், இந்த அரிகேசநல்லூர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகக் திகழ்கிறது. கடன் தொல்லை இருப்பவர்கள், செல்வ வளம் வேண்டுபவர்கள் இங்கு வந்து குபேரன் பூஜித்த சிவனை வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு  உண்டாகி, வாழ்வில் எல்லா வளங்களும் உண்டாகும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில், இறைவன் சன்னிதிக்கு வடகிழக்கே செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப்பெரிய கற்சிலை காணப்படுகிறது. வலக்கையில் கதையை ஏந்தி, இடக்கையை மடித்த காலின் மீது வைத்துக் கொண்டு சுமார் 4 அடி உயரத்தில் மிகப்பெரிய உருவமாக குபேரன் காட்சியளிக்கிறார். இங்கே குபேரன் எழுந்தருளியிருக்கும் காரணத்தால் ஒரு காலத்தில் இந்த ஊர் அழகாபுரி என்னும் பெயரால் கூட அழைக்கப்பட்டதாம். இந்த குபேரனுக்கு தீபாவளி மற்றும் அட்சய திருதியை நாட்களில் சிறப்பு  வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் வெளியூரிலிருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து இங்கே வழிபாடு செய்கின்றனர். 
குபேரன்

மிகச் சிறப்பு வாய்ந்த, தொன்மையான குபேரன் வந்து வழிபட்டு இழந்த செல்வங்களை மீட்டெடுத்த இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று குபேரன் வழிபட்ட சிவனையும், குபேரனையும் வழிபட்டு வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, December 25, 2024

மூன்று வகை லிங்கம். ஷணிக லிங்கம் ... இஷ்ட லிங்கம் ... ஆத்ம லிங்கம்



பாவங்கள் நீங்க திங்கள் கிழமைகளில் சொல்ல வேண்டிய சிவ மந்திரம்...மூன்று வகைப்படும்.
ஷணிக லிங்கம் ... இஷ்ட லிங்கம் ... ஆத்ம லிங்கம்நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க வேண்டும்.
சிவ மந்திரம்:

நமச்சிவாய வாழ்க!

நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!

தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!

தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

மூன்று வகைப்படும்.
ஷணிக லிங்கம் ... இஷ்ட லிங்கம் ... ஆத்ம லிங்கம்

ஷணிக லிங்கம்:

நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

1. புற்றுமண் லிங்கம் ..... மோட்சம் தரும்
2. ஆற்றுமண் லிங்கம் ..... பூமிலாபம் தரும்
3. பச்சரிசி லிங்கம் ..... பொன், பொருள் தரும்
4. அன்ன லிங்கம் ..... அன்ன விருத்தி தரும்
5. பசுவின் சாண லிங்கம் ..... நோய்கள் தீரும்
6.வெண்ணெய் லிங்கம் ..... மன மகிழ்ச்சி தரும்
7. ருத்ராட்ச லிங்கம் ..... அகண்ட அறிவைத் தரும்
8. விபூதி லிங்கம் ..... அனைத்து செல்வமும் தரும்
9. சந்தன லிங்கம் ..... அனைத்து இன்பமும் தரும்
10. மலர் லிங்கம் ..... ஆயுளை அதிகமாக்கும்
11. தர்ப்பைப்புல் லிங்கம் ..... பிறவியிலா நிலை தரும்
12. சர்க்கரை லிங்கம் ..... விரும்பிய இன்பம் தரும்
13. மாவு லிங்கம் ..... உடல் வன்மை தரும்
14. பழ லிங்கம் ..... சுகத்தைத் தரும்
15. தயிர் லிங்கம் ..... நல்ல குணத்தைத் தரும்
16. தண்ணீர் லிங்கம் ..... எல்லா மேன்மைகளும் தரும்

இஷ்ட லிங்கம்:

மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.

