Monday, August 4, 2025

மாங்காடு அம்பிகையை வழிபட்டால், திரு மணம் நடக்கும்.

மாங்காடு காமாட்சியம்மன்
நம் வாழ்வின் துக்கங்கள், வேதனைகளு க்குக் காரணம் நம் கர்மவினையே. எத்த னையோ ஜென்மங்களில் செய்த பாவங் கள், புண்ணியங்களே நிழலாக நம்மைத் தொடர்கிறது. இதிலிருந்து நாம் விடுபட ஒரே வழி அம்பிகையைத் தியானம் செய்வதுதான்.

அவளையே தியானித்து அவள் நினைவி லேயே அமிழ்ந்து விட்டால் நமக்கு தேவை யானதை எல்லாம் அவளே கவனித்துக் கொள்வாள். அன்னையின் தவக் கோலம் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
தவத்தின் மூலம் அவள் உணர்த்துவது நிலைத்த சிந்தனை. அலைபாயாத மனம். மனதைக் குவித்து ஒரே சிந்தனையுடன் நாம் இருந்தால் பிரபஞ்சம் அதை நமக்கு நிறைவேற்றிக் கொடுக்கும். 

ஒவ்வொரு தலங்களிலும் அம்பிகை தன் தவத்தின் மூலம் அதைத்தான் உணர்த்து கிறாள். அப்படிப்பட்ட ஒப்பற்ற தலங்களில் மிக மேன்மையானது சென்னை அருகே உள்ள மாங்காடு திருத்தலம்.

ஒரு சமயம் கைலாயத்தில் அன்னை பார்வதி தேவி ஈசனின் கண்களை விளை யாட்டாகப் பொத்திவிட உலகம் இருண்டு விட்டது.  அதன் இயக்கமே நின்று விட்டது. ஈசனுக்கு ஒரு நிமிஷம் என்பது மனிதர்க ளுக்கு ஒரு யுகம் அல்லவா.? ஈசனின் கண்களே சூரிய சந்திரர்கள்.

தேவியின் செயலால் கோபமுற்ற ஈசன் அம்பிகையை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்து விடுகிறார். தன் தவறை உணர்ந் து அன்னை இப்பகுதியைத் தேர்ந்தெடுத் து ஐந்துவித அக்னியை வளர்த்து அதன் நடுவில் ஒற்றைக் காலில் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவம் இருந்தாள். 

உலக மக்கள் மேன்மையுற முப்பத்தி இர ண்டு அறங்களையும் பூவுலகில் வளர்க்க அன்னை உதாரணமாகத் தவம் இருக்கி றாள்.

நெருப்பின் நடுவே, இடதுகாலின் நுனி நடு அக்னியில் பட, வலதுகாலை இடது தொடைக்கு சற்றுமேலேயும், இடது கரத் தை நாபிக் கமலத்திற்கு சற்று மேலேயும், வலது கரத்தில் ஜப மாலையும், தனது திருக்கண்களை மூடியபடி உக்கிர தவம் செய்கிறாள் அம்பிகை.

அதன் பின்னர் ஈசனின் அருள் வாக்குப் படி காஞ்சி சென்று தவம் இருந்து பங்கு னி உத்திர நன்னாளில் இறைவனை மணந்து கொண்டாள். முதலில் அம்பிகை தவம் இருந்த இடம் என்பதால் மாங்காடு (ஆதி காமாட்சி தலம்} என்று அழைக்கப் படுகிறது.

இங்கிருந்து காஞ்சி செல்லும்போது தான் நின்று தவம் செய்த நெருப்பை அணைக் காமல் சென்றதால் சுற்றிலும் அதன் வெம்மை பரவியது. சுற்றிலும் வெப்பம் தகிக்க பசுமை அழிந்து மக்களை உக்கிர ம் தகித்தது. 

தேசாந்திரம் செல்லும்போது இங்கு வந்த ஸ்ரீசங்கரரிடம் மக்கள் இப்பகுதியின் வெம்மையைப் பற்றி முறையிட ஆதிசங்க ரர் அஷ்டகந்தம் எனும் மூலிகைகளால் ஆன ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்தார்.

எனவே இங்கு ஸ்ரீசக்ரம்தான் பிரதானம். பஞ்சலோக காமாட்சிக்கு அபிஷேகமும், ஸ்ரீசக்ரத்திற்கு குங்கும அர்ச்சனையும் செய்யப்படுகிறது. மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இத்தலம் மாங்கா டு என்று அழைக்கப்படுகிறது. எனவே தலவிருட்சமாக மாமரமே விளங்குகிறது.

தபஸ் காமாட்சி மோன நிலையில் இருப்ப தால் ஆதிகாமாட்சி அன்னையை காஞ்சி பெரியவர் பிரதிஷ்டை செய்தார். அம்பி கை தவம் செய்தபோது நவகன்னியர்கள் காவல் புரிந்ததால் அவர்களுக்கும் சந்நிதி உள்ளது. 

இங்கு அம்பிகை ஸ்ரீசக்ரத்தில் இருக்கிறா ள் என்பது ஐதீகம். மூலிகைகளால் ஆனது என்பதால் அபிஷேகம் கிடையாது. சந்தன ம், புனுகு சாற்றி குங்கும அர்ச்சனை மட்டுமே செய்யப்படுகிறது. விஜயதசமி அன்று அஷ்டகந்த மூலிகை சாற்றி தங்கக் கவசம் அணிவிக்கிறார்கள். மற்ற நாள்களில் வெள்ளிக் கவசம் மட்டுமே.

இந்த சக்ரம் அர்த்தமேரு ராஜயந்திரமாகு ம். ஆமை உருவத்தை அடித்தளமாக்கி, அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி, அதற்கு மேல் பதினாறு இதழ்கள் கொண் ட தாமரை, அதன்மேல் எட்டு இதழ்கள் கொண்ட தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீசக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது. இதைப் போன்றது வேறு எதுவும் இல்லை. மிகப்பெரிய யந்திரம். இதற்கு பதினெட்டு முழப் புடவை அணிவிக்கிறார்கள்.

மூலஸ்தானத்தில் ஸ்ரீசக்ரம், அதற்குப் பின் புறம் பஞ்சலோக ஆதி காமாட்சி, முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் புரியும் காமாட்சியுடன், ஆதி காமாட்சி அருகில்எரியும் சிறியகாமாட்சி விளக்கை யும் அம்பிகையாக கருதி வழிபடுகிறார்க ள். மூலஸ்தான அம்பிகை கையில் கிளியு டன், தலையில் பிறைச்சந்திரனுடன் அழகாகக் காட்சி அளிக்கிறாள்.

விடாமுயற்சி என்பதற்கு அம்பிகையே உதாரணம். நினைத்ததை சாதித்தே தீரும் வைராக்கிய்த்துக்கு அன்னையே உதார ணமாக இருக்கிறாள். பஞ்சாக்னியில் நின்று தவம் செய்து ஈசனின் தரிசனம் கிடைக்கவில்லை என்று தளர்ந்து, மனம் சோர்ந்து விடாமல் ஒற்றைக் காலில் ஊசி முனையில் நின்று தவம் செய்து இறைவ னை அடைகிறாள். 

உலக நாயகியான அம்பிகைக்கே இந்த கடுமையான தவம் எனில் மனிதர்களாகி ய நாம் எவ்வளவு கடுமையான தவம் செய்ய வேண்டும் என்று நினைக்கலாம். 

ஆனால் தன் குழந்தைகள் அத்தனை சிரமப்படுவதை அன்னை கண் கொண்டு பார்ப்பாளா? தவத்துக்கு ஈடான ஆழ்ந்த, நம்பிக்கையை தன்மேல் வைத்தவர்களு க்கு தானே தவமாய் இருந்து அருளாசியை அள்ளி வழங்குகிறாள்.      

தினமும் இத்தலத்தில் மாலை தங்கத் தேரில் பிராஹ்மி தேரோட்டியாகவும், சுற்றிலும் நவகன்னியர்கள் இருக்க, லக்ஷ்மி, பார்வதி, சரஸ்வதி மூவரும் உலா வருகிறார்கள்.

மாங்காடு அம்பிகையை வழிபட்டால், திரு மணம் நடக்கும். குழந்தைப் பேறுக்காக தொட்டில் கட்டி வழிபடுதல், உத்தியோக உயர்வு, மனக்குறைகள் என்று சகலமும் தீர்க்கும் தயாபரி அவள். 

குறிப்பிட்ட கிழமைகளில் ஆறுவாரங்கள் எலுமிச்சம் கனிகளுடன் அன்னையைத் தொடர்ந்து வழிபட்டால் நினைத்ததை நடத்திக் கொடுப்பாள். நினைத்தது நடந்த பின் பக்தர்கள் புடவை சாற்றி வழிபடுகி றார்கள்.

பசுஞ்சோலைகள் நிறைந்து அழகாய்க் காட்சி அளித்த கோயில் இன்று கால மாற்றத்தில் பல மாறுதல்களைக் கண்டிரு ந்தாலும், அம்பிகையின் சக்தியும், அருளும் மாறவில்லை என்பதே நிஜம். 

அன்னையே நீயே உலகத்தின் அடி நாத மாக இருக்கிறாய். உன் சுவாசக் காற்றே காற்றில் கலந்து எங்களுக்கு புத்துணர்ச் சி தருகிறது என்கிறார் ஸ்ரீ சங்கரர்.
அம்மா எனும்போதே நெஞ்சில் ஆனந்தம், உற்சாகம், வைராக்கியம், அம்பிகை இருக்கிறாள் என்ற தைரியம் அனைத்தை யும் தருபவள் அன்னை காமாட்சி.

"அக்னியில் நின்றவளே அன்னை காமாட்சி
அருள்மழை பொழிபவளே ஆதிசக்தியே
மாட்சிமை நிறைந்தவளே மகாசக்தியே
ஸ்ரீசக்ர நாயகியே ஸ்ரீபுரத்தாளே சுந்தரியே'
என்று அம்பிகையைப் போற்றிப் புகழ்கிறார்கள்.

நம்மைச் சுற்றி காற்றாக, நம் சுவாசமாக, இருக்கிறாள் அம்பிகை. அவளின் தரிசன ம் காண்பது ஒன்றே வாழ்வின் ஆனந்தம் என்று நினைவோடு, நம்பிக்கையோடு நடைபோட வேண்டும். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம் . 

வேண்டிய வரம் தரும் வடபழனி வேங்கீஸ்வரா்!

வேண்டிய வரம் தரும் வடபழனி
#வேங்கீஸ்வரா்!

சென்னை மாநகாின் பல பகுதிகள் நவீன காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப புதிய பாிணாமத்துடன் தோற்றம் அளித்தாலும் இப்பகுதிகள் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களாகும்.

 அவற்றுள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் தற்போதைய கோடம்பாக்கம் ஆகும்.

“மதராஸப்பட்டினம்” ஆற்காடு நவாபின் ஆளுகைக்குட்பட்டிருந்த காலத்தில் கோடம்பாக்கம்
“கோடா பாக்” (Goda bagh) என்று வழங்கப் பட்டுள்ளது.
“கோடா பாக்” என்பதற்கு
“குதிரைகள் கட்டும் லாயம்” என்பது பொருளாகும்.

“கோடா” (Goda) என்பது குதிரையைக் குறிக்கும் உருதுச் சொல்லாகும்.
“கோடா பாக்” என்பதே மருவி பிற்காலத்தில் “கோடம்பாக்கம்” என வழங்கப்பட் டுள்ளது.

புராணங்களில் கோடம்பாக்கம்.
சா்வேஸ்வரன் திரிபுராந்தகா்களை அழிக்கப் புறப்பட்டபோது
“மேரு” மலையை வில்லாக வளைத்து அம்பெய்தி அவா்களை அழித்தாா்.

 இதனால் ஈசனுக்குத்
“திரிபுராந்தகா்” என்றும்
“திரிபுரம் எாித்த விாிசடைப்பெருமான்” என்றும் திருநாமங்கள் ஏற்பட்டன.
“கோடு” என்பது மலையையும் “அம்பு” மற்றும்
“ஆக்கம்” என்பது சிவபெருமான் மேரு மலையை வில்லாக ஆக்குவித்து அதில் அம்பினை ஏற்றி திாிபுரத்து அசுரா் களை வதைத்ததைக் குறிப்பதாகும்.

 கோடு+அம்பு+ ஆக்கம்= கோடம்பாக்கம் என்று ஆனது.

ஆதிசேஷனின் வழிவந்த
“காா்க்கோடகன்” என்னும் பாம்பு இத்தலத்தில் மஹா விஷ்ணுவை வழிபட்டதால் இத்தலத்திற்கு
“கோடகன்பாக்கம்” என்ற பெயா் ஏற்பட்டு பின்னா்
“கோடம்பாக்கம்” என்று மருவியதாகவும் கருத்து நிலவுகின்றது. இக்கருத்திற்கு வலு சோ்க்கும் வண்ணம் காா்க்கோடகன் வணங்கிய மஹா விஷ்ணுவின் ஆலயம் வடபழனி வேங்கீஸ்வரா் திருத்தலத்திற்கு அருகில் மேற்கு சிவன் கோயில் தெருவில் அமைந்துள்ளது. 

இந்த தலத்தின் எம்பெருமான் ஆதிமூலப் பெருமாள், சுந்தர ராஜப்பெருமாள் மற்றும் அழகா் பெருமாள் என்றும் வணங்கப்படுகின்றாா்.

புலியூா் கோட்டம்.
*********************
புராதன தொண்டை நாட்டில் அமைந்த 24 கோட்டங்களில் வட பழனி மற்றும் கோடம்பாக்கம் அமைந்துள்ள பகுதி
“புலியூா் கோட்டமாக” சிறப்புடன் விளங்கியுள்ளது. சோழ மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதியை உள்ளடக்கிய புலியூா் கோட்டத்தின் தலைமையிடமாக கோடம்பாக்கம் திகழ்ந்துள்ளது.
நற்கோடலம்பாக்கம்.

திருவொற்றியூாில் வாழ்ந்த “வாகீச முனிவா்” இயற்றிய “ஞானாமிா்தம்” என்னும் சைவ நூலில் வாகீச முனிவாின் குருவான பரமானந்த முனிவா்
“கோடலம்பாக்கம்” என்று வழங்கப்பட்ட இப்பகுதியில் வசித்ததாகக் குறிப்புகள் உள்ளன.

12 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னரான ராஜாதிராஜருடன் வாகீச முனிவா் வடபழனி வேங்கீஸ்வரா் திருத்தலத்திற்கு வருகை தந்து ஈசனைத் தரிசித்து மகிழ்ந்துள்ளதை இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் தொிவிக்கின்றன.
வாகீச முனிவா் தனது குருவான பரமானந்த முனிவரை “நற்கோடலம்பாக்கம் அதிபன்” “திருநெறிக்காவலா்” மற்றும் “சைவ சிகாமணி” என்றும் தமது நூலில் போற்றி மகிழ்ந்துள்ளாா். இதனால் கோடம்பாக்கம் சுமாா் 1000 ஆண்டுகளுக்கு மேலாக எல்லா வகையிலும் சிறப்பு பெற்றிருந்ததை உணர முடிகின்றது.

ஈசனின் திருநடனத்தைத் தன்
திருவுள்ளத்தில் நினைத்து
மகிழ்ந்த மஹா விஷ்ணு!
திருப்பாற்கடலில் தன் மீது யோக நித்திரை செய்து பள்ளிகொண்டிருக்கும் சா்வலோக சரண்யனான ஶ்ரீமந் நாராயணனின் பாரத்தைத் தாங்க முடியாத ஆதிசேஷன் அவரை வணங்கி, “ஐயனே! நான் தங்களை எப்பொழுதும் படுக்கையாக இருந்து தாங்கி வருகின்றேன். ஆனால் இன்று மட்டும் தங்களது திருமேனியைத் தாங்க முடியாமல் பாரமாக இருப்பதற்கு என்ன காரணமோ?” என்று பணிந்து கேட்க, ஶ்ரீமந் நாராயணன் மிகவும் சந்தோஷ மாக புன்னகையுடன் ஆதிசேஷனுக்கு பதில் கூறினாா்.

ஆதிசேஷனே! நான் முன்னொரு காலத்தில் ஆடல் கலைகளின் தலைவனான சா்வேஸ்வரனின் ஆனந்தத் திருநடனத்தைக் கண்டு களித்தேன. அந்த நினைவு எனக்கு தற்போது ஏற்பட்டதால் அதனால் உண்டான களிப்பில் என் சரீரம் உனக்கு பாரமாக இருக்கும் என திருவாய் மலா்ந்தாா். பரந்தாமனின் சரீர பாரத்தின் காரணம் தொிந்து கொண்ட ஆதிசேஷன் , “ஐயனே! அந்தத் திருநடனம் எங்கே, எப்போது நடந்தது?” என்று கேட்க, ஶ்ரீமந்நாராயணன் ஆனந்தம் பொங்க அந்த வரலாற்றினை ஆதிசேஷனுக்கு கூறலானாா்.