1. இந்திரன் ..... பத்மராக லிங்கம்
2. குபேரன் ..... ஸ்வர்ண லிங்கம்
3. யமன் ..... கோமேதக லிங்கம்
4. வருணன் ..... நீல லிங்கம்
5. விஷ்ணு ..... இந்திர நீல லிங்கம்
6. பிரம்மன் ..... ஸ்வர்ண லிங்கம்
7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ..... வெள்ளி லிங்கம்
8. வாயு ..... பித்தளை லிங்கம்
9. அசுவினி தேவர்கள் ..... மண் லிங்கம்
10. மகா லட்சுமி ..... ஸ்படிக லிங்கம்
11. சோம ராஜன் ..... முத்து லிங்கம்
12. சாதுர்யர்கள் ..... வஜ்ஜிர லிங்கம்
13. பிராம்மணர்கள் ..... மண் லிங்கம்
14. மயன் ..... சந்தன லிங்கம்
15. அனந்தன் முதலான நாகராஜர்கள் .... பவள லிங்கம்
16. தைத்தியர்கள், அரக்கர்கள் ..... பசுஞ்சாண லிங்கம்
17. பைசாசங்கள் ..... இரும்பு லிங்கம்
18. பார்வதி .... வெண்ணெய் லிங்கம்
19. நிருதி ..... தேவதாரு மர லிங்கம்
20. யோகிகள் ..... விபூதி லிங்கம்
21. சாயா தேவி ..... மாவு லிங்கம்
22. சரஸ்வதி ..... ரத்தின லிங்கம்
23. யட்சர்கள் ..... தயிர் லிங்கம்

ஆத்ம லிங்கம்:

தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம் ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.

1. மண் ..... காஞ்சிபுரம் ..... ஏகாம்பர லிங்கம்
2. நீர் ..... திருவானைக்கா ...... ஜம்பு லிங்கம்
3. நெருப்பு ..... திருவண்ணாமலை ..... அருணாசல லிங்கம்
4. வாயு ..... திருகாளத்தி ..... திருமூல லிங்கம்
5. ஆகாயம் ..... சிதம்பரம் ..... நடராச லிங்கம்

,ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம்..

*ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும்  எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?* 

100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி, ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும் ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய  ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள் தலத்திற்கும் தான்.

சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது.
அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். 

பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். பொதுவாக நாம் எந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும். 
ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி? இதற்கு விடை,

திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர். திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர்.
பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார். அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. 

ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம். இங்கு பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.

தல சிறப்பு: இங்கு பெருமாளும் தாயாரும் மணம் முடித்தக் காரணத்தால் இது கல்யாணக் களையுடன் மகிழ்ச்சியைக் குறிக்கும் மங்களகரமான இடம். இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர். 

திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி.
நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும். இது தான் பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம்.
நாராயணவனத்தில் தான் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்தது. 

உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்த க்ஷேத்ரம் தான் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில். 
இரண்டாவதுதான் திருப்பதி!
திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி தாயாரை இங்கு தான் மணந்தார். இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு. ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம். 

இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணம் தடை விலக்கும் ஸ்தலம் இது. 
சுருக்கமாக நாராயணவனம் கல்யாண பெருமாள் என்று சொன்னால் தான் அனைவர்க்கும் இங்கே தெரியும். கையில் திருமண காப்போடு இருக்கும் இந்த பெருமாள் திருமண தடையை நீக்குவதில் வல்லவர். 

திருமலையில் பெருமாளை நீண்டநேரம் காத்திருந்து தரிசிக்க முடியாத குறையைப் போக்க விரும்புபவர்கள், இந்தத் நாராயணபுரம் தலத்துக்கு வந்து, தாங்கள் விரும்பும் அளவுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்  பெருமாளையும் தாயாரையும் ஒருசேர  தரிசித்து மகிழலாம்.

உள்ளே சென்று பெருமாளை வணங்கிவிட்டு, வெளியே வரும்போது ஸ்ரீ பத்மாவதி தாயார் திருமணத்திற்கு மாவு அரைத்த இயந்திரம் ஒன்றை பார்க்கலாம்!