அந்த வரலாற்றைக் கேட்டு மனம் மகிழ்ந்த ஆதிசேஷன்,
“எம்பெருமானே! சா்வேஸ்வரனின் திருநடனத்தைக் காணவும் அவரது திருவருளைப் பெறவும் எனக்கு அருள் புரியவேண்டும் என்று மஹா விஷ்ணுவிடம் பிராா்த்திக்க அப்படியே ஆகட்டும்,” என திருவாய் மலா்ந்தாா் ஶ்ரீமஹா விஷ்ணு.

ஆதிசேஷன் பெற்ற பாக்கியம்!
தவத்தில் சிறந்த அத்ரி மகரிஷியின் தா்ம பத்தினியான அனுசூயா குழந்தை வரம் வேண்டி தவமிருந்தாா். பெருமானின் அனுக்ரஹத்தால் அவரது கரங்களில் போய் விழுந்தாா் ஆதிசேஷன்.

 நாகத்தைக் கண்ட அனுசூயா தன் கைகளை உதற அவரது திருவடிகளில் விழுந்தது நாகம். ரிஷி பத்தினியான அனுசூயாவின் பாதங்களில் விழுந்ததால் பதஞ்சலியாக அவதரித்தாா் ஆதிசேஷன். முனி புங்கவ தம்பதிகளின் மகனாக வாழ்ந்த பதஞ்சலியே பின்னா் யோக விளக்கங்கள் குறித்த “பதஞ்சலி யோக சாஸ்திரம்” அருளினாா்.

பல சிவத்தலங்களைத் தரிசித்து சிவ பக்தியில் திளைத்த பதஞ்சலி வேங்கீஸ்வரா் திருக்கோயிலிலும் வழிபட்டு பேறு பெற்றுள்ளாா்.
வியாக்ரபாதா் வணங்கிய ஈசன்.
தில்லையம்பலத்தில் ஈசனுக்கு நித்ய பூஜைகள் செய்யும் “மத்யாயனா்” வேண்டுதலின்படி, பொழுது புலா்வதற்கு முன்னரே வண்டுகளின் எச்சில் படாத மலா்களைப்பறித்து ஈசனுக்கு அா்ப்பணிக்க மரக்கிளைகளில் கூட ஏறுவதற்கு வசதியாக புலியினுடைய கால்களையும் கூா்மையான கண்களையும் அருளினாா் ஈசன்.

 இதனால் மத்யாயனா் “வியாக்ரபாதா்” என்று வணங்கப்பட்டாா்.
“வியாக்ரம்” என்ற வடமொழிச் சொல்லுக்கு புலி, வேங்கை என்பது பொருளாகும். புலிக்கா லைக் கொண்டவா் என்பதனால் வியாக்ரபாதா் என்று வழங்கப்பட்டாா் மத்யாயனா்.

வியாக்ரபாதா்,
“கோடகன்பாக்கம்” என்ற புலியூா் தலத்தில் ஆசிரமம் அமைத்து தமது நித்ய வழிபாடுகளுக்காக ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தாா். புலிக்கால் முனிவா் பிரதிஷ்டை செய்ததால் இத்தல ஈசனுக்கு
“வேங்கீஸ்வரா்” என்ற திருநாமமும்
“வியாக்ரபுரீஸ்வரா்” என்ற திருநாமமும் ஏற்பட்டது.

சிவத்தலங்கள் பலவற்றை தரிசனம் செய்து பேறுகள் பெற்ற பதஞ்சலி முனிவரும் புலிக்கால் முனிவா் பிரதிஷ்டை செய்த பூலியூா் தலத்தின் மேன்மைகளை அறிந்து இத்தலத்தில் வழிபாடு செய்து மகிழ்ந்துள்ளாா்.
வியாக்ரபாதரும், பதஞ்சலியும் இத்தலத்தில் பல காலம் தங்கி வேங்கீஸ்வரப் பெருமானை வழிபட்டு மேன்மை பெற்றுள்ளனா். 

பின்னா், தில்லையம்பலம் சென்ற வியாக்ரபாதரும், பதஞ்சலியும் செந்தாமரை மலரினையொத்த ஈசனின் தூக்கிய திருவடியையும் விரிந்த செஞ்சடையையும் வெண்ணீறணிந்த திருமேனியையும் விரிகமல நயனங்களையும் தரிசித்ததோடு அன்னை சிவகாமியுடன் ஈசன் நடத்திய ஆனந்தத் திருநடனத்தையும் கண்டு மகிழ்ந்துள்ளனா்.

வடபழனி வேங்கீஸ்வரா் திருக் கோயிலில் வியாக்ரபாதரும் பதஞ் சலியும் ஈசனை வணங்கிய திருக் கோலத்தில் திருக்காட்சி தருகின்றனா்.
திருக்கோயில் அமைப்பு
ஏழு நிலை ராஜ கோபுரம் பஞ்ச வா்ணங்களுடன் ஜொலிக்க பிரம் மாண்டமாக அமைந்துள்ளது ஶ்ரீசாந்த நாயகி உடனுறை ஶ்ரீவேங்கீஸ்வரா் திருக்கோயில். திருக்கோயிலின் எழில் தோற்றமும் ஈசனின் சந்நிதியில் ஏற்படும் தெய்வீக அதிா்வலைகளுடன் கூடிய பக்திப்பெருக்கும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றது.

ஶ்ரீவேங்கீஸ்வரா் மிகப் பொிய லிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கின்றாா். ஈசனின் கருவறை மற்றும் விமானம் கஜபிருஷ்ட வடிவில் நிா்மாணிக்கப் பட்டுள்ளது. கருவறை, அா்த்தமண்டபம், மஹா மண்டபம் என்ற பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது இத்திருக்கோயில். அம்பிகை சாந்தநாயகி தனிச்சந்நிதியில் கோயில் கொண்டு தென் திசை நோக்கி எழுந் தருளியுள்ளாா். மடிசாா் அணிந்து திருக்காட்சி தரும் சாந்தநாயகியின் தரிசனம் கண் நிறைந்த திருக்காட்சியாகும்.

தேவகோட்டத்தில் கணபதி, ஶ்ரீதட்சிணாமூா்த்தி, ஶ்ரீமஹா விஷ்ணு, பிரம்மா, துா்க்கை மற்றும் சண்டிகேஸ்வரா் அருள்பாலிக்கின்றனா். கிழக்கு நோக்கி ராஜகோபுரம் நிா்மாணிக்கப்பட்டுள்ள இத்தலத்தில் மற்ற மூன்று பக்கங்களிலும் சிறிய அளவிலான விமானங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாண வைபவம்.
வடபழனி வேங்கீஸ்வரா் திருத் தலத்திற்கு அருகில் மேற்கு சிவன் கோயில் தெருவில்
“ஆதிமூலப் பெருமாள்” எனும் சுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது. “அழகா் பெருமாள்” என்றும் வழங்கப்படும் இத்தலத்தின் எம்பெருமான் தன் தேவியா் ஶ்ரீதேவி மற்றும் பூமிதேவியுடன் அற்புத சேவை சாதிக்கின்றாா். 

இத்தலத்தின் தாயாா் சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் மதுரை அருகிலுள்ள அழகா்கோயில் தலத்தில் அருள்பாலிப்பது போல அமா்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றாா். பெருமாள் கோயில் அமைந்துள்ள இடம் ஒரு காலத்தில் மாமரங்கள் அடா்ந்த காடாக இருந்ததால் இப்பகுதி “அமராரண்யம்” என்று வணங்கப்பட்டதாக புராணங்கள் தொிவிக்கின்றன.

வேங்கீஸ்வரா் கோயிலுக்கும் சுந்தரராஜப்பெருமான் கோயிலுக்கும் நீண்டகால புராணத் தொடா்புகள் உள்ளன. வேங்கீஸ்வரா் கோயிலில் அருள்பாலிக்கும் அம்பிகை சாந்தநாயகிக்கும் வேங்கீஸ்வரப் பெருமானுக்கும் பங்குனி உத்திர நன்னாளில் சுந்தரராஜப்பெருமான் திருக்கல்யாணம் செய்து வைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. 

தன் தங்கைக்கு பல விதமான சீா்களைப் பரிசாக அளித்து கோலாகலமாக பெருமாள் செய்து வைக்கும் தெய்வீகத் திருமணத்தைக் காண பக்தா்கள் கூட்டம் அலைமோதும்.

இத்தலத்தில் பிரதோஷ விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. பிரதோஷ வேளையில் இந்த சந்நிதியில் வழிபட நமது பாவங்கள் நீங்கப் பெற்று மேன்மை அடையலாம் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும்.

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் நிா்வாகத்தில் உள்ள வடபழனி வேங்கீஸ்வரா் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 23. 1. 2015 அன்று நடைபெற்று மிக நல்லமுறையில் பராமாிக்கப்படுகின்றது இத்தலம்.

காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

 சென்னையின் பல முக்கிய பகுதிகளிலிருந்து இத்தலம் அமைந்துள்ள வடபழனி செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. வடபழனி மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் வேங்கீஸ்வரா் திருத்தலம் செல்லலாம்

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, August 3, 2025

தேனி உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர்ர் (காளத்தி நாதர், வாயுலிங்கேஸ்வரர்)

உலகப் புகழ்பெற்ற 
#தென்_காளஹஸ்தி என்று அழைக்கப்படும் இராகு கேது பரிகார தலமாக விளங்கும் இடமான, இராகுவும் கேதுவும் மனைவியருடன் 
காட்சி தரும் சிறப்புமிக்க 
#தேனி 
மாவட்டத்தில் உள்ள சுருளியாற்றங்கரையில் 
அமைந்துள்ள 
##உத்தமபாளையம்
#திருக்காளாத்தீஸ்வரர்ர் (காளத்தி நாதர், வாயுலிங்கேஸ்வரர்)
#ஞானாம்பிகை அம்மன் 
திருக்கோயிலை காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 
புராணங்கள் போற்றும் பஞ்சபூத திருத்தலங் களில் ஒன்றாக, வாயுலிங்கத் தலமாக ஒளிரும் திருத்தலம் காளஹஸ்தி எனப்படும் திருக்காளத்தி. கண்ணப்ப நாயனாருக்கு அருள் வழங்கிய தலம், உத்தரவாகினியாகப் பொன்முகலி ஆறு பாயும் ஊர், ராகு, கேது ஆகிய சாயா கிரகங்கள் நல்ல கிரகங்களாக நன்மை வழங்கும் புண்ணிய க்ஷேத்திரம் என்று இவ்வூருக்கு மகிமைகள் நிறைய உண்டு. 

அதனாலேயே இவ்வூருக்குச் சென்று அங்கு உறையும் காளத்திநாதரையும் ஞானாம்பிகையையும் வழிபட்டு வருவதை பெரும் பாக்கியமாகக் கருதுவார்கள் பக்தர்கள்.

தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம்  காளத்தீஸ்வரர்.  இறைவியின் திருநாமம்  ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும்  காளஹஸ்திக்கு  இணையான தலம் என்பதால் இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று  அழைக்கின்றனர்.

 
மூலவர் : 
திருக் காளாத்தீஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன் : ஞானாம்பிகை

தல விருட்சம் : செண்பகம்

தீர்த்தம் : உத்திரவாகினி

ஊர் : உத்தமபாளையம்

மாவட்டம் :தேனி

மாநிலம் : தமிழ்நாடு

இராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில், பிச்சை என்ற சிவ பக்தர் உத்தமபாளையம் பகுதியில், ராணியின் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளில் ஆந்திர மாநிலத்திலிருக்கும் காளகஸ்திக்குச் சென்று, அங்கிருக்கும் காளாத்தீஸ்வரரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவரால் அங்கு செல்ல இயலாமல் போனது. இதனால் மனம் வருந்திய அவர் இறைவனை நினைத்து உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கினார். அவரது கனவில் தோன்றிய இறைவன், செண்பக மரத்தின் கீழே லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு இருந்து தன்னை எடுத்துச் சென்று விரும்பும் இடத்தில் கோவில் கட்டி வழிபடலாம் என்றும் தெரிவித்தார். 

மறுநாள் தான் கண்ட கனவினை ஊர்மக்களிடம் தெரிவித்த அவர், ஊர்மக்கள் துணையுடன் செண்பக மர வனம் சென்றார். அங்கு அவரது கனவில் இறைவன் சொன்னபடி செண்பக மரத்தின் கீழாக லிங்கம் ஒன்று இருந்தது. அவரும், ஊர்மக்களும் அந்த லிங்கத்தை வழிபட்டுத் தாங்கள் கொண்டு சென்றிருந்த வண்டியில் அந்த லிங்கத்தை எடுத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஊருக்கு அருகில் வந்த போது ஒரு இடத்தில், அந்த வண்டியின் அச்சு முறிந்து, வண்டி நின்று போனது. அதன் பின்பு எவ்வளவு முயன்றும் அந்த வண்டியை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. அப்போது அந்த இடத்தில் ஆறுமுகத்துடனான முருகன் சிலை ஒன்று இருப்பதைக் கண்டனர். அதன் பிறகு, அவர்கள் அந்த இடத்திலேயே காளத்தீஸ்வரருக்கும், ஆறுமுகப்பெருமானுக்கும் தனித்தனியாகச் சன்னதிகள் அமைத்துக் கோவிலமைத்தனர்.

அதன் பின்னர் இக்கோவிலில் அம்மனுக்குத் தனிச் சன்னதி அமைத்திட முடிவு செய்த ஊர் மக்கள், அம்மன் உருவத்தைச் சிலையாக வடிவமைக்க பல சிற்பிகளைக் கொண்டு முயற்சித்தனர். ஆனால், அந்தச் சிற்பிகளால் அம்மன் உருவத்தைச் சிலையாக உருவாக்க முடியாமல் போனது. இதனால் மனம் வருந்திய பிச்சை, கோவிலில் அம்மன் சிலை அமைக்கத் தங்களுக்கு அருள்புரிய வேண்டுமென்று இறைவனிடம் தொடர்ந்து வேண்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் கனவில் தோன்றிய இறைவன், 'பக்தனே, இன்னும் சில நாட்களில் மழை பெய்து ஊருக்குக் கிழக்காக ஓடும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அந்த ஆற்று வெள்ளத்தில் அம்மன் மூங்கில் கூடையில் அமர்ந்து வருவார். அந்த அம்மன் சிலையைக் கொண்டு வந்து, கோவிலில் அம்மன் சன்னதி அமைத்து வழிபடுங்கள்' என்று சொல்லி மறைந்தார். இறைவன் சொன்னபடி சில நாட்களில் பெரும் மழை பெய்தது. மழையினால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் இறைவன் சொன்னபடியே ஒரு மூங்கில் கூடை மிதந்து வந்தது. அக்கூடையில் அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் இருந்தன. அந்தச் சிலைகளை ஊர் மக்கள் காளத்தீஸ்வரர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அம்மனுக்கான சன்னதியில் அம்மன் சிலையை வைத்து அம்மனுக்கு திருக்காளகஸ்தியிலிருக்கும் ஞானாம்பிகை என்ற பெயரையேச் சூட்டி வழிபட்டனர். கோயிலில் விநாயகர் சிலையை நிறுவிச் செல்வ விநாயகர் என்று பெயர் சூட்டினர்.

*கனவில் கிடைத்த கட்டளை:

ஒருநாள், அவர் கனவில் அந்தணக் குழந்தையாகத் தோன்றிய சிவபெருமான், ''காட்டூர் எனும் ஊர் அருகே வில்வ வனத்தில், வெள்ளை அரளி பூத்திருக்கும் மரத்தடியில், உனக்கு அருள்பாலிக்கக் காத்திருக்கிறேன். என்னை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடு'' என்று அருள்புரிந்தார்.

விழித்தெழுந்த பிச்சை காட்டூர் சென்று ஊர் மக்களிடம் கனவு விஷயத்தைக் கூறி, அவர்களையும் அழைத்துக்கொண்டு வில்வ வனத்துக்குச் சென்றார். அங்கே, வெள்ளை அரளி பூத்திருந்த மரத்தின் அடியில் லிங்கத்திரு மேனியராக காட்சியளித்த சிவனாரைக் கண்டு சிலிர்த்துப்போன மக்கள் சிவ நாம பாராயணம் முழங்க, லிங்கத் திருமேனியை  மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு காட்டூருக்குச் செல்ல முற்பட்டனர். ஆனால், சிவ சித்தமோ வேறு விதமாக இருந்தது. வண்டி குறிப்பிட்ட தொலைவைக் கடந்ததும் அதன் அச்சு முறிந்தது; மேற்கொண்டு நகர முடியவில்லை.