தரிசனம் முடித்து வெளியே வந்ததும், அருமையான ருசியோ ருசியான கோயில் பிரசாதம் புளியோதரையை சிந்தாமல் சிதறாமல் தொன்னையில் அள்ளிக் கொடுக்கின்றார்கள். 

பக்தர்கள் தங்களுக்கு திருமணம் கைக்கூடவும், கடன்தொல்லையில் இருந்து விடுபடவும், சகல செல்வங்களும் கிடைக்க பெருமாளை வேண்டி செல்கின்றனர். 

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்டது.
மிக மிக அழகாய் பராமரித்துக் கொண்டு வருகின்றார்கள்.
பெயர்ப்பலகை அனைத்தும் மின்னும் வண்ண செப்பேட்டில், திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் உள்ளது. 

திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நாராயண வனம் உள்ளது. இந்த நாராயண வனத்தில் அருணா நதி பள்ளத்தாக்கு உள்ளது. பத்மாவதி என்று அழைக்கப்படும் தாயார் இந்த இடத்தில்தான் வளர்ந்தார்கள். 
திரு வெங்கடேசப்பெருமானின் திருமணம் இந்த இடத்தில்தான் நடந்தது. அந்த திருமணத்தை காண 
33 கோடி கடவுள்களும் அணிவகுத்து நின்றார்களாம் . 

வெங்கடேசப்பெருமான் மற்றும் பத்மாவதி தேவி அவர்கள் திருமணம் முடிந்த பின்பு திருப்பதிக்கு செல்லும் வழியில் அப்பலயகுண்ட என்ற ஊரில் ஓய்வெடுத்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்த ஊர் திருப்பதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சானூர செல்லும் வழியில் அமைந்துள்ளது. 
திருப்பதிக்கு செல்லும் வழியில் இது அமைந்திருப்பதால் இதை மறக்காமல் பார்த்து விட்டு செல்ல வேண்டும். 

இது மிக அழகான முறையில் கட்டப்பட்ட கோவில்களில் ஒன்றாகும் இந்தக் கோவிலில் உள்ள தெய்வங்கள் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றார்கள்.
இந்த கோவிலில் மிக முக்கியமான இரண்டு கடவுள் யார் என்றால் பத்மாவதியும் ஆண்டாளும் ஆவார்கள். இந்தக் கோவிலில் தரிசனம் பெறுவது மிக சுலபமான ஒன்றாகும்.

பத்மாவதி தாயாருக்கும் சீனிவாச பெருமாளுக்கும் நாராயணவனம் என்னும் இடத்தில் திருமணம் நடந்து முடிந்ததும், சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயாருடன் திருமலைக்குப் புறப்பட்டார். 

அப்போது மணமக்கள் இருவரும் வேங்கட மலைக்கு செல்லும் வழியில் அகத்தியர் ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அவர்களுக்கு அகத்தியர் தடபுடலாக விருந்தளித்தார். 
அப்போது அகத்தியர், ‘திருமணமான தம்பதிகள் ஆறு மாதத்துக்கு மலையேறக் கூடாது’ என கூறிவிட்டார். 

மகரிஷியின் வார்த்தைக்கு மறுப்பேது? அகத்திய மகரிஷி கூறியபடி, பெருமாளும், பத்மாவதி தாயாரும் திருமலைக்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டனர். அப்படி பெருமாள் தங்கிய தலம் தான் இப்போதைய சீனிவாச மங்காபுரம் என்று கூறப்படுகிறது.
சீனிவாசனும், அலமேலு மங்கையாகிய பத்மாவதியும் தங்கியதால் இருவரின் பெயராலும் சீனிவாசமங்காபுரம் என அழைக்கப்படுகிறது. 

புராதன காலத்தில் சித்புருஷர்கள் தவம் செய்த இடமானதால் சித்தர் கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. 
தனக்கு திருமணம் நடந்த நாராயண வனத்தில் 5 அடி உயரத்தில் பால்ய வடிவிலும், சீனிவாசமங்காபுரத்தில் 8 அடி உயரத்தில் கம்பீரமான வாலிப வடிவத்திலும், திருமலையில் 6 அடி உயரத்தில் குடும்பதலைவர் கோலத்திலும் பெருமாள் காட்சி தருகிறார். இம்மூன்று முர்த்திகளும் சீனிவாச பெருமாளின் ஒரே வடிவங்களே. 