சிவனின் சித்தம் இது என்பதை உணர்ந்து அந்த இடத்துக்கு அருகில் இருந்த ஆறுமுகப் பெருமான் கோயிலிலேயே, வேத மந்திரங்கள் முழங்க சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தனர். அந்த இடம்தான் தற்போது உத்தமபாளையம் என அழைக்கப்படுகிறது. திருக்காளத்திக்குச் சென்று வந்தால் கிடைக்கும் பலனை பக்தனுக்கு அருள்வதற்காக எழுந்தருளிய பெருமான் திருக்காளத்தீஸ்வரர் என்று திருநாமம் கொண்டார். தலமும் தென்காளஹஸ்தி என்று சிறப்பு பெற்றது.

தல வரலாறு:

இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார். ராணி மங்கம்மாள் ஆட்சியில், இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர், அவரது படையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தார். காளஹஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது தீவிர பக்தி கொண்டிருந்த அவர், அடிக்கடி அத்தலத்திற்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு வயதானபோது, காளஹஸ்தி செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவர், சுவாமியை வழிபட்டார். அப்போது அவருக்கு இத்தலத்தில் காட்சி தந்த காளாத்தீஸ்வரர், அவரது வேண்டுதலுக்காக இங்கேயே லிங்க ரூபமாக எழுந்தருளினார். சிவன், “காளாத்தீஸ்வரர்’ என்றும், தலம் “தென்காளஹஸ்தி’ என்றும் பெயர் பெற்றது.

வரலாறு:

நாயக்கர்கள் ஆட்சிக் காலகட்டத்தில் புகழ் பெற்ற ராணிமங்கமாளின் படைப் பொறுப்பை ஏற்று வந்தவர் கொண்டம நாயக்கர். இவர் காளகஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது மிகுத்த பக்தி கொண்டவர். அவர் வயதான காரணத்தால் காளகஸ்தி செல்ல முடியாமல் அவதிப்பட்டார் . இவரின் நிலையை அறிந்த காளாத்தீஸ்வரர், அவர் இருக்குமிடத்திலேயே கோவில் அமைத்து வழிபடலாம் என்றும், இங்கு வழிபட்டால், காளகஸ்திக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்றும் அருளினார் என்பது ஐதீகம். உடனே அவர் இப்பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர் பூஜையா நாயக்கரிடம் தெரிவித்தார். பாளையக்காரர் அங்கே ஒரு கோவில் அமைத்துக் கொடுத்தார். இதுவே தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் இக்கோயில் ஆகும்.

தலபெருமை:

ஆற்றில் வந்த அம்பிகை!:

காளாத்திநாதர் இங்கு எழுந்தருளியபின்பு, அம்பிகைக்கு சன்னதி அமைக்க பக்தர்கள் விரும்பினார். இதற்காக பல சிலைகள் அமைத்தும், சிலை சரியாக அமையவில்லை. இதனால் அம்பிகை இல்லாத தலமாகவே இக்கோயில் திகழ்ந்தது. ஒருசமயம் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், “அம்பிகை முல்லைப்பெரியாற்றில் வருவாள்!’ என்றார். அதன்படி, ஒருசமயம் ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்தபோது, ஒரு கூடை மிதந்து வந்தது. அக்கூடையில் அம்பிகையின் சிலை இருந்தது. மகிழ்ந்த பக்தர்கள் அம்பிகையை இங்கே பிரதிஷ்டை செய்தனர். காளாத்தியில் அருளும் அம்பிகையின் பெயரால், “ஞானாம்பிகை’ என பெயர் சூட்டினர். இந்த அம்பிகையின் முகத்தில் ஆற்றில் அடித்துவரப்பட்டபோது ஏற்பட்ட தழும்புகள் இருப்பதை தற்போதும் காணலாம். இந்த அம்பிகை இங்கு மிகவும் பிரசித்தி பெற்றவளாக அருளுகிறாள். கோயிலும் இவளது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இப்பகுதியில், “ஞானாம்பிகை கோயில்’ என்றால்தான் தெரியும். காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை இருவருக்குமிடையே சண்முகர் (சோமாஸ்கந்த அமைப்பில்) தனிச்சன்னதியில் இருக்கிறார். கோயில்களில் ஒரு சன்னதியில் நின்று ஒரு சுவாமியையே தரிசிக்க முடியும். ஆனால் இங்கு ஒரே சமயத்தில் அம்பிகை, முருகப்பெருமான் இருவரையும் தரிசிக்கலாம். அம்பாள் சன்னதிக்கு எதிரில் ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. இதற்கு அருகில் அமர்ந்து கொண்டால், இவ்விருவரின் தரிசனமும் நமக்குக் கிடைக்கிறது. இத்தகைய தரிசனம் கிடைப்பது அபூர்வம். தாய், மகன்களின் ஒற்றுமைக்கான பிரார்த்தனை தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. மகனைப்பிரிந்துள்ள தாயார், இங்கு வேண்டிக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்வர் என்கிறார்கள்.

பிறந்த வீட்டு சீர்!:

ஆற்றில் வந்த அம்பாள், இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள கோகிலாபுரம் என்ற இடத்தில் கிடைக்கப்பெற்றாள். எனவே, இவ்வூரை அம்பிகையின் பிறந்த வீடாகக் கருதுகின்றனர். சிவன், அம்பிகை திருக்கல்யாணம் நடக்கும்போது, இவ்வூரிலிருந்து பக்தர்கள் அம்பிகைக்கு பிறந்த வீட்டுச் சீரும், தங்களது மருமகனான சிவனுக்கு வஸ்திரங்களும் கொண்டு வருகின்றனர். இதையே சிவன், அம்பிகைக்கு அணிவித்து பூஜிக்கிறார்கள்.

வாஸ்து பகவான்:

முல்லைப்பெரியாற்றின் மேற்கு கரையில் அமைந்த கோயில் இது. காசியில் கங்கை நதி தெற்கிலிருந்து, வடக்கு திசை நோக்கி ஓடுகிறது. இதன் கரையில் கோயில் கொண்டுள்ள காலபைரவர், மிக விசேஷமான மூர்த்தியாக வழிபடப்படுகிறார். இதைப்போலவே இங்கும் பெரியாறு நதி, உத்தரவாகினியாக வடக்கு நோக்கி ஓடுகிறது. இதனால் இக்கோயிலில் உள்ள பைரவரும், சிறப்பான மூர்த்தியாக வழிபடப்படுகிறார். செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தி கிடைக்கவும் இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். ஜாதகத்தில் நட்சத்திரம், ராசி தோஷம் உள்ளவர்களும், நிலம், பூமி தொடர்பான பிரச்னை உள்ளவர்களும் வாஸ்து, சூரிய ராசி சக்கரங்களின் கீழ் நின்று சிவனை தரிசித்துச் செல்கிறார்கள்.

கண் நோய் நிவர்த்தி தலம்:

பஞ்சபூத தலங்களில் காளஹஸ்தி, வாயு தலமாக இருக்கிறது. இதேபோல இத்தலத்தில் சிவன், வாயு அம்சமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே இவருக்கு, “வாயுலிங்கேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. வாயுவை தொடமுடியாது என்பதால் இவரை “தீண்டாத்திருமேனியன்’ என்றும் அழைக்கிறார்கள். வேடுவரான கண்ணப்பருக்கு காளஹஸ்தியில் சிவன் முக்தி கொடுத்தருளினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு கண்ணப்பருக்கு சன்னதி இருக்கிறது. கையில் ருத்ராட்ச மாலை, அம்பு, வில்லுடன் காட்சி தருகிறார் இவர். சிவராத்திரியன்று இரவில் காளாத்தீஸ்வரர், கண்ணப்பர் இருவருக்கும் விசேஷ பூஜை நடக்கும். கண் தொடர்பான நோய் உள்ளவர்கள் இவ்விருவருக்கும் வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.

அஷ்டமாதர்:

கோயில்களில் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டாதேவி ஆகிய சப்த மாதர்களையே தரிசித்திருப்பீர்கள். ஆனால் இக்கோயிலில் “அஷ்ட மாதர்களை’ (எட்டு அம்பிகையர்) தரிசிக்கலாம். ஆதிசக்தியிலிருந்து ஏழு அம்சங்களாக ஏழு தேவியர் தோன்றினர் என்றும், அவர்களே சப்தமாதர்களாக அருளுகின்றனர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவியும், சப்த மாதர்களுடன் சேர்ந்து காட்சி தருகிறாள். இவர்களது தரிசனம் விசேஷ பலன் தரக்கூடியது. மடியில் வீணையை வைத்து இரண்டு கைகளாலும் மீட்டியபடி காட்சி தரும் சரஸ்வதி, இங்கு இடது கையில் வீணையைப் பிடித்தபடி காட்சி தருகிறாள். வலது கையில் அட்சர மாலை வைத்திருக்கிறாள். இத்தகைய அமைப்பில் சரஸ்வதியைக் காண்பது அரிது.

மனைவியருடன் ராகு, கேது:

பிரகாரத்தில் குபேரர், ஐஸ்வர்ய லட்சுமியுடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவர்களுக்குப் பின்புறம் மகாலட்சுமியும் இருக்கிறாள். அட்சய திரிதியையன்று குபேரருக்கு விசேஷ பூஜைகள் நடக்கும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவருக்கு திரிதியை நாட்களில் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். கோயில்களில் ராகு, கேது இருவரும் நவக்கிரக மண்டபத்தில்தான் காட்சி தருவர். திருநாகேஸ்வரத்தில் ராகுவும், கீழப்பெரும்பள்ளத்தில் கேதுவும் தனிச்சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் இவ்விருவரும் மனைவியருடன் அருளுகின்றனர். இவர்கள் இருவரும் சுயரூபத்துடன் இருப்பது மற்றொரு சிறப்பு. ஆவுடையாருடன் கூடிய சதுர பீடத்தில் ராகு, சிம்ஹிகையுடனும், கேது, சித்ரலேகாவுடனும் காட்சி தருகின்றனர். இவர்களது சன்னதிக்கு தனித்தனி துவாரபாலகர்களும் இருக்கின்றனர். ஏழு நாக தேவதைகளும் இவரது சன்னதியில் சுதை சிற்பமாக வடித்துள்ளனர். சுவாதி நட்சத்திர நாட்களில் இவர்களுக்கு விசேஷ பாலபிஷேகம் செய்கின்றனர். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 – 6 மணி) இவர்களது சன்னதியில், “சர்ப்பதோஷ பரிகார ஹோமம்’ நடக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு, ராகு, கேதுவை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவர்களது சன்னதியில் ஹோமத்துடன் பரிகார பூஜையும், திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

விஷராஜா:

நவக்கிரகங்களில் சனீஸ்வரருக்கு கருப்பு நிறம் உகந்தது. எனவே இந்த நிறத்திலான வஸ்திரத்தையே அணிவித்து வழிபடுவர். ஆனால், இக்கோயிலில் சனீஸ்வரருக்கு, பச்சை நிற வஸ்திரத்தை அணிவிக்கிறார்கள். கல்விக்கு அதிபதியான புதனுக்குத்தான், பச்சை வஸ்திரம் அணிவிப்பர். ஆனால் கல்வியில் சிறப்பிடம் பெற சனீஸ்வரருக்கு, இவ்வாறு பச்சை வஸ்திரம் அணிவிக்கும் வழக்கம் இருக்கிறது. காளாத்தீஸ்வரர் கோயிலுக்கு வெளியில் விஷராஜா இருக்கிறார். இவருக்கு சன்னதி கிடையாது. இவரது சிலையைச் சுற்றி சிறிய சுவர் மட்டும் இருக்கிறது. இவர் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் இங்கு வரும் பக்தர்களுக்கு அருளுவதாக ஐதீகம். பாம்பு மற்றும் விஷ பூச்சிகளால் கடிபட்டவர்கள் பவுர்ணமியன்று இவருக்கு வஸ்திரம் அணிவித்து, பாலபிஷேகம் செய்வித்து, அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். முருகன் சன்னதி எதிரில் நவவீரர்கள் இருக்கின்றனர்.

கோபுரத்தை அடுத்து சூரியன், சந்திரன் இருவரும் தாமரை மலர் மீது மனைவியருடன் காட்சி தருகின்றனர். நரசிம்மர் இல்லாத சரபேஸ்வரரை இங்கு தரிசிக்கலாம். செவ்வாய் கிழமை ராகு காலத்தில் இவரை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகருக்கு தாலி அணிவித்து, மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். கோபுரத்தின் கீழே நந்திதேவர், மனைவியுடன் இருக்கிறார். வீணா தட்சிணாமூர்த்தியை, இங்கு உற்சவமூர்த்தியாக தரிசிக்கலாம்.

#சனீஸ்வரருக்கு பச்சை ஆடை உடுத்தும் வித்தியாசமான நடைமுறை:

நவகிரகங்களில்,  சனீஸ்வரருக்கு உரிய வஸ்திரம் கருப்பு நிறம் . எனவே, சனீஸ்வரருக்கு அனைத்து கோவில்களிலும் கருப்பு நிறத்திலான ஆடையை அணிவித்து வழிபடுவதுதான் வழக்கம். ஆனால் இக்கோவிலில் கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள், இறைவன் காளத்தீஸ்வரர், இறைவி ஞானாம்பிகை ஆகியோரை வழிபட்டு, இங்குள்ள சனீஸ்வரருக்கும் பச்சை ஆடை அணிவித்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. கல்விக்கு உரியவரான புதனுக்கு உடுத்தும் பச்சை நிற ஆடையைப் போன்று, சனீஸ்வரருக்குப் பச்சை நிற ஆடையினை அணிவித்து வேண்டுவதன் மூலம், மாணவப் பருவத்தில் சனியின் பிடியிலிருந்து விடுபட்டு கல்வியில் சிறப்புகளைப் பெற முடியும் என்பது இத்தலத்து பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

*ராசி, நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் காட்சியளிக்கும் வாஸ்து பகவான்:

சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு

இக்கோவிலின் சிவன் சன்னதி முன்பாக இருக்கும் மண்டபத்தின் மேற்கூரையில் ராசி, நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் வாஸ்து பகவான் சடாமுடியுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது. வாஸ்து பகவானின் தலைக்கு மேலே பிரம்மா, அம்பிகை இருவரும் வழிபாடு செய்வது போன்ற சிற்பம் இருக்கிறது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியிருப்பது போன்று உள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் இருக்கின்றனர். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசிகளுக்கான சின்னங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. இதனையடுத்து, நடுவில் சூரியனும், சுற்றிலும் 12 ராசிகளும் கொண்ட 'சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம்' இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே  ஆவுடையார் கோவில், உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில் ஆகிய இரண்டு தலங்களில் மட்டுமே, இந்த சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் இருக்கின்றது. இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

நிலம், வீடு தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள், இந்தச் சக்கரங்களின் கீழ் நின்று இறைவனை வழிபட்டால் அவர்களின் பிரச்சனை விரைவில் தீர்ந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

*மனைவியருடன் ராகு, கேது அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தரும் அபூர்வ அமைப்பு:

கோவில்களில் ராகு, கேது இருவரும் நவக்கிரக மண்டபத்தில்தான் காட்சி தருவர். திருநாகேஸ்வரத்தில் ராகுவும், கீழப்பெரும்பள்ளத்தில் கேதுவும் தனிச்சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் ராகுவும், கேதுவும் தம் மனைவியருடன் அருளுகின்றனர். இவர்கள் இருவரும்  சுயரூபத்துடன் இருப்பது மற்றொரு சிறப்பு. ஆவுடையாருடன் கூடிய சதுர பீடத்தில் ராகு, சிம்ஹிகையுடனும், கேது, சித்ரலேகாவுடனும் காட்சி தருகின்றனர்.

இவர்களது சன்னதிக்கு தனித்தனி துவாரபாலகர்களும் இருக்கின்றனர். ஏழு நாக தேவதைகளும் இவரது சன்னதியில் சுதை சிற்பமாக வடித்துள்ளனர். சுவாதி நட்சத்திர நாட்களில் இவர்களுக்கு விசேஷ பாலபிஷேகம் செய்கின்றனர். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 - 6 மணி) இவர்களது சன்னதியில், "சர்ப்பதோஷ பரிகார ஹோமம்' நடக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு, ராகு, கேதுவை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவர்களது சன்னதியில் ஹோமத்துடன் பரிகார பூஜையும், திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

திருவிழா:

சித்திரையில் திருக்கல்யாணம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், மார்கழியில் ஆருத்ராதரிசனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.

*ராகு  கேது பரிகாரம்...

சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. ராகு பகவான் சிம்ஹிதேவியுடனும், கேதுபகவான் சித்ரலேகாவுடனும் அடுத்தடுத்த சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு நடக்கும் காலசர்ப்ப தோஷ பரிகார ஹோமத்தில் பங்கு  கொண்டு வழிபடுவதுடன், ஹோமம் முடிந்ததும் தரப்படும் (ஹோமத்தில் கிடைக்கும்) ரோக சாம்பல், தேங்காய்வாழைப்பழம், நவதானியம், ராகுகேதுவின் வெள்ளித் தகடுகள் ஆகியவற்றை எடுத்துச்சென்று அருகில் உள்ள முல்லையாற்றில் இடவேண்டும். இதனால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

*சகஸ்ரலிங்கம், சுரதேவர்:

ஒரே லிங்கத் திருமேனியில் சிறிய அளவில் 1008 லிங்கங்களுடன் காட்சிதரும் சகஸ்ரலிங்க தரிசனம் இக்கோயிலின் விசேஷம்.

இங்குள்ள சுரதேவருக்கு ரசம் சாதம் படைத்து வழிபட்டால், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் உடல் உஷ்ண நோய்கள் நீங்கும்.

பாம்பு மற்றும் விஷப் பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதுடன், பெளர்ணமி தினங்களில் இந்தக் கோயிலுக்கும் வந்திருந்து, இங்கு அருள்பலிக்கும் விஷராஜா என்ற தெய்வத்துக்கு வஸ்திரம் அணிவித்து பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இதனால் விஷத்தின் பாதிப்பு நீங்கி விரைவில் குணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தல சிறப்பு:

பஞ்சபூத தலங்களில் இத்தலம் வாயு தலமாக இருக்கிறது. ராகு, கேதுவுக்கு தனிசன்னதி உள்ளது.

பொது தகவல்:

இத்தலவிநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதி முன் மண்டப மேற்சுவரில் ராசி, நட்சத்திர கட்டத்தின் மத்தியில் வாஸ்து பகவான், பத்மாசனத்தில் அமர்ந்து சடாமுடியுடன் காட்சி தருகிறார். வாஸ்து பகவானின் தலைக்கு மேலே சிவலிங்கத்தை பிரம்மா, அம்பிகை இருவரும் பூஜிக்கும் சிற்பம் இருக்கிறது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியுள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலியும் இருக்கின்றனர். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து, சூரிய மண்டல ஆகாய ராசி சக்கரம் இருக்கிறது. நடுவில் சூரியபகவான், நின்றிருக்க அவரைச் சுற்றிலும் 12 ராசிகள் இருக்கிறது.

சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, கல்லால மரம் இல்லாமல் காட்சி தருகிறார். லிங்கோத்பவர், தனிச்சன்னதி அமைப்பில் இருக்கிறார். அருகில் பிரம்மா, பெருமாளும், எதிரே நந்தியும் இருக்கிறது. காசி விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மீனாட்சி சொக்கநாதர் மற்றும் பராசக்தியுடன் சகஸ்ரலிங்கத்திற்கு பிரகாரத்தில் சன்னதிகள் இருக்கிறது.

பவுர்ணமியன்று சகஸ்ர லிங்கத்திற்கு விசேஷ பூஜைகள் நடக்கும். தட்சிணாமூர்த்தி அருகில் நின்றுகொண்டு கன்னிமூல கணபதி, விஸ்வநாதர், சொக்கநாதர், சகஸ்ரலிங்கம் ஆகிய மூர்த்திகளை ஒரே சமயத்தில் தரிசிக்கலாம். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

அன்னம் புத்தூர் ஶ்ரீநிதீஸ்வரர் ஆலயம், விழுப்புரம் திண்டிவனம் புதுச்சேரி

கோவில்களும் கோபுரங்களும் கொண்டாட்டமும் வழிபாடுமாக வாழ்ந்த இனம் இந்த இந்து சமூகம், அதுவும் உலகிலே அதிக கோவில்களும் பெரும் பெரும் சிலைகளும் லிங்கமும் தேர்களும் உயர்ந்த கோபுரங்களும் கொண்ட இடம் இந்திய தமிழகம்
அந்த மக்களை போல் தெய்வத்துக்காய் வாழ்ந்த இனம் எதுவுமில்லை, அழியா பெரும் கோவில்கள் அதனை மெய்பித்துகொண்டே இருக்கின்றன, இருக்கும் பெரும் ஆலயங்கள் போல ஏகபட்ட பண்டைய ஆலயங்கள் சம்பந்த பெருமான் சாம்பலில் இருந்து உயிர்பித்த பெண் போல, முதலைவாயில் சென்ற சிறுவனை சுந்தரர் மீட்டது போல மீள எழும்பி கொண்டும் இருக்கின்றன‌

அதில் ஒன்று அன்னம் புத்தூர் ஶ்ரீநிதீஸ்வரர் ஆலயம்,  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் – புதுச்சேரி சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது வரகுப்பட்டு. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் 4 கி.மீ. பயணித்தால் அந்த ஆலயம் வரும்

இது மகா பழமையான ஆலயம் அமைந்த இடம், அதன் தொன்மை ஈசனின் அடிமுடியினை விஷ்ணுவும் பிரம்மனும் சேர்ந்து தேடிய காட்சியில் தொடங்குகின்றது, சிவனின் முடியினை காணமுடியாத பிரம்மன் சாபம் பெற்றான், அவனின் படைப்பு தொழில் அவனை விட்டு நீங்கிற்று அவனால் எதையும் உருவாக்க முடியவில்லை

மனமொடிந்த அவன் ஈசனை நோக்கி தவமிருந்தான், அப்படியே  தீர ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து அதனை வழிபட ஒரு பொய்கையும் அமைத்து கொண்டான், அவன் பொய்கையில் அன்னத்துடன் அவன் வழிபட்ட இடம் அன்னம் புத்தூர் என்றாயிற்று

பிரம்மனின் பக்திக்கு இறங்கி வந்து உமையுடன் விடையில் வந்து காட்சிதந்து பிரம்மனுக்கு அவன் படைப்பு தொழிலை மீள கொடுத்தார் சிவன்

ஆம், இந்த சிவன் பிரம்மனால் ஸ்தாபிக்கபட்டவர், அவரை தொழுது தன் சாபம் தீர்த்தான் பிரம்மன்

இவருக்கு ஶ்ரீநிதீஸ்வரர் என பெயர்வர காரணமானவன் குபேரன், அவனே வடதிசையின் அதிபதி, இதனலே "வாழ்பவன் திசை வடக்கு" எனும் வாக்கியம் உருவாயிற்று

அவன் உன்னதமான சிவபக்தன், பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி மற்றும் சங்க நிதி ஆகிய எட்டு வகையான நிதிகளுக்கும் அவனேதலைவன் குபேரன்.

அவனே நிதிகளுக்கு எல்லாம் அதிபதி நிதிபதி அவன் அஷ்டதிக்கு பாலகர்களிலும் ஒருவன்

அப்படிபட்ட குபேரன் துர்வாசரிடம் சாபம் பெற்றான், அந்த சாபத்தால் அவனின் எல்லா நிதியும் அகன்றது அவன் நவநிதிகளுக்கு அதிபதியாக இருந்த காலம்போய் மிக தரித்திர் கோலம் அடைந்தான்

அவன் பிரம்மன் வழிபட்ட இந்த தலத்துக்கு வந்து மனமுருக வேண்டி கொண்டான், இந்த சிவனை சிக்கென் பற்றிகொண்டான் அவனின் வைராக்கியமான தவத்துக்கு மனமுருகிய ஈசன் அவனுக்கு எல்லா நிதிகளையும் மீள கொடுத்தார், இதனால் நிதி கொடுக்கும் ஈஸ்வரர், நிதீஸ்வரர் என்றானார்

குபேரனை பிடித்து கொண்ட ராவணனும் இந்த தலத்தில் வணங்கினான் எல்லா வகை நிதிகளும் அவனிடம் குவிந்திருந்தன‌

இந்த சிவனே எல்லா பெரும் சிவபக்தர்களுக்கும் நிதி கொடுக்கும் பெரும் ஈஸ்வரனார், இந்த ஆலயத்துக்கென தனிபெரும் அடையாளும் தலபுராணமும் உண்டு

இங்கே பிரம்மன், குபேரன், இந்திரன்,ராவணன் என எல்லொரும் வணங்கினார்கள், பெரும் பெரும் சித்தர்கள் வணங்கினார்கள்,  மன்னாதி மன்னர்களெல்லாம் இங்கு தவமிருந்து பெரும் நிதி பெற்றார்கள்

இந்த ஆலயம் அடியார்களாலும் மன்னர்களாலும் கொண்டாடபட்டது, இந்த தலம் பற்றிய குறிப்பு தேவார பாடல்களில் நுணுக்கமாக உண்டு என்பார்கள், இன்னும் பல பாடல்களில் உண்டு

மூவேந்தர்களாலும் கொண்டாடபட்ட இந்த தலத்தை பெரும் இடத்துக்கு கொண்டு சென்றவன் ராஜராஜ சோழன்

இது சாபம் தீர்க்கும் ஆலயம் இழந்ததை தரும் ஆலயம் என்பதை அவன் அறிந்து இங்கு வந்தான், அவன் வரும்போதே ராஜராஜசோழனாக வரவில்லை மாறாக சிவனடியார்களில் ஒருவராக அருண்மொழி தேவனாக வந்தான்

அவன் அங்குவரும்போது அவனுக்கு பெரும் சிக்கல்கள் இருந்தன, சோழ வம்சத்துக்கு பெரும் சாபங்கள் இருந்தன, அந்த சாபம் தீராமல் சிவனருள் பெறாமல் இனி சோழவம்சம் மீளாது என்பதை உணர்ந்து இந்த சிவனிடம் சரணடைந்தான்

விஜயாலய சோழனால் சோழ வம்சம் மீண்டாலும் அவர்களால் மேல் எழமுடியவில்லை ஒருவித சாபம் இருந்தது அது கண்டாரத்தினை முடக்கியது, சுந்தர சோழனும் நோயில் வீழ்ந்தான், ஆதித்த கரிகாலனும் கொடுமையாக இளமையிலே கொல்லபட்டான்

எந்நேரமும் பல்லவரோ பாண்டியரோ இல்லை ஈழத்தவரோ சிங்களவரோ சோழநாட்டை கைபற்றும் ஆபத்து இருந்தது, உத்தமசோழனின் ஆட்சி தள்ளாடிகொண்டிருந்தது

ராஜராஜசோழன் மிக சிறந்த ஞானி, அவன் தன்னை உணர்ந்தான் தன்னிலை சோழதேசத்து நிலை உணர்ந்தான், தெய்வபலம் ஒன்றே இந்த சோழர்குலத்தின் சாபம் தீர்க்கும் என்பதை அறிந்திருந்தான்

அவன் பெரியம்மா செம்பியன் மாதேவி சிவாலயங்களை எல்லாம் கற்கோவிலாக் மாற்றிகொண்டிருந்தாள் அவளுக்கும் தன் குலம் பெற்ற சாபம் தெரிந்திருந்தது

ஏதோ ஒரு காலத்தில் சோழர்களில் ஒருவர் சிவாலயங்களை சரியாக பராமரிக்காமல் கோவில் சொத்துக்களை குலைத்த கொடுமையில்தான் இப்படி தள்ளபட்டோம் என நம்பினாள், அவளின் திருப்பணிக்கெல்லாம் அதுதான் காரணம் அவள் செய்தது ஒருவகை சாபவிமோசனம்

ராஜராஜன் இதை உணர்ந்திருந்தான், என்ன இல்லை சோழநாட்டுக்கு? அள்ளி அள்ளி கொடுக்க காவேரி, கரிகால் சோழனின் கனவில் உருவான பெரும் பெரும் கால்வாய்கள் வயல்கள் என விளைந்து கொட்டும் பூமி அது

கடல் வளம் நாகபட்டினத்தில் இருந்தது பெரும் பெரும் கலங்கள் செல்வங்களை கொட்டின‌

நீரினால் எழுந்த அந்த தேசம் பொன்னை குவித்து கொண்டிருந்தது, கடல்நீரும் காவேரி நீரும் கொட்டி கொடுத்தன அள்ள் அள்ள செல்வம் விளைந்தது , ஆனால் வாழ்வு?

பெரும் செல்வமும் விளைச்சலும் எல்லாமும் இருந்து அங்கு நிம்மதியும் வாழ்வும் இல்லை என்றால் சாபம் ஒன்றை தவிர ஏதும் காரணமாயிராது என்பதை அறிந்த அந்த ஞானி அருண்மொழி தேவன் இந்த சிவனை சரணடைந்தான்

நிதிஸ்வரரை அவன் சிக்கென பிடித்து கொண்டான், அவனின் மன்றாட்டில் வாதமும் நியாயமும் இருந்தது

படைப்புக்கெல்லாம் அடிப்படை நீர், அதுதான் பிரம்ம தத்துவம், அதுதான் ஆடிபெருக்கின் அடிநாதம். அந்த நீர் சோழநாட்டில் காவேரியாய் நிரம்ப உண்டு, நீர் மிகுந்தால் நிதி மிகுந்திருக்கும் கடல்நீர் ஆற்றுநீர் மழைநீர் என முந்நீரும் நிதிகொடுக்கின்றது

ஆனால் சோழவம்சம் ஒரு சாபத்தில் சிக்கி கிடக்கின்றது, அந்த சாபம் குபேரனும் இந்திரனும் பிரம்மனும் இன்னும் பலரும் வழிபட்ட இந்த இடத்தில் எனக்கு தீரவேண்டும், சோழர்குலம் இனி வாழவேண்டும், சாபம் தீர்த்து வாழவைத்தால் நாங்கள் சிவனுக்காய் வாழ்வோம் என அவன் மன்றாடினான்

வெறும்மன்றாட்டு அல்ல அவன் தவமிருந்தான், இந்த ஆலய சிவன் முன்னால் பல்லாண்டுகள் தவமிருந்தான்

அவன் வரலாற்றில் ஆதித்த கரிகாலன் கொலைக்கு பின்னால் அவன் உடனே அரியணைக்கு வரவில்லை என்பது தெரியும், அவன் மக்களோடு மக்களாக இருந்தான் என்பதும் தெரியும்

ஆனால் மறைக்கபட்ட வரலாறு அவன் இந்த ஆலயத்தில்தான் தவமிருந்தான், திருப்பணி செய்து ஒரு அடியாராக வாழ்ந்து சாபம் தீர்த்தான் என்பது

ஆம் , சில ஆண்டுகளில் அவன் சாபம் தீர்ந்தது அதன்பின் அரியணை அவனுக்கு வந்தது சோழர்குலத்தை உலகின் முதல் குலமாக அவன் சிவனருளில் மாற்றினான், எல்லா வகையிலும் அவன் உலகின் பெரும் சக்கரவர்த்தியாக இருந்தான்

அந்த நன்றிக்குத்தான் தஞ்சையில் பெரும் சிவாலயம் எழுப்பினான், அந்த ஆலயத்தை மகாமேரு உருவில் அமைத்து பெரும் லிங்கம் ஸ்தாபித்து கொண்டாடினான், அந்த பெரும் கோபுரத்தை தங்கத்தால் மூடினான்

அப்படிபட்டவன் தனக்கு வாழ்வளித்த இந்த ஆலயத்தை தங்கத்திலே முழுக்க மூடினான், அங்கு கோவில் மட்டுமல்ல தேரும் நந்தியும் கூட தங்கம் கொண்டிருந்தது

தஞ்சாவூர் பெரியகோவில் மகா மேரு வடிவம், மற்றபடி அவன் மனமார வழிபட்டது இந்த ஆலயமே

இந்த ஆலயம் தங்ககோவிலாக போற்றபட்டது, அதன் கருவறை கோபுரம் குபேரனின் தலம் போல் நவரத்தினங்களால் ஜொலித்தது, பூலோக குபேரபுரியாக நிதிஸ்தலமாக அதை மாற்றினான் ராஜராஜன்

அவனுக்கும் சிவனுக்குமான பந்தம் அப்படி இருந்தது , சிவன் அவனுக்கோர் வரமும் அளித்தார், ராஜராஜன் வழிபட்டு உருவாக்கிய ஆலயமெல்லாம் உன்னத சிவபக்தர்களாலே காக்கபடும் என்ற வரமும் கொடுத்தார்

அப்படித்தான் தஞ்சை பெரியகோவில் கடைசிவரை சிவபக்தி இல்லாதவரிடம் சிக்கவில்லை, சிக்கினாலும் மீண்டது,  ஆப்கானியர் காலத்தில் கூட வீரசிவாஜியின் தந்தை ஷாஹாஜி அதை மீட்டான் இன்றுவரை அவன் வாரிசுகளே அங்கு அறங்காவலர்கள்

அப்படிபட்ட ராஜராஜன் உருவாக்கிய இக்கோவிலும் அவனுக்கு பின்னர் ராஜேந்திரசோழன் அவன் வம்சம் என கொண்டாடபட்டது, பின் ஜடவர்ம சுந்தபாண்டியனும் அவன் வம்சமும் கொண்டாடினார்கள்