சீனிவாசமங்காபுரம் கோயிலில் உள்ள கருவறையில் பெருமாள் மூன்று திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 
நடுநாயகமாக சீனிவாச பெருமாளாக நின்ற திருக்கோலத்திலும், 
வலது புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த திருக்கோலத்திலும், 
இடது புறம் ஸ்ரீரங்கநாதரைப் போல் சயனக் கோலத்திலும் சேவை சாதிக்கிறார்.

நாராயண வனம் எங்கு இருக்கிறது? 
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 35 கிமீ தொலைவிலும் புத்தூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது. 
திருச்சானூரிலிருந்து 
31கிமீ தொலைவும், சென்னையிலிருந்து 95 கிமீ தொலைவில் ஊத்துக்கோட்டை திருப்பதி சாலையில் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். 

இங்கு ஆறு கால பூஜைகளும், பலவிதமான உற்சவங்களும் நடப்பதால் பக்தர்கள் எப்பொழுது சென்றாலும் ஏதேனும் ஒரு பூஜை அல்லது உற்சவத்தில் கலந்து கொள்ளலாம். இத்தலத்திற்கு 7 கிமீ தொலைவில் நாகலாபுரம் தலம் உள்ளது. இது மச்சாவதாரத் திருத்தலம். 

இன்னும் சற்றுத் தொலைவில் பிரதோஷப் பூஜை தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்த தலமான சுருட்டப்பள்ளி பள்ளிக் கொண்டீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. 

நாராயணவனத்தில் தரிசனம் முடித்து அப்படியே அருகில் நாகலாபுரத்தில் இருக்கின்ற வேதநாராயணப் பெருமாள்  திருக்கோயிலுக்கு சென்றால் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல,ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி தரிசனம் பெற்ற மகிழ்ச்சியுடன் ஆயிரம் அத்திவரதர் தரிசனத்திற்கு  சமமான
ஸ்ரீ வேதநாராயண பெருமாளின் தரிசனத்தையும் நாம் பெறலாம்.

பெருமாளின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரமாக  இறைவன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் மிக அற்புதமான அரிதான தலம் நாகலாபுரம் தலமாகும். வேதநாராயணப் பெருமாள் என்ற திருநாமம் கேட்ட உடனே வேதத்திற்கும் இத்தலத்திற்கு சம்பந்தம் உண்டு என்று தெரிகின்றது. நமது “ஸநாதன தர்மத்துக்கு’ ஆதாரமானவை வேதங்களே! 

நான்மறைகள் இல்லையேல் நமது மதமே இல்லை. காக்கும் கடவுளான திருமால், தர்மத்தை நிலை நாட்டப் பல அவதாரங்கள் எடுத்திருப்பினும், அவற்றுள் வேதங்களைக் காத்த பெருமையினால் பெரிதும் போற்றப்படுவது மத்ஸ்ய ரூபத்தில் (மீன் உருவம்) எடுத்த அவதாரமே
‘தசாவதாரங்களில்’ இதுவே முதன்மையானது.

அது மட்டும் அல்லாமல் மிகவும் சிறப்பான அமைப்பான இறைவன் தன கையில் சுதர்சன சக்கரத்தை செலுத்துவதிற்கு தயாராக உள்ள நிலையில் இத்தலத்தில் அருள் பாலிக்கின்றார் . இந்த மச்ச அவதார நோக்கமே அசுரர்களால் திருடப்பட்ட வேதங்களை காப்பாற்ற மஹா விஷ்ணு எடுத்த அவதாரமாகும் .