இந்த ஆலயம் மாலிக்காபூர் காலத்தில் பெரும் அழிவுக்கு உள்ளானது தஞ்சை கோவிலினை மூடிய பொற்கூரை, சிதம்பரம் தங்க சபையின் பொற்கூரையெல்லாம் அள்ளி சென்ற அந்த கொடியவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கினான்

அவன் காலத்திலே தங்கதேர் தங்க கூரை எல்லாம் பறிக்கபட்டது, இன்னும் ராஜராஜன் வழிபட்ட இடம் என்பதால் தோண்டிபார்த்து அழித்தான்

அவனுக்கு பின் துக்ளக் இதை செய்தான், அந்த ஆலயத்தை நிர்மூலமாக்கினான், பின் நாயக்கர்கள் மீட்டெடுத்தாலும் பின் செஞ்சி கோட்டையினை அப்சல்கான் சில ஆப்ரிக்கர்கள் பிஜப்பூர் சுல்தானுக்காக கைபற்றியபோது நிலமை இன்னும் மோசமானது

உடைத்துபோடபட்ட சிலைகள் கைவிடபட்ட தூண்கள் என கிடந்த ஆலயம் மழைகாலத்தில் வந்த வெள்ள பெருகாலும் ஏரியின் நீர் அடிக்கடி பாய்ந்து கொட்டிய மணலாலும் மூடபட்டு மறைந்து போனது

அப்படி ஒரு ஆலயம் இருந்த அறிகுறியே இல்லாமல் போனது, அதை சொல்லி கொடுக்கவும் யாருமில்லை, வரலாற்றில் அதன் குறிப்புமில்லை

இது பற்றிய முழு குறிப்பும் தஞ்சை சரஸ்வதி மஹாலில் உண்டு, ஆனால் அது இந்த ஆலயம் என்பதை யாரும் அறியவில்லை

நம்புகின்றீர்களோ இல்லையோ மெய்சிலிர்க்கும் அந்த விஷயத்தை எல்லோரும் ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

ராஜராஜனின் ஆயிரமாண்டு விழா நடத்த தயாரான போது அவனுக்கு பெரும் விழா தஞ்சாவூரில் கொண்டாடபட எல்லோரும் தயாரான போது, அவன் பெயரில் தஞ்சை பெரு உடையார்க்கு பெரும் அபிஷேகம் நடத்த ஏற்பாடனபோது இந்த ஆலய லிங்கம் வெளிபட்டது

அதுவரை வெளிபடா லிங்கம் அப்போதுதான் தன்னைவெளி காட்டிற்று, ஊர்மக்கள் ஏதோ சிலை என தோண்டி எடுக்க அது பிரமாண்ட லிங்கமாக இருந்தது

சுற்றி தோண்ட தோண்ட பல கல்வெட்டும் உடைந்த நந்தியும்கிடைத்தது, முழுவதும் உடையாத இரு தூண்கள் கிடைத்தன , அவைதான் ராஜராஜன் இங்கு அடியாராக நின்று பணிசெய்த வரலாற்றை சொன்னது

இத்னை சொன்னது தொல்பொருள் அதிகாரிகள், அவர்கள்தான் இந்த கல்வெட்டுக்களை படித்து சொன்னார்கள்

பின் 2008ல் அதை ஒரு குடிசையில் ஸ்தாபித்தார்கள், வழிபாடுகள் தொடங்கின‌

அந்த கல்வெட்டில் 1008ம் ஆண்டு  ராஜராஜன் அந்த கோவிலில் பெரும் பணிகளை செய்தான் என சொல்லபட்டிருந்தது, சரியாக 2008ல் அது வெளிபட்டது

நம்பமுடியாத அதிசயம்தான், ஆனால் நடந்தது இந்த மண்ணில் அது நடந்தது

தஞ்சை பெரியகோவிலில் அந்த மாமனன்னின், ராஜராஜசோழனின் ஆயிரமாண்டு விழா கொண்டாடபட்டபோது இங்கு ஓலை குடிசையில் அந்த நிதிஸ்வரர் இருந்தார்

அப்போது இது கவனம் பெற்றது, அந்த ஊரின் மக்கள் ஒரு கோவில் எழுப்ப முனைந்தார்கள், அதுவோ வெறும் 300 வீடு கொண்ட கிராமம் எப்படி முடியும்?

இதனால் அவர்களால் முடிந்த அளவு உலகெல்லாம் இருந்த பக்தர்களை திரட்டினார்கள், "ஶ்ரீநிதீஸ்வரர் அறகட்டளை" என ஒன்றை உருவாக்கினார்கள்

உண்மையில் அந்த மக்களும் அந்த குழுவினரும் பாவபட்டவர்கள், இந்த ஆலயம் ஊர் ஆலயம் என்பதால் அறநிலையதுறை தலையிடவில்லை, தொல்பொருள் ஆய்வாளர்களே வந்து இது ராஜராஜசோழன் வழிபட்ட ஆலயம், அவன் மெய்கீர்த்தி பதிக்கபட்ட ஆலயம் என சொன்னாலும் தமிழக அரசின் ஆதரவு இல்லை

அரசுக்கு அப்போது ஈழ சிக்கல் இருந்தது, தேர்தல் கணக்கு இருந்தது, வட இலங்கை பற்றி எரிந்து கொண்டிருந்தது

அன்றைய திமுக அரசு இதை வழக்கம்போல் புறக்கணித்தது

மக்கள் போராடினார்கள் நிதி திரட்டினார்கள் , சொல்லபோனால் பிச்சை எடுத்தார்கள், முடிந்த அளவு நிதி திரட்டினார்கள், சிவன் அவர்களோடு இருந்தார்

அதனால் ஓரிரு கோடிகள் குவிந்தன, அதை கொண்டு கோவில்  கட்டினார்கள்

அங்கும் ஆச்சரியம் அமைந்தது, அங்கு கல்லும் சிமென்டும் சாந்துமில்லை, எப்படி ராஜராஜசோழன் தஞ்சை கோவிலை கல்லுக்குள் கல் பொருத்தி அடுக்கி கட்டினானோ அப்படியே இங்கும் கட்டினார்கள், இதெல்லாம் எப்படி அப்படியே நடந்தது, எப்படி திறமையான கல் தச்சர்கள் வந்தார்கள் என்பதெல்லாம் வியப்பு அல்லது சிவனுக்கு இதெல்லாம் சாதாரணம்

2014ல் கோவில் கும்பாபிஷேகம் நடந்தபோது ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்சத்தில் இருந்தது அது வேறு

இந்த மக்கள் மீண்டும் மீண்டும் போராடினார்கள் ஒரு ராஜகோபுரம் கட்ட முயன்றார்கள், இவர்கள் சந்திக்காத ஆட்சி பிரபலங்கள் இல்லை , அடுத்துவந்த அதிமுக அரசும் இதை கண்டுகொள்ளவில்லை

ஜெயலலிதா இதனை செய்திருக்கலாம் மனமில்லை பின் அப்பல்லோ அவருக்கு இடமளித்தது

பின் அம்மக்கள் அவர்களாக முனைந்து ராஜகோபுரம் கட்ட தொடங்கினார்கள், எப்படி நிதி சேகரித்து கல்கோவில் அமைத்தார்களோ அப்படி இப்போதும் ராஜகோபுரம் கட்டி மதில்களை அமைக்க ஆரம்பிக்கின்றார்கள்

சில லட்சம் செலவில் வேலைகள் தொடங்கிவிட்டன, முழுக்க கல்லால் அமையும் அந்த ராஜகோபுர பணிகள் பூமிபூஜை முடிந்து தொடங்குகின்றன‌

ஆனால் இது எளிதில் முடிக்ககூடிய விஷயமா என்றால் இல்லை ஓரிரு ஆண்டுகள் ஆகலாம், செலவும் சில கோடிகளை தாண்டலாம்

ராஜகோபுரம் என்பது இந்துக்களின் ஆலயத்தின் முக்கிய அடையாளம், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற அந்த இனம் ராஜகோபுரத்தையே தன் அடையாளமாக கொண்டிருந்தது

அது வெறும் அழகுக்கு அல்ல அதில் சூட்சுமங்கள் நிறைய இருந்தன‌

ரமணமகரிஷியின் சீடரான ஐரோப்பியன் பிராண்டன் அழகாக சொன்னான், இந்துக்களின் ராஜகோபுரத்தில் நான் எகிப்திய பிரமீடுகளின் சாயலை காண்கின்றேன், ஆனால் அவை படிகட்டாக இருக்கும் இங்கு சிலைகளெல்லாம் அமைக்கபட்டிருக்கின்றன‌

ஆம், இதுதான் ராஜகோபுரத்தின் தத்துவம், இந்த கோபுரத்தின் வழியாகத்தான் கந்தர்க்வர்கள், யட்சர்கள் என வானில் அலையும் மானுட அல்லாத சக்திகள் கோவிலுக்குள் வரும் என்பார்கள் ஞானியர்

அதாவது பிர்பஞ்சத்தின் சக்தியினை ஈர்த்து தருபவை ஆலய கோபுரங்கள் அதனாலே கோபுர கலசமெல்லாம் வைக்கபட்டு கும்பாபிஷேகமெல்லாம் செய்யபட்டு அதனை உயிர்ப்புடன் வைத்திருக்கும்

அவைதான் பிரபஞ்ச சக்தியினை ஈர்த்து தரும்,  இந்துமதம் சொன்ன இந்த ஞான தாத்பரியத்தை பிராண்டன் தெளிவாக வியந்து சொன்னான், இந்து ஞானியர் செய்த ஏற்பாடு அது

ராஜகோபுரம் கட்டுவது பெரும் அறப்பணி, உன்னதமான திருப்பணி அதற்காக ஒரு கல் கொடுப்பவர்க்கு கூட கயிலாயத்தில் ஆயிரம் ஆண்டு வாழும் வரம் உண்டு என்பது சிவன் வாக்கு

இங்கு இத்தனனை ஆயிரம் கோவிலும் ராஜகோபுரமும் உண்டு, இவை எல்லாம் அரசனின் கூலிகளால் உருவானது என கருதுகின்றீர்கள்?

இல்லை, எல்லா கோவிலும் மக்களால் உருவானது அதுவும் தஞ்சை போன்ற கோவில்களில் சோழநாடே திரண்டு வேலை செய்தது, ராஜராஜசோழனே இரும்படித்தான், அவன் மனைவி வானதிதேவி வேலையாட்களுக்கு நீர் சுமந்தார்

வரகுணபாண்டியன் மனைவி திருவிடை மருதூரில் சித்தாளாக கல்சுமந்தாள்

அதாவது மன்னர்களே மக்களோடு மக்களாக நின்று திருப்பணி செய்தார்கள், அப்படி ஊரே கூடி கட்டிய அலயங்கள்தான் இன்று மதத்தை காத்து கொண்டிருக்கின்றன, இந்த மண்ணை இந்துமண்ணாக நிறுத்தி கொண்டிருக்கின்றன‌

இந்த ஆலயம் அப்படி திருப்பணி காண்கின்றது, ஆனால் அம்மக்கள் தனியாக போராடுகின்றார்கள் பெரும் ஆதரவு இல்லை

அவர்கள் 20 வருடம் போராடி கோவிலை கட்டிகொண்டார்கள் இப்போது ராஜகோபுரத்துக்கும் மதில் சுவருக்கும் மறுபடியும் சிவனடியார்களாய் உலக ஆதரவை எதிர்பார்க்கின்றார்கள்

இந்த கோவில் துலங்கியபின் நடக்கும் அற்புதங்களும் ஏராளம்

பௌர்ணமி மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்பாள் பாதத்தில் வெண்ணெய் வைத்து அர்ச்சனை செய்து, ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து, அந்த வெண்ணையைப் பெற்று தம்பதிகளாக சாப்பிட. குழந்தைப் பேறு கிடைக்கின்றது

ஶ்ரீகனகாம்பிகை என தங்கத்தின் பெயர் கொண்ட அவளை  வழிபட  வீட்டில் லட்சுமி கடாட்சம் உருவாகும்

கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில், ஸ்ரீநித்தியகல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட. விரைவில் திருமணம் கைகூடும்.

பெண்கள் பூப்படையாத குறை தீர, ஐந்து வியாழக்கிழமைகளில் சுவாமிக்கு சொர்ணபுஷ்ப அர்ச்சனை செய்து, வெள்ளி நாணயத்தை பிரசாதமாகப் பெற்று செல்கின்றனர் பக்தர்கள். அதோடு இந்த பரிகாரத்தினால் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்னைகளும் தீரும்.

வெள்ளிக் கிழமை, பௌர்ணமி, பூச நட்சத்திரம், அக்ஷய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு ஸ்வர்ணபுஷ்ப அர்ச்சனை செய்து வழிபட, கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதோடு மன அமைதி, வீடு, வாகன யோகம், திருமணவரம், குழந்தைவரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெற்றிடலாம்.

குருவின் இரண்டு தெய்வங்களில் ஒருவரான பிரம்மா, இங்கு வழிபட்டதால், குருப் பெயர்ச்சி பரிகார பூஜைகள் இங்கு வெகு விமர்சையாக அனுசரிக்கப்படுகின்றன. அதில் பங்கு பெற்று பல நன்மைகளை பெறலாம்

இந்த ஆலயம் இழந்ததை மீள தரும் ஆலயம், குலசாபம் தீர்க்கும் ஆலயம், ராஜராஜசோழன் எனும் தமிழக இந்துமன்னனின் முழு பலமாக இருந்த ஆலயம்

இதற்கு திருப்பணி செய்வது சிவனே உங்களிடம் கேட்கும் வாய்ப்பு, சோமநாதபுரி ஆலயம் காசி ஆலயம் போல இது பழமையானது, இதனை மீள கொண்டுவர ஒரு வாய்ப்பு கிடைக்குமென்றால் அது ஒவ்வொருவரும் செய்த புண்ணியம்

இதனை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம், முடிந்தவர்கள் திருப்பணியில் பங்குபெறலாம், நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்கள் குடும்பத்துக்கு பெரும் பெரும் மடங்காய் திரும்பவரும், சிவனருளில் உங்கள் குலமும் குடும்பமும் வாழும், உங்கள் மனம் அந்த நிதிஸ்வரரில் கரைய கரைய பெரும் கீர்த்தி உருவாகும்

ஒரு மனிதன் வாழ அவனுக்கு நல்ல அறிவு வேண்டும் அதுதான் அவனை நல்ல படைப்பினை நல்லபடியாக தன் தொழிலை உருவாக்க அவசியம், பிரம்மன் அதனை இங்கு பெற்றான் என்பது ஒருவர்க்கு தொழில்திறமை கூடும் என்பது

நிதி என்பது தெய்வத்தின் அருள் கர்மவினைபடி அது அமையும், இந்த சிவனை வழிபட்டால் கர்மவினை தீரும், பிரம்மனின் விதி இங்குமாறிற்று, குபேரன், இந்திரன், ராவணன் என எல்லோரின் விதியும் மாறிய இடம் இது

ராஜராஜசோழன் எனும் மாபெரும் சிவனடியாரை இந்த தலமே உருவாக்கிற்று

அப்படியான சிவன்  இப்போது உங்களுக்கும் ஒரு வாய்ப்பினை தருகின்றார், பிடித்து கொண்டோர் பேறுபெற்றோர்

இது ஒரே நாளில் முடியும் பணி அல்ல என்பதால் நாமும் அக்குழுவினரோடு இணைந்திருப்போம், மாதம் ஒருமுறை அந்த கோபுரபணியின் நிலமைகளை உங்களுக்கு தருவோம்

அள்ளி கொடுப்பது அல்ல விஷயம், உங்களால் முடிந்ததை செய்யலாம் ஒரு கல் கூட கொடுக்கலாம், ஒரு நாள் கூலி கொடுக்கலாம், ஒருவேளை உணவு அந்த வேலையாட்களுக்கு கொடுக்கலாம், ஒரு அடி சுவற்றுக்கு பொறுப்பு ஏற்கலாம்

இப்படி உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு கொடுத்தால் போதும், ஊர் கூடி தேரை இழுக்கும் போது ராஜகோபுரம் எழுப்ப முடியாதா என்ன?

நிச்சயம் முடியும்

பணம் என்பது மானிடகுல நன்மைக்கு அவர்களுக்கு நல்வழி காட்டும் முயற்சிக்கு பயன்படும் வேலைக்காரன், அது எப்போதுமே திருப்பணிக்கு அடிமை, அவ்வகையில் நல்லகாரியத்துக்கு தேவையான பணம் எங்கிருந்தும் குவியும் என சிவனருளால் நம்புகின்றோம்

அன்னை மகாசக்தி துணையிருந்து இந்த நல்லகாரியத்தை நடத்தி கொடுக்கட்டும், விரைவில் கோபுரம் எழும்பட்டும்

மன்னர்கள் மட்டுமல்ல இது சித்தர்களும் வாழ்ந்த கோவில், மகா அவதார் பாபாஜியின் சீடர் குருமுக நாதர் எனும் சித்தர் இங்குதான் சமாதி அடைந்திருக்கின்றார், பாம்பு வடிவில் அவர் உண்டு

இயமயத்துக்கு பாபா குகையில் தவம் செய்தால் என்ன பலனும் அமைதியும் உண்டோ அது இந்த தலத்திலும் கிடைக்கும்

இந்த ஆலயத்துக்கான அறக்கட்டளையின் முகவரி இதோ

இத்தலம் பற்றிய மேலும் விபரங்கள் பெற கீழ்க்கண்ட முக வரியில் தொடா்பு கொள்ளலாம்.

"ஶ்ரீநிதீஸ்வரா் டெம்பிள் டிரஸ்ட்
20/21, நியூ காலனி மெயின் ரோடு
மேற்கு சைதாப்பேட்டை,
சென்னை −600015"

அவர்களின் வங்கி கணக்கு முகவரியும், தொடர்பு எண்ணும் இதோ

"SriNidheeswarar temple trust
Account no 911020059416659
IFSC code UTIB0001374
AXIS BANK Teynampet Branch
Chennai 

9444036534,9840981213 மற்றும் 8754467146

நாம் மன்னர்கள் காலத்தில் பிறக்கவில்லை, சாதுக்கள் விபூதியினை தங்கமாக்கி கோபுரம் கட்டிய காலத்திலும் பிறக்கவில்லை இது நமக்கான சவால் அல்லது வாய்ப்பு

மன்னன் இல்லாவிட்டாலும், சாதுக்கள் மறைந்து கொண்டாலும் சித்தர்கள் அரூபிகளாக நின்றாலும் இந்துமக்கள் கோவில் கட்டிகொண்டே இருப்பார்கள், எந்த சூழல் எப்படி இருந்தாலும் இம்மக்கள் சிவபணி செய்து கொண்டே இருப்பார்கள் என்பதை நிருபிக்கும் வாய்ப்பு

அங்கு சிவனடியார்களாய் ஒன்று கூடுவோம், ராஜராஜசோழனின் மனம்போல் அந்த கோபுரம் உயர எழும்பட்டும்,  இந்துக்கள் இழந்தது எல்லாம் மீள கிடைக்கட்டும்

ஒவ்வொரு இந்துவின் வீட்டையும் தட்டுவோம், கோபுரத்தை உயர கட்டுவோம் 

அந்த வல்ல நிதிஸ்வரர் ஒவ்வொருவருக்கும் எல்லா அருளும் நலமும் பலமும் அறிவும் நல்லசிந்தனையும் பெரும் பக்தியும் ஆரோக்கியமும் செல்வமும் தந்து வழிநடத்தட்டும்

இந்த கோவில் 2014 முதல் கும்பாஷேகம் காணும்போதுதான் மோடி பிரதமராக அமர்ந்தார், அதன்பின் தேசம் பெரும் பலம் பெற்றது

இது மிகநுணுக்கமான போதனையினை அவசியத்தை சொல்வது, இந்த கோவில் அரசர்களின் ஆலயம் ராஜராஜசோழன் போன்ற மாமன்னர்கள் வணங்கிய ஆலயம், இந்த ஆலயத்தை ஆட்சியாளர்கள் வணங்க வணங்க நாடு பலம்பெறும்

மோடி நிர்மலா சீதாராமன் போன்றோருக்கு தெரிவிக்கபட வேண்டிய ஆலயம் இது, பாஜகவினர் அல்லது இந்து அமைப்பினர் இதை செய்யட்டும்  , மோடிக்கு தெரிந்தால் நிச்சயம் வந்து வணங்குவார் , கோவிலும் உலக பார்வையினை பெரிதாக பெறும்

அந்த நிதிஸ்வரர் ஆலய ராஜகோபுரம் எழும்ப எழும்ப இந்த தேசமும் நிதியால் மதியால் மேலேழுந்து ராஜராஜனின் காலத்தை போல் பொற்காலத்தை மீட்டெடுக்கும், அந்த வரத்தை சிவன் அருளட்டும்.
 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, August 2, 2025

சபரிமலையில் 18 படிகள் சிறப்பு ஆடிமாதம் 18 ம் நாள் சிறப்பு.

: ஆடிப்பெருக்கு திருநாள்
***************************************************
ஆடி மாதத்தின் சிறப்பு நாளாகிய ஆடி 18 திருநாளினுடைய பெருமைகள் என்ன? அன்றைய தினம் எப்படியெல்லாம் நாம் வழிபாடு செய்ய வேண்டும்? தாலி சரடு மாற்றுவதற்கான நேரம் என்ன? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பார்க்கலாம்.
---------------------------------------------------------------------------------
ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்புக்குரியது. ஆடி மாதம் வரக் கூடிய 18ஆம் பெருக்கு என்பது மிக மிக விசேஷமான திருநாள் ஆகும். ஆடி மாதம் முழுவதும் சாமி கும்பிடாவிட்டாலும் இந்த 18ஆம் பெருக்கு அன்று கண்டிப்பாக வழிபாடு செய்வார்கள்.

எல்லோராலும் செய்யப்படக் கூடிய வழிபாடுன்றதும் இந்த ஆடி 18 திருநாளுக்கு உண்டு. 18 என்ற எண் மிகவும் விசேஷமான எண் ஆகும். பதினென்கீழ் கணக்கு, பதினென்மேல் கணக்கு நூல்கள், பாரத யுத்தம் நடந்த நாட்கள் 18, பாரதத்தின் அத்தியாயங்கள் 18, கீதையின் அத்தியாயங்களும் 18 ஆகும்.

ஆடிப்பெருக்கு
---------------------------------------------------------------------------------
இந்த எண்ணிக்கை மிகவும் சிறப்புக்குரியதாகும். சபரிமலையில் 18 படிகளை தாண்டியே ஐயப்பன் எழுந்தருளியுள்ளார். அது போல் புராணங்களும் 18 வகையாக உள்ளன. இந்த 18 ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இந்த காவேரி மாதா நன்றாக சேர்ந்து உற்சாகத்தை தரக் கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது.

காவிரி தாய்க்கு நன்றி
---------------------------------------------------------------------------------
எனவே ஆடி 18 இல் காவிரிக்கு நன்றி தெரிவிக்கக் கூடிய நாள். காவிரி மட்டும் இல்லை, யார் யார் ஊர்களில் என்னென்ன நதிகள் ஓடுகின்றனவோ அந்தந்த நதிகள் மக்கள் வழிபட வேண்டும். தண்ணீரை பயன்படுத்தும் அனைவருமே இந்த நாளில் தண்ணீருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

வள்ளுவர்
---------------------------------------------------------------------------------
பஞ்ச பூதங்களின் துணை இல்லாமல் இந்த உலகில் நம்மால் வாழவே முடியாது. அதில் ஆதாரமாக இருக்கக் கூடியதும் ஐந்தும் ஒன்றாக விளங்குவதும் தண்ணீர்தான். நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் பெருந்தகை அழகாக சொல்லியிருக்கிறார்.

வாய்க்காலில் காவிரி
---------------------------------------------------------------------------------
இந்த தண்ணீரை நாம் பாதுகாத்து தெய்வமாக கொண்டாட வேண்டும். ஆடி மாதத்தில் காவிரி வறண்டு இருக்கும். ஆடி 18 வரும் நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டதும் வாய்க்காலில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வரும்.

2025 ஆடிப்பெருக்கு எப்போது
---------------------------------------------------------------------------------
ஆடி பெருக்கானது வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை வழிபடும் நேரம் ஆகும். இந்த நேரத்தில் வழிபாடு செய்ய முடியாவிட்டால் காலை 11 மணி முதல் 12 மணி வரையுள்ள இந்த நேரத்தில் தாலி சரடையும் மாற்றிக் கொள்ளலாம்.

தாலி கயிறு மாற்ற உகந்த நேரம்
---------------------------------------------------------------------------------
அன்றைய தினம் காலை 9.45 மணி வரை நவமி திதி இருக்கிறது. அதன் பிறகு தசமி ஆரம்பிக்கிறது. எனவே 11 மணி முதல் 12 மணி என்ற நேரம் நல்ல நேரமாகும். காலையில் பொதுவாக வழிபடக் கூடிய வழிபாடு இந்த ஆடி 18 வழிபாடு.

புதிய தொழில்
---------------------------------------------------------------------------------
இந்த நாளில் என்னவெல்லாம் நாம் செய்கிறோமோ, அதெல்லாம் பெருக்காக அமையும். அன்றைய தினம் எதை தொடங்கினாலும் அது வெற்றி பெறும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக பல பேருக்கு கை கொடுக்கக் கூடிய அற்புதமான நாள். புதிதாக எதையாவது வாங்க வேண்டும் என்றாலும் இந்த நாளில் வாங்கலாம்.

உப்பு, மஞ்சள் தூள்
---------------------------------------------------------------------------------
அன்றைய தினம் உப்பும் , மஞ்சளும் வாங்கினால் போதும். கிணறு, மோட்டார், பைப் எதுவாக இருந்தாலும் அதற்கு கொஞ்சம் மஞ்சள், குங்குமம், பூ வைக்க வேண்டும். ஆறுகள் இல்லாத இடத்தில் இருந்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் தேக்கி வைத்துக் கொண்டு அதில் மஞ்சள் தூள், மலர் சேர்த்து வழிபடும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

என்ன படையல் செய்யலாம்
---------------------------------------------------------------------------------
வாழைப்பழம், கொய்யா, மாம்பழம், நாவல் பழம் , பச்சரிசியுடன் வெல்லம் கலந்து வைக்கும் காப்பரிசியையும் வைக்க வேண்டும். பிறகு வடை, பாயாசம் செய்யும் வழக்கம் இருந்தால் அதையும் செய்து சுவாமி முன்பு வைக்கலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஆடி 18ன் சிறப்புகள் என்ன? இன்று தாலி சரடு மாற்ற நல்ல நேரம்.

ஆடிப்பெருக்கு எப்போது? தாலி சரடு மாற்ற நல்ல நேரம் எது? ஆடி 18ன் சிறப்புகள் என்ன?
  
சென்னை: ஆடிப்பெருக்கு அன்று தாலிச் சரடை மாற்றும் பழக்கம் பல பெண்களுக்கு இருக்கிறது. இது அவரவர் குடும்ப வழக்கமாகும். காவிரி கரையில் நின்றோ அல்லது கோயிலிலோ அல்லது வீட்டில் சாமி அறையிலோ தாலி சரடை மாற்றிக் கொள்ளலாம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடிப் பெருக்கு எப்போது வருகிறது, தாலி சரடை மாற்றிக் கொள்ள உகந்த நேரம் எது என்பதை பார்க்கலாம்.


இதுகுறித்து ஆத்ம ஞான மையம் எனும் யூடியூப் சேனலில் தேச மங்கையர்கரசி கூறியிருப்பதாவது: ஆடி மாதத்தின் சிறப்பு நாளாகிய ஆடி 18 திருநாளினுடைய பெருமைகள் என்ன? அன்றைய தினம் எப்படியெல்லாம் நாம் வழிபாடு செய்ய வேண்டும்? தாலி சரடு மாற்றுவதற்கான நேரம் என்ன? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பார்க்கலாம்.


ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்புக்குரியது. ஆடி மாதம் வரக் கூடிய 18ஆம் பெருக்கு என்பது மிக மிக விசேஷமான திருநாள் ஆகும். ஆடி மாதம் முழுவதும் சாமி கும்பிடாவிட்டாலும் இந்த 18ஆம் பெருக்கு அன்று கண்டிப்பாக வழிபாடு செய்வார்கள்.


ஆடி 18
எல்லோராலும் செய்யப்படக் கூடிய வழிபாடுன்றதும் இந்த ஆடி 18 திருநாளுக்கு உண்டு. 18 என்ற எண் மிகவும் விசேஷமான எண் ஆகும். பதினென்கீழ் கணக்கு, பதினென்மேல் கணக்கு நூல்கள், பாரத யுத்தம் நடந்த நாட்கள் 18, பாரதத்தின் அத்தியாயங்கள் 18, கீதையின் அத்தியாயங்களும் 18 ஆகும்.

ஆடிப்பெருக்கு
இந்த எண்ணிக்கை மிகவும் சிறப்புக்குரியதாகும். சபரிமலையில் 18 படிகளை தாண்டியே ஐயப்பன் எழுந்தருளியுள்ளார். அது போல் புராணங்களும் 18 வகையாக உள்ளன. இந்த 18 ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இந்த காவேரி மாதா நன்றாக சேர்ந்து உற்சாகத்தை தரக் கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது.


காவிரி தாய்க்கு நன்றி
எனவே ஆடி 18 இல் காவிரிக்கு நன்றி தெரிவிக்கக் கூடிய நாள். காவிரி மட்டும் இல்லை, யார் யார் ஊர்களில் என்னென்ன நதிகள் ஓடுகின்றனவோ அந்தந்த நதிகள் மக்கள் வழிபட வேண்டும். தண்ணீரை பயன்படுத்தும் அனைவருமே இந்த நாளில் தண்ணீருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

வள்ளுவர்
பஞ்ச பூதங்களின் துணை இல்லாமல் இந்த உலகில் நம்மால் வாழவே முடியாது. அதில் ஆதாரமாக இருக்கக் கூடியதும் ஐந்தும் ஒன்றாக விளங்குவதும் தண்ணீர்தான். நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் பெருந்தகை அழகாக சொல்லியிருக்கிறார்.

வாய்க்காலில் காவிரி
இந்த தண்ணீரை நாம் பாதுகாத்து தெய்வமாக கொண்டாட வேண்டும். ஆடி மாதத்தில் காவிரி வறண்டு இருக்கும். ஆடி 18 வரும் நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டதும் வாய்க்காலில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வரும்.

ஆடிப்பெருக்கு எப்போது
ஆடி பெருக்கானது வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை வழிபடும் நேரம் ஆகும். இந்த நேரத்தில் வழிபாடு செய்ய முடியாவிட்டால் காலை 11 மணி முதல் 12 மணி வரையுள்ள இந்த நேரத்தில் தாலி சரடையும் மாற்றிக் கொள்ளலாம்.

தாலி கயிறு மாற்ற உகந்த நேரம்
அன்றைய தினம் காலை 9.45 மணி வரை நவமி திதி இருக்கிறது. அதன் பிறகு தசமி ஆரம்பிக்கிறது. எனவே 11 மணி முதல் 12 மணி என்ற நேரம் நல்ல நேரமாகும். காலையில் பொதுவாக வழிபடக் கூடிய வழிபாடு இந்த ஆடி 18 வழிபாடு.

புதிய தொழில்
இந்த நாளில் என்னவெல்லாம் நாம் செய்கிறோமோ, அதெல்லாம் பெருக்காக அமையும். அன்றைய தினம் எதை தொடங்கினாலும் அது வெற்றி பெறும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக பல பேருக்கு கை கொடுக்கக் கூடிய அற்புதமான நாள். புதிதாக எதையாவது வாங்க வேண்டும் என்றாலும் இந்த நாளில் வாங்கலாம்.

உப்பு, மஞ்சள் தூள்
அன்றைய தினம் உப்பும் , மஞ்சளும் வாங்கினால் போதும். கிணறு, மோட்டார், பைப் எதுவாக இருந்தாலும் அதற்கு கொஞ்சம் மஞ்சள், குங்குமம், பூ வைக்க வேண்டும். ஆறுகள் இல்லாத இடத்தில் இருந்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் தேக்கி வைத்துக் கொண்டு அதில் மஞ்சள் தூள், மலர் சேர்த்து வழிபடும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

Friday, August 1, 2025

ஆந்திர சித்தூர் திருக்காளத்தி திருக்காளத்தியப்பர்(காளஹஸ்தீஸ்வரர்)

இராசேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற
தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான,
பஞ்சபூத தலங்களில் வாயு தலமான, 
51 சக்தி பீடங்களில் ஞானசக்தி பீடமான, 
63 நாயன்மார்களில் ஒருவரான 
கண்ணப்ப நாயனார் தொண்டாற்றி பேறுபெற்ற தலமான, நவகிரகங்களில் 
இராகு கேது பரிகார தலமான 
#ஆந்திர_மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள
#திருக்காளத்தி என்ற
#ஶ்ரீகாளஹஸ்தி
#திருக்காளத்தியப்பர்
(காளஹஸ்தீஸ்வரர்)
#ஞானப்பூங்கோதை_அம்மன் (ஞானப்பிரசன்னாம்பிகை) திருக்கோயில் வரலாறு:[253]

திருக்காளத்தி  காளகத்தீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவில் கட்டிய இராசராச சோழன் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளகத்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது. பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். 

வடமொழிப் புராணங்கள் பலவும் இக் கோயிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன. அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக் கோயிலின் தல மரங்கள். இந்த ஊருக்கு அருகில் பொன்முகரி ஆறு ஓடுகிறது.