ஒரு யுகம் முடிவு அடைய போகும் கால கட்டத்தில் பிரம்மாவுக்கு உறக்கம் ஏற்பட்டது. அவர் கண்களை மூடி வாயை திறந்து தூங்கும் போது அவர் வாயில் இருந்து வேதங்கள் வெளி வந்து விழுந்தன . அவற்றை அசுரரான சோமகுரு என்ற அசுரன் திருடி எடுத்து சென்றுவிட்டான் .

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரம்மா மற்றும் தேவர்கள் இருந்தால் தான் புது யுகத்தை உருவாக்க முடியும், அதில் எல்லா உயிரினங்களை படைக்க முடியும் என்று கூறினார் . மத்திய புராணத்தில் இந்த 
மச்ச அவதாரத்தை பற்றி கூறியுள்ளார்கள்.

விஷ்ணுவின் பக்தரான சத்தியவரதா சந்தியா வந்தனம் செய்யும் போது அந்த கமண்டலத்தில் இருந்து சிறிய மீனாக தோன்றிய பெருமாள் படிப்படியாக ஒரே நாளில் பெரிய மீனாக உருவெடுத்தார் . பகவான் தன் மச்ச அவதாரத்தின் மூலம் அசுரன் சோமகுருவை அழித்து வேதங்களை திரும்ப பெற்றார் . அவற்றை பிரம்மாவிடம் ஒப்படைத்தார் .

பிரம்மா தன் படைக்கும் தொழிலால் ஒரு புதிய யுகத்தை உருவாக்கினார் .
முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, இந்த நாகலாபுரத்தில் காணலாம். இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. 

பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே என்கின்றனர்.

16ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால், அவர் தம் தாயின் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டது. மூலவர் வேத நாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. 
இந்த அற்புதக் காட்சியை இன்றைக்கெல்லாம் கண் குளிர சேவிக்கலாம்.

இவ்வாலயத்தில் வேதவல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், வீரஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், ராமபிரான் 
ஆகிய தெய்வங்களுக்கு தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. 
திருச்சுற்று மதிலுடனும், ராஜகோபுரங்களுடனும் ஒரு பெரிய ஆலயமாகவே இது திகழ்கிறது.

இந்த ஆலயத்தின் கோபுரம் பார்க்கும் போதே நமக்கு

பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு! 
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு

என பல்லாண்டு பாடத் தோன்றுகிறது ..

வேதநாராயணப் பெருமாள் கோவிலின் அறிவிப்பு பதாகை நம்மை வரவேற்கின்றது, 

பெருமாள் மச்சாவதார கோலத்தில் அதுவும் சுயம்பு மூர்த்தமாக இவர் இருக்கும் அந்த அழகு இங்கே கிடைக்கும் தெய்வீக அதிர்வலையை வர்ணிக்க வார்த்தைகள் எதுவும் இல்லை. 

பெருமாள் கோவிலில் சுற்று பிரகாரத்தில் சிவன் சந்நிதியை பார்ப்பது என்பது மிக, மிக அபூர்வம் இங்கே சுற்று பிரகாரத்தில் வீணா தக்ஷிணாமூர்த்தியை பார்க்கலாம். 
இந்த பெருமாளை வழிபடுவதன் மூலம் பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் முதலான பல தோஷங்கள் நீங்கும். 
இந்த கோவில் அனைத்து ராசியினரும் வழிபட வேண்டிய கோவில், குறிப்பாக மீன ராசியினர் அவசியம் வழிபட வேண்டும்.

இக்கோயின் மற்றொரு சிறப்பு அம்சம் . இக்கோயில் மேற்கு அமைந்துள்ளது .சூரியனது கதிரானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 ,13 ,14 ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் 6 .15  மணி வரை இறைவனின் மீது படும் .அதுவும் முதல் நாள் சூரிய கதிர் இறைவனின் கால் பகுதியிலும் , இரண்டாம் நாள் இறைவனின் மார்பு பகுதியிலும் , மூன்றாம் நாள் இறைவனின் தலை பகுதியில் படும் .

இக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 -12 .00 , 
மாலை 4 .00 - 8 .00

செல்லும் வழி:

இக்கோயில் சென்னையில் இருந்து சுமார் 80 km தொலைவில் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது . 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...