மூலவர்: காளத்தியப்பர் (காளஹஸ்தீஸ்வரர்)
அம்மன்: ஞானப்பூங்கோதை (ஞானப்பிரசன்னாம்பிகை)
தல விருட்சம்: மகிழ மரம்
தல தீர்த்தம்: பொன்முகரி ஆறு மற்றும் சுவர்ணமுகி ஆறு
புராண
பெயர்: சீகாளத்தி, திருக்காளத்தி
ஊர்:ஶ்ரீகாளஹஸ்தி
மாவட்டம்: சித்தூர்
மாநிலம்: ஆந்திரப் பிரதேசம்
நாடு: இந்தியா

#பாடியவர்கள்:
 
அப்பர் சுவாமிகள், சுந்தரர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர்

#திருக்காளத்தி_பதிகம்:

"செண்டு ஆடும் விடையாய்! சிவனே! என் செழுஞ்சுடரே!
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே!
கண்டார் காதலிக்கும் கணநாதன்! எம் காளத்தியாய்!
அண்டா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே.

_சுந்தர மூர்த்தி நாயனார்

#திருக்காளத்தி_திருப்புகழ்: (சிரத்தானத்தி)

சிரத்தா னத்திற் ...... பணியாதே
     செகத்தோர் பற்றைக் ...... குறியாதே

வருத்தா மற்றொப் ...... பிலதான
     மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய்

நிருத்தா கர்த்தத் ...... துவநேசா
     நினைத்தார் சித்தத் ...... துறைவோனே

திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே
     திருக்கா ளத்திப் ...... பெருமாளே.
__அருணகிரிநாதர்

#புராண_வரலாறு:

முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: “வாயுதேவனே, நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்”. போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.

வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.

மற்றொரு புராணமாக,

பல நூறு ஆண்டுகளுக்கு முன் வனமாக இருந்த இந்த இடத்தில் வாயு லிங்கமாக தோன்றிய சிவபெருமானை வழிபட சிலந்தி ஒன்று தினமும் வருமாம். மழையில் நனைந்த சிவபெருமானைக் கண்ட அந்த சிலந்தி தன்னுடைய உமிழ் நீரில் இருந்து உருவாகும் சிலந்தி வலையை பின்னி வைத்ததாம். பெரும் இடி ஒன்று இடித்ததில் அந்த வலை எரிந்து சாம்பலானது. சிலந்தியால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் இறந்து போனதாம். இதனால் அந்த சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அதற்கு முக்தி கொடுத்தாராம்.

அதே போல தினமும் நாகம் ஒன்று அந்த லிங்கத்தை ஆரத்தழுவி மாணிக்கங்களை கக்கி அர்ச்சனையாக செய்து வழிபடும். அதற்கு பின்னால் வரும் யானை ஒன்று தன் தும்பிக்கையால் நீரை வாரி இறைத்து அபிஷேகம் செய்யும். பின் மலர்களை பறித்து வந்து அர்ச்சனையும் செய்து வரும். இதனால் அந்த மாணிக்கங்கள் கீழே விழுந்து சிதறி விடுவது உண்டு. தொடர்ந்து இது போல் நடந்து கொண்டிருக்க அந்த நாதத்திற்கு சந்தேகம் வந்தது. யானை இது போல் செய்வதை அந்த நாகம் ஒரு நாள் பார்த்து விட்டது. உடனே கோபமுற்ற நாகம் யானையின் தும்பிக்கையினுள் சென்றுவிட்டு மூச்சடைக்க செய்தது.

சுவாசிக்க முடியாமல் அந்த யானை பாறையில் மோதி மோதி கடைசியில் இரண்டும் இறந்து போனது. இவைகளின் பக்தியை மெச்சிய சிவபெருமான் இவர்களுக்கும் முக்தியை கொடுத்தார் என்று ஸ்தலபுராணம் எடுத்துரைக்கிறது. இந்த தலத்தில் வீற்றிருக்கும் காளத்திநாதர் உருவத்தில் கீழே இரண்டு தந்தங்களும், இடையில் பாம்பும், பின்புறம் சிலந்தியும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

#கண்ணப்ப_நாயனார்:

திண்ணப்பன் முந்தைய ஜன்மத்தில் அர்ஜுனனாக பாசுபதாஸ்திரத்தைப் பெற தவமிருந்தபோது, சிவபெருமான் அஸ்திரத்தை வழங்கியதோடு, அவர் மீண்டும் கலியுகத்தில் அவதரிக்கும் வரத்தையும் அருளினார். அதன்படி அர்ஜுனன் கலியுகத்தில் திண்ணனாக அவதரித்தார்.காட்டிற்கு வேட்டையாடச் சென்ற திண்ணன் அங்கிருந்த சிவபெருமான் மீது பக்தி கொண்டு சொர்ணமுகி ஆற்றிலிருந்து வாயில் நீரெடுத்து வந்து அபிஷேகம் செய்து, தான் வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தை நிவேதனமாகப் படைத்து, காட்டில் உள்ள மலர்கள், இலைகளால் மாலை கட்டி, அதை சிவபெருமானுக்கு சமர்ப்பித்து வழிபட்டு வந்தார். அவரின் பக்தியை உலகிற்குப் பறைசாற்ற நினைத்த சிவபெருமான், ஒருநாள் திண்ணன் வழிபட வரும்போது கண்ணில் ரத்தப் பெருக்கை ஏற்படுத்தினார். சிவனின் கண்களுக்குப் பதிலாக தன் கண்ணைத் தோண்டி எடுத்து அர்ப்பணித்தவுடன் சிவபெருமான் நேரில் காட்சி அளித்து ஆட்கொண்டார். சிவனுக்குக் கண் கொடுத்ததால் அன்று முதல் கண்ணப்பன் என்ற பெயரால் அவர் அழைக்கப்பட்டார். நாயன்மார்களில் ஒருவராகவும் கண்ணப்பன் கருதப்படுகிறார்.

அந்தணர் ஒருவர் இந்த லிங்கத்தை பூஜித்து வந்ததாகவும், அதனை பார்த்துக் கொண்டிருந்த வேடன் ஒருவனுக்கு சிவனின் மேல் கொண்ட பக்தியால் பூஜை செய்ய அதிக ஆர்வம் ஏற்பட்டதாம். அந்தணர் வராத சமயத்தில் இந்த வேடன் தான் வேட்டையாடி வைத்திருந்த பன்றி இறைச்சியை சிவபெருமானுக்கு படைத்து வந்தானாம். ஒரு நாள் இதை அறிந்த அந்த அந்தணர் மிகப்பெரிய தவறு நடந்து விட்டதாக எண்ணி வருந்தினார். அன்று இரவு அந்தனர் கனவில் வந்த சிவபெருமான், ‘நாளை ஒளிந்து இருந்து இந்த இறைச்சியை வைப்பது யார் எனவும், அவருடைய பக்தியை பார்’ என்றும் கூறினாராம்.

அதன் படியே மறுநாள் ஒளிந்திருந்த அந்தணருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கம் போல் வேடன் வந்து இறைச்சியை படைத்து வழிபாடுகள் செய்தானாம். அப்போது சிவபெருமானின் ஒரு கண்ணிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஊற்றியது. இதைக் கண்டு பதறிப்போன வேடன் எவ்வளவோ முயற்சித்தும் ரத்தம் நிற்க காரணத்தினால் தன்னுடைய ஒரு கண்ணை எடுத்து லிங்கத்திற்கு வைத்து விட்டான், உடனே ரத்தம் நின்று விட்டது. அடுத்ததாக மறு கண்ணில் இருந்தும் ரத்தம் பெருக்கெடுத்தது. அந்த வேடன் தன்னுடைய கால் கட்டை விரலால் ரத்தம் வழிவதை தடுக்க லிங்கத்தின் கண்களில் வைத்து இரண்டாவது கண்ணை அம்புகளால் தோண்டி எடுக்க முற்பட்டதும் சிவபெருமான் காட்சி கொடுத்து, கண்ணப்ப நிற்க… கண்ணப்ப நிற்க… கண்ணப்ப நிற்க… என்று மும்முறை கூறினாராம். இதனை கண்டு நெகிழ்ந்து போனார் அந்தணர்.

பக்திக்கு மிஞ்சிய ஞானம் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். சைவ கடவுளான சிவபெருமான் இறைச்சியை வைத்து வழிபட்டாலும் தீவிர பக்தரான அந்த வேடனுடைய பக்தியை ஏற்ற காரணத்தினால் பிற்காலத்தில் அந்த வேடனுக்கும் இந்த தலத்தில் இடம் கிடைத்தது. திண்ணனார் என்கிற அந்த வேடனின் பெயர் கண்ணப்பர் என்று புகழப்பட்டது. இந்த கோவிலில் அவரையும் காண முடியும்.

துளி அளவிலும் காற்று புகாத கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் இந்த லிங்கத்திற்கு ஏற்றப்படும் தீபம் ஆனது படிப்படியாக மேலெழும்பி அழகாக நிற்காமல் அசைந்து ஆடிக் கொண்டே இருக்கும். காற்றே இல்லாத இடத்தில் தீபம் மட்டும் அசைந்து ஆடுவது வியப்பிற்குரியது என்பது விஞ்ஞானிகள் கூற்று.

#ஸ்ரீ_காளஹஸ்தி என்ற பெயர் காரணம் :

ஸ்ரீ என்பது சிலந்தியையும், காளம் என்பது நாகத்தையும், அத்தி என்பது யானையையும் குறிப்பதால் இப்பெயர் பெற்று விளங்குகிறது.

#பாதாள_விநாயகர்:

அகத்தியர் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டு இங்கிருக்கும் விநாயகரை வணங்காமல் சென்றது விநாயகரை கோபம் மூட்டியது. இதனால் விநாயகர் அருகில் இருக்கின்ற பொன்முகலி ஆற்றை முழுவதுமாக வற்றி போகுமாறு செய்து விட்டார். இதனால் மனம் வருந்திய அகத்தியர் விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கியதாக தலபுராணம் கூறுகிறது. பிற்காலத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்த இடம் ஆழத்தில் சென்றதால் இந்த விநாயகர் பாதாள விநாயகர் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் இந்த விநாயகரைத் தரிசிக்க பக்தர்கள் 20 அடி ஆழத்திற்கு செல்ல வேண்டியதாக உள்ளது.

#தலபெருமை: 

கண்ணப்பர் வாய்கலசமாக முகலிநீர் கொண்டுவந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு திருநீறு(விபூதி) வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். பக்தர்கள் கொண்டுவரும் திருநீறு பொட்டலத்தை இறைவன் திருவடியில் வைத்து தீபம் காட்டி எடுத்து தருகிறார்கள். மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. 

பிற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன.

இது ராகு, கேது தலம் என்பதால் கோவிலை வலம் வருவதும் எதிர்வலமாகவே – அப்பிரதட்சிணமாகவே சுற்றி வர வேண்டும். பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. விதிவிலக்காக சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள். அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது.
கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேசுவரருக்கு ஒரு கோவில் உள்ளது. அதையடுத்து மலையை வெட்டி செதுக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. அதற்கு மணி கர்ணிகா கட்டம் என்று பெயர். இங்குதான் காசியில் உள்ள மணிகர்ணிகா கட்டத்தில் விசுவநாதர் அருளியதுபோல, பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதி அருளினார் என்று ஒரு கதை வழங்கி வருகிறது.
அதனால் இன்றும் அந்திம திசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்திற்கு கொண்டுவந்து வலப்பக்கமாக ஒருக்களித்துச் சாய்த்துக் கிடத்தினால் சாகிறபொழுது உடல் திரும்பி வலக்காது வழியாகவே உயிர் பிரியும் என்று கூறுகிறார்கள்.

சுவாமி புறப்பாடு வடக்கு கோபுரவாயில் வழியாகவே நடைபெறும். முன்காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில் நீராடிவிட்டு கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார்.

#தல_சிறப்பு: 

இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது வாயு(காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் – உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம்.
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 253 வது தேவாரத்தலம் ஆகும்.

#கோவில்_அமைப்பு

கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன. கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. கோவிலின் நுழைவுவாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும், 60 அடி உயரமுடைய, ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதன் அருகே பலிபீடமும், நந்தியும் உள்ளன.

#வரலாறு:

இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளகத்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராசராச சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று. சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக் கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக்கோயிலில் உள்ளன. சோழர்களும், விசய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோயிலுக்கு அளித்துள்ளனர்.

பல்லவர் காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோயில்களை இங்கு எடுப்பித்துள்ளான். 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தார். கிபி 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விசயநகரப் பேரரசர் கிருட்டிணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவர் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.

இக்கோவிலின் மூலவர் ஞானபிரசுனாம்பிகை தாயார் செங்குந்த கைக்கோளர் மரபு வெள்ளாத்தூரார் கோத்திரத்தில் தோன்றியவர். இதனால் இங்கு நடைபெறும் சிவன் பார்வதி திருக்கல்யாணத்தில் இம்மரபினர் சார்பில், பெண் வீட்டு சீதனம் கொண்டுவந்து சமர்ப்பிப்பது வழக்கம்.

கல்வெட்டுக்கள்:

இவ்வூர்ப் பாடல்பெற்ற கோயிலில் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழதேவன், முதலாம் இராஜாதிராஜ தேவன், இராசகேசரி வர்மனாகிய வீரராஜேந்திரன், முதற்குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜாதிராஜ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழ தேவன், இவர்கள் காலங்களிலும், விஜயநகர வேந்தர்களில், வீரப்பிரதாப ஹரிஹரராயர், வீரப்பிரதாப தேவராயர், வீரப்பிரதாப வீரகிருஷ்ணன் தேவராயர், வீரசதாசிவ மகாராயர் முதலானோர் காலங்களிலும், காகதீய வம்சத்துக் கணபதி காலங்களிலும், மற்றும், விஜயகண்ட கோபால தேவன், ஆளும் திருக்காளத்தித் தேவனாகிய கண்ட கோபாலன் இவர்கள் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் திருக்காளத்தி உடைய நாயனார், திருக்காளத்திச்சிவனார், ஆளுடையார் தென்கயிலாயமுடையார் என்னும் பெயர்களாலும், விடங்கர் சோதிவிடங்கர் என்னும் பெயராலும் கூறப்பெற்றுள்ளனர். திருவிழா:
திருக்காளத்தி உடையார்க்கு வைகாசியில் திருவிழா நடைபெற்று வந்தது. அவ்விழா முட்டாமல் நடைபெறுவதற்கு நரசிங்க காளத்தி தேவனான யாதவராசன் சயங்கொண்ட சோழமண்டலத்துத் திருவேங்கடக் கோட்டத்து. கருப்பற்று நாட்டு வெண்ணெய் நல்லூரைத் தட்டார் பாட்டம், தறிஇறை, வெட்டி, முட்டையாள், பட்டிக்காசு காணிக்கை, கன்மிப்பேறு, மற்றும் எப்பேர்பட்ட வரிகளும் அகப்பட தேவதானமாக விட்டிருந்தான்.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோதிவிடங்கர், எட்டாந் திருநாளில் திருவீதிக்கு எழுந்தருளி, திருச்சாந்து கற்பூர வெள்ளைச் சாத்தித் திருவுலாப்புறம் செய்து, தோசை, திருக்கண்ணமுது இவைகளை அமுது செய்தருளுவது வழக்கம். அதன் பொருட்டுப் பொலியூட்டாக நூறு பணம் அளிக்கப்பெற்றிருந்தது. இக்கோயிலில் மாசித் திருவிழாவும் மிகச் சிறப்பாய் நடைபெற்று வந்தது. அவ்விழாவின் ஏழாம் நாளில் இமையோர்கள் நாயகர் திருவீதிக்கு எழுந்தருளி, திருக்கல்யாணம் பண்ணி, திருவூடல் தீர்த்து திருக்கோயில் வாசலில் பலிபீடத்தண்டையில், திருவாலத்தில் தட்டம் எடுத்த பிறகு அத்தேவர் தோசை அமுது செய்தருளுவது உண்டு. அதன் பொருட்டும் நிவந்தம் செய்யப்பெற்றிருந்தது.

#திருமடம்:

திருக்காளத்தி உடையார் கோயிலில் மலைமேல் ஒரு மடம் இருந்தது. அது சசிகுல சளுக்கி வீரநரசிங்க தேவன் திருக்காளத்தித் தேவனான யாதவராயனால் கட்டப்பெற்றது. அம்மடத்தில் மாகேஸ்வரருக்குச் சோறிட பெரும்பூண்டி நாட்டுப் பொன்னையன் பட்டு என்னும் ஊரின் நாற்பால் எல்லைக்கு உட்பட்ட நன்செய் புன்செய் நிலத்தை மேற்கூறப்பெற்ற வீரநரசிங்க தேவன் இராசராச தேவரின் 15ஆம் ஆண்டில் கொடுத்திருந்தான்.

இதுவன்றித் தியாகமேகன்மடம் ஒன்று இருந்தது. இதில் நாள் ஒன்றுக்கு முப்பது தேசாந்தரிகளுக்குச் சோறும், ஐந்து பிராமணர்களுக்கு அரிசியும் இடுவதற்கு உடலாக (மூலதனமாக) விசயகண்ட கோபால தேவரின் நான்காம் ஆண்டில் சயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழவளநாட்டுப் பேரூர் நாட்டு மதுரைவாய் திருநல்லுழான் திருநட்டப்பெருமாள் தியாகமேனன் நிவந்தம் அளித்திருந்தான்.

இக்கோயிலுக்கு வடக்குத் திருவீதியில் கூற்றுதைத்தான் சோமதேவர் மடம் என்று ஒன்று இருந்தது.

#திருநந்தவனம்:

திருக்காளத்தி உடைய நாயனாரின் திருமலை அடிவாரத்தில் வீரநரசிங்க தேவன் திருநந்தவனம் என்னும் பெயருள்ள நந்தவனம் இருந்தது. அது சசிகுலசளுக்கி வீரநரசிங்க தேவனான யாதவ ராயனால் ஏற்படுத்தப்பட்டது. அதன் பொருட்டு வீரநரசிங்க தேவன் ஆற்றூர் நாட்டுக்கோன்பாக்கத்திலும், திருக்காளத்திப் புத்தூரிலும் நெல்வாயிலிலும், தனக்குக் கிடைக்கும் நன்செய் நிலத்தில் பத்தில் ஒன்றாய் வந்த பாடிகாவல் கடமை, பொன் ஆயம், நெல்லாயம் இவைகளை உடலாக விட்டிருந்தான். ஆலால சுந்தர நந்தவனம் என்று ஒன்று இருந்ததை முதற்குலோத்துங்க சோழனின் 49-ஆம் ஆண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. ஒரு கமுகம் தோட்டத்திற்கு கண்ணப்ப தேவர் பெயர் வைக்கப்பெற்றிருந்தது.

#நூற்றுக்கால் மண்டபமும், பெரியகோபுரமும்:

இக்கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தையும், பெரிய கோபுரத்தையும் கட்டியவர் விஜயநகர வேந்தனாகிய வீரப்பிரதாப கிருஷ்ணதேவராயர் ஆவர். இதை இக்கோயிலில் சகம் 1438 - இல் செதுக்கப்பட்ட தெலுங்குக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

#கண்ணப்பர் கோயில்:

இக்கோயில் மண்டபமும் மண்டபத்தைச் சுற்றிய தாழ் வாரமும் ஆடவல்லான் கங்கை கொண்டானாகிய இருங்கோளன் தாயாராகிய புத்தங்கையாரால் கட்டப்பெற்றது.

#இவ்வூரிலுள்ள வேறு கோயில்:

இவ்வூரில் திருமணிக்கெங்கையுடைய வேறு கோயில் ஒன்று உண்டு. திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழதேவரின் பதினொன்றாம் ஆண்டில், சயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து வல்லம் நாட்டுப் பெருந்தண்டலத்துக்கோறுழான அமுதாழ்வான் மங்கை நாயகன் மழவராயனால் அக்கற்றளியும், திருமண்டபமும், சோபானமும் கட்டப்பெற்றதாகும்.

இக்கோயிலில் தனி இடத்தில் சசிகுலசளுக்கி தனிநின்று வென்றானாகிய வீரநரசிம்ம தேவனாகியயாதவராசன் மல்லிகார்ச்சுனரை எழுந்தருளுவித்திருந்தான்.

#இவ்வூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு:

இவ்வூர் சயங்கொண்ட சோழமண்டலத்து, திருவேங்கடக் கோட்டத்து, ஆற்றூர் நாட்டுத் திருக்காளத்தி என இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளது. திருக்காளத்தி முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் காளத்தியாகிய மும்முடிச் சோழபுரம் என்றும் வழங்கப்பெற்றிருந்தது.

#பிறசெய்திகள்:

முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இக்கோயிலில் கிருத்திகைத்தீப விழாவைப்பற்றிக் கூறப்பெற்றுள்ளது. அதற்குக் கங்கைக்கொண்ட சோழமிலாடுடையான் நிவந்தம் அளித்திருந்தான். கண்ணப்பர் பிறந்த நாடு பொத்தப்பிநாடு என்று சேக்கிழார் கூறியுள்ளார். அப்பொத்தப்பி நாடு இவ்வூர்க் கல்வெட்டிலும் குறிக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாட்டுத் தொகையில் புரிசை நாட்டுப்புரிசை எனக் குறிப்பிட்டுள்ளார். அப்புரிசை நாடு மணவில் கோட்டத்தில் உள்ளது என்பதையும் இக்கோயில் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

அளவு கருவிக்குக் காளத்தியுடையான் மரக்கால் என்றும், ஒரு தலைவனுக்குத் திருக்காளத்தி தேவன் என்றும், திருவிளக்குக் குடிகளில் ஒருவனுக்கு மன்றாடி காரிசாத்தன் திருக்காளத்திகோன் என்றும் பெயர்கள் வைக்கப்பெற்றிருந்தன. மூன்றாம் பிராகாரத்தில் உள்ள மண்டபம் சின்னையா மண்டபம் எனப் பெயர் பெற்றுள்ளது.

திருநுந்தாவிளக்குகளுக்கும், திருமந்திர போனக புறத்திற்கும் நிபந்தங்கள் மிகுதியாக அளிக்கப்பெற்றுள்ளன. ஒரு நுந்தா விளக்கினுக்கு விடப்பெறும் சாவா மூவாப்பசு 32-ஆகும். ஆடு ஆயின் 96 ஆகும். 96-ஆடுவிடுபவர் பொலிகிடா இரண்டும், பொலி மொத்தை இரண்டும் விடுவது வழக்கம்.

நுந்தா விளக்கேயன்றி சந்தி விளக்கும் வைப்பதுண்டு. ஒரு சந்தி விளக்குக்கு ஐந்து நற்பழங்காசு அளிப்பதுண்டு. 32 - பசுமாடு விடுபவர் ரிஷபம் ஒன்றையும் விடுவர்( See the Annual Reports on South Indian Epigraply for the year 1892 195 - 202, year 1892 72 - 76. 166 - 203, year 1904 276 - 303, year 1922 82 - 184, year 1924 150 - 180.

See also the South Indian Inscriptions, Volumes IV 643 - 650. Volumes VIII 377 -381. Volumes VIII 463 -502.)

#பிரார்த்தனை: 

ராகு, கேது சர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள், இத்தலத்திற்கு வந்து ராகு தோஷம் நீங்கவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரளமாக வராத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

#நேர்த்திக்கடன்: 

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கோவிலைப்பற்றி பல குறிப்புகள் தேவாரப் பாடல்களும், புராணங்களும் தெளிவாக கூறுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு எத்தனை குறைகள் இருந்தாலும் உடனே நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. திருப்பதி செல்பவர்கள் பெரும்பாலும் காளத்தி நாதரை வழிபடாமல் வீடு திரும்புவதில்லை. அனைவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் திருக்காளஹஸ்தி ஒன்று என்பதைக் கூறி இப்பதிவை நிறைவு செய்வோம்.

இந்தி பேசுபவர்களுக்கு: +919944802236
 விடுமுறை இலக்கு
தேடு …
  
ஸ்ரீகாளஹஸ்தி கோயில்

இயற்கையின் ஐந்து முக்கிய கூறுகளில் ஒன்றான காற்றுக்காக வெளிப்படும் சிவாலயம். மற்ற நான்கு கூறுகள் வானம், நீர், நிலம் மற்றும் நெருப்பு ஆகும், இதற்காக தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் வெளிப்பாடுகள் உள்ளன. இவை பஞ்ச பூத ஸ்தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

#புராணக்கதை :

காளஹஸ்தீஸ்வரர் கோயிலின் மகிமையுடன் தொடர்புடைய பல புராணக்கதைகள் உள்ளன. அத்தகைய பிரபலமான மற்றும் சுவாரஸ்யமான புராணக்கதை பின்வருமாறு. ஒரு காலத்தில், வாயு தேவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடுமையான தவம் செய்தார், சிவன் அந்த தவத்தில் மகிழ்ச்சியடைந்தார். எனவே, வாயு தேவரின் பெயருக்குப் பிறகு சிவபெருமான் வழிபடப்படுவார் என்றும், அந்த ஆலயம் வாயு லிங்கம் என்ற இறைவனின் பெயருடன் ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாக இருக்கும் என்றும் அவர் வாயு தேவனுக்கு வரம் அளித்தார்.
கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்ட எவரும் தனது பாதங்களை அடைய முடியும் என்பதற்கு இந்தக் கோயில் ஒரு சான்றாகும். வேட்டைக்காரன் கண்ணப்பன் இறைவனின் அர்ப்பணிப்புள்ள பக்தன் என்றும், கடவுளின் சிலையிலிருந்து இரத்தப்போக்கை நிறுத்த தனது இரண்டு கண்களையும் தானம் செய்யத் தயாராக இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இவ்வாறு அவர் "கண்ணப்ப நாயனார்" என்ற பெயருடன் கடவுளின் கருணையைப் போற்றும் ஆறு மூன்று துறவிகளில் ஒருவராக உயர்ந்தவராகவும் கௌரவிக்கப்பட்டவராகவும் கருதப்பட்டார்.

#கட்டிடக்கலை :

உலகெங்கிலும் உள்ள பிற பிரபலமான நினைவுச்சின்னங்கள் மற்றும் கோயில்களைப் போலவே, இந்த கோயிலும் பல்வேறு வம்சங்களின் சாட்சியாக உள்ளது. இந்த கோயிலின் கட்டுமானம் 5 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் தொடங்கப்பட்டு 10 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் முடிக்கப்பட்டது.
பல்வேறு ஆட்சிகளின் பல்வேறு மன்னர்களால் வழங்கப்பட்ட நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளுடன் இந்த கோயில் செழிப்பாக செயல்பட்டு வருவதற்கான பல கல்வெட்டு சான்றுகள் உள்ளன. விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரால் நியமிக்கப்பட்ட சிக்கலான சிற்பங்கள் இங்குள்ள நூறு தூண் மண்டபத்தில் அழகியல் கலாச்சாரத்தை சித்தரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் முன்னோர்கள்.

கட்டிடக்கலை பாணி அவ்வப்போது நகரத்தை ஆண்ட பல்வேறு ஆட்சிகளின் கலவையாகும். 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவ ராயர் கஜபதி இராச்சியத்தை வென்றதன் நினைவாக 120 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டது என்பது ஒரு கட்டிடக்கலை அதிசயம். கோபுரத்தின் கீழ் முன் பகுதியில் மன்னரின் வெண்கல சிலை இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, 25 ஆண்டுகளுக்கு முன்பு கோபுரத்தில் ஒரு விரிசல் காணப்பட்டது, அது செங்குத்து பிளவாக உருவாக்கப்பட்டது மற்றும் மே 2010 இல் கோபுரம் இடிந்து விழுந்தது. இன்னும் வலுவான அடித்தளத்தில் ஒரு புதிய உயரமான கோபுரம் கட்டப்பட்டுள்ளது மற்றும் கும்பாபிஷேகம் ஜனவரி 2017 இல் நடத்தப்பட்டது. கோயில் தெற்கு நோக்கிய திசைகளில் உள்ளது,
அதே நேரத்தில் கருவறை மேற்கு நோக்கி உள்ளது. லிங்க சிலை யானையின் தும்பிக்கை போல தோற்றமளிக்கும் வெள்ளைக் கல்லால் ஆனது. கோயில் ஒரு மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது, மேலும் கோயில் ஒரு பாறையில் வெட்டப்பட்ட ஒற்றைக்கல் மலையாக கட்டப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் 9 அடி உயர விநாயகர் சிலையின் பாறையில் செதுக்கப்பட்ட சன்னதியும் உள்ளது. மற்ற கோயில்களைப் போலவே, இந்த ஆலயத்திலும் பக்தர்கள் வழிபட பல்வேறு துணை சன்னதிகள் உள்ளன. துர்கம்மா மலை, கண்ணப்ப மலை மற்றும் குமாரசாமி மலையை ஒட்டி இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. காளஹஸ்தீஸ்வரரின்
துணைவியார், ஞானபிரசுண்ணாம்பிகை என்ற பெயருடன், முற்றத்துடன் கூடிய தனி சன்னதி உள்ளது. பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் தேவி மிகவும் சக்தி வாய்ந்தவள் என்று நம்பப்படுகிறது. தமிழில், அவள் ஞானபூங்கோதை என்று அழைக்கப்படுகிறாள், அதாவது "ஞானப் பெண்".

மத முக்கியத்துவம் :

வட இந்தியாவில் இந்துக்களுக்கு காசி ஒரு புனிதத் தலமாக இருப்பது போல, இந்த இடமும் புனிதமானது. ஸ்ரீ காளஹஸ்தி என்ற பெயர், ஒரு சிலந்தி, ஒரு பாம்பு மற்றும் ஒரு யானை இறைவனிடம் தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் பக்திக்கு வெகுமதியாக கடவுளின் தாமரையை அடைந்த கதையுடன் தொடர்புடையது. "ஸ்ரீ" என்றால் சிலந்தி, "காலா" என்றால் பாம்பு, "ஹஸ்தி" என்றால் யானை, எனவே இறைவன் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயில் ஆந்திராவில் அமைந்திருந்தாலும்
, கோயிலும் கடவுள்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களின் இதயத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதால், பஞ்ச பூத தலங்களின் மற்ற நான்கு கோயில்களான திருவானைக்கோயில் (நீர்), காஞ்சிபுரம் (நிலம்), சிதம்பரம் (காற்று), திருவண்ணாமலை (நெருப்பு) ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளதால் இருக்கலாம். சைவ மரபைப் பின்பற்றுபவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஐந்து கோயில்களையும் தரிசிக்க விரும்புகிறார்கள்.

திருவிழாக்கள் மற்றும் கலாச்சாரம்:
இந்த கோவிலில் சைவ மரபைப் பின்பற்றி சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. துணை கோவில்களும் ஒவ்வொரு நாளும் நான்கு முறை செய்யப்படும் சடங்குகளை அனுபவிக்கின்றன.

 ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் ராகு கேது பூஜை நேரம்

சோமவாரம் காலை 07:30 முதல் 09:XNUMX வரை 

மங்களவர்  03:00 PM முதல் 04:30 PM வரை 
புத்தவர்  மதியம் 12:00 முதல் 01:30 மணி வரை 

வியாழன்  மதியம் 01:30 முதல் 03:00 மணி வரை
 
சுக்ரவர்  சுபா 10:30 முதல் 12:00 மணி வரை 

சனிவாரம்  காலை 09:00 முதல் 10:30 வரை 

ரவிவார்  மாலை 04:30 முதல் மாலை 06:00 மணி வரை

#திருவிழாக்கள்:

• பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மாசி பண்டிகைகள்
• நவம்பர் - டிசம்பர் மாதங்களில் திரு கார்த்திகை திருவிழா
• சிவராத்திரி
• வினியாக சதுர்த்தி
• விஜய தசமி
மற்ற பண்டிகைகளைத் தவிர, "மகா சிவராத்திரி" என்பது இந்த கோவிலில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும், இது மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர். ஏற்பாடுகள் ஆடம்பரமாக செய்யப்படுகின்றன, சிறப்பு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, மேலும் பதின்மூன்று நாட்கள் கொண்டாட்டம் நீடிக்கிறது. மகா சிவராத்திரி பிரம்மோத்சவங்கள் நடத்தப்படுகின்றன, அந்த நேரத்தில், இறைவன் மற்றும் தெய்வத்தின் ஊர்வல தெய்வங்கள் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

#திறக்கும்_நேரம்: 

காலை 05:00 முதல் 12:00 மணி, மாலை 05:00 முதல் 09:00 வரை, செவ்வாய், புதன் மற்றும் வியாழன் நாட்களில் காலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.

#அமைவிடம்

 காளஹஸ்தி திருப்பதியிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், ஹைதராபாத்திலிருந்து 545 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து TNSTC மற்றும் KSRTC பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுகின்றன.
ரயில் வழியாக: காளஹஸ்தியில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. விஜயவாடா, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவிலிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. காளஹஸ்தியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அருகிலுள்ள ரயில் சந்திப்பு ரேணிகுண்டா ஆகும். சென்னை மற்றும் மும்பைக்கு செல்லும் ரயில்கள் இந்த சந்திப்பில் நிற்கின்றன, அங்கு கோயில் எளிதில் சென்றடையலாம்.
விமானம் வழியாக: காளஹஸ்திக்கு மிக அருகில் 25 கி.மீ தொலைவில் திருப்பதி விமான நிலையம் உள்ளது. டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரிலிருந்து தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